Jump to content

யோகக் கலை


Recommended Posts

இனிய நண்பர்களே !!

இந்தத் திரியில், நோய்தீர்க்கும் அரிய யோகாசனங்கள் பற்றி இலகு தமிழில் என் அனுபவங்களையும் சேர்த்து எழுதலாம் என நினைக்கிறேன். யோகாசனங்கள் பயிலுவதற்கு வயது ஒரு தடையல்ல. இளையோர் முதல் முதியோர் வரை வீட்டில் தாங்களாகவே பயில முடியும்.

உடலையும் உள்ளத்தையும் அழகாக வைத்திருக்க பெரிதும் உதவுவது யோகாசனம். இந்நாளில், இது ஒரு நாகரீக, பணம் செய்யும் ஒரு கலையாக மேற்குலகத்தில் கருதப்பட்டாலும் கூட, ஆன்மீக முன்னேற்றத்திற்காக யோகிகளும் சித்தர்களும் கீழைத்தேயத்தில் இக்கலையை பயன்படுத்தினர்.

இருந்தபோதிலும், நோயற்ற வாழ்வை கருத்தில் கொண்டு நாமிதை பயிலலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் சொல்லுங்கோ கேட்பம், எனக்கும் வயசு போகுது உதுகளை செய்தாவது இளமையாக இருப்பம் :)

Link to comment
Share on other sites

இந்தத் திரியில், நோய்தீர்க்கும் அரிய யோகாசனங்கள் பற்றி இலகு தமிழில் என் அனுபவங்களையும் சேர்த்து எழுதலாம் என நினைக்கிறேன். யோகாசனங்கள் பயிலுவதற்கு வயது ஒரு தடையல்ல. இளையோர் முதல் முதியோர் வரை வீட்டில் தாங்களாகவே பயில முடியும்.

நல்ல முயற்சி தொடருங்கள்... காத்திருக்கிறோம்...

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தினசரி யோகாசனம் செய்பவன்.நல்ல முயற்சி ஈழத்திருமகன் :)

Link to comment
Share on other sites

மிகவும் நல்லது நண்பர்களே. உங்கள் ஆர்வம் மெச்சத்தக்கது. :)

இந்த பதிவை எழுத உதவியாக அமைந்த நூல்கள்:

1. யோகி சுந்தரம், "சுந்தர யோக சிகிச்சை", The Yoga Publishing House, Bangalore, 1957.

2. சிதானந்த யோகி, "சிதானந்த யோக உடற்பயிற்சி", Vasthiyan Press, Jaffna, 1970.

3. Yogi Ramacharaka, "Science of Breath", L.N.Fowler & Co. Ltd, London, 1903.

Link to comment
Share on other sites

அறிமுகம்.

பொதுவாகவே "யோகம்" எனப்படுவது "அட்டாங்க யோகம்" ஆகும். யோகாசனம் எனப்படுவது "ஹடயோகம்". எமது உடலில் நோய்களை எதிர்க்கும் மருந்துப் பெட்டகங்கள் இருக்கின்றன. இவை நாளமில்லாத சுரப்பிகள் என்றும் அறியப்படும். உடலை வளைத்தும் முறுக்கியும் இந்த குழலற்ற சதைக்கோளங்களில் இருந்து ரசத்தை பிழிய வைப்பதுதான் ஹடயோகம். பிழியப்படும் இந்த ரசங்கள், உடலை நோய்கள் அண்டவிடாது பாதுகாப்பன.

யோகாசனம் பயில்வதால் எலும்புக் கூடுகள், தசைநார்கள், சமிபாட்டு கருவிகள், சுவாசக் கருவிகள், மூளை, நரம்புத் தொகுதி, இருதயம், நாடி நாளங்கள், கழிவகற்றும் கருவிகள், இனப் பெருக்கக் கருவிகள் அனைத்தும் புத்துணர்வு பெற்று தத்தம் இயக்கங்களை சரிவரச் செய்யும். மூச்சுப் பயிற்சி (ப்ராணாயாமம்) உடலில் உள்ள உயிர்வாயு (பிராணவாயு) அளவை மிக அதிகமாக உயர்த்துகிறது. நரம்புகளை இயக்குவது பொறிகள். பொறிகளை இயக்குவது மனம். மனதை இயக்குவது புத்தி. உடலையும் மனதையும் இணைப்பது உயிர் (பிராணன்). பிராண சக்தியை வளர்த்தால் மனம் தூய்மையடையும். உடல் தெய்வப் பொலிவு பெறும்.

பிராணாயாமமும் குண்டலினி பற்றியும் பிறகு பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

ம்ம்..ஈழதிருமுருகன்..ன் மாமா..மா..!!.. :wub:

வடிவா காட்டி தாங்கோ நானும் செய்து பார்க்கிறன்..ன்..ஆனா என்ன எனக்கு பொறுமை கொஞ்சம் கொறைய கூட நேரம் எல்லாம் ஒரு இடத்தில இருந்து என்னால செய்ய ஏலாது..து.. :(

ஏன் எண்டா நான் ஒரு இடத்தில இருந்தாலும்..ம்..மனசு பல இடங்களிள நிற்குது அது தான் எண்ட பிரச்சினை இதுக்கு ஏதாச்சும் தீர்வு இருந்தா சொல்லுறியளோ..ளோ..!! :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஆவலுடன் இத்திரியை படிக்கு காத்திருக்கின்றேன்.

தொடர்ந்து எழுதுங்கள்...

Link to comment
Share on other sites

பொது விதி

யோகாசனம் பயிலும் போது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. கடுகு, காரம், புகைத்தல், மது, கோப்பி, தேனீர் விலக்க வேண்டும். (பிராணாயாமம் செய்பவர்கள் கட்டாயம் இதை கடைப்பிடிக்க வேண்டும். ஏனென்றால், பிராணாயாமம் செய்யும் போது உடலில் மிகவும் அதிகமாக சூடு ஏறுவதை காணலாம். தினமும் தலைக்கு குளிப்பதும், பால், இளநீர், தேசிக்காய் சாறு என்பன பருகுதல் மிக்க பயன் தரும்)

அதிகாலையில் எழுந்து, காலைக்கடன்களை முடித்தபின்பு 10 மிடறு தண்ணீர் அருந்தியபின் ஆசனம் பயில்வது சாலச் சிறந்தது. சுத்தமான தரையில் தடித்த படுக்கை விரிப்பை (bed sheet) விரித்து அதன்மேல் இருந்து பயிற்சி செய்யலாம்.

பிற்பகலில் ஆசனம் செய்ய விரும்புவோர் மதிய உணவருந்தி குறைந்தது 5மணி நேரத்தின் பின் பயிற்சிகளை தொடங்கலாம். அல்லதுபோனால், உடலை வளைத்து முருக்கும்போது குடலில் நோவு அல்லது வெடிப்பு உண்டாகலாம்.

18 வயதிற்கு குறைந்தவர்கள் தலைகீழ் ஆசனம் செய்யக் கூடாது. பெரியவர்கள் எடுத்த எடுப்பில் சிரசாசனம் செய்யக்கூடாது. குறைந்தது 1மாதமாவது மற்றைய ஆசனக்களை செய்துதான் சிரசாசனம் செய்ய வேண்டும்.

இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் (High BP) ஒரு யோகியின் ஆலோசனைப்படி பயில்வது நல்லது.

பெண்கள் வயிற்றில் நோவு உள்ள காலப் பகுதியில் ஆசனங்கள் செய்யக்கூடாது.

Link to comment
Share on other sites

யோகாசனம் பயிலும் போது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. கடுகு, காரம், புகைத்தல், மது, கோப்பி, தேனீர் விலக்க வேண்டும். (

இதில் கடுகு, காரம் எடுக்காமல் இருப்பது தான் கஸ்டம்..

எங்கள் சமையலில் கடுகும் உறைப்பும் இருக்குமே :)

Link to comment
Share on other sites

பிராணாயாமம்

உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை

கருத்தினால் இருத்தியே கபாலமேற்ற வல்லீரேல்

விருத்தரும் பாலராவர், மேனியும் சிவந்திடும்

அருட்டரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே !!

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை

நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்

வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மானிடர்

கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே. !!

ம்.. :)

எமது சுவாசம் சரியாக அமைந்தாலே பல நோய்கள் அண்டாது. சுவாசம் எப்பொழுதும் ஒன்றில் இடது நாசித்துவாரம் வழியே அல்லது வலது நாசித் துவாரம் வழியே நடைபெறுவதை அவதானித்திருப்பீர்கள்.

பிராணாயாமம் இந்த ஒழுங்கை சீர்படுத்துகிறது. இதில் பூரகம் (சுவாசத்தினை உள்ளிழுப்பது), ரோசகம் ( சுவாசத்தை வெளிவிடுவது), கும்பகம் (சுவாசத்தை உள்ளே அடக்கி வைப்பது) என மூன்று படிமுறைகள் இருக்கின்றன. ஒரு முழுச் சுற்றில் (complete cycle of pranayaama) இந்த மூன்று படிநிலைகளுக்கும் குறிப்பிட்ட கால அளவுகள் இருக்கின்றன (இதைப்பற்றி விரிவாக இறுதியில் எழுதுகிறேன்). ஆசனங்கள் செய்து உடல் உறுதிபெறும்வரை "சாதாரண பிராணாயாமம்" செய்வது நல்லது. ஆசனம் பயில முடியாதவர்கள் கூட இதைப் பயிலலாம்.

உங்கள் முதுகெலும்பு நேராக இருக்கும் வண்ணம் அமர்ந்து கொள்ளுங்கள். வலதுகை கட்டைவிரலை வலது நாசியை பக்கவாட்டால் அமத்திய படியும், மோதிர விரல் இடது நாசியை பக்கவாட்டால் அமத்திய படியும் இருக்குமாறு வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது கட்டைவிரலை சிறிது விலக்கி, வலது நாசியினால் மெதுவாக சுவாசத்தை உள்ளிழுங்கள். அவசரப்படாமல், எவ்வளவு முடியுமோ அவ்வளவு (steady stream ஆக) உள்ளெழுங்கள். அப்படியே கட்டை விரலால் வலது நாசியை மூடி, சிறிது நேரம் சுவாசத்தை வெளிவிடாது உள்ளேயே வைத்திருக்கவும். இதில் கால அளவுகள் பற்றி கவலைப்பட வேண்டாம். உங்களால் முடிந்தளவு முயற்சிக்கவும். பின், மோதிர விரலை உயர்த்தி மிக நிதானமாக இடது நாசியின் வழியே சுவாசத்தை வெளிவிடவும். மீண்டும் இடது நாசியால் இழுத்து, உள்ளடக்கி, வலது நாசியால் வெளிவிடவும். இது ஒருமுறை (one cycle) எனப்படும். ஆரம்ப காலத்தில் தினமும் 10 முறை செய்யலாம்.

பலன்கள்:

சுவாசப்பையும் இரத்தமும் சுத்திகரிக்கப் படுகின்றன. குழலற்ற கோளங்கள் வீரியம் பெறுகின்றன. பீனிசம், கசம், அஸ்மா போன்ற நோய்கள் வராது தடுக்கும். முகம் அழகுபெறும். விந்து இறுக்கமடையும். மலட்டுத்தன்மை விலகும். ஞாபகசக்தி அதிகரிக்கும். அறிவு வளரும். மனவடக்கம் உண்டாகும்.

குறிப்பு:

1. காற்றோட்டமுள்ள இடத்தில் அமர்ந்து இதனை பழக வேண்டும். தாவர உணவு நன்மை தரும். இல்லற வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது பிராணாயாமம்.

2. உடலில் பிசுபிசுவென வியர்வை அரும்பினாலோ அல்லது வெப்பம் ஏறினாலோ பயப்பட வேண்டாம்.

Link to comment
Share on other sites

உங்கள் முதுகெலும்பு நேராக இருக்கும் வண்ணம் அமர்ந்து கொள்ளுங்கள். வலதுகை கட்டைவிரலை வலது நாசியை பக்கவாட்டால் அமத்திய படியும், மோதிர விரல் இடது நாசியை பக்கவாட்டால் அமத்திய படியும் இருக்குமாறு வைத்துக் கொள்ளுங்கள்.

இது எனக்கு கொஞ்சம் புரியவில்லை..யாராவது விளங்கப்படுத்துவீர்களா?

Link to comment
Share on other sites

இதில் கடுகு, காரம் எடுக்காமல் இருப்பது தான் கஸ்டம்..

எங்கள் சமையலில் கடுகும் உறைப்பும் இருக்குமே :)

ஆமாம். இவை எங்கள் சமையலில் அதிகம்தான். சிறிது சிறிதாக குறைத்தால் நல்லது. ஒருசில வழிகளில் முன்னேற வேண்டுமாயின் சில விடயங்களை கைவிட்டுத்தான் ஆகவேண்டி இருக்கிறது. :wub:

ஆரோக்கியமானவர்கள் உடல் வனப்பை பெற யோகாசனத்தை பயில்வார்கள். அப்படியானவர்கள் இவற்றை முற்றாக நீக்கத்தேவையில்லை என நினைக்கிறேன். ஆனால், நோய்தீர்வதற்காக ஆசனங்கள் பழகுபவர்கள் இதை கண்டிப்பாக விடவேண்டும்.

Link to comment
Share on other sites

ஆமாம். இவை எங்கள் சமையலில் அதிகம்தான். சிறிது சிறிதாக குறைத்தால் நல்லது. ஒருசில வழிகளில் முன்னேற வேண்டுமாயின் சில விடயங்களை கைவிட்டுத்தான் ஆகவேண்டி இருக்கிறது. :wub:

ஆரோக்கியமானவர்கள் உடல் வனப்பை பெற யோகாசனத்தை பயில்வார்கள். அப்படியானவர்கள் இவற்றை முற்றாக நீக்கத்தேவையில்லை என நினைக்கிறேன். ஆனால், நோய்தீர்வதற்காக ஆசனங்கள் பழகுபவர்கள் இதை கண்டிப்பாக விடவேண்டும்.

பதிலுக்கு மிக்க நன்றி..:)

Link to comment
Share on other sites

1. வச்சிராசனம்

பழகுவதற்கு மிகவும் இலகுவானது. விரிப்பில் இருந்து கால்களை பின்னால் மடக்கி, பிருஷ்ட பக்கமாக இடுப்புக்கு கீழ் பகுதியில் இருக்க வேண்டும். (அதாவது, நீங்கள் குதிக்கால் மேலே பார்க்கும் வண்ணம் காலை மடக்கி இரண்டு உள்ளங்கால் மேலும் உங்கள் பிருஷ்ட்ட பாகம் அமையும்வண்ணம் இருப்பீர்கள்). கைகளை நீட்டி முழங்கால் மேல் வைக்கவும். முதுகுத்தண்டு தரைக்குச் செங்குத்தாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

வச்சிராசனத்தில் இருந்தவாறே பிராணாயாமமும் செய்யலாம்.

இந்த ஆசனம் அனேக நன்மைகளை தரவல்லது. பசியை உண்டுபண்ணும், அஜீரணம் இருக்காது, குதிவாதம் மற்றும் முழங்கால் வாதம் என்பன வரவிடாது தடுக்கும்.

2 தொடக்கம் 4 நிமிடங்கள் வரை இருக்கலாம்.

Link to comment
Share on other sites

2. பத்மாசனம்

உடல் பருத்தவர்கள் இதை பழகச் சிரமப்பட்டாலும் விடாமுயற்சி பலனளிக்கும். விரிப்பின் மேல் கால்களிரண்டையும் நீட்டி அமர்ந்து கொள்ளுங்கள். முதலில் வலது காலை மடக்கி இடது தொடையின்மேல் (குதிக்கால் வயிற்றில் முட்டும்படி) வைக்கவும். பின் இடது காலை மடக்கி வலது தொடையின் மேல் வைத்து நிமிர்ந்து கம்பீரமாக இருக்கவும். கண்களை மூடி நெற்றி புருவ மத்தியில் உங்கள் கவனத்தை செலுத்தவும். மூச்சை உள்ளிழுக்கும் போது "ஸோ" என்றும் வெளிவிடும்போது "ஹம்" என்றும் மனதில் உச்சரிக்க வேண்டும். 5 முதல் 10 நிமிடம் வரை இருக்கலாம்.

பயன்:

சுவாசப்பையை நேராக வைக்கிறது. அதிகளவு பிராணவாயுவை உள்ளிழுக்க உதவுகிறது.முதுகு எலும்பும் அதனுடன் சேர்ந்த தசை, நரம்புகள் வலுப்பெறுகின்றன. நல்ல ஞாபக சக்தியை அளிக்கிறது. சுழுமுனை நாடியை வலுவடைய செய்கிறது. பெருந்தொடைகளை கரைக்கின்றது.

Link to comment
Share on other sites

3. சித்தாசனம்

வலதுகாலை மடக்கி அதன் குதிப்பகுதி மூலத்திற்கும் மர்மஸ்தானத்திற்கும் இடையில் (கருவாயின் கீழ் இரண்டங்குலம், எருவாயின் மேல் இரண்டங்குலம் என இந்த இடத்தை திருமூலர் குறிப்பிடுவார்) இடித்து வைக்கவும். இப்பொழுது இடது காலை மடக்கி அதன் மேற்பாதம் வலது குதியின்மேல் இருக்குமாறு உடலை நிமிர்த்தி அமர்ந்து கொள்ளவும். சிந்தனையை சிதறவிடாமல் அமர்ந்திருக்கவும்.

பயன்:

இல்லறத்திற்கும், பிரம்மச்சாரியத்திற்கும் நன்மை அளிக்கிறது. விந்து இறுக்கமடையும் (அத்துடன் தன் இஷ்ட்டத்துக்கு வெளியேறுவதையும் குறைக்கும்) . ஆன்ம முன்னேற்றம் காணலாம்.

குறிப்பு:

1. இந்த ஆசனம் seminal energy யை உடலில் கலக்கச் செய்கிறது. எந்நேரமும் உற்சாகமாக இருக்கலாம். ( மனக் கட்டுப்பாடற்றவர்கள் தீய வழியில் செல்லவும் இடமுண்டு).

2. இல்லறத்தில் இருப்பவர்கள் 2 நிமிடத்துக்கு மேல் இந்த ஆசனத்தில் இருக்க வேண்டாம்.

3. யோகிகளும் சந்நியாசிகளும் முதலில் பழகுவது இந்த ஆசனமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசனங்களை படங்களுடன் விளக்கின் கூடிய பயனுள்ளதாக இருக்கும்..! :unsure:

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

யோகாசனத்தை ஆசானுடன் பழகுவதே சிறந்தது. யோகாசனம் எமது உள்ளுறுப்புக்களைப் பலப்படுத்ததச் செய்யும் ஆசனங்களாகும். அதோடு, பல ஆசனங்கள் மிகவும் கடினமானவை. அவற்றை நாம் சிறிதளவேனும் தவறாகச் செய்தாலும் பின்விளைவுகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதுமட்டுமின்றி, ஆசனங்கள் செய்யும்போது, நாம் எமது மூச்சைக் கட்டுப்படுத்தல், மற்ற உறுப்புக்களை உரிய முறையில் வைத்திருத்தல் எனப் பல சின்னச் சின்ன விடயங்கள் உண்டு. நாம் ஆசனங்கள் செய்யும்போது, அவற்றையும் சரியாகச் செய்தால்தான் ஆசனத்தின் பலன் கிட்டும். முதலில், ஓரிரு மாதங்களாவது ஆசானுடன் யோகாசனத்தைப் பழகிவிட்டு அதன்பின்னர் செய்வதே சிறந்தது.

பல வருடங்களாக, நானும் புத்தங்களை வைத்தும், ஜிம்களில் நடத்தப்படும் யோகாசன வகுப்புகளுக்குப் போயும் யோகாசனம் செய்தேன். ஆனால், நான் எதிர்பார்த்த பலனோ திருப்தியோ கிடைக்கவில்லை. அதன்பின்னர், ஓர் தமிழ் ஆசானிடம் சென்று பழகினேன். அங்குதான் மூச்சைக் கட்டுப்படுத்தல், ஒவ்வொரு ஆசனம் செய்யும்போதும், எவ்வாறான மூச்சுப் பயிற்சியைச் செய்யவேண்டும், எந்த ஆசனங்களை எவ்வளவு காலத்திற்குப் பின்னர் செய்யவேண்டுமெனப் பல தகவல்களை அறிந்தேன். சில ஆசனங்களை நாம் எடுத்த எடுப்பிலேயே செய்ய முடியாது. மற்ற ஆசனங்களின் பயிற்சிகளின் பின்னரே நாம் அதனைச் செய்யவேண்டும். எனது அனுபவத்தின்படி, ஆசான் மூலம் பயிலும்போதுதான் எமக்கு முழுப்பலனும் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

  • 1 year later...

நீண்ட காலத்திற்கு பிறகுஇ இந்த தொடரை நண்பர்கள் விரும்பி கேட்டதற்காக தொடர்ந்து எழுதவுள்ளேன். யாராவது பயன் பெற்றால் நல்லது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.