Jump to content

நாச்சிமார்கோயிலடி இராஜன்


Recommended Posts

நாச்சிமார்கோயிலடி இராஜன்

nachimarrajanjw4.jpg

நாச்சிமார்கோயிலடி இராஜன் (யாழ்ப்பாணம், இலங்கை) ஈழத்து வில்லிசைக் கலைஞர் ஆவார். புலம் பெயர்ந்து ஜெர்மனியில் வசித்து வருகிறார்.

வாழ்க்கைச் சுருக்கம்

இவர் இலங்கையின் யாழ்ப்பாணம், நாச்சிமார்கோயிலடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ். வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் கல்வி பயின்ற இவர் தற்சமயம் ஜேர்மனியில் பிறேமன் நகரில் வாழ்ந்து வருகிறார். பாடசாலையில் பயின்ற காலத்திலேயே இவரது கலை ஆர்வம் வெளிப்பட்டது.

கலையுலக வாழ்வு

இவர் வில்லிசைகளில் வல்லவர். வில்லிசை நிகழ்ச்சிகளை 1968 இல் ஆரம்பித்து இற்றை வரை நடாத்தி வருகிறார். 1972 இலிருந்து "நாச்சிமார்கோயிலடி இராஜன் வில்லிசைக் குழுவை" நடாத்தி வருகின்கிறார். 1993இல் ஜெர்மனியின் றெயினை ஜெர்மன் தமிழ்ச் சங்கத்தின் வாணி விழாவில் பெருங்கவிக்கோ வ.மு.சேதுராமனால் "ஈழவில்லிசைச் செம்மல்" என்ற பட்டத்தைப் பெற்றார். 1996இல் கனடாவில் நிகழ்ந்த உலகத் தமிழர் பண்பாட்டு இயக்க மாநாட்டில் அதன் தலைவர் வீரப்பனால் "வில்லிசைக் காவலர் " என்ற பட்டத்தைப் பெற்றார். ரீ.ரீ.என் தொலைக்காட்சியில் இவரது பல வில்லிசைகள் ஒளிபரப்பாகின.

நாடகத் துறை

நாடகத்துறையிலும் இவருக்கு ஈடுபாடு உண்டு. ஜெர்மனியில் 1993, 1994, 1995, 1998 ஆகிய நான்கு ஆண்டுகளிலும் நடைபெற்ற நாடகப் போட்டிகளில் நான்கு முறைகளும் முதற்பரிசுகளைப் பெற்றுள்ளார். பிறேமன் தமிழ் கலை மன்றத்திற்காக பல நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார். மூன்று தடவைகள் சிறந்த இயக்குனருக்கான தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளார்.

தங்கப்பதக்கம்

1994 இல் இராட்டிங்கன் ஆதவ கிருஸ்ணா கலைமன்றம் நடாத்திய நாடகப் போட்டியில் "எதிர்பார்ப்புகள்" நாடகம் இவரது இயக்கத்தில் முதற் பரிசு பெற்றது. அதற்காக சிறந்த இயக்குநராக தெரிவுசெய்யப்பட்டு இராட்டிங்கன் ஆதவ கிருஸ்ணா கலைமன்றத்தால் இவருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

1995 இல் இராட்டிங்கனில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் நடாத்திய நாடகப் போட்டியில் "நீர்க்கோலம்" நாடகம் முதற் பரிசுக்கு தெரிவானது. நீர்க்கோலம் சிறந்த நாடக பிரதியாக தெரிவு செய்யப்பட்டு அதற்காக ஒரு தங்கப்பதக்கமும், அந்த நாடகத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குநராக தெரிவு செய்யப்பட்டு அதற்காக ஒரு தங்கப்பதக்கமும், சான்றிதழும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் வழங்கப்பட்டது.

1998 இல் எசன் நகரில் ஈழமுரசு பத்திரிகை நடாத்திய நாடகப் போட்டியில் "சுமைகள்" நாடகம் முதற் பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டது. அதற்காக சிறந்த இயக்குநராக தெரிவு செய்யப்பட்டு ஈழமுரசு பத்திரிகையால் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது

திரைப்படத்துறை

புகலிட திரைப்படத்துறையிலும் இவருக்கு ஆர்வம் உண்டு. நினைவுமுகம் திரைப்படத்திற்கு திரைக்கதை, உரையாடல் எழுதி இணை இயக்கம், தயாரிப்பு ஆகியற்றில் தடம் பதித்துள்ளார். தொடர்ந்து ஏ.ரகுநாதனின் தயாரிப்பில் பாரிசிலிருந்து தயாரிக்கப்பட்ட தயவுடன் வழிவிடுங்கள் படத்திலும் நடித்துள்ளார். யாரிவர்கள், பொறி, இப்படியுமா? ஆகிய குறும்படங்களை எழுதி இயக்கியுள்ளார். தற்போது இலண்டனில் தயாராகி வரும் ஈழவர் திரைக் கலை மன்றத்தின் நீர்க்கோலம் திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதியுள்ளார். பாரிசிலிருந்து தயாரிக்கப்படும் ஈழத்தவரின் முதல் திரைத் தொடர் நேசங்களுக்காக திரைக்கதை, உரையாடலில் பங்கெடுத்து வருகின்றார்.

வெளிவந்த நூல்கள்

எதிர்பார்ப்புகள் (நாடக நூல்)

http://kalaignarkal.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இவர் தான் மரதனோட்ட வீரர் சோழியனா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:unsure:ஆமா அவரே தான் இவர். இவரே தான் அவர். :unsure:

தவறு.

இவர் வில்லிசைக் கலைஞர்.. நாச்சிமார் கோவிலடி ராஜன். (யாழ் களத்தில் முன்னர் எழுதி வந்தவர். மணிதாசன் அங்கிள் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர்.. இவரைப் பற்றி பிறர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்..!)

ராஜன் முருகவேல் என்பவரே சோழியான். அவர் வேறு இவர் வேறு. ஒருவேளை இருவரும் நண்பர்களோ தெரியவில்லை. :unsure:

Link to comment
Share on other sites

இராஜன் முருகவேல் - பல்துறை கலைஞர் - எழுத்தாளர்

தாயகப்பறவைகளின் மாதமொரு கலைஞர்கள் பகுதிக்கு கலைஞர்களை தேடிய போது எமக்குள் இருக்கும் ஒரு கவிஞர் கலைஞரின் நினைவு வரவே அவரைப் பற்றிய தேடல்களும் தேவையாயிற்று. கலைஞர் என்ற எண்ணப்பாடோ, பெருமிதமோ, இன்றி எமக்குள் ஒருவராய் யதார்த்ததை வெளிக்கொணரும் இவரின் பண்பு சிறப்பானது. தாயகத்திலிருந்து எம்மைப்போலவே புலம்பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வசித்து வருமிவர், எளிமையும், செழுமைக்கும் பேர் போன யாழ்பாணத்தின் சுழிபுரத்தில் தந்தை முருகவேலுக்கும் தயார் சரோஜியினிதேவிக்கும் மூத்த மகனாக ஐப்பசித் திங்கள் 4ஆம் நாள் 1960 ஆண்டு ராஜன் மகனாகப் பிறந்தார்.

1965ஆம் ஆண்டு சின்ன வயதிலையே சீரிய மாணவனாய் 5ஆம் ஆண்டு படிக்கும் போது விளையாட்டாய், சினிமாப் பாடல் ஒன்றில் வந்த சாலமன் கதையைத் தனது கதை என்று எழுதிய ராஜன் அதை அன்றைய காலத்தில் யாழ் நகரில் வெளி வந்த “சிரித்திரன்” இதழுக்கு அனுப்பியிருக்கிறார். அதன் விளைவு இன்று எழுத்தாளான் உருவாக்கத்துக்கு வழிவகுத்துள்ளது. இன்றைய சுயநலப் பத்திரியாளர்கள் போலல்லாது. அன்று “சிரித்திரனின்” ஆசிரியராக இருந்த சுந்தர் அவர்கள் இவரது சொந்த ஆக்கத்தை எழுதி அனுப்புமாறும், அதற்கான அலோசனைகளையும், ஊக்கத்தையும் அழிக்கும் வகையில், ஒரு தபாலட்டையை அனுப்பியுள்ளார். அதிலிருந்து பிறந்த உத்வேகம்தான் இன்றைய படைபாளியின் உருவாக்கம். அந்த உந்து சக்தியை வாழ்த்தி தொடர்கின்றேன்.

கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்ற இவர் அந்தக் கல்லூரியின் ஆண்டு மன்ற மலரை பொறுப்பேற்று உருவாக்குகினார். தனது பள்ளி அப்பியாசப் புத்தகத்தில் தான் கிறுக்கிய கதைகளே தனக்கு அந்த பொறுப்பை பெற்றுத் ததந்தாகவும், அதற்ககு தனது இரசயனப்பாட ஆசிரியர், திரு கந்தசாமி அவர்கள் வழக்கிய ஊக்கப்படுத்தலை நெகிழ்வுடன் இன்றும் நினைவு கூர்கின்றார். 1980ஆம் ஆண்டு “வசந்தம்” சஞ்சிகையின் ஆசிரியராக இருந்த இவர் மிக இளவயதில் எழுத்தாளராக திகழ்ந்தவர். சமுதாய நோக்கம் கொண்ட இவரது கதைகள், கவிதைகள், கட்டுரைகள், கற்பனைகளுக்கு அப்பால், நிஜத்தை தொட்டு செல்கின்றன. குறிப்பாக புகலிட வாழ்வைப்பற்றி அவரது படைப்புக்கள் உண்மையை எடுத்தியம்புகின்றன.

இது வரையில் இரு புத்தக தொகுப்புக்களை வெளியிட்ட இவர் இன்றைய இணைய தொழிநுட்பத்தால் கவரப்பட்டு, வெளியீடுகளைத் தவிர்த்து இணைத்தில் எழுத ஆரம்பித்துள்ளார். இவரது இணைய எழுத்தில், யாழ் இணையத்துக்காக, 2003 ம் ஆண்டு காலப்பகுதியில், எழுதிய “ஐஸ்கிறீம் சிலையே நீதானா?” என்ற கதை இளைஞர்களின் நெஞ்சை விட்டகலா ஒரு தொடர் நாவலாகும், அது மட்டுமல்ல தற்போது தாயகப்பறவகள் மாத இதழுக்காக கைக்கெட்டாத மாத்துக்கள் என்னும் தொடர் நாவலை எழுதி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் இணையத்தில், புகலிட மக்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொணரும் வகையில், அவர் தம் கட்டுரைகள், ஆக்கங்கள், பாடல்கள், ஒளிப்படங்களை, கொண்டு சீரிய முறையில் ஒழுங்கு படுத்தப்பட்டு, வெளிவரும் தமிழமுதம் இணையத்தின் ஆசிரியர் இவராவார்.

கதைகள் எழுதுவதை விட பல கவிதைகளையும் நகைச்சுவை கலந்த, கட்டுரைகளையும் எமக்கு தந்திருக்கின்றார். தான் சொல்ல வரும் விடையங்களை சுவாரசியமாகவும், சலிப்பின்றியும், தொடர்ந்து படிக்க தக்க வகையில், எழுதுவது அனைவராலும் விருப்பப்படுகின்றது. அதை விட தாயகத்துக்கும், புகலிடத்துக்கும் இடையே இருக்கும், இடைவெளியை நன்றாக புரிந்து கொண்ட கவிஞனாய் இருக்கின்றார்.

ஒரு உதாரணமாக அண்மையில் ஒரு கவிதை எழுதியிருந்தார், தொலைக்காட்சி நாடகப்பிரியர்கள் புகலிடத்தில் பெருகியிருப்பதை கோடிட்டு காட்டும் வகையில்,

.. ... செய்தியும் அறியேன் முயற்சியும் நாடேன்

மெய்யாய் உன்னில் விழுந்தேனே

கைதியும் ஆனேன் நீ சிறையும் ஆனாய்

மெய்யும் உருக அமிழ்ந்தேனே!...............................

இப்படி ஏதோ காதல் கவியை எழுதுவது போல, தன்னையே அதற்கு உவமையாக எடுத்து எழுதி இறுதியில்,

,,,,,,,,,,நேற்றும் இன்றும் என்றும் என்னில்

காந்தக் கதிராய் படர்ந்தனையே

மாற்று வழியை மறித்துப் படரும்

'ரீவி சீரியலே' முடிந்துவிடு,,,,,,,,.

இப்படி தொலைக்காட்சி நாடங்களே முடிந்து விடு என பொருள்பட எழுதிருக்கின்றார். இப்படியாகவே இவரது படைப்புக்கள் இருக்கின்றன. யதார்த்தம் இவர் கவி வரி, உண்மை இவர் கதை, நிஜமே இவர் கட்டுரை, இதுவே இராஜன் முருகவேல் அவர்களின் சிறப்பு. ஜேர்மனியில் தற்போது வசித்து வரும் இவர், தனது எழுத்து பணியை தொடர்வதோடு, சமூகப்பணிக்காய், பிறேமன் தமிழ் கலை மன்றத்தின் செயலாளராக இருந்த இவர் அந்த காலப்பகுதியில் 30 மணி நேர தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தொகுத்து வழக்கினார். இது தவிர, பட்டிமன்றங்களில் வாதிடுவதிலும், வில்லிசைகளில் பங்கு பற்றுவதிலும், விருப்பு கொண்ட இவர், வானொலிகளிலும், கவிதைகளை படிப்பதுண்டு. தவிர, சில கவிதைகள், பாடல்களாகவும், வானலை ஏறியுள்ளது.

இன்றும் இணையத்தில் எம் போன்றவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும், தந்து கொண்டிருக்கும் இவர் போன்ற கலைஞர்/கவிஞர்களின் உருவாக்கமும், தேவையும் எமது சமூகத்துக்கு தேவையானது என்றால் மிகையாகாது.

ஆக்கம் - நிரோஜன்

_________________

வாழ்க்கை அநுதாபங்களிலோ கவர்ச்சியிலோ அமைந்துவிடக் கூடாது மனங்களின் புரிதலில் அமைய வேண்டும்.

நட்புடன்

இரசிகை

http://thayakaparavaikal.com/forum/viewtopic.php?t=236

Link to comment
Share on other sites

தவறு.

இவர் வில்லிசைக் கலைஞர்.. நாச்சிமார் கோவிலடி ராஜன். (யாழ் களத்தில் முன்னர் எழுதி வந்தவர். மணிவாசன் அங்கிள் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர்.. இவரைப் பற்றி பிறர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்..!)

ராஜன் முருகவேல் என்பவரே சோழியான். அவர் வேறு இவர் வேறு. ஒருவேளை இருவரும் நண்பர்களோ தெரியவில்லை. :unsure:

ஆம் தவறு தான் மன்னிக்கவும். நெடுக்கு சொல்வது தான் சரியானது. ராஜன் முருகவேல் தான் சோழியான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது புரிதலில் இவர் சோழியனாக இருக்க முடியாது...சோழியான் ..முல்லைத்தீ்வு பகுதியை சேர்ந்தவர் ... வடமராட்சிபகுதியில் தங்கியிருந்து ஹாட்லி க்ல்லூரியில் படித்ததாக அவரே எங்கையோ யாழ் களத்தில் கூறீயதாக ஞாபகம்

சோழியான் முல்லைத்தீவைச் சேர்ந்தவரா.. இல்லையே. அவர் வலிகாமத்தை (சுழிபுரம்) எல்லோ பிறப்பிடமாகக் கொண்டவர் என்று பிறர் சொல்லக் கேட்டிருக்கிறேன். சோழியான் படித்தது ஹாட்லியில் அல்ல.. றோயல் கல்லூரி கொழும்பில்.. என்று அவரே சொல்லி இருக்கிறார் களத்தில்..! :unsure::unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாச்சிமார்கோயிலடி இராஜன் அறிந்து கொள்ள முடிந்ததில் சந்தோசம்

http://kalaignarkal.com/

வேலை செய்ய வில்லையே நுனாவிளான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா நீங்களும் குழம்பி மற்ற எல்லாரையும் குழப்புறியள் சோழியண்ணை வேறை இராஜன் அண்ணை வேறை

ஆனால் இரண்டுபேரும் ???????????????? :unsure:

Link to comment
Share on other sites

நாச்சிமார்கோயிலடி இராஜன் அறிந்து கொள்ள முடிந்ததில் சந்தோசம்

http://kalaignarkal.com/

வேலை செய்ய வில்லையே நுனாவிளான்

http://kalaignarkal.blogspot.com/

Link to comment
Share on other sites

இராஜன் முருகவேல் - பல்துறை கலைஞர் - எழுத்தாளர்

இன்றும் இணையத்தில் எம் போன்றவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும், தந்து கொண்டிருக்கும் இவர் போன்ற கலைஞர்/கவிஞர்களின் உருவாக்கமும், தேவையும் எமது சமூகத்துக்கு தேவையானது என்றால் மிகையாகாது.

ஆக்கம் - நிரோஜன்

ஆகா, நமது சோழியன் அண்ணாவா. கேட்பதற்கு மகிழ்வாக உள்ளது. :unsure:

தகவலுக்கு நன்றி நுணாவிலான், ரசிகை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாச்சிமார் கோவிலடி இராஜன் பற்றி தலைப்பை இட்டுவிட்டு.. ராஜன் முருகவேல் (சோழியன்) பற்றியே அதிகம் தகவல்களை இணைத்து வருகிறீர்கள். இது நாச்சிமார் கோவிலடி இராஜனை ராஜன் முருகவேலாக தவறாக இனங்காணவே அதிகம் உதவும். எனவே தயவுசெய்து தெளிவாக இங்குள்ள வேறுபாட்டை இனங்காட்டி.. அவர்கள் இருவரின் தனித்துவங்களையும் தனித்துவமாக இனங்காட்டி கெளரவிப்பதும்.. அறிமுகம் செய்து வைப்பதுமே சிறப்பானது. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணிதாசனும், சோழியன் அண்ணாவும் சேர்ந்து பட்டிமன்றம் செய்த காணொளி ஒன்றை சோழியண்ணா முன்பு தந்த ஞாபகம். தமிழ்ப் புதுவருடத்திற்காக இருக்க வேண்டும்..

இது தான் நாச்சிமார் கோவில் ராஜன்: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%...%AE%A9%E0%AF%8D

சோழியன் அண்ணா சுழிபுரத்தைச் சேர்ந்தவர். முன்பு வசந்தனும், சோழியனும் மாதகல், சுழிபுர வேலிச்சண்டை பிடித்த ஞாபகம் :(

Link to comment
Share on other sites

ஆகா.. சில நாட்கள் யாழ் பக்கம் வராமல்விட்டால்.. அதற்குள் ஏதேதோ நடந்திட்டுது.. நாச்சிமார்கோயிலடி இராஜன் அவர்கள் தாயகத்திலும் புகலிடத்திலும் நன்கு அறியப்பட்ட கலைஞர். அவர் மற்றும் பிரபல எழுத்தாளர் இந்துமகேஷ் ஆகியோர் பிறேமன் என்னும் நகரில் வசிப்பதனால், இந்த நகரத்திற்கு எனது வசிப்பிடத்தை மாற்றிக் கொண்டவன் நான்.

நாச்சிமார்கோயிலடி இராஜன் அவர்களுடன் சில வில்லிசை நிகழ்ச்சிகளில் 'ஆமாம்' சாமியாக பங்குபற்றியுள்ளேன். என்ன பாக்கிறியள்.. நோர்வே, சுவிசெல்லாம் போயிருக்கிறனாக்கும்.. :icon_mrgreen: மற்றும் அவருடைய நாடகங்கள் சிலவற்றிலும் பங்குபற்றியுள்ளேன்.

தற்போது தங்களது குழப்பம் தீர்ந்திருக்கும் என நம்புகிறேன். :)

தூயவன்.. மாதகலான் சுழிபுரத்தான் சண்டை நடந்தது மெசன்சரில.. யாழ் உறவுகளை குழப்பாதீங்க.. :lol:

எங்கள் இரண்டு பேருடனும் 'குருவிகள்' மெசன்சரில் உரையாடுவார்.. அந்தத் துணிவில நெடுக்ஸ் 2 பேரும் ஒன்றல்ல என்று உறுதியாக கூறியுள்ளார். அவருக்கு தகவல் வழங்கிய குருவிகளுக்கும் நன்றி!! :D:lol:

Link to comment
Share on other sites

சோழியன் மாமா, நீங்கள் தான் உங்கட படத்தை முன்பு யாழில ஒரு இடத்தில போட்டு இருந்தீங்களே தேர்திருவிழா அண்டு எடுத்தது. அந்தப்படமும், இந்தப்படமும் முகங்கள் வித்தியாசமா இருக்கிறத ஒருவரும் கவனிக்க இல்லையோ. இல்லாட்டிக்கு அது உங்கட படம் இல்லையோ. இந்த முகம் வெளிச்சத்தில எடுக்கப்பட்டு இருக்கிது. அது இருட்டில எடுக்கப்பட்டது மாதிரி இருக்கிது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் இரண்டு பேருடனும் 'குருவிகள்' மெசன்சரில் உரையாடுவார்.. அந்தத் துணிவில நெடுக்ஸ் 2 பேரும் ஒன்றல்ல என்று உறுதியாக கூறியுள்ளார். அவருக்கு தகவல் வழங்கிய குருவிகளுக்கும் நன்றி!! :lol::icon_mrgreen:

எனக்கும் குருவிகள் மெசன்சரில் உரையாடும் போதுதான் சொன்னார். இருவரும் ஒருவரில்லை என்று. அத்துடன் நீங்கள் இருவரும் அவரை யாழ் களத்தில் ஆரம்பகாலத்தில் எழுத ஊக்கிவித்து வழிநடத்தியதாகவும் சொன்னார். மெசன்சருக்கு எத்தனையோ வகையான மனிதர்கள் வருகிறார்கள்.. தேவைகள் முடிய இடம்தெரியாமல் மறைந்துவிடுகிறார்கள் அல்லது ஐடியை மாற்றிவிடுகிறார்கள்.

மெசன்சரில் கூட நாலு நல்ல மனிதர்களை சந்திக்க முடிகிறது என்பதற்கு.. நீங்கள் எல்லாம் உலகுக்கு சாட்சி. எனக்கும் உங்களோடு எல்லாம் கதைக்க விருப்பம். ஆனால் நான் மெசன்சரில் அதிகம் பேரோடு கதைப்பதில்லை. ஒரு சில தெரிந்த நண்பர்களோடு மட்டுமே கதைப்பேன். குருவிகளையும் எனக்குத் தெரியும். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா.. சில நாட்கள் யாழ் பக்கம் வராமல்விட்டால்.. அதற்குள் ஏதேதோ நடந்திட்டுது.. நாச்சிமார்கோயிலடி இராஜன் அவர்கள் தாயகத்திலும் புகலிடத்திலும் நன்கு அறியப்பட்ட கலைஞர். அவர் மற்றும் பிரபல எழுத்தாளர் இந்துமகேஷ் ஆகியோர் பிறேமன் என்னும் நகரில் வசிப்பதனால், இந்த நகரத்திற்கு எனது வசிப்பிடத்தை மாற்றிக் கொண்டவன் நான்.

நாச்சிமார்கோயிலடி இராஜன் அவர்களுடன் சில வில்லிசை நிகழ்ச்சிகளில் 'ஆமாம்' சாமியாக பங்குபற்றியுள்ளேன். என்ன பாக்கிறியள்.. நோர்வே, சுவிசெல்லாம் போயிருக்கிறனாக்கும்.. :icon_mrgreen: மற்றும் அவருடைய நாடகங்கள் சிலவற்றிலும் பங்குபற்றியுள்ளேன்.

தற்போது தங்களது குழப்பம் தீர்ந்திருக்கும் என நம்புகிறேன். :)

தூயவன்.. மாதகலான் சுழிபுரத்தான் சண்டை நடந்தது மெசன்சரில.. யாழ் உறவுகளை குழப்பாதீங்க.. :lol:

எங்கள் இரண்டு பேருடனும் 'குருவிகள்' மெசன்சரில் உரையாடுவார்.. அந்தத் துணிவில நெடுக்ஸ் 2 பேரும் ஒன்றல்ல என்று உறுதியாக கூறியுள்ளார். அவருக்கு தகவல் வழங்கிய குருவிகளுக்கும் நன்றி!! :D:lol:

குருவிகள் பறந்து போனதாய் அறிந்தேனே.............

Link to comment
Share on other sites

என்ன இப்படி சொல்லிட்டீங்க.. எவ்வளவு தூரம் பறந்தாலும் இளைப்பாற பூமிக்கு வரத்தானே வேண்டும்... (அதுக்காக எவ்வளவுதூரம் பெண்களைக் கேலி செய்தாலும் பெண்களை நாடி வரத்தானே வேணும்.. என்று அர்த்தப்படுத்திக் கொள்ளாதீங்க.. பிறகு நெடுக்ஸ் கோபிப்பாரு.. :) )

Link to comment
Share on other sites

யாழ் இணைய உறவுகளுக்கு நெஞ்சார்ந்த வணக்கம்!

களத்தின் புதிய உறவுகள் பலருக்கு மணிதாசனைத் தெரியாது.

மணிதாசன் தான் நாச்சிமார்கோயிலடி இராஜன்

பெரும்பாலும் தினசரி ஒருதடவை களத்தைப் பார்ப்பேன்.

இன்று நாச்சிமார் கோயிலடியைக்கண்டதால்

இராஜபை் பற்றியும் அறிந்தேன் - :D

அறிமுகப்படுத்தியவருக்கும், ஆவலுடன் படித்தவர்களுக்கும் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணைய உறவுகளுக்கு நெஞ்சார்ந்த வணக்கம்!

களத்தின் புதிய உறவுகள் பலருக்கு மணிதாசனைத் தெரியாது.

மணிதாசன் தான் நாச்சிமார்கோயிலடி இராஜன்

பெரும்பாலும் தினசரி ஒருதடவை களத்தைப் பார்ப்பேன்.

இன்று நாச்சிமார் கோயிலடியைக்கண்டதால்

இராஜபை் பற்றியும் அறிந்தேன் - :D

அறிமுகப்படுத்தியவருக்கும், ஆவலுடன் படித்தவர்களுக்கும் நன்றி

ம்ம்.. உங்களையே இங்கு காண்பதில் மிக்க மகிழ்ச்சி. சிரமம் பாராது தொடர்ந்து யாழ் களத்தில் எழுத வேண்டுகின்றேன். :(

Link to comment
Share on other sites

நன்றி நுணா அண்ணா..ணா இரு கலைஞர்களை..ளை பற்றி அறிய தந்தமைக்கு..கு.. :( மற்றது சோழியன் அங்கிளிண்ட படைப்புகள்..ள்.. குறிப்பிட்ட காலபகுதி ஆட்களின் ரசனைக்கு இல்லாமல்..ல் எல்லாரிண்ட ரசனைக்கு தக்க வகையில் எழுதுவது தான்..ன்.

அவரின் அந்த ஓட்டத்தின் மகிமை எண்டு நினைக்கிறன்..ன்.. :) என்ன சோழியன் அங்கிள் நான் சொல்லுறது சரியோ ஒருக்கா வந்து எனக்கு "ஆமா" போடுறியளோ..ளோ..(கோவித்துபோடாதை

யுங்கோ).. :)

அப்ப நான் வரட்டா!!

மெசன்சருக்கு எத்தனையோ வகையான மனிதர்கள் வருகிறார்கள்.. தேவைகள் முடிய இடம்தெரியாமல் மறைந்துவிடுகிறார்கள் அல்லது ஐடியை மாற்றிவிடுகிறார்கள்.

தாத்தா..தா உதை ரொம்ப கவலைபட்டு சொல்லுற மாதிரி கிடக்கு..கு..ஆனாலும் தாத்தா சொன்னதிலும் உண்மை இருக்கா தான் செய்யுது..து.. :D

அப்படியே எண்ட மனதில இருக்கிறதெல்லாத்தையும் அப்படியே சொல்லுறீங்கள்..ள் தாத்தா..தா..ம்ம் இப்ப தான் உலகத்தை நல்லா வெளங்குது..து.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நாச்சிமார்கோயிலடி இராஜன் படங்களை நெட்டில் பார்க்க உண்டா? நல்ல நடிகர் போல முகம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதைத் தான் நானும் விரும்புகிறேன். ஆனாலும் ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற யார் இருக்கிறார்கள்? காட்டுங்க கை கோர்க்கிறேன் என்கிறார். இதுக்கு யாரிடமும் பதில் இல்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். இதுவரை நாம்தமிழர் வாக்குவங்கி கூடிக் கொண்டு தானே போகுது? எப்படி 3 வீதம் என்று கணித்தீர்கள்?
    • அவருக்கு பெரியமனசு. எப்படி அடித்தாலும் தாங்குவார்.
    • முதலில் நான் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும்,..எந்த தலைவருக்கும். எதிரானவன். இல்லை என்பதை  பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்  .....இங்கு எழுதுவது கருத்துகள் மட்டுமே  [அதாவது நடைமுறையில் சாத்தியம் எது என்று நான் கருதுவது ]. தமிழ்நாட்டில் எந்தவொரு தலைவரும் தனித்து நின்று வெல்ல முடியாது  ..இது சீமானுக்கும். பொருந்தும்    எந்த கட்சியும். வெல்ல வேணும் என்றால் கூட்டணி அவசியமாகும் ...செல்வாக்கு உள்ள கட்சிகளின் கூட்டணி அமைத்தால். மட்டுமே வெல்லலாம்.  சீமான் தலைமையில் எந்த கட்சியும். கூட்டணி அமைக்கப்போவதில்லை  ....சரியா? அல்லது பிழையா??   சீமான் வேறு கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்க முடியும்,.....ஆனால் அடுத்த அடுத்த தேர்தலில் அவரது   ஆதரவு   குறைத்து விடும்   3% கூட வரலாம்”      
    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.