Jump to content

எப்படிடா சுகமாடா..டா..!!


Recommended Posts

எப்படிடா சுகமாடா..டா..!!

sb10061837c002bq4.jpg

எல்லாருக்கு ஜம்முபேபியின்ட வண்ண தமிழ் வணக்(கம்).. :D கனநாளைக்கு பெறகு எனக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கு அது தான் உங்கட்ட எல்லாரிட்டையும் கேட்டு நிவர்த்தி செய்வோம் எண்டும் வந்தனான் பாருங்கோ.சரி கனக்க அலட்டுறது தான் வழமையான எண்ட வேலை எண்படியா..

இங்க நேராவே விசயதிற்குள்ள போறன்...(விசயம் என்றவுடன் கனக்க நினைக்கிறதில்ல சும்மா சப்பை மாட்டர் தான் எண்டாலும் அதை பத்தியும் ஆராய்வோம் என்ன).. :D

இப்ப ஒரு பொண்ணும் ஒரு பையனும் கதைக்கக்க அல்லாட்டிக்கு காதலனும்,காதலியும் கதைக்கக்க வந்து "டி,டா" போட்டு கதைக்கீனம்.உதாரணமாக சொல்ல போனால்..

1)பொண்ணு வந்து ஒரு பையனை பார்த்து..எப்படிடா சுகமாடா..?? எண்டு கேட்பா..(உது வந்து காதலன் காதலிக்கும் பொருந்தும்).. :lol:

அதை போல..

பையன் வந்து எப்படி சுகமாடி எண்டு எண்டு கேட்பீனம்..ம்..இப்படியே "டி மற்றது டா" போட்டு தான் இப்ப கன புலத்தில இருக்கிற தமிழ் பெடியன்கள் மற்றும் பெட்டைகள் கதைக்கீனம்.அவையள் வடிவா முகத்தை எல்லாம் சுளித்து கிளித்து கதைப்பீனம் எனக்கு அப்படி எல்லாம் கதைக்க தெரியாது :D மேலால உதாரணத்தை சொல்லிட்டன் பாருங்கோ...

இப்ப உதில என்ன சந்தேகம் எனக்கு எண்டு நீங்க கேட்கிறது விளங்குது.அதுவென்னவெண்டா இப்படி "டி,டா" போட்டு கதைப்பதால அன்பு கூடுது எண்டு அவையள் ஒரு ஆய்வு அறிக்கை சமர்பித்திருக்கீனம்.அது எவ்வளவு தூரம் சரி எண்டு எனக்கு ஒரே குழப்பமா இருக்கு.. :lol:

ஏன் எண்டா எனக்கு யாரும் "டி,டா" போட்டு கதைத்தா பிடிக்காது அதுமட்டுமில்லை அது என்னவோ ஆடு,மாடுகளை கூப்பிடுற மாதிரி எனகொரு உணர்வு பாருங்கோ ஆனால் உவையள் இப்படி சொல்லீனம் அது தான் எனக்கு சந்தேகமா இருக்கு,ஏன் எண்டா நாளைக்கு நான் காதலிக்கிறவா என்னை "டா" போட்டு கூப்பிட..நான் "டென்சன்" ஆகிறதை விட இப்பவே அதுக்கு ஏற்ற போல மாறலாமோ எண்டு யோசிக்கிறன் பாருங்கோ. :(

இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கள்..??..நீங்களும் இப்படி தான் கூப்பிடுவீங்களோ..?? என்கிறதை எனக்கு ஒருக்கா சொல்லுறியளோ..

நீங்க சொல்லுற கருத்துகளை பொருத்து தான் நானும் அதுக்கு மாறுறதோ இல்லாட்டிக்கு இப்ப கதைக்கிற மாதிரி ஒழுங்கா கதைக்கிறதா எண்டு முடிவெடுக்க முடியும் பாருங்கோ.. :D அது மட்டுமில்லை ஒரு ஆட்கள் மேல அன்பு கூட வேண்டும் எண்டா இப்படி "டி,டா" போடாமா..

வேற எப்படி கதைக்கலாம் எண்டு சொல்லி தந்தாலும் பிரயோசனமா இருக்கும்..!!

சரி உது ஒரு சந்தேகமா எண்டு நீங்க பார்க்கிறது விளங்குது..என்ன செய்ய எனக்கு இப்படியான சந்தேகங்கள் தானே வருகுது..அதுக்காக என்னை "போடா" எண்டு எல்லாம் திட்டி போடாதையுங்கோ என்ன.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட மவனே இப்படியாவது கூப்பிடுறாங்களே என்று சந்தோசப்பட வேண்டிய காலம்.

இதுக்கெல்லாம் போய் பெரிதாய் அலட்டிக் கொள்ளலாமோ?

Link to comment
Share on other sites

எப்படிடா சுகமாடா..டா..!!

இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கள்..??..நீங்களும் இப்படி தான் கூப்பிடுவீங்களோ..?? என்கிறதை எனக்கு ஒருக்கா சொல்லுறியளோ..

என்னை பொறுத்த வரை தவறில்லை. உண்மையான அன்புடன் எப்படியும் கூப்பிடலாம், அழைக்கப்படுபவர் புரிந்து கொண்டால்...

நீங்க சொல்லுற கருத்துகளை பொருத்து தான் நானும் அதுக்கு மாறுறதோ இல்லாட்டிக்கு இப்ப கதைக்கிற மாதிரி ஒழுங்கா கதைக்கிறதா எண்டு முடிவெடுக்க முடியும் பாருங்கோ.. :lol: அது மட்டுமில்லை ஒரு ஆட்கள் மேல அன்பு கூட வேண்டும் எண்டா இப்படி "டி,டா" போடாமா..

வேற எப்படி கதைக்கலாம் எண்டு சொல்லி தந்தாலும் பிரயோசனமா இருக்கும்..!!

உங்கள் உள்ளம் எப்படி கூப்பிடவேண்டுமென்று சொல்கிறதோ அப்படி கூப்பிடலாம். (நெருங்கிய நண்பர்கள் கூடி கதைக்கும் போது, அவர்கள் பல முறை தூஷண வார்த்தைகள் கொண்டு மற்ற நண்பர்களை அழைக்கும்போது, மற்றவர் அதைப் பற்றி வேதனையோ, கோபமோ கொள்ளாமல் உரையாடலை தொடர்வதை பார்த்திருபீர்கள்.) இருவருக்கும் இடையே புரிந்துணர்வு உள்ளவரை எப்படியும் அழைக்கலாம்.

சரி உது ஒரு சந்தேகமா எண்டு நீங்க பார்க்கிறது விளங்குது..என்ன செய்ய எனக்கு இப்படியான சந்தேகங்கள் தானே வருகுது..அதுக்காக என்னை "போடா" எண்டு எல்லாம் திட்டி போடாதையுங்கோ என்ன.. :lol:

அப்ப நான் வரட்டா!!

உரிய ஆட்கள் அப்படி கூப்பிட்டால் நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள். :(:D

Link to comment
Share on other sites

எப்படியண்ணா உங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் சந்தேகம் வருது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியண்ணா உங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் சந்தேகம் வருது?

நிறைய பேச்சு [ஏச்சு] பட்டால் இப்படித்தான் சந்தேகம் வரும் இன்னும் வெளிவராமல் எத்தனையோ எல்லாம் அந்த ஜம்முவுக்குதான் வெளிச்சம் :(:lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு பையனுக்கு ஒரு விசயம் தெரியல்ல..

இப்ப எல்லாம்.. டி... டா போடுறதே இல்ல.

எல்லாம்.. டா தான். ஆண் பெண் எல்லாமே டா தான். (டா என்றால்.. பிகர் என்றும் ஒரு பொருள் இருக்குது. யுனி வழிய ஒரு காலத்தில் பிரபல்யமாக இருந்தது. :lol: )

சமீபத்தில எனக்கு தெரிஞ்ச ஒருவர்.. தவறுதலா தன்ர பெண் நண்பிக்கு அனுப்புற "ரெக்ஸ் மெசேச்சை" தவறி எனக்கு அனுப்பிப்போட்டார். இதென்ன அநியாயமா இருக்கு.. என்னைப் போய் எவண்டா டா என்றது என்று எனக்கும் ஒரு மாதிரித்தான் ஆச்சு. அப்புறம்.. வழியிற வழிச்சலை பார்த்திட்டு புரிஞ்சு கொண்டன்.. எவனோ.. ஒரு லொள்ளுப் பாட்டி.. லொள்ளு மிகுதியில.. இலக்கத்தை மாத்தி தெரிவு செய்து.. அழுத்தி அனுப்பிட்டார் என்று.

Hida chellam.. என்று அதில எழுதி.. தொடர்ந்து போய் இருந்திச்சு.

உதில என்ன அன்பு இருக்கோ எனக்குத் தெரியல்ல. ஆனால்.. பெண்கள் உப்படியான பசப்பு வார்த்தைகளுக்கு மயங்கிற பலவீனமான ஆக்கள் என்றது என்னவோ உண்மை போலத்தான் இருக்குது. பெண்கள் கூட்டமே ஒரு வகை...???! :lol:

மேலும் உதாரணத்துக்கு கீழ் உள்ள பாடலில்.. பெண் பாடுகிறார்.. டா என்று.. ஆணும்.. டா என்றே பாடுகிறார்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப சில நாளாக இஞ்ச நிக்கிறன். என்னடா(இந்த 'டா" உங்களுக்கல்ல) இது யாருக்காவது உபயோகமா நாலு வார்த்தை சொல்லுற மாதிரி ஒரு செய்தியையும் யாழில காணேல்ல என்று ஒரு தவிப்பு இருந்தது. அப்பாடா(இ.'டா".உ) இப்ப சரி!!!

ஜம்ஸ்! ஒரு மாறுதலுக்கு இப்படி நீங்கள் செய்யலாம். நீங்கள் அவவை 'டா" போட்டுக் கூப்பிட அவ உங்களை 'டி" போட்டுக் கூப்பிடுவதும் இப்ப பாஷன்தான்.

உ.ம்: உங்களுடைய கையிலோ, கன்னத்திலோ இருக்கிற சிறு காயத்தைப் பார்த்து(காயம் எப்படி வந்தது என்றெல்லாம் ஆராயப்போக்கூடாது.சமையல்ல அம்மாவுக்கு உதவும்போதுகூட ஏற்படலாம்) அவ என்ன டி ஜம்முலு ரொம்ப வலிக்குதா டி செல்லம்!

உடனே நீங்கள்: நோ..நோ..(உண்மையாய் நொந்தாலும் காட்டிக் கொள்ளக் கூடாது.) டா. இதெல்லாம் வெறும் ஜூஜூபி டா. நீ வொர்ரி பண்ணாத டா.

அப்படியே ஒரு பஞ்ச்: எவ்வளத்தையோ தாங்கிறம் இதைத் தாங்க மாட்டமா என்ன. இப்படியே தொடரலாம்... அப்ப நான் வரட்டா டி(இந்த 'டி" அன்பு, அன்பு)

Link to comment
Share on other sites

டா- டார்லிங்க்

டி - டியர்

இப்படி ஒரு சோர்ட் கட் இருக்கோ என்னமோ?

எனக்கும் இந்த டி போடுறது பிடிக்காது எல்லோ.

முந்தி ஓ எல் படிச்சு பரீட்சை எழுதி ரிசல்ட் வந்தப்போ பெடியங்கள் என சொல்லுவாங்க தெரியுமா?

டேய் அந்த ஹேமாக்கு ஏழுஞ்சீ வண்டி ( 7C 1D)

இப்படி இந்த டி பல இடங்களில் சர்ச்சைக்குள்ளாகுது போல.

அதுசரி நட்பு காதல் இரண்டுக்குமிடையில் தான் இந்த டா டி பிரச்சினையா தம்பி?

அக்கா தம்பி உறவுக்கிடையில் டா சொல்லலாமோ?

தம்பி இந்த சந்தேகத்தை வாக்கு எடுத்திருக்கலாமோ என தோணுது,

அதுசரி இந்த டா டி இல் அன்பு கூடும் என்றால் ஏன் இந்த யாழ் கருத்துக்களத்தில் அந்த டா டி க்கு தடை போட்டிருக்கு? இது எனக்குண்டான சந்தேகம். கொஞ்சம் தீர்த்து வைப்பியளா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படிடா சுகமாடா..டா..!!

sb10061837c002bq4.jpg

இப்ப உதில என்ன சந்தேகம் எனக்கு எண்டு நீங்க கேட்கிறது விளங்குது.அதுவென்னவெண்டா இப்படி "டி,டா" போட்டு கதைப்பதால அன்பு கூடுது எண்டு அவையள் ஒரு ஆய்வு அறிக்கை சமர்பித்திருக்கீனம்.அது எவ்வளவு தூரம் சரி எண்டு எனக்கு ஒரே குழப்பமா இருக்கு.. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

மிக அன்பு கூடியவர்களுடன் , மிக நெருக்கமானவர்களுடன் " டி , டா " போட்டு கதைத்தால் தப்பில்லை ஜம்மு பேபி .

மற்றவர்களுடன் கதைத்தால் தப்பு பேபி . இந்த ஆய்வறிக்கையையும் சரியாத்தான் ஆராய்ஞ்சிருக்கினம் . :rolleyes:

Link to comment
Share on other sites

அது என்னமோ தெரியவில்லை என்ன மாயமோ தெரியவில்லை... என்னை வேறு எவர் 'டா' போட்டு கூப்பிட்டா பிடிக்கிறது இல்லை (நானும் அப்படி கூப்பிடுவது இல்லை)...ஆனால், நெருங்கிய நண்பர்கள் கூப்பிட்டா மட்டும் ஒண்ணுமே ஆகிறது இல்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தேகத்தை கேட்டு தெளிவாக்கிறது நல்லம் தான்.

ஆனா...........இப்போ எல்லாம் பசங்க நீங்க சொல்லுற மாதிரி கூப்பிடுறது இல்லைங்க.

எல்லாத்தையும் மாத்திட்டாங்கள்.

பொண்ணு பையனை டி எண்டும்

பையன் பொண்ணை டா எண்டு கூப்பிடுகினம்.

யமுனாவுக்கு எப்படி ? இது பிடிச்சுருக்கோ

Link to comment
Share on other sites

பொண்ணு பையனை டி எண்டும்

பையன் பொண்ணை டா எண்டு கூப்பிடுகினம்.

யமுனாவுக்கு எப்படி ? இது பிடிச்சுருக்கோ

:rolleyes::lol: கறுப்பி அக்கா நல்ல கேள்வி கேட்டிருக்கிறீங்க

ஜமுனா என நினைச்சப்போ நான் டி னு கூப்பிட்டேன். அப்போ கோவமே வரல்லை. இப்போ தம்பி என தெரிஞ்சப்புறம் ஒருநாள் "டா" என கூப்பிட்டேன் உடனே தொலைபேசி அழைப்பு கட் ஆகிட்டு. இதுவரை தொடர்பு ஏற்படுத்தலை. ஒருவேளை உந்த டா பிடிக்காமல் தான் கோவம் வந்து கட் ஆகி இருக்குமோ என சந்தேகம் வருது இப்ப.

ஆனாலும் ஜம்மு டா ஓ டி ஓ என்பது இப்பவும்........................ :rolleyes::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்முபேபிக்கு

இந்த விசயத்தில என்ர அபிப்பிராயம் என்னவென்றால் உங்களைக் காதலிப்பவர் உங்களை செல்லமாய் '' டா, டி'' போட்டுக் கூப்பிடும் பொழுது தான் உங்களில் வைத்திருக்கும் அன்பில் நெருக்கம் ஏற்படுவதாக நினைத்துக் கொள்கிறார். அதே நேரம் உங்களைக் காதலிப்பவர் உங்களை அப்படி கூப்பிடும் போது நீங்கள் அதை மரியாதைக் குறைவாக எடுத்து உங்களுக்கு கடுப்பாகிறது என்றும் வைத்துக்கொள்வோம்.

எனவே உங்கள் கோபத்தினால் வாக்குவாதம் ஏற்பட்டு உங்கள் காதல் பிரிய சந்தர்ப்பம் இருக்கிறதல்லவா....!

எனவே உங்களுக்கு ''டா, டி'' போட்டு அழைக்கும் போது ''..ச்சோ.. சுவீட்...'' என்று அவர் போக்கிலே விட்டுவிடுங்கள் உங்கள் இருவருக்கிடையில் அன்பு பெருக வேண்டுமென்றால் சிறு மரியாதைக் குறைவையும் தாங்கிக் கொள்ளுங்கள் அல்லது பளாரென்ரு கன்னத்தில் அறைந்து விட்டு..'' என்னம்..மா... வலிக்கு....தா...!..'' என்று பதிலுக்கு குழைந்து கேட்டு சமாளித்துக் கொள்லுங்கள்.

இருவருக்கிடையில் ஒருவருக்கொருவர் பொறுத்துப் போனால் இருவருக்குமிடையில் பல நல்ல... சமாச்சாரங்கள் நடைபெறச் சந்தர்ப்பம் இருக்கல்லவா...!

இளங்கவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்முபேபிக்கு

இந்த விசயத்தில என்ர அபிப்பிராயம் என்னவென்றால் உங்களைக் காதலிப்பவர் உங்களை செல்லமாய் '' டா, டி'' போட்டுக் கூப்பிடும் பொழுது தான் உங்களில் வைத்திருக்கும் அன்பில் நெருக்கம் ஏற்படுவதாக நினைத்துக் கொள்கிறார். அதே நேரம் உங்களைக் காதலிப்பவர் உங்களை அப்படி கூப்பிடும் போது நீங்கள் அதை மரியாதைக் குறைவாக எடுத்து உங்களுக்கு கடுப்பாகிறது என்றும் வைத்துக்கொள்வோம்.

எனவே உங்கள் கோபத்தினால் வாக்குவாதம் ஏற்பட்டு உங்கள் காதல் பிரிய சந்தர்ப்பம் இருக்கிறதல்லவா....!

எனவே உங்களுக்கு ''டா, டி'' போட்டு அழைக்கும் போது ''..ச்சோ.. சுவீட்...'' என்று அவர் போக்கிலே விட்டுவிடுங்கள் உங்கள் இருவருக்கிடையில் அன்பு பெருக வேண்டுமென்றால் சிறு மரியாதைக் குறைவையும் தாங்கிக் கொள்ளுங்கள் அல்லது பளாரென்ரு கன்னத்தில் அறைந்து விட்டு..'' என்னம்..மா... வலிக்கு....தா...!..'' என்று பதிலுக்கு குழைந்து கேட்டு சமாளித்துக் கொள்லுங்கள்.

இருவருக்கிடையில் ஒருவருக்கொருவர் பொறுத்துப் போனால் இருவருக்குமிடையில் பல நல்ல... சமாச்சாரங்கள் நடைபெறச் சந்தர்ப்பம் இருக்கல்லவா...!

இளங்கவி

இப்படி எல்லாம் காதலுக்காக விட்டுக் கொடுத்து.. ஏச்சு வாங்கி.. இறுதியில் காணப் போவது என்ன..>>>>???! ஒரு பிள்ளையோ குட்டியோ.. அல்லது பிரேக்கோ... அவ்வளவும் தான். இதற்காக...>>>???! முடியல்ல.. காதல் என்றதும் மனிதன் மனம் பேதலித்து அலைகிறான். அது ஏனுன்றும் புரியல்ல. அப்புறம் கலியாணம் கட்டினாப் பிறகுதான் தெளியுறான்.

நான் எல்லோரும் இளமையிலையே உதைத் தெளிய வேணும் என்று விரும்புறன். உந்தக் காதல் மாயையில் இருந்து விடுபடனும் என்று கேட்டுக் கொள்கிறேன். காதலுக்காக சுயமரியாதை இழப்பதால் சாதிக்கப்போவது எதுவும் இல்லை. அன்பு டா.. போட்டாத்தான் நெருங்கும் என்றில்லை. டா.. போடமலே.. அது பெருகும்.... உண்மையாக அன்பிருந்தால்..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எடியே ஜமுனா!

அண்டு தொடக்கம் இண்டு வரைக்கும் என்ரை அவ(ள்:rolleyes:) எதுக்கெடுத்தாலும் ஒரே "டா" தான் என்னடா, வாடா, போடா, எண்டபடி என்ரை பொழுது போகுது :D

இருந்தாலும் அவ(ள்:rolleyes:)கூப்புடுற தொனியிலைதான் முழு விசயமே அடங்கியிருக்கு :D

என்னைப்பொறுத்தவரைக்கும் உவளவை (:lol:) ஆண்சிங்கங்களை எப்புடி கூப்பிட்டாலும் கூப்பிடட்டும் கையிலை ஆயுதங்களை (சுளகு,அகப்பை,ரிவி ரிமோட்) தூக்காமல் விட்டால் சரி :(

Link to comment
Share on other sites

'ஹீமா.. ஹ ஆர் யூமா?'

'ஐ ஆம் ஓகேடா.. நீ..?'

'ஏதோ இருக்கே(ம்)மா.. இன்னிக்கு எப்டிமா?'

'ஓரே போர்பா..'

இப்புடியும் கதைக்குறாங்க.. இதையும் யம்மு பேபி மண்டைக்குள்ள போட்டுக் கொள்ளலாம்!! :rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

அட மவனே இப்படியாவது கூப்பிடுறாங்களே என்று சந்தோசப்பட வேண்டிய காலம்.

இதுக்கெல்லாம் போய் பெரிதாய் அலட்டிக் கொள்ளலாமோ?

பெரியப்பா சொல்லுறதை பார்த்தா உங்க வீட்டில..ல நன்னா தான் கூப்பிடீனம் போல இருக்கு..கு என்ன செய்யிறது எதுக்கும் நாமளும் தயாரா இருப்போம்..ம்.. :rolleyes:

என்ன செய்யிறது பெரியப்பா..பா அவையாள கூப்பிட முடியுது எண்ட வாயில கூப்பிடுறது..து ரொம்ப கஷ்டமா அல்லோ இருக்கு அது தான் பெரச்சினையே..யே.. :D நாளைக்கு பெறகு நானும் உப்படி பழகிட்டு வீட்ட அப்பாவோட கதைக்க மாறி கீறி இப்படி வார்த்தை வந்தா..தா..

பிறகு அப்பாட்டா..ட எண்ட பாடு..டு...!!.. :D

அப்ப நான் வரட்டா!!

என்னை பொறுத்த வரை தவறில்லை. உண்மையான அன்புடன் எப்படியும் கூப்பிடலாம், அழைக்கப்படுபவர் புரிந்து கொண்டால்...

ஓ...அப்படியோ ஜஸ்மின் அண்ணா..ணா..அப்ப நாளைக்கு உவையளுக்கு பெறக்கிற பிள்ளைகளும் உவையள் பார்த்து எப்படிடா சுகமாடா??..எண்டு கேட்டா அதையும் ரசிப்பீனமோ..மோ.. :lol:

எனகெண்டா உது சரி எண்டு தெரியவில்ல..ல கண்டவையளையும் பார்த்து எப்படிடா..டா எண்டு சொல்ல எனக்கு ஒரு மாதிரி இருக்கு..உங்களுக்கு அப்படி இல்லையோ..யோ..??.. :(

உங்கள் உள்ளம் எப்படி கூப்பிடவேண்டுமென்று சொல்கிறதோ அப்படி கூப்பிடலாம். (நெருங்கிய நண்பர்கள் கூடி கதைக்கும் போது, அவர்கள் பல முறை தூஷண வார்த்தைகள் கொண்டு மற்ற நண்பர்களை அழைக்கும்போது, மற்றவர் அதைப் பற்றி வேதனையோ, கோபமோ கொள்ளாமல் உரையாடலை தொடர்வதை பார்த்திருபீர்கள்.) இருவருக்கும் இடையே புரிந்துணர்வு உள்ளவரை எப்படியும் அழைக்கலாம்.

ஓ..அப்படியோ ஜஸ்மின் அண்ணா அப்ப நீங்களும் இப்படி கூப்பிடுவதால அவர்களுகுள் அன்பு அதிகரிக்கும் எண்டு சொல்லுறீங்களோ..ளோ..??..மற்றது ஜஸ்மின் அண்ணா நண்பர்களுடன் கதைப்பது சரி அதையே நண்பிகளுடன் கதைப்பதிற்கும் பாவிப்பது..து.. :D

சரியோ எண்டு தெரியவில்லை..லை...!!.. :rolleyes:

என்ன தான் புரிந்துணர்வு இருந்தாலும்..ம் பாருங்கோ நாளைக்கு அவையள் கல்யாணம் கட்டினா பெறகு எங்கையாச்சும் சந்திகக்க..க "எப்படிடா சுகமாடா" எண்டு கதைத்தா..தா..அதுக்கு பெறகு அவ்வளவு தான்..ன்..அதையும் விட என்ன மாதிரி நன்ன பிள்ளையா இருக்கிறது எவ்வளவோ மேலப்பா..பா.. :D

உரிய ஆட்கள் அப்படி கூப்பிட்டால் நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள்.

உரிய ஆட்கள் கூப்பிட்டா நன்னா இருக்குமோ..மோ ம்ம் ஒரு பொண்ணு நம்மள பார்த்து போடா எண்டு சொன்னா கேட்க நன்னா தான் இருக்கும்..ம் :D

அதுவே நம்மளிற்கு ஆப்பு எண்டு நெனைத்து..து நான் சிவ..சிவா எண்டு நமச்சியாவா வாழ்க்க பதிகம் படிக்க தொடங்கிடுவன் விளங்கிச்சோ..சோ.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

எப்படியண்ணா உங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் சந்தேகம் வருது?

என்ன செய்யிறது தங்கச்சி..சி வலு கவனமா இருக்கனும் அல்லோ ஆட்களோட..ட இல்லாட்டி "டா" போட்டு எல்லாத்திற்கும் "டாட்டா" காட்டி போடுவீனம்..ம்.. :D

அது தான் அண்ணா உசரா..ரா இருக்கிறன்..ன்..எனக்கு உந்த சந்தேகம் வர காரணமே என்னை ஒருவா இப்படி தான் கூப்பிடுறவா..வா அன்னைக்கு ஏன் என்னை நீங்க அப்படி கூப்பிடுறதில்ல எண்டு கேட்டிட்டா..டா நான் கூப்பிட்டாலும் தானே..னே.. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

நிறைய பேச்சு [ஏச்சு] பட்டால் இப்படித்தான் சந்தேகம் வரும் இன்னும் வெளிவராமல் எத்தனையோ எல்லாம் அந்த ஜம்முவுக்குதான் வெளிச்சம் :lol:

முனி மாமு..மு என் மேல இன்னுமா சந்தேகம் போகல்ல..ல..??..என்ன தான் நாம பண்ணிணாலும் அங்க இருந்து ஏச்சு விழாது எண்டு தெரியல்ல..ல போல..ல.. :rolleyes:

முனி மாமுவிற்கு..கு.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜம்மு பையனுக்கு ஒரு விசயம் தெரியல்ல..

இப்ப எல்லாம்.. டி... டா போடுறதே இல்ல.

எல்லாம்.. டா தான். ஆண் பெண் எல்லாமே டா தான். (டா என்றால்.. பிகர் என்றும் ஒரு பொருள் இருக்குது. யுனி வழிய ஒரு காலத்தில் பிரபல்யமாக இருந்தது. :lol: )

சமீபத்தில எனக்கு தெரிஞ்ச ஒருவர்.. தவறுதலா தன்ர பெண் நண்பிக்கு அனுப்புற "ரெக்ஸ் மெசேச்சை" தவறி எனக்கு அனுப்பிப்போட்டார். இதென்ன அநியாயமா இருக்கு.. என்னைப் போய் எவண்டா டா என்றது என்று எனக்கும் ஒரு மாதிரித்தான் ஆச்சு. அப்புறம்.. வழியிற வழிச்சலை பார்த்திட்டு புரிஞ்சு கொண்டன்.. எவனோ.. ஒரு லொள்ளுப் பாட்டி.. லொள்ளு மிகுதியில.. இலக்கத்தை மாத்தி தெரிவு செய்து.. அழுத்தி அனுப்பிட்டார் என்று.

Hida chellam.. என்று அதில எழுதி.. தொடர்ந்து போய் இருந்திச்சு.

உதில என்ன அன்பு இருக்கோ எனக்குத் தெரியல்ல. ஆனால்.. பெண்கள் உப்படியான பசப்பு வார்த்தைகளுக்கு மயங்கிற பலவீனமான ஆக்கள் என்றது என்னவோ உண்மை போலத்தான் இருக்குது. பெண்கள் கூட்டமே ஒரு வகை...???!

மேலும் உதாரணத்துக்கு கீழ் உள்ள பாடலில்.. பெண் பாடுகிறார்.. டா என்று.. ஆணும்.. டா என்றே பாடுகிறார்..!

ஓ..அது வேறையோ தாத்தா..தா..ஆனா இந்தியா தமிழ் பெட்டைகள் மற்றும் பெடியங்கள் எங்கண்ட யூனியில படிக்கீனம் அவையள் "டி" போடுறவை..வை.. :D

கேட்கவே சினமா இருக்கும்..ம்..மற்றும்படி நீங்க சொல்லுறது சரி தான் தாத்தா..தா எங்கண்ட பெடியள்,பெட்டைகள் "டா" தான் பாருங்கோ..கோ அத விட பெரிசுகளும் இப்ப உப்படி கூப்பிட தொடங்கீட்டீனம்..ம்..உது எங்க தான் போய் முடிய போதோ தெரியல்ல..ல..!!.. :rolleyes:

அட "டா" எண்டா பிகரா..ரா இது புது அகராதியா இருக்கு எனக்கு இன்னைகு தான் தெரியும்..ம் இப்படியான அருஞ்சொற்களை கொஞ்சம் சொல்லி தாங்களேன் நெடுக்ஸ் தாத்தா..!!.. :D

உங்களுக்கு ஏற்பட்ட அநுபவம் நன்னா தான் இருக்கு..கு..எனக்கு அப்படி ஏற்பட்டிருந்தா நான் தொடர்ந்து அவரோட கதைத்து கொண்டே போயிருப்பன்..ன்..நீங்க சொல்லுறது 100% சரி பெண்கள் வந்து இப்படியான வார்த்தைகளை ஒருவன் கதைத்து விட்டா..டா

அவனை மாதிரி நல்லவன் இல்லை எண்டு அவனுக்கு பின்னால போயிட்டு பெறகு முன்னாடி இன்னொன்டோட வந்து நிற்பீனம்..ம்.. :rolleyes:

உதுகள பார்த்து..து பார்த்து எனக்கு கல்யாணம் கட்டுற ஆசையும் கொஞ்சம்..ம் கொஞ்சமா மறைந்து கொண்டே போது எண்டா யோசியுங்கோ..கோ..

ம்ம்..நல்லா தான் இருக்கு பாடல் அதோட இந்த பாடலையும் ஒருக்கா கேட்டு பாருங்கோவன்..ன் எல்லாம் "டா" வில போய் தான் நிற்குதுகள்..ள்.. :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

இப்ப சில நாளாக இஞ்ச நிக்கிறன். என்னடா(இந்த 'டா" உங்களுக்கல்ல) இது யாருக்காவது உபயோகமா நாலு வார்த்தை சொல்லுற மாதிரி ஒரு செய்தியையும் யாழில காணேல்ல என்று ஒரு தவிப்பு இருந்தது. அப்பாடா(இ.'டா".உ) இப்ப சரி!!!

அட..சாட்டோட சாட்டா நீங்களும் "டா" சொல்லிட்டியள் என்ன சுவி பெரியப்பா..பா..??..ஏன் நாலு வார்த்தை கன வார்த்தை சொல்லுங்கோ..கோ.. :D

யார் கேட்காட்டியும் நான் கேட்கிறன்..ன் பாருங்கோ..கோ..!!.. :lol:

நான் அவாவை "டா" போட அவா என்னை "டீ" போட கடசியா எண்ட "டாடி" வந்து முன்னால நிற்க எனக்கு உதெல்லாம் வேண்டுமோ சுவி பெரியப்பா..பா..ம்ம் நீங்க கதைக்கிறதை பார்த்தா உங்க வீட்டில இப்படி தான் கதைக்கிறீங்க போல் தெரியுது..து.. :D

கேட்க நன்னா தான் இருக்கு..கு ஆனாலும் உந்த "டா" க்களை விட்டு சும்மா கதைக்கிறது தான் நல்லது போல் தெரிகிறது சும்மா போலி அன்புகளை வெளிபடுத்த நெனைக்கிறவை..வை தான் உதுகள பயன்படுத்தீனம் என்பது எண்ட கருத்து இத பத்தி..தி. :rolleyes:

நீங்க என்ன நெனைக்கிறீங்க சுவி பெரியப்பா..பா.. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

டா- டார்லிங்க்

டி - டியர்

இப்படி ஒரு சோர்ட் கட் இருக்கோ என்னமோ?

எனக்கும் இந்த டி போடுறது பிடிக்காது எல்லோ.

முந்தி ஓ எல் படிச்சு பரீட்சை எழுதி ரிசல்ட் வந்தப்போ பெடியங்கள் என சொல்லுவாங்க தெரியுமா?

டேய் அந்த ஹேமாக்கு ஏழுஞ்சீ வண்டி ( 7C 1D)

இப்படி இந்த டி பல இடங்களில் சர்ச்சைக்குள்ளாகுது போல.

அதுசரி நட்பு காதல் இரண்டுக்குமிடையில் தான் இந்த டா டி பிரச்சினையா தம்பி?

அக்கா தம்பி உறவுக்கிடையில் டா சொல்லலாமோ?

தம்பி இந்த சந்தேகத்தை வாக்கு எடுத்திருக்கலாமோ என தோணுது,

அதுசரி இந்த டா டி இல் அன்பு கூடும் என்றால் ஏன் இந்த யாழ் கருத்துக்களத்தில் அந்த டா டி க்கு தடை போட்டிருக்கு? இது எனக்குண்டான சந்தேகம். கொஞ்சம் தீர்த்து வைப்பியளா?

ஓ..நிலா அக்கா..!!. :(

வாங்கோடா..டா உது எப்படி இருக்கு..கு.. :rolleyes: (சரி சரி ஏசாதையுங்கோ)..விசயதிற்குள்ள வாரன்..ன்..!!..என்னமோ உவையள் ஏதோ எல்லாம் தங்கண்ட பாட்டிற்கு கூப்பிடினம் நெலா அக்கா..கா..

ஆனா பக்கத்தில இருந்து கேட்கிற எங்கபாடு தான் பாவம்..ம்..உங்களுக்கு உதுகள் பிடிக்காதோ இல்லாட்டிக்கு "டி" மட்டும் தான் பிடிக்காதோ..தோ..??..என்னை பொறுத்தவரை எனக்கு இரண்டுமே பிடிக்கல்ல..ல..உதை விட எண்ட அம்மா கூப்பிடுவா "வாடா நாயே" எண்டு அது எனக்கு ரொம்ப பிடித்திருக்கு..கு.. :D

உங்கண்ட அம்மாவும் கூப்பிடுறவாவே..வே..(எண்ட வீட்ட என்ன அடிகடி அப்படி தான் கூப்பிடுறவை என்ன செய்யிறது ஆனா உதுகாக எல்லாம் நான் கவலைபடல்ல).. :D

ஒ பெடியங்கள் உப்படியும் கலாய்ப்பினமோ..மோ உங்க யாழில கனபேர் சொல்லுறதை பார்த்த பெறகு தான் வெளங்குது எங்கண்ட "செட்டில" இருக்கிற பெடியள் எல்லாம் ரொம்ப நல்லவையாவே இருக்கீனம் எண்டு..டு பரவால்ல அப்படியே தொடருவோம்..ம்..

ஏன் அக்கா நட்பில.காதலில "டா,டி" போடனும் எண்டு நெனைக்கிறீங்க..க..??..அது தான் எண்ட கேள்வி அப்படி போடுறதால..ல என்ன பெரயோசனம் எண்டு சொன்னீங்க எண்டா..டா..அதுக்கான விடையை நான் சொல்லுறன் என்ன மற்றும்படி அது தேவையற்றது எண்டு தான் நெனைக்கிறன்..ன்.. :rolleyes:

எப்படிடா சுகமாடா என்பதனை விட எப்பசி சுகமா இருக்கிறீங்கள் என்று கேட்பது எனக்கு அழகாக தான் படுகிறது என்பது என் கருத்து..து..

மற்றது..து..!!

குடும்பத்துகுள் எடுத்து கொண்டால்..ல் அதாச்சும் அக்கா,தம்பி போன்ற உறவுகளிடையே இவ் வார்த்தையை தான் பிரயோகிக்க வேண்டும் எண்டு இல்லை தானே..னே..??..ஆனால் இது பெரிய தவறாக தென்படாத போதும்.அதனை விடுத்து கதைப்பதும் எனக்கு அழகாக தான் படுக்கிறது என்பது என் கருத்து.. :D

எங்க வீடு பத்தி தெரியும் தானே..னே தம்பியை வாடா எண்டு கூப்பிட்டாலே அப்பாட்டா ஏச்சு விழும்..ம்..அப்படியோ என்னவோ தெரியல..ல இப்பவும் யாரும் என்னை "டா" போட்டு கதைத்தா எனக்கு ஏதோ பிடிக்காது..து..அது சரியோ தவறோ எண்டு எனக்கு சரியாக தெரியல்ல.. :D

ம்ம்..நெலா அக்கா இந்த பதிவினை வாக்குட்படுத்தியிருக்கலாம்.

Link to comment
Share on other sites

மிக அன்பு கூடியவர்களுடன் , மிக நெருக்கமானவர்களுடன் " டி , டா " போட்டு கதைத்தால் தப்பில்லை ஜம்மு பேபி .

மற்றவர்களுடன் கதைத்தால் தப்பு பேபி . இந்த ஆய்வறிக்கையையும் சரியாத்தான் ஆராய்ஞ்சிருக்கினம் .

ஓ..அப்படியோ தமிழ்சிறி அண்ணா..ணா..!!.. :lol:

உவையளின்ட ஆய்வு எல்லா நேரத்திலையும் சரியா இருக்குமோ என்பது தான் எண்ட சந்தேகம் பாருங்கோ..கோ ஏன் எண்டா தமிழ்சிறி அண்ணா..ணா..

என்ன தான் நெருங்கி பழகினாலும் எப்பவாச்சும் சண்டை வரும் தானே..னே அப்பவும் இப்படி "டா" போட்டு தான் சண்டை பீடிப்பீனமோ..மோ..??.. :rolleyes:

எனக்கு ஒரெ கொழப்பமா தான் இருக்கு..கு என்னும்..ம்... :D

அப்ப நான் வரட்டா!!

அது என்னமோ தெரியவில்லை என்ன மாயமோ தெரியவில்லை... என்னை வேறு எவர் 'டா' போட்டு கூப்பிட்டா பிடிக்கிறது இல்லை (நானும் அப்படி கூப்பிடுவது இல்லை)...ஆனால், நெருங்கிய நண்பர்கள் கூப்பிட்டா மட்டும் ஒண்ணுமே ஆகிறது இல்லை...

ஓ..அது என்னமோ மாயமோ தெரியல்ல..ல அபிராமி..அபிராமி எண்டு சொல்ல போறியள் எண்டு நெனைத்தன்..ன் நல்ல வேள அப்படி ஒண்டும் நடக்கல்ல..ல.. :D

ம்ம்..உங்களை போல தான் எனக்கும்..ம்..என் நண்பர்கள் அநேகமான ஆட்கள்..ள் என் குணம் தெரிந்து அப்படி கூப்பிடுறதில்ல..ல.. :rolleyes:

சில ஆகிளும் நெருங்கிய நண்பர்கள் கூப்பிடுறவை..வை இருந்திட்டு..டு..மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித "டா" அல்ல அதையும் தாண்டி புனிதமானது..து என்ன அண்ணா..ணா..!! :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

சந்தேகத்தை கேட்டு தெளிவாக்கிறது நல்லம் தான்.

ஆனா...........இப்போ எல்லாம் பசங்க நீங்க சொல்லுற மாதிரி கூப்பிடுறது இல்லைங்க.

எல்லாத்தையும் மாத்திட்டாங்கள்.

பொண்ணு பையனை டி எண்டும்

பையன் பொண்ணை டா எண்டு கூப்பிடுகினம்.

யமுனாவுக்கு எப்படி ? இது பிடிச்சுருக்கோ

அட..நம்மண்ட கறுப்பி அக்காவே வந்திட்டா..டா..!!.. :(

அவாட்ட கேட்டு உந்த சந்தேகத்தை எல்லாம் தீர்த்திட வேண்டும்..ம்..ஓ உப்ப இப்படி வேற கூத்து நடக்குதோ நல்ல காலம் உங்க அவுஸ்ரெலியால இருக்கிறவைக்கு..கு.. :D

மாத்தின விசயம் தெரியாது போல..ல இல்லாட்டிக்கு என்ன "டி" எண்டு கூப்பிட்டா..டா எப்படி இருக்கும்..ம்..(நினைத்து கூட பார்க்க முடியவில்ல).. :D

இல்ல கறுப்பி அக்கா நெசமா எனக்கு பிடிக்கல்ல..ல எனக்கு "எப்படி சுகமா இருக்கிறீங்களா" எண்டு கேட்கிறது தான் பிடிக்கும்..ம் மற்றது சில இந்திய தமிழ் ஆட்கள்..ல் வந்து எப்படிகா சுகமா இருக்கிறீங்களாகா எண்டு சொல்லுவீனம் அல்லோ கேட்டிருக்கிறீங்களோ தெரியல்ல..ல.. :rolleyes:

ஆனா அவையள் கதைக்கக்க நன்னா இருக்கும்..ம் கறுப்பி அக்கா..கா..நானும் எனி அப்படி யாழில கதைகட்டோ.. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

கறுப்பி அக்கா நல்ல கேள்வி கேட்டிருக்கிறீங்க

ஜமுனா என நினைச்சப்போ நான் டி னு கூப்பிட்டேன். அப்போ கோவமே வரல்லை. இப்போ தம்பி என தெரிஞ்சப்புறம் ஒருநாள் "டா" என கூப்பிட்டேன் உடனே தொலைபேசி அழைப்பு கட் ஆகிட்டு. இதுவரை தொடர்பு ஏற்படுத்தலை. ஒருவேளை உந்த டா பிடிக்காமல் தான் கோவம் வந்து கட் ஆகி இருக்குமோ என சந்தேகம் வருது இப்ப.

ஆனாலும் ஜம்மு டா ஓ டி ஓ என்பது இப்பவும்........................

ஒ..ஒரு காலத்தில யாழில பல பேர் என்னை "டி" எண்டு தான் நெனைத்தவை..வை அதில நீங்களுமோ நெலா அக்கா..கா அது சரி..ரி தான்..ன்.. :lol:

சா..சா நான் தொலைபேசி அழப்பை எல்லாம் துண்டிக்கல்ல..ல..(எப்பவுமே என்ன தப்பா நெனைத்து கொண்டு)..நாம பிடிக்காட்டி நேரா சொல்லிடுவோமல..ல..

உது தெரியாதோ..தோ..??... :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜம்முபேபிக்கு

இந்த விசயத்தில என்ர அபிப்பிராயம் என்னவென்றால் உங்களைக் காதலிப்பவர் உங்களை செல்லமாய் '' டா, டி'' போட்டுக் கூப்பிடும் பொழுது தான் உங்களில் வைத்திருக்கும் அன்பில் நெருக்கம் ஏற்படுவதாக நினைத்துக் கொள்கிறார். அதே நேரம் உங்களைக் காதலிப்பவர் உங்களை அப்படி கூப்பிடும் போது நீங்கள் அதை மரியாதைக் குறைவாக எடுத்து உங்களுக்கு கடுப்பாகிறது என்றும் வைத்துக்கொள்வோம்.

ம்ம்..இளம்கவி அண்ணா..ணா..!!. :D

எனகென்னமோ "டா,டி" போட்டா நெருக்கம் வாற மாதிரி..ரி தெரியல்ல..ல..ஏதோ அந்நியதன்மையாக தான் அதனை உணர்கிறன்..ன்.... :rolleyes: அது மட்டுமில்ல..ல

உங்கண்ட ஆலோசனை நல்லா தான் இருக்கு..கு எனக்கு உது சரிபட்டு வராது..து..பிடிக்காத ஒரு விசயத்தை எப்படி "சோ சுவீட்" எண்டு சொல்லுறது..து..??..உந்த அன்பு பெருகிறதிற்காக..க நாம அடி பணிந்து போகவேண்டும் எண்டா அப்படிபட்ட வம்பான அன்பு நம்மளுக்கு எதுக்கு..கு.. :D

அதுக்கு பேசாம இருந்திடலா..ம் எண்டு நெனைக்கிறன்..ன்..

அது மட்டுமில்லை..இப்ப புருஷன் வந்து பெண்டாட்டியை "அம்மா" எண்டு கூப்பீடீனம்..ம் உது சரியோ..யோ..?? எனக்கு உப்ப உதிலையும் சந்தேகம் வந்திட்டு..டு பாருங்கோ..கோ.. :lol:

அப்ப நான் வரட்டா!!

எடியே ஜமுனா!

அண்டு தொடக்கம் இண்டு வரைக்கும் என்ரை அவ(ள்:rolleyes:) எதுக்கெடுத்தாலும் ஒரே "டா" தான் என்னடா, வாடா, போடா, எண்டபடி என்ரை பொழுது போகுது

இருந்தாலும் அவ(ள்) கூப்புடுற தொனியிலைதான் முழு விசயமே அடங்கியிருக்கு

என்னைப்பொறுத்தவரைக்கும் உவளவை ஆண்சிங்கங்களை எப்புடி கூப்பிட்டாலும் கூப்பிடட்டும் கையிலை ஆயுதங்களை (சுளகு,அகப்பை,ரிவி ரிமோட்) தூக்காமல் விட்டால் சரி

ஒம் கு.சா தாத்தா..தா..!!.. :D

ஒ..அவா மட்டும் தான் "டா" பாவிப்பாவோ..வோ இல்லாட்டிக்கு நீங்களும் பதிலிற்கு பாவிக்கிறனியளோ தாத்தா..தா..?? உவையள் இப்படி "டா" போடீனம் எண்டா..டா :D

ஏதோ ஒரு விசயம் உவையளுக்கு நடக்கனும் எண்ட நோக்கத்தில..ல தான் தாத்தா..தா..உது தெரியாமல் இருக்கிறீங்க போல எனியாவது தெரிந்து கொள்ளுங்கோ..கோ.. :D

மற்றது..து..நீங்க தொனியை பத்தி சொன்னீங்க..க அது என்னவோ உண்மை போல தான் தெரியுது..து அது பத்தி இன்னொருக்கா ஆராச்சி செய்வோம் என்ன..ன

தாத்தா..தா.. :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

'ஹீமா.. ஹ ஆர் யூமா?'

'ஐ ஆம் ஓகேடா.. நீ..?'

'ஏதோ இருக்கே(ம்)மா.. இன்னிக்கு எப்டிமா?'

'ஓரே போர்பா..'

இப்புடியும் கதைக்குறாங்க.. இதையும் யம்மு பேபி மண்டைக்குள்ள போட்டுக் கொள்ளலாம்!!

சோழியன் தாத்தா..தா..!!. :rolleyes:

இப்ப தான் எனக்கு ஒரு உண்மையே வெளங்குது..து இந்த தாத்தாமார்கள் எல்லாம்..ம் உந்த விசயத்தில நல்ல கெட்டிகாரங்களா தான் இருக்கீனம்..ம். :D

அவையளிட்டம் தான் இது போல மேலும் நல்ல விசயங்களை படிக்கனும் போல..ல..இந்த மண்டைகுள்ள போட்டா போல எனக்கு கதைக்க வந்திடபோதோ..தோ.... :lol:

என்னால முடியல்ல இப்படி எல்லாம் கதைக்க..க அது தான் எண்ட அடுத்த பெரச்சினையே..யே..(லோகத்தில வாழுறதெண்டா எனி இப்படி சில்லறதனமான சொற்களை பாவித்தா தான் காலம் தள்ளளாம் போல இருக்கு என்னவோ பார்போம்).. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடைசி நிமிடத்தில் வந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணையம் போல் சாக்குப் போக்குச் சொல்லாமல் போட்டியில் என்னையும் இணைத்துக் கொண்ட கிருபன்ஜிக்கு நன்றி
    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??   அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  ......🤣🤣🤣
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள்  1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.   3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்  4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்  
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.