Jump to content

இந்து மதம் எங்கிருந்து வந்தது?


Recommended Posts

இந்து மதம் எங்கிருந்து வந்தது?

நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு ஓடிச் செல்லுங்கள் முடிகி றதா? உங்கள் மனக்குதிரையில் ஏறி உட்கார்ந்து கொண்டு கற்பனை, சிந்தனை இரண்டு சாட்டைகளாலும் விரட்டுங்கள்.

வரலாறு துல்லியமாக கணிக்க முடியாத காலத்தின் பாதாளப் பகுதி அது. மலைகள், காடுகள் என மனிதர்களையே பய முறுத்தியது பூமி.

இமயமலைக் குளிர் காற்றில் நடுங்கியபடி ஓடிக் கொண்டிருக்கிறது சிந்து நதி. என்ன திமிர்? அத்தனை குளிரிலும் மானசரோவரில் பிறந்த சுமார் ஆயிரம் மைல்கள் மலையிலேயே நடை பயின்று பிறகுதான் கீழி றங்குகிறாள் சிந்து.

அது அந்தக்கால ஆப் கானிஸ்தான் நிர்வாண மனிதர்கள். சாப்பிடத் தெரியாது. எதுவும் தெரியாது. மாலை மயங்கி இருள் இழைய ஆரம்பித்தால் பயத்தில் சிகரத்தில் ஏறி குகைகளுக்குள் விழுந்து விடுவார்கள். சூரியன் மறுநாள் வந்து விளக்கேற்றிய பிறகுதான் பயம்போய் வெளியே வருவார்கள்.

பூமியே புதிராக தெரிந்தது. அவர்களுக்கு நதியை யார் துரத்துவது? பயந்தனர். மரத்தின் தலையைப் பிடித்து உலுக்குவது யார்? பயந்தனர் சுற்றிலும் இருள் பூசியது யார்? நடுங்கினர்.

இந்தப் பயத்தாங் கொள்ளிகளுக்கிடையே சிலபேர் பயப்படாமல் பார்த்தார்கள். மலை, நதி, மரம், வானம், உற்றுப் பார்த்தார்கள்.

அவர்களின் மூளைக் குள்ளும் சூரியன் உதித்தது. மனிதனுக்கே உரிய சிந்தனா சக்தி அந்த சிலருக்கு வயப்பட்டது. சிந்தனையை இரு கண்களிலும் ஏற்றி வைத்துக் கொண்டு பார்வையால் உலகத்தைக் குடைந்தனர்.

விளைவு...!

கண்டுபிடிக்கப்பட்டது தெய்வம். இதுவரைப் பார்த்து பயந்த மரம், செடி, கொடி, மலை நதி தான் தெய்வம். இருட்டை ஓடஓட விரட்டுகிறானே அந்த வெளிச்சம்தான் தெய்வம் என்றான் உற் றுப் பார்த்தவன். (இந்த தெய்வம் என்ற பதம்தான் அய்ரோப்பியர்களால் டிவைன் (Divine) என வழங் கப்படுகிறது. ஆரியர்களில் ஒரு பகுதிதான் அய்ரோப்பாவுக்கு நகர்ந் தது).இயற்கைதான் கடவுள். துரத்தும், உலுக்கும் சக்தி தான் கடவுள். உற்றுப் பார்த்தவன், பார்த்தான் பார்த்தான் பார்த்துக் கொண்டே இருந்தான்.

அவனுக்கு ரிஷி என பெயர். ரிஷி என்றால் பார்ப்பான், பார்ப்பான், பார்த்துக்கொண்டே இருப்பான்.

நமக்கும் மேல் ஒரு சக்தி இருக்கிறது என கண்டுபிடித்தவர்கள் அடுத்ததாய் அதற்குநாம் கட்டுப்பட்டு வாழ்வதெப்படி என்பதையும் வகுத்தார்கள் உண்டாயிற்று வேதம்.

உற்றுப் பார்த்து சிந்தித்து சிந்தனையாளர்களால் நாகரிகம் மெல்ல மெல்ல அரும்பத் தொடங்கியது.

‘இந்த உலகமே தெய்வம்தான். நாம் வாழ சந்தோஷமாக வாழத்தான் தெய்வத்தைப் பயன்படுத்த வேண்டும்” -வகுத்தது வேதம்.

“Civilisation never born, but, it is the heritage of humanity” என பிற்பாடு அமெரிக்க அறிஞர் ப்ரைஸ் சொன்னது போல் தொட்டுத் தொடர்ந்தது நாகரிகம்.

முதலில் இயற்கையைப் பார்த்துப் பயந்த மனிதர்களுக்கு சிந்தனை செய்து உற்றுப் பார்த்த மனிதனான ரிஷி அறிவுரை சொன்னான்.

பயப்படாதே.. நீயும் நானும் நன்றாக வாழ வேண்டும். அதற்கு இந்த மரத்தைப் பயன்படுத்துவோம்.

நதிகளைப் பயன்படுத்துவோம். இயற்கை நமக்காகத்தான் வேதம் ஒரு கட்டுப்பாடு மிக்க கலாச்சாரத்தைக் கொண்டு வந்தது.

ஆரிய இனத்தவர்கள் என வரலாற்று ஆசிரியர்களால் வர்ணிக்கப்படும்...

இம் மனிதர்களிடையே இப்படித்தான் வேத மதம் பிறந்தது.

இந்த நல்லெண்ணச்சிந்தனை வளர்ந்து மெருகேற்றியதுதான் சமூக அமைப்பு. கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பாற்ற. ஒரு கட்டுமானம் வேண்டும். அது ஆளப்பட வேண்டும். வேதம் சொன்ன நெறிமுறைகளை வைத்து வாழ கற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

அதற்கு என்ன செய்தார்கள்! பிரித்தார்கள். மூன்றாக பிரித்தார்கள். தங்களைத் தாங்களே நிருவாகம் செய்வதற்கு ஆள்வதற்கு ஒரு பிரிவு. அவர்கள் சொன்னபடி செய்து முடிப்பதற்கு ஒரு பிரிவு. இதோடு நிறுத்தவில்லை.

ஆள்பவனையும் ஆளப்படுபவனையும் வேதம் சொல்லும் நெறி முறைகளைச் சொல்லிக்கொடுத்து... அவர்கள் தடம் பிறழாமல் காப்பதற்காக ஒரு பிரிவு.

ஆள்பவன் க்ஷத்திரியன் ஆனான். ஆளப்படுபவன் அதாவது உழைப்பவன் வைசியன் ஆனான். இவர்கள் இரண்டு பேரையும் வேதத்தை வைத்துக் கொண்டு, வேதத்தைக் கற்று நீதி நெறிப்படுத்தியவன் பிராமணன் ஆனான்.

ஆட்சி செய்வதற்கே நேரம் போதவில்லை என அதில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தனர் க்ஷத்திரியர்கள். உழைக்க வேண்டும். பிழைக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக வியர்வை சிந்த புறப்பட்டுவிட்டார்கள் சிந்தனாசக்தி குறைந்த அப்போதைய வைசியர்கள்.

பிராமணர்கள் பார்த்தார்கள். இவர்கள் இருவருமே வேதத்தை விட்டு விட்டுப் போய்விட்டார்களே....

அதிலுள்ள கருத்துகளை கட்டளைகளை கர்மாக்களை நாம்தானே சிரமேற்கொண்டு செயல் படுத்தவேண்டும். எனவே வேதம் பிராமணர்கள் கைக்குப் போனது.

இதெல்லாம் முழுக்க முழுக்க ஆப்கானிஸ்தானில் நடந்ததாகத்தான் வேத காலத்தைப் பற்றிய ஆராய்ச்சிகள் அறிவிக்கின்றன.

ரிசா, குபா, க்ரமு என்கிற நதிகள் வேதத்தில் ஓடுகின்றன. இவை ஆப்கன் தேச நதிகள் என்பதால் வேதகாலம் பெரும்பாலும் ஆப்கன் பகுதியில்தான் நிகழ்ந்துள்ளதாகச் சொல்கின்றன. வேதத்தில் மூழ்கியிருந்தோரின் முடிவுகள்.

வேதம் பிராமணர்கள் கைக்கு போனதும் அறமும் தர்மமும் கர்மாக்களும் செவ்வனே நடந்தேறி வந்ததால்.. வேத மதம் பிராமண மதம் ஆயிற்று.

ஆரிய மதம் வேதமாகி வேத மதம் பிராமண மதமாகி, காலவெள்ளத்தில் அவர்கள் இந்தியாவிற்குள் அடியெடுத்து வைக்க, அப்போது இங்கே சுமார் 450 மதங்கள் இருந்தனவாம். இவைகளில் எது இந்து மதம்?

தொடரும்

‘நக்கீரன்’ இதழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நக்கீரன் ஐயாவின் 80 வயதினுள் அவர் 2000 ஆண்டு தாண்டிப் போய்ப் பார்த்தது சாதனை தான். அவரைப் பற்றிச் சொல்வதும் சரி, ராமசாமி பற்றிச் சொல்வதும் சரி.

Link to comment
Share on other sites

இந்தியாவில் இருந்த 450 மதங்களில் எது இந்து மதம்? படிப்படியாகப் பார்ப்போம்.

ஒரு புருஷனும், அவன் பத்தினியும் மழை பெய்த சாலையில் நடந்து கொண்டிருக்கிறார்கள். வழியில் ஒரு பள்ளம். இடையில் மழை நீர் தெரு மண்ணோடு கூட்டணி வைத்து ‘சகதி’ அந் தஸ்தோடு கிடக்கிறது.

புருஷன் பார்த்தான். ஒரே தாண்டு. இந்தப்பக்கம் வந்துவிட்டான். திரும்பிப் பார்த்தால் அவன் பத்தினி பாவமாக நின்று கொண்டிருந்தாள். தாண்டினால் விழ வேண்டியதுதான் என பயந் தாள்.

‘கொஞ்சம் கை குடுங்கோ... வந்துடறேன்’ என்கிறாள் பத்தினி. இது உங்களுக்காக சொன்ன உதாரணம்தான்.

இதேபோலத்தான் அன்று... ஆரியர்கள் சிந்து நதி, இமயமலை என பள்ளத்தாக்குகளை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். நம்மூர் மழைச் சாலையைவிட மலைச் சாலை எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்?

நதிக்கு கரையில்லாத காலமது. காடு, மலை, விலங்குகள் இவற்றை யெல்லாம் தாண்ட ஆரிய பெண்களுக்கு தைரியம் இல்லை. பெண்கள் கோரிக்கை விடுத்தார்கள். அது புறக்கணிக்கப்பட்டது.

‘வரும் பெண்கள் வரலாம். வராதவர்கள் இங்கேயே இருக்கலாம்.’

ஆப்கானிஸ்தானைவிட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்த போது, கூட வந்த பெண்கள் கம்மி. வரலாற்றுக் கண்ணோட்டத்தில், இங்கு வந்த ஆண்களின் எண்ணிக்கையோடு, பெண்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அது புறக்கணிக்கத்தக்கதுதான். ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள். ஆனால், மனு ஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்.

மனு?

வேதங்களை எல்லாராலும் படிக்க முடியாது.

அஃதை விளங்கிக் கொள்ள அனைவருக்கும் அறிவு குறைவு. அதனால் வேதம் வகுத்த கர்மாக்களை, கட்டளைகளை விளக்கி, புரியும்படி சொல்கிறோம் என எளிமை என்ற பெயரில் செய்யப் பட்டதுதான் மனுதர்மம்.பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை ‘மனு’ பிளவாக்கியது. கூடவே, இவர்களைத் தாண்டி ‘சூத்திரர்கள்’ என்ற பிரிவினரை உருவாக்கி அவர்களை வெறும் வேலைக்காரர்களாகவே ஆக்கியது மனு. பிராமணனுக்கு தவம், வேத அறிவு, ஞானம், விஞ்ஞானம் உள்பட 11 குணங்களை வகுத்த மனு - சூத்திரனைப்பற்றி இப்படி எழு தியது.

“சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே, தர்மோ பதேசம் பண்ணாதே. சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்தப் பக்கத்துக்கே தண்டனை கொடு. அவனை உதை...” இப்படிப் போகிறது மனு.

வந்தேறிய இடத்தில் அனைவரும் சூத்திரர்கள் என்றும், அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கவேண்டும் என்றும் பிராமணர்கள் செய்த திட்டம் ‘நன்றாகவே’ வேலை செய்தது. ஏற்கெனவே பிராமணர்களின் கட்டுப்பாட்டில் இருந்த க்ஷத்திரியர்களும், வைசியர்களும் சூத்திரர்களை வேலைக்காரர் களாக எடுபிடிகளாக வைத்திருப்பது என்ற பிராமணர்களின் கோட்பாட்டுக்கு குழைந்தனர்.

‘அடே... குழந்தாய் இந்தா பால். இதைக் குடித்து மகிழ்வாய் வாழு’ என்ற வேதத்தை மனு திரித்து... “இந்த பாலை இவன் குடிக்க வேண்டும்... இவன் குடிக்கக் கூடாது. இவன் எச்சில் படாமல் குடிக்க வேண்டும். இவன் பால் கறக்கும் மாட்டை மேய்க்கவேண்டும்” என பிளவு செய்தது.

ஆரியர்கள் பெண்களை அழைத்து வரவில்லை என்று சொன் னேன் அல்லவா? இதற்குக் காரணம் என எடுத்துக்கொள்ள ஏதுவான மனு ஸ்லோகம் ஒன்றை பாருங்கள்.

பால்யே பிதிர்வஸே விஷ்டேது

பாணிக்ரஹா யௌவ் வனே

புத்ரானாம் பர்த்தரீ ப்ரேது

நபஜேத் ஸ்த்ரீ ஸ்வ தந்த்ரதாம்

பெண்ணே... நீ குழந்தைப் பருவம் வரை அப்பன் சொன்னதை கேள்... வளர்ந்து மணமானதும் கணவன் சொன்னதைக் கேள். உனக்கு குழந்தை பிறந்து தலையெடுத்ததும் உன் மகன் சொல்வதைக் கேட்க வேண்டும். உனக்கு இது தான் கதி. நீ சுதந்திரமாக வாழத் தகுதியவற்றவள், ஆண் சொல்படி கேள்.

இப்படி ‘பெண்ணுரிமை’ பேசும் மனு இன்னொரு இடத்தில் சொல்கிறது. பெண்கள் அசுத்தமானவர்கள். உனக்கு விதிக்கப்பட் டுள்ள மந்த்ரோப தேச சம்ஸ்காரங்கள் அவளுக்கு கிடையாது. அவளை மதிக்காதே... பிராமண ஆணுக்கு சொல்லுவதாய் வந்த கருத்து இது.

மனுவின் இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு ‘பூம் பூம்’ மாடுகள்போல தலையாட்டினார்கள் மற்ற வர்ணத்தவர்கள்.

வைதீக கட்டுப்பாடுகள் சர்வாதிகாரமாக விதிக்கப்பட்டன. கடவுள் இப்படித்தான் செய்யச் சொல்லியிருக்கிறான். இதுபடி கேள். இல்லையேல் நீ பாபியாவாய்... என மந்த்ரங்களால் மிரட் டப்பட்டனர் மக்கள்.

பல நூறு வருடங்கள். ஒரு கிரிமினல் லா போன்றே மனுநீதி சமூக கட்டமைப்பை தன் கட்டுக்குள் வைத்திருந்தது. வைதீக கர்மாக்களை பிறருக்கு எடுத்துச் சொல்லி நீதி பரிபாலனம் செய்ய வேண்டிய பிராமணன், க்ஷத்ரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் எல்லோரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.

இப்படிப்பட்ட ஒரு ‘சாஸ்திர ஏகாதிபத்ய’ சூழ்நிலையில்தான்... இன்றைய நேபாளத்திலிருந்து ஒரு குரல் புறப்பட்டது.

“கடவுள் பெயரை சொல்லியும்... கர்மாக்கள் பெயரைச் சொல்லியும் சிந்தனை வளராத அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைக்கிறீர்களே? உங்களுக்கு இந்த உரிமையை யார் கொடுத்தது? கடவுளா? அவன் எங்கே இருக்கிறான்?

வேதத்தை சாதத்துக்கு (பிழைப்புக்கு) பயன்படுத்தாதீர்கள். பேதம் வளர்க்காதீர்கள். கொடுமைதான் உங்கள் கொள்கை என்றால் வேதம் வேண்டாம். மனு வேண்டாம். கடவுள் வேண்டாம். கர்மாக்கள் வேண்டாம். மனித தர்மம் மட்டும் தான் வேண்டும்...”

என அந்த சூழ்நிலையில் மிகமிக வித்தியாசமான குரல் தொனித்தது. அது புத்தர் குரல்.

இன்றைக்கு அணு குண்டு வெடி சோதனைக்கே ‘புத்தர் சிரித்தார்’ என பெயர் வைக்கிறோம். அன்றைக்கு புததரே வெடித்தார் என்றால் விளைவுகள் என்ன?

Link to comment
Share on other sites

நல்ல ஒரு தொடர்... நன்றி நுணாவிலான். நக்கீரன் யார்? அவரைப்பற்றி அறிந்ததில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு தொடர்... நன்றி நுணாவிலான். நக்கீரன் யார்? அவரைப்பற்றி அறிந்ததில்லை.

யாழ்களத்துடன் இணைந்திருங்கள்?இங்கிருப்பவர்கள் இரத்தம் வராக்குறையாக கடித்து குதறுவார்கள் அப்போது தெரியும் உங்களுக்கு யார் நக்கீரன் என :lol:

Link to comment
Share on other sites

நல்ல ஒரு தொடர்... நன்றி நுணாவிலான். நக்கீரன் யார்? அவரைப்பற்றி அறிந்ததில்லை.

‘நக்கீரன்’ இதழில் தொடந்து வெளி வந்துகொண்டிருக்கும் இந்த கட்டுரைகள் பல உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளன. கட்டுரையை எழுதுபவர் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் நம்பிக்கைக்குரிய மகா வைணவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சங்கர மடங்களின் சங்கராச்சாரியார்களின் இந்து மத வருணவெறி மற்றும் சூழ்ச்சிகளைத் தெரிந்துகொள்ள பெரிதும் உதவும் என்பதால் நக்கீரனில் வெளிவந்து கொண்டிருக்கும் இந்தக் கட்டுரைத் தொடர் அப்படியே இங்கு வெளியிடப்படுகிறது....

Link to comment
Share on other sites

யாழ்களத்துடன் இணைந்திருங்கள்?இங்கிருப்பவர்கள் இரத்தம் வராக்குறையாக கடித்து குதறுவார்கள் அப்போது தெரியும் உங்களுக்கு யார் நக்கீரன் என :D

:lol:நல்ல வேளை நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால் தான் அவர் என்று சொல்லாமல் விட்டீர்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol:நல்ல வேளை நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால் தான் அவர் என்று சொல்லாமல் விட்டீர்கள். :D

happy0199.gifhappy0199.gifhappy0199.gif

Link to comment
Share on other sites

வேதத்தின் பெயரைச் சொல்லி கர்மாக்கள் அரங்கேறிக் கொண்டி ருந்ததை எதிர்த்து புத்தர் எழுப்பிய குரலை போன அத்தியாயத்தில் கேட் டோம்.

குரல் கொடுத்த பின்னணி, அடுத்தபடியாக அவரது செயல்கள் எப்படி இருந்தன? விளை வுகள் என்ன சம்பவித்தன? என்பதுபற்றி இப் போது பார்க்கலாம்.

சகல சவுபாக்கியங்களையும் ருசித்துக் கொண்டு மனைவி யசோ தராவோடு இளமைப் பருவத்தில் இல்லறம் நடத்திக் கொண்டிருந்த புத்தருக்கு ஒரு வைராக் கியம் பளிச்சிட்டது. இனி பெண் சுகம் வேண்டாம். இல் சுகம் வேண்டாம். வெளியே போகலாம். அங்கே என்னென்ன நடக்கிறது பார்க்கலாம்.

- என மூளைக்குள் முடிவெடுத்தார். சட் டென இளம் மனைவி யசோதராவையும், பிஞ்சு மகன் ராகுலையும் விட்டு விட்டு வெளியே போய் விட்டார்.

வெளியே வந்த பிறகு அவர் கண்ட காட்சிகள் தான் புத்தரை போராட்ட களத்துக்கு கொண்டு சென்றன.

எங்கெங்கு காணினும் மூடப் பழக்க வழக்கங்கள். ஊரெல்லாம் ஒரே அக்னிப் புகை. அந்தப் புகையில் புறக் கண்களும் தெரியாமல், அக அறிவுக் கண்களும் தெரியாமல் துழாவிக் கொண்டிருந் தனர் மக்கள்.

ஏன் அக்னிப் புகை...?

பிராமணர்கள் சொன்னார்கள், ஊரெல்லாம் நலமாக இருக்க, நாமெல்லாம் வளமாக இருக்க அக்னி வளர்த்து அதில் பசுக்களை பலியிட வேண் டும். வேதம் பயின்ற நாங்கள் யாகம் நடத்துகிறோம். பிராணிகளையும், தட்சணையையும் கொடுத்து நீங்கள் புண் ணியம் பெறுங்கள் என அக்னிப் புகைக்கிடையே அழுத்தமாய் சொன் னார்கள்.(அந்த காலத்திலேயே பிராமணர்கள் பசுவை பலியிட்டிருக்கிறார்களா? என்ற சந்தேகம் உங்க ளுக்கு எழலாம். பசு என் றால் சமஸ்கிருதத்தில் நாலுகால் பிராணி என பொருள் பிற்காலங்களில் பசு என்றால் கறவை மாடு என வழங்குவது வழக்க மாகி விட்டது. தமாஷுக் காக இப்போது நாலு சக்கர பஸ்ஸைகூட பசு என கூறினாலும் கூற லாம்).

அந்த புகைக்கிடையே பிராமணர்கள் மந்திரங் களை சொல்லச் சொல்ல ஒன்றும் புரியாமல் கேட் டுக் கொண்டிருந்தனர். காரணம், அன்று மக்கள் பேசியது பிராக்ருத மொழி. அவர்களுக்கு சமஸ்கிருத மந்திரங்கள் புரியவில்லை. அதில் என்ன சொல்லப்பட்டி ருக்கிறது என்றும் தெரிய வில்லை.

புத்தர் இதை பார்த் தார். மக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தவேண்டுமானால், அவர்களின் மொழியான ப்ராக்ருதத் திலேயே கருத்துகளை பரப்பவேண்டும் என முடிவெடுத்தார்.

அப்போதுதான் அசு வமேத யாகத்தின் கொடூரங்களையும், ஆபாசங் களையும் கண்கூடாக கண்டார் புத்தர். அதென்ன அசுவமேத யாகம்?

ராஜாக்கள் ஒரு ஆண் குதிரையை அவிழ்த்து விட்டு... அடித்து விரட்டி விடுவார்கள். அக்குதிரை எங்கெங்கு சென்று விட்டு வருகிறதோ... அந்த எல்லை வரைக்கும் போரிட்டு ஜெயித்து விட்டு அந்த வெற்றியை கொண்டாடுவதற்காக நடத்தப்படும் யாகம்தான் அசுவமேத யாகம்.

ஓடிக் களைத்து வந்த அந்த குதிரையை கட்டிப் போட்டுவிட்டு விடுவார் கள். அக்குதிரையோடு ஒரு பெண் குதிரையை சேர்த்து விடுவார்கள். இயற்கை உந்துதலால் ஆண் குதிரையின் உறுப்பு நீண்டிருக்கும். அப்போது ஓரிரவு முழுவதும் சம் பந்தப்பட்ட ராஜா வீட் டுப் பெண்கள் முக்கிய மாக ராணி... குதிரையின் உறுப்பை கைகளால் இரவில் பிடித்துக் கொண் டிருக்கவேண்டும். இந்தக் கடமை முக்கியமாக ராணிக்குத்தான்.

இதைக் கூற சவுஜன்ய (கூச்சம்)மாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய, அசுவமேத யாக ஸ்லோ கமே அப்படித்தானே இருக்கிறது.

அஸ்வஸ்ய சத்ர சிஷ்நந்து

பத்னி க்ராக்யம் ப்ரசக்ஷதே...

என போகிறது ஸ்லோகம். அஸ்வமாகிய குதி ரையை ராஜாவின் பத் தினி ராணி ‘வழிபட வேண்டிய’ முறையைத் தான் விளக்குகிறது இந்த ஸ்லோகம்.

இரவு இந்த கடமை முடிந்ததும்... மறுநாள் அந்த ஆண் குதிரையை அப்படியே அக்கினியில் போட்டு பஸ்பமாகும் வரை எரித்துவிடுவார் கள். இதுதான் அஸ்வ மேத யாகம்.

மக்களைபோலவே, ராஜ குடும்பத்தினரும் பிரமாணர்களின் மந்த்ர யாகத்துக்கு கட்டுப்பட் டிருந்தார்கள். யாகம் முடிந்ததும்... ஏ... ராஜா, இந்த யாகத்தை நல்ல விதமாக பூர்த்தி செய் தாகி விட்டது. இதற்காக நீ பொன்னும், பொரு ளும் தட்சணை கொடுத் தாய். அஃதோடு யாகத் தில் பங்கு கொண்ட உன் ராணியையும் நியதிப்படி நீ எங்களுக்கு தட்சணை யாக்கி பிறகு அழைத்துச் செல்லவேண்டும என் றார்களாம்.

இதையெல்லாம் பார்த்து வெகுண்டார் புத்தர். மனித தர்மம் மிருக காருண்யம் இரண் டையுமே பொசுக்கி யாகம் செய்கிறீர்களே...? ஏன் இப்படி...?

என யாகம் நடந்த இடத்துக்கே போய் கேள் விகள் கேட்டார்.

பிராமணர்கள் பதில் சொன்னார்கள்: குதி ரைக்கு மோட்சம் கிடைக் கும். லோகத்துக்கு க்ஷமம் கிடைக்கும் என்று.

புத்தர் திரும்ப கேட் டார்.

ஒன்றும் தெரியாமல் வளர்ந்து, வாழ்ந்து சாகப் போகும் குதிரைக்கு மோட்சம் தருகிறீர்களே. எல்லாம் அறிந்த பிராம ணனாகிய நீங்கள் மோட் சம் பெறவேண்டாமா? அந்த அக்னி குண்டத் தில், யாகம் நடத்தும் உங்களையும் தூக்கிப் போட்டால் உங்களுக் கும் மோட்சம் கிட்டும் அல்லவா...?

ப்ராக்ருத மொழியில் மக்களிடம் இதே கேள் வியை புத்தர் பரப்ப... திடுக்கிட்டுப் போனார்கள் பிராமணர்கள்.

பிறகு...?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்து மதம் என்ற ஒன்றில்லை என்றார் தந்தைபெரியார்

அதன் பெயரில் பார்ப்பனர்களின் சூழ்ச்சி மட்டுமே உள்ளது என்றார்.

இந்து மதத்தை தோலுரித்து அதில்ஒளிந்து கொண்டிருக்கும் பார்ப்பன வெறியை அம்பலத்தும் பணி தொடர வாழ்த்துகிறோம்.

தமிழர்களின் பண்பாட்டை சீர்குலைத்து அவர்களின் மரபை தீயிட்டு கொளுத்தி, இன்றும் ஆரிய பார்ப்பான் சிங்கள வெறிக்கூட்டத்தின் வழியே தன் பணியை தொடர்கிறது என்பதை ஈழத்தமிழ்மக்கள் உணரவேண்டும்.

Link to comment
Share on other sites

முரட்டுத் தனமாக ஓடித்திரியும் குதிரை களுக்கே மோட்சம் கிடைக்கும்போது, மென் மையாய் வேதம் ஓதும் உங்களுக்கு அந்த அக்னி குண்ட மோட்சம் வேண் டாமா?...

-என புத்தர் வேள்விச் சாலைக்கே சென்று ஒரு கேள்விப் பொறியை போட யாகத்தைவிட பெருநெருப்பாய் கிளம்பி யது இந்த ஒரு நெருப்பு.

காகம் கொத்தி அல மரம் சாயுமா?...ஆலமரம் போல் வேர்களையும், விழுதுகளையும் மண் ணுக்குள்ளும், மக்களுக் குள்ளும் ஊன்றி வைத் திருந்த வேத கட்டுப்பாடு கள், மநு கட்டளைகள் ஆகியவற்றின் முன் புத் தரின் கொள்கை முழக்கம் முதலில் தடுமாறினாலும் கொஞ்சம் கொஞ்சமாய் வலுப்பெற தொடங்கியது.

முதலில், உடனடி அழிவிலிருந்து பிராணி களை காப்பாற்றுவது, பிறகு, மெல்ல மெல்ல கவ்வும் அழிவிலிருந்து மக்களை காப்பாற்றுவது என முடிவெடுத்த புத்தர்... தன் சிந்தனையோடு ஒத் துப்போகும் சில வாலி பர்களை தேர்ந்தெடுத் தார். புத்தருக்கு அப் போது முப்பது வயது இருக்கலாம். முறுக்கே றிய தேகம்... முன்னேறும் கண்கள். ஓயாத சிந்தனை தனக்கே உரிய குணங் களைப் பெற்றிருக்கும் அவர்களோடு சாலை சாலையாக நடந்தார்.

எங்கேனும் வேள்விச் சாலை அனல் அடித்தால் அங்கே விரைந்து சென்றது புத்தர் படை.

யார் நலனுக்காக யாகம் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறதோ அவர் களை அணுகியது.. பாரப்பா... இப்படி உயிர் களைப் பலிகொடுத்து உனக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது?... சென்ற முறை பக்கத்தில் ஒருத்தன் பல யாகங்கள் நடத்தினான் பொருள் செலவு தான் மிச்சம். அவன் கண்ட பலன் ஒன்றுமில்லை.

நீ பலி கொடுக்கும் நாலு கால் பிராணியை நீயே தீனியிட்டு வளரு. அது இறந்து கொடுக் காத பலனை இருந்து கொடுக்கும். இந்த வைதீக கர்மாக்களை நம்பாதே. ஒருவனுக்கு இழப்பும், ஒருவனுக்கு பிழைப்பும் கொடுக்கும் மோசடி வித்தை... ப்ராகிருத மொழியில் பிளந்து கட் டியது புத்தர் குழாம். இதைக்கேட்ட யாகம் நடத்துபவர்கள்... உடன டியாக நிறுத்தவில்லை என்றாலும்... இனிமேல் யாகம் நடத்தமாட்டோம் என புத்தரிடம் உறுதி தந்தனர்.

புத்தர் நடந்தார். வீடு வீடாய்ச் சென்றார். இப் போது தேர்தல் வந்தால் கட்சிக்காரர்கள் வீட்டு எண்களைப் பார்த்துப் பார்த்துக் கும்பிடுவார் களே... அதே போல ஆனால் பதவியை எதிர் பாராமல் ஒவ்வொரு வீடாய்ப் புகுந்தார் புத் தர். யாகங்கள் நடத்தா தீர்கள். நெருப்புக்குள் உயிர்களைப் போட்டு கொல்லாதீர்கள். உங்கள் அறிவைப் பயன்படுத்தி வாழுங்கள்.

இதுதான் புத்தோப தேசம்

இங்கே முக்கியமான ஒரு செய்தியை குறிப்பிட் டாக வேண்டும். புத்த ருக்கு நெடுங்காலம் கழித்து தோன்றிய கிறிஸ்தவ மதத்தின் புனிதநூல் பைபிளில் மைக்கேல் கூறுவதாக கீழ்க்கண்ட வாசகங்கள் அமைந் துள்ளன.

Don’t pour innocent matters into the fire. God wants your love only

ஒன்றும் அறியாத அப் பாவி ஜீவன்களை நெருப் புக்குள் போட்டு எரிக்கா தீர்கள். கடவுள் இதை விரும்புவதில்லை. அவர் உங்கள் அன்பை மட் டுமே விரும்புகிறார் என கிறிஸ்தவ புனித நூலில் சொல்லப்பட்ட கருத்தை... மிக மிக மிக முன்கூட்டியே வீடுவீடாகக் சென்று சேர்த்தவர் புத்தர்.

Anti Vedic வேத எதிர்ப்புக் கொள்கையை இன்னும் முழுவீச்சில் மக் களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமானால் மக்கள் மனதில் பதியும் சில அடை யாளங்களை பெற்றிருக்க வேண்டும் என ஜனரஞ் சகமான முடிவுக்கு வந் தார் புத்தர்.

என்ன செய்யலாம்? மொட்டையடிக்கலாம் ஆடையைக் குறைக்க லாம். இவை வெளிப்புற அடையாளங்கள். தலையிலிருந்து ரோமங் களையும், உடலிலிருந்து உடையையும் களைந்தது போல், மனசிலிருந்து ஆசையைக் களைய வேண் டும். பெண்ணாசை, பொரு ளாசை துறந்து விட்டு வீட்டை திறந்து வெளியே வந்துவிட வேண்டும்.

தனி குழாமுக்கு இப் படி அழைப்பு விடுத்தார். குவிந்தனர். வீட்டை விட்டு வெளியே வந்தாகி விட்டது. இனி மக்களி டம் நம் கொள்கையைப் பரப்புவதுதான் முழு முதல் வேலை. வேறொருவர் வீட்டிலும் தங்கக் கூடாது. எங்கே போவது?...

உருவாகின புத்த விஹா ரங்கள். சிறு சிறு எளிய குடில்கள். புத்த சன்யாசி கள் என (Buddhist monks)பிட்சுகள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட கோயில் போன்ற ஸ்தலங்கள் தான் விஹாரங்கள் என அழைக்கப்பட்டன. மக் கள் பேசும் மொழியான ப்ராக்ருதத்திலேயே புத்த பிட்சுகளின் பிரச்சாரங் களும் போதனைகளும் பரவத் தொடங்கின. விஹார்களின் எண் ணிக்கை சரசரவென அதி கரிக்க ஆரம்பித்தது. இன்றைய பிஹார் மாநிலத் துக்கு இப்பெயர் வர காரணமே. அங்கே புத்த விஹார் கள் எக்கச்சக்கமாய் இருந்ததுதான் காரணம் என்ன ஒரு வரலாற்றுக் குறிப்பும் உள்ளது.

புத்தர் காலத்துக்குப் பிறகும் அவருடைய ஞான மார்க்கம் பரவி பெருகிய நிலையில்தான் பிராமணர்கள் தங்கள் கர்ம மார்க்கத்தை மறுபரிசீ லனை செய்ய ஆரம்பித் தனர். உயிர்ப்பலிகளை குறைக்க முடிவெடுத்த னர்.

பிராமணர்களின் மிகப் பெரிய பலமே... யாரிடம் எது நல்லதாக இருக்கிறதோ அதை தங்களுக்கு ஸ்வீகாரம் செய்து கொள்வது தான். ஆங்கிலத்தில் ‘Adoption’ என சொல் வோமே...

புத்த இயக்கத்திடமி ருந்து... ஜீவகாருண்யத்தை மட்டுமா ஸ்வீஹரித்தார் கள்.

இப்போது மடம் மடம் என சர்ச்சைகளுக்கிடையே பேசப்படுகின் றதே... இதுபோன்ற மடங்களுக்கான மூலத்தையும் புத்த விஹார்களிடமிருந் துதான் பெற்றார்கள் பிராமணர்கள்.

மெல்ல மெல்ல புத்த இயக்கத்தினர் வட இந்தி யாவிலிருந்து தென்னிந்தி யாவுக்கு வந்தனர் பிராமணர்களும் பின் தொடர்ந்தனர் பிறகு?...

Link to comment
Share on other sites

புத்தம் சரணம் கச்சாமி...தர்மம் சரணம் கச்சாமி... சங்கம் சரணம் கச்சாமி... என்ற மெல்லிய கோஷங்கள் தென்னிந்தியாவின் தொண்டை மண்டலக் காற்றில் கலக்க ஆரம்பித்த காலம்.

இங்கே தமிழ் பண்பாடு... நாகரிகத்தின் உச்சியில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. சங்க இலக்கியங்கள் இயற்கை, இறைமை, காதல், பக்தி என சகல விசேஷங்களையும் தொட்டு தமிழாட்சி நடத்திக் கொண்டிருந்தது.

பொதுவாகவே உலக அளவில் வழிபாட்டு முறையில் ஓர் ஒற்றுமை இருந்து வந்துள்ளது.

(i) கல்லை வழிபடுதல்-Fetish worship

(ii) விலங்குகளை வழிபடுதல்-Totemism worship

(iii) மனித- உரு செய்து வழிபடல்-Shamnaism worship

(iஎ) விக்ரம், சிலை செய்து வழிபடுதல்-Idol worship

நாகரிக பண்பாட்டு வளர்ச்சியின் அடிப்படையில் இந்த வழிபாட்டு முறைகளும் வளர்ச்சி கண்டு வந்தன. தமிழ் நாகரிகமோ சிற்பக்கலையில் தேர்ந்து விளங்கியது.

பழங்கால மன்னர்கள் தங்கள் ஆட்சியின் பெருமைகளை வரலாறுதாண்டி உரத்துச் சொல்லும் அளவுக்கு சிற்பங்கள் நிறைந்த கோயில்களை கட்டி அங்கே தெய்வச் சிலைகளை எழுப்பி வழிபாடு நடத்திவந்தனர்.

வழிபாடு என்றால்?

தமிழன் கல்லை சிலையாக்கும் நுண்மையான வன்மை கொண்டவன் என்றாலும்... அதே அளவுக்கு மென்மை தன்மையும் அவனிடத்தில் மேவிக் கிடந்தது.

பூக்களை பறித்து அவற்றால் வழிபாடு நடத்த ஆரம்பித்தான். அருகில் அணையாமல் நந்தா விளக்கு எரிந்து கொண்டே இருக்கும் தீப வெளிச்சத்தில் பூக்களால் நடத்தப்பட்டதுதான் தமிழனின் முதல் வழிபாடு.

பூசெய்= பூவால் செய் இது இணைந்ததுதான் பூசெய் பூசை என இப்போதைய வார்த்தையின் வடிவம் தோன்றியது.

இதனை திராவிட மொழியியல் ஆராய்ச்சியாளர் எஸ்.கே. சாட்டர்ஜி தனது ஆராய்ச்சி நூலில் எடுத்துக் காட்டுகிறார்.

வழிபாடு மட்டுமல்ல பக்தியிலும் தமிழினம்தான் முன்னோடியாக இருந்திருக்கிறது.

நீ உன் மனைவியிடம் காட்டும் அன்பை கடவுளிடம் காட்டு... என பக்திக்கு இலக்கணம் வகுத்தது பரிபாடல்.

‘நாயக’ நாயகி பாவம்’ என்ற பக்தி வடிவத்தை உலகுக்கு கொடுத்ததே தமிழ் இனம்தான்.

இவ்வாறு கடவுளை காதலியாகவும், காதலனாகவும் உருவகிக்கும், வர்ணிக்கும் அளவுக்கு வளர்ந்திருப்பது தமிழ்ப் பண்பாடு.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான்... புத்தம் மற்றும் சமண கொள்கைகள் தமிழ்நாட்டில் பரவின. பரவின என்றால் சும்மா அல்ல... தெற்கே திருநெல்வேலிவரை சமணம் பரவிவிட்டது.

நாகப்பட்டினம்வரை புத்தம் புகுந்து விட்டது.

வடஇந்தியாவில் புத்திஸத்தால் எதிர்க்கப்பட்ட வேத பிராமணர்கள் நகர்ந்து நகர்ந்து தென்னிந்தியாவைத் தொடுகின்றனர்.

அவர்களில் ஒருவர்தான் மகேந்திர பல்லவ ராஜா என்றும் கருத இடமுள்ளது. புத்தர் இனத்தவர்கள் தமிழினத்தவரோடு ‘சம்மந்தி’ உறவு முறை வரை நெருங்கிவிட்ட நிலையில்...

பல்லவ ராஜாக்கள் வேதத்தை வேத நெறிமுறைகளை இங்கே விதைத்து வைத்தனர். புத்த போதனைகளால் எதிர்க்கப்பட்ட வேத போதனைகள் இங்கே பிராமணர்களால் மறுபடியும் தலை தூக்கின.

பிராமணர்கள் இங்கே வந்தபோது அவர்கள் அணிந்திருந்த நூல்... அதாவது பூண்டிருந்த நூல்.. அதாவது பூணூல் (இப்போது பெயர்க்காரணம் புரிகிறதா)... பார்த்து ஆச்சரியப்பட்டார்கள் இங்கிருந்தவர்கள்.

என்ன இது? என கேட்க... அதற்கு பிராமணர்கள் பதில் சொன்னார்கள். ‘சமூகத்தில் நாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்பதற்காக அணிவிக்கப் பட்டிருக்கும் அந்தஸ்து’...

ஆனால்... உண்மையில் இந்த பூணூல் வந்த கதை வேடிக்கையானது.

வேத கர்மாக்களை நிறைவேற்றுவதற்கான சடங்குகளில் ஈ டுபட்டிருக்கும்போது.. வஸ்திரத்தை தோள்பட்டை வழியாக மார்புக்கு குறுக்காக அணியவேண்டும் என்பது வேதம் வகுத்த விதி.

அதேபோல் அணிந்து பார்த்தார்கள். கைகளை உயர்த்தி வேள்விச் செயல்களில் ஈ டுபடும்போது அடிக்கடி அமர்ந்து எழுகின்றபோதும்.. வஸ்திரம் அவிழ்ந்து நிலை மாறிவிடுவதால்.. இது நிலையாகவே இருக்க என்ன வழி என்று பார்த்தார்கள்.

இதே போல மெல்லியதாய் அணிந்தால் பணி செய்யும்போது உபத்திரவம் செய்யாமல் இருக்குமே என யோசித்தனர். வஸ்திரம் நூலானது அதுவே பூணூலானது.

இதை ‘அந்தஸ்து’ என வழங்கிக் கொண்ட பிராமணர்களுக்கு வசதி செய்து கொடுக்கும் வகையில்... புத்த, சமண கொள்கைகளை பின்பற்றுவதில் கஷ்டங்கள் இருந்தன.

சமண கொள்கைப்படி... உயிர்களை அதாவது எறும்பைக்கூட கொல்லக்கூடாது. நடக்கும்போதுகூட பூமிக்கு நோகக்கூடாது! மேலும் இரு கொள்கைகளுமே கடவுளை முக்கியப்படுத்தவில்லை என்பதால்.. கொஞ்சம் கொஞ்சமாய் மங்க ஆரம்பித்தன. இந்த மகா கொள்கைகள் இந்த மாற்றங்கள் நடந்த பிறகு...

தமிழ்நாட்டில் வேதம் வழிந்தோடியது கிடைத்தது. இங்கேயுள்ள மிகச் சிறந்த சிலைகளை பார்த்த பிராமணர்கள்.. இவை வெறும் கல்லாகவே இருக்கின்றன. நான் என் மந்த்ரத்தன்மை மூலம் இவைகளை தெய்வமாக்குகிறேன் என்றனர்.

பூசெய்... என்பதை மாற்றி பூஜை ஆக்கினார்கள். பூ, நந்தாவிளக்கு என இருந்த தமிழர் வழிபாட்டில் மட்டுமா?... கலாச்சாரத்திலும் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்தனர் பிராமணர்கள் என்னென்ன?

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

இந்து மதம் எங்கிருந்து வந்தது? 450 மதங்களையும் ஞாபகத்தில் வைத்திருக்க முடியாத ஆங்கிலேயர் இந்து மதம் என்ற பொதுவான பெயரைக் கொடுத்தார்கள். ஐரோப்பிய வருகைக்கு முன் இந்தியாவோ, இந்து மதமோ இருந்ததில்லை.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

தமிழ் பூக்களால் தமி ழர்கள் செய்த பூஜை (பூ செய்) எப்படி பூஜையானது என பார்த்தோம்.

இதுமட்டுமல்ல இன்னும் பல வகைகளில் தமிழர்களின் வழிபடுமுறை மாறிப்போனது.

சிற்பக் கலைகளில் ஓங்கி உயர்ந்திருந்த தமிழர்கள் பல பெண் உருவச் சிலைகளை வடித்தனர். சிறு சிறு குழுக்களுக்கு ஊர்களுக்கு அவற்றை காவல் தெய்வமாக வைத்தனர் அச்சிலைகளின் முன் நின்று உரத்த குரலில்...

‘ஏ... காவல் காக்கும் அம்மா... என் வீட்டில் மாடுகள் நிறைய கொடு... எங்கள் ஊருக்கு மழையைக் கொடு... என அச்சிலை முன் நின்று சத்தம் போடுவார்கள்.

ஏன் என்று கேட்டால்... சிலைக்கு கல் காதல்லவா? அதனால் நாம் உரக்கச் சத்தம் போட்டால்தான் நமது வேண்டுகோள் அச்சிலையின் காதில் விழும். அப்போதுதான் நமது கோரிக்கை நிறைவேற்றப் படும்... என்பது நம்பிக்கை.

இப்படியே கொஞ்ச காலம் போக... ஒருவன் சொன்னான் நாம் நமக்குள் பேசுவதுபோல பேசிக் கொண்டிருந்தால் சிலையின் காதில் கேட்குமா? க்ரீம் த்ரீம் ப்ரீம்... என அடி வயிற்றிலிருந்து அதிரும் படியான சொற்களை உச்சரித்தால் அந்த அதிர்வில் சிலையின் காது திறக்கும் என்றான்.

இந்த உரத்த வழிபாடு ஒருபக்கம் நடந்துகொண் டிருக்க தமிழர்களுக்கு கைகூப்ப கற்றுக்கொடுத்தார்கள் பிராமணர்கள். எப்படி?

தொடக்க கால ஆரியர்களோடு தாஸே எனும் பழங்குடியின மக்கள் பல வகைகளில் மோதினர். சிந்தனை சக்தியில்லாத முரட்டுக் கூட்டத்தை உயர உயரமாய் இருந்த ஆரியர்கள் பதிலுக்குச் சண்டையிட்டு வெல்ல... அப்போது தாஸே இனத்தவர்கள் ஆரியர்கள் முன் குனிந்து இரு உள்ளங் கைகளையும் பிணைத்து... ‘இனி உங்களை தாக்கமாட்டோம் என அடிபணிந்தனர்.

அதுபோல வைத்துப் பாருங்கள் கும்பிடுவது போல் தோன்றும். அந்த ‘தாஸே‘ இனப் பெயரிலி ருந்துதான் தாஸன் என்ற சொல் முளைத்தது. தாஸன் என்ற சொல்லுக்கு அடிமை என்ற அர்த்தமும் அதன் வழியேதான் முளைத்தது.

தங்களை அன்று கும் பிட்ட ‘தாஸே‘ இன மக்கள் மாதிரியே... பிற்காலத்தில் தெய்வங்களை வழிபடக் கற்றுக் கொடுத்தனர் பிராமணர்கள் கடவுளுக்காக கை கூப்ப வைத்த பிராமணர்கள் படிப்படியாக... தமிழர்களின் உரத்த வழிபாட்டிற்குள்ளும் ஊடுருவினார்கள்.

“நாம் பேசுவதையே தெய்வத்திடம் பேசினால் அதற்குக் கேட்குமா? நாங்கள் சில மந்திரங்கள் சொல்கிறோம். அதை உச்சரித்தால்தான் உன் சிலைக்கு தெய்வ சக்தி வரும். தவிர மனிதர்களுக் குள் பேசும் மொழியை நீங்கள் தெய்வத்திடம் எப் படி பேசுவீர்கள்?

... என வேத சமஸ்கிருத மந்த்ரங்களை அச்சிலை முன்னர் கூறத் தொடங்கினார்கள். புதிதாக இருக்கிறதே என கேட்க ஆரம்பித்த தமிழர்கள்தான் இன்றுவரை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இத்தனைக்கும் வேதத்தில் சொல்லப்பட்டிருப் பது என்னவென்றால்... கடவுளுக்கு உருவம் கிடையாது. உபநிஷத்துகள் உப தேசிப்பது என்னவென்றால்... “கடவுளுக்கு உருவம் எதுவும் கிடையாது. உருவம் இல்லாததுதான் உண்மையான உருவம்.”

வேதம், உபநிஷத்து இவற்றையெல்லாம் தாண்டிக் குதித்து தமிழகத்தில் சிலைகளுக்கு முன்னாள் மந்திரம் சொல்ல ஆரம்பித்தான்.

தமிழன் வழிபாட்டு முறையான பூவோடு... தெய்வம் சாப்பிட ஏதாவது கொடுக்க வேண்டாமா? பழம் கொண்டு வா, அன்னம் கொண்டு வா’ தொடங்கியது படையல் பண்பாடு.

நந்தா விளக்கு தீபம், பூ இவற்றோடு வழிபாட்டு பொருள்களுக்கான பட்டி யலில் பழம் சேர்ந்தது. உணவுப் பொருள்கள் சேர்ந்தன. தமிழ் மட்டும் தள்ளி வைக்கப்பட்டது.

வழிபாட்டு முறையில் மாற்றம். அடுத்தது சமூக ரீதியாக மாற்றங்கள் உண்டாக வேண்டியதுதானே நியதி?... உண்டானது.

கலாச்சாரத்தின் முதல் மாற்றம் கல்யாணத்தில் தொடங்கியது. தமிழர்களின் கல்யாணமுறை எப்படி இருந்தது என தெரிந்து கொண்டால்தானே அது எவ்வாறு மாறியது என்பதையும் தெரிந்து கொள்ளமுடியும்.

இலக்கியங்களை சித்தரிப்பது போல களவியல் என்பதுதான் பழந்தமிழர்களின் திருமணமுறை அதென்ன களவியல்?

பெண்ணொருத்தி பூப்பெய்துகிறாள் உறவுப் பெண்கள் சுற்றிலும் மகிழ்ச்சி பொங்க முற்றுகை யிட்டிருக்கிறார்கள். பெண்மை, தாய்மை என்னும் பெருமைக்கெல்லாம் அடிப்படையே இந்த திருநாள்தானே. அதனால்தான் சுற்றத்தின் முகத்தில் மகிழ்ச்சி. அந்த யுவதியின் முகத்தில் வெட்கம்.

இதை பக்கத்து வீட்டுக் காளை பார்த்து பூரிக்கிறான். அவளது அழகு அவனை அழைப்பதாய் அவனுக்குத் தோன்றுகிறது. பெண்மையின் முதல் வெட்கத்தின் முகவரி அவள் முகத்தில் தெரிகிறது. அதை படிக்க அந்த காளை ஆசைப்படுகிறான்.

சுற்றிலும் உறவினர்கள். பெண்களின் பாதுகாப்பு... அன்ன நடை போட்டா அவளை அடைய முடியும்?

பொறுத்திருக்கிறது காளை. பொழுது சாயத் தொடங்கிய உடன் பாயத் தயாராகிறது. ராத்திரியின் மெல்லிய ஒளியில் தன் ராணியை நெருங்கியவன் நேரம் காலம் பார்ப்பதில்லை.

ஒரே தூக்கு. அந்த ஆளான அழகை தன் இளங்கரங்களில் ஏந்தி சிற்சில நொடிகளில் சீறிப்பாய்ந்து மறைகிறான்.

ருதுவான மங்கை மாய மாய்ப்போன பின்னே... தேடுகிறார்கள். சுற்றுவட்டாரத்தையே அப்பெண்ணின் ஆண் உறவினர் கூட்டம் அணு அணுவாய் அலசுகிறது.

கடைசியில் அந்த ஜோடி ஜொலித்துக் கொண்டிருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விடுகிறது கூட்டம்.

பக்கத்து வீட்டு காளை அவளை பருகி நெடுநேரம் ஆகியிருந்தது.

கையும் களவுமாக பிடித்தபின் என்ன தண்டனை தெரியுமா?

Link to comment
Share on other sites

கன்னியை தூக்கிக்கொண்டு ஓடிய அந்தப் பக்கத்து வீட்டு காளைக்கு தமிழ்க்கூட்டம் என்ன தண்டனை கொடுத்தது தெரியுமா?

`இதோ பாரடா... நீ அவளை தொட்ட முதல் ஆண்மகன். அதனால் அவள் உனக்குரியவள்தான். உன்னுடன்தான் வாழ வேண்டும் அவள்’ என இரண்டு பேரையும் சேர்த்து வைத்தது தீர்ப்பு.

இஃது களவியல் என்றால்... தமிழர்களின் இன்னொரு சிறப்பு, சங்கப்பாடல் ஒன்று சொல்கிறது பாருங்கள். காதலை அஃதாவது கற்பியலை.

``யாயும் ஞாயும் யாராகியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைகேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல் நீர்போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே...’’

நானும் நீயும் யார் யாராகவோ இருந்தோம். என் தந்தையும் உன் தந்தையும் எந்த முறையில் சொந்தக்காரர்கள் என்றும் தெரியாது. நானும், நீயும் எங்கிருந்து வந்தோம் எனவும் இப்போது தெரியவில்லை.

ஆனாலும்... இந்த அறிமுகங்கள் எல்லாம் தேவையே இல்லாமல் அன்பு கொண்டோம்... எப்படி தெரியுமா... செம்மண்ணிலே பெய்யும் மழைநீரும் செந்நிறம் அடைந்துவிடுகிறதே. அதுபோல அன்பு கொண்ட நம் நெஞ்சங்கள் இரண்டும் பிரிக்க முடியாதபடி கலந்துவிட்டது.

இப்படி காதல் வாழ்க்கையிலும் நாகரிகத்தின் சிகரத்தில் இருந்தனர் தமிழர்கள்.

இவ்வாறு களவியல், கற்பியல் இரண்டு விஷயங்களிலுமே முன்னணியில் இருந்த தமிழர்களின் கல்யாணங்களில் `தாலி’ வந்த கதை சுவாரஸ்யமானது.

திருநெல்வேலி போன்ற பனைமரங்கள் அதிகம் இருந்த பகுதிகளில், ஒரு ஆண் பெண்ணை திருமணம் செய்துகொண்டான் என்றால்... பனையோலை ஒன்றை சிறிய அளவில் நறுக்கி அதில் `இந்தப் பெண் இந்த ஆணுக்கு உரியவள்’ என எழுதி ஒரு நூலில் கோர்த்து கழுத்தில் கட்டி விடுவார்கள்.

பனைமரத்துக்கு `தால்’ என்றும் பெயர் உண்டு. பனையோலையில் எழுதிக் கட்டுவதால் அந்த சிறு ஓலைக்கு தாலி என்று பெயர் வந்தது. பிறகு இந்தத் தாலியில் பெயருக்கேற்றவாறு பனையோலை இல்லாமல்... பவுன் கட்டித் தொங்கவிட்டதெல்லாம் மாற்றத்தின் அடையாளங்கள்.

``இவ்வளவு கஷ்டப்பட்டு களவியல் செய்கிறீர்களே... இவ்வளவு மகிழ்ச்சியுடன் காதல் மணம் புரிகிறீர்களே? இவற்றையெல்லாம் முறைப்படி சடங்குகள் செய்து விழாக்களாக கொண்டாடினால்தானே மகிழ்ச்சி என்றும் கூடும்?’’

கல்யாண கலாச்சாரத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்தனர் பிராமணர்கள்.

ஒன்றா, இரண்டா? எக்கச்சக்க சடங்குகள். என்னென்ன.... ஒவ்வொன்றாய் சொல்கிறேன்.

1. திருமணத்துக்கு முன்பே இந்த பெண்ணுக்கு இவன்தான் கணவன் என்பதை நிர்ணயிக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில் பெண் தரப்பில் பொருள்களை மாப்பிள்ளை வீட்டாருக்குக் கொடுக்கவேண்டும். இதற்கு பெயர் நிச்சயதாம்பூலம்.

2. கல்யாணச் சடங்குகள் ஆரம்பிக்கின்றன.

முதலில் காசி யாத்திரை.

சந்நியாசம் வாங்கவேண்டுமென்றால்... மகனே கல்யாணத்துக்கு முன்னரே நீ சந்நியாசம் வாங்கிவிட வேண்டும். அதைவிட்டு கல்யாணத்துக்குப் பிறகு துறவறம் போகிறேன் என சொல்லி பெண்ணின் வாழ்வை படுத்தாதே.. என சூத்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

அதனால் கல்யாணத்துக்கு முன் `காசியாத்திரை’ என்றொரு சடங்கு.

அதாவது மாப்பிள்ளை குடைக்கம்பை பிடித்துக்கொண்டு காசிக்கு புறப்படுவதுபோல `பாவ்லா’ (Drama) செய்யவேண்டும். மாப்பிள்ளையை சமாதானப்படுத்தி மறுபடி திருமணத்துக்கு அழைத்துப் போவார்கள்.

3. ஊஞ்சலாட்டுதல்

குழந்தாய்... நீ பெண்ணோடு சந்தோஷமாக இருக்கும்போது அவருடன் ஊஞ்சல் பலகையில் அமர்ந்து ஆனந்தமாய் ஆடுவாயாக என்பது வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது கல்யாணம் என்றால் மஹஸ். அதாவது (Festival) கொண்டாட்டம் இதற்காகத்தான் ஊஞ்சல்.

4. மாலை மாற்றுவது:

இது க்ஷத்திரியர்களின் கலாச்சாரம். மணமகனும், மணமகளும் சுக துக்கங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளவேண்டும் என்பதன் அடையாளமாகத்தான் மாலை மாற்றிக் கொள்வார்கள்.

5. திருஷ்டி சுத்தி போடுவது. மணமக்களுக்கு யார் கண்ணும் பட்டுவிடக் கூடாது என்பதற்காக உறவினர்கள் எல்லாம் மணமக்களுக்கு திருஷ்டி கழிப்பார்கள்.

6. நீராஜனம் எனப்படும் ஆரத்தி எடுப்பது.

7. இது முக்கியமானது. பெண்ணும், பையனும் இப்போதுதான் நேருக்கு நேராக பார்த்துக் கொள்ளவேண்டும். மந்த்ரங்கள் ஒலிக்க... பெண்ணை உட்கார வைத்து அவள் தலையில் தண்ணீரை மெல்ல மெல்ல ஊற்றி குளிப்பாட்ட வேண்டும்.

8. பிறகு... முழுக்க நனைந்த அவளை... உள்ளே அழைத்துச் சென்று மணமகனே அவளுக்கு புடைவை உடுத்திவிட வேண்டும்.

அவளது நனைந்த புடைவையை களைந்துவிட்டு... புதுப் புடைவையை மணமகன் உடுத்திவிடும்போது... இந்த சேலை வளர்வதுபோல் நம்முடைய மகிழ்ச்சி. சந்ததியெல்லாம் வளரவேண்டும் என்பதற்காகத்தான் இப்புடைவைச் சடங்கு.

இன்னும் இருக்கும் கல்யாணச் சடங்குகளையும்... அவை மறுபடியும் எப்படி மாறின என்பதையும் அடுத்து பார்ப்போம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.