• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • கொரோனா வைரஸின் பிடியில் உலகம் சிக்கும் ஆபத்து உருவாகி வருகின்றது என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரான்ஸ் அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவுவதை பார்க்கும்போது இது உலகளாவிய நோய்தொற்றாக மாறுவதற்கான வாய்ப்புள்ளமை தெளிவாகின்றது என ஸ்கொட்மொறிசன் தெரிவித்துள்ளார். கொரோன வைரஸ் உலகளாவிய ரீதியில் பரவும் அடுத்த கட்டத்தை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம் என்பதே எமக்கு கிடைத்துள்ள புதிய ஆலோசனை என ஸ்கொட்மொறிசன் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக கொரோனவைரசினை எதிர்கொள்வதற்கான அவசர திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளோம் என ஸ்கொட்மொறிசன் தெரிவித்துள்ளார். இதேவேளை சீனா பிரஜைகளிற்கு விதிக்கப்பட்ட தடையையும் அவுஸ்திரேலிய பிரதமர் நீடித்துள்ளார். https://www.virakesari.lk/article/76618
    • மன்னிக்கவும் நான் போட்டுவிட்டு ஓடிவிட்டேன். இதில் சடார், சிலீர், கலீர், கணீர் மட்டுமன்றி பளார் பளார் , பளிச் பளிச், விதிர் விதிர் , ப்ளீர் பளீர் இவையெல்லாம் அடுக்குத் தொடர் என்று அழைக்கப்படும். ஒரே சொல் இருமுறை  வரும். அதை பிரித்தாலும் ஒரு சொல்லும் பொருள் தரும். அடுக்குத் தொடர் 1. அடுத்து அடுத்து - தொடர்ந்து வருதல் 2. அடுக்கி அடுக்கி - தொடர்ந்து அடுக்குதல் 3. அழுகை அழுகையாக - 4. அணுஅணு - சிறிது சிறிதாக 5. அடிஅடி - பரம்பரையாக 6. அழுது அழுது - தொடர்ந்து அழுதல் 7. அளந்து அளந்து - ஆராய்ந்து 8. அந்தோ அந்தோ - அங்கே 9. அன்றே அன்றே - உடனே 10. ஆங்காங்கு - இடைக்கிடை 11. ஆண்டு ஆண்டு - வருடம் தோறும் 12. ஆடி ஆடி - அசைந்த வாறு 13. இறங்கி இறங்கி - தாழ்வு படல் 14. இசைந்து இசைந்து - உடன்பட்டு 15. உழைத்து உழைத்து - கடின உழைப்பு 16. உயர உயர - உயர்ந்து கொண்டு 17. உண்டு உண்டு - தொடர்ந்து உண்ணல் 18. உதை உதை - துன்பப்படல் 19. ஊர்ந்து ஊர்ந்து - மெதுவாக 20. ஊர் ஊர் - ஊர்கள் தோறும் 21. ஊற்றி ஊற்றி - தொடர்ந்து செய்தல் 22. என்ன என்ன - கோபக் குறிப்பு 23. எடு எடு - விரைவாக எடு 24. எழுஎழு - வேகமாக எழும்பு 25. ஏறி ஏறி - தொடர்ந்து ஏறுதல் 26. ஐயோ ஐயோ - அச்சம் 27.  ஒளித்து ஒளித்து - மறைத்து 28. ஓடி ஓடி - விரைவாக 29. ஓய்ந்து ஓய்ந்து - இளைப்பாறி 30. கரிய கரிய - மிகக் கருமையான 31. கட்டுக் கட்டாக - 32. கட்டி கட்டி - அடுக்கி வைத்த/ திரட்சியாக 33. கற்றை கற்றை - கட்டாக 34.  கதறிக் கதறி - இடைவிடாது அழுதல் 35. கொத்துக்கொத்தாக - 36. காத்து காத்து - எதிர்பார்த்து/ பாதுகாத்து 37. காய்ந்து காய்ந்து - உலர்ந்து 38. கால்வழி கால்வழி - தொடர்ந்து 39. கிராமம் கிராமம் - ஊர்கள் தோறும் 40. குவியல் குவியல் - குவியல்களாக 41. குலை குலையாக - பல குலைகளாக 42. குறைந்து குறைந்து - அருகிக் கொண்டு 43. குளித்து குளித்து - தொடர்ந்து குளித்து 44. குலுங்கி குலுங்கி- 45. குனிந்து குனிந்து - குனிந்தவாறு 46. குழறிக் குழறி - புலம்பிக்கொண்டு 47. கூடிக்கூடி - நிறைய பேர் சேர்ந்து 48. கூடை கூடையாய் - 49. கூட்டம் கூட்டம் - குவிந்து நிற்றல் 50. கெட்டேன் கெட்டேன் - அழிந்தேன் 51. கொட்டிக் கொட்டி - அநியாயப்படுத்தி 52. கொதித்து கொதித்து - கோபப்பட்டு 53. கொத்துக் கொத்தாக - 54. கோதி கோதி - வாரிக்கொண்டு 55. சிரித்து சிரித்து - சிரித்தவாறு 56. சிரிப்புச் சிரிப்பாக- 57. சிவக்க சிவக்க - மிகுதியாக சிவக்கும்படி 58. சிறிய சிறிய - மிகச்சிறிய 59. சிவந்த சிவந்த - மிகச் சிவந்த 60. சீச்சி - அருவருப்பு 61. சீப்புச் சீப்பாக - 62. சுடச்சுட - சூடாக 63. சுளை சுளை - 64. சுற்றிச் சுற்றி- 65. சுவைத்து சுவைத்து - 66. சுகம் சுகம் - நலமாக 67. சொல்லிச் சொல்லி 68. தனித்தனி - தனிமை 69. தலைமுறை தலைமுறை - பரம்பரையாக 70. திட்டி திட்டி - பேசிக்கொண்டு 71. திசைதிசை - எல்லாத் திசைகளிலும் 72. துண்டு துண்டாக 73. தூசி தூசி - புளுதியாக 74. தெளிந்து தெளிந்து - தெளிவாக/ உறுதியாக 75. தேடித்தேடி - ஆராய்ந்து 76. தேம்பித்தேம்பி - அழுதல் 77. தொகுதி தொகுதி - ஒவ்வொரு இடமாக 78. தோட்டம் தோட்டம் - எல்லா இடங்களிலும் 79. நடுங்கி நடுங்கி - எல்லா பக்கங்களிலும் 80. பக்கம் பக்கமாக - 81. பாடிப்பாடி - இசைத்த வண்ணம் 82. பாம்பு பாம்பு - அச்சம் 83. பாளம் பாளம் - பெரிய பதிப்புகளாக 84. பாதை பாதை - தெருவெங்கும் 85. பாய்ந்து பாய்ந்து - வேகமாக 86. பார் பார் - கோபக் குறிப்பு 87. பார்த்து பார்த்து- 88. பிடி பிடி - கை தாக்கு /வேக குறிப்பு 89. பதைத்து பதைத்து - மிகுந்த அச்சம் 90. புதிதுபுதிதாக - புதியவைகள் ஆக 91. புதிர் புதிர் - புரியாத விடயமாக 92. பெரிய பெரிய - மிகப்பெரிய 93. போ போ - வேக குறிப்பு 94. மடக்கி மடக்கி - 95. மணிமணியாக - சிறிது சிறிதாக 96. முத்து முத்தாக - பெறுமதி மிக்கவையாக 97. மெல்ல மெல்ல - 98. மென்று மென்று - நன்றாக மெல்லல் 99. மேலே மேலே - உயர்ந்து செல்லல் / அல்லது தொடர்ந்து செய்தல் 100. வழி வழி -  பரம்பரையாக 101. வருக வருக - அன்புடன் வரவேற்றல் 102. வண்ண வண்ண - அழகிய 103. வரிசை வரிசையாக - நிரையாக 104. வருந்தி வருந்தி - மனம் நொந்து 105. வாழையடி வாழையாக - பரம்பரையாக 106. வாழேன் வாழேன் - கெடுதல் 107. விடிய விடிய - விடியும்வரை 108. வீதிவீதியாக - தெருவெங்கும் 109. நடுங்கி நடுங்கி - மிகுந்த அச்சம் / குளிர் 110. நின்று நின்று - ஓய்வெடுத்தல் 111. நித்தம் நித்தம் - தினமும் 112. நிரைநிரை - வரிசையாக 113. நீண்டநீண்ட - மிக நீளமான 114. நெடுத்து நெடுத்து - மிக உயர்ந்த/ அச்சப்பட்டு 115. நெருப்பு நெருப்பு - அச்சம் 116. நெக்கி நெக்கி - மிக இளகி 117. நேர் நேர்- எதிரெதிராக 118. நொய்மை நொய்மையாக -  இளக்கமாக அடுக்கிடுக்கு தொடர் 01. பென்னம்பெரிய 02. சின்னஞ்சிறிய 03. கன்னங்கரிய 04. தன்னந் தனியே 05. வெள்ளைவெளேர் 06. செக்கச் சிவந்த 07. மும்மூன்று 08. பச்சைப்பசேல் 09. நடுநடுங்கி 10. நெட்ட நெடுத்து 11. கூனிக்குறுகி 12. பிய்த்துப்பிடுங்கி 13. வெட்ட வெளி 14. கன்னங்கரேல் 15. கொதி கொதித்து 16. தெள்ளத் தெளிந்து  
    • இது தவறு.ஒருவருக்கு சுகயீனம் அதனால் மிகவும் கஸ்டப்படுகிறார் என்றால் அவரை கருணைக்கொலைக்கு அனுமதிக்கலாம். மற்றும்படி வாழ இயலாமல் ஏதோ விரக்தியில் சாகப் போகிறேன் என்றால் அதை அனுமதிக்க கூடாது.
    • 48இல் 'சுதந்திரம்' - அமைத்தார்கள் சுதந்திர சதுக்கம் 72ஆண்டுகளின்  பின்னர் உருவாக்கியுள்ளார்கள் ' உண்மை சதுக்கம்'
    • எம்.இஸட்.ஷாஜஹான் வருகின்ற காலம் மிக சவாலான காலமாகும் எனத் தெரிவித்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஹுப் ஹக்கீம்,  நடைபெறவுள்ள தேர்தலில், எமது சமூகம் சார்ந்த  அரசியல் பிரிதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வது தொடர்பிலும், அதனை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பிலும் அவதானமாக இருக்க வேண்டும் என்றார். நீர்கொழும்பு-அல் - ஹிலால் மத்திய கல்லூரியின் நூற்றாண்டை முன்னிட்டு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்விக் கண்காட்சி நிகழ்வில், நேற்று(26) பங்கேற்று உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,  மஹர சிறைச்சாலையிலுள்ள பள்ளிவாசல், ஏப்ரல்  குண்டுத் தாக்குதலின் பின்னர் மூடப்பட்டுள்ளது. தற்போது அங்கு வேறு மதச் சின்னங்களை வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து பிரதமரிடம் முறைப்பாடு செய்துள்ளோம். அவர், சிறைச்சாலைக்குப் பொறுப்பான அமைச்சரிடம் கலந்துரையாடி பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். விரைவில் இந்தப் பிரச்சினையைத் அவர்கள் தீர்ப்பார்கள் என எதிர்ப்பார்க்கிறோம்  என்றார். இனங்களுக்கிடையில் இருக்கும் ஒற்றுமையை குலைக்கும் வகையில்,  எல்லா தரப்பிலிருந்தும் தீவிரவாதிகள் தலைதூக்கி வருகின்றனர். இவர்களைக் கையாள்வது இலகுவான விடயம் அல்லவென, நாடாளுமன்ற உறுப்பினர் ரஹுப் ஹக்கீம் தெரிவித்தார்.   http://www.tamilmirror.lk/செய்திகள்/தவரவதகள-தலதகக-வரகனறனர/175-246127