• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
Vaanampaadi

Try - இதை அகராதியிலிருந்து விலக்கிடுங்க

Recommended Posts

சில நாட்களுக்கு முன்பு படித்தது. யார் சொன்னாங்கனு சரியாத் தெரியல, ஆனா படிக்க நல்லா இருந்தது. என்ன சொல்லியிருக்காங்கனா, "Try" என்கிற வார்த்தையை அகராதியிலிருந்து விலக்கிவிடுவது நல்லதுனு சொல்லியிருக்காங்க. சரி அப்படி என்ன தான் அந்த வார்த்தைல பிரச்சனைனு பாக்கலாம்.

Try என்ற சொல் நம்முடைய மூளைக்கு வெற்றிய மறைச்சு, தோல்விக்கான வழிய காட்டுதாம். என்னடா சிறுபிள்ளைத்தனமாக இருக்குனு நீங்க நினைக்கிற மாதிரி தாங்க நானும் நினைச்சேன். மேல படிச்சாத்தான் இது கூட ஒரு விதத்துல சரீன்னு பட்டுது. ஒரு உதாரணத்தோட விளக்கியிருக்காங்க.

ஒரு குழந்தைக் கிட்ட ஒரு பென்சில் தந்து, "Try dropping this pencil" அப்படீன்னு சொல்றதா வெச்சிக்குவோம். அந்தக் குழந்தை என்ன பண்ணும்? பென்சிலக் கீழ போடும். அந்தக் குழந்தைக் கிட்ட மறுபடியும் போய் "நான் உன்கிட்ட பென்சிலக் கீழ போட சொன்னேனா? பென்சிலக் கீழ போட 'Try' பண்ணுனு தானே சொன்னேன்" அப்படீன்னு சொன்னா, அந்தக் குழந்தை என்ன பண்ணும்? பென்சிலக் கீழ போடாம, பென்சிலோட ஒரு முனையப் புடிச்சிக்கிட்டு கீழ போட்ற மாதிரி பாவனை பண்ணும். ஆனா பென்சிலக் கீழ போடாது.

ஆக, ஒரு வேலைய செய்ய Try பண்ணுனு சொல்லும் போது, நாம் நமது முளைக்கு அந்த வேலையைச் செய்யாதேன்னு தான் சொல்றோம். இது கிட்டத்தட்ட வெற்றியை மறைத்துத் தோல்வியைத் தான் முன்னிறுத்துது. அதனால தான் Try என்கிற வார்த்தையை அகராதில இருந்து விலக்கச் சொல்றாங்க.

யாராவது அவங்க வீட்டுக்கு உங்களக் கூப்பிட்டா, "I will come" இல்ல "I will not come" அப்படீன்னு தெளிவாச் சொல்லனுமாம். மாறாக "I will try to come" அப்படீன்னு சொன்னா, நாம கண்டிப்பா போகமாட்டோமாம். அதேபோல, உங்கக்கிட்ட இந்த வேலைய முடீன்னு சொன்னா, ஒன்னு, "Yes, I will do it" அப்படீன்னு சொல்லணும், முடியலேன்னா, "No, I cant do it", அப்படீன்னு சொல்லணுமாம். அப்படிச் சொல்லாம, "I will try to do it" அப்படீன்னு சொல்லக்கூடாதுனு சொல்லியிருக்காங்க. என்ன சரிதானே?

பி.கு: இதைக் கூறியவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அப்படீன்னும் இருந்திச்சு. இது உண்மையான்னு தெரியல.

http://memynotepad.blogspot.com/2008/11/try.html

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • கோசான் அண்ணை...  "காற்றுப் பறிதல்", "காற்றில், பறந்த தமிழரின் கலாச்சாரம்" இரண்டுக்கும்... ஏதாவது,  "தொப்புள் கொடி"  தொடர்பு இருக்குமோ....  🤣
  • கவி அருணாசலம், சென்ற  செவ்வாய்க் கிழமை பதிந்த பதிவை... இன்று தான்...  கண்டேன்.  அதுகும்... எமக்கு அருகில் உள்ள இடம். அங்கு... இப்படி  ஒரு, அருமையான நிகழ்ச்சி....  அங்கு  நடந்திருக்கும் என்று, நான் எதிர் பார்க்கவேயில்லை.  அனுமதி சீட்டு.... 147 €  எனும் போது, அந்த ஆசையை விடலாம் என யோசித்தாலும், நானும், ஒய்வு (பென்ஷன்)   எடுத்த பின்...   அங்கு ஒரு முறை சென்று பார்க்க, கவி அருணாசலத்தின்... அழகிய எழுத்து நடையுடன் உள்ள பதிவு, என்னைத் தூண்டியுள்ளது. 
  • கனடாவில் படித்து வந்த தமிழக மாணவிக்கு கத்திக்குத்து - ஐசியுவில் தீவிர சிகிச்சை   கனடாவில் படித்து வந்த தமிழக மாணவிக்கு கத்திக்குத்து - ஐசியுவில் தீவிர சிகிச்சை   கனடாவில் படித்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த 23 வயது பெண் அடையாளம் தெரியாத மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயம் அடந்தைவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் திவிர…   கனடாவில் படித்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த 23 வயது பெண் அடையாளம் தெரியாத மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயம் அடந்தைவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் திவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கனடா நாட்டில் டொரோண்டா நகரில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ரேச்சல் ஆல்பர்ட் என்ற பெண் முதுகலை படித்துவந்தார். ரேச்சல் டொரோண்டொவில் பல்கலைக்கழக வளாகம் அருகே லெய்ட்ச் அவின்யூ அசினிபோயினே சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, புதன்கிழமை காலை 10 மணி அளவில் அடையாளம் தெரியாத மர்ம நபரால் அவரைத் தாக்கி சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இதில் மாணவியின் கழுத்துப் பகுதியில் கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். இது குறித்த தகவல் அறிந்த ரேச்சலின் குடும்பத்தினர், தனது மகளைப் பார்க்க கனடா செல்வதற்கு விசா நடைமுறைகளை விரைவாக்க உதவி செய்ய வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் உதவியைக் நாடியுள்ளனர். மேலும், மாணவி ரேச்சலின் உடல்நிலை ரத்த அழுத்தம் இதயத்துடிப்பு சீராக இருப்பதாவும் இருப்பினும் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளனர். கனடா போலீசார் பொதுமக்களுடன் உதவியுடன் மாணவி ரேச்சலை தாக்கிய அந்த மர்ம நபரைப் பற்றி விசாரித்துவருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட அந்த நபர் ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர் என்றும் அந்த நபரின் வயது 20களின் மத்தியில் இருக்கும் என்றும் ஸ்டைலான கண்ணாடி அணிந்திருந்தார் என்றும் தெரிவித்துள்ளனர். மாணவி தாக்கப்பட்டது குறித்து டொரோண்டோ போலீசார் வழக்குப் பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபரை தேடிவருகின்றனர்.   ரேச்சலின் சகோதரி ரெபேக்காவின் டி.என்.எம் உடன் பேசுகையில், “இந்த சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது குறித்து எங்களுக்குத் தெரியவில்லை. ரேச்சலைப் பார்க்க விசாவைப் பெறுவது எனது குடும்பத்தினருக்கு காலத்தின் தேவை. விசா செயல்முறை சிக்கலானது. நாங்கள் இன்னும் அதைக் கண்டுபிடித்து வருகிறோம். நாங்கள் வெளிவிவகார அமைச்சரின் உதவியை நாடுகிறோம். ” ரேச்சலின் குடும்பத்தினர் ஊடகங்களிடம் கூறுகையில், “இந்த சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது குறித்து எங்களுக்குத் தெரியவில்லை. ரேச்சலைப் பார்க்கச் செல்ல விரைவாக விசாவைப் பெறுவது என்பது சிக்கலானது. நாங்கள் அதற்காக வெளியுறவுத் துறை அமைச்சரின் உதவியை நாடியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர். மேலும், ரேச்சல், மூளைக்கு இரத்த விநியோகத்தை துண்டிக்கும் வகையில் காயங்கள் ஏற்பட்டதாக தெரிகிறது. ரேச்சலின் கழுத்துப் பகுதியில் பல முறை குத்தப்பட்டதாகத் தெரிகிறது, தவிர இருபுறமும் கீறல்கள் உள்ளன.” என்று தெரிவித்துள்ளனர். நன்றாகப் ரேச்சல் தற்போது கனடாவில் சப்ளை செயின் மேனேஜ்மென்ட்டில் பல்கலைக்கழக உதவித்தொகை உதவியுடன் படித்து வருகிறார். ரெச்சல் இந்த ஆண்டு மே மாதம் பட்டம் பெற உள்ளார். மேலும், தனது செலவுகளுக்காக அங்கே அவர் பகுதிநேரமாக வேலை செய்து கொண்டுவந்தார்” என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து ரேச்சலின் உறவினர் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த ரேச்சல் படிப்பதற்காக கனடா சென்றார். அங்கே அவர் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தயவு செய்து உதவி செய்யுங்கள். இந்த செய்தி உள்ளூர் தொலைக்காட்சிகளில் வெளியாகியுள்ளது. ரேச்சலின் பெற்றோர் குன்னூரில் இருப்பதாகவும் அவர்களுடைய மொபைல் எண்ணையும் குறிப்பிட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “கனடாவின் டொரோண்டோவில் இந்திய மாணவி ரேச்சல் ஆல்பர்ட் மீதான மோசமான தாக்குதலை அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன். அவருடைய குடும்பத்தினருக்கு எளிதில் விசா கிடைக்க நான் வெளிவிவகார அலுவலர்களிடம் கேட்டுள்ளேன். அவருடைய குடும்ப உறுப்பினர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள் என்று செல்பொன் எண்களைக் குறிப்பிட்டு பதிலளித்துள்ளார். https://tamil.indianexpress.com/international/23-year-old-student-from-tamil-nadu-was-stabbed-at-toronto-in-canada/
  • என்ன கோசான் எட்டிப் பார்த்துவிட்டு ஒன்றும் கூறவில்லை. இக் கோவிலுக்குப் போனீர்களா ?? வருகைக்கும் பச்சைக்கும் நன்றி