Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

கடவுளுக்கு ....கேட்குமா ?...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளுக்கு ....கேட்குமா ?....

என் குஞ்சுகளும் நானும் பசியால் துஞ்சுகின்றோம்

பாவி படுபாதகன் ,குண்டு மழையாக பொழிகின்றான்

இரவினில் ,காடுகளில் ,பாம்பு பூச்சிகள் நடு , நடுவே

உறக்கமோ , கோழியுரக்கம் ,குடிநீருக்கும் தொலை தூரம்

என்னவனை கொன்றது உன் கொடிய செல்வீச்சு

ஊர்விட்டு ,ஊர் மாறி , நடந்த காலும் சோர்ந்து போச்சு

அக்கினி பிழம்பாக ,கொட்டும் வான வேடிக்கை கண்டு

குஞ்சுகள் கலங்கி அழ ,என் நெஞ்சம் படும் பாடு

உண்ணவும் முடியவில்லை ,உறங்கவும் முடியவில்லை

இன்னும் தான் விடிவுமில்லை ,கொஞ்சமும் இரக்கமில்லை

ஏனிந்த வேதனையோ ? எவ்வளவு காலத்துக்கோ

இந்த நெஞ்சு கூடு வேகமுன் ,கொஞ்சமேனும் இரக்கம் உண்டா

தாய் இழந்தேன் தந்தை இழந்தேன் ஊர் இழந்தேன் உற்றார்

உறவு ,கட்டிய கணவனும் ,கண் மூடி ச்சென்று விட்டான் ,என்

உயிரும் உத்தரவாதமில்லை எனக்கு ஒன்று என்றால் என் குஞ்சுகள்

கதி என்ன ? ஊரிலே சாதம் தின்றோம் ,காட்டிலே தண்ணீரில் மிதக்கும்

சோற்று பருக்கைக்கும் வழியில்லை ,என் செய்வேன் தெய்வமே ,

கருணை மழை பொழியவேண்டும் அன்றேல் , என்னை குஞ்சுகளுடன்

பரகதி சேர்த்துவிடு , மன்றாட்டமாய் கேட்கிறேன்

,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதிக்கு

தாய் நாட்டில் எமது மக்கள் படும் கஷ்டங்களை ஒரு தாயின் கதறலாகச் சொல்லியிருக்கிறீர்கள். எமது நாட்டின் மக்களுக்காய் தொடரட்டும் உங்கள் பணி.

இளங்கவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்கா...

அருமையான கவிதை. கவிதையை வடிக்கத் தான் முடியுமே, இது

கடவுளுக்கு கேட்கப் போவது இல்லை. கடவுளும் இருந்தால் தானே...

இருந்தால் நம் பிஞ்சுகளை இப்படி பிசிக்கும், இருப்பிடத்துக்கும,;

உயிருக்கும் அல்லல் படுவார்களா..????!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளங்கவி , சரணியா , நுனாவிலன் ,யாவருக்கும் ,என் கவி பார்த்து கருத்து பகிர்வுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம் மக்கள் படும் வேதனையை கடவுளுக்கு கேட்குமா என அழகாக படிக்கும் நெஞ்சங்களை தொடும் வண்ணம் வடித்திருக்கும் நிலாமதிக்கு பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

ம்ம்..நிலா(மதி) அக்கா..கா "கடவுளிற்கு கேட்குமா"..எண்டு கவி வடித்து மன ஆதங்கத்தை குறைத்துள்ளீர்கள் போல் தெரிகிறது முதற்கண் தங்களின் கவிக்கு வாழ்த்துகள்..ள்.. :D

ஆனால்..!!

கடவுளுக்கு நாங்க எல்லாரும் பாட்டு பாடுறோம் அல்லோ அது தான் தேவாரம் மற்றது பஜனை எல்லாம் அதை எல்லாம் கடவுள் "ஜபோர்ட்டில" கேட்டு கொண்டிருக்கிறபடியாலாம் இந்த அவலங்கள் எல்லாம் கேட்குதில்லையாம் பாருங்கோ அக்கா.!!. :D

இன்னொரு தேங்காய் உடைக்கனும் போல இங்க உடைத்திட்டா போச்சு..சு.. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காயத்திரி , ஜம்மு ,நன்றி ,..... யாழ்கள உறவுகளுக்கு கேட்டு இருக்கு . அது போதும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.