Jump to content

எங்களின் வலி புரிகிறதா...!


Recommended Posts

தமிழனாக பிறந்த ஒவ்வொருவரும் பார்க்க வேண்டியது..பாருங்கள் கவலைப்படுங்கள்....

முடியுமானால் அழுங்கள்..இதனை விட வெளியில் தெரியாமல் எவ்வளவோ விடையங்கள் இருக்கு..

இலங்கை முதல் உலகின் மூலை முடுக்கு வரை தமிழ்மக்கள் படும் கஸ்டங்கள் பலவருடங்களாக நீடித்துக்கொண்டு போகிறது...

இஸ்றேல் மக்கள் ஒரு காலத்தில் எவ்வளவு வேதனைகளை அனுபவபட்டு அப்படியே மனம் சோராமல் ஒரு வன்மமான ஒற்றுமையாக ஒரு முடிவு எடுத்து செயல்பட்டு தங்கள் சுதந்திரம் கிடைக்கப்பாடுபட்டு இப்போது அதன் பலனை அனுபவிக்கிறார்கள்...

அதே போன்று தமிழர்களும் மனம் சோராமல் இப்படியான வேதனைகளுக்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டுமானால் எமது தாயகத்தின் சுதந்திர வாழ்க்கையே நிரந்தர தீர்வு..

அதற்காக எல்லோரும் ஒன்றுபடுவோம் உறுதியாக எங்கிருந்தாலும் அதற்கான திசையில் செல்வோம்..

எமது மண் விடுதலையே இப்படியான அவலங்களுக்கு தீர்வு..யாரும் மறுக்க முடியாது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி விஜய் ரிவி, யுரியுப் மற்றும் சின்னக்குட்டி வலைப்பூ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலக நாடுகளுக்கு குடும்பமாக அல்லது உறவினர்களோட புலம்பெயர்ந்த நம்மவர்களில் பலர் கூட எம்மவரின் வலிகளை உணர முயல்வதும் இல்லை.. உணர்ந்தும் உதாசீனம் செய்வதை நான் என் வாழ்க்கையிலும் அனுபவித்திருக்கிறேன்.

ஒரு மாணவனாக புலம்பெயர் தேசத்துக்கு வந்து மிகவும் அந்நியப்பட்ட சூழலில் வாழ்ந்து இருக்கிறேன். எனக்குள் கூட அம்மா அப்பா ஊர் போன்ற ஏக்கங்கள் எழுவதுண்டு. அவ்வேளைகளில்.. பிற இனத்தவர்கள் எம்மை அரவணைத்து அழைத்துச் செல்ல முயன்ற அளவுக்கு எம்மோடு வலிந்து பழகிய எம்மவர்களோ எங்களுக்கு ஏமாற்றங்களையே பரிசளித்தனர். அவை தந்த வலிகளும்.. வேதனைகளும்.. மிக மோசமானவை.

எம்மவர்கள் கூட இவ்வாறான ஒரு பதிவைச் செய்ய முன்வராத நிலையில்.. விஜய் ரிவியின் முயற்சி பாராட்டப்பட வேண்டியதே.

தமிழ்நாட்டில் மட்டுமன்றி மேற்குலக நாடுகளில் கூட தனித்துவிடப்பட்ட சூழலில்.. தனிமைச்சிறைக்குள் கிடந்து உழலும் எம்மக்களின் உணர்வுகளும் வெளிக்கொணரப்பட வேண்டும். அதைச் செய்ய எம்மவர்களில் மற்றவர்களை விட முன்னேறிவிட்டோம்.. செற்றிலாகிவிட்டோம் என்ற திமிரில் வாழும் கூட்டத்தினர் அந்த ஆணவத்தைக் களைந்து தாம் கடந்து வந்த பாதையை கொஞ்சம் திரும்பிப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஊடகங்கள் உள்ளடங்க. :)

Link to comment
Share on other sites

அருமையான ஒரு நிகழ்ச்சி நெடுக்காலபோவன். இதுமாதிரி எங்கட ஆக்களிண்ட தொலைக்காட்சியிலையும் ஒரு நிகழ்ச்சி போறது எண்டு நினைக்கிறன். எந்த தொலைக்காட்சி எண்டு நினைவு இல்ல. அதை யாழில பார்த்தனா இல்லாட்டிக்கு வீட்டில பார்த்தனா எண்டு தெரிய இல்லை. பேட்டி காண்பவருக்கும், இந்த நிகழ்ச்சியை நாடத்துகின்ற குறிப்பிட்ட தொலைக்காட்சிக்கும் நாங்கள் நன்றி தெரிவிக்கவேணும்.

நாங்களும் இப்பிடி அழுத காலம் இருக்கிது. இந்த வலி அகதியாக அலைஞ்சபோதும், கொழும்பில இருந்தபோது மிகவும் அதிக அளவில இருந்திச்சிது. அகதியாக அலைஞ்ச காலத்தில யாழ்ப்பாணத்திலயே எங்கட ஆக்களே எங்களை திரும்பிப்பார்க்க இல்லை. நிம்மதியாய் இருக்க இடம் கிடைக்க இல்லை. ஒழுங்கான சாப்பாடு கிடைக்க இல்ல. கையில காசு இருக்க இல்ல.

Link to comment
Share on other sites

மிகவும் வேதனையான காட்சியாக தான் உள்ளது. தமிழ் நாட்டில் எத்தனை பேர் வீடு இன்றி வேலை இன்றி உள்ளார்கள். அப்படியான நாட்டில் அகதியாக போய் எதிர்பார்ப்பது என்பது அதிகம் தான்.வளர்ந்த நாடுகளில் கூட இதே வேதனையை தானே ஈழ தமிழர்கள் அனுபவிக்கிறார்கள். மொத்தத்தில் வேதனை தான்.

பேட்டி கண்டவர் உண்மையான அகதி முகாமுக்கு போனால் தெரியும் உண்மை நிலைமை.

இணைப்புக்கு நன்றி நெடுக்ஸ்.

Link to comment
Share on other sites

கிழக்கு மாகாணத்தில் மக்கள் படும் அவலம் எம்மில் பல பேர்க்கு தெரியாமல் உள்ளது. ஆயிரக்கணக்கில் விதவைகள். குடும்பத்தலைவர்களை விசேட அதிரடிபடையும், இராணுவமும் கொன்று தள்ள, பிள்ளைகளுடன் அன்றாட உணவிற்கே அல்லல் படும் பெண்கள். ஒரு இறாத்தல் பாணிற்கே வழியில்லாமல் பெண்கள் உடலை விற்ற விரக்தி தரும் நிகழ்வுகளும் நடைபெற்றன; நடக்கின்றன.

எண்பதுகளில் திருமலையில் இருந்து யாழுக்கு அகதிகளாக வந்தவர்கள் பிழைப்பிற்காக கச்சானை வறுத்து பக்கெட்டுகளில் அடைத்து யாழ் மக்களுக்கு விற்க முயற்சித்தார்கள். யாருமே வங்கவில்லை. ஆனால் ஐரோப்பாவிலும் கனடாவிலும் அகதிகளாக உள்ள தம் உறவுகளுக்கு பருத்தித்துறை வடை சுட்டு பக்கெட்டுகளில் அடைத்து அனுப்பிவைப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு பக்கம் சுவர் வளர்ந்து

நடுவில் நின்றதாலே - நான்

நலிந்து போனதாலே - அதில்

வலிந்து வந்த வார்த்தைகளை

வாய்க்கால் கட்டியதாலே,

வரிந்து வரிந்து கட்டியதால்

வரிகள் ஆனதாலே - அதில்

வழித்து; கழித்து

எடுத்த மிச்சம் கவிதையானதாலே

நான் கவிதையாளி ஆனேன்.

நெருப்புக்குயில்கள் - 98

இற்றைக்கு 16 வருடங்களுக்கு முன்பு தாயகத்தை விட்டு வரும்போது கவிதைகளை, கதைகளை வாசிக்கவும் இரசிக்கவும் மட்டுமே தெரிந்தவளாக இருந்தேன். எழுத்துத் துறையில் நுழைவேன் என்று கனவுகூடக் கண்டதில்லை. காலஓட்டத்தில் புலம்பெயர்வின் வலி பெருத்த வேதனைகளை எனக்குள் திணித்தபோது பேசி ஆறக்கூட நல்ல மனிதர்களை அடையாளம் காணமுடியாமல், வலிகளை உணரத் தெரிந்த பிற இனத்தவர்களுடன் பேச மொழியறிவு இல்லாமை எல்லாம் சேர்ந்து என்னை மண்மூடக் காத்திருந்தபோது.... பேசினால் மனவலி குறையும் என்பார்கள். ஆனால் நான் பேச முற்பட்ட மனிதர்களிடம் ஏளனமே அதிகம் தெறித்தது. மௌனமாகிப்போனேன். மீண்டும் எழுத்துக்களுடன் பேச முற்பட்டேன் எனக்கு ஆறுதல் தந்ததுடன் எனை ஒரு ஆளுமை மிக்கவளாக மாற்றியது.

புலம்பெயர்வு என்பது எல்லா வகையினருக்கும் வாழ்வு கொடுக்கவில்லை மாறாக வாழ்க்கையில் வார்த்தைகளுக்குள் அடங்காத பெரும் வலிகளை கொடுத்து மனோரீதியில் பெரும் பாதிப்புகளை தாராளமாக அள்ளித் தந்திருக்கிறது. என்ன நம்மவர்களுக்குள் தேங்கிக் கிடக்கும் வரட்டு கௌரவம் உள்ளம் வலிக்க உதடு சிரிக்கும் நிலமைகளை தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது. வாழ்விடம், உறவுகள், உரிமைகள், உணர்வுகள் என்று எல்லா வகையிலுமான இழப்புகளை இன்று ஈழத்தமிழினமே உலகில் அதிகமாக அனுபவிக்கிறது.

விஜய் ரிவியின் இப்பதிவை ஒரு ஆரம்பமாக எடுத்து புலம்பெயர்வின் வலிகளை எங்கள் ஊடகங்கள் வெளிக் கொணர வேண்டும்.

விஜய் ரிவிக்கும் இந்நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கியவருக்கும் மிகவும் நன்றி.

இணைப்பைத் தந்த நெடுக்கருக்கும் நன்றி உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த ஊரிலிருந்து அகதியாக இடம் பெயரும் போதே பிரச்சினைகளும் ஆரம்பமாகி விடுகின்றன .

அது தமிழ் நாடாக இருந்தால் என்ன ? , மேற்குலகாக இருந்தால் என்ன ?

இதில் எம்மவர்களின் ( பழைய காய் என்று ) எடுப்பு தான் , மற்றவர்களை விட மிகுந்த வேதனையை தரும் .

மற்றவர்களை விட , எம்மவர்களிடம் தான் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும் .

இந்த அருமையான நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்து , எமது துன்பத்தை வெளிக்கொணர்ந்த விஜய் தொலைக்காட்சிக்கும் ,

அதனை இங்கு இணைத்த நெடுக்ஸ்சிற்கும் நன்றி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

50க்கு மேற்பட்ட நாடுகளில் எம்மினம் சிதறுண்டு போய் இருக்கிறது . மண் விடுதலை தான் எம்மவர்களின் கவலைகளைத் தீர்க்க சிறந்த மருந்து.

Link to comment
Share on other sites

பார்த்து கவலைப்பட்டு மறப்பதற்கு இது ஒன்றும் சினிமாவல்ல?இது எம்மக்கள் உலகு முழுவதிலும் படும் துன்பங்களின் ஒரு சிறு துளி.. இதிலிருந்து நான், எனது என்ற வட்டத்திலிருந்து வெளிவந்து நாங்கள் எம்மக்கள் என்ற வட்டத்திற்கு வாருங்கள். எம்முன்னோர்கள் விட்ட தூர நோக்கில்லாத சிந்தனைகளால் இவ்வளவு பிரச்சனைகளும்..

இந்தியா சுதந்திரம் கிடைத்தபோது முஸ்லீம் மக்கள் எப்படி பாகிஸ்தானை தங்கள் மக்களின் நலன் கருதி உருவாக்கினார்களே அது போன்று சிங்களவனின் குணம் அறிந்து எமது வடக்குகிழக்கை ஒரு நாடாகவோ கடைசி ஒரு மானிலமாக பிரித்து எம் உரிமைகளை நிலைனாட்டி இருக்கவேண்டும்.. ஆனால் நடக்கவில்லை..இளிச்சவாய்களாக இருந்து நம்பிக்கை உரியவர்களாக தனது நலன் காத்தார்கள்...

சரியான வழியில் போன தந்தை செல்வா நம்பிடம் இல்லாமல் போய்விட்டார்?

கூட்டணியில் சிலர் ஈழம் மறந்து கொழும்பில் விருந்துக்களிள் மறந்து ஈழத்தை விற்றனர் சிங்களத்திடம்..

தற்போது நமது நம்பிக்கை ஒளி சரியான வழி எடுத்து நடத்துகிறார்.. ஆனல் எதிரி உலகம் முழுவதும் சென்று பயஙரவாதப்பூச்சான்டி காட்டி ஆயுதம் வாங்கி மக்களை அழித்து, மாவிலாறில் தொடங்கி இன்றுவரை எம்மக்களின் இருப்பிற்கு உயிருக்கு எதுவித உத்தரவாதம் இல்லாத சிங்கள அரச பயஙரவாதிற்கு எம்மக்களை இரையாக்கி கொண்டு இருக்கிறான்... எல்லவற்றிற்கும் தீர்வு எம்மண் மீட்பு.. எத்தனை தடைவரினும் மனம் சோராமல் அதற்கான உடன் நடவடிக்கைகளில் செயவதன் மூலம் எமது நீண்ட சோக வாழ்க்கைக்கு முடிவு கட்டலாம்,

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.  
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.