Jump to content

யாழ்ப்பாணத்து பெண்ணின் சோக கதை


Recommended Posts

வெளிநாட்டில் சம்பாதிக்கும் கணவனா?

17_11_2008_017_008_004.jpg

திருமதி. மீனாட்சி குமரேசன்

யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியை சேர்ந்த எனது பெயர் மீனாட்சி. எனது பெற்றோர்கள், வெளிநாடு சென்று சம்பாதிக்கும் மாப்பிள்ளை ஒருவரைப் பார்த்து, திருமணம் செய்து வைத்தார் கள். எனது திருமணம் இந்தியாவில் நடந்தது. திரு மணம் முடிந்ததும் தமிழக நகரில் உள்ள அவரின் உறவினர் (பெரியப்பாவின் மகன்) வீட்டில் எங் களது இல்லற வாழ்க்கை தொடங்கியது. இரண்டே மாதம் கழித்து அவர் மீண்டும் அரபு நாட்டிற்கு பணி நிமித்தமாகச் சென்று விட்டார். மூன்று மாதம் கழித்து, உறவினர் பெயரில் பணம் அனுப்பத் தொடங்கினார். பணத்தை, உறவினரின் பெயரில் அனுப்பி வைக்க, என்னுடைய அத்தியாவசிய செலவுக்கே அவர்களிடம் கைகட்டி நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஒருநாள் அந்த உறவினரிடம் பணம் கேட்ட தற்கு, ""உனக்கு சாப்பாடு கிடைக்குதே போதாதா? காசு வேற வேணுமா? அப்படி அவசியம் வேணு மின்னா உங்க அப்பன் கிட்டபோய் வாங்கிக்கோ...'' என்று சொல்லிவிட்டார். இதுகுறித்து எனது கணவ னிடம் தொலைபேசியில் பேசும் போது நினைவு படுத்தியதற்கு, ""உனக்கு எதுக்குப் பணம், மூன்று வேளை சாப்பாடு கிடைச்சா போதாதா ? என்று உறவினர் கூறியதையே எனது கணவரும் கூற, அதிர்ந்து போய்விட்டேன்.

தற்போது உறவினர் குடும்பத்தினருக்கு சமைத்துப்போட்டு, அவர்கள் சாப்பிட்டது போக மீத மிருப்பதைச் சாப்பிடும் ஒரு பணியாளாய் இருக் கிறேன். ஈழத்தில் இருக்கும் எனது பெற்றோர் களிடம் இது பற்றிக் கூறினால், ""உனக்காவது மூன்று வேளை சாப்பாடு கிடைக்கிறதே என்று நாங்கள் சந்தோஷப்படுகிறோம். வீணாக மனதைப் போட்டு குழப்பிக் கொள்ளாதே'' என்று அறிவுரை வழங் குகிறார்கள். எனவே பெண்களே! வெளிநாட்டில் வருவாய் ஈட்டும் மணமகன் என்றவுடன் ஆசைப்பட்டுத் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.

என்னைப்போல் அடிமையாக ஆகிவிடாதீர்கள்.

ஏனெனில் இன்னும் பத்தாம் பசலித்தனமான ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஜாக்கிரதை !

http://epaper.virakesari.lk/ArticleImage.a..._008&mode=1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போகிற போக்கைப்பார்த்தால் திருமணம் செய்யாமல் இருப்பதே நல்லது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது உறவினர் குடும்பத்தினருக்கு சமைத்துப்போட்டு, அவர்கள் சாப்பிட்டது போக மீத மிருப்பதைச் சாப்பிடும் ஒரு பணியாளாய் இருக் கிறேன். ஈழத்தில் இருக்கும் எனது பெற்றோர் களிடம் இது பற்றிக் கூறினால், ""உனக்காவது மூன்று வேளை சாப்பாடு கிடைக்கிறதே என்று நாங்கள் சந்தோஷப்படுகிறோம். வீணாக மனதைப் போட்டு குழப்பிக் கொள்ளாதே'' என்று அறிவுரை வழங் குகிறார்கள். எனவே பெண்களே! வெளிநாட்டில் வருவாய் ஈட்டும் மணமகன் என்றவுடன் ஆசைப்பட்டுத் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.

இதற்குள் தாங்கள் தலையிட்டால் தங்கள் மகளின் வாழ்க்கை வீணாகபோய்விடும் , என்ற எவ்வளவு வேதனையில் அந்த பெற்றோரிடம் இருந்து இந்த வார்த்தைகள் வந்திருக்கும் .

சிலருக்கு கலியாணம் கட்டுவது சமைக்கவும் , பிள்ளை பெறவும் என்கின்ற மனப்பான்மை மாறவேண்டும் .

உங்கள் மனைவி , உங்களில் பாதி என்பதனை மறந்து விடாதீர்கள் .

Link to comment
Share on other sites

இதற்குள் தாங்கள் தலையிட்டால் தங்கள் மகளின் வாழ்க்கை வீணாகபோய்விடும் , என்ற எவ்வளவு வேதனையில் அந்த பெற்றோரிடம் இருந்து இந்த வார்த்தைகள் வந்திருக்கும் .

சிலருக்கு கலியாணம் கட்டுவது சமைக்கவும் , பிள்ளை பெறவும் என்கின்ற மனப்பான்மை மாறவேண்டும் .

உங்கள் மனைவி , உங்களில் பாதி என்பதனை மறந்து விடாதீர்கள் .

உவ ஏதும் நாசம்பண்ணாமல் அந்தக் கணவனும் அவருடைய சொந்தங்களும் உப்பிடி செய்யாகினமெண்டு உப்பிடியான கணவன்களுக்கு ஆராத்தியெடுக்கவும் இங்கை சிலர் இருக்கினம் சிறி. :icon_mrgreen:

பலரது மனரீதியான மாற்றமே இத்தகைய நிலைமைகளுக்குத் தீர்வாகும். ஆனால் தீர்வுகள் காணவேண்டிய இளையோர் பலர் மனநோயாளர்கள் போல பெண்களது பிரச்சனைகள் வெளியில் சொல்லப்பட்டால் சம்பந்தப்பட்ட பெண்களையே குற்றம் புரிந்தவர்களாக புனைந்து தங்கள் அரியண்ட எண்ணங்களை திணித்துவிடுகின்றனர்.

பொருளாதார ரீதியாகவும் கல்வியிலும் பெண்கள் இன்னும் முன்னேற்றமடைய வேண்டும். சிறுதொகையெனினும் சொந்தச்சம்பாத்தியம் கட்டாயம் தேவை.

Link to comment
Share on other sites

வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வரும் சில கணவன்மார்கள் தமது மனைவிமாரை டிவீ செனல் ஒன்றை வாங்கி வீட்டுக்குள் அடைத்து வைத்திருப்பதையே அவர்கள் பேச்சிலிருந்து அறிந்திருக்கிறேன்.

என் உறவுபெண்ணொருத்திக்கு அவரது கணவர் அந்த நாட்டு சிட்டிசனைக் கூட எடுத்துக் கொடுக்க மறுத்தது பற்றி பேச்சு வாக்கில் சொன்னார். அதுபற்றி அவர் கணவரிடம் பகிடாய் இதைக் கேட்டபோது அவர் சொன்னார் ´´ அங்க இருக்க கிடைச்சா போதாதா? சிட்டிசன் எல்லாம் எதுக்கு?´´ என்று. எங்கட ஆக்கள் இப்படித்தான் எங்கட உரிமைகளை விட்டுக்கொடுத்திருப்பாங்க

Link to comment
Share on other sites

பெண்களுக்கு கல்வியறிவு/ சுயமாக சம்பாதிக்கும் திறமையை பெற்றோர் வளர்க்கவேண்டும். எமது போர்ச்சூழலில் கொஞ்சம் கஷ்டம் தான். மற்றும் திருமணம் சரியாக அமையாவிட்டால் துணிந்து வெளியேற தைரியம் கொடுக்க வேண்டும். அதற்கு சமுதாயம் விழிப்புணர்வு பெற்று அப்படி வெளியேறிய பெண்களை மதிக்க வேண்டும்.

ஆனால் இதை சாட்டாகவைத்து சின்ன சண்டைகளைப் பெரிதாக்கக்கூடாது.

இந்தப்பெண்ணுக்கு நல்ல எதிர்காலம் அமையட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குள் தாங்கள் தலையிட்டால் தங்கள் மகளின் வாழ்க்கை வீணாகபோய்விடும் , என்ற எவ்வளவு வேதனையில் அந்த பெற்றோரிடம் இருந்து இந்த வார்த்தைகள் வந்திருக்கும் .

சிலருக்கு கலியாணம் கட்டுவது சமைக்கவும் , பிள்ளை பெறவும் என்கின்ற மனப்பான்மை மாறவேண்டும் .

உங்கள் மனைவி , உங்களில் பாதி என்பதனை மறந்து விடாதீர்கள் .

உண்மைக்குப் புறம்பா.. மனைவி என்பவள்.. கணவனின் பாதி முழுசு என்று சொல்லிச் சொல்லியே இரு தரப்பும் மற்றத்தரப்பை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. அப்படி எதுவும் இல்லை. இருவரும்.. தனித்தனி மனிதர்கள். ஒரு பொதுநோக்கிற்காக திருமணம் என்ற சடங்கால் கட்டி வைக்கப்பட்டிருக்கின்றனர். அந்தக் கட்டை சிலர் இலகுவானதாக எண்ணி அவிழ்த்துக் கொண்டு செயற்படுகின்றனர். இன்னும் சிலர் அதையே காரணம் காட்டி.. அதையே நம்பி வாழ விளைகின்றனர். திருமணம் என்பது ஒரு மாயைக் கட்டு. அது உணர்ந்தவன் இலகுவாக அதிலிருந்து வெளியேறி உலாவுகிறான். அதை உணராதவன்.. அதற்குள்ளேயே அடைபட்டு இருக்கிறான்.

உண்மையில் உழைக்கும் ஆணிடம் ஏன் இந்தப் பெண் ஊதியம் எதிர்பார்த்து இருக்கனும். தானே ஒரு தொழிலைச் செய்து உழைக்கலாம் தானே. கணவன் என்ற நிலையை.. வைத்துக் கொண்டு ஒரு ஆணிடம் இவ்வாறு எல்லாவற்றையும் எதிர்பார்த்து இருக்கும் போது அவனும் கொஞ்சம் அதிகமாகவே ஆளுமை செய்ய முனைவான். இதே நிலையில் ஒரு பெண் இருந்தாலும் இதைச் செய்யக் கூடும்.

முதலில் இந்தப் பெண்ணிடம்.. தான் பெண் தன்னால் இயலாது தனக்கு கணவன் உதவனும் போன்ற எண்ணங்கள் இருக்கக் கூடாது. பெண்ணோ ஆணோ இந்தச் சமூகத்தில் தன்னை ஒரு மனிதனாக எண்ணிக் கொண்டு.. தன்னைத் தானே காப்பாற்றும் வகையில் வாழத்தெரிந்திருப்பதே நன்று. கணவன் என்பதற்காக அவரைச் சார்ந்திருக்க நினைக்கக் கூடாது. கணவன் உதவ நினைக்கும் போது உதவட்டும். அது அன்பால் அமையலாம். கடமைக்காக அமையலாம். ஆனால் அதையே எதிர்பார்த்து வாழ்ந்தால்.. வாழ்க்கை இப்படித்தான் தந்தளிக்கும். இது பெண்களின் உழைப்பில் அல்லது அவர்களிடமிருந்து ஆணுக்கு வரக்கூடிய வசதியில் வாழ விளையும் ஆண்களுக்கும் இதே போன்று நடக்கலாம். நடந்திருக்குது.

பல பெண்களும்.. கலியாணம் கட்டிறது.. பிள்ளைப்பெறவும் சமைக்கவும் கணவனோடு ஊர் சுத்தவும் என்று தானே வாழ்கின்றனர். திருமணம் செய்ததென்று ஊரில் இருந்து வருகிறார்கள் எண்ணி 10 மாதத்தில் வண்டிலை தள்ளிக் கொண்டு திரிகிறார்கள். ஏன் அகதிமுகாமிலையே பிள்ளை குட்டி பெத்துக் கொண்டுதானே வாழ்கிறார்கள். அப்படி இருக்கும் போது...???! பெண்களின் மனநிலை மாற வேண்டும். அப்போதுதான் ஆண்களின் எண்ணங்களிலும் மாற்றம் ஏற்படும். பெண்கள் மாறாமல்.. ஆண்கள் தம்மை இலகுவில் மாற்றிக்க மாட்டார்கள். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

குடும்பம் என்பது ஒரு கட்டமைக்கப்பட்ட நிறுவனம் (Institution) . அதன் முக்கிய பங்காளிகள் கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் (Stake holders). ஒரு நிறுவனம் ஒழுங்காக இயங்குவதற்கு அடிப்படை சட்ட திட்டங்கள் அவசியம். அச் சட்டங்களில் நெகிழ்வுத்தன்மையும், விட்டுக்கொடுப்புகளும் கால மாற்றத்திற்கேற்ப இயல்பாக உள்வாங்கப்படல் வேண்டும். இவ் குடும்ப அமைப்பின் சட்ட திட்டங்கள் அது இருக்கும் நாடு,இனம், பிரதேசம், கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொடு சமூகத்திலும் மாறுபடும். குடும்ப அமைப்பினுள் இருக்கும் ஆணும் சரி, பெண்ணும் சரி இதனை நன்கு உணர வேண்டும். ஒவ்வொருவருக்கும் இருக்கும் பொறுப்புகளில் இருந்து எக் காரணம் கொண்டும் பின் வாங்குதல் கூடாது. அப்படி பின் வாங்கும் போது அந்த குடும்பம் சரிவையும், இழப்புகளையுமே சந்திக்கும்

இங்கே சொல்லப்பட்டுகின்ற கணவன், தனது பிரதானமான கடமையிலிருந்து தவறுவதே பிரச்சனையின் மூல காரணம். எம் இலங்கை தமிழ் குடும்ப கட்டமைப்பில் குடும்பத்தின் பிரதான பொருளீட்டுபவராக ஆண்/கணவனே காணப்படுகின்றார் வேறு பிரத்தியேக விசேட காரணம் இல்லாவிடின் இது தான் அனேக இடங்களில் இயல்பாக எம் சமூகத்தில் உள்ளது. (இது சரியா அல்லது தவறா, இதன் மூலம் ஆணாதிக்கம் எப்படி நிறுவப் படுகின்றது எனும் விடயங்களை இங்கு நான் இந்த திரியில் தவிர்கின்றேன்). அவ்வாறு ஈட்டப்படும் பொருள் சமமாக பங்கிடாப்படின், அதனை அக் குடும்ப உறுப்பினர்களின் தேவைக்கேற்ப செலவு செய்யப்படாவிடின், நிச்சயம் சரிவையே சந்திக்கும். இங்கே சொல்லபடும் மனைவி, தான் தனக்கேற்ற வருமானத்தினை நிச்சயம் தனித்து உழைத்து பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், அதற்காக கணவன், தனக்குரிய கடமையிலிருந்து தவற முடியாது. எவ்வாறு வேலைக்கு போதும் தமிழ் பெண்களின் வருமானம் அக் குடும்பத்தினுள்ளும் அது சார்ந்து உள்ளவர்களினுள்ளும் உள் வாங்கப்படுகின்றதோ அவ்வாறே ஆணினதும் உள்வாங்கப் படுவதே எம் சமூகத்தின் இயல்பு. அதிலிருந்து இக் கணவர் தவறும் போது கணவனாக இருக்க கூடி தகமையை அவன் இழக்கின்றார். அவரால் விரும்பப்பட்ட குடும்ப அமைப்பினை அவரே நிராகரிக்கின்றார்.

இதுவே என் சகோதரிக்கோ அல்லது தோழிகளுக்கோ ஏற்படின், பெண்ணின் சுயத்தையும், அவளின் சுயமரியாதையும் மதிக்காத கணவனுடன் வாழ்வதை விட விட்டு விலகுவதே சிறந்தது என்றே அபிப்பிராயம் தெரிவிப்பேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் ஆன பின்னர் கணவன், மனைவி தங்கள் குடும்பத்தை மட்டும் பார்த்துக்கொண்டால் அதுவரை தங்கள் மகனின், சகோதரனின் உழைப்பில் வாழ்ந்தவர்களுக்குக் கிடைக்கும் பங்கு குறைந்துவிடும் அல்லவா. இதெல்லாம் புரியாமல் இந்த "வல்லமை" இல்லாத பெண் எப்படிச் சமாளிக்கப்போகின்றது?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.