Jump to content

வியாபாரியா பூசாரியா??

Recommended Posts

சபேசன்,

என்ன நீங்கள் நடைமுறையில இப்ப என்ன நடக்கிது எண்டு தெரியாத ஆளாய் இருக்கிறீங்கள். இப்ப எங்க, யார் போனாலும் வந்தாலும் இடக்கு படக்கா யாரையும் கண்டால் கையில ஏதாவது துணி இருந்தால் அதை எடுத்து மற்றவன் தோளில போர்த்து விடுறது ஒரு பண்பாடாய் வந்திட்டிது. கையில இல்லாட்டிக்கு கட்டி இருக்கிற துணியையாவது கலட்டி மற்றவனுக்கு போர்த்தி கெளரவிக்கிற காலத்தில நாம வாழுறம்.

இப்படியான நிலமையில கோயிலுக்கு போகேக்க போற வழியில நாலைஞ்சு சீலைய வாங்கி அதில ரெண்டை சாமிக்கு சாத்திறதுக்கு அர்ச்சனை தட்டில வச்சுப்போட்டு, மிச்சம் ரெண்டை பூசாரியுக்கு குளிர்பிடிக்காமல் இருக்கட்டுக்கும் எண்டு பெருந்தன்மையோட போர்த்திவிடுறதில என்ன பெரிய பிழை இருக்கிது? இதுக்கு நீங்கள்தான் பொன்னாடை எண்டு பேர் எல்லாம் சூட்டி, பூசாரிக்கு ஏதோ கெளரவப்பட்டம் சிறீ லங்கா சனாதிபதி சார்பாக குடுத்தது மாதிரி அலட்டிக்கொள்ளுறீங்கள். சிறீ லங்கா தூதுவர் இல்லை... இந்தியத்தூதுவர் போய் இருந்தாலும் இப்பிடித்தான் ஏதாவது துணியை போர்த்தி இருப்பார்.

மற்றது, நாங்களும் அதையேதான் - நீங்கள் கேட்ட கேள்வியைத்தான் திருப்பி கேட்கிறோம். அதாவது தாயகத்தில - ஊரில இருக்கிற ஊறிப்பட்ட கோயிலுகளுலயும் உப்பிடித்தான் நடக்கிது. அவங்கள் பூசைக்கு இல்லாட்டிக்கு கோயிலுக்கு காசு குடுக்கிறாங்கள், கோயில் நடக்கிறதுக்கு சில உதவிகளை செய்யுறாங்கள். அப்பிடி எண்டால் அங்க இருக்கிற கோயில் நிருவாகங்கள் - பூசாரிகள் அந்த உதவிகளிற்கு மாற்றீடாக என்ன நன்றிக்கடன் - என்ன திருப்பி ஆமிக்காரருக்கு, நேவிக்காரருக்கு, போலிசாருக்கு, அரசாங்க அதிகாரிகளுக்கு செய்யுறதாய் உத்தேசிச்சு இருக்கிறீனமாம்? அவையுக்கு நீண்ட ஆயுள் வேண்டி அப்புச்சாமியிட்ட பிரார்த்தனை செய்யுறதா?

ஆனானப்பட்ட ஊரிலயே இல்லாத ஒரு விசயத்தை இஞ்ச மட்டும் புதினமாக தூக்கிப்பிடிச்சு அக்கு வேற ஆணிவேறையாக ஆராயுறது எப்படிப்பட்ட பகுத்தறிவு எண்டு கொஞ்சம் சொல்லுங்கோ.

Link to comment
Share on other sites

  • Replies 98
  • Created
  • Last Reply

இந்தப் படங்களை இங்கே முதலில் இணைத்தது நான் என்று நினைக்கின்றேன். ஆயினும் நான் நடந்த சம்பவங்களைப் பற்றி எழுதிய விதம், ஒரே நாளில் அனைத்தும் நடந்தது போன்று தோற்றம் அளிப்பதை ஒத்துக் கொள்கிறேன்.

தெளிவாகவே சொல்லி விடுகின்றேன்.

முதல் நாள் பேச்சுவார்த்தை நடக்கிறது. அடுத்த நாள் பொன்னாடை போர்த்தப்படுகிறது. தொடர்ந்து இரண்டு நாட்கள் தூதரக அதிகாரி கோயிலுக்கு சென்றிருக்கிறார்.

புலம்பெயர் நாடுகளில் உள்ள மக்கள் மத்தியல் ஊடுருவுவதற்கு சிறிலங்கா அரசு முயன்று வருவது ஒன்றும் ரகசியம் அல்ல. இதன் அடிப்படையில் எங்களுடைய கேள்விகள் எழுகின்றன.

மதம் மனிதனை முட்டாளாக்குகின்ற நிலையில் எம்முடைய அச்சம் மேலும் அதிகரிக்கின்றது.

ஒரு மன்றத்தில் சிறிலங்காத் தூதுரவ அதிகாரி ஊடுருவினால், அந்த மன்றத்தை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்துவது வெகு சுலபம். ஆனால் கோயிலுக்குள் ஊடுருவினால், அதோ கதிதான்.

எமது மக்களுக்கு புரிய வைக்க முடியாது: இந்தப் பூசாரிகள் இருந்த இடத்தில் கோட்சூட் போட்ட இரண்டு தமிழர்கள் இருந்திருந்தால், இங்கே பூசாரிகளுக்கு வக்காலத்து வாங்குபவர்களும் சேர்ந்து வசை பாடியிருப்பார்கள்.

ஆனால் இருப்பது பூசாரிகள் என்றவுடன், எம்மவர்கள் சிலர் அவர்களுக்கு ஆதரவாக பேச முனைவதை நாம் கவனித்துப் பார்க்க வேண்டும்.

சிறிலங்கா அரசு சரியான பாதையில்தான் நகர்கிறது.

Link to comment
Share on other sites

முரளி,

இங்கு பொன்னாடை சார்த்தியதல்ல பிரச்சனை. யாரிற்கு, எந்த கால கட்டத்தில் சாத்தப்பட்டது என்பது தான் பிரச்சனை. இலங்கை அரசு புலம் பெயர் தமிழர்களிடம் பிளவினை ஏற்படுத்தி போராட்டத்திற்கான பிரதான ஆதரவு தளத்தினை இல்லாமல் செய்ய தன்னாலான அனைத்தும் செய்கின்றது. அதன் தொடர்ச்சியாகவே இதனை பார்க்க வேண்டும்

சாத்திரி சொல்ல வருகின்ற விடயத்தில் உடன் படுகின்றேன். ஆனால் அது சொல்லப்பட்ட விதம் நாகரீகமற்றது. தனி மனித அவதூறு கொண்டது. அதனால் சொல்லும் விடயம் சரியாக இருப்பினும் எழுதப்பட்ட பத்தி தரம் தாழ்ந்த ஒரு பத்தியாகவே பார்கின்றேன். யாழ் களத்தினில் இத்தகைய விடயங்கள் தொடர்வது வேதனை அளிக்கின்றது

Link to comment
Share on other sites

இந்தப் படங்களை இங்கே முதலில் இணைத்தது நான் என்று நினைக்கின்றேன். ஆயினும் நான் நடந்த சம்பவங்களைப் பற்றி எழுதிய விதம், ஒரே நாளில் அனைத்தும் நடந்தது போன்று தோற்றம் அளிப்பதை ஒத்துக் கொள்கிறேன்.

ஆக உங்க கற்பனைகளை முதலில் திணித்து விட்டு, அதை உறுதிப்படுத்த அதற்கான ஆதாரங்களை தேடிக் கொண்டிருக்கின்றீர்கள். ஆனால் இதே செயற்பாடுகளை மற்றவர்கள் செய்யும் போது அதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள் என்ற முரளியினதும் எனதும் கேள்விகளுக்கு பதிலில்லை. ஏதோ புலத்தில் கோவில்களுக்கு செல்வபவர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்பது போன்றும் உங்களைப் போன்றவர்கள் அவர்களுக்கு பகுத்தறிவு ஊட்டுவதும் போலவும் கன உலகில் மிதக்கின்றீர்கள். :):(

Link to comment
Share on other sites

சரி நிழலி நீங்கள் என்ன சொல்லுறீங்கள்? சபேசன் இஞ்ச ஐயரிட்ட நாங்கள் புக்கை வாங்கி சாப்பிடுறதுக்காக வக்காளத்து வாங்கிறம் எண்டுறமாதிரி கருத்து எழுதி இருக்கிறார். முதல்நாள் பேச்சுவார்த்தையும், ரெண்டாம் நாள் பொன்னாடை போர்த்தலும் நடந்து இருக்கிது எண்டு புலனாய்வு செய்து சொல்லி இருக்கிறார்.

கீழ என்னமோ படத்தில ஐயரிண்ட உடம்பில அவர் கட்டி இருக்கிற சீலைய விட வேற ஒண்டையும் காண இல்லை. தூதுவரிண்ட தோளிலதான் எதோ சீலை போர்க்கப்பட்டு இருக்கிது. கோயிலில மடப்பள்ளி, களஞ்சிய அறையுக்க இப்பிடி ஆயிரம் சீலைகள் இருக்கும். அதில ஒண்டை எடுத்து தூதுவருக்கு குளிர்பிடிக்காமல் இருக்கபோர்த்தி இருக்கிது. சிறீ லங்கா தூதுவர் என்ன நீங்கள்போய் ஏதாவது உதவி செய்து இருந்தாலும் உங்களுக்கும் பூசாரிமார் சீலை போர்த்தி வாழைப்பழம், புக்கையோட ஒரு தட்டு தந்து அனுப்பி இருப்பீனம்.

சரியாக பதில கூறமுடியாத வேளையில நம்மட ஆக்கள் செய்யுறவேலை தீக்கோழி மண்ணுக்க தலையவச்சு ஒதுங்கிறது மாதிரி கடைசியில இது சிறீ லங்கா அரசின் இன்னொரு பிரச்சார உத்தி எண்டு கதைகட்டிவிட வேண்டியது. சிங்களவன் போகேக்க வரேக்க குசுவிட்டாலும் பரபரப்பு அடைஞ்சு ஊரைக்கூப்பிடுறது எப்படியான சிந்தனை எண்டு தெரிய இல்லை.

bielefeld4.jpg

bielefeld5.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருக்கும் வணக்கம்.முதற்கன் நான் ஒருசைவன். கொஞ்சம் கடவுள் நம்பிக்கையும்இருக்கு ஆனால் பிரச்சனை என்னவென்றால் எதிரி எங்கள் இந்த அதிகப்படியான நம்பிக்கயை பயன்படுத்தி காய் நகர்த்துகிறான்.ஆ,ஊ என்றால் ரஜினியை புறக்கனி,அஜித்தை புறக்கனி (இதுக்கு நான் எதிர்ப்பு இலலை)என்ற மாதிரி கொஞ்சக்காலம் கடவுளை புறக்கனித்தால் என்ன?இவளவு அழிவு வரைக்கும் கடவுள் காப்பாத்தவில்லை என்ற காரனம் ஒன்று கானும் தானே புறக்கனிக்க.கோயிலுக்குபோங

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசாங்கம் வைரஸ் மாதிரி எல்லா இடத்திலையும் அமசடக்காய் தன்ரை அலுவலை பாக்குது.

எங்கடையள் இப்பவும் அர்ச்சனைத்தட்டோடை பூசாரியளுக்கு தட்சணை போட்டுக்கொண்டு திரியுதுகள்.

கோயில்குளமெல்லாம் இப்ப பிரச்சனையில்லை.எவன் என்னத்துக்கு கோயிலுக்கு போறான் எண்டதுதான் இப்ப பிரச்சனை.

Link to comment
Share on other sites

இவன் சிங்களவனுக்கு என்ன அருகதை இருக்கு தமிழர் நடாத்தும் கோயிலுக்கு வர. யார் பொன்னாடை போர்க்க சொன்னது.

அங்க குண்டு போட்டு கோயில் அழிக்கிறான், கோயில் எல்லாம் அகதி முகாமாக கிடக்குது.

83 கலவரத்தில் நடு ரோட்டில் தேரை கொளுத்தின வங்கள்.

செல்வசந்நிதி தேர் எரிக்கப்பட்டது.இப்படியான பாசிச அரசை பிரதிநிதுவபடுத்தும் சிங்களவணுக்கு எப்படி கோயில் பொன்னாடை போர்க்கும்.

குருக்களை சொல்லி குற்றம் இல்லை. கோயில் நிர்வாகம் தான் முழுப்பொறுப்பும் ஏற்க வேண்டும். நிர்வாகம் என்ன சொல்கிறதோ அவற்றை எல்லாம் செய்யும் நிலையில் தான் குருக்கள்மார் புலம் பெயர் நாடுகளில் இருக்கிறார்கள்.

கோயில் நிர்வாகத்தில் இருப்பவரை தேடி பிடித்து செருப்பால அடி போடனும்.

இப்படிதான் வேறு ஒரு நாட்டில் சிங்கள தூதுவனை கூட்டி வந்து மாலை போட்டதற்காக நிர்வாகமே கலைக்கபட்டு பக்தர்கள் முன் அவமானபடுத்த பட்டு. புதிய நிர்வாகம் பொறுப்பு எடுத்து இன்றுவரை நடாத்தி வருகிறது.

நேசன்,

இங்கு சிங்களவர்கள் கோவிலுக்கு போவதை பற்றி யாரும் தவறாக கூறுவது தவறு . இனவாத அரசினை பிரதிநிதித்துவ படுத்தி, அதன் இன அழிப்பு போரினை மூடி மறைத்து, எம் விடுதலை போராட்டத்தினை பயங்கரவாதமாக உலகெங்கும் பிரச்சாரப் படுத்தும் அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட விசேட மரியாதையினை தான் நாம் தவறாக கொள்ள முடியும்., கேள்விட்படுத்த முடியும்

தென்பகுதியில் உள்ள அனேகமான இந்து கோவில்களுக்கு போனால் அங்கு ஏராளமான சிங்கள பொது மக்களை காணமுடியும். இது கொழும்பு, கண்டி, மாத்தளை போன்ற தமிழ் மக்களும் செறிவாக வாழும் பிரதேசங்களில் மட்டும் அல்லாது, குருணாகல் போன்ற பிரதேசங்களிலும் காணக் கூடிய நிகழ்வு. அவர்களுக்கு என்ன அருகதை இருக்கு என கேட்கத்தொடங்கினால், அக் கோவில்களுக்குள் அவர்களை அனுமதிப்பவர்களையும் நாம் குறை கூறும் நிலைக்கே வந்துவிடுவோம்

Link to comment
Share on other sites

பலர் தமிழர் எண்டால் வடக்கு, கிழக்கில மாத்திரம்தான் இருக்கிறீனம் எண்டு நினைச்சுக்கொண்டு இருக்கிறீனம் போல இருக்கிது.

அது சரி.. சிங்களவங்கள் கோயில் தேருகள எரிச்ச கதை இருக்கட்டும்.. அதுக்கு பரிகாரமாக தலதா மாளிகையை தமிழர்படை ஒரு பதம் பார்த்துவிட்டீனம் தானே. கிறிஸ்தவ தேவாலயத்திலையும் தான் குண்டுகள் போட்டாங்கள். ஆனால் சிங்களவங்களை அங்காலை போககூடாது எண்டு சொல்ல ஏலுமோ? அடிச்சு துறத்த ஏலுமோ? கிறிஸ்தவ, கத்தோலிக்க பாதிரிமாரிட்ட இப்பிடி வியாக்கியானம் கேக்க முடியுமோ?

இந்தகாலத்தில பூசாரிமாரை தாக்குறது, கோயில்களுக்கு கல்லு எறியுறது புலம்பெயர் தமிழர்களிண்ட தேசக்கடமைகளில ஒண்டு போல வந்திட்டிது போல இருக்கிது.

சாத்திரி அண்னை வியாபாரியா பூசாரியா எண்டு கேள்வி கேட்டு இருக்கிறார். தமிழரிண்ட வாழ்க்கையே வியாபாரத்திண்ட அடிப்படையில தான் ஓடுது எண்டு பலருக்கு தெரியாமல் இருக்கிறது ஆச்சரியமாய் இருக்கிது. வெளிநாட்டில இருக்கிற கோயிலுகள் தாயகத்துக்கு என்ன செய்யுது எண்டுற கேள்வி இருக்கட்டும். தாயகத்தில இருக்கிற கோயிலுகள் தங்கட வருமானத்தில தாயகத்தில இருக்கிற மக்களுக்கு உருப்படியா என்ன சேவைகள் செய்யுது எண்டுறதை முதலில சொல்லுங்கோ. நல்லூர்க் கந்தனை காசுக்கந்தன் எண்டும் சொல்லிறது. உந்தகாசுக்கந்தன் தாயக மக்களுக்கு மதம், வியாபாரம் தவிர வேற என்ன என்ன தொண்டு ஆற்றுகின்றார்?

Link to comment
Share on other sites

இப்படிதான் வேறு ஒரு நாட்டில் சிங்கள தூதுவனை கூட்டி வந்து மாலை போட்டதற்காக நிர்வாகமே கலைக்கபட்டு பக்தர்கள் முன் அவமானபடுத்த பட்டு. புதிய நிர்வாகம் பொறுப்பு எடுத்து இன்றுவரை நடாத்தி வருகிறது.

அட இது எங்கே நடந்தது. அதையும் ஒருக்கால் எடுத்து விடுங்கோ........

Link to comment
Share on other sites

அட இது எங்கே நடந்தது. அதையும் ஒருக்கால் எடுத்து விடுங்கோ........

வசம்பு அது தேவை இல்லை எங்க நடந்தது என்று.

ஹம்கோயிலில் வரும் வருமானம் ஈழமக்களுக்கு மறுவாழ்வுக்கு கொடுப்பது எந்த தப்பும் இல்லை.

நீர் சொல்ல்வது போல் ஒரு கோஸ்டி கோயிலின் வருமானத்தை கண்வைத்து பிரச்சனை பட்ட படியால் தான் மாநகரசபை கணக்கு பார்க்கிறது என்றும் அதுக்காக கோயிலை சுற்றி திருத்தி கொண்டிருக்கிறார்கள் என்று சொல்கிறீர். இப்படியான மனப்பாங்கு கொண்ட நிர்வாகம் ஏன் சிங்கள தூதுவனை கூட்டி வந்து மாலை போட மாட்டார்கள். களவாக ஒட்டு வேலையையே செய்ய கூடிய ஆட்கள்

நீங்க கஸ்டப்பட்டு ஒரு வீடு கட்டுறீங்க.. வீடு கட்டி முடியும்போது இன்னொருவர் வந்து அந்த வீடு தனது என்றால் உங்களுக்க எப்படி இருக்கும்?

அந்த ஆலயத்தின் உருவாக்கம் ஐயரைச் சார்ந்தது. அவர் தன்னுடைய உயர்வுக்காக தனக்கு வேண்டியவர்களுடன் இணைந்து உழைத்திருக்கிறார். அதன் பலனை அவர் அனுபவிக்கிறார். அதற்கு ஆதரவாக இருப்பவர்களை முட்டாள்கள் என்று சொல்லும் முன்பு, சொல்பவர்களுக்கு அதற்குரிய தகுதி உள்ளதா? சரி ஐயர்தான் ஒன்றை உருவாக்கி சுயலாபம் அடைகிறார் என்றால், பொது நலமுள்ளவர்களால் ஏன் ஒரு வருமானமுள்ள வழியை தொட முடியாமல் போனது?

உதாரணமாக 'நான்' பொதுநலத்துக்காக கடை வைத்தேன்.. பெயர் 'மாந்தர் கடை'. கடையில் எனக்கென்ன அக்கறை? எனது மூலதனம் இல்லைத்தானே.. சம்பளத்துக்கு வேலை ஆள்.. அவர் சாமான்களின் விலையில் ஒரு சதமும் குறைக்கமாட்டார்.. வருபவர்களை வரவேற்கமாட்டார்.. வாங்கினால் வாங்கு.. இல்லாட்டி போ.. அவருக்கு சம்பளம் வரும்தானே.. மரக்கறிகள் அழுகி குப்பைக்கு போகும்.. ஆனால் வாராவாரம் மரக்கறியள் வரும்.. குப்பைக்கு போனால் என்ன.. எங்கை போனால் என்ன.. மூலதனம் என்ரை இல்லைத்தானே..?

நான்தான் இங்கை பொறுப்பு.. மனுசி கல்விக்கு பொறுப்பு.. ரண்டுபேரும் பென்சிலதான் சேவை செய்யுறம்.. ஆனால் நான்தான் வேலைக்கு போறனான்.. இப்ப மனித நேய கொலக்சனுக்கு வீடு வீடா போறம்.. என்னோட வேலை செய்யுறவங்க வீட்டையும் போனம்.. 'உனக்குத்தான் தெரியுமே.. இந்த சம்பளத்தில வருமானத்துக்கும் பார்க்க செலவு.. விருப்பம் இருந்தாலும் வசதி இடம் கொடுக்குதில்லையே!' என்கிறார்கள்.. உண்மைதான்.. என்ரை சம்பளம்தானே அவைக்கும்.. ஆனா நாங்கள் 'பென்சில'..!!

இதைப்பற்றி எல்லாம் என்னோடை எவரும் கதைக்க முடியாது.. ஏனெண்டால்.. 'முட்டாள்' என்று சொல்லிடுவேன்..!!

Link to comment
Share on other sites

கோயிலுக்கு தேவையில்லாத வேலை...

எனக்குத் தெரியும் உங்கள் பங்கிற்கு நீங்களும் கற்பனையில் ஒரு கதையை எடுத்து விடுகின்றீர்கள் என்று. அதனால்த் தான் அதைக் கூறும்படி கேட்டேன். உண்மையில் நடந்திருந்தால்த் தானே எடுத்து விடுவதற்கு !!

ஒரு சிறு குடிசையில் ஆரம்பித்து படிப்படியாக வளர்ந்து இன்று பிரமாண்டமாக உருவாகிநிற்கின்றது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஒருவர். பின் அவரோடு சிலரும் சேர்ந்து உதவினார்கள். ஏதோ நேற்றுத் தொடங்கி இன்று வளர்ந்து விடவில்லை. படிப்படையான வளர்ச்சியில் கோவில் தற்போது சொந்தமான காணியலேயே உள்ளது. வளர்ச்சியின் போது கை கொடுக்காத சிலர் தான் இன்று வருமானத்தை அபகரிக்க நினைக்கின்றார்கள். அவர்களின் செயற்பாடுகளால்த் தான் இன்று கிராமசபை நிர்வாகத்தின் கீழ் வந்துள்ளது கோவில். கோவில் நிர்வாகம் சரியில்லையென்றால் மக்களே கோவிலைப் புறக்கணித்திருப்பார்கள். ஆனால் இன்றைய நிலையில் மக்களின் பேராதரவுடனேயே கோவில் நடக்கின்றது. இதிலிருந்தாவது சிலருக்கு விளங்க வேண்டும் எங்கு தவறு நடந்துள்ளது என்று. அதற்காக மக்களை முட்டாள்கள் என்று கதை கட்டி உங்களை முட்டாளாக்கி விட வேண்டாம்.

மேலும் கோவில் படிப்படியாக வளர்ச்சியடைவதற்காக கட்டிடப் பணிகள் நடைபெறுகின்றன. ஆனால் அதற்கு போதிய பணமில்லாததால் வங்கியிலும் கடன் வாங்கியுள்ளார்கள். அதனால் வருமானததில் வங்கிக்குரிய பணமும் மாதாமாதம் கட்டி வருகின்றார்கள். இத்தகவலை இன்று நண்பரொருவர் தொலைலபேசி மூலம் எனக்கு வழங்கியிருந்தார். அத்துடன் கோவில் புனர்நிர்மானப்பணிக்குரிய சாமான்கள் மற்றும் புதிய தேரிற்கு தேவையான பொருட்கள் உட்பட இலங்கையிலிருந்தே வந்ததாம். இதற்கு ஒருவேளை இலங்கைத் தூதுவரும் உதவியிருக்கலாம். அதற்காக கோவில் நிர்வாகமும் அவர்கள் கோவிலுக்கு வந்த போது மரியாதை செய்திருக்கலாம். இவற்றை வைத்து உங்களைப் போன்றோர் கதைகட்டி விடுவதால் கோவிலுக்கு ஒன்றும் ஆகப் போவதுமில்லை உங்கள் கட்டுக்கதைகள் மக்கள் மத்தியில் எடுபடப் போவதுமில்லை.

கோயிலுக்கு தேவையில்லாத வேலை...

தூயா

:rolleyes: இது ஒன்றும் சமையல்க் கட்டல்ல எடுத்த எடுப்பிலேயே உப்புக் கூட உறைப்புக் காணாது என்று சொல்ல :D .

நீங்கள் முடிந்தால்் உங்கள் உறவினர் அல்லது நண்பர்கள் யாரராவது ஜேர்மனியிலிருந்தால் கோவிலைப் பற்றி விசாரித்துப் பாருங்கள். அதன் பின் உங்கள் கருத்தை எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

நீங்க கஸ்டப்பட்டு ஒரு வீடு கட்டுறீங்க.. வீடு கட்டி முடியும்போது இன்னொருவர் வந்து அந்த வீடு தனது என்றால் உங்களுக்க எப்படி இருக்கும்?

அந்த ஆலயத்தின் உருவாக்கம் ஐயரைச் சார்ந்தது. அவர் தன்னுடைய உயர்வுக்காக தனக்கு வேண்டியவர்களுடன் இணைந்து உழைத்திருக்கிறார். அதன் பலனை அவர் அனுபவிக்கிறார். அதற்கு ஆதரவாக இருப்பவர்களை முட்டாள்கள் என்று சொல்லும் முன்பு, சொல்பவர்களுக்கு அதற்குரிய தகுதி உள்ளதா? சரி ஐயர்தான் ஒன்றை உருவாக்கி சுயலாபம் அடைகிறார் என்றால், பொது நலமுள்ளவர்களால் ஏன் ஒரு வருமானமுள்ள வழியை தொட முடியாமல் போனது?

உதாரணமாக 'நான்' பொதுநலத்துக்காக கடை வைத்தேன்.. பெயர் 'மாந்தர் கடை'. கடையில் எனக்கென்ன அக்கறை? எனது மூலதனம் இல்லைத்தானே.. சம்பளத்துக்கு வேலை ஆள்.. அவர் சாமான்களின் விலையில் ஒரு சதமும் குறைக்கமாட்டார்.. வருபவர்களை வரவேற்கமாட்டார்.. வாங்கினால் வாங்கு.. இல்லாட்டி போ.. அவருக்கு சம்பளம் வரும்தானே.. மரக்கறிகள் அழுகி குப்பைக்கு போகும்.. ஆனால் வாராவாரம் மரக்கறியள் வரும்.. குப்பைக்கு போனால் என்ன.. எங்கை போனால் என்ன.. மூலதனம் என்ரை இல்லைத்தானே..?

நான்தான் இங்கை பொறுப்பு.. மனுசி கல்விக்கு பொறுப்பு.. ரண்டுபேரும் பென்சிலதான் சேவை செய்யுறம்.. ஆனால் நான்தான் வேலைக்கு போறனான்.. இப்ப மனித நேய கொலக்சனுக்கு வீடு வீடா போறம்.. என்னோட வேலை செய்யுறவங்க வீட்டையும் போனம்.. 'உனக்குத்தான் தெரியுமே.. இந்த சம்பளத்தில வருமானத்துக்கும் பார்க்க செலவு.. விருப்பம் இருந்தாலும் வசதி இடம் கொடுக்குதில்லையே!' என்கிறார்கள்.. உண்மைதான்.. என்ரை சம்பளம்தானே அவைக்கும்.. ஆனா நாங்கள் 'பென்சில'..!!

இதைப்பற்றி எல்லாம் என்னோடை எவரும் கதைக்க முடியாது.. ஏனெண்டால்.. 'முட்டாள்' என்று சொல்லிடுவேன்..!!

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இங்கு பொதுநலத்திற்காக தொடங்கப்பட்ட கடையொன்றில், காசு கொடுத்து சாமான்களை வாங்குவோரை விட தொண்டர்களின் இலவசக் கொள்வனவால் கடை நட்டத்தில் ஓடி, தற்போது கடையில் நின்றவரே கடை உரிமையாளராகி தனியார் கடையாகி விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு சிறிலங்கா அணி 96ல் உலகக்கிண்ணப்போட்டியை வென்ற போது இங்கிலாந்துக்கு வந்தது. சர்வதேச விளையாட்டில் பங்கு கொள்ள அவர்கள் வரவில்லை. சிறிலங்கா எயார் இலங்கா விமானச்சேவையினரால் நடாத்தப்படும் சிறிலங்காப் பாடசாலைப் போட்டியில் விளையாடவே வந்தது. அக்காலம் வரை யாழ்ப்பாணப் பாடசாலைகளும் கொழும்பு சிங்களப் பாடசாலைகளுடன் எயார் இலங்கா நடாத்தும் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து விளையாடி வந்தன. சிறிலங்காவின் ஏரிக்கரைப் பத்திரிகையான டெய்லி நியூசில் இலண்டனின் தமிழர்கள் சிங்களவர்களுடன் ஒற்றுமையாக இருக்கிறார்கள். தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் பிரச்சனையில்லை. புலிப் பயங்கரவாதிகளுடன் தான் பிரச்சனை என்று செய்தி வெளியிட்டது. வெளினாடுகளிலும் சிறிலங்கா அரசு இதனைப் பிரச்சாரம் செய்தது. இதனால் இதன் பிறகு எயார் இலங்கா நடாத்தும் போட்டிகளைத் தமிழர்கள் புறக்கணித்தார்கள்.

இங்கிலாந்துக்கு வந்த சிறிலங்கா அணியினரை ஈலிங் கனக துர்க்கை அம்மனுக்கும் ஒருவர் கூட்டிக் கொண்டு வர இருந்தார். சிறிலங்கா அணி கோவிலுக்கு வரும் நேரத்தில், கோவிலில் இருந்த பக்தை ஒருவர், கோவிலில் உள்ள எண்ணையை எடுத்து தலையில் ஊற்றி, கோவிலுக்கு சிறிலங்கா அணி வந்தால் எனது உடலுக்கு நெருப்பு மூட்டுவேன். எனது உடலைத் தாண்டித்தான் சிறிலங்கா அணி கோவிலுக்கு செல்லும் என்றார். அதாவது கோவிலுக்கு வரும் சிறிலங்கா அணி கும்பிட மட்டும் வர நினைக்கவில்லை. தங்களின் பிரச்சாரத்தை உலகுக்குச் சொல்வதற்காகவே கோவிலுக்கு செல்ல முடிவெடுத்தது. அப்பெண்மணியின் முடிவினால் சிறிலங்கா அரசு நடாத்தவிரும்பிய பிரச்சாரமொன்று தோல்வியில் முடிவடைந்தது.

அவுஸ்திரெலியாவுக்கு வந்த சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகலகாமா, அவுஸ்திரெலியா அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்தார். அவர் 3 புத்தகங்களைக் கொண்டு வந்து இவர்களிடம் கொடுத்தார். சின்னச் சின்ன விடயங்கள், செய்திகள், நிகழ்வுகள் எல்லாவற்றையும் சேகரித்து 3 புத்தகங்களாக பிரச்சாரத்துக்கு உபயோகித்தார். தமிழர்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாக இருக்கினம். பிரச்சனை பயங்கரவாதிகளான புலிகள் தான் என்ற ரீதியில் பிரச்சாரத்தினை அரசு செய்கிறது. இதற்கு நாங்களும் துணை போகலாமா?

Link to comment
Share on other sites

கந்தப்பு

ஹம் கோவில் விடயம் சாதரண ஒரு நிகழ்வாக ஆவணி ஆரம்பத்தில் நடந்துள்ளது. இதை வைத்து அவர்கள் பிரச்சாரம் செய்வதென்றால் இதுவரைக்கும் எத்தனையோ செய்திருக்கலாம். ஆனால் இதை வைத்து அப்படி ஒரு பிரச்சாரம் சிங்கள அரசு செய்யவில்லை. அப்படி ஒரு பிரச்சாரம் இதை வைத்து நடந்திருந்தால் அதை இணையுங்கள் பார்க்கலாம்.

ஆனால் தற்போது இவ்விடயத்தை இணைத்து விவாதப் பொருளாக்கியதன் மூலம், அரசிற்காதரவான விடயமாக இணைத்தவர் தான் செய்துள்ளார். இப்படி ஒன்று நடந்ததே பல பேருக்குத் தெரியாத போது, இதை யாழ்க்களத்தில் இணைத்து இப்போ பகிரங்கப்படுத்தியது தான் மிச்சம். இதனை எத்தனை பேர் சிந்தித்தீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹம் கோவில் விடயம் சாதரண ஒரு நிகழ்வாக ஆவணி ஆரம்பத்தில் நடந்துள்ளது. இதை வைத்து அவர்கள் பிரச்சாரம் செய்வதென்றால் இதுவரைக்கும் எத்தனையோ செய்திருக்கலாம். ஆனால் இதை வைத்து அப்படி ஒரு பிரச்சாரம் சிங்கள அரசு செய்யவில்லை. அப்படி ஒரு பிரச்சாரம் இதை வைத்து நடந்திருந்தால் அதை இணையுங்கள் பார்க்கலாம்.

இந்தச் செய்தியும் படங்களும் இலங்கைத்தூதரக இணையத்திலும். ஈழப்போராட்டத்திற்கு எதிராக இயங்கி வருகின்ற ஏசியன் ரிறிபுன் இணையத்திலும். வெளியாகியிருந்தது காரணம் இதுகூட இலங்கையரசு வெளிநாடுகளில் மேற்கொள்கின்ற ஒருவகை பிரச்சாரம்தான்.

படங்கள். சிறீலங்கா தூதரக இணையத்தளம் யெர்மனி

Link to comment
Share on other sites

QUOTE (sathiri @ Nov 18 2008, 08:48 AM)

இந்தச் செய்தியும் படங்களும் இலங்கைத்தூதரக இணையத்திலும். ஈழப்போராட்டத்திற்கு எதிராக இயங்கி வருகின்ற ஏசியன் ரிறிபுன் இணையத்திலும். வெளியாகியிருந்தது காரணம் இதுகூட இலங்கையரசு வெளிநாடுகளில் மேற்கொள்கின்ற ஒருவகை பிரச்சாரம்தான்.

படங்கள். சிறீலங்கா தூதரக இணையத்தளம் யெர்மனி

இது எவ்வளவு தூரம் உம்மை என்று உங்களால் நிருபிக்க முடியும்

Link to comment
Share on other sites

கந்தப்பு

ஹம் கோவில் விடயம் சாதரண ஒரு நிகழ்வாக ஆவணி ஆரம்பத்தில் நடந்துள்ளது. இதை வைத்து அவர்கள் பிரச்சாரம் செய்வதென்றால் இதுவரைக்கும் எத்தனையோ செய்திருக்கலாம். ஆனால் இதை வைத்து அப்படி ஒரு பிரச்சாரம் சிங்கள அரசு செய்யவில்லை. அப்படி ஒரு பிரச்சாரம் இதை வைத்து நடந்திருந்தால் அதை இணையுங்கள் பார்க்கலாம்.

இந்தச் செய்தியும் படங்களும் இலங்கைத்தூதரக இணையத்திலும். ஈழப்போராட்டத்திற்கு எதிராக இயங்கி வருகின்ற ஏசியன் ரிறிபுன் இணையத்திலும். வெளியாகியிருந்தது காரணம் இதுகூட இலங்கையரசு வெளிநாடுகளில் மேற்கொள்கின்ற ஒருவகை பிரச்சாரம்தான்.

படங்கள். சிறீலங்கா தூதரக இணையத்தளம் யெர்மனி

கந்தப்பு

உங்களுக்கு தமிழில் விளக்கம் குறைவாக இருப்பதாக நான் நினைக்கவில்லை. நான் கேட்டது அந்தச் செய்தியை இங்கு இணைக்குமாறு. நீங்கள் இணைத்திருப்பது சாத்திரி எழுதியிருப்பதை. இலங்கை அரசு இதை வைத்து பிரச்சாரம் செய்தது என்றால் அதை இங்கு இணையுங்களேன். மற்றும் படி கற்பனையில் யார் வேண்டுமானாலும் எதையும் எழுதலாம்.

Link to comment
Share on other sites

இலங்கை அரசு இதை வைத்து பிரச்சாரம் செய்தது என்றால் அதை இங்கு இணையுங்களேன். மற்றும் படி கற்பனையில் யார் வேண்டுமானாலும் எதையும் எழுதலாம்.

http://www.asiantribune.com/?q=node/12636

http://www.srilanka-botschaft.de/NEWSupdat...nt_080808aE.htm

இவ்வளவு காலம் இணையத்தில் இடுப்பவர்கள் யாரிமும் கேட்க தேவை இல்ல்லை, Google image search இல் நல்ல keywords மூலம் தேடினால் வரும் தானே

Link to comment
Share on other sites

PRESS REALESE

Sri Lanka Ambassador to Germany on a good will visit to Bielefeld and Hamm

Sri Lanka Ambassador to Germany H.E. Mr. T. B. Maduwegedara was on a good will visit to Bielefeld and Hamm in the North Rhein Westphalia State in the West Germany on 06 th August 2008. North Rhein Westphalia is one of the largest German States where the majority of the Sri Lankan Tamils are concentrated in.

During the visit the Ambassador met the Sri Lankan Tamil community in Bielefeld in order to educate them on the present development in Sri Lanka and of the massive development program by the government of President Mahinda Rajapaksa in the Eastern province. Ambassador Maduwegedara also met the Bielefeld city Government officials and the Head of the Central Authority for Foreigners in Bielefeld where the Ambassador was able to counter certain misconceptions on Sri Lanka that had been spread by the LTTE propaganda machinery.

A special pooja was held at the Europe's largest Hindu Temple, Sri Kamadchi Ampal Temple in Hamm to evoke blessings on the Ambassador and for lasting peace in Sri Lanka.

Embassy of Sri Lanka, Berlin, Germany

07 th August 2008

http://www.srilanka-botschaft.de/NEWSupdat...nt_080808aE.htm

வசம்பு,

ஹம் கோவில் விடயம் சாதரண ஒரு நிகழ்வாக ஆவணி ஆரம்பத்தில் நடந்துள்ளது. இதை வைத்து அவர்கள் பிரச்சாரம் செய்வதென்றால் இதுவரைக்கும் எத்தனையோ செய்திருக்கலாம். ஆனால் இதை வைத்து அப்படி ஒரு பிரச்சாரம் சிங்கள அரசு செய்யவில்லை. அப்படி ஒரு பிரச்சாரம் இதை வைத்து நடந்திருந்தால் அதை இணையுங்கள் பார்க்கலாம்.

மற்றவருக்கு அறிவுரை கூற முதல் எம்மை திருத்தி கொள்ள வேண்டும் , எல்லாரிடமும் ஆதாரம் கேட்பார்கள் ஆனால் இப்ப???

Link to comment
Share on other sites

கோயில்கள் ஜயர்மார் இலவசமாக வாழும் மடம் அல்ல. இந்துக்களின் வருமானத்தின் மூலம் நல்ல பல விடயங்களை செய்வதற்காகவே உண்டியலில் பணம்போடு கிறார்கள். இன்றைய நிலையில் ஈழத்தமிழர் பிச்சை எடுக்கும் போது கோயில்கள் உதவி செய்ய வேண்டும்.

வசம்பு உங்களை போன்றவர்கள் மக்கள் உதவிக்கு போகும் பணத்தை போகாமல் செய்ய எவ்வளவு பாடுபடுகிறீர்கள்.

உமது தாய்நாட்டின் நீங்கள் பிறந்த ஊரை ஒரு தரம் நினைத்து பாருங்கள் , எத்தனை பேர் உங்களது ஊரில் வாழ்வுக்காக ஏங்குகிறார்கள்,

அப்ப யோசிப்பீர்கள் கம் கோயில் மீளதிக நிதி யாருக்கு தேவை என்று. மதில் கட்டவா அல்லது ஜயரின் பைக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதாரம் கேட்டாயிற்று, இணையத்தள முகவரியோடவே குடுத்தாயிற்று. இனி வேற ஏதாவது ஆதாரம் கேட்டு இலங்கை அரசுக்கு ஆதரவு தேடும் வாய்ப்பு கிடைக்கும் வரையில் வசம்பு வர மாட்டாரென நினைக்கிறேன்.

கந்தப்பு சொன்னது போல, நேசன் சொன்னது போல எல்லா இடங்களிலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இங்கே நான் இருக்கும் மாநிலத்தில் ஒரு தசாப்தம் முன்பு சிங்களவர்களும் தமிழர்களும் சேர்ந்து ஒரு சங்கம் வைத்திருந்தார்கள். ஆரம்பத்தில் அரசியல் சாராமல் எல்லாம் ஒழுங்காகத்தான் இருந்தது. பின்னர் ஒரு நாள் சிங்கள உறுப்பினர்கள் சிறிலங்காத் தூதுவரைக் கூப்பிட்டுக் கௌரவிக்க வேண்டுமென்று முன் மொழிந்ததோடு தமிழ் உறுப்பினர்கள் விலக ஆரம்பித்தார்கள். தமிழருக்கெதிராகப் பணியாற்றும் ஒரு சிறிலங்கா அதிகாரியை வரவேற்க விருப்பமின்றி அன்று ஒதுங்கிக் கொண்ட தமிழர்கள் 1967 அல்ல்து 70 ஆண்டுகளில் இங்கு வந்து இங்கேயே நிரந்தரக் குடிகளாகி விட்ட தமிழர்கள். இந்தக் கோவில் நிர்வாகிகள் அந்தத் தமிழர்களை விடவும் தாயக நிலைமைகளுடன் கூடிய பரிச்சயமுள்ளவர்களாயிருப்பா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உக்கிரேன் ர‌ஷ்சியா பிர‌ச்ச‌னைக்கு பிற‌க்கு டென்மார்க் ஊட‌க‌ங்க‌ளும் எச்சைக் க‌ல‌ ஊட‌க‌ங்க‌ளாய் மாறி விட்டின‌ம் ந‌ண்பா......................உக்கிரேன் இஸ்ரேல் செய்வ‌து ச‌ரி என்று சொல்லுங்க‌ள் பார்த்தா ச‌ரியான‌ க‌டுப்பு வ‌ரும் ஆன‌ ப‌டியால் பார்ப்ப‌தை நிறுத்தி விட்டேன் போர் விதி மீற‌ல‌ இஸ்ரேல் செய்தும் அதை ச‌ரி என்று சொன்னால் இதை எப்ப‌டி ஏற்ப்ப‌து ந‌ண்பா.................... டென்மார்க் நாட்டின் அட‌க்குமுறை ப‌ற்றி யாழில் புது திரி திற‌ந்து உண்மை நில‌வ‌ர‌த்தை எழுத‌ போறேன் நேர‌ம் இருக்கும் போது வாசி ந‌ண்பா...........................
    • போட்டியில் கலந்துள்ள அஹஸ்த்தியன் வெற்றிபெற வாழ்த்துக்கள்! எங்கே மிச்சப் பேர் @ஈழப்பிரியன், @பையன்26?
    • த‌லைவ‌ரே பெரிய‌ப்ப‌ர் போன‌ கிழ‌மையே சொல்லி விட்டார் ம‌று ப‌திவு போட‌ முடியாது என்று சும்மா ஒரு ப‌திவு போட்டேன் ஓம் பெரிய‌ப்ப‌ர் ம‌ன‌சு மாறி இருப்பார் என்று பெரிய‌ப்ப‌ர் விடா பிடியில் இருக்கிறார் அது ச‌ரி த‌லைவ‌ரே போனா ஆண்டு நீங்க‌ள் பெற்ற‌ 5ப‌வுன்சில் ஈழ‌த்தில் பெரிய‌ மாளிகை க‌ட்டின‌தா த‌க‌வ‌ல் வ‌ருது.........கூடு பூர‌லுக்கு என்னை அழைக்க‌ வில்லை நீங்க‌ள் 2021 நான் வென்ற‌ 5ப‌வுன்ஸ்சின்  என‌து ஊரில் ஜ‌ந்து மாடி கொட்ட‌ல் க‌ட்டி விஸ்னேஸ் என‌க்கு அந்த‌ மாதிரி போகுது லொல்😂😁🤣.........................
    • துபாய் பஸ் ஸ்ராண்டை ஒட்டிய விவேகானந்தர் தெருவில் அவர் இருப்பதால் அங்கு வெள்ள பாதிப்பு இல்லை என்று அறிய கிடக்கிறது. 
    • அந்த ஜனாதிபதி கட்டிலில்... நாட்டு மக்கள் பலரும் படுத்து எழும்பியதை நாம் பார்த்தோமே...😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.