Jump to content

அடியார்களே... நான் பசியாய் இருக்கிறேன், எனக்கு சாப்பாடு தாருங்கள்


Recommended Posts

//ஆனால் அய்யர்மார் பெரும்பாலும் 6ம்,7ம் வகுப்பு மட்டுமே படித்திருப்பார்கள். ஆங்கில அறிவு காணாது. அதனால் அவர்களுக்கு தூதுவர்களுடன் கதைக்க ஏலாமல் இருக்கிறது. இதைவிட சில கோவில்களும் அங்குள்ள அனாதைப்பிள்ளைகளுக்கு உதவி புரிகிறது. உ+ம் - தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவில். //

குறிப்பிட்ட சாதியில் பிறப்பதால் ஒருவர் அய்யாருகி தனக்கு ஒரு வருமானத்தை பெறும் வழி இருக்கும் போது யார் கஸ்ட்டப்பட்டு படிக்கப் போகிறார்கள்.இங்கே தவறு எங்கே இருக்கிறது? அய்யராவதற்கான தகுதி கல்வித்தகமையாக் இருந்தால் இவ்வாறு இருக்காது அல்லவா? இங்கே பிரச்சினை எங்கு இருக்கிறது?

Link to comment
Share on other sites

  • Replies 125
  • Created
  • Last Reply

சரி, தேவையற்ற விவாதங்கள் எதற்கு?

விளக்கப் படத்தின் நோக்கம், தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைத்து, அதன் மூலம் வரும் சேமிப்பில் தாயகத்தில் உள்ள உறவுகளுக்கு உதவலாம் என்ற செய்தியை பரப்புவதே. பார்ப்பவனுக்கு உறைக்கும் படியான கருத்தை சொல்லும் படம். என்னை பொறுத்த வரையில் கோவிலுக்காக செய்யும் சில செலவுகள், Pizza காக செலவு செய்வதிலும் மோசமானது என்று தான் சொல்வேன். உதாரணத்துக்கு, தேங்காய் உடைப்பதை சொல்லலாம். தேர் திருவிழாவன்று தேங்காயை மலை போல குவித்து வைத்து உடைப்பதெல்லாம் தேவையா? எமக்கு பசித்தபோது Pizza வாங்கி சாப்பிட்டால் தப்பா?

எதற்காக எல்லாம் செலவு செய்வது / கூடாது என்பது ஒவ்வொருவரையும் பொறுத்தது தான். ஆனால், கோயிலுக்காக செய்யும் சில செலவுகள் வீண் செலவுகளே.

Link to comment
Share on other sites

உந்த படத்தை கணனியில வரைஞ்வர் அந்த கணனியை வித்த காசு கணனி இயங்கின நேரத்து கரண் காசு உதை வரைஞ்சு மினக்கட்ட நேரத்தில எங்கையாவது வேலை செய்து அந்தக் காசு எண்டு எல்லாத்தையும் சேத்து அனுப்பியிருந்த எத்தனை குழந்தைகளுக்கு சாப்பாடு போடலாம்.

குளிக்க விரும்பாதவை முகச்சவரம் செய்யத் தெரியாதைவை வழிகாட்டியாக தூக்கி வைச்சிருக்கிறவைக்கு உதுகள் எங்கை விளங்கப்போகுது.

வன்னி மக்களின்ரை அவலத்தை சாட்டா வைத்தாவது எங்கடை இந்து சமயத்தை அழிச்சுப்போடலாம் எண்டு பாக்கினம். அங்கை ஆமிக்காறன் இடிக்கிற பிடிக்கிற கோயில்களை எரிக்கிற தேர்களை இங்கை பாதுகாப்பான இடங்களில தானே கட்டி காப்பாற்ற வேணும்.

-

புதுப் பழக்கம் எண்டதாலை மறந்து போகுது

கோட் பிளெஸ்சு தமிழீழம்!

நாங்களும் மன்னராட்சியை நிறுவ போராடுறம் அதுக்காக உயிரை கொடுக்கவும் தயாராக இருக்கிறம். எங்கடை கடவுள் நம்பிக்கையும் அதுக்கும் மேலானது புனிதமாாாானது.

ஆங்கிலேயர் கோட் சேவ் த குவீன் எண்டு தேசிய கீதம் படிச்சு படிச்சுத்தானே சாம்ராச்சியம் உருவாக்கினவங்கள் ஆனபடியா நாங்களும் கோட் சேவ் த கிங் எண்டு தேசிய கீதம் படிக்கத் தொடங்கலாம் நம்புங்கள் நாளை.

Link to comment
Share on other sites

எம்பெருமானே... அரோகரா... அரோஓஓஓகராஆஆ...

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்வது முற்றிலும் சரியானதே. இது தான் தற்போது ஐரோப்பா முழுவதிலும் நடைபெறுகின்றது. அடுத்தவர்கள் நடாத்தும் கோவிலை குறை சொல்பவர்கள் தாம் நடாத்தும் கோவில்களில் செய்வதை மறந்து விடுகின்றார்கள். எதையும் அடுத்தவர்களுக்கு புத்தி சொல்ல வரும் முன், தாமல்லவா முன்னுதாரணமாக நடந்து காட்ட வேண்டும். ஆனால் என்றுமே ஊருக்கு வெறும் உபதேசம் மட்டுமே. அதைவிட இப்படியான வருமானம் வரும் கோவில்களைத் தாக்க அவற்றை இலங்கை அரசுடன் முடிசசுப் போட்டு விடுவார்கள். இதனால் இந்த கோவில்களுக்கு வரும் மக்களை ஏதோ துரோகிகள் ஆக்குவது போலல்லவா இவர்களின் செயல்கள் அமைகின்றன.

இப்படிப் பார்த்தால் கிறிஸ்தவ தேவாலயங்களில் எத்தனை மூட்டை மூட்டையாக திருநாள்களின் போது மெழுகுதிரிகளை எரிக்கின்றார்கள். அவற்றை இவர்களால் என்ன செய்ய முடியும். எல்லோருக்கும் இளைத்தவன் இந்து சமயத்தவன் தானோ??

வசம்பு நீங்கள் 'அவர்கள்' என்று யாரைக் குறிப்பிடீர்கள்?

'இவர்கள்' அல்லது ' நாங்கள்' என்று யாரைக் குறிப்பிடீர்கள்?

உங்கள் கருத்தைப் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

:rolleyes:நான் எழுதியயது உங்களுக்குப் புரியவில்லையா?? :rolleyes::D நல்லதாய்ப் போச்சு. இல்லையேல் இதை வைத்தே நீங்கள் 10-12 பக்கங்களை வீணடித்திருப்பீர்கள். :D

Link to comment
Share on other sites

:rolleyes:நான் எழுதியயது உங்களுக்குப் புரியவில்லையா?? :rolleyes::D நல்லதாய்ப் போச்சு. இல்லையேல் இதை வைத்தே நீங்கள் 10-12 பக்கங்களை வீணடித்திருப்பீர்கள். :D

நீங்கள் யாரிஅக் கூறுகிறீர்கள் என்று சொன்னால் தான் நீங்கள் சொல்வது உண்மையா அதில் எவ்வகையான திரிப்புக்கள் இருக்கின்றன என்பதை அதனை ஆராய்ந்து பதில் சொல்ல முடியும்.ஏன் உங்கள் கருத்தைச் சொல்லப்பயப்படுகிறீர்கள்? உங்கள் கருத்துக்கு ஆதாராம் உள்ளது என்றால் யார் யார் என்பதைச்சொல்ல பயப்பட வேண்டிய அவசியம் இல்லையே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோயிலுக்கு தேங்காயை.. வெள்ளைக்காரன் விற்கல்ல. தமிழர்கள் தான் விற்கிறார்கள். வாங்குவதும் தமிழர்கள் தான். அந்தப் பணம் தமிழர்களுக்குள் தான் சுழல்கிறது. அதில் ஒரு சிறு பகுதியேனும் ஒரு பங்களிப்பினூடு தாயகத் தமிழர்களை சென்றடைய வாய்ப்பிருக்கிறது.

கொலிடேக்கு.. கியுபா போறதும்.. கரீபியன் போறதும்.. தினமும் மக்கில சிக்கின் சாப்பிடுறதும்.. தமிழர்களுக்கையா சுற்றப் போகுது.

பசிக்கு பிட்சா சாப்பிடுறவையை விட... பொழுதுபோக்கிற்கு சாப்பிடுறவைதான் பாருங்கோ.. கோவிலுக்கு 30 பி செலவு செய்து தேங்காய் உடைக்க வேணாம் என்று கத்துகிறார்கள். அந்த 30 பில் ஒரு 5 பி ஆவது தாயகத்துக்குப் போகக் கூடும். ஆனால்.. பிட்சா கடையிலும் மக்கிலும்.. கே எவ் சியிலும் கொட்டுறது.. 1 பி தானும் அங்க போகுமோ என்பது ஐயத்துக்குரியதே.

பொங்குதமிழில் குடை விற்றார்கள்.. ரீ சேட் விற்றார்கள்.. மக்கள் வாங்கினார்கள் தானே. அந்தப் பங்களிப்பு எங்க போகுது.. ஆடம்பரச் செலவுக்கா. தாயகப் பணிக்கு அல்லது அடுத்த பொங்குதமிழ் செலவுக்குத்தான் போகும்.

அதேபோல் கோவில் என்று வரும் போது.. குடைக்குப் பதில்.. தேங்காய். அந்தப் பணம் எங்க போகுது.. தாயகத்துக்கு உதவும் கோவில் என்றால் தாயகத்துக்குத்தான். ஒருவேளை தாயகத்தில் இருந்து இறக்குமதி செய்த தேங்காய் என்றால்.. அந்த வருமானத்தில் கூட ஒரு பகுதி எமது மக்களைத் தானே போய் சேரும்..!

உண்மையில்.. இங்கு பிரச்சனை.. தேங்காய் உடைப்பதால் பணம் விரையமாவது என்பதல்ல. நாத்திகவாதம் பேசி நேரத்தையும் காலத்தையும் எப்படி வீணடிப்பது என்பதுதான்..!

இன்றேல் ஐயர் பற்றி ஏன் கதைக்கனும்.. கார் வாங்கிறது பற்றி ஏன் கதைக்கனும். ஏன் உவை வீட்டுக்கு மூன்று கார் வைச்சிருக்கினமே.. அதுகளில ஒன்றை வித்துப்போட்டு.. ஊருக்கு பங்களிக்கலாமே...! அல்லது ரீமோகேச் செய்து கடனெடுத்து ஊருக்கு அனுப்பலாமே.. இவ்வளவு கரிசணை காட்டுறவை.. என்ன கவுண்சில் காசிலையா உயிர் வாழினம்..! அல்லது கவுண்சில் காசில கள்ளக் கணக்குக்காட்டி.. ஒரு தொகையை ஊருக்கு அனுப்பலாமே..!

சாமத்தியவீடு.. பரதநாட்டிய அரங்கேற்றம்.. பேர்தே பாட்டி.. 60 ம் திருமணப் பாட்டி.. மனிசிமாருக்கு கழுத்துக்கு தங்கக்கடை.. காஞ்சிபுரம்.. வாங்க செலவு செய்யுறதுகளில ஒரு 5 சதவீதத்தை என்றாலும் ஊருக்கு அனுப்ப குரல் கொடுக்கலாமே..??!

கழுத்தில நாய்ச்சங்கிலி.. காதில தோடு.. மூக்கில மூக்குத்தி.. தலையில 20 பவுணுக்கு கற் (தொப்பி) பி எம் டபிள்யுவை முறுக்கப் பெற்றோல்.. வாங்கி பெட்டையள் எங்க உலாவுறாளவ என்று தேடித் திரிய... செலவு செய்யுறதுகளை இளைய குத்தியங்கள் ஊருக்கு அனுப்பலாமே.. அதைப் பற்றி ஏன் பாருங்கோ சொல்லுறியள் இல்ல. அவை அத்தியாவசிய தேவைகளாமோ.. ஊரில உள்ள சனத்திற்கு இருக்கும் தேவையோட ஒப்பீடேக்க..!

உதுகளை எல்லாம் தட்டிக் கேட்க ஆட்களில்ல.. ஆனால்.. கோவில் தேங்காய் மட்டும் கண்ணுக்க குத்துது..நடக்கட்டும்..! :rolleyes::rolleyes:

Link to comment
Share on other sites

ஜேர்மனி ஹம் கோயில் தேர்த் திருவிழாவில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள் என்று சொன்னார்கள். இந்தக் கணக்கு உண்மையா என்று தெரியவில்லை. சில வேளைகளில் இருக்கக் கூடும்.

இந்தக் கணக்கு சரி என்று வைத்துக் கொண்டு அன்றைக்கு நாம் செலவழித்த தொகையை ஒரு அண்ணளவாகக் கணக்குப் போட்டுப் பார்ப்போம்.

ஒருவருடைய செலவைப் பார்ப்போம்

போக்குவரத்துச் செலவு - குறைந்தது 10 யூரோக்கள் x 50000

பெண்கள் ஒரு முறை உடுத்த புடவையை மறுமுறை உடுத்த மாட்டார்கள். ஐம்பதாயிரம் பேரில் 15000 பேர் பெண்கள் என்று வைத்துக் கொள்வோம். புடவை வியாபாரத்தில் தமிழ் வர்த்தகர்களுக்கு ஏற்படும் லாபம்களையும் கழித்துப் பார்ப்போம். நூறு யூரோக்களுக்கு குறையாமல் புடவையை பெண்கள் வாங்குகின்ற போது, அதில் 50 யூரோக்கள் வர்த்தகர்களின் லாபமாக சுழற்சி முறையில் தமிழர்களிடமே நின்றாலும், செலவாக 50 யூரோக்கள் போகின்றன.

புடவைகள் - குறைந்தது 50 யூரோக்கள் x 15000

கோயிலில் செலவழிக்கும் தொகைகள். இதிலும் சுழற்சி முறையில் தமிழர்களிடம் நிற்கும் பணத்தை கழித்தாலும் ஒருவருக்கு 5 யுரோக்களுக்கு குறையாமல் செலவாகும்.

இந்தக் கணக்குகளை மட்டும் பார்க்கும் போது

10 x 50000 = 500000

50 x 15000 = 750000

5 x 50000 = 250000

மொத்தம் = ஒன்றரை மில்லியன் யூரோக்கள்.

இக் கணக்கு சரியாக இருந்தால் நாம் ஒரு நாளில் ஒன்றரை மில்லியன்களை (இலங்கைப் பணத்தில் ஏறக்குறைய 22 கோடிகள்) வீசி எறிந்து விட்டோம்.

விடுதலைப் புலிகளின் பட்ஜெட்டில் 22 கோடி ருபாய்களுக்கு எத்தனை பெரிய மதிப்பு இருக்கிறது என்று விசாரித்துப் பாருங்கள்!

முக்கிய குறிப்பு: இந்தக் கணக்கு முறை சரியா என்பது எனக்கு உறுதியாக தெரியவில்லை. வேறு விதமான கணக்கை நீங்கள் போட்டால், அதைக் கூறுங்கள்

Link to comment
Share on other sites

இங்கே இந்தப் படம் சொன்ன செய்தி மிகத் தவறாக விளங்கிக் கொள்ளப்பட்டிருக்கின்றது. தேங்காய் உடைப்பதை நிறுத்துவதாலோ, மெழுகுதிரி கொளுத்துவதைத் தவிர்ப்பதாலோ தாயகத்தைக் காக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளதாக நான் இப்படத்தைக் கிரகிக்கவில்லை. மாறாக... ரோமாபுரி பற்றி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்ததுபோலவும், ஆபிரிக்கக் கண்டம் பஞ்சத்தால் அழியும்போது அமெரிக்க ஏகாதிபத்தியம் கோதுமையைக் கடலில் கொட்டியது போலவுமே எனக்குப் படுகிறது. அத்தோடு சிங்கள பயங்கர வாத அரசின் பிரச்சாரத்துக்கு மறைமுகமாகவும் துணைபோகிறார்கள் இந்த வேள்விச் செல்வர்கள்.

தாயகத்தில் ஓடுப்பட்டுத் திரியும் தமிழ்மக்கள் புலத்தமிழரின் தேங்காய் வேள்வியையோ மடுத்தலத்தில் இடம்பெறும் திருவிழாவையோ, நல்லூர்த் தேர்த் திருவிழாவையோ பார்த்து இவனெல்லாம் மனுசனா என்றுதான் நினைப்பார்கள். அடிபட்ட‌ ஒருவனிடம் அவன் துயரை ஆற்ற முயலாவிட்டாலும் காயத்தைப் பெருப்பிக்காமல் விடுவதே குறைந்தபட்ச மனிதாபிமானம்.

கோயில் குளம் செல்வது அவரவர் உரிமை. ஆனால், அந்தக் கோயிலுக்குள் அடுத்தவன் நெஞ்சில் மிதித்துத்தான் செல்லவேண்டுமெனில், அவன் எழுந்திருக்கும்வரை சிறிது ஒதுங்கியாவது இருப்போமே..! :rolleyes:

Link to comment
Share on other sites

வெளியால் இருந்து பார்க்கும் ஒரு வெளினாட்டவருக்கு இந்தத் திருவிழாக்கள் என்ன செய்தியைச் சொல்கின்றன?

ஒருவர் பொங்கு தமிழயும் இனத் திருவிழாக்களுடன் ஒப்பிட்டிருக்கிறார்.பொங்கு தமிழ் சொல்லும் செய்தி என்ன? இந்தத் திருவிழாக்கள் சொல்லும் செய்தி என்ன?

பொங்கு தமிழை ஐலன்ட் பதிரிகை முகைப்பில் போட்டு பாருங்கல் தமிழர்கள் சிறிலங்கா இராணுவதுக்கு ஆதரவாக இருகிறரகள் என்று சொல்ல முடியுமா?

எல்லோருக்கும் சொந்தச் செலவுகள் இருக்கின்றன, எந்த நேரத்தில் எது அவசியம் எது அவசியம் இல்லை என்பதை அவர் அவரே தீர்மானிக்க வேண்டும்.இது தேவையற்ற செலவா இல்லையா என்பதைப் பற்ரிச்சிந்தியுங்கள் என்று தான் கூற முடியும்.அதற்காகத் தான் இவ்வாறான பிரச்சாரங்கள் அவசியமாக் இருக்கின்றன.மக்கள் தாங்களாகவே முன் வந்து தான் இவற்றைச் செய்ய முடியும்.

தேர் இழுத்து பல்லயிரம் பேர் கூடித் தான் கடவுளை வணங்க வேண்டிய அவசியம் இல்லை இதனால் ஏற்படும் செலவுகளைத் தவிர்த்து அவற்றை நாட்டுக்கு அனுப்புவதன் மூலம் அல்லலுறும் உறவுகளுக்கு உதவலாம் என்பதே அடிப்படையான செய்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய கலியாணவீட்டிற்கு எனக்குத் தெரிந்தது ஒரு பத்திரிகைக்காரர்கள் 4 பேரளவில் கலந்து கொண்hர்கள். அவர்களின் போக்குவரத்துச் செலவு, மினுக்கல் செலவு, வாங்கிக் கொடுத்த பரிசுகள், கலியாணவீட்டுச் சோடனைகள் , மணடபச்செலவுகள் என்று பார்த்தால்

4* 100+4*50+4*500+10 000 =12 600 யூரோக்கள் நேற்று மட்டும் வீணாக்கப்பட்டன

இது ஒரு அடிப்படைக் கணிப்பீடு மட்டுமே

Link to comment
Share on other sites

வீதிகளை மூடி தேர் இழுப்பதற்கு இலவசமாக அனுமதி குடுக்கிற நாடுகள் இருப்பதாக தெரியவில்லை.

அத்தோடு காவல்துறை வந்து கண்காணிக்க ஒரு தொகை அறவிடப்படும் என்று நினைக்கிறன்.

இதைவிட நிகழ்ச்சி தினத்தில் மின்சாரச் செலவு தண்ணீர் செலவு, தேங்காய் பால் என்று பல விடையங்கள்.

இவை நுகரபட்டால் பறவியில்லை நம்பிக்கையின் அடிப்படையில் அளவிடமுடியாத ஏதே ஒருவகை வருமானக் கணக்கோடு செலவிடப்படுகிறது. பசிக்கும் போது சாப்பிடுவதை சற்று அவ்வப் போது ஆடம்பரமாக சாப்பிட்டால் அதில் உண்மையான விரையம் எத்தனை வீதம்?

புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள ஈழத்தமிழ் சமூகங்களைப் பொறுத்தவரை எண்ணிக்கையில் கணிசமான அளவில் எங்கு வாழ்கிறார்கள் எந்தளவிற்கு பொருளாதாரத்தில் காலூன்றியுள்ளார்கள் என்பவற்றை கணிப்பதானால் அதை கோவில்களின் எண்ணிக்கையிலும் அங்கு நடக்கும் ஆடம்பர நிகழ்வுகளின் பிரதிபலிப்பில் காணலாம்;. ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட வாழ்வின் உயர்ச்சி வசதிகள் சுகபோகங்களிற்கு தான் முன்னுரிமை கொடுப்பார்கள். இது இயற்கையானது.

அதற்கு அடுத்தாக பொது நோக்கில் எமது பொருளாதார பலம் எங்கு செலவிடப்படுகிறது என்றால் அது கோவில்களில் தான். நம்மவர்கள் கோவில்களில் செலவிடும் மொத்த தொகையில் எத்தனை வீதம் வேண்டும் சிதறு தோங்காய்களாலும் ஏனைய உதவித் திட்டங்கள் ஊடாகவும் தாயகத்துக்கு இறுதியில் உதவுகிறது? 10விகிதம்? 20 விகிதம்?

அப்படிப்பட்ட பொருளாதாரரீதியாக அர்த்தமற்ற அணுகுமுறை மூலம் சிறிய இனத்தின் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தை ஏன் விரையப்படுத்துகிறீர்கள்? தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தில் உயிரை பயணம் வைத்து வேலை செய்யும் தொண்டர்களிற்கு உதவித் தொகையும் கொடுக்க முடியாது நிதி இன்றி அவதிப்படுகிறது.

சர்வதேச தொண்டர் நிறுவனங்களிற்கு வழங்கப்படும் நிதிகளில் வழமையாக 40 முதல் 50 வீதம் தான் அதிகப்படியாக பயனாளிகளிற்கு இறுதியில் போகிறது. ஏனையவை ஆடம்பரமான நிர்வாக கட்டமைப்புகள் சம்பளங்கள் என்பவற்றில் விரையமாகிறது என்கிறோம். புனர்வாழ்வுக்கழகம் தொண்டர்களையும் வைத்துக் கொண்டு கிட்டத்தட்ட விரையங்கள் எதுவும் இன்றி இயங்க முனைகிறது 0 விகித விரையத்தோடு. அங்கீகாரம் அரசியல் காரணங்களுக்காக நாடுகள் அவர்களிற்கு நிதி வழங்கும் நிலையும் தற்பொழுது இல்லை. ஆனால் இங்கு 1 அல்ல பல பத்து கோயில்களுக்குள் கோடிக் கணக்கில் கொட்டிவிட்டு அதற்கு வினேதமான மனிதநேய பொருளாதார விளக்கம் வேறு 80 முதல் 90 வீத விரையத்தில்.

இந்த நாடகங்கள் எல்லாம் ஏன்? மத வெறி அந்தளவிற்கு எங்களை கட்டிப்போட்டுவிட்டதா?

புலம்பெயர்ந்தவர்களின் பொருளாதாரம் பலம் என்பது பின்வரும் பயன்பாடுகளிற்கு தற்பொழுது போகிறது.

-1- அவரவரது தனிப்பட்ட வாழ்விற்கு,

-2- அந்தந்த நாட்டிற்கு வரி, சுகாதார காப்புறுதி, ஓய்வூதிய பங்களிப்பு

-3- கோவில்கள்

-4- தாயகம் சம்பந்தப்பட்ட விடையங்கள்.

மேற்குலகில் மோசமாகி வரும் பொருளாதார நிலமைகள் புலம்பெயர்ந்தவர்களின் பொருளாதார பலத்தை 2009 இல் இருந்து வெகுவாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த நிலையில் நிச்சையம் முதலில் பாதிக்கப்படப் போவது 4 வகைக்கு ஒதுக்கப்படும் சில்லறைக் காசு தான் முதலில். அதிகரிக்கப் போவது 3 வகைக்கு ஒதுக்கப்படும் செலவுகள் தான் ஏன் என்றால் அது வேண்டுதல்கள் நம்பிக்கைகளிற்கு என்று செலவிடப்படுவது.

உருவாகி வரும் பொருளாதார மந்த நிலையால் ஒப்பீட்டளவில் சிறீலங்காவை விட எமக்குத்தான் அதிக நெருக்கடிகள் வரப்போகிறது. எமது வள விரையங்களை திருத்திக் கொள்ளவிட்டால் அதற்கான விலையை கொடுக்கப் போவது தாயகத்தில் உள்ளவர்கள் தான் தமது உயிர்களால்.

Link to comment
Share on other sites

ஒட்டு மொத்தத்தில் இந்த poster மனவருத்தத்தையே ஏற்படுத்தி உள்ளது.

புலம்பெயர் மக்கள் வன்னி நிலவரம் நன்கு அறிவார்கள். இவ்வளவு காலமும் மக்கள் நிதி உதவி செய்யவில்லையா ? இப்போது ஏன் இப்படி ஒரு ஏற்பாடு ?

மூடர்கள் தான் ஒருவரிடம் பண உதவி கேட்குமுன் அவரை குரை சொல்லி பின் கேட்பார்கள்.

இது ஒரு Negative approach.

எது முக்கியமாகச் சொல்லப்பட வேண்டுமோ - ie: வன்னி மக்கள் துன்பம் - அது புலம் பெயர் மக்களை குறை சொல்வதால் மறைக்கப்படுகிறது. அது தான் இந்த poster இல் உள்ள விடயம்.

ஒன்று மட்டும் தெளிவு France இல் தொலை நோக்கு அற்றவர்கள் தமிழர் தரப்பில் இருக்கிறார்கள். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க பங்குச் சந்தைகளின் வீழ்ச்சி.. அதன் பொருளாதார வீழ்ச்சி.. கோவில்கள் செய்த செலவுகளால் என்றும் யாழ் கள பொருளியல் விற்பன்னர்கள் அறிக்கை விடக் கூடும்.

ஆனால் உண்மை அதுவல்ல. தாயகத்துக்கு பங்களிக்க இதயமற்ற பலரின் பங்களிப்புக்களைக் கூட மறைமுகமாக.. தாயகம் நோக்கி எடுத்துச் செல்லும் கோவில்களும் உள்ளன. அவை வங்குரோத்து அடையா வண்ணம் பாதுகாக்கப்பட வேண்டும்.

மதவெறி என்பது சமய உச்சாடணம் என்பதில் அல்ல தங்கியுள்ளது. இங்கு சிலர் மக்களின் இறை நம்பிக்கையை நாத்திக வெறியோடு நோக்கி மத வெறியாக்கிக் கொள்கின்றனர். அது மதச் சுதந்திரத்தை அங்கீகரித்து நிற்கும் நவகால உலகில் மிக பிற்போக்கான சிந்தனை.

கோவில்களுக்குப் புறம்பாக.. மக்கள் பல விடயங்களில் அநாவசியச் செலவுகளைச் செய்கின்றனர். அவை கட்டுப்படுத்தப்படலாம். அதற்கு விழிப்புணர்வூட்டலாம்.

இப்போ எமது தேவை.. கோவில் நிர்வாகங்களை ஒருங்கிணைத்து.. தாயகம் நோக்கிய அவர்களின் பங்களிப்பை அதிகரிப்பதுவாகவே அமைய வேண்டும்.

நாத்திகவாதத்தினால் கோவில்களை இழுத்துப் பூட்ட முடியாது. அவர்களின் வாதம் மிகப்பலவீனமான வெறித்தனமான வாதம். அதை மக்களில் பெரும்பாலானோர் கருத்தில் கூட கொள்வதில்லை.

எனவே தாயகம் நோக்கிய பங்களிப்பை அதிகரிக்க செய்யக் கூடிய சாத்தியம் என்ன..??!

கோவில்களூடு மக்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்வதுதான். அதற்குரிய ஆரோக்கியமான கருத்துக்கள் தான் இங்கு வரவேண்டுமே தவிர.. உலகப் பொருளாதாரத்தின் சரிவில்.. கோவில்கள் பூட்டப்பட்டுவிடும்... புலம்பெயர் மக்களின் கோவில் மீதான செலவீனம் வற்றிப் போய்விடும் என்பதெல்லாம் ஒரு மிகைப்படுத்திய நாத்திகவாதிகளின் குழப்பகரமான கருத்துக்கள்.

மக்கள் 3000 என்ன 30000 தேங்காயை என்றாலும் உடைக்கட்டும் அது பிரச்சனையல்ல. அந்த 3000 தேங்காயில் இருந்து பெறப்படும் பணத்தில் எத்தனை சதவீதம் தாயகத்துக்கு அனுப்பப்பட்டப் போகிறது. அந்தச் சதவீதத்தை 100% என்று எதிர்பார்க்காமல்.. குறைந்தது 60 - 70% மாவது அனுப்ப கோவில்களை ஒருங்கிணைத்து செயற்பட வேண்டியதே இச்சமயத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை.

நாத்தியவாதமோ.. சமய எதிர்ப்புப் பிரச்சாரமோ அல்லது இவ்வாதங்களுக்கு ஏற்ப சோடிக்கப்பட்ட பொருளாதார மிகைப்படுத்தல் கட்டுரைகளோ அல்ல அவற்றைச் செய்யப்போவது.

இதே கூட்டம் தான்.. புறக்கணி சிறீலங்கா மூலம்.. சிறீலங்காவின் பொருளாதாரத்தை சிதைத்து.. யுத்தத்துக்கு முடிவு கட்டப் புறப்பட்டவர்கள். இறுதியில்.. யுத்தம் எந்தத் தளம்பலும் இன்றி சர்வதேச உதவிகளோடு போய்க் கொண்டிருக்க.. தமிழர்கள் தான் கஞ்சிக்கும் வழியில்லா நிலையை அடைந்துள்ளனர். இப்படியானவைதான் நாத்திகவாதிகளின் எடுத்தேன் கவுத்தேன் அறிக்கைகளும் கட்டுரைகளும்..!

எமது சமூகத்தை மையப்படுத்தி.. யதார்த்த சூழலில் நின்று எழுதப்படாத.. எவையும்.. மக்களால் மதிக்கப்படும்.. அல்லது மக்களின் பங்களிப்பை ஈர்க்கும் என்று எதிர்பார்க்க முடியாது..! தேவையற்ற நாத்திக சலசலப்புக்களை செய்து கோவில்கள் செய்து வரும் தாயத்தின் மீதான பங்களிப்பை குறைப்பதிலும்.. தாயகம் நோக்கிய பங்களிப்புக்களை கோவில்களை பங்காளிகளாக்கி அதிகரிக்கச் செய்வதே தற்போதைய சூழலில் அவசியமானது. :rolleyes:

Link to comment
Share on other sites

இங்கே இந்தப் படம் சொன்ன செய்தி மிகத் தவறாக விளங்கிக் கொள்ளப்பட்டிருக்கின்றது. தேங்காய் உடைப்பதை நிறுத்துவதாலோ, மெழுகுதிரி கொளுத்துவதைத் தவிர்ப்பதாலோ தாயகத்தைக் காக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளதாக நான் இப்படத்தைக் கிரகிக்கவில்லை. மாறாக... ரோமாபுரி பற்றி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்ததுபோலவும், ஆபிரிக்கக் கண்டம் பஞ்சத்தால் அழியும்போது அமெரிக்க ஏகாதிபத்தியம் கோதுமையைக் கடலில் கொட்டியது போலவுமே எனக்குப் படுகிறது. அத்தோடு சிங்கள பயங்கர வாத அரசின் பிரச்சாரத்துக்கு மறைமுகமாகவும் துணைபோகிறார்கள் இந்த வேள்விச் செல்வர்கள்.

தாயகத்தில் ஓடுப்பட்டுத் திரியும் தமிழ்மக்கள் புலத்தமிழரின் தேங்காய் வேள்வியையோ மடுத்தலத்தில் இடம்பெறும் திருவிழாவையோ, நல்லூர்த் தேர்த் திருவிழாவையோ பார்த்து இவனெல்லாம் மனுசனா என்றுதான் நினைப்பார்கள். அடிபட்ட‌ ஒருவனிடம் அவன் துயரை ஆற்ற முயலாவிட்டாலும் காயத்தைப் பெருப்பிக்காமல் விடுவதே குறைந்தபட்ச மனிதாபிமானம்.

கோயில் குளம் செல்வது அவரவர் உரிமை. ஆனால், அந்தக் கோயிலுக்குள் அடுத்தவன் நெஞ்சில் மிதித்துத்தான் செல்லவேண்டுமெனில், அவன் எழுந்திருக்கும்வரை சிறிது ஒதுங்கியாவது இருப்போமே..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரோமாபுரி பற்றி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்ததுபோலவும்.....எனக்குப் படுகிறது.
:rolleyes::rolleyes:

நெற்றிப் பொட்டில் அடித்தாற் போல் சொல்லியுள்ளீர்கள் டங்குவார்.

நான் நினைக்கவில்லை இதைவிட அழகாகச் சொல்ல வேறு வார்த்தைகள் இருக்குமென்று.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன் தயவு செய்து இதை பகுத்தறிவு பிரசாரம் செய்யும் இடமாக பாவிக்காதீர்கள்.

இந்தப் படம் தேங்காயால் ஏற்படுத்தப்படும் வீண் செலவை மாத்திரம் ஊருக்கு அனுப்பச் சொல்கிறது என்று யாராவது புரிவீர்களானால் உங்கள் பார்வை வெறும் ஊனப்பார்வை தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வளவு காலமும் மக்கள் நிதி உதவி செய்யவில்லையா ? இப்போது ஏன் இப்படி ஒரு ஏற்பாடு ?

தேவையில்லை தான் என்ன? :rolleyes::rolleyes:

Link to comment
Share on other sites

எத்தின பந்தியிலையோ பக்கத்திலை எழுதினாலும் விண்ணாணமாக சோடிச்சு எழுதினாலும் சிதறுகிற தேங்காய்களாலும் ஊத்திற பாலாலும் விரையமாகும் எமது பொருளாதாரத்தில் இருந்து 50 வீதத்தை கூட தாயகத்துக் அனுப்ப முடியாது. மிஞ்சி மிஞ்சிப் போனா தேங்காய்கும் பாலுக்கும் 20 வீத மனிதாபிமான வரி போட்டு விற்க முடியுமா? அப்பிடி வித்தா எத்தனை பேர் அதை வேண்டப்போயினம்?

பூசாரிமார் விட்டினம் எண்டா பால் தயாரிப்பாளர்களிட்டை போய் காலவதியான பாலை வேண்டிக் கொண்டு வந்து அபிசேகத்துக்கு வித்து 80 வீத இலாபத்தை தாயகத்துக்கு அனுப்பலாம்.

சிறீலங்கா பொருளாதாரம் சிதைக்கப்பட வேண்டும். அதற்கு பல வழிகளில் புலம்பெயர்ந்தவர்கள் உழைக்க வேண்டும்.

-1- புலம்பெயர்ந்தவர்கள் சிறீலங்கா வேண்டாம் தமிழீழம் தான் தீர்வு தமிழீழம் வேணும் தமிழீழத்தை அங்கரியுங்கள் என்று குரல் கொடுப்பவர்கள் முதலில் சிறீலங்காவை புறக்கணித்து செயலில் காட்ட வேணும்.

-2- தமக்குள் அந்தத்த தெளிவையும் உறுதியையும் பெற்று ஒருங்கிணைந்து புறக்கணிப்பை நிறை வேற்றிய பின்னர் அந்த நியாயப்பாட்டை ஏனைய சமூகத்திற்கும் அரசுகளிற்கும் வைக்கும் தெளிவான நிலையை அனுபவத்தை நாம் அடைய முடியும். சிறீலங்காவை தண்டி புறக்கணி என்று எம்மை நாமே நியாயப்படுத்த முடியவில்லை மற்றவர்களிடம் அதுவும் அரசுகளிடம் எப்படி ஏற்றுமதி சலுகைகளை மீள்பரிசீலனை செய்ய சொல்லி வெற்றி காணப் போகிறோம்?

-3- மியன்மார் சிம்பாவே சூடான் போன்ற நாடுகளை போல் மேற்குலகம் பொருளாதார தடைகளை கொண்டு வந்தாலும் சிறீலங்காவால் போரை தொடர முடியும். அதற்கான பூகோள அரசியல் பொருளாதார சூழ்நிலை தான் தற்பொழுது நிலவுகிறது. இந்த நிலையில் புலம்பெயர்ந்தவர்களின் புறக்கணிப்பு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் என்று ஒருவரும் கனவு காணவில்லை.

ஐரோப்பிய ஒன்றியம் புலிகளைத் தடை செய்த பொழுது அதன் அங்கத்துவ நாட்டு கண்காணிப்பாளர்கள் பணியைத் தொடர முடியாது என்பது போன்றது அல்லது திபெத் விவகாரத்தில் யேர்மனி பிரான்ஸ் டலாய்லாமாவுக்கு ஆதரவாக கதைத்தற்கு எதிர்ப்பு காட்ட சீனா வர்த்தக உடன் படிக்கைகள் சில வற்றை பிற்போட்டது அல்லது ரஸ்யா தனது இயற்கை வாயு வளத்தை தேசிய நலன்களை முன்னெடுக்க கைய்யாளும் முறை அல்லது 1973 ஓபெக் நாடுகள் எண்ணை உற்பத்தியை மட்டுப்படுத்தி எதிர்ப்பு தெரிவித்தது போன்றது.

-4- ஒவ்வொரு தேசங்களும் தமது வளங்கள் பொருளாதார பலங்கள் அதில் தங்கியுள்ளோர்களோடு அதன் மூலமாக அரசியல் நடத்தி நலன்களை முன்னெடுக்கிறார்கள். வளர்ச்சியடைந்த மேற்குலக நாடுகளில் இருக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களது நுகர்வுச் சந்தை ஒரு பலம். அதை அவர்கள் தேசிய நலன் நோக்கி பயன்படுத்த முனைய வேண்டும்.

இவற்றுள் புறக்கணி சிறீலங்கா மூலம் சிறீலங்காவின் பொருளாதரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது ஒரு விடையம். மற்றது ஏனையவர்களிற்கு (சர்வதேசம் சிறீலங்கா உட்பட) எமது ஒற்றுமையான நகர்வுகள் ஒரு குறியீடாக செய்திகளை சொல்லும்.

அதன் மூலம் சிறீலங்காவை தண்டி என்று சர்வதேச சமூகத்தை நோக்கி குரல் கொடுப்பதற்கான தார்மீக தளத்தில் அப்பொழுது தான் நாம் நிற்க முடியும். ஆனால் இன்றைய நிலையில் புலம்பெயர்ந்தவர்களாகிய எமது நடத்தைகளோ வடிகட்டின இரட்டை வேடம்.

-5- புலம்பெயர்ந்தவர்கள் சிறீலங்காவில் தங்கியிருக்காது எமது வாழ்வை புலம்பெயர்ந்த நாடுகளில் அமைத்துக் கொள்ள எடுக்கும் முயற்சிகள் தாயகம் சிறீலங்காவில் தங்கியிருக்காது சுயமாக இயங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் பற்றிய பல விடையங்களிற்கு எம்மை தயார்படுத்த உதவும் அனுபவத்தை தரும். தாயகத்திலும் புலத்திலும் தேவைகள் வேறு வேறாக இருந்தாலும் அன்றாட விடையங்களிற்கு தங்கியிருந்த பழக்கப்பட்ட விடையங்களை பாரிய அளவில் மாற்றுவது பற்றிய அனுபவம் என்பது பயனுள்ளது.

-6- மிகமுக்கியமாக வங்கிச் சேவைகள் தொடர்பாடல்கள் என்பவற்றில் இருந்தும் சிறீலங்காவில் தங்கியிருக்காது பரிய அளவில் மாற்றங்களை கொண்டு வர வேண்டிய தேவையிருக்கிறது. இவற்றைப் பற்றியெல்லாம் புலம்பெயர்ந்த நாடுகளில் போர் சூழல் அற்று சாதாரண வாழ்வு வாழ்ந்து கொண்டு எத்தனையே துறை சார் விடையங்களை அறிவதற்கு பயில்வதற்கு வசதிகள் உள்ள சூழலில் உள்ள நாம் தான் முயற்சிக்க வேண்டும். அதற்கான மனநிலையை நாம் அடைய வேண்டும். அந்த மனநிலையை புலம்பெயர்ந்த சமூகம் மத்தியில் உள்ள அனைத்து மனித வளங்கள் மத்தியில் உருவாக்க வேண்டும். பொங்கு தமிழ் எழுச்சியை உருவாக்குவது போல் புறக்கணி சிறீலங்கா என்பதை அன்றாட வாழ்வில் நடைமுறைப்படுத்தி நாம் முதலில் புலம்பெயர்ந்த வாழ்வில் சிறீலங்காவின் பொருட்களிலும் சேவைகளிலும் இருந்து சுதந்திரத்தை பெற்றால் தான் தாயகம் அதைப் பெறும் போது என்னென்ன தேவைகள் வரும் என்பதை உணர சிந்திக்க அதன் படி இயங்கத்தூண்டும்.

பொங்கு தமிழ் என்பதே இப்பொழுது தான் களைகட்டியிருக்கு. எனவே அடுத்த படி நிலைக்கு போக இன்னம் சில வருடங்கள் பிடிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒட்டு மொத்தத்தில் இந்த poster மனவருத்தத்தையே ஏற்படுத்தி உள்ளது.

பாவம் புலம்பெயர் டமில்ஸ். மனம் நொந்து போயிருவினம். வன்னி மக்கள் ... என்ன.. வாழ வழி அத்ததுகள். அதுகள் ரோட்டில கிடந்தான்ன? காட்டில கிடந்தான்ன? தேவையெண்டு எப்பவாசும் எங்களுக்கு தோணினா ஏதோ பிச்சைக்காரனுக்கு போடுற மாரி போடுவம். அதுக்காக எங்கட மனத்தை நோகடிச்சோ? நல்ல கதை என்ன?

சரி ஈசன் மனதை நோகடிக்காமை என்ன செய்யலம் எண்டு யோசிச்சுப் பாக்கிறன்...

தவிக்கும் மக்களின் படஙகளைப் போடுவமோ? சீ சீ சீ. அது பார்க்க அரிகண்டமாயிருக்கும் என்ன? ஏனெண்டா பாருங்கோ எங்கடை சிறார்களின்டை மனம் பாதிச்சிரும். வேணாம்..

வேறையென்ன வழி... ஒண்டுமாய் தோணலியே... சரி இப்ப அதா முக்கியம். வேலைக்கு போகவெணும். பிள்ளயை --,--,--, கிளாசுக்கு கூட்டிக் கொண்டு போகவேணும். இரவு பழைய மாணவர் சங்கத்தின்ற பார்ட்டி ..................

நேரமிருந்தா மனம் நோகாம எப்பிடி சொல்லுறதெண்டதைச் சிந்திப்பம். என்ன..? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் புலம்பெயர் டமில்ஸ். மனம் நொந்து போயிருவினம். வன்னி மக்கள் ... என்ன.. வாழ வழி அத்ததுகள். அதுகள் ரோட்டில கிடந்தான்ன? காட்டில கிடந்தான்ன? தேவையெண்டு எப்பவாசும் எங்களுக்கு தோணினா ஏதோ பிச்சைக்காரனுக்கு போடுற மாரி போடுவம். அதுக்காக எங்கட மனத்தை நோகடிச்சோ? நல்ல கதை என்ன?

சரி ஈசன் மனதை நோகடிக்காமை என்ன செய்யலம் எண்டு யோசிச்சுப் பாக்கிறன்...

தவிக்கும் மக்களின் படஙகளைப் போடுவமோ? சீ சீ சீ. அது பார்க்க அரிகண்டமாயிருக்கும் என்ன? ஏனெண்டா பாருங்கோ எங்கடை சிறார்களின்டை மனம் பாதிச்சிரும். வேணாம்..

வேறையென்ன வழி... ஒண்டுமாய் தோணலியே... சரி இப்ப அதா முக்கியம். வேலைக்கு போகவெணும். பிள்ளயை --,--,--, கிளாசுக்கு கூட்டிக் கொண்டு போகவேணும். இரவு பழைய மாணவர் சங்கத்தின்ற பார்ட்டி ..................

நேரமிருந்தா மனம் நோகாம எப்பிடி சொல்லுறதெண்டதைச் சிந்திப்பம். என்ன..? :rolleyes:

நல்ல பதில்

அதேநேரம் இங்கு பாரீசில் தேங்காயுடைப்பு தோல்விகண்டுவிட்டதாகவே கணிக்கப்பட்டுள்ளது..........

முயற்சித்தவர்களுக்கு .............

வாழ்த்துக்கள்............

நன்றிகள்................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் விடுமுறைக்கு சென்றிருந்த நாட்டில் கோயில் தேர்த்திருவிழா ஒன்றிற்கு சென்றிருந்தேன்

என் கண்முன்னால் குறைந்தது 100 லீற்றர் பாலை ஊற்றி ஒரே இடத்தை கழவினார்கள்

உண்மையில் என்கைகள் துடித்தன

அதை போய் தடுக்கவேண்டும்என...........

ஆனால் முடியாது வந்துவிட்டேன்

ஊற்றிக்கொண்டே இருந்தனர்...................

ஒவ்வொரு லீற்றரும் ஒவ்வொரு பக்தர் வாங்கித்தந்ததாக சொன்னார்கள்?????

சிலர் பல லீற்றர்கள் ?????

நானும் இந்துதான்

ஆனால் இதுபோன்ற வீணடிப்புக்களை ஏற்கக்கூடாது

உலகத்தில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகளுக்கு மதிப்பழிக்கவேண்டும்

ஆகக்குறைந்தது

அதை திருப்பி எடுத்து பாவிக்கவாவது வழி பண்ணவேண்டும்

என்ன முட்டாள்தனம்

திரு சபேசன் அவர்கள்மீது எனக்கிருந்த மதிப்பு

தற்போது??????????????

இதுக்கெல்லாம் வக்காலத்து வாங்கிபடி?????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் விடுமுறைக்கு சென்றிருந்த நாட்டில் கோயில் தேர்த்திருவிழா ஒன்றிற்கு சென்றிருந்தேன்

என் கண்முன்னால் குறைந்தது 100 லீற்றர் பாலை ஊற்றி ஒரே இடத்தை கழவினார்கள்

உண்மையில் என்கைகள் துடித்தன

அதை போய் தடுக்கவேண்டும்என...........

ஆனால் முடியாது வந்துவிட்டேன்

ஊற்றிக்கொண்டே இருந்தனர்...................

ஒவ்வொரு லீற்றரும் ஒவ்வொரு பக்தர் வாங்கித்தந்ததாக சொன்னார்கள்?????

சிலர் பல லீற்றர்கள் ?????

நானும் இந்துதான்

ஆனால் இதுபோன்ற வீணடிப்புக்களை ஏற்கக்கூடாது

உலகத்தில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகளுக்கு மதிப்பழிக்கவேண்டும்

ஆகக்குறைந்தது

அதை திருப்பி எடுத்து பாவிக்கவாவது வழி பண்ணவேண்டும்

என்ன முட்டாள்தனம்

திரு சபேசன் அவர்கள்மீது எனக்கிருந்த மதிப்பு

தற்போது??????????????

இதுக்கெல்லாம் வக்காலத்து வாங்கிபடி?????????

100 லீற்றர் பாலுக்காக வருந்துவதன் தார்ப்பரியம் விளங்குகிறது. ஆனால்.. இன்னொன்றையும் நீங்கள் நோக்க வேண்டும்..??!

நீங்கள் திருமணமானவரா..??! ஆம் என்றால்...

உங்கள் குழந்தையோ நீங்களோ தினமும் மீதப்படும் உணவை வீசி எறிவீர்களா..??! அவ்வாறு வீசி எறியும் உணவின் அளவு எவ்வளவு..??! (வளர்ந்த நாடுகளில் வீசி எறியப்படும் ஒரு நாள் உணவு பல நாடுகளில் ஏழை மக்களுக்கு மாதக்கணக்கில் உணவிடப் போதுமானது.பிரிட்டனில் மட்டும் ஆண்டுக்கு 10 பில்லியன் பவுண்ஸ் பெறுமதியான உணவு வீசி எறியப்படுகிறது மக்களால்..! Global food shortages, soaring prices and alarm over the environment. But every day, Britain throws away 220,000 loaves of bread, 1.6m bananas, 5,500 chickens, 5.1m potatoes, 660,000 eggs, 1.2m sausages and 1.3m yoghurts. http://www.independent.co.uk/life-style/fo...ar-822809.html)

உங்கள் குழந்தையிடம் உள்ள விளையாட்டுப் பொருட்கள் எத்தனை.. அவற்றில் அது விளையாடுவது எத்தனை..??!

உங்கள் பிள்ளை அல்லது நீங்கள் வீட்டில் கணணியில் தொழிற்படும் நேரம் எவ்வளவு..??! (அலுவலக அல்லது அத்தியாவசிய வேலைகள் தவிர)

நத்தார்.. புதுவருடம்.. மற்றும் பண்டிகைகள் என்று கொழுத்தும் வானவேடிக்கைகள் அல்லது வாங்கும் ஆடம்பரப் பொருட்களின் செலவுத் தொகை எவ்வளவு..??!

உங்கள் உறவினர் வீடுகளுக்கு வாரத்தில் எத்தனை தடவைகள் காரில் போவீர்கள்..??!

குறுகிய கார் பயணங்களை தவிர்த்து நடையில் போகும் பழக்கம் உண்டா..??!

முடிந்து போன பால் கான்களை மற்றும் போத்தல்களை என்ன செய்வீர்கள்..??!

வருடத்தில் எத்தனை செல்லிடத் தொலைபேசிகளை சொந்தமாகக் கொள்வீர்கள்..??!

வாரத்தில் எத்தனை தடவை வீட்டுக்கு வெளியில் உணவு உண்பீர்கள் (குடும்பமாக)..???!

வாரத்தில் எத்தனை தடவை பணம் கொடுத்து சினிமா பார்ப்பீர்கள் (தியேட்டர் அல்லது சிடி..!)??!

வாரத்தில் எத்தனை தடவை மது அருந்துவீர்கள்..??!

வாரத்தில் எத்தனை சிகரட் குடிப்பீர்கள்..??!

(ஏன் கேட்கிறேன் என்றால்.. பலருக்கு தாம் தினமும் விரயமாக்கும் பணம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் அளவு விபரம் தெரிவதில்லை. ஆனால் ஊரைப் பார்த்து உபதேசிக்க ஆரம்பித்துவிடுவார்கள்..!) :rolleyes::rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.