• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

நிலாமதி

அம்மாவின் சின்ன கோபம் ....

Recommended Posts

அம்மாவின் சின்ன கோபம் .........

அந்த புலம் பெயர் நாட்டின் பாடசாலைகளும் கலாசாலைகளும் ஆரம்பமாக போகும் முதல் வார இறுதி . அன்று ஜமுனன் முதல் தடவையாக கலாசாலை போக போகிறான் ,அவர்களது வீடிலிருந்து மூன்று மணி நேர கார் சவாரியில் செல்ல வேண்டும் ,படுக்கைக்கான ஆயத்தங்கள் ,உடுப்புகள் ,தேவைப்படும் கொப்பி

பேனா வகைகள் யாவும் பார்சல் செய்ய பட்டு ,செல்ல்வத்ர்கான வாகனமும் வந்து விட்டது . சென்ற வாரம் முழுக்க அம்மாவின் ,ஆயத்தங்கள் .தங்கை நீலுவும் இனி அண்ணாவின் சண்டை சச்சரவு இல்லை என்றாலும் முதல் தடவையாக தன்னை விட்டு போகிறான் என்ற ஏக்கம் .

ஜமுனன் ,நீலு அப்பா அம்மா வான் கார சுப்பண்ணா எல்லோரும் ஏறிக்கொண்டார்கள் / கடவுள் வேண்டுதலுடன் அவர்கள் பயணம் .ஆரம்பமாகியது .ஜமுனனுக்கு உடல் தான் வாகனத்தில் இருந்ததே தவிர அவன் மனமெலாம் அம்மாவின் பிரிவிலே தவித்தது.தாய் மீனாவும் தான் பெற்ற செல்லம் ,தூர இடம் போகிறதே என்று எண்ணி ,கலங்கினாலும் ,மகனின் உயர் கல்வியை எண்ணி ஆறுதல் பட்டாள்.

.கை தீனி தின்னும் குஞ்சு போல ஜமுனன் வலம் வாருவதை எண்ணி கொண்டாள் .சாப்பிடும் சாதம் குழையாமல் பொல பொல என்று இருக்கவேணும் ,தமிழ் சாப்பாடு தான் பிடிக்கும் மீன் பொரித்தால் ,

வால் பகுதி தான் வேண்டும் ,வெள்ளை பிட்டும் மீன் குழம்பும் பிடித்த உணவு .முட்டை மஞ்சள் கரு,

பிடிக்காது ,விடுதியில் எப்படி சமாளிக்க போகிறான் . வெள்ளை கார உணவு தானே சாப்பிட போகிறான் ,உடுப்புகள் எல்லாம் துவைத்து அயன் (ஸ்திரி ) செய்து இருக்கவேண்டும் .காலுறை (சொக்க்ஸ் ) ,

உள்ளாடை எல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று வேண்டும் .எப்படி சமாளிக்க போகிறான் , என்று சிந்தித்து கொண்டாள்

,கண்கள் கலங்கவே அப்பா (கணவன் )சுந்தரத்தாருக்கு தெரியாமல் துடைத்து கொண்டாள் . அவள் உடம்புக்கு முடியாமல் போனாலும் ,அவனுக்கு வீட்டு சாப்பாடு அம்மாவின் கையால் வேண்டும்

.சில சமயம் சினந்தும் இருக்கிறாள் .இப்படியாக் அவர்களது விடுதியும் வந்தது . அவனது அறையில் பொருட்களை வைக்க யாவரும் உதவி செய்தபின் விடை பெற்றனர். அவனும் கலங்கிய கண்களுடன்,

விடை பெற்றான் .இறுதியில் தாய் மீனா கட்டி முத்தமிட்டு காரில் ஏறுகையில் அவள் தோளில் போர்த்தியிருந்த மெல்லிய துணி (சல்வார் ) அவன் கையில் ,சுருட்டி வைத்திருந்தான்.. அவன் செல்ல அம்மாவின் மென்மையான அணைப்புக்காக .......

.

.கதை நிஜம் ......பெயர்கள் யாவும் கற்பனை ,களத்தில் யாரையும் குறிப்பன அல்ல

Share this post


Link to post
Share on other sites

தலைப்புக்கும் கதைக்கும் என்னம்மா சம்மந்தம்?? சில சமயம் சினந்தும் இருக்கிறாள் என்ற வசனமா??

Share this post


Link to post
Share on other sites

தாய் - மகன் பாசத்தை வெளிப்படுத்தும் நிஜக்கதை... நன்றாயிருக்கிறது அக்கா. :lol:

Share this post


Link to post
Share on other sites

நிலாமதி,

நல்ல சிறுகதை. பாராட்டுகள்.

வைரத்தை வெட்டியெடுக்கத் தெரிந்த உங்களுக்கு அதை பட்டை தீட்டத் தெரியவில்லை.

திரும்பவும் வாசியுங்கள், பட்டை தீட்டுங்கள்.

தலைப்பு பொருத்தமாகத் தெரியவில்லை. அழகான தலைப்பிடுங்கள்.

Share this post


Link to post
Share on other sites

கதை நல்லா இருக்கு. கனடாவில தானே.... பயப்பிடாதைங்கோ. முதல் கிழமை ப்ரோஸ் பார்ட்டியோட பையன் தேறிடுவான். :lol::o

Share this post


Link to post
Share on other sites

ஜமுனன் நீலு சுப்பண்ணை இது என்னமோ கோகுலக்கதை போல இருக்குதே.......... :lol:

Share this post


Link to post
Share on other sites

ஜமுனன் நீலு சுப்பண்ணை இது என்னமோ கோகுலக்கதை போல இருக்குதே.......... :wub:

இங்கேயுமா நடக்கட்டும் நடக்கட்டும் :lol::):wub::lol:

இன்னும் ஒரு படி மெருகூட்டியிருக்கலாம் அக்கா தொடரட்டும்

Share this post


Link to post
Share on other sites

யோசிக்காதையுங்கோ நிலாமதி. வார இறுதியில் ஜமுனன் வீட்டுக்கு வந்து ஒரு பிடி பிடிச்சுவிட்டு போவார். :wub:

Share this post


Link to post
Share on other sites

நன்றி பிரபா ,,,,,,,,,,,,வைரம் என்று தெரிகிறது நன்றி ....காலப்போக்கில் பட்டை தீட்ட படும் .

தலைப்பு :

செல்லமகன் துப்பட்டாவை பறித்து விட்டதால் சின்ன கோபம் .கதை தானே முக்கியம் . தலைப்பு இட தெரியாத கள உறவுகள் களத்தில் இல்லயே . எல்லோரும் தங்களே இட்டு திருத்தி கொள்வார்கள். புலமை வாய்ந்தவர்கள். நம் கள உறவுகள்.

Share this post


Link to post
Share on other sites