Jump to content

அடியார்களே... நான் பசியாய் இருக்கிறேன், எனக்கு சாப்பாடு தாருங்கள்


Recommended Posts

  • Replies 125
  • Created
  • Last Reply

அருமையான கருத்து... :wub: இதன் கருத்து கனருக்கு விளங்காது.... விளங்கியும் விளங்காததுபோல் இருப்பர்.... :) அருமையான தேங்காய் அடிதான்... அதுவும் புலத்து தமிழுக்கு.... முக்கியமாக பிரான்ஸ் ஈழதமிழருக்கோ... இந்த (தேங்கா)அடி... :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூனைக்குட்டியாரே இது உங்களுடைய முயற்சியா? பாராட்டுக்கள்

மக்கள்மனங்களை இலகுவில் தொடக்கூடியதால் உள்ளது.

என்ன ஒரு குறைபாடுதான் உண்டு, உங்கள் விண்ணப்பம் கடவுள் பக்தர்களை நோக்கி இருக்கிறது,

அது இரக்கம் குறைந்தவர்களின் கூட்டம் அல்லவா?

தேங்காய் உடைப்பதும், அரிச்சனைகள் செயவதும் சொந்தநலனின் பொருட்டே செயபவர்கள்தானே அவர்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது யாருடைய படைப்போதெரியவில்லை?இருந்தாலும் பலருக்கு உறைக்கிற மாதிரி சொல்லப்பட்டுள்ளது.இப்படியான முயற்சிகள் வரவேற்கத்தக்கதே

இருப்பினும் தியானத்தில் இருக்கும் எமது பக்த அடியார்களுக்கு இந்தச்செய்தி ஒருகாதால் நுழைந்து மறுகாதால் எவ்வித தங்குதடையுமின்றி வெளியேறிவிடும்.

இந்த விளம்பரம் தமிழ்நாதத்திலும் வெளிவந்திருந்தது http://www.tamilnaatham.com/advert/2008/aug/20080829/KOVIL/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்து . கோயில் வாசலில் போடால் நன்று. யாழ் களத்தில் இன்னும் பங்களிப்பு செய்யாதவர்கள் உண்டா? அவர்களுக்கு உறைக்கும் நல்ல கருத்து ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி தேங்காயை வெளிநாட்டில் டொலர் , பவுண்ஸ் என்று காசு கொடுத்து வாங்கி தெருவில் போட்டு அடிப்பதை அந்த கடவுள் கூட விரும்பமாட்டார் .

Link to comment
Share on other sites

அருமை! அருமை!! அருமை!!!

மணியடிப்பதால் மட்டும் மருந்து கிடைத்து விடும் என நினைக்கும் மரமண்டைகளுக்கும்

மரத்துப் போய் விட்ட சில ஜென்மங்களுக்கும் இதை பார்த்த பின்பாவது உறைக்கட்டும்

நாடே பற்றி எரியும் போது அதில் கொஞ்சம் நெருப்பை எடுத்து கடவுளுக்கு கற்பூர ஆரத்தியாக்கி சப்பரமும் இழுத்தால், நீங்கள் இழுக்கும் சப்பரத்தை அந்த இறைவனே குப்புற புரட்டி விடுவான் கூர்மதி கெட்டவர்களே!!!

அத்தோடு உங்கள் சந்ததிகளின் வாழ்வும் குப்புற புரண்டுவிடும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்!!!

மாபெரும் வீரராய் ஆகத்தான் எங்களால் முடியவில்லை, ஓடிவந்து விட்டோம்.

குறைந்த பட்சம் தாயகத்தின் மானம் காக்கவும்

இந்த பிஞ்சுகளின் பசிப்பிணி போக்கவுமாவது உதவுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெரு தேங்காயை பிள்ளையாருக்கு அடிக்கிறான் என்று ஊரில சொல்லுவார்கள்....

புலத்தில தெரு தேங்காயை(கோயில் பணம் பல ஆயிரம் டொலர்)எடுத்து ஜயருக்கு அடிக்கிறாங்கள்(அன்பாளிப்பா கொடுகிறாங்கள்)...

பசிக்கிறவனுக்கு கொடுப்பார்களா?அந்த முருகணுக்கு தான் வெளிச்சம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூனைக்குட்டியாரே இது உங்களுடைய முயற்சியா? பாராட்டுக்கள்

மக்கள்மனங்களை இலகுவில் தொடக்கூடியதால் உள்ளது.

என்ன ஒரு குறைபாடுதான் உண்டு, உங்கள் விண்ணப்பம் கடவுள் பக்தர்களை நோக்கி இருக்கிறது,

அது இரக்கம் குறைந்தவர்களின் கூட்டம் அல்லவா?

தேங்காய் உடைப்பதும், அரிச்சனைகள் செயவதும் சொந்தநலனின் பொருட்டே செயபவர்கள்தானே அவர்கள்!

இல்லயண்ணா........... நான் உத செய்யல..... உது இங்க பிரான்சில தமிழ்க் கடையள் கூட இருக்கிற லா சப்பலில நோட்டீஸ் நிறைய ஒட்டிக் கிடந்தது............... அதான் போட்டன்............... உத தைரியமா செஞ்ச ஆக்கள பாராட்டத்தான் வேணும்.............. ஆனா உந்த நோட்டீசுகள கோயில் காரரோ அல்லாட்டி கடைக்காரரை கிழிச்சுப் போடுகினம்........................... இந்த நோட்டிச ஒட்டின தைரியசாலிகள் நாட்டில அக்கறையுள்ளவங்களாத்தனர் இருப்பாங்கள்............... அவை நாளைக்கு இங்க பிள்ளையார் கோயில் தேர் இழுக்கேக்க அங்கயும் நோட்டீச மக்களிட்ட குடுக்கோணும்................... இந்த நோட்டீச பாத்தாபிறகும் நாளைக்கு எந்த விசுக்கோத்துகளாவது தேங்காய் உடைச்சுதுகளெண்டால்....... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் புரிந்து கொள்ளாமல் இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி

அந்த தேங்காயை இறைவன் ஏற்று கொள்வான என்பதில் சந்தேகம் தான் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படங்கள் சரி.. ஆனால் இதனை இணைத்தவர் இதில் முரண்படுகிறாரே.

ஏனெனில்.. அவர் நல்லூர் கந்தன் திருவிழா தொடர்பில் எழுதப்பட்ட கருத்தில் முரண்பட்டவர். அதுமட்டுமன்றி.. நேசக்கரத்தின் அழைப்புக்களை கூட ஏற்றுக் கொள்ளும் பங்குவமற்ற நிலையில்.. தன்னையும் அடியார்கள் வரிசையில் நிறுத்தி இதனை கூறி இருப்பின்.. நியாயமானதே..!

அண்மையில் புலம்பெயர் நாடொன்றில் ஒரு கோவில் திருவிழாவுக்கு ஒரு தொண்டனாகச் சென்றிருந்தேன். அவர்கள் தங்களது வருமானத்தில் குறிப்பிடத்தக்க தொகையை வன்னியில் உள்ள மக்களுக்காக தாயகத்தில் நலிவுற்றுள்ள மக்களுக்கு அனுப்பி வருவதையும் அறியத்தந்தார்கள்.

ஆக அடியார்கள் பங்களிப்பு செய்வது.. தெரிந்தோ தெரியாமலோ நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது போதாது. அதற்கு இவ்வாறான விளம்பரங்கள் ஒரு ஊக்கமாக இருக்கும். ஆனால் போஸ்ரர் ஒட்டிறவர்கள்.. தாங்கள் எப்படி நடந்துக்கிறார்கள் என்பதை.. தங்கள் மனச்சாட்சிப் பிரகாரம் முடிவு செய்யவும் வேண்டும்..! போஸ்ரர் ஒட்டுறது அல்ல முக்கியம்.. அடியார்களுக்கு முன் மாதிரியா திகழ வேண்டியவர்கள் இவர்கள்..! ஆனால்...???! :D:o

Link to comment
Share on other sites

சிறீலங்கா தூதரகத்தின் முழமையான ஆதரவுடன் நாளை பாரிசில்; ஒரு கோவில் தேர் திருவிழா நடைபெறவுள்ளது.பல்லாயிரக் கணக்கான தேங்காய்கள் நாளை ரா சப்பல் தெருவை பதம் பார்கக்ப் போகின்றன.மக்களின் உணர்வுகளை திசை திருப்புவதற்கு நடக்கும் இந்த நிகழ்வை நேரஞ்சல் செய்யப் போவதாக ஒரு வலைக்காட்சி பெருமையுடன் சொல்லிக் கொள்கிறது.தமிழ் தேசிய தொலைக்காட்சியுடன் அல்லது புலிகளின் குரலுடன் அல்லது அனைத்துலகத் தொடர்பகத்தின் ஊடகப் பிரிவுடன் தொடர்பு கொண்டு வன்னி மக்களின் இடப் பெயர்வை அங்குள்ள அவலங்களை நேரஞ்சல் செய்தால் இங்குள்ள மக்கள் உணர்வு பெற்று தேங்காய்களை தெருவில் உடைக்காமல் தாயக உறவுகளுக்கு கொடுத்துவிடுவார்கள் பாருங்கள்.வாழ்க இவர்களின் திருப்பணி.மேன்மை கொள் தேர் திருவிழா நீதி விளங்குக உலக மெல்லாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா தூதரகத்தின் முழமையான ஆதரவுடன் நாளை பாரிசில்; ஒரு கோவில் தேர் திருவிழா நடைபெறவுள்ளது.பல்லாயிரக் கணக்கான தேங்காய்கள் நாளை ரா சப்பல் தெருவை பதம் பார்கக்ப் போகின்றன.மக்களின் உணர்வுகளை திசை திருப்புவதற்கு நடக்கும் இந்த நிகழ்வை நேரஞ்சல் செய்யப் போவதாக ஒரு வலைக்காட்சி பெருமையுடன் சொல்லிக் கொள்கிறது.தமிழ் தேசிய தொலைக்காட்சியுடன் அல்லது புலிகளின் குரலுடன் அல்லது அனைத்துலகத் தொடர்பகத்தின் ஊடகப் பிரிவுடன் தொடர்பு கொண்டு வன்னி மக்களின் இடப் பெயர்வை அங்குள்ள அவலங்களை நேரஞ்சல் செய்தால் இங்குள்ள மக்கள் உணர்வு பெற்று தேங்காய்களை தெருவில் உடைக்காமல் தாயக உறவுகளுக்கு கொடுத்துவிடுவார்கள் பாருங்கள்.வாழ்க இவர்களின் திருப்பணி.மேன்மை கொள் தேர் திருவிழா நீதி விளங்குக உலக மெல்லாம்.

அப்போ நிமிர்த்த முடியாது என்கிறீர்கள்

Link to comment
Share on other sites

அப்போ நிமிர்த்த முடியாது என்கிறீர்கள்

நிமிர்த்தவே முடியாது. இருந்து பாருங்கள் நாளைக்கு சில பக்த கேடிகள் உடைக்க தான் போகிறார்கள்(தேங்காயை)

Link to comment
Share on other sites

தேங்காய் உடைப்பதன் தத்துவம்

கோயில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம். இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம். தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம். அதைப் பற்றி ஒரு சிறிய தத்துவ தகவல்.

தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும் அதனுள் நீரும் உள்ளது.

உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும்.

இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை ஒத்து இருக்கின்றது. ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது. அதுபோல் வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறை(க்)கின்றது.

ஈசுவர சந்நிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுவரூபத்தை காட்டி அவர் அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலையே இது காட்டுகிறது.

இவ்வளவு உட்கருத்து இருப்பதால் தான் தேங்காயை இறைவழிபாட்டில் முக்கிய பொருளாக வைத்து நம்முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்கிற உண்மையை நாம் உணர வேண்டும்.

Link to comment
Share on other sites

சமயச் சடங்கு, ஆலய வழிபாடு என்பவற்றிற்கு நம்மவர் செய்யும் செலவு ஒப்பீட்டளவில் மிகச்சொற்பமே.

மேலும் தெய்வ வழிபாடு குதூகலத்திற்காக செய்யப்படும் ஒன்றல்ல.

மக்கள் தம் துன்பதின் வடிகாலாக நம்பியிருப்பது ஆலயம் ஒன்றைதான்.

நம்மவர் மது, party என்பவற்றிற்கு செய்யும் சேலவுகளை பாருங்கள், இதை குறை சொல்வார் யாரும் இல்லை. ஒரு தேங்காயில் செய்யும் செலவை குறைப்பதன் மூலம் வன்னியின் பட்டினியை தவிர்க்கலாமா? மேலும் ஆலய வழிபாடு செய்வோர் மூடர்களும் அல்ல, சுயனலம் பிடித்தோரும் அல்ல. தாயக நிலமை எண்ணி வருந்துவோரும் உ தவுவோரும் அவர்களாவர்.

ஆலயம் செல்வோரை குறை கூருவோர், ஆலயம் செல்லாதோர் என்ன உடல், பொருள்,இன்பம், ஆவி எல்லவற்றையும் வன்னி மக்களுக்கு கொடுத்துவிட்டு கோவணத்துடன் உலா வருபவர்கள் என்றா புகட்ட நினைக்கிறார்கள் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில தேங்காய் உடைப்பதில் குறை காணுபவர்கள் பொழுது போக்காக படம் பார்க்க போவார்கள், பாருக்கு போவார்கள், கிளப்புக்கு போவார்கள், இல்லை வீட்டில தண்ணி அடிப்பார்கள், பிள்ளையளுக்கு பொழுது போக்க வீடியோ கேம் வாங்கி கொடுப்பார்கள்.

எனக்கும் தேங்காய் உடைப்பதில் துளிஅளவும் விருப்பம் இல்லை ஆனால் ஒரே சமூகத்தை விழுந்து விழுந்து வாருறத விட்டுட்டு உருப்படியா ஏதாவது செய்யலாம்.

உதாரணத்துக்கு எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு உண்மை சம்பவம் சொல்றேன்.

நானும் நண்பனும் யூனி பாரில ஒரு பிச்சர் பீர் ($12) எடுத்து அடிச்சிட்டு இருக்க தேசிய விரும்பியான ஒரு நபர் அந்த பக்கமாக வந்தார் (அவர் சமூக அந்தஸ்து கருதி குடிப்பதில்லை). வந்து ஒரே லெக்சர். அந்த 12 டொலரை அனுப்பினா அங்கை 12 குடும்பம் ஒரு நேரம் சாப்பிடுமாம். அந்தாளுக்கு பதில் சொல்ல எனக்கு இன்னுமொரு பிச்சர் வேணுமெண்டு போட்டு பதில் ஒண்டும் சொல்லாமல் விட்டுட்டேன். அன்று மாலையே வேறொரு இடத்துக்கு போகும் போது தியேட்டருக்கு பக்கத்தில அதே நபர் தனது நண்பருடன் படம் பார்க்க பொப்கோணுடன் நின்றார். எனக்கு கடுப்பாகிட்டுது. நேரா போய் உந்த காசை (2 பட அனுமதி $20, பெப்கோர்ன் $5) அனுப்பினால் 25 குடும்பம் ஒரு நேரம் சாப்பிடும் எண்டு சொல்ல அவருக்கு மூஞ்சையெல்லாம் கறுத்திட்டுது. அவருது நண்பர் ரென்சனாகி என்னோட ஏதோ கதைக்க வெளிக்கிட இவர் சமாளிச்சு தடுத்திட்டார்.

இதில என்ன சொல்ல வாறேன் எண்டால்:

தேங்காய் உடைக்கிறதில ஒரு பிரயோசனமும் இல்லை. 100 தேங்காய் உடைக்க 100 டொலர் முடியும்.

ஆனால் ஒருநாள் நண்பர்களுடன் வெளியே போனால் 100 - 200 எண்டு போகும்

குடும்பத்துடன் படம் பார்க்க போனால் 50 - 100 எண்டு வேணும் (இப்பவும் ரொறன்ரோ போய் தமிழ் தியேட்டர் வளிய பாத்தா சனம் முண்டியடிச்சுகொண்டு தான் நிக்குது)

பிள்ளைக்கு வீடியோ கொன்சோல் வாங்கி கொடுத்தால் 300 - 400 எண்டு வேணும்

அந்த வீடியேக்கு கேம் வாங்கி குடுத்தால் 60 - 70 எண்டு வேணும்

எல்லாத்துக்கும் மேலால புலம்பிற ஆக்கள் தாங்கள் இருக்கிற 400 000 - 600 000 எண்டு வீட்டை வாங்கி, வங்கி காறனுக்கு மோர்கேச்சுக்கு 800 - 1000 எண்டு வட்டி கட்டுறத விட ஒரு சாதாரண வீட்டை வாங்கி 200 - 300 ஜ் வட்டியா கட்டி மிச்ச 500 - 700 ஊருக்கு அனுப்பினாலும் சனத்தின்ர கஸ்டத்தை கொஞ்சம் தீர்கலாம்.

இப்பிடி மாதம் மாதம் 500$ - 1000$ எண்டு மிச்சம் பிடிச்சு அனுப்பிறத விட்டுட்டு வருடத்தில 100 டொலருக்கு கேங்காய் அடிக்கிறான் எண்டு புலம்புறிங்கள். இங்கு சிலருக்கு தேங்காய் அடிக்கிறது பிரச்சனை இல்லை.... சைவ சமூகத்தில் குற்றம் காணுவதே பிரச்சனையாக உள்ளது. :D:o

Link to comment
Share on other sites

அண்ணா ஆலயம் சொல்வதை குறை சொல்வதல்ல இங்கே பிரச்சனை சிலங்கா அரசின் பின்புலத்தோடு மக்களின் உணர்வுகளை மழுங்கடிப்பதற்காக விழா எடுப்பத தான் பிரச்சனை.அங்கே எங்கள் உறவுகள தாய் நாட்டின் விடுதலைக்காக தங்கள் உயிரைNகொடக்கிறார்கள்.

இங்கே ஒருதேங்காய் அடிக்க வேண்டாம் என்று கெட்டால் உங்களுக்கு தன்மானம் பொததுக் கொண்டு வருகிறது.அது சரி பாரிசல்சிறீலங்கா அரசின் துணையோடு நடக்கம் பிள்iளார்தான் அருள்பாலிப்பாரா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமயச் சடங்கு, ஆலய வழிபாடு என்பவற்றிற்கு நம்மவர் செய்யும் செலவு ஒப்பீட்டளவில் மிகச்சொற்பமே.

மேலும் தெய்வ வழிபாடு குதூகலத்திற்காக செய்யப்படும் ஒன்றல்ல.

மக்கள் தம் துன்பதின் வடிகாலாக நம்பியிருப்பது ஆலயம் ஒன்றைதான்.

நம்மவர் மது, party என்பவற்றிற்கு செய்யும் சேலவுகளை பாருங்கள், இதை குறை சொல்வார் யாரும் இல்லை. ஒரு தேங்காயில் செய்யும் செலவை குறைப்பதன் மூலம் வன்னியின் பட்டினியை தவிர்க்கலாமா? மேலும் ஆலய வழிபாடு செய்வோர் மூடர்களும் அல்ல, சுயனலம் பிடித்தோரும் அல்ல. தாயக நிலமை எண்ணி வருந்துவோரும் உ தவுவோரும் அவர்களாவர்.

ஆலயம் செல்வோரை குறை கூருவோர், ஆலயம் செல்லாதோர் என்ன உடல், பொருள்,இன்பம், ஆவி எல்லவற்றையும் வன்னி மக்களுக்கு கொடுத்துவிட்டு கோவணத்துடன் உலா வருபவர்கள் என்றா புகட்ட நினைக்கிறார்கள் ?

நீங்களும் எனது கருத்தையே எழுதி இருக்கிறீர்கள். உங்கள் கருத்தை பார்பதற்கு முன்னரே, தலைப்பு மற்றும் முதல் 3-4 கருத்தை, பார்ததுமே எழுதணும் போல இருந்து எழுதிட்டேன். நீங்கள் சொன்னது போல ஆலய வளிபாட்டிற்கு செலவளிப்பது மிகச் சொற்பமே. ஒரு பழமொழி: ஊசி போறது தேடுறோம் உலக்கை போறது தெரியாமல்

அண்ணா ஆலயம் சொல்வதை குறை சொல்வதல்ல இங்கே பிரச்சனை சிலங்கா அரசின் பின்புலத்தோடு மக்களின் உணர்வுகளை மழுங்கடிப்பதற்காக விழா எடுப்பத தான் பிரச்சனை.அங்கே எங்கள் உறவுகள தாய் நாட்டின் விடுதலைக்காக தங்கள் உயிரைNகொடக்கிறார்கள்.

இங்கே ஒருதேங்காய் அடிக்க வேண்டாம் என்று கெட்டால் உங்களுக்கு தன்மானம் பொததுக் கொண்டு வருகிறது.அது சரி பாரிசல்சிறீலங்கா அரசின் துணையோடு நடக்கம் பிள்iளார்தான் அருள்பாலிப்பாரா.

ஏன் மற்ற சமயத்தவர் நாடு நாடா போய் இலங்கை அரசின் ஆதரவோடு தான் சமய பிரச்சாரம் எண்ட போர்வையில் செய்யிற பிரச்சாரம் ஒண்டும் தெரியாது கோயில்ல தேர் இழுக்கிறது தான் உங்களுக்கு பொத்துக்கொண்டு வருகுதோ?

அது சரி அவர்களின் சமய பிரச்சாராம்(?) மூடிய சுவருக்குள் நடப்பதால் பாதிப்பு இல்லையாக்கும். இவர்கள் வெளியா தேர் இழுத்து தேங்காய் உடைக்கிறது தான் கண்ணுக்கை குத்துது போல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் தூயவன் களத்தில இல்லாத தைரியம்தான்! வேறென்ன சொல்ல!

Link to comment
Share on other sites

ஐயா நெருப்பு தேனி இணையத்தளங்களும் உங்கள் கருத்தை பிரதிபலித்து தான் கருத்;து வெளிட்டிருக்கின்றன.பெருமைப்

Link to comment
Share on other sites

அண்ணா டக்கிளசு மாமா? இங்க வந்து பிரான்சில் புலிகளின்ரை அதரவு தளத்தை சிதைக்கிறதுக்க என்ன செய்யலாம் என்று கெட்ட போது இந்த தெர் திருவிhழவை பயன்படுத்த வேநண்டும் என்று ஆர் அர் ஆலோசனை சொன்னவை எண்டது எங்களுக்குத் தெரியும்.டக்கிளஸ் அதுக்கு பொறப்புக் கொடுத்த குகன் மாமா இப்ப உள்ளை இருக்கிறாராம்?

Link to comment
Share on other sites

தேரும் திருவிழாவும் தமிழர் பண்பாட்டின் அழகிய அம்சங்கள் தான் மறுக்கவில்லை. தமிழர் பண்பாட்டில் சைவத்திற்கும் இறைவணக்கத்திற்கும் உள்ள பெரும்பங்கை நேர்மையாக சிந்திக்க தெரிந்தவர்கள் எவரும் மறுக்கவும் முடியாது

ஆனால் அதே நேரத்தில் தாயகத்தில் இந்துக்களின் வணக்கத்தலங்களின் மேல் குண்டுமழை பொழிந்தும் இராணுவ முகாம்களாக்கியும் இறைநிந்தனை செய்யும் சிங்கள இனவாத அரசு, ஐரோப்பாவில் அதே இந்துக்களின் கோயில் திருவிழாக்களுக்கு அனுசரனையாளராக செயற்பட முனைவது ஏன்?

இந்த திருவிழாக்களுக்கு சிங்கள அரசு அனுசரனையாளராக செயற்படுதல் என்பது, தமிழர் பிரதேசங்களில் தான் கட்டவிழ்த்து விட்டுள்ள இராணுவ அட்டூழியங்களை மறைத்து, தமிழர்களின் மதசுதந்திரத்தை மதிக்கும் ஒரு அரசாக தன்னை வெளியுலகிற்கு காட்ட சிங்களம் போடும் சர்வதேச நாடகத்தின் ஒரு அங்கமே ஆகும்

சிங்களத்தின் இந்த கபட எண்ணத்திற்கு துணை போகும் கோவில் நிர்வாகங்களையும் அவர்கள் நடத்தும் விழாக்களையும் புறக்கணிப்பது இன்றைய காலத்தின் தேவையாகும். இதை புலம்பெயர் தமிழர்கள் செய்ய முன்வரவேண்டும்.

சிங்கள பயங்கரவாத அரசு தமிழ் மக்களின் தலைகளில் குண்டுமழை பொழிந்து விட்டு அதே இரத்தம் தோய்ந்த கைகளுடன் வந்து பாலாபிசேகத்திற்கும் அனுசரனை செய்யும் திருவிழாக்களை தமிழர்கள் புறக்கணிப்பதே மிகச்சிறந்த இறைவணக்கம் ஆகும்.

அதுவே தர்மமும் ஆகும்!

தர்மத்தின் பக்கம் நிற்பவர்களுக்கு இறை ஆசீர்வாதம் வீடு தேடி வரும்!!

அவர்களுக்கு வேறு பூசைகளும் திருவிழாக்களும் தேவையில்லை!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேரும் திருவிழாவும் தமிழர் பண்பாட்டின் அழகிய அம்சங்கள் தான் மறுக்கவில்லை. தமிழர் பண்பாட்டில் சைவத்திற்கும் இறைவணக்கத்திற்கும் உள்ள பெரும்பங்கை நேர்மையாக சிந்திக்க தெரிந்தவர்கள் எவரும் மறுக்கவும் முடியாது

ஆனால் அதே நேரத்தில் தாயகத்தில் இந்துக்களின் வணக்கத்தலங்களின் மேல் குண்டுமழை பொழிந்தும் இராணுவ முகாம்களாக்கியும் இறைநிந்தனை செய்யும் சிங்கள இனவாத அரசு, ஐரோப்பாவில் அதே இந்துக்களின் கோயில் திருவிழாக்களுக்கு அனுசரனையாளராக செயற்பட முனைவது ஏன்?

இந்த திருவிழாக்களுக்கு சிங்கள அரசு அனுசரனையாளராக செயற்படுதல் என்பது, தமிழர் பிரதேசங்களில் தான் கட்டவிழ்த்து விட்டுள்ள இராணுவ அட்டூழியங்களை மறைத்து, தமிழர்களின் மதசுதந்திரத்தை மதிக்கும் ஒரு அரசாக தன்னை வெளியுலகிற்கு காட்ட சிங்களம் போடும் சர்வதேச நாடகத்தின் ஒரு அங்கமே ஆகும்

சிங்களத்தின் இந்த கபட எண்ணத்திற்கு துணை போகும் கோவில் நிர்வாகங்களையும் அவர்கள் நடத்தும் விழாக்களையும் புறக்கணிப்பது இன்றைய காலத்தின் தேவையாகும். இதை புலம்பெயர் தமிழர்கள் செய்ய முன்வரவேண்டும்.

சிங்கள பயங்கரவாத அரசு தமிழ் மக்களின் தலைகளின் குண்டுமழை பொழிந்து விட்டு அதே இரத்தம் தோய்ந்த கைகளுடன் வந்து பாலாபிசேகத்திற்கும் அனுசரனை செய்யும் திருவிழாக்களை தமிழர்கள் புறக்கணிப்பதே மிகச்சிறந்த இறைவணக்கம் ஆகும்.

அதுவே தர்மமும் ஆகும். தர்மத்தின் பக்கம் நிற்பவர்களை இறை ஆசீர்வாதம் வீடு தேடி வரும். அவர்களுக்கு வேறு பூசைகளும் திருவிழாக்களும் தேவையில்லை

இத்தோடு சைவ சமயத்துக்கு எதிராக கதைச்சுக் கொண்டு திரிய செலவு செய்யுற நேரத்தையும் பணத்தையும் தாயக உறவுகளுக்கு அனுப்பி வைத்தும் உதவலாம்..! :D:o

Link to comment
Share on other sites

இத்தோடு சைவ சமயத்துக்கு எதிராக கதைச்சுக் கொண்டு திரிய செலவு செய்யுற நேரத்தையும் பணத்தையும் தாயக உறவுகளுக்கு அனுப்பி வைத்தும் உதவலாம்..! :D:o

நீங்கள் சொல்வது சிந்திக்கத் தக்கதும் ஏற்றுக்கொள்ளத் தக்கதும் தான்.

இதை சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்து தாயக பணிக்காக அனைவரும் ஒன்று திரண்டு உழைக்கும் வண்ணம் தங்கள் செயற்பாடுகளை அமைத்துக் கொள்வார்கள் என்று நம்புவோம்!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதையும் கணித ரீதியில் சொன்னால் இலகுவாய் புரியும்🤣
    • 52 வீதமான மக்கள் போரை விரும்பவில்லை என்று எனக்கு விளங்குகிறது. 74 வீதமான மக்கள் போரை வீரும்பவில்லை என்று உங்களுக்கும் கபிதானுக்கும் விளங்குகிறது.  🙂
    • ஆஹா.... "கொல்லைப்புறம்". 😂 சிரித்து வயிறு நோகுது.  
    • அங்கே என்ன நடந்தது? 1. "ரேடாரில் மாட்டாமல் தாழப் பறக்கும் நுட்பத்தை முதலில் பயன்படுத்தியது இஸ்ரேல்" என்று நான் எழுதினேன் (கவனியுங்கள்: அமெரிக்கா அல்ல, இஸ்ரேல்). 2. நீங்கள் வந்து "ஜப்பான் காரர் இதை பேர்ள் ஹாபரில் செய்து விட்டார்கள், சொம்பு, முட்டு, பொங்கல், அவியல்" என்று குதித்தீர்கள். ஆதாரம் கேட்டேன், மௌனமாகப் போய் விட்டீர்கள் (ஏனெனின், ஜப்பான் காரன் கூட தான் இதைச் செய்ததாக எங்கும் சொல்லி நான் அறியவில்லை). 3. பின்னர் நான் ரேடாரில் ஜப்பான் விமானங்கள் தெரிந்தமை, ஏன் அமெரிக்கா தவற விட்டது என்று வரலாற்று நூல்களில் இருந்த தகவல்களைச் சொன்னேன். 4. இன்னொரு உறவு, விமானங்கள் ரேடாரில் தெரிந்ததை உறுதிப் படுத்தும் ஒரு ஆதாரப் பதிவை இணைத்தார் (கவனியுங்கள்: நீங்கள் எதுவும் இணைக்கவில்லை😎!) அதே ஆதாரத்தை , தாழப் பறந்து வந்து ஜப்பானியர் தாக்கியதன் ஆதாரமாக எனக்கு நீங்கள் சிவப்பெழுத்தில் கோடிட்டுக் காட்டியிருந்தீர்கள் (மீண்டும் கவனியுங்கள்: "ஆங்கிலம் ஒரு மொழியேயொழிய, அது அறிவல்ல!" - எங்கேயோ கேட்ட குரல்😎!) எனவே, இது வரை ஜப்பானியர் தாழப் பறந்து வந்து ரேடாரில் இருந்து தப்பினர் என்பதற்கு ஒரு ஆதாரமும் நீங்கள் தரவில்லை (இல்லாத ஆதாரத்தை எப்படித் தருவதாம்😂?).   இனி உங்கள் பிரச்சினைக்கு வருவோம்: நீங்கள் உட்பட யாழில் ஓரிருவரின் பிரச்சினை "மேற்கு எதிர்ப்பு" என்ற ஒரு உணர்ச்சி. அந்த உணர்ச்சிக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம், அதை மறுக்க யாருக்கும் உரிமையில்லை. ஆனால், அந்த உணர்ச்சி மட்டுமே உலகத்தை, சம்பவங்களைப் புரிந்து கொள்ளப் போதாது. அப்படி உணர்ச்சி மட்டும் வைத்து "நாசா சந்திரனுக்குப் போகவில்லை" என்று கூட வாதாடும் நிலை இருக்கிறது பாருங்கள்? அந்த முட்டாள் தனத்தைத் தான் நான் சவாலுக்குட் படுத்துகிறேன். இனியும், தவறாமல் செய்வேன் - நீங்கள் சொம்போடு குறுக்கே மறுக்கே ஓடினாலும், நான் நிறுத்தாமல் செய்வேன்! ஏன் இப்படி சவலுக்குட்படுத்துவது முக்கியம்? இந்த மேற்கு எதிர்ப்பு உணர்ச்சி மயப் பட்டு, பொய்த்தகவல்களை உங்கள் போன்றோர் பரப்புவதால் மேற்கிற்கு ஒரு கீறலும் விழாது. ஆனால், எங்கள் தமிழ் சமுதாயத்தில், குறிப்பாக புலத் தமிழ் சமுதாயத்தில், இதனால் ஒரு முட்டாள் பரம்பரை உருவாகி வரும் ஆபத்து இருக்கிறது. எனவே, உங்கள் போன்றோரை அடிக்கடி இப்படிச் சவாலுக்குட்படுத்துதல் அவசியம். உங்களுக்கு முடிந்தால், இந்த சவால்களை ஆதாரங்களை இணைத்து எதிர் கொள்ளலாம். இல்லையேல் சொம்போடு நின்று விடலாம், இரண்டும் எனக்கு சௌகரியமே!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.