• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நிலாமதி

"ஆச்சி"..........பேசுகிறார் .........

Recommended Posts

வணக்கம் மக்கள் ........எப்படி சுகமாய் இருகிறியளோ ? இரண்டு மூன்று நாளாய் இங்க யாழ் கள ஆண்களின்

ஆதிக்கம் (,தப்பு )செல்வாக்கு ,அது என்னவென்றால் கலியாணம் கட்டிய ,கட்டாத ஆண்களின் பிரச்சினையாம்.

நானும் பார்த்து பார்த்து இருந்துவிட்டு ,இன்றைக்கு பேச வெளிக்கிடேன். கல் எறிஞ்சு போடாதயுங்கோ

,அது தான் சிரிப்பு பக்கத்தில எழுதின நான் . வாசித்து ,சிரித்து,தேவையானதை எடுத்து தேவையிலாதாதை

விட்டு போட்டு போங்கோ .இஞ்ச சண்டைக்கு வாறதில்லை சொல்லி போட்டன், சரியோ ?

அந்த காலத்தில ஊரில பத்தும் பெற்று பெரு வாழ்வு வாழுரதில்லியோ ? இஞ்ச தான் புலம் பெயர்ந்த பின்

,ஆராச்சி நடக்குது. அந்த காலத்தில ,குடும்பம் நடத்த வில்லையா ?ஒரு டிவோசு ,செப்பரேட்,சிங்கள் மதர் ,

கேள்வி பட்டு இருபியளோ .ஏதும் ஒண்டு இரண்டு ஊருக்குள்ளை , இருந்தால் பெரிசுகள் ,பேசி சமாதானப்

படுத்தி போட்டு வந்திடுவினம். பிரிஞ்ச குடும்பத்தை சபையில சேராயினம். அது பாருங்கோ குடும்பம் எண்டுறது

, புரிஞ்சு கொள்ளுகிறது ,விட்டுக்கொடுக்கிறது, தான் .தாம்பத்தியம் எண்டுறது ஒரு சங்கீதம் எண்டு பாடுறியள் .

அப்படி தான் ஆரோகணம் அவரோகணம்,எல்லாம் குடும்பத்திலயும் இருக்கு .குடும்பத்தில "அந்த " நாடகம்

இரவில தான் இஞ்ச புலத்தில பட்ட பகலில கேட்கினமே .அதுவும் சரிதான் இரவெண்டும் பகலேண்டும்

ஷிபிட் என்றும்,அதுகளும் என்ன செய்யும்.....அவள் பிள்ளையும் பாவம், பிள்ளையள் , சமையல்,கொஞ்சம்

படிச்சிருந்தால் ,அல்லது வீடு கார் என்று இருந்தால் வேலைக்கும் போகவேண்டும் .அவனும் பாவம் தான் படிப்புக்கு

,வீடுக்கு,காருக்கு எண்டு ,இரண்டு மூண்டு ,என்று .ஓடித்திரிகிறான் . எல்லாம் இந்த புலம் பெய்ர் தோஷம் ஐயா

எதோ பார்த்து கீத்து வார விடுமுறையில வைச்சிருக்கலாம் தானே "அந்த " விஷயத்தை.

இந்த குட்டி சாத்தனுகள் இருக்கே ,அம்மா அப்பா படுக்கும் வரை இருப்பினம். பிறகு ஓஒடி வந்து

சாமத்தில நடுவுக்குள்ள படுக்கவேனுமாம். கட்டில் ஒரு பக்கம் தொட்டில் ஒரு பக்கம் போட தெரியவேணும்.

பொண்ணுங்களுக்கு பகலிலே சிக்னல்போட தெரியும் குளிச்சு கிழிச்சு ,படுக்கை அறையில் சீட்,தலையனை

உறை எல்லாம் தோச்சு கீச்சு, ஒரு வித்தியாசம் காட்டுவீனம் . பையன்கள் அவசரத்தில தொடங்கி ,அவசரத்தில

முடிச்சு போடுவீனம், பொண்ணுங்கள் கொஞ்சம் தாமதமாக தான். அது தான் பொண்ணுங்க புத்தி பின் புத்தி எண்டு

சொலுறீங்க.மற்றது தண்ணி விடயம், சிலபொன்னுக்களுக்கு அந்த வாசனையே பிடிக்காது .குடிகார அப்பன்

பிள்ளைகளுக்கு புரியும். கிட்டடியில ஒரு பொண்ணு சொல்கிறா ,அவ சமைக்க ,அவர் தண்ணியடியாம்.பின்

சாப்பிட்டு செற்றியில சரிந்து விடிய ஒரு மணி வரை நித்திரையாம். இவள் பாவி ,பிள்ளைகளை நித்திரையாக்கி

சட்டி பானை கழுவி , நைட்டி மாத்தி வர , ஐயா" டொங் "....பிறகு எப்படி குடியும் குடித்தனமும். மற்றது

பொண்ணுகளையும் கவனிக்கவேணும் ,ஒரு சாரி, ஒரு திருவிழா ஒரு படம் (தியட்டரில ) எண்டு ,

கூட்டி போகவேணும். வீட்ல படத்தை பாரு என்றால் முடிஞ்சுதா ? படம் காடுகினமாம் படம். என்ன

தான் சண்டை பிடிச்சாலும் படுக்கைக்கு போக முன்னம் சமாதானமாயிடுங்கோ / கோவிச்சு கொண்டு

படுக்க கூடாது . அவர் அயர்ந்து போனாலும் "என்னப்பா நித்திரையே " என்றால் எந்த ஆண் மகனுக்கும்

விழிப்பு வந்திடும். இது பொண்ணுங்களுக்கு மட்டும் . படுக்கையில பில்லு கட்டுற கதை, கடன் கதை

எல்லாம் சொல்ல கூடாது." என்னம்மா நித்திரையே "என்று முதுகில கை பட்டால் "அதுக்கு" என்று

பொண்ணுங்க புரியணும்.எல்லாம் ஒரு கொடுக்கல் வாங்கல் தான் . எதோ சொல்ல்லுரத்தை சொல்லிபோட்டன்

அங்கால் உங்க பாடு , நீயும் நானும் வாழ போவது கொஞ்ச காலம் அதை ஏன வீணாக்கி சண்டை பிடித்து

வாழவேண்டும் உயிரோட வாழ கொடுத்து வைச்சனீங்கள் வாழுங்கோ .சரி நேரமாகுது அப்பநான் போட்டு வரட்டே .....

தாம்பத்தியம் ஒரு சங்கீதம். ,புருஷன் மனைவி உறவு புனிதமானது , புரிந்து கொண்டு வாழ்வது இனிமையானது

என்று கூறி விடை பெறும் ............அக்கா நிலாமதி.

Edited by nillamathy

Share this post


Link to post
Share on other sites

இந்த அவசர உலகத்தில ஆச்ியின் உபதேசம் பிரயோசனமானதுதான். :lol: இருந்தலும் அப்பு குடுத்துவைச்சவர்தான் :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

நிலாமதி அக்கா இதனை சிரிப்பு பக்கத்தில போட்டு இருப்பதால் 'சீரியசான' விமர்சனம் செய்ய முடியாமல் போயிட்டுது... அல்லாட்டி ஒரு பிடி பிடித்து இருப்பன்.

Share this post


Link to post
Share on other sites

ஆச்சி அனுபவத்தை அனுபவிச்சுச் சொல்கிறார்!!!

Share this post


Link to post
Share on other sites

ஆச்சியின் பயனுள்ள குறிப்புக்கு நன்றி!! :)

Edited by Mallikai Vaasam

Share this post


Link to post
Share on other sites

அட ஆச்சி ஏதோ சொல்லியிருக்கா என்று பார்த்தா கடைசியில இது :) கிக்க்கீ :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

பொண்ணுங்களுக்கு பகலிலே சிக்னல்போட தெரியும் குளிச்சு கிழிச்சு ,படுக்கை அறையில் சீட்,தலையனை

உறை எல்லாம் தோச்சு கீச்சு, ஒரு வித்தியாசம் காட்டுவீனம் .

உந்த சிக்னல் போடுறதுக்கு போடாமலே இருக்கலாம். தோய்க்கிறது மாசத்துக்கு ஒரு தரம். இதில வியாக்கியானம் வேறயா??!! :(:)

:rolleyes:

Share this post


Link to post
Share on other sites

பொண்ணுங்களுக்கு பகலிலே சிக்னல்போட தெரியும் குளிச்சு கிழிச்சு ,படுக்கை அறையில் சீட்,தலையனை

உறை எல்லாம் தோச்சு கீச்சு, ஒரு வித்தியாசம் காட்டுவீனம் .

ஆச்சி சொல்லுறதை பாத்தால் , இனிமேல் தலையணை உறை தோய்க்க வெளிக்கிடேக்கை ,

நாங்கள் , முட்டை கோப்பி எல்லாம் வடிவாய் அடிச்சு , குடிச்சு தெம்பாய் இருக்க வேணும் போல கிடக்குது . :)

Share this post


Link to post
Share on other sites

ஆச்சி சொல்லுறதை பாத்தால் , இனிமேல் தலையணை உறை தோய்க்க வெளிக்கிடேக்கை ,

நாங்கள் , முட்டை கோப்பி எல்லாம் வடிவாய் அடிச்சு , குடிச்சு தெம்பாய் இருக்க வேணும் போல கிடக்குது . :wub:

அதுசரி.. கல்யாணங்கட்டின புதிசில டெய்லி தலாணி உறை தோய்ப்பினமோ??!! :blink:

Share this post


Link to post
Share on other sites

அதுசரி.. கல்யாணங்கட்டின புதிசில டெய்லி தலாணி உறை தோய்ப்பினமோ??!! :wub:

அதை ஆர் கவனிச்சது . காய்ஞ்ச மாடு கம்புலை விழுந்த மாதிரி ....... :blink:

Share this post


Link to post
Share on other sites

காய்ஞ்ச மாடு கம்புலை விழுந்த மாதிரி ....... :lol:

காய்ச மாடு எதுக்கு கம்பில்ல விழுது??? :lol::lol:

Share this post


Link to post
Share on other sites

காய்ச மாடு எதுக்கு கம்பில்ல விழுது??? :lol::lol:

கம்பு.. கம்பு.. அது ஒரு தானியம் பாருங்கோ..!! :lol:

Share this post


Link to post
Share on other sites

காய்ச மாடு எதுக்கு கம்பில்ல விழுது??? :lol::lol:

கம்பு வந்து ..... மாடு சாப்பிடுற ஒரு சாப்பாட்டு சாமான் . :lol:

Share this post


Link to post
Share on other sites

அதுசரி.. கல்யாணங்கட்டின புதிசில டெய்லி தலாணி உறை தோய்ப்பினமோ??!! :lol:

ஏன்?? :lol::lol:

Share this post


Link to post
Share on other sites

தாம்பத்தியம் ஒரு சங்கீதம். ,புருஷன் மனைவி உறவு புனிதமானது , புரிந்து கொண்டு வாழ்வது இனிமையானது

ரொம்ப சரி ஆமா அத ஏன் சங்கீதத்தொட ஒப்பிட்டனியல்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this