Jump to content

பாடகர் மனோகரணும் சிங்களவனும் சேர்ந்து பாடும் பாடல்


Recommended Posts

உங்களோட சேர்ந்து :lol:

ஆமாங்க... இஞ்ச கடைசியில கருத்து எழுதுற தாங்களும் போராளிகள் எண்டுகூறி கடைசியில தங்களுக்கே தாங்கள் மாமனிதன், நாட்டுப்பற்றாளர் விருது எல்லாம் குடுப்பாங்கள் போல இருக்கிது. நம்மோளுக்கும் இப்பிடி கிளுகிளுப்பாக கருத்து எழுதுறது கஸ்டமான வேலை இல்லை. ஆனால் நாம மற்றவன் தியாகத்தில குளிர்காய்ஞ்சு எம்மை பிரபலப்படுத்த முயற்சிக்க இல்லை. நாம சாதாரண மனிதர்களாக இருந்துவிட்டு போகின்றோம்.

Link to comment
Share on other sites

  • Replies 152
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பழைய சுத்துமாத்து வரலாறுகளை நிழலி என்பவர் தலைகீழாக்கி விடுதலைப்புலிகள் மீது சேறு பூச நினைக்கிறார்.

அற்புதன் காலத்து தினமுரசில் (இன்று அது ஈபிடிபி ஒட்டுக்குழுவின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் அதன் சமூகவிரோத தேசவிரோதப் பணிகளை செய்து கொண்டிருக்கிறது). அற்புதன்.. விஜிதரன் கொலை.. ஆலாலசுந்தரம் கொலை.. முரசொலி அதிபர் மகன் கொலை, உமாமகேஸ்வரன்.. கே எஸ் ராஜா.. என்று அனைத்துக் கொலைகளுக்கும் பின்னால் இருந்த தேசத்துரோகிகளை இனங்காட்டியதற்காக கொழும்பில் வைத்துக் கொல்லப்பட்டார். விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை காரணமின்றி யாருக்கும் மரணதண்டனை வழங்கியது கிடையாது.

இந்தியப்படை காலத்தில் தமிழ் மக்களையும் தமிழ் தேசியவாதிகளையும் வேட்டையாடிய மண்டையன் குழு பற்றியும் அற்புதன் எழுதி இருந்தார். அதன் பின்னணியில் செயற்பட்டவர்கள் அமைச்சராகவும்.. இன்னும் சிலர் இந்தியாவிலும் பதுங்கி இருக்கின்றனர்.

அதுவும் பல எச்சரிக்கைகளின் பின்னரே வழங்கப்பட்டன படுகின்றன. பல் வேறு ஆயுதக்குழுக்கள் யாழ் குடாவில் செயற்பட்ட காலத்தில் கூட விடுதலைப்புலிகள் அவர்களை தம்மிடம் சரணடைந்து கொண்ட கொள்கைக்காகப் போராட இணையும் படிக் கேட்டுக் கொண்டனர். அதுமட்டுமன்றி 90களில் இரண்டு தடவைகள் ஒட்டுக்குழுவினருக்கு பொதுமன்னிப்பும் அளித்தனர். ஆனால் அதையெல்லாம் நிராகரித்த ஒட்டுக்குழுவினர்.. தேசத்துரோக.. போராட்ட விரோத செயல்களிலேயே தொடர்ந்து ஈடுபட்டு எதிரிக்கு காட்டிக் கொடுத்து வருவாய் பார்க்கலாயினர். அதனால் பல பொதுமக்கள் உட்பட போராளிகளை தமிழீழம் இழக்க நேரிட்டது.

ரஜனி திரணகமவைச் சுட்டது பற்றியும் அற்புதன் எழுதி இருந்தார். அதைச் செய்தது.. றோவின் உத்தரவின் பெயரில் வரதராஜப்பெருமாள் என்பதை தெளிவாக எழுதி இருந்தார். ஆனால் பழிகள் எல்லாம் புலிகள் மீதே போடப்பட்டன. இந்தக் காரணங்களாலும் தான் பல்வேறு ஆயுதக்குழுக்கள் தடைசெய்யப்பட்டு எல்லோரும் ஒரே இயக்கமாகப் போராட அழைக்கப்பட்டனர். உண்மையில் அது தான் தமிழீழப் போராட்டம் இன்று வரை நிலைத்து நிற்க உதவி இருக்கிறது. தலைவரின் அன்றைய கோரிக்கைகளை.. எல்லோரும் ஒருமனதாக ஏற்றுப் போராடி இருப்பின்.. ஒரே கொள்கையான தமிழீழத்தை என்றோ வென்றெடுத்திருக்க முடியும். எனினும்.. தமிழீழம் நாளை கிடைப்பெறினும்.. தலைவரின் அன்றைய அந்த தீர்க்கதரிசனமான முடிவே இன்றைய பலம்பொருந்திய தமிழ் மக்களின் சேனையை உருவாக்கக் காரணமானது என்பதை பலரும் ஒரு நாள் விளங்கிக் கொள்வர். :lol:

Link to comment
Share on other sites

மிஸ்ரர் நெடுக்ஸ்

1. ராஜினியை சுட்டவர்கள் யாரெண்டு நான் இங்கு குறிப்பிடவில்லை. அவரினை இந்திய படையின் கைகூலிகள் கொல்வதற்கான முழு காரணங்களும் இருந்தன. எனவேதான் அந்த குழப்பம் இன்று வரை இருக்கின்றது. முரசொலி ஆசிரியர் திருச்செல்வத்தின் மகனான அகிலனை (எனது பாடசாலை) கொன்றது ஈ.என்.டி.எல். எப் எனும் கொலை குழு என்பதும் தெரியும். நீங்கள் குறிப்பிட்ட மற்றவர்களின் கொலையை யார் யார் செய்தது என்று எல்லோருக்கும் நன்கு தெரியும். வழக்கம் போல சொல்லாத விடயங்களை புகுத்தி வெற்று வீராப்பு பேசுகின்றீர்கள்.

2. அற்புதன், எனக்கு ஒன்று விட்ட அண்ணன். அவரையும், அவரின் அரசியல் பம்மாத்துகளையும் உங்கள் பலரை விட எனக்கு நன்கு தெரியும். ஈ.பி.டி.பி கும்பலின் சித்திரவதை பொறுப்பாளராக இருந்து கொண்டு, ஒவ்வொரு தடவையும் அந்த கும்பலின் பாராளுமன்ற பிரதிநிதியாக அவசரகாலச்சட்டத்திற்கு கை உயர்த்தி கொண்டு தன் பத்திரிகை வியாபாரத்திற்காக புலிகள் ஆதரவு, போராட்ட ஆதரவு கோஷம் போட்டவர் அவர். இன்று போல் தினமுரசிற்கு சிங்கள அரசு நிதியுதவியினை அன்று செய்யாததால் அப்படி அவருக்கு நடக்க வேண்டி வந்தது. மிக நெருங்கிய உறவாக இருந்தும் அவரின் மரண வீட்டிற்கு கூட போகாமல் இருந்தவர்கள் நாம். உட்கட்சி பிரச்சனையில் தான் டக்ளஸ் போட்டு தள்ளினார். அவரின் மரணத்துடன், லண்டனிற்கு அவரின் சகபாடி சந்திரமோகன் ஒடி ஒளிந்து கொண்டார். இது தொடர்பாக முந்த நாளும் யாழில் எழுதி இருந்தேன்

3. வரலாறு என்பதற்கு வயதில்லை, அதனை பழசு புதுசு என கட்டம் கட்ட. அது ஒரு கால ஓட்டம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.