கருத்துக்கள உறுப்பினர்கள் Malalai Posted June 6, 2005 கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted June 6, 2005 2 நாள் வாராவிட்டால் என்ன நடக்குது என்று தெரியாமல் முழிக்காமால் தினமும் வந்தால் நடப்பது என்னவென்று புரியுமல்லவா? என்னை எரித்தால் அப்புறம் யாரு யாழ்க்கு கண்ணீர் கொடுக்கிறது.... :P :P :P :wink: Link to comment Share on other sites More sharing options...
Mathan Posted June 6, 2005 தொடங்கியவர் Share Posted June 6, 2005 என்ன மதன் இப்படி கேக்கிறீர்கள் .. இந்த வயதிலை எப்படி வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கிறது என்று ஒரு கேள்வி எழுகிறது என்றால் என்ன அர்த்தம்? ஏதோ ஒன்று மனதில் தோன்றுகிறது, அத்தோடு மனதில் பல குழப்பங்கள் நிறைந்திருகலாம்..! அதற்காக பலரின் ஆலோசைனையையும் பலரின் விருப்புக்களையும் தெரிந்து கொள்ளதான் இந்த தலைப்பை இட்டீர்கள் என்று தான் நான் நினைத்தேன். சரி இப்ப களத்தில் முடிவு என்று பார்த்தால் காதலித்து திரிமணம் செய்து சேர்ந்து வாழ்வதாம்... நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்..? அப்படி குழப்பம் ஏதும் இல்லை கவிதன். இவ்வளவு நாட்களாக வாழ்க்கையில் ஒரு முக்கியமான விடயம் குறித்து தீர்மானம் ஏதும் இல்லாமல் களத்தில் திடீரென கேள்வி கேட்டு முடிவு எடுப்பேன் என நினைத்தீர்களா? இதுபோன்ற விடயங்களில் சிந்தனைகள் நாம் வளரும் போதே சேர்ந்து வளர்கின்றன..... திடீரென உருவாவதில்லை. எனக்கு ஒரு கருத்து இருந்து அது ஏன் சரி என்று அதற்கு ஒரு விளக்கம் வைத்திருப்பேன் அல்லவா? அது போல மற்றவர்கள் கருத்தையும் அவர்கள் பல்ல விளக்கத்தையும் அறியலாம் என்றே இந்த தலைப்பை போட்டேனே தவிர இதை வைத்து முடிவு எடுக்க அல்ல, :P Link to comment Share on other sites More sharing options...
Mathan Posted June 6, 2005 தொடங்கியவர் Share Posted June 6, 2005 குளம் அண்ணா களம் வந்து இருக்காரு....வாங்க வாங்க... மாதவா என்ன நடக்குது..களத்து 2 நாள் வராட்டி என்ன நடக்குது எனப் புரியவே மாட்டேங்குது.... :roll: :roll: :roll: :twisted: :P :wink: கவிதன் நான் வாழ்க்கை துணையை எப்படி தேர்ந்தெடுப்பது என்று அறிவதற்காகவே இந்த தலைப்பை போட்டதாக லொள்ளு பண்ணுறார், சில நேரம் இந்த தலைப்பு மந்திரிக்கு உதவிச்சோ தெரியலை :mrgreen: Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறுப்பினர்கள் Malalai Posted June 6, 2005 கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted June 6, 2005 கவிதன் நான் வாழ்க்கை துணையை எப்படி தேர்ந்தெடுப்பது என்று அறிவதற்காகவே இந்த தலைப்பை போட்டதாக லொள்ளு பண்ணுறார், சில நேரம் இந்த தலைப்பு மந்திரிக்கு உதவிச்சோ தெரியலை :mrgreen: ஓ அப்படியா? அது எனக்கு தெரியது...சரி யாருக்கோ உதவியிருக்கே..அப்ப நல்லது தானே... :P :P :wink: Link to comment Share on other sites More sharing options...
இளைஞன் Posted June 7, 2005 Share Posted June 7, 2005 தனக்கு விருப்பமான துணையை தானே தேர்ந்தெடுத்து சேர்ந்து வாழ்தல் பொருத்தமானது. இது எனது வாழ்வு மீதான எனது விருப்பம். Link to comment Share on other sites More sharing options...
Mathan Posted June 7, 2005 தொடங்கியவர் Share Posted June 7, 2005 ம் திருமணம் சேர்ந்து வாழ்தலுக்கு முன்பா பின்பா? Link to comment Share on other sites More sharing options...
இளைஞன் Posted June 7, 2005 Share Posted June 7, 2005 அப்படியென்றால் திருமணம் என்பது சேர்ந்து வாழ்தல் இல்லையா? Link to comment Share on other sites More sharing options...
Mathan Posted June 7, 2005 தொடங்கியவர் Share Posted June 7, 2005 லொள்ளு பண்ணாதீங்க நான் கேட்டது உங்களுக்கு புரியலையா? இதில் எது என்று கேட்டேன், 1) காத்லித்து திருமணம் செய்து சேர்ந்து வாழ்தல் 2) காதலித்து சேர்ந்து வாழ்ந்து திருமணம் செய்தல் Link to comment Share on other sites More sharing options...
kuruvikal Posted June 7, 2005 Share Posted June 7, 2005 எப்படியாவது வாழ்ந்திட்டுப் போங்களன்...சும்மா ரைம வேஸ்ட் பண்ணாம...! அதுதான் நாகரிகம் ஆச்சே...! :wink: :P :idea: Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறுப்பினர்கள் stalin Posted June 7, 2005 கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted June 7, 2005 அப்படியென்றால் திருமணம் என்பது சேர்ந்து வாழ்தல் இல்லையா? சேர்ந்து வாழ்தலோ இல்லையோ தெரியாது சொத்துடமையை பாதுகாக்க என்பது தெரியும் Link to comment Share on other sites More sharing options...
இளைஞன் Posted June 7, 2005 Share Posted June 7, 2005 லொள்ளு பண்ணாதீங்க நான் கேட்டது உங்களுக்கு புரியலையா? இதில் எது என்று கேட்டேன், 1) காத்லித்து திருமணம் செய்து சேர்ந்து வாழ்தல் 2) காதலித்து சேர்ந்து வாழ்ந்து திருமணம் செய்தல் ஈர்ப்பு > நட்போடு பழகல் > நட்பில் புரிந்துணர்வு வளர்த்தல் > ஒன்றிணைந்து வாழ்தல் > நேசித்தல் (காதலித்தல்) எனக்குப் போதுமானதாக நான் கருதுகிறேன். திருமணம் என்பது எனக்கு அவசியம் அற்றதாகப் படுகிறது (அதாவது இந்த சடங்குகள், சம்பிரதாயங்கள், சட்டங்கள்). ஆனால் மதன் நான் கேட்ட கேள்விக்கு பதில் என்ன? திருமணம் செய்தல் என்பது சேர்ந்து வாழ்தல் இல்லையா? அதுவும் சேர்ந்து வாழ்தல் தானே? அங்கு சடங்கு சம்பிரதாயங்கள் சட்டங்கள் என்பன அதற்கான அனுமதியாக அமைகின்றன. காதல் திருமணம்= தானே தன் துணையைத் தேர்ந்தெடுப்பது. (ஏனென்றால் காதலைக் கூட தன்பாட்டுக்கு யாரும் வரவிடுவதில்லை, வலுக்கட்டாயமாக நீ என்னைக் காதலி நான் உன்னைக் காதலிக்கிறேன் என்பது தான் இன்று அதிகம் நடக்கிறது) பேசிச் செய்தல் = பெற்றோரால் (உறவுகளால்) தேர்ந்தெடுக்கப்பட்டு (அதன் பின் பிடித்திருந்தால்) மணமுடித்தல். சரி பிறகு வந்து மிகுதியை எழுதுகிறேன். சரியா? Link to comment Share on other sites More sharing options...
இளைஞன் Posted June 7, 2005 Share Posted June 7, 2005 சேர்ந்து வாழ்தலோ இல்லையோ தெரியாது சொத்துடமையை பாதுகாக்க என்பது தெரியும் Link to comment Share on other sites More sharing options...
kuruvikal Posted June 7, 2005 Share Posted June 7, 2005 ஈர்ப்பு (பார்வை மற்றும் பெரோமோன்) > நட்போடு பழகல் > நட்பில் தேவைக்காக புரிந்துணர்வு வளர்த்தல் > ஒன்றிணைந்து கூடி வாழ்தல் > குட்டிபோடல்>.... இதுதான் சாச்சா...விலங்கு நடத்தை...! - நாகரிக வளர்ச்சிக்கு முதல் மனிதன் செய்ததும் இதுதான்...! :wink: :P :idea: Link to comment Share on other sites More sharing options...
kuruvikal Posted June 7, 2005 Share Posted June 7, 2005 ஈர்ப்பு (பார்வை மற்றும் பெரோமோன்) > நட்போடு பழகல் > நட்பில் தேவைக்காக புரிந்துணர்வு வளர்த்தல் > ஒன்றிணைந்து கூடி வாழ்தல் > குட்டி போடல்>.... இதுதான் சாச்சா...விலங்கு நடத்தை...! - நாகரிக வளர்ச்சிக்கு முதல் மனிதன் செய்ததும் இதுதான்...! :wink: :P :idea: Link to comment Share on other sites More sharing options...
வசி_சுதா Posted June 7, 2005 Share Posted June 7, 2005 என்ன பேசிக்கிறாங்க இவங்க? :roll: Link to comment Share on other sites More sharing options...
வெண்ணிலா Posted June 7, 2005 Share Posted June 7, 2005 என்ன பேசிக்கிறாங்க இவங்க? :roll: தமிழில் தான் பேசுகிறார்கள். :P Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறுப்பினர்கள் poonai_kuddy Posted June 7, 2005 கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted June 7, 2005 குருவியண்ணாக்கு சனித்தோசமாம். யாராவது பரிகாரம் பண்றதுக்கு பொம்பிளையள் இருந்தால் விண்ணப்பிக்கலாந்தானே? :roll: Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறுப்பினர்கள் stalin Posted June 7, 2005 கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted June 7, 2005 குருவியண்ணாக்கு சனித்தோசமாம். யாராவது பரிகாரம் பண்றதுக்கு பொம்பிளையள் இருந்தால் விண்ணப்பிக்கலாந்தானே? :roll: பூனைக்குட்டி குருவிகளின் சனித்தோசம் பற்றி கதைக்கேலே---- பொதுவாக அறிதல் நோக்குடன் கேட்கறன் சனிதோசம் உள்ளவர்களுக்கும் பெண்களுக்கும் என்ன சம்பந்தம் அப்படி சனிதோசம் தீரும் என்பது உண்மையா-ஸ்ராலின் Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறுப்பினர்கள் poonai_kuddy Posted June 7, 2005 கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted June 7, 2005 யாருக்குத் தெரியுமண்ணா எங்கட அதிமேதாவியளுக்கு சிலநேரம் அதப்பற்றி தெரிஞ்சிருக்கும். அவைதான் வந்து சொல்லோணும். வாழ்க்கத் துணையத் தேர்ந்தெடுக்கேக்க செவ்வாத் தோசம் சனித்தோசம் யூபிட்டர் தோசம் இபஇப புதுசா அங்கால ஒரு கிரகம் கண்டுபிடிச்சாங்கள் அதுக்கென்ன பெயர் அந்த தோசம் எல்லாம் பாத்துத்தானே கட்டுறவை. தனக்கு பிடிச்சவளோட அரசாங்கத்தில போய் பதிஞ்pட்டு சந்தோசமா வாழுறதுக்கு உதுகள் வேற வேலையில்லாமல் என்னென்னவோ எல்லாம் செய்யுதுகள். :roll: Link to comment Share on other sites More sharing options...
Mathan Posted June 7, 2005 தொடங்கியவர் Share Posted June 7, 2005 ஈர்ப்பு (பார்வை மற்றும் பெரோமோன்) > நட்போடு பழகல் > நட்பில் தேவைக்காக புரிந்துணர்வு வளர்த்தல் > ஒன்றிணைந்து கூடி வாழ்தல் > குட்டி போடல்>.... இதுதான் சாச்சா...விலங்கு நடத்தை...! - நாகரிக வளர்ச்சிக்கு முதல் மனிதன் செய்ததும் இதுதான்...! :wink: :P :idea: நாகரீக வளர்ச்சிக்கு பிறகு? Link to comment Share on other sites More sharing options...
Mathan Posted June 7, 2005 தொடங்கியவர் Share Posted June 7, 2005 என்ன பேசிக்கிறாங்க இவங்க? :roll: நீங்கள் எப்படி என்று சொல்லுங்களேன் Link to comment Share on other sites More sharing options...
Mathan Posted June 7, 2005 தொடங்கியவர் Share Posted June 7, 2005 ஈர்ப்பு > நட்போடு பழகல் > நட்பில் புரிந்துணர்வு வளர்த்தல் > ஒன்றிணைந்து வாழ்தல் > நேசித்தல் (காதலித்தல்) எனக்குப் போதுமானதாக நான் கருதுகிறேன். திருமணம் என்பது எனக்கு அவசியம் அற்றதாகப் படுகிறது (அதாவது இந்த சடங்குகள், சம்பிரதாயங்கள், சட்டங்கள்). ஆனால் மதன் நான் கேட்ட கேள்விக்கு பதில் என்ன? திருமணம் செய்தல் என்பது சேர்ந்து வாழ்தல் இல்லையா? அதுவும் சேர்ந்து வாழ்தல் தானே? அங்கு சடங்கு சம்பிரதாயங்கள் சட்டங்கள் என்பன அதற்கான அனுமதியாக அமைகின்றன. காதல் திருமணம்= தானே தன் துணையைத் தேர்ந்தெடுப்பது. (ஏனென்றால் காதலைக் கூட தன்பாட்டுக்கு யாரும் வரவிடுவதில்லை, வலுக்கட்டாயமாக நீ என்னைக் காதலி நான் உன்னைக் காதலிக்கிறேன் என்பது தான் இன்று அதிகம் நடக்கிறது) பேசிச் செய்தல் = பெற்றோரால் (உறவுகளால்) தேர்ந்தெடுக்கப்பட்டு (அதன் பின் பிடித்திருந்தால்) மணமுடித்தல். சரி பிறகு வந்து மிகுதியை எழுதுகிறேன். சரியா? பதிலுக்கு நன்றிகள் இளைஞன். என்னை பொறுத்தவரை ஈர்ப்பு மிக அவசியம். அந்த ஈர்ப்பு ஏன் எப்படி ஒருவர் மேல் ஏற்படுகின்றது என்பதற்கு காரணம் சொல்ல முடியாது. அது ஏற்பட வருடங்களோ மாதங்களோ அவசியமில்லை .... நம்மை அறியாமலே ஏற்படும் உணர்வு அது, அந்த ஈர்ப்பு இருபக்கமும் இருந்து அது புரிந்துணர்வு அதிகமாக காதலாக பரிணமிக்கின்றது. அதன் பின்பு இருவரும் திருமணம் செய்து சேர்ந்து வாழலாம் என்பது எனது எண்ணம். இதில் மனமொத்த பின்பு திருமணம் எனும் சடங்கு அடையாளம் அவசியமில்லை என்றும் என்னை பிற்போக்கு வாதி என்றும் நீங்கள் சொல்லலாம். ஆனால் எனக்கு மனமொத்த பின்பும் அதை சட்ட ரீதியாக பதிவு திருமணம் செய்யவும் நமது தமிழர் கலாச்சார முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்யவும் பிடித்திருக்கின்றது, அது தமிழ் கலாச்சாரமா இல்லையா என்று எனக்கு தெரியாது. இதில் இன்னொரு முக்கிய விடயமும் இருக்கு ..... நிச்சயமாக பெற்றோர்களுடன் பேசி அவர்கள் உணர்வுகளையும் மதித்து சம்மதிக்க வைக்க வேண்டும். மேலே நான் சொன்னது காதலித்து திருமணம் செய்வது குறித்து எனது எண்ணங்களை விருப்பத்தை, ஆனால் அப்படி செய்யவேண்டும் என்பதற்காகவே காதலிக்க முடியாதல்லவா. ஈர்ப்பு தானாக வந்து காதலாக பரிணமிக்கணும், அப்படி காதலாக பரிணமிக்கவில்லல காதல் உணர்வு வரவில்லை என்றால் பெற்றோர் உறவுகள் பார்த்து வைக்கும் பெண்ணை திருமணம் செய்து காதலிக்க வேண்டியதுதான். அப்போது சாதகம் பார்த்துதான் தெரிவு செய்யவேண்டும் என்பதல்ல, அவர்கள் தெரிவு செய்பவர்களுள் நமக்கு பிடித்தவரை பேசி விருப்பத்தத அறிந்த பின்பு திருமணம் செய்யலாம். அவ்வளவு தான் எனது கருத்து Link to comment Share on other sites More sharing options...
KULAKADDAN Posted June 7, 2005 Share Posted June 7, 2005 உது தான் உருப்படிற வழி.......... :wink: 8) :P Link to comment Share on other sites More sharing options...
இளைஞன் Posted June 7, 2005 Share Posted June 7, 2005 பதிலுக்கு நன்றிகள் இளைஞன். என்னை பொறுத்தவரை ஈர்ப்பு மிக அவசியம். அந்த ஈர்ப்பு ஏன் எப்படி ஒருவர் மேல் ஏற்படுகின்றது என்பதற்கு காரணம் சொல்ல முடியாது. அது ஏற்பட வருடங்களோ மாதங்களோ அவசியமில்லை .... நம்மை அறியாமலே ஏற்படும் உணர்வு அது, அந்த ஈர்ப்பு இருபக்கமும் இருந்து அது புரிந்துணர்வு அதிகமாக காதலாக பரிணமிக்கின்றது. அதன் பின்பு இருவரும் திருமணம் செய்து சேர்ந்து வாழலாம் என்பது எனது எண்ணம். இதில் மனமொத்த பின்பு திருமணம் எனும் சடங்கு அடையாளம் அவசியமில்லை என்றும் என்னை பிற்போக்கு வாதி என்றும் நீங்கள் சொல்லலாம். ஆனால் எனக்கு மனமொத்த பின்பும் அதை சட்ட ரீதியாக பதிவு திருமணம் செய்யவும் நமது தமிழர் கலாச்சார முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்யவும் பிடித்திருக்கின்றது, அது தமிழ் கலாச்சாரமா இல்லையா என்று எனக்கு தெரியாது. இதில் இன்னொரு முக்கிய விடயமும் இருக்கு ..... நிச்சயமாக பெற்றோர்களுடன் பேசி அவர்கள் உணர்வுகளையும் மதித்து சம்மதிக்க வைக்க வேண்டும். மேலே நான் சொன்னது காதலித்து திருமணம் செய்வது குறித்து எனது எண்ணங்களை விருப்பத்தை, ஆனால் அப்படி செய்யவேண்டும் என்பதற்காகவே காதலிக்க முடியாதல்லவா. ஈர்ப்பு தானாக வந்து காதலாக பரிணமிக்கணும், அப்படி காதலாக பரிணமிக்கவில்லல காதல் உணர்வு வரவில்லை என்றால் பெற்றோர் உறவுகள் பார்த்து வைக்கும் பெண்ணை திருமணம் செய்து காதலிக்க வேண்டியதுதான். அப்போது சாதகம் பார்த்துதான் தெரிவு செய்யவேண்டும் என்பதல்ல, அவர்கள் தெரிவு செய்பவர்களுள் நமக்கு பிடித்தவரை பேசி விருப்பத்தத அறிந்த பின்பு திருமணம் செய்யலாம். அவ்வளவு தான் எனது கருத்து நிச்சயமாக ஈர்ப்பு என்பது இருக்கத்தான் வேண்டும் மதன். மற்றும்படி அதன்பின்னான சேர்ந்து வாழ்தல் என்பது அவரவர் எப்படி விருப்பம். ஆனால் அதேநேரத்தில் அர்த்தமில்லாதவற்றை அரங்கேற்றுவது முட்டாள்தனம் தர்னே. பதிவுத் திருமணம் சரி. மதரீதியான சடங்குகளூடான திருமணம் என்பது எதற்கு? மற்றும்படி யாரந்த தேவதை யாரந்த தேவதை? Link to comment Share on other sites More sharing options...
Mathan Posted June 7, 2005 தொடங்கியவர் Share Posted June 7, 2005 நிச்சயமாக சேர்ந்து வாழ்த்தல் எப்படி என்பது அவரவர் விருப்பம் தான். அதே போல் நான் எப்படி வாழ வேண்டும் என்பதிலும் எனக்குள் சில எண்ணங்கள் இருக்கின்றன. பதிவு திருமணத்தை நீங்கள் ஏற்றுகொண்டு விட்டிட்டீர்கள் அதனால் அதன் சட்ட ரீதியான அங்கீகாரத்தை அவசியத்தை விளக்க தேவையில்லை. இனி மத ரீதியான திருமணம் குறித்து சொல்கின்றேன். இந்த மத ரீதியான சடங்குகளிற்கு அர்த்தம் இருக்கலாம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவற்றை ஏற்று அந்த வழியில் திருமணம் செய்ய எனக்கு பிடித்திருக்கின்றது. மிக மிக ஆடம்பரமாக இல்லாமல் ஆனால் அவசியமான உறவுகளையும் நட்பையும் சுற்றத்தையும் அழைத்து ஒரு பிராமணரை வைத்து திருமணம் செய்யலாம். வருபவர்களின் வாழ்த்து மனதிற்கு ஒரு மகிழ்சியை அளிக்கின்றது, ஒரு உறவுகளின் ஒன்று கூடலாக ஒரு இனிய நாளாக அமைக்கலாம் அந்த நாள் அமையலாம் தானே? அந்த ஒரு நாள் ஒரு பிராமணர்க்கு 100 பவுண்ஸ் கொடுப்பதால் நான் எவ்விதத்திலும் குறைந்துவிடமாட்டேன், இவை பகுத்தறிவை வைத்து பார்த்தால் கேலிக்குறியதாக இருக்கலாம் ஆனால் எனக்கு பிடித்திருக்கின்றதே என்ன செய்ய ... எண்ணங்கள் தானே மனிதனை ஆட்டி படைக்கின்றது, எனக்கு(எமக்கு) பிடித்ததை செய்து வாழ்க்கையை அனுபவித்து சுற்றமும் நட்பும் நாமும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் அதுவே எனது எண்ணம், இது பிற்போக்காயிருந்தாலென்ன முற்போக்காயிருந்தாலென்ன? யாரந்த தேவதையா தெரிந்தால் நிச்சயம் சொல்கிறேன் இளைஞன். உங்களுக்கு சொல்லாமலா? Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.