Jump to content

மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள்


Recommended Posts

ஈழநூல் 70

நூல்

மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள்

ஆசிரியர்

சு.வித்தியானந்தன் (பதிப்பாசிரியர்)

மின்னூலாக்கம்

இ. பத்மநாப ஐயர்

மின்பதிப்பு ஈழநூல்

மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள்

பதிப்பாசிரியர் கலாநிதி சு.வித்தியானந்தன்

இலங்கைக் கலைக்கழகத் தமிழ் நாடகக்குழு வெளியீடு

---------------------------------------------------.

ARTS COUNCIL TAMIL DRAMA

PANEL SERIES

Published under the authority

of the

Arts Council of Ceylon

GENRAL EDITOR

S.VITHIANANTHAN, M. A. ph. D.

Chairman, Tamil Drama Panel,

Arts Council of Ceylon

SECOND EDITION 1962

Price Re. 1.00

-------------------------------------------------

இந்நூலில்

தோற்றுவாய் பக்கம் 5

இரண்டாம் பதிப்புர ” 19

Introduction ” I-VI

கவிகள் ” 21-66

(அ). காதலன் கூற்றாய் உள்ளவை 21

(ஆ). காதலி கூற்றாய் உள்ளவை 41

(இ). தோழி கூற்றாய் உள்ளவை 57

(ஈ). தாயார் கூற்றாய் உள்ளவை 63

பொதுப்பாடல்கள் 67-74

தொழில்முறைப் பாடல்கள் 75-80

(அ). பொலிப் பாட்டு 75

(ஆ). ஏர்ப் பாட்டு 79

கொம்புவிளையாட்டுப் பாடல்கள் 81-82

இலங்கைக் கலழகத் தமிழ் நாடகக்குழு வெளியீடு 4.

இரண்டாம் பதிப்பு : கார்த்திகை 1962

எல்லா உரிமையும்

இலங்கைக் கலைக்கழகத்திற்கே.

கண்டி,

றோயல் அச்சகத்தில் அச்சிடப்பட்டது.

தோற்றுவாய்

இயற்கையோடு ஒட்டிவாழும் உள்ளத்தினையும் பண்பினையும் உடைய நாட்டு மக்களின் உணர்ச்சிiயையும் செயல்களையும் வெளியிடும் பாடல்களே நாட்டுப்பாடல்கள், நாடோடிப்பாடல்கள், பாமரப்பாடல்கள், வாய்மொழிப்பாடல்கள் என்றெல்லாம் பெயரிடப்படும் இப்பாடல்கள் பெரும்பான்மையும் எழுத்தறிவில்லாத நாட்டுப்புற மக்களிடையே வழங்கும் பலவிதப்பாடல்களைக் குறிக்கின்றன. மக்கள் வாழ்க்கையில் உள்ள செய்திகளை, அவர்கள் இன்பதுன்பங்களை, விளையாட்டு வேடிக்கைகளை உள்ள படியே எடுத்துக்காட்டுபன நாட்டுப்பாடல்கள்.

இவைபல ஆண்டுகளளாக தலைமுறை தலைமுறையாக வாய்மொழியாகவும் கேள்வி மூலமாக பொதுமக்களிடையே பயின்று வருகின்றன. காலத்துக்கு காலம் இடத்துக்கு இடம் பரவி, மாறியும் விரிந்தும் சுருங்கியும் வழங்கும் இப்பாடல்களை யார் எப்பொழுது இயற்றினனார் எனக்கூறமுடியாது. பாடலாசிரியர் யார் என கூற இயலாமை இவற்றின் இலக்கனங்களுள் ஒன்றாக அமைந்து விட்டது.

nhழிலாளர், குடிமக்கள், வேலைசெய்யும் பெண்கள் முதலியோர் தத்தம் வேலையினால் உண்டாகும் அலுப்பைப் போக்கி கொள்ளப்படும் பாடல்கள் ஒரு வகை; குழந்தைகளை தொட்டிலில் இட்டு தாழாட்டி நிலாக்காட்டி தலையையாட்டி தோழைவிசச் செய்து விளையாட்டுக்காட்டி தாய்மார் குழந்தையோடு குழந்தையாய் பாடும் தாளட்டுப்பாடல்கள். ஓருவகை; புத்தாண்டு பொங்கள் போன்ற விழாக்காலத்தில் மக்கள் ஒன்று கூடி ஆடிப்பாடி இசைக்கும் பாடல்கள் ஒருவகை; சில பிள்ளைகள் ஆடும் விளையாட்டுக்களிடையே பாடும் பாடல்கள் ஒருவகை. திருமணம் இழவு வீடு முதலியவற்றில் பாடும் பாடல்களும் ஒர் இனத்தவை. இவ்வாறு பலதுறைப்பட்டு நிற்கும் நாட்டுப் பாடல்களை பாரதியார்.

மானுடப் பெண்கள் வளரும் ஒரு காதலினால்

ஊனுருகப் பாடுவதிலூறிடுந் தேன்வாரியிலும்

ஏற்றநீர்ப் பாட்டினிசையினிலும் நெல்லிடிக்குங்

கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சு மொழியினிலும்

சுண்ணமிடிப்பார்தஞ் சுவைமிகுந்த பண்களிலும்

வட்டமிட்டுப பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்

கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்

எனத் தான் பாடிய குயிற்பாட்டிற் குறிப்பிடுகிறார்.

நாட்டுப் பாடல்களில் ஓசை இனிமையும் கருத்தழகும் மலிந்து கிடக்கின்றன. வயல்வெளியிலே நாற்றுநடும் பொதுமக்கள் பாடும் பாடல்களைக் கவனித்தால் இதன் உண்மை தெரியும். இசையுடன் நாற்று நடுகை நடைபெறுகின்றது. முறைமுறையாக யாவரும் பாடுகின்றர்.இயற்கையான சங்கீதக் கச்சேரி இங்கு நடைபெறுகின்றது. முறைமுறையாக யாவரும் பாடுகின்றனர் இயற்கையான சங்கீதகச்சேரி இங்கு நடைபெறுகின்றது. கச்சேரியை நடத்துபவர் நாற்றுநடுவோர். நாற்றும் நடும்போது தாளம் பிறக்கப்படும் அந்தசங்கிதம் ஒருகுறிப்பிட்டகலத்திற்குள் ஓர் இடத்திற்குள் சிறைப்படவில்லை அவர்கள்குனிந்து நாற்று நடும்போது உண்டாகும் அலுப்பை அந்தச் இனிய பாட்டு மறக்கச்செய்யிறது. அவர்கள் தொழிலுக்கு இன்பம் அளிக்கின்றன அவர்கள் பாடும் பாட்டுக்கள் அவர்களுக்கு உணவேதேவையில்லை முறைமுறையாக அவர்கள்பாடும் பாட்டுக்கள். அவர்களுக்கு இன்பத்தை கொடுக்கின்றன. ஓசை இனிமையிலும் கருத்தழகிலும் தம் உள்ளத்தைப் பறிகொடுத்து உவகைபொங்க தொழிலாற்றுகின்றனர்.

ஒரு விசயத்தைப் பலவகையாக திருப்பித் திருப்பிச்சொல்வது நாட்டுப்பாடல்களில் காணப்படும் ஒரு பண்பாகும். உதாரணமாகப் பின்வரும் பாடல்களை கொள்ளலாம். சின்னப்பு என்பவன் தன் மச்சாள் லட்சுமிமேற் காதல்கொண்டிருந்தது அவன் தாயாருக்கும் பிடிக்கவில்லை லட்சுமி வீட்டுக்குச் சென்ற சின்னப்புவின் வரவை எதிர்பார்த்திருந்து. அவன் வந்ததும்.

இவ்வளவும் எங்கிருந்தாய்

சின்னப்பு சின்னப்பு

இவ்வளவும் எங்கிருந்தாய்

சின்னப்பு சின்னப்பு

என்று கேட்டாள். அவள்

அழகவல்லி லட்சுமியோடு

நாள் முழுதும் இருந்தேன்

இவன் என்னை கவர்ந்துகொண்டாள்

அழகவல்லி லட்சுமி

என்று குசாமல் விடை அளித்தான்

சோறு கறி ஆக்குவாளா

சின்னப்பு சின்னப்பு

சோறு கறி ஆக்குவளா

ஏன் சின்னப்பு சின்னப்பு

என்று கேட்டால் தாய்.

ஒடியல்கூழ் காய்ச்சுவாள்

ஊழுத்தம் கழியும்ங் கிண்டுவாள்

அவள் என்னை கவர்ந்து கொண்டால்

அழகவல்லி லட்சுமி

அன்று மறுமொழிகூறினான் அவன்.

சீதனமும் கேளடா

சின்னப்பு சின்னப்பு

சீதனமும் கேளடா

என் சின்னப்பு சின்னப்பு

என்று தாய்.

வன்னிவயலும் பரந்தன்காடும்

சீதனமாய்த் தருகிறார்கள்

அவள் என்னை கவர்ந்துகொண்டாள்

அழகவல்லி லட்சுமி

என்று அவன் மறுமொழி கூறக்கேட்ட தாய் இவர்களுக்கு குறுக்கே நிற்கவிரும்பாது.

அப்படியே செய்யடா

சின்னப்பு சின்னப்பு

அப்படியே செய்யடா

என்சின்னப்பு சின்னப்பு

என்று சம்மதத்தைத் தெரிவித்தாள். இப்பாடல்களில் ஒரேவி~யம் திருப்பித் திருப்பிச் சொல்லப்படுவதைக் காணலாம். இது செந்தழிழ் இலக்கியத்தில் ஒருவேளை குற்றமாகலாம். ஆனால் நாட்டுப்பாடல்கள் இப்படி அமைந்திருப்பது அப்பாடல்களின் பண்புகளுள் ஒன்றாகும். எத்தனைதரம் திரும்பித் திரும்பிச் சொன்னாலும் சொல்பவனுக்கும் கேட்பவனுக்கும் இன்பமே உண்டாகின்றது. ஒரு வரியை இன்னொரு வரியில் திருப்பிச் சொல்லக்கூடிய முறையில் இவை அமைந்திருப்பதும் கவனித்தற்குரியது. இன்ன தென்றுசொல்லி விவரிக்கமுடியாத ஓசைநயம் பொதிந்துகிடக்கும் இப் பாடல்கள் மக்கள் உள்ளத்தைத் தம்பால் இழுக்கும் அரிய பண்பைப் பெற்றிருக்கின்றன.

கிராம மக்களின் உள்ளத் துடிப்புகளையும் உணர்ச்சிப் பெருக்குகளையும் வெளியிடும் இப்பாடல்கள் பேச்சுவழக்கிலுள்ள சொற்களையும் சொல்லுரவங்களையும் கொண்டு விளங்குவது இயல்பே.

புல்லைப் புடுங்கிவெச்சேன்

புறவளவைத் துத்துவெச்சேன்

அன்னப் பசுங்கிளியின்

அடியழகைப் பார்ப்பதற்கு.

தோற்றுவாய்

தேருவால போவெண்ணா

தேன்போல மணக்கிறது

உறவாட நான்வாறேன்-உன்ர

அண்ணன்மார் காவலாமே

என்ற பாடல்களில் இப்பண்பைப் பெரிதும் காணலாம்.

நாட்டுப் பாடல்களுக்குத் தொடக்கமுமில்லை, முடிவுமில்லை. அந்த அந்தக் காலத்துச் செய்திகளையும் முறைகளையும் அவை ஏற்றுக்கொள்ளும். ஈழத்திற் பறங்கியர் ஆங்கிலேயர் முதலியோர் ஆண்டதன் பயனாக அவருடைய பழக்க வழக்கம் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டும். அவர்கள் மொழியிலுள்ள சொற்களைக் கடன்வாங்கியும் பல நாட்டுப் பாடல்கள் எழுந்தன.

சிங்கிலிநோனா சிங்கிலிநோனா

சீப்புக் கொண்டைக்காரி

பார்த்தபேர்கள் ஆசைகொள்ளும்

பந்துக் கொண்டைக்காரி.

என்னபிடிக்கிறாய் அந்தோனி

எலிபிடிக்கிறேன் சிஞ்ஙோரே

பொத்திப்பொத்திப் பிடிஅந்தோனி

புறிக்கொண்டோடுது சிஞ்ஙோரே

போன்ற பாடல்கள் இவ்வகையாய் எழுந்தவையே.

இலக்கியத்திற்க்கும் நாட்டுப் பாடல்களுக்கும் குறிப்பிடத்தக்க வேற்றுமை உண்டு. இலக்கியங்கள் பெரும்பாலும் இலட்சிய வாழ்க்கையையே அடிபடபடைக் குறிக்கோளாகக் கொண்டவை. தமிழிலுள்ள காவியங்கள் பல அதர்மத்தின் அழிவையும் தர்மத்தின் வெற்றியையும் கூற எழுந்தவையே. இதனால் இலக்கியங்களுக்குத் தலைவராக அமைபவர் குற்றமே இல்லாதவராய்க் குணங்களுக்கு இருப்பிடமாய் படைக்கப்படுகின்றனர்.

எல்லாக் காவியங்களிலும் இத்தகைய குணம்படைத்த தலைவரையே நாம் காணுகின்றோம். இது உண்மையான வாழ்க்கைக்குப் பொருத்தமற்றதாக இருக்கின்றது.

இதற்கு மாறாக மனிதனின் குறைகுற்றங்களையும் சமூக ஊழல்களையும் உள்ளவாறே எடுத்து இயம்புகின்றன. நாட்டுப்பாடல்கள். கற்பின் சிறப்பை இலக்கியம் பாட, உலகில் மலிந்து கிடக்கும் கள்ளக்காதல் வாழ்க்கையை நாட்டுப் பாடல்கள் சித்திரிக்கின்றன. நாள்தோறும் வாழ்க்கையிற் காணப்படும் நிகழ்ச்சிகளைச் சுவைபடப் பாடும் நாட்டுப் பாடல்கள் ஆபாசங்களை வெட்ட வெளிச்சமாக உள்ளபடி கூறுகின்றன. ஆகவே, கல்வி, உருவம், ஒழுக்கம், வயது முதலியவற்றில் தம்மை ஒத்த ஆணையும் பெண்ணையும் காவியங்கள் பாட, எந்த விதத்திலும் ஒவ்வாத இருவர் வாழ்கை நடத்துவதைக் கேலி செய்து இயம்புகின்றன நாட்டுப்பாடல்கள்.

நடோடிப் பாடல்களில்வரும் பாத்திரங்கள் நெர்லுக்குற்றும் பொன்னி, நாற்று, நடும் சின்னாச்சி, வண்டியோட்டும் சின்னப்பு, ஏற்றம் மிதிக்கும் மாரிமுத்து, கஞ்சிகொண்டுவரும் வேலாயி, பொலிதுற்றும் சித்தி போன்றவர்களே. இவர்களுக்கு என்ன காதல், இவர்களைப்பற்றி என்ன பாடல் என்று நாடோடிப் பாவலன் ஒதுக்கிவிடகில்லை. அவன் பொன்னியின் காதலைப்பற்றிப் பாடுகின்றான், மாரிமுத்தனின் வீரத்தை விளம்புகின்றான், வேலாயியின் துக்கங்களை வியாக்கியானம் செய்கின்றான். இத்தகையோரைப் பாத்திரங்களாக வைத்துப் பாடிய பாடல்களிலேயே நாம் இலக்கியங்களிற் காணமுடியாத இன்பத்தை, உணர்ச்சிப் பெருக்கை, வாழ்க்கைப் பண்பைப் பார்க்கின்றோம். இதற்க்கு உதாரணமாகத் தெம்மாங்கு என அமைந்தது எனக் கூறுவர். வண்டியோடும் வண்டிக்காரன் சுப்புவும் வண்டி இழுக்கும் மாடுகளும் மயக்கும்படி பாடப்படும் அப்பாடல்கள் தேன்போலவே இனிக்கின்றன.

சின்னச்சின்ன வண்டிகட்டிச்

சேவலைமாடு ரெண்டுபூட்டி

வாழக்காய்ப் பாரம்ஏற்றி

வாருண்டி உன்புரு~ன்

மாடுமோ செத்தல்மாடு

மணலுமோ கும்பிமணல்

மாடிழுக்க மட்டாமல்

மாய்கிறாண்டி உன்புரு~ன்.

என்று பாடும்போது இவை கேட்போருடைய உள்ளத்தையும் பாடுவோர் உள்ளத்தையும் கவரகின்றன.

தமிழ் இலக்கியத்தில் அப்பொருள் இலக்கியம் காதலைப்பற்றிப்பாடுகின்றது. இத்தகைய இலக்கியத்திற்கு தமிழில் குறைவே இல்லை ஆயினும் இலக்கியத்தில் வரும் காதல் பெரும்பாலும் உலகில் நிகழ்வதன்று: நாடகவழக்கும் சேர்ந்தே அமைந்துள்ளது. ஆனால் நடோடி காதல்ப் பாடல்கள் காதல் உலகில் இயற்கையாக நடைபெறுவனவற்றை கூறுகின்றன. அதுவும் காதலன் காதலியைக் களவிற் கூடும்பகுதியே கூடுதலானது. காதலன் காதலியை தேடிவருதல், அவள் குறியிடம் கூறல், குறித்த இடத்தில் குறித்த காலத்தில் காணயியலாது. துத்தலித்தல் முதலிய பகுதிகள் உணர்ச்சிவாய்ந்தனவாக இருக்கும்.

அந்தி விடிந்து

சந்தையாற் போறமச்சான்

நேரத்துக்கு கோருடுப்பு

நெய்கிறதோ வாங்கிறதோ

மாசம் பதினாறு

வளவு நிறைந்தநிலா

சிற்றொழுங்கைக் குள்ளாலே - இரண்டு

செருப்பழுது பேகுதுகா.

சந்தன மரத்தைச்

சந்திக்க வேன்டும்மென்றால்

பூவலடிக்குப்

பொழுதுபட வாமயிலார்.

கடித்தநுளம்பு - நான்

கத்திருந்த முளையும்

அடித்தமழையும் -எனக்கொரு

ஆள்வேனும் சொல்லியழ

தாயாரும்மில்லை மச்சான்

தகப்பன் வெடிகாட்ட

அண்ணன் தினைக்காவல்- என்

ஆணிமுத்தே வாமயிலார்.

போன்ற பாடல்கள் நாட்டுப்பாடல்களின் அகப்பொருளை நன்கு விளக்க வல்லன.

நாடோடிப்பாடல்களுக்கு முன்னோடியாக பழைய தமிழ் இலக்கியத்துக்கு சில பகுதிகளைக்;காணலாம். இளங்கோவடிகள் பாடியசிலப்பதிகாரத்தில் அம்மனைவரிகந்துக வரி என்று வருபவை நாட்டுப் பெண்கள் அம்மானை ஆடும்போது பாடும் பாட்டுக்களை ஒத்திருக்கின்றன. மணிக்கவாசக சுவாமிகள் திருவாசகத்திற்பாடிய தோள் நோக்கம் சாழல் திருவுந்தி என்பன உருவத்திலும் ஓசையிலும் நாட்டுப்பாடல் உலகத்திற்குரியன. குறவஞ்சி, பள்ளு முதலிய இலக்கியவகைகளும் நாடோடி இலக்கியங்களே. பொதுமக்களுடைய வழ்க்கையையும் இன்ப துன்பங்களையும் படைத்துக்காட்டும் இப்பிரபந்தங்கள் நாட்டுப்பாடல் இலக்கியத்தைச் சேர்ந்தவையே.

தொல்காப்பியர் தமிழிலுள்ள செய்யுள் வகைகளைக் குறிப்பிடும்மிடத்து பண்ணத்திச்செய்யுள் என்ற ஒருவகை இலக்கியத்தையும் தருகின்றார்.

பாட்டிடைக் கலந்த பொருள் வாகிப்

பாட்டினியல பண்ணத்தி யியல்பே

( செய்யுளியல் 180 )

என்பது அதன் இலக்கணம்.

பழம்பாட்டினூடும் கலந்த பொருளே தனக்குப் பொருளாகப் பாட்டும் உரையும் போலச் செய்யப்படுவன பண்ணத்தி என உரை கூறுவார் பேராசிரியர். எழுதும் பயிற்சியில்லாத புறவுறுப்புப் பொருள்களை உடையது பண்ணத்தியென்றும் அதற்கு உதாரணமாக வஞ்சிப்பாட்டு, மோதிரப்பாட்டு, கடகண்டு முதலியவற்றைக் கொள்ளலாமென்றும் அவர் மேலும் கூறுவர். பண்ணத்தி என்று அக்காலத்தில் வழங்கியவையே நாட்டுப்பாடல்கள். எனவே நூல்வடிவில் இல்லாது வாய்மொழியாகப் பரம்பரை பரம்பரையாக வழங்கிவரும் நாட்டுப்பாடல்கள் அக்காலத்திலிருந்தே வந்தவை.

தொல்காப்பியர் காலத்திலிருந்து பாரதி காலம்வரை பள்ளு குறவஞ்சி ஏசல் சிந்து கும்மி முதலிய செய்யுள் வகைகளைப் புலவர் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். பாரதி பல இடங்களில் நாட்டுப் பாடல் மெட்டிற் பல பாடல்கள் இயற்றி உள்ளார். புயற்காற்று புதியகோணங்கி போன்ற பாடற்பகுதிகளில் வரும் பாடல்கள் இதற்குச்சன்றாகும் புயற் காற்றில்வரும்

காற்றடிக்குது கடல் குமுறுது

கண்ணை விழிப்பாய் நாயகநே

துற்றல் கதவு சாளர மெல்லாங்

தோலைத் தடிக்குது பள்ளியிலே

வானஞ் சிவந்தது வைய நடுங்குது

வாழி பராசக்கி காத்திடவே

தீனக் குழந்தைகள் துன்பப்படாதிங்கு

தேவி அருள் செய்ய வேண்டுகின்றோம்

என்னும் பாடல்களும் புதியகோணங்கி என்னும் பகுதியில் வரும்

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு

நல்லகாலம் வருகுது நல்லகாலம் வருகுது

சாதிகள் சேருது சண்டைகள் தொலையுது

செல்லடி சக்தி மாகாளீ

வேதபுரத்தாருக்கு நல்லகுறி சொல்லு

என்னும் பாடலும் போதிய எடுத்துக்காட்டுக்;களாம்.

ஈழ நாட்டிலே கிராமியக் கவிதை நலம் நிறைந்துள்ள பகுதி மட்டக்களப்பு. தேனுக்கும் பாலுக்கும் தழிழர் வீரத்திற்கும் பெயர் பெற்ற மட்டக்களப்பு மக்கள் கலைகளைபேணி வளர்பதிலும் தலைசிறந்து விளங்குகின்றது. உணர்ச்சி கவிதை நிறைந்த மட்டக்களப்பு நட்டுப் பாடல்கள் பல்வேறு துறைப்பாட்டு, நிறைந்து வழங்குகின்றன. கிழக்கிலங்கையின் மூலை முடுக்குகளிலும் வயல்வெளிகளிலும் வீடுகளிலும் வீதியிலும் உலவும் இப்பாடல்களை தொகுத்து வகைப்படுத்தி வெளியிடுவதில் ஒருவரும் பெரிது கவனம் செலுத்தவில்லை. இயற்கை வழ்வில் நின்று விலகி நிற்கும் நாகரிகத்தில் திளைத்து நிற்கும் பலருக்கு இப்பாடல்களின் அருமை தெரியாது. நாட்டுப்புற பாமரமக்களுக்கும் நகரமக்களுக்கும் வாழ்க்கை முறையிலும் உள்ளப்பாங்கிலும் வேறுபாடு வளர்ந்துகொண்டே வருவதனால்

பாமரமக்கள் பாடும் பாட்டை கேட்டு மகிழ்கிற மனநிலை படித்தமக்களைவிட்டு ஒரளவிற்கு நீங்கிவிட்டது என்று கூறலாம். நாட்டுப்பாடல்களை படுவோரின் தொகையும் நளுக்குநாள் குறைந்து கொண்டேவருகின்றது. நாளடைவில் நாட்டுப்பாடல்கள் மறைந்து விடக்கூடும்.

இந்நிலையை மாற்றி அமைக்கும் நோக்கத்துடநேயே இந்நு}ல் வெளியிடப்படுகின்றது. எமது நட்டில் பாமரமக்களே பெரும் பகுதியினர். அவர்களுடைய பாடல்களை பயிலுவதே தக்கவழி. இக்கவிகளை அவர்கள் நாள்தோறும் தாமேபாடித் தமேகேட்டு உள்ளத்தில் அமைத்து வளர்த்து வந்திருக்கின்றனர். அவர்களுடைய கவிதைப் பெருக்கிலே ஓசை இன்பத்தையும் தாளக்கட்டையும் சொல்லாட்சியையும் காணலாம். உணர்ச்சி பெருக்கொண்றை அடிப்படையாகக்கொண்டு இப்பாடல்கள் இயங்குகின்றன. உணர்ச்சியே இப்பாடல்களுக்கு உயிர் எனலாம்.

இத்தகைய உணர்ச்சிக் கவிதைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடநேயே இலங்கைக் கலைக்கழக நாடக நடனக்குழு இந் நூலை வெளியிடுகின்றது. கிராமியப்பாடல்களையும் கூத்துவகைகளையும பேணி வளர்ப்பது இக்குழுவின் முக்கிய நோக்கங்களுல் ஒன்றாகும். இப்பாடல்களை ஒன்றுசேர்த்துத்துறைப்படுத்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

42. மூணுநாள் மட்டிலேயும்

மூலையிலே ஓடுவெச்சி

சோளன் வறுத்து- என்ர

தோகை பசியாறினம்கா.

43. கொட்டை வறுத்துக்

கொண்டு வந்தேன் தட்டிலே

கொட்டுண்டு போச்சுதென்று

கூக்குரலும் சத்தமுமாம்.

44. முந்திரியம் பழமும்

மூணுவகை முட்டாசியும்

கல்கண்டும் தாறன்- நீ

கதவுதிற கண்மணியே.

45. கோடி உடுத்துக்

குளத்தோறம் போறபெண்ணே- உன்ர

கோடிப்புடவையிலே

கொக்கு ரத்தம் பட்டதென்ன.

இறைவன் ,

இந்த வரிகளை வாசித்தபோது .......

நெஞ்சு கனத்தது .

Link to comment
Share on other sites

49. ஆலையிலே சோலையிலே

ஆலம்பாடிச் சந்தையிலே

கிட்டிப்புள்ளும் பம்பரமும்

கிறுகிஅடிக்கப் பாலாறுபாலாறு.

கிட்டிப்புள் விளையாடியதை நினைத்துப் பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

"கிறுகி" என்றால் என்ன? கிழக்கின் பூர்விக குடிகளின் மொழி ......சுற்றுது.....என்பதின் கருத்து

Link to comment
Share on other sites

"பூவலைக் கிண்டி

புதுக்குடத்தைக் கிட்டவைச்சி

ஆரம் விழுந்தகிளி

அள்ளுதுகா நல்லதண்ணி.

. தண்ணிக் குடமெடுத்து

தனிவழியே போறபெண்ணே

தண்ணி குடத்தினுள்ளே

தளம்புதடி என்மனசு."

அட ஒரு அற்புதமான பகுதி இவ்வளவு நாளும் கண்ணில் படாமல் போய் விட்டதே.....

இயந்திர கதியில் மூச்சு முட்டும் வாழ்க்கை சூழலில் அற்புதமாய் இளைபாற ஒரு மர நிழல் கிடைத்தது போல் ஒரு அருமையான திரட்டு... திரட்டித் தந்த இறைவனுக்கு நன்றி....

(இறைவனுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும் இப்பூவுலகில் அழகுகளையும் அதை இரசிக்கும் கவிதை மனதை எமக்குள்ளும் படைத்ததனால்...)

"புல்லைப் புடுங்கிவெச்சேன்

புறவளவைத் துத்துவெச்சேன்

அன்னப் பசுங்கிளியின்

அடியழகைப் பார்ப்பதற்கு."

அவள் அடியழகே அவனுக்குள் உணர்வினை பற்ற வைக்கின்றதென்றால் அவள் அங்கங்களில் அங்கங்கே கண்வைப்பதில் தன் மனதை தொலைத்து விடமாட்டானா...

-மோகத்தைக் கொன்று விடு அல்லால் என் மூச்சை நிறுத்தி விடு - என்று பாரதியைக் கதற வைத்ததே...அவன் கவிஞன்

"கண்ணுக்கு மை தீட்டி

காலில் ஹீல்ஸ் வைத்து

வண்ண வண்ண நைலக்ஸை

வழியெல்லாம் நழுவவிட்டு

பற்பசைக்கு விளம்பரமாய்

பல்லெல்லாம் வெளிக்காட்டி.."

வரும் பெண்ணைப்பார்த்தால் ஆயாசம் வந்து மனதை அடைக்கின்றது...

கவிதைக் குளம் வற்றி

கரடு தட்டிப் போகின்றதே....

"சந்தன மரத்தை மச்சான்

சந்திக்க வேன்டுமென்றால்

பூவலடிக்கு மச்சான்

பொழுதுபட வந்திடுங்கோ.

கடப்படியில் வந்து நின்று

காளை கனைக்கும் மென்றால்

எங்கிருந்த போதும் நாகு

எழுந்துவர மாட்டாதோ"

சந்தனமரத்தை சந்திக்க வேண்டுமென்றால் ... உள்ளம் மணக்கத்தொடங்குகின்றதே காதலினால்...

பூப்பூக்கும் ஓசை காட்கும் மனது என்பது இது தான்....மழையில் நனைந்து ஒற்ரை நீர்த்துளியை ஏந்தி வைத்திருக்கும் பூவைக்கண்டதி உங்கள் மனது விகசித்து விரிவதைப்போல் உங்கள் காதலும் கண்முழித்துப்பார்க்கின்றதே..

.

கடப்படியில் வந்து நின்று

காளை கனைக்கும் மென்றால்

எங்கிருந்த போதும் நாகு

எழுந்துவர மாட்டாதோ...

இது இயற்கை ...காளையும் நாகுவும் ...காதலும் உலகம் எத்தனை அழகானது...

"புல்லுச் சவன்டிருக்கு

போனதடம் தானிருக்கு

தண்டை பதிந்திருக்கு- என்ர

தங்கவண்டார் போனதெங்கோ?

அக்கரையில் கொக்கே

அணில்கோதா மாம்பழமே

இக்கரைக்கு வந்தியண்டா-ஒரு

இனித்தகனி நான்தருவேன்."

புல்லுச் சவண்டிருக்கு .... புல்லுக்கு நோகா நடை..

இல்லாத இடை...அதன் குறை தெரியாது நெஞ்சில் நிரைத்து வைத்த சுமை...

படைத்தானே பிரம்ம தேவன்

பதினாறு வயதுக் கோலம்...

உலகம் அத்தனை அழகுடனேயே என்றும் இருக்கும்

மனிதனின் செயற்கைத் தனங்கள் பல்லிளித்து இளித்துத்

தன் கோர முகத்தைக் காட்டிச்செல்லும் கோரம் இன்னும் கூடும்..

வரும் காலச் சந்த்திகள் இழக்கப் போவது இவர்றைத்தான்...டிஜிட்டலில் கண்சிமிட்டப்போகும் உலகத்தில் வாழப்போகும் எம்சந்ததிக்கு இயற்கையின் புன் சிரிப்பை நினவு படுத்தப் போவது இவ்வழகுத் திரட்டல்களே..

இவற்றை நாளைய சந்ததிக்காக தொகுத்து வைப்பவர்கள் என்றும் போற்ரலுக்குரியவர்களே

இன்னும் நிறைய எழுத ஆசை ...அதாங்க கொட்டுது கவிதை..கவிதை..

ஆனாலும்,

."அக்கரையில் கொக்கே

அணில்கோதா மாம்பழமே

இக்கரைக்கு வந்தியண்டா-ஒரு

இனித்தகனி நான்தருவேன்"

இனித்த கனி இவன் என்ன கொடுப்பான்....

கற்பனையில் கரைந்து கொண்டிருக்கின்றேன்...

மனதெல்லாம் இறக்கை கட்டிக் கொண்டிருக்கின்றது....

-இறக்கை கட்டிப் பறக்கும் எல்லாள மஹாராஜா

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி இறைவன் இப்ப நாட்டுப்புற பாடல்கள் அழிவின் விளிம்பில் ஊசலாடுகின்றன.

முந்தியெல்லாம் நாட்டார் பாடல் 11ஆம் வகுப்புவரை இருக்கும் இப்ப அதையும் தூக்கி அந்தரத்தில்

விட்டதனால் ஆய்வு செய்துதான் இனி வருங் காலத்தில் நம் மூதாதையர் பாடல்களைத் தேட வேண்டியுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.