• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

tamilsvoice

பயம் – மதம் – பகுத்தறிவு – பரிணாமம்

Recommended Posts

இங்கு ஒரு சிலர் எப்போதும் எந்த தலைப்புக்கும் எதிர்வினைக் கருத்தெழுதி மற்றவர்களை அறிவிலிகள் என்று சொல்லிக்கொண்டு

தாங்கள் பகுத்தறிவாதிகளாக காட்டிக்கொண்டிருக்கிறார்கள

Share this post

Link to post
Share on other sites

நெடுக்கர்,

சச்சிதானந்தம் சொன்ன சூலகத் தகவலில் அவ்வளவு அறிவிலித்தனம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நீங்கள் சொல்லும் அகமேலணி புறமேலணி உள்ளடக்கிய விளக்கம் தருவதல்ல அவரது கட்டுரையின் நோக்கம். இரத்தப் போக்கு ஏற்படுவது கடவுள் வித்தையல்ல, ஒரு உயிரியல் நிகழ்வு என்ற உண்மையையே சச்சிதானந்தம் சொன்னார். அதை எதிர் கொள்வதை விட்டு விட்டு கோழி முட்டையில் சவரம் செய்வது போல இருக்கிறது நீங்கள் சச்சிதானந்தத்தின் அறிவுக் குறைபாட்டை நிரூபிக்க முயற்சித்த விதம்.

Share this post

Link to post
Share on other sites

சச்சிதானந்தம் குறிப்பிடுவது போல.. சூல்.. அதனைச் சூழ உள்ள கலங்கள் உடைந்து இரத்தப் போக்கு ஏற்படுகிறது என்பது.. அறிவியல் உலகில் மனித உயிரியலில் கண்டுபிடிக்கப்படாத சச்சிதானந்த கோட்பாடு என்று கொண்டு அதனை தமிழர்கள் படித்துப் பயன்பெறட்டும். அறிவியல் என்று அதனை இனங்காட்டாதீர்கள். அது தமிழர்களில் அறிவியல் அறிந்தவர்களையும் முட்டாள் ஆக்கிவிடும்..! :unsure:

உண்மையில் கருக்கட்டாத தனிக் கல முட்டை சிதைவடைந்து மீள அகத்துறிஞ்சப்பட.. கருப்பைச் சுவரின் அக மேலணி கருப்பையை அடுத்த மாதவிடாய் வட்டத்துக்கு ஏற்ப சீர் செய்யும் பொருட்டு சிதைவடைவதாலேயே அந்த மேலணிக்கு குருதி வழங்கும் குருதிக் கலங்கள் உடைவதால் இரத்தப் போக்கு ஏற்படுகிறது. மேலணியின் சிதைவடையும் கூறுகளும் வெளியேறுகின்றன. கருக்கட்டப்பதாட முட்டைக்கும் கருப்பை மேலணிக்கும் எந்த நேரடித் தொடர்பும் கிடையாது..! :o

If the ovum is not fertilized within the period it dies and is reabsorbed by the woman’s body. The body prepares itself for the implantation of the fertilized egg with the change of the uterine lining and stays ready for about two weeks which is the maximum time for a fertilized egg to travel up the uterus and implant itself on it’s walls. If fertilization does not occur, the lining of the uterus is shed automatically, again beginning the process of the menstruation cycle.

http://www.meditests.com/understanding-menstrual-cycle.html

மேலும்.. இயற்கை.. இறைவன்.. சக்தி தொடர்பில் முன்னர் பல விவாதங்களில் உங்களுக்குப் போதிய அளவுக்கு விளக்கம் தந்திருக்கிறேன். அவற்றை மீளப் படியுங்கள்.

//மாதவிலக்கானது பெண்கள் பருவமடைந்த பின்னர் இரு சூலகங்களிருந்தும் ஒன்று விட்ட 28 நாட்களுக்கு ஒரு முறை விடும் சூல், கருக்கட்டலுக்கு உட்படாததால் அச்சூலும் அதன் கூட காணப்பட்ட பகுதிகளிலிருந்து சில கலங்களும் சிதைவடைந்து இரத்தத்துடன் வெளியேறுகிறது.//

//If no pregnancy occurs, the last phase is the Leutal phase or secretory phase where the unfertilized egg is removed from the body and is discarded along with other bodily waste.//

நெடுக்காலபோவான்,

நீங்கள் தந்த இணைப்பில் மேலே காட்டிய வசனம் இருக்கிறது.இது அச்சொட்டாக சச்சிதானந்தத்தின் கட்டுரையில் வந்த வாக்கியத்தை ஒத்ததாக இருக்கிறதே? ஏன்?

இயற்கை சக்தி என்பவை என்ன என்பதை நீங்கள் முன்னர் தந்த எந்த விவாதத்திலும் வரையறை செய்யவில்லை.சொற்களுக்கு அர்த்தம் இன்றி அவற்றைப் பாவிப்பது பகுத்தறிவு அன்று.ஆகவே பகுத்தறிவாகச் சிந்திக்க வேண்டும் என்றால் கருத்தாட வேண்டும் என்றால் நீங்கள் அவற்றிற்கான விளக்கத்தை வழங்க வேண்டும்.சாட்டுக்களைச் சொல்லி விவாதத்தில் இருந்து பின் வாங்கி விடாதீர்கள்.

Share this post

Link to post
Share on other sites

அது தேவையில்லை என்பதும் தற்போதைய நிலையில் எனக்கம் உடன்பாடுதான். ஆனால் போலீசும் நீதிமன்றங்களும் இல்லாதிருந்த காலத்தினைச் சிந்தித்தப் பாருங்கள். கோயில்கள் இத்தனை பங்குகளையும் ஆற்றியுள்ளது. கோயில் சமூகத்திற்காக நிறுவப்பட்ட ஒன்றுதான். அது இன்று கள்ளப் புத்தி கொண்டவர்களின் இடமாக மாறிவிட்டது.

என்னிடமும் ஒரு கேள்வியுண்டு.

பகுத்தறிவு பேசுபவர்களால் ஒரு கோயில் கட்டுவதைக் கூட தடுத்த நிறுத்த முடிகிறதா? கோயில் என்ற சொன்னாலே வீட்டில் பகுத்தறிவு பேசும் கணவன் ஒருபுறம். கடவுள் என வழிபடும் மனைவி கணவனையும் மீறி கோயில் பக்கமே சாய்கின்றாள். மனைவிக்காக என்று கூறி கணவனும் பின் தொடர்கின்றான்.

இறைவன்,

நீங்கள் சொல்வதைப் போல் மதங்களால் சமூகத்தை வழி நடாத்த முடியாததால் தானே பொலிசும், நீதிமன்றங்களும் அரசும் வந்தன? அவை ஏன் வந்தன என்பதைச் சிந்தித்துப் பார்த்தீர்களா? என்ன நினைக்கிறீர்கள்?

//அது தேவையில்லை என்பதும் தற்போதைய நிலையில் எனக்கம் உடன்பாடுதான்//

ஆகவே இன்றைய நிலையில் மதங்களாக இருக்கும் இந்து கிரிதுவம் இசுலாம் என்பவற்றின் பெயரால் நடைபெறும் வழிபாடுகள் கோவில் கடவுள் என்பவை தேவயற்றவை என்பதுடன் நீங்கள் உடன் படுகிறீர்கள்.

//என்னிடமும் ஒரு கேள்வியுண்டு.

பகுத்தறிவு பேசுபவர்களால் ஒரு கோயில் கட்டுவதைக் கூட தடுத்த நிறுத்த முடிகிறதா? கோயில் என்ற சொன்னாலே வீட்டில் பகுத்தறிவு பேசும் கணவன் ஒருபுறம். கடவுள் என வழிபடும் மனைவி கணவனையும் மீறி கோயில் பக்கமே சாய்கின்றாள். மனைவிக்காக என்று கூறி கணவனும் பின் தொடர்கின்றான்.//

பகுத்தறிவு பேசுபவர்கள் மனித நேயம் உள்ளவர்கள்.கோவில் கட்டுவது வணக்குவது என்பது ஒவ்வொருவரினதும் அடிப்படை உரிமை.அதனைத் தடுப்பது என்பது பகுத்தறிவு அன்று.பகுத்தறிவு என்பது சுயமாக ஏற்பட வேண்டிய ஒன்று.இதனை நீங்கள் பெரியாரின் வாழ்க்கையில் காணலாம்.அவர் கடவுள் சிலைகளை உடைத்த போது தனது பணத்தில் வாங்கியே அவற்றை உடைத்தார்.அவர் கோவில்களுக்குள் புகுந்து கடவுள் சிலைகளை உடைக்கவில்லை.கடவுள் என்பவர் எல்லாம் வல்லவர் அல்ல அவரால் என்னை ஒன்றும் செய்யமுடியாது.இது ஒரு கற்சிலைதான் என்னும் சிந்தனையைத் தூண்டுவதற்காகத் தான் உடைத்தார்.அதே நேராம் தனது குடும்பபத்திற்கு நெருக்கமான கோவில் ஒன்றின் போசகராக இருந்தார்.ஏனெனில் அவர் கடவுள் நம்பிக்கையாளரிடம் இருந்த அன்பினால்.மனைவி கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தால் அவளைத் தடுப்பது அவளது உரிமையில் தலையிடும் செயல்.அதற்கு மாற்றாக அவளுக்குப் பகுத்தறிவு சிந்தனையை ஊட்டுவதன் மூலம் அவளாக உணர்ந்து தனது நம்பிக்கைகளை மீள் பரிசீலனை செய்வதே பகுத்தறிவுள்ள மனித நேயம் உள்ள மனிதர் செய்யக்கூடிய செயல்.

//கோயில் சமூகத்திற்காக நிறுவப்பட்ட ஒன்றுதான். அது இன்று கள்ளப் புத்தி கொண்டவர்களின் இடமாக மாறிவிட்டது.//

கோவில் எந்த சமூகதுக்காக நிறுவப்பட்டது? கோவில் அவசியம் அற்றது என்று முன்னர் சொனீர்களே?உங்களது கருதுக்களுடன் நீங்களே முரண்படுகிறீர்களே? வரலாற்றில் கோவில் என்பது எப்போதுமே கள்ளபுத்தி கொண்டோர்களின் இடமாகத் தான் இருந்து வந்துள்ளது.

//அன்பை மற்ற உயிர்களிடத்தில் காட்டுங்கள். அந்தக் கருத்தில் தவறில்லை. அதைப் பேணத் தவறுபவர்களிடமே தவறுண்டு. பகுத்தறி இதற்குத் துணை வராதோ?//

அன்பே சிவம் என்று சொல்லி விட்டல் போதுமா அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது?

நான் முன்னர் கேட்ட கேள்வியில் தான் இதற்கான் பதில் இருக்கிறது.மதங்களால் அன்பே சிவம் என்று கூறியதை நடைமுறைப்படுத்த முடியாது.ஏனெனில் அதன் பால் ஒருவன் நடைமுறையில் நடக்காவிட்டால் அவனைக் கடவுள் வந்து தணிடிக்க மாட்டார்.அது அவனுக்கும் தெரியும்.அதனால் தான் நீதி மன்றங்களும் மனித உரிமையைப் பாதுகாக்கும் சட்டங்களும் அவற்றைப் பாதுகாக்கும் பொலிசும் அவசியம் ஆகிறது.ஆகவே மதங்களால் சமூக நீதியை நிலை நாட்ட முடியும் என்னும் கருத்து அடிபட்டு விடுகிறது.

நடைமுறையில் மதங்கள் அன்பே சிவம் என்னும் கேட்பாட்டின் அடிப்படையில் இயங்குவதில்லை என்பதுவும் எங்கும் மதச் சண்டைகளும் கலவரங்களும் மலிந்து கிடப்பதைக் காணலாம்.ஆகவே நீங்கள் சொல்லும் மதங்கள் மனிதனை நல்வழிப்படுத்த ஏற்படுத்தப் பட்டவை என்னும் வாதம் அடிபட்டு விடுகிறது.

//ஆனால் போலீசும் நீதிமன்றங்களும் இல்லாதிருந்த காலத்தினைச் சிந்தித்தப் பாருங்கள்//

ஆமாம் பொலிசும் நீதுமன்றமும் சட்டங்களும் மனித உரிமைப் பாதுகாப்புச் சடங்களும் இல்லாத காலத்தில் ஒரு பகுதியினர் தாழ்த்தப்படவர்களக மற்ற மனிதரின் மலத்தை அள்ளவும், மாடு மேய்க்கவும் கடவுளின் பெயரால் மதத்தின் பெயரால் அடக்கப்பட்டனர்.இன்னொரு சாரார் கோவிலுக்கு வரும் வருமானத்தில் இருந்து கொண்டு அரச ஆதரவுடன் சகல வளங்களையும் பெற்று கல்வியில் அடிப்படை வசதிகள் எல்லாம் பெற்றவர்களக இருந்தனர்.பெரும் பாலன மக்கள் சுரண்டப்பட்ட ஒரு சிறுபான்மையினர் கோவிலை மையமாக வைத்து மற்றவர்களைச் சுரண்டிக் கொண்டிருந்தனர்.இது தான் சமயத்தின் பெயரால் நிகழ்ந்த கொடுமை.

//அது சரி அறிவியல் விஞ்ஙானக் கருத்துகள் சமூக நன்நடத்தைக்காக கூறியுள்ள கருத்துக்கள் என்ன வென்று ஒருக்கால் சொல்லுங்களேன்?//

இன்றிருக்கும் சட்டங்கள் எல்லாம் சமூக நீதியைப் பாதுகாக்கவும் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் என ஏற்படுத்தப்பட்டன.சர்வதேச நீதி மன்றம் முதல் எல்லா நீதி மன்றங்கலும் இவற்றைச் செய்ய ஏற் படுதப்பட்டவை.

கோவில்களை அடிப்படையாக வைத்து எழுந்த மன்னராட்சி முடிவுற்றதும் நிலப்பிரபுத்துவ முறமை முடிவுக்கு வந்தது என மதம் கோவில் என்பவை அரசுடன் சம்பந்தம் அற்றவையாக் மதச் சார்பற்றவையாக் மாற்றப்பட்டன.ஆனால் இந்த மாற்றம் எல்லா இடத்திலும் முழுமையாக நடை பெறவில்லை.மனித உரிமைகளுக்கான போரட்டமும் சமதுவத்திற்கான மனிதனின் போரட்டமும் இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. ஆகவே மனிதன் தனது பகுத்தறிவால் சிந்திது தொடர்ந்தும் சமதுவத்திற்க்கும் உரிமைகலுக்குமான போரட்டத்தைச் செய்து கொண்டுதன இருகிறான்.

எல்லா விடுதலைப் போராட்டங்களுக்குமான சிந்தனைகள் மனிதனின் பகுதறிவின் அடிப்படியில் எழுந்தவை.

Share this post

Link to post
Share on other sites

அன்பை மற்ற உயிர்களிடத்தில் காட்டுங்கள். அந்தக் கருத்தில் தவறில்லை. அதைப் பேணத் தவறுபவர்களிடமே தவறுண்டு. பகுத்தறி இதற்குத் துணை வராதோ?

பகுத்தறிவுள்ளவர்கள் அன்பே கடவுள் என்பவர்கள்.அதனால் தான் மனித நேயம் உள்ளவர்களக இருக்கிறார்கள்.அதனால் தான் கடவுள் என்பவர் கிடையாது என்றும் கோவில் பூசை வழி பாடு என்பவை தேவயற்றவை என்றும் சொல்கிறார்கள்.மற்ற மனிதர் மேல் அன்பு செலுத்து என்கிறார்கள்.

அன்பே சிவம் என்பது ஒரு மதச் சிந்தனை கிடையாது.அது சமயங்கள் சொல்லும் 'கோவிலை' 'கடவுளை' உருவ வழிபாட்டை மறுதலிக்கும் ஒரு மனித நேயச் சிந்தனை.அன்பே சிவம் என்று சொல்லி விட்டு நீங்கள் கோவில் சென்று கடவுளை வழிபட முடியாது.ஏனெனில் கடவுள் என்பது மற்ற மனிதர் மேல் அன்பு செலுத்தும் சிந்தனை.அதற்கும் உருவ வழிபாட்டுக்கும் என்ன சம்பந்தம்?,

இந்து மதத்தை மறுதலிக்க எழுந்த பல சிந்தனைகள் இந்த மத சிந்தனைகளாக உள் வாங்கப்பட்டன.அவற்றில் ஒன்று தான் இந்த அன்பே சிவம் என்னும் சிந்தனை.உண்மையில் இது இந்து மதத்தின் எல்லா அடிப்படைகளையும் நிராகரிக்கும் ஒரு சிந்தனை.

Share this post

Link to post
Share on other sites

[

//மாதவிலக்கானது பெண்கள் பருவமடைந்த பின்னர் இரு சூலகங்களிருந்தும் ஒன்று விட்ட 28 நாட்களுக்கு ஒரு முறை விடும் சூல், கருக்கட்டலுக்கு உட்படாததால் அச்சூலும் அதன் கூட காணப்பட்ட பகுதிகளிலிருந்து சில கலங்களும் சிதைவடைந்து இரத்தத்துடன் வெளியேறுகிறது.//

//If no pregnancy occurs, the last phase is the Leutal phase or secretory phase where the unfertilized egg is removed from the body and is discarded along with other bodily waste.//

நெடுக்காலபோவான்,

நீங்கள் தந்த இணைப்பில் மேலே காட்டிய வசனம் இருக்கிறது.இது அச்சொட்டாக சச்சிதானந்தத்தின் கட்டுரையில் வந்த வாக்கியத்தை ஒத்ததாக இருக்கிறதே? ஏன்?

இயற்கை சக்தி என்பவை என்ன என்பதை நீங்கள் முன்னர் தந்த எந்த விவாதத்திலும் வரையறை செய்யவில்லை.சொற்களுக்கு அர்த்தம் இன்றி அவற்றைப் பாவிப்பது பகுத்தறிவு அன்று.ஆகவே பகுத்தறிவாகச் சிந்திக்க வேண்டும் என்றால் கருத்தாட வேண்டும் என்றால் நீங்கள் அவற்றிற்கான விளக்கத்தை வழங்க வேண்டும்.சாட்டுக்களைச் சொல்லி விவாதத்தில் இருந்து பின் வாங்கி விடாதீர்கள்.

சச்சிதானந்தம் எழுதியதும் ஆங்கிலத்தில் குறிப்பிட்டதும் ஒன்றல்ல.

ஆங்கிலத்தில் எழுதப்பட்டதானது கருக்கட்டப்படாத சூல் அழிவடைந்து வெளியேற்றப்படுவதாகவும் அதனுடன் பிற உடற்பாக சிதைவு வெளியேறுவதாகவும் பருமட்டாக எழுதி இருக்கிறார்கள்.

உண்மையில் சூல் சிதைவடைய குறிப்பிட்ட போசனைகள் மீள அகத்துறிஞ்சப்பட கருப்பையின் மேலணி (அதையே அங்கு பிற உடற்பாக சிதைவு என்று குறிப்பிடுகின்றனர் பொதுவாக) சிதைவடைந்து வெளியேறுகிறது.

ஆனால் சச்சிதானந்தம் எழுதிக் கொண்டதோ.. சூலும் அதனுடன் கூடக் காணப்படும் பகுதிகளில் இருந்து பிற கலங்களும் வெளியேறுவதாக. சூலிடப்பட்ட முட்டை 24 மணி நேரங்கள் தான் உயிர் வாழும். அதன் பின் அது சிதைவடைய ஆரம்பித்து அகத்துறிஞ்சப்படும். முட்டை அநேகமாக கருப்பைக்கு அப்பால் பலோபியன் குழாயில் தான் இருக்கும். கருப்பை சுவர் மேலணிச் சிதைவு என்பது சூலிடல் (முட்டையிடல் நிகழ்ந்து) நடந்து கிட்டத்தட்ட இரு வாரங்களின் பின் நடைபெறுவது..! அதன் போதே இரத்தப் போக்கு ஏற்படுகிறது. சூலைச் சூழக் காணப்படுவது கலங்கள் அல்ல. சூல் சூலிடப்பட்ட பின் இருந்த இடத்தில் இருப்பது பலோபியன் குழாய். அது சிதைவடைவதும் இல்லை..! அதுபோன்று சூல் சூலிடமுதல் காணப்படுவது சூலகம். அதுவும் சிதைவடைவதில்லை..!

மக்களுக்கு தவறான அர்த்தப்படும் விதமாக சச்சிதானந்தம் அறிவியலை பாவிக்க முயல்வதும்.. நாரதர் அதற்காக ஆங்கிலப் பதங்களையும் வசனங்களையும் தவறாக அர்த்தப்படுத்தும் வகையில் அரைகுறையாக விளங்கிக் கொண்டு அரைகுறையாக இனங்காட்டுவதும் சரியான செயற்பாடுகள் அன்று..! :unsure:

Share this post

Link to post
Share on other sites

நெடுக்கர்,

சச்சிதானந்தம் சொன்ன சூலகத் தகவலில் அவ்வளவு அறிவிலித்தனம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நீங்கள் சொல்லும் அகமேலணி புறமேலணி உள்ளடக்கிய விளக்கம் தருவதல்ல அவரது கட்டுரையின் நோக்கம். இரத்தப் போக்கு ஏற்படுவது கடவுள் வித்தையல்ல, ஒரு உயிரியல் நிகழ்வு என்ற உண்மையையே சச்சிதானந்தம் சொன்னார். அதை எதிர் கொள்வதை விட்டு விட்டு கோழி முட்டையில் சவரம் செய்வது போல இருக்கிறது நீங்கள் சச்சிதானந்தத்தின் அறிவுக் குறைபாட்டை நிரூபிக்க முயற்சித்த விதம்.

சச்சிதானந்தம் எழுதிய கட்டுரையே அடிப்படை விளக்கமற்றது. கடவுள் என்பதை இயற்கையாக இனங்காணும் போது.. எவ்வாறு சூல் மட்டும் இயற்கைக்குப் புறம்பான அறிவியல் அல்லது அவரது மொழியில் பகுத்தறிவு என்றாகுது.

பிரபஞ்சத்தை ஆக்கியுள்ள கூறுகள் எவை.. அவை எங்கிருந்து எப்படி ஆதிமுதலில் தோன்றின என்பதற்கு விடை கிடைக்காத போது.. சூல் என்று குறிப்பிடுவதன் மூலம்.. அது அறிவியலால் உருவானது என்பது தவறானது. அறிவியல் இயற்கையை விளங்கி விளங்கப்படுத்திக் கொள்கிறதே தவிர அறிவியல் சூலை தானாக புதிய அணுக்களை உருவாக்கி உருவாக்கவில்லை..! இதை நீங்களும் சரி சச்சிதானந்தமும் சரி விளங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை.

ஒரு விடயத்தை அறிவியல் என்று குறிப்பிட்டு எழுதும் போது கூடிய அளவு அறிவியல் அறிந்து எழுதிக் கொள்வது நல்லது. சச்சிதானந்தம் அதை பின்பற்ற வேண்டும்.

சூல் கூட இயற்கையின் அம்சமே அன்றி.. வேறல்ல..!

இயற்கையைத்தான் கடவுளாக மதவாதிகளும் கொள்கின்றனர். :unsure:

Share this post

Link to post
Share on other sites

சனத்தொகை அடர்த்தி குறைந்த காலங்களில் கோவில்களே மனித சமூகத்தை வழிநடத்தின. சமூகக் கருத்துக்கள், அறக் கருத்துக்கள் சமூகத்தில் இருந்து தோன்றினாலும் அவை கோவில்களில் வைத்துத்தான் நடைமுறைப்படுத்தப் பட்டன. அதனால் கோவில்களின் அவசியம் அன்றிருந்தது. கல்வியைப் புகட்டுவது சமூகப் பிணக்குகளைத் தீர்ப்பது, தண்டயையளிப்பது என்பதெல்லாம் கோவில்களில் வைத்தே செய்யப்பட்டன.

ஆனால் இன்றைய நிலை அப்படியல்ல. இது யாவருக்கும் தெரிந்த விடயம். அப்படியிருக்க கோவில்களின் ஆதிக்கம் இன்றும் நிலைபெற்றிருப்பது மட்டுமல்ல இனிவருங் காலங்களிலும் இருக்கத்தான் போகிறது. அது அப்படிப்பட்ட அத்திவாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது, அதுதான் என்னுடைய கருத்தே தவிர கோயில்கள் கட்டாயம் என நான் ஆதரிக்கவுமில்லை, முரண்பட்டு நிற்கவுமில்லை.

பகுத்தறிவு யாவருக்கும் பொதுவானது. அத் தன்மை எல்லா மனிதர்களிடமும் உண்டு. ஆனாலும் இப் பகுத்தறிவு என்பது மனிதனின் விருப்பிற்கு இடங் கொடுத்தே செயற்படுகின்றது. உண்டு என்ற விருப்பத்தில் நானும், இல்லை என்ற விருப்பத்தில் நீங்களும் இருப்பதால் இது இப்படியே தொடரும்.

மனிதநேயம் எங்குண்டு? பகுத்தறிவாளர்களிடமா? அப்படியென்றால் யேசுவும் ஒரு பகுத்தறிவாளன். புத்தன், முகமது நபி , திருமூலர் மாணிக்கவாசகர் , ஒளவையார் திருவள்ளுவர் ஆகியோரும் பகுத்தறிவாளர்களே. இவர்கள் சொல்லாத மனித நேயம் இப்போது என்ன சொல்லப்பட்டிருக்கிறது.

காட்டுமிராண்டித் தனமாக நடந்த பகுத்தறிவாளர்களைக் இப்போதும் காணக் கூடியதாகத்தானேயிருக்கிறது.

சைவத்தை மறுதலிக்கும் கருத்துக்கள் எது? சமணக் கருத்தைச் சொல்ல வருகிறீர்களா? அது சொன்னது பகுத்தறிவுக் கருத்துக்களென்றால் அது ஏன் அழிந்தது. மக்கள் பின்பற்றினார்கள். நல்ல கருத்துக்கள் சொல்லப்பட்டன, மக்கள் ஆதரவு இருந்ததென்றெல்லாம் சொல்லப்பட்ட சமயம் இன்று அழிந்து விட்டதென்றால் நம்பக் கூடிய ஒன்றாக இருக்கிறதா?

சைவமும் இன்றிருக்கிறது, கோவில்களும் இன்றிருக்கிறது, அவைகள் மக்களின் ஆதரவில்தான் இன்றும் வாழ்கின்றன. அவர்கள் பகுத்தறிவு இல்லாத மக்கள் என்றா கருதுகிறீர்கள். இல்லையென்பது நம்பிக்கையற்ற விடயம். இருப்பென்பது நம்பிக்கையூட்டும் விடயம். மக்களது வாழ்வின் அடிப்படையும் நம்பிக்கை என்ற அச்சில்தான் சுழன்று கொண்டிருக்கிறது. ஆகையால் இதனை எதுவும் செய்துவிட முடியாது.

Share this post

Link to post
Share on other sites

[

சச்சிதானந்தம் எழுதியதும் ஆங்கிலத்தில் குறிப்பிட்டதும் ஒன்றல்ல.

ஆங்கிலத்தில் எழுதப்பட்டதானது கருக்கட்டப்படாத சூல் அழிவடைந்து வெளியேற்றப்படுவதாகவும் அதனுடன் பிற உடற்பாக சிதைவு வெளியேறுவதாகவும் பருமட்டாக எழுதி இருக்கிறார்கள்.

அதேயே தான் பரிமட்டாக சச்சிதானதன் எழுதி இருகிறார்.

உண்மையில் சூல் சிதைவடைய குறிப்பிட்ட போசனைகள் மீள அகத்துறிஞ்சப்பட கருப்பையின் மேலணி (அதையே அங்கு பிற உடற்பாக சிதைவு என்று குறிப்பிடுகின்றனர் பொதுவாக) சிதைவடைந்து வெளியேறுகிறது..

அதாவது சூலின் உள் உள்ள போசணைகள் உறின்சப்படுகின்றன, ஆனால் பின்னர் சூலும் வெளியேறுகிறது.அதனைத் தானே சச்சிதானந்தம் பரிமட்டாக எழுதி உள்ளார்.அவர் அதனை விரிவாக் எழுதவில்லை,ஏன்னில் கட்டுரையின் நோக்கம் அதுவல்ல.

ஆனால் சச்சிதானந்தம் எழுதிக் கொண்டதோ.. சூலும் அதனுடன் கூடக் காணப்படும் பகுதிகளில் இருந்து பிற கலங்களும் வெளியேறுவதாக. சூலிடப்பட்ட முட்டை 24 மணி நேரங்கள் தான் உயிர் வாழும். அதன் பின் அது சிதைவடைய ஆரம்பித்து அகத்துறிஞ்சப்படும். முட்டை அநேகமாக கருப்பைக்கு அப்பால் பலோபியன் குழாயில் தான் இருக்கும். கருப்பை சுவர் மேலணிச் சிதைவு என்பது சூலிடல் (முட்டையிடல் நிகழ்ந்து) நடந்து கிட்டத்தட்ட இரு வாரங்களின் பின் நடைபெறுவது..! அதன் போதே இரத்தப் போக்கு ஏற்படுகிறது. சூலைச் சூழக் காணப்படுவது கலங்கள் அல்ல.

சூலைச் சூழக் காணப்படுவன எவை?

சூல் சூலிடப்பட்ட பின் இருந்த இடத்தில் இருப்பது பலோபியன் குழாய். அது சிதைவடைவதும் இல்லை..! அதுபோன்று சூல் சூலிடமுதல் காணப்படுவது சூலகம். அதுவும் சிதைவடைவதில்லை..!

மக்களுக்கு தவறான அர்த்தப்படும் விதமாக சச்சிதானந்தம் அறிவியலை பாவிக்க முயல்வதும்.. நாரதர் அதற்காக ஆங்கிலப் பதங்களையும் வசனங்களையும் தவறாக அர்த்தப்படுத்தும் வகையில் அரைகுறையாக விளங்கிக் கொண்டு அரைகுறையாக இனங்காட்டுவதும் சரியான செயற்பாடுகள் அன்று..! :unsure:

சிதைவடந்து வெளியேறுவது எது?

சச்சிதானந்தம் என்ன நடக்கிறது என்ன என்பதை விரிவாக எழுதவில்லை எனெனில் அது அவரின் கட்டுரையின் நோக்கம் அல்ல.ஒருவர் ஒரு தகவலை விரிவாக எழுதவில்லை என்பதால் அவர் புனை கதை எழுதுகிறார் என்று சொல்வது மிகவும் மோசடியான அவதூறு.இவ்வறான மோசடிகளால் உண்கைகளை மறைத்துவிட முடியாது நெடுக்காலபோவான்.

சச்சிதானந்தம் எழுதிய கட்டுரையே அடிப்படை விளக்கமற்றது. கடவுள் என்பதை இயற்கையாக இனங்காணும் போது.. எவ்வாறு சூல் மட்டும் இயற்கைக்குப் புறம்பான அறிவியல் அல்லது அவரது மொழியில் பகுத்தறிவு என்றாகுது.

பிரபஞ்சத்தை ஆக்கியுள்ள கூறுகள் எவை.. அவை எங்கிருந்து எப்படி ஆதிமுதலில் தோன்றின என்பதற்கு விடை கிடைக்காத போது.. சூல் என்று குறிப்பிடுவதன் மூலம்.. அது அறிவியலால் உருவானது என்பது தவறானது. அறிவியல் இயற்கையை விளங்கி விளங்கப்படுத்திக் கொள்கிறதே தவிர அறிவியல் சூலை தானாக புதிய அணுக்களை உருவாக்கி உருவாக்கவில்லை..! இதை நீங்களும் சரி சச்சிதானந்தமும் சரி விளங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை.

ஒரு விடயத்தை அறிவியல் என்று குறிப்பிட்டு எழுதும் போது கூடிய அளவு அறிவியல் அறிந்து எழுதிக் கொள்வது நல்லது. சச்சிதானந்தம் அதை பின்பற்ற வேண்டும்.

சூல் கூட இயற்கையின் அம்சமே அன்றி.. வேறல்ல..!

இயற்கையைத்தான் கடவுளாக மதவாதிகளும் கொள்கின்றனர். :o

நெடுகலபோவான்,

இயற்கை தான் கடவுள் என்றால் ஏன் இயற்கைக்கு கோவில் கட்டி சப்பறம் கட்டி தொழுது வணங்குவான்?

இயற்கையை வணக்குவதால் பெறப்படும் பயன் என்ன?

இயற்கையை அறியும் அறிவு அறிவியல் அது இயற்கையை அறிவது அதன் மூலம் மனித சமூகத்தை வளப்படுத்த முனைவது.

இயற்கையை வணங்குவதன் மூலம் இயற்கை எமக்கு அருள் பாலிக்குமா? இயற்கை எமது வாழ்வை வளம் படுத்துமா?

Share this post

Link to post
Share on other sites

சனத்தொகை அடர்த்தி குறைந்த காலங்களில் கோவில்களே மனித சமூகத்தை வழிநடத்தின. சமூகக் கருத்துக்கள், அறக் கருத்துக்கள் சமூகத்தில் இருந்து தோன்றினாலும் அவை கோவில்களில் வைத்துத்தான் நடைமுறைப்படுத்தப் பட்டன. அதனால் கோவில்களின் அவசியம் அன்றிருந்தது. கல்வியைப் புகட்டுவது சமூகப் பிணக்குகளைத் தீர்ப்பது, தண்டயையளிப்பது என்பதெல்லாம் கோவில்களில் வைத்தே செய்யப்பட்டன.

நான் முன்னர் எழுதிய படி கோவில்கள் சார்ந்த சமூக நீதி என்பது மனித நேயம் அற்றது சமத்துவம் அற்றது என்பதே வரலாறு.அதனை நீங்கள் மறுகிறீர்களா? ஏற்றுக் கொள்கிறீர்களா?

ஆனால் இன்றைய நிலை அப்படியல்ல. .

ஏன் நிலை மாறியது?

இது யாவருக்கும் தெரிந்த விடயம். அப்படியிருக்க கோவில்களின் ஆதிக்கம் இன்றும் நிலைபெற்றிருப்பது மட்டுமல்ல இனிவருங் காலங்களிலும் இருக்கத்தான் போகிறது. அது அப்படிப்பட்ட அத்திவாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது, அதுதான் என்னுடைய கருத்தே தவிர கோயில்கள் கட்டாயம் என நான் ஆதரிக்கவுமில்லை, முரண்பட்டு நிற்கவுமில்லை. .

காலம் காலமாக நிலவி வரும் அந்தப் பிழையான நம்பிக்களை என்னும் அத்திவாரத்தைச் சாய்ப்பதே பகுத்தறிவுப் பிரச்சரத்தின் நோக்கம்.மெல்ல மெல்ல பலரும் அதனை உணரத் தலைப்படுள்ளனர்.

பகுத்தறிவு யாவருக்கும் பொதுவானது. அத் தன்மை எல்லா மனிதர்களிடமும் உண்டு. ஆனாலும் இப் பகுத்தறிவு என்பது மனிதனின் விருப்பிற்கு இடங் கொடுத்தே செயற்படுகின்றது. உண்டு என்ற விருப்பத்தில் நானும், இல்லை என்ற விருப்பத்தில் நீங்களும் இருப்பதால் இது இப்படியே தொடரும்.

மனிதநேயம் எங்குண்டு? பகுத்தறிவாளர்களிடமா? அப்படியென்றால் யேசுவும் ஒரு பகுத்தறிவாளன். புத்தன், முகமது நபி , திருமூலர் மாணிக்கவாசகர் , ஒளவையார் திருவள்ளுவர் ஆகியோரும் பகுத்தறிவாளர்களே. இவர்கள் சொல்லாத மனித நேயம் இப்போது என்ன சொல்லப்பட்டிருக்கிறது.

அவர்கள் கடவுள் புகழ் பாடினார்கள் ஆங்காங்கே சில மனித நேயக் கருதுக்களையும் சொன்னார்கள் .ஆனால் பிராதனமக அவர்கள் மதம் சார்ந்து கடவுள் சர்ந்தே பாடினர்.அவர்களின் மனிதனேயத்துக்கு அடிப்படையான கருத்துக்கள் உள் வாங்கப் பட்டிரிப்பின் மதம் என்பதும் கடவுள் வழிபாடும் இல்லாது இருந்திருக்கும்.

காட்டுமிராண்டித் தனமாக நடந்த பகுத்தறிவாளர்களைக் இப்போதும் காணக் கூடியதாகத்தானேயிருக்கிறது.

மொட்டையாகச் சொல்லமால் உதாரணம் தாருங்கள்.காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொள்பவர்கள் மதனம்பிக்கையாளர்களே.கோவில்க

Share this post

Link to post
Share on other sites

அதேயே தான் பரிமட்டாக சச்சிதானதன் எழுதி இருகிறார்.

அவர் பரிமட்டாக எழுதியதே தவறானது.. என்பதுதான் தெளிவுறுத்தப்பட்டுள்ளது.

அதாவது சூலின் உள் உள்ள போசணைகள் உறின்சப்படுகின்றன, ஆனால் பின்னர் சூலும் வெளியேறுகிறது.அதனைத் தானே சச்சிதானந்தம் பரிமட்டாக எழுதி உள்ளார்.அவர் அதனை விரிவாக் எழுதவில்லை,ஏன்னில் கட்டுரையின் நோக்கம் அதுவல்ல.

சச்சிதானந்தம் எழுதியது மேற்கண்டவாறு அல்ல. என்பதை அவருடைய வரிகளை வாசிப்பதன் மூலம் அறியலாம். :unsure:

சூலைச் சூழக் காணப்படுவன எவை?

ovum.jpg

படத்தைப் பார்க்கவும்.

சிதைவடந்து வெளியேறுவது எது?

424px-MenstrualCycle2.png

கருப்பைச் சுவரின் மேலணி. (Endometrium)

இயற்கை தான் கடவுள் என்றால் ஏன் இயற்கைக்கு கோவில் கட்டி சப்பறம் கட்டி தொழுது வணங்குவான்?

இயற்கையை வணக்குவதால் பெறப்படும் பயன் என்ன?

இயற்கையை அறியும் அறிவு அறிவியல் அது இயற்கையை அறிவது அதன் மூலம் மனித சமூகத்தை வளப்படுத்த முனைவது.

இயற்கையை வணங்குவதன் மூலம் இயற்கை எமக்கு அருள் பாலிக்குமா? இயற்கை எமது வாழ்வை வளம் படுத்துமா?

இயற்கையை வணங்குதல் என்பதனூடு மனிதன் இரண்டு விடயங்களை செய்கிறான்.

1. தன்னிலையை தன்னைச் சூழ உள்ளவற்றை உணர விளைகிறான்.

2. தன்னையும் தன்னைச் சூழ உள்ளவர்களையும் மகிழ்ச்சிப்படுத்துகிறான்.

இயற்கை அருள்பாலிக்க வேண்டும் என்பதல்ல இயற்கையை வணங்குதலின் நோக்கம். இயற்கையைப் பற்றிய அறிதல் எல்லோரிடமும் இருக்க வேண்டும்.. இயற்கையோடு ஒட்டியதாகவே எமது வாழ்வின் ஆரம்பமும் முடிவும் அமைகிறது என்று மனிதனுக்கு அவனின் ஆன்மீக நிலையை விளக்குவதே அதன் நோக்கம்.

Share this post

Link to post
Share on other sites

//அவர் பரிமட்டாக எழுதியதே தவறானது.. என்பதுதான் தெளிவுறுத்தப்பட்டுள்ளது.//

மாதவிலக்குப்பற்றி எழுதிய ஆங்கிலக் கட்டுரையிலையே பரிமட்டாக எழுதப்பட்டுள்ள போது, பகுத்தறிவு மதம் பயம் பரிணாமம் என்னும் பரந்துபட்ட விடயங்களை எழுதத் துணிந்த சச்சிதானத்தின் கட்டுரையில் அவர் பரிமட்டாக எழுதியது தவறானது அல்ல. பரிமட்டாக எழுதுவது என்பது அறிவியர் புனைவு அல்ல, சுருக்கம்.அவர் மத்விலக்குப்பற்ரி ஆய்வுக் கட்டுரை எழுதவில்லை.

இதன் மூலம கட்டுரையின் மையக்கருத்தோ அவர் சொல்ல வந்த விடயம் எதுவுமே பிழையானதாகி விடாது.

முட்டையில் மயிர் புடுங்கி கட்டுரையின் நோக்கைச் சிதைக்கும் உங்களைப் போன்றவர்களின் தனி நபர் மீதான அவுதூறு செய்யும் பித்தலாட்டமே அம்பலம் ஆகியது.

//சூலைச் சூழக் காணப்படுவன எவை?

படத்தைப் பார்க்கவும்.

சிதைவடந்து வெளியேறுவது எது? //

படம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.சச்சிதானத்தின் கட்டுரையில் காணப்படும் சொற் பிரயோகம் தவறெனில் உங்களின் சொற்பிரயோகம் என்ன என்பதை அறியவே கேட்டேன்.இங்கே இருக்கும் முரண்பாடு சொற்பிரயோகம் பற்றியதே விடயம் பற்றியது அல்ல.ஆகவே சூலைச் சூழக் காணப்படுவது என்ன சிதைவடைந்து வெளியேறுவது என்ன என்பதை உங்களின் சொற்களில் தெளிவாகச் சொல்லுங்கள்.உங்களின் குட்டு அம்பலத்துக்கு வரும்.

//இயற்கையை வணங்குதல் என்பதனூடு மனிதன் இரண்டு விடயங்களை செய்கிறான்.

1. தன்னிலையை தன்னைச் சூழ உள்ளவற்றை உணர விளைகிறான்.//

மனிதனின் தனது புலங்களால் எப்போதுமே தனது சூழலை உணர்ந்து கொண்டு தான் இருக்கிறான்.இதற்கு மதம் என்பதும் கடவுள் என்பதும் கோவில் என்பதும் ஏன் அவசியம் ஆகிறது? அத்தோடு வணக்குதல் மூலம் எப்படி மனிதன் சூழலை உணர முடியும்?

//2. தன்னையும் தன்னைச் சூழ உள்ளவர்களையும் மகிழ்ச்சிப்படுத்துகிறான்.//

எங்கே எப்படி மகிழ்ச்சிப் படுத்துகிறான்? நான் என்னைச் சூழ உள்ளவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் எனில் நான் அவர்கள் மீது அன்பு காட்டவேண்டும் அரவணைக்க வேண்டும்.கோவில் சென்று வணங்குவதன் மூலம் எவ்வாறு மகிழ் விக்க முடியும்?.

//

இயற்கை அருள்பாலிக்க வேண்டும் என்பதல்ல இயற்கையை வணங்குதலின் நோக்கம். இயற்கையைப் பற்றிய அறிதல் எல்லோரிடமும் இருக்க வேண்டும்..//

இயற்கை பற்றி ஆராய்வதன் மூலமே அதனை அறிய முடியும் .அதனை வணங்குவதன் மூலம் அல்ல.அறிவியல் என்பது நுணுகி ஆராயும் ஒரு முறமை.அதற்கு ஆய்வு கூடங்களும் ஆய் கருவிகளும் புத்தகங்களும் பாடசாலைகளும் வேண்டுமே ஒழிய கோவில்கள் அல்ல. அறிதல் இருக்க கல்வி பகுத்த அறிவு என்பன வேண்டும்,கோவிலும் பூசையும் வணங்குதலும் சமயங்கள் சொல்லும் மூட நம்பிக்கைகளும் அல்ல.

// இயற்கையோடு ஒட்டியதாகவே எமது வாழ்வின் ஆரம்பமும் முடிவும் அமைகிறது என்று மனிதனுக்கு அவனின் ஆன்மீக நிலையை விளக்குவதே அதன் நோக்கம்.//

வாழ்வின் ஆரம்பமும் முடிவும் இயற்கையோடு ஒட்டியதாகவே அமைகிறது என்பதை எங்கனம் கோவில்களும் வணங்குதலும் விளக்குகின்றன.

ஆன்மீக நிலை என்றால் என்ன?

Share this post

Link to post
Share on other sites

சூல் கூட இயற்கையின் அம்சமே அன்றி.. வேறல்ல..!

இயற்கையைத்தான் கடவுளாக மதவாதிகளும் கொள்கின்றனர். :o

கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதங்களிலும் இயற்கையே கடவுள் என்று சொல்லப்படுகிறதா? அல்லது நெடுக்கர் சொன்ன மதவாதிகள் இந்து மதவாதிகளா? :unsure:

Share this post

Link to post
Share on other sites

//அவர் பரிமட்டாக எழுதியதே தவறானது.. என்பதுதான் தெளிவுறுத்தப்பட்டுள்ளது.//

மாதவிலக்குப்பற்றி எழுதிய ஆங்கிலக் கட்டுரையிலையே பரிமட்டாக எழுதப்பட்டுள்ள போது, பகுத்தறிவு மதம் பயம் பரிணாமம் என்னும் பரந்துபட்ட விடயங்களை எழுதத் துணிந்த சச்சிதானத்தின் கட்டுரையில் அவர் பரிமட்டாக எழுதியது தவறானது அல்ல. பரிமட்டாக எழுதுவது என்பது அறிவியர் புனைவு அல்ல, சுருக்கம்.அவர் மத்விலக்குப்பற்ரி ஆய்வுக் கட்டுரை எழுதவில்லை.

கட்டுரையில் ஒரு உதாரணத்தையே சரிவரக் அறிவியலூடு கையாளத் தெரியாத சச்சிதானந்தம்.. மக்களை நோக்கி.. இதுதான் அறிவியல்.. என்பதும் பகுத்தறிவு என்பதும் வேடிக்கையாக அமைகின்றன. தவறை தெளிவாக உணர்த்தியும் புரியவில்லை என்றால் நாம் அதற்குப் பொறுப்பாக முடியுமா..??!

இதன் மூலம கட்டுரையின் மையக்கருத்தோ அவர் சொல்ல வந்த விடயம் எதுவுமே பிழையானதாகி விடாது.

முட்டையில் மயிர் புடுங்கி கட்டுரையின் நோக்கைச் சிதைக்கும் உங்களைப் போன்றவர்களின் தனி நபர் மீதான அவுதூறு செய்யும் பித்தலாட்டமே அம்பலம் ஆகியது.

சச்சிதானந்தம்.. தான் அறிவியலால் பரமத்தையே கண்டறிந்தவர் போல கதையளக்கும் போது.. அவரின் அறிவியலை இனங்காட்ட வேண்டியது அவசியமாகிறது.

//சூலைச் சூழக் காணப்படுவன எவை?

படத்தைப் பார்க்கவும்.

சிதைவடந்து வெளியேறுவது எது? //

படம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.சச்சிதானத்தின் கட்டுரையில் காணப்படும் சொற் பிரயோகம் தவறெனில் உங்களின் சொற்பிரயோகம் என்ன என்பதை அறியவே கேட்டேன்.இங்கே இருக்கும் முரண்பாடு சொற்பிரயோகம் பற்றியதே விடயம் பற்றியது அல்ல.ஆகவே சூலைச் சூழக் காணப்படுவது என்ன சிதைவடைந்து வெளியேறுவது என்ன என்பதை உங்களின் சொற்களில் தெளிவாகச் சொல்லுங்கள்.உங்களின் குட்டு அம்பலத்துக்கு வரும்.

முட்டை சிதைவடைந்து அகத்துறிஞ்சப்பட.. கருப்பை சுவர் மேலணியும் அதனுடன் உள்ள சிறிய குருதிக் குழாய்களும் சிதைந்து இழக்கப்படுகின்றன. கருப்பையைப் புதுப்பிக்க. அதுவே மாதவிடாய் என்பதாகிறது. இப்படியா.. சச்சிதானந்தம் எழுதி இருக்கிறார்..!

இதை ஒன்றுக்கு நான்கு தடவை எழுதிவிட்டேன். இன்னும் புரியவில்லை என்றால்.. என்னால் உங்களுக்கு அறிவியலை புரிய வைக்க முடியாது. உங்களுக்கும் அறிவியலுக்கும் வெகுதூரம் என்பதையே அது காட்டுகிறது.

//இயற்கையை வணங்குதல் என்பதனூடு மனிதன் இரண்டு விடயங்களை செய்கிறான்.

1. தன்னிலையை தன்னைச் சூழ உள்ளவற்றை உணர விளைகிறான்.//

மனிதனின் தனது புலங்களால் எப்போதுமே தனது சூழலை உணர்ந்து கொண்டு தான் இருக்கிறான்.இதற்கு மதம் என்பதும் கடவுள் என்பதும் கோவில் என்பதும் ஏன் அவசியம் ஆகிறது? அத்தோடு வணக்குதல் மூலம் எப்படி மனிதன் சூழலை உணர முடியும்?

புலனுக்கு அப்பால் உள்ளுணர்வால் உணர்வதும் இருக்கிறது. மனிதன் வாழும் போது அவன் வெறும் புலன் உணர்வுகளை மட்டும் உணர்வதில்லை. மகிழ்ச்சி.. சந்தோசம்.. துக்கம்.. அன்பு.. பாசம்.. இவ்வாறான புலனுணராக மூளை உணரும் இயல்புகளையும் கொண்டுள்ளான். அதை உணர்த்த மனிதனின் வாழ்வில் நிலையாமை என்ற தன்மை இயற்கையின் கூறாக இருப்பதை இனங்காட்டவும் அவனுக்குள் வாழும் ஆசையால் எழும் வாழ்வுக்கால எல்லையற்ற வெறியை அடக்கி.. அவனை இயற்கையின் தன்மைக்குள் நின்று அகத்தாலும் புறத்தாலும் இயற்கையோடு இணைந்து வாழ்ந்திட வழி காட்டுவதே கோவில்கள்.. மதங்களின் இயல்பாக இருக்கிறது.

//2. தன்னையும் தன்னைச் சூழ உள்ளவர்களையும் மகிழ்ச்சிப்படுத்துகிறான்.//

எங்கே எப்படி மகிழ்ச்சிப் படுத்துகிறான்? நான் என்னைச் சூழ உள்ளவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் எனில் நான் அவர்கள் மீது அன்பு காட்டவேண்டும் அரவணைக்க வேண்டும்.கோவில் சென்று வணங்குவதன் மூலம் எவ்வாறு மகிழ் விக்க முடியும்?.

மக்களோடு கூடி மகிழ்கிறான். தன்னை அகத்தை ஒரு நிலைப்படுத்தி அமைதியுறுகிறான். இசைக்கு மகிழ்கிறான். இயலுக்கு மகிழ்கிறான். இயற்கையை ரசித்து மகிழ்கிறான். இவ்வாறு பல வகை மகிழ்ச்சிகள் அங்கு அமைகின்றன. டிஸ்கோவில் குடித்துவிட்டு ஆடுவதைக் காட்டிலும் இங்கு உடலுக்கு பாதிப்பற்ற மகிழ்ச்சிகள் அதிகம்.

//

இயற்கை அருள்பாலிக்க வேண்டும் என்பதல்ல இயற்கையை வணங்குதலின் நோக்கம். இயற்கையைப் பற்றிய அறிதல் எல்லோரிடமும் இருக்க வேண்டும்..//

இயற்கை பற்றி ஆராய்வதன் மூலமே அதனை அறிய முடியும் .அதனை வணங்குவதன் மூலம் அல்ல.அறிவியல் என்பது நுணுகி ஆராயும் ஒரு முறமை.அதற்கு ஆய்வு கூடங்களும் ஆய் கருவிகளும் புத்தகங்களும் பாடசாலைகளும் வேண்டுமே ஒழிய கோவில்கள் அல்ல. அறிதல் இருக்க கல்வி பகுத்த அறிவு என்பன வேண்டும்,கோவிலும் பூசையும் வணங்குதலும் சமயங்கள் சொல்லும் மூட நம்பிக்கைகளும் அல்ல.

இயற்கையை அறிய முதல் இயற்கையை அவதானிக்கும் நிலை வர வேண்டும். வணக்குதல் என்பதன் மூலம் மனிதன் இயற்கையை உன்னிப்பாக அவதானிக்க தூண்டப்படுகிறான். அதன் மூலம் அவன் அதை அறிய வேண்டும் என்ற ஆர்வத்தை வளர்க்கிறான். அதுவே பின்னர் அறிவியலாக உருவாகிறது.

பூசைகள்.. வணங்குதல்.. இன்றைய வடிவில் மக்களுக்கு தவறாக இனங்காட்டப்படுகின்றன. ஆனால் அவற்றின் உள்ளார்ந்த நோக்கம் என்பது மனிதனை இயற்கையோடு இயைபிக்க என்று அமைகிறது.

// இயற்கையோடு ஒட்டியதாகவே எமது வாழ்வின் ஆரம்பமும் முடிவும் அமைகிறது என்று மனிதனுக்கு அவனின் ஆன்மீக நிலையை விளக்குவதே அதன் நோக்கம்.//

வாழ்வின் ஆரம்பமும் முடிவும் இயற்கையோடு ஒட்டியதாகவே அமைகிறது என்பதை எங்கனம் கோவில்களும் வணங்குதலும் விளக்குகின்றன.

கோவில்களின் வடிவமைப்பில் கொடிக்கம்பமே.. இதை விளக்குகிறது. இயற்கையில் உயிர்கள் மத்தியில் நிகழும் பிரதான மாற்றங்களை அது சொல்கிறது. ஆக்கல்.. அழித்தல்.. அருளல் (கொடுத்தல்).. காத்தல்.. மறைதல்..! மனிதன் வாழும் போது தனது வாழ்க்கையின் நிலையாமையை மறந்து ஆசைகளால் வன்முறைகளைச் செய்யாமல் இருக்க.. அவனின் வாழ்க்கையின் நிலையாமையை விளக்கி ஆசைகளை அளவுபடுத்தி.. மகிழ்ச்சியோடு வாழும் காலத்தை பயனுறக்கழிக்கச் சொல்கிறது.

ஆன்மீக நிலை என்றால் என்ன?

புலனுணரா.. உள்ளுணர்வால் உணரக் கூடிய உள நிலை ஆன்மீகமாகிறது.

Share this post

Link to post
Share on other sites

கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதங்களிலும் இயற்கையே கடவுள் என்று சொல்லப்படுகிறதா? அல்லது நெடுக்கர் சொன்ன மதவாதிகள் இந்து மதவாதிகளா? :icon_mrgreen:

இந்துக்கள் சைவர்கள் இயற்கையை அவதானிப்பதற்காய்.. அதனை வழிபடுபவர்களாக இருக்கின்றனர். இங்கு இந்துமதத்தை மையமாக வைத்தே மதவிரோத சக்திகள் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். எனவே கிறீஸ்தவம் இஸ்லாம் பற்றி இங்கு கதைப்பதில் அர்த்தமில்லை. இஸ்லாம் பற்றிக் கதைக்கவே முடியாது. ஏனெனில் கழுத்தையே அறுத்துவிடுவார்கள்..! :D:lol:

Share this post

Link to post
Share on other sites

//முட்டை சிதைவடைந்து அகத்துறிஞ்சப்பட.. கருப்பை சுவர் மேலணியும் அதனுடன் உள்ள சிறிய குருதிக் குழாய்களும் சிதைந்து இழக்கப்படுகின்றன. கருப்பையைப் புதுப்பிக்க. அதுவே மாதவிடாய் என்பதாகிறது. இப்படியா.. சச்சிதானந்தம் எழுதி இருக்கிறார்..! //

மீண்டும் வாசிக்க,

//அவர் பரிமட்டாக எழுதியதே தவறானது.. என்பதுதான் தெளிவுறுத்தப்பட்டுள்ளது.//

மாதவிலக்குப்பற்றி எழுதிய ஆங்கிலக் கட்டுரையிலையே பரிமட்டாக எழுதப்பட்டுள்ள போது, பகுத்தறிவு மதம் பயம் பரிணாமம் என்னும் பரந்துபட்ட விடயங்களை எழுதத் துணிந்த சச்சிதானத்தின் கட்டுரையில் அவர் பரிமட்டாக எழுதியது தவறானது அல்ல. பரிமட்டாக எழுதுவது என்பது அறிவியர் புனைவு அல்ல, சுருக்கம்.அவர் மத்விலக்குப்பற்ரி ஆய்வுக் கட்டுரை எழுதவில்லை.

இதன் மூலம கட்டுரையின் மையக்கருத்தோ அவர் சொல்ல வந்த விடயம் எதுவுமே பிழையானதாகி விடாது.

முட்டையில் மயிர் புடுங்கி கட்டுரையின் நோக்கைச் சிதைக்கும் உங்களைப் போன்றவர்களின் தனி நபர் மீதான அவுதூறு செய்யும் பித்தலாட்டமே அம்பலம் ஆகியது.

// அவனுக்குள் வாழும் ஆசையால் எழும் வாழ்வுக்கால எல்லையற்ற வெறியை அடக்கி.. அவனை இயற்கையின் தன்மைக்குள் நின்று அகத்தாலும் புறத்தாலும் இயற்கையோடு இணைந்து வாழ்ந்திட வழி காட்டுவதே கோவில்கள்.. மதங்களின் இயல்பாக இருக்கிறது.//

வாழும் ஆசையால் எழும் எல்லையற்ற வெறி என்றால் என்ன? அதனை ஏன் அடக்க வேணும்?

இயற்கையின் தன்மை என்றால் என்ன?

இயற்கையோடு இணைந்து வாழ்வது என்றால் என்ன? கோவில்கல் மதங்கள் இதற்க்கு எங்கனம் வழி காட்டுகின்றன?

//மக்களோடு கூடி மகிழ்கிறான். தன்னை அகத்தை ஒரு நிலைப்படுத்தி அமைதியுறுகிறான். இசைக்கு மகிழ்கிறான். இயலுக்கு மகிழ்கிறான். இயற்கையை ரசித்து மகிழ்கிறான். இவ்வாறு பல வகை மகிழ்ச்சிகள் அங்கு அமைகின்றன. டிஸ்கோவில் குடித்துவிட்டு ஆடுவதைக் காட்டிலும் இங்கு உடலுக்கு பாதிப்பற்ற மகிழ்ச்சிகள் அதிகம்.//

இசையில் மகிழவும், மக்களோடு கூடவும் அமைதியிறவும் மகிழவும் கோவிலுக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை.

அடிப்படையில் மக்கள் கோவில் செல்வது கடவுளை வணக்க .அவரின் அருளைப் பெற.எல்லாம் வல்ல இறைவனை வணக்க. நீங்கள் சொல்லும் காரணக்களுக்காக அல்ல.

//இயற்கையை அறிய முதல் இயற்கையை அவதானிக்கும் நிலை வர வேண்டும். வணக்குதல் என்பதன் மூலம் மனிதன் இயற்கையை உன்னிப்பாக அவதானிக்க தூண்டப்படுகிறான். அதன் மூலம் அவன் அதை அறிய வேண்டும் என்ற ஆர்வத்தை வளர்க்கிறான். அதுவே பின்னர் அறிவியலாக உருவாகிறது.

பூசைகள்.. வணங்குதல்.. இன்றைய வடிவில் மக்களுக்கு தவறாக இனங்காட்டப்படுகின்றன. ஆனால் அவற்றின் உள்ளார்ந்த நோக்கம் என்பது மனிதனை இயற்கையோடு இயைபிக்க என்று அமைகிறது//

கடவுளை வணக்குதல் மூலம் இயற்கையை உண்னிப்பாக அவதானிக்க முடியும் என்றால் எல்லா அறிவியற் கூடங்களும் கோவிலாக இருக்க வேண்டும். நீங்கள் சொல்வதைப் போல் எந்த உலகில் நடக்கிறது?கோவில்களில் அவதானிப்பதன் மூலம் இதுவரை கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் உண்மை எது? நீங்கள் நல்லூர் கோவிலில் கிடந்து ஆய்வு செய்யாமால்

ஏன் இங்கிலாந்து வரை வந்து பல்கலைக்கழகத்தில் படிகிறீர்கள்?உங்களுக்கே நம்பிக்கை இல்லை ஆனால் மற்றவனை முட்டளாக்குவதற்கு மட்டும் விதண்டாவாதமான கற்பனையான காரணக்களைச் சொல்கிறீர்கள்.உங்களுக்கே இது நியாயமானதாகப் படுகிறதா?

//ஆக்கல்.. அழித்தல்.. அருளல் (கொடுத்தல்).. காத்தல்.. மறைதல்..! //

இவற்றை யார் செய்கிறார்கள்?

//புலனுணரா.. உள்ளுணர்வால் உணரக் கூடிய உள நிலை ஆன்மீகமாகிறது.//

உள் உணர்வால் உணரப்பட்ட இயற்கை பற்றிய அறிவியல் உண்மை எது? அது எந்த அறிவியற் பாடத்தில் படிப்பிக்கப்படுகிறது?

Share this post

Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • ரொம்ப கடினமான பணி ராஜாக்கள் இந்த மாதிரியான முகத்தை கட்டி பயணிக்கும் குதிரைகளுக்கு உலகைக் காட்டுவது. நான் உங்களுக்கு திருமணம் செய்ய தரகர்களை தொடர்பு கொள்ள சொல்லவில்லை எம்மவர் திருமணங்கள் எப்படி ஒப்பேற்ற படுகின்றன என்பதை தெரிந்து கொள்ள மட்டுமே. சகாரா இங்கு எழுதினால் என் நேரம் மிச்சமாகும் என்று நினைக்கிறேன்
  • மட்டுவில் வியாளனுக்கும் ஒரு வாய்ப்பு இருக்கு போல படுகுது. பிள்ளையான் கட்டாயம் வெல்லுவார்  இம்முறை கூத்தமைப்பு கிழக்கில் மரண அடி  வாங்கவேண்டும், கிழக்கின் அரசியல் வேறு வடக்கின் அரசியல்வேறு என்று இந்த கூத்தாடிகளுக்கு புரிய வேண்டும். கும்மான் மீது எனக்கு தனிப்பட்ட விமர்சனம் இருந்தாலும் ,முஸ்லிம்களுக்கு இவரது பெயரை கேட்டாலே வயிற்றில் புளி கரைவதால் இம்முறை வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம்   
  • மழை மேகம் பொழியுமா... நிழல் தந்து விலகுமா...
  • சிலோன் விஜயேந்திரன் | ஜெயமோகன் July 12, 2020     கம்பதாசன் திருப்பூர் கிருஷ்ணன் எழுதிய இந்த சிறிய நினைவுக்குறிப்பு என் கவனத்திற்கு வந்தது.சிலோன் விஜயேந்திரனின் சாவு எப்படி நிகழ்ந்தது என்பதையே இக்குறிப்பு வழியாகத்தான் அறிந்துகொண்டேன். கம்பதாசன் அவர்களைப் பற்றி வேறொரு கட்டுரைக்காகத் தேடிக்கொண்டிருந்தேன். கம்பதாசன் மீது பெரும்பக்தி கொண்டு அவர் ஆக்கங்களை மீண்டும் நிலைநாட்டவேண்டும் என்று வாழ்க்கையின் ஒரு பகுதியை அர்ப்பணித்துக்கொண்டவர் சிலோன் விஜயேந்திரன். நான் சிலோன் விஜயேந்திரனை இரண்டுமுறை சந்தித்ததுண்டு.1992 வாக்கில் அவர் என்னை சென்னையில் ஒரு விழாவில் சந்தித்து கம்பதாசனைப்பற்றி ஆவேசத்துடன் பேசினார். ஒரு கவிதையை அவரே ஆவேசமாகச் சொல்லிக்காட்டினார். எனக்கு கம்பதாசனைப்பற்றி அவர் எழுதிய சிறுநூலையும் அளித்தார் உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் நான் கம்பதாசனை கொஞ்சம் கவனம் எடுத்து படித்தது அதன் பிறகுதான். அவ்வப்போது அவரைப்பற்றி எழுதியும் இருக்கிறேன். மீண்டும் ஒருமுறை சென்னையில் ஓர் இலக்கியவிழாவில் சந்தித்தேன். மீண்டும் கம்பதாசன் பற்றிய பேச்சு, ஒரு கவிதையை அன்றும் பாடிக்காட்டினார் கம்பதாசன்   இப்படி ஒருவரின் ஆத்மாவை மறைந்த ஒரு படைப்பாளி கொள்ளைகொள்வது இலக்கியத்தின் வியப்புகளில் ஒன்று. சென்ற ஆண்டு விந்தனுக்கு நூற்றாண்டுவிழா கொண்டாடப்பட்டது – அதாவது ஒரே ஒருவரால். அவர் விந்தனின் பெரும்பக்தர். விந்தனின் நூல்களை தானே அச்சிட்டு கிட்டத்தட்ட இலவசமாக வினியோகம் செய்தார். என்னை ஓர் இலக்கியவிழாவில் சந்தித்து விந்தனின் நூல்களை அளித்து விந்தனைப்பற்றி எழுதவேண்டும் என்று கோரினார். நான் எழுதினேன் திராவிட இயக்க எழுத்தாளரான விந்தனுக்கு திராவிட இயக்க ஆதரவு ஏதும் கிடைக்கவில்லை, ஏனென்றால் அவர் அரசியலில் நேரடியாக ஈடுபட்டு பணமேதும் சேர்க்கவில்லை. அவர் திராவிட இயக்க எழுத்தாளர்களில் முக்கியமானவர் என்று நான் சொல்லியும்கூட எவரும் அவரைப் படித்ததாகவோ ஏதேனும் எழுதியதாகவோ தெரியவில்லை. ஆனால் ஒருவன் எஞ்சியிருக்கிறான். அவன் எப்போதுமிருப்பான் சிலோன் விஜயேந்திரன் திருப்பூர் கிருஷ்ணன் பிரதிபலன் கருதாத தூய அன்பு செலுத்தும் ஒரே ஒரு நண்பர் சிலோன் விஜயேந்திரன் போல் இருந்தால் போதும். எத்தனை காலம் வேண்டுமானாலும் உலகில் ஆனந்தமாக வாழலாம். *சிலோன் விஜயேந்திரன் என்ற எழுத்தாளரை இன்று எத்தனைபேர் ஞாபகம் வைத்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அவருடன் பழகியவர்கள் கள்ளம் கபடமில்லாமல் வாழ்ந்து மறைந்த அவரைப் பற்றிய இனிய நினைவுகளைச் சுமந்துகொண்டிருப்பார்கள். பதினாறு ஆண்டுகளுக்கு முன்னால் 2004 ஆகஸ்ட் 26 அன்று தம் 58 வயதில், சென்னை திருவல்லிக்கேணி அருகே தாம் தங்கியிருந்த குடியிருப்பில், ஒரு தீவிபத்திற்கு ஆட்பட்டு இறந்து போனார் அவர். இது நடந்து சில நாட்கள் கழித்து ஒரு பத்திரிகைச் செய்தி மூலம் இத்தகவலை அறிந்தேன். தமிழ் இலக்கிய உலகம் எப்படிப்பட்ட எழுத்தாளர்களையெல்லாம் கண்டிருக்கிறது என்று நினைக்கும்போது வியப்பாக இருக்கிறது. சிலோன் விஜயேந்திரன் ஒரு வில்லன் நடிகர். நடிகர் சிவாஜி கணேசனோடு நடித்த `பைலட் பிரேம்நாத்` என்ற அவரது முதல் படமே அவருக்குப் பெரும்புகழ் தந்தது. பிறகு `புன்னகை மன்னன், பொல்லாதவன், ஓசை, ஏமாறாதே ஏமாற்றாதே, கொலுசு, எரிமலை, லாரி டிரைவர் ராஜாக்கண்ணு, மங்கம்மா சபதம், சிவப்பு நிலா` எனத் தம் வாழ்நாளில் 77 படங்களுக்கு மேல் நடித்தார். நடிகர் சுமன் மூலமாக `பிரளய சிம்மன்` என்ற தெலுங்குப் படத்தில் நடித்தார். பின் தெலுங்குப் பட உலகிலும் புகழ்பெற்றார். தமிழ், மலையாளம், கன்னட மொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார். சில படங்களில் துணை நடிகராக வந்தாலும் பெரிதும் வில்லன் பாத்திரங்களிலேயே நடித்தார். அவரது தோற்றம் வில்லனுக்கேற்ற வகையில் இருந்தது. குணத்தில் அவர் வில்லனல்ல, குழந்தை. சிறந்த நாடக நடிகரும் கூட. ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் ஜூலியஸ் சீசர், புரூட்டஸ் போன்ற பாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர். நாடக நடிப்பிற்காக `நவரச மன்னன்` என்ற பட்டம் பெற்றவர். கவிஞர் கம்பதாசனின் மாபெரும் ரசிகராக வாழ்ந்தவர். கம்பதாசனின் அற்புதமான கவிதையாற்றலைத் தமிழுலகிற்குத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தவர். `கம்பதாசன் திரையிசைப் பாடல்கள், காவியங்கள், சிறுகதைகள், நாடகங்கள்` ஆகிய தொகுப்பு நூல்களை வெளியிட்டார். `கம்பதாசன் கவிதா நுட்பங்கள்` என்ற ஒரு நூலையும் எழுதி வெளியிட்டார். `கம்பதாசன் வாழ்வும் பணியும்` என்ற இவர் நூலும் குறிப்பிடத் தக்கது. `கவியரசர் கண்ணதாசன் பா நயம்` என்றும் ஒரு நூல் எழுதியிருக்கிறார். `அவள்` என்ற நாவல், `செளந்தர்ய பூஜை` என்ற சிறுகதைத் தொகுதி, `உலக நடிகர்களும் நடிக மேதை சிவாஜியும்`, `மானஸ மனோகரி` போன்ற இவரது புத்தகங்களும் குறிப்பிடத் தக்கவைதான். அவரது கவிதைகள் தொகுக்கப்பட்டு `விஜயேந்திரன் கவிதைகள்` என்ற தலைப்பில் மூன்று தொகுதிகளாக வந்துள்ளன. `அறுபதாண்டு காலத் திரைப்பாடல்களும் பாடலாசிரியர்களும்` என்ற அவரது நூல் வரலாற்று மதிப்புடையது. இருபதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். ஆன்மிகத்திலும் நாட்டமுடையவர். அவரது பாரதியார் வரலாற்று நாடகம், சுத்தானந்த பாரதியார் சிறப்புரையுடன் வெளிவந்தது. மணிவாசகர், அல்லயன்ஸ், கண்ணதாசன், கலைஞன் எனத் தமிழகத்தின் பல மூத்த பதிப்பகங்கள் சிலோன் விஜயேந்திரன் எழுத்துக்கு ஆதரவு கொடுத்தன. அவர் நிறைய எழுதினார். நடிப்பதை விடவும் எழுதுவதே அவருக்கு மிகப் பிடித்திருந்தது. மதுரா டிராவல்ஸ் வி.கே.டி. பாலன், ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் போன்ற பலரால் நன்கு அறியப்பட்டவர். தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ., டி.லிட் பட்டம், டாக்டர் பட்டம் எனப் பல பட்டங்கள் பெற்றவர். தமிழின் பழைய இலக்கியம் முழுவதையும் கற்றுத் துறைபோகியவர். சங்க இலக்கியம், இடைக்கால இலக்கியம், தற்கால இலக்கியம் என எல்லாவற்றைப் பற்றியும் அவரிடம் உரையாடி மகிழ்ந்திருக்கிறேன். அவரது இலக்கிய அறிவு வியக்கச் செய்வது. பல பழம்பாடல்களை கண்களில் ஒரு மயக்கத்தோடு அவர் கடகடவென ஒப்பிப்பார். காலமாவதற்குச் சில நாட்கள் முன்பு திருவல்லிக்கேணி அருகே தற்செயலாக அவரைச் சந்தித்தேன். என் கைகளைப் பற்றிக் கொண்டு அளவிட முடியாத பாசத்தோடு அவர் என்னிடம் பேசிய பேச்சுக்களை நினைத்துப் பார்க்கிறேன். பல காலம் கழித்து என்னைச் சந்திக்க நேர்ந்ததால் அவரது விழிகளில் தென்பட்ட அன்பின் பளபளப்பு இன்றும் நினைக்கும் போதெல்லாம் என்னை நெகிழச் செய்கிறது. பிரதிபலன் கருதாத தூய அன்பு செலுத்தும் ஒரே ஒரு நண்பர் இருந்தால் போதும். எத்தனை காலம் வேண்டுமானாலும் உலகில் ஆனந்தமாக வாழலாம். வாழ்நாள் முழுவதும் வறுமை அவரை விடாமல் துரத்திக் கொண்டேயிருந்தது. தன் புத்தகங்ளை எடுத்துக் கொண்டு என்னைத் தேடி வருவார். நான் அவருடைய ஒவ்வொரு புதுப் புத்தகத்தையும் விலை கொடுத்து வாங்கிக் கொள்வதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தேன். எப்படியும் அது நான் படிக்க விரும்பும் சிறந்த நூலாகத்தான் இருக்கும். சிறந்த நூல் அல்லாத எதையும் அவர் எழுதியதில்லை. ஆபாசக் கலப்பில்லாமல் சமூகப் பொறுப்போடு எழுதியவர். புது நூல் வெளிவந்ததும் அவர் என்னைச் சந்திக்க வருவது ஏதோ என் மூலம் ஒரு பிரதி விற்றுவிட முடிகிறது என்றல்ல. என்னைச் சந்திக்க அப்படி ஒரு காரணத்தையும் சந்தர்ப்பத்தையும் அவர் உண்டாக்கிக் கொண்டார். நாங்கள் மணிக்கணக்கில் பேசினோமா, நாள்கணக்கில் பேசினோமா தெரியாது. பழைய இலக்கியங்கள் குறித்து அவர் பேசினால் இன்றைக்கெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம். தன் நூல் ஒன்று நா.பா. தலைமையில் வெளியிடப் படவேண்டும் என்று ஆசைப்பட்டார். அது அவரின் வாழ்நாள் ஆசையாக இருந்தது. நா.பா. அந்த ஆசையை நிறைவேற்றிக் கொடுத்தார். சென்னையில் எல்.எல்.ஏ. கட்டிடத்தில் அந்தக் கூட்டம் மிக விமரிசையாக நடைபெற்றது. இறுதியில் ஏற்புரை சொல்லும்போது சிலோன் விஜயேந்திரன் `நா.பா.வின் தலைமையில் நூல் வெளியீடு` என்ற தன் ஆசை நிறைவேறிய சந்தோஷத்தில், நா.பா.வுக்கு நன்றி தெரிவித்து ஒலிபெருக்கியிலேயே விம்மிக் கண்ணைத் துடைத்துக் கொண்டார். நா.பா. காலமானபோது அவர் அடைந்த துயரம் அளவிட இயலாதது. விஜயேந்திரன் தோற்றம் வித்தியாசமானது. செம்மை கலந்து பளபளக்கும் தலைமுடி. கண்களில் எப்போதும் ஒரு சிவப்பு. கரகரப்பான குரல். அவர் எங்கு சென்றாலும் மக்கள் அவரைத் திரும்பிப் பார்ப்பார்கள். பொதுத் தோற்றத்திலிருந்து மாறுபட்ட ஒரு தன்மை அவரிடம் இருந்தது. அவரின் தோற்றம்தான் அவரை வில்லன் நடிகராக ஆக்கியிருக்க வேண்டும். வாழ்வில் யாருக்கும் அவர் வில்லனல்ல. என்போன்ற பலருக்கு இனிய நண்பர் அவர். முரட்டுத் தோற்றத்தோடு அவர் திகழ்ந்தாலும் அவரைப் போன்ற மென்மையான மனம் கொண்டவர்கள் அபூர்வம். ஈ எறும்புக்குக் கூட அவரால் கெடுதல் நினைக்க முடியாது. விஜயேந்திரன் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையின் பேரன். (எந்தப் பொருளில் பாடச் சொன்னாலும் சொன்னவுடன் அடுத்த கணமே தங்குதடை இல்லாமல் உடனே கவிதை பாடுபவர்களை `ஆசுகவி` என்பார்கள். தமிழ் எழுத்தாளரான சுவாமிநாத ஆத்ரேயர் தமிழ், சம்ஸ்க்ருதம் இரண்டிலும் ஆசுகவியாகத் திகழ்ந்தவர். இடைக்காலப் புலவர்களில் பல ஆசுகவிகள் உண்டு.) விஜயேந்திரனும் சொன்னவடன் கவிதை பாடக்கூடிய ஆற்றல் படைத்தவர். `ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை வரலாறு` என்பது விஜயேந்திரன் எழுதிய நூல்களில் ஒன்று. தம் தாயார் மதுரையில் பிறந்தவர் என்றும் தந்தை ஈழத்தில் பிறந்தவர் என்றும் விஜயேந்திரன் சொன்னதுண்டு. மற்றபடி அவர் குடும்பம், உறவுகள் போன்றவை குறித்து நான் கேட்டதில்லை. `நவரசத் தனிநடிப்பு` என்றொரு நிகழ்ச்சியைப் பல இடங்களில் நிகழ்த்தினார். எழுத்தால் வருமானம் வராது என்று அவருக்குத் தெரியும். ஆனால் நடிப்பாலும் அதிக வருமானத்தை அவர் ஈட்ட முடியாமல் போனதுதான் துரதிர்ஷ்டம். ஏதோ நடிகர்களெல்லாம் மிக வசதியாக வாழ்ந்து கொண்டிருப்பதாக சமூகத்தில் தவறான ஒரு பிரமை இருக்கிறது. அந்த பிரமை பெரும் வெளிச்சத்தில் மின்னும் முதல்நிலை நடிகர்களைப் பொறுத்தவரை சரி. மற்றபடி துணை நடிகர்களின் பொருளாதார நிலை சொல்லும் தரமுடையது அல்ல. இந்தக் கொரோனா காலத்தில் எத்தனை துணைநடிகர்கள் பொருளாதார ரீதியாக எவ்விதமெல்லாம் சிரமப்படுகிறார்களோ என்று நினைத்தால் மனம் பதறுகிறது. விஜயேந்திரன் அவரது கடைசிக் காலங்களில் ஒருநாள் என்னைத் தேடி வந்தார். `சாப்பிட்டீர்களா?` என்றேன். பேசாமலிருந்தார். `வாருங்கள்` என்று உணவகம் அழைத்துச் சென்றேன். நானும் அவருமாகச் சாப்பிட்டோம். கைகழுவிக்கொண்டு வந்த அவர், `இப்படி வயிறாரச் சாப்பிட்டு நெடுநாள் ஆகிறது!` என்றார். அதைக் கேட்டு என் கண்களில் கண்ணீர் வழிந்தது. என்னையே கூர்மையாகப் பாசத்தோடு பார்த்த அவர், தன் கைகளால் என் கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தார். அந்தக் காட்சியை வியப்போடு அந்த உணவகத்தின் பணியாளர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இலக்கிய உலகில் சமரசம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து மறைந்த சிலோன் விஜயேந்திரன் போன்றவர்கள் பாரதியாரின் இலக்கியத்திற்கு மட்டும் வாரிசு அல்ல. அவரது வறுமைக்கும் வாரிசு. இவரைப் போன்ற பலர் இன்னும் தமிழகத்தில் இருக்கிறார்கள். பாரதியைப் பொருளாதார வறட்சியில் வறுத்தெடுத்த தமிழ்ச் சமூகம், அவரது இலக்கிய வாரிசுகளையும் அவ்விதமே பாரதிக்கு இணையாகத் தொடர்ந்து கெளரவித்து வருவது குறித்து நாம் மெச்சிக் கொள்ளத்தானே வேண்டும்!     திருப்பூர் கிருஷ்ணன்     https://www.jeyamohan.in/132375/