Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ஆழத்தில் ஆறாத ரணம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆழத்தில் ஆறாத ரணம்.

அந்த வானுயர்ந்த மாடிக்கட்டத்தில் வசிக்கும் ராஜி ,ஆறு மணி அலாரச்சதம் கேட்டு எழுந்து தேநீருக்காக கேத்தலை தட்டிவிடு , கணவன் ராகுலனை வேலைக்கு அனுப்பும் ஆயத்தங்களை தொடங்கினான். அவனும் பாத்ரூமில் முகம் கழுவும் சத்தம் கேட்டது .தேநீரை பருகியவாறே அவனும் ஆயத்தமானான் .இவள் காலை உணவுக்காக இரண்டு சான்விச் ,மதியம் ஒரு பிடி சாதம் மரக்கறியுடன்,ஏதும் பழவகை,போத்தலில் தணீர் என்று அவனை அனுப்பி வைத்தாள். பின் தான் தேனிரை முடித்தவாறு கண்மணிகளை எழுப்பி ,பாடசாலைக்கு தயார்படுத்தி நடந்து சென்று பாடசாலை வாயிலில் விட்டு வந்து வீட்டை ஒழுங்கு படுத்தியவாறே வானொலியை தட்டி விட்டாள். . அதில் ....

"நித்தம் நித்தம் மாறு கின்ற எத்தனயோ ?நெஞ்சில் நினைத்த திலே நடந்தது தான் எத்தனையோ ? ....

..

பாடல் அவளை தாயக நினைவுகளிற்கு அழைத்து சென்றது . அந்த சிறிய கிராமத்திலே கெலிகளும் கிபீரும் ஆரவாரம் செய்ய அரக்கர்கள் தேடி அழித்து கொண்டு இருந்த காலம் .ராஜியும் தன் இரு குழந்தைகளுடன் மாமா மாமி மைத்துனி ஆகியோருடன் அவசரமாக எடுத்த பால்மா பிஸ்கற் முக்கிய ஒரு சில பொருட்களுடன் அயல் கிராமத்தில் இடம் பெயர்ந்தாள். மேலும் மேலும் நெருக்கடி வரவே மேலும் இடம் பெயர்ந்து ,ஒரு வள்ளத்தில் பயணம் செய்து , ஒரு கிறீஸ்தவ தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தாள் அங்கும் சில மாதங்கள் கழிந்ததும் ,ஒருவாறு படையினரின் கட்டு பாடு பகுதிக்கு வந்து , ஒரு லாரியில் அடைபட்டு , வவனியா வந்து சேர்ந்தாள் . இத்தனைக்கும் ராகுலன் அந்நிய தேசத்தில் ,ஏங்கியபடி ,காத்திருந்தான். அவளும் குழந்தைகளும் பட்ட துயரம் சொல்ல முடியாது . வங்கியில் பணமும் எடுக்க முடியாமல் பட்ட துயரம் கொஞ்சமல்ல . ஒரு வாறு தலை நகரில் ஒரு தூரத்து உறவினருக்கு காசு அனுப்பி அவர்களை எடுப்பித்தான். இடமும் புதிது ,பாசையும் புதிது நுளம்புக்கடி என்பவற்றுடன் போராடி வாழ்ந்து கொண்டு இருக்கும் காலத்தில் .......(தொடரும் விரைவில் ) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடு மாறி, ராஜிக்கு தட்டிவிடுற வேலை கூடிப்போச்சுது போலை.. தொடருங்கள்! வாழ்த்துக்கள்!! :D

Link to comment
Share on other sites

ஆழத்தில் ஆறாத ரணம் வாசித்தேன்..ஆழத்திற்குள் கதை வரும் போது தொடரும் எண்டு போட்டுவிட்டியள்..நிலா(மதி) அக்கா..மிகுதி ஆழத்தையும் வாசிக்கும் ஆவலில்..ல்..!! :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

மிகுந்த ஆவலுடன் மீதிக்கதையை எதிர்பார்க்கிறேன்... :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார்ரா நீங்கள் எல்லாம்… அங்கை இருந்து குண்டு மழைக்க பொடியள் போராட நீங்கள் கம்பியூட்டரில கரிகாலன் ரேஞ்சில கட்டுரை எழுதி இருக்குறியள்…காசும் அடிச்சிருக்கிறியள்..😡  பாவம் களத்தில நிண்ட கஸ்ரப்பட்ட குடும்பத்து புள்ளையள் இது ஒண்டும் தெரியாமலே செத்துப்போயிட்டுதுவள்… நீங்கள் கனடா லண்டன் பிரான்ஸ் நாட்டு குடிஉரிமையோட புள்ளைகுட்டியலையும் செட்டில் ஆக்கிப்போட்டு காசும் களவெடுத்து அவங்கள வச்சு கட்டுரையும் எழுதி சென்ரீல நிண்டு செத்தவனுக்கே தெரியாத புலிகள் இயக்கம் ஒண்டை வெளிநாட்டில நடத்தி இருக்குறியள்..
    • எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் சசியண்ண..✍️ஏற்கனவே ஆங்கிலத்தில் போட்டு இருந்தன் அதைக் காணம்..ஆப்பிட்ட எல்லாத்தையும் வெட்டுற மட்டுறுத்தினர் யாரு........🤔
    • மிக்க நன்றிகள் பஞ் அண்ணா. 🙏
    • குமரன் பத்மனாதன் எனப்படும் கே பி இன் கைது நாடகம் பற்றி அந்த நாடகம் நடந்த சில மாதங்களின் பின்னர் மெலேசியாவிலிருந்து லங்கா கார்டியன் பத்திரிக்கைக்கு அங்கிருந்து முகம்மத் எனும் செய்தியாளர் எழுதிய கட்டுரை காலம் : ஆவணி, 2021 துரோகங்களுக்கிடையிலான போட்டி   புலிகளின் சர்வதேச ஆயுத கொள்வனவுகளுக்குப் பொறுப்பாகவிருந்த கே பி எனப்படும் குமரன் பத்மனாதன் இலங்கை அரசாங்கத்தினதும், அதன் ராணுவ உயர் மட்டங்களினதும் செல்லப்பிள்ளையாக வலம் வரத் தொடங்கியிருப்பதுடன் இலங்கை அரசாங்கத்தினால் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் மிக உல்லாசமான வாழ்க்கையினையும் அனுபவித்து வருவது தெளிவாகத் தெரிகிறது.   அவன் அண்மையில் வெளியிட்டிருக்கும் சில கருத்துக்களால, இலங்கை அரசுக்கு எதிரான தமிழர்களும், தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் கடுமையான சீற்றம் அடைந்திருப்பதும் தெரிகிறது. தனக்கும் இலங்கையரசுக்கும் இடையில் இருக்கும் அந்நியோன்னியத்தை வெளிப்படையாகக் காட்டிவருவதன் மூலம் கே பீ தமிழர்களில் பல எதிரிகளைச் சம்பாதித்து வருகிறார் என்பது தெளிவு. அவர் அண்மைக்காலங்களில் வழங்கிவரும் பல செவ்விகளில் தான் மலேசியாவில் கைதுசெய்யப்பட்டுதபற்றி மேலெழுந்தவாரியாகச் சொல்லிவரும் அதேவேளை, தான் கொழும்பிற்கு இலங்கை ராணுவ புலநாய்வுத்துறையினரின் ரகசிய ராணுவ நடவடிக்கை ஒன்றின் மூலம் அழைத்துவரப்பட்டதுபற்றி வாய்திறக்கத் தொடர்ச்சியாக மறுத்தே வருகிறார்.  இந்தியாவின் சர்வதேச புலநாய்வுத்துறை அதிகாரிகளின் கருத்துப்படி கே பீ யின் கைது என்பது கே பீ இற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே மிகவும் ரகசியமான முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட நாடகம் ஒன்றின்மூலமே அரங்கேற்றப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.  புலிகளின் தலைமையினால் சிறிதுகாலம் சர்வதேச ஆயுதக் கொள்வனவுக்கான பொறுப்பிலிருந்து இறக்கப்பட்டு பின்னர் மீளவும் இறுதி யுத்த காலத்தில் புலிகளின் தலைமையினால் முகவராக அழைக்கப்பட்ட கே பீ, அப்போதிருந்தே இலங்கை ராணுவத்தின் உளவாளியாகவும், புலிகளின் ஆயுதக் கொள்வனவாளராகவும் இயங்கி வந்திருக்கிறார் என்று அவர்கள் மேலும்  கூறுகிறார்கள்.    2001 இல் செய்துகொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தக் காலத்தில் புலிகளின் சர்வதேச ஆயுதமுகவராகவும், சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பானவராகவும் இருந்த தன்னை புலிகளின் தலைமைப்பீடம் ஒழுக்காற்று நடவடிக்கை ஒன்றிற்காக பதவியிறக்கம் செய்தமையினால் அவர் கடும் சீற்றம்  கொண்டிருந்ததாகத் தெரிகிறது. புலிகளைப் பழிவாங்க ஏதாவது செய்தாகவேண்டும் என்கிற கோபத்தில் இருந்த கே பீ இற்கு எவரை அணுகுவது என்பது அப்போது பெரும் பிரச்சினையாகவே மாறியிருந்தது. 2001 இன் பின்னர் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கும் ஆயுதக் கொள்வனவுக்கும் பொறுப்பாக காஸ்ட்ரோ எனப்படும் வீரகுலசிங்கம் மணிவண்ணன் பிரபாகரனால் நியமிக்கப்பட்டதால் கடும் சினமுற்றிருந்த கே பீ தனது நெருங்கிய சகாக்களிடம் தனக்கு இயக்கம் மீதான நம்பிக்கை முற்றாக போய்விட்டதென்றும், தலைவர் சரியான காரணங்களைத் தனக்குக் கூறாமல் தன்னை பதவியிலிருந்து அகற்றியதை தன்னால் ஏற்றுக்கொள்ளமுடியாதென்றும், பிரபாகரன் தன்னை அவமானப்படுத்திவிட்டார் என்று கறுவியிருக்கிறார்.   புலிகள் மீதான கோபமும், வெறுப்பும் கே பீயை இலங்கையின் ராணுவப் புலநாய்வுத்துறையின் தளபதி மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரனவோடு தொடர்புகளை ஏற்படுத்துமளவிற்குச் சென்றிருக்கிறது. இதன் அடிப்படையில் கபில ஹெந்தவிதாரணவும் கே பீ யும் பலதடவைகள் பங்கொக்கில் சந்தித்துப் பேசியிருப்பதாக இந்திய உளவுத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இதே காலப்பகுதியில் புலிகளின் முன்னாள்த் தளபதியாகவிருந்து பின்னர் ராணுவத்துடன் சேர்ந்து இயங்கியவரும், ஆரம்பகாலப் பேச்சுவார்த்தைகளில் புலிகளின் சார்பாக பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்றிருந்தவருமான  கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுடனும் கே பி ரகசியப் பேச்சுக்களில் ஈடுபடத் தொடங்கியிருந்ததாகவும் பாங்கொக்கின் காட்டுப்பகுதியொன்றில் இந்தப் பேச்சுக்கள் நடைபெற்றதாகவும், அப்போதிருந்தே புலிகளுக்கெதிரான தனது செயற்பாடுகள் குறித்து கே பீ கருணாவுடன் பேசிவந்ததாகவும் அவ்வதிகாரிகள் கூறுகின்றனர். ராணுவப் புலநாய்வுத்துறையின் அதிகாரியொருவரான "சாம்" என்று புனைபெயருடன் அழைக்கப்பட்ட ஒரு முஸ்லீம் அதிகாரியும், அவரது சகாவுமே கே பீ இற்கும் கபில ஹெந்தவிதாரனவிற்குமிடையையிலான தொடர்பினை தாய்லாந்தில் வெற்றிகரமாகக் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. காஸ்ட்ட்ரோ தலைமையில் புலிகளின் சர்வதேச வலையமைப்பு ஆயுதக் கொள்வனவில் இறங்கி அடைந்த பல தோல்விகள், செயற்பாட்டாளர்களின்  கைதுகளுக்குப் பின்னர் கே பி யை பிரபாகரன் மீண்டும் தனது சர்வதேச ஆயுத முகவராகவும், சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பானவருமாக  பதவியில் அமர்த்திய காலத்தில் கே பி இலங்கை ராணுவப் புலநாய்வுத்துறையினருடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி விட்டிருந்தார் என்றும், அரச , ராணுவ தலைமைப்பீடங்களுக்கு கே பி மிகவும் நெருக்கமாகச் செயற்பட்டு வந்தாரென்றும் இந்திய புலநாய்வுத்துறை கூறுகிறது. தனது பழிவாங்கலுக்கான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த கே பீ இற்கு பிரபாகரன் மீண்டும் தன்னை பதவியில் அமர்த்தியது பழம் நழுவிப் பாலில் விழுந்த கதையாகிப் போனது. பிரபாகரன் கேட்டுக்கொண்டபடியே புலிகளுக்கான சில ஆயுதங்களை கொள்வனவு செய்து கப்பல்களில் ஏற்றியனுப்பிய கே பீ, தவறாமல் ராணுவப் புலநாய்வுத்துறைக்கும் இக்கப்பல்களின் அமைவிடம், பாதைகள் தொடர்பான தகவல்களை வழங்கிவரத் தொடங்கினார். கே பீ யிடம் இருந்து தமக்குக் கிடைத்த வரப்பிரசாதமான புலிகளின் கப்பல்கள் தொடர்பான துல்லியமான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கை விமானப்படையும் கடற்படையும் புலிகளின் ஆயுதக் கப்பல்களை நடுக்கடலில் தாக்கியழித்துக்கொண்டிருந்தன. இறுதியுத்த காலத்தில் கடுமையான ஆயுதத் தட்டுப்பாட்டினை எதிர்கொண்டிருந்த புலிகளுக்கு கே பி யின் மூலம் கொள்வனவு செய்யப்பட்டு தாயகத்திற்கு கொண்டுவரப்படும் என்று அவர்கள்  நம்பிக்கையுடன் காத்திருந்த பல ஆயுதக் கப்பல்கள் அதே கே பி யினால் அரசிற்குக் காட்டிக்கொடுக்கப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக கடலில் தாக்கியழிக்கப்பட்டமை கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கும்.  கே பியின் ஊடாக தமக்குக் கிடைத்த விலைமதிப்பற்ற புலிகளின் ஆயுதக் கப்பல்கள் தொடர்பான தகவல்களையடுத்து மிகுந்த உற்சாகத்துடன் செயல்ப்பட்ட கபில ஹெந்தவிதாரனவும் அவரது இலங்கை பாதுகாப்புத்துறையும் தமது திட்டத்தின்படி புலிகளுக்கான ஆயுத வழங்கல்கள் முற்றாக வரண்டுபோவதுகண்டு மகிழ்வுடன் காணப்பட்டதாக இந்திய உளவுத்துறை மேலும் கூறுகிறது. புலிகளுக்கான ஆயுத வழங்கல்களைத் தடுத்து நிறுத்தி, இறுதிப்போரில் முற்றாக  அவர்களை அழிப்பதற்கான கே பியின் உதவிக்குப் பிரதியுபகாரமாக இலங்கைக்கு அவர் மீளவும் வந்து அரசியலில் பங்களிப்புச் செலுத்தும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாக அரசாங்கம் அவருக்கு உறுதியளித்திருந்தது.  கே பியினை இலங்கைக்கு கொன்டுவரும் தமது திட்டத்தினை செயற்படுத்தவே மலேசியாவில் இடம்பெற்ற கடத்தல் நாடகம் கே பி யினாலும், இலங்கை அரசாலும் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கே பி யின் கைதில் மலேசிய அரசாங்கம் தலையீடு செய்யவில்லை என்றும் தெரியவருகிறது. மலேசியாவில் கூலிக்கு வேலைசெய்யும் சில ஆயுததாரிகளின் உதவியுடன் கே பி கைதுசெய்யப்பட்டதாக நடத்தப்பட்ட நாடகத்தில் , மலேசிய அரசும் இலங்கை அரசும் சேர்ந்தே இந்தக் கைதில் ஈடுபட்டதாக செய்தி கசியவிடப்பட்டதன் மூலம் மலேசிய அரசும் தமிழருக்கெதிரான தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதாக உள்ளூரில் காட்டிக்கொள்ள ஒரு சந்தர்ப்பமும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. ஏற்கனவே கே பி இற்கும், கபில ஹெந்தவிதாரனவிற்கும் இடையில் செய்துகொள்லப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் இக்கைது நாடகத்தில் கே பி எதிர்ப்பின்றி கைதாவது போன்று பாசாங்கு செய்ய, இலங்கை அரசு இக்கைதினை தனது புலநாய்வுத்துறையின் வெற்றியாகப் பறைசாற்றிக்கொண்டது. தனிப்பட்ட விமானத்தில் கொழும்பிற்குக் கொண்டுவரப்பட்ட கே பி, ஊடகங்களின் பார்வையிலிருந்து விலக்கப்பட்டு, மிகவும் பாதுகாப்பாக அரசாங்கத்தின் ரகசிய இடமொன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். புலிகளை வீழ்த்தி முற்றாக அழிப்பதற்கு கருணா இலங்கையரசிற்குச் செய்த பங்களிப்பைக் காட்டிலும் கே பி செய்த துரோகம் அதிகமானது என்று நம்பப்படுகிறது. கே பி இற்கு வழங்கப்பட்டிருக்கும் ஆடம்பரச் சலுகைகளும், வசதிகளும் புலிகளை வீழ்த்த முன்னின்று போராடிய ராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவிற்குக்கூட எக்கட்டத்திலும் வழங்கப்பட்டிருக்கவில்லையென்பதும், இன்று அரசுக்கெதிராகச் செயற்பட்டார் என்கிற காரணத்திற்காக சிறையில் அவர் அடைக்கப்பட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது.  இலங்கை அதிகாரிகளின் கூற்றுப்படி புலிகளின் ஆயுதக் கப்பல்கள் தொடர்பாக மிகவும் சரியான தருணத்தில் தமக்கு வழங்கப்பட்ட துல்லியமான தகவல்களே அக்கப்பல்களை அழித்து, புலிகளின் ஆயுத வழங்கல்களைத் தடுத்து, அவர்களின் முதுகெலும்பினை உடைக்க உதவின என்று உறுதியாக நம்புகிறார்கள். இதற்குப் பிரதியுபகாரமாகவே கே பி கேட்கும் அனைத்து சலுகைகளையும் அரசு அவருக்குச் செய்துகொடுத்து வருவதாகவும், அரசியலில் அவர் செயற்படுவதற்கான வெளியினை அரசே ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்திருப்பதாகவும் தெரிகிறது.  இலங்கையின் நல்லிணக்க இணக்கப்பட்டு கவுன்சிலின் அமர்வுகளுக்கு கே பீ யும், சரத் பொன்சேக்காவும் நிச்சயம் சாட்சிகளாக இருக்கக் கூடியவர்கள்,  ஆனால், அவர்கள் இருவரையும் ஏதோ ஒருவகையில் இந்த அமர்வுகளிலிருந்து அகற்றிவருகிறது இலங்கையரசு. ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபடாத புலிகளின் அரசியல்த்துறைத் தலைவர்களான பாலகுமார், யோகி ஆகியோர் ராணுவத்தினரிடம் சரணடைந்த வேளையில் கடுமையான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில், புலிகளின் போராட்டக் காலத்திலிருந்து இறுதிவரை அவர்களின் சர்வதேச ஆயுத முகவராகச் செயற்பட்டு வந்த கே பீற்கு அரசின் செல்லபிள்ளை எனும் அந்தஸ்த்துக் கொடுக்கப்பட்டு வருவதுபற்றி பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.   அரசுக்குச் சார்பான நடவடிக்கைகளில் இறங்கியுள்ள கே பி, தற்பொழுது புலம்பெயர் நாடுகளில் புலிகளின் செயற்பாட்டாளர்களாக இருந்து வரும் சிலரைத் தொடர்புகொண்டு, மீதமிருக்கும் புலிகளின் சர்வதேச வலையமைப்பினை முற்றாகச் சிதைக்கும் கைங்கரியத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார் என்றும் தெரிய வருகிறது. http://www.srilankaguardian.org/2010/08/kp-and-sl-government-must-tell-truth.html
    • சசி வர்ணம் அவர்களுக்கு!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.