Jump to content

பாடகர் மனோகரணும் சிங்களவனும் சேர்ந்து பாடும் பாடல்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம் தமிழர் சும்மாதான் யாதும் ஊரே யாவரும் கேளிர் எண்டுறவை,ஆனா சிங்கள்வன் அப்பிடியில்லை எண்டு சொல்லவாறியளோ,அதுவும் சரிதான் அடிக்கிற கைதான் அணைக்கும் ஆனாப்பிறகு வலிக்குது அழுதிடுவன் எண்டெல்லாம் சொல்லக்கூடாது!

Link to comment
Share on other sites

  • Replies 152
  • Created
  • Last Reply

யாரையாவது அழவைக்கிறதில குறியாயிருங்க. அதுதான் நம் இனமே அழுதே :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

( இந்திய தமிழருக்கு இந்த கொடுமை ஏற்பட முக்கிய காரணமானவர்கள் யாழ்பாண தமிழர்கள் என்பது வெட்கப்பட வேண்டிய உண்மை)

இதில் தாங்கள் கூறுவது இனவாத கருத்து தானே.அது என்ன யாழ்பாண தமிழர் அப்படி ஒரு பிரிவை நீங்கள் தான் உருவாக்கிறீர்கள்..இதை விட வேறு இனவாத (பிரதேசவாத) கருத்து வேண்டுமோ.? இதுவும் வெட்கபட வேண்டிய நிலை தான்.

இலங்கை அரசு பிறப்பு சான்றிதழை இலங்கை தமிழர்,இந்திய தமிழர்,மலே,இலங்கை சோனகர்,இந்திய சோனகர் என்று வேறுபடுத்தி காட்டியதன் காரணம் என்ன.?.சிங்களவர்களை மட்டும் சிங்களவர் என்று போட்டிருக்கிறார்கள்.மேலும் இந்திய தமிழர் இலங்கை தமிழர் என்று பிரித்ததிற்கு யாழ்பாண தமிழர் காரணம் என்று குறிபிட்டீருந்தீர்கள் இலங்கை சோனகர்,இந்திய சோனகர்,மலே என்று பிரித்து குறிப்பிடுவதிற்கு யார் காரணம் என்று தங்களாள் கூற முடியுமா?

தமிழ் பேசும் சோனகரையே சிங்களமாக்கும்

இனவாதக் கருத்து தங்களது எழுத்துகளில் இருப்பது கொடுமை.

அப்படி நினைப்பது அல்லது எழுதுவது தவிர்க்கப்பட வேண்டும்.

"சோனகர்" சிங்கள சோனகராக வருவதை பற்றி எழுதியதில் என்ன இனவதா கருத்து இருக்கிறது? இனி வரும் காலங்களிள் சிங்கள சோனகர் உருவாகல் சந்தர்ப்பம் இருக்கிறது என்று தான் எழுதி இருந்தேன்.

தெற்காசியாவில் சகல (தேசிய இனங்கள்) மொழி பேசுபவர்களிள் சோனகர்கள் உண்டு அதாவது மலையாளம் - கன்னடம் -துளு - மராட்டி - குஜாராத்தி - வங்காள என்று பல மொழி பேசுபவர் மத்தியில் சோனகர் உண்டு.ஆனால் சிங்கள மொழி பேசுபவர் மட்டும் இல்லை.இனி மேல் அந்த மொழியை தாய் மொழியாக கொண்ட சோனகர்கள் உருவாக சந்தர்ப்பம் உண்டு.

சிங்கள சோனகர் உருவாகாமல் விட்டதிற்கு காரணம் இதுவாக இருந்திருக்கலாம்.அந்தியர் (போர்துகேயர்,ஒல்லாந்தர்,ஆங்க

Link to comment
Share on other sites

புத்தன் தலையிடியென்றால் தைலம் தேயும். எங்களை விசராக்காதீர். :)

Link to comment
Share on other sites

வசபண்ணா..ணா..!!. :D

கருணா அங்கிள் அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி தன் போக்கில் மாறவில்லை எண்டு குறிபிட்டிருந்தீர்கள்..ள் எனக்கு வெளங்கவில்லை எத்தகைய போக்கில் இருந்து மாறவில்லை எண்டு ஒருக்கா தெளிவுபடுத்துறீங்களோ..ளோ..??. :)

இன்றைய ரீதியில் அவர் சிங்கள பேரினவாதிகள் தான் கதி என இருக்கிறார்..ர் அப்படி பட்ட அவரின் போக்கு மாறவில்லை எண்டு கூறுவது வேடிக்கையாக தான் இருக்கிறது எண்டு சொல்லாம்..ம். :D

மற்றது..து..!!

அவரை தூற்றுவதால்..ல் எமக்கு எத்தகைய பிரயோசனமும் இல்லை..லை மாறாக அவரை "ஸ்டார்" ஆக்கிறோம்..ம்..(அது எங்கடையளுக்கு வெளங்க வேண்டுமே).. :D

ஜம்மு

உங்களுக்கு வாழைப் பழத்தைத் தந்தால் உரித்துத் சாப்பிடுவியள் என்று நினைச்சன். ஆனால் உரித்துத் தரச் சொல்லி அடம் பிடிக்கிறியள்.

கருணா புலிகள் இயக்கத்திலிருந்த போதும் சரி, தற்போதும் சரி பொதுமக்களைப் பற்றி எந்தவித கவலைகளும் இல்லாது தன் சுயலாபத்தில் தான் கண்ணாயிருந்தார். அப்போதும் கொலைகள், கொள்ளைகள் போன்றவற்றைச் செய்து கொண்்டுதானிருந்தார். இப்போதும் அவற்றைத் தொடருகின்றார். இதனைத் தான் அவரின் குணம் இன்னும் மாறவில்லை என்பதாகக் குறிப்பிட்டேன். சுயலாபத்தின் அடிப்படையில் செயற்படுபவர் சிங்கள அரசிற்கு ஆதரவாகச் செயற்படுவது ஒன்றும் ஆச்சரியமான விடயமில்லையே:.....

ஆனால் இதே தவறுகளை புலிகள் இயக்கத்திலிருந்து செய்த போது எம்மவர் எவரும் அவற்றைக் கண்டு கொள்ளாமல் கருணா அம்மான், கருணா அம்மான் என்று அழைத்து மகிழ்வதிலேயே குறியாகவிருந்தனர். கருணா புலிகளை விட்டு விலகுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் பிபிசி வானொலி கருணா பற்றிய குற்றச் சாட்டுகள் பற்றி தமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது, அவர் கருணா தவறொன்றும் செய்யவில்லை. அவர் மீது வேண்டுமென்றே சிலர் பொய்ப் புகார்களைச் சொல்லுகின்றார்கள் என்றார். அதே தமிழ்ச்செல்வனை கருணா விலகியவுடன் பிபிசி பேட்டி கண்டது, அப்போது தமிழ்ச்செல்வன் கருணா கடந்த 3 வருடங்களாக பல தவவறுகளைச் செய்துள்ளார். அது பற்றி விசாரிக்கவே அவரை வன்னிக்கு அழைத்திருந்தோம். அவர் வரவில்லையென்று கூறினார். இதிலிருந்து உங்களுக்கு என்ன புரிகின்றது??

முதலில் எம்மவர் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பேசுவதையும், தூக்கிப் பிடித்தலையும், தூற்றுவதையும் மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போது தான் தவறு செய்பவனுக்கும் ஒரு பயம் இருக்கும். இல்லையேல் இப்படியே தொடர வேண்டியது தான்.

சிங்கள சோனகர் உருவாகாமல் விட்டதிற்கு காரணம் இதுவாக இருந்திருக்கலாம்.அந்தியர் (போர்துகேயர்,ஒல்லாந்தர்,ஆங்க
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் தலையிடியென்றால் தைலம் தேயும். எங்களை விசராக்காதீர். :D

தலைவா தலையிடி வந்தால் நான் யாழிற்கு தான் வாரனான் தைலம் தெய்பதில்லை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சில சிங்களப் பேரினவாதிகள் போல் நீங்களும் அடுத்தவன் காதிலை நன்றாப் பூ சுற்றுகின்றீர்களா?? எந்தச் சரித்திரத்தில் படித்தீர்கள் போர்த்துகேயர்,ஒல்லாந்தர், ஆங்கிலேயர் வருகையின் முன்பு தமிழ் தான் ஆட்சி மொழியாக இருந்ததென்று. உங்களுக்கென்று தனியாக ஏதாவது சரித்திரம் வைத்திருக்கின்றீர்களா?? போர்த்துகேயர்,ஒல்லாந்தர், ஆங்கிலேயர் வருகையின் முன்பு இலங்கை பல இராசதானிகளாகவே இருந்தது. அதில் தமிழர்களின் இராசதானிகளும் அடக்கம். அடுத்தவரின் கருத்துக்களை முறியடிப்பதாக எண்ணிக் கொண்டு தவறான கருத்துக்களை பரப்ப முயலாதீர்கள்.

வசம்பு நான் எழுதியுள்ளேன் இலங்கையில் கரையோரபகுதிகளிளும்,தென்னிந்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

deleted

ஹலோ ஜீவன் சார்,

தயவு செய்து கீழே இணைப்பில் உள்ள சிங்கள பாடலுக்கான மொழி பெயர்ப்பை தர முடியுமா?

http://au.youtube.com/watch?v=Cxp5WsuaMUo

என்னை மிகவும் கவர்ந்த பாடல் இது.

உங்கள் ரசிகன் கள்ளச்சாமி

Link to comment
Share on other sites

தலைவா தலையிடி வந்தால் நான் யாழிற்கு தான் வாரனான் தைலம் தெய்பதில்லை. :)

மற்றவர்களுக்கு அந்த தலையிடியை கொடுத்துவிட்டு போறீங்கள்? :D

Link to comment
Share on other sites

வசம்பு நான் எழுதியுள்ளேன் இலங்கையில் கரையோரபகுதிகளிளும்,தென்னிந்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இங்க ஏதோ பாட்டுக்கச்சேரியாக்கும் என்று வந்து பார்த்தால் சரித்திரம் போகுது :D

Link to comment
Share on other sites

சரித்திரம் தெரியாமல் பொய்களை அள்ளி விட போய் , உண்மைகளும் பொய்களாகிவிடும். :D

Link to comment
Share on other sites

deleted

ஹலோ ஜீவன் சார்,

தயவு செய்து கீழே இணைப்பில் உள்ள சிங்கள பாடலுக்கான மொழி பெயர்ப்பை தர முடியுமா?

http://au.youtube.com/watch?v=Cxp5WsuaMUo

என்னை மிகவும் கவர்ந்த பாடல் இது.

உங்கள் ரசிகன் கள்ளச்சாமி

சரணம் சாமியாரே

இங்கே உள்ள இணைப்பில் 4வது பாடல் அது.

பாடகர் ஆத்மா லியனகே

http://www.sinhalajukebox.org/cgi-bin/song...amp;artist=A247

லியதம்பரா என்பது ஒரு மலர்.

லிய என்பது பெண் என அர்த்தப்படும்.

லியதம்பரா

பெண் போன்ற உருவ அமைப்பைக் கொண்ட மலர் என சொல்லக்கேட்டதுண்டு.

நான் பார்த்ததில்லை.

ஓக்கிட் மலர் போல் இருக்குமாம்.

எப்போதும் மலர்வதில்லையாம்.

இப்பெயர் சில பெண்களுக்குமுண்டு.

மலர் : தாமரை என அழைப்பது போன்று....... :D

இதோ அதன் கருத்துகள்:

லியதம்பரா மலர் போல நீயா பெண்ணே

என்னை கவர்ந்தாய்

விசம் தரும் மதுத்துளி போல

என் உடலுக்கு நீயா ஓய்வு தந்தாய்

அப்பாவியான என் கண்ணீரைக்கூட

சட்டை செய்யாத - உன்னை

நண்பர்கள் சொல்லியும் கேட்காமல்

பல கோடி கனவுகளோடு

உன்னை எண்ணி வாழ்ந்தேனே

நீ தந்த அன்பு

மரணித்த போதுதானே

நான் உன்னோடு மோதிக் கொண்டேன்

ஒருவர் கெடுதல் செய்தாரேன

மற்றொரு உறவை நாடிச் செல்வது சரிதானா

இதயத்தில் மலர்ந்த உறவை மறந்து - என்னை

வருத்தி விட்டு செல்வதும் முறைதானா

உன் மேல் கொண்ட அன்பினாலேயே

கோபம் கொள்ளும் என் மனம் கூட - உன்னில்

இரங்கம் காட்டவே சொல்கிறதே...

Link to comment
Share on other sites

நான் சந்தித்த பல சிங்களவர்கள் மிகவும் நட்புடன் இருந்திருக்கிறார்கள். இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற ஒரு சிங்களவன் தான் மிகவும் துவேசியாக இருந்தான். அவனுக்கு பல உண்மைகள் இராணுவதத்தில் திரித்துக் கூறப்பட்டுள்ளன. சரி அதைவிடுவோம். கஸ்டப்புடுகின்ற எங்களையெல்லாம் ஏமாற்றிப்பிழைப்பவன் எமது தமிழன்தான். நம்பிக்கைத்துரோகி எமது தமிழன்தான்.

Link to comment
Share on other sites

எமது போராட்ட ஆரம்பத்தில் இப்படிப்பட்ட சில தவறான எண்ணங்களால் பலரை பலியெடுத்தார்கள். அதையெல்லாம் நாங்களும் மௌனமாக ஆதரித்தோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது சரி ஆனால் இந்த பாடலை வைத்து நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்

ஆனால் புலிகள் தான் இதை எதிர்க்கிறார்கள் என்ற ஒரு பரப்புரைக்கு இந்த பாடலை

பயன்படுத்தலாம்

அதுவும் ஒரு பிரபல தமிழ் பாடகர் சேர்ந்து பாடுவது மிகவும் வருத்தத்துக்குரியது

இதை புரியாத யாழ் கள அங்கத்தவர்கள் கூறும் பதில்கள் மிகவும் வருத்தத்துக்குரியது

சில நலன்களுக்காக எமது தமிழ் இனத்தை அளிக்க முயலும் இப்படி பட்ட தேச துரோகிகளை வெளிக்கொண்டுவரவேண்டும் என்பதே என் ஆசை

விக்கிரமபாகு கருணாரட்ன, செனிவரட்ன.. போன்றவர்களும் சிங்களவர்கள் தான். நாம் அவர்களை அரவணைக்கவில்லையா. அவர்கள் எம்மை அரவணைக்கவில்லையா. எத்தனையோ சிங்கள நண்பர்கள் எமது போராட்டத்துக்கு உதவவில்லையா. உதவிக் கொண்டும் இருக்கின்றனர் தானே.

நாளை தமிழீழம் மலர்ந்தால் கூட சிங்கள மக்கள் தமிழீழத்தில் சுதந்திரமாக சம உரிமைபெற்று வாழ விரும்பின் நிச்சயம் அதற்கான வாய்ப்பு அவர்களுக்கு அளிக்கப்படும். தமிழீழ அரசு.. ஒரு இனவாத அரசாக இருக்காது. அதே நேரம் சிங்களப் பேரினவாதத்திற்கு இடமளிப்பதையோ.. அதன் தமிழர் விரோதப் போக்கையோ ஆதரிப்பதாக இதனை அர்த்தப்படுத்தக் கூடாது.

மனோகரன்.. சாதாரண தமிழ் - சிங்கள மக்களிடையேயான புரிந்துணர்வை வளர்க்க நிச்சயம் உதவ வேண்டும். சிங்கள மக்களுக்கு தமிழ் மக்களின் நியாய பூர்வ எதிர்பார்ப்பை தெளிவாக பகையுணர்வை வளர்க்காத வகையில் எடுத்துச் சொல்ல முனைய வேண்டும். அதற்காக அவர்கள் சிங்களப் பேரினவாதிகளின் தமிழர் விரோத செயற்பாடுகளை மறைக்கும் பிரச்சாரத்துக்கு உதவ முனையக்கூடாது. அது தவறானதே.

எமது தமிழீழம் சிங்கள மக்களுக்கோ அவர்களின் தேச இருப்புக்கோ எதிரானதல்ல. எமக்கு எமது பூர்வீகமும் தேசமும் அதன் இருப்பும் எவ்வளவு முக்கியமோ அதேபோல் சிங்கள மக்களின் தேசத்தையும் இருப்பையும் நாம் அங்கீகரிக்கவே செய்கிறோம். அதை சிங்கள மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். அவர்கள் இனவாதிகளின் பேச்சைக் கேட்டு.. இனவாத சிந்தனைக்குள் கட்டுப்பட்டுக் கிடப்பதாலும் கூடத்தான் இப்பிரச்சனை எமக்கு ஒரு விடிவைப் பெற்றுத்தராது நீள்கிறது. சிங்கள மக்களின் மனங்களிலும் நல்ல மாறுதல்கள் வர வேண்டும்.

தமிழீழம் உருவானால் கூட எல்லையில் சண்டை போட்டுக் கொண்டு வாழ முடியாது. எல்லோரும் அமைதியாக வாழ வேண்டும். அதற்கு சிங்கள - தமிழ் மக்களிடையே புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் அவசியம். அதற்கு இரண்டு இன மக்களிடையேயும் உள்ள ஒற்றுமையை காண்பிக்கும் கலை கலாசார பண்பாட்டு அம்சங்கள் வளர்க்கப்பட வேண்டும்.

நாளைய தமிழீழம் சிறீலங்காவோடு நட்புரிமை பாராட்டுமே அன்றி ஒருபோதும் பகை பாராட்டாது. அதேவேளை சிங்கள பேரினவாதத்தின் வெறியாட்டத்துக்கு தமிழ் மக்களோ அல்லது எந்த மனிதனோ (சிங்கள மக்கள் உட்பட) பலியாவதை அங்கீகரிக்காது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு

முன்பு கருணாவை கருணா அம்மான், கருணா அம்மான் என்று தூக்கிப் பிடித்தவர்களும் எம்மவர் தான். பின்பு கருணா துரோகி என்று தூற்றித் தெரிபவர்களும் நம்மவர் தான். ஆனால் கருணா அன்றும் சரி இன்றும் சரி என்றும் ஒரே மாதிரித் தான் தன் போக்குகளை மாற்றவில்லை. இடம் மாறியதை வைத்துத் தான் போற்றுதலும், தூற்றுதலும் நடக்கின்றது. கருணாவின் வழமையான குணத்தை வைத்தல்ல.

வசம்பண்ணன்.. போராளியாக இருக்கும் வரை ஒருவருக்கு அதற்குரிய மரியாதை வழங்குவது மக்களின் பெருந்தன்மை. அவரே மக்கள் விரோதியாக மாறும் போது மக்கள் தொடர்ந்தும் அவரைப் போராளி என்று எண்ணிக் கொண்டிருப்பின் அந்த மக்களே முட்டாள்கள். நீங்கள் மக்களை முட்டாள்கள் என்று நினைத்துக் கொள்கிறீர்கள். மக்களுக்கு எவரவர் தமக்காகக் கொண்ட கொள்கைக்காக இறுதிவரை தியாக உணர்வு கொண்டு களத்தில் நிற்கின்றனர் என்ற உண்மை தெரியும் வசம்பண்ண. என்ன தான் சொன்னாலும் முன்னர் போராளிகளாக இருந்து பின்னர் மக்கள் விரோத துரோகிகள் ஆனவர்கள்.. துரோகிகள் தான். அதை மக்கள் மறக்கத் தயாரில்லை..! சிங்களவனை மன்னிச்சாலும்.. துரோகிகளை மன்னிக்கவே கூடாது. கூட இருந்து குழிபறித்தது அவர்களே..! சிங்களவனுக்கு உசுப்பேத்தி குளிர்காய்ந்ததும் அவர்களே..! :D

முதலில் எம்மவர் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பேசுவதையும், தூக்கிப் பிடித்தலையும், தூற்றுவதையும் மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போது தான் தவறு செய்பவனுக்கும் ஒரு பயம் இருக்கும். இல்லையேல் இப்படியே தொடர வேண்டியது தான்.

வசம்பண்ணா.. தமிழ்செல்வன் அண்ணா சொன்னதில் தவறில்லை. குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஒரு போராளி மீது குற்றம் சுமத்த முடியாது. சரியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர் உண்மைகள் இனங்காணப்பட்ட பின்னரே தமிழ்செல்வன் அண்ணா கூட ஊடகங்களுக்கு இதுதான் உண்மை என்று கூற முடியும். ஆக.. தமிழ்செல்வன் அண்ணா அன்ற சூழலில் அப்படித் தெரிவிக்க வேண்டியது அவசிமான ஒன்றே அது தவறல்ல. அதுதான் இயக்கத்தின் ஒழுங்குவிதிக்கு கட்டுப்பட்ட செயற்பாடு. அவரவர் தன்ர இஸ்டத்துக்கு அறிக்கை விடுறது என்றால்... புளொட்.. ஈபி.. ஈபிடிபி போலத்தான் புலிகள் இயக்கமும்.. கொள்கை தொலைத்து போராட வந்த பெட்டையளோடும்.. சோத்துப் பார்சல்களோடும்.. ஓடி வெளிநாட்டில பதுங்கி இருக்க வேணும்.. மாற்றுக் கருத்தென்று மக்கள் விரோத ஜனநாயகம் பேசிக் கொண்டிருக்க வேணும். உமா மகேஸ்வரன்ர ஆக்கள்.. தாசனும்.. தம்பாவும் யாழ் கோட்டைக்குள் இருந்து படை முன்னேற இவர்கள் யாழ் வைத்திய சாலையில் நின்று தமக்குள் அடிபட்டுக் கொண்டிருந்தனர். கடைசியில் கிட்டண்ண வந்துதான்... ஆமியையும் கலைச்சு.. இவையையும் கலைச்சு விட்டது. அப்படிப்பட்ட ஆக்களை எல்லாம்.. மக்கள் மதிப்பினமோ அண்ண..??! :unsure::(

நெடுக்குத் தம்பி

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ஒரு போராளி, போராளியாக இருக்கும் போது எந்தத் தவறையும் செய்யலாம். ஆனால் அதே தவறை போராளியாக இல்லாமல் இருந்து செய்தால்த் தான் தவறென்பது போல் உள்ளது. கருணாவை போராளியாக மதிக்கவில்லை என்ற அர்த்தத்தில் நான் எழுதவில்லை. கருணா புலிகளிலிருந்த போதும் சரி பின்பும் சரி அவரின் நடத்தைகள் ஒன்றென்பதையே நான் குறிப்பிடுகின்றேன். ஆனால் கருணாவை அன்று கருணா அம்மான் என்றும் இன்று துரோகி என்றும் நம்மவர்கள் தான் குறிப்பிடுகின்றார்கள் என்றால் அதில் எம்மவர் பக்கத் தவறுகள் இல்லையா?? அதைப் புரியாமல் நீங்கள் ஏதேதோ எழுதுகின்றீர்கள். கருணா போராளியாக இருந்த போது கிழக்கு மாகாணத்தில் செய்த பல தவறுகளை, விடுதலைப்புலிகள் கண்டும் காணாமல் விட்டதால் தான் பல பிரைச்சினைகள் உருவாகின. அதையும் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

வசம்பண்ணா.. தமிழ்செல்வன் அண்ணா சொன்னதில் தவறில்லை. குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஒரு போராளி மீது குற்றம் சுமத்த முடியாது. சரியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர் உண்மைகள் இனங்காணப்பட்ட பின்னரே தமிழ்செல்வன் அண்ணா கூட ஊடகங்களுக்கு இதுதான் உண்மை என்று கூற முடியும். ஆக.. தமிழ்செல்வன் அண்ணா அன்ற சூழலில் அப்படித் தெரிவிக்க வேண்டியது அவசிமான ஒன்றே அது தவறல்ல. அதுதான் இயக்கத்தின் ஒழுங்குவிதிக்கு கட்டுப்பட்ட செயற்பாடு. அவரவர் தன்ர இஸ்டத்துக்கு அறிக்கை விடுறது என்றால்... புளொட்.. ஈபி.. ஈபிடிபி போலத்தான் புலிகள் இயக்கமும்.. கொள்கை தொலைத்து போராட வந்த பெட்டையளோடும்.. சோத்துப் பார்சல்களோடும்.. ஓடி வெளிநாட்டில பதுங்கி இருக்க வேணும்.. மாற்றுக் கருத்தென்று மக்கள் விரோத ஜனநாயகம் பேசிக் கொண்டிருக்க வேணும். உமா மகேஸ்வரன்ர ஆக்கள்.. தாசனும்.. தம்பாவும் யாழ் கோட்டைக்குள் இருந்து படை முன்னேற இவர்கள் யாழ் வைத்திய சாலையில் நின்று தமக்குள் அடிபட்டுக் கொண்டிருந்தனர். கடைசியில் கிட்டண்ண வந்துதான்... ஆமியையும் கலைச்சு.. இவையையும் கலைச்சு விட்டது. அப்படிப்பட்ட ஆக்களை எல்லாம்.. மக்கள் மதிப்பினமோ அண்ண..??! :unsure::(

நெடுக்குத் தம்பி

குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் எவர் மீதும் குற்றம் சுமத்த முடியாது. உண்மை. அதுபோல் இரு பக்க விசாரணைகளையும் கேளாதும் குற்றம் சுமத்த முடியாது. தமிழ்ச்செல்வனின் பிபிசியில் வந்த இரு பேட்டிகளுக்குமிடையில் சில வாரங்களே இடைவெளி. 3 வருடக் குற்றங்களை யாரிடம் விசாரித்து இவர் குற்றவாளி தான் என்று இலகுவாகச் சொல்ல முடியும். ஒரு வேளை கருணா புலிகள் இயக்கத்தை விட்டு வெளயேறாமல் இருந்திருந்தால் அவர் இன்றும் கருணா அம்மான் தான். அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களும் காணாமல் போயிருக்கும். இதுதான் உண்மை.

Link to comment
Share on other sites

இப்போது கனடா வந்தபின்னரா இப்படி சிங்கள-தமிழ் ஒற்றுமை பற்றிய கருத்து எனக்கு ஏற்பட்டது என்று கேட்கின்றீர்கள்? சிங்களவனுடன் சேர்ந்து பியர் அடிப்பது பற்றி கதைக்கிறீர்கள்.

முரளி அங்கிள்,

ம்ம்..அதை பற்றி தான் கதைக்கிறன்..ன்..முதலில உங்களுக்கு விளங்கவில்லை போல..ல சரி எனி நீங்க குறிப்பிட விசயதிற்கு வருவோம்..ம்.. :)

நீங்கள் சிங்கள நண்பர்கள் வீட்டிற்கு சென்றும் சாப்பாடும் சாப்பிட்டிருக்கிறியள்..ள் அந்த விசுவாசத்தில அதாவது அந்த நட்பின் அடிப்படையில்..ல் நீங்கள் மேல சொன்ன மாதிரி சிந்திக்கிறீங்கள்..ள் ஆனால் எல்லாரும் வந்து சிங்களவையிண்ட வீட்டிற்கு போய் சாப்பாடு சாப்பிட்டு இருப்பீனமோ..மோ..??.. :)

இல்லை..லை..

அப்படி இருக்கையில்..ல் அவர்களின் எண்ணவோட்டம் வேற மாதிரி தான் இருக்க கூடும்..ம் அதில் மறுப்பதிற்கு எதுவும் இல்லை என்பது என் கருத்து..து..எங்களிண்ட சகோதரர்கள் அடி வாங்கி பல கஷ்டத்தை எதிர் நோக்கக்க..க சிங்கள கலாச்சாரத்தை வெறுக்க கூடாது..து அவர்களிண்ட ஒற்றுமைய வெறுக்க கூடாது எண்டு அவையளை தூக்கி பிடிக்கிறதும் ஒண்டு தான்..ன்

டக்கிள்ஸ் மாமா மாதிரி வெளிபடையாவே இருப்பதும் ஒண்டு என் பார்வையில்..ல்.. :D

ஓமுங்கோ. பலர் இப்ப இப்பிடித்தான் சொல்லுறீனம். காயத்தை ஏற்படுத்தவேண்டியது. பின்னர் காயத்துக்கு மருந்துபோடுறன் எண்டு சொல்லவேண்டியது.

மற்றவையள் காயம் அடைந்திருக்கும் போது..து அந்த காயத்தில் ஏதும் சம்பாதிக்கலாமோ எண்டு நெனைக்கிறவைய விட காயத்தை ஏற்படுத்தி மருந்து போடுறவன் பாராட்ட பட வேண்டியவன் தான்.. :D அப்படி அவன் காயத்தை ஏற்படுத்தாட்டி சிலரின் பிழைப்பு என்னாவாகிறது.. :D

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு

உங்களுக்கு வாழைப் பழத்தைத் தந்தால் உரித்துத் சாப்பிடுவியள் என்று நினைச்சன். ஆனால் உரித்துத் தரச் சொல்லி அடம் பிடிக்கிறியள்.

கருணா புலிகள் இயக்கத்திலிருந்த போதும் சரி, தற்போதும் சரி பொதுமக்களைப் பற்றி எந்தவித கவலைகளும் இல்லாது தன் சுயலாபத்தில் தான் கண்ணாயிருந்தார். அப்போதும் கொலைகள், கொள்ளைகள் போன்றவற்றைச் செய்து கொண்்டுதானிருந்தார். இப்போதும் அவற்றைத் தொடருகின்றார். இதனைத் தான் அவரின் குணம் இன்னும் மாறவில்லை என்பதாகக் குறிப்பிட்டேன். சுயலாபத்தின் அடிப்படையில் செயற்படுபவர் சிங்கள அரசிற்கு ஆதரவாகச் செயற்படுவது ஒன்றும் ஆச்சரியமான விடயமில்லையே:.....

ஆனால் இதே தவறுகளை புலிகள் இயக்கத்திலிருந்து செய்த போது எம்மவர் எவரும் அவற்றைக் கண்டு கொள்ளாமல் கருணா அம்மான், கருணா அம்மான் என்று அழைத்து மகிழ்வதிலேயே குறியாகவிருந்தனர். கருணா புலிகளை விட்டு விலகுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் பிபிசி வானொலி கருணா பற்றிய குற்றச் சாட்டுகள் பற்றி தமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது, அவர் கருணா தவறொன்றும் செய்யவில்லை. அவர் மீது வேண்டுமென்றே சிலர் பொய்ப் புகார்களைச் சொல்லுகின்றார்கள் என்றார். அதே தமிழ்ச்செல்வனை கருணா விலகியவுடன் பிபிசி பேட்டி கண்டது, அப்போது தமிழ்ச்செல்வன் கருணா கடந்த 3 வருடங்களாக பல தவவறுகளைச் செய்துள்ளார். அது பற்றி விசாரிக்கவே அவரை வன்னிக்கு அழைத்திருந்தோம். அவர் வரவில்லையென்று கூறினார். இதிலிருந்து உங்களுக்கு என்ன புரிகின்றது??

முதலில் எம்மவர் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பேசுவதையும், தூக்கிப் பிடித்தலையும், தூற்றுவதையும் மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போது தான் தவறு செய்பவனுக்கும் ஒரு பயம் இருக்கும். இல்லையேல் இப்படியே தொடர வேண்டியது தான்.

வசபண்ணா..ணா..!!.. :)

ம்ம்..வாழைபழத்தை உரித்து சாப்பிட்டிடுவன் தான் ஆனால் இப்ப வாழைபழத்தில கூட எதிர் பிரசாரம் செய்யீனம்..ம் ஆனபடியா வாழைபழத்தை தந்தவையளிட்டையே உரிக்க கொடுத்திட்டா பிரச்சினை இல்லை அது தான் மற்றமபடி நாம உரிக்காத வாழைபழமா..மா..?? .. :D

மன்னிகவும்..ம்..

விடுதலை புலிகள் இயக்கம் கட்டு கோட்பான இயக்கம் அது யாவருக்கும் தெரிந்தது..து களவு,கொள்ளை அடிப்பவர்கள் நிலை என்னவெண்டு அதில் இருந்தவர்கள் சொல்லி கேள்விபட்டிருக்கிறன்..ன் அப்படி இருக்கையில் தாங்கள் ஏதோ எழுந்தமானமாக கூறுவது..து பற்றி..??.. :(

ஆகவே..வே

இலங்கை அரசால் கொள்வனவு செய்யபட்ட கருணா அம்மான் சுய இலாபதிற்காக வேலை செய்கிறார் என்றால் அதனை ஏற்று கொள்ள முடியும்..ம் அதை விடுத்து..

ஏன் எம்மவர்களை குறி கூறிகிறீர்கள் ஒலிம்பிக் போட்டியில் தங்க பதங்களை குவித்த மரிஜன் ஜோன்ஸிஸ்கு கூட அவரின் ஆதரவாளர்கள் கை தட்ட தான் செய்தார்கள்..ள் அவர் போதை மருந்து பாவித்து தங்க பதக்கம் பறிமுதலான பின்னர் நிலை என்ன..ன..??.. :)

ஏன் அவரை ஆதரவாளர்கள் உற்சாகபடுத்தினர்..ர் தங்கள் நாட்டு பிரதிநித்துவ படுத்த அவர் ஒலிம்பிக்கில் பங்கு பற்றியமை தான் ஒரு காரணம்..ம் தற்பொழுது உங்களுக்கு விளங்கி இருக்க வேண்டும்..ம் ஆகவே இதனை தாங்கள் எந்த ரீதியில் பார்கிறீர்கள்..ள்..??..

அவர் போதைவஸ்து பாவித்தமை ரசிகர்களின் பிழையா அல்லது பயிற்சியாளரின் பிழையா எண்டு வாதாடுகிறோமே தவிர அது அவரின் பிழை எண்டு ஏன் உங்களுகு புரியவில்லை..லை.. :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குத் தம்பி

குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் எவர் மீதும் குற்றம் சுமத்த முடியாது. உண்மை. அதுபோல் இரு பக்க விசாரணைகளையும் கேளாதும் குற்றம் சுமத்த முடியாது. தமிழ்ச்செல்வனின் பிபிசியில் வந்த இரு பேட்டிகளுக்குமிடையில் சில வாரங்களே இடைவெளி. 3 வருடக் குற்றங்களை யாரிடம் விசாரித்து இவர் குற்றவாளி தான் என்று இலகுவாகச் சொல்ல முடியும். ஒரு வேளை கருணா புலிகள் இயக்கத்தை விட்டு வெளயேறாமல் இருந்திருந்தால் அவர் இன்றும் கருணா அம்மான் தான். அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களும் காணாமல் போயிருக்கும். இதுதான் உண்மை.

புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறாத போதும் இயக்கத்தின் ஒழுங்கு விதியை மீறியோர் மற்றும் துரோகத்தனத்துக்காக தண்டனை பெற்றவர்களை தெரியாதோ வசம்பண்ணா. கருணாவின் செயற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கைக்கு வலுவான காரணங்கள் ஆராயப்பட்டுக் கொண்டிருக்கும் போதுதான்.. அவர் இயக்கத்தை விட்டே வெளியேறி.. தன்னை யார் என்று இனங்காட்டிக் கொண்டார். அதன் பின் விடுதலைப்புலிகளுக்கு அவர் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க வேண்டிய தேவையை அவர் விட்டுவைக்கவில்லை. தானே அதை நிரூபித்துக் கொண்டார். அது தமிழ்செல்வன் அண்ணாவின் அறிக்கையிலும் பிரதிபலித்தது. அண்டன் அண்ணாவும் அதையே சொல்லி இருந்ததை மறக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வதுபோல் பார்த்தாலும் தென்னிலங்கையில் கரையோரப் பகுதிகள் இல்லையா?? அதுபோல் அந்நியர் வருகையின் போது தென்னிந்தியா என்ற அடைமொழி பாவிக்கப்பட்டதாகவோ அங்கு தமிழ் தான் ஆட்சிமொழியாக இருந்ததென்றொ எங்கே படித்தீர்கள்??

அந்நிய காலத்தில் தென்னிந்திய அடைமொழி பாவிக்கபட்டதா என்று கேட்டிருந்தீர்கள் தென்னிந்திய திருசபை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தான் இருந்தது கிறிஸ்தவ மக்களின் மத நடவடிக்கைகளை அந்த திருசபை மூலம் தான் இலங்கையில் நடைபெற்றது.

சங்கிலிய மன்னன் போர்துகேயரால் சிறை பிடிகபட்ட போது தென்னிந்தியாவிற்கு சென்றதாக தான் கூறுகிறார்கள்.சில நாயன்மார்கள் கூட தென்னாடுடைய சிவனே போற்றி என்று பாடி இருக்கிறார்கள்.இன்னுமொரு நாயனார் தில்லையில் கூத்தனே தென்பாண்டி நாட்டானே என்று பாடி இருக்கிறார் ஆகவே தென்பகுதி அதிகாரம் செலுத்துபவரின் பிரதேசமாக திகழ்ந்து இருக்கிறது.

எங்கு படித்தீர்கள் என்று கேட்டபடியால் சொல்கிறேன் படித்து நான் எழுதவில்லை நான் கண்ட பார்த்த சில விடயங்களை வைத்து தான் எழுதினேன் அந்த சம்பவங்களை கீழே எழுதுகிறேன்.

மத்திய கிழக்கு நாட்டில் வேலை பார்க்கும் போது ஒரு இஸ்லாமிய மத நிறுவனதிற்கு வேலை நிமிர்த்தமாக சென்றேன் அப்பொழுது அங்கு பல மொழிகளிள் இஸ்லாம் பற்றிய விளக்க நூல்கள் வைத்திருந்தார்கள் பல புத்தகங்கள் சிங்கள மொழியிலும் இருந்தன.அங்கு நின்ற சில இளைஞர்கள் அங்கிருந்த புத்தகத்தை எடுத்து வாசித்தார்கள் அவர்கள் எல்லோரும் இலங்கை முஸ்லீம்கள்.தமிழ் மொழி புத்தகங்கள் இருந்தும் அவர்கள் அதை எடுக்கவில்லை காரணம் அவர்களாள் அதை வாசிக்க முடியாது ஒரு சில வயோதிப முஸ்லீம்கள் தமிழி மொழி புத்தகத்தை எடுத்து வாசித்தார்கள்.

இன்னுமொரு சம்பவம் என்னோடு வெலை பார்த்த ஒரு முஸ்லீம் இளைஞன் தனது தாயாருக்கு கடிதம் எழுதுவதிற்கும்,தாயாரிடம் இருந்து கடிதம் வந்தாலோ என்னிடம் வந்து படித்து காட்டும்படி கேட்பார் அதை போல் பதில் கடிதம் தாயருக்கு தமிழில் எழுதி தரும்படியும் கேட்டு கொள்வார் இவர் ஒரு கொழும்புவாசி நடுதரவர்க்க முஸ்லீம் குடும்பத்தை சேர்ந்தவர் சிங்கள மொழியில் படித்தபடியால் தனது தாயாருக்கு கடிதம் எழுத முடியாத நிலை தாயார் தமிழ் மொழியில் கல்வி கற்றிருக்கா.

இந்த முஸ்லிம் இளைஞனை பொறுத்தவரை தனது குழந்தையுடன் நிச்சயமாக சிங்களத்தில் தான் உரையாட போறார் சிங்கள மொழியில் தான் கல்வியும் புகட்ட போறார்.

(மேலே கூறிய சம்பவங்கள் மூலம் அவர்கள் செய்தது பிழை என்று கூற வரவில்லை என்பதனை தெரிவித்து கொள்கிறேன் அவர்களின் இருப்பிற்கு அவர்கள் செய்தது சரியே)..

ஆகவே தான் நான் இன்னும் பல வருடங்களுக்கு பிறகு சிங்கள மொழி பேசும் சோனகர் உருவாகுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தேன்.

சிங்கள பகுதியில் வாழும் சோனகரை தொடர்ந்தும் தமிழ் பேசும் சோனகர் என்று சிங்களவர்களும்,தமிழர்களும் சொல்வார்களாயின் சிங்களவர்களும் தமிழர்களும் தங்களை தாமே ஏமாத்துகிறார்கள்.

Link to comment
Share on other sites

அஜீவன் அண்ணா உங்கள் திறமை அற்புதமானது!

இது போன்றே தமிழில் இருந்து சிங்களமும் உங்களுக்கு கைவந்தகலையாக இருக்கக்கூடும்.

நீங்கள் ஏன் தமிழீழ செய்திகளை உடனுக்கு உடன் தரும் ஒரு சிங்கள இணையத்தளம் ஆரம்பிக்கக்கூடாது!

நீண்டகால நோக்கில் அது பாரிய திருப்பத்தை ஏற்படுத்தும்!

Link to comment
Share on other sites

இதில் ஈழதமிழ் சிங்கள இளைஞர்களால் புலத்தில் உருவாக்கப்பட்ட பல பாடல்கள் உண்டு கேட்டுமகிளுங்கள்.

http://worldtv.com/eelamboys

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலேசிய கமினியூஸப்போராளிகளின் புரட்சி உணவுப்பொதிகளலால் முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட

Link to comment
Share on other sites

வசபண்ணா..ணா..!!.. :(

ம்ம்..வாழைபழத்தை உரித்து சாப்பிட்டிடுவன் தான் ஆனால் இப்ப வாழைபழத்தில கூட எதிர் பிரசாரம் செய்யீனம்..ம் ஆனபடியா வாழைபழத்தை தந்தவையளிட்டையே உரிக்க கொடுத்திட்டா பிரச்சினை இல்லை அது தான் மற்றமபடி நாம உரிக்காத வாழைபழமா..மா..?? .. :)

மன்னிகவும்..ம்..

விடுதலை புலிகள் இயக்கம் கட்டு கோட்பான இயக்கம் அது யாவருக்கும் தெரிந்தது..து களவு,கொள்ளை அடிப்பவர்கள் நிலை என்னவெண்டு அதில் இருந்தவர்கள் சொல்லி கேள்விபட்டிருக்கிறன்..ன் அப்படி இருக்கையில் தாங்கள் ஏதோ எழுந்தமானமாக கூறுவது..து பற்றி..??.. :)

ஆகவே..வே

இலங்கை அரசால் கொள்வனவு செய்யபட்ட கருணா அம்மான் சுய இலாபதிற்காக வேலை செய்கிறார் என்றால் அதனை ஏற்று கொள்ள முடியும்..ம் அதை விடுத்து..

ஏன் எம்மவர்களை குறி கூறிகிறீர்கள் ஒலிம்பிக் போட்டியில் தங்க பதங்களை குவித்த மரிஜன் ஜோன்ஸிஸ்கு கூட அவரின் ஆதரவாளர்கள் கை தட்ட தான் செய்தார்கள்..ள் அவர் போதை மருந்து பாவித்து தங்க பதக்கம் பறிமுதலான பின்னர் நிலை என்ன..ன..??.. :D

ஏன் அவரை ஆதரவாளர்கள் உற்சாகபடுத்தினர்..ர் தங்கள் நாட்டு பிரதிநித்துவ படுத்த அவர் ஒலிம்பிக்கில் பங்கு பற்றியமை தான் ஒரு காரணம்..ம் தற்பொழுது உங்களுக்கு விளங்கி இருக்க வேண்டும்..ம் ஆகவே இதனை தாங்கள் எந்த ரீதியில் பார்கிறீர்கள்..ள்..??..

அவர் போதைவஸ்து பாவித்தமை ரசிகர்களின் பிழையா அல்லது பயிற்சியாளரின் பிழையா எண்டு வாதாடுகிறோமே தவிர அது அவரின் பிழை எண்டு ஏன் உங்களுகு புரியவில்லை..லை.. :D

இங்கே விடுதலை புலிகள் இயக்கம் கட்டு கோப்பானதோ இல்லையா என்பது பற்றி நான் வாதம் செய்ய வரவில்லை. அவர்களின் கட்டுக்கோப்புக்களை மீறியும் பல தவறுகள் நடந்து தான் உள்ளன. தவறுகள் செய்த பலர் எவ்வித தண்டனைகளையும் பெறாது தற்போது ஐரோப்பிய நாடுகளிலும் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் வாழத்தான் செய்கின்றார்கள். இவற்றை இங்கே எழுதுவதென்றால் அதுவே பல பக்கங்களைத் தாண்டும். அதுவல்ல எனது நோக்கமும். இதனால் இப்பகத்தின் கருத்தும் திசை மாறி எங்கோ சென்றுவிடும். ஆனால் 3 வருடங்களாக கருணா தொடர்ந்து தவறு செய்ய அதில் கவனமெடுக்காத விட்ட விடுதலைப்புலிகளின் தவறையே நான் சுட்டிக்காட்டினேன். போதைவஸ்து பாவித்த ஒரு விளையாட்டு வீரரையும் ஒரு போராளியையும் எப்படி உங்களால் ஒப்பிட முடிகின்றதோ எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒரு விளையாட்டுவீரர் அவரின் பயிற்சியாளருக்குத் தெரியாது போதைவஸ்து பாவித்திருக்க முடியாதென்பதும் உங்களுக்கு புரியுமோ தெரியாது. பலநேரங்களில் பயிற்சியாளர்களே வீரரை போதைவஸ்து பாவிக்க வைத்த உண்மைகளும் தான் வெளியாகியுள்ளது.

மேலே இணைக்கப்பட்ட பாடலே யுத்தத்தை கண்டித்தே பாடப்பட்டுள்ளது. ஆனால் எவரும் பாடலின் கருத்தை ஆராயாமல் (தமிழில் மொழி பெயர்த்து போடப்பட்ட புின்பும்) இப்பாடலை வைத்து அரசு தமக்கு சாதகமாக பிரச்சாரதத்தை மேற்கொள்ளலாம் என கருத்துக் கூறும் புத்திசாலிகள் எதைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறாத போதும் இயக்கத்தின் ஒழுங்கு விதியை மீறியோர் மற்றும் துரோகத்தனத்துக்காக தண்டனை பெற்றவர்களை தெரியாதோ வசம்பண்ணா. கருணாவின் செயற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கைக்கு வலுவான காரணங்கள் ஆராயப்பட்டுக் கொண்டிருக்கும் போதுதான்.. அவர் இயக்கத்தை விட்டே வெளியேறி.. தன்னை யார் என்று இனங்காட்டிக் கொண்டார். அதன் பின் விடுதலைப்புலிகளுக்கு அவர் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க வேண்டிய தேவையை அவர் விட்டுவைக்கவில்லை. தானே அதை நிரூபித்துக் கொண்டார். அது தமிழ்செல்வன் அண்ணாவின் அறிக்கையிலும் பிரதிபலித்தது. அண்டன் அண்ணாவும் அதையே சொல்லி இருந்ததை மறக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். :D

மேலே ஜம்முவிற்கு இணைத்த பதிலே உங்களுக்கும் பொருந்தும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.