Jump to content

தூய தமிழ் போட்டி


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தூய தமிழ் போட்டி

வணக்கம் கள உறவுகளே நான் புதிதாய் ஒரு போட்டியை தொடங்கலாம் என நினைக்கிறேன்

அதாவது நாம் அன்றாட வாழ்வில் பேச்சு வழக்கில் சில ஆங்கில வார்த்தைகளை பிராயோகித்து

பேசி வருகின்றோம் அந்த வார்த்தைகளுக்கு தமிழ் சொல்லை கண்டு பிடிக்க வேண்டும்

இது வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த சிலருக்கு உதவியாக இருக்குமென நினைக்கிறேன்

நன்றி

உதாரணம் நான் இங்கு

சைக்கிள்--........இதற்கு தமிழ் பெயர் என்ன என்று அடுத்து பதில் தருபவர் கூறவேண்டும் பின்பு உங்களுக்கு தெரிந்த அன்றாடம் பேசும் ஒரு சொல்லை சொல்ல வேண்டும் இதுதான் போட்டி ஆரப்பிப்போமா

சைக்கிள் ---------------------- :lol:

Link to comment
Share on other sites

 • Replies 312
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

கார் - சிற்றூர்தி

பென்சில் -

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பென்சில் - எழுதுகோல்

ஸ்ரெஸ்(stress) -

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரெஸ்(stress) - மன அழுத்தம்

பிளாஸ்ரிக் -

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பிளாஸ்ரிக் - நெகிழ்லி :lol:

பஸ்

இது சரியா என்று தெரிந்தவர்கள் கூறினால் உதவியாக இருக்கும்

################################################################################

###########################################################################

பஸ் - பயணிகள் பேரூந்து

பிளாஸ்ரர் -

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இது சரியா என்று தெரிந்தவர்கள் கூறினால் உதவியாக இருக்கும்

சரி. இந்த இணைய தளத்தின்படி: http://www.tamildict.com/display.php?actio...by=P|nr_page=18

பிளாஸ்ருக்கான தமிழ் சொல் இதில இல்லை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

மல்லிகை வாசம் உந்த தளத்தில் தான் நானும் விடையை எடுத்தேன். :lol:

பிளாஸ்ரர் - சாந்து என்று இங்கே இருக்கிறது(http://www.tamiltools.com/display.php?action=search&word=plaster)

எனக்கு சரியாக தெரியவில்லை. band-aid என்றும் தேடி பார்த்தேன்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மல்லிகை வாசம் உந்த தளத்தில் தான் நானும் விடையை எடுத்தேன். :lol:

ஆகாகா... :o:lol:

எனக்கு சரியாக தெரியவில்லை. band-aid என்றும் தேடி பார்த்தேன்

இல்லாட்டி என்ன ..... நாமளே ஒரு சொல்லை தமிழ் கருத்தா வைச்சிடலாமே...! :D

மைக்றோவேவ் (microwave ovan)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

மைக்குறோவேவ் - நுண்ணலை அடுப்பு

டோஸ்டர்(toaster) -

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

டோஸ்டர் - ரொட்டி வாட்டு மின்கலம் :lol:

(breakfast) cereal

(புண்ணாக்கு எண்டு யாரும் எழுதிப்போடாதேங்கோ...) :o

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

(புண்ணாக்கு)அது உங்கட சாப்பாடு மல்லிகை வாசம் :lol:

(breakfast) cereal -தானியம்/தானிய உணவு

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்க வேண்டும் நிலா மறந்து போய் விட்டேன்.

அடுத்த சொல்

பாக்(bag)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேக்கரி - வெதுப்பகம்

மோட்டார் சைக்கிள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மோட்டார் சைக்கிள் - உந்துருளி :wub:

வீடியோ -

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அட நல்லாத்தான் போய்க்கிட்டு இருக்கு

வீடியோ..காணொளி

ஓரேஞ் பழம்..orange

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஓரேஞ் பழம்.. orange - தோடம்பழம்

Ball point பேனை -

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Ball point பேனை - குமிழ் முனை பேனா.

Mineral Water

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

Mineral Water -கனிம நீர், தாது நீர்

ஆக்ஸுவலா

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆக்ஸுவலா - உண்மையாக

ஐஸ் பழம் -

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஐ ஸ்கிறீம் ............குளிர்களி

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

டிபேற் (Debate)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • கடலில் உருவாகும் புயல் ஏன் நிலத்தை நோக்கி வருகிறது? - எதிர்கொள்ள எப்படி தயாராக வேண்டும்? கட்டுரை தகவல் எழுதியவர்,இரா.சிவா பதவி,பிபிசி தமிழுக்காக 46 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,IMD தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், தற்போது ‘மேன்டோஸ்' புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்தப் புயல் புதுச்சேரிக்கும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே இன்று இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலநிலை மாற்றம் காரணமாக அண்மைக்காலங்களில் நாம் அடிக்கடி புயல்களைச் சந்திக்கிறோம். சில புயல்களை எதிர்கொள்ள நாம் பரபரப்பாக தயாராகும் வேளையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே அவை வலுவிழந்துவிடுகின்றன. சில புயல்கள் அதிதீவிர புயலாக மாறி நம் கணிப்பையும் தாண்டி பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. இதற்கு என்ன காரணம்? புயல் குறித்த பல்வேறு கேள்விகளை தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் ராஜேஷிடம் முன்வைத்தோம். அவர் அளித்த பதில்களை எளிய மொழியில் இங்கு வழங்குகிறோம். புயல் எப்படி உருவாகும்? ஏன் அவை நிலப்பரப்பை நோக்கி வருகின்றன? கடல் அல்லது பெரிய நீர்ப்பரப்பு கொண்ட பகுதிகளில்தான் புயல் உருவாகும். பெரும்பாலான புயல்கள் கடலில்தான் உருவாகின்றன. கடல் மட்டத்தில் உள்ள நீர் ஆவியாகி மேலெழும்பும் போது குறிப்பிட்ட உயரத்தை அடைந்தவுடன் சிறு மேகமாக உருவாகும். தொடர்ந்து நீர் ஆவியாகி மேலே செல்லும் போது சிறிய மேகம் பெரிய மேகமாக மாறுகிறது. குறிப்பிட்ட அளவை அடைந்தவுடன் அவை சுழல ஆரம்பிக்கும். பின்னர் அது, குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல், அதிதீவிர புயல் எனப் பல்வேறு நிலைகளை அடையும்.   பூமத்திய ரேகைக்கு கீழே உருவாகும் புயல்கள் கடிகார திசையிலும், பூமத்திய ரேகைக்கு மேலே உருவாகும் புயல்கள் கடிகார எதிர்த்திசையிலும் சுழலும். புயலுக்கான உணவே நீர்தான். எனவே எங்கெல்லாம் நீர் ஆவியாகி மேலே வருகிறதோ அந்தப் பகுதியை நோக்கி புயல் நகர ஆரம்பிக்கும். பொதுவாக நிலப்பரப்பிற்கு அருகேயுள்ள பகுதிகளில்தான் வெப்பம் அதிகமாக இருக்கும். எனவேதான் எல்லா புயல்களும் கரையை நோக்கி வருகின்றன. 'மேன்டோஸ்’ புயல் - எங்கு, எப்போது கரையைக் கடக்கும்? சென்னையில் மழை பெய்யுமா?8 டிசம்பர் 2022 குடிநீரில் இத்தனை வகையா? சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆபத்தானதா?7 டிசம்பர் 2022 கடந்த காலத்திற்கு பயணிக்க முடியுமா? - பிரபஞ்ச அறிவியலில் இன்னும் விலகாத மர்மங்கள்16 நவம்பர் 2022 புயல் கரையைக் கடக்கும் போது மழை பொழிவது ஏன்? கடலோடு ஒப்பிடும் போது நிலப்பகுதியில் வெப்பம் அதிகமாக இருக்கும். கடலில் இருந்து மேலே செல்லும் வெப்பம் நீராவியாக இருக்கும். ஆனால், நிலத்திலிருந்து செல்லும் வெப்பம் வறண்ட காற்றாக இருக்கும். எனவே பூமியிலிருக்கும் வெப்பம் புயலோடு சேரும் போது அது மேலே இருக்கும் மேகங்களை கீழ் நோக்கி இழுக்கும். அதனால் மழை பொழிகிறது. புயலை தலைப்பகுதி, மையம், முனைப் பகுதி என்று பிரிக்கிறார்களே, அதற்கு என்ன அர்த்தம்? மேலே திரண்டிருக்கும் மேகங்கள் சுழல ஆரம்பிக்கும் போது அதிலுள்ள கடினமான பகுதிகள் ஓரத்திற்கு சென்றுவிடும். எனவே நடுப்பகுதி காலியாக இருக்கும். இதை ஆங்கிலத்தில் செண்ட்ரிஃபியூகல் (centrifugal) என்று சொல்வார்கள். நடுப்பகுதி காலியாக இருப்பதால் புயலின் மையம் காலியாக இருக்கும். எனவே அந்தப் பகுதி நிலத்தைக் கடக்கும் போது எந்தத் தாக்கத்தையும் நாம் உணர மாட்டோம். புயல் கடந்துவிட்டதோ என்று நினைக்கும் அளவிற்கு சூழல் அப்போது இயல்பாக இருக்கும். ஆனால், முனைப் பகுதி நிலத்தை அடையும் போது அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். தலைப்பகுதி கடக்கும் போது எந்தத் திசையில் காற்று வீசியதோ அதற்கு எதிர்த்திசையில் முனைப்பகுதி கடக்கும் போது காற்று வீசும். எல்லா காற்றழுத்த தாழ்வு மண்டலமும் ஏன் புயலாக மாறுவதில்லை?   கடலில் எப்போதும் வெப்ப நிலை வேறுபாடு இருந்து கொண்டே இருக்க வேண்டும். கடலில் இருந்து மேலே செல்லும் நீராவி அந்த மேகக் கூட்டங்களுக்கு கிடைத்துக்கொண்டே இருக்க வேண்டும். அது கிடைக்க கூடிய இடத்தை நோக்கி மேகங்களும் நகர்ந்து கொண்டே இருக்கும். எங்கும் போதுமான அளவு வெப்பம் கிடைக்காதபட்சத்தில் அது வலுவிழந்துவிடும்.   படக்குறிப்பு, வானிலை ஆராய்ச்சியாளர் ராஜேஷ் புயல் எந்தப் பகுதியில் கரையைக் கடக்கும் என்பதை எப்படி கணிக்கிறார்கள்? கடலில் எங்கெல்லாம் வெப்பம் அதிகமாக இருக்கிறது என்பதை செயற்கைக்கோள் படங்கள் சொல்லும். அதை அடிப்படையாக வைத்து எந்தப் பகுதியில் புயல் பயணிக்கும் என்பதை எளிதாக கணிக்க முடியும். புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன? புயலின் தீவிரம் எந்த அளவிற்கு இருக்கிறதோ, அதற்கேற்ப எச்சரிக்கை எண் வழங்கப்படும். பதினொன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டால் மிகப்பெரிய ஆபத்து என்று அர்த்தம். செயற்கைக் கோள் பட உதவியுடன் செய்த கணிப்பை அடிப்படையாக வைத்து இந்த எண்ணை வானிலை ஆய்வு மையம்தான் அறிவிப்பார்கள். அதற்கேற்ப புயல் கூண்டு ஏற்றப்படும். புயலை எப்படி எதிர்கொள்வது? பட மூலாதாரம்,GETTY IMAGES புயலின் போது நாம் செய்ய வேண்டியது மற்றும் செய்யக் கூடாதவை குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். புயல் தொடங்குவதற்கு முன்பாகவே வீட்டின் மேற்கூரை, ஜன்னல்கள் மற்றும் கதவுகளை பழுது பார்த்துக்கொள்ள வேண்டும்.   வீட்டிற்கு அருகே இருக்கும் முறிந்து விழ வாய்ப்புள்ள மரங்கள் அல்லது மரக்கிளையை அப்புறப்படுத்திவிட வேண்டும்.   சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறைக்கு இந்தியாவால் மாற முடியுமா?12 நவம்பர் 2022 தமிழ்நாட்டில் கனமழை: சென்னை உலகளாவிய கவனம் பெறுவது ஏன்?14 நவம்பர் 2022 காலநிலை மாற்றத்தால் பெண்ணாக மாறும் ஆண் உயிரினங்கள் - ஆபத்தான அதிசயம்15 நவம்பர் 2022 மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளதால் எண்ணெயில் எறியும் விளக்குகள் மற்றும் மின்கலத்தில் இயங்கும் விளக்குகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அவசர காலத்தில் பயன்படுத்துவதற்காக விரைவில் கெட்டுப்போகாத உணவுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மூடிய பாத்திரங்களில் குடிநீரை சேமித்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு தேவையான சிறப்பு உணவுகளையும் தயார் செய்துகொள்ள வேண்டும். அரசு தரப்பில் விடுக்கப்படும் புயல் குறித்த எச்சரிக்கைகளை தொடர்ந்து கவனிக்க வேண்டும். தவறான தகவல்களை அனுப்பி மற்றவர்களை பதட்டம் கொள்ள செய்யக்கூடாது. தாழ்வான பகுதிகளிலோ அல்லது கரையோரப் பகுதிகளிலோ வசித்தால் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும். உங்கள் வீட்டை விட்டு நீங்கள் வெளியேறுவதாக இருந்தால் முக்கியமான பொருட்களை உயரத்தில் வைக்க வேண்டும். அது, வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டால் அவற்றை பாதுகாக்க உதவும். புயல் உங்கள் பகுதியைக் கடக்கும் போது பலத்த காற்று வீசும் என்பதால் காரணமின்றி வெளியே செல்லக் கூடாது. புயல் கரையைக் கடந்த பின் வெளியே செல்லும் போது விளக்கு கம்பங்களில் உள்ள தளர்வான மின்வயர்களை தொடுவதையோ அப்புறப்படுத்த முயற்சிப்பதையோ தவிர்க்க வேண்டும். வாகனம் ஓட்டும் போது கவனமாக ஓட்ட வேண்டும். உங்கள் பகுதியில் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும். உங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உரிய அதிகாரிகளிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும். https://www.bbc.com/tamil/articles/cjm38zj7180o
  • உவரெனே சுமண தேரர், விகாரையில் இருந்து கொண்டே, இரகசியமாக, ஒரு கம்பனி நடாத்தி, அதன் டைரைக்டர் என்ற வகையில், 5.8 கோடிக்கு, ஆறு செக் கொடுத்து, 84,000kg கிலோ தேங்காய் எண்ணெய் வாங்கி வெளியால வித்து காசு எடுத்திட்டார். செக் எல்லாம் காசு இல்லாமல் திரும்பியதால், ஓடி வந்த எண்ணைய் வியாபாரிக்கு, இண்டைக்கு, நாளைக்கு எண்டு டபாய்க்க, அவர்கள் போலீசுக்குப் போனதால் கம்பி எண்ணுகிறார். பகிடி என்ன என்றால், அவ்வளவு எண்ணெயும் விகாரையை ஜெகசோதியா வைக்க வாங்கினது எண்டு சொல்லி, எங்கப்ப்பா அந்த எண்ணெய் எண்ட, அதெல்லாம் எரிச்சு முடிஞ்சுது. எண்ணைய் வித்தவருக்கு புத்தரின்ட கடாட்சம் நிச்சயம் எண்டு வேற சுத்தியிருக்கிறார், கள்ளப்பிக்கர்.
  • கிளிநொச்சியில் பல கிராமங்களில் 165 க்கும் மேற்பட்ட மாடுகள், ஆடுகள் பலி ! பெரும் சோகத்தில் மக்கள் By T. SARANYA 09 DEC, 2022 | 02:34 PM தற்போது நிலவி வருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள  கடும் குளிருடன் கூடிய மழை மற்றும் வேகமான காற்று காரணமாக கிளிநொச்சியில் பல கிராமங்களில் 165 க்கு மேற்பட்ட மாடுகள் மற்றும் 3 ஆடுகள் என்பன இறந்துள்ளன.  இந்த இறப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என கிளிநொச்சி பிராந்திய கால்நடை திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு, ஏனையவற்றின் உயிரை பாதுகாக்க பண்ணையாளர் போராடி வருகின்றனர். கிளிநொச்சி கௌதாரிமுனை வெட்டுக்காடு கிராமத்தில் 60 மாடுகளும்,நல்லூர் சாமிபுலத்தில் கிராமத்தில் 75 மாடுகளும்,  பொன்னகர் கிராமத்தில் 13 மாடுகளும், புன்னை நீராவியில் 07 மாடுகளும், நாகேந்திரபுரத்தில் 05 மாடுகளும், பூநகரியில் 05  மாடுகளுமாக 130 க்கு மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளதாக கிளிநொச்சி பிராந்திய கால்நடை திணைக்களம் தெரிவித்துள்ளது.  அத்தோடு திருவையாறு  கிராமத்தில்  கடும் காற்று காரணமாக மரம்  முறிந்து வீழ்ந்ததில் மூன்று ஆடுகள் இறந்துள்ளதோடு, மேலும் பல ஆடுகள் மற்றும் மாடுகள் என்பன காயங்களுக்குள்ளாகியுள்ளன.   கடும் குளிருடன் கூடிய  மழை மற்றும் காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாகவும் இவ்வாறு கால்நடைகள் இறந்துள்ளதாகவும்,  இன்று (09) மதியம்வரை மேற்படி எண்ணிக்கையை உறுதிப்படுத்தக் கூடியதாக இருந்தது என்றும் தெரிவித்துள்ள கால்நடை திணைக்களம்  இந்த சீரற்ற காலநிலை காரணமாக இறந்த கால்நடைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/142633
  • நிலவுக்கு பயணிக்கப் போகும் இந்திய நடிகர் – அடுத்த ஆண்டில் பயணத் திட்டம் பட மூலாதாரம்,DEARMOON ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தொழில்முறை டிஜே, கொரியாவில் பிரபலமாகிவரும் ராப் பாடகர், விண்வெளி சார் யூட்யூபர் ஆகியோர் ஸ்பேஸ் எக்ஸ் விமானத்தில் நிலவுக்குப் பயணிக்கவுள்ளனர். தனியார் ஸ்பேஸ் எக்ஸ் விமானத்திற்காக ஜப்பானிய கோடீஸ்வரரால் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தொழிலதிபர் யுசாகு மெசாவா, கடந்த ஆண்டு படைப்பாளிகளுக்கான உலகளாவிய தேடலுக்குப் பிறகு வெள்ளிக்கிழமையன்று தனது குழுவில் இருக்கப்போகும் கலைஞர்கள் குறித்துத் தெரிவித்தார். அமெரிக்க டிஜே ஸ்டீவ் அயோகி, கொரிய நட்சத்திரமான டாப் என்றழைக்கப்படும் சோய் சூங்-ஹ்யூன் ஆகியோர் அதிலுள்ள முதன்மையான தேர்வுகளாக அறியப்படுகின்றனர். அடுத்த ஆண்டில் திட்டமிடப்பட்ட நிலவுக்குச் செல்லும் விமானம், 1972ஆம் ஆண்டுக்குப் பிறகு மனிதர்களின் முதல் சந்திர பயணமாக இருக்கலாம்.   பஞ்சாங்கம் கிரகணத்தை துல்லியமாகக் கணிப்பதாகச் சொல்வது உண்மையா?2 டிசம்பர் 2022 விண்வெளி ரகசியங்களை அறியப்போகும் பிரம்மாண்டத் தொலைநோக்கி5 டிசம்பர் 2022 ஆர்ட்டெமிஸ்: நாசாவின் தொலைதூர சாதனையை முறியடித்த ஓரியன் விண்கலன்30 நவம்பர் 2022 முன்மொழியப்பட்டுள்ள இந்தப் பயணத்தில், ஒரு விண்கலம் சந்திரனை வட்டமிடுவதோடு, அதன் மேற்பரப்பிலிருந்து 200 கிமீ தொலைவு வரை நெருங்கிச் செல்லும். அந்தப் பயணம் தொடங்கியதிலிருந்து 8 நாட்களுக்குப் பிறகு அவர்கள் திரும்புவர். இருப்பினும், இந்தக் குழு பயணிக்க வேண்டிய ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட்டுக்கு அமெரிக்க கட்டுப்பாட்டாளர்கள் இன்னும் அனுமதி வழங்கவில்லை. இந்த விண்வெளி விமானம் பூமியின் சுற்றுப்பாதையில் ஒரு சுற்று பயணிப்பதற்குக் கூட இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. மே 2021இல் சோதனை ஏவுதலை முடித்த பிறகு, கடந்த 18 மாதங்களாக டெக்சாஸில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், யுசாகு மெசாவா தனது டியர் மூன் என்ற அழைக்கப்படும் குழுவில் இருப்பவர்களை அறிவிக்கும் காணொளியில் இந்தத் தாமதம் குறித்துக் குறிப்பிடவில்லை. Twitter பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 1 அந்தக் காணொளியின் தொடக்கக் காட்சி, ஜப்பானிய தோட்டம் ஒன்றில் மெசாவா நிலவை நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. அதன்பிறகு குழுவின் முதல் உறுப்பினரான டிஜே ஆக்கியை அவருடைய நிகழ்ச்சி ஒன்றில் இருப்பதைப் போல் காட்டப்படுகிறது. “இந்த வாய்ப்பை என்னால் நழுவவிட முடியாது. இதற்காக என் மனம் ஏங்குகிறது,” என்று பில்போர்ட்-சார்ட்டிங் கலைஞர் அந்தக் காணொளியில் கூறுகிறார். அடுத்ததாக அறிவிக்கப்பட்ட பயணி, தினசரி விண்வெளி வீரர் என்றறியப்படும் யூட்யூபர் டிம் டாட். விண்வெளி பயணம், வானியற்பியல் தொடர்பான கல்வி வீடியோக்களுக்காக 14 லட்சம் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்பட்ட அவரது சொந்த வீடியோவில், அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதை நம்ப முடியவில்லை எனக் கூறுகிறார். ஸ்பேஸ் எக்ஸ் 2017ஆம் ஆண்டில் நிலவுக்கு ஒருவரை அனுப்புவதாக அறிவித்தது தான் “நான் உண்மையில் யூட்யூப்பில் காணொளிகளை உருவாக்கி வெளியிட வைத்தது,” என்றும் அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,SPACEX அறிவிக்கப்பட்ட டியர்மூன் குழுவின் மற்ற உறுப்பினர்கள் தென் கொரியாவை சேர்ந்த கொரிய ராப் பாடகரும் பாய்பேண்ட் பிக் பேங் குழுவின் முன்னாள் முன்னணி பாடகர் டாப் என்றறியப்படும் சோய் சூங்-ஹ்யூன் செக் குடியரசை சேர்ந்த நடனக் கலைஞரும் நடன அமைப்பாளருமான யெமி ஏ.டி. அயர்லாந்தை சேர்ந்த ஒளிப்படக் கலைஞர் ரியானன் ஆடம். பிரிட்டனை சேர்ந்த காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் கரீம் இலியா. அமெரிக்காவை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் பிரெண்டன் ஹால் இந்தியாவைச் சேர்ந்த நடிகர் தேவ் ஜோஷி Twitter பதிவை கடந்து செல்ல, 2 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 2 “பூமியை விட்டு வெளியேறுவது, நிலவுக்குப் பயணிப்பது போன்றவற்றில் இருக்கும் பொறுப்புகளை ஒவ்வொருவரும் அங்கீகரிப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த அனுபவத்திலிருந்து அவர்கள் நிறைய பெறுவார்கள். அவர்கள் அதை பூமிக்கும் மனித குலத்திற்கும் பங்களிக்கப் பயன்படுத்துவார்கள் என நம்புகிறேன்,” என்று மெசாவா கூறினார். ஆன்லைன் ஃபேஷன் சில்லறை விற்பனையாளரான ஜோசோவில் தனது செல்வத்தை ஈட்டிய மெசாவா, வணிகரீதியிலான விண்வெளிப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த ஆண்டு ரஷ்ய ராக்கெட்டில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 12 நாட்கள் பயணம் சென்றார். 2018ஆம் ஆண்டில், ஸ்பேஸ் எக்ஸ் மூலம் நிலவைச் சுற்றிப் பறக்கும் முதல் தனியார் பயணியாக அவர் பெயரிடப்பட்டார். மேலும், விண்வெளி விமானத்திலுள்ள மற்ற எட்டு பயணிகளின் செலவை தானே ஸ்பான்சர் செய்வதாகக் கூறினார். மெசாவா தனது விண்வெளி பயண டிக்கெட்டுக்கு செலுத்த ஒப்புக்கொண்ட விலை வெளியிடப்படவில்லை. ஆனால், ஈலோன் மஸ்க்கின் கூற்றுப்படி அது “நிறைய பணம்.” 2020ஆம் ஆண்டில், தனது நிலவுப் பயணத்தில் தன்னுடன் சேர்ந்துகொள்ள புதிய காதலிக்கான தேடலையும் தொடங்கினார். பிறகு “கலவையான உணர்வுகள்” காரணமாக அந்த முயற்சியை நிறுத்தினார். https://www.bbc.com/tamil/articles/c84gx420l23o
  • ஆமாம்....ஆனால் உங்களுக்கு மகிழ்ச்சி செய்தி தான் ...எனக்கும் தான்  ..சும்மா இருந்த உக்ரேனை ஏன் தாக்க வேண்டும்    ?
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.