Jump to content

மும்பை நகரம் தாக்குதலுக்கு உள்ளானது


Recommended Posts

நைஜீரியாவைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஒபரோய், ட்ரைடென்ட் மற்றும் தாஜ் நட்சத்திர ஹோட்டல்களைக் கைப்பற்ற முயற்சிப்பதாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 25 பேர் இதுவரை பலியாகி உள்ள‌னர்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------

At least 25 people have been killed and many more injured in several terrorist attacks in Mumbai on Wednesday night.

Attacks reported at Oberoi, Taj and Trident hotel and the Prime Minister Office has confirmed that five blasts took place. Oberoi hotel lobby is on fire after the attack and encounter is taking place with terrorists inside oberoi hotel.

There are also reports of low intensity blast in Ville Parle and grenade attack in Santa Cruz.

Earlier, there were incidents of firing in Colaba and near CST station. One policeman was reported to be injured in the firing in Colaba.

PTI adds The shootouts took place at Colaba and CST while a grenade exploded at Mumbai CST.

Additional Commissioner of Police Deven Bharti confirmed the shootout at Colaba but did not give out details and say if there was any casualty.

Police cordoned off the CST and none was allowed to enter it.

Two persons armed with automatic weapons and hand grenades are reportedly holding up inside CST stations.

Sounds of gunshots are still being heard. Hundreds of onlookers gathered outside the station. The station and premises has been evacuated.

One policeman was injured in the firing at Colaba and a number of people were wounded at CST where two armed men opened indiscriminate area.

Colaba is one of the most congested and high-profile areas of Mumbai and CST the busiest railway station.

நன்றி: NDTV

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol: முற்பகல் வினை, பிற்பகல் விளையும் !

:lol: புஸ்பவிஜி,

கவலைப்படுங்கள், மனிதர்களுக்காக.

திருத்தப்பட்டுள்ளது- யாழ்பாடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol: முற்பகல் வினை, பிற்பகல் விளையும் !

:lol: புஸ்பவிஜி,

கவலைப்படுங்கள், மனிதர்களுக்காக. !

உண்மை

கவலைப்படுங்கள் மனிதர்களுக்காக.

எங்களை மனிதர்கள் என்று மதிப்பவர்களுக்காக

Link to comment
Share on other sites

பலி எண்ணிக்கை 90 ஐ தொட்டுவிட்டது. என்கௌண்டருக்குப் பெயர்பெற்ற போலிஸ்காரர்கள் மற்றும் கொமாண்டோக்களும் பலியானவர்களில் அடக்கம்.

தீவிரவாதிகள், வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 15 பேரை தாஜ் ஹோட்டலில் பிணையில் வைத்துள்ளனர். இரண்டு வெடிகுண்டுப் படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகவும் திட்டமிட்டு பரவலான முறையில் தாக்குதல்கள் நடைபெறுகின்றன. இன்னும் முடிந்த பாடில்லை. :lol:

Link to comment
Share on other sites

நேற்று, முந்தாநாள் எல்லாம் இஞ்ச CBC தொலைக்காட்சியில யில மும்பாய் உலகில - இந்தியாவில எவ்வளவு முன்னேறி இருக்கிது. எத்தினவிதமான தொழில்வாய்ப்புகள், வசதிகள் இருக்கிது எண்டு மிகவும் விபரமான தகவல்களை காட்டினார்கள். பார்க்கும்போது பிரமிப்பாகவும், பொறாமையாகவும், உண்மையில சரியான எரிச்சலாகவும் இருந்திச்சிது. அட இந்தியாவில - மும்பாயில இவ்வளவு வாய்ப்புக்களா, வசதிகளா எண்டு... இண்டைக்கு அங்கையும் யாரோ குட்டையை கிளப்பிவிட்டுட்டாங்கள். பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்! இப்படியாக சிலர் செய்கின்ற சேட்டைகளாலதான் நம்மோட தாயகபோராட்டத்திற்கும் கெட்ட பெயர் ஏற்படுகின்றது. இனி நாளைக்கு அல்ல இண்டைக்கே சிறீ லங்கா அரசு இந்த சம்பவத்தையும், ஊரில நடக்கிற போராட்டத்தையும் தங்களுக்கு சார்பாக ஒப்பீடு செய்து அறிக்கை விடப்போறாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று, முந்தாநாள் எல்லாம் இஞ்ச CBC தொலைக்காட்சியில யில மும்பாய் உலகில - இந்தியாவில எவ்வளவு முன்னேறி இருக்கிது. எத்தினவிதமான தொழில்வாய்ப்புகள், வசதிகள் இருக்கிது எண்டு மிகவும் விபரமான தகவல்களை காட்டினார்கள். பார்க்கும்போது பிரமிப்பாகவும், பொறாமையாகவும், உண்மையில சரியான எரிச்சலாகவும் இருந்திச்சிது. அட இந்தியாவில - மும்பாயில இவ்வளவு வாய்ப்புக்களா, வசதிகளா எண்டு... இண்டைக்கு அங்கையும் யாரோ குட்டையை கிளப்பிவிட்டுட்டாங்கள். பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்! இப்படியாக சிலர் செய்கின்ற சேட்டைகளாலதான் நம்மோட தாயகபோராட்டத்திற்கும் கெட்ட பெயர் ஏற்படுகின்றது. இனி நாளைக்கு அல்ல இண்டைக்கே சிறீ லங்கா அரசு இந்த சம்பவத்தையும், ஊரில நடக்கிற போராட்டத்தையும் தங்களுக்கு சார்பாக ஒப்பீடு செய்து அறிக்கை விடப்போறாங்கள்.

இனி நாளைக்கு அல்ல இண்டைக்கே சிறீ லங்கா அரசு இந்த சம்பவத்தையும் ஊரில நடக்கிற போராட்டத்தையும் தங்களுக்கு சார்பாக ஒப்பீடு செய்து அறிக்கை விடப்போறாங்கள்

ஏன் இல்லையென்றால்

தாயகபோராட்டத்தை அங்கீகரித்துப்போடுவினம் ஆக்கும்

இல்லை

தெரியாமல்தான் கேட்கிறன்

இவ்வளவு வல்லரசுகளும் பார்த்துக்கொண்டிருக்க

இவை எதுக்கு அவன்ரை கடல் பக்கம்போய் அவனோட வாலாட்டினவ?????

Link to comment
Share on other sites

பலர் (உல்லாச தங்கத்தில் இருந்த வெளிநாட்டவர்கள் உட்பட) பணையக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருக்கிறார்கள

Link to comment
Share on other sites

செய்திகள் இன்னமும் ஒண்டும் வடிவாய் முடிவாய் சொல்லப்பட இல்லை. நீங்கள் ஏன் அவசரப்பட்டு அவ்வளவு தூரம் போறீங்கள்? பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாங்கள் அனுதாபம் தெரிவிக்கமுடியும். இதுக்கு மிஞ்சி எங்களுக்கு ஏன் இந்த ஆராய்ச்சி. எங்கட ஊர்தான் சீரழிஞ்சு இருக்கிது எண்டாலும்.. அழகான மும்பாயில இருக்கிற சனமாவது நிம்மதியாய் இருக்கட்டுமே.

Link to comment
Share on other sites

சிறிதளவே அறியப்பட்ட டெக்கன் முஜாஹிதீன் என்னும் தீவிரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளதாகத் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா பிரிட்டன் மற்றும் நேட்டோ நாடுகள் தங்கள் ஏகாதிபத்தியக் கொள்கைக்காக பல நாடுகளையும் ஆக்கிரமித்து நின்று கொண்டு பயங்கரவாதிகளை அழிக்கின்றோம் என்று அப்பாவி மக்களை அழிப்பதனையும் அதனை அங்கீகரித்து இந்த உலகத்தின் இன்னொரு பக்கம் அவர்களைப் பின்பற்றுவதையும் சகித்துக் கொள்ள முடியாதவர்களும் அப்பாவி மக்களையே தாக்குவது சிறந்ததல்ல.

எங்கென்றாலும் எவர் தாக்கினும் அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கள் தவிர்க்கப்பட வேண்டியவை. அது ஆப்கானிஸ்தானில்.. ஈராக்கில் அமெரிக்கா செய்தால் என்ன.. காஷ்மீரில் இந்தியா செய்தால் என்ன.. ஈழத்தில் சிறீலங்கா செய்தா என்ன.. தீவிரவாதிகள் பொதுமக்களைத் தாக்கினால் என்ன அவை கண்டிக்கப்பட வேண்டியவை. அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்க பொதுமக்களை இலக்கு வைப்பது தவறான அணுகுமுறையே..!

இவை தான் அமெரிக்கா போன்ற இராணுவ வல்லமை படைத்த நாடுகள் பயங்கரவாதம் என்ற போர்வையில் தீவிரவாதிகளிடம் இருக்கும் நியாயமான கோரிக்கைகளைக் கூட கருவறுக்க உதவியும் நிற்கின்றன.

எனவே தீவிரவாதம். பொதுமக்களை இலக்கு வைக்காது.. அரசுகளின்.. இராணுவங்களின் கட்டமைப்புக்களை தாக்க வேண்டுமே அன்றி.. இவ்வாறு பொதுமக்களை சகட்டு மேனிக்கு கொல்வது என்பது அரச பயங்கரவாதத்தினை நியாயப்படுத்தும் வகையில் பொதுமக்கள் சிந்திக்கவே வழி செய்யும். தீவிரவாதிகளின் நியாயங்கள்.. பயங்கரவாதமாக சித்தரிக்கப்படவே வழி செய்யும்..! அவை பேரழிவுகளாகிடவே அதிகம் சந்தர்ப்பம் உள்ளது.

அது அண்டை அயலில் நடக்கும் நியாயமான மக்கள் போராட்டங்களையும் பயங்கரவாதமாக உச்சரிக்கவே வழி செய்யும்..! இது பிராந்தியத்தில் பதட்டத்தை அதிகரித்து தமது இலக்குகளை எய்த என்று அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளின் கூலிப்படைகளின் நடவடிக்கையாகக் கூட இருக்கலாம். எனவே இவை தொடர்பில் மிக அவதானமாக இருப்பது நன்று. :lol::lol:

Link to comment
Share on other sites

எல்லா தொலைக்காட்சியிலயும் Live போகுது. உள்ள தீவிரவாதிகள் இதை லைவ்வா பார்த்து தங்கட திட்டங்களை போட இலகுவா இருக்கும் :lol::lol:

Link to comment
Share on other sites

மும்பையில் தீவிரவாதிகள் கைவரிசை : 5க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுவெடிப்பு : 80 பேர் பலி

நவம்பர் 27,2008,00:00 IST

மும்பை : மும்பை மாநகரின் பரபரப்பு மிகுந்த மையப்பகுதியில் உள்ள தாஜ் மற்றும் டிரிடன்ட் ஓட்டல் பகுதியில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டு வெடித்தது. இதில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் பலியாயினர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகள் மட்டுமல்லாது கடும் துப்பாக்கிச்சூட்டிலும் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். ராணுவத்தினர் மட்டுமல்லாது தீவிரவாத எதிர்ப்புப் போலீசார், தேசிய ராணுவப் படையினர் ஆகியோர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசாருக்கும் , தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. இதனால் அந்த பகுதியே பெரும் கலவரப் பூமி போல் காட்சியளித்தது.

3 போலீஸ் உயர் அதிகாரிகள் பலி : போலீசாருக்கும் , தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாத எதிர்ப்புப்படை போலீஸ் தலைமை அதிகாரியான ஹேமந்த் கர்காரே, என்கவுண்டர் போலீஸ் உயர் அதிகாரி விஜய் சர்லாஸ்கர் உள்ளிட்ட 3 போலீஸ் உயர் அதிகாரிகள் பலியாயினர். இந்த தாக்குதல்களில் 20க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் ஈடுபட்டிருந்ததாக போலீசார் தெரிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தீவிரவாதிகள் 3 எம்.பி.,க்கள் மற்றும் பொதுமக்கள் 100 பேரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

2 தீவிரவாதிகள் பலி : போலீசாருக்கும் , தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் பலியானதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 தீவிரவாதிகள் கருப்பு நிற காரில் தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 9 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மர்மப்படகு ? : கடந்த சில நாட்களாக மும்பை துறைமுக பகுதியில் மர்மப்படகு உலவி வந்ததாகவும், அதன் மூலமே தீவிரவாதிகள் மும்பை நகருக்கு வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

உச்சக்கட்ட பாதுகாப்பு : மும்பை தாக்குதல்களைத் தொடர்ந்து டில்லி , குஜராத் , கோல்கட்டா , சென்னை , பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நட்சத்திர ஒட்டல்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரதமர் கண்டனம் : இந்த தாக்குதலுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தீவிரவாதிகள் உடனடியாக கைது செய்யப்படுவர் என்றும் , அவர்கள் தீவிரமாக தண்டிக்கப்படுவர் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் அத்வானி, பிரதமர் மன்மோகன் சிங்கை தொடர்பு கொண்டு உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். சம்பவ இடத்தைப் பார்வையிட்ட மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் , தீவிரவாதிகளின் தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருவதாக அவர் கூறினார். இதனிடையே கேரள சற்றுப்பயணம் சென்றிருந்த மகாராஷ்டிரா முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக், அங்கு நடைபெறவிருந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு உடனடியாக மும்பை திரும்பியுள்ளார்.

குண்டுகள் செயலிழப்பு : ராணுவத்தினர் போலீசாருடன் நடத்திய தீவிர சோதனையில் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 வெடிகுண்டுகள் செயலிழக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா கண்டனம் : இந்த சம்பவத்திற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அது வெளியிட்டுள்ள அறிக்கையில் தாங்கள் இந்தியாவின் நிலையை கூர்ந்து நோக்கி வருவதாகவும், தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவிற்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.dinamalar.com/fpnnews.asp?News_...67&cls=row3

தாஜ் ஓட்டலில் தீ: தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படை கடும் மோதல்

மும்பை தாஜ் ஓட்டலின் மேல் பகுதியில் பயங்கர தீ பரவி உள்ளது. ஓட்டலில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஓட்டலில் இரண்டு முறை குண்டுகள் வெடித்தன. அதைத் தொடர்ந்து தீ பிடித்தது. ஓட்டலில் இருந்து இதுவரை 100 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

தாஜ் ஓட்டலில் நடந்த மோதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ராணுவம் விரைந்தது: டிரிடண்ட் ஓட்டலில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளைப் பிடிக்க ராணுவம் விரைந்துள்ளது. காமா ஆஸ்பத்திரியிலும் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர். அங்கு சிலரை பிணைக்கைதிகளாக தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ளனர்.

Link to comment
Share on other sites

ஓட்டல் சமையல் அறையில் அடைக்கலம் புகுந்த வெளிநாட்டவர்

நவம்பர் 27,2008,00:00 IST

மும்பை: தீவிரவாதிகள் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஓட்டலின் சமையல் அறையில் வெளிநாட்டவர் தஞ்சம் புகுந்தனர்.

மும்பை தாஜ் ஓட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி‌யபோது, ஓட்டலில் ஐரோப்பிய பார்லிமென்ட் உறுப்பினர்கள், கொரிய வர்த்தக அமைப்பு உறுப்பினர் என வெளிநாட்டவர் பலர் தங்கி இருந்தனர்.

ஐரோப்பிய ஐரோப்பிய பார்லிமென்ட் உறுப்பினரான எரிக் மான், தீவிரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து, ஓட்டலின் சமையல் அறைக்குள் தஞ்சம் புகுந்தார். அவருடைய பாதுகாப்பு குறித்து மற்றொரு உறுப்பினர் அவருடன் போனில் தொடர்பு கொண்டபோது, ‘இப்போது ஏதும் பேச வேண்டாம்; இங்கு பயங்கர துப்பாக்கிச் சண்டை நடக்கிறது; நான் சமையல் அறையில் பதுங்கி உள்ளேன்’ என்று கூறினார்.

பின்னர் மான்,, போன் மூலம் ஒரு நிருபரிடம் கூறுகையில், ‘‘ ஓட்டல் வரவேற்பறையில் நான் நின்று கொண்டிருந்தபோது, திடீரென துப்பாக்கி ஏந்திய சிலர் உள்ளே வந்தனர். உடனே துப்பாக்கியால் சுடத் ‌துவங்கினர். அப்போது அந்த இடத்தில் சுமார் 30 பேர் இருந்தோம். அநத துப்பாக்கிச் சூட்டில் என் கண் முன்னாலேயே ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து கீழே சரிவதைப் பார்த்து, அதிர்ச்சி அடைந்தேன். உடனே நாங்கள் அங்கிருந்து ஓடினோம். நான் சமையல் அறைக்குள் புகுந்து கொண்டேன். தற்போது ஓட்டலின் கீழ்ப் பகுதியில் இருக்கிறேன். ஆனால் பாதுகாப்பு காரணமாக கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, விளக்குள் அணைக்கப்பட்டு ஒரே இருட்டாக உள்ளது.

http://www.dinamalar.com/fpnnews.asp?News_...69&cls=row3

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் காங்கிரசுக்கு ஆப்பு என்பது உறுதியாகிவிட்டது!!!

உண்மை தான் வெற்றிவேல் .

வழக்கமாக ஆப்பு மற்றவர்கள் தான் வைப்பார்கள் , ஆனால் காங்கிரஸ் தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொள்ளும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மும்பையில் தீவிரவாதிகள் பயஙகர தாக்குதல்: 87 பேர் பலி-240 பேர் காயம்வியாழக்கிழமை

, நவம்பர் 27, 2008, 9:53 இலவச நியூஸ் லெட்டர் பெற மும்பை: மும்பையில் தாஜ் மகால் ஹோட்டல், ஓபராய் ஹோட்டல், கொலாபா, மெட்ரோ சினிமா, சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், டிரைடன்ட் ஹோட்டல், காமா மருத்துவமனை, நரிமன் ஹவுஸ், கபே லியோபோல்ட் ஆகிய 9 இடங்களில் தீவிரவாதிகள் பயங்கர துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 87 பேர் கொல்லப்பட்டனர், 240 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஓபாராய் ஹோட்டலில் மேலும் 10க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரை தீவிரவாதிகள் பிணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர். இவர்களை மும்பை போலீசாரால் மீட்க முடியாததால் தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனால் மும்பை நகரம் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளது. இந்த திடீர் தாக்குதலால் மும்பை நகரமே போர்க்களம் போல மாறியுள்ளது.

நேற்று இரவில் தீவிரவாதிகள் இந்த இடங்களில் புகுந்தனர். முதலில் கையெறி குண்டுகளை வீசிவிட்டு பின்னர் தானியங்கி துப்பாக்கிகளால் கண்மூடித்தனமாக சுட்டனர். அவர்கள் முதலில் தாக்குதல் நடத்திய இடம் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையமாகும். இதையடுத்து கபே லியோபோல்ட், காமா மருத்துவமனை ஆகிய இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

பின்னர் தாஜ் மகால், ஓபாராய் உள்ளிட்ட நட்சத்திர ஹோட்டல்களுக்குள் புகுந்து அங்கு தங்கியிருந்த பலரையும் துப்பாக்கி முனையில் சிறை பிடித்தனர்.

இதையடுத்து போலீஸாரும், அதிரடிப்படையினரும் ஹோட்டல்களுக்கு விரைந்தனர். ஆனால், பாதுகாப்புப் படையினர் மீது கையெறி குண்டுகளை வீசி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டையும் தொடங்கியது. இதில் 11 போலீசார் கொல்லப்பட்டனர். 5 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தாஜ் ஹோட்டலில் 3 தீவிரவாதிகளும் ஓபராயில் 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

இந்த சண்டையில் கூடுதல் கமிஷ்னர் அசோக் காம்தே, மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே, என்கெளன்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் சலஸ்கர் ஆகியோரும் கொல்லப்பட்டனர்.

காமா ஹோட்டலில் நடந்த நடவடிக்கையின் போது அசோக் காம்தே கொல்லப்பட்டார். மற்ற இருவரும் டிரைடன்ட் ஹோட்டலில் நடந்த நடவடிக்கையின்போது படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

இதையடுத்து ராணுவமும் உடனடியாக வரவழைக்கப்பட்டது. ராணுவத்தினரும் போலீசாரும் இணைந்து தாக்குதல் நடத்தி 9 தீவிரவாதிகளை பிடித்தனர்.

தீவிரவாதிகள் பிடியில் உள்ள வெளிநாட்டினர் உள்ளிட்டோரை மீட்க ஓபராய் மற்றும் தாஜ் ஹோட்டல்களை தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் 200 பேர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இன்னும் சண்டை தொடர்ந்து கொண்டுள்ளது.

அதேபோல டிரைடன்ட் மற்றும் காமா ஹோட்டல்களையும் ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. அங்கு பதுங்கியுள்ள தீவிரவாதிகளைப் பிடிக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.

இந்தத் தாக்குதலையடுத்து நேற்றிரவு முதல் மும்பை நகரமே ஸ்தம்பித்துப் போய்விட்டது. இன்று பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுவிட்டன.

பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. அதே போல பெரும்பாலான ரயில்களும் இயக்கப்படவில்லை. இதனால் ரயில் நிலையங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

3 தீவிரவாதிகள் போலீசாரின் 2 ஜீப்களில் தப்பியோடிவிட்டனர்

இந் நிலையில் இன்று காலை மகாராஷ்டிர சட்டசபை கட்டடமான விதான் பவனில் ஒரு வெடிகுண்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

கடற்படை விரைகிறது:

மும்பையில் போர் போன்ற சூழ்நிலை நிலவுவதால் அங்கு ராணுவம் தவிர கடற்படை வீரர்களையும் மத்திய அரசு அனுப்பியுள்ளது.

மரியாட் ஹோட்டலுக்குப் பாதுகாப்பு:

மும்பையின் இன்னொரு புகழ் பெற்ற ஹோட்டலான ஜே.எம்.மரியாட் ஹோட்டலை தீவிரவாதிகள் பிடிக்கப் போவதாக வந்த தகவலைத் தொடர்ந்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2008/11...terrorists.html

Link to comment
Share on other sites

காங்கிரஸ் தனது தனிப்பட்ட பழிவாங்கல்களில் முனைப்பாக இருந்து தனது நாட்டுமக்களை பாதுகாப்பதில் கோட்டை விட்டுவிட்டது. அரசியல்வாதிகளின் கூத்துகளில் பலியாவது அப்பாவி பொதுமக்களே :( ( பிராந்திய மேலாண்மையை பெறுவதை விட்டு நாட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்த முயற்சிப்பது நல்லம்.)

Link to comment
Share on other sites

தன் வினை தன்னைச்சுடும்.

"கோத்த பாய" அல்லது "பசில்" சகோதரரிடம் ஏதும் ஆலோசனை கேட்டால், இந்த பிரச்சனையை எப்படி கையாளுறது எண்டு சொல்லுவினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பலியான அப்பாவிப்பொதுமக்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத்தான் தெரிவிக்க முடியும்.

உதுதான் வாய்ப்பெண்டு சில பேர் அறி(ரி)க்கை விடுவினம்.

நிச்சயமா இண்டைக்கு ஜெயாச்செய்தியில 'கருணாநிதிதான் இதுக்கு காரணம் எண்டு சொன்னாலும் சொல்லுப்படும்." :(

அந்தம்மாக்கு 'காத்துக்கு மரம் ஆடினாலும் இது மைனாரிட்டி திமுக அரசான கருணாநிதியின் சதி வலை எண்டு சொல்லுவா"...

அழியிற அப்பாவி உயிர்களில எப்படியெல்லாம் குளிர்காயலாம் எண்டு யோசிக்கிற அரசியல் வாதிகளை என்ன சொல்லுறது?!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மிகவும் மனம் வருந்த கூடிய கொடிய மிருக செயல்!

இலக்காக பொதுமக்கள் தேர்வு செய்யபடுவது மனிதமிருகசெயல்...... தமது பசியை போக்க பிற மிருகங்களை மிருகங்கள் கொலவதுண்டு. ஆனால் கொலை வெறி பசியை போக்க மனிதன் மட்டுமே தனது சொந்ந இனத்தை அழிப்பது கேவலமானது.

முந்தைய நாட்களில் பிறநாடுகளின் வளர்சியை தடுக்க வல்லரசுகள் அவர்களின் எதிரி நாடுகளை பலப்படுத்துவார்கள்..... ஆனால் இனிவரும்காலங்களில் அற்ப கொள்கைகளும் மதவெறி கொள்கைகளையும் பின்பற்றும் தீவிரவாதிகளைதான் பலப்படுத்தபோகிறார்கள்.

இந்த தீவிரவாத செயல்களுக்குபின்னால் ஒரு நாட்டின் செயற்பாடு நிற்சயம் இருந்திருக்ககும். இது இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியை கேள்விகுறி ஆக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனாலும் என்ன இந்தியா நீதியை கடைபிடிக்கவா போகின்றது..... மறுபுறம் சிறிலங்காவின் அரச பயங்கரவாதத்தை பாரதத்திற்கே எதிர்மாறான வகையில் வளர்க்கத்தான் போகின்றது.

ஒரு புறம் ஆடம்பரமும் ஆபாசமும் அசுர வளர்சியை அடைந்து கொண்டு இருக்கும் சமநேரம். மறுபுறம் நீர்பஞ்சம் தண்ணீர்பஞ்சம் தலைவிரித்தாடுகின்றது. இதுவே தீவிரவாதிகளின் வளர்சிக்கு அத்திவாரமாக அமையபோவது. அவர்களின் அற்ப சித்தாந்தம் பசியில் இருப்பவனுக்கு உணவோடு ஊட்டபடபோகின்றது.

ஊறியவனின் இறுதிநாள் இன்றைய மும்பாய்போல் உலகின் எதோ ஒரு மூலையில்தான் முடியும்??

இந்த தாக்குதலுக்கான தகவல் அனைத்தும் பாகிஸ்தான் ஸ்ரீலங்கா ஊடாக பெற்று தீவிரவாதிகளிடம் ஒப்படைத்துமிருக்கலாம்..... இனி இந்தியாவும் அதேபாணியில் பாகிஸ்தானின் தகவல்களை ஸ்ரீலங்கா ஊடாக பெற முயற்சி செய்யலாம். ஸ்ரீலங்கா சும்மா இருந்நபடி வயிறை வளர்கலாம். சீனா இந்த இரண்டில் ஒருநாட்டை நட்பாகவோ எதிரியாகவோ ஆக்கும்வரை. அதன்பிறகு ஸ்ரீறிலங்காவின் அரசமாற்றம் உண்மைதன்மை போன்றவை ஏதோ ஒரு நாட்டிற்கு தேவைபடும்போது அவர்களின் கண்களில் தெளிவாக தெரியபோவது புலிகள்தான். ஆனாலும் புலிகள் தர்மீக போராட்டத்தை இந்த வில்லங்கந்திற்கு விற்றுவிடமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. ஆகவே எம்மை பொறுத்தவரை நாம் என்றைக்குமே தனித்து நின்றுதான் போரவேண்டிவர்களாகிறோம். நாம்மட்டுமல்ல உலகில் நீதிக்காக உரிமைக்காக போரடுபர்களின் நிலை இதுவாகத்தான் இருக்கும். வர்த்தக போட்டியில் இவர்கள் பட்டபாடுபோதும் என்று

ஆடாவடி தனங்களை தாமக நிறுத்தும் நாளில் எமது விடுதலை தானாக பிறக்கும்!

................................... ஜனநாயகத்தை உதட்டளவில் உச்சரித்து கொண்டிருக்கும் அனைத்து நாடுகளும்..... இன்னும் பல மும்பாய்களை உருவாக்க திரைமறைவில் செயற்பட்டுகொண்டிருப்பார்கள

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
................................... ஜனநாயகத்தை உதட்டளவில் உச்சரித்து கொண்டிருக்கும் அனைத்து நாடுகளும்..... இன்னும் பல மும்பாய்களை உருவாக்க திரைமறைவில் செயற்பட்டுகொண்டிருப்பார்கள
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி

கடலால வந்து இறங்கித்தான் இதை செய்துகொண்டு இருக்கினமாம்

அப்படியென்றால்

இந்திய ராடரெல்லாம் ஸ்ரீலங்காவுக்கு கொடுத்தாச்சா

அல்லது

உண்மையில் ஸ்ரீலங்கா சொல்லுறமாதிரி

இவையின்ர ராடர் ஒன்றும் வேலைசெய்யவில்லையா????

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.