• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

nunavilan

ராகு காலம், எமகண்டம் என்பது என்ன?

Recommended Posts

சோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்

சோதிடப்படி அவருடைய மகன் இவர், இவருடைய மகன் இவர் என்று சொல்வார்கள். ஆனால் அதைப் பற்றி சரியாகக் கூறுவதில்லை. இங்குள்ள ஆய்வாளர்களிடமும் அதற்கு சரியான பதிலில்லை.

ஜப்பானில் ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த காலங்களில் அவர்களது பணி சிறப்பாக இருக்காது என்பதை கண்டறிந்து அவ்வாறு செய்துள்ளனர்.

அதுபோல ராகுகாலம், எமகண்டத்திலும் பணியாளர்களின் நடவடிக்கையை கண்காணித்துள்ளனர். அந்த சமயங்களில் தான் வாக்குவாதம் வருவது, பிரச்சினைகள் பெரிதாவது என்று நேரிடுகிறது.

இதை வைத்துப் பார்க்கும்போது ராகுகாலம், எமகண்டம் என்பது ஒரு குறிப்பிட்ட நேரம். அதாவது திங்கட்கிழமை என்றால் ஆறு ஏழரை ராகு காலம் என்று கணித்து வைத்திருக்கிறார்கள்.

விஞ்ஞானப்படி, ராகு கேதுவிற்கு என தனியாக பாதை கிடையாது. நீள் வட்ட சுற்றுப்பாதையும் கிடையாது. மற்ற கிரகங்கள் வேகமாக செல்லும்போது அதில் இருந்து வரும் தூசுகள் தான் ஒன்று சேர்ந்து ராகுவும் கேதுவும் உண்டாகின்றன. அதாவது ஒவ்வொரு கிரகத்தில் இருந்து வெளிவரும் தூசுகள் ராகுவாகவும், கேதுவாகவும் மாறும் நேரத்தைக் கணித்துத்தான் ராகு காலம், கேது காலம் என்று சொல்கிறார்கள்.

மருத்துவர் செரியன் என்பவர் ராகு காலம், எமகண்டங்களில் எந்த அறுவை சிகிச்சையும் மேற்கொள்வதில்லை. மேலும் அந்த சமயங்களில் அவர் எதையும் பேசாமல் மெளனமாக இருந்துவிடுவாராம்.

அவர் ராகு காலம், எமகண்டங்களில் செய்த சில அறுவை சிகிச்சைகள் தோல்வி அடைந்ததை அவரே கண்காணித்து அந்த முடிவினை எடுத்துள்ளார். இத்தனைக்கும் அவர் கிறிஸ்துவர்தான்.

ராகு காலம், எமகண்டம் என்பது என்ன என்றால், அந்த நேரங்களில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வேகமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும்.

வாகனத்தை இயக்கும்போது கூட, ராகு கால, எமகண்ட நேரங்களில் அசுரத் தனமாக வண்டியை இயக்குவோம். சந்து பொந்துக்கு செல்வது போன்றவை நேரிடும். கட்டுப்பாட்டை மீறி செயல்படத் தூண்டும் நேரங்கள் அவை. அதனால் தான் அந்த நேரங்களில் பொறுமையாக செய்வது நல்லது, அமைதியாக இருப்பது நல்லது என்று கூறுவார்கள்.

வழக்கமான பணிகளை நாம் அந்த நேரங்களில் தொடரலாம். ஆனால் எந்த புதிய வேலையையும் அந்த நேரத்தில் துவக்குவது நல்லதல்ல. ஒரு நடிகர் தனது பட பூசையை ராகு காலத்தில் துவக்கி, பூனையை குறுக்கே போக விட்டு, விதவைப் பெண்ணை குத்துவிளக்கேற்றச் சொல்லி எல்லாம் செய்தார்.

ஆனால் அந்த படத்தை எடுத்து முடிப்பதற்குள் பல்வேறு பிரச்சினைகள், வழக்குகள் என பலவற்றை அவர் சந்தித்தார்.

ஒவ்வொன்றும் அதற்கான பலனை நிச்சயம் அளிக்கும்.

ராகு காலம் என்பது போல் கேது காலம் என்று ஏன் இல்லை?

ராகு காலம் என்று சொல்கிறோம். ஆனால் கேது காலத்தைத்தான் எமகண்டம் என்று சொல்கிறோம். கேது கால‌ம் எ‌ன்பது இ‌ல்லை எ‌ன்று சொ‌ல்ல‌க் கூடாது. அதனை‌த்தா‌ன் எமக‌ண்ட‌ம் எ‌ன்று சொ‌ல்‌கிறோ‌ம்.

http://tamil.webdunia.com/religion/astrolo...080131032_1.htm

Share this post


Link to post
Share on other sites

ஜோதிடர் வித்யாதரன்

மருத்துவர்.செரியன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதையும் அதை இம்மாதிரியான மூடநம்பிக்கையின் விளைவே என்பதையும் குறிப்பிட்டு இருக்கலாம்

Share this post


Link to post
Share on other sites

ஓ...அப்படியோ நுணா அண்ணா..ணா டகவலிற்கு நன்றி..!!.. :D

உந்த கட்டுரையை வரைந்தவர் தானும் குழம்பி மற்றவையும் குழப்பிட்டார்..ர்..(அது தான் முடியல).. :lol: அது சரி உதில ஒரு வசனத்தில் உந்த கட்டுரையை வரைந்தவர் இவ்வாறு கூறுகிறார்..

சா..சா இப்படியுமா..??..ஏன் விதவைகள் மனிசர் இல்லையா..யா ஏன் அவை குத்து விளக்கு ஏத்த கூடாது..??..உப்படி மத்தவையின் மனசை புண்படுத்தி ஏதாச்சையும் ஆரம்பித்தால்..ல் அது உறுபட்ட மாதிரி..ரி தான்..ன்..!! :(

செய்யிற வேலயை ஒழுங்கா செய்தா எல்லாம் நன்னா நடக்கும் அதை விடுத்து உதுகளை பார்த்து கொண்டிருந்தா நடக்கிற வேலையும் நடக்காது..து பாருங்கோ..(சா நான் கூட உதை வாசித்து எண்ட நேரத்தை அநியாயமாக்கிட்டன் எண்டா பாருங்கோவன்).. :)

இதை தான் ராகுகாலம் எண்டு சொல்லுறது..!!

இன்னொரு சந்தேகம் நாங்க தானே உந்த ராகுகாலம் பார்க்கிறோம் உந்த வெள்ளைகள் ராகுகாலம் எல்லாம் பார்த்தோ செய்யீனம் அவையளுக்கு ஒன்னும் நடக்கல..ல தானே அவை நிலாவிற்கு "ரொக்கட்டும்" விட்டிட்டீனம் நாங்க உதுகளை பார்க்கிறதால.. :o

என்னும் பக்கத்து வீட்டு நிலாவிற்கு தான் "ரொக்கட்" விடுறோம் அதுவும் கடதாசியால..(நானும் உந்த கருத்தை எமகண்டத்தில எழுத்திட்டன் போல).. :)

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையில பூனை குறுக்கால போனா தப்பில்ல நீங்க குறுக்கால போனா தான் தப்பு" :)

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites

ராகுக்கும் எமனுக்கும் நாங்கள் வந்தால் தான் கண்டம் என்ன ஜம்மு :):(

Share this post


Link to post
Share on other sites

ராகுக்கும் எமனுக்கும் நாங்கள் வந்தால் தான் கண்டம் என்ன ஜம்மு :(:D

ஆமா..மா சரியா சொன்னியள்..போக போறன் போக போறன் எண்டு படம் காட்டிட்டு வருவோம் களதிற்கு முடியல இதை யாரிட்ட சொல்லி அழுறது.. :lol:

எங்க கோர்கிறன் எண்டு விளங்குது தானே சித்தப்பு..பு..!! :)

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites

ஆமா..மா சரியா சொன்னியள்..போக போறன் போக போறன் எண்டு படம் காட்டிட்டு வருவோம் களதிற்கு முடியல இதை யாரிட்ட சொல்லி அழுறது.. :(

எங்க கோர்கிறன் எண்டு விளங்குது தானே சித்தப்பு..பு..!! :)

அப்ப நான் வரட்டா!!

எங்கே கோர்க்குது என்று எனக்கு நல்லா விளங்குது ஆனால் நீங்கள் கோர்த்த நேரம் ரெண்டு பேருக்கு கோர்பட்டுட்டு மகனே :D:lol::) .வானிலை அறிக்கையில இன்று முகில் கூட்டமா இருக்கு மழைவரும் என்றால் கட்டாயம் மழை வருமா மகனே? வரலாம் வராமல் போகலாம் வந்தும் வராமலும் இருக்கலாம் அங்கால எனக்கே தலை சுத்துது வேண்டாம் :)

Share this post


Link to post
Share on other sites

எங்கே கோர்க்குது என்று எனக்கு நல்லா விளங்குது ஆனால் நீங்கள் கோர்த்த நேரம் ரெண்டு பேருக்கு கோர்பட்டுட்டு மகனே .வானிலை அறிக்கையில இன்று முகில் கூட்டமா இருக்கு மழைவரும் என்றால் கட்டாயம் மழை வருமா மகனே? வரலாம் வராமல் போகலாம் வந்தும் வராமலும் இருக்கலாம் அங்கால எனக்கே தலை சுத்துது வேண்டாம் :lol:

ஓ..விளங்கிச்சோ சித்தபுவிற்கு..கு..(விளங்கின மாதிரி காட்டி கொள்ளாதையுங்கோ என்ன)..யார் அந்த இரண்டு பேர் சித்தப்பு நான் கோர்த்தது ஒருவருக்கு தானே..னே..!! :D

இடையில் யாரப்பா செருகினது..?? :(

கடசியா கிடைத்த வானிலை அறிக்கை படி..டி வானிலை மப்பும் மந்தாரமாகவும் இருக்குமாம் சித்தப்பு..பு..ஆனபடியா குடையோட வெளியாள போங்கோ எப்ப இடி விழும் எண்டு யாருக்கும் தெரியா தானே..!! :)

மழை ஏன் பெய்ந்தது எண்டு சற்று நேரத்தில சொல்லுவீனம் அதையும் கேட்போம்..ம்..அதுவரைக்கும் நீங்க குழம்பாதையுங்கோ என்ன சித்தப்பு..பு..! :) !

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites

இப்ப தான், 9 கிரகங்கள் இல்லை, 8 தான் இருக்கு என்று விஞ்ஞானிகள் சொல்லிப்போட்டினம். அப்ப எந்த கிரகம் உந்த சாத்திரத்தில இல்லாம போட்டுது என்று உந்த சாத்திரிமாரை (யாழ் கள சாத்திரியை அல்ல) கேளுங்கோ.

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • அப்படி நடந்தால் நன்று. இளைய தலைமுறை ஒரு அமைப்பை உருவாக்கி அரசியலில் நுழைய வேண்டும், 
    • குற்றச் செயலில் ஈடுபடும் பிக்குகளுக்கு தண்டனை வழங்கும்போது;  வெறும் தண்டனையை விதிக்காமல் புத்த தர்மம் என்ன சொல்கிறது? இவர்கள் அதற்கு மாறாக குற்றமிழைத்ததால் தொடர்ந்து பிக்குவாக இருக்கமுடியாது. தர்மம் தெரிந்தும் அதற்கு எதிராக   குற்றம் இழைத்ததால் அதிகபட்ச தண்டனையும் வழங்குவதன் மூலம் உவங்களின் போலி முகத்தை கழட்டலாம். ஆனால் சிங்கள நீதிபதிகள் செய்யமாட்டார்கள். மக்களும் உவங்களை உயர்ந்தவர்களாக கருதுவதை நிறுத்தவும் மாட்டார்கள். மதத்தை வைத்தும் ஏய்த்தும் பிழைப்பு நடத்துவோர் இருக்கும்வரை  இப்படிபட்டவர்கள் பெருகிக் கொண்டுதான் இருப்பார்கள்.  
    • சிறிலங்காவில் தேர்தலுக்கு முன்னர் வடக்கில் இராணுவத்தின் நடவடிக்கைகள் அதிகரிப்பு – ரட்ணஜீவன் ஹூல் Posted on July 10, 2020 by நிலையவள்  16 0 சிறிலங்காவில் ஓகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, நாட்டின் வடக்கு பகுதியில் இராணுவம் இருப்பதைப் பற்றி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர்  ரட்ணஜீவன் ஹூல் கவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள ஒரு மின்னஞ்சல் அறிக்கையில், வடக்கில் படையினரை நிலைகொள்ளச் செய்யும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புலனாய்வு அதிகாரிகள் சில வேட்பாளர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்கள் எங்கு செல்கிறார்கள், எங்கு கூட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன என்பது குறித்து தகவல்களைத் திரட்டியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்காந்தராஜா முறைப்பாடு வழங்கியுள்ளதாக அவர் கூறினார். மேலும் இராணுவம் வடக்கில் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இராணுவத்தால் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களின் வாகனங்கள் பரிசோதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஜூலை ஐந்தாம் திகதி எங்களின் புதிதாக தெரிவு செய்யப்பட்ட தேர்தல் அதிகாரி இரண்டு தடவை தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்வதற்கு நிர்பந்திக்கப்பட்டார் என ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார். இதேவேளை மட்டக்களப்பிலிருந்து கிளிநொச்சி செல்லும் வீதியில் அது இடம்பெற்றது என்பதை தான் உறுதி செய்ததாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இவ்வாறே அச்சத்தில் சிக்குண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ள அவர் இராணுவத்தின் மோசடியை குறித்த அதிகாரிகள் எவ்வாறு தெரிவிப்பார்கள் என்றும் கேள்விழுப்பினார். இதேவேளை தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சாள்ஸ் நிர்மலநாதனின் வாகனம் முல்லைத்தீவில் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்ட போது வாகனத்தில் அடையாள அட்டை அளவைக்கொண்ட வேட்பாளரின் படம் பொறிக்கப்பட்ட காட் காணப்பட்டுள்ளது அவை முறையானவை என குறிப்பிட்டுள்ள ஹூல் சுவரொட்டிகள் மட்டுமே தடைசெய்யப்பட்டுள்ளன ஆனால் இராணுவம் வாகனத்தை நிறுத்தி அட்டைகளை பறிமுதல் செய்தது என குறிப்பிட்டுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த 17 ஆம் திகதி அன்று ஜனாதிபதியை சந்தித்தபோது அவர் அளித்த இரண்டு முக்கிய வாக்குறுதிகளில் தேர்தலின் போது இராணுவம் நிறுத்தப்பட மாட்டாது, பொலிஸார் மட்டுமே பயன்படுத்தப்படுவர், சுகாதார வழிகாட்டுதல்கள் வர்த்தமானி செய்யப்படும் என்பதையும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூல் சுட்டிக்காட்டியுள்ளார். https://www.kuriyeedu.com/?p=267094
    • ஆண்டான், அடிமை, மேலோன், கீழோன்.... மனித வரலாறில் பின்னிப்பிணைநதது. சஜித் பிரேமதாசவிடம் ஜதேகயினை கையழிக்காமல் ரணில் இழுத்தடிப்பதும் சிங்கள சாதிய காரணம் தான். அதேவேளை, மகிந்தா, சாதியத்துக்கு வெளியே சிங்கள மக்களால் விரும்பப்பட காரணம், தமிழர் என்ற இனத்தை ஒடுக்கியமை. ஆங்கிலேயரில் கூட, அயர்ன்சிமித் (இரும்பு வேலை செய்வோர்), கோல்ட்சிமித், ரெய்லர், பேக்கர், மில்லர், வோட்டர்மான்.... இருந்திருக்கிறது. அண்டர்ரேக்கர்ஸ் என்னும் வெட்டியான் வேலை....இங்கே அந்த வேலையால் கிடைக்கும் பணத்தால், பலர் கவரப்பட்டனர். ஒரு குறித்த சமூகத்துக்கான வேலை என்பதை பொருளாதாரம் உடைத்தெறிந்தது. அதே போல, கனடாவில் நம்மவரிடையே, இந்த தொழிலில், பலர் சாதியத்துக்கு அப்பால், இறங்கி விட்டார்கள். பொருளாதாரம் ஒன்றே இதனை துடைத்தெறியும்.
    • அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா பாதிப்பு- சென்னை மருத்துவமனையில் அனுமதி.! சென்னை: தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செல்லூர் ராஜு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,26,581 ஆக உள்ளது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,765 ஆக இருக்கிறது. இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவிலேயே கொரோனாவுக்கு எம்.எல்.ஏ. ஒருவர் முதலில் பலியானது தமிழகத்தில்தான். திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன், கொரோனா பாதித்து உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து திமுக, அதிமுக எம்.எல்.ஏக்கள் பலரும் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் சிலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இன்னமும் சிலர் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். அண்மையில் அமைச்சர்கள் கே.பி. அன்பழகன், தங்கமணிக்கு கொரோனா உறுதியாகி இருந்தது. தற்போது கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது. செல்லூர் ராஜுவின் மனைவிக்கு ஏற்கனவே கொரோனா உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் செல்லூர் ராஜுவுக்கும் கொரோனா உறுதியானது. இதையடுத்து சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக செல்லூர் ராஜு அனுமதிக்கப்பட்டுள்ளார். குணமடைய வேண்டுகிறேன்: ஓபிஎஸ் அமைச்சர் செல்லூர் ராஜு குணமடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் பதிவிட்டுள்ளதாவது: கொரோனா தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.செல்லூர் கே.ராஜூ அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணியைத் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு ஓபிஎஸ் பதிவிட்டுள்ளார் https://tamil.oneindia.com/news/chennai/tn-minister-sellur-raju-tests-positive-for-coronavirus-390913.html டிஸ்கி : தலக்கு கோரோனோவா..? 😢