Jump to content

இது தான் புலம்பெயர்ந்தவர்களின் தமிழ்த்தேசியம்

Recommended Posts

ஒற்றுமையை ஏற்படுத்துதல் அல்லது ஒற்றுமைக்கு குந்தகம் விழைவிப்பது தனிமனித சுதந்திரத்தில் தலையீடு செய்வது, நம்பிக்கைகளில் தலையீடு செய்வது போன்றன அதிகப் பிரசங்கித் தனமாக அமைந்துவிடுகின்றது. அதைவிட ஈழத்து நிலவரம் பல நுறு மடங்கு கவலையளிக்கின்றது. இரண்டையும் முடிச்சுப்போட முற்படுவது அபத்தம். இனம் சார்ந்தும் சமூக உறவுகள் சார்ந்தும் வலிமையான பிணைப்பை கொண்டவர்கள் அல்ல நாம். எம்மைப் பற்றி ஒரு விதமான கருத்துக்கும் வரமுடியாத போது விமர்சனம் என்பதுக்கு என்ன வேலை? இன்றைய நிலையில் பொங்கு தமிழ் போலவோ அல்லது வெல்க தமிழ் போலவோ எழுச்சி கொண்டு தாயக மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய கட்டாயம் இந்த பொங்குதமிழ் வெல்க தமிழை விட அதிகமாக உள்ளது. இருந்தும் அது நடக்காது. அதற்குரிய ஊக்கப்படுத்தல்கள் தேசியச் சார்பு ஊடகங்களில் நடக்காது. இதற்கொல்லாம் என்ன காரணம் என்று யாருக்கும் புரியவில்லை. மனிதாபிமானம் உள்ளவர்கள் வன்னிமக்களுக்கு எவ்வகையில் உதவ முடியுமோ அவ்வகையில் உதவுவோம், மனிதாபிமானம் உள்ளவர்களை நோக்கி ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்த முனையுங்கள் தவிர மனிதாபிமானத்தை புரியவைக்க முற்படாதீர்கள். இழி நிலைக்கு ஒரு எல்லை இருக்கின்றது, அதை தாண்டி கடமை செய்வதற்கு யாரும் உளவளம் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை.

Link to comment
Share on other sites

  • Replies 240
  • Created
  • Last Reply

விடுதலைப்புலிகள் மதம் தொடர்பாகச் சொல்லியது

எமது இயக்கம் மதசார்பற்றது எந்த ஒரு மதத்தையும் சார்ந்து நிற்காது எமது மக்கள் சார்ந்து நிற்கிற மதங்களை அரவணைத்து கெளரவித்து அவற்றுக்கு பொதுவாக நின்று நடுநிலையைக் கடைப்பிடிக்கும்

எமது விடுதலை இலட்சியப்போக்குக்கு மதங்கள் துணை நிற்கவேண்டும் இந்த சத்திய இலட்சியத்திற்கு யுத்தத்திற்கு ஆதரவாக மத நிறுவனங்கள் குரல் எழுப்பவேண்டும்

இது சகல மதங்களினதும் தார்மீக கடப்பாடு ஆகும் .

விடுதலைப்புலிகளின் ஏட்டிலிருந்து 1992 ஆம் ஆண்டு

விரிவாக வாசிப்பதற்கு http://eelavarkural.blogspot.com/2008/09/blog-post_533.html

சரி விசயத்திற்கு வருவோம்

இவ்வளவு காலமாக இங்கு இந்து மதம் பகுத்தறிவு பெரியார் நாத்திகம் என்று விவாதித்து ஒரு முடிவும் எட்டப்படவில்லை எட்டப்படப்போவதும் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும்

அதை விட புலிகளையும் அதற்குள் இழுத்து விட்டு நாறடித்திருக்கிறார்கள் இன்னும் நாறடித்துக்கொண்டிருக்கிறீர

Link to comment
Share on other sites

//பொதுவான படங்களையோ பரியோவன் கல்லூரி போன்ற களியாட்டங்களின் படங்களையோ வெளியிடுவதில் தப்பில்லை

ஆனால் மதம் சார்ந்த தனிப்பட்டவர்களின் படங்களை வெளியிடுவதற்கு யார் அனுமதி அளித்தது ????? //

அது என்ன மதம் சார்ந்த தனிப்பட்ட படங்களை மட்டும் தனிக்கை செய்ய வேண்டும் ஆனால் மற்றைய நிறுவனக்கள் சார்ந்த தனிப்பட்ட படங்களை வெளியிட வேண்டும்?

ஏன் இரட்டைத் தனமான அணுகு முறையை வேண்டி நிற்கிறீர்கள்?

கேளிக்கைகள் அவை மதம் சார்ந்தவையாக இருந்தாலும் மதம் சாராதவையாக இருந்தாலும் இந்த நேரத்தில் தேவையில்லாதவை என்பதே பகுதறிவுள்ளவர்களின் நிலைப்பாடு.ஆனால் இங்கே மதம் சார்ந்து கருதுக்களை முன் வைப்பவர்கள் எல்லோரும் சொல்லிக் கொண்டிருப்பது, மதம் சார்ந்த கேளிக்கைகளில் கைவைக்காதீர்கள் அவற்றை விமர்சிக்காதீர்கள் என்பதே.மதத்தை விமர்சிப்பவர்கள் பரி யோவான் கல்லூரி முதலாய எல்லா பாடசாலைகளாலும் நடாத்தும் கேளிக்கைகளை விமர்சிப்பவர்கள் .தமிழ் சினிமாவின் தாக்கத்தை விமர்சிப்பவர்கள்.ஆடம்பரமான அனாவசியமன் செலவுகளை விமர்சிப்பவர்கள்.

இங்கே மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம் என்று கருத்து எழுதுபவர்கள் யார் என்பதை எழுதப்படும் பக்கச் சார்பான கருதுக்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்,

எல்லா அனாவசியமான செலவுகளையும் குறைத்து மதம் சார்ந்தவை அடங்கலாக தேசிய பாதுகாப்புக்கும் மக்களின் பாதுகாப்புக்கும் நிதிகளை வழங்குவதே இப்போதைய அவசயமான அவசரமான தேவை.அதனை அந்த அந்த மதம் சார்ந்த/ சாராதா நிறுவனங்களை நாடத்துபவர்களும், அதோடு சமபந்தப்படவர்களூம் இப்போது செய்ய வேண்டும்.

Link to comment
Share on other sites

அது என்ன மதம் சார்ந்த தனிப்பட்ட படங்களை மட்டும் தனிக்கை செய்ய வேண்டும் ஆனால் மற்றைய நிறுவனக்கள் சார்ந்த தனிப்பட்ட படங்களை வெளியிட வேண்டும்?

ஏன் இரட்டைத் தனமான அணுகு முறையை வேண்டி நிற்கிறீர்கள்?

பரியோவன் கல்லூரி தனது இணையத்தில் வெளியிட்ட படத்தை இங்கு வெளியிடுவதில் என்ன தவறிக்கிறது ??????

அவர்களே பகிரங்கப் படுத்தியிருக்கிறார்கள் அதில் எந்த தனிப்பட்ட சுதந்திரமும் இல்லை ஆனால் அவர்களின் படங்களை வைத்து விமர்சனம் செய்தது தவறு

அதுவும் சிறு பிள்ளை யை ஒப்பிட்டும்

ஆனால் மத வழிபாட்டிலிருக்கும் ஒரு பெண்ணை காட்டி விமர்சிப்பது சரி என்கிறீர்களா ????? அவர் படத்திற்கு போஸ் கொடுப்பதற்காகவா காவடி எடுக்கிறார் ????

கேளிக்கைகள் அவை மதம் சார்ந்தவையாக இருந்தாலும் மதம் சாராதவையாக இருந்தாலும் இந்த நேரத்தில் தேவையில்லாதவை என்பதே பகுதறிவுள்ளவர்களின் நிலைப்பாடு.ஆனால் இங்கே மதம் சார்ந்து கருதுக்களை முன் வைப்பவர்கள் எல்லோரும் சொல்லிக் கொண்டிருப்பது, மதம் சார்ந்த கேளிக்கைகளில் கைவைக்காதீர்கள் அவற்றை விமர்சிக்காதீர்கள் என்பதே.மதத்தை விமர்சிப்பவர்கள் பரி யோவான் கல்லூரி முதலாய எல்லா பாடசாலைகளாலும் நடாத்தும் கேளிக்கைகளை விமர்சிப்பவர்கள் .தமிழ் சினிமாவின் தாக்கத்தை விமர்சிப்பவர்கள்.ஆடம்பரமான அனாவசியமன் செலவுகளை விமர்சிப்பவர்கள்.

மதம் சார்ந்தவற்றை விமர்சிக்க வேண்டாம் என்று சொல்ல வில்லையே ????? ஆனால் அவர்களை எதிரியாக இவர்கள் விமர்சிப்பது ஏன் ???? படங்களிருப்பவர்களை வைத்து எழுதப்படும் விமர்சனத்திற்கு

இந்த ப்படங்களிலிருப்பவர்கள் உங்கள் உறவினரானால் உங்கள் மனோநிலை எப்படியிருக்கும் ????? அல்லது இவர்கள் பார்த்தால் என்ன முடிவுக்கு வருவார்கள் ??????

உங்கள் பகுத்தறிவைப் பற்றி சிந்திக்கமாட்டார்கள் இன்னும் மூர்க்கமாக அல்லது எதிராக மாறுவார்கள்

உதாரணத்திற்கு இங்கு இருவர் மோதி கடைசியில் தேசியத் தலைவரின் மேல் கடிந்து கொண்டது போல்

எல்லா அனாவசியமான செலவுகளையும் குறைத்து மதம் சார்ந்தவை அடங்கலாக தேசிய பாதுகாப்புக்கும் மக்களின் பாதுகாப்புக்கும் நிதிகளை வழங்குவதே இப்போதைய அவசயமான அவசரமான தேவை.அதனை அந்த அந்த மதம் சார்ந்த/ சாராதா நிறுவனங்களை நாடத்துபவர்களும், அதோடு சமபந்தப்படவர்களூம் இப்போது செய்ய வேண்டும்.

இதற்கு நீங்கள் செய்யும் நக்கல் நையாண்டிகள் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் ஏற்றுக்கொள்வார்களா ??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1. இந்தத் திரியின் தலைப்பே "இது தான் புலம்பெயர்ந்தவர்களின் தமிழ்த்தேசியம்". நீங்கள் இதில் பங்கேற்று இந்து மத நடைமுறைகள் சிலவற்றை குறை சொல்லும் பொழுது நீங்கள் போராட்ட அரசியலில் மதத்தை கலப்பதில் பங்கெடுக்கிறீர்கள். எவருடைய மத உனர்வுகளை புன்படுத்துதளும் எந்த வழியிலும் போராட்டத்திற்கு உதவப் போவதில்லை.

2. பிராமன சமுதாயத்த நேரிடையாகவே குறை சொல்கிறீர்கள். ஒரு சமூகத்தை ஒட்டு மொத்தமாகவே குறை சொல்தல் நாகரீகமன்று. சிங்களவரின் இனவெறிக்கு அவர்கள் கொடுத்த விலை கொஞ்ச நஞ்சமில்லை. போராட்டத்திற்கும் அவர்கள் பின் நிற்கவில்லை. நாம் மிகச் சிருபான்மையினர். மேலும் பிரிவுகள் தேவையில்லை.

3. மூட நம்பிக்கை போராட்டத்தை தாமதப்படுத்தும் என்கிறீர்கள். கடந்த 30 வருடங்களில் மூட நம்பிக்கை போராட்டத்தை எந்த அளவிற்கு பின் தள்ளியது என்று சொல்லமுடியுமா?

4. புலம்பெயர்ந்தவர்களின் போராட்டத்திற்கான பாரிய பங்களிப்பு, கோவில் தேங்காய் அடிப்பை நிறுத்தியது தான் என்று முடிந்து விடக்கூடாதல்லவா? :(

வணக்கம்

தங்களுடைய கேள்விகளுக்கு சில விடைகள்.

1. “புலம் பெயர்ந்தவர்களின் தமிழ்த் தேசியம்”;- இதற்கும் தேசிய விடுதலைப் போரட்டத்திற்கும் எதற்காக முடிச்சுப் போடுகின்றீர்கள். உண்மைகள மறைப்பதால் ஒருவருக்கும் லாபமில்லை. 21ம் நூற்றாண்டில் வெள்ளையர்கள் எவ்வளவோ முன்னேறியிருக்கின்றார்கள். அவனுடைய நாட்டில் நாம் வந்து எமக்கு இசைந்தபடி செய்கின்றோம். புலம் பெயர்ந்த தமிழனோ இன்றும் பழைய நூற்றாண்டு வாழ்க்கைதான். என்னுடைய குறிப்புக்கள் போராட்டத்தைப் பற்றியதல்ல. மூட நம்பிக்கைகளைப் பற்றியது. எதற்காக என் குறிப்புக்களை போராட்டத்தோடு சம்பத்தப் படுத்துகின்றீகள். உண்மையைச் சொன்னால் எதற்காக பிழை சொல்கின்றீர்கள். மனிதன் என்றும் சிந்தித்துச் செயல்படுவதுதான் சிறப்பான வாழ்க்கை.

2. பிராமண சமுதாயத்தை குறை கூறவில்லை. சுட்டிக்காட்டியுள்ளோம். உதாரணம். உழுது நெல்லை அறுபடை செய்து விற்பவன் அந்தப்பணத்தில் வரும் பணத்தில் தனது வாழ்க்கையை நிர்ணயிக்கின்றான் (நெல்லு, அரிசி), . உயிரை பணயம் வைத்து ஆழக்கடலில் மீன் பிடித்து விற்று அதில் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றான் மற்றவன் (மீன், இறால்..). மண்ணில் மண்பாத்திரம் செய்து விற்று வாழ்க்கையை நிர்ணயிக்கின்றான் இன்னொருவன் (மண் பாத்திரங்கள்). இப்படி பல பல தொழில்கள். இவர்கள் எல்லோரும் தொழிலாளிகள். அதாவது (productive & constructive people of the society). ஆனால் பிராமணரர்கள் தொழில் என்ன. புரியாத மொழியில் எதோ கூறி வருடத்திற்கு 80,000 டாலர்கள் வரை சம்பாதிக்கின்றார்கள். பிராமணர்களின் “விளைபொருள்” என்னென்று கேட்டால் என்ன கூறுவீர்கள். தயவு செய்து தமிழீழத்திற்கும், போராட்டத்திற்கும். தேசியத்திற்கும், இதற்கும் முடிச்சுப் போடவேண்டாம்.

3. மூட நம்பிக்கைகள் போராட்டத்தைத் தாமதப் படுத்தும். பழைய நூற்றாண்டுகளில் அப்பாதெயிட் (Apartheid) தென் ஆபிரிக்காவில் நிலவியதென்கின்றோம். யாழில் நிலவவில்லையா. சிந்தியுங்கள். சாதி வெறி இன்று புலம் பெயர்ந்த நாடுகளில் மிகவும் தீவிரமாக பழக்கப்பட்டு வருகின்றது. இன்று பல கூலிப்படைகள் இல்லையென்றால், தமிழீழம் என்றோ மலர்ந்திருக்கும். கூலிப்படை தோன்றிய காரணங்கள்? உமா மகேஸ்வரன் கூலிப்படையை ஆரம்பித்து வைத்தான். இன்று கோடி டாலர்களில் ஆலயங்களைக் கட்டவில்லையென்றால் என்னெவென்று சிந்தியுங்கள். மேலும் ஒரு உண்மை: விடுதலைப்போராளி என்று சிலர் தங்களுடைய சிநேகிதர் பிள்ளைகளுக்கு சாதி என்றால் என்னவென்று கூறி வெறியை ஊட்டுகின்றார்கள். இப்படிப்பட்ட மானிடர் விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டுமா?. விவாதித்தால் பல உண்மைகள் வெளி வரலாம். அது தேவையில்லை?

4. பாரிய பங்களிப்பு எப்படி அளிக்கலாம். இது எமக்கு புதிதல்ல? 30/50 டாலர்களைக் கொடுத்துவிட்டு முட்டை போட்ட --- கொக்கரிக்கின்றார்கள் சிலர். மற்றவர்களைக் குறை கூறுகின்றீர்கள். பாரிய பங்களிப்பு மக்கள் அளிக்கவில்லையென்றால் 25 வருடத்தினில் இப்படி பிரமாண்டமான ஒரு இராணுவத்தை கட்டி எழுப்பமுடியுமா?

5. தமிழீழம் மலரும்பொழுது தமிழீழத் தமிழினம் ஒரு ஆரோக்கியமான சாதி, மத வெறியில்லா, அன்பும், பண்பும் கொண்ட விஞ்ஞான வழியில் சிந்திக்கத் தெரிந்த ஒரு மக்கள் ஆட்சியாக மலரவேண்டுமென்பதே எல்லோரது அபிலாசைகள்.

6. இதற்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் பங்களிப்பு அவசியம்.

நன்றி வணக்கம்

சாண்டில்யன்

Link to comment
Share on other sites

d2e33bl4.jpg

d5m18rz6.jpg

dasavatharam-stills-2.jpg

d1m1yf6.jpg

d1m5zf1.jpg

d5m44hi8.jpg

d5m31hp4.jpg

d5m34zt4.jpg

d5m47iv5.jpg

2 ஆம் உலகமாயுத்தத்தின் போது பேரை எதிர்கொண்ட அமெரிக்க அரசு மக்களிடம் தனியார் நிறுவனங்களிடம் நிதி திரட்டிய முறைகளில் சில

Link to comment
Share on other sites

தற்காலத்தில் காசா மீது உருவாக்கப்பட்டுள்ள பொருளாதார தடை மீது எப்படிப்பட்ட சர்வதேச கவனம் மனித உரிமை ஆவலர்களின் நடவடிக்கைகள் இருக்கிறது?

Link to comment
Share on other sites

1- போட்டப்பட்ட படங்கள் அனைத்தும் பொது இணையத்தில் தேடல் பெறிகள் மூலம் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்த படங்கள் தான். அதிலும் முதல் போட்ட படங்களில் தனிநபர்களை close-up ஆக எடுத்த படங்கள் தவிர்க்கப்பட்டிருந்தது. முதலில் தனிநபர் close-up படங்களை போட்டது பரியோவன் கல்லூரி களியாட்டம் சம்பந்தப்பட்ட படங்களை இணைத்தவர்.

2- மற்றும் படி களியாட்டங்கள் பூப்புனித நீராட்டு விழா திருமணம் என்பவற்றில் விரையமாகும் பொருளாதாரம் பற்றியும் நிலைப்பாடு வேறு அல்ல. அவையும் இந்து மதத்தின் பெயரால் விரையமடிக்கப்படும் பொருளாதார வளம் போன்று விரையமானது தான். அது பற்றிய தகவல்களை இணைத்து இந்த திரியை பூரணப்படுத்தியவர்களிற்கு நன்றி.

3- அடிப்படையில் எமது செயற்பாடுகள் அனைத்தும் தேசியத்திற்கு பலம் சேர்க்க வேண்டும் என்பது தான் நோக்கம். இன்று தமிழ்த் தேசியம் எதிர்கொள்ளும் தேவைகள் சவால்களிற்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றில் எமது மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார மனிதவளங்கள் செலவிடப்பட வேண்டும்.

உதாரணத்திற்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு நிதி திரட்டல் பற்றிய போட்டி ஒன்று யாழ்களத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட போது முன்வைக்கப் பட்ட யோசனை ஒன்று திருமண பிறந்ததினம் போன்ற நிகழ்வுகளிற்கு வழங்கும் பரிசுகள் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்திற்கான தாக கொடுக்கப்படும் போன்றது என்று.

4- போசன விருந்து நிகழ்வுகள் மூலம் உள்ளூர் ஊடகத்துறை அரசியல்வாதிகள் மனிதஉரிமை ஆவலர்களுடன் உறவாட வேண்டியிருக்கும். தமிழர் தினம் தமிழர் விளையாட்டுப் போட்டி போன்றன நாம் வாழும் சமூகத்தவர்களோடு உறவாட சந்தர்ப்பங்களை அதிகரிக்கிறது.

5- நிதி திரட்டலிற்காக நடக்கும் இசை நிகழ்ச்சியை எடுத்துக் கொண்டால் அது பொருளாதார ரீதியில் இலாபம் தருகிறது. அந்தளவு தொகையை ஒரு குறித்த காலத்தில் வேறு வழிகளில் சேகரிக்க முடியாது என்பதால் தான் அப்படி ஒரு முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

ஒரு அண்ணளவான கணக்கு உதாரணத்திற்கு: ஒரு இசை நிகழ்ச்சிக்கு டிக்கற்றுகள் வித்து 150000 பவுண்ஸ் எடுக்கலாம் விளம்பரங்கள் மூலம் 50000 எடுக்கலாம் என்றால் மண்டப ஏற்பாடுகளிற்கு 40000, ஏனைய செலவுகளிற்கு 10000, கலைஞர்களிற்கு 50000 என்று செலவுகள் போக 10000 இறுதிப் பயன்பாட்டிற்கு திரட்டப்படுகிறது போன்ற ஒரு வினைத்திறன் மிக்க சமன்பாட்டின் அடிப்படையில் தான் ஒரு 10 பேர் நேரம் செலவிட்டு 3...4 மாத காலப்பகுதிக்குள் ஒழுங்கமைக்கப்படுகிறது.

6- மறுவளத்தில் கோவில்களை எடுத்தால் தேர் ஒன்றிற்கு எத்தனை லட்சம் பவுண்ஸ்? இராச கோபுரத்துக்கு எத்தனை லட்சம், ஏனைய ஆடம்பரங்களில் முடக்கப்பட்டிருப்பதன் பெறுமதி எத்தனை லட்சங்கள்? அதிகப்படியாக என்ன செய்கிறார்கள் ஒவ்வொரு கோயில்களும் தமது வருமானத்தில் ஒரு 10000 அனாதைப் பிள்ளைகளை பெறுப்பெடுத்து நடத்துகிறார்களா? 30 வருடங்களிற்கு மேலாக போராடி அழிவைச் சந்தித்து வரும் சமூகத்தில் இருந்து எத்தனை லட்சங்களை கடவுளின் பெயரால் உறிஞ்சுகிறார்கள் அதில் எத்தனை வீதம் பயனுள்ள முறையில் சமூகத்திற்கு மீள முதலீடு செய்யப்படுகிறது? 50 வீதம்? 20 வீதம்? 10 வீதம்?

7- AIPAC எத்தனை கோடிகளை ஒரு வருடத்திற்கு செலவிடுகிறது lobbying இற்கு. ஏன் அந்தப் பணத்தை போட்டிக்கு சினொகொக் கட்ட பாவிக்க யோசிக்கவில்லை? நாடு அங்கீகாரம் எல்லாம் உள்ளவர்களே எந்தளவிற்கு கவனமாக இருக்கிறார்கள். ஆனால் ஒண்டும் இல்லாத தமிழ் மந்தைகள் என்ன செய்யுது கோடிக்கணக்கில் செலவழித்து கருங்கல்லையும் மரக்குத்தியளையும் இறக்குமதி செய்து போட்டு அதுகளுக்கு முன்னுக்கு நிண்டு வேப்பம் குழையை கட்டிக் கொண்டு ஆடுதுகள்.

8- பலஸ்தீனர்களுக்கு அரபுநாடுகள் அரசியல் இராணுவ இராசதந்திர ரீதியில் உதவாவிட்டாலும் ஏதோ மனிதாபிமான தேவைகளுக்கு என்றாகுதல் அவ்வப்போது சில மில்லியன்களை விட்டெறிகிறார்கள். ஆனால் தமிழ்த் தேசியத்தைப் பொறுத்தவரை எமது பொருளாதார வளம் ஒன்றில் தான் எல்லாவற்றிற்கும் தங்கியிருக்கிறது.

ஏற்கனவே சில முறை சொன்னது போல் எதிர் வரும் சில வருடங்களிற்கு பொருளாதார ரீதியில் மிகவும் கடினமானதாக அனைத்து மேற்குலக நாடுகளிற்கும் இருக்கப் போகிறது. இன்றைய நிகழ்வுகளின் முழுத்தார்ப்பரியத்தை சராசரி புலம்பெயர்ந்தவர்கள் உணர 2009 ஆகும். புலம்பெயர்ந்த தமிழர்களை பொறுத்தவரை பெரும்பாலும் மேற்குலகில் தான் இருக்கிறார்கள். எனவே சிறீலங்காவை விட தாயகம் தான் பொருளாதாரத்தில் ஒப்பீட்டளவில் அதிகம் இதன் தாக்கங்களை உணரப் போகிறது. அங்கு இன்றைய நிலமை ஏற்கனவே கவலைக்கிடம். மேற்குலகில் மந்தமடைந்துவரும் பொருளாதாரம் அதை மேலும் மோசமாக்கப் போகிறது. இது எத்தனை வருடங்களால் போராட்டத்தை பின் தள்ளப்போகிறது அந்த தாக்கத்தை எப்படி மட்டுப்படுத்தலாம் என்ற சிந்தனைகளில் இருக்க வேண்டியவர்கள் ஆனால் நாம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சைவசமயத்தை சேர்ந்தவன்.அதிலும் கடவுள் நம்பிக்கை அதிகமுள்ளவன்.

மத நம்பிக்கையென்பது அவரவர் சொந்தவிடயம்.அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை.இருப்பினும் இன்றைய காலகட்டத்தில் எம் புலம்பெயர் உறவுகள் பக்தி,நேர்த்திக்கடன் எனும் பெயரில் அளவுக்கு மிஞ்சி விட்டார்கள்.

இது உண்மையிலேயே கவலைக்குரியதும் நகைப்புக்குரியதாகவும் உள்ளது.

இப்படியான ஆடம்பர பக்தி வழிபாடுகள் ஈழத்தில் இல்லாமலில்லை.இருந்தாலும் புலம்பெயர் நாடுகளில் இப்படியான கவர்ச்சிகர வழிபாடுகள் நாளொருவண்ணமும் பொழுதொருனியுமாக வளர்ந்து வருகின்றது.

அங்கே தினசரி அல்லலுறும் எம் உறவுகளை நினைத்து இப்படியான கேளிக்கை வழிபாடுகளை நிறுத்தினால் என்ன??????

அடுத்து பழைய மாணவர் சங்க ஒன்று கூடல்களுக்கு என்னத்தை சொல்வது?அவர்கள் படித்தவர்கள்,பட்டம் பெற்றவர்கள்,நாலும் தெரிந்தவர்கள்.நல்லதையே செய்வார்கள் :lol:

Link to comment
Share on other sites

எமது ஈழ போராட்டத்துக்கு எதிராக அயராது யாழ்களத்தில் உழைப்பவர் மூவர்... குறக்கு நாரதர் சபேசன்... இவர்கள் மட்டும்தான் எமக்குள் இருக்கும் பிளவுகளை மட்டும் பேசி எங்களை பிரிக்கிறார்கள். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை- அதற்காக மாமிசம் சாப்பிட்டால் கோவிலுக்கு போறேல. நான் கடவுளுக்கு மதிப்பைக் கொடுக்கா விடினும் அவரை நம்பும் பக்தர்களுக்கு மதிப்பு கொடுக்குறேன்.பக்தர்களும் பகுத்தறிவு வாதிகளுக்கு மதிப்பு கொடுங்கோ.

Link to comment
Share on other sites

எமது சமூகத்தில் இருக்கும் பலவீனங்கள் களையப்பட்டால் தான் போராட்டத்தின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு அதன் இறுதி இலக்கை அடைய முடியும். அதற்கான பல திரட்ச்சியைப் (critical mass) பெற முடியும். அந்த சமூக சீர்திருத்தம் அறிவியல் மயப்பட்ட பலமான தேசியமாக தமிழினம் மாற்றம் பெறுவதற்கான கால அவகாசத்தை தாயகத்தில் உள்ளவர்களின் அர்பணிப்புகள் தியாகங்கள் மூலம் பெற முயற்சிக்கிறார்கள். இவை தற்காலிக வழிமுறைகளாக இருக்க முடியுமே அன்றி போராட்டத்தின் இறுதி அத்தியாயத்து வழிமுறைகளாக இருக்க முடியாது.

இவற்றை போராட்டம் முடிந்த பின் புடுங்குவும் என்று விட்டால் கரும்புலிகளுக்கும் தமிழ் இன அழிப்பு படுகொலைகளிற்கும் கைய்யாலத தனமாக கவிதை எழுதி எழுதியே எமது சரித்திரத்தை முடிக்க வேண்டியது தான்.

இவற்றை எல்லாம் புடுங்காமல் போராட்டத்திற்கான தேவைகளை பூர்த்தி செய்யலாம் என்றால் அவை ஏன் இதுவரை நடக்கவில்லை?

யாழ்களத்தில் பிளவுகள் வருவது கருத்துக்ளாக பார்பதை விட அது யாருடையது அதற்கு எப்படி எதிராக எழுதலாம் என்று அலைபவர்களால் தான். சில உதாரணங்கள் இதோ:

சர்வதேசமும் புலம்பெயர்ந்த தமிழர்களும்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=26082&hl=

இந்தியச் சினிமாவும் புலம்பெயர்ந்த தமிழ் மந்தைகளும், சில கேள்வி பதில்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=25341&hl=

உல்லாசப் பயணிகள், தேயிலை மற்றும் புடவை ஏற்றுமதி

http://www.yarl.com/forum3/index.php?showtopic=17474&hl=

புலிகளின் "பதுங்கலும்" புலம்பெயர்ந்த ஊடகர்கள் ஆய்வாளர்களின் "பாச்சலும்"

http://www.yarl.com/forum3/index.php?showtopic=18170&hl=

தனித்துவமான தமிழினம், தனிநாடு சாத்தியம் தானா?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=29584&hl=

இப்படிச் செய்வது சரியா?, மனச்சாட்சி பேசிது..

http://www.yarl.com/forum3/index.php?showtopic=30008&hl=

கருத்துப்படம் - 31.10.2007, சமச்சீரற்ற படைவலுச் சமநிலை

http://www.yarl.com/forum3/index.php?showtopic=30328&hl=

கருத்துப்படம் - 10.10.2007

http://www.yarl.com/forum3/index.php?showtopic=29449

கருத்துப்படம் - 12.12.2007

http://www.yarl.com/forum3/index.php?showtopic=32016

கருத்துப்படம் - 02.01.2008

http://www.yarl.com/forum3/index.php?showtopic=32884

http://www.yarl.com/forum3/index.php?showtopic=43825

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி அருஸ்!

சாண்டில்யன் சொன்னதில் என்ன தப்பு உள்ளது? அவர் ஜதார்த்தத்தை புரிந்த மனுசன் அவர் சொன்னதில் ஓரு தப்பும் இல்லை. ஆனால் தானும் படுக்காது தள்ளியும் படுக்காது என்ட தத்துவம் கேள்விப்பட்டனிங்களே. நல்ல கருத்துக்கள் எழுதைக்கிள்ள பொறுமையாக இருங்கோ அதவிட்டுட்டு ஆரையும் குறை சொல்லிக்கொண்டே இருக்காதேங்கோ. இதுகூட எமது வளர்ச்சிக்கு தடையாயிருக்கலாம்.

யாருக்கும் யாரையும் திருத்த அருகதையில்லை.

Link to comment
Share on other sites

எங்கட சில புலம்பெயந்த மக்களின்ர " டமிழ் டேசியத்திற்கு " முட்டுக் கொடுக்கிற வேலைகளை பார்த்தால் நெஞ்சில அப்படியே டமிழ் வீரமும் டமிழ் மணமும் பொத்துக் கொண்டு வந்து டமிழிழத்திற்கான வாசல் கதவுகளை இந்தா நாளைக்கு திறந்நிடும் போல கிடக்குது.

இதில புலம்பெயாந்தவையளிளல ஏதோ எல்லோரும் சிங்களனினர ஆட்டுமியத்தால தான் வெளிக்கிட்டுப் பொய் பிறகு அங்க டமிழ் தேசியத்திக்கு தேங்காய் உடைச்சு பக்கபலமாய் நிக்கிறதும் பிற்கு பியரை அடிச்சு மப்பேத்திப் போட்டு குத்தாட்டம் போட்டு டமிழ் தேசியத்தை காப்பாற்றுறதும் எண்டில்ல தானே ? இந்தா இஞ்ச இருந்து போய் நானும் என்ர குடும்பமும் தப்பினால் காணும் நாங்கள் சந்தோசமாக இருந்தால் போதும் ...... ஈழத்தில புலியளும் கரும்புலியயும் இடைக்கிடை சிங்களவனுக்கு அடிப்பினம் அதில சந்தோசப்படுவம் ...........எண்ட அதி புத்திசாலித்தனம் மண்டையில இருந்து கால் வரை ஊறிப்போனதுகள் என்ன செய்ய ???

Link to comment
Share on other sites

d2e33bl4.jpg

d5m18rz6.jpg

dasavatharam-stills-2.jpg

d1m1yf6.jpg

d1m5zf1.jpg

d5m44hi8.jpg

d5m31hp4.jpg

d5m34zt4.jpg

d5m47iv5.jpg

:lol::lol::D

என்ன ராசா ! டமிழ் தேசியத்திற்கு ஓரு வெள்ளை இனத்தவரையும் அழைத்து இவ்வாறு ஓரு மிகப்பாரிய இராஐதந்திர முறையில் நகர்வு செய்யும் டமிழ் மக்களை எண்ணும் போதும் ......

வாழத்துக்கள் ... இராஐதந்திர முறையிலன நகர்வகள் மிகச்சிறப்பாக நகர்வதற்கு வாழ்த்தக்கள்..... அப்பிடியே கூத்தமைப்புக்காரைiயும் சேர்த்தால் நல்லது.

Link to comment
Share on other sites

பரியோவன் கல்லூரி தனது இணையத்தில் வெளியிட்ட படத்தை இங்கு வெளியிடுவதில் என்ன தவறிக்கிறது ??????

அவர்களே பகிரங்கப் படுத்தியிருக்கிறார்கள் அதில் எந்த தனிப்பட்ட சுதந்திரமும் இல்லை ஆனால் அவர்களின் படங்களை வைத்து விமர்சனம் செய்தது தவறு

அதுவும் சிறு பிள்ளை யை ஒப்பிட்டும்

ஆனால் மத வழிபாட்டிலிருக்கும் ஒரு பெண்ணை காட்டி விமர்சிப்பது சரி என்கிறீர்களா ????? அவர் படத்திற்கு போஸ் கொடுப்பதற்காகவா காவடி எடுக்கிறார் ????

அதே போல் டான்ஸ் ஆடுகிறவரும் சொல்வார் நான் படதுக்கு போஸ் கொடுக்கவில்லை 'மது' அருந்தியதால் எனக்கு 'கலை' வந்தது அதனால் ஆடினேன் என்று.அதே போல் தான் 'மதம்' பிடித்தவரும் எனக்கு தெய்வக் கலை வந்ததால் ஆடினேன் என்று இரண்டு பேரும் படதுக்கு போஸ் கொடுக்கவில்லை.படங்கள் எங்கே இருந்து எடுக்கப்பட்டன தனி நபர்களின் க்லோஸப் படங்களை யார் போட்டது இப்போது அவை அகற்றப்பட்டு விட்டன போன்ற விளக்கங்களை குறுக்காலபோனவர் சொல்லி விட்டார்.மேலும் நான் விளக்கத் தேவை இல்லை.

மதம் சார்ந்தவற்றை விமர்சிக்க வேண்டாம் என்று சொல்ல வில்லையே ????? ஆனால் அவர்களை எதிரியாக இவர்கள் விமர்சிப்பது ஏன் ????

ஒருவரின் செயற்பாட்டை விமர்சித்தல் என்பதை 'எதிரியாக விமர்சித்தார்' என்று நீங்கள் தான் சொல்கிறீர்கள்.இந்த விமர்சித்தலில், எதீரி என்பது எங்கு வருகிறது என்பதை , விமர்சிக வேண்டாம் என்று சொல்லும் நீங்கள் தான் தெளிவு படுத்த வேண்டும்.அத்தோடு 'நண்பனாக' எப்படி விமர்சிப்பது என்பதையும் தெளிவு படுத்த வேண்டும்.

படங்களிருப்பவர்களை வைத்து எழுதப்படும் விமர்சனத்திற்கு

இந்த ப்படங்களிலிருப்பவர்கள் உங்கள் உறவினரானால் உங்கள் மனோநிலை எப்படியிருக்கும் ????? அல்லது இவர்கள் பார்த்தால் என்ன முடிவுக்கு வருவார்கள் ??????

படங்கள் புலத்தின் நிதர்சனத்தின் காட்சிகள். நாளும் பார்ப்பதைத் தான் படங்களில் பார்க்கிறோம்.உண்மைகள் சுடும் தான், அதற்காக அவற்றை பூசி மெழுக வேண்டுமா? ஏன் உண்மைகளை மறைக்கப் பார்க்கிறீர்கள்? எதற்குப் பயப்படுகிறீர்கள்? சத்தியம் பவ! ஓம் சாந்தி சாந்தி !

உங்கள் பகுத்தறிவைப் பற்றி சிந்திக்கமாட்டார்கள் இன்னும் மூர்க்கமாக அல்லது எதிராக மாறுவார்கள்

உதாரணத்திற்கு இங்கு இருவர் மோதி கடைசியில் தேசியத் தலைவரின் மேல் கடிந்து கொண்டது போல்

இதற்கு நீங்கள் செய்யும் நக்கல் நையாண்டிகள் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் ஏற்றுக்கொள்வார்களா ??????

நக்கல் நையாண்டிகள் எல்லாம் சித்தர்கள் காலம் முதல் செய்யப் படுபவை.பகுத்தறிவு என்பது சுயமாக ஒவ்வொருவர் மூளையிலும் எழுவது.பகுத்தறிவுப் பிரச்சராம் என்பது சிந்தனையைத் தூண்டுவது.தூண்டல் என்பது நக்கல் நையாண்டியாலும் நடை பெறும், விளக்கத்தாலும் நடை பெறும். நிதர்சனம் பற்றிய அதிர்ச்சி என்பதாலும் நடை பெறும்.இவ்வாறு நிதர்சனத்தைப் படங்கள் மூலம் காட்டுதல் மூலமும் நடை பெறும்.எல்லாம் சிந்தைனத் தூண்டலுக்கான வழி வகைகள்.இல்லை இந்த முறை பிழையானது இந்த முறை தான் சரி என்றால் , வாங்கள் நீங்களும் எப்படி திறமையாகப் பகுத்தறிவுப் பிரச்சராம் செய்வது என்று செய்து காட்டுங்கள் எக்களுடன் இணையுங்கள்.

உங்களின் அடிப்படைப் பிரச்சினை பகுத்தறிவுப் பிரச்சாராம் எப்படி திறமையாகச் செய்வது அல்ல உங்களின் பிரச்சினை உங்கள் பிரச்சராம் என்னை சிந்திக்கத் தூண்டுகிறது என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிறது எதோ செய்கிறது என்னை தூங்கவிடாமால் செய்கிறது என்பது தான் தோழரே. எனது கணிப்பீடு தவறு என்றால் எங்களை விடத் திறமையாக நீங்கள் செய்து காட்டுங்கள் உங்கள் பகுதறிவுப் பிரச்சராம் பற்றிய கவலையை நாங்கள் நம்புகிறோம்.

எமது ஈழ போராட்டத்துக்கு எதிராக அயராது யாழ்களத்தில் உழைப்பவர் மூவர்... குறக்கு நாரதர் சபேசன்... இவர்கள் மட்டும்தான் எமக்குள் இருக்கும் பிளவுகளை மட்டும் பேசி எங்களை பிரிக்கிறார்கள். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை- அதற்காக மாமிசம் சாப்பிட்டால் கோவிலுக்கு போறேல. நான் கடவுளுக்கு மதிப்பைக் கொடுக்கா விடினும் அவரை நம்பும் பக்தர்களுக்கு மதிப்பு கொடுக்குறேன்.பக்தர்களும் பகுத்தறிவு வாதிகளுக்கு மதிப்பு கொடுங்கோ.

உங்களுக்கு ஏன் கடவுள் நம்பிக்கை இல்லை வாசன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு எப்ப பார்த்தாலும் இந்து மதத்தை இழிவுபடுத்துவதை சில பேர் மும்மரமாக செய்துகொண்டிருக்கின்றனர் அதை சம்பந்தப்பட்டவர்களும் அனுமதித்துக்கொண்டிருக்கின்

Link to comment
Share on other sites

தேவையற்ற விவாதம்.விவாதம் ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் வேறு ஆனால் திசை மாறிக்கொண்டிருக்கின்றது

இன்னும் இதை மோகன் அண்ணா விட்டு வைத்திருக்கின்றார் என்றால் அதிசயம் தான் எல்லோருக்கும்

Link to comment
Share on other sites

சுப்பன்னை,

இந்து மதம் தான் இழிவானது மற்ற மதங்கள் சிறந்தவை என்று யார் எங்கே எப்போது எழுதி உள்ளார்கள் என்பதை மேற் கோள் காட்டவும்.உண்மைக்குப் புறம்பாகக் கருதுக்களை வெவ்வேறு முகமூடிகளில் வந்து உற்பத்தி செய்ய வேண்டாம்.

கிரித்துவ மத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகளைச் சுட்டிக் காட்டிய வண்ணமே மதங்ககளை விமர்சிப்பதன் மூலம் மக்களைக் காயப்படுத்தாதீர்கள் என்று சொல்லும் உங்கள் 'மக்கள் ' மீதானா அக்கறை புல்லரிக்க வைக்கிறது.

உங்களைப் பொறுத்தவரை மதம் எண்டால் அது இந்து மதம், மக்கள் என்றால் அவர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் என்னும் நிலைப்பாடு மிகத் தெளிவானது.

நாங்கள் மக்கள் மீதான கரிசனையாலையே மதங்களை விமர்சிக்கிறோம்.உங்களைப்போல இந்து மதம் மீதான மத வெறியின் அடிப்படையில் அல்ல.உங்கள் இந்த முகமூடியில் மக்கள் மீதான கரிசனை என்பது போலியானது என்பதை மீண்டும் ஒரு முறை அம்பலப் படுத்தி உள்ளீர்கள். நன்றி!

Link to comment
Share on other sites

வணக்கம்!

ஏன்னையும் சேர்த்துக் கூறவில்லை. அப்படியென்றால் நான் இதைக் கூறி இருக்கமாட்டேன். ஒருவன் உதாரணமாக இருக்கவேண்டுமே தவிர மற்றவர்களை பிழை கூறலாகாது. தமிழீழ விடுதலைக்கும் சமயத்துக்கும் சம்பந்தமே இல்லை. நான் ஒரு சைவ சமயத்தவன். இந்து சமயத்தை இழிவு படுத்த வில்லை. ஆனால் மூட நம்பிக்கைகளில் ஊறியவன் அல்ல. களியாட்ட விழாக்களில் நான் பங்கு பற்றுவதை விட்டு இன்றோடு 25 வருடத்திற்கு மேலாகிவிட்டது. புலம் பெயர்ந்த நாடுகளில் ஒவ்வொரு வார இறுதியில் ஏதாவது ஒரு களியாட்ட நிகழ்ச்சி இன்றும் நடை பெற்றுக்கொண்டு இருக்கின்றது. இருநூறு, நூறு டாலர்கள் என்று மக்கள் கொடுத்துப் பார்க்கின்றார்கள். எமது மூதாதையர் விட்ட பிழைகளால்தான் இன்று தமிழினம் அழிந்து கொண்டிருக்கின்றது. ஆமாம் பிள்ளை பிறந்தால், 11, 31, என்று கொண்டாட்டங்கள். அதன் பின்பு பிறந்த நாள் விழாக்கள். அரங்கேற்றங்கள். பூப் புனித நீராட்டு விழாக்கள். இப்படி பல. புலம் பெயர்ந்த நாடுகளில் ஆயிரக்கணக்கில் செலவு செய்து அன்னதானங்கள். இவைகளுக்கு நான் பணம் கொடுக்க வில்லை. ஆனபடியால் என்னைக் கேள்வி கேட்பதை விட்டு தாங்கள் தமிழினத்தைக் கேளுங்கள். அத்தோடு கொண்டாட்டங்கள் வைப்பது தனிப்பட்ட விடயம் என்று கூறுவார்கள். கேட்கும் பொழுது இதற்கு விடையும் தேவை!

நீங்கள் எல்லோரும் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள். புறநகருக்கு புறநகர் ஆலயங்கள் தேவையா? ஆயிரக்கணக்கில் தெருவில் தேங்காய்களை உடைக்கலாமா? ஆலயங்களைக் கட்டி அதன் பின்பு நீதி மன்றங்களில் சரணடையலாமா?. ஒரு நாட்டில் ஆலயத்தைக் கட்டி விட்டு அதன் தர்மகத்தா காவலோடு உறங்குவாராம். ஏன் போட்டி பொறாமை. சண்டை சச்சரவு. ஈழ விடுதலையில் ஒற்றுமையோடு போராடுகின்றார்களா? எத்தனை இயக்கங்கள். அன்றய அரசியல் வாதிகள் தங்களுக்கென்று தொடங்கி வைத்த கூட்டங்கள் இன்று இனவாத அரசின் கூலிப் படைகளாகிவிட்டது.

தமிழினத்தையோ இந்து மதத்தையோ இழிவு படுத்துவது எனது நோக்கமல்ல. ஏனெனில் நானும் ஒரு தமிழன். அதிலும் சைவ சமயத்தவன். மூட நம்பிக்கைகள் போராட்டத்தைத் தாமதப்படுத்தும். சிந்திக்க வைப்பதுதான் எமது நோக்கம். தலைவரைச் சுப்பண்ணை சந்திக்க வில்லை என்றால், மற்றவர்கள் சந்திக்க வில்லையென்று எப்படி ஆதங்கத்தோடு கூறலாம். தமிழீழப் போராட்டத்திற்கும், பிராமணரர்களுக்கும், தேங்காய் உடைப்பதற்கும் முடிச்சுப் போடுவது தவறானது.

பிழையான வழியில் தயவு செய்து திசை திருப்பவேண்டாம்.

நன்றி வணக்கம்

சாண்டில்யன்

வணக்கம்

அண்ணா உங்கள் மனதைக் காயப்படுத்துவதல்ல எனது நோக்கம் நான் எழுதியவை உங்கள் மனதைப்புண்படுத்தியிருந்தால

Link to comment
Share on other sites

மோட்டுச் சிங்களவரின் இராணுவ வளங்களை பறிச்சு அதாலை அடிச்சே தமிழீழம் காண்போம் என்ற மயக்கத்தி புலம்பெயர்ந்தவர்களை வைத்திருப்பதில் தமிழ் ஊடகங்களின் பங்கு பாரியது.

அமெரிக்காவே எத்தனை தடவை நிதித் திரட்டல் செய்தது. நம்மவர்கள் ஒருக்கா இறுதி யுத்தம் எண்டு வேண்டினாங்கள் ஏன் அடிக்கமால் இருக்கிறாங்கள் எண்டு ஆராச்சி செய்து பொழுது போக்காட்டினம். அதுக்கு மக்கள் இயல்பானவர்கள் அவர்களுக்கு இராணுவ நிலைக் கட்டுரை எழுதி போராட்டத்தில ஈடுபாடாக வைச்சிருக்க வேண்டும் எண்டு கொண்டு ஒரு கூட்டம் திரியுது.

war-bonds.jpg

82586-004-4A9BD07F.jpg

2351906435_d5c977c4ee.jpg

2351908993_3c7b4bc4ab.jpg

save1.jpg

ஆனால் எமது சிறிய இனத்திடம் இருந்து பொருளாதாரம் எப்படியான பிரச்சாரங்கள் மூலம் எந்தள அளவுகளில் உறிஞ்சப்படுகிறது?

1-

Appeal to Devotees of London Sri Murugan

A prestigious new residence is being developed for our London Sri Murugan. This magnificent reconstruction will be a Temple of joy and Beauty and glorious legacy for our children and descendants.

From Humble beginnings, in 1975 in London to the present site in Manor Park, the Temple has risen to great strength and London Sri Murugan is now the Kula Theivam for thousands of people.

The reconstruction project is large and estimated to cost GBP4.9millon. details on following pages. Some work has been completed and we are about to embark on the largest and most magnificent phase of the construction.

We hope to complete the Temple by October 2003 with the Mahakumbabishegam planed for the Spring of 2004.

The London Sri Murugan Temple is where it is today because of the support and help provided by devotees and friends. We appeal to you once again for your magnanimous and wholehearted financial help to make this wonderful building become a reality.

Estimated Costs GBP 4.9million

Infrastructure and basic Temple Building costs GBP2.6million

Temple detailed construction and decorative features GBP0.5m

In India Rs17,437,000

In England GBP 250,000

Associated communal facilities GBP1.3m

Residential/commercial units GBP0.5m

http://www.londonsrimurugan.org/html/appeal.htm

http://www.sbtemple.com/AlankaraU-2008.pdf

http://ambaltemple.org/events/2008_Year_Program.jpg

One and only temple consecrated with 33 Homa kunda Yaga in North America

One and only temple energized with NAVA KODI (Ninety million) mantras in North America

The Temple built strictly in conformance with Hindu Scriptures

Dear Devotees,

Finally, Goddess Sridurka has chosen her abode in Toronto, Canada. The almighty mother has made, part of this great project, being successful using us as the tool. The first phase of the project is being completed. Now, Hindus in North America has a suitable place to rely on for their cultural and religious needs. The congregation of this temple increases day by day. The appreciations from Hindus for the services of this temple brings us a sigh of satisfaction. This temple has become the focal point to all Hindus in Canada, USA and Hindu pilgrims from Europe. Now, we are on the next step, the second phase of the project. Your continued support for this temple is greatly appreciated and Blessings of Almighty goddess Sridurka be always with you. Here is the Status of the Temple project.

Please make donations

Phase 1

Selection of suitable site, Construction of Inner Temple shrines, Heating & Air condition, 33 Homa Uththma Maha Kumbabisekam, Construction of sixty four Temples for Hindu Saints, Consecration Ceremony of Hindu saints

Rajagopuram Project starts soon

Phase 2

Granite Flooring, Thanga Ratham (Chariot), Landscaping, Hindu Community Center

Phase 3

Raja Gopuram, Hindu research Unit, Consecration of Raja Gopuram

Phase 4

Surrounding Gopurams and Entrances, Extension of Community Center project to Senior Homes, Kids center

Phase 5

Sridurka Sakti Peedam (Hindu University) and Asramam We look forward your invaluable support to complete this project successfully.

Your continued wholehearted help is urgently needed. Please donate generously in kind!!!

Thank you for your generosity.

Be the Blessings of Goddess Sriduka always with you.

http://www.durka.com/durka800.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுகள் திருந்திறத்துக்கு இடமே இல்லை. சனம் அங்க பட்டினியில கிடக்குது. பட்டினியல் வாடும் மக்களுக்கே கடவுள் வழியை காட்டுறார் இல்லை. ஆனால் இவங்க இன்னும் தங்களுக்கு வழியை காட்டவேணும் என்டு தேங்காயை உடைத்து காசை கரியாக்கிறாங்க.

உடையிறது தேங்கை மட்டுமல்ல, எங்கிட தமிழருடைய வாழ்வும்தான்.

எப்பதான இதை உணர்ந்து இந்த குருட்டு நம்பிக்கையை கைவிட்டு மனிசனாக வாளப்போறாங்களோ தெரியல.

தமிழ் இனம்: யார் இவர்கள்? பிராமணர்களையும், ஐயர்மார்களையும், பூசாரிகளையும் தேரில் வைத்திளுக்கும் கூட்டம்.

*** பாய்ந்து, பாய்ந்து முழு மூச்சோடு தேங்காய்களை உடைக்கின்றார்கள். உலகம் பூராக உடைக்கும் தேங்காய்களைக் கணக்கெடுத்தால் உடைக்கும் தேங்காய்களின் விலை கோடி டாலர்களுக்கு மேலாகவிருக்கும். கடவுள் தேங்காய் உடைக்க உத்தரவிட்டாரா? இதை அறியாமல் விஞ்ஞான உலகில் வாழுகின்றார்கள் பல கோடி மக்கள். கடவுளைக் கண்டவர்கள் யாராவது இவ்வுலகில் உண்டோ?

சாமிமார்களின், மகராஜிமார்களின் விஸ்வரூபங்கள் இன்றய காலத்தினில் வெளிக்குக் கொண்டு வரப்பட்டுவிட்டன. கடவுள் எதற்காக கைகளில் ஆயுதம் தாங்கி இருக்கின்றார் என்றால் விடை அளிப்பதற்கு யாரும் இல்லை. அநியாயத்தை அளிப்பதற்கு என்று கூறுவது சிலர். தெருக்களில் தேங்காய் உடைப்பது அநியாயமில்லையா? உடைத்த தேங்காய்களைப் பொறுக்குவது யார்? ***

சாண்டில்யன்

.

3. மூட நம்பிக்கைகள் போராட்டத்தைத் தாமதப் படுத்தும். பழைய நூற்றாண்டுகளில் அப்பாதெயிட் (Apartheid) தென் ஆபிரிக்காவில் நிலவியதென்கின்றோம். யாழில் நிலவவில்லையா. சிந்தியுங்கள். சாதி வெறி இன்று புலம் பெயர்ந்த நாடுகளில் மிகவும் தீவிரமாக பழக்கப்பட்டு வருகின்றது. இன்று பல கூலிப்படைகள் இல்லையென்றால், தமிழீழம் என்றோ மலர்ந்திருக்கும். கூலிப்படை தோன்றிய காரணங்கள்? உமா மகேஸ்வரன் கூலிப்படையை ஆரம்பித்து வைத்தான். இன்று கோடி டாலர்களில் ஆலயங்களைக் கட்டவில்லையென்றால் என்னெவென்று சிந்தியுங்கள். மேலும் ஒரு உண்மை: விடுதலைப்போராளி என்று சிலர் தங்களுடைய சிநேகிதர் பிள்ளைகளுக்கு சாதி என்றால் என்னவென்று கூறி வெறியை ஊட்டுகின்றார்கள். இப்படிப்பட்ட மானிடர் விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டுமா?. விவாதித்தால் பல உண்மைகள் வெளி வரலாம். அது தேவையில்லை?

2- மற்றும் படி களியாட்டங்கள் பூப்புனித நீராட்டு விழா திருமணம் என்பவற்றில் விரையமாகும் பொருளாதாரம் பற்றியும் நிலைப்பாடு வேறு அல்ல. அவையும் இந்து மதத்தின் பெயரால் விரையமடிக்கப்படும் பொருளாதார வளம் போன்று விரையமானது தான். அது பற்றிய தகவல்களை இணைத்து இந்த திரியை பூரணப்படுத்தியவர்களிற்கு நன்றி.

6- மறுவளத்தில் கோவில்களை எடுத்தால் தேர் ஒன்றிற்கு எத்தனை லட்சம் பவுண்ஸ்? இராச கோபுரத்துக்கு எத்தனை லட்சம், ஏனைய ஆடம்பரங்களில் முடக்கப்பட்டிருப்பதன் பெறுமதி எத்தனை லட்சங்கள்? அதிகப்படியாக என்ன செய்கிறார்கள் ஒவ்வொரு கோயில்களும் தமது வருமானத்தில் ஒரு 10000 அனாதைப் பிள்ளைகளை பெறுப்பெடுத்து நடத்துகிறார்களா? 30 வருடங்களிற்கு மேலாக போராடி அழிவைச் சந்தித்து வரும் சமூகத்தில் இருந்து எத்தனை லட்சங்களை கடவுளின் பெயரால் உறிஞ்சுகிறார்கள் அதில் எத்தனை வீதம் பயனுள்ள முறையில் சமூகத்திற்கு மீள முதலீடு செய்யப்படுகிறது? 50 வீதம்? 20 வீதம்? 10 வீதம்?

7- AIPAC எத்தனை கோடிகளை ஒரு வருடத்திற்கு செலவிடுகிறது lobbying இற்கு. ஏன் அந்தப் பணத்தை போட்டிக்கு சினொகொக் கட்ட பாவிக்க யோசிக்கவில்லை? நாடு அங்கீகாரம் எல்லாம் உள்ளவர்களே எந்தளவிற்கு கவனமாக இருக்கிறார்கள். ஆனால் ஒண்டும் இல்லாத தமிழ் மந்தைகள் என்ன செய்யுது கோடிக்கணக்கில் செலவழித்து கருங்கல்லையும் மரக்குத்தியளையும் இறக்குமதி செய்து போட்டு அதுகளுக்கு முன்னுக்கு நிண்டு வேப்பம் குழையை கட்டிக் கொண்டு ஆடுதுகள்.

நாரதரே .............

நான் சொல்ல வந்ததை வடிவாக வாசித்து விட்டு கருத்தெழுதுங்கள். நான் சொன்னேன் நீங்கள் எல்லோரும் இந்து மதத்தை மட்டும் தான் இழிவாக பேசுகிறீர்கள் என்று அதற்கு நீங்கள் கேட்ட உதாரணங்களும் மேலே தரப்பட்டுள்ளன உங்களால் இணைக்கப்பட்ட இந்துசமயம் சம்பந்தமான புகைப்படங்களும் அதற்கு சாட்சி. நான் கண்ணை மூடிக்கொண்டு பதில் எழுதவில்லை.உண்மைக்கு புறம்பான கருத்துக்களை நான் சொல்லவேண்டிய தேவை எனக்கு இல்லை ஆனால் உங்கள் சிலபேருக்கு அந்த தேவை இருக்கலாம்.முகமூடி போட்டுவந்து உங்களோடு விவாதம் செய்யவேண்டிய தேவையும் எனக்கில்லை. நான் நானேதான் என்பதை அழுத்தமாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

கிறிஸ்தவ மதங்களில் இருக்கும் மூட நம்பிக்கைகளை சுட்டிக்காட்ட வைத்ததே உங்களை போன்ற சிலபேரின் மேதாவித்தனமான கருத்துக்கள் தான் அத்தோடு கிறிஸ்தவ மதத்திலையும் மூட நம்பிக்கைகள் இருக்கு என்று சுட்டிக்காட்டவே அவற்றை குறிப்பிட்டேன் தவிர எனக்கு வேறு எந்த இழிவு நோக்கங்களும் இருக்கவில்லை.

நான் எப்பொழுது சொன்னேன் மதம் என்றால் இந்து மதம் மட்டும் தான் என்று? எனது கருத்துக்களை திசை திருப்பும் வழிகளில் ஈடுபடவேண்டாம்.

நீங்கள் மக்கள் மீதில் இருக்கும் கரிசனையில் மதங்களை விமர்சித்தால் ஏன் இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கிறீர்கள்? ஏன் மற்ற மதங்களை பற்றி குறிப்பிடவில்லை?

மற்றைய மதங்களில் நீங்கள் குறிப்பிட்டவை இல்லையா? ஏன் மதங்களில் மட்டுமா வீண் செலவுகள் இருக்கின்றன? இதில் இருந்தே தெரிகிறது நீங்கள் தீவிர இந்து மத எதிர்ப்பாளன் அதை நான் எதிர்த்தால் நான் இந்து மத வெறியனோ? உங்கள் உண்மை நோக்கம் எனக்கு நன்றாகவே தெரியும். எனக்கு மக்களில் இருக்கும் அக்கறை எப்படியானது என்பது மக்கள் இதை வாசிக்கும் போது அறிந்து கொள்வார்கள் அதே போல் உங்களின் போலி மக்கள் அக்கறையையும் அறிந்து கொள்வார்கள் நாரதரே.

Link to comment
Share on other sites

தம்பி அருஸ்!

சாண்டில்யன் சொன்னதில் என்ன தப்பு உள்ளது? அவர் ஜதார்த்தத்தை புரிந்த மனுசன் அவர் சொன்னதில் ஓரு தப்பும் இல்லை. ஆனால் தானும் படுக்காது தள்ளியும் படுக்காது என்ட தத்துவம் கேள்விப்பட்டனிங்களே. நல்ல கருத்துக்கள் எழுதைக்கிள்ள பொறுமையாக இருங்கோ அதவிட்டுட்டு ஆரையும் குறை சொல்லிக்கொண்டே இருக்காதேங்கோ. இதுகூட எமது வளர்ச்சிக்கு தடையாயிருக்கலாம்.

யாருக்கும் யாரையும் திருத்த அருகதையில்லை.

வணக்கம்

அண்ணை வலை! நீங்கள் எழுதியவை உங்களுக்குப் பொருந்தாதோ??

(யாருக்கும் யாரையும் திருத்த அருகதையில்லை.)

இதுதானண்ணை உங்களைப் போன்றோர் செய்வது. எழுதுவதொன்று செய்வதுவேறு. முதலில் சாண்டில்யன் அண்ணா எழுதியிருக்கிறதை நன்றாக வாசித்துப்பாருங்கள்.

1.(ஆனபடியால் என்னைக் கேள்வி கேட்பதை விட்டு தாங்கள் தமிழினத்தைக் கேளுங்கள்.)

2.(தமிழ் இனம்: யார் இவர்கள்? பிராமணர்களையும்இ ஐயர்மார்களையும்இ பூசாரிகளையும் தேரில் வைத்திளுக்கும் கூட்டம்.)

அப்படியென்றால் நீங்கள் யார்?? நீங்கள் தமிழினத்தைச்சேர்ந்தவர்தனே??அதன் பிறகு வாருங்கள்.

(ஆனால் தானும் படுக்காது தள்ளியும் படுக்காது என்ட தத்துவம் கேள்விப்பட்டனிங்களே) கேள்விப்பட்டிருக்கிறேன் இதைத்தான் வைக்கல்பட்டடை நாய் என்பார்கள். இதை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்?? நீங்களதானே இதைச்செய்துகொண்டிருக்கிறீர

Link to comment
Share on other sites

நாரதரே .............

நான் சொல்ல வந்ததை வடிவாக வாசித்து விட்டு கருத்தெழுதுங்கள். நான் சொன்னேன் நீங்கள் எல்லோரும் இந்து மதத்தை மட்டும் தான் இழிவாக பேசுகிறீர்கள் என்று அதற்கு நீங்கள் கேட்ட உதாரணங்களும் மேலே தரப்பட்டுள்ளன உங்களால் இணைக்கப்பட்ட இந்துசமயம் சம்பந்தமான புகைப்படங்களும் அதற்கு சாட்சி. நான் கண்ணை மூடிக்கொண்டு பதில் எழுதவில்லை.உண்மைக்கு புறம்பான கருத்துக்களை நான் சொல்லவேண்டிய தேவை எனக்கு இல்லை ஆனால் உங்கள் சிலபேருக்கு அந்த தேவை இருக்கலாம்.முகமூடி போட்டுவந்து உங்களோடு விவாதம் செய்யவேண்டிய தேவையும் எனக்கில்லை. நான் நானேதான் என்பதை அழுத்தமாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

கிறிஸ்தவ மதங்களில் இருக்கும் மூட நம்பிக்கைகளை சுட்டிக்காட்ட வைத்ததே உங்களை போன்ற சிலபேரின் மேதாவித்தனமான கருத்துக்கள் தான் அத்தோடு கிறிஸ்தவ மதத்திலையும் மூட நம்பிக்கைகள் இருக்கு என்று சுட்டிக்காட்டவே அவற்றை குறிப்பிட்டேன் தவிர எனக்கு வேறு எந்த இழிவு நோக்கங்களும் இருக்கவில்லை.

நான் எப்பொழுது சொன்னேன் மதம் என்றால் இந்து மதம் மட்டும் தான் என்று? எனது கருத்துக்களை திசை திருப்பும் வழிகளில் ஈடுபடவேண்டாம்.

நீங்கள் மக்கள் மீதில் இருக்கும் கரிசனையில் மதங்களை விமர்சித்தால் ஏன் இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கிறீர்கள்? ஏன் மற்ற மதங்களை பற்றி குறிப்பிடவில்லை?

மற்றைய மதங்களில் நீங்கள் குறிப்பிட்டவை இல்லையா? ஏன் மதங்களில் மட்டுமா வீண் செலவுகள் இருக்கின்றன? இதில் இருந்தே தெரிகிறது நீங்கள் தீவிர இந்து மத எதிர்ப்பாளன் அதை நான் எதிர்த்தால் நான் இந்து மத வெறியனோ? உங்கள் உண்மை நோக்கம் எனக்கு நன்றாகவே தெரியும். எனக்கு மக்களில் இருக்கும் அக்கறை எப்படியானது என்பது மக்கள் இதை வாசிக்கும் போது அறிந்து கொள்வார்கள் அதே போல் உங்களின் போலி மக்கள் அக்கறையையும் அறிந்து கொள்வார்கள் நாரதரே.

//சிலபேருடைய கதையை பார்த்தல் இந்துமதத்தில் மட்டும் தான் மூட நம்பிக்கைகள் இருக்கின்றன எனவும் மற்றைய எல்லா சமயமும் மக்களை நல்வழிப்படுத்துவதை மட்டும் தான் செய்கின்றன எனவும் வாதாடுகிறார்கள்//

மேலே நீங்கள் எழுதியதற்கான ஆதாராம் எங்கே இருக்கிறது என்னும் கேள்விக்கு மட்டும் முதலில் பதில் சொல்லுங்கள்.

இந்து மதத்தை விமர்சிப்பதால் மற்றைய மதங்கள் சிறந்தவை என்பது உங்கள் ஊகம், இந்து மதத்தை விமர்சிப்பவர்கள்

அப்படி எங்கேயும் சொல்லி இருந்தால் அதனைத் தாருங்கள்.உங்கள் ஊகத்தை மற்றவர்கள் சொன்ன கருத்தாக எழுதாதீர்கள்.

மக்கள் மீதான உங்கள் பக்கச் சார்பான அக்கறை பற்றி நான் எழுதி இருப்பதை மீண்டும் ஒரு தடவை வாசியுங்கள்.விளங்கும்.

கிரித்துவ மத்தைப் பற்றியோ இல்லை உலகில் எந்த மதத்தைப் பற்றியோ நீங்கள் தாராளாமாக விமர்சியுங்கள்.எங்களின்

வேலை சுலபமாகும்.இன்னொரு தகவலையும் உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.இங்கே இந்து மத வாதிகளாக இருப்பவர்கள் தான் இணையத்தில் கடவுள் பற்றியும் டார்வினின் பரிணாமக் கோட்பாட்டுக்கு எதிரானதுமான விலியத்தின் படைப்பியலைத் தூக்கி நிறுத்தும் அடிப்படை வாதாக் கிரித்துவ மத அமைப்புக்களின் பிரச்சாரங்களை கடவுள் இருப்பதற்கான் அறிவியல் ஆதாரம் என்று இங்கே இணைத்தனர்.அந்த அடிப்படைவாதக் கிரித்துவ மத வாதிகளின் பிரச்சாரத்தை அம்பலப்படுதியதும் இதே பகுத்தறிவு வாதிகள் தான். <_<

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.