Jump to content

பேனாவின் சிவத்த மை ......


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பேனாவின் சிவத்த மை .........

அமைதியான அந்த கிராமத்தில் சுந்தரதாரின் கடைக்குட்டி சாதனா , பத்தாம் வகுப்பில் படித்து கொண்டிருந்தாள் . அக்காலம் மிக மிக சாதாரணமாகவே இருந்தது ,கைதுகளும் குண்டுமழையும் ... இடப்பெயர்வுகளும் ...இல்லாத காலம் . தெளிந்த நீரோடை போன்று ,மக்களும் ,வாழ்கையும் ஓடிக்கொண்டு இருந்தது . கோவில் ,பாடசாலை ,விளையாட்டு என்று ,சமுதாயம் அமைதியாக வாழும் காலத்தில் ,முதலாம் முறை ,பத்தாம் வகுப்பு கோட்டை விட்டதால் ஏனைய தோழிகளுடன் பதினோராம் வகுப்பு செல்ல முடியவில்லை .முக்கியமான கணிதபாடம் தவற விட்டு விட்டாள் , வீடிலும் நல்ல வசை மாரிகள் ,அதனால் இரண்டாம் வருடம் முழு மூச்சாக படித்து கொண்டிருந்தாள்.

போதாக்குறைக்கு பெரியண்ணாவின் கண்டிப்பு வேறு . பாடசாலையும் பிரத்தியேக (.tuition .........)வகுப்புமாய் ,இருந்ததால் வருட இறுதியும் வந்தது . தனது திறமையெல்லாம் திரட்டி சோதனையில் வெற்றி பெற்று விட்டாள் நான்கு டீ தரத்திலும் நான்கு சி தரத்திலும் .சித்தியடைந்து விட்டாள் . பெரியன்னாவுக்கும் பெரியபட்டனதுக்கு அம்மாவின் கடிதத்துடன் அவளும் கடிதம் எழுதினாள் . அவளின் பெரியண்ணா மூணு மாதமொருமுறை ,மூன்று நாள் விடுமுறை கிடைக்கும் போது தான் வருவார்.

அண்ணாவின் பதிலுக்காக நாளும் பொழுதும் பார்த்து கொண்டு இருப்பாள் ,அடுத்த வகுப்பு க்கு அக்கிராமத்தில் வசதி குறைவு என்பதால் யாழ்பாணத்தில் இருந்து ப்டிக்க ஒழுங்கு களை பெற்றவர் ஆயத்த படுத்திக்கொண்டு இருந்தனர் .மூன்று வாரங்களால் ,பெரியண்ணாவின் கடிதம் அவள் பெயருக்கு , திருத்தி திருப்பி அனுப்பப்பட்டது . ஆங்கில எழுத்துகளை சுற்றி சிவப்பு வட்டங்களுடன்....... " கடிதம் ஒரு மொழியில் எழுதப்பட வேண்டும் " ..... ,இறுதியில் அடுத்த வாரம் போயா விடுமுறையுடன் ,ஊருக்கு வருவதாகவும் . மீதி நேரில்.என்று . அந்த கடிதம் அவளுக்கு சம்மட்டி போன்று இருந்தது. பரிசை எதிபார்த்து ,சந்தோஷத்தில் துள்ளி குதித்த அந்த சிட்டின் மனம் நொந்து விட்டது ஏமாற்றத்தால் . அந்த சொற்கள் (...Distintion, Credit, Bus, traveling,tuitionfees ,......)

போன்றவை . அவள் மனம் இவர் "பெரிய ".... சட்டம்பியார் போல ...என்று திட்டி கொண்டது .

அந்த நாளும் வந்தது ,மாலைபொழுது இருளாகிய நேரம் வந்தார் பெரியண்ணா. வீடுக்கதைகள் ,பேசியபின் ,சாதனாசிட்டு ,பெரியன்னாவுடன் ,கோபமாகவே இருந்தது. மறுநாள் காலை ,அவள் ப்டிக்கும் மேசையில் ,ஒரு நூறு ரூபா நோட்டு (தாள்) காற்றில் பறக்காமல் புத்தகத்தின் கீழ் இருந்தது கண்டோஸ் சொகோலேட் உடன் . .அண்ணா மீண்டும் பெரியபட்டண்ணம் சென்று விட்டார் . நம்ம கதாநாயகி ,உயர் தரம் முடித்து ,கோப்பாய் பயிற்சி கூடம் முடித்து ,காலப்போக்கில் சர்வகாசாலையில் தமிழ் விரிவுரையாளர் ஆகினார் . . சில வருடங்கள் உருண்டோடின ,பெரிய அண்ணாவும் குழந்தை குட்டிகளுடன் ,வாழ்ந்து கொண்டிருந்தார் . சாதனாவும் இயற்கை சக்கரத்தில் சுழன்று , தாயாகி தொடர்ந்தும் வேலையில் இருந்தாள் . .வரலாறு மீண்டும் எழுதப்படும் என்பது போல , பாரிய அண்ணாவின் மகனும் ,பல்கலை வந்தான் , ஒரு நாள் அவனது குறிப்புகள் திருத்தும் போது ,அவனின் புத்தகத்தில் பிழைகளை சுட்டி வட்டம் போடும் போது , எங்கோ சென்றுவிட்ட ,பழைய நினைவுகள் ,மீட்ட பட , ,நொந்த அவள் இதயத்தில் இருந்து கண்ணீர் துளிகளாய் .... இரண்டு சொட்டுகள் அவன் புத்தகத்தில் விழுந்தன . அவளது திரும்ப அனுப்ப பட்ட கடிதம் நன்றாகமனதில் பாதித்து இருந்தது . . .

(அண்ணா சட்டம்பியாராக இல்லாமல் ,பாசத்துடன் சொல்லி திருத்தி இருக்கலாம் தானே .அன்று மனம் நோகாதிருந்தால் .......இன்று நான் எழுதியிருக்க மாட்டேன் )

யார் சொன்னது இது கற்பனை .............என்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கிறது. தொடருங்கள் வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதியக்கா இன்னும் கொஞ்சம் திரிவுபடுத்தி இருக்கவேண்டும்

முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்காவுக்கு

சிறுவயதில் மனங்கள் எல்லா விடயங்களிலும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும், எதிர்பார்க்கும் விடயங்களில் ஏமாற்றம் ஏற்பட்டால் அது மனதில் ஆழமாகப் பதிந்துவிடும், அப்படியான ஒருவிடயத்தை உங்கள் கதைக்கருவாக எடுத்து அதை மிகவும் சுருக்கமாகச் சொல்லி இருக்கிறீர்கள். சொன்ன விதம் அழகு, இன்னும் கொஞ்சம் விரிவுபடுத்தியிருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும்.

இளங்கவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி ......முனிவர்...........இளம் கவி .........நன்றிகள் கருத்து பகிர்வுக்கு .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.