Jump to content

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

http://www.worldtamilnews.com/ - Kural vadivam ingee. Kavithai Kelungal (new)-20.10.2008

உங்களைச் கொஞ்சம்

உலகம் தேடும்

முத்தமிழ் சிவப்பாகும்

போர் மேகங்கள் சூழும்

உங்களுக்கும் வலிகள் புரியும்

இயந்திரப் பறவைகள் எதிரியாகும்

ஆமிக்காரன் இயமன் ஆவான்

உயிர் வெளியேறிய

உடல்களை காகம் கொத்தும்

விழிகளிலே குருதி கசியும்

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

தொப்புள் கொடியில்

பலமுறை தீப்பிடிக்கும்

பார்த்துக் கொண்டே இருப்பீர்களா?

ஒரணியில் திரண்டு

ஒரே முடிவு எடுப்பீர்களா?

உங்கள் அரசியல் விளையாட்டில்

எங்களைத் தோற்கடிக்காதீர்கள்!

எந்த இனத்தவனும் உங்களை

மன்னிக்கமாட்டான்

சொந்த இனத்தவனைக்

நீங்கள் காத்திட மறந்துவிட்டால்

வாயிலே நுழைவதெல்லாம்

உங்கள் வயிற்றிலே செரிக்காது

சொந்த சகோதரன்

அங்கே பட்டினியில் சாகும்போது

இந்த தாகம் இந்தச் சோகம்

இந்த இன அழிப்பு

இந்த பேர் இழப்பு

எல்லாம் தமிழனுக்கே

வாய்த்த தலைவிதியா?

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

குருதியில் அடிக்கடி

நீ குளிப்பாய்

பெற்ற பிள்ளையை

படுக்கையில் நீ இழப்பாய்

நித்திரையில் நிம்மதியே இருக்காது

மரநிழலில் மனம் குமுறும்

நரம்புகள் வெடிக்கும்

நா வறண்டு போகும்

பெண்களின் ஆடைகள் தூக்கி

பேய்கள் வெறி தீர்க்கும்

ரத்த ஆறு வழிந்தோடும்

நடுவிலே நாய் நக்கும்

தலையில் செல்வந்து விழும்

தட்டிவிட்டு வலியின் வதையோலம்

வானைப் பிளக்கும்

கண்ணீர்த் துளிகள் கடலாகும்

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

வீட்டுக்குள்ளே ஓடி ஓடியே

பதுங்கு குழிகளில் வாழ

உங்களால் முடியுமா?

அகோரத்தின் உச்சத்தை

உணர்ந்தது உண்டா?

அழுது களைத்து மீண்டும்

எழுந்து நின்றது உண்டா?

உன்னைப் புதைக்கும் இடத்தில்

உயிர் வாழப் பழகியதுண்டா?

உலகம் எங்கும் சிதறி

தாயைப் பிரிந்து வாழும்

துயரத்தை அனுபவிக்க முடியுமா?

பனிக் குளிரில் பனியோடு

பனியாய்க் கரைந்து

உங்களால் உறைய முடியுமா?

சவப் பெட்டிக்குள் உறங்கி

நாடு விட்டு நாடு போய்

நரகத்தில் தொலையமுடியுமா?

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

பாண் துண்டோடு பருப்பு

பகலில் வயிறு பசியாறும்

பாதி வயிற்றோடு நெருப்பு

இருளில் குளிர் காயும்

சிறைச்சாலைக்கும் திறந்தவெளிச்

சிறைச்சாலைக்கும்

ஒரே ஒரு பொருள்தான்

எங்கள் யாழ்ப்பாணம்!

பாலைவனத்து ஒட்டகமாய்

பாம்புகளுக்கு நடுவில்

எங்கள் வாழ்க்கை ஓடும்

ஊரின் பெயரோ மட்டக்களப்பு!

தாய்மண் தேகத்தை சுவைத்து

ஆட்டுக்கறியாக பங்கு போடும்

நவீன மிருகஙக்ளை

யார் வேட்டையாடுவது?

ஆண்ட பரம்பரையின்

அடையாளத்தை அழிக்கமுடியுமா?

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

ஆளும் கட்சிகள்

ஆட்சி இழந்தாலும்

அனைத்துக் கட்சிகள்

கூட்டம் நடந்தாலும்

தமிழகம் முழுவதும்

கடைகள் மூடப்பட்டாலும்

திரையுலகமும் திரண்டு

பேரணியில் சென்றாலும்

இலக்கியத் தோப்பினில்

எரிமலை எழுந்தாலும்

தனித் தனியாக நீங்கள்

உண்ணாவிரதம் இருந்தாலும்

எப்போதும் உங்களை

நெஞ்சிலே சுமக்கின்றோம்

தணியாத தாகமாய்

விடுதலை கேட்கிறோம்!

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

உங்கள் எழுச்சியால்

எங்கள் நெஞ்சு நிறைகிறோம்!

நீட்டியுள்ள நேசக்கரத்தை

உறுதியாய்ப் பற்றுகின்றோம்!

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

-தமிழன், நோர்வே

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிஞர் வைரமுத்துவின் 'காதலித்துப் பார்" என்ற கவிதையின் யதியில் 'ஈழத்தமிழனாய் வாழ்ந்துபார்" என்ற உங்கள் படைப்பு நெளிவு சுழிவு இன்றி பரவி உள்ளங்களை வியாபிக்கிறது. வாசிக்கத் தூண்டுகிறது. மெல்ல இழுத்து இதமாய் வருடி அழச் சொல்லிக் கொடுக்கிறது. தொடருங்கள். பாராட்டுகளும் நன்றியும் உங்களுக்கு உரித்தாகட்டும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தமிழகத் தமிழரின் இதயத்தை தொடும் கவிதை. வாசிப்பார்களா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கவிதை அருமை வாழ்த்துக்கள்

தமிழ் நாட்டு சஞ்சிகைகளிலும் முடிந்தால் இணைத்திவிடுங்கோ

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

Tamizhvaanam

ஈழத் தமிழரின் வலிகளை வரிகளில் சொல்லி கண்களில் நீர் வழிய வைத்து விட்டீர்கள். தாய் நாட்டில் இவ்வளவு நடந்து கொண்டிருந்தாலும் ஒன்றுமே நடக்காதது போல இருக்கும் ஒவ்வொரு தமிழனின் கண்களையும் திறக்கும் படியான வரிகளைத் தந்ததற்கு வாழ்த்துக்கள்.

இளங்கவி

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அன்பு நண்பர்கள், வல்லைசகாரா, ஈசன், முனிவர் அனைவருக்கும் எனது நன்றிகள். நான் கவிதை எழுதத் தொடங்கிய காலத்தில் கவிஞர் வைரமுத்து அவர்களின் கவிதைகளும், அவர் எழுதுகின்ற வடிவங்களும் எனக்குப் பிடிக்கும். ஆகவேதான் அவருடைய காதலித்துப் பார் என்னும் கவிதை வடித்தினைப் பாவித்தேன். எங்களுடைய வலிகளை எந்தெந்த வடிவங்களில் எல்லாம் மக்களுக்குச் சொல்ல முடியுமோ அதையெல்லாம் முயற்சிக்கின்றேன்.

எங்கள் தாயகத்தில் ஏற்பட்டு இருக்கின்ற பேரவலத்தின் உச்சத்தை எந்த வடிவங்களில் எல்லாம் இந்த உலகிற்குச் சொல்ல முடியுமோ, அந்த வடிவங்களில் எல்லாம் பதிவு செய்து இந்த உலகை உலுக்க வேண்டும். தமிழினத்திற்கு விரைவான விடுதலை கிடைக்க, எங்கள் தொப்புள் கொடி உறவாக தமிழக உறவுகள் புறப்பட்டுவிட்டார்கள்.

அவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்க வேண்டியது புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஒவ்வொரு ஈழத் தமிழனின் கடமையாகும். என் உணர்வின் பதிவுகள் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும். தமிழ்நாட்டில் உள்ள இணையத்தளங்கள் பலவற்றில் இந்தக் கவிதை வெளிவந்துள்ளது. இது எனக்கும் மகிழ்வைத் தருகின்றது. தமிழக முதல்வர் கலைஞர் ஐயா அவர்களுக்கும் இக் கவிதையை அனுப்பி வைத்துள்ளேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக அருமையான வரிகள்.

இந்தக் கவிதையை குமுதத்துக்கோ, விகடனுக்கோ அனுப்பிவையுங்கள்.

எங்கள் உணர்வின் உறுதியை வலிகளின் நேரத்திலும் மறையாத தமிழ் வைராக்கியத்தை அழகாகக் கோர்வையாக்கி இருக்கின்றீர்கள்..

Link to post
Share on other sites

நல்ல கவிதை..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள யாழ்கள உறவுகள் அனைவருக்கும் மீண்டும் வணக்கம். உங்களுடைய கருத்துகள், பாராட்டுக்கள் அனைத்திற்கும் எனது நன்றிகள்.

இந்தக் கவிதை தமிழகத்தில் பல மாற்றங்களை உருவாக்கியுள்ளது. நான் அறிந்த வரையில் கிட்டத்தட்ட ஐந்து இணையத் தளங்கள் இக்கவிதையினை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து இயங்குகின்ற தமிழ்குரல் எனும் இணைய வானொலி என் கவிதையின் குரல் வடிவம் ஆக்கியுள்ளது. நீங்களும் கேட்டுப் பாருங்கள். இக் கவிதையினை முத்தமிழ் கூகிள் குழுமத்தில் இணைத்த சோழியான் அவர்கட்கு என் இதயபூர்வமான நன்றிகள். ஈழத் தமிழனின் வலிகள் இனி இந்த உலகினை அதிர வைக்கட்டும். தொடர்ந்து எழுதுவோம். கவிதையின் ஒலிவடித்தைக் கேட்பதற்கு தொடக்கத்தில் உள்ள கவிதையருகே செல்லுங்கள். கேட்டுக் கொண்டே மீண்டும் ஒருமுறை கவிதையைப் படிக்கலாம். இந்தக் கவிதையின் ஒலிவடிக் குரலுக்குச் சொந்தகாரர் அப்துல் ஐபார் அவர்கள். அவருக்கும் எம் ஈழத் தமிழர்கள் சார்பில் ஆயிரம் நன்றிகள்

Link to post
Share on other sites

வலைப்பூ உலகத்திற்கும் எடுத்து சென்றுள்ளோம்.....இது போல் பல ஆக்கங்கள் வர வேண்டும்...

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்கள் எழுது்துக்களும் எண்ணங்களும் மேலும் பலம் சேர்க்க வாழ்த்துக்கள்!!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வலியை எழுத உங்களால் முடிகிறது.

வலிகளை எழுத உங்களால் முடியவில்லை.

வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

ஆளும் கட்சிகள்

ஆட்சி இழந்தாலும்

அனைத்துக் கட்சிகள்

கூட்டம் நடந்தாலும்

தமிழகம் முழுவதும்

கடைகள் மூடப்பட்டாலும்

திரையுலகமும் திரண்டு

பேரணியில் சென்றாலும்

இலக்கியத் தோப்பினில்

எரிமலை எழுந்தாலும்

தனித் தனியாக நீங்கள்

உண்ணாவிரதம் இருந்தாலும்

எப்போதும் உங்களை

நெஞ்சிலே சுமக்கின்றோம்

தணியாத தாகமாய்

விடுதலை கேட்கிறோம்!

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

உங்கள் எழுச்சியால்

எங்கள் நெஞ்சு நிறைகிறோம்!

நீட்டியுள்ள நேசக்கரத்தை

உறுதியாய்ப் பற்றுகின்றோம்!

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

-தமிழன், நோர்வே

உணர்ச்சிபூர்வமான கவிதை.

உரியவர்கள் உணர்வார்கள் என நம்புவோம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வாசகி உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி செய்கின்றேன்.

உங்கள் கருத்துக்கு நன்றிகள்

மண் மணம் வீசும் மல்லிகை வாசத்திற்கு எனது நன்றிகள்.

தமிழ்சினிமா இணையத்தளமும் எனது கவிதையை தங்கள் தளத்தில் இணைத்துள்ளது.

http://www.tamilcinema.com/CINENEWS/Hotnew...ber/201008d.asp

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வலியை எழுத உங்களால் முடிகிறது.

வலிகளை எழுத உங்களால் முடியவில்லை.

வாழ்த்துக்கள்.

'வலியை எழுத உங்களால் முடிகிறது.

வழிகளை எழுத உங்களால் முடியவில்லை.' என்கிறாரா?

நோர்வே தமிழனிடம் ஒரு கேள்வி! :)

'தட்டிவிட்டு வலியின் வதையோலம்

வானைப் பிளக்கும்

கண்ணீர்த் துளிகள் கடலாகும்

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!'

இந்த பகுதியில் உள்ள முதலாவதுது வரி சரியா? அப்படித்தான் எல்லா தளங்களிலும் உள்ளது. ஆனால் எனக்குத்தான் தென் பொருள் புலப்படவில்லை. ஆகவே, கீழ்க் கண்டவாறு சிறு திருத்தம் செய்தேன்.. பொருத்தமாகத்தான் உள்ளது. ஆனால் எது சரி என்பதை எழுதியவர்தான் சொல்லணும்.

'தட்டிவீட்டு வேலியின் வதையோலம்

வானைப் பிளக்கும்

கண்ணீர்த் துளிகள் கடலாகும்

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!'

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

'வலியை எழுத உங்களால் முடிகிறது.

வழிகளை எழுத உங்களால் முடியவில்லை.' என்கிறாரா?

இப்பிடி உசுபேத்தி உசுப்பேத்தியே சோலியை முடிச்சிடுவீங்க போல. :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சோழியான் அண்ணா, உங்களுக்கு ஒரு குழப்பமும் வேண்டாம். நான் எழுதியிருப்பது சரியானதே.

நோர்வே தமிழனிடம் ஒரு கேள்வி! :)

'தட்டிவிட்டு வலியின் வதையோலம்

வானைப் பிளக்கும்

கண்ணீர்த் துளிகள் கடலாகும்

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!'

தலையில் செல் வந்து விழும்

தட்டிவிட்டு வலியின் வதையோலம்

வானைப் பிளக்கும். :blink:

இந்த பகுதியில் உள்ள முதலாவது வரி சரி அப்படித்தான் எல்லா தளங்களிலும் உள்ளது.

Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

PaaraddukkaL thamz, unnudaiya kavithai Aananthavikadanil pirasarakiyuLathu

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ்வானம்! சில நாட்களுக்கு முன் நான் ஒரு நன்பர் வீட்டில் இருந்தபொழுது ஐ.பி.சியில் அப்துல்ஜபாரின் உரை போய்க்கொண்டிருந்தது. இறுதியில் அவர் இப் பாடலைக் கூறிமுடித்தார். நன்றாயிருக்கிறதேயென நினைத்தேன். இங்குதான் அதன் நதிமூலம் அறிந்தேன். தொடருங்கள் வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்......தமிழ்வானம் நன்றிகள்,.........

Link to post
Share on other sites

வலிகள் உன்னையும் வல்லவனாக்கும்

வாழ்க்கையும் உன்னைத் தேடி நோக்கும்

உலகம் உன்னைத் திரும்பிப் பார்க்கும்

உதவாதவன் என்ற சொல்லைப் போக்கு.

வீழ்வது மட்டும் வாழ்க்கையில்லை

மீள்வதும் எமக்கு உரிமைதானே.

சாவதைக் கண்டு பதைபதைத்தால்

வாழ்வதற்கேது உரிமை நமக்கு

சோர்வது எல்லோரின் உணர்வுதான்

சேர்த்;திடாதே உந்தன் உணர்வில்தான்.

காலங்கள் மாற்றத்தின் ஒழுக்கு

கலங்காதே வாழ்க்கை நம்மிடமே,

வலியைப் பொறு

வாழப் பழகு

வாழ்ந்துபார் நீயும்

ஈழத்மிழனாய்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள, ஜெயபாலன் அண்ணா, சுவி, புத்தன் மற்றும் இறைவனுக்கும் எனது நன்றிகள். நான் என்ன காரணத்திற்காக இக் கவிதையினை எழுதினேனோ அதற்கான பலன் தமிழ்நாடு எங்கும் கிடைத்திருப்பது மகிழ்வாக இருக்கின்றது.

நான் தொடர்ச்சியாக எம் மக்களினுடைய வாழ்க்கை தொடர்பான வலிகளின் தேடல்களை நோக்கிப் பயனித்துக் கொண்டிருப்பதால் உடனடியாக இங்கே உங்களுடைய பதிவுகளுக்கு பதில் அளிக்க முடியாமல் உள்ளது. புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றேன்.

இறைவன்:

வலிகள் தாங்கும் வலிமை வளர்ப்போம்

வெடிகள் கேட்கும் பூமியை வெல்வோம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னொரு நல்ல சேதி..

தோழரில் இந்தக்கவிதை இவ்வார ஆனந்த விகடனில் வெளிவந்துள்ளது. கேள்வியும் நானே பதிலும் நானே என்ற பகுதியில் ஈழம்? என்ற கேள்விக்கு பதிலாக இந்தக்கவிதை இடம்பெற்றுள்ளது. மகிழ்ச்சியுடன் பாராட்டுகிறேன் தோழரே!

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • மட்டக்களப்பு கடல் பகுதியில் இறந்து கரையொதுங்கும் கடல்வாழ் உயிரினங்கள்    6 Views மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் 3 கடல் ஆமைகளும் ஒரு டொல்பின் மீனும் இன்று  கரையொதிங்கியுள்ளது. இன்னும் பல ஆமைகள் கடலில் மிதந்து வருவதாகதாக இன்று கடல் தொழிலுக்கு சென்று திரும்பிய மீனவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 21 ஆம் திகதி எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள்  கப்பலில் தீ பரவியதிலிருந்து இதுவரை 40 இற்க்கும் மேற்பட்ட கடலாமைகளின் உடல்களும் 05 டொல்ஃபின்களின் உடல்களும் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கரையொதுங்கியுள்ளன. கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள், கடல் சுழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் உட்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டதுடன், இறந்த நிலையில் கரையொதங்கிய டொல்பின் உள்ளிட்ட கடலாமைகளை பகுப்பாய்விற்காக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கொண்டுசென்றுள்ளனர். இந்நிலையில், தீ விபத்துக்குள்ளான எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் பாதிக்கப்பட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து குப்பைகளை அகற்ற 2021 மே 26ஆம் திகதி ஆரம்பித்த கடற்கரை சுத்தம் செய்யும் பணிகளை கடற்படை ஏனைய பங்கேற்பாளர்களுடன் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. உஸ்வெட்டகெய்யாவ முதல் கெபுன்கொட வரை 9 கிலோமீற்றர் பாதிப்புக்குள்ளான கடற்கரை ஓரங்களில் அமைந்துள்ள உஸ்வெட்டகெய்யாவ, எலெனேகொட, சரக்குவா மற்றும் கெபுன்கொட கடற்கரைப் பகுதிகள் கப்பல் குப்பைகளால் பெரிதும் மாசடைந்துள்ளன என கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் அந்தக் கடலோரப் பகுதிகளில் கடற்படை மேற்கொண்ட துப்புரவு முயற்சிகளிலிருந்து தீ விபத்துக்குள்ளான கப்பலிலிருந்து வெளியேறிய 1500 தொன்களுக்கும் அதிகமான குப்பைகள் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.       https://www.ilakku.org/?p=52768      
  • கோவிட் -19 தடுப்பூசி வினைத்திறனும், எமது பங்கும் -காருண்யா  335 Views இக்கட்டுரையில் வரும் கணிப்பீடுகள் மே மாதம் 31ஆம் திகதிக்கு உட்பட்டவைகள்.  இன்றைய உலகை ஆட்டிப் படைக்கும் ஒற்றைக் காரணியாக விளங்கும் கோவிட் -19 நோயின் தாக்கம் எல்லோராலும் உணரப்பட்டு வருகின்ற தருணமிது. இவ்வேளையில் எதிர்பார்த்தது போலவே இந்த நெருக்கடிக்கான தற்காலிக தீர்வாக கோவிட்-19 இற்கான தடுப்பூசிகள் மட்டுமே விளங்குகின்றன என்பதுவும் மறுக்க முடியாதது. இவ்வருடம் ஜூன் 10ஆம் திகதி வரை உலகெங்கும் 2,156,384,616 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கணிப்பிடுகிறது. அதாவது  இரண்டு பில்லியனுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. ஒவ்வொரு தனி நபரும் இரண்டு தடுப்பூசிகள் பெற வேண்டுமாயின்,  உலக சனத் தொகையில் 14% மானவர்கள் மட்டுமே தடுப்பூசி கிடைக்க பெற்றுள்ளனர். இந்த நோயின் பரவல் தன்மையை தவிர்க்கும் வகையில் குறைந்தது 70-85% மான மக்கள் இத்தடுப்பூசிகளை பெற்றிருக்க வேண்டும் என மருத்துவ ஆய்வுகள் எதிர்வு கூறுகின்றன. அவ்வாறாயின் இந்நிலையை எட்ட இன்னும் ஐந்து தொடக்கம் ஆறு மடங்கு நாட்கள் அல்லது இரண்டரை வருடங்கள் செல்லலாம். எனினும் இயற்கையாக நோயுற்ற 1.7 பில்லியன் மக்களின் நோயெதிர்ப்பு வல்லமையுடன் குறைந்தது 30% மான நோயேற்படாதவர்கள்  தடுப்பூசியை பெற்று கொள்ளும் போது கோவிட்-19இன் இந்த தாக்கம் குறைவடையும் வாய்ப்பு உள்ளது. உதாரணமாக இன்று வரை இஸ்ரேல் 63% மான மக்களுக்கும், பிரித்தானியா 60% மானவர்களுக்கும், அமெரிக்கா 51% மானவர்களுக்கும் தடுப்பூசி வழங்கியதன் மூலம் தமது நாடுகளின் கோவிட் -19 நோயாளர் வீதத்தை முறையே 99.8%, 94%, 92.5% வீதத்தால் குறைவடைய செய்துள்ளமை தடுப்பூசிகளின் வினைத்திறனுக்கு எடுத்துக் காட்டாக விளங்குகின்றன. மேலும் உலகளாவிய தொற்று வீதமும் 52% வீழ்ச்சி அடைந்துள்ளது. அத்துடன் இந்த நாடுகளில் கோவிட-19 காரணமான இறப்பு வீதம் 90% இனால் குறைவடைத்துள்ளதுடன், உலகளாவிய இறப்புக்கள் 24% குறைவடைந்து உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. எனவே உலக மக்கள், மற்றும் நாடுகள் விழிப்படைந்து தடுப்பூசி ஏற்றப்படும் வீதத்தினை விரைவாக அதிகரிக்க வேண்டும். போதியளவு உற்பத்தியும், விநியோகமும் இல்லாமையால் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதில் பல நாடுகள் சிரமப்படும் வேளையில், சில நாடுகள் சில தடுப்பூசி வகைகளை கொள்வனவு செய்து விட்டு அல்லது கொள்வனவு ஒப்பந்தங்களை செய்துவிட்டு மறுப்பதும், உரிய முறையில் விநியோகிக்க முடியாமல் காலாவதி ஆக்கி விரயம் செய்வதும் தொடர்வது கவலைக்கு உரியது. குறிப்பாக பின்தங்கிய நாடுகளைச் சேர்ந்தவர்களின் நிலை நிதி வளம் இல்லாமையால் கைக்கெட்டியும் வாய்க்கெட்டாத நிலையாகவே தொடர்கிறது. அதிலும் தடுப்பூசிகள் தொடர்பான வதந்திகள் நிலைமையை மேலும் மோசமாக்கி வருவதும் கவலைக்குரியது. இந்நிலையில் தடுப்பூசிகள் பற்றியும், அவற்றின் தயாரிப்பு, விலை, கிடைக்க கூடிய அளவு உலகளாவிய தடுப்பூசி வளங்களில் உள்ள சிக்கல்களை கடந்து நிலைமையை வெற்றி கொள்வது எப்படி? புதிய வைரசு உருமாற்றங்களை தவிர்ப்பது எப்படி என்பன பற்றி நாம் ஆய்ந்து அறிவது முக்கியமானதாக உள்ளது. உலகெங்கும் பல்வேறு நாடுகள் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்ற போதும் இன்றளவும் 287 தடுப்பூசி உற்பத்தி முயற்சிகள் உலக சுகாதார நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 185 முதல் படிநிலை ஆய்வுகளும் 102 இரண்டாம் மனித பரிசோதனை ஆய்வுகளும் தொடர்கின்றன. இவற்றுள் 19 வகையான தடுப்பூசிகள் மட்டும் அவசர பாவனைக்கான அனுமதி ஆய்வுப் பட்டியலில் உள்ளன. அவற்றுள் 8 வகையான தடுப்பூசிகள் மட்டுமே அவசர பாவனைக்காக அனுமதி பெற்றுள்ளன அவையாவன, பைசர், அஸ்ட்ரா செனிகா (ஐரோப்பிய, மாறும் கொரிய வகை), கோவிசில்ட் (இந்தியா), ஜோன்சன், மொடெர்னா, சினோபார்ம் (சீனா) ஆகியனவாகும். இவற்றுடன் ஸ்புட்னிக் ஏ (ரசியா) அவசர பாவனைக்கு உட்படுத்தப் பட்டாலும் இன்னமும் உலக சுகாதார நிறுவனத்தின் பூரண அனுமதிக்கான ஆவணங்களுக்காக காத்திருக்கிறது. இந்நிலையில் பின்தங்கிய நாடுகளுக்கான தடுப்பூசியைப் பெற்று வழங்கவென உலக சுகாதார நிறுவனம், சிறுவர்களுக்கான ஐ. நா அமைப்பு (யுனிசெப்), உலக தடுப்பூசி வளங்கள் இணையம் (GAVI) மற்றும் நோய் பரம்பல் தவிர்ப்பு தயாரிப்பு முன்னெடுப்பிற்கான உலக கூட்டமைப்பு (CEPI) என்பன இணைந்து கோவாக்ஸ் வசதி எனும் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றன. இதன் மூலம் 92 நடுத்தர மற்றும் பின்தங்கிய நாடுகளுக்கு 2 பில்லியன் தடுப்பூசிகளை குறைந்த விலையில்  பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் கோவாக்ஸ் திட்டம் ஈடுபட்டுள்ளது. தற்போதைய நிலையில் இதன் அளவு 3.8 பில்லியன் வரை உயரலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 81 மில்லியன் தடுப்பூசிகள் 131 நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதற்காக இதுவரை 78 முன்னேறிய நாடுகள் உதவ முன் வந்துள்ளமை உலகளாவிய மனிதாபிமான உதவித் திட்டங்களில் ஓர் பெரும் மாற்றமாகவே கருதப்படுகிறது. இதன் மூலம் உலகெங்கும் குறைந்தது 20% மான அதிக தாக்கத்தை எதிர் கொள்ளும் மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்க முடியும் என்றும் இதனால் நோய் பரம்பல் மற்றும் இறப்பு வீதத்தை வெகுவாக குறைக்கலாம் என்றும் உலக சுகாதார நிறுவனமும் அதன் கூட்டு நிறுவனங்களும் நம்புகின்றன. இன்று வரை உலகெங்கும் 13.6 பில்லியன் தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கான செயல் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. இவை சீராக இடம்பெறுமாயின் இவ்வருட இறுதிக்குள் உலகின் தேவைக்கேற்ப தடுப்பூசிகள் தயாராகி விடும். எனினும் நாடுகளின் அரசியல் தலையீடும், அசமந்தப் போக்கும், மக்களிடையேயான விழிப்புணர்வு இன்மையும் தடுப்பூசி வழங்கல் வீதத்தினை பாதித்து வருவது கவலைக்கு உரியதாகும். இந்நிலைக்கு பொருளாதார சரிவும், மலின அரசியல் செய்யும் நாடுகளின் தலைமைகளும், உரிய அறிவியல் ஆதாரங்களற்ற செய்திகளை பிரசுரிக்கும் ஊடகங்களும் குறிப்பாக சமூக ஊடக வலைத் தளங்களும் தனியாரினால்  உரிய புள்ளி விபரங்கள் மற்றும் விஞ்ஞான நிகழ் தகவுகள் பற்றிய தெளிவின்றி பரப்பப்படும் வதந்திகளும் காரணமாக அமைவது மனிதர்களாகிய நாம் வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயமாக இந்த நூற்றாண்டிலும் தொடர்கிறது. இதனை தகர்க்க அறிவார்ந்த இளைய சமூகம் நாடளாவிய விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக அரச ஒழுங்கமைப்பு குறைபாடுகளை சுட்டிக் காட்டவும், அதற்கான மாற்று தொண்டு அடிப்படையிலான செயற்றிட்டங்களை ஒழுங்கமைக்க வேண்டும். மேலும்  சமூக வலைத் தளங்களினூடும், ஊடகங்கள் மூலமும் விழிப்புணர்வு கருத்துக்களை பரப்புவதுடன் தம்மாலான நிதி, மனித வலு, நிர்வாக ஒழுங்கு என்பவற்றை ஒழுங்கமைத்து இந்த நோயின் தாக்கத்திலிருந்து தத்தம் நாடுகளை பாதுகாக்க வேண்டியது இளையோரின் கடமை. தனியாக உணவு வழங்கல் செயற்பாடுகளுக்கு சிறிதளவு பணத்தை வழங்கி விட்டு வாழாவிருக்காமல் இதற்கான முன்னெடுப்புகளை இளையோர் தாம் வாழும் நாடுகளிலும் பிற பின்தங்கிய நாடுகளிலும் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக ஈழத் தமிழர் பட்ட துன்பங்களின் மேல் மேலும் வலி கூட்டி நிற்கும் இந்த கோவிட் -19 நோயின் தாக்கத்தில் இருந்து எம் மக்களை காக்கவும், அவர்கட்கான தடுப்பூசிகளை வழங்கவும் தேவையான செயல் திட்டம் ஒன்றை உலக தமிழ் இளையோர் உடன் ஆரம்பிக்க வேண்டும்.     https://www.ilakku.org/?p=52752
  • கரும்புத்தோட்டத்தின் சொந்தக்காரன் யார், எதற்காக நிலம் பயன்பாடின்றி விடப்பட்டிருக்கிறது என்பதை அறிந்தபின்னர் நல்ல காரணங்களின் அடிப்படையில் வெளியார் பயன்பாட்டுக்கு உரிமையாளரின் அனுமதியை கோரி பெறவேண்டும். தனியார் நிலங்களை வெறுமனே விடப்பட்டுள்ள காணிகள் என்பதற்காக அவற்றை அத்துமீறி பயன்படுத்தும் அடாவடித்தனத்திற்கு டக்கிளஸ் என்றுமே ஒரு முன்னுதாரணம். யாழில் சிறீதர் திரையரங்கம் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதா தெரியவில்லை.  சிங்கள பவுத்த இனவெறியாளர்களின் அதே கொள்கைகள், நிலைபாடுகளைத்தான் மாண்புமிகு மீன்பிடி அமைச்சரும் பின்பற்றி வருகிறார். கடலில் காணிபிடிக்க முடியாதென்பதால் தரையில் தனது செயற்பாடுகளை அமைச்சர் சைட் பிசினஸ் ஆக ஆரம்பித்து விட்டார். போதாகுறைக்கு இலங்கை கடலுக்கு இப்போது கஷ்டமான காலமும் கூட. கடலுக்குள் மீன்குஞ்சு விடுறார், ஆமை விடுறார், இரால் விடுறார் இதோ இத்துப்போன பஸ் வண்டிகளையும் கொண்டுபோய் கடலுக்குள் இறக்கியும் விட்டார். அண்மைகாலங்களில் வழக்கதிலும் அதிகமான செய்திகள் படங்களுடன் இணையங்களில்  வெளிவர ஏற்பாடும் செய்கிறார். சிறந்த மக்கள் தலைவனாக ஒரு மாய விம்பத்தை கட்டியெழுப்ப வேறு என்ன வேண்டும்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.