Jump to content

புலத்தீரே உறைக்கிறதா உமக்கு?


Recommended Posts

நான் ஒரு நடிகரின் மார்கெட் நிலவரத்தை வைத்தே படத்தின் விலை தீர்மானிகப்படுகின்றதென்று நேராகத் தொட்ட மூக்கை நீங்கள் சுற்றி வந்து தொடுகின்றீர்கள். ஓடுற குதிரையை நம்பித் தான் எம்மவர் காசைப் போடுவினமே தவிர ஓடாத குதிரையிலில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமே. ஆனால் வெளிநாட்டு உரிமை விற்பனையின் பின் வேறெந்தப் பணமும் தயாரிப்பாளருக்குப் போவதில்லை. இது தான் உண்மை முதலில் அதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

நான் எமது கலைஞர்கள் பற்றியும் சில விடயங்ககளையும் உங்களிடம் கேட்டிருந்தேனே. ஏன் அதைப் பற்றி ஒன்றையும் நீங்கள் சொல்லவில்லை.

அடுத்தது எனக்கொரு சந்தேகம் முன்பு நான் சிறுவனாக இலங்கையில் இருந்த போது "சங்கராபரணம்" என்ற ஒரு தெலுங்குப் படம் யாழ்ப்பாண சிறிதர் தியேட்டரிலை வந்து ஓடியது. அப்போ எங்கடை வீட்டாரும் நல்ல படமென்று எலல்லோரையும் கூட்டிக் கொண்டு போய் பார்த்தனாங்கள். இதற்கு முதல் தெலுங்குப் படங்களை எனது வீட்டுக்காரரோ உறவினரோ பார்த்தும் இல்லை. தெலுங்கு புரிவதும் இல்லை. படமும் நல்லாய் ஒரு மாதத்திற்கு மேல் ஓடியது. இப்ப நான் என்ன சொல்ல வாறன் என்பதும் புரிந்திருக்குமெண்டு நினைக்கிறன்.

எமது கலைஞர்களை ஊக்குவிக்காது இந்திய கலைஞர்களிற்கு பணத்தை கொட்டுவதை நானும் விரும்பவில்லை. அது பற்றி முந்தியும் எழுதியிருக்கிறன். எமது கலைஞர்களை நாம் தான் ஊக்குவித்து ஆதரிக்க வேண்டும் வேறு யாரும் செய்யப் போவதில்லை அவர்களிற்கு அப்படி ஒரு கடமையோ தேவையோ இல்லை.

தயாரிப்பாளர் வெளிநாட்டு வினியோகித்தர்களிற்கு விற்கும் விலையை முன்னைய படங்களின் வசூல்களின் (வெளிநாட்டு சந்தையின் பெறுமதியை) அடிப்படையில் தான் தீர்மானிக்கிறார். தயாரிப்பாளர் வெளிநாட்டு வினியோகித்தரால் வசூல் செய்ய முடியாத ஒரு தொகையை கொண்ட சமன்பாட்டின் அடிப்படையில் விலையை போட்டு விற்க முடியாது.

ரசிகர்கள் மத்தியில் பிரபல்யபட்டிருப்பதால் தான் ஒரு கலைஞருக்கு பெறுமதியிருக்கிறது அதற்கு ஏற்ப விலை பேசுகிறார் தனது அடுத்த படத்திற்கு.

புறக்கணிப்பு வேண்டு கோள்கள் அவர் பிரபல்யப்பட்டிருக்கும் ரசிகர்களிற்கு அவர்களது பொருளாதார பலத்தை இனங்காண அதை பயன்படுத்த தூண்டுவதற்கு வைக்கப்படுகிறது. ரசிகர்களின் நகர்வுகள் பெறுமதி சங்கிலியூடாக நடிகர் அடுத்த படத்திற்கு கேட்கும் விலையை தீர்மானிக்கும்.

புலம்பெயர்ந்த நாடுகளின் எப்பவோ ஓடி முடிந்த படங்களிற்கு இப்ப புறக்கணியுங்கள் என்று கோசம் போடவில்லை. புலம்பெயர்ந்த நாடுகளில் தொடர்ந்து புதிது புதிதாக வந்து கொண்டிருக்கும் தமிழ்படங்கள் போல் யாழ்பாணத்தில் தொடர்ச்சியாக சங்கராபரணத்திற்கு பின்னரும் தெலுங்குப்படங்கள் வந்து கொண்டிருந்ததா? புலம்பெயர்ந்த நாடுகளிற்கு முன்பை விட அதிக தமிழ்ப்படங்கள் வருவதும் அதிக காட்சிகள் காட்டப்படுவதன் அர்த்தம் என்ன? முன்னைய முயற்சிகள் இலாபமீட்டிய படியால் தானே விரிவாக்கம் நடக்கிறது?

இல்லாட்டி ஒட்டுமொத்த கோடம்பாக்கமும் புலம்பெயர்ந்தவர்கள் பொழுதுபோக்குவதற்கு பிச்சை போடுகிறதா?

சும்மா "மார்க்கட் மார்க்கட்" என்றதுக்கு அது என்ன மாயஜாலமா?

மார்க்கட் என்றால் என்ன? அதன் பெறுமதியை தீர்மானிப்பது என்ன? குறித்த பெருள் அல்லது சேவை பற்றிய மார்க்கட் நிலவரத்தை தீர்மானிப்பது அதன் நுகர்வோரின் பொருளாதார பலம் அவர்களின் உணர்வலைகள் எதிர்பார்ப்பு திருப்த்தி எமாற்றம் என்பவை தான். புலம்பெயர்ந்த தமிழ்சினிமா மார்க்கட்டை யார் தீர்மானிக்கிறார்கள்?

Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மார்க்கட் மார்க்கட்

மார்க்கட்டு என்றால் என்ன எனத் தெரியாமல்.. நடிகைகள் நடிகர்களை பற்றி கதைக்கலாமோ..?

சினிமாதுறைக்கு மேலதிக லாபம் புலம்பெயர்ந்தவர்களால் வருகிறது. அது இல்லாவிடில் மேலதிக லாபம் வராது. ஆனால் லாபம் வரும்.

ஆனால் ஒரு வியாபாரி தன் மேலதிக லாபத்தை இழக்க விரும்பமாட்டான்.

அஜித் அர்ச்சுன் ஆகியோரின் இறுதி சம்மதிப்புகள் (முதல்ல அவர்கள் மறுத்தார்களா என்பதற்கு என்னிடம் சரியான ஆதாரம் இல்லை.) மேலதிக இலாபத்தை இழக்க விரும்பாத வியாபாரியின் மனநிலையில் எடுத்த முடிவுகளே..

இதில புலம்பெயர் ரசிகர்கள் ஆகா அஜித்த வரச் செய்திட்டம் என பெருமைப் படுவதில் என்ன பெருமை இருக்கிறது.

அஜித் வரவில்லை. அதனால் படம் பார்க்க மாட்டோம் என்றால்.. இப்ப அஜித் வருகிறார் என்பதனால் ஏகனை பார்க்க ஊக்குவிக்கிறீர்களா..

ஆகக்குறைந்தது சினிமாவிற்கென வெளிச்செல்லும் எங்கள் பணத்தை மக்கள் துயர்துடைக்க செலவழிக்கலாம் என்ற வகையில் பரப்புரை செய்தாலாவது பரவாயில்லை..

அதை விட்டுட்டு..

Link to comment
Share on other sites

நீங்கள் காமடி, கீமடி ஓண்ணும் பண்ணலைத்தானே!

குத்தாட்டம் போடுவதும், சுத்தி சுத்தி ஏர்ல பறந்து பறந்து அடிப்பதும் தமிழர்களின் கலாச்சார, விழுமியங்களில் இரிக்கு எண்ணு தெரியாமப் போச்சு!

நீங்கள் தான் எல்லோரும் சொல்றீங்க..... புலத்தில் வசிக்கும் தமிழனால் தான் இந்திய தமிழ்படவுலகம் வாழுது என்று, இது எங்கடை கலாச்சாரத்திற்கு ஏற்றதில்லை என்டால் பிறகு ஏன் அதிலை நடிக்கும் நடிகன் உண்ணாவிரத்திற்கு வரவில்லை என்று எழுதி பக்கங்களை நிரப்புகின்றீர்கள்

Link to comment
Share on other sites

சரி.. சினிமாக்காரரைப் பற்றியும், புலத்தில் அவர்களது பொருண்மியத் தாக்கத்தைப் பற்றியும் ஆய்வு செய்வது இருக்கட்டும்.. மூத்திரம் முட்டினாலும் பரவாயில்லை, நாளுக்கு ஒரு டொலர் மிச்சம் பிடித்து தாயகத்தில் கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவலாம் என்று யாராவது முடிவு எடுத்திருக்கிறீர்களா?

நீங்கள் கேட்கிறதிலையும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்யுது. பெரியாருக்கு எத்தின இஞ்சி தாடி இருக்கிது. ராமர் பாலம் கட்டுறதுக்கு எத்தின குரங்குக்குட்டிகள் தேவைப்பட்டது எண்டு பக்கம் பக்கமாக ஆராய்ச்சி செய்து கடைசியில மோகன் தண்ட தலையில அடிச்சு அழுது, எட நாய்களே நான் ஒருத்தன் இஞ்ச இருக்கிறன் எண்டுறத மறந்தது மட்டும் இல்லாமல் உங்கடபாட்டுக்கு ஏதோ எல்லாம் சொல்லிக்கொண்டு போறீங்களே நன்றிகெட்டவங்களே.. கடைசி எண்ட மீசையில எத்தின மயிர் இருக்கிது எண்டு நீங்கள் யாராச்சும் ஆராய முயற்சி செய்து இருக்கிறீங்களோ எண்டு சொல்லி கோவிச்சுக்கொண்டு கடைசியில உங்கட தாடியையும், குரங்குக்குட்டியையும் பற்றின ஆராய்ச்சிகளை நிருவாகத்துக்கு நகர்த்திறதுலையும் பார்க்க எங்கட ஆராய்ச்சி பரவாயில்லை தானே?

Link to comment
Share on other sites

ஜம்மு

மலிபன் விசுக்கோத்து மாதிரி நல்லாத் தானிருக்கு உங்கள் கேள்விகள். ஆனால் பாருங்கோ நக்கீரனில் இந்த விடயம் வந்ததென்பது, அஜீத்தின் மறுப்பறிக்கை நக்கீரனில் வந்ததென்ற செய்தியின் பின் தான் இங்கு எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்திய ஊடகங்களில் ஒரு செய்தியை தவறாகப் பிரசுரித்திருந்தால் அதற்கு பின்பு வருத்தம் தெரிவிப்பார்கள். இப்படி பலதடவை இடம்பெற்றும் இருக்கின்றது. அதுபோல் நக்கீரனும் ஏதாவது வருத்தம் தெரிவித்ததோ தெரியாது. (ஆனால் எம்மவர் ஊடகங்கள் தவறான செய்தி வெளியிட்டதற்காக என்றாவது வருத்தம் தெரிவித்துள்ளார்களா??)இங்கு எவரும் நக்கீரன் வெளியிட்ட செய்தியையோ அல்லது பின்பு நக்கீரன் வெளியிட்ட அஜீத்தின் மறுப்பறிக்கையையோ இணைக்கவில்லை. சிலவேளைகளில் நக்கீரன் அஜீத்தின் மறுப்பறிக்கையுடன் தமது வருத்தத்தையும் தெரிவித்திருக்கலாமல்லவா?? அதுபோல் இவ்விடயம் ஏன் தமிழ் நாட்டின் ஏனைய பத்திரிகைகளில்் வரவில்லை என்பதற்கு எவரும் சரியான பதிலை இதுவரை தரவுமில்லை.

மற்றது நம்மவர் இணையத்தளங்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். பொதுவாகவே தற்ஸ்தமிழ் உட்பட பல இந்திய இணையத்தளங்கள் தமக்கென்று செய்தியாளர்களை வைத்துத் தான் பல சிரமங்களின் மத்தியில் செய்திகளை சேகரித்து வெளியிடுகின்றார்கள். ஆனால் எம்மவர் இணையத்தளங்கள் நோகாமல் நொங்க குடிப்பது போல் அவற்றைச் சுட்டு தமது இணையத்தளங்களில் போட்டுவிட்டு கீழே தமது செய்தியாளர் என்று குசும்பு பண்ணுகின்றார்கள். உங்களுக்குத் தெரிந்து புலத்தில் செய்தியாளர்களை வைத்து செய்திகளைச் சேகரிக்கும் எம்மவர் இணையத்தளம் ஒன்றை அறியத் தருவீர்களா?? அப்படி நீங்கள் அறியத் தந்தால் உண்மையிலேயே நானும் பாராட்டக் காத்திருக்கின்றேன்.

ஏனைய இனவாத ஊடகங்கள் உண்மைக்கு புறம்பாக செய்திகளை கட்டவிழ்கும் போது எம்மவர் இணையத்தளங்களும் அப்படிச் செய்தால் என்ன என்பது போன்ற உங்கள் வாதம் உங்களுக்கே சரியாகப் படுகின்றதா?? அடுத்தவன் தப்பு செய்கின்றான், அதனால் நானும் தப்புச் செய்கின்றேன் என்ற வாதம் யாருக்குப் பலம் சேர்க்கும். எம்மவர் ஊடகங்கள் சந்தேகத்திற்கிடமான செய்திகளை தொடர்ந்து தந்து கொண்டிருந்தால் அவற்றின் நம்பகத் தன்மையே நாளை கேள்விக் குறியாகிவிடும் என்பதை நீங்களுமா உணரவில்லை. எம்மவர் ஊடகங்கள் சரியாகச் செயற்பட்டால் நாம் ஏன் அவற்றைக் குறை சொல்லப் போகின்றோம்.

ம்ம்..வசபண்ணா..ணா..!!. :unsure:

மலிபன் விசுகோத்து..து மோகத்தில இருக்கிறவையிட்ட..ட அந்த சுவைகேற்ற மாதிரி தானே கேள்விகளை கேட்க ஏலும் என்ன நான் சொல்லுறது சரி தானே வசபண்ணா.ணா.. :D

சரி அதை விடுத்து விசயதிற்குள் வருவோம்..ம்..

ம்ம்..நீங்க சொல்லுறது சரி தான் அஜித் அண்ணாவிண்ட மறுபறிக்கை நக்கீரனில வந்தா பெறகு தான் எங்க எல்லாருக்கும் நக்கீரனில அந்த செய்தி வந்தது எண்டு தெரியும்..ம் இல்லாவிடில் தெரிய வாய்பில்லை..லை ஒரு வேளை நீங்கள் குறை கூறும் எம் இணையதளம் இவ் செய்தியினை வெளிவிடாது விடில்..ல்

எங்களுக்கு இந்த விசயம் தான் தெரிய வந்திருக்குமோ..மோ இல்லாட்டிக்கு அஜித் அண்ணாவுக்கு தான் டமிழ் தேசியம் பத்தி தெரிய வந்திருக்குமோ..மோ..இந்த பக்கத்தில் பார்க்க போனால் அவ் இணையதளம் செய்தது மிகவும் பாராட்டதக்க விடயமே தவிர தூற்றுதலிற்கானதல்ல..ல.. :lol:

ஆகவே ஊடகம் எண்ட நிலையில்..ல் அது தம் கடமையை சரி வர செய்துள்ளதோடு உடனடியான அஜித் அண்ணா மறுபறிக்கை விடுற அளவிற்கு கொண்டு போய் இருக்கிறது எண்டு எடுத்து கொள்ளளாம் தானே வசபண்ணா இத பத்தி தாங்கள் என்ன நெனைக்கிறீங்கள்..ள்..??

மற்றது..து..!!

குறிப்பிட்ட ஊடகம் அஜித் அண்ணாவுக்கு..கு வருத்தம் தெரிவிக்கையில எண்டு தாங்கள் வருத்தபட்டீருந்தீர்கள் ஏற்று கொள்கிறன் வசபண்ணா..ணா அதை போல் சில தென்னிந்திய ஊடகங்களும் எங்களின் போராட்டம் பற்றி வடிவாக அறியாமல்..ல் ஏதோ உளறினார்கள்..ள்..அவர்களுக்கும?? போதிய விளக்கம் கொடுக்கபட்டு விட்டாச்சு..சு அவர்கள் வருத்தம் தெரிவித்தவர்களோ..ளோ..??..(சில நேரம் தெரிவித்து எனக்கு தெரியாமல் இருக்கிறதோ தெரியாது அப்படி இருந்தா மன்னிகவும்).. :(

அப்ப நீங்க கேட்கலாம்..ம் மற்ற ஊடகங்களை போல் ஏன் எங்களின் ஊடகங்களும் இருக்க வேண்டும் எண்டு அதை தான் நானும் கேட்கிறன் ஏன் மற்ற ஊடகங்களோடு வளர்ந்து வரும் எங்களின் ஊடகங்களை முடித்து போடுறீர்கள்..ள் இன்றைய சூழ்நிலையில் அவர்களின் சேவை வரவேற்கதக்கது..து..

அதை விடுத்து அவர்களிள் நொட்டை கண்டு பிடிக்க வேண்டும் எண்ட ரீதியில் இருந்தால்..ல் நொட்டை கண்டு பிடித்து கொண்டே இருக்கலாம் என்பது என் கருத்து..து..!!.. :lol:

அடுத்து தமிழ்நாட்டில் ஏனைய ஊடகங்களிள் இது பற்றிய செய்தி வரவில்லை எண்டு கேட்டீருந்தீர்கள் ஒரு வேளை அஜித் அண்ணாவுக்கும் ஷாலினி அக்காவிற்கும் விவாகரத்து எண்டா அத்தகைய ஊடகங்கள் விழுந்தடித்து செய்திகளை போட்டிருப்பார்கள்..ள்..

இந்த நிலையில் தான் ஏனைய ஊடகங்களும் இருக்கின்றது என்பதினை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்..ம்.. :D

அடுத்து..து செய்தியாளர்களை பற்றிய கேள்விக்கு வருவோம்..ம் எங்களிண்ட ஊடகமான புதினம்.கொம்மிற்கு செய்தியாளர்கள் இருக்கிறார்கள் அது போல் ஏனைய எங்களின் சில ஊடகங்களும் செய்தியாளர்கள் இருக்க தான் செய்கிறார்கள்..ள்..அது மட்டுமில்லை அவுஸ்ரெலியாவில் இருந்து ஒலிபரபாகும் வானொலிக்கு கூட தாயக செய்தியாளர்கள் இருக்கிறார்கள்..ள்

ஏன் இதனை நான் இங்கு குறிப்பிட்டேன் எண்டால் வானொலியும் ஒரு விதத்தில் ஊடகம் தானே..னே..சரி அதை விடுத்து உங்களிண்ட கருத்திற்கு வருகிறேன்..ன்..அதாவது தாங்கள் குறிபிட்டீருந்தீர்கள் தட்ஸ்தமிழ்.கொம்மிற்கு செய்தியாளர்கள் உள்ளார்கள் என்பது..து..

உங்களிடம் சிறிய வினா..னா தட்ஸ்தமிழ்.கொம் போல் பல இணையங்கள் இருக்கின்றன..ன அத்தனைக்கு செய்தியாளர்கள் இருக்கிறார்களா என்பதினை தங்களாள் கூறமுடியுமா..மா..??.. :unsure:

அடுத்து..து..

வசபண்ணா..ணா இங்க பாருங்கோ எங்களிண்ட சூழ்நிலை தற்போது வேற எங்களிண்ட செய்திகள் எவ்வளவு தூரம் எடுத்து செல்லபடுகிறது என்பதினை தான் பார்க்க வேண்டுமே தவிர..தென்னிந்திய ஊடகங்களோடு எம் ஊடகங்களை ஒப்பிடுவது வேடிக்கை..கை..

உண்மையாகவே எங்களிண்ட ஊடகங்கள் மேல் தங்களுக்கு கரிசணை இருந்தால்..ல் தாங்கள் செய்ய வேண்டியது என்னவெண்டால்..ல் எங்களிண்ட ஊடகங்களுக்கு தாங்கள் செய்திகளை வழங்குங்கோ..கோ அதற்காக நான் சொல்லவில்லை அங்க போய் நின்று கொண்டு கள நிலவரத்தை வழங்க சொல்லி..லி..அன்னைக்கு கனடா வாழ் யாழ் கள உறவுட கதைத்த போது..அவா கூறினா..னா

அங்கே எத்தனையோ கவனயீர்ப்பு நிகழ்வுகள்..ள் நடைபெறுகின்றன..ன ஆனால் ஊடகங்களிள் அது பெரிதாக வருவதில்லை எண்டு..டு..இப்படியான சந்தர்பங்களிள் நாங்கள் வந்து என்ன செய்ய வேண்டும்..ம் அவ்வாறான செய்திகளை வெளிகொண்டு வர வேண்டும்..ம்.. :unsure:

இவ்வாறு நாங்கள் தான் எங்களிண்ட ஊடகங்களை முன்னுக்கு கொண்டு வர வேண்டுமே தவிர..ர இங்க இருந்து கொண்டு அவைய பற்றி நொட்டை சொல்லுவதன் மூலம் இல்லை..லை..மற்றது செய்திகளை ஓட்டீனம் என்பது பிரச்சினை இல்லை..லை..அது எவ்வளவு தூரம் சென்றடைக்கிறது என்பது தான் முக்கியம்..ம்

ஒரு செய்தி எவ்வளவு தூரம் "ரீச்" பண்ணுறது என்பதினை பார்க்க வேண்டுமே தவிர..ர அவ் செய்திகளிள எங்களிண்ட மேதாவிதனத்தை காட்ட கூடாது..து..யாழ்களத்தில் சில மேதாவிகள் விடும் தவறு இது தான்..ன்.. :lol:

கடசியான தங்களின் விடயதிற்கு வருகிறேன்..ன்..!!

ஏனைய இனவாத ஊடகங்கள் உண்மைக்கு நிகரா செய்திகளை கட்டவிழ்க்கும் போது நாமும் ஏன் கட்டவிழ்க்க வேண்டும் எண்ட தொனியில் சொல்லவில்லை நான் கூறியது..து அத்தகைய தருணங்கள் மற்றும் எங்களிள் சிலரே ஊகத்தின் அடிப்படையுக் செய்திகளை வெளிகொணர்ந்த போது..து அது சரி என இருந்து விட்டு..டு இன்றைக்கு சில்லறை விடயதிற்கு ஏன் ஆர்பாட்டம் என்பது தான்..ன்..??

அத்தோடு சிங்கள மக்களை உசார் நிலையில் வைத்து கொள்ள..ள அவர்களின் அரசு இல்லாதை திரிவுபடுத்துகிறது ஆனால் எங்கள் ஊடகங்கள் அந்தளவிள் நடந்து கொள்வதில்லை..லை..(நடந்த செய்தியை தான் பெருபித்து காட்டுவீனமே தவிர நடக்காதவற்றை இல்லை)..மற்றது யாழில் தான் சொல்லீச்சீனம் சிங்கள் ஊடகங்கள் உளவியள் ரீதியா எங்களை சோர்வடையை செய்யீனமாம் எண்டு..டு..

அப்படி இருக்கையில் நாங்கள்..ள் வந்து எங்களிண்ட ஊடகங்களை நொட்டை பிடிப்பது அழகல்ல..ல ஆரோக்கியமான விமர்சனங்கள் அவர்களின் வளர்ச்சிக்கு உதவுமே தவிர..ர அங்கால வேற நான் சொல்லவா வேண்டும்..கடசியா பீ.பி.சி தமிழோசை கேட்டிருந்தால்..

தென்னிந்தியாவில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தை பற்றி கூறுகையில்..ல் சொன்னார்கள் அங்கொன்றுமாக இங்கொன்றுமாக மக்கள் கலந்து கொண்டார்கள் எண்டு..டு இதையும் விடவா..வசபண்ணா..ணா..??.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ழில எழுதப்படுறது பற்றி தங்கட கருத்தை கூறலாம். அது அவர்கள் விருப்பம். யார் உரிமை இல்லை என்று கூறினார்கள்? ஏற்கனவே யாழ் இணையம் பற்றிய கடுமையான கருத்துக்களை - விமர்சனங்களை சுத்துமாத்து எனும் இணையதளம் சொல்லிவருகின்றது.

ஒ..அப்படியோ முரளி அங்கிள்..!!. :unsure:

அப்ப சுத்து மாத்து இணையதளம் யாழை பற்றி கடுமையான விமர்சனங்களை முன் வைத்த போது தாங்கள் ஏதாவது செய்தீர்களோ..??..(செய்தீர்களோ தெரியாது)..ஆனால் அஜித் அண்ணாவை பத்தி இவ் தளம் கூறியவுடன பதறீங்கள் இது உங்களுக்கே வேடிக்கையா இல்லை..

பிறகு எங்களிண்ட ஊடகங்களை பற்றி கேள்வி எழுப்புறீங்கள்..ள்..??..எங்களின் பார்வையில் அவனின் ஊடகம் எங்களுகென்ன நொட்டை பிடித்தா காணும் எண்ட ஒரு எண்ணம்..ம்..ஏன் அப்படி பார்க்கிறீங்கள்..ள்..அது உங்கள் சமுதாயத்தின் ஊடகம் எண்டு பார்க்கலாமே..??

அப்படி பார்த்திருந்தால்..ல் அவ் இணையதளத்தை..த மட்டும் குறி வைத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்காது என்பது என் பார்வையில்..ல்.. :lol:

அவர்களும் அப்படி கூறலாம். இங்கு கருத்து எழுதுவது அனைவருக்கும் பொழுதுபோக்கு என்று நான் ஏற்கனவே கூறி இருக்கின்றேன். இங்கு ஒருவரும் சரியான தகவலின் அடிப்படையில் விஞ்ஞான ஆராய்ச்சி செய்யவில்லை. தத்தம் அபிப்பிராயங்களை கூறிவருகின்றார்கள். தமிழ்வின் இணையதளம் இதுபற்றி வாய்திறக்கவேண்டாம் என்று யார் கூறினார்கள்? அவர்கள் முடியுமானால் தமது விமர்சனத்தை விட்டுப்பார்க்கட்டும்.

ஓ..அப்ப பொழுதுபோக்கிற்காக நீங்கள் எந்தவிதமான கருத்தும் எழுதுவீங்கள்...ஒ மன்னிகவும் எனக்கு உது தெரியாம போய்விட்டது..து..அப்ப இன்னைக்கு பொழுது போக்கா..கா அவர்கள் செய்தது பிழை எண்டு சொல்லுவியள் நாளைக்கு உங்களுக்கு பொழுது போகாட்டி அவர்கள் செய்தது சரி என்பீர்கள்..அப்படி தானே..னே..

அது சரி..ரி..!!

ம்ம்..அவர்கள் உங்களை பற்றி விமர்சிக்க நாளைக்கே நீங்க மறுபறிக்கை விட..ட பிறகு வசபண்ணா வந்து பாட்டு படிக்க உது எல்லாம் தேவையோ..யோ..??..

ஆகவே தங்களின் இந்த கருத்தில் இருந்து ஒன்றை மட்டும் அறிய கூடியதாக இருக்கிறது..து தாங்கள் பொழுது போகாட்டி என்னத்தையும் எழுதிவியள் அதை பெரிதாக கண்டுகொள்ள தேவை இல்லை எண்டு..டு..அப்ப பிரச்சினை இல்லை ஆனால் அவர்கள் இல்லாதையும் பொல்லாதையும் போட்டு விட்டார்கள் எண்டு வாதிடும் நீங்கள் செய்வது என்ன..??..பிறகு மற்றவர்களை குறை கூறுவது..வேடிக்கையாக இல்லையா..யா..!! :lol:

நமது ஊடகங்கள் விடும் புளுடாக்கள் தமிழ் ஊடகங்கள் என்றவகையில நம்பிக்கையீனத்தை உருவாக்கும். சிங்கள ஊடகங்கள் விடும் புளுடாக்கள் மூலம் பெரிய பிரச்சனை ஏற்படப்போவதில்லை. இவை புளுடாவையே பெரும்பாலான சமயங்களில் விடுகின்றன என்பது பலருக்கு தெரியும்.

சரி யாழ்களம்..ம் ஒரு கருத்தாடல் தளம் என்ற ரீதியில்..ல் இங்கே வரும் செய்திகளுக்கு பின்னூட்டல் மூலம் தங்களின் கருத்தினை தெரிவிக்கலாம்..ம் அது பிழை எண்டு சொல்லவில்லை..ஆனா சிங்கள ஊடகங்கள் விடும் புளுடாக்கள் உங்களுக்கும் எனக்கும் தெரியும் புளுடாக்கள் எண்டு..டு..

ஆனால் அவ் இன மக்களுக்கு தெரியுமோ..மோ..??..இப்படி ஒரு கேள்வி எழுகின்றதல்லவா..வா..அது மட்டுமா அவ் இணையத்தில் இருந்து செய்தியை பெறும் ஏனைய பிற நாட்டு ஊடகங்களுக்கு தெரியுமோ புளுடாக்கள் எண்டு இல்லையே அப்படி இருக்கும் போது..து..

எனக்கும்,உங்களுக்கும் அது புளுடா எண்டு தெரிவதில்..ல் என்ன இலாபம்..ம்..??.. :unsure:

நான் சொல்லவில்லை தமிழ் ஊடகங்கள் சில செய்திகளை மிகைபடுத்துகின்றன தான் ஆனா ஏனைய இனவாத ஊடகங்கள் போல் அல்லாது சில % வீதங்களாள் தான் உண்மையான செய்தியை மிகையூட்டுகின்றனவே தவிர தாங்கள் சொல்வது போல் அல்ல..ல..

இல்லாதை நடந்தது போல் சித்தரிப்பது எங்களின் ஊடகங்கள் அல்ல..ல நீங்கள் சொல்வது போல் சிங்கள் அரசின் கை கூலிகளாக இயங்குபவர்களின் இணையங்கள் அவ்வாறு நடக்க கூடும்..ம் ஏன் அவர்கள் ஆமிகாரங்கள் உள்ளுகுள்ள போனா அக்குவேரா ஆணிவேரா தருவீனம்..ம்

அண்ணாமார் போயீச்சீனம் எண்டா..டா..(அது பல வியாக்கினங்களோடு செய்தியை இடுவீனம்).. :unsure: .

யார் திரட்டி தரச்சொன்னார்கள்? கூகிளுக்கு போனால் தமிழ், ஆங்கிலத்தில் ஓராயிரம் திரட்டப்பட்ட செய்திகளை பெறமுடியும். வெட்டி ஒட்டுபவர்களை உற்சாகப்படுத்த இல்லை என்று கூறுகின்றீர்களா? ஊடகங்கள் என்று கூறுகின்றீர்கள். இங்கு எத்தனைபேர் உண்மையில் செய்தியாளர்களை வைத்து இருக்கின்றார்கள்?

ஒ..திரட்டி தர வேண்டாம் என்பது உங்களின் பதில்..ல் உங்களுக்கு நேரம் கணக்க இருக்கலாம்..ம் இருந்து வடிவா தேடி எல்லா செய்திகளையும் பார்பீங்கள்..ள் எல்லாரும் அப்படி இல்லை தானே முரளி அங்கிள்..ள்..வெட்டு ஒட்டுபவர்களை உற்சாகபடுத்துவதும் உற்சாகபடுத்தாது விடுவதும் உங்களின் தனிபட்ட விருப்பம்..ம்..

ஆனா பாருங்கோ..கோ...!!

இப்ப எங்களிண்ட சூழ்நிலையில்..ல் செய்தி எவ்வளவு தூரம்..ம் செல்கிறது மற்றும் அதனை எவ்வளவு பேர் உள் வாங்கிறார்கள் என்பது முக்கியமே தவிர..ர..அவன் வெட்டி ஒட்டிட்டான்..ன் அது பிழை எண்டு வாதாடுவது எல்லாம் வீண் எண்டு தான் சொல்லாம்..

மற்றது எங்கள் ஊடகங்களும் செய்தியாளர்களை வைத்து தான் இருக்கீனம்..ம் எல்லாரும் கதைக்கீனம் எண்டிட்டு இப்படி ஒரு கேள்வியை கேட்டிருக்கிறியள் போல் தெரிகிறது..து ஏற்கனவே வசபண்ணாவுக்கு கூறிய விடை தான் உண்மையான அக்கறை இருந்தால்..ல்

அவர்களுக்கு நீங்க செய்திகளை அனுப்புங்கோ..கோ..அதை விட்டிட்டு செய்தியாளர்கள் இருக்கீனமோ இல்லையோ எண்டு கேட்பது எல்லாம்..எங்களை நாங்களே தாழ்த்தி கொள்வதிற்கு சமன்..ன்.. :lol:

ஆம் நான் பிரபலமாக வருவதற்கு இப்படிச் செய்கின்றேன் என்று யாராவது நினைக்கலாம். அவர்கள் அப்படி நினைத்தால் எனக்கு ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை. இங்கு யாழில் எட்டாயிரம் கருத்துகளுக்கு மேல் எழுதி இருக்கின்றேன். பல்லாயிரம் மணித்தியாலங்களை இதற்காக செலவளித்து இருக்கின்றேன். இதன் மூலம் எனக்கு ஒரு சதம் பலன் கிடைக்கவில்லை. நான் எனது நேரத்தை இங்கு விரயம் செய்வது தவிர வேறு ஒரு பலனும் இங்கு கிடைக்கவில்லை. கருத்தை கருத்து மூலம் வெல்ல முடியாமல் கருத்து கூறுபவர்கள் குரல்வளையை நெரிப்பவர்கள் இங்கு இருக்கத்தான் செய்கின்றார்கள். நான் தொடங்கிய கருத்தாடல் அனைத்திலும் என்னை விமர்சித்தவர்களின் கருத்துக்களை வாசித்துபார்த்தால் இது விளங்கும்.

ஒம்..நீங்கள் நினைப்பது போல் தான் தாங்கள் கூறிய இணையதளமும் நினைக்கும்..ம் அதாவது தாங்கள் பிரபலயம் அடைவதிற்காக இவ்வாறான செய்திகளை இணைக்கிறார்கள் எண்ட தங்களின் வாததிற்கு..கு இல்லையோ முரளி அங்கிள்..??

பார்த்தீங்களோ..ளோ இங்கே நேரத்தை செலவழித்து ஒரு வித பயனும் இல்லை எண்டு தாங்களே சொல்லி விட்டீர்கள் அப்படி இருக்கும் போது அவன் காசு சம்பாதிக்கிறான் எண்டு சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது..து வாழ்க்கை எண்டும் ஒண்டு இருக்கு..கு

ஆகவே இரண்டையும் பார்பது தான் புத்திசாலிதனம்..ம்..உங்கள் கருத்தாடலின் போது உங்களை விமர்சித்தவர்கள் பற்றி எனக்கு நன்கு தெரியும்..ம் ஆனால் தாங்கள் இன்று செய்வது என்ன அவர்கள் செய்தது போல் தாங்களும் செய்கிறீர்கள் அப்படி பார்க்க போனா அவர்களுக்கும் உங்களுக்கு என்ன வித்தியாசம்..?? :lol:

அதாவது டேய்** வே** நா** என்று என்று தும்புபறக்க சிங்களவனை இங்கு பேச இல்லை என்றால் அதற்கு அர்த்தம் அவர்களை பாதுகாப்பது? அதாவது கும்பலில் கோவிந்த போடவில்லை என்று சொல்கின்றீர்களா?

நான் கும்பலில் கோவிந்த்தா போட வேண்டும் எண்டு சொல்லவில்லை..லை ஆனால் தாங்கள் சொல்வதை பார்த்தால் கோவிந்தா போடாமல் மாற்றுகருத்து வைத்தால் நல்லது போன்ற தோணியில் இருக்கின்றது..து..ம்ம் சிங்களவனின் அவன் இவன் எண்டு பிரித்து பார்பதிற்கில்லை..லை

நாளைக்கு தமீழீழம் தாங்கோ எண்டு போய் கேட்டா பிரித்து பார்க்கிற மற்றவையள் தந்திடவா போயீனம் அப்ப தாங்கள் சொன்ன வார்த்தை அவர்கள் வாயில் இருந்தும் உதிர்க்கலாம்..ம்.. :(

இல்லை சொல்லமாட்டேன். நான் இப்படி தாயக பிரச்சனை மூலம் பணம் சம்பாதிக்கும் மனநிலையில் இல்லை. அப்படி மனநிலை இருந்தால் பணம் சம்பாதிப்பேன். செத்த பிணங்களுக்கு மேல் ஏறி இருந்து பணம் சம்பாதிக்கும் மனநிலை எனக்கு எப்போது வரும் என்று தெரியவில்லை. அப்படியான மனநிலை வந்ததும் நீங்களும் என்னுடன் பங்காளராக சேர்ந்துகொள்ளலாம்.

ம்ம்..தாங்கள் இங்கே இப்படி சொல்கிறீர்கள்..ள் ஆனால் மேலே யாழ் இணையத்தில் நேரத்தை விரயமாக்கி ஏதும் பயனில்லை எண்டு சொல்கிறீர்கள்..ள் எந்த கருத்தை ஏற்று கொள்வது..து..??..பங்காளரா சேருறதில பிரச்சினை இல்லை பிறகு நாளைக்கே என்னை யாரெண்டு கேட்டா..??

முன்பு சரி என நினைத்தது தற்போது பிழையாக தெரியலாம். தற்போது சரி என நினைப்பது பின்னர் பிழையாக தெரியலாம். எமது அறிவுக்கு தற்போது சரியெனபடுவதை மாத்திரமே நாம் சொல்லமுடியும். இதற்கு நான், நீங்கள், அசித், அர்சுன் உட்பட அனைவரும் விதிவிலக்கு அல்ல.

பரவாயில்லை அஜித் அண்ணா மாதிரியே பேச பழகிட்டீங்க..க..

நானும் ஒரு விசுக்கோத்து என்பதை ஆரம்பத்திலேயே கூறி இருக்கின்றேன். இங்கு கருத்து எழுதும் அனைவரும் விசுக்கோத்துக்களே.

ம்ம்..தாங்கள் விசுகோத்தாக இருப்பதில் பிரச்சினை இல்லை..லை ஆனால் உங்களை போல் எல்லாரும் எண்டு நெனைப்பது எப்படி ஏற்று கொள்ள முடியும்..??. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியப்பா.. இந்த ஒரு டொலர் கொடுக்கிறபத்தி... யாராவது ஏதாவது...

கண்டுக்கவே மாட்டாங்களாம்.... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி.. சினிமாக்காரரைப் பற்றியும், புலத்தில் அவர்களது பொருண்மியத் தாக்கத்தைப் பற்றியும் ஆய்வு செய்வது இருக்கட்டும்.. மூத்திரம் முட்டினாலும் பரவாயில்லை, நாளுக்கு ஒரு டொலர் மிச்சம் பிடித்து தாயகத்தில் கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவலாம் என்று யாராவது முடிவு எடுத்திருக்கிறீர்களா?

நல்லாக் கேட்டியள் போங்கோ.

நாங்கள் நயனதாரா 5 இலட்சம் கொடுத்தாவாம்.. நமீதா கொடுத்தாவாம்.. அசின் கொடுத்தாவாம்.. பாவனா கொடுத்தாவாம்.. திரிசா கொடுத்தாவாம்.. என்று கலர் கலரா கதைப்பமே தவிர.. நாங்க எங்க கொடுக்கிறது. அந்தக் காசில தமிழ் நகைக்கடையில சீட்டுப் புடிச்சு.. ஒரு சோடி காப்பு வாங்கிடுவமில்ல..! ஊரில கிடக்கிறவன் செத்தா என்ன விட்டா என்ன. அவை கஸ்டப்பட்டால் தானே நாங்கள் கொலிடேக்குப் போய் கலேர்ஸ் காட்டலாம்.. வெளிநாட்டில இருந்து நாத்த மருந்து அடிச்சுக் கொண்டு வந்திருக்கிறம் எண்டு.

உங்க வெளிநாட்டில வெள்ளைகாரணட்ட.. வாங்கிற பிச்சைகள் எங்க தெரியப் போகுது ஊரில..! நாடோடிக் கூட்டமா வாழ விரும்பிறதுகள் போய்.. அஜித்தையும்.. அர்ஜுனையும் கேள்வி கேட்க முதல் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ளட்டும். இவை கேள்வி கேட்க அஜித்தும் அர்ஜினும் என்ன அகதியாவே அலையுறாங்கள் பதில் சொல்ல..!

மகிந்த லண்டனுக்கு வந்தாலும்.. சிங்களவனை விட தமிழன் தான் மாத்தையா மாத்தையா என்று சாகிறானாம்...! அப்படியான பரதேசிகள்.. (நாடற்றவர்களைப் பரதேசிகள் என்று தமிழில் அழைப்பர்) அஜித்திலும்.. அர்ஜுனிலும் குறைபிடிக்கினம்.. ஏன்.. ஊரில இருந்து ஒரு 3 வருசத்துக்கு முன்னம் இங்க வந்தவையே.. கேட்கினம்.. இப்ப ஊர் பிரச்சனை எப்படி இருக்குது.. எங்கட பிள்ளையளுக்கு உதுகள் தெரியாது.. அவ்வளவை.. ஊருக்குப் போற ஐடியாவிலையே இல்ல... அடி செருப்பால..! :(

Link to comment
Share on other sites

இல்லைத் தெரியாமத்தான் கேட்கிறன்...

கனடாவில இதுவரை நடத்தப்பட்ட பல கவனயீர்ப்புகளில் கலந்து கொள்ளாத ஒரு சில ஊடகப்பேர்வழிகள் ஏகனுக்கு எதிர்ப்புக் காட்ட வெளிக்கிட்டிருக்கினம் இதைப்பற்றி ஆராவது வந்து விளக்கம் எழுதி இந்தப்பக்கத்தை நிறையுங்கோவன். எவ்வளவு தூரத்திற்கு உங்கட விளக்கங்கள் பொருந்துது எண்டு பார்ப்பம்.

கோதாரில போறவர்கள் இலங்கை அரசு செய்யிற இனவழிப்பை படம்படமாப் போட்டு ரோட்டில நின்ட சனத்தோட நிற்கத் தெரியாத கோமாளிகள் அது என்ன தென்னிந்திய சினிமா நடிக,நடிகையருக்கு எதிரா ஏதும் எதிர்ப்புத் தெரிவிக்கிறதென்டாக் களத்தில டக்கெண்டு குதிக்கினம்....

ஐயோ ஆராவது விளக்கம் தாங்கப்பா.... ஆதிக்கு மண்டை காயுது.

Link to comment
Share on other sites

இல்லைத் தெரியாமத்தான் கேட்கிறன்...

கனடாவில இதுவரை நடத்தப்பட்ட பல கவனயீர்ப்புகளில் கலந்து கொள்ளாத ஒரு சில ஊடகப்பேர்வழிகள் ஏகனுக்கு எதிர்ப்புக் காட்ட வெளிக்கிட்டிருக்கினம் இதைப்பற்றி ஆராவது வந்து விளக்கம் எழுதி இந்தப்பக்கத்தை நிறையுங்கோவன். எவ்வளவு தூரத்திற்கு உங்கட விளக்கங்கள் பொருந்துது எண்டு பார்ப்பம்.

கோதாரில போறவர்கள் இலங்கை அரசு செய்யிற இனவழிப்பை படம்படமாப் போட்டு ரோட்டில நின்ட சனத்தோட நிற்கத் தெரியாத கோமாளிகள் அது என்ன தென்னிந்திய சினிமா நடிக,நடிகையருக்கு எதிரா ஏதும் எதிர்ப்புத் தெரிவிக்கிறதென்டாக் களத்தில டக்கெண்டு குதிக்கினம்....

ஐயோ ஆராவது விளக்கம் தாங்கப்பா.... ஆதிக்கு மண்டை காயுது.

இதென்ன கேள்வி ஆதி??? அதுவும் எங்களைப் பார்த்து. நாங்களெல்லாம் படித்த மேதாவிகள். உங்களை மாதிரியான காட்டுமிராண்டிகளோடையெல்லா

Link to comment
Share on other sites

தமிழுச்சிக்குப் படிச்ச தினாவட்டு கூடிப்போனமாதிரி இருக்கு.... பரவால்லை அதப் பிறகு பார்ப்பம்.

இப்ப விசயத்துக்க வருவம்.....

ஆதி என்ன கேட்கிறன் எண்டால் வாற 1ந்திகதி ஏகனுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கக் கிளம்புகிற கூட்டம் வருகிற வாரம் திங்கட்கிழமையில் இருந்து ஆரம்பமாக இருக்கும் கவனயீர்ப்புச் செயற்பாடுகளில் எவற்றை தாங்கள் பொறுப்பெடுத்து செய்யப்போகிறார்கள்? ஏகனுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கக் கிளம்பும் பத்துப் பேராவது ரொரன்ரோ பெரும்பாகத்தின் முக்கிய சந்திகள் 10ஐ பொறுப்பெடுத்து அங்கு போக்குவரத்தில் ஈடுபட்டிருக்கும் பல்லின மக்கள் மத்தியில், சிங்கள அரசினால் எங்கள் மக்களுக்கு இழைக்கப்படும் அல்லல்களை வெளிக் கொணர தொடர்ந்து ஒரு வாரத்திற்கு தங்களை ஒருத்து இக்கவனயீர்ப்பை நடாத்த முன்னின்று செயற்படுவார்களா?

அல்லது சினிமாக்காரர்கள் இப்படிப்பேசிவிட்டார்கள் அவர்கள் பேசியது தவறு என்று விளம்பரப்பலகையைப் பிடித்துக் கொண்டு போஸ் கொடுக்கப் போகிறார்களா?

ஆதி ஒண்டும் பிழையாக் கதைக்கேல்லை மனசிலை பட்டதை பட்டு பட்டென்று போட்டு உடைக்கிறன் அவ்வளவுதான்

Link to comment
Share on other sites

அப்ப சுத்து மாத்து இணையதளம் யாழை பற்றி கடுமையான விமர்சனங்களை முன் வைத்த போது தாங்கள் ஏதாவது செய்தீர்களோ..??..(செய்தீர்களோ தெரியாது)..ஆனால் அஜித் அண்ணாவை பத்தி இவ் தளம் கூறியவுடன பதறீங்கள் இது உங்களுக்கே வேடிக்கையா இல்லை.. பிறகு எங்களிண்ட ஊடகங்களை பற்றி கேள்வி எழுப்புறீங்கள்..ள்..??..எங்களின் பார்வையில் அவனின் ஊடகம் எங்களுகென்ன நொட்டை பிடித்தா காணும் எண்ட ஒரு எண்ணம்..ம்..ஏன் அப்படி பார்க்கிறீங்கள்..ள்..அது உங்கள் சமுதாயத்தின் ஊடகம் எண்டு பார்க்கலாமே..??

ஆமாங்க.. சுத்துமாத்து பற்றி யாழ் நிருவாகத்துக்கு அவர்கள் விமர்சனங்கள் பற்றி சொல்லி இருந்தேன். உங்கட அஜித் அண்ணாவுக்கு இஞ்ச வக்காளத்து வாங்க இல்லை. தவறான கருத்துக்களையே சுட்டிக்காட்டி இருக்கின்றோம். எங்கட சமுதாய ஊடகம், எங்களை பாதிப்பன எண்டு பார்க்கிறதாலதான் இதுகள் பற்றி கருத்து சொல்லிறம். இதைக்கூட உங்களுக்கு விளங்கிக்கொள்ள அறிவு இல்லையா?

ஓ..அப்ப பொழுதுபோக்கிற்காக நீங்கள் எந்தவிதமான கருத்தும் எழுதுவீங்கள்...ஒ மன்னிகவும் எனக்கு உது தெரியாம போய்விட்டது..து..அப்ப இன்னைக்கு பொழுது போக்கா..கா அவர்கள் செய்தது பிழை எண்டு சொல்லுவியள் நாளைக்கு உங்களுக்கு பொழுது போகாட்டி அவர்கள் செய்தது சரி என்பீர்கள்..அப்படி தானே..னே.. அது சரி..ரி..!! ம்ம்..அவர்கள் உங்களை பற்றி விமர்சிக்க நாளைக்கே நீங்க மறுபறிக்கை விட..ட பிறகு வசபண்ணா வந்து பாட்டு படிக்க உது எல்லாம் தேவையோ..யோ..??..

நீங்கள் இப்ப எனக்கு எழுதினபதிலும் பொழுதுபோக்காக நீங்கள் எழுதினது என்பதை வாசகர்கள் புரிந்துகொள்வார்கள். நீங்கள் இதுவரை 19,909 கருத்துக்களை ரெண்டு வருசத்துல கிறுக்கி இருக்கிறீங்கள். நீங்களும் பொழுதுபோக்காக எழுதவில்லை என்பதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும். எமது கருத்துக்களிற்கு சரியான விளக்கம் கூறமுடியாதவர்கள் எம்மை விமர்சிப்பதில் இறங்குகின்றார்கள். நீங்களும் இப்போது நடைபெறும் கருத்தாடலில் இதையே செய்கின்றீர்கள். நான் மேலே கூறிய தமிழ்சினிமா பற்றிய கருத்துக்களுக்கு உங்களால் விளக்கம் தரமுடியுமா? உங்களுக்கும்தான் வங்காளத்து வாங்க இங்கு பலர் இருக்கின்றார்கள். நான் கூறும் கருத்தினை ஆதரித்து வசம்பு அவர்கள் எழுதும்போது ஏன் உங்களுக்கு கஸ்டமாக இருக்கின்றது?

தாங்கள் பொழுது போகாட்டி என்னத்தையும் எழுதிவியள் அதை பெரிதாக கண்டுகொள்ள தேவை இல்லை எண்டு..டு..அப்ப பிரச்சினை இல்லை ஆனால் அவர்கள் இல்லாதையும் பொல்லாதையும் போட்டு விட்டார்கள் எண்டு வாதிடும் நீங்கள் செய்வது என்ன..??..

நீங்களும் பொழுதுபோக்காட்ட என்னத்தையும் எழுதுவியள் என்பது எனக்கு தெரியும். கருத்துக்களத்தில் ஒரு செய்தியை இடும்போது அதுசம்மந்தமாக கருத்துக்கள் கூறுகின்றோம். யாழை மூடலாம் என்று சொல்கின்றீர்களா? அல்லது பெண்களின் மார்பகம் பற்றி மட்டும் ஆராய்ச்சி செய்தால் போதும் என்று நினைக்கின்றீர்களா?

ஆனா சிங்கள ஊடகங்கள் விடும் புளுடாக்கள் உங்களுக்கும் எனக்கும் தெரியும் புளுடாக்கள் எண்டு..டு.. ஆனால் அவ் இன மக்களுக்கு தெரியுமோ..மோ..??..இப்படி ஒரு கேள்வி எழுகின்றதல்லவா..வா..அது மட்டுமா அவ் இணையத்தில் இருந்து செய்தியை பெறும் ஏனைய பிற நாட்டு ஊடகங்களுக்கு தெரியுமோ புளுடாக்கள் எண்டு இல்லையே அப்படி இருக்கும் போது..து.. எனக்கும்,உங்களுக்கும் அது புளுடா எண்டு தெரிவதில்..ல் என்ன இலாபம்..ம்..??..

பொதுவாக சிங்கள மக்கள் தமது ஊடகங்கள் உண்மையான கருத்துக்களை கூறுகின்றன, தமிழ் ஊடகங்கள் புளுடாவிடுகின்றன என நினைக்கின்றார்கள். தமிழ் மக்கள் இதையே மாறி நினைக்கின்றார்கள். எனினும், சுயமாக சிந்திக்கத் தெரிந்தவர்கள் தமது தாய்மொழி ஊடகங்களில் விடும் புளுடாக்களை அறிந்து இருக்கின்றார்கள் அல்லது அறிய முயற்சிக்கின்றார்கள். சுயமாக சிந்திப்பவர்கள் பிழையான ஒரு தகவல் தமது ஊடகத்தில் பரப்பப்படும்போது அதை சுட்டிக்காட்டவே செய்வார்கள். புளுடாக்கள் நீண்டகால நோக்கில் ஊடகங்கள் பற்றி நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும். பக்கச்சார்பாக இல்லாமல் நடுவுநிலமையாக இருக்கக்கூடிய பிறநாட்டு ஊடகங்கள் எவை புளுடாக்கள் என்பதை கண்டுபிடிக்கும் திறன் படைத்தவை.

இப்ப எங்களிண்ட சூழ்நிலையில்..ல் செய்தி எவ்வளவு தூரம்..ம் செல்கிறது மற்றும் அதனை எவ்வளவு பேர் உள் வாங்கிறார்கள் என்பது முக்கியமே தவிர..ர..அவன் வெட்டி ஒட்டிட்டான்..ன் அது பிழை எண்டு வாதாடுவது எல்லாம் வீண் எண்டு தான் சொல்லாம்.. மற்றது எங்கள் ஊடகங்களும் செய்தியாளர்களை வைத்து தான் இருக்கீனம்..ம் எல்லாரும் கதைக்கீனம் எண்டிட்டு இப்படி ஒரு கேள்வியை கேட்டிருக்கிறியள் போல் தெரிகிறது..து உண்மையான அக்கறை இருந்தால்..ல் அவர்களுக்கு நீங்க செய்திகளை அனுப்புங்கோ..கோ..அதை விட்டிட்டு செய்தியாளர்கள் இருக்கீனமோ இல்லையோ எண்டு கேட்பது எல்லாம்..எங்களை நாங்களே தாழ்த்தி கொள்வதிற்கு சமன்..ன்..

அதாவது எம்மவருக்கு எம்மிடையே உடுக்கு அடிப்பதினதும், குசி ஏத்துவதினதும் முக்கியத்துவம் பற்றி கூறி இருக்கின்றீர்கள். ஆயிரக்கணக்கான புள்ளிநிறுவனங்கள், ஆயிரக்கணக்கான வலைப்பூக்கள்... இவற்றினுள் சென்று சரி பிழை பார்ப்பதற்கு எமக்கு நேரம் இல்லை. ஆனால் இங்கு யாழில் தவறான செய்திகள் ஒட்டப்பட்டால் அவை பற்றி கருத்து கூறமுடியும். ஆம் நீங்களும் சொல்வதும் சரிதான்... அதாவது ஒருவரே செய்தியாளராக - வெட்டி ஒட்டல் மன்னராக இருந்துகொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட வெட்டி ஒட்டல் புள்ளிநிறுவனங்களை ஓட்டிக்கொண்டு இருக்கின்றார். எங்கிருந்து பெறப்பட்டது என்ற மூலத்தை குறிப்பிட வக்கில்லாத வெட்டி ஒட்டல் மன்னர்களின் ஊடகங்கள் எல்லாம் எமக்கு வெட்கக்கேடு. இவர்களின் திருட்டுத்தனத்தை நாங்கள் பாராட்டவில்லை என்று நீங்கள் வேறு கவலைப்படுகின்றீர்கள். உண்மையான மூலத்தை குறிப்பிட்டால் வாசகர்கள் தமது தளத்துக்கு வரமாட்டார்கள் அல்லது தமது தளத்தின் தரத்தின் மரியாதை குறைந்துவிடும் என்று இந்த வெட்டி ஒட்டல் மன்னர்கள் கவலை வேறு கொள்கின்றார்கள் போல் இருக்கின்றது.

உங்கள் கருத்தாடலின் போது உங்களை விமர்சித்தவர்கள் பற்றி எனக்கு நன்கு தெரியும்..ம் ஆனால் தாங்கள் இன்று செய்வது என்ன அவர்கள் செய்தது போல் தாங்களும் செய்கிறீர்கள் அப்படி பார்க்க போனா அவர்களுக்கும் உங்களுக்கு என்ன வித்தியாசம்..??

மற்றவர்களிடம் இருந்து நான் என்னை வித்தியாசப்படுத்தி காட்டவேண்டிய தேவை எனக்கு இல்லை. ஒருவர் எப்படி கருத்து எழுதுகின்றார் என்று பார்த்து அவர் அதன் அடிப்படையில் பதில் கருத்து எழுதுகின்றேன். நீங்களும் அப்படியான பாணியில் கருத்தாடல் செய்தால் எனது பதிலும் அதுபோலவே அமையும்.

ம்ம்..தாங்கள் இங்கே இப்படி சொல்கிறீர்கள்..ள் ஆனால் மேலே யாழ் இணையத்தில் நேரத்தை விரயமாக்கி ஏதும் பயனில்லை எண்டு சொல்கிறீர்கள்..ள் எந்த கருத்தை ஏற்று கொள்வது..து..??..பங்காளரா சேருறதில பிரச்சினை இல்லை பிறகு நாளைக்கே என்னை யாரெண்டு கேட்டா..??

இதுபற்றி வேண்டுமானால் பின்னர் தனிமடலில் ஆராயலாம்.

ம்ம்..தாங்கள் விசுகோத்தாக இருப்பதில் பிரச்சினை இல்லை..லை ஆனால் உங்களை போல் எல்லாரும் எண்டு நெனைப்பது எப்படி ஏற்று கொள்ள முடியும்..??.

ஒரு விசுக்கோத்திற்கு பதில் எழுதுவது இன்னொரு விசுக்கோத்தாகவே இருக்கமுடியும். விசுக்கோத்துக்கள் எழுதுபவற்றை வாசிப்பவர்கள் விசுக்கோத்துக்களாகவே இருக்கமுடியும். இந்தவகையில் இதில் சம்மந்தப்பட்ட அனைவரும் விசுக்கோத்துக்களே என்பதற்கு வேறு ஆதாரம் தேவை இல்லை.

அப்ப நான் வரட்டா!!

ஆமா ஆமா வாங்க வாங்க. மீண்டும் கேள்விகள் இருந்தால் கேளுங்க. கலந்து ஆலோசிப்பம். ஆனால் கேட்கிற கேள்விகளை என்னைப்பற்றி கேட்காமல் இங்கு நடைபெறும் கருத்தாடல் பற்றி கேட்டால் மற்றவர்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கேட்கிறதிலையும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்யுது. பெரியாருக்கு எத்தின இஞ்சி தாடி இருக்கிது. ராமர் பாலம் கட்டுறதுக்கு எத்தின குரங்குக்குட்டிகள் தேவைப்பட்டது எண்டு பக்கம் பக்கமாக ஆராய்ச்சி செய்து கடைசியில மோகன் தண்ட தலையில அடிச்சு அழுது, எட நாய்களே நான் ஒருத்தன் இஞ்ச இருக்கிறன் எண்டுறத மறந்தது மட்டும் இல்லாமல் உங்கடபாட்டுக்கு ஏதோ எல்லாம் சொல்லிக்கொண்டு போறீங்களே நன்றிகெட்டவங்களே.. கடைசி எண்ட மீசையில எத்தின மயிர் இருக்கிது எண்டு நீங்கள் யாராச்சும் ஆராய முயற்சி செய்து இருக்கிறீங்களோ எண்டு சொல்லி கோவிச்சுக்கொண்டு கடைசியில உங்கட தாடியையும், குரங்குக்குட்டியையும் பற்றின ஆராய்ச்சிகளை நிருவாகத்துக்கு நகர்த்திறதுலையும் பார்க்க எங்கட ஆராய்ச்சி பரவாயில்லை தானே?

பெரியாரையும், ராமர் பாலத்தையும் அதற்கான தனித் தலைப்புக்களில் வைத்து ஆராய்ச்சி பண்ணுவதால் அதில் நாட்டம் உள்ளவர்கள் தமது பொன்னான நேரத்தைச் செலவழித்து தர்க்கம் புரிகிறார்கள். விளங்காத ஆட்டுக் குட்டிகள் இடையிடையே "மே...மே" என்று கத்தி விட்டுப் போவார்கள். அது இருக்கட்டும்.

இந்தத் தலைப்பில் உள்ள முதற்கருத்தின் நோக்கத்தை விவாதிக்காமல், பிற விடயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து "புலத்தீரே உறைக்கிறதா உமக்கு?" என்ற கேள்விக்கு பதில் பந்தி பந்தியாக எழுதுகின்றீர்களாக்கும்.

அடிப்படையில் நாங்கள் எருமை மாட்டு மந்தைகளாக இருப்பதால் நமக்கு ஏதும் உறைப்பதில்லை என்பதுதான் உண்மை போலுள்ளது.

Link to comment
Share on other sites

ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து பத்து லட்சத்திற்கும் மேல் உலகமெல்லாம் பரவிக் கிடக்கிற தமிழினமே..

எங்கள் பணத்தில் நடிகர்கள் வாழ்கிறார்கள் எங்கள் பணத்தில் நடிகைகள் சாப்பிடுகிறார்கள் என ஓயாது புலம்புகிற புலம்பெயர் தமிழனே.. உன் பணத்தை நம்பி அங்கே இரண்டு லட்சம் மக்கள் இருக்கிறார்கள் என்பதை உணர மாட்டாயா..?

அஜித்தையும் அர்சுனையும் உண்ணாவிரதத்திற்கு வரவைப்பதுதான் உன் உயர்ந்த பட்ச சேவையா..? அவர்கள் வருவது தான் உயர்ந்த பட்ச தேவையா..?

புலமெல்லாம் பரவியிருக்கும் தமிழனின் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் தினமும் ஒரு டொலர் கொடுத்தாலே 2 லட்சம் மக்களுக்கு ஒரு நாளுக்கு ஒரு நேர முழு உணவு கிடைக்குமே..

மாதம் முப்பது டொலர்கள் முடியாதா உன்னால்..?

இந்த வரலாற்றின் தேவையை மறந்து அஜித்தோடும் அர்ச்சுனோடும் ஏன் மல்லுக் கட்டுகிறாய்?

ஐநா வோடு மல்லுக் கட்டேன். முடியுமா உன்னால் ?

அழிப்பதற்கு ஆயுதமும் கொடுத்து - சாப்பிடுவதற்கு பிச்சையும் போடுகிறான் அவன்.

அந்த 800 டன் உணவும் வேண்டாம். நாங்கள் தருகிறோம் பணம். நீங்கள் அவர்களுக்கு கொண்டு போய்ச் சேருங்கள் என ஐநாவிடம் பேச முடியுமா உன்னால் ?

அஜித் வரவில்லையென்ற அடுத்த நிமிடம் ஏதேதோ அமைப்புகளின் ஊடாக அறிக்கை விடுகிறாயே.. ஐநா நோக்கி ஒரு அறிக்கையை விடேன்..

அந்த 2 லட்சம் மக்களின் தின உணவுக்கு தேவைக்கு நாங்கள் பொறுப்பு - அதை கொண்டு போய் சேர்ப்பதை உங்கள் பொறுப்பாக்க முடியுமா என ஐநாவைக் கேளேன்.

அதை விடுத்து அஜித்தோடு மெனக்கெட வெட்கமாயில்லையா எனக்கு?

மானமிருந்தால் ஒன்று கூடி அறிவித்துவிடு - நமது நமக்களுக்கு நாம் தருவோம் உணவு. அதை ஐநாவும் செஞ்சிலுவையும் அனுப்பட்டும்.

தினமும் ஒரு டொலர் - நீ விமானநிலையத்தில் - புகையிர நிலையத்தில் மூத்திரம் பெய்ய கொடுக்கும் காசு!

கொடுக்கமாட்டாயா?

ஐநாவோடு பேசு ! உன் என் மக்களுக்கு நீயும் நானும் உணவளிப்போம்.

அதை விடுத்து அஜித்தை வரச்செய்வது தான் உன் இலக்கு என்றால் அவர் வருவதாக அறிவித்து விட்டார்தானே உன்போராட்டம் வெற்றியடைந்தது உலகத் தமிழரின் எழுச்சிக்கு அடிபணிந்தார் என கோசம் போட்டுகொண்டு போய் அவரின் படத்தை பார்..

-- பிரம்மபுத்திரன்..

http://blog.sajeek.com/?p=431

காவடிக்கு

எல்லாருக்கும் உறைக்கிற மாதிரிச் சொன்னீங்கள் காவடி, எங்கடை காசில் சாப்பிட்டு வளர்ந்த அஜித், அர்ஜுன் போன்றவர் எல்லாம் ஏன் தமிழனுக்காக நடத்தும் உண்ணாவிரதத்தில் பங்கேற்க வேணும் என்ற கேள்வி கேட்டாங்களோ அன்றே அவர்கள் தமிழ் மனங்களில் இருந்து இறந்து விட்டார்கள் / இறந்து விட்டிருக்க வேண்டும்.

இவங்கடை படங்களை திரையிடாமல் தடை செய்த தமிழ் உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள் இந்தத் தீ எல்லா நாடுகளுக்கும் பரவி இவங்களை முற்றாகப் புறக்கணிக்க வேண்டும்.

எங்கடை போராட்ட வரலாறுகளுடன் ஒப்பிடும் போது இவங்களெல்லாம் புழுவிலும் பார்க்க கேவலமானவர்கள். நாங்கள் திரும்மத் திரும்ப கதைத்து அவங்களை பெரியவங்களாக்கிற நேரத்துக்கு நீங்கள் குறிப்பிட்டதை போல உலக நாடுகள் இந்தப் பிரச்சனையில் தலையிட்டு எங்கள் இனத்தை காக்க வழி செய்வோமே....!

இளங்கவி

என்ன கிருபன் நீங்களும் இதை வாசிச்சு பாருங்கள். வெறும் தலைப்பிற்கு நாங்கள் பதில் எழுதவில்லை. மேலே இரண்டு கருத்துக்கள் இப்படி எழுதப்பட்டன. அதன் பின்னர் நான் எனது கருத்துக்களை கூறினேன். நீங்கள் வந்து மூத்திரம் பற்றி கதைத்தீர்கள். இப்ப என்ன சொல்கின்றீர்கள்?

Link to comment
Share on other sites

ஆமாங்க.. சுத்துமாத்து பற்றி யாழ் நிருவாகத்துக்கு அவர்கள் விமர்சனங்கள் பற்றி சொல்லி இருந்தேன். உங்கட அஜித் அண்ணாவுக்கு இஞ்ச வக்காளத்து வாங்க இல்லை. தவறான கருத்துக்களையே சுட்டிக்காட்டி இருக்கின்றோம். எங்கட சமுதாய ஊடகம், எங்களை பாதிப்பன எண்டு பார்க்கிறதாலதான் இதுகள் பற்றி கருத்து சொல்லிறம். இதைக்கூட உங்களுக்கு விளங்கிக்கொள்ள அறிவு இல்லையா?

முரளி அங்கிள்..ள், :D

ஏன் உணர்ச்சிவசபடுறியள்..ள்..??..அது உடம்பிற்கு கூடாது..து சரியோ..யோ என்ன சொன்னனீங்கள் ஓ சுத்துமாத்து பத்தி யாழ்நிர்வாகதிற்கு அறிய தந்தனீங்கள் என்ன..ன..ம்ம் நல்ல விசயம் தான் அதையும் இங்க யாழில பகிரங்கபடுத்தி இருக்கலாமே..??

ஒரு வேள மறந்து போட்டியளோ தெரியல..(இல்லாட்டி அதலா தங்களுக்கு எந்தவித அதாயம் அது தான் பிரயோசனும் இல்லை எண்டு விட்டிட்டியளோ)..சரி அதை விடுவோம்..ம்..மற்றது எங்களிண்ட ஊடகத்தை பற்றி மேலே விளக்கமாக சொல்லிட்டன் அதாவது எங்கள் ஊடகங்கள் தற்போது தான் வளர்ச்சி அடைந்து வருகிறது..து இன்றைய சூழலில் வெறுமனே அவர்களை குற்றம் சாட்டுவதை நிறுத்தி..தி..

முடிந்தளவு எங்கள் சமூக ஊடகங்கள் வளர்ச்சி பெற நாங்களும் அவர்களுடன் இணைய வேண்டும்..ம் அதை விட்டிட்டு எங்கண்ட ஊடகம் எங்கள பாதிக்குது எண்டு சொல்வது என் பார்வையில் வெறும் அநாவசியமே..மே ஏன் எனில் இத்தகைய ஒரு காலகட்டத்தில்..ல் கணணிக்கு முன் இருந்து கொண்டு அவர்கள் இப்படி செய்தி தரணும் அப்படி செய்தி தரணும் எண்டு ஏனைய ஊடகங்களோடு ஒப்பிட்டு பார்ப்பது..

இன்றைய சூழலில்..ல் அநாவசியமற்றதொரு விடயம்..ம்..இதை ஏற்கனவே தெளிவாக விளங்கபடுத்தி இருந்தேன் ஆனால் நீங்கள் மறுபடி கேட்டதால் மேலோட்டமாக மறுபடி..டி இப்ப நான் சொன்னது உங்களுக்கு விளங்கிட்டோ முரளி அங்கிள் விளங்காட்டி நான் ஒண்டுமே செய்ய ஏலா பாருங்கோ..கோ

மற்றது சமுதாயம் ஊடகம் மேல் அக்கறை இருந்தால் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதனையும் ஏலவே சுட்டி காட்டியதால அதை பற்றி எனி கதைக்கவிருப்பவில்லை..லை ஆகவே அதை விடுத்து மறுபடி மறுபடி சமுதாய ஊடகம் எண்டு புலம்புவது..து எனக்கு விளங்கவில்லை..லை

ஒரு வேளை நான் சொன்னதை உங்களாள விளங்கி கொள்ள முடியவில்லை போல்..ல்.. :)

நீங்கள் இப்ப எனக்கு எழுதினபதிலும் பொழுதுபோக்காக நீங்கள் எழுதினது என்பதை வாசகர்கள் புரிந்துகொள்வார்கள். நீங்கள் இதுவரை 19,909 கருத்துக்களை ரெண்டு வருசத்துல கிறுக்கி இருக்கிறீங்கள். நீங்களும் பொழுதுபோக்காக எழுதவில்லை என்பதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும். எமது கருத்துக்களிற்கு சரியான விளக்கம் கூறமுடியாதவர்கள் எம்மை விமர்சிப்பதில் இறங்குகின்றார்கள். நீங்களும் இப்போது நடைபெறும் கருத்தாடலில் இதையே செய்கின்றீர்கள். நான் மேலே கூறிய தமிழ்சினிமா பற்றிய கருத்துக்களுக்கு உங்களால் விளக்கம் தரமுடியுமா? உங்களுக்கும்தான் வங்காளத்து வாங்க இங்கு பலர் இருக்கின்றார்கள். நான் கூறும் கருத்தினை ஆதரித்து வசம்பு அவர்கள் எழுதும்போது ஏன் உங்களுக்கு கஸ்டமாக இருக்கின்றது?

ம்ம்..நான் பொழுது போக்கா தான் யாழில் எழுதுகிறேன் இல்லை என்று நான் மறுத்தது கிடையாது..து ஆனால் முற்று முழுவதுமாக என் பொழுது போக்கு யாழ் இல்லை..லை..அது போல் நான் பொழுது போகாட்டி ஏனைய எங்கள் ஊடகங்கள் மீது கரியை பூசி அதில் எந்தவொரு நாளும் பிரபலமாக நினைக்கவில்லை ஆனால் தாங்கள் அப்படியோ முரளி அங்கிள் இல்லையே..யே..??

ஏன் தாங்கள் யாழில் பல கருத்துகளை எழுதினேன் அதலால் ஒரு வித பிரயோசனமும் இல்லை எண்டு வெளிபடையாக சொல்லி இருந்ததில் இருந்து தங்களின் மனநிலையை ஒரளவு புரிந்து கொள்ள முடிந்தது.. :D

மற்றது..து..

தாங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள் தங்களின் கருத்திற்கு பதில் கருத்து தர முடியாதவர்கள்..ள் தங்களை தாக்குவதில் குறியாக இருக்கிறார்கள் எண்டு..டு இது உங்களுக்கே நகைசுவையாக இல்லையா..??..நான் இந்த உரையாடலின் போது கேட்டவைக்கு பதில் தராம நான் எத்தனை கருத்து எழுதினேன்,எனக்கு அறிவு இருக்கோ எண்டு ஆய்வு செய்தது யார்..??

அப்ப நீங்க சொல்லாம சொல்லுறீங்களோ தங்களாள் மற்றவையிண்ட கருத்திற்கு பதில் அளிக்க முடியாத நிலையில் தாங்கள் இவ்வாறு நடந்து கொள்வீர்கள் எண்டு..டு அப்ப பிரச்சினை இல்லை நான் அதை ஒண்டும் பெரிசா எடுத்து கொள்ள மாட்டன் பாருங்கோ..!!

மற்றது..து மன்னிக்க வேண்டும்..ன் நான் பகிடியாக இங்கே சொன்ன கருத்து உங்களை காயபடுத்தி விட்டது போல்..ல் அதாவது தாங்கள் என்னிடம் கேட்ட கேள்வி அதாவது தங்களை பற்றி குறிப்பிட அவ் ஊடகமும் விமர்ச்சிக்கலாமே எண்டதிற்கு நான் நகைசுவையா கூறினேன்..ன்.."ஒரு வேளை அதனை நீங்கள் மறுக்க வசபண்ணா பாட்டு படிக்க எண்டு".. ஆனால் அதனை தவறாக புரிந்து கொண்டு..டு..

எதோ கேட்டுள்ளீர்கள்..ள்..நான் பார்த்தளவிள் வசபண்ணா..ணா உங்களுக்கு வக்காலத்து வாங்கவில்லை அவர் தன் கருத்தில் நிலை கொண்டுள்ளார்..ர் ஆனால் நீங்கள் தான் இவ் உரையாடலின் போது உணர்ச்சிவசபடுகிறீர்கள் கருத்தை ஏற்று கொள்ள முடியாத நிலை வரும் போது..து உடனே "அவரின் கருத்துடன்" முடித்து போடுறீர்களே தவிர வேறோன்றும் நடக்கவில்லை..லை

இதில் எனக்கு என்ன கஷ்டம் இருக்கிறது..து...(தங்கள் நிலை வருத்தத்தை தான் தருகிறது).. :(

நீங்களும் பொழுதுபோக்காட்ட என்னத்தையும் எழுதுவியள் என்பது எனக்கு தெரியும். கருத்துக்களத்தில் ஒரு செய்தியை இடும்போது அதுசம்மந்தமாக கருத்துக்கள் கூறுகின்றோம். யாழை மூடலாம் என்று சொல்கின்றீர்களா? அல்லது பெண்களின் மார்பகம் பற்றி மட்டும் ஆராய்ச்சி செய்தால் போதும் என்று நினைக்கின்றீர்களா?

ம்ம்..ஏலவே குறிப்பிட்டிருந்தேன் நான் பொழுதுபோகாட்டி இங்கே எழுதுறனான்..ன் ஆனால் சுயபிரபலயதிற்காக நான் எதனையும் விமர்சிப்பதில்லை..லை பாருங்கோ..ஏன் யாழை மூடுவது தங்களின் குறிகோளா..ளா எடுத்தவுடன் ஏன் அந்த வினாவிற்கு போறீர்கள்..ள்..??.. :)

மற்றது..து..!!

கருத்துகளித்திள் செய்திகளுக்கு பின்னூட்டம் வழங்குவது உங்கள் தனிபட்ட விடயம்..ம் அதை போல் உங்கள் கருத்திற்கு மறுப்பு தெரிவிப்பதிற்கு எனக்கு உரிமை இருக்கு..கு..இல்லை என்கிறீர்களா இல்லாதுவிடில் தாங்கள் சொல்லும் கருத்திற்கு ஆமா போட சொல்கிறீர்களோ..??

சரி இந்த பிரச்சினைக்கு வாரன்..ன்..!!

அதாவது பெண்களின் மார்பகம் பற்றி யாழில்..ல் பலர் கதைத்தது உண்மை ஏற்று கொள்கிறேன் ஆனால் ஒரு மனித அவயம் போல் தானே பெண்களின் மார்பகமும் ஆனால் தங்களின் கருத்துகளை பார்கும் போது ஏதோ அவர்கள் கதைக்க கூடாததை கதைத்த மாதிரியான தோற்றபாடு..டு அத்துடன் அவர்கள் குறிப்பிட ஒரு பிரிவின் கீழ் தான் அதனை பற்றி கதைத்தார்கள்..ள் சிலர் எல்லை மீறியும் கதைத்தார்கள்..அத்துடன் அவர்கள் அதை நிறுத்தி விட்டார்கள்..ள்..

ஆனால் தாங்களோ இன்னும் "பெண்களின் மார்பகம்" எண்டு புலம்பி கொண்டு திரிவதை எதுகுள் அடக்குவது..து சின்ன பிள்ளைகள் "சொக்லட்டை" பார்த்தால் "சொக்லட் சொக்லட்" எண்டு சொல்லி கொண்டு திரிவது போல் தான் இருக்கிறது தங்கள் செய்கையும்..ம் பிறகு ஏன்..??. :)

பொதுவாக சிங்கள மக்கள் தமது ஊடகங்கள் உண்மையான கருத்துக்களை கூறுகின்றன, தமிழ் ஊடகங்கள் புளுடாவிடுகின்றன என நினைக்கின்றார்கள். தமிழ் மக்கள் இதையே மாறி நினைக்கின்றார்கள். எனினும், சுயமாக சிந்திக்கத் தெரிந்தவர்கள் தமது தாய்மொழி ஊடகங்களில் விடும் புளுடாக்களை அறிந்து இருக்கின்றார்கள் அல்லது அறிய முயற்சிக்கின்றார்கள். சுயமாக சிந்திப்பவர்கள் பிழையான ஒரு தகவல் தமது ஊடகத்தில் பரப்பப்படும்போது அதை சுட்டிக்காட்டவே செய்வார்கள். புளுடாக்கள் நீண்டகால நோக்கில் ஊடகங்கள் பற்றி நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும். பக்கச்சார்பாக இல்லாமல் நடுவுநிலமையாக இருக்கக்கூடிய பிறநாட்டு ஊடகங்கள் எவை புளுடாக்கள் என்பதை கண்டுபிடிக்கும் திறன் படைத்தவை.

ம்ம்..வாயால கதைப்பதிற்கும் இங்க எழுதுவதிற்கும் தாங்கள் கூறிய கருத்து..து நன்றாக இருக்குமே தவிர நடைமுறையில் சரி வாற மாதிரி தெரியவில்லை..லை..என்ன தான் நடுநிலைமையான பிறநாட்டு ஊடகங்களாக இருந்தாலும் ஒரு நாட்டு அரசின் செய்தியை தான் கூடுதல் கவனம் எடுக்கும்..ம்..

சிங்கள இனவாத ஊடகங்கள் இன்றைய நீண்டகால செயற்பாட்டிலும்..ம் நம்பிக்கை இழக்காம இருக்கிறதே அது எப்படி எண்டு கூற முடியுமா..மா..??..அத்துடன் தாங்கள் சொல்வது போல் எங்கள் ஊடகங்கள் உண்மைப்பு புறம்பாக செய்திகளை தருவதில்லை..லை..ஆனா கொஞ்சம் மீகை ஊட்டுவது என்பது உண்மை..மை..சில வேளை மகிழ்ச்சியால் என்ன செய்வதெண்டு தெரியாமல் தங்களை அறியாம இடுக்கிறார்கள்..ள்..

காலபோக்கில் அதுவும் மறைந்திடும்..ம்..ஏன் அவர்களை உதாரணம் காட்ட வேண்டும் நீங்கள் கூற சில செய்திகளை கண்டவுடன் உணர்ச்சிவசபட்டு ஏதோ எல்லாம் எழுதுவீர்கள் அது போல் தான்..ன் அவர்கள் தேர்ச்சி பெற்ற ஊடகவியளார்கள் இல்லை என்பதினை கருத்தி கொள்ள வேண்டும்..ம்.. :)

அதாவது எம்மவருக்கு எம்மிடையே உடுக்கு அடிப்பதினதும், குசி ஏத்துவதினதும் முக்கியத்துவம் பற்றி கூறி இருக்கின்றீர்கள். ஆயிரக்கணக்கான புள்ளிநிறுவனங்கள், ஆயிரக்கணக்கான வலைப்பூக்கள்... இவற்றினுள் சென்று சரி பிழை பார்ப்பதற்கு எமக்கு நேரம் இல்லை

மன்னிகவும்..ம்..

நான் உங்களை மற்றவர்களை குசி படுத்தெ வேண்டுமோ அல்லது உடுக்கை அடிக்க வேண்டுமோ எண்டு கூறவில்லை அது நீங்களாகவே கற்பனை பண்ணி கொள்வது..து..மற்றது உங்களுக்கு மட்டும் தான் அங்கே நடக்கின்ற அவலங்கள் வர வேண்டும் என்பது கிடையாது..து எல்லாருக்கு சென்றடைய வேண்டும்..ம் அந்த வகையில் அவர்களின் செயற்பாடுகள் பாராட்டபட வேண்டிய விடயம்..ம்..

குறிப்பாக வலைபூக்கள் வைத்திருப்பவர்களை நான் இதற்குள் முதல் சேர்கவில்லை தற்பொழுது பார்கும் பொழுது அவர்களும் தங்களாள் முடிந்ததை செய்கிறார்கள்..ள்.உதாரணதிற்க

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.