Jump to content

மன்னவன் தீர்ப்பு .....


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

மன்னவன் தீர்ப்பு .............

இடம் : இன்ப தமிழ் அரச சபை

(இன்ப தமிழ் நாடின் அரச சபையில் ஒரே கூச்சலும் குழப்பமும் )

மந்திரி : சபையோரே , அமைதி ...அமைதி .....யமுன மகா ராஜா வருகிறார் ........

(சபையோர எழுந்து நின்று ,) வணக்கம் மகா ராஜா ...........,வலப்பக்கம் இன்ப தமிழ் நாட்டு மக்கள் இடது பக்கம சிங்க வன நாட்டினர் . .ஒரு சிறு குழுவினர் சந்கிளிகள்ளல் பிணைக்க பட்டு , கூனி குறுகி ,கை கட்டி வாய் பொத்தி நின்றனர் .)

அரசன்: ...மந்திரியாரே .... என்ன இங்கே கூச்சலும் குழப்பமும் ....

மந்திரி : மன்னர் , மன்னா ....நீதி வேண்டும் , இந்த இன்ப தமிழ் நாட்டு மக்களுக்கு .

மன்னன் : என்ன தவறு ?....என்ன நடந்தது :...... மன்னா .......,இவர்கள் நீதி தவறியவர்கள்

அக்கிரமம் செய்தவர்கள் அவர்களுக்கு எதிராக .

அரசன் .....: ..இழுத்து வாருங்கள் அவர்களை . உன் பெயர் என்ன ? நீ என்ன செய்தாய் ....

வந்து...து மகிந்து ....ம்...ம்...ம்.. ...நான் ...கோத்து பாய் .....ஐயா ... நான் பொன் சரத்து .... ....

நாங்கள் மூ .... மூ ...o மூ மூவரும் மகிந்து சகோதரங்கள் ..இவர்கள் எங்கள் குடிமக்கள் .

அரசன் : மீண்டும் கேட்கிறேன் இவர்கள் செய்த குற்றம் என்ன ?

மந்திரி : தரைப்படை ,கடல்படை வான் படை முப் படைகளாலும் இவர்கள் நாட்டினை சின்னா பின்ன படுத்தினர்

,உணவுத்தடை ,இரத்த களரி ஏற்படுத்தியமை ,குழந்தைகளை பட்டினி போட்டமை இன்னும்

சபையில் சொல்ல முடியாதவை .....

வலதுபக்கம்:) முனிவர் தலைமையில் )....(கூச்சல் ) உயிரோடு கொழுத்தும் ..கொழுத்தும் ...மகாராஜா............ கொழுத்தவேண்டும்

அரசன் : அமைதி அமைதி .....அமைதியாயிருங்கள் .................... சபை ......அடுத்த வாரம் கூடும்

இடப்பக்கம் (மன் .....சிங் ) .: பய வேண்ட எப்பா ..... பய வேண்ட ..(பயப்பட வேண்டாம் ) .........

யாழ் கள உறவுகளே .....சிரிக்க வேண்டாம் ......தீர்ப்பை நீங்களே கூறுங்க ளேன் .............

இதில் நடித்தவர்கள் : ஜம்மு பேபி (அரசன் ) நிலாமதி (வேஷம் போட்ட மந்திரி ) வலப்பக்கம் (முனிவர் ) இடது பக்கம் (மன் சிங் )சுப்பண்ணை.......

இது ஒரு கன்னி முயற்சி .....சிரிக்க வேண்டாம் .....காலபோக்கில் .....கள உதவியுடன் ஆதரவுடன் ,..

.திரைப்படமாக ......வெளி வருமா? ...

Link to comment
Share on other sites

அடடா..என் கண்களே என்னால நம்ம ஏலாம இருக்கு..நானோ அரசன் எனக்கு கீழ தான் முனி மாமு..மு இப்ப தான் ரொம்ப சந்தோஷம்.. :lol:

நிலா(மதி) அக்கா..கா அப்படியே நான் அரசசபைக்கு நடந்து வரக்க நீங்க இந்த பாட்டை போடுங்கோ அது தான்...!!

"தங்கமகன் இன்று

சிங்க நடை போட்டு

சபைக்கு சபைக்கு

வந்தான்.." :)

அது மட்டுமில்லாமல்..ல் எனக்கு ஒரு ராணியையும் படத்தில போட்டியள் எண்டா நன்னா இருக்கும்..ம் ஆனா சொல்லிட்டன் முனி மாமுவிற்கு ஒரு கதாநாயகிகளும் இருக்க கூடாது..து..!!.. :(:(

சரி எனி விசயதிற்கு வாரன்..ன்..!!. :lol:

வித்தியாசமான சிந்தனையுடன் ஒண்டை தர எத்தனித்துள்ளீர்கள்..அதற்கு என் வாழ்த்துகளை தெரிவிக்கிறன்..ஆனால் நிலா(மதி) அக்கா..கா என்னும் இதனை சுவாரசியமாக நகர்த்தி இருந்தால்..ல் நன்றாக இருக்கும்..ம் ஆகவே எனி வரும் காலங்களிள் அதனை உள்வாங்கினால்..ல்..

மிகவும் சந்தோஷபடுவேன்...(இது கொழந்தையின் ரசனை மட்டுமே சில நேரம் பிழையாகவும் இருக்கலாம்). :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலமதி அக்கோய் மன் சிங் என்றால் மன்மோகன் சிங் தானே? கடைசியாக நான் பாரத பிரதமர் ஆகிட்டனா? நான் பாரத பிரதமர் ஆகினால் சிறிலங்காவுக்கு குடுத்த ஆயுதத்தை எல்லாம் பறிக்கிறது தான் முதல் வேலை. :lol: சரி அது கிடக்கட்டும் என்ன உரையாடல் இடையில இருக்கு இனிமல் எழுதும் போது முடிவோட எழுதுங்கோ என்ன. வாழ்த்துக்கள் :lol:

எனக்கு முதல் சொறிக்கு மருந்து எடுக்க காசு தாங்கோ உந்த தோய்க்காத தலைப்பாகையை தலையில போட்டு ஒரே கடி :)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சுப்பண்ணை கஜானாவில் நிதியில்லாததால் உங்கள் கோரிக்கை நிராகரிக்கப் படுகிறது. நீங்கள் அந்தப் பாகையைப் பிரித்து பிரட்டிக்கட்ட சபை சிபாரிசு செய்கிறது.(அதற்கான செலவு கணக்கில் வரும். உங்களுக்கு வராது). :):lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை கஜானாவில் நிதியில்லாததால் உங்கள் கோரிக்கை நிராகரிக்கப் படுகிறது. நீங்கள் அந்தப் பாகையைப் பிரித்து பிரட்டிக்கட்ட சபை சிபாரிசு செய்கிறது.(அதற்கான செலவு கணக்கில் வரும். உங்களுக்கு வராது). :lol::lol:

அந்த நாத்தம் பிடிச்சதை எத்தனை இடத்தில எப்படி எல்லாம் மாத்தி கட்டிட்டன் இனிமலாவது புதுசா ஓன்று வாங்கி தரக்கூடாத :) ? இல்லை என்றால் உங்களுக்கு மருத்துவ செலவுகள்தான் அதிகமாகும் சொல்லிட்டன். எனக்கு புதுசா ஓன்று வாங்கேக்க சிவப்பு நிறத்தில வாங்குங்கோ சரியே ஏனேன்றால் இப்ப உந்த சிறிலங்காவுக்கு போகேக்க யாராவது தலையில அடிச்சு இரத்தம் வந்தாலும் தெரியாதல்லோ :lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சரி சுப்பண்ணை தங்கள் கோரிக்கை ஓரளவு நிறைவேற்றப் படுகிறது. கழுத்தில போட்டு வயித்தில முடியுற சில சிவப்புச் சால்வைகள் இருக்கு. அதில் நான்கு அனுப்பிவைக்கப் படும். சமாளித்துக் கொள்ளவும். அவையும் ஏ. பி. ஓ குறுப்புகளால் சிவந்தவைதான்.

Link to comment
Share on other sites

அடடா..என் கண்களே என்னால நம்ம ஏலாம இருக்கு..நானோ அரசன் எனக்கு கீழ தான் முனி மாமு..மு இப்ப தான் ரொம்ப சந்தோஷம்.

நிலா(மதி) அக்கா..கா அப்படியே நான் அரசசபைக்கு நடந்து வரக்க நீங்க இந்த பாட்டை போடுங்கோ அது தான்...!!

"தங்கமகன் இன்று

சிங்க நடை போட்டு

சபைக்கு சபைக்கு

வந்தான்.

அது மட்டுமில்லாமல்..ல் எனக்கு ஒரு ராணியையும் படத்தில போட்டியள் எண்டா நன்னா இருக்கும்..ம் ஆனா சொல்லிட்டன் முனி மாமுவிற்கு ஒரு கதாநாயகிகளும் இருக்க கூடாது..து..!!.. :(

அப்ப நான் வரட்டா!!

உங்களுக்கு கீழ்தானே நாங்கள் எல்லாம் ஆனால் முனிவரிடம் கேட்காமல் எதையும் செய்யமுடியுமா என்ன??

அரசனுக்கே ஆப்பு வைப்போம் அல்ல :D

கதாநாயகியா யாருக்கு வேண்டும் அரச மாளிகையில் உங்கள் கைபடாத பொருளா?? :( நான் சாமான்களை சொன்னனாக்கும் அதனால் நமக்கு கதாநாயகிவேண்டாம் சாமீ

நிலாமதியக்கா கொஞ்சம் கருத்துக்களை உள்வாங்கியிருந்தால் இன்னும் ரசிக்கும் படியாக இருந்திருக்கும் வாழ்த்துக்கள்

தெடரட்டும்

சுப்பண்ணைக்கு வாங்கோ ஒருக்கா ஆச்சிரமம்

நல்ல உரிமட்டையில் இருந்து எடுக்கப்பட்ட தும்பும் சாம்பலும் இருக்குது கடி பறந்தே போகும் :)

ஆனால் உங்களது தோல் உரிந்தால் நாங்கள் பொறுப்பல்ல :lol::lol::lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

"மன்னவன் தீர்ப்பு " வாசித்து கருத்து சொன்ன ..........ஜம்மு . சுவி ...சுப்பன்னை ...முனிவர் ..யாவருக்கும் நன்றி ............

.மன்னிக்கவும் இப்ப தானே ஆரம்பம் ...கால போக்கில் மாரங்களுடன் வரும்.நன்றி ....அக்கா நிலாமதி

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்காவிற்கு

உங்கள் புதிய முயற்ச்சிக்கு முதலில் வாழ்த்துக்கள். மந்திரி என்று பதவியேற்று குதிரையில் எறின உடனே உங்கள் சிந்தனையும் குதிரைமாதிரி பறக்க ஆரம்பித்துவிட்டது. கடிவாளத்தை கைவிடாதேங்கோ நீங்கள் போகவேண்டிய தூரத்துக்கு குதிரை( உங்கள் கற்பனையைச் சொன்னேன் ) உங்களைக் கொண்டுபோய் சேர்க்கும்.

நீங்கள் தப்பான முனியை ஆஸ்த்தான முனியாய் போட்டுட்டீங்கள்.... :lol: . அவர்தான் ஆசிரமத்தி...லே ஜ.ல்.....சா ! பண்ணிற முனியாச்சே.... :) .சரி பரவாயில்..ல ! அரசனிட்ட சொல்லி அவரை வச்சிருக்க சொல்லுங்..கோ ! ஆஸ்தான முனியா..! :D:(

சுப்பன்ணா பாவம்....தலையில பாரத்த சுமக்கிற பதவியை கொடுத்திட்டீங்...க, பரவாயில்..ல..!, :( அந்த மனிசன் மற்றவேன்ர தலையை எடுக்கச் சொல்லாம தலைப்பாவை மட்டும் எடுக்கச் சொன்னதுவரைக்கும் ச..ரி ! :lol:

அரசனுக்கும் முனிக்கும் இப்பவே பிரச்சனை ஆரம்பிச்சிட்டதா....லே, நாட்டாண்மை தீர்ப்பை மாத்தி சொல்லிடப்போறா.... :lol: . முக்கியமான விசயம் அரசனுக்கு சோடிமாத்திரம் போட்டிட வேண்டாம்..... :(:D , பிறகு எல்லா...மே மாறி..டு...ம்... !

இளங்கவி

Link to comment
Share on other sites

உங்களுக்கு கீழ்தானே நாங்கள் எல்லாம் ஆனால் முனிவரிடம் கேட்காமல் எதையும் செய்யமுடியுமா என்ன??

அரசனுக்கே ஆப்பு வைப்போம் அல்ல :)

கதாநாயகியா யாருக்கு வேண்டும் அரச மாளிகையில் உங்கள் கைபடாத பொருளா?? :wub: நான் சாமான்களை சொன்னனாக்கும் அதனால் நமக்கு கதாநாயகிவேண்டாம் சாமீ

ம்ம்..மாமுவிடம் கேட்காமல் எந்த காலத்தில் நாம் இராஜ வேலைகளை பார்த்திருக்கிறோம்..ம்..அது எல்லாம் இருகட்டும் அரண்மனையில் அந்தபுரம்..ம்.. :(

எங்கே இருக்கிறது எண்டு உங்களுக்கு தெரியுமோ..??..என்னை முதலில் அங்கே கூட்டி செல்லுங்கள் அதற்கு பிறகு தீர்ப்பை பத்தி யோசிப்போம்..என்ன மாமு..மு.. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அரச சபை சும்மா அதிருது ......பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நிலாமதியக்கா, நல்ல ஆக்கம். உங்கள் ஆக்கங்கள் நன்றாகத்தொடங்கி சிலவேளகளில் அவசரமாக முடிக்கப்படுகின்றன. ஏன்? அத்தான் வந்துவிடுகிறாரா? வந்தால் அவரையே தேனீர் போட்டு குடிக்கச்சொல்லுங்கோ. குறிப்பு தான் தூயா உள்ளிட்ட பலரின் கைவண்ணத்தில் கிடைத்ததே. ஆக்கங்கள் தொடரட்டும்.

முக்கியமான விசயம் அரசனுக்கு சோடிமாத்திரம் போட்டிட வேண்டாம்..... :wub::( , பிறகு எல்லா...மே மாறி..டு...ம்... !

பார்த்து.. ஜம்முக்கு ராணியைக்கொடுக்கவில்லை என்றா, பிறகு சாமரம் வீசும் பெண்களின் கதியென்னவோ? அவர்களை ராணியக்கிடப்போறார். :)

Link to comment
Share on other sites

நீங்கள் தப்பான முனியை ஆஸ்த்தான முனியாய் போட்டுட்டீங்கள்.... :wub: . அவர்தான் ஆசிரமத்தி...லே ஜ.ல்.....சா ! பண்ணிற முனியாச்சே.... <_.சரி பரவாயில்..ல ! அரசனிட்ட சொல்லி அவரை வச்சிருக்க சொல்லுங்..கோ ! ஆஸ்தான முனியா..! :(

அரசனுக்கும் முனிக்கும் இப்பவே பிரச்சனை ஆரம்பிச்சிட்டதா....லே, நாட்டாண்மை தீர்ப்பை மாத்தி சொல்லிடப்போறா... முக்கியமான விசயம் அரசனுக்கு சோடிமாத்திரம் போட்டிட வேண்டாம்..... பிறகு எல்லா...மே மாறி..டு...ம்... !

இளங்கவி

ஏலேய் இளங்கவி முனிவர் என்றால் சும்மாவா சும்மா சபை அதிருமில்ல :(:)

எப்படி கனவெல்லாம் தெளிந்து விட்டது போல என்ன கொஞ்சம் வீங்கியிருக்கு :)

Jamuna Posted இன்று, 07:48 AM

ம்ம்..மாமுவிடம் கேட்காமல் எந்த காலத்தில் நாம் இராஜ வேலைகளை பார்த்திருக்கிறோம்..ம்..அது எல்லாம் இருகட்டும் அரண்மனையில் அந்தபுரம்..ம்..

எங்கே இருக்கிறது எண்டு உங்களுக்கு தெரியுமோ..??..என்னை முதலில் அங்கே கூட்டி செல்லுங்கள் அதற்கு பிறகு தீர்ப்பை பத்தி யோசிப்போம்..என்ன மாமு..மு..

என்ன ஜமுனா அந்தபுறமா என்னை கட்டி வைத்து விட்டு சென்று விட்டு வந்து பேசிற பேச்சை பாரு :)

தடங்கள் ஆறவில்லை கைறின் தடம் இதுக்குள்ள தெரியாத மாதிரி நடிக்கிறீர்கள் நல்ல அரசன் வாழ்க கட்டி வைத்த புளிகேசி வாழ்க[புலிகேசி] :):(:D

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தூயா ..........புத்தன் .......... ஈசு .......உங்கள் வரவுக்கு நன்றி

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஈசு ...நீங்க சொல்லறது சரி தான் . அத்தான் இதுக்கெலாம் ஒன்றும் சொல்ல மாட்டார்

தீர்ப்பு தான் ....... "நம்ம தலைவன் " இருக்கும் போது நான் சொல்வது சரியல்ல அது தான் .........

., உங்களிடமே விட்டு நழுவி விட்டேன் சும்மா இது கதை தானே , , l.

Link to comment
Share on other sites

நல்ல கதை கரு அக்கா... மேலும் மெருகூட்டுங்கள்... :lol:

Link to comment
Share on other sites

பார்த்து.. ஜம்முக்கு ராணியைக்கொடுக்கவில்லை என்றா, பிறகு சாமரம் வீசும் பெண்களின் கதியென்னவோ? அவர்களை ராணியக்கிடப்போறார்.

அது தானே இப்படி சொல்ல இளம்கவி அண்ணாவிற்கு எப்படி தான் மனசு வந்திச்சோ..சோ..அது சரி சாமரம் வந்து பெண்களோ வீசுவீனம்..ம்.. :lol:

பரவால்ல அப்ப வேர்கவே வேர்க்காது..து என்ன..ன..!! :)

ஒண்டு செய்வோமா..மா அரண்மனையில ஒரு சுயம்பரம் நடத்துவோமே..மே அது தான் எனகேத்த ராணியை தெரிவு செய்ய தான்..ன்..!! :)

அப்ப நான் வரட்டா!!

என்ன ஜமுனா அந்தபுறமா என்னை கட்டி வைத்து விட்டு சென்று விட்டு வந்து பேசிற பேச்சை பாரு :lol:

தடங்கள் ஆறவில்லை கைறின் தடம் இதுக்குள்ள தெரியாத மாதிரி நடிக்கிறீர்கள் நல்ல அரசன் வாழ்க கட்டி வைத்த புளிகேசி வாழ்க[புலிகேசி]

என்னது..து உங்கள கட்டி போட்டிட்டாங்களோ..ளோ..எத்தனை முடிச்சுகள அவிட்ட உங்களுக்கு இத அவிழ்க்க தெரியாதோ..தோ.. :lol:

அவிழ்த்து கொண்டு கெதியா வாங்கோ..கோ..!! :D

இப்ப என்ன வாழ்த்து வேண்டி கெடக்கு..கு கெதியில வாங்கோ நாங்க அந்தபுரம் செல்வோம்..அது சரி..ரி நாம் எதிரி மன்னனிற்கு விட்ட புறா என்னவாகிவிட்டது..து.. :D

மற்றும் வேவு பார்க்க சென்ற..ற..சாத்திரி "அங்கிளின்" கதி தான் என்ன..ன..?? :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

என்னது..து உங்கள கட்டி போட்டிட்டாங்களோ..ளோ..எத்தனை முடிச்சுகள அவிட்ட உங்களுக்கு இத அவிழ்க்க தெரியாதோ..தோ.. :lol:

அவிழ்த்து கொண்டு கெதியா வாங்கோ..கோ..!! :lol:

இப்ப என்ன வாழ்த்து வேண்டி கெடக்கு..கு கெதியில வாங்கோ நாங்க அந்தபுரம் செல்வோம்..அது சரி..ரி நாம் எதிரி மன்னனிற்கு விட்ட புறா என்னவாகிவிட்டது..து..

மற்றும் வேவு பார்க்க சென்ற..ற..சாத்திரி "அங்கிளின்" கதி தான் என்ன..ன..??

அப்ப நான் வரட்டா!!

ஒரு முடிச்சு என்றால் பரவாயில்லை போட்டது ஆயிரம் முடிச்சுகள் என்ன செய்வேன் என்னால அவுக்க முடியவில்லை

முடிந்தால் பார்ப்போம் என்ன :lol:

அந்தப்புறா மசாலா போட்டு அவிந்து கொண்டிருக்கிறது இது தெரியாத என்ன சரி அது எனக்கு மட்டும் தான் :)

சாத்திரி அங்கிளுக்கு நுங்கு எடுக்கப்படுகிறதாக :D:lol: கேள்வி அடிகள் பலமாம் எழுந்திருக்க முடியவில்லையாம் ஜயோ பாவம் :)

Link to comment
Share on other sites

ஒண்டு செய்வோமா..மா அரண்மனையில ஒரு சுயம்பரம் நடத்துவோமே..மே அது தான் எனகேத்த ராணியை தெரிவு செய்ய தான்..ன்..!! :lol:

சுயம்வரம் எல்லாம் வைக்கலாம்... அவுஸ்திரேலியாவில் எல்லா மாநிலம் பூராவும் உள்ள அழகிகள் 12 பேரை தேடி எடுத்து (Australian Idol போட்டிக்கு செய்யிறது போல) ஒப்ரா கௌஸ்'ல (Opera House) சுயம்வரம் வைக்கலாம். :lol:

ஆனா, தம்பி ஒரு நிபந்தனை... உண்மையான அரசகுடும்பத்தில் இருந்து வந்த ஒரு பெண்ணை தான் தேர்ந்து எடுக்க வேணும்...(எலிசபெத் மகாராணி கமீலாவை ஏற்கிறாவோ இல்லையோ... நான் ஏற்க மாட்டன் )

அப்படி ஒருத்தரும் கிடைக்காட்டா என்ன செய்ய... தம்பி பேசாமல் பாலைவனத்துக்கு போய் முனிக்குப் பக்கத்திலை ஒரு கமண்டலத்தோட குந்த வேண்டியது தான்... :lol:

Link to comment
Share on other sites

Mallikai Vaasam Posted இன்று, 03:36 PM

அப்படி ஒருத்தரும் கிடைக்காட்டா என்ன செய்ய... தம்பி பேசாமல் பாலைவனத்துக்கு போய் முனிக்குப் பக்கத்திலை ஒரு கமண்டலத்தோட குந்த வேண்டியது தான்...

ஜய் பார்ரா நான் ஏத்துக்க மாட்டன் ஜம்முவை எனகல்லோ தெரியும் குத்தும் குடையலும் இல்லையா ஜம்மு :lol::lol::lol:

சும்மா அதிருதில்ல

வேணுமென்றால் ஆச்சிரமத்தில் பூ பறிக்க போடலாம் மல்லிகை வாசம் எதுக்கும் கேட்டு சொல்லுங்கள் என்ன

சும்மா அதிருதில்ல :lol::)

Link to comment
Share on other sites

வேணுமென்றால் ஆச்சிரமத்தில் பூ பறிக்க போடலாம் மல்லிகை வாசம் எதுக்கும் கேட்டு சொல்லுங்கள் என்ன

சும்மா அதிருதில்ல :o:D

அதிரும்... அதிரும்... நல்லா அதிரும்

பிறகு ஆசிரமத்தில பூப்பறிக்கும் பெண்களை, அந்தப்புரத்தில் பார்க்கவேண்டிய நிலை வரலாம்... :unsure::o

Link to comment
Share on other sites

அதிரும்... அதிரும்... நல்லா அதிரும்

பிறகு ஆசிரமத்தில பூப்பறிக்கும் பெண்களை, அந்தப்புரத்தில் பார்க்கவேண்டிய நிலை வரலாம்... :icon_mrgreen::D

எங்கள் ஆச்சிரமத்திலெல்லாம் அந்தப்புறம் கிடையாது அதனால எனக்கு பிரச்சினை இல்லை அடம் பிடித்தால் ஜம்மு பேபிக்கு சக்கை இருக்க சாறு எடுத்து விடுவோம் வேற என்ன அடிதான் :D:D:lol:

Link to comment
Share on other sites

ஒரு முடிச்சு என்றால் பரவாயில்லை போட்டது ஆயிரம் முடிச்சுகள் என்ன செய்வேன் என்னால அவுக்க முடியவில்லை

முடிந்தால் பார்ப்போம் என்ன

அந்தப்புறா மசாலா போட்டு அவிந்து கொண்டிருக்கிறது இது தெரியாத என்ன சரி அது எனக்கு மட்டும் தான் :)

சாத்திரி அங்கிளுக்கு நுங்கு எடுக்கப்படுகிறதாக :o:o கேள்வி அடிகள் பலமாம் எழுந்திருக்க முடியவில்லையாம் ஜயோ பாவம்

ம்ம்..முடிச்சு போட்ட உங்களுக்கு ஒருத்தன் முடிச்சை போட்டா கொஞ்சம் அவிழ்க்கிறது கஷ்டம் தான் முனி மாமு..மு எண்டாலும் சோர்ந்திடாம..ம.. :D

அவிழ்கனும் சொல்லிட்டன்..(அது தான் முடிச்சை)... :wub:

அட..புறாவிற்கே இந்த கதி எண்டா நாளை நாமும் அவர்களை போர்களத்திள் சந்திக்கும் நெலை ஏற்பட்டால் நம் கதி என்ன முனி மாமு..மு..??.. :(

அப்ப நான் வரட்டா!!

சுயம்வரம் எல்லாம் வைக்கலாம்... அவுஸ்திரேலியாவில் எல்லா மாநிலம் பூராவும் உள்ள அழகிகள் 12 பேரை தேடி எடுத்து (Australian Idol போட்டிக்கு செய்யிறது போல) ஒப்ரா கௌஸ்'ல (Opera House) சுயம்வரம் வைக்கலாம்.

ஆனா, தம்பி ஒரு நிபந்தனை... உண்மையான அரசகுடும்பத்தில் இருந்து வந்த ஒரு பெண்ணை தான் தேர்ந்து எடுக்க வேணும்...(எலிசபெத் மகாராணி கமீலாவை ஏற்கிறாவோ இல்லையோ... நான் ஏற்க மாட்டன் )

அப்படி ஒருத்தரும் கிடைக்காட்டா என்ன செய்ய... தம்பி பேசாமல் பாலைவனத்துக்கு போய் முனிக்குப் பக்கத்திலை ஒரு கமண்டலத்தோட குந்த வேண்டியது தான்...

அட..நன்ன யோசனையா இருக்கே..கே..(உங்கள் விருப்படியே ஆகட்டும்)..அது சரி அரசபையில் உங்களுக்கு என்ன பதவி வேண்டும்..ம்.. :lol:

அதை சொல்லுங்கோ..இவ்வாறான நல்ல நல்ல ஆலோசனைகளை எனக்கு வழங்குறபடியால் இன்று முதல் உங்களை என் தளபதியாக நியமிக்கிறன்..ன்..

இத பத்தி தாங்கள் என்ன நெனைக்கிறியள்..ள்..??.. :wub:

மற்றது தளபதியாரே அவுஸ்ரெலியா பூராவும் பன்னிரன்டு அழகிகளை பிடிக்கிறது எல்லாம் உங்க பொறுப்பு..பு ஆனால் அதில் ஒரு டமிழ் பெட்டைகளும் இருக்க கூடாது சொல்லிட்டன்..ன்

அப்படி ஒரு கதி ஏற்பட்டால் நான் சிம்மாசனத்தை துறந்து காட்டுக்கு போயிடுவன் சொல்லிட்டன் போகக்க தனியா போகமாட்டன் உங்களையும் கூட்டி கொண்டு தான் போவன் சொல்லிட்டன்.. :lol:

மற்றது முனி மாமுவுக்கு பக்கத்தில குந்த வேண்டிய நெலை எல்லாம் வரவே வராது ஏன் எண்டா அவுஸ்ரெலியாவில அரசகுடும்பத்தில பெறந்த ஒருவா எனக்கு கெடைக்காமலா போயிடுவா..வா..சரி கொஞ்சம் நில்லுங்கோ ஏன் தெரியுமோ இப்ப வந்து..து..

எண்ட கனவு பாட்டு நேரம்..ம்... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜய் பார்ரா நான் ஏத்துக்க மாட்டன் ஜம்முவை எனகல்லோ தெரியும் குத்தும் குடையலும் இல்லையா ஜம்மு

சும்மா அதிருதில்ல

வேணுமென்றால் ஆச்சிரமத்தில் பூ பறிக்க போடலாம் மல்லிகை வாசம் எதுக்கும் கேட்டு சொல்லுங்கள் என்ன

சும்மா அதிருதில்ல

முனி மாமு..மு என்னை பூ பறிக்க விட்டா ஆச்சிரமத்தில்..ல் பூவையர்களின் மனதை எல்லாம் பறித்தி விடுவன் பெறகு நீங்கள் கவலைபடுவியள் சொல்லிட்டன்..ன்.. :lol:

என்ன தளபதியாரே நான் சொல்லுறது சரி தானே..(தளபதி எனக்கு பக்கத்திலையே எனி நிற்கனும் சொல்லிட்டன்).. :o

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • சிறு வயதில் பாடசாலை நூலகத்தில், முதலில் படித்த புத்தகங்களில் இதுவும் ஒன்று, இது ஒரு சாதாரண சிறுவர் கதை என நினைத்திருந்தேன், ஆனால் இக்கதையில் பல ஆழமான விஷயங்களை மிகவும் எளிதாக சொல்லப்பட்டுள்ளது. எனது வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் அரசியல் , நற்பு, வேலை, குடும்பம்  என்பவற்றில்   புது, புது படிப்பினைகளை  தந்துள்ளது.
  • ஜப்பானிடம் இருந்து 3.5 பில்லியன் டொலர்கள் கடனை கோரும் இலங்கை !!     கடனில் மூழ்கியுள்ள இலங்கை அரசாங்கம் ஜப்பானிடம் இருந்து நிதி உதவியை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் 3.5 பில்லியன் டொலர் நிதியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடனை டொலராக மாற்றுவதற்கான சரியான அளவு இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில் பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்து தீர்மானம் எட்டப்படும் என மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். வரலாற்று ரீதியாக இலங்கைக்கு அபிவிருத்தி உதவிகளை வழங்கும் ஜப்பான், நிதி உதவி மட்டுமல்லாமல் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குகிறது. ஜப்பானில் இருந்து பெறப்படும் கடன் ஜப்பானிய யெனில் வழங்கப்படும் என்பதோடு 0.05 சதவீத வட்டி விகிதத்தைக் கொண்டிருக்கும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு கையிருப்பு 3.1 பில்லியன் டொலர்கள் மட்டுமே உள்ள நிலையில் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் இலங்கைக்கு இந்த தொகை சில மாத இறக்குமதிக்கு போதுமானதாக காணப்படுகின்றது. அத்தோடு ஜனவரி 18ல் 500 மில்லியன் டொலர் மற்றும் ஜூலையில் 1 பில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்துவது உட்பட, இந்த ஆண்டு 6 பில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டுக் கடனை திருப்பி செலுத்த வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. பணப்புழக்கம் அதிகரித்துள்ள நிலையில் கடன் வழங்கும் முகவர்களிடமிருந்து குறிப்பாக உலக வங்கி, இந்தியா மற்றும் சீனாவில் இருந்து மேலும் கடன்களை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் தீர்மானித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.       https://athavannews.com/2022/1262238  
  • கிளிநொச்சியில் கம்பன் கலைக்கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு       கம்பன் கலைக்கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் கம்பவாரிதி ஜெயராஜ் தலைமையில் இடம்பெற்றது. அகில இலங்கை கம்பன் கழகத்தின் சிந்தனைக்கு அமைவாக இளைஞர்களை வளப்படுத்தும் கம்பன் கலைக்கூடத்திற்கான ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோகணேசன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சாணக்கியன், யாழ். மாநகர சபை மேஜர் மணிவண்ணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவாஜிலிங்கம், வடமாகாண அவை தலைவர் உள்ளிட்ட பலர் வருகைத்தந்தனர். வருகை தந்திருந்த விருந்தினர்கள் விழா மண்டபம் வரை அழைத்து வரப்பட்டு வாழ்த்துரைகள் இடம்பெற்றன. அதனைத்தொடர்ந்து குறித்த கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.     https://athavannews.com/2022/1262291  
  • இலங்கையில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் பல்கலைக்கழக விரிவுரையாளர் பணி இடைநீக்கம் 4 மணி நேரங்களுக்கு முன்னர்   பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையின் தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர், அங்குள்ள மாணவியொருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அறபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தில் அரசியல் விஞ்ஞானம் கற்பிக்கும் விரிவுரையாளர் ஒருவர், அங்குள்ள முதலாமாண்டு மாணவி ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், குறித்த விரிவுரையாளரின் விருப்பத்துக்கு இணங்காத அந்த மாணவி - பல்கலைக்கழக விடுதியிலிருந்து வெளியேறியதாகவும் அறிய முடிகிறது. இந்த நிலையில், மேற்படி விரிவுரையாளரால் தனக்கு ஏற்பட்ட துன்புறுத்தல் பற்றி, அந்த மாணவி தனது குடும்பத்தாருக்குத் தெரியப்படுத்தியதோடு, பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் எழுத்து மூலம் முறையிட்டுள்ளார். இதனையடுத்து இவ்விவகாரத்தில் கவனம் செலுத்திய பல்கலைக்கழக உபவேந்தர், அந்தப் பல்கலைக்கழத்தின் பேரவையைக் கூட்டி - விடயத்தைத் தெரியப்படுத்தியிருந்தார். அதனையடுத்து, ஆரம்ப கட்ட நடவடிக்கையாக, குறித்த விரிவுரையாளரை - பல்கலைக்கழகப் பேரவை, பணி இடைநீக்கம் செய்துள்ளதோடு, அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பேரவை உறுப்பினர் ஒருவரையும் நியமித்துள்ளது பாலியல் குற்றவாளிகளை அவர்கள் செலவிலேயே அசிங்கப்படுத்த சௌதி நீதிமன்றம் உத்தரவு பள்ளிகளில் அதிகரிக்கும் பாலியல் வன்முறை சம்பவங்கள்: அரசு செய்ய வேண்டியது என்ன? இந் நடவடிக்கைகளுக்கு முன்னர், குறித்த மாணவியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சம்பந்தப்பட்ட விரிவுரையாளர், தான் தவறாக நடந்து கொண்டமையை வெளிப்படுத்த வேண்டாம் எனக் கேட்டு, அழுது - மன்னிப்புக் கோரியதாகக் கூறப்படுகிறது. அது குறித்த குரல் பதிவுகள் பிபிசிக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. இது இவ்வாறிருக்க, பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் மாணவி, சம்பந்தப்பட்ட விரிவுரையாளருக்கு எதிராக செய்த முறைப்பாட்டை வாபஸ் பெற்றுக் கொள்வதாக, தற்போது பல்கலைக்கழகத்துக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார். இதனை பல்கலைக்கழகத்தின் நிருவாகம் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தியது.     படக்குறிப்பு, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி மற்றும் அவரின் குடும்பத்தினரை குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விரிவுரையாளர் சார்பாகச் சந்தித்த ஒரு தரப்பினர், கருணை அடிப்படையில் கேட்டுக் கொண்டமைக்கு அமைவாக, அந்த மாணவி தனது முறைப்பாட்டை வாபஸ் பெறுவதற்கான கடிதத்தை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பியுள்ளதாக தெரியவருகிறது. பல்கலைக்கழகத்தின் பதில் இந்த நிலையில், சம்பந்தப்பட்ட மாணவி தனது முறைப்பாட்டை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ள போதிலும், இவ்விவகாரம் தொடர்பில் முறையான விசாரணைகள் நடைபெறும் என, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் பிபிசியிடம் தெரிவித்தார். "இந்த சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்டதை அடுத்து, பல்கலைக்கழக அதிகாரிகளுடன் கலந்துரையாடினேன். பின்னர் அறபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் சுமார் 400 மாணவர்களைச் சந்தித்து அவர்களிடம் தைரியமளிக்கும் விதமாக பேசினேன். நடந்த சம்பவம் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும், தவறு செய்தவர்கள் தப்பிக்க மாட்டார்கள் என்பதையும் உறுதிப்படுத்தினேன். தைரியமாக தங்கள் கல்வியை தொடருமாறும் மாணவர்களுக்குக் கூறினேன்" என, உபவேந்தர் ரமீஸ் தெரிவித்தார். தற்போது ஆரம்ப கட்ட விசாரணைகள் நடந்து வருவதாகவும், அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், பல்கலைக்கழகத்துக்கு வெளியிலுள்ளவர்களைக் கொண்டு அமைக்கப்படும் குழுவைக் மூலம் முறையான விசாரணைகள் நடதப்படும் எனவும் உபவேந்தர் கூறினார். "சம்பந்தப்பட்ட மாணவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். நடந்த சம்பவத்துக்கு பல்கலைக்கழகம் சார்பில் அந்த மாணவியிடம் மன்னிப்புக் கோரினேன். தைரியமாக அவரின் கல்வியைத் தொடருமாறும் கேட்டுக் கொண்டேன்" எனவும் உபவேந்தர் ரமீஸ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். வடமாநில பெண் கூட்டு பாலியல் வல்லுறவு: காதலன் உள்பட மூவர் கைது இலங்கையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க பெண் எம்.பி.க்கள் ஆதரவு இந்த நிலையில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பைத் தொடர்வதில்லை எனும் முடிவில் குறித்த மாணவி உள்ளார் என அறிய முடிகிறது. இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாணவியுடன் பேசுவதற்காக அவரின் தொலைபேசி இலக்கத்தை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது. அப்போது அந்த அழைப்புக்குப் பதிலளித்த மாணவியின் தந்தை, இந்த விவகாரம் தொடர்பில் யாருடனும் பேசுவதற்கு தாம் தயாரில்லை எனக்கூறி, தங்கள் தரப்பு நியாயங்களைப் பேசுவதற்குக் கூட - மறுத்து விட்டார். பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்ட குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள குறித்த விரிவுரையாளர், சில வருடங்களுக்கு முன்னரும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்தார் எனும் குற்றச்சாட்டின்பேரில், அப்போதைய உபவேந்தரால் எச்சரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.     படக்குறிப்பு, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தொடரும் குற்றச்சாட்டுகள் தென்கிழக்குப் பல்கலைகழகத்தில் இதற்கு முன்னரும், மாணவியொருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டுக்குள்ளான சிரேஷ்ட விரிவுரையாளரொருவர், பணியிலிருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சில வருடங்களுக்கு முன்னர், முன்னைய உபவேந்தரின் பதவிக் காலத்தில் அந்த விரிவுரையாளர் பணி நீக்கம் செய்யப்பட்டார். இது இவ்வாறிருக்க, கடந்த அரசாங்கத்தில் உயர் கல்வி அமைச்சராகப் பதவி வகித்த விஜேதாஸ ராஜபக்ஷ, 2018ஆம் ஆண்டு நாடாளுமன்றில் ஒரு தடவை பேசும்போது; "தென்கிழககுப் பல்கலைக்கழகத்திலுள்ள சில விரிவுரையாளர்களுக்கு, அங்குள்ள மாணவிகள் பாலியல் லஞ்சம் கொடுக்காமல், சில பாடங்களில் தேர்ச்சியடைய முடியாது" என்று, பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். அப்போது அந்தப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகப் பதவி வகித்த பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமிடம், அமைச்சரின் அந்தக் குற்றச்சாட்டுக் குறித்து அப்போது பிபிசி தமிழ் கருத்துக் கேட்டபோது; அது அமைச்சர் சொன்ன விடயம், அதற்கு என்னால் பதிலளிக்க முடியாது" எனக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சுமார் 5500 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இவர்களில் 80 வீதமானோர் பெண்களாவர். https://www.bbc.com/tamil/sri-lanka-60020405
  • பிறந்தநாள் வாழ்த்துகள் வாலி, வாழ்க வளத்துடன்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.