Jump to content

கடவுளின் துகள் தேடி பரிசோதனை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

_44999320_-1.jpg

13 ஆண்டுகள் செலவு செய்து சுமார் 27 கிலோமீற்றர்கள் வட்டமான நிலக்கீழ் சுரக்கத்தில் அமைக்கப்பட்ட Large Hadron Collider (LHC) எனும் மொத்துகைக் குழாய் - குறுக்கு வெட்டு முகம்.

கடந்த பல வருடங்களாக திட்டமிடப்பட்டு தற்போது செயற்படுத்தப்படக் கூடிய நிலையை எட்டியுள்ள கடவுளின் துகளைத் தேடும் பரிசோதனைக்கான ஆயத்தப்பணிகள் அதன் இறுதிக்கட்டத்தை அடைந்திருந்த நிலையில் குறிப்பிட்ட பரிசோதனை 10-09-2008ம் திகதி காலை (ஐரோப்பிய நேரப்படி) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Cern என்ற அமைப்பின் ஆதரவில் ஐரோப்பாவில் அமைக்கப்பட்டுள்ள, சுமார் 5 பில்லியன் பிரித்தானிய பவுண்கள் செலவில் உருவான, சுவிஸ்- பிரான்ஸ் எல்லைகளை ஒட்டிச் செல்லும் நிலக்கீழ் பரிசோதனைக் கூடத்தில் நடைபெறவுள்ள, உலகின் மிகப் பெரிய பெளதீகவியல் பரிசோதனையாக அமையவுள்ள இப்பரிசோதனையின் போது நேர் ஏற்றம் கொண்ட புரோத்தன் துணிக்கைகளாலான இரண்டு கற்றைகள் எதிர் எதிர் திசைகளில் உச்ச வேகத்தில் சுமார் 27 கிலோமீற்றர்கள் உள்ள நிலக்கீழ் வட்டப்பாதையில் மோதவிடப்பட உள்ளன.

இந்த வட்டப் பாதை நெடுகினும் அமைக்கப்பட்டுள்ள சுமார் 1000 க்கும் அதிகமான வளைய வடிவ மின் காந்தங்கள் மேற்குறிப்பிட்ட புரோத்தன் கற்றைகளை வட்டப் பாதையில் இயக்கவுள்ளன.

இந்தப் பரிசோதனையின் போது ஒரு செக்கனுக்கு 11,000 தடவைகள் என்ற விகிதத்தில் புரோத்தன் கற்றைகள் மேற்குறிப்பிட்ட 27 கிலோமீற்றர்கள் வட்டப்பாதையில் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்துக்கு ஒத்த உச்ச வேகத்தில் எதிர் எதிர் முனைகளில் பயணித்து மோதவுள்ளன.

இந்த மொத்துகை விண்வெளியில் ஆழ்ந்த பகுதியில் இருக்கும் வெப்பநிலைக்கு (கிட்டத்தட்ட -271 பாகை செல்சியஸ்)நிகர்ந்த வெப்பநிலையில் நடத்தப்படுவதோடு.. இந்த மொத்துகையினால் தோன்றும் சூழல் என்பது பிரபஞ்சம் தோன்றக் காரணமான பெரு வெடிப்புக்கு (Big Bang) பின்னான உடனடிச் சூழலை ஒத்ததாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இந்தப் பரிசோதனையில் இருந்து திணிவு என்றால் என்ன.. அந்தத் திணிவை ஆக்கும் அடிப்படை அலகு என்ன என்பதை அறியக் கூடியதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

நாம் காணும் பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள்,வாயுக்கள், கோள்கள், அகிலத் தொகுதிகள் போன்ற கூறுகள் மொத்தப் பிரபஞ்சத்தில் வெறும் 4% ஆகும். பிரபஞ்சத்தில் 23% கரும்பொருளாகவும் 73% கருஞ்சக்தியாகவும் இருப்பதாக நவீன விண்ணியல் அவதானிப்புக்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் செப்டம்பர் திங்கள் புதன்கிழமை(10-09-2008)காலையில் இருந்து நடைபெற ஆரம்பித்துள்ள இப்பரிசோதனையானது விண்ணியல் சார்ந்து மட்டுமன்றி அடிப்படை பெளதீகம், இப்பிரபஞ்சத்தினை ஆக்கியுள்ள அடிப்படை கூறுகள், இயற்கை பற்றிய அற்புதங்கள் சிலவற்றுக்கு விடை பகரலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

source: http://kuruvikal.blogspot.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளின் துகள் தேடிப் பரிசோதனையின் முதலாவது புரோத்தன் கற்றை வெற்றிகரமாக 27 கிலோமீற்றர்கள் வட்டப்பாதையில் நேர்த்தியாக செலுத்தப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தப் பரிசோதனையில் இரண்டு புரோத்தன் கற்றைகள் எதிர் எதிர் திசைகளில் ஒளியின் வேகத்தில் இயங்க வைக்கப்பட்டு மோதவிடப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

http://news.bbc.co.uk/1/hi/sci/tech/7604293.stm

Link to comment
Share on other sites

'Higgs Boson'! கடவுளே!

செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 9, 2008

-ஏ.கே.கான்

01ss5.png

உலகின் மிக ரிஸ்கியான மாபெரும் அறிவியல் சோதனை ஒன்று நாளை துவங்கப் போகிறது. இந்த சோதனையை எதிர்த்து உலகெங்கும் நடுக்கக் குரல்கள்.. உலகம் அவ்வளவு தான்.. அம்பேல் என கதற ஆரம்பித்துள்ளனர் 'டூம்ஸ் டே' ஆசாமிகள்.

பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஜெனீவாவுக்கு கொஞ்சம் பக்கத்தில் இந்தச் சோதனை நடக்கப் போகிறது. ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) இந்த சோதனையை நடத்துகிறது.

ரொம்ப 'பில்ட்-அப்- கொடுக்கிறீர்களே.. அது என்ன சோதனை என்கிறீர்களா?. Big bang theory சொல்கிறபடி உலகம் எப்படி உருவானது என்பதை கொஞ்சம் பிராக்டிலாக சோதனை செய்து பார்க்கப் போகிறார்கள் விஞ்ஞானிகள்.

அதாவது புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் அதி பயங்கர வேகத்தில் மோதவிட்டு வேடிக்கை பார்க்கப் போகிறார்கள். இதற்காக கிட்டத்தட்ட 300 அடி ஆழத்தில் 27 கி.மீ. தூரத்துக்கு வட்டமான சுரங்கம் அமைத்து அதற்குள் சப் அடாமிக் பார்ட்டிகிள்ஸ் (புரோட்டான், நியூட்ரான்) மோதிக் கொள்ளும் Large Hadron Collider-LHC என்ற வட்ட வடிவ பைப்பை அதற்குள் அமைத்திருக்கிறார்கள். இதற்காக 5.8 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளன ஐரோப்பிய நாடுகள். கிட்டத்தட்ட 5,000 விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சி இது.

கனரக இரும்பினால் செய்யப்பட்டு ரீ-இன்போர்ஸ்ட் சிமெண்ட் மற்றும் ஏகப்பட்ட ரசாயன, அணு கதிர்வீச்சை தாக்குப்பிடிக்கும் பாதுகாப்பு பூச்சுக்கள் கொண்டது இந்த கொல்லாய்டர்.

இது அணுக்களை பிளக்க உதவும் வழக்கமான சைக்ளோட்ரான் மாதிரி தான். ஆனால், இதில் விஷேசம் என்னவென்றால் இதன் வேகம். இதுவரை உலகில் கட்டப்பட்ட சைக்ளோட்ரான்களை விட இது 7 மடங்கு அதிக சக்தி கொண்டது.

1,800 'சூப்பர் கண்டக்டிங்' காந்தங்கள் புரோட்டான்களை ஒளியின் வேகத்தில் இந்த 27 கி.மீ. வளையத்தில் சுற்றவிடவுள்ளன. LHC தன் முழு வேகத்தை அடைந்தவுடன் புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் வினாடிக்கு 600 மில்லியன் முறை நேருக்கு நேர் மோத விடப் போகிறார்கள்.

அப்போது புரோட்டான்களி்ல் 7 டிரில்லியன் எலெக்ட்ரான் வோல்ட்ஸ் அளவுக்கு 'சக்தி' உருவாகும். அப்போது ஏற்படும் 'சப் அடாமிக் லெவல்' மாற்றங்களை இந்த 27 கி.மீ. வட்டத்தில் பொறுத்தப்பட்டு்ள்ள ஆயிரக்கணக்கான சென்சார்கள் கிரகித்து அந்த விவரங்களை சூப்பர் கம்ப்யூட்டர்களில் பீட் செய்யவுள்ளன.

கிட்டத்தட்ட 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு மாபெரும் வெடிப்பில் இருந்து தான் (Big Bang) பூமி உள்பட Universe தோன்றியது என கருதப்படுகிறது. அப்போது இருந்த சூழலை இந்த 27 கி.மீ. வட்டத்தில் உருவாக்கிப் பார்க்கப் போகிறார்கள்.

இந்த வளையத்தில் புரோட்டான்கள் என்ன வேகத்தி்ல் சுற்றி வரப் போகின்றன என்பதை இப்படி ஈசியாக சொல்லாம்... ஒரு வினாடியில் இந்த 27 கி.மீ. தூரத்தை புரோட்டான் 11,245 முறை சுற்றி வரும்.

இந்த அளவுக்கு வேகம் பிடித்த புரோட்டான்களை அப்படியே நேருக்கு நேர் மோத விடப் போகிறார்கள். இப்போது புரிகிறதா.. உள்ளே என்ன நடக்கப் போகிறது என்பது.

புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் ஆகிய 'சப் அடாமிக்' கூறுகளைக் கொண்டது தான் ஒரு அணு. குவார்க், பெர்மியான், குளுயான்ஸ் ஆகியவற்றால் ஆனது தான் ஒரு புரோட்டான்.

ஆக, LHCல் வைத்து அதிவேகத்தில் புரோட்டான்களை 'கொத்து புரோட்டோ' போடும்போது குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், மின் காந்த கதிர்வீச்சு, வெப்பம் என புரோட்டான்கள் சிதறும்.

மேலும் Higgs Boson என்று ஒரு சமாச்சாரம். இப்படி ஒரு சப்-அடாமிக் பார்ட்டிகிள் இருப்பதாக தியரியில் சொல்கிறார்கள். ஆனால், அதை யாரும் நிரூபித்ததில்லை. இதனால் இதை விஞ்ஞானிகள் 'கடவுளின் அணுத் துகள்' (God's particle) என்கிறார்கள். அப்படி ஒன்று இருந்தால் இந்தச் சோதனை வெளியில் கொண்டு வரலாம் என்கிறார்கள்.

ஆனால், இது மிக ஆபாயகரமான ஆராய்ச்சி என உலகம் முழுவதும் கடும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. உலகத்தின் கதையே முடியப் போகிறது என்று கூட சிலர் கிளப்பிவிட்டு்ள்ளனர்.

இவ்வளவு வேகத்தில் சப் அடாமிக் அணுத் துகள்களை மோதச் செய்யும்போது பிளாக் ஹோல் (Black Hole) கூட உருவாகிவிடலாம் என்கிறார்கள். Black Hole என்பது நம் அரசியல்வாதிகளின் வாய் மாதிரி. உள்ளே போனால் போனது தான் எதுவுமே வெளியே வராது.. ஒளி-ஒலி உள்பட. (பிளாக் ஹோல் நேரத்தையும் கூட விழுங்கிவிடும்.. இது அதீதமான டெக்னி்க்கல் சமாச்சாரம். மண்டையை ரொம்பவே குழப்பிக் கொள்ள வேண்டாம். மிகவும் ஆர்வம் இருந்தால் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்சின் 'The brief history of Time' வாங்கிப் படியுங்கள்)

நமது அண்டத்தில் (Universe) ஏராளமான மண்டலங்கள், அதாவது கேலக்ஸிகள் (Galaxies) உள்ளன. நமது சூரியன், பூமி, கோள்கள் உள்ளிட்ட சூரிய குடும்பம் இருக்கும் மண்டலத்தின் பெயர் Milky way Galaxy (பால்வெளி மண்டலம்).

பல பில்லியன் சூரிய குடும்பங்கள் சேர்ந்தது ஒரு கேலக்சி. பல பில்லியன் கேலக்சிகள் சேர்ந்தது தான் யுனிவர்ஸ். இந்த யுனிவர்ஸ் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே போகிறது என்பது தான் மிக இன்ட்ரஸ்டிங்கான விஷயம்.

ஒரு சிறிய நிலக்கடலை சைசில் இருந்த யுனிவர்ஸ், Big bangல் வெடித்துச் சிதறி விரிவடைய ஆரம்பித்தது.. விரிவடையும்போது அதற்குள் உருவானவை தான் பூமி, கோள்கள், நிலாக்கள், எரிகற்கள், சூரியன்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய கேலக்சிகள்.

இன்னும் விரிந்து கொண்டே இருக்கும் அண்டத்தில் மேலும் மேலும் ஏராளமான கேலக்சிகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. கூடவே பிளாக் ஹோல்களும்.

இந்த பிளாக் ஹோல்கள் ஒளி-ஒலியை மட்டுமல்ல, சூரியன்களைக் கூட விழுங்கி ஏப்பம் விடும் சக்தி கொண்டவை.

இதனால் தான் இந்த அதிவேக சப் அடாமிக் பிளப்பு சோதனை ஆபத்தானது... இதனால் பிளாக் ஹோல் உருவாகப் போகிறது.. அப்படி உருவானால் அது பூமியையே விழுங்கலாம் என அச்சம் கிளப்பியிருக்கிறார்கள்.

ஆனால், அப்படியெல்லாம் ஏதும் நடந்துவிடாது என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியை நடத்தும் CERN மையத்தின் விஞ்ஞானிகள்.

அப்போ, என்ன தான் நடக்கப் போகிறது என்று கேட்டால் பதில் வருகிறது..

'தெரியாது'

Higgs Boson! கடவுளே!

(கட்டுரையாளர் தட்ஸ்தமிழ் ஆசிரியர்)

நன்றி தற்ஸ்தமிழ்

Link to comment
Share on other sites

புரோட்டான் 'மோதல்' சோதனை ஆரம்பம்!

புதன்கிழமை, செப்டம்பர் 10, 2008

02rl1.png

ஜெனீவா: உலகே மிக ஆர்வமாக எதிர்நோக்கியிருக்கும் புரோட்டான் மோதல் சோதனை இன்று தொடங்கியது.

27 கிலோ மீட்டர் சுரங்கப் பாதைக்குள் அமைக்கப்பட்டுள்ள டனலில் முதல் புரோட்டான் கதிர்வீச்சு இன்று சோதனைரீதியில் பாய்ச்சப்பட்டது.

ஜெனீவாவுக்கு அருகே உள்ள CERN அணு ஆராய்ச்சி மையத்தில் இந்த சோதனை தொடங்கியது.

இந்த சோதனையால் உலகமே அழியப் போகிறது என்று கூக்குரல்கள் ஒரு பக்கம் எதிரொலிக்க இந்த முயற்சி வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.

இந்த சோதனையால் எந்த ஆபத்தும் வராது என்று நம் காலத்திய மாபெரும் இயற்பியல் விஞ்ஞானியாகக் கருதப்படும் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் கூறியுள்ளார்.

இந்த புரோட்டான் கதிர்வீச்சு கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் போனால், அதிகபட்சமாக அது 27 கிலோ மீட்டர் வட்டப் பாதையில் அமைந்துள்ள Large Hadron Collider ஆய்வுக் கருவியைத் தான் சிதறடிக்கும். மற்றபடி பிளாக் ஹோல் எல்லாம் ஏற்பட்டுவிடாது என்று கூறியிருக்கிறார்.

அதே நேரத்தி்ல் இந்த சோதனை மூலம் 'Higgs Boson' என்ற சப்-அடாமிக் பார்ட்டிக்கிளை கண்டுபிடித்துவிட முடியும் என CERN விஞ்ஞானிகளின் முயற்சி எந்த அளவுக்கு பலனளிக்கும் என்று தெரியவில்லை. ஆனால், மானுடத்தின் அடுத்தகட்ட வளர்சி்க்கு இந்த சோதனை மிக மிக அவசியம்.

எல்லோரையும் போலவே நானும் இந்த ஆய்வின் முடிவுகளை தெரிந்து கொள்ள ஆர்வமாய் காத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

இன்று இந்த சோதனைகள் தொடங்கினாலும் கூட புரோட்டான்கள் முழு வேகம் பிடித்து ஒன்றோடு ஒன்று மோதிச் சிதற பல மாதங்கள் ஆகும். ஒரு வருடம் கூட ஆகலாம் என்கிறார்கள்.

இன்றைய சோதனையில் புரோட்டான் கதிர்வீச்சு கடிகார சுற்றுக்கு எதிர்சுற்றில் பாய்ச்சப்பட்டது. இந்த கதிர்வீச்சு 27 கி.மீ. நீள Large Hadron Collider-ல் சரியாக பயணித்தால், அடுத்ததாக எதிர் திசையில் இருந்து இன்னொரு புரோட்டான் கதிர் பாய்ச்சப்படும்.

இன்று நடப்பது வார்ம்-அப் சோதனை தான். முழுமையான சோதனை 6 வாரத்தில் தொடங்கும்.

அப்போது எதிரெதிர் திசையில் தலா 2,808 புரோட்டான் கதிர்கள் எதிரெதிரே பாய்ச்சப்படும். அதாவது பல பில்லியன் புரோட்டான்கள் ஒன்றுடன் ஒன்று ஒளியின் வேகத்தில் மோதிச் சிதறும்.

அதன் பின்னர் தான் பிளாக் ஹோல் வருகிறதா அல்லது Big Bang தியரிப்படி உலகம் எப்படித் தோன்றியது என்பதற்கான விடையும் கடவுளின் அணுத் துகள்கள் என்று சொல்லப்படும் 'Higgs Boson' தெரிகிறதா என்பதும் தெரியும்.

96362012cg6.png43011709ae0.png19970753yv5.png65578889ih4.png64045493ax1.png

(கட்டுரையாளர் தட்ஸ்தமிழ் ஆசிரியர்)

நன்றி தற்ஸ்தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவல்களைப் பரிமாறிக் கொண்டதற்கு நன்றிகள் வசம்பு அண்ணன். :lol:

Link to comment
Share on other sites

http://news.bbc.co.uk/2/hi/south_asia/7609631.stm

Girl suicide 'over Big Bang fear'

The LHC aims to recreate conditions a few moments after the Big Bang

A girl in India has committed suicide after watching TV reports that a physics experiment could bring about the end of the world, her family says.

Sixteen-year-old Chaya poisoned herself at her home in the central city of Indore, her father, Bihari Lal, said.

He said Chaya had been worried the "world would end" when the Large Hadron Collider (LHC) was switched on.

Some Indian channels held discussions about the European experiment featuring doomsday predictions.

'Village would die'

The £5bn ($8.75bn) machine - which aims to recreate the conditions that existed at the beginning of the universe, the so-called Big Bang - was switched on early on Wednesday.

Set on the Swiss-French border, it is designed to smash protons together along a 27km-long tunnel with cataclysmic force and scientists hope it will shed light on fundamental questions in physics.

We tried to divert her attention and told her she should not worry about such things

Bihari Lal

Father

Bihari Lal said Chaya - the eldest of his six children - had been frightened after watching local TV reports that the experiment would cause the "Earth to crack up and everybody in the village would die".

"We tried to divert her attention and told her she should not worry about such things, but to no avail," he told reporters.

Her uncle, Biram Singh, said Chaya, whose parents are labourers, had seen the reports at a neighbour's house.

The BBC's Faisal Mohammed in Bhopal says Chaya consumed insecticide some time on Tuesday, when her parents had gone to work.

She was taken to Shajapur government hospital where she told police before she died that she had been worried by the doomsday predictions.

Virendra Singh Yadav, the policeman who took her statement, told the BBC she said she had watched programmes suggesting the Big Bang experiment might cause a great earthquake and great holes.

"She said she could not bear to see the destruction of all that was dear to her and therefore thought it was better to end her life," he said.

Police have registered a case of death by poisoning and are investigating.

'Irresponsible'

Our correspondent says in recent days Indian channels have held discussions airing doomsday predictions which have made some people jittery.

Many people rushed to temples in various parts of the country on Tuesday fearing the "world's end" after watching the media coverage, reports say.

In a report published earlier this year, the European Organisation for Nuclear Research said the collider presented "no conceivable danger".

Clinical psychologist Nadia Masand said some of the television coverage had been "irresponsible".

"These people are constantly airing series on black magic, blood-sucking vampires; even sensationalising a natural phenomenon such as an eclipse by saying that it means bad omen," she told the BBC.

"Now prophesising that the Big Bang would bring doomsday! Such programmes can have a disastrous effect on an emotionally weak person."

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரோட்டான் சோதனை: எந்த ஆபத்தும் இல்லை-கலாம்

டெல்லி: ஜெனீவா அருகே நடந்து வரும் புரோட்டான் சிதைப்பு சோதனைகளால் பூமிக்கு எந்த வகையிலும் ஆபத்தில்லை என முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.

டெல்லியில் ராணுவ மருத்துவமனையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த கலாமிடம், இந்த சோதனையால் பிளாக் ஹோல் உருவாகும் என்ற அச்சம் பரப்பப்படுகிறதே என்று கேட்டதற்கு,

இந்த சோதனை அடுத்தகட்ட மனித வளர்ச்சிக்கு மிக அத்தியாவசியமானது. இதனால் பூமிக்கோ மனிதர்களுக்கோ எந்த கெடுதலும் இல்லை.

Bஇக் Bஅங் மூலம் தான் யுனிவர்ஸ் தோன்றியதா, நமது யுனிவர்ஸ் ஏன் இந்த ரூபத்தில் உள்ளது என்பது குறித்த கேள்விகளுக்கு விடை தேடி நடத்தப்படும் சோதனை இது.

நான் சமீபத்தில் ஜெனீவா சென்றபோது இந்தச் சோதனை நடக்கும் Cஏற்ண் மையத்துக்கும் சென்றேன். அதன் ஆராய்ச்சிகள் குறித்து கேட்டறிந்தேன். அங்கு நடக்கும் ஆராய்ச்சி பாதுகாப்பானது, பயப்படத் தேவையில்லை.

பிங் பேங்கின்போது எவ்வளவு சக்தி உருவாகியிருக்கும் என்பதை தோராயமாகக் கணக்கிட இந்தச் சோதனை உதவும். நமது காஸ்மோஸ் குறித்த பல அடிப்படை கேள்விகளுக்கு விடை தேடித்தான் புரோட்டான்களை சிதறடித்து சோதித்துப் பார்க்கிறார்கள். இதன் முடிவுகள் மிக இன்ட்ரஸ்டிங்காக இருக்கப் போகின்றன.

இதன் மூலம் கிடைக்கும் முடிவுகள் நம் வாழ்க்கைத் தரத்தைத் தான் உயர்த்தப் போகின்றன என்றார்.

சோதனையில் இந்திய விஞ்ஞானிகள்:

இந்தச் சோதனையில் இந்தியாவைச் சேர்ந்த 20 விஞ்ஞானிகளும் நேரடியாக பங்கெடுத்துள்ளனர். மேலும் ளர்கெ Hஅர்ட்ரொன் Cஒல்லிடெர் (ள்HC) கருவிக்கான சில பாகங்களையும் இந்தியா வழங்கியுள்ளதோடு, அதில் அதி குளிரில் இயங்கும் மி்ன் காந்தங்களை வடிவமைக்கவும் உதவியுள்ளது.

ஜெனீவாவில் 20 இந்திய விஞ்ஞானிகளே நேரடியாக சோதனையில் பங்கெடுத்தாலும் இந்த ஆராய்ச்சிகான பல்வேறு நிலைகளில் டாடா இன்ட்டியூட் ஆப் பன்டமண்டல் ரிசர்ச்சைச் சேர்ந்த 100 பேர் உள்பட இந்திய விஞ்ஞானிகள் 200 பேர் ஈடுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பீதியில் இளம்பெண் தற்கொலை:

இதற்கிடையே உலகம் அழியப் போகிறது என்ற பீதியில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பிஹாரிலால் என்பவரின் மகள் சாயா (16) பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந் நிலையில் இந்த சோதனை குறித்து தேவையில்லாமல் பீதி கிளப்பும் வகையில் செய்தி வெளியிட்ட இந்தியா டிவி உள்ளிட்ட சில தொலைக்காட்சிகளுக்கு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நன்றி தற்ஸ் தமிழ்

Link to comment
Share on other sites

தகவலுக்கு நன்றி!!!

எது இளம் பெண் தற்கொலை செய்த தகவலா??? :lol::o

Link to comment
Share on other sites

இந்த பரிசோதனையைப் பற்றி விரிவாக யாரேனும் எழுதலாமே.

Link to comment
Share on other sites

இந்த பரிசோதனைக்கு புரோத்தோன்களை சுற்றில் விட சிறப்பாக தயாரிக்க பட்ட குழாயில் வேகமாக சுற்றும் புரோத்தோன்களாக ஏற்படும் வெப்பத்தை தணிக்க என உள்ளூட்டம் செய்யப்பட்ட குழாயில் ஒழுக்கு ஏற்பட்டு ஹிலியம் வாயும் கசிவதினால் இந்த பரிசோதனைக்காக இயக்க பட்ட மூல இயந்திரம் நிறுத்த ப்பட்டு பரி சோதனை ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது...

திருத்த வேலைகள் முடிய இரண்டு மாதங்களுக்கு மேல் செல்லலாம் என சொல்லப்படுகிறது....

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

_45214859_hadron466pa.jpg

இவ்வாண்டின் இறுதிக்காலாண்டின் முற்பகுதியில் இரண்டு புரத்தோன் கற்றைகளை தனித்தனியே எதிர் எதிர் திசைகளில் அதி உயர்வேகத்தில் வலம் மற்றும் இடஞ்சுழியாக சுழற்றி வெற்றி காணப்பட்டதாகச் சொல்லப்பட்ட பேரண்டப் பெருவெடிப்புக்கு சற்றுப் பின்னான சூழலை உருவாக்கும் அல்லது கடவுளித் துகள் தேடும் பரிசோதனையின் போது அங்கு கையாளப்பட்ட Large Hadron Collider (LHC)இல் கீலியம் வாயுக் கசிவினால் சுமார் 14 மில்லியன் பிரித்தானிய பவுண்கள் செலவு செய்ய வேண்டிய அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இச்சேதத்திற்கான காரணம்.. மற்றும் அதை எதிர்காலத்தில் தவிர்ப்பதற்கான வழிமுறைகளை தற்போது ஆய்வாளர்கள் ஆராய்ந்து வரும் நிலையில் இவ்வாறான கடும் சேதங்களைத் தவிர்க்கும் பொருட்டு விபத்துக்கள் தொடர்பில் முன்கூட்டி எச்சரிக்கை வழங்கும் சாதனங்கள் பரிசோதனை உபகரணங்களோடு பொருத்த வேண்டிய அவசியத்தை பரிந்துரைத்துள்ளனர்.

சுமார் 5 பில்லியன் பிரித்தானிய பவுண்கள் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த 27 கிலோமீற்றர்கள் வட்டப் பரிதியுடைய Large Hadron Collider பல நூறு மின்காந்தங்களையும் அவற்றைக் குளிர்விக்க என்று கீலியத்தையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏலவே இப்பரிசோதனையின் வாயிலாக பூமி அழிந்துவிடக் கூடும் என்று ஒரு சாரார் பிரச்சாரங்களை முன்னெடுத்து வரும் நிலையில் மேற்குறிப்பிட்ட விபத்தால் இங்கு மேற்கொள்ளப்பட இருந்த பரிசோதனைகளை 2009 நடுப்பகுதி வரை பிற்போடப்பட்டுள்ளன.

source: http://www.kuruvikal.blogspot.com/

Link to comment
Share on other sites

நானும் நாலைஞ்சு கிழமைகளுக்கு முன்னம் என்னடா ஏதோ பரிசோதனை அது இது எண்டு துள்ளிக்குதிச்சாங்கள் பிறகு சத்தத்தை காண இல்லை எண்டுபோட்டு கூகிழில தேடிப்பார்த்தன். சில கோளாறுகள் காரணமாக Summer2009 இலதான் திரும்பவும் எல்லாம் துவங்கும் எண்டு செய்தி இருந்திச்சிது. இப்பிடியான நிலையைபார்த்தால் உண்மையில ஏதாவது ஆபத்து வந்து இருந்தால் இவர்களால தாக்குப்பிடிச்சு இருக்கமுடியுமா எண்டுறது கேள்விக்குறி. கேவலம் இந்த சிறிய பிரச்சனையை வராமல் தவிர்க்க முடிய இல்லை. இப்படியான நிலையில பேராபத்துக்களை விளைவிக்கக்கூடிய பரிசோதனைகளை செய்யுறதுக்கு இவையளுக்கு எப்படி அனுமதி குடுக்க முடியும்? ஏதாவது எக்கச்சக்கமா தவறு நடந்தால் எல்லாரும் அரோகரா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் கடவுளின் சக்தியை எப்போது ஆய்வு செய்ய ஆரம்பிக்கின்றானோ அன்றிலிருந்து அவனது அழிவும் ஆரம்பமாகின்றது.

Link to comment
Share on other sites

மனிதன் கடவுளின் சக்தியை எப்போது ஆய்வு செய்ய ஆரம்பிக்கின்றானோ அன்றிலிருந்து அவனது அழிவும் ஆரம்பமாகின்றது.

கடவுள் இருப்பதாக கண்டுபிடித்த மனிதனால் ஏன் அவரது சக்தியை ஆய்வு செய்ய முடியாது??? ( இதற்கு பகுத்தறிவு ........ எவரும் பதில் சொல்ல வேண்டாம்.) :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சீமான் உட்பட எவருமே தங்கம் இல்லை. ஆகவே இவரும் மாற்று இல்லை. ஒரு கள்ளனை இன்னொரு கள்ளனால் பிரதியிடுவது அல்ல மாற்று. ஓம். ஏன் எண்டால் அவர் சின்ன கருணாநிதி என நான் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டதால். இப்ப GOAT ல பிசி🤣.  பிகு நான் விஜை ஆதரவாளனோ பிரச்சாரகரோ இல்லை. ஒரு போதும் ஆக போவதில்லை. ஆனால் நம்ம மருமகன். சினிமாவில் பிழைக்க முடியாமல் போனபின் கட்சி தொடங்காமல் - நினைத்து பார்க்க முடியாத பணம் கொட்டும் வியாபாரத்தை விட்டு விட்டு வருகிறார். திரிசாவோ, நயனோ நாசம் பண்ணி விட்டார் என பொதுவெளிக்கு வரவில்லை🤣. இன்னும் கள்ளன் என நினைக்கும்படி எதுவும் மாட்டவில்லை. ஆகவே இப்போதைக்கு இவருக்கு benefit of the doubt ஐ கொடுக்கலாம்.
    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.