Jump to content

கனடாவில் எங்கே தமிழ் புத்தகங்கள் வாங்கலாம்?


Recommended Posts

வழக்கமாக நான் தமிழ் புத்தகங்களை இணைய தளங்களின் ஊடாக ஓர்டர் பண்ணி இந்தியாவில் இருந்து தருவிக்கின்றனான். ஆனால் இப்போது திடீரென அவர்களின் தபால் சேவை விலைகளில் அதிகரிப்பு ஏர்பட்டமையால், அதிக விலை கொடுக்க வேண்டி வந்துவிட்டது. இதன் காரணமாக இன்று ஒரு ஓர்டரை (ஓர்டர்: இதற்கு என்ன சரியான தமிழ் சொல்?) நிறுத்த வேண்டி வந்து விட்டது. (விலை 100 டொலர்களில் இருந்து, 200 டொலர்களாக அதிகரித்து விட்டது)

உங்களில் யாருக்காவது கனடாவில், 'ரொரன்டோ' வில் நல்ல தமிழ் புத்தங்கள் விற்கும் புத்தக கடைகளின் விபரம் தெரியுமா? ஜெயமோகன், சுந்தர ராமசாமி, கி.ஜா.ரா போன்ற தீவிரமாக எழுதுபவர்களின் புத்தகங்களும், மொழிபெயர்பு புத்தகங்களும் இங்கே கிடைக்குமா?

Link to comment
Share on other sites

முருகன் புத்தக சாலையில் விசாரித்துப் பாருங்கள்.

சினேகிதியே நன்றி,

சென்று விசாரித்து விட்டு விபரம் எழுதுகின்றேன்.

Link to comment
Share on other sites

என்னுடைய நண்பர் ஒருவர் கனடாவில் உள்ள புத்தகக்கடையில் 200 டொலர் கொடுத்து வாங்கிய புத்தகங்களை இந்தியாவிலிருந்து தருவித்தபோது, தனக்கு 110 டொலர்கள் மட்டுமே செலவானதாகக் கூறினார். எதற்கும் ஒருமுறை விசாரித்துப் பாருங்கள்.

Link to comment
Share on other sites

என்னுடைய நண்பர் ஒருவர் கனடாவில் உள்ள புத்தகக்கடையில் 200 டொலர் கொடுத்து வாங்கிய புத்தகங்களை இந்தியாவிலிருந்து தருவித்தபோது, தனக்கு 110 டொலர்கள் மட்டுமே செலவானதாகக் கூறினார். எதற்கும் ஒருமுறை விசாரித்துப் பாருங்கள்.

ஆம்..அப்படிதான் விலை மலிவாக இந்த மாதம் வரை இருந்தது. இப்போது, இந்தியாவில் தபால் கட்டணங்களை அதிகரித்து விட்டனர். முன் 5300 இந்திய ரூபாயில் இருந்த எனது ஓர்டர், 8350 ஆக உயர்வடைந்து விட்டது.

சினேகிதியின் ரொரன்டோ நூலகம் பற்றிய தகவலுக்கு நன்றி. நான் மார்க்கம் பகுதியில் வசிப்பதால் மார்க்கம் நூலகத்தில் தேடி பார்க்க வேண்டும்.

சனிக்கிழமை, முருகன் புத்தகசாலையிலும் விசாரிக்க முயல்வேன்

Link to comment
Share on other sites

ரொரன்ரோ பப்ளிங் லைபிரரி காட் இருந்தால் நான் தந்த இணைப்புக்குச் சென்று HOLD போட்டால் உங்களுழ்ய மார்க்கம் லைபிரரிக்கு கொண்டுவைந்து வைப்பார்கள் நீங்கள் மார்க்கத்திலயே போய் பெற்றுக்கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

ரொரன்ரோ பப்ளிங் லைபிரரி காட் இருந்தால் நான் தந்த இணைப்புக்குச் சென்று HOLD போட்டால் உங்களுழ்ய மார்க்கம் லைபிரரிக்கு கொண்டுவைந்து வைப்பார்கள் நீங்கள் மார்க்கத்திலயே போய் பெற்றுக்கொள்ளலாம்.

என்னிடம் எந்த நூலகத்திற்குமான அனுமதி அட்டை இல்லை. இனித்தான் பெறவேண்டும்.

நான் கடந்த வருடம் தான் கனடாவிற்கு வந்தேன். இன்னமும் சரதி அனுமதிப்பத்திரம் எடுக்கவில்லை (இன்று மூன்றாவது தடவையாக முயன்று, 'வெற்றிகரமாக' சித்தியடைய முடியாமல் போய்விட்டது). வாகனம் இன்மையால் பல இடங்களுக்கு போக முடியுது இல்லை.

மார்க்கம் பகுதியில் வசிப்பவர், ரொரன்டோ நூலகத்தில் பதிய, நூறு டொலர்கள் கட்ட வேண்டும்.

அனேகமாக இன்று, அல்லது நாளை மார்க்கம் நூலகத்தில் சேர்வேன். அங்கு, ஜெயமொகனின் மூன்று புத்தகங்கள் உள்ளன.

பொதுவாக எனக்கு, புத்தகங்களை வாங்கி படிக்கவே விருப்பம். குட்டி நூலகம் வைத்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நூலகத்தில் சேர்வதற்கு 2 டொலர்கள்தான் கட்ட வேண்டும.

இப்பொழுது நூலகமும் கட்டணம் ஆகிவிட்டதா :lol:

Link to comment
Share on other sites

ஆம்..அப்படிதான் விலை மலிவாக இந்த மாதம் வரை இருந்தது. இப்போது, இந்தியாவில் தபால் கட்டணங்களை அதிகரித்து விட்டனர். முன் 5300 இந்திய ரூபாயில் இருந்த எனது ஓர்டர், 8350 ஆக உயர்வடைந்து விட்டது.

சினேகிதியின் ரொரன்டோ நூலகம் பற்றிய தகவலுக்கு நன்றி. நான் மார்க்கம் பகுதியில் வசிப்பதால் மார்க்கம் நூலகத்தில் தேடி பார்க்க வேண்டும்.

சனிக்கிழமை, முருகன் புத்தகசாலையிலும் விசாரிக்க முயல்வேன்

நீங்க Sea Mail இல் எடுப்பியுங்கள் கட்டணம் மிகக்குறைவு. வந்து சேர ஒரு மாத காலமாகும். ஆனாலும் நல்லது.

Link to comment
Share on other sites

நீங்க See Mail இல் எடுப்பியுங்கள் கட்டணம் மிகக்குறைவு. வந்து சேர ஒரு மாத காலமாகும். ஆனாலும் நல்லது.

நான் ஒரு முறை தவறுதலாக Air Mail இற்கு பதிலாக Sea mail தெரிவை அழுத்தி விட்டதனால், வந்து சேர 3 மாதமும், 9 நாட்களும் எடுத்தன.

எல்லா வழிகளும் சரிவரவில்லையாயின், இறுதியில் sea mail மூலமே தருவிப்பேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(ஓர்டர்: இதற்கு என்ன சரியான தமிழ் சொல்

நிழலி, நிழலி[order]

முன் பதிவு செய்து கொள்ளுதல் என்று சொல்லலாம்

Link to comment
Share on other sites

நிழலி, நிழலி[order]

முன் பதிவு செய்து கொள்ளுதல் என்று சொல்லலாம்

முனிவர்

order என்ற சொல் அது வரும் இடத்தைப் பொறுத்து அர்த்தம் மாறும். உதாரணமாக law and order என்று வரும் போது அது சட்டமும் ஒழுங்கையும் குறிக்கும். இங்கே நிழலி குறிப்பிட்டிருப்பது பொருட்களைத் அனுப்பக் கோருவதில் ( a request to supply goods) வந்த order ஐ. அதன் அர்த்தமாக தமிழில் எழுதுவதென்றால் "அனுப்பக் கோரும் பொருட்கள்" என்றே குறிப்பிடலாம்.

நீங்கள் குறிப்பிட்டபடி முன் பதிவு செய்து கொள்ளுதல் என்பது reservation த்தான் குறிக்கும்.

பி:கு: மன்னிக்கவும். மேலே அவசரத்தில் sea mail என்பதை see mail என்று தவறாக எழுதி விட்டேன். தற்போது மாற்றியுள்ளேன்.

Link to comment
Share on other sites

நான் நேற்று, முருகன் புத்தகசாலையின் Finch East Road கிளைக்கு போய் சில புத்தகங்கள் வாங்கினேன். அவர்களின் பிரதான கடையில் நான் தேடிய வேறு சில எழுத்தாளர்களின் புத்தகங்கள் இருப்பதாக சொன்னார்கள். அதற்கும் போய் பார்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

நிழலி,

முருகன் புத்தகசாலையில் புத்தகத்தின் பெயரைக் கூறி (அது என்ன புத்தகமாயினும்) விசாரித்தீர்களாயின் (நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ) அனேகமாக ||அப்புத்தகம் எங்களிடம் இல்லை|| என்ற பதிலையே நீங்கள் பெறுவீர்கள். ஆனால், அவர்களிடம் அனுமதி பெற்று நீங்களாகத் தேடினீர்களாயின் அனேக புத்தகங்களைப் பெற முடியும்.

புத்தகங்களை வாங்கி அடுக்கி வைத்து விட்டு வாடிக்கையாளர்கள் கேட்டால் புத்தகம் இல்லை என்று ஏன் கூறுகின்றார்கள் என்பது இன்றுவரை எனக்கு ஒரு புரியாத புதிராகவே இருந்து வருகின்றது. மிக இலகுவில் கணனியில் ஒளுங்குப்படுத்தக் கூடிய விடயத்தைக் குறைந்த பட்டசம் பேனையால் ஒற்றையிலாவது எழுதி வைத்திருப்பார்கள் என்றால் வாடிக்கையாளர்களிற்கு அவர்களிற்கும் பலத்த அனுகூலமாக அமையும் என்பது எனது கருத்து. எனது அனுபவத்தின் படி, அவர்களிடம் என்ன புத்தகங்கள்; உள்ளன என்ற விபரம் அவர்களிற்கே தெரியாத ஒரு துரதிஸ்ர நிலையே அங்கு நிலவுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடா வந்த சமயம் ஸ்காபரோவில் (முருகன் புத்தகசாலை என்றே நினைக்கிறேன்) ஜெயமோகனின் காடு, கன்னியாகுமரி, சோபா சக்தியின் கொரில்லா, தேசத்துரோகி மற்றும் பல புத்தகங்களை அவர்களின் அனுமதியோடு தேடி எடுத்து வாங்கினேன். புத்தகங்களின் அளவைப் பார்த்து விலை போட்ட மாதிரியிருந்தது!

Link to comment
Share on other sites

இன்னுமொருவன், கிருபன்ஸ் கூறியது முற்றிலும் உண்மைதான். அதோடு, அவர்கள் வாடிக்கையாளர்களை மதிப்பதே கிடையாது. வாங்கினால் வாங்கு, இல்லாவிட்டால் போ என்பது மாதிரியே அவர்களின் நடவடிக்கை இருக்கும். நாமாக எதுவும் கேட்டாலும் சரியான பதில் இருக்காது. கடையின் உரிமையாளர் அங்கு இருப்பது மிகவும் குறைவு. அவர் இருக்கும்போது, கொஞ்சம் பரவாயில்லை. ஆனால், வேலைக்கு இருப்பவர் மிகவும் மோசம். அவர் இருக்கும் நேரம் அங்கு போனால், நீங்கள் நிச்சயம் மோசமான மூடில்தான் திரும்பி வருவீர்கள்.

Link to comment
Share on other sites

இன்னுமொருவன், கிருபன்ஸ் மற்றும் தமிழச்சி சொல்வது சரி.. அனேக புத்தகங்களை நான் அவர்களின் அனுமதியுடனேயே தேடி எடுத்தேன். அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் முறையும் ஒரு ஒழுங்கில் இல்லை.

பேசாமல் இன்ந்தியாவில் இருந்தே ஓர்டர் பண்ணினால் நல்லம் போல இருக்கு... கூட்டி கழிச்சு பார்த்தால் செலவு இரண்டுக்கும் சரியாகத்தான் வருகுது.

-நிழலி-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டொராண்டோ டவுண்டவுனில்(தாழ் நகரம்??) Wellesley/Parliament சந்திப்பில் கலைமகள் புத்தகசாலை உள்ளது. வேண்டுமானால் நீகள் சென்று தேடிப்பாருங்கள். நான் நினைக்கிறேன் தொலைபேசியில் அழைத்தால் இல்லை என்றுதான் சொல்லுவார்கள்...

Link to comment
Share on other sites

எஷ்.போ வின் புத்தகங்களை நீங்கள் சென்னையிலுள்ள மித்ரா பதிப்பகத்தாரிடம் தொடர்புகொண்டு தபால்மூலம் பெறலாம் நான் பல புத்தகங்களை இன்கிருந்துதான் பெறுவேன்

http://mithra.co.in/index1.php

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடா வந்த சமயம் ஸ்காபரோவில் (முருகன் புத்தகசாலை என்றே நினைக்கிறேன்) ஜெயமோகனின் காடு, கன்னியாகுமரி, சோபா சக்தியின் கொரில்லா, தேசத்துரோகி மற்றும் பல புத்தகங்களை அவர்களின் அனுமதியோடு தேடி எடுத்து வாங்கினேன். புத்தகங்களின் அளவைப் பார்த்து விலை போட்ட மாதிரியிருந்தது!

எனக்கும் அவ்வாறே தோன்றியது. பக்கத்தில் ஒரு தராசு வைத்திருப்பார்களேயானால் அவர்களிற்கு விலைகூறுவதற்கு அது இலகுவாக இருக்கும். சிலவேளைகளில் உள்ளே இருக்கும் இந்திய விலையைப் பார்த்து அதன் விகிதாசாரத்தில் விலைகூறுவதும் உண்டு.

Link to comment
Share on other sites

உலகத்தமிழர் இயக்க நூலகம் விரைவில் திறக்கப்படவுள்ளது. நவம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து Bellamy/Progree Aveக்கு அருகாமையில் திறக்கப்படவுள்ளது. அங்கு நீங்கள் விரும்பும் அநேக புத்தகங்கள் இருக்கும். முன்னர் இருந்த இடத்தில், பல புத்தகங்கள் இருந்தன. ஜாதகம் சம்பந்தமான புத்தகங்கள் தொடங்கி, இலக்கியப் புத்தகங்கள் வரை அங்கிருந்தன. புதிய இடத்திற்கு மாறுவதால் ஆரம்பத்தில் புத்தகங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் விரைவில் அனைத்துப் புத்தகங்களையும் அடுக்கி விடுவார்கள். அவர்களின் சேவையும் மிகவும் நன்றாக இருக்கும். வரவேற்பதிலிருந்து, எந்தப் புத்தகங்கள் எங்கிருக்கின்றன என்பதை அங்கிருக்கும் நூலகப் பொறுப்பாளர் விரல் நுனியில் வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி, அவர்களின் நூலகம் பொதுநூலகம் போல் கணனிமயப்படுத்தப்பட்டுள்ளது. புத்தகங்களைப் பெறுவதிலும் சிரமங்கள் இருப்பதில்லை. ஆனால் ஒன்று, புத்தகங்கள் குறித்த நேரத்தில் திருப்பியளிக்காவிடில் மாத்திரம், அந்தப் புத்தகங்களை நீங்கள் திருப்பியளிக்கும்வரை நூலகப் பொறுப்பாளர் உங்களை விடமாட்டார். :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.