• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

kurukaalapoovan

இது தான் புலம்பெயர்ந்தவர்களின் தமிழ்த்தேசியம்

Recommended Posts

2ஆம் உலகமாயுத்தத்தில் பிரித்தானியாவிற்கு வழங்கல்கள் எவ்வளவு சவால்களை சந்தித்தது. அமெரிக்காவில் இருந்து அனுப்பும் கப்பல்களின் ஒரு சிறு வீதம் தான் தப்பி பிரித்தானியாவிற்கு வந்து சேர்ந்த அவலமான காலப்பகுதியும் இருந்தது.

TDL_0089.jpg

2153323960053082619S500x500Q85.jpg

14272363dasavatharam5aax9.jpg

Kuruvi2.jpg

Share this post


Link to post
Share on other sites

குறுக்கண்ணே, கோடி புண்ணியம் பெறுகிற பாக்கியம் எல்லாம் உங்களுக்கு இல்லாமல் போகுது

kovil1na9.gif

kovil2un9.gif

படம் சில வருடங்களிற்கு முன்னர் எடுத்தாலும் அப்போதும் மனதைச் சுட்ட விடயம். இந்த வளங்கள் எல்லாம் எம் தேசத்தை நோக்கித் திருப்பியிருந்தால் பெறுமதிமிக்க எவ்வளவு உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்்.

Share this post


Link to post
Share on other sites

இதுகள் திருந்திறத்துக்கு இடமே இல்லை. சனம் அங்க பட்டினியில கிடக்குது. பட்டினியல் வாடும் மக்களுக்கே கடவுள் வழியை காட்டுறார் இல்லை. ஆனால் இவங்க இன்னும் தங்களுக்கு வழியை காட்டவேணும் என்டு தேங்காயை உடைத்து காசை கரியாக்கிறாங்க.

உடையிறது தேங்கை மட்டுமல்ல, எங்கிட தமிழருடைய வாழ்வும்தான்.

எப்பதான இதை உணர்ந்து இந்த குருட்டு நம்பிக்கையை கைவிட்டு மனிசனாக வாளப்போறாங்களோ தெரியல.

Share this post


Link to post
Share on other sites

தாயகத்தில் பசியுடன் காத்திருக்கும் குழந்தைகள்

2776428690614dd46f8fozl0.jpg

எம்பெருமான் அருள்பெறப் போராடும் தமிழர்கள்

kovil202xc1.jpg

களத்தில் பொறுக்கிய தாயகச் செய்திகள் சில

முறிகண்டியில் விமானத் தாக்குதல் 4 பேர் பலி நால்வர் காயம்: புலிகளின் இலக்குகள் மீது தாக்குதல் என்கிறது அரசாங்கம்

கிளிநொச்சி மருத்துவமனை சூழ கடும் எறிகணை தாக்குதல்கள். நோயாளிகள் அல்லோலகல்லோலம்

லொட்ஜுகள், தற்காலிக வசிப்பிடங்களில் தங்கிய தமிழ் இளைஞர்கள், யுவதிகள் கைதாகித் தடுத்து வைப்பு! உத்தியோகபூர்வ அறிவிப்பு வருமுன்னரே பொலிஸார் வேட்டை!!

வன்னியில் மக்கள் பெரும் அவலம்-கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்!

சாவகச்சேரி கல்வயலில் கடத்தப்பட்டவர் கோயில்கண்டி கப்புத்து படை முகாம் அருகே சடலமாக மீட்பு

தாக்குதல்களில் கரும்புலிகள் பத்து பேர் வீரச்சாவைத்தழுவி தாய்நாட்டின் விடுதலைக்காக தம் இன்னுயிரை ஈகஞ்செய்தனர்.

Share this post


Link to post
Share on other sites

இதுவும் புலம்பேயந்த மந்தைகள்தான்... இவையையும் கணக்கிலை எடுங்கோ...!!! கோயிலுக்கு போறதிலையும் மூண்டு மடங்கு அதிக பணம் இங்கை கொட்டுகினம்...!!

coffee%20drinks%20cropped2.main.jpg

Share this post


Link to post
Share on other sites

kovil202xc1.jpg

kovil203fs1.jpg

2653574510101238484S425x425Q85.jpg

2296923140101238484S425x425Q85.jpg

2671019960101238484S425x425Q85.jpg

2671019960101238484S425x425Q85.jpg

1083361775_c68c483f5c.jpg

TDL_0072.jpg

வணக்கம் குருகாலபூவன்

நல்லதொரு தத்துவத்தையும் ஒப்பு நோக்கத்தக்க பார்வையையும் மக்களுக்கு அளித்தீர்கள். வாழ்த்துக்கள்.

தமிழ் இனம்: யார் இவர்கள்? பிராமணர்களையும், ஐயர்மார்களையும், பூசாரிகளையும் தேரில் வைத்திளுக்கும் கூட்டம்.

*** பாய்ந்து, பாய்ந்து முழு மூச்சோடு தேங்காய்களை உடைக்கின்றார்கள். உலகம் பூராக உடைக்கும் தேங்காய்களைக் கணக்கெடுத்தால் உடைக்கும் தேங்காய்களின் விலை கோடி டாலர்களுக்கு மேலாகவிருக்கும். கடவுள் தேங்காய் உடைக்க உத்தரவிட்டாரா? இதை அறியாமல் விஞ்ஞான உலகில் வாழுகின்றார்கள் பல கோடி மக்கள். கடவுளைக் கண்டவர்கள் யாராவது இவ்வுலகில் உண்டோ?

சாமிமார்களின், மகராஜிமார்களின் விஸ்வரூபங்கள் இன்றய காலத்தினில் வெளிக்குக் கொண்டு வரப்பட்டுவிட்டன. கடவுள் எதற்காக கைகளில் ஆயுதம் தாங்கி இருக்கின்றார் என்றால் விடை அளிப்பதற்கு யாரும் இல்லை. அநியாயத்தை அளிப்பதற்கு என்று கூறுவது சிலர். தெருக்களில் தேங்காய் உடைப்பது அநியாயமில்லையா? உடைத்த தேங்காய்களைப் பொறுக்குவது யார்? ***

“”என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்””

என்றான் பாரதி

“”என்று மறையும் இம்மூட நம்பிக்கை””

என்போம் நாம்.

நன்றி வணக்கம்

சாண்டில்யன்

Share this post


Link to post
Share on other sites

quote name='Sandilyan' date='Sep 18 2008, 11:24 AM' post='446902']

தமிழ் இனம்: யார் இவர்கள்? பிராமணர்களையும், ஐயர்மார்களையும், பூசாரிகளையும் தேரில் வைத்திளுக்கும் கூட்டம்.

?????????????????????????????????????????????????????????????????????????????????????????

வணக்கம்.

அண்ணா உங்களால் எப்படி முடிந்தது இப்படி எழுதுவதற்கு???????

உங்களையும் சேர்த்துத்தானே கூறுகிறீர்கள் அப்படியென்றால் முதலில்

உங்களைத் திருத்திக்கொள்ளுங்கள்.

இவர்கள் திருந்திவிடுவார்கள்.

Share this post


Link to post
Share on other sites

இங்கு சிலபேரின் நோக்கம் இந்துமதத்தை இழிவுபடுத்துவதே அத்தோடு தம்மை தீவிர தேசியவாளன் என காட்டி கொள்ள முனைகின்றனர்.உங்களால் தான்தோன்றித்தனமாக வைக்கப்படும் கருத்துக்கள் ஒருபோதும் எமது தேசியத்திற்கு வலுக்கூட்டப்போவதில்லை மாறாக தமிழ் மக்களை கொள்கைகளால் சிதைக்கப்போகின்றீர்கள் இது தமிழ் தேசியத்திற்கு நல்லதல்ல. எமது போராட்டமும் விடுதலை புலிகளும் மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் போராளிகளில் கூட எல்லா மதத்தவரும் உண்டு நீங்கள் இப்படி எழுதும் கண்மூடித்தனமான அர்த்தமில்லாத கருத்துக்களை அவர்கள் பார்க்க நேர்ந்தால் நிச்சயம் வருத்தப்படுவார்கள்.தமிழர்கள

Share this post


Link to post
Share on other sites

ஏன் இந்து மத வழிபாட்டுமுறைகளை மட்டும் குறை சொல்கிறீர்கள் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கு செல்வதில்லையா? அவர்கள் அங்கு மெழுகுதிரி கொழுத்துவதில்லையா ? வீணாக பணம் உருகுகின்றதே அதற்கு செலவழிக்கும் பணத்தை வன்னியில் துன்பத்தில் வாழும் எமது மக்களுக்கு வழங்கி எமது தேசியத்திற்கு வலுக்கூட்டலாமே???

ஏன் எமது ஈழத்தில் இருக்கும் மக்கள் கோவில்களில் தேங்காய் உடைப்பதில்லையா? அவர்கள் எந்த கஷ்டத்தில் வாழ்ந்தாலும் கோவிலுக்கு என்று ஒரு தொகை பணத்தி செலவழிப்பார்கள் அதற்கு செலவழிக்கும் பணத்தை வழங்கி எமது தேசியத்திற்கு வலுக்கூட்டலாமே? ??

நம்பிக்கையில் தான் எல்லாமே ஓடிட்டு இருக்குது கடவுளை யாரும் கண்ணால பார்த்தார்களா கடவுள் கேட்டாரா என்ற மேதாவித்தனமான கதைகள் எல்லாம் தேவையற்றது.எமது மக்களில் பலபேர் எமது தலைவர் மதிப்புக்குரிய வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களையே நேரில் பார்க்கவில்லை அதற்காக அவரை நம்பாமல் இருக்கிறார்களா? அவரது கொள்கையோடு ஒன்றுசேர்ந்து பயணிக்கவில்லையா? ஆகவே தேவையில்லாத செயல்களையும் அர்த்தமற்ற பேச்சுக்களையும் விடுத்து தமிழ் தேசிய போராட்டத்துக்கு ஆதரவு உங்களால் கொடுக்க முடியாவிட்டாலும் மக்களின் எண்ணங்களை சிதைத்து தவறான வழிகாட்டல்கள் மூலம் எமது போராட்டத்தை சிதைக்க நினைக்காதீர்கள்.

அருமையான கருத்து

ஆனால் உங்களது நேரமும் வீணாகி

கையும் வலித்ததுதான் மிச்சம்

பாருங்கள் ஏதோ கதைக்கும்போது கூட ஐயரையும் தேரையும் முடிச்சுப்போடும் கூட்டம்தான் இங்கு எழுதிக்கொண்டிருக்கிறது

யாரையாவது தாக்கவேண்டும்

அது கூட்டமைப்பாக இருந்தாலென்ன

பொட்டம்மானாக இருந்தாலென்ன????

விளைவுகளைப்பற்றியோ

வீணடிப்புக்கள் பற்றியோ ..............????

Share this post


Link to post
Share on other sites

இங்கு சிலபேரின் நோக்கம் இந்துமதத்தை இழிவுபடுத்துவதே அத்தோடு தம்மை தீவிர தேசியவாளன் என காட்டி கொள்ள முனைகின்றனர்.உங்களால் தான்தோன்றித்தனமாக வைக்கப்படும் கருத்துக்கள் ஒருபோதும் எமது தேசியத்திற்கு வலுக்கூட்டப்போவதில்லை மாறாக தமிழ் மக்களை கொள்கைகளால் சிதைக்கப்போகின்றீர்கள் இது தமிழ் தேசியத்திற்கு நல்லதல்ல. எமது போராட்டமும் விடுதலை புலிகளும் மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் போராளிகளில் கூட எல்லா மதத்தவரும் உண்டு நீங்கள் இப்படி எழுதும் கண்மூடித்தனமான அர்த்தமில்லாத கருத்துக்களை அவர்கள் பார்க்க நேர்ந்தால் நிச்சயம் வருத்தப்படுவார்கள்.தமிழர்கள??டையே இதுவரைக்கும் மதத்தால் பிரிவினை வந்ததில்லை ஆகவே அந்த நிலை உருவாவதற்கு நீங்கள் காரணமாகிவிடாதீர்கள்.

எல்லோரும் எப்ப பார்த்தாலும் கோவிலில் தேங்காய் உடைக்கிறார்கள் கோவில் கட்டுகிறார்கள் இன்று புலம்புகிறீர்களே உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் நீங்கள் எவ்வளவு ஆடம்பர செலவுகள் செய்கிறீர்கள் என்று?

நீங்கள் மது புகைப்பிடித்தல் என்பதை தவிர்த்திருக்கிறீர்களா? இல்லை எப்ப விடுமுறை வரும் எப்ப குடிக்கலாம் எப்ப கும்மாளம் அடிக்கலாம் என்றுதான் இருக்கிறீர்கள் அதற்கு செலவழிக்கும் பணத்தை வன்னியில் துன்பத்தில் வாழும் எமது மக்களுக்கு வழங்கி எமது தேசியத்திற்கு வலுக்கூட்டலாமே? ??உங்களால் அது முடியாது ஏனேன்றால் அது சுயநலம் சம்பந்தமானது

உங்கள் வீடுகளில் கலியாணவீடுகள் சாமர்த்தியவீடுகள் ஏன் செத்தவீடுகள் என்று கண்மூடித்தனமாக செலவு செய்கின்றீர்களே இது ஆடம்பர தேவையற்ற செலவுதானே? கலியாணவீட்டில் பெண்ணுக்கு பதினைந்து பவுன் தாலி பல ஆயிரம் ரூபா பெறுமதியான உடுதுணிகள் பெரும் விருந்து அவற்றை புகைப்படம் எடுக்க நாலைந்து பேர் வீடியோ எடுக்க பலபேர் இது எல்லாம் என்னத்துக்கு பெண்ணை வீட்ட கூட்டிக்கொண்டு வந்திட்டு பதிவுத்திருமணம் செய்யும் இடத்துக்கு சென்று அங்கு கலியாணத்தை செய்யலாமே??? சாமர்த்தியவீடு என்றால் சொல்லதேவையில்லை அது இன்னொரு கல்யாணவீடு போல் தான்செய்யிறது ஏன் அந்த விழா உங்களுக்கு எல்லாம் தேவையா? பேசாமல் எங்கட பிள்ளை வயசுக்கு வந்திட்டா என்று படத்தையும் ஒரு செய்தியையும் பத்திரிகையில போடலாமே?

செத்தவீடு என்றாலும் அந்த இறந்து போனவருக்கு இல்லாத கூத்து எல்லாம் போட்டு இப்ப வீடியோ வேற எடுக்கினம் பார்த்து பார்த்து அழவேணுமாம் ...... அப்புறம் அதுக்கு முப்பத்தியோரம் நாள் எட்டாம் நாள் என்று கனக்க கொண்டாடுறிங்களே இது எல்லாம் உங்களுக்கு தேவையா? அதற்கு செலவழிக்கும் பணத்தை வன்னியில் துன்பத்தில் வாழும் எமது மக்களுக்கு வழங்கி எமது தேசியத்திற்கு வலுக்கூட்டலாமே??? உங்களால் அது முடியாது ஏனேன்றால் அது சுயநலம் சம்பந்தமானது

படம் பார்க்க செல்கிறீர்கள் இசை நடன நிகழ்ச்சிகளுக்கு செல்கிறீர்கள் அவற்றை பெரும் பணம் செலவழித்து நடத்துகிறீர்கள் இது கேளிக்கை அல்லவா அதற்கு செலவழிக்கும் பணத்தை வன்னியில் துன்பத்தில் வாழும் எமது மக்களுக்கு வழங்கி எமது தேசியத்திற்கு வலுக்கூட்டலாமே??? உங்களால் அது முடியாது ஏனேன்றால் அது சுயநலம் சம்பந்தமானது

நீங்கள் ஒருவருடத்தில் எத்தனைமுறை விடுமுறை சுற்றுல என்று வெளிநாடுகளுக்கு பறக்கிறீர்கள் அதற்கு செலவழிக்கும் பணத்தை வன்னியில் துன்பத்தில் வாழும் எமது மக்களுக்கு வழங்கி எமது தேசியத்திற்கு வலுக்கூட்டலாமே??? உங்களால் அது முடியாது ஏனேன்றால் அது சுயநலம் சம்பந்தமானது

ஏன் இந்து மத வழிபாட்டுமுறைகளை மட்டும் குறை சொல்கிறீர்கள் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கு செல்வதில்லையா? அவர்கள் அங்கு மெழுகுதிரி கொழுத்துவதில்லையா ? வீணாக பணம் உருகுகின்றதே அதற்கு செலவழிக்கும் பணத்தை வன்னியில் துன்பத்தில் வாழும் எமது மக்களுக்கு வழங்கி எமது தேசியத்திற்கு வலுக்கூட்டலாமே???

ஏன் எமது ஈழத்தில் இருக்கும் மக்கள் கோவில்களில் தேங்காய் உடைப்பதில்லையா? அவர்கள் எந்த கஷ்டத்தில் வாழ்ந்தாலும் கோவிலுக்கு என்று ஒரு தொகை பணத்தி செலவழிப்பார்கள் அதற்கு செலவழிக்கும் பணத்தை வழங்கி எமது தேசியத்திற்கு வலுக்கூட்டலாமே? ??

நம்பிக்கையில் தான் எல்லாமே ஓடிட்டு இருக்குது கடவுளை யாரும் கண்ணால பார்த்தார்களா கடவுள் கேட்டாரா என்ற மேதாவித்தனமான கதைகள் எல்லாம் தேவையற்றது.எமது மக்களில் பலபேர் எமது தலைவர் மதிப்புக்குரிய வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களையே நேரில் பார்க்கவில்லை அதற்காக அவரை நம்பாமல் இருக்கிறார்களா? அவரது கொள்கையோடு ஒன்றுசேர்ந்து பயணிக்கவில்லையா? ஆகவே தேவையில்லாத செயல்களையும் அர்த்தமற்ற பேச்சுக்களையும் விடுத்து தமிழ் தேசிய போராட்டத்துக்கு ஆதரவு உங்களால் கொடுக்க முடியாவிட்டாலும் மக்களின் எண்ணங்களை சிதைத்து தவறான வழிகாட்டல்கள் மூலம் எமது போராட்டத்தை சிதைக்க நினைக்காதீர்கள்.

Share this post


Link to post
Share on other sites

போற்றுவார் போற்றலும்

தூற்றுவார் தூற்றலும்

போகட்டும் விட்டு விடு!!!

நமக்குள்ளே

வீண் பகை எதற்கு

புறப்படு தோழா

புழுதி வாரி விடும்

வேலைக்கு வேளை இதுவல்ல!!!

குறுக்கனும் கிறுக்கனும்

மதச்செருக்கனும் சேர்ந்தே

இப்போ மீசை முறுக்கனும்

ஈழத்தமிழன் நான் என எழுந்து!!!

பூனைகள் போல் பதுங்குதல் இழிவு

புறப்படு தோழா புலி நீயெனில்

புறப்படு தோழா புலி நீயெனில்!!!

Share this post


Link to post
Share on other sites

St John's Sydney OBA 2008 Dinner Dance (Eagle's Nite) held on Sat 30th August 2008 at Novotel Hotel, Sydney Olympic Park, Homebush. It was a Great Night with excellent positive feedback!

http://www.sjcobasydney.com/dinnerdance.html

யாழ்ப்பாண கணவாங்கள்.. புத்திசீவிகள்.. யாழ் பரியோவான் கல்லூரியின் பழைய மாணவர்கள்.. சுண்டுக்குழி மகளிர் பழைய மாணவிகள்.. ஒன்று கூடி.. தண்ணி அடித்து அவுஸ்திரேலிய நகரான சிட்னியில் கும்மாளம் அடிக்கும் காட்சிகள்... 2008

இப்படி ஆண்டு தோறும்.. இலங்கையின் வடக்குக் கிழக்கில் இருக்கும்.. கிட்டத்தட்ட எல்லாப் கணவான் பாடசாலைகளின் பழைய மாணவ மாணவிகள் கூடிக் கூத்தடிக்கக் கொட்டும்.. பணம்.. பல ஆயிரம் டொலர்களாகும்..!

இவற்றை வன்னி மக்களுக்கு கொடுக்க.. போராட்டத்து அன்பளிப்பாக்க.. தமிழ் புத்திசீவிகள் ஏன்.. முன்வருகிறார்கள் இல்லை..???!

பரியோவான் பழைய மாணவர்கள்.. சுண்டுக்குழி பழைய மாணவிகள்.. இங்கு கையாளப்பட்ட உதாரணம் மட்டுமே.. இப்படி வேம்படி மகளிர் கல்லூரி..யாழ் மத்திய கல்லூரி.. கொழும்பு இந்துக் கல்லூரி.. இராமநாதன் மகளிர் கல்லூரி.. யாழ் இந்துக் கல்லூரி.. இந்து மகளிர் கல்லூரி.. இப்படி பல... கூடிக் குடிச்சுக் கூத்தாடிக் கும்மாளம் அடிக்கின்றனர்.. வகை தொகையின்றி.. ஏன்.. இவர்களுக்கு ஈழத்தின் சோகம் புரியாதா..???!

இதுதான் இந்தப் புத்திசீவிகள் வளர்க்கும் தமிழ் தேசியமா..???!

இந்தப் புத்திசீவிகளில்.. பலர் இங்கும்.. இருக்கக் கூடும்.. சிந்தியுங்கள்..??! :(

Share this post


Link to post
Share on other sites

குறுக்கு மற்றும் நெடுக்கண்ணாக்களின் கருத்துக்களிற்கு படங்களுடன் இணைந்த தகவல்களிற்கு நன்றி.

தேவையற்று வீணடிக்கும் பணத்தை எமது உறவுகளின் பசியைப் போக்க உதவினால் நன்றாக இருக்கும். இப்படிப் பெருமெடுப்பில் வீணடிப்பவர்கள் மாத்திரமல்ல. ஒரிரு டொலர்களை தேவையற்று வீணடிப்பவர்கள் கூட அந்த பணத்தை தாயக உறவுகளிற்கு வழங்குங்கள உங்களிந்த அந்த ஒரு டொலர் அல்லலுறும் ஒரு சில உறவுகளின் ஒருநாள் உணவுத் தேவையை நிறைவேற்றும்.

நன்றி

Share this post


Link to post
Share on other sites

நெடுக்ஸ் இவர்கள் ஓட்டி வந்த ஆடம்பரக்கார்களின் விலைகள் பல மில்லியன் டொலர்களை தாண்டும். 100,000 டொலர் பெறுமதியான கார்கள் ஓடுபவர்கள் ஒரு 10,000 டொலர் கார் ஓடினால் 90, 000 மீதம். அவர் ஒரு வருடத்திற்கு சராசரியாக அடிக்கும் 5 தேங்காய்களையும் தவிர்த்தால் 90,005 டொலர் சேமிக்கலாம்.

கணக்கை கூட்டிக்கழித்து பாருங்கள்! எவ்வளவு பெரிய வித்தியாசம்!

ஆனால் தேவையற்ற ஆடம்பரங்களை கோவில்களிலும் மற்ற நிகழ்வுகளிலும் தவிர்த்து தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்கு உதவ வேண்டியது இன்றைய தேவை. இதை செய்ய நம்மவர்கள் முன் வரவேண்டும்

ஆனாலும் நம்ம கணக்கே வேற! வெங்காயம் வெல கம்மி ஆகி தேங்கா வெல கூடினா தேங்கா சட்னி சாப்பிட முடியாம போயிரும். நம்மால தேங்காவ சட்னி பண்ணி சாப்பிடாம இருக்க முடியாது. இந்த எழவு தேங்கா சட்னி சாப்பிடாட்டா நம்ம தாடி முடி எல்லாம் கொட்டிரும் பெருச்சாளி!

Share this post


Link to post
Share on other sites

நெடுக்கண்ணை.. இணைப்புகளுக்கு நன்றி..! :(

அடேயப்பா.. அன்ரிமாரும், அங்கிள்மாரும் படுற பாடு இருக்கே..! சொல்லி வேலையில்ல..! :D

கனடாவிலயும் இப்படி நிறைய நடக்குது..! போராட்டம் நிவாரணம் எண்டு வாய் கிழியப் பேசினவை காசு எண்டவுடன எஸ்கேப்தான்..! :(

Share this post


Link to post
Share on other sites

சபா கண்ணை கட்டுதே

நல்லாத்தான் ஆடி குடிக்கிறாங்கள் வாழ்க புலம் பியர்[பெயர்] தமிழர்கள் :(:(:D

Share this post


Link to post
Share on other sites

2 ஆம் உலக யுத்தத்தில் ஐரோப்பாவில் யேர்மனி தனது ஆக்கிரமிப்பு யுத்தத்தை விரிவாக்கிய அதே நேரம் ஐரோப்பாவிற்கு நேச சக்த்திகளின் வழங்கலை தடுத்து ஒரு முற்றுகையை உருவாக்கியிருந்தது. இதனை வெற்றி கொண்டதைத்தான் அத்திலாந்திக் சமுத்திரத்திற்கான யுத்தம் என்கிறார்கள். இந்த யுத்தம் பரிய விலை கொடுத்து நேச நாடுகளால் வெல்லப்பட்டது.

30 264 வணிக கப்பலோட்டிகள்

3500 வணிக கப்பல்கள்

175 போர்க் கப்பல்கள்

119 விமானங்கள்

http://en.wikipedia.org/wiki/Battle_of_the...9%E2%80%931945)

Share this post


Link to post
Share on other sites

dinner_dance_flyer_2008.jpg

எதிர் வரும் நவம்பர் திங்களில்.. இவர்களும் டான்ஸ் போடப் போகின்றனர்..! :(

Share this post


Link to post
Share on other sites

எதிர் வரும் நவம்பர் திங்களில்.. இவர்களும் டான்ஸ் போடப் போகின்றனர்..! :(

இந்த கிளேர்போர்ட் மண்டபம் தமிழர் நடத்தும் மண்டபங்களில் விலை கூடினது எண்டு நினைக்கிறன்..! :(

Share this post


Link to post
Share on other sites
Oct08b.jpg

Share this post


Link to post
Share on other sites

ஐரோப்பாவிலும் ஆசிய பசுபிப் பிராந்தியத்திலும் 2 உலகமாயுத்தத்தை எதிர்கொள்ள அமெரிக்கர்கள் தமது நாட்டில் எப்படியான தயார்படுத்தல்களில் ஈடுபட்டார்கள் என்பதை home front என்று கூறுகிறார்கள்.

http://en.wikipedia.org/wiki/United_States...ng_World_War_II

போர்காலத்தில் உணவு முதல் ஏனைய மூலப் பொருட்கள் என வள விரையங்களிற்கான கட்டுப்பாடு எப்படி இருந்தது?

http://www.genealogytoday.com/guide/war-ration-books.html

பொருளாதார வளம் படைத்தவர்கள் ஏன் 2 உலகமா யுத்தத்தை வென்றார்கள்?

Why the Rich Won: Economic Mobilization and Economic Development in Two World Wars

http://www2.warwick.ac.uk/fac/soc/economic...ytherichwon.pdf

Economic mobilization

The process of preparing for and carrying out such changes in the organization and functioning of the national economy as are necessary to provide for the most effective use of resources in a national emergency.

- US DoD

Share this post


Link to post
Share on other sites

நானும் போகலாம் என்றுதான் பார்க்கிறேன் ஆனால் காவிஉடைதான் இருக்குது

பாலிவூட் கோஸ்ரியும் இல்லையே காவிதான் இருக்குது உள்ளே விடுவார்களா நெடுக்ஸ்?

குறுக்கு நெடுக்கு நல்லா போடுங்கோ பார்க்க் நல்லாத்தான் இருக்கு அங்கு என்ன செய்கிறார்கள் என்று :(:(

Share this post


Link to post
Share on other sites

வணக்கம்!

ஏன்னையும் சேர்த்துக் கூறவில்லை. அப்படியென்றால் நான் இதைக் கூறி இருக்கமாட்டேன். ஒருவன் உதாரணமாக இருக்கவேண்டுமே தவிர மற்றவர்களை பிழை கூறலாகாது. தமிழீழ விடுதலைக்கும் சமயத்துக்கும் சம்பந்தமே இல்லை. நான் ஒரு சைவ சமயத்தவன். இந்து சமயத்தை இழிவு படுத்த வில்லை. ஆனால் மூட நம்பிக்கைகளில் ஊறியவன் அல்ல. களியாட்ட விழாக்களில் நான் பங்கு பற்றுவதை விட்டு இன்றோடு 25 வருடத்திற்கு மேலாகிவிட்டது. புலம் பெயர்ந்த நாடுகளில் ஒவ்வொரு வார இறுதியில் ஏதாவது ஒரு களியாட்ட நிகழ்ச்சி இன்றும் நடை பெற்றுக்கொண்டு இருக்கின்றது. இருநூறு, நூறு டாலர்கள் என்று மக்கள் கொடுத்துப் பார்க்கின்றார்கள். எமது மூதாதையர் விட்ட பிழைகளால்தான் இன்று தமிழினம் அழிந்து கொண்டிருக்கின்றது. ஆமாம் பிள்ளை பிறந்தால், 11, 31, என்று கொண்டாட்டங்கள். அதன் பின்பு பிறந்த நாள் விழாக்கள். அரங்கேற்றங்கள். பூப் புனித நீராட்டு விழாக்கள். இப்படி பல. புலம் பெயர்ந்த நாடுகளில் ஆயிரக்கணக்கில் செலவு செய்து அன்னதானங்கள். இவைகளுக்கு நான் பணம் கொடுக்க வில்லை. ஆனபடியால் என்னைக் கேள்வி கேட்பதை விட்டு தாங்கள் தமிழினத்தைக் கேளுங்கள். அத்தோடு கொண்டாட்டங்கள் வைப்பது தனிப்பட்ட விடயம் என்று கூறுவார்கள். கேட்கும் பொழுது இதற்கு விடையும் தேவை!

நீங்கள் எல்லோரும் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள். புறநகருக்கு புறநகர் ஆலயங்கள் தேவையா? ஆயிரக்கணக்கில் தெருவில் தேங்காய்களை உடைக்கலாமா? ஆலயங்களைக் கட்டி அதன் பின்பு நீதி மன்றங்களில் சரணடையலாமா?. ஒரு நாட்டில் ஆலயத்தைக் கட்டி விட்டு அதன் தர்மகத்தா காவலோடு உறங்குவாராம். ஏன் போட்டி பொறாமை. சண்டை சச்சரவு. ஈழ விடுதலையில் ஒற்றுமையோடு போராடுகின்றார்களா? எத்தனை இயக்கங்கள். அன்றய அரசியல் வாதிகள் தங்களுக்கென்று தொடங்கி வைத்த கூட்டங்கள் இன்று இனவாத அரசின் கூலிப் படைகளாகிவிட்டது.

தமிழினத்தையோ இந்து மதத்தையோ இழிவு படுத்துவது எனது நோக்கமல்ல. ஏனெனில் நானும் ஒரு தமிழன். அதிலும் சைவ சமயத்தவன். மூட நம்பிக்கைகள் போராட்டத்தைத் தாமதப்படுத்தும். சிந்திக்க வைப்பதுதான் எமது நோக்கம். தலைவரைச் சுப்பண்ணை சந்திக்க வில்லை என்றால், மற்றவர்கள் சந்திக்க வில்லையென்று எப்படி ஆதங்கத்தோடு கூறலாம். தமிழீழப் போராட்டத்திற்கும், பிராமணரர்களுக்கும், தேங்காய் உடைப்பதற்கும் முடிச்சுப் போடுவது தவறானது.

பிழையான வழியில் தயவு செய்து திசை திருப்பவேண்டாம்.

நன்றி வணக்கம்

சாண்டில்யன்

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • சீமானின் திரியுடன் மல்லு கட்டவே தாத்ஸ் க்கு நேரம் சரியாக இருக்கிறது 😅
  • புத்தன் குமாரசாமி இருவருக்கும்  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
  • அமைச்சர் வியாழேந்திரன், நன் கீழே எழுதுவது தபால் அல்லது அஞ்சல் சேவை பற்றிய வேண்டு கோள்கள் மட்டுமே. தபால் துறையை பற்றி சில நாட்களுக்கு கூட இலங்கை தீவில் வசிப்பவருடன் உரையாட வேண்டிய சந்தர்ப்பம் வந்தது. தபால் துறைக்கு மறுசீரமைப்பு மிகவும் அவசியமாகிறது. தொழில்நுட்ப அறிமுகம் தேவை தான்.  ஆனாலும், எந்த சேவையாயினும், அதில் முக்கியமானது மனித வலுவும், ஊடாட்டமும் (interaction),  எத்தகைய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அறிமுகப்படத்தப்பட்டாலும். அதில் முக்கியமானது, தபால் அலுவலகங்களிற்கு வரும் வாடிக்கையாளர்களை, மரியாதையுடனும், மதிப்புடனும், கண்ணியமாக சேவையை வழங்குவது பற்றியது.      தபால் அலுவலங்கங்களுக்கு வரும் வாடிக்கையாளர் மீது எரிந்து விழுவதும, அவர்களை மரியாதையை குறைவாக நடத்துவதும், வாடிக்கையாளர் ஒருவர் மட்டும் வரும் போது (வேறு எந்த வாடிக்கையாளர் இல்லாத நிலையிலும்) அல்லது பல வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் போதே, தாம் ஏதோ பாரிய வேலைப்பளு சுமத்தப்பட்டு, அப்போது தான் வேகமாக வேலை செய்வது போன்று நடிப்பதும், அப்படி உண்மையில் வேலைப்பளு  இருந்தாலும் வாடிக்கையாளரை முதலில் கவனிக்க வேண்டியபோதிலும், அவர்களை கவனிக்காதது போன்று  புறக்கணித்து தாமதிக்க  வைப்பதும் நடைபெறுகிறது. இது இன்றல்ல, நேற்றல்ல, கலாதிகாலமாக நடைபெறுகிறது. இது எல்லா தபாலகங்களிலும் நடைபெறுவதாக கருத முடியாதாயினும், பொதுவாக, வெளிப்படையாக அவதானிக்கப்படக் கூடியவாறு தெரியாக் கூடியவாறு நடை  பெறுகிறது.     இதனால், பலர் தமது அருகில் இருக்கும் தபாலகத்தை தவிர்த்து, தமக்கு தூர இடங்களில் இருக்கும், அவர்களின் பார்வையில் தம்மை கண்ணியமாக நடத்தும் தபாலகத்தை நாடுகின்றனர். நீங்கள் , தபால் சேவையில் வாடிக்கையாளரே-முதன்மை (customer-first) எனும் சேவை நெறிமுறையை அறிமுகப்படுத்துங்கள். இதற்கு வாடிக்கையாளர் திருப்தி என்பதும் அளவிடப்பட வேண்டும்.  வாடிக்கையாளர் திருப்தி அளவிடுவதற்கு (செல்லிடப் பேசி இணையவெளி மூலமாக) கணக்கீடை (survey) அறிமுகப்படுத்துங்கள். வாடிக்கையாளர் திருப்தி அளவு மட்டம், தபாலகங்ளிடற்கு வழங்கப்படும் நிதியை நிர்ணயிக்கும் அளவு கோலிகளுள் (Metric) ஒன்றாக இருத்தல் அவசியம்.
  • உண்மைதான்.. ஆனால்,  இது நிரந்தரமாக இருக்காது.. Cost cutting கட்டாயம் ஏதாவது வழியில் வந்துவிடும்.. ஒன்றில் AI மூலம், மனிதவளத்தை குறைத்து இலாபத்தை ஈட்டமுனைவர்கள்... இல்லாவிடில், சில வருடங்கள் போனபின்பு மீண்டும் offshores நாடுவார்கள்.ஆனால் முன்பு மாதிரி முழுவதும் offshore தங்கியிராமல், இங்கேயும் ஆட்களை வேலைக்கு வைத்திருப்பார்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்..     
  • எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.🙏🏽 சிட்னி சிங்கம் புத்தனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.