Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பாடகர் மனோகரணும் சிங்களவனும் சேர்ந்து பாடும் பாடல்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

அந்நிய காலத்தில் தென்னிந்திய அடைமொழி பாவிக்கபட்டதா என்று கேட்டிருந்தீர்கள் தென்னிந்திய திருசபை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தான் இருந்தது கிறிஸ்தவ மக்களின் மத நடவடிக்கைகளை அந்த திருசபை மூலம் தான் இலங்கையில் நடைபெற்றது.

சங்கிலிய மன்னன் போர்துகேயரால் சிறை பிடிகபட்ட போது தென்னிந்தியாவிற்கு சென்றதாக தான் கூறுகிறார்கள்.சில நாயன்மார்கள் கூட தென்னாடுடைய சிவனே போற்றி என்று பாடி இருக்கிறார்கள்.இன்னுமொரு நாயனார் தில்லையில் கூத்தனே தென்பாண்டி நாட்டானே என்று பாடி இருக்கிறார் ஆகவே தென்பகுதி அதிகாரம் செலுத்துபவரின் பிரதேசமாக திகழ்ந்து இருக்கிறது.

எங்கு படித்தீர்கள் என்று கேட்டபடியால் சொல்கிறேன் படித்து நான் எழுதவில்லை நான் கண்ட பார்த்த சில விடயங்களை வைத்து தான் எழுதினேன் அந்த சம்பவங்களை கீழே எழுதுகிறேன்.

மத்திய கிழக்கு நாட்டில் வேலை பார்க்கும் போது ஒரு இஸ்லாமிய மத நிறுவனதிற்கு வேலை நிமிர்த்தமாக சென்றேன் அப்பொழுது அங்கு பல மொழிகளிள் இஸ்லாம் பற்றிய விளக்க நூல்கள் வைத்திருந்தார்கள் பல புத்தகங்கள் சிங்கள மொழியிலும் இருந்தன.அங்கு நின்ற சில இளைஞர்கள் அங்கிருந்த புத்தகத்தை எடுத்து வாசித்தார்கள் அவர்கள் எல்லோரும் இலங்கை முஸ்லீம்கள்.தமிழ் மொழி புத்தகங்கள் இருந்தும் அவர்கள் அதை எடுக்கவில்லை காரணம் அவர்களாள் அதை வாசிக்க முடியாது ஒரு சில வயோதிப முஸ்லீம்கள் தமிழி மொழி புத்தகத்தை எடுத்து வாசித்தார்கள்.

இன்னுமொரு சம்பவம் என்னோடு வெலை பார்த்த ஒரு முஸ்லீம் இளைஞன் தனது தாயாருக்கு கடிதம் எழுதுவதிற்கும்,தாயாரிடம் இருந்து கடிதம் வந்தாலோ என்னிடம் வந்து படித்து காட்டும்படி கேட்பார் அதை போல் பதில் கடிதம் தாயருக்கு தமிழில் எழுதி தரும்படியும் கேட்டு கொள்வார் இவர் ஒரு கொழும்புவாசி நடுதரவர்க்க முஸ்லீம் குடும்பத்தை சேர்ந்தவர் சிங்கள மொழியில் படித்தபடியால் தனது தாயாருக்கு கடிதம் எழுத முடியாத நிலை தாயார் தமிழ் மொழியில் கல்வி கற்றிருக்கா.

இந்த முஸ்லிம் இளைஞனை பொறுத்தவரை தனது குழந்தையுடன் நிச்சயமாக சிங்களத்தில் தான் உரையாட போறார் சிங்கள மொழியில் தான் கல்வியும் புகட்ட போறார்.

(மேலே கூறிய சம்பவங்கள் மூலம் அவர்கள் செய்தது பிழை என்று கூற வரவில்லை என்பதனை தெரிவித்து கொள்கிறேன் அவர்களின் இருப்பிற்கு அவர்கள் செய்தது சரியே)..

ஆகவே தான் நான் இன்னும் பல வருடங்களுக்கு பிறகு சிங்கள மொழி பேசும் சோனகர் உருவாகுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தேன்.

சிங்கள பகுதியில் வாழும் சோனகரை தொடர்ந்தும் தமிழ் பேசும் சோனகர் என்று சிங்களவர்களும்,தமிழர்களும் சொல்வார்களாயின் சிங்களவர்களும் தமிழர்களும் தங்களை தாமே ஏமாத்துகிறார்கள்.

நீங்கள் முன்பு குறிப்பிட்டிருந்தது போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலத்தில் தென்னிந்தியா என. பாரசீகமாக இருந்த பல நாடுகள் ஒன்றாகி இந்தியாவாக எப்போது உருப்பெற்றதோ அதன் பின்பு தான் தென்னிந்தியா என்ற சொல் உருவாக்கமும் வரும். ஆங்கிலேயரின் வருகைக்குப் பின் தான் நீங்கள் சொல்லும் வார்த்தைப் பிரயோகங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பழைய சரித்திரங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் பிற்காலத்தில் வந்தவர்களால் எழுத்து வடிவமாக எமக்கு குறிப்பாக வந்தபோது அப்போது நடைமுறையில் இருந்த தென்னிநதியா என்ற சொற்பதத்தையே பாவித்தார்கள். (காரணம் அதற்கு முன்பிருந்த சொற்பிரயோகத்தைப் பாவித்தால் பின் தற்போது அது என்ன என்ற விளக்கத்தையும் புறிம்பாக எமக்கு தந்திருக்க வேண்டும்.) இதற்கு உதாரணம் இன்று நாம் பயிலும் திருக்குறள். திருக்குறளை திருவள்ளுவர் எழுதிய காலத்தில் இருந்த எழுத்து வடிவங்களில் அப்படியே தந்திருந்தால் நாம் முழி பிதுங்கி புரியாது தான் நின்றிருக்க வேண்டும். அதனால் அறிஞர்கள் அதனை தற்போதய நடைமுறையில் மாற்றி எமக்குத் தந்தார்கள். அதனால் இது தெரியாதவர்கள் திருவள்ளுவர் தற்போதய நடைமுறையில் தான் எழுத்தக்களை கையாண்டார் என்று தற்போதுள்ள திருக்குறளை வைத்து வாதாட முடியுமா?? தென்னாடு, தென்பாண்டி என்பன தென்பகுதி நாடு, தென்பகுதி பாண்டிய ஆட்சியையுமே குறிக்கின்றன. அவை எப்படித் தென்னிந்தியா என்ற அடைமொழியாகிவிடும்.

நீங்கள் குறிப்பிடும் கொழும்பு முஸ்லீம் மக்களில் வயதானவர்கள் மட்டும் தமிழை உச்சரிக்கின்றார்கள். இளைஞர்களால் முடியவில்லை என்பதால் கொழும்பில் முன்பு தமிழ் தான் ஆட்சி மொழியாக இருந்தது என்று அர்த்தமாகி விடுமா?? ஏன் அந்த முஸ்லீம் குடும்பத்தினர் முன்பு தமிழ்ப் பகுதிகளில் வாழ்ந்து பின்பு வேலை நிமித்தமாக கொழும்பில் வந்து குடியேறியிருக்க முடியாதா?? இதற்கு நல்லதொரு உதாரணம் அமரர் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களின் குடும்பம். இவர்கள் வடமராச்சியை சேர்ந்தவர்கள் அரசியலாலும், தொழில் நிமித்தத்தாலும் கொழும்பிற்கு இடம் பெயர நேரிட்டது. அதனால் பின்னாளில் அமரர் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களின் மகனான அமரர் குமார் பொன்னம்பலம் அவர்கள் கூட ஆரம்பத்தில் தமிழ் பேச முடியாதவராகத் தான் இருந்தார். பின்பு அரசியலிற்கு வந்தபின் தான் தமிழை படிப்படியாக பேசக் கற்றுக் கொண்டார்.

Link to comment
Share on other sites

 • Replies 152
 • Created
 • Last Reply

இங்கே விடுதலை புலிகள் இயக்கம் கட்டு கோப்பானதோ இல்லையா என்பது பற்றி நான் வாதம் செய்ய வரவில்லை. அவர்களின் கட்டுக்கோப்புக்களை மீறியும் பல தவறுகள் நடந்து தான் உள்ளன. தவறுகள் செய்த பலர் எவ்வித தண்டனைகளையும் பெறாது தற்போது ஐரோப்பிய நாடுகளிலும் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் வாழத்தான் செய்கின்றார்கள். இவற்றை இங்கே எழுதுவதென்றால் அதுவே பல பக்கங்களைத் தாண்டும். அதுவல்ல எனது நோக்கமும். இதனால் இப்பகத்தின் கருத்தும் திசை மாறி எங்கோ சென்றுவிடும். ஆனால் 3 வருடங்களாக கருணா தொடர்ந்து தவறு செய்ய அதில் கவனமெடுக்காத விட்ட விடுதலைப்புலிகளின் தவறையே நான் சுட்டிக்காட்டினேன். போதைவஸ்து பாவித்த ஒரு விளையாட்டு வீரரையும் ஒரு போராளியையும் எப்படி உங்களால் ஒப்பிட முடிகின்றதோ எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒரு விளையாட்டுவீரர் அவரின் பயிற்சியாளருக்குத் தெரியாது போதைவஸ்து பாவித்திருக்க முடியாதென்பதும் உங்களுக்கு புரியுமோ தெரியாது. பலநேரங்களில் பயிற்சியாளர்களே வீரரை போதைவஸ்து பாவிக்க வைத்த உண்மைகளும் தான் வெளியாகியுள்ளது.

மேலே இணைக்கப்பட்ட பாடலே யுத்தத்தை கண்டித்தே பாடப்பட்டுள்ளது. ஆனால் எவரும் பாடலின் கருத்தை ஆராயாமல் (தமிழில் மொழி பெயர்த்து போடப்பட்ட புின்பும்) இப்பாடலை வைத்து அரசு தமக்கு சாதகமாக பிரச்சாரதத்தை மேற்கொள்ளலாம் என கருத்துக் கூறும் புத்திசாலிகள் எதைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

வசபண்ணா..ணா..!!.. :)

ம்ம்..நீங்கள் மேலே குறிப்பிட்டிருந்தீர்கள்..ள் கருணா அங்கிள் விடுதலை புலிகள் இயக்கத்தில்..ல் இருக்கும் போது கொலை மற்றும் கொள்ளைகளை மேற்கொண்டார் எண்டு..டு அதற்கு பதிலளிக்கும் முகமாகவே..வே விடுதலை புலிகள் இயக்கம் கட்டு கோப்பான இயக்கம்..ம் எண்டு சொல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது..து.. :D

அதற்கு தாங்கள் உணர்ச்சிவசபட வேண்டிய தேவை இல்லை..லை விடுதலை புலிகள் இயக்கம் தோன்றிய காலத்தில் பல ஆயுத இயக்கங்கள் தோன்றி மறைந்ததிற்கான காரணம்..ம் கட்டுபாடின்மையே..யே..அதனை தங்களுக்கு விளக்கும் விதமாகவே அதனை கூற முயன்றேன்..ன்.. :(

மற்றது..து..!!

தாங்கள் விடுதலை புலிகல் இயக்கத்தில்..ல் ஏதாவது பொறுப்பில் இருந்தனீங்களோ..ளோ இல்லை ஏன் கேட்கிறன் எண்டா அவன் தண்டனை செய்திட்டு அங்க இருக்கிறான்..ன் இங்க இருக்கிறான் எண்டு எப்படி உங்களாள் சொல்ல முடியும்..ம்..??

மற்றது..து..

கருணா அங்கிள் 3 வருடமாக தவறு செய்திருக்கலாம்...ம் ஒருவரை குற்றவாளி எண்டு சும்மா சொல்ல ஏலாது தானே அவர் செய்த சிறு தவறுகளை கண்டறிய முடியாம இருந்திருக்கலாம்..ம் பிற்பட்ட காலத்தில் அவர் மேலும் தவறுகள் செய்ய முற்படுகையில்..ல்

அதனை இணம் கண்டது..ம் அவர் உடனடியாக தாவிவிட்டார்..ர்..ஆகவே உயரதிகாரியாக இருந்த கருணா அங்கிளிற்கு கூட தண்டனை கிடைத்திருக்கும்..ம் ஆனா அவர் தன் குணத்தை வெளிபடுத்திவிட்டார்..ர் அவ்வாறு இருக்கும் விடுதலை புலிகள் இயக்கத்தை பற்றி..றி..நீங்கள் வேண்டுமென்றே குறை கூறுவதை என்ன சொல்ல முடியும் பாருங்கோ..கோ.. :)

மன்னிகவும்..ம் நான் போராளியை ஒரு விளையாட்டு துறை வீரரோடு ஒப்பிடவில்லை..லை நீங்கள் கேட்டீர்களே அன்னைக்கு கருணா எண்டு புகழ்பாடிய நாம் அவரை இகழ்கிறோம்..ம் இன்று எண்டு அதற்கு பதில் அளிக்கும் முகமாகவே அவ் உதாரணத்தை காட்டினேன்..ன். :)

அதற்கு தாங்கள் பதில் அளிக்கவில்லை..லை மாறாக பயிற்சியாளர் பற்றிய கேள்வியை எழுப்பி உள்ளீர்கள்..ள் இறுதி நேரத்தில் ஒரு வீரர் ஊக்கமருந்து அருந்தினால்..ல் அது பயிற்சியாளருக்கு தெரிய வாய்பில்லை..லை அத்தகைய ஒரு வீரரா தான் நான் கருணா அங்கிளையும் பார்க்கிறேன்..ன்..

கடசியா நான் இவ் பாடலை பற்றி எதுவுமே கூறவில்லை..லை அப்படி இருக்கையில்..ல் அந்த கருத்தையும் தாங்களே சொல்லி விட்டு செல்கின்றீர்கள்..ள் ஆனபடியா எனி நான் அந்த கருத்தையும் சொல்கிறேன்..ன் அதாவது பாருங்கோ வசபண்ணா..ணா..

இந்த பாட்டில யுத்தத்தை கண்டித்து..து இரு நட்புள்ளங்கள் பாட்டு பாடீனம் நட்பாக..கா ஆனா அவையளுக்கே தெரியாம அரசாங்கம் என்ன செய்யும்..ம் கொழும்பில தமிழர் கைது மற்றும் கடத்தல் போன்றன இல்லை எண்டும் குறிப்பிட்ட அதாவது யாழ்பாணத்தில் தான் யுத்தம் நடக்கிற மாதிரியும்..ம் வடிவாக திரிப்பார்கள்..ள்.. :D

இது உங்களுக்கு தெரியாதா..??..இல்லாட்டி தெரிந்தும் கேட்கிறீங்களோ..ளோ..??.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இதில் ஈழதமிழ் சிங்கள இளைஞர்களால் புலத்தில் உருவாக்கப்பட்ட பல பாடல்கள் உண்டு கேட்டுமகிளுங்கள்.

http://worldtv.com/eelamboys

உங்கள் இணைப்பிற்கு நன்றிகள்.

உண்மையில் பிரித்தானியாவில் மார்கழி 31ந் திகதி இரவு நடைபெறும் புதுவருடக் கொண்டாட்டங்களில் சென்று பார்க்க வேண்டும் எமது தமிழ் இளைஞர்கள் பலர் சிங்களப் இளைஞர்களோடு இணைந்து அடிக்கும் கூத்துக்களை. இவர்களில் பலர் இந்துக்கள். இதில் பல புதுவருடக் கொண்டாட்டங்கள் சிங்கள இளைஞர்களால் ஒழுங்கு படுத்தப் பட்டதே. இங்கே பதியும் கருத்தக்களை பார்த்தவிட்டு இந்தக் கொண்டாட்டங்களைப் பார்த்தால் தான் புரியும் நம்மவரின் உண்மையான நிலைப்பாடுகள்.

பி.கு : தயவு செய்து இனி இங்கே வந்்து அவர்களைத் துரோகிகள் என்று வசைபாட வேண்டாம். அப்படி வசை பாடுவதென்றால் பிரித்தானியாவிலுள்ள முக்கால்வாசி தமிழ் இளைஞர்கள் துரோகிகள் ஆகிவிடுவார்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அஜீவன் அண்ணா உங்கள் திறமை அற்புதமானது!

இது போன்றே தமிழில் இருந்து சிங்களமும் உங்களுக்கு கைவந்தகலையாக இருக்கக்கூடும்.

நீங்கள் ஏன் தமிழீழ செய்திகளை உடனுக்கு உடன் தரும் ஒரு சிங்கள இணையத்தளம் ஆரம்பிக்கக்கூடாது!

நீண்டகால நோக்கில் அது பாரிய திருப்பத்தை ஏற்படுத்தும்!

நன்றி சாணக்கியன்.

இதில் சற்று பிரச்சனை உண்டு.

தமிழ் எழுத்துகளைப் போல

சிங்களத்தில் தட்டச்சு செய்வது இலகு அல்ல.

அதோடு மல்லுக்கட்டவும் நேரமில்லை. :)

எழுதுவது - வாசிப்பது - பேசுவதோடு சரி.

உதாரணத்துக்கு BBC சிங்கள சேவையாலேயே

அதைச் செய்ய முடியவில்லை.

இலங்கை தினசரி : இணையதளங்களில் மட்டுமே

சிங்களம் உண்டு.

இலங்கையில் செய்ய ஆட்கள் இருக்கிறார்கள்.

இதுமாதிரி வேலைகள் செய்ய அவர்கள் அச்சப்படுகிறார்கள்.

இருந்தாலும்

தேவையானவர்கள் தொடர்பு கொண்டால்

அதற்கான முயற்சிகளில் உதவ யோசிக்கலாம்?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வசபண்ணா..ணா..!!.. :)

மற்றது..து..!!

தாங்கள் விடுதலை புலிகல் இயக்கத்தில்..ல் ஏதாவது பொறுப்பில் இருந்தனீங்களோ..ளோ இல்லை ஏன் கேட்கிறன் எண்டா அவன் தண்டனை செய்திட்டு அங்க இருக்கிறான்..ன் இங்க இருக்கிறான் எண்டு எப்படி உங்களாள் சொல்ல முடியும்..ம்..??

முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். ஒரு விடயத்தைப் பற்றிய கருத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு அந்த விடயத்தில் தொடர்புடையவர்கள் மட்டுமே கருத்துக் கூற முடியும் என்றால் பலருக்கு அது முடியாத காரியம். என்னிடம் நீங்கள் கேட்ட அதே கேள்வியை நானும் திரும்பி உங்களிடமும் கேட்க முடியும்.

இப்போதுள்ள பலருக்கு விடுதலைப்புலிகளின் ஆரம்ப கால வரலாறுகள் கூடத் தெரியாது. ஆனால் எனக்குத் தெரியும். காரணம் ஆரம்பகாலத்திலிருந்து எனது மாமாமார்,அண்ணாமார் நேரடியாக விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்தவர்கள். அப்போது நான் மிகவும் சிறுவன். அதனால் எனக்கு நேரடியாக தொடர்புகள் இருந்தில்லை. இதைக்கூட நான் இங்கு தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் உங்களைப் போன்ற இயக்கங்களின் வரலாறுகளை அரைகுறையாகத் தெரிந்து கொண்டு மற்றவர்களைக் கேள்வி கேட்போரும் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே இதனைப் பதிகின்றேன்.

மன்னிகோனும் எனக்கு அரைகுறை அறிவு தான் இருக்கின்றது..து ஏற்று கொள்கிறேன்..ன் முழுவதும் தெரிந்த தாங்கள் தேவையானவற்றை மறைத்து..து அநாவசியமற்ற விடயங்களை..ளை உட் செலுத்துவது தான் ஏனோ..??. :) .மற்றது ஒரு விடயத்தில் இருக்கிறவை தான் அது பத்தி கூற வேண்டும் எண்டு நான் கூறவில்லை..லை..

நான் கூறியது என்னவெண்டால்..ல்

அவ் இயகத்தில் உள்ளவர்களாளேயே..யே அவ் இயகத்தை பற்றி..றி முழுவதும் தெரிந்து கொள்ள முடியாத நிலையில் தாங்கள் உங்களுக்கு..ம் எல்லாம் தெரியும் எண்டு..டு எடுத்தவுடன் கருத்தை வீசியதிற்கு தான்..ன் நான் அவ்வாறு வினாவினேன் வசபண்ணா..ணா.. :(

மற்றது..து நான் மேலே குறிப்பிட்ட விடயங்கள் ஒன்றுக்கு தெளிவான விளக்கம் தரவில்லை..லை மாறாக சிறு தவறை மட்டும் சுட்டி காட்டி இருக்கிறீர்கள்..ள்..மற்றது எனக்கு அரைகுறை வரலாறு தெரியலாம் ஆனா என் மாமாமார் மற்றும் அண்ணாமார்கள் அப்படி இல்லை நன்றி..றி.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

எனக்கும் தெரிய கனடாவிலும், லண்டனிலும் இப்படி தவறு செய்தவர்கள் இன்றும் இருக்கிறார்கள். :) போராட்ட ஆரம்ப காலங்களில் பல வங்கிகளுக்கு நடந்தது பலருக்குத் தெரிந்திருக்கும். உதாரணத்திற்கு அச்சுவேலியில் உள்ள ஒரு வங்கி. யாழ் இணையம் பலரும் பார்க்கும் ஒரு மூலம் என்பதால் பல விடயங்களை இங்கு குறிப்பிட விரும்பவில்லை... :)

மொட்டந் தலையையும் முழந்தாலையும் முடிச்சுப் போடாதீர்கள். ஏதோ விடயமாக ஆரம்பித்த பாடல்த் தலைப்பை உங்களைப் போன்றோர் திசை மாற்றி எங்கோ கொண்டு சென்றீர்கள். அதனால் சில உண்மையான தவறுகளையும் நான் சுட்டிக் காட்டினேன். அதற்காக எதை வைத்து நான் எல்லாம் தெரிந்தவன் போல் வாதாடுகின்றேன் என்கின்றீர்கள். அப்படியாயின் நீங்களும் எல்லாம் தெரிந்து தான் என்னோடு வாதம் செய்கின்றீர்கள் என்று எடுத்துக் கொள்ளச் சொல்கின்றீர்களா?? மன்னிக்கவும் உங்களைப் போல் தவறாக எதையும் நான் புரிந்து கொள்பவனல்ல.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் தெரிய கனடாவிலும், லண்டனிலும் இப்படி தவறு செய்தவர்கள் இன்றும் இருக்கிறார்கள். :) போராட்ட ஆரம்ப காலங்களில் பல வங்கிகளுக்கு நடந்தது பலருக்குத் தெரிந்திருக்கும். உதாரணத்திற்கு அச்சுவேலியில் உள்ள ஒரு வங்கி. யாழ் இணையம் பலரும் பார்க்கும் ஒரு மூலம் என்பதால் பல விடயங்களை இங்கு குறிப்பிட விரும்பவில்லை... :(

:)கவனம். உங்களைளயும் பிறகு இயக்கத்தில் இருந்தனீங்களோ என்று கேட்டு விடப் போகின்றார்கள். :D

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் தெரிய கனடாவிலும், லண்டனிலும் இப்படி தவறு செய்தவர்கள் இன்றும் இருக்கிறார்கள். :) போராட்ட ஆரம்ப காலங்களில் பல வங்கிகளுக்கு நடந்தது பலருக்குத் தெரிந்திருக்கும். உதாரணத்திற்கு அச்சுவேலியில் உள்ள ஒரு வங்கி. யாழ் இணையம் பலரும் பார்க்கும் ஒரு மூலம் என்பதால் பல விடயங்களை இங்கு குறிப்பிட விரும்பவில்லை... :)

போராட்ட ஆரம்ப காலத்தில் பலபேரும் தவறு செய்துவிட்டு ஒருவரில் ஒருவர் குற்றம் சாட்ட வெளிக்கிட்டுத்தான்.. இறுதியில்.. ஆளையாள் அடிபட்டுக் கொண்டு வெளிநாட்டுக்கு ஓடினார்கள். இன்று அவ்வாறல்ல. இன்று போராட்டம் மக்கள் மயப்படுத்தப்பட்டிருக்கிறது. விடுதலைப்புலிகள் இயக்கம் மக்களின் சக்தியாக விளங்குகின்றது மட்டுமன்றி மற்றைய இயக்கங்களோடு ஒப்பிடும் போது விடுதலைப்புலிகள் எப்போதும் கொள்கை.. ஒழுக்கம் என்பதற்கு முக்கியமளிப்பவர்களாக இருந்துள்ளனர். அன்றைய காலத்தில் வெளிநாட்டுக்கு (குறிப்பாக இந்தியாவுக்கு) ஓடிவந்தவர்களில் அநேகர்.. மாற்றுக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி.. புலிக்கு வால்பிடித்தவர்களும்.. புலிகள் என்ற பெயரை பயன்படுத்திக் கொண்டு குளிர்காய்ந்தவர்களும் (கருணா போன்றவர்கள்). உண்மையான புலிகள்.. நிச்சயம்.. தலைமைக்கு எதிராக இயங்கமாட்டார்கள்.. மக்களுக்கு எதிராக செயற்படமாட்டார்கள். :(

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். ஒரு விடயத்தைப் பற்றிய கருத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு அந்த விடயத்தில் தொடர்புடையவர்கள் மட்டுமே கருத்துக் கூற முடியும் என்றால் பலருக்கு அது முடியாத காரியம். என்னிடம் நீங்கள் கேட்ட அதே கேள்வியை நானும் திரும்பி உங்களிடமும் கேட்க முடியும்.

இப்போதுள்ள பலருக்கு விடுதலைப்புலிகளின் ஆரம்ப கால வரலாறுகள் கூடத் தெரியாது. ஆனால் எனக்குத் தெரியும். காரணம் ஆரம்பகாலத்திலிருந்து எனது மாமாமார்,அண்ணாமார் நேரடியாக விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்தவர்கள். அப்போது நான் மிகவும் சிறுவன். அதனால் எனக்கு நேரடியாக தொடர்புகள் இருந்தில்லை. இதைக்கூட நான் இங்கு தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் உங்களைப் போன்ற இயக்கங்களின் வரலாறுகளை அரைகுறையாகத் தெரிந்து கொண்டு மற்றவர்களைக் கேள்வி கேட்போரும் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே இதனைப் பதிகின்றேன்.

எல்லாம் தெரிந்த ஏகம்பரமா நீங்கள், அட எனக்கு தெரியாமல் போயிட்டுதே

:):):(

Link to comment
Share on other sites

இன்று போராட்டம் மக்கள் மயப்படுத்தப்பட்டிருக்கிறது.

நெடுக்ஸ்... சிலவேளைகளில் நீங்கள் நன்றாக பகிடி விடுகின்றீர்கள் !! :)

மக்கள் மயப்படுத்தப் பட்ட போராட்டம் என்றால் என்ன என்று கொஞ்சம் என்றாலும் தெரிந்தவர்கள் நிச்சயம் யாழில் உள்ளனர் ஐயா. சாப்பிடுவதற்கு மட்டுமே வாய் திறக்க அனுமதிக்கப்பட்ட ஒரு சமூகத்தில் இப்படி எல்லாம் பகிடு விடுகின்றீர்கள்

ஏற்கனவே இந்த உரையாடல் தலைப்பை மீறி எங்கோ போய்விட்டது... தேவையில்லாத பதங்களை போட்டு, மேலும் நன்றாக திசை திருப்புகின்றீர்கள்... நன்றி

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்... சிலவேளைகளில் நீங்கள் நன்றாக பகிடி விடுகின்றீர்கள் !! :):(

மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டம் என்றால் என்ன என்று கொஞ்சம் என்றாலும் தெரிந்தவர்கள் நிச்சயம் யாழில் உள்ளனர் ஐயா. சாப்பிடுவதற்கு மட்டுமே வாய் திறக்க அனுமதிக்கப்பட்ட ஒரு சமூகத்தில் இப்படி எல்லாம் பகிடு விடுகின்றீர்கள்

ஏற்கனவே இந்த உரையாடல் தலைப்பை மீறி எங்கோ போய்விட்டது... தேவையில்லாத பதங்களை போட்டு, மேலும் நன்றாக திசை திருப்புகின்றீர்கள்... நன்றி

20,000 போராளிகளும் இன்னும் மக்களும் செவ்வாய்க்கிரகத்தில் இருந்து வந்து போராடியதால் தான் நீங்கள் 4 இலட்சம் பேர் ரொரண்டோ ஊசியிலைக் காடுகளுக்குள் குடியமர முடிந்ததோ..???! ஏன் இந்த 4 இலட்சம் பேரும் அவர்களின் வாரிசுகளும்.. வல்லைவெளி வடலிக்குள் குடியமர மறந்தார்கள்.. மறுக்கிறார்கள்..??! வல்லைவெளியில் இன்று ஜனநாயகம் பேசும் தரப்புக்கள் தானே நிற்கிறார்கள். மீளப் போய் குடியமரலாமே.. ஏன் யோசிக்கிறார்கள்..??! :D

இன்று உலகெங்கும் எமது விடுதலைப்போராட்டம் தடைசெய்யப்பட்டிருப்பினும்.. மக்கள் தான் அந்தத் தடைகளையும் மீறி போராடிக் கொண்டிருக்கின்றனர். விடுதலைக்கான பயணத்தை மக்கள் தான் தொடர்கின்றனர்.

போர்க்காலம் என்பது உலகெங்கும் நெருக்கடியான காலம் தான். உலகப் போர்களின் போதெல்லாம் மக்கள் விரும்பி போர்க்களம் போவதில்லை. அவர்கள் எதிரிகளால் போராட நிற்பந்திக்கப்பட்டதால் தான்.. போராடி வென்றார்கள். யாரும் சாவை விரும்பி அணைக்க போர்களம் போவதில்லை. சாவிலும்.. பெரிதாக தமது உரிமைகளை.. தாய் மண்ணை நேசித்ததால் தான் அவ்வாறு போராடி மடிந்தனர். அது உங்களால் முடியாது என்பதற்காக எல்லோரும் அப்படியன்று. இரண்டாம் உலகப் போரில் வெற்றி முழக்கமிட்டுச் சென்ற ஜேர்மனியப் படைகளை பல தோல்விகளின் பின்னும் சளைக்காமல் போராடியதால் தான் ரஷ்சியா வெற்றி கொண்டது. போராட்டக் காலங்களில் மக்கள் போராட்ட உணர்வூட்டப்பட்டவர்களாகவே வைத்திருக்கப்பட வேண்டியவர்களாக இருக்கின்றனர். அங்கு அதுவே சரியான வழிமுறை எதிரியை எதிர்கொள்வதற்கு.

அமெரிக்காவின் ஒருமைப்பாட்டையும் தான் எதிர்த்தும் தான் பேச முடியாது.. இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் தான் எதிர்த்துப் பேச முடியாது.. அங்கெல்லாம் சன நாய் அகம் இருப்பதாகச் சொல்லிக் கொள்வதை அச்சிப்பிசகாமல் ஏற்றுக் கொள்ளும் பங்குவம் படைத்த நீங்கள் எல்லாம் எதிரியின் சர்வதேச சக்திகளின் பல நெருக்கடிகளுக்கும் மத்தியில் போராடும் மக்களின் குரல் அடைக்கப்பட்டிருப்பதாக கொக்கரிக்கிறீர்களே தவிர... அதுவல்ல உண்மை. வன்னியில் இருந்து சொல்லக் கூடிய கருத்தை.. கொழும்பில் இருந்தோ.. ரொரண்டோவில் இருந்தோ நியூயோர்க்கில் இருந்தோ சொல்ல முடியாது. இதற்குள்.. சாப்பிட மட்டும் தான் வாய் திறக்கிறார்கள் மக்கள் எங்கிறீர்கள்.

அமெரிக்காவில் மட்டும் உரிமைக்காக திறக்கின்றனரோ. அங்கும் மக்கள் அடக்கித்தான் வைக்கப்பட்டுள்ளனர். மக்களின் குரல் ஒடுக்கப்பட்ட நிலையில் தான்.. அமெரிக்கா சர்வ வல்லரசார திகழுகிறது. அந்த மக்கள் அதை உணராத வகைக்கு அங்கு அடக்குமுறை இருக்கிறது. அது உணரப்படும் போது அமெரிக்காவும் சிதறிச் சின்னாபின்னமாகும்..! ஆனால் ஈழத்தில் வன்னியில் எம்மக்கள் இன்று தமது சுதந்திர வேட்கையை சிங்கள அரசை நோக்கி பிரயோகிக்கின்றனர். காரணம் அந்த மக்களுக்கு உரிமை பற்றி சிந்திக்க இடமளிக்கப்பட்டிருப்பதால் :)

நெடுக்ஸ் ஐயா,

நான் ஏற்கனவே கூறியது போல இந்த உரையாடல் தலைப்பை விட்டு வேண்டும் என்றே திசை திருப்பப் பட்டாச்சு... ஒரு புது திரியை ஆரம்பியுங்கல், உங்களின் அரசியல் மிகையுணர்ச்சி பதில்(களுக்கு) பதிலளிக்கின்றேன். ஆனால் நான் சொன்னதாக நீங்கள் கற்பனை பண்ணிய விடயங்கள் சிலவற்றை எழுதுகின்றேன்

1. வல்லை வெளியிலும் அல்லது அதனைப் போன்ற இராணுவ, அரச கட்டுப்பாட்டு பிரதேசங்களிலும், சனநாயகம் இருக்கு என்றோ அல்லது அப் பிரதேசங்களை துப்பாக்கியி பிடிக்குள் வைத்து வெறியாட்சி நடாத்துபவர்கள் மக்கள் மயப் படுத்தப் பட்ட ஆட்சி முறையை கையாள்கின்றனர் என்றோ நான் எந்த இடத்தில் குறிப்பிட்டேன்?

2. இந்தியாவிலும், அமெரிக்காவிலும் சனநாயகம் இருக்கு என்று அச்சிப்பிசகாமல் நான் ஏற்றுக்கொண்டதாக எந்த இடத்தில் குறிப்பிட்டு உள்ளேன்? அல்லது அவை பற்றி எனது கருத்து என்ன என்றாவது எங்காகினும் யாழில் முன்பு குறிப்பிட்டேனா?

ஒருவர் சொல்லாத, எவற்றிலுமே குறிப்பிடாதவற்றை குறிப்பிட்டதாக சொல்லி, கற்பனையாக கதையாடாதீர்கள். உங்களின் கருத்துகளை நியாயபடுத்துவதற்கான முழு உரிமையும் உங்களுக்கு இருக்கும் அதே நேரத்தில் அதனை நேர்மையாக செய்யுங்கள். விவாதத்திற்கு நீங்கள் பதிலெழுத கூடியவாறு நான் எழுதாவிடின், உங்களின் விவாதத்திற்கு வசதிக்கேற்றவாறு நான் கூறியதாக கற்பனை செய்யாதீர்கள்

மற்றும் படி, மக்கள் மயபடுத்தப்பட்ட போராட்டம் என்றால் என்ன என்பதிலும், அவை உலகெங்கும் எவ்வாறு நடாத்தப்பட்டது, நடந்து வருகின்றது என்பதிலும், எனக்கு தெளிவான பார்வை இருக்கின்றது. அப்பார்வை உங்களின் பார்வையிலிருந்து அனேக விடயங்களில் வேறுபடுகின்றது. அந்த வேறுபாட்டை முன்வைப்பதற்கான எனது உரிமையை, நான் ரொரன்டோவின் ஊசியிலை காடுகளிற்கு இடம்பெயர்ந்ததாலோ, அல்லது வன்னியிலிருந்து போராடததனாலயோ இழக்கவில்லை என உறுதியாக நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் தெரிந்த ஏகம்பரமா நீங்கள், அட எனக்கு தெரியாமல் போயிட்டுதே

:):(:D

:)நீங்கள் சித்தனா அல்லது பித்தனா?? இப்ப தெரிந்து கொண்டு என்ன "சிங்" "சொய்ங்" போடப் போகின்றீர்களா?? :D:D

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பாடி முடிக்கேல்லை போல பக்கங்கள் கூடுது.. :)

என்ன நடக்குது? என்னென்னவோ நடக்குது. :)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஹலோ ஜீவன் சார்,

தயவு செய்து கீழே இணைப்பில் உள்ள சிங்கள பாடலுக்கான மொழி பெயர்ப்பை தர முடியுமா?

http://au.youtube.com/watch?v=Cxp5WsuaMUo

என்னை மிகவும் கவர்ந்த பாடல் இது.

உங்கள் ரசிகன் கள்ளச்சாமி

மன்னிக்கணும் சாமியாரே

இது உங்களைப் போன்ற முனிவரைப் பத்திதான் பாடியிருக்கார் :)

நான் முன்னர் இணைத்த பாடல் தவறானது.

அதுவும் நீங்கள் இணைத்த பாடல் போன்றதே.

இருந்தாலும்

இதுதான் நீங்கள் இணைத்த சரியான பாடல் .... சாரி

கருத்தும் பாடலும் இதோ:-

லியதம்பரா மிருதுவான மலர் நீ

முனிவர்களின் மனதையும் மாற்றுவாய்

//யாருமில்லை உலகத்தில் அவள் போல்//

மாயை மாயை உலகத்தை ஏய்க்கும்

கனவே கனவே இருளின் கண்ணுக்குள் மிதக்கும்

வீணயின் நரம்புகளில்

மிருதுவான சுவரமே அவள்தான்

என் மனதுக்கு இனிமை தரும்

மதுவும் நீதான்

லியதம்பரா..../

கானல்தான் கானல்தான் எமை ஏய்க்கும்

தூரத்தில் வானும் கடலும் இணைவது போல்

முடிவு இல்லாது தட்டும் தரை போல நீ

தேன் கூடு போன்ற உன் விழியின்

கண் இமையே மிருதுதான்

என் கானகம் போன்ற வாழ்விற்கு

நீர் துளியே நீதான்

லியதம்பரா//

http://www.sinhalajukebox.org/cgi-bin/song...45&compose=

இங்கே உள்ள இணைப்பில் 1வது பாடல் அது.

பாடகர்: ஆத்மா லியனகே

சிங்களத்தில்:

லிய தம்பரா முது குசுமக்கி ஆஏ

தவ்சன் கே தெகனே சம பிந்தினா

நே லோக்கே ஜீவே அயய்

மாயாவ மாயவ லொவ ரவட்டணா

சிகினயக்கி சிகினயகி அந்துரே பாவெனா

வீணாவே தத் அத்தரே

முது சுவரய அயமய்

மா ஹதட்ட ரச கெனெனா

லியதம்பரா....

மிரிங்குவகி மிரிங்குவகி அப ரவட்டணா

துற ஏத்த சித்திஜயகி

நிம நொபெனா

நில் நயண பிங்கு தெலகி

நெத் சரய சுமுதுய்

மகே ஜீவே வெலிகத்தரே

திய பிந்து எயய்

லியதம்பரா...

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சாப்பிடுவதற்கு மட்டுமே வாய் திறக்க அனுமதிக்கப்பட்ட ஒரு சமூகத்தில் இப்படி எல்லாம் பகிடு விடுகின்றீர்கள்.

மற்றும் படி, மக்கள் மயபடுத்தப்பட்ட போராட்டம் என்றால் என்ன என்பதிலும், அவை உலகெங்கும் எவ்வாறு நடாத்தப்பட்டது, நடந்து வருகின்றது என்பதிலும், எனக்கு தெளிவான பார்வை இருக்கின்றது. அப்பார்வை உங்களின் பார்வையிலிருந்து அனேக விடயங்களில் வேறுபடுகின்றது. அந்த வேறுபாட்டை முன்வைப்பதற்கான எனது உரிமையை, நான் ரொரன்டோவின் ஊசியிலை காடுகளிற்கு இடம்பெயர்ந்ததாலோ, அல்லது வன்னியிலிருந்து போராடததனாலயோ இழக்கவில்லை என உறுதியாக நம்புகின்றேன்.

எவ்வாறு ஒட்டுமொத்த சமூகமும் சாப்பிடத்தான் வாய்திறக்க அனுமதிக்கப்படுகிறது என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமோ அவ்வாறே எங்களுக்கு எமது சமூகத்தில் போராடப்புறப்பட்டு.. அதே போராட்டத்தை அகதி அந்தஸ்துக்கு விலைபேசி ஊசியிலைக்காடுகளிடையே குடியேறியுள்ள.. கனடா வாழ் தமிழ் அடிமைகள் பற்றி நாமும் கற்பனை செய்து கொள்ள முடியும். அதற்கு உங்களிடம் தனி அனுமதி பெற வேண்டும் என்ற அவசியத்தை நீங்கள் கொண்டிருக்கவில்லையே..!

நாங்களும் போராட்ட பூமியில் வாழ்ந்தவர்கள் தான். அங்குள்ள சுதந்திரத்தை சுவாசித்தவர்கள் தாம். நாம் சாப்பிடமட்டும் வாய் திறக்கவில்லை. எமது ஐயங்களை தெளிவுறுத்த கேள்வி எழுப்பக் கூடிய சூழ்நிலைகளை விடுதலைப்புலிகள் பல தடவைகள் எமது பாடசாலைச் சூழலிலும் சரி.. பிற இடங்களிலும் சரி ஏற்படுத்தி தந்திருந்தனர். எனவே உங்களால் கற்பனை ரீதியாக ஒட்டுமொத்த சமூகத்தையும் சாப்பிடத்தான் வாய்திறக்க அனுமதிக்கிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டை எம்முன் எழுப்ப முடியாது. இருந்தும் நீங்கள் எழுப்பும் போது.. பதிலுக்கு நாமும் கற்பனைகளுக்கு எதிரான உண்மைகளைச் சொல்வதில் தவறிருக்க வாய்ப்பில்லை.

எமது சமூகம் என்று விளித்துக் கொண்டதன் மூலம் பிற சமூகங்களில் பேச்சுக்கும் மக்கள் வாய்திறக்கினம் என்பதாக நீங்கள் ஏற்றுக் கொண்டுதானே கருத்துப் பகிர்ந்திருக்கிறீர்கள். அப்படி இருக்கும் போது நாம் பிறசமூகங்களில் உள்ள பேச்சுச் சுதந்திரத்தின் போலித் தன்மையை இனங்காட்டி உங்களுக்கு வலியுறுத்த வேண்டியவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறோம். அதற்கு எம்மைத் தூண்டியது தங்கள் ஒருதலைப்பட்சமான குற்றச்சாட்டு நிறைந்த கருத்தே ஆகும்.

எமது போராட்டம் தனி ஒரு குழுவினதல்ல. எமது போராட்டம் மக்கள் மயப்படுத்தப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது. அது 100% நடக்காமல் இருக்கலாம். ஆனால் ஆரம்பம் தொட்டு மக்களின் பங்களிப்பின்றி எமது போராட்டம் வளர்த்தெடுக்கப்படவில்லை. இது மக்களால் வளர்த்தெடுக்கப்பட்ட போராட்டம். அதற்கு விலையாய் 80,000 மேற்பட்ட மக்கள் தம் இன்னுயிரை அளித்துள்ளனர். 20,000 இற்கும் மேற்பட்ட தங்கள் பிள்ளைகளைப் போராளிகளாக்கி இருக்கின்றனர். அதுமட்டுமன்றி இன்று சர்வதேச அளவில் புலம்பெயர் மக்கள் தம்மையும் போராட்ட சக்தியாக மாற்றிச் செயற்படத் தொடங்கி இருப்பது போராட்டம் மேலும் மேலும் மக்கள் மயமாவதையே எடுத்துக்காட்டுகிறது. 1987 இல் திலீபன் அண்ணா சொன்ன மக்கள் போராட்டமாக எமது போராட்டம் இன்று கணிசமான அளவுக்கு மாறி இருக்கிறது என்பது மறுதலிக்க முடியாத உண்மை. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

எவ்வாறு ஒட்டுமொத்த சமூகமும் சாப்பிடத்தான் வாய்திறக்க அனுமதிக்கப்படுகிறது என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமோ அவ்வாறே எங்களுக்கு எமது சமூகத்தில் போராடப்புறப்பட்டு.. அதே போராட்டத்தை அகதி அந்தஸ்துக்கு விலைபேசி ஊசியிலைக்காடுகளிடையே குடியேறியுள்ள.. கனடா வாழ் தமிழ் அடிமைகள் பற்றி நாமும் கற்பனை செய்து கொள்ள முடியும். அதற்கு உங்களிடம் தனி அனுமதி பெற வேண்டும் என்ற அவசியத்தை நீங்கள் கொண்டிருக்கவில்லையே..!

உங்கள் மொழியில் கூறுவதானால், நீங்கள் இங்கிலாந்தில் (அல்லது வேறொரு வெளி நாடில்) போராட்டத்தை அகதி அந்தஸ்துக்கு விலைபேசி குடியேறியுள்ளதற்காக எல்லோரும் அப்படி என்று நினைத்தால் அது உங்களின் அறிவீனம். நான் கனடாவிற்கு புள்ளிகளின் அடிப்படையில் நிரந்தர வதிவுடமை அனுமதி பெற்று, குடும்பத்துடன் குடியேறியவன். எக் காலத்திலும் எனக்கு அகதி அந்தஸ்து கோர வேண்டிய தேவை வராது. இது ஒன்றும் பெருமை படக்கூடிய விடயம் அல்ல, ஆனால் நீங்கள் எல்லாரையும் எவ்வாறு உங்களைப் போன்றே பார்கின்றீர்கள் என்பதற்கு நல்ல உதாரணம் இது. கோபம் ஏற்படுத்தக் கூடிய வார்த்தை பிரயோகங்களை போட்டு உங்களின் தரத்தை மட்டுமே உங்களால் குறைக்க முடியும். யுத்த அனர்த்தங்களால் வெளி நாடுகளில் அகதி அந்தஸ்து கோரி குடிபெயர்ந்த தமிழ் மக்களை இந்தளவிற்கு மட்டமாக கருதும் நீங்கள் தமிழ் இனத்தின் தேசிய விடுதலை பற்றி பேசுவது நகைப்புக்கிடமானது

நாங்களும் போராட்ட பூமியில் வாழ்ந்தவர்கள் தான். அங்குள்ள சுதந்திரத்தை சுவாசித்தவர்கள் தாம். நாம் சாப்பிடமட்டும் வாய் திறக்கவில்லை. எமது ஐயங்களை தெளிவுறுத்த கேள்வி எழுப்பக் கூடிய சூழ்நிலைகளை விடுதலைப்புலிகள் பல தடவைகள் எமது பாடசாலைச் சூழலிலும் சரி.. பிற இடங்களிலும் சரி ஏற்படுத்தி தந்திருந்தனர். எனவே உங்களால் கற்பனை ரீதியாக ஒட்டுமொத்த சமூகத்தையும் சாப்பிடத்தான் வாய்திறக்க அனுமதிக்கிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டை எம்முன் எழுப்ப முடியாது. இருந்தும் நீங்கள் எழுப்பும் போது.. பதிலுக்கு நாமும் கற்பனைகளுக்கு எதிரான உண்மைகளைச் சொல்வதில் தவறிருக்க வாய்ப்பில்லை.

இதற்கு என்னால் தகுந்த ஆதாரங்களுடன் மறுக்க முடியும். இப்படி கேள்வி கேட்ட எத்தனை பேர் எங்கு போனார்கள் என்றும் சொல்ல முடியும். ஆனால் யாழ் நிர்வாகம் என்னை தூக்கி வெளியே போட்டு விடும். அத்துடன் இந்த திரி அதற்கானதும் அல்ல.ஆனால் உங்கள் சப்பைக்கட்டை எல்லோரும் நம்பாது உண்மை தெரிந்த பலர் யாழிலும் உள்ளனர் மற்றும் உங்களை போன்ற மிகையுணர்சி தேசியவாதிகளால் யாழில் எழுதாமல் விட்டும் பலர் உள்ளனர். இந்த விடயம் சம்பந்தமாக இந்த திரியில் இனி பதில் எழுதப் போவதும் இல்லை.

எமது சமூகம் என்று விளித்துக் கொண்டதன் மூலம் பிற சமூகங்களில் பேச்சுக்கும் மக்கள் வாய்திறக்கினம் என்பதாக நீங்கள் ஏற்றுக் கொண்டுதானே கருத்துப் பகிர்ந்திருக்கிறீர்கள். அப்படி இருக்கும் போது நாம் பிறசமூகங்களில் உள்ள பேச்சுச் சுதந்திரத்தின் போலித் தன்மையை இனங்காட்டி உங்களுக்கு வலியுறுத்த வேண்டியவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறோம். அதற்கு எம்மைத் தூண்டியது தங்கள் ஒருதலைப்பட்சமான குற்றச்சாட்டு நிறைந்த கருத்தே ஆகும். :icon_mrgreen:

ஆம் பேச்சுரிமை நன்கு உள்ள எத்தனையோ சமூகங்கள் இன்னமும் உள்ளன, நாடுகள் உள்ளன. ஆனால் நிச்சயம் அமெரிக்காவோ அல்லது இந்தியாவோ அல்ல. ஆனால் உங்களின் கருத்து வங்குரோத்தனத்தை காட்ட நான் கூறாது விடயங்களை புகுத்தி உங்களின் வசதிகான போக்கில் உரையாடல்களை திசை திருப்ப முயல்கின்றீர்கள்.

Link to comment
Share on other sites

[ஃஉஒடெ நமெ='னெடுக்கலபோவன்' டடெ='ணொவ் 3 2008, 03:20 PM' பொச்ட்='458146']

எமது போராட்டம் தனி ஒரு குழுவினதல்ல. எமது போராட்டம் மக்கள் மயப்படுத்தப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது. அது 100% நடக்காமல் இருக்கலாம். ஆனால் ஆரம்பம் தொட்டு மக்களின் பங்களிப்பின்றி எமது போராட்டம் வளர்த்தெடுக்கப்படவில்லை. இது மக்களால் வளர்த்தெடுக்கப்பட்ட போராட்டம். அதற்கு விலையாய் 80,000 மேற்பட்ட மக்கள் தம் இன்னுயிரை அளித்துள்ளனர். 20,000 இற்கும் மேற்பட்ட தங்கள் பிள்ளைகளைப் போராளிகளாக்கி இருக்கின்றனர். அதுமட்டுமன்றி இன்று சர்வதேச அளவில் புலம்பெயர் மக்கள் தம்மையும் போராட்ட சக்தியாக மாற்றிச் செயற்படத் தொடங்கி இருப்பது போராட்டம் மேலும் மேலும் மக்கள் மயமாவதையே எடுத்துக்காட்டுகிறது. 1987 இல் திலீபன் அண்ணா சொன்ன மக்கள் போராட்டமாக எமது போராட்டம் இன்று கணிசமான அளவுக்கு மாறி இருக்கிறது என்பது மறுதலிக்க முடியாத உண்மை. :icon_mrgreen:

[/ஃஉஒடெ]

ஐயா.. மக்களால் வளர்த்தெடுக்கப் பட்ட போராட்டம் எனும் பததிற்கும், மக்கள் மயப்படுத்தப் பட்ட போராட்டம் எனும் பததிற்கும் நிறைய வேறு பாடு உண்டு.

மற்றும், நேற்றும் கனடாவின் இளையோர் சமூகத்தினரால் ஏற்பாடு பத்தப்பட்ட நிகழ்விற்கு போனேன். அங்கு வந்து இருந்த எம்மவர்களின் எண்ணிக்கை நிச்சயம், நிச்சயம் நம்பிக்கை தரவில்லை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மொழியில் கூறுவதானால், நீங்கள் இங்கிலாந்தில் (அல்லது வேறொரு வெளி நாடில்) போராட்டத்தை அகதி அந்தஸ்துக்கு விலைபேசி குடியேறியுள்ளதற்காக எல்லோரும் அப்படி என்று நினைத்தால் அது உங்களின் அறிவீனம். நான் கனடாவிற்கு புள்ளிகளின் அடிப்படையில் நிரந்தர வதிவுடமை அனுமதி பெற்று, குடும்பத்துடன் குடியேறியவன். எக் காலத்திலும் எனக்கு அகதி அந்தஸ்து கோர வேண்டிய தேவை வராது. இது ஒன்றும் பெருமை படக்கூடிய விடயம் அல்ல, ஆனால் நீங்கள் எல்லாரையும் எவ்வாறு உங்களைப் போன்றே பார்கின்றீர்கள் என்பதற்கு நல்ல உதாரணம் இது. கோபம் ஏற்படுத்தக் கூடிய வார்த்தை பிரயோகங்களை போட்டு உங்களின் தரத்தை மட்டுமே உங்களால் குறைக்க முடியும். யுத்த அனர்த்தங்களால் வெளி நாடுகளில் அகதி அந்தஸ்து கோரி குடிபெயர்ந்த தமிழ் மக்களை இந்தளவிற்கு மட்டமாக கருதும் நீங்கள் தமிழ் இனத்தின் தேசிய விடுதலை பற்றி பேசுவது நகைப்புக்கிடமானது.

இதற்கு என்னால் தகுந்த ஆதாரங்களுடன் மறுக்க முடியும். இப்படி கேள்வி கேட்ட எத்தனை பேர் எங்கு போனார்கள் என்றும் சொல்ல முடியும். ஆனால் யாழ் நிர்வாகம் என்னை தூக்கி வெளியே போட்டு விடும். அத்துடன் இந்த திரி அதற்கானதும் அல்ல.ஆனால் உங்கள் சப்பைக்கட்டை எல்லோரும் நம்பாது உண்மை தெரிந்த பலர் யாழிலும் உள்ளனர் மற்றும் உங்களை போன்ற மிகையுணர்சி தேசியவாதிகளால் யாழில் எழுதாமல் விட்டும் பலர் உள்ளனர். இந்த விடயம் சம்பந்தமாக இந்த திரியில் இனி பதில் எழுதப் போவதும் இல்லை.

ஆம் பேச்சுரிமை நன்கு உள்ள எத்தனையோ சமூகங்கள் இன்னமும் உள்ளன, நாடுகள் உள்ளன. ஆனால் நிச்சயம் அமெரிக்காவோ அல்லது இந்தியாவோ அல்ல. ஆனால் உங்களின் கருத்து வங்குரோத்தனத்தை காட்ட நான் கூறாது விடயங்களை புகுத்தி உங்களின் வசதிகான போக்கில் உரையாடல்களை திசை திருப்ப முயல்கின்றீர்கள்.

சொந்த தேசத்தை விட்டு.. பொருளாதார அகதியானதை.. கனடாவில் புள்ளி அடிப்படையில் வந்தேன் என்று சொல்லி.. உங்களின் அடிமை வாழ்வை மறைக்க முற்படும் போதே தெரிகிறது.. உங்களின் தேசப்பற்றும்.. தேச விடுதலைப்போராட்டம் பற்றிய புரிதலும் எந்தளவுக்கு விசாலமானது என்பது.

வெளிநாட்டுக்கு எவர் புள்ளி அடிப்படையில் வருகிறார். ஊரில் உழைப்பதால் போதிய வருமானம் இல்லை என்று பேராசை கொண்டவர்களே அதிகம் வருகின்றனர். எம் பேராசிரியர் துரைராஜா போன்றவர்கள்.. கனடிய பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியர்களாக விளங்கிக் கொண்டும்.. ஊரோடுதான் இருந்தனர். அவர்களுக்கு புள்ளி அடிப்படையில் பொருளாதார அகதி அந்தஸ்துத் தேட வழிதெரியாமல் இருக்கவில்லை. அது அவர்களின் தேசப்பற்றுக்கு அடையாளம்.

கேள்வி கேட்ட எனக்கே எதுவும் நடக்காத போது.. எவர் என்னென்ன காரணத்துக்காக போனார்கள் என்பதை ஆராய வேண்டும். அதை ஆராயாமல் கேள்வி கேட்டதற்காக விசாரிக்கப்பட்டனர் என்பது சரியானதல்ல. அப்படி என்றால் நான் கூட விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும். உண்மையில் விடுதலைப்புலிகள் மக்களின் பேச்சுரிமையை எப்போதும் மறுதலிக்கவில்லை. மக்கள் கருத்துச் சொல்ல பல வழிகளை கையாண்டிருந்தனர். மக்கள் தங்கள் அபிப்பிராயங்களை வெளியிட தகவல் பெட்டிகளைக் கூட திறந்திருந்தனர். வசதி படைத்த நாடுகளில் கூட அரசிடம் ஒரு பொதுமகன் தன் குறையைச் சொல்ல போதிய வசதி கிடையாது. ஆனால்.. பேச்சுரிமை என்ற போர்வையில்.. எதிரிக்கு போராட்டத்தை மக்களைக் காட்டிக் கொடுக்க முனைந்தவர்கள் பலர். அவர்கள் தண்டனைக்குரியவர்களே. அவர்கள் சாதாரண மக்களாகக் கருதப்பட முடியாதவர்கள். எந்த தேசத்திலும் தேசத்துரோகிகளுக்கு தண்டனை ஒன்றுதான்.

பேச்சுரிமையில் மற்றைய நாடுகளை ஒப்பிட முதல்.. தமிழீழம் வழங்கும் பேச்சுரிமை மற்றவையை விட சிறப்பு என்பதை உணர்ந்தவர்கள் நாம். நாங்கள் பொதுமக்கள். எங்களுடைய கருத்துக்கள் பொதுமக்கள் சார்ந்தது. தேசத்தைக் காட்டிக் கொடுத்தவர்கள் சார்பில்.. பேச்சுரிமை என்ன வாழ்வுரிமையைக் கூட எதிர்பார்ப்பது கடினம்..!

இங்கு கருத்துதான் பகரப்படுகிறதே தவிர.. அதில் உணர்ச்சி வெளிப்படுவதாக எண்ணிக்கொண்டு.. ஒதுங்கிறார்கள் என்று கவலைப்படுவது மோசமான கருத்துக்கள நாகரிகமற்ற சிந்தனையின் வெளிப்பாடு. கருத்தைக் கருத்தால் நாகரிகமான முறையில் சொல்ல.. நிறுவ இங்கு எவருக்கும் எந்தத் தடையும் இருப்பதாகத் தெரியவில்லை. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஐயா.. மக்களால் வளர்த்தெடுக்கப் பட்ட போராட்டம் எனும் பததிற்கும், மக்கள் மயப்படுத்தப் பட்ட போராட்டம் எனும் பததிற்கும் நிறைய வேறு பாடு உண்டு.

மற்றும், நேற்றும் கனடாவின் இளையோர் சமூகத்தினரால் ஏற்பாடு பத்தப்பட்ட நிகழ்விற்கு போனேன். அங்கு வந்து இருந்த எம்மவர்களின் எண்ணிக்கை நிச்சயம், நிச்சயம் நம்பிக்கை தரவில்லை.

நம்பிக்கையை எதிர்பார்க்கக் கூடாது. மாறாக நம்பிக்கையை ஊட்ட வேண்டும். மக்கள் போராட்டத்தில் மக்கள் தான் போராளிகள்.. பங்காளிகள். எவர் ஒதுங்கி இருக்கிறாரோ அவரைப் பார்த்து திட்டிக் கொண்டு.. நம்பிக்கை வரவில்லை என்று அபிப்பிராயம் சொல்வதல்ல.. மக்கள் போராட்டத்தின் தன்மை. ஒதுங்கி இருப்பவர்களை அரவணைத்துக் கொண்டு போராட்டப் பாதை வழி செல்வதுதான் ஒவ்வொரு தமிழ் பொதுமகனினதும்.. மகளினதும் போராட்டக்கடமையே தவிர.. அவன் வரவில்லை.. இவன் வரவில்லை.. என்று விமர்சனம் செய்து கொண்டு.. போராட்டத்தில் ஒருங்கிணையும் மக்களின் நம்பிக்கை மீது அவநம்பிக்கையை விதைப்பதல்ல போராட்டத்தை மக்கள் மயப்படுத்துவதன் படிநிலை.

மக்கள் போராட்டத்தில் அடிப்படையைக் கூட கடைப்பிடிக்காமல்.. மக்கள் மயம் என்பதன் அர்த்தம் புரியும்.. அது தெரியும் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் பயனில்லை. தெரிந்தால்.. பங்காளியாகி.. மக்களுக்கு வழிகாட்டியாக இருந்து அவர்களை வழிநடத்துங்கள். எமது போராட்டப் பாதையில் அதன் வெற்றி இலக்கை துரிதப்படுத்த. அதுதான் எமக்குத் தேவை இப்போ. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

சொந்த தேசத்தை விட்டு.. பொருளாதார அகதியானதை.. கனடாவில் புள்ளி அடிப்படையில் வந்தேன் என்று சொல்லி.. உங்களின் அடிமை வாழ்வை மறைக்க முற்படும் போதே தெரிகிறது.. உங்களின் தேசப்பற்றும்.. தேச விடுதலைப்போராட்டம் பற்றிய புரிதலும் எந்தளவுக்கு விசாலமானது என்பது.

வெளிநாட்டுக்கு எவர் புள்ளி அடிப்படையில் வருகிறார். ஊரில் உழைப்பதால் போதிய வருமானம் இல்லை என்று பேராசை கொண்டவர்களே அதிகம் வருகின்றனர். எம் பேராசிரியர் துரைராஜா போன்றவர்கள்.. கனடிய பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியர்களாக விளங்கிக் கொண்டும்.. ஊரோடுதான் இருந்தனர். அவர்களுக்கு புள்ளி அடிப்படையில் பொருளாதார அகதி அந்தஸ்துத் தேட வழிதெரியாமல் இருக்கவில்லை. அது அவர்களின் தேசப்பற்றுக்கு அடையாளம்.

1. நான் நிச்சயம் கனடாவில் நன்கு உழைக்க முடியும், என் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் பெற முடியும், குடும்பத்தை நன்றாக நிம்மதியாக வைத்திருக்க முடியும் என்ற காரணத்தினால் தான் வந்தேன். அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.அத்துடன் நிச்சயம், நிச்சயம் போர் அற்ற சூழலை விரும்பினேன். இழப்புகள் என்னுடன் மட்டுமே போகட்டும் என் பிள்ளைக்கு வேண்டவே வேண்டாம் என விரும்பினேன். என்னால் முடிந்தால் இன்னும் எல்லோரையும் இப்படி கூப்பிட முயல்வேன்

2. இவ்வளவு பேசும் நீங்கள், எவ்வளவு சுதந்திரத்தை அனுபவித்த நீங்கள் ஏன் இங்கிழாந்து வந்தீர்கள்? சுதந்திர வாழ்கை வேண்டாம், அடிமை வாழ்க்கை வேண்டும் என்ற ஆவலினாலா?.

நான் என் தேசத்தில் போர் அதனால் என் உறவுகள் வாழ முடியவில்லை என் வாழ்க்கை தான் போனது போயிட்டுது எனியாவது நான் வெளிநாட்டுக்குப் போய் பெட்டை ஒன்றைக் கட்டி.. அதன் மூலம் சந்ததி பெருவிருத்தி செய்து நான் வாழும் நாட்டின் பொருளாதார நெருக்கடியில் இருந்தும் அதனை என் உழைப்பால் முன்னேற்றலாம் என்று வந்திருக்கிறேன்.. என்று சொல்ல முடியாது.

நான் என் தேசத்தின் எதிர்காலத்தில் அதற்கு எவ்வாறு என்னால் உபயோகமாக சேவை செய்ய முடியும் என்ற ரீதியில் இங்கு வாழ்கிறேனே தவிர.. வெள்ளையனிடம் என் தேசத்தை.. அதன் விடுதலைப் போராட்டத்தை.. அதை வேண்டி நிற்கும் மக்களைக் காட்டிக் கொடுத்து.. எனது வாழ்க்கைதான் போச்சுது.. என் பிள்ளையாவது குண்டுச் சத்தம் கேட்காமல் வாழட்டும் என்று வரவில்லை.

எமது மக்கள் சொந்த பூமியில் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் போது அவர்களுடன் கூட வாழ்ந்து அவர்களின் தேவைகளை குறைவின்றி நிவர்த்தி செய்ய எம்மாலான பட்டறிவைப் பயன்படுத்த அறிவைப் பெற்றுக் கொள்ள முனைகின்றோமே தவிர.. எமது தேசத்துக்கு வெளியில் எமக்கு சுதந்திர வாழ்வில்லை என்பதில் நாம் தெளிவாயே இருக்கின்றோம்..! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

Guest
This topic is now closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.