• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
நிலாமதி

அப்பா வருவாரா? .....அப்பா வருவாரா?

Recommended Posts

அப்பா வருவாரா?

வாழ்க்கையின் இன்னுமொருநாள் மெல்ல உதயமாயிற்று , நித்திலா எழுந்ந்து ,காலைக்கடன் முடித்து , அடுப்பை பற்றவைத்து ,பிள்ளைகளுக்கு ,தேனிர் தயாரிக்க ஆயத்தமானாள் .. நிகிலாவும் நித்தியனுமாக இரு பிள்ளைகளுடன் , புலம் பெயர்ந்து யாழ் நகரத்துக்கு வந்து இரண்டே மாதங்கள் . நிதிலாவும் கணவன் ராகவனும் ,பிழைப்பு தேடி ,ஈழத்தின் ஒரு தீவிலிருந்து வந்திருந்தார்கள் ,ராகவன் எற்கானவேஆட்களை வைத்து கடற்தொழில் செய்தவான், காரைநகர் நேவியின் அட்டகாசத்தால் ,தொழில் செய்யமுடியாத i நிலையால்.கெட்டும் பட்டணம் போ என்பதற்கிணங்க .இரு மாதங்களுக்கு முன் தான் வந்திருந்தனர்.

யாழ் கத்தோலிக்க தேவாலயம் அருகே ஒரு குடிசை கிடைத்து ,பிள்ளைகளையும் அருகிலிருக்கும் கன்னியர் மட பாடசலையில் சேர்த்துவிட்டு ,கணவன் மனைவி இருவரும் ,வேலை தேடி ,புறப்பட்டார் கள் ., கடைசியாக ஒரு முதியவர் இரங்கி ,ஒரு சைக்கில் கடையில் திருத்துனராக் ,வேலை கிடைத்தது. ராகவன் பள்ளி காலத்தில் ்வீட்டுக்கு அருகாமையில் இருந்த மணியம் சையிக்கில் கடையில் தனது ஓய்வு நேரத்தை செலவிட்டமை ,இப்பொது கை கொடுத்தது, கடந்த இரு வாரங்களாக அவன் வேலைக்கு செல்கிறான் , வீட்டிலும் ஏதோ குடுமபத்துக்கு ,அரை வயிறு உணவாவது கிடைக்கிறது ,போதும் என்ற மனம் கொண்ட அவர்கள் வாழ்வு இனிதே ஓடிக்கொண்டு இருந்தது. அதிகாலை ஆறு மணிக்கே ,வேலைக்கு செல்லும் அவன் போய்விட்டதும் எட்டு மணிக்கு பிள்ளைகளை அனுப்பிவிட்டு , அருகில் இருந்த வயதான மூதாட்டிக்கு ஏதும் சரீர உ தவி செய்து கொடுப்பாள்,அவவும் சமையலுக்கு தேவையான் பொருட்கள், சிறு பண மும் கொடுப்பார். இது அவளது படிப்பு செலவுக்கு உதவியது.

சிலசமயம் கடையில் அன்றாட தேவைக்கு பொருட்கள் கிடைக்கும் சிலசமயம் பொருட்கள் யானை விலை விற்கும் அன்றாடம் காய்ச்சியான அவர்கள் வாழ்வு, ஓரளவு ஓடிக்கொண்டு இருந்தது. ஒன்பது வயதேயான நிகிலாவும் ஆறுவயது நித்தியனும் நன்றாக படிப்பார்கள். வானில் வட்டமிடும் எதிரி வல்லூருகலுக்கும் , படையினரின் கெடுபிடிக்கும் மத்தியில் எங்கே விளையாட்டும்,பொழுது போக்கும், அருகில் உள்ள கன்னியர்மட கோவிலுக்கு சென்று வழிபாடுகளில் கலந்துகொள்வர், ஒரு நாள் ஒரு துறவி இவர்கள் துன்பத்தை கேட்டு ,பிள்ளைகளுக்கு வீட்டு பாடத்தில் உதவி செய்வதாக் சொன்னார் ,நிகிலா அமைதியானவள், நித்தியன் சற்று துடினம் சித்திரையில் பிறந்த உத்தம புத்திரன். அவனுக்கு எதிலும் வேகம், பிடிக்கும், ஒருநாள் சைக்கில் பழகி , விழுந்து காலில் காயப்படான், வைத்திய சாலைக்கு போகமுடியாத நிலையில் ,கன்னியர் மடத்தில் காயத்துக்கு கட்டு போட்டு ,முதலுதவி செய்தனர். இப்படியான ஒரு காலை பொழுதில் அவர்களது குடும்ப அமைதியை குழப்ப ஒரு சம்பவம் நடந்தது , வழக்கம் போல ராகவன் வேலைக்கு செல்லும் போது ,வெள்ளை வான் காரர், மறித்து விட்டனர் , தீவிலிருந்து ஏன் இங்கு வந்ததென்றும் ,சந்தேகம் இருப்பதாக கூ ட்டி சென்றவர்கள் விடவே இல்லை .

கடைக்கார முதியவரும் அன்று மதியம் வேலைக்கு வரவில்லை ,விரைவில் முடித்து கொடுக்கவேண்டிய வேலை உள்ளது என்று வீடு தேடி வந்த பின் தான் தெரிந்தது ,நித்திலாவுக்கு ,ராகவன் ,பிடிபட்டவிடயம். அவளும் எல்லா இடமும் தேடி அலைந்து ,வேண்டியவர்களுக்கு விண்ணப்பமும் கொடுத்து விடாள் . இன்னும் ராகவன் வரவேயில்லை. நித்தியனும் தந்தையின் அருகாமையில் படுப்பவன் ,அப்பா எப்ப வருவார் ?என்று கேட்டு ,களைத்து ,இப்போதெலாம் அப்பா வருவாரா ?என்கிறான். ஊரவர்களும் பல கதைகளை சொல்லி அவள்மனம் ,வேதனையில் ,துடிக்கிறது, அவன் வருவானா? எங்கேயிருக்கிறான் , ஏதும் , உடலம் கிடப்பதாக கேள்விப்பட்டால் ,சென்று பார்க்கிறாள் அது அவனாக இருக்ககூடாதென்று. அவன் வருவானா ? அப்பாவருவாரா ? .........எல்லாம் தெரிந்த அந்த ஆண்டவனுக்கு தான் புரியும். .

Edited by nillamathy

Share this post


Link to post
Share on other sites

உங்கள் கதையை வாசித்தேன், அங்கே.

இது கதை அல்ல நிஜம்...

இன்றய சூழலில் நடைபெறும் சாதாரணமான நிகழ்வாக மாறி வருகிறது...

இதற்கெல்லாம் எப்போதுதான் முற்றுப்புள்ளி வைக்கப்படுமோ...

நன்றி நிலாமதி அக்கா, தொடர்ந்து எழுதுங்கள் :o

Share this post


Link to post
Share on other sites

எம்மவர்களின் சோகம் எப்பதான் முடிவுக்கு வருமோ.........

Share this post


Link to post
Share on other sites

கதையல்ல நிஜம்

இன்னும் தேடி திரிபவர்கள் எத்தனையோ!!

வாழ்த்துக்கள் அக்கா

Share this post


Link to post
Share on other sites

நிஜத்தை கதையாக்கிய நிலாமதி அக்காவுக்கு நன்றிகள்...

Share this post


Link to post
Share on other sites

யாழ் கள நட்புகள்........ யசி.........கறுப்பி ....முனிவர்..........புத்தன் ,,,,,,,,,மல்லிகை வாசன் , மற்றும்

வாசித்த அனைவருக்கும் என் நன்றிகள்

Share this post


Link to post
Share on other sites

ஒரு செய்தி, சிறிய கதையாகும் போதே அது இந்தளவிற்கு மனதில் வேதனையை தருகின்றதென்றால், அந்த நிஜத்துடன் தினம் தினம் வாழும் அந்த குடும்பத்தின் வேதனை எவ்வளவு கொடியதாக இருக்கும். எம் சமூகத்தில் இப்படி எத்தனை ஆயிரம் குடும்பங்கள் கணவனை, மகனை, மகளை, தாயை, சகோதர சகோதரிகளை இழந்து தவிக்கின்றனர். இராணுவத்தால், கூலிப்படைகளால், எல்லா இயக்கங்களாலும் காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் துயரம் எம் வரலாறு முழுதும் ஒரு பெரும் சுமையாக தொடர்ந்து வருகின்றது. ஒருவர் செத்து போனபின் ஏற்படும் துயரை விட அவர் காணாமல் போனபின் ஏற்படும் துயரம்தான் பெரும் கொடிய துயரம்.

செய்தியினை கதையாக்கிய நிலாமதி அக்காவிற்கு நன்றிகள்

Edited by நிழலி

Share this post


Link to post
Share on other sites

நிலாமதி அக்கவுக்கு

எங்கள் வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளாகிப் போய்விட்ட சம்பவத்திலொன்றை சொல்லி நெஞ்சை கனக்க வைத்துவிட்டீர்கள்.....

இந்தச் சோகங்களுக்கெல்லாம் முடிவுகட்ட எங்கள் பங்கிற்கு நாங்கள் இங்கே முழுமூச்சுடன் நாட்டுக்காக உழைக்க வேண்டும்....

மக்கள் மனதில் விளிப்புணர்வை ஏற்படுத்தும் இப்படியான கதைகள் உங்களிடமிருந்து வரவேண்டும்....

வாழ்த்துக்கள்....

இளங்கவி

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • இந்தியா- அமெரிக்க ஆயுத ஒப்பந்தம் பிராந்தியத்தை மேலும் சீர்குலைக்கும் – பாகிஸ்தான் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஆயுத கொள்முதல் ஒப்பந்தம் இந்த பிராந்தியத்தை மேலும் சீர்குலைக்குமென பாகிஸ்தான் குற்றம்  சுமத்தியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முதல் முறையாக கடந்த 24ஆம் திகதி, அரசமுறை பயணமாக இந்தியா வந்தார். தனது இரண்டு நாள் சுற்றுப்பயணத்தின்போது டிரம்ப், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தனது பயணத்தின் இறுதி நாளான 25ஆம் திகதி பிரதமர் மோடிஈடிரம்ப் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது இந்தியாவுக்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போர் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட அதிநவீன பாதுகாப்பு உபகரணங்களை வழங்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் வழங்கினார். இந்த கொள்முதல் தொடர்பாக இரு நாட்டு தலைவர்களின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில்  இந்தியா- அமெரிக்கா இடையேயான ஆயுத கொள்முதல் ஒப்பந்தம் பிராந்தியத்தை மேலும் சீர்குலைக்கும் என பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஆயிஷா ஃபாரூகி கூறுகையில்,”ஏற்கனவே நிலையற்ற தன்மையில் உள்ள பிராந்தியத்தை அமெரிக்கா- இந்தியா இடையேயான இந்த ஒப்பந்தம் மேலும் சீர்குலைத்துவிடும். பாகிஸ்தான் மட்டுமல்லாமல் இந்த பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளிடையேவும் மிகவும் ஆக்ரோஷமான தன்மையை பின்பற்றும் இந்தியா குறித்து உலக நாடுகளுக்கு நாங்கள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளோம்” என்றார். http://athavannews.com/இந்தியா-அமெரிக்க-ஆயுத-ஒப/
  • குவைத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் – 43 பேர் பாதிப்பு! குவைத்தில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அத்தோடு இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஈரானுக்குச் சென்றவர்கள் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஹுபேயில் 65 ஆயிரத்திற்கும் க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்குள்ளாகியும், 2,600 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும்  பதிவாகியுள்ளது. அத்தோடு உலகளவில், இறப்பு எண்ணிக்கை சுமார் 2,800 அதிகரித்துள்ளதுடன், சுமார் 80,000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். http://athavannews.com/kuwait-has-43-confirmed-cases-of-coronavirus-health-ministry/
  • கொரோனா கொள்ளை நோயாக உருவெடுக்கும் சாத்தியம் – உலக சுகாதார ஸ்தாபனம்! கொரோனா வைரஸ் கொள்ளை நோயாக உருவெடுக்கும் சாத்தியம் உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் ஜிப்ரியிஸஸ் தெரிவித்துள்ளார். கொரோனா கிருமித்தொற்று நாட்டைப் பாதிக்காது என எந்த நாடும் தவறாக எண்ணக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதும் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார். குறிப்பாக, சீனாவுக்கு வெளியே இத்தாலியில் மேலும் 650 பேர் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. உலக நாடுகள் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினை எதிர்கொள்ளத் தயாராக இல்லை என உலக சுகாதார நிறுவன அவசரகாலச் சேவையின் இயக்குநர் ரிக் பிரென்னன் தெரிவித்துள்ளார். http://athavannews.com/கொரோனா-வைரஸ்-கொள்ளை-நோயா/
  • புனிதப் பயணிகளுக்கான விசா தற்காலிகமாக இரத்து! புனிதப் பயணிகளுக்கான விசா தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் பரவி வருவதால், யாத்திரிகர்களுக்கான விசாக்களை நிறுத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டதாக சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய உம்ராவுக்காக சவுதி அரேபியா செல்வதற்கும், புனித மதீனா செல்வதற்குமான அனுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஓர் ஆண்டில் ஒவ்வொரு மாதமும், உம்ரா செய்வதற்காக உலக நாடுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் சவுதி அரேபியாவின் மக்கா, மதீனா நகரங்களுக்குச் செல்வது வழக்கம். இதேவேளை, குவைத், பஹ்ரேன் ஆகிய வளைகுடா நாடுகளில் உள்ளவர்களும் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். http://athavannews.com/புனிதப்-பயணிகளுக்கான-விச/
  • பூமியை சுற்றும் குறுங்கோள் கண்டுபிடிப்பு! நிலவைப் போலவே பூமியை சுற்றி வரும் மற்றுமொரு கோளினை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஒரு கார் அளவே கொண்ட குறித்த குறுங்கோளை அமெரிக்காவின் நாசா உதவியுடன் செயல்படும் காடலினா ஸ்கை சர்வே அமைப்பின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ‘2020 சிடி3’ எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த குறுங்கோள், 3 ஆண்டுகளுக்கு முன்னர் புவி வட்டப் பாதையை அடைந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், குறித்த குறுங்கோள் பூமியை தற்காலிமாகவே சுற்றி வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே, ‘2006 ஆர்ஹெச்120’ என்ற குறுங்கோள் பூமியைச் சுற்றி வரும் நிலையில், தற்போது அதே போன்ற 2-ஆவது குறுங்கோள் கண்டறியப்பட்டுள்ளது. http://athavannews.com/பூமியை-சுற்றும்-குறுங்கோ/