Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

பாடகர் மனோகரணும் சிங்களவனும் சேர்ந்து பாடும் பாடல்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

உங்களோட சேர்ந்து :lol:

ஆமாங்க... இஞ்ச கடைசியில கருத்து எழுதுற தாங்களும் போராளிகள் எண்டுகூறி கடைசியில தங்களுக்கே தாங்கள் மாமனிதன், நாட்டுப்பற்றாளர் விருது எல்லாம் குடுப்பாங்கள் போல இருக்கிது. நம்மோளுக்கும் இப்பிடி கிளுகிளுப்பாக கருத்து எழுதுறது கஸ்டமான வேலை இல்லை. ஆனால் நாம மற்றவன் தியாகத்தில குளிர்காய்ஞ்சு எம்மை பிரபலப்படுத்த முயற்சிக்க இல்லை. நாம சாதாரண மனிதர்களாக இருந்துவிட்டு போகின்றோம்.

Link to post
Share on other sites
 • Replies 152
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

பழைய சுத்துமாத்து வரலாறுகளை நிழலி என்பவர் தலைகீழாக்கி விடுதலைப்புலிகள் மீது சேறு பூச நினைக்கிறார்.

அற்புதன் காலத்து தினமுரசில் (இன்று அது ஈபிடிபி ஒட்டுக்குழுவின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் அதன் சமூகவிரோத தேசவிரோதப் பணிகளை செய்து கொண்டிருக்கிறது). அற்புதன்.. விஜிதரன் கொலை.. ஆலாலசுந்தரம் கொலை.. முரசொலி அதிபர் மகன் கொலை, உமாமகேஸ்வரன்.. கே எஸ் ராஜா.. என்று அனைத்துக் கொலைகளுக்கும் பின்னால் இருந்த தேசத்துரோகிகளை இனங்காட்டியதற்காக கொழும்பில் வைத்துக் கொல்லப்பட்டார். விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை காரணமின்றி யாருக்கும் மரணதண்டனை வழங்கியது கிடையாது.

இந்தியப்படை காலத்தில் தமிழ் மக்களையும் தமிழ் தேசியவாதிகளையும் வேட்டையாடிய மண்டையன் குழு பற்றியும் அற்புதன் எழுதி இருந்தார். அதன் பின்னணியில் செயற்பட்டவர்கள் அமைச்சராகவும்.. இன்னும் சிலர் இந்தியாவிலும் பதுங்கி இருக்கின்றனர்.

அதுவும் பல எச்சரிக்கைகளின் பின்னரே வழங்கப்பட்டன படுகின்றன. பல் வேறு ஆயுதக்குழுக்கள் யாழ் குடாவில் செயற்பட்ட காலத்தில் கூட விடுதலைப்புலிகள் அவர்களை தம்மிடம் சரணடைந்து கொண்ட கொள்கைக்காகப் போராட இணையும் படிக் கேட்டுக் கொண்டனர். அதுமட்டுமன்றி 90களில் இரண்டு தடவைகள் ஒட்டுக்குழுவினருக்கு பொதுமன்னிப்பும் அளித்தனர். ஆனால் அதையெல்லாம் நிராகரித்த ஒட்டுக்குழுவினர்.. தேசத்துரோக.. போராட்ட விரோத செயல்களிலேயே தொடர்ந்து ஈடுபட்டு எதிரிக்கு காட்டிக் கொடுத்து வருவாய் பார்க்கலாயினர். அதனால் பல பொதுமக்கள் உட்பட போராளிகளை தமிழீழம் இழக்க நேரிட்டது.

ரஜனி திரணகமவைச் சுட்டது பற்றியும் அற்புதன் எழுதி இருந்தார். அதைச் செய்தது.. றோவின் உத்தரவின் பெயரில் வரதராஜப்பெருமாள் என்பதை தெளிவாக எழுதி இருந்தார். ஆனால் பழிகள் எல்லாம் புலிகள் மீதே போடப்பட்டன. இந்தக் காரணங்களாலும் தான் பல்வேறு ஆயுதக்குழுக்கள் தடைசெய்யப்பட்டு எல்லோரும் ஒரே இயக்கமாகப் போராட அழைக்கப்பட்டனர். உண்மையில் அது தான் தமிழீழப் போராட்டம் இன்று வரை நிலைத்து நிற்க உதவி இருக்கிறது. தலைவரின் அன்றைய கோரிக்கைகளை.. எல்லோரும் ஒருமனதாக ஏற்றுப் போராடி இருப்பின்.. ஒரே கொள்கையான தமிழீழத்தை என்றோ வென்றெடுத்திருக்க முடியும். எனினும்.. தமிழீழம் நாளை கிடைப்பெறினும்.. தலைவரின் அன்றைய அந்த தீர்க்கதரிசனமான முடிவே இன்றைய பலம்பொருந்திய தமிழ் மக்களின் சேனையை உருவாக்கக் காரணமானது என்பதை பலரும் ஒரு நாள் விளங்கிக் கொள்வர். :lol:

Link to post
Share on other sites

மிஸ்ரர் நெடுக்ஸ்

1. ராஜினியை சுட்டவர்கள் யாரெண்டு நான் இங்கு குறிப்பிடவில்லை. அவரினை இந்திய படையின் கைகூலிகள் கொல்வதற்கான முழு காரணங்களும் இருந்தன. எனவேதான் அந்த குழப்பம் இன்று வரை இருக்கின்றது. முரசொலி ஆசிரியர் திருச்செல்வத்தின் மகனான அகிலனை (எனது பாடசாலை) கொன்றது ஈ.என்.டி.எல். எப் எனும் கொலை குழு என்பதும் தெரியும். நீங்கள் குறிப்பிட்ட மற்றவர்களின் கொலையை யார் யார் செய்தது என்று எல்லோருக்கும் நன்கு தெரியும். வழக்கம் போல சொல்லாத விடயங்களை புகுத்தி வெற்று வீராப்பு பேசுகின்றீர்கள்.

2. அற்புதன், எனக்கு ஒன்று விட்ட அண்ணன். அவரையும், அவரின் அரசியல் பம்மாத்துகளையும் உங்கள் பலரை விட எனக்கு நன்கு தெரியும். ஈ.பி.டி.பி கும்பலின் சித்திரவதை பொறுப்பாளராக இருந்து கொண்டு, ஒவ்வொரு தடவையும் அந்த கும்பலின் பாராளுமன்ற பிரதிநிதியாக அவசரகாலச்சட்டத்திற்கு கை உயர்த்தி கொண்டு தன் பத்திரிகை வியாபாரத்திற்காக புலிகள் ஆதரவு, போராட்ட ஆதரவு கோஷம் போட்டவர் அவர். இன்று போல் தினமுரசிற்கு சிங்கள அரசு நிதியுதவியினை அன்று செய்யாததால் அப்படி அவருக்கு நடக்க வேண்டி வந்தது. மிக நெருங்கிய உறவாக இருந்தும் அவரின் மரண வீட்டிற்கு கூட போகாமல் இருந்தவர்கள் நாம். உட்கட்சி பிரச்சனையில் தான் டக்ளஸ் போட்டு தள்ளினார். அவரின் மரணத்துடன், லண்டனிற்கு அவரின் சகபாடி சந்திரமோகன் ஒடி ஒளிந்து கொண்டார். இது தொடர்பாக முந்த நாளும் யாழில் எழுதி இருந்தேன்

3. வரலாறு என்பதற்கு வயதில்லை, அதனை பழசு புதுசு என கட்டம் கட்ட. அது ஒரு கால ஓட்டம்

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

Guest
This topic is now closed to further replies.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • மயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள் மட்டக்களப்பு மாவட்ட எல்லை பகுதியான ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு, மாதவனை பிரதேசம் நாளுக்கு நாள் வெளி மாவட்டத்தினை சேர்ந்த பெரும்பான்மை சமூகத்தினாரால் அபகரிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி கால்நடை பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதாவது, தற்போது ஐயாயிரம் ஏக்கர்கள் வரை அபகரிக்கப்பட்டு, அங்கிருக்கும் பண்ணையாளர்கள் விரட்டியடிக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை பகுதிக்கு விஜயம் செய்து, பண்ணையாளர்களுடன் கலந்துரையாடியிருந்தனர். இதன்போது கருத்து தெரிவித்த பண்ணையாளர்கள், மேய்ச்சல் தரைக்கு என ஒதுக்கப்பட்ட மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் பல காலமாக தாங்கள் கால்நடைகளை வளர்த்து வருவதாகவும், சில காலமாக பொலநறுவையில் இருந்துவரும் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்களினால் தாங்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவித்தனர். அத்துடன் 2013ஆம் ஆண்டு தொடக்கம் இப்பகுதிக்கு வந்த பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள், இப்பகுதிகளில் காணிகளை அபகரித்து பயிர்ச்செய்கை முன்னெடுத்துவந்த நிலையில், 2015ஆம் ஆண்டு முன்னாள் அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்று, குறித்த அத்துமீறல்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருந்ததாகவும் அப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். எனினும் தற்போது மீண்டும் பொலநறுவையில் இருந்துவரும் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் காணிகளை அபகரிப்பதுடன், அப்பகுதி தங்களின் நிலம் என்றும் மாடுகளை அப்பகுதியில் மேயவிடவேண்டாம் எனவும் மாடுகளை அங்கிருந்து கொண்டுசெல்லுமாறும் அச்சுறுத்தல் விடுப்பதாகவும் அவை தொடர்பில் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் முதல் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினரிடம் முறையிட்டும் எதுவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பாடாமையினால் பரம்பரை, பரம்பரையாக பாதுகாத்து, பாராமரித்து வந்த காணிகளை விட்டு தற்போது வெளியேறி வருவதாகவும் கண்ணீருடன் தெரிவித்தனர். குறித்த சந்திப்பில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், பா.அரியநேந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரசன்ன இந்திரகுமார், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் கி.சேயோன், மாநகர சபை உறுபினர் துரைசிங்கம் மதன், ஏறாவூர்பற்று பிரதேச சபையின் உறுப்பினர்களான முரளிதரன், வேல் பரமதேவா மற்றும் பண்ணையாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். http://athavannews.com/மயிலத்தமடுவில்-நாளுக்கு/
  • யாழில் ஒரு தனிமனிதனின் சமூகப் பொறுப்பற்ற நடவடிக்கையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்- வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒரு தனிமனிதனின் சமூகப் பொறுப்பற்ற தவறான நடவடிக்கையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாது தவிர்ப்பதற்கு இவ்வாறு வேறு மாகாணங்களில் இருந்து தமது பிரதேசங்களுக்கு வருகை தந்தோர் பற்றிய தகவல்களை அவர்களோ அல்லது பொதுமக்களோ தமது பிரிவு சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர், குடும்பநல உத்தியோகத்தர் அல்லது வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் 24 மணிநேர அவசர அழைப்பிலுள்ள 021 222 6666 என்ற இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு விபரங்களை அறியத்தர வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். கொழும்பில் இருந்து யாழ். மாவட்டத்திற்கு அண்மையில் வருகை தந்த ஒருவர் சுகாதார வைத்திய அதிகாரிக்கு எவ்வித தகவலையும் வழங்காததுடன் சுயதனிமைப்படுத்தலையும் கடைபிடிக்காது யாழ். மாவட்டத்தில் உள்ள பல நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்கும் சென்று வந்துள்ளார். பின்னர், அவரைப் பற்றிய தகவல் சுகாதாரத் திணைக்களத்தினருக்குக் கிடைத்ததைத் தொடர்ந்து, அவர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டடுள்ளது.அதனால், இவர் சென்று வந்த அனைத்து நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கானவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.ஆகவே தங்களையும் சமூகத்தையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசர சேவைகளை எம்மால் வழங்க முடியும். இந்நோய் எமது மாகாணத்தில் பரவாதிருக்க எமக்கு தகவல்களை வழங்கி ஒத்துழைப்பு வழங்கவும்” என்று வைத்தியகலாநிதி ஆ.கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.(15)   http://www.samakalam.com/செய்திகள்/யாழில்-ஒரு-தனிமனிதனின்-ச/  
  • எத்தியோப்பியப் பிரதமர் அபிய் அகமது அறிவிப்பு: டீக்ரே பிராந்தியத் தலைநகரை ராணுவம் பிடித்துவிட்டது பட மூலாதாரம், GETTY IMAGES எத்தியோப்பியாவில் வட டீக்ரே பிராந்தியத்தின் மீது அந்நாட்டின் மத்திய அரசு நடத்திவரும் போரில் டீக்ரே பிராந்தியத் தலைநகரம் மிகாய்லி அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக அறிவித்துள்ளார் பிரதமர் அபிய் அகமது.  பிராந்தியத்தின் ஆளும் கட்சியான டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கு (டீ.ம.வி.மு.) எதிரான தாக்குதலை தீவிரப்படுத்திய மத்திய அரசுப் படைகள், முன்னதாக மிகாய்லி நகரத்தில் நுழைந்திருந்தன.  ராய்டர் செய்தி முகமையிடம் பேசிய டீ.ம.வி.மு. தலைவர், தெப்ரஸ்தீயான் கெப்ரமீக்கேல் சுயநிர்ணய உரிமைக்கான உரிமையைக் காக்க தொடர்ந்து போராடப்போவதாகவும், ஊடுருவல்காரர்களை கடைசி வரை எதிர்த்துப் போராடப்போவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சண்டையில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரான எத்தியோப்பியப் பிரதமர் அபிய் அகமது டீக்ரே பிராந்தியத்தின் மீது சுமார் ஒரு மாதம் முன்பு ராணுவ நடவடிக்கையை அறிவித்தார்.  இப்பிராந்தியத்தின் ஆளும் கட்சியான டீ.ம.வி.மு. தலைநகர் மிகாய்லியில் உள்ள எத்தியோப்பிய ராணுவத்தின் வடக்கு கட்டளைத் தளத்தை தாக்கியதாக குற்றம்சாட்டி இந்த தாக்குதலைத் தொடங்கினார் அவர். பிரதமர் என்ன சொல்கிறார்? பட மூலாதாரம், GETTY IMAGES   படக்குறிப்பு,  பிரதமர் அபிய் அகமது மிகாய்லியைப் பிடித்ததோடு ராணுவ நடவடிக்கை முடிவுக்கு வருவதாகவும் அபிய் அகமது அறிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்ட அவர் "'டீக்ரே பிராந்தியத்தில் ராணுவ நடவடிக்கை நிறைவடைந்ததையும், நிறுத்தப்படுவதையும் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று கூறியுள்ளார்.  பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் உரிய கவனத்தோடு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறிய அவர், டீ.ம.வி.மு. கைது செய்த சிப்பாய்கள் விடுவிக்கப்பட்டதாகவும், விமான நிலையமும், பிராந்திய அலுவலகங்களும் அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அறிவித்தார்.  அழிக்கப்பட்டவற்றை மறுகட்டுமானம் செய்வதும், போரினால் வெளியேறியவர்களை மீண்டும் திரும்பிக் கொண்டுவருவதும்தான் தற்போது முன்னால் இருக்கும் பணி என்றும் அவர் தெரிவித்தார்.   பட மூலாதாரம், REUTERS   படக்குறிப்பு,  டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கும் எத்தியோப்பிய மத்திய அரசுக்கும் இடையே மூண்ட போர் காரணமாக குழந்தையோடு சூடான் நாட்டுக்குள் நுழைந்த எத்தியோப்பியப் பெண். டீக்ரே பிராந்தியத்தில் செல்பேசி, இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் சண்டை நடப்பதைப் பற்றி சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.  டீ.ம.வி.மு. என்ன சொல்கிறது? ராய்டர்ஸ் செய்தி முகமைக்கு அனுப்பிய வரிவடிவத் தகவலில் (டெக்ஸ்ட் மெசேஜ்) களத்தில் உள்ள சண்டை நிலவரம் பற்றி நேரடியாக எதையும் குறிப்பிடாத டீ.ம.வி.மு. தலைவர் தெப்ரஸ்தீயான் கெப்ரமீக்கேல், அரசுப் படைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, "அவர்களின் கொடூரம், கடைசிவரை இந்த ஊடுருவல்காரர்களை எதிர்த்துப் போராடவேண்டும் என்ற எங்கள் உறுதியை அதிகப்படுத்தவே செய்யும்" என்று குறிப்பிட்டுள்ளார்.  "சுய நிர்ணயத்துக்கான எங்கள் உரிமையைப் பாதுகாத்துக்கொள்வது இது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  முன்னதாக டீ.ம.வி.மு. அறிக்கை ஒன்றை ஏ.எஃப்.பி. செய்தி முகமை வெளியிட்டது. அதில், "ஆர்ட்டிலரி மற்றும் போர் விமானத் தாக்குதலையும், படுகொலைகளையும் சர்வதேச சமூகம் கண்டிக்கவேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.   பக்கத்து நாடான எரித்ரியாவின் அரசும் மிகாய்லி மீதான தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.  டீ.ம.வி.மு. தற்போது மலைப் பகுதிகளுக்குத் திரும்பிச் சென்று அங்கிருந்து மத்திய அரசுப் படைகள் மீது கொரில்லா தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.  பிரச்சனையின் பின்னணி 2018ல் அபிய் அகமது பிரதமர் ஆகும் முன்புவரை டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கு எத்தியோப்பியாவின் அரசியலிலும், ராணுவத்திலும் பெரிய ஆதிக்கம் இருந்தது. அபிய் அகமது பிரதமரானவுடன், எரித்ரியாவுடன் நடந்து வந்த நீண்ட கால சண்டையை முடிவுக்கு கொண்டுவந்தார். நிறைய சீர்திருத்தங்களை மேற்கொண்டார். கடந்த ஆண்டு, ஆளும் கூட்டணியில் இடம் பற்றிருந்த பல்வேறு இனக்குழுக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளை இணைத்து ஒரே தேசியக் கட்சியை அமைத்தார். ஆனால், இந்தக் கட்சியில் இணைய டிபிஎல்எஃப் எனப்படும் டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி மறுத்துவிட்டது. பட மூலாதாரம், GETTY IMAGES   படக்குறிப்பு,  1991 வரை எத்தியோப்பியாவின் அதிபராக இருந்த மெனிகிஸ்டு ஹைலீ மரியம் (வலது) ஆட்சி அகற்றப்பட்டதற்கு டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி முக்கியக் காரணமாக இருந்தது. மரியத்துடன் உடனிருப்பவர் முன்னாள் கியூப அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ. கடந்த செப்டம்பர் மாதம் டீக்ரேவில் பிராந்தியத் தேர்தல் நடந்தது. கொரோனா வைரஸ் காரணமாக தேர்தல் நடத்துவதற்கு மத்திய அரசு விதித்திருந்த நாடு தழுவிய தடையை மீறி இந்த தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தல் சட்டவிரோதமானது என்று அறிவித்தார் பிரதமர் அபிய் அகமது. அவர் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் செயல் என்று டீக்ரே நிர்வாகம் கருதியது.  டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி நவம்பர் 4ம் தேதி ஒரு ராணுவ முகாமை தாக்கிவிட்டதாகவும், அந்த அமைப்பு ஒரு அளவை மீறிப் போய்விட்டதாகவும் கூறி அதன் மீது ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார் அபிய் அகமது. ஆனால், அந்த ராணுவ முகாம் தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்றது டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி.     https://www.bbc.com/tamil/global-55119056
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.