Jump to content

www.கந்தப்பு.com.au....!!


Recommended Posts

www.கந்தப்பு.com.au....!!

imagesgc0.jpg

Fishing போவோமா....??

எல்லாருக்கும் ஜம்முபேபியின் வண்ண தமிழ் வணக்(கம்).. :D அவுஸ்ரெலியாவின் முதல்தர இணையதளமான கந்தப்பு.com.au எண்ட இணையதளம் ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில மகிழ்ச்சி..என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறீங்க ஓ இப்படி ஒரு இணையதளத்தையே கேள்விபடல்ல எப்படி இது முதல்தர இணையதளம் ஆனது என்றோ..

வரும் காலத்தில இந்த இணையதளமும் முதல் தர இணையதளம் ஆகலாம் அல்லோ அது தான் இப்பவே போட்டிட்டன் பாருங்கோ,சரி இதற்கு மேலயும் எங்கண்ட இணையதளத்தை பற்றி சொல்ல தேவையில்லை உங்க எல்லாருக்கும் விளங்கி இருக்கும் எண்டு நினைக்கிறன் ஆனபடியா நேரடியா விசயதிற்கு போவோம் என்ன.. :(

அன்னைக்கு இப்படி தான் வேலை முடித்து வந்து எல்லாரும் நடக்கீனம் எண்டு போட்டு நானும் றோட்டில நடக்க தொடங்கினன் காதில பாட்டையும் கேட்டு கொண்டு கொஞ்ச தூரம் நடந்திருக்க மாட்டன் பின்னால் ஒரு குரல் தம்பி இங்க நில்லும் கொஞ்சம் என்று.

யாரப்பா என்னை கூப்பிடுறது என்று திரும்பினால் நம்மன்ட கந்தப்பு அண்ணை நிற்கிறார் எனக்கும் வாய்த்து போட்டு நான் மட்டும் நடக்க தேவல துணைக்கு இன்னொருத்தரும் வந்து சேர்ந்திட்டார் என்று எண்டாலும் என்ன கந்தப்பு அண்ணை இங்கால பக்கம் எண்டு கேட்க. :)

எனக்கு தானே உந்த கொலஸ்ரோல்,பிரசர் எல்லாம் இருக்கு அது தான் டாக்குட்டர் நடக்க சொன்னவர் அது தான் வேலையால வந்து நடக்கிறன்.அது சரி நீர் உங்க என்ன செய்யிறீர் என்று கேட்க.நான் ஒரு நிமிசம் தடுமாறி போட்டன் ஏன் எண்டா நான் நடக்க வந்தது றோட்டால போறவைய பார்க்க அதை சொல்லாமோ?? :D பிறகு ஒரு மாதிரி சமாளித்து கொண்டு இல்ல கந்தப்பு அண்ணை சும்மா நடக்கலாம் என்று வந்தனான் என்று சொல்ல,அப்ப சரி வாரும் நடப்போம் என்று இரண்டு பேருமா நடக்கா தொடங்கியாச்சு..

அப்படியே நடக்கக்க என்ன ஊரில புதினம் என்று அவர் கேட்க,அங்க ஒன்றும் புதிசா இல்ல யாரோ ஜானகபெரகரா போயிட்டார் அது தான் இப்பத்தையான் "லேட்டஸ்" என்று சொல்லி கொண்டு நடக்கிறோம் யாரிண்டையோ கார் வந்து நிற்குது எங்களுக்கு முன்னால.

யாரெண்டு பார்த்தா வேற யார் நம்மண்ட புத்தன் அங்கிள் தான்.காரில இருந்து இறங்கினவர் எப்படி இருக்கிறீங்க எண்டு சுகம் விசாரிக்க உடன கந்தப்பு அண்ணை என்ன உங்கால பக்கம் என்று கேட்க.அது ஒண்டும் பெரிய விசயமில்ல தூண்டில் வாங்க வந்தனான் என்றார். :D

உடன நான் என்ன தூண்டிலோ.??என்னதிற்கு என்று கேட்க..நாங்கள் வழமையா உந்த சனி,ஞாயிற்று கிழமைகளிள பிள்ளைகளோட மீன் பிடிக்க (Fishing) போறனாங்கள் சும்மா சொல்ல கூடாது நல்லதொரு பொழுது போக்கு மட்டுமில்லை மனசிற்கும் ஒரு "ரிலாக்ஸ்" பாருங்கோ.. :D

ஏன் அரைவாசி வெள்ளைகள் சனி,ஞாயிறு என்றவுடன கிளம்பிடுவாங்கள் படகையும் எடுத்து கொண்டு நாங்கள் இன்னும் படகு ஒன்றும் வாங்கல்ல வெறும் தூண்டில் தான்.எனக்கும் வந்த புதிசில எப்படி தூண்டில் போடுறது என்று எல்லாம் தெரியாது இப்ப பழகிட்டன் அப்படியே பிள்ளைகளுக்கும் இப்ப மெது மெதுவா சொல்லி கொடுத்து கொண்டு வாரன் என்று சொல்லி வாயை மூடுறதிகுள்ள.. :unsure:

எண்ட வாய் சும்மா இருக்காது தானே..உடன நான் கேட்டன் ஓமொம் அது எல்லாம் சரி புத்தன் அங்கிள் எனகொரு சந்தேகம் அதாவது நீங்க ஊரில இருக்கக்க எல்லாம் ஏன் உங்களுக்கு இப்படியான பொழுது போக்கு அம்சங்கள் மேல் நாட்டம் ஏற்படவில்லை என்று.

உடன மனிசனிற்கு கோபம் வந்திட்டு போல,உம்மண்ட உப்படியான சந்தேகங்களுக்கு எல்லாம் விடை சொல்ல ஏலாது இப்படியே நீங்களும் உருபடமா மற்றவனையும் உருபட விடமாட்டியள் என்று ஏசி விட்டு நான் போயிற்று வருகிறேன் என்று சொல்லி அவர் கிளம்ப.. :D

உடன கந்தப்பு அண்ணை ஏன் இப்ப உமக்கு இந்த தேவை இல்லாத சந்தேகம்..??..உவர் மட்டுமா இப்ப கன அவுஸ் "டமிழ்ஸ்" இப்படி தான் திரியீனம் உங்க எல்லா சொகுசும் இருக்கு பிறகு தூண்டில் என்ன எல்லாம் பிடிப்பீனம் என்று சொல்லிய வண்ணம் வீட்டை நோக்கி நடக்கையில்..வானில் நிலா மெல்ல எட்டி பார்த்து தனகுள் சிரித்து கொண்டது.

ம்ம்..இப்படி எல்லாம் மாறின எங்கண்ட டமிழ்ஸ் கல்யாணம் என்று வரகுள்ள மட்டும் அவன் ஊரில எந்த இடம் அவையின்ட பரம்பரை எப்படி என்று விசாரிக்கிறதை மட்டும் விடீனம் இல்லை ஏன் என்று எனக்கு விளங்கள்ள??..உங்க யாருக்காவது தெரியுமோ..??.. :)

மறுபடி அடுத்த நடைபயணத்தின் போது சந்திப்போம்..(மிக விரைவில்).. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கந்தப்பு விண்ட இணையதளம் எண்டு பார்க்க ஓடி வந்தான். வந்து பார்த்தால் வழமைபோல் யமுனாவின்.....................................................

.................................................................................

.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யம்மு பையன் காசு கொடுத்து எனக்கு இணையத்தளம் அமைத்துவிட்டார் என நினைத்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யம்மு பையன் காசு கொடுத்து எனக்கு இணையத்தளம் அமைத்துவிட்டார் என நினைத்தேன்.

நானும் தான். கஸ்டப்பட்டு.. தட்டிப் பார்த்தா.. அப்படியொன்றே இல்லையாம்..! :)

Link to comment
Share on other sites

:)எனக்கென்னவோ ஜம்மு கந்தப்புவை யாரிட்டையோ மாட்டிவிட பொறி வைக்கிற மாதிரிக் கிடக்கு. :unsure: எதற்கும் கந்தப்பு ஏதாவதொரு பத்திரிகையில் இந்த இணையத்தளத்திற்கும் கந்தப்புவிற்கும் சம்பந்தமில்லை என்று ஒரு அறிக்கை விட்டு வைக்கிறது பின்னுக்கு உதவும். :D:)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்ஸ்! இணையத்தளம் மிக நன்று. என்ன கந்தப்புவுக்கு மட்டும் இம்சைத் தளமாக இல்லாதிருந்தால் சரி!!!

Link to comment
Share on other sites

www.கந்தப்பு.com.au....!!

ம்ம்..இப்படி எல்லாம் மாறின எங்கண்ட டமிழ்ஸ் கல்யாணம் என்று வரகுள்ள மட்டும் அவன் ஊரில எந்த இடம் அவையின்ட பரம்பரை எப்படி என்று விசாரிக்கிறதை மட்டும் விடீனம் இல்லை ஏன் என்று எனக்கு விளங்கள்ள??..உங்க யாருக்காவது தெரியுமோ..??.. :blink:

அப்பவும் நல்ல இன மீனா பார்த்து தான் தூண்டில் போடுகினம் போல... :):lol:

Link to comment
Share on other sites

ம்ம்..இப்படி எல்லாம் மாறின எங்கண்ட டமிழ்ஸ் கல்யாணம் என்று வரகுள்ள மட்டும் அவன் ஊரில எந்த இடம் அவையின்ட பரம்பரை எப்படி என்று விசாரிக்கிறதை மட்டும் விடீனம் இல்லை ஏன் என்று எனக்கு விளங்கள்ள??..உங்க யாருக்காவது தெரியுமோ..??.. :)

ஆஹா யம்மு, என்ன அருமையான கதை. பாராட்டுக்கள். உங்களிடமிருந்து இன்னும் அதிகமான கருத்தோடு கூடிய கதைகளை எதிர்பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

அட கடவுளே... நானும் என்னமோ கந்தப்பு என் website க்கும் link கொடுத்திருக்கிறாரே னு உந்த website address அடிச்சு பார்த்து களைச்சிட்டேன்.

ஜம்மு எப்படி தான் இருந்தாலும் நீங்கள் இப்படி கந்தப்புவின் இணையத்தளத்தை ஓவ் செய்திருக்க கூடாது.

கண்ணா தூண்டில் போட்டு மீனை கண்டுபிடிக்கிறது கஸ்டமில்லை ஆனால் உந்த www.கந்தப்பு.com/au கண்டுபிடிக்கிறதுதான் ரொம்ப ரொம்ப கஸ்டம்

Link to comment
Share on other sites

நானும் கந்தப்பு விண்ட இணையதளம் எண்டு பார்க்க ஓடி வந்தான். வந்து பார்த்தால் வழமைபோல் யமுனாவின்.....................................................

................................................................................

.

.......

ஓ..அப்படியோ கறுப்பி அக்கா..!!.. :rolleyes:

நானும் நீங்க எல்லாரும் ஓடி வருவியள் எண்டு தான் அப்படி செய்தனான்..ன் அல்லோ..லோ எப்படி இருந்தது உந்த இணையதளம் கறுப்பி..பி அக்கா..கா.. :D

இந்த இணையதளம் முதல்தரம் ஆகிடும்.. தானே...??..அது எல்லாம் சரி எங்களின்ட இணையதளதிற்கு முதலா வந்திருக்கிறீங்க உங்களுக்கு ஒரு "நோட்புக்" கந்தப்பு தாத்தா தண்ட செலவில வாங்கி தருவார் என்பதனை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறன்..ன்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

யம்மு பையன் காசு கொடுத்து எனக்கு இணையத்தளம் அமைத்துவிட்டார் என நினைத்தேன்.

சா..சா அப்படி எல்லாம் காசு கொடுத்து உங்களுக்கு இணையதளம் அமைப்பனே..னே..??..எண்ட பேரை அல்லோ போடுவன் உது தெரியாதே..தே..??.. :D

என்ன சின்னபுள்ளதனமா இருக்கு..கு.. :D

அப்ப நான் வரட்டா!!

நானும் தான். கஸ்டப்பட்டு.. தட்டிப் பார்த்தா.. அப்படியொன்றே இல்லையாம்..!

நீங்களுமோ..மோ நெடுக்ஸ் தாத்தா..தா..(நெசமா முடியல்ல).. :( எங்களிண்ட இணையதளம் தட்டினா வராது..து அதுவா தானா நெனைத்தா வரும்..ம்... :wub:

ஒன்ற அதில போட மறந்திட்டன்..ன் அது தான் இணைய உலகில் மற்றுமொரு பரிணாமம்..ம் www.கந்தப்பு.com.au..!!.. :)

அப்ப நான் வரட்டா!!

எனக்கென்னவோ ஜம்மு கந்தப்புவை யாரிட்டையோ மாட்டிவிட பொறி வைக்கிற மாதிரிக் கிடக்கு. எதற்கும் கந்தப்பு ஏதாவதொரு பத்திரிகையில் இந்த இணையத்தளத்திற்கும் கந்தப்புவிற்கும் சம்பந்தமில்லை என்று ஒரு அறிக்கை விட்டு வைக்கிறது பின்னுக்கு உதவும்.

வசபண்ணா..ணா..!!

இப்படி இராணுவ இரகசியங்களை எல்லாம் அம்பலபடுத்திறது சரியில்ல சொல்லி போட்டன்..ன்..எங்களுக்கு சுவிஸ்ஸில ஒரு செய்தியாளர் தேவை நீங்க இருக்கிறியளே..ளே..??.. :icon_idea:

வலு கெதியில வசபண்ணாவின்ட பேரிலையும்..ம் ஒரு இணையம் ஆரம்பிக்கனும் போல தான் இருக்கு..கு..!!.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜம்ஸ்! இணையத்தளம் மிக நன்று. என்ன கந்தப்புவுக்கு மட்டும் இம்சைத் தளமாக இல்லாதிருந்தால் சரி!!!

சுவி பெரியப்பாவே சொல்லிட்டார்..ர் பிறகென்ன..ன..இப்படி எங்களிண்ட இணையதளத்தை யார் கூடுதலா புகழீனமோ அவைக்கும் பரிசு இருக்கு சொல்லிபோட்டன்..ன்.. :icon_idea:

சா..சா கந்தப்பு தாத்தா எனி எங்கையோ போக போறார்...(என்ன கந்தப்பு தாத்தா).. :)

அப்ப நான் வரட்டா!!

அப்பவும் நல்ல இன மீனா பார்த்து தான் தூண்டில் போடுகினம் போல...

ம்ம்..நல்ல இன மீனா பார்த்து தான் தூண்டிலோட நிற்கிறவை..வை பார்த்திருக்கிறன்..ன் ஆனா என்ன மீன் மாட்டனுமே பாருங்கோ..கோ.. :rolleyes:

என்ன சொல்லுறன் எண்டு வெளங்குது தானே..னே.. :( மற்றது ஜஸ்மின் அண்ணாவும் அவுஸ்ரெலியாவில் அல்லோ இருக்கிறீங்க..க நீங்களும் உங்களின்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளளாமே..மே..ஆனா எங்க இணையதளத்திள எண்டு சொல்லிபோட்டன்..ன்.. :wub:

எப்படி போட்டன் தூண்டில் ஜஸ்மின் அண்ணாவிற்கு..கு.. :D

அப்ப நான் வரட்டா!!

ஆஹா யம்மு, என்ன அருமையான கதை. பாராட்டுக்கள். உங்களிடமிருந்து இன்னும் அதிகமான கருத்தோடு கூடிய கதைகளை எதிர்பார்க்கிறேன்.

தமிழ் அச்சு அக்கா..கா..!!.. :lol:

நன்றி தங்களின் பாராட்டுகளிற்கு..கு அப்பப்ப நான் நடக்க போகக்க..க கதைகளோட வாரன் என்ன..ன நீங்களும் உங்களின்ட நாட்டில..ல நடக்கின்ற அனுபவங்களை எங்களோட பகிர்ந்து கொள்ளுங்கோ என்ன..ன..!!.. :D

மற்றது..து..!!

நீங்க வந்து Fishing போறதில்லையோ..யோ..?? (நான் போறனான்..ன் ஆனா அதற்கு பொறுமை தேவை எனக்கு அதற்கும் வெகு தூரம் அல்லோ..லோ).. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அட கடவுளே... நானும் என்னமோ கந்தப்பு என் website க்கும் link கொடுத்திருக்கிறாரே னு உந்த website address அடிச்சு பார்த்து களைச்சிட்டேன்.

ஜம்மு எப்படி தான் இருந்தாலும் நீங்கள் இப்படி கந்தப்புவின் இணையத்தளத்தை ஓவ் செய்திருக்க கூடாது.

கண்ணா தூண்டில் போட்டு மீனை கண்டுபிடிக்கிறது கஸ்டமில்லை ஆனால் உந்த www.கந்தப்பு.com/au கண்டுபிடிக்கிறதுதான் ரொம்ப ரொம்ப கஸ்டம்

நீங்களுமோ நிலா அக்கா..கா..!!.. :lol:

ம்ம்..பரவால்ல நல்லா தான் வேலை செய்திருக்குது..து கந்தப்பு தாத்தாவிண்ட இணையதளம்..ம்..எனக்கும் கொஞ்ச நாளா ஒரு ஆசை யாரும் கருத்து எழுத நான் வெட்டணும் எண்டு..டு.. :rolleyes:

போற போக்கை பார்த்தா கந்தப்பு தாத்தாவிண்ட இணையதளம்..ம் எண்ட ஆசையையும் நிறைவேற்றும் போல தான் இருக்கும் :) சரி அதை விடுவோம்..ம்...நீங்களும் தூண்டில் போட்ட அனுபவம் இருக்கோ..கோ நான் கேட்டது காதல் தூண்டில்..ல் இல்ல..ல.. :icon_idea:

மீன் பிடிக்க..க..அது இருகட்டும்..ம்...இவ் சம்பவத்தை பற்றிய உங்கள் எண்ண கருக்களையும் பகிர்ந்து கொள்ளளாமே நிலா அக்கா..கா.. :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அடப்பாவிகளா! நானும் இந்த வெப்சைட் இருக்குதாக்கும் என்று கூகிளில் தேடி களைச்சுப்பொட்டேன். :icon_idea:

Link to comment
Share on other sites

சுவி பெரியப்பாவே சொல்லிட்டார்..ர் பிறகென்ன..ன..இப்படி எங்களிண்ட இணையதளத்தை யார் கூடுதலா புகழீனமோ அவைக்கும் பரிசு இருக்கு சொல்லிபோட்டன்..ன்.. :icon_idea:

சா..சா கந்தப்பு தாத்தா எனி எங்கையோ போக போறார்...(என்ன கந்தப்பு தாத்தா).. :)

அப்ப நான் வரட்டா!!

ம்ம்..நல்ல இன மீனா பார்த்து தான் தூண்டிலோட நிற்கிறவை..வை பார்த்திருக்கிறன்..ன் ஆனா என்ன மீன் மாட்டனுமே பாருங்கோ..கோ.. :rolleyes:

என்ன சொல்லுறன் எண்டு வெளங்குது தானே..னே.. :( மற்றது ஜஸ்மின் அண்ணாவும் அவுஸ்ரெலியாவில் அல்லோ இருக்கிறீங்க..க நீங்களும் உங்களின்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளளாமே..மே..ஆனா எங்க இணையதளத்திள எண்டு சொல்லிபோட்டன்..ன்.. :wub:

எப்படி போட்டன் தூண்டில் ஜஸ்மின் அண்ணாவிற்கு..கு.. :D

அப்ப நான் வரட்டா!!

தமிழ் அச்சு அக்கா..கா..!!.. :lol:

நன்றி தங்களின் பாராட்டுகளிற்கு..கு அப்பப்ப நான் நடக்க போகக்க..க கதைகளோட வாரன் என்ன..ன நீங்களும் உங்களின்ட நாட்டில..ல நடக்கின்ற அனுபவங்களை எங்களோட பகிர்ந்து கொள்ளுங்கோ என்ன..ன..!!.. :D

மற்றது..து..!!

நீங்க வந்து Fishing போறதில்லையோ..யோ..?? (நான் போறனான்..ன் ஆனா அதற்கு பொறுமை தேவை எனக்கு அதற்கும் வெகு தூரம் அல்லோ..லோ).. :D

அப்ப நான் வரட்டா!!

யம்மு, எனக்கும் நிறைய எழுதவேணும் என்று விருப்பம்தான். நேரம்தான் கிடைப்பதில்லை. நான் இன்னும் மீன் பிடிக்கப்போகத் தொடங்கவில்லை. எனக்கு போட்டிலை போய் மீன் பிடிக்கத்தான் விருப்பம். தூண்டில் போட்டுக் காத்திருக்க எனக்கும் பொறுமை எல்லாம் இல்லை. அதாலை போறதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகனே சில வெளிப்படையாக சொல்ல முடியாதவற்றை ஒரு கதையின் மூலம் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறியல் வாழ்த்துக்கள். பலபேர் அவர்கள் மற்றவனிடம் அவன் என்னவென்று பார்ப்பது ஆனால் தங்களும் ஒருவேளை அதிலே பிறந்திருந்தால் தங்கள் மனநிலை எப்பிடி இருக்கும் என்று நினைக்க மறந்துவிடுவார்கள் :rolleyes: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா! நானும் இந்த வெப்சைட் இருக்குதாக்கும் என்று கூகிளில் தேடி களைச்சுப்பொட்டேன். :rolleyes:

நீங்கள் களைச்சுப்போனதை வெளீல சொல்லிப்போட்டியள் ,

நான் களைச்சுப்போய் கமுக்கமாய் இருந்திட்டன் . :o

Link to comment
Share on other sites

அடப்பாவிகளா! நானும் இந்த வெப்சைட் இருக்குதாக்கும் என்று கூகிளில் தேடி களைச்சுப்பொட்டேன்.

ஓ..இணையதளத்தை தேடினியளோ வசி அண்ணா..ணா..!!.. :D

என்ன தான் கூகிளிள தூண்டில் போட்டாலும்..ம் நம்ம தளத்தை கண்டு பிடிக்க முடியாதாக்கும்..ம் மிகவும் இரகசியமாக அப்பப்ப யாழில மட்டும் தான் காணலாம்..ம். :lol:

விளங்கிச்சோ..சோ...(உங்கண்ட பிறந்தநாள் எப்ப எண்டு சொன்னா அதையும் போட்டு விடலாம் காசு எல்லாம் வாங்க மாட்டோம் பாருங்கோ..கோ)... :unsure:

அப்ப நான் வரட்டா!!

யம்மு, எனக்கும் நிறைய எழுதவேணும் என்று விருப்பம்தான். நேரம்தான் கிடைப்பதில்லை. நான் இன்னும் மீன் பிடிக்கப்போகத் தொடங்கவில்லை. எனக்கு போட்டிலை போய் மீன் பிடிக்கத்தான் விருப்பம். தூண்டில் போட்டுக் காத்திருக்க எனக்கும் பொறுமை எல்லாம் இல்லை. அதாலை போறதில்லை.

ம்ம்..நேரபிரச்சினை எனக்கும் தான் பெரிய பிரச்சினையா இருக்கு..கு தமிழ் அச்சு அக்கா முந்தி எல்லாம்..ம் வெயில் தணிய முன்னம் வீட்டு பக்கம் வந்திடலாம்..ம்..இப்ப ஏலாம இருக்கு..கு.. :D

நீங்க நெனைக்கலாம் வெயில் தணிய முன்னம் வந்தா என்ன பிரயோசனம் எண்டு..டு அப்ப தானே வாறவையள பார்க்கலாம் கூட்டமா இருந்து..து.. :) (தனிய பார்க்கிற அளவிற்கு எங்களிண்ட குழுவில யாருக்கும் தைரியம் கெடையாது பாருங்கோ).. :unsure:

இப்ப இப்படியான விசயங்கள் கணிசமான அளவு வீழ்ச்சி கண்டுள்ளது..து அது தான் துக்கம் மற்றும்படி நேரம் போனா தான் என்ன போகாட்டி தான் என்ன..ன.. :D

மற்றது..து..!!

எனக்கும் "போட்டில" போய் மீன் பிடிக்க தான் விருப்பம்..ம் ஆனா என்ன எத்தனையோ தரம் நண்பர்களோட "போட்டில" போயிருக்கிறோம் மீன் பிடிக்கிறற்கு. ஆனா ஒரு நாளும் மீன் பிடித்தது கெடையாது.. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

மகனே சில வெளிப்படையாக சொல்ல முடியாதவற்றை ஒரு கதையின் மூலம் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறியல் வாழ்த்துக்கள். பலபேர் அவர்கள் மற்றவனிடம் அவன் என்னவென்று பார்ப்பது ஆனால் தங்களும் ஒருவேளை அதிலே பிறந்திருந்தால் தங்கள் மனநிலை எப்பிடி இருக்கும் என்று நினைக்க மறந்துவிடுவார்கள் .

ம்ம்..சுப்பு சித்தப்பு..பு..!!.. :unsure:

நீங்க சொல்வது 100 % சரி..ரி :D உங்க கனபேரை அதாவது அவுசில பார்த்திருக்கிறன்..ன் யாரோடையும் வடிவா கதைப்பீனம் பிறகு அவையள்..ள் போனா பெறகு..கு

உவையள் யார்..ர் எண்டு பட்டும் படாம..ம கேட்பீனம்..ம்.. :) இங்க வந்தும் இவையள் திருந்தவில்லை அது தான் வருத்ததிற்குரிய விடயம்..ம் நன்றி சித்தப்பு..பு தங்களின் வாழ்த்திற்கும்..ம் கருத்திற்கு..ம்.. :)

அப்ப நான் வரட்டா!!

நீங்கள் களைச்சுப்போனதை வெளீல சொல்லிப்போட்டியள் ,

நான் களைச்சுப்போய் கமுக்கமாய் இருந்திட்டன் .

ஓ..அப்படியோ தமிழ் சிறி அண்ணா..ணா.. :unsure:

பரவால..ல தேடுற அளவிற்கு வளர்ச்சி பெற்றிட்டுது..து இந்தஇணையதளம்.ம்பிறகென்ன..மட்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடைசி நிமிடத்தில் வந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணையம் போல் சாக்குப் போக்குச் சொல்லாமல் போட்டியில் என்னையும் இணைத்துக் கொண்ட கிருபன்ஜிக்கு நன்றி
    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??   அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  ......🤣🤣🤣
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள்  1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.   3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்  4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்  
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.