Jump to content

யாழ் இணையத்தில நான் அறிந்தவர்கள்/பழகியவர்கள் பற்றிய சிறுகுறிப்புக்கள்

Recommended Posts

நான் யாழில யாராவது எழுதுற ஒவ்வொரு கருத்தையும் அவர்களிண்ட Profile க்குப்போய் அடிக்கடி வாசிச்சு இருக்கிறன் எண்டால் அது அனிதாவிண்ட கருத்துக்களாகத்தான் இருக்கும். தமிழில எழுதுவது கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் அனிதா கஸ்டப்பட்டு ரெண்டு வசனத்தில எழுதுற கருத்க்களில எனக்கு ஈர்ப்பு அதிகம்.

பிரியசகி மூலம்தான் எனக்கு அனிதா அறிமுகம் ஆகினா. ஆரம்பத்தில “ஒண்டு சொன்னால் நீங்கள் கோவிக்கக்கூடாது சொல்லவோ” எண்டு கேட்டா. நானும் “என்ன சொல்லுங்கோ” எண்டு கேட்க தான் எனது ரசிகையாம். நான் யாழில எழுதுறதுகள் எல்லாத்தையும் வாசிப்பாவாம் எண்டு சொன்னா. பிறகு நான் சொன்னன் “நானும் ஒருவிசயம் சொல்லுவன் நீங்கள் கோவிக்கமாட்டீங்கள் தானே” எண்டு. “என்ன” எண்டு கேட்டா.. நானும் உங்களைமாதிரித்தான் நீங்கள் எழுதுற கருத்துக்களை எல்லாம் உங்கட Profileக்கு வந்து ஒண்டுவிடாமல் வாசிப்பன் எண்டு சொன்னன். அவவுக்கு அதைக்கேட்க பெரிய சிரிப்பு.

அனிதாவில எனக்கு பிடிச்சவிசயம் என்ன எண்டால் எப்பவும் சுறுசுறுப்பாக இருக்கிறது. தான் காலம்பற எழும்பினால் இரவுதான் படுக்கிறது இடையில தூங்குவது கிடையாது எண்டு சொல்லுவா. நான் எண்டால் ஒருநாளைக்கு பத்துத்தரம் படுக்கிறதும் எழும்பிறதும். சின்னனில இருந்து இப்பிடி பழக்கமா போயிட்டிது. தூங்கிவழியுறது கெட்டபழக்கம்தான் என்னசெய்யுறது?

அனிதாவில இருக்கிற எனக்கு பிடிக்காத விசயம் என்ன எண்டால் கோவம் எண்டு சொல்லலாம். தனக்கு சின்னக்கோபங்கள் வராது. வந்தால் எல்லாம் பெரிய கோவமாய்த்தான் வரும் எண்டு சொல்லுவா. அனிதா வளமுடன், மகிழ்வுடன் வாழ வாழ்த்துகள்!

எல்லாரையும் நல்லா அவதானிச்சு எழுதிருக்குறீங்க.....என்னையும் பற்றியும் எழுதிருக்குறீங்க.... நன்றி முரளி ! :wub:

நீங்க யாழுக்கு அறிமுகமான புதுசில் நான் யாழ்ல கொஞ்சம் எழுதுறது குறைவு.ஆனால் தொடந்து யாழ் வந்து வாசிக்கிறனான்.மாப்பிள்ளை எண்ட பெயரில் ரொம்ப கலகலப்பா எழுதுவீங்க ,சின்னப்பு ,டன் ,முகத்தார் அங்கிள், எழுதுறமாதிரி. சில நேரம் யோசிக்கிறனான்.இப்படி எல்லாம் என்னண்டு எழுதுறினம். எழுதுறதுக்கும் எங்கயும் பழக்கிட்டு வந்தினமோ எண்டு ஹிஹி .....

முந்தி நானும் பிரியசகியும் கதைக்கிறனாங்கள்.......இப்படி மாப்பிள்ளை எண்டு ஒருத்தர் யாழ்ல அந்த மாதிரி கலகலப்பா எழுதுறார் எண்டு. அதுக்கு பிறகு ,கூட யாழ்ல மினக்கெட்டு எழுதிறது.முந்தி மாப்பிள்ளை எழுதுற கருத்துக்களை தொடந்து வாசிக்கிறனான்.அவரிண்ட ரசிகை எண்டும் எல்லாருக்கும் சொல்லுவன்... ஆனால் மாப்பிள்ளை எண்ட பெயரில் எழுதினதுக்கும் இப்ப முரளி எண்ட பெயரில் எழுதுற கருத்துக்களுக்கும் கூட வித்தியாசம் மாதிரி தெரியுது.மாப்பிள்ளை எண்ட பெயரில் கலகலப்பா எழுதினீங்க... இப்ப முரளியில் கொஞ்சம் கோவாமா எல்லாம் எழுதுற போல இருக்கு . முரளிக்கு பதில் எழுதேக்க சில நேரம் எனக்கு பயமாவும் இருக்குறது. :wub:

முரளிட்ட நிறைய திறமைகள் இருக்கு .வித்தியாசமா யோசிச்சு கவிதைகள் எல்லாம் எழுதுவார்.எல்லாரும் சொன்னது போல் முந்தியப் போல உங்களுடைய சிறந்த படைப்புகளை எதிர்பார்க்கிறம். :wub:

உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி......! நீங்களும் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.! :wub:

Link to comment
Share on other sites

  • Replies 183
  • Created
  • Last Reply

இன்னுமொருவன்:

.........................................

கனிவான வார்த்தைகளிற்கு நன்றி கலைஞன்.

"ஒரு படைப்பு பரந்தளவில் மக்களைச் சென்றடையவேண்டுமெனின் அது சனரஞ்சகமானதாய் அமைதல் அவசியம்" என்று தேசியத்தலைவர் ஒரு சந்தர்ப்பத்தில் கூறி இருந்தாராம். யாழில் எந்த விடயத்தையும் சனரஞ்சகமானதாய் எழுதுவதில் கலைஞனிற்கு நிகராய் அதிகம் பேரை எண்ணமுடியவில்லை. வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

"அகத்தின் அதிர்வுகள்" ஐ மட்டும்தான் வலைப்பதிவில் எழுத விருப்பம். பல காலமாக அகம் அதிரவில்லை! இன்னும் நிறையக் காலம் இருக்கின்றது.. ஆறுதலாகப் பதியலாம்தானே..

அட கிருபனுக்கு இன்னும் அகம் அதிரத்துவங்க இல்லையோ? சரி அகம் அதிரத்துவங்கினாப்பிறகு உங்கள் படைப்பை ஆரம்பியுங்கோ. :rolleyes:

எல்லாரையும் நல்லா அவதானிச்சு எழுதிருக்குறீங்க.....என்னையும் பற்றியும் எழுதிருக்குறீங்க.... நன்றி முரளி ! :lol:

நீங்க யாழுக்கு அறிமுகமான புதுசில் நான் யாழ்ல கொஞ்சம் எழுதுறது குறைவு.ஆனால் தொடந்து யாழ் வந்து வாசிக்கிறனான்.மாப்பிள்ளை எண்ட பெயரில் ரொம்ப கலகலப்பா எழுதுவீங்க ,சின்னப்பு ,டன் ,முகத்தார் அங்கிள், எழுதுறமாதிரி. சில நேரம் யோசிக்கிறனான்.இப்படி எல்லாம் என்னண்டு எழுதுறினம். எழுதுறதுக்கும் எங்கயும் பழக்கிட்டு வந்தினமோ எண்டு ஹிஹி .....

முந்தி நானும் பிரியசகியும் கதைக்கிறனாங்கள்.......இப்படி மாப்பிள்ளை எண்டு ஒருத்தர் யாழ்ல அந்த மாதிரி கலகலப்பா எழுதுறார் எண்டு. அதுக்கு பிறகு ,கூட யாழ்ல மினக்கெட்டு எழுதிறது.முந்தி மாப்பிள்ளை எழுதுற கருத்துக்களை தொடந்து வாசிக்கிறனான்.அவரிண்ட ரசிகை எண்டும் எல்லாருக்கும் சொல்லுவன்... ஆனால் மாப்பிள்ளை எண்ட பெயரில் எழுதினதுக்கும் இப்ப முரளி எண்ட பெயரில் எழுதுற கருத்துக்களுக்கும் கூட வித்தியாசம் மாதிரி தெரியுது.மாப்பிள்ளை எண்ட பெயரில் கலகலப்பா எழுதினீங்க... இப்ப முரளியில் கொஞ்சம் கோவாமா எல்லாம் எழுதுற போல இருக்கு . முரளிக்கு பதில் எழுதேக்க சில நேரம் எனக்கு பயமாவும் இருக்குறது. :wub:

முரளிட்ட நிறைய திறமைகள் இருக்கு .வித்தியாசமா யோசிச்சு கவிதைகள் எல்லாம் எழுதுவார்.எல்லாரும் சொன்னது போல் முந்தியப் போல உங்களுடைய சிறந்த படைப்புகளை எதிர்பார்க்கிறம். :lol:

உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி......! நீங்களும் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.! :)

எண்ட ரசிகையிட்ட இருந்து வந்த கருத்தை வாசிக்க நல்ல சந்தோசமாய் இருக்கிது. நீங்கள் முந்தி இப்பிடி எண்ட ரசிகை எண்டு சொன்னாப்பிறகு உங்களுக்காக எண்டே, உங்களை மகிழ்விக்க எண்டே நான் நிறைய ஆக்கங்கள் படைச்சு இருக்கிறன். சரி நான் இனி நீங்கள் பயப்படும்படியா கோவமா ஒண்டும் எழுத இல்லை. பயப்படாமல் பதில் கருத்து எழுதுங்கோ. நன்றி அனிதா!

கனிவான வார்த்தைகளிற்கு நன்றி கலைஞன்.

"ஒரு படைப்பு பரந்தளவில் மக்களைச் சென்றடையவேண்டுமெனின் அது சனரஞ்சகமானதாய் அமைதல் அவசியம்" என்று தேசியத்தலைவர் ஒரு சந்தர்ப்பத்தில் கூறி இருந்தாராம். யாழில் எந்த விடயத்தையும் சனரஞ்சகமானதாய் எழுதுவதில் கலைஞனிற்கு நிகராய் அதிகம் பேரை எண்ணமுடியவில்லை. வாழ்த்துக்கள்.

கனகாலத்துக்கு பிறகு உங்களை கண்டது சந்தோசம் இன்னுமொருவன். வாழ்த்துகளுக்கு நன்றி இன்னுமொருவன்!

Link to comment
Share on other sites

விதுஷா:

விதுஷாவுடன் கருத்தாடல்கள் செய்து இருக்கிறன். இப்ப நினைவில இருக்கிறது ஒரே ஒரு விசயம்தான். அது ஒரு பகிடி. அது என்ன எண்டால் அண்மையில ஒருவர் யாழில இணைஞ்சு இருந்தார். அதில அவர் தலைப்பாக நான் கனடாவில வந்து இருக்கிறன் எண்டு சொல்லி இருந்தார். அதுக்கு பதில் எழுதி இருந்த வல்வை அண்ணா “அப்படியா? அங்கு சரியான குளிராமே?” எண்டு கேட்டு எழுதி இருந்தார். வல்வை அண்ணா கனடாவிலதானே இருக்கிறார். எனக்கு அதை வாசிக்க சிரிப்பாய் இருந்திச்சிது. அப்ப நானும் பகிடியாக வல்வை அண்ணா எழுதினதுக்கு கீழ “ஆமாம் எனது நண்பர் ஒருவரும் கனடாவில இருக்கிறார். அங்க குளிருக்கு ஹீட்டர் எண்டு ஏதோ எல்லாம் பாவிப்பீனமாம். சினோ எல்லாம் கொட்டுமாம்” எண்டு மடல் அனுப்பி இருந்தார் எண்டு எழுதி இருந்தார்... இப்பிடி அப்பாவித்தனமாக எழுதி இருந்தன்.

கனடாவில இருக்கிற விதுஷாவுக்கு தெரியும் நாங்கள் எல்லாரும் கனடாவில இருக்கிற விசயம். அவ இதப்பாத்துப்போட்டு... “அடப்பாவிகளா கனடாவில அவ்வளவு குளிரா? அப்பிடி எண்டால் நாங்கள் தாயகத்திலேயே இருந்து இருக்கலாமே” எண்டு கருத்து எழுதி இருந்தா. எனக்கு சிரிப்பாக இருந்திச்சிது. விதுஷாவை எனக்கு தனிப்பட பழக்கம் இல்லை. வளமுடன் வாழ வாழ்த்துகள்!

__________________

என்னங்க முரளிமாமா என்னை எல்லாருக்கும் முன்னாலை இப்படி கேவலப்படுத்திட்டீங்க!

இருந்தாலும் இந்த சின்னப் புள்ளையையும் ஞாபகமாக வைத்திருங்கீங்க என்று நினைக்கும்போது எனக்கு புல்லரிக்குது மாமா.

உங்க கட்டுரை நல்லாயிருக்கெங்கோ, பாராட்டுக்கள் மாமா, தொடருங்கோ!

ஒன்றுகூடலிலை உங்களோடை சேர்ந்து பாடுறதை நினைக்கும்போது சந்தோசமாக இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முரளி

ஏதேனும் எலக்சனில நிக்கிற நோக்கமே.

எல்லாருக்கும் ஐசை கூடை கூடையா வைக்கிறீர்?

சரி, எல்லார பற்றியும் சொல்லுறீர் உம்மை பற்றி ஒரு சிறு குறிப்பு.

St Jhons எனும் உமது/எமது கல்லூரி பற்ரிய பதிவும். எங்கட ஊரில டீச்சர்மார் வாத்திமார் பிள்ளையளை போட்டு பின்னுறதை பற்றியும் நீர் எழுதிய பதிவும் எனக்கு பிடித்தவை. அதில உமது முற்ப்போக்கு சிந்தனையை காணக்கூடியதாயிருந்தது.

படிப்பு முடிச்சுதாம்? வாழ்த்துக்கள். நல்ல வேலையாய் பார்த்து எடுத்து கொண்டு செட்டிலாகும். யாழில வந்து நேரம் போக்காம. சும்மா தமாசுதான்.

நன்றி மருமகள். ஒன்றுகூடலுக்கு வாங்கோ வாங்கோ. ரெண்டுபேருமா சேர்ந்து பாட்டுக்கள் பாடி வாறமிச்ச ஆக்களை அழவைப்பம்.

:)

முரளி

ஏதேனும் எலக்சனில நிக்கிற நோக்கமே.

எல்லாருக்கும் ஐசை கூடை கூடையா வைக்கிறீர்?

சரி, எல்லார பற்றியும் சொல்லுறீர் உம்மை பற்றி ஒரு சிறு குறிப்பு.

St Jhons எனும் உமது/எமது கல்லூரி பற்ரிய பதிவும். எங்கட ஊரில டீச்சர்மார் வாத்திமார் பிள்ளையளை போட்டு பின்னுறதை பற்றியும் நீர் எழுதிய பதிவும் எனக்கு பிடித்தவை. அதில உமது முற்ப்போக்கு சிந்தனையை காணக்கூடியதாயிருந்தது.

படிப்பு முடிச்சுதாம்? வாழ்த்துக்கள். நல்ல வேலையாய் பார்த்து எடுத்து கொண்டு செட்டிலாகும். யாழில வந்து நேரம் போக்காம. சும்மா தமாசுதான்.

எப்பிடி சுகங்கள் தமிழன்? கனகாலத்துக்கு பிறகு உங்களை கண்டது சந்தோசம். நீங்கள் யாழில அதிக ஓட்டங்கள் அடித்திராதபடியால் (கருத்துக்கள் எழுதாதபடியால்) இறங்குவரிசையில விபரிச்சுக்கொண்டு போகேக்க தவறவிடப்பட்டு விட்டீர்கள். மன்னிச்சுக்கொள்ளுங்கோ.

கிகி. தேர்தலில ஒண்டும் இப்போதைக்கு நிக்கிற யோசனை இல்ல. உங்களுக்காக ஒரு பாடல் கேட்டு மகிழுங்கோ. அடிக்கடி வந்து போங்கோ. நன்றி! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் குருஜி!!! இப்ப இரு நாட்களாக இந்த கட்டுரையில் அமிழ்ந்து கரைந்துபோய் இருக்கிறன். அடேயப்பா எல்லோரைப் பற்றியும் எவ்வளவு நயமாகவும் அழகாகவும் பதிவு செய்து இருக்கிறீங்கள். மிகவும் பொறுமையாகவும் சுவாரசியமாகவும் வாசித்தேன். காற்றானது எல்லா மரங்களையும் வருடியும், ஆசைத்தும், ஊடறுத்தும் செல்வதுபோல் களத்தில் எல்லோருடனும் கதைபேசிக்கொண்டு வாழ்ந்து வருகின்றீர்கள். உங்கள் ஞாபகச் சுழலில் எனக்கும் ஓர் இடம் தந்ததையிட்டு மெத்த மகிழ்ச்சி.

இந்த அரசாங்கங்களே ஒன்டுக்கு அப்புறம் இரண்டாவது தேர்தலை நடாத்தத் தடுமாறும்போது நீங்கள் இந்தக் களத்திலேதான் எத்தனை எத்தனை விதமான தேர்தல்களை வெற்றிகரமாக நடாத்தி முடித்திருக்கின்றீர்கள்! செல்வன் போன்று எவ்வளவு ஆக்கங்கள், எத்தனை காலக் கண்ணாடிகள்.... எத்தனை பக்திப் பாடல்கள்!!!!!

நீங்கள் எல்லா வளமும் பெற்று நீண்டகாலம் நலமுடன் வாழவேண்டும் என வாழ்த்துகின்றேன்!!!

Link to comment
Share on other sites

நெல்லையன்:

ஊர்ப்புதினம் பகுதியில அதிகம் மினக்கடுவார். தாயகம் சம்மந்தமாக பல்வேறு விசயங்களை அறிஞ்சவர் – கொஞ்சம் விபரமான ஆள் எண்டு இவரது கருத்துக்களை வாசிச்சு அறிஞ்சுகொண்டன். ஊர்ப்புதினம் பகுதியில காரசாரமாக எழுதுற ஆக்களில முக்கியமான ஒருத்தர். நெல்லையனை தனிப்பட தெரியாது. பல கருத்தாடல்களில நெல்லையனுடன் கலந்து இருக்கிறன். வாழ்த்துகள்!

வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..... கொண்ணுட்டீங்க.... நன்றிங்க....

அதென்ன

தாயகம் சம்மந்தமாக பல்வேறு விசயங்களை அறிஞ்சவர் – கொஞ்சம் விபரமான ஆள் எண்டு இவரது கருத்துக்களை வாசிச்சு அறிஞ்சுகொண்டன்.

சிம்பிள்!!.......... உதெல்லாம் யாழிலும், மற்றதுகளிலும் பூறிஸ் விடுகிறவைகளும், பப்பரப்பாக ரிஷி சொல்லுறவைகளிடமிருந்து பொறுக்கியதுதான்!!! என்ன ஏதும் எழுதும்போது 55, 53, 52ம் படையணிகள் என்று இடையிடையேயும், கேணல், மேஜர், லெப்ரினட் கேணல், ... என்றும் இடையிடையேயும் இழுத்து விட வேண்டும்!!! எல்லாவற்றுக்கும் மேலாக ஏதாவது ஒன்று கிடைத்தால் கற்பனா சக்தியுடன் தலை, கால், கை, .... என்று நீட்டினால் விபரமானவராக வந்திடலாம்!!! இது பொய்யாயின் குறுக்ஸை கேளுங்கள்!!!!!!!!

எல்லாவற்றுக்கும் மேலாக முரளி உமக்கு எனது வாழ்த்துக்கள்!!! எவ்வாறு அனைவரையும் ஞாபகத்தில் ....????? ஏறக்குறைய 7,8 வருடமாக யாழ்கள உறுப்பினராக இருக்கிறேன்!! எனக்கு நினைவில் இருப்பவர்கள் என்றால் "மதிவதனன்(தாத்தா), வசம்பர், வானம்பாடி, இவர்களுடன் குறுக்ஸ்".

Link to comment
Share on other sites

டங்குவார்:

டங்குவார் பற்றி நிறைய விசயங்கள் சொல்லலாம். கவிதை, பாடல், இசையமைப்பு, பொறியியல், தொழில்நுட்பம் எண்டு நிறைய விளையாட்டுக்களில நிபுணத்துவம் பெற்றவர். இவரது பதிவுகளை பார்த்தபோது வாழ்க்கையில மிகவும் அடிபட்டு கஸ்டப்பட்டு முன்னேறியவர் எண்டு தெரியுது.

யாழில நகைச்சுவையுடன் கருத்து எழுதுகின்ற ஆக்களில முக்கியமான ஒருத்தர். சிலது நகைச்சுவை கொஞ்சம் பச்சையாகவும் வரும். டங்குவாரிண்ட யாழ் அரிச்சுவடி அறிமுகம் மிகவும் நகைச்சுவையானது. பிறகு நேரம் இருக்கேக்க போய் வாசிச்சு பாருங்கோ. நான் முந்தி அதை வாசிச்சு இருக்கிறன்.

எங்க கனடாவுக்கதானே இருக்கிறார். ஒரு நாளைக்கு டங்குவாரை சந்திப்பேன் எண்டு நினைக்கிறன். டங்குவார் நிறைவுடன் வாழ வாழ்த்துகள்!

கட்டி அந்தல்ல தொங்க விடுற என்னயும் ஒரு ஆளா மதிச்சி கருத்து எழுதினதுக்கு நன்றி மாப்பிளை.. விசயங்களை நல்ல உன்னிப்பாத்தான் கவனிக்கிறியள். கஸ்டப்பட்டு முன்னுக்கு(?? :unsure: ) வந்தன் எண்டிறது சரிதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடியேனின் படைப்புக்களை படித்து ஊக்கம் தரும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

தொடரட்டும் ......வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன என்ர பேரை காணல...நானும் பாவம் தானே..என்னை பற்றி நல்லயர் புகழ்ந்து எழுதுங்கோ அது தான் எனக்கு பிடிக்கும்...நான் ஒரு புகழ் விரும்பி தலைவர் முரளி அண்ணா..உங்கட கால் இப்ப மேலையோகீ....யோ... :(:(

Link to comment
Share on other sites

செருக்கால் குறுக்கால் கேட்பின்.. பதில் வராதென்று நினைக்கிறேன். :(

Link to comment
Share on other sites

தேடிப்பார்த்தன். காண இல்லையே. அந்த இணைப்பை ஒருக்கால் தாங்கோ. பேட்டி விமர்சனம் இருக்கிது ஒழிய பேட்டியை காண இல்லை.

நானும் தேடிப்பார்த்தன் காண இல்லையே. ஆனால் சில பதிவுகள் விமர்சனபகுதியில சேர்த்திருக்கு..ஜம்முவைத்தான

் கேக்கனும் என்ன நடந்ததுன்னு. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன என்ர பேரை காணல...நானும் பாவம் தானே..என்னை பற்றி நல்லயர் புகழ்ந்து எழுதுங்கோ அது தான் எனக்கு பிடிக்கும்...நான் ஒரு புகழ் விரும்பி தலைவர் முரளி அண்ணா..உங்கட கால் இப்ப மேலையோகீ....யோ... :(:(

லொள்ளு தாங்க முடியல :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியு மேன்! குருஜி தற்சமயம் சிரசாசனம் செய்து கொண்டிருப்பதால் அனேகமாக சுவரிலதான் இருக்கும்!!!

Link to comment
Share on other sites

....... மாப்பு இந்தப்பனங்காய் செய்த அநியாயத்தாலதான் ஆதி கனகாலம் யாழுக்கு வாறதை நிற்பாட்டினான் தெரியுமோ?

அதைத் தேடி எழுதி ஆதியின் மானத்தை வாங்கிறது சரியில்லை சொல்லிப்போட்டன். அடுத்தது அவா..... வி..மலமக்கா...

ஆக ஆதியை அலற அடிச்ச சம்பவங்கள்தான் மாப்புக்கு ஞாபகம் வருமோ? :wub::):lol:

Link to comment
Share on other sites

கட்டி அந்தல்ல தொங்க விடுற என்னயும் ஒரு ஆளா மதிச்சி கருத்து எழுதினதுக்கு நன்றி மாப்பிளை.. விசயங்களை நல்ல உன்னிப்பாத்தான் கவனிக்கிறியள். கஸ்டப்பட்டு முன்னுக்கு(?? :( ) வந்தன் எண்டிறது சரிதான்.

நன்றி டங்குவார். அப்ப கஸ்டப்பட்டும் நீங்கள் முன்னுக்கு வரமுடியவில்லையோ? நானும் உங்களைமாதிரித்தான்.

அடியேனின் படைப்புக்களை படித்து ஊக்கம் தரும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

தொடரட்டும் ......வாழ்த்துகள்

நன்றி புத்தன். எங்க கொஞ்ச நாளாய் உங்களை காண இல்லை. இன்னும் நாலைஞ்சு ரீமிக்ஸ்ஸை இறக்கிவிடுங்கோ. பாரதியாரிண்ட காணிநிலம் வேண்டும் சூப்பர். :wub:

என்ன என்ர பேரை காணல...நானும் பாவம் தானே..என்னை பற்றி நல்லயர் புகழ்ந்து எழுதுங்கோ அது தான் எனக்கு பிடிக்கும்...நான் ஒரு புகழ் விரும்பி தலைவர் முரளி அண்ணா..உங்கட கால் இப்ப மேலையோகீ....யோ... :D:)

வடிவாய் பார்த்தனீங்களோ? உங்கட பழைய பெயரில - உங்களைப்பற்றி அந்தமாதிரி புகழ்ந்து எழுதி இருக்கிறன் எண்டு நினைக்கிறன். எண்ட கால் இப்ப நிலத்திலைதான் முட்டிக்கொண்டு நிக்கிது. :D

நானும் தேடிப்பார்த்தன் காண இல்லையே. ஆனால் சில பதிவுகள் விமர்சனபகுதியில சேர்த்திருக்கு..ஜம்முவைத்தான

் கேக்கனும் என்ன நடந்ததுன்னு. :lol:

நன்றி குட்டித்தம்பி. நான் திரும்பவும் ஒருக்கால் தேடிப்பார்க்கிறன்.

நியு மேன்! குருஜி தற்சமயம் சிரசாசனம் செய்து கொண்டிருப்பதால் அனேகமாக சுவரிலதான் இருக்கும்!!!

என்ன குருஜி இப்பிடி சொல்லுறீங்கள். நான் தலைகீழாக நிக்கேக்க சுவரில ஒண்டும் முண்டுகுடுக்கிறது இல்லை. ஒண்டிலையும் தாங்காமால் தனிய தலையை நிலத்தில வச்சு, கையினால உடம்பை தாங்கி தலைகீழாய் நிக்கிறது. :D

....... மாப்பு இந்தப்பனங்காய் செய்த அநியாயத்தாலதான் ஆதி கனகாலம் யாழுக்கு வாறதை நிற்பாட்டினான் தெரியுமோ?

அதைத் தேடி எழுதி ஆதியின் மானத்தை வாங்கிறது சரியில்லை சொல்லிப்போட்டன். அடுத்தது அவா..... வி..மலமக்கா...

ஆக ஆதியை அலற அடிச்ச சம்பவங்கள்தான் மாப்புக்கு ஞாபகம் வருமோ? :o :o :)

ஆதி கனநாளாய் யாழுக்கு வராததால் ஆதியை பற்றிய நல்ல விசயங்கள் மறந்துபோச்சிது. மன்னிச்சுக்கொள்ளுங்கோ. ஆதியை மீண்டும் கண்டது சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் குருஜி! வேறென்றுமில்லை நியுமேனின் கருத்தைப் பார்த்ததும் ஒரு நகைச்சுவைக்காக அப்படிச் சொல்லத் தோன்றியது. மற்றும்படி பல காலமாக யோகா செய்து வருகிறிர்களா? வேறொரு இடத்தில் அப்படி வாசித்த ஞாபகம் இருக்கு.

நான் முன்பு நல்லைஆதீனத்தில் சில காலம் செய்தனான். பின்பு அதெல்லாம் பழக்கம் விட்டுப் போச்சு. இருந்தும் சில குஷியான நேரங்களில் மனுசிக்கும், பிள்ளைகளுக்கும் சினிமா காட்ட ஹீரோவா நினைத்து கொஞ்சம் செய்யிறது. பெரும்பாலும் காமெடியிலேயே முடியும்.

நீங்கள் குறிப்பிட்ட ஆசனம் ஸர்வாங்க ஆசனம் என நினைக்கிறேன். அதில்தான் தலை நிலத்தில் மடிந்திருக்க கால் தோள்மூட்டுவரை நேராக 90 டிகிரியில் நிமிர்ந்து நிக்க கைகளால் இடையைத் தாங்கியபடி நிற்பது. அற்புதமான ஆசனம் அது. அதனால்தான் அது ஸர்வ அங்க ஆசனம். உடலின் பல வியாதிகளுக்கு ஒரு சிறந்த நிவாரணி.

ஆசனம் எதுவாய் இருந்தாலென்ன எல்லாமே கொஞ்சமாவது முறையாச் செய்தால் அது அதன் பலனைத் தரத்தான் செய்யும்!!!

Link to comment
Share on other sites

வசம்பு:

வசம்புவுடன் நான் மிகவும் முறுகுப்பட்ட காலங்கள் இருக்கிது. ஆனால் பின்னர் அவர் யாழில கருத்தெழுதும் பாணியை பழகியபின்னர் வசம்புவுடன் ஆக்கபூர்வமான முறையில கருத்தாடல் செய்வது எப்படி எண்டு பழகீட்டன்.

கருத்தாடல் தளம் ஒண்டில தேவையானது தனது கருத்துகளை உறுதியாக நிண்டு சொல்லி, ஆதாரங்களுடன் நிரூபிக்க முயல்வது. அதாவது கிட்டத்தட்ட நாங்கள் மேடைகளில பார்க்கிற பட்டிமன்றம் மாதிரி எண்டு சொல்லலாம். வசம்புவிற்கு இந்தத்திறன் நிறையவே இருக்கிறது. ஆளைப்பார்த்து கருத்தாடல் செய்யாது எழுதப்பட்ட கருத்தை பார்த்து கருத்தாடல் செய்தால் வசம்புடன் யாழில முறுகுப்படுகின்ற பலர் ஆக்கபூர்வமான முறையில வாதம் செய்யமுடியும் எண்டு நினைக்கிறன்.

வசம்புவை எனக்கு தனிப்பட தெரியாது. வளமுடன் வாழ வாழ்த்துகள்!

மீண்டும் தூயாவிற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். காரணம் முதன்முதலாக தூயா தான் இப்படி சக கருத்தாளர்கள் பற்றிய ஒரு மதிப்பீட்டைத் தொடங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது முரளியும் தந்துள்ளீர்கள். முரளி எந்தவித ஒளிவுமறைவுகளும் இல்லாது தனது மனிதில் பட்டதை அப்படியே தந்திருப்பது உண்மையில் சிறப்பானது. அந்தத் துணிவு யாழ்க்களத்தில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதாக சிலருக்குத் தான் இருக்கின்றது. அதில் நீங்களும் ஒருவரென்பது மகிழ்ச்சியானது. மேலும் உங்களுக்கும் எனக்கும் ஒருவர் பல ஐடிகளில் வருவது பற்றிய விவாதத்தின் போதே முறுகல் ஏற்பட்டது. வேறு விடயங்களில் ஏற்பட்டதாக எனக்கு ஞாபகமில்லை. அப்படி பல ஐடிகளில் ஒருவர் வருவதனால் என்னென்ன சிரமங்கள் ஏற்படுமென்பதை இப்போது நீங்கள் இங்கு அவர்களைப் பற்றி எழுதும் போது புரிந்திருப்பீர்கள். உண்மையில் நீங்கள் எல்லோரையும் பற்றி பலவிடயங்களில் சரியாகவே கணித்துள்ளீர்கள். அதற்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

வசம்பு வெட்ட முடியாத வகையில விரசமாக எழுதுவார். இவர்கள் நகைச்சுவைக்குத்தான் அப்படி எழுதுவது. ஆனால் சிலவேளைகளில சிலருக்கு அவை கோபத்தை ஏற்படுத்தக்கூடும்.

நீங்கள் எதை விரசமாக நினைக்கின்றீர்களோ தெரியவில்லை. ஆனால் நான் கூடியவரை வக்கிரம் இல்லாது நகைச்சுவையாக சிலவற்றை எழுதியிருக்கின்றேன். முடிந்தவரை களத்தில் நாகரீகமாகவே கருத்தாடுகின்றேன்.

மற்றும்படி களததில் எவரிடமும் தனிப்பட்ட கோபதாபம் எனக்கில்லை. கருத்துக்களோடு மட்டுமே மோதியிருக்கின்றேன். அதுகூட தம்மை ஏதோ தேசியவாதிகள் போல் காட்ட சிலர் செய்யும் பில்டப்புகளையே சாடியிருக்கின்றேன். தம் மன அழுக்குகளை மறைக்கவும் தமது முதுகிலுள்ள அழுக்குகளை மறைக்கவும் அடுத்துவர்களின் அழுக்குகளை அம்பலப்படுத்துகின்றோம் என்று சிலராடும் கபட நாடகங்களையே சுட்டிக் காட்டுகின்றேன். இப்படியானவர்களின் செயல்களால் எம்மக்களிடையே மேலும் மேலும் பிளவுகளை ஏற்படுத்தி தாம் சுகம் காணவே இவர்கள் முயலுகின்றார்கள். ஆனால் நல்லவேளையாக களத்தில் கருத்தாடும் பல கருத்தாளர்கள் தெளிவான சிந்தனைகளுடன் இவர்களை இனம் கண்டுள்ளது பாராட்டப் பட வேண்டியது.

மொத்தத்தில் முரளி உங்கள் திறைமைகளை வைத்து ஆக்கபூர்வமான சிந்தனைகளைத் தொடர்ந்தும் தாருங்கள். நீங்கள் உங்கள் உடல்நலத்தைப் பேணி நீண்டகாலம் வாழ்ந்து மேன்மேலும் படைப்புக்கள் தர நானும் மனனமார வாழ்த்துகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூனைகுட்டி: பூனைக்குட்டியை யாழ் கடும்போக்காளர் சங்க தலைவராக போடலாம் எண்டு நினைக்கிறன். பூனைக்குட்டி சாதுவான பூனையாக செல்லமாக விளையாடுகின்ற பூனையாக வந்ததை நான் கடந்த இரண்டு வருடங்களில ஒரே ஒரு தடவை மாத்திரம்தான் அவதானிச்சு இருக்கிறன். மிச்சம் எல்லாத்தடவைகளும் பூனைக்குட்டி சீறியபடிதான் யாழுக்க வந்துபோகும். ஒருத்தரும் பூனைக்குட்டியை நெருங்க முடியாது. நெருங்கினால் பிராண்டி காயங்களை ஏற்படுத்திவிட்டிடும்.

பூனைக்குட்டி எப்ப பாரதியாரிண்ட பாப்பா பாட்டில வாற செல்லக்குட்டி மாதிரி வந்தது எண்டால் முன்பு ஒருதடவை ஒருவர் யாழில பக்கத்தி (‘து’ இல்ல ‘தி’) வீடு எண்டு ஒரு குறும்படம் செய்து யாழில இணைச்சு இருந்தார். நான் அதைப்பார்த்துப்போட்டு கடுமையாக விமர்சனம் செய்ய அவருக்கு சரியான கோவம் வந்திட்டிது. கலைஞன் எண்டுற பெயரை வச்சுக்கொண்டு உமக்கு ஒரு கலைப்படைப்பை ரசிக்க முடியாமல் அருவருக்குதோ அடியடா பிடியடா எண்டு கோவமாக எழுதி இருந்தார். அந்த நேரத்தில நான் யோசிச்சது என்ன எண்டால் அப்ப எண்ட பெயரை கொலைஞன் எண்டு மாத்துவமோ எண்டு.

அந்த குறும்படத்தில எனக்கு பிடிக்காத விசயம் என்ன எண்டால் தமிழ் சினிமா பாணி அதில வருகின்ற கலவர காட்சிகளில கலக்கப்பட்டு இருந்திச்சிது. இரத்தங்கள்... ரத்தம் படிந்த அரிவாள் எண்டு ஏதோ எல்லாம் காட்டி இருந்தார்கள். நான் எனக்கு அதை பார்க்க வயிற்றை குமட்டுது எண்டு ஏதோ எக்கச்சக்கமா எழுதிப்போட்டன்.

இந்த ஆக்கத்தை யாழில இணைச்சவர் உண்மையில குறிப்பிட்ட குறும்படத்திண்ட தயாரிப்பாளர் எண்டு நினைக்கிறன். இப்பிடி பிரச்சனைப் பட்டுக்கொண்டு இருக்கேக்க அதுக்குள்ள பூனைக்குட்டி திடீரெண்டு தோன்றி... மிகவும் பயனுள்ள மிகநீண்ட விமர்சனம் ஒன்றை குறிப்பிட்ட குறும்படம் சம்மந்தாக வைத்து இருந்தார். பூனைக்குட்டியின் விமர்சனம் நிச்சயம் குறிப்பிட்ட படைப்பாளிக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் எண்டு நினைக்கிறன். மட்டறுத்துனர்கள் கைவைக்காத பூனைக்குட்டி யாழில எழுதின ஒரே ஒரு கருத்து இதுவாகத்தான் இருக்கும் எண்டு நினைக்கிறன்.

பூனைக்குட்டி எங்கு இருக்கிறார். என்ன செய்கிறார் எண்டு சரியாக தெரியாது. உளவியல் படிக்கும் ஒரு மாணவர் எண்டு எங்கையோ வாசிச்சதாக நினைவு. வாழ்த்துகள்! மியாவ்

நன்றியண்ணாாாாாாாாாாாாாாாாா

Link to comment
Share on other sites

வணக்கம் குருஜி! வேறென்றுமில்லை நியுமேனின் கருத்தைப் பார்த்ததும் ஒரு நகைச்சுவைக்காக அப்படிச் சொல்லத் தோன்றியது. மற்றும்படி பல காலமாக யோகா செய்து வருகிறிர்களா? வேறொரு இடத்தில் அப்படி வாசித்த ஞாபகம் இருக்கு.

நான் முன்பு நல்லைஆதீனத்தில் சில காலம் செய்தனான். பின்பு அதெல்லாம் பழக்கம் விட்டுப் போச்சு. இருந்தும் சில குஷியான நேரங்களில் மனுசிக்கும், பிள்ளைகளுக்கும் சினிமா காட்ட ஹீரோவா நினைத்து கொஞ்சம் செய்யிறது. பெரும்பாலும் காமெடியிலேயே முடியும்.

நீங்கள் குறிப்பிட்ட ஆசனம் ஸர்வாங்க ஆசனம் என நினைக்கிறேன். அதில்தான் தலை நிலத்தில் மடிந்திருக்க கால் தோள்மூட்டுவரை நேராக 90 டிகிரியில் நிமிர்ந்து நிக்க கைகளால் இடையைத் தாங்கியபடி நிற்பது. அற்புதமான ஆசனம் அது. அதனால்தான் அது ஸர்வ அங்க ஆசனம். உடலின் பல வியாதிகளுக்கு ஒரு சிறந்த நிவாரணி.

ஆசனம் எதுவாய் இருந்தாலென்ன எல்லாமே கொஞ்சமாவது முறையாச் செய்தால் அது அதன் பலனைத் தரத்தான் செய்யும்!!!

நன்றி குருஜி. நான் சொல்வது கீழுள்ள ஆசனம். இதைத்தான் நான் செய்வதாக சொன்னேன். கீழைத்தேய முறை என்பதைவிட எனது பாணியை கீழைத்தேய + மேலைத்தேய கலப்பு என்று சொல்லலாம். நீங்கள் நல்லை ஆதினத்தில யோகா பழகி இருப்பது சந்தோசம். பழகியதை கைவிடாது தொடர்ந்து பயிற்சியை செய்யுங்கள். உங்களுக்கு நல்லை ஆதினத்தில கிடைச்சது போன்ற வாய்புக்கள், வசதிகள் இப்போது இங்குள்ள இளைய தலைமுறைகளுக்கு கிடைப்பது மிகவும் அரிது. இப்ப இஞ்ச எல்லாம் காசு. யோக கலையின் மகிமையை எம்மை விட வேற்று இனத்தவர்கள் நன்கு புரிந்து மதிப்பும், முக்கியத்துவமும் கொடுத்து வருகின்றார்கள்.

நான் அண்மையில ஜெயா தொலைக்காட்சியில ஓர் நிகழ்ச்சி பார்த்தன். அதில இப்பிடி தலைகீழாக நின்று ஒருத்தர் வாயில தூரிகையை வச்சு ஓவியம் வரைஞ்சு சாதனை செய்கிறார். இன்னொருத்தர் இப்பிடி தலைகீழாக நின்று கைகளால நடந்தபடி ஓர் நீளமான பாளத்தை தலைகீழாக கைகளால நடந்து கடந்து சாதனை செய்தார்.

HeadStand_Big.jpg

மீண்டும் தூயாவிற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். காரணம் முதன்முதலாக தூயா தான் இப்படி சக கருத்தாளர்கள் பற்றிய ஒரு மதிப்பீட்டைத் தொடங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது முரளியும் தந்துள்ளீர்கள். முரளி எந்தவித ஒளிவுமறைவுகளும் இல்லாது தனது மனிதில் பட்டதை அப்படியே தந்திருப்பது உண்மையில் சிறப்பானது. அந்தத் துணிவு யாழ்க்களத்தில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதாக சிலருக்குத் தான் இருக்கின்றது. அதில் நீங்களும் ஒருவரென்பது மகிழ்ச்சியானது. மேலும் உங்களுக்கும் எனக்கும் ஒருவர் பல ஐடிகளில் வருவது பற்றிய விவாதத்தின் போதே முறுகல் ஏற்பட்டது. வேறு விடயங்களில் ஏற்பட்டதாக எனக்கு ஞாபகமில்லை. அப்படி பல ஐடிகளில் ஒருவர் வருவதனால் என்னென்ன சிரமங்கள் ஏற்படுமென்பதை இப்போது நீங்கள் இங்கு அவர்களைப் பற்றி எழுதும் போது புரிந்திருப்பீர்கள். உண்மையில் நீங்கள் எல்லோரையும் பற்றி பலவிடயங்களில் சரியாகவே கணித்துள்ளீர்கள். அதற்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

நீங்கள் எதை விரசமாக நினைக்கின்றீர்களோ தெரியவில்லை. ஆனால் நான் கூடியவரை வக்கிரம் இல்லாது நகைச்சுவையாக சிலவற்றை எழுதியிருக்கின்றேன். முடிந்தவரை களத்தில் நாகரீகமாகவே கருத்தாடுகின்றேன்.

மற்றும்படி களததில் எவரிடமும் தனிப்பட்ட கோபதாபம் எனக்கில்லை. கருத்துக்களோடு மட்டுமே மோதியிருக்கின்றேன். அதுகூட தம்மை ஏதோ தேசியவாதிகள் போல் காட்ட சிலர் செய்யும் பில்டப்புகளையே சாடியிருக்கின்றேன். தம் மன அழுக்குகளை மறைக்கவும் தமது முதுகிலுள்ள அழுக்குகளை மறைக்கவும் அடுத்துவர்களின் அழுக்குகளை அம்பலப்படுத்துகின்றோம் என்று சிலராடும் கபட நாடகங்களையே சுட்டிக் காட்டுகின்றேன். இப்படியானவர்களின் செயல்களால் எம்மக்களிடையே மேலும் மேலும் பிளவுகளை ஏற்படுத்தி தாம் சுகம் காணவே இவர்கள் முயலுகின்றார்கள். ஆனால் நல்லவேளையாக களத்தில் கருத்தாடும் பல கருத்தாளர்கள் தெளிவான சிந்தனைகளுடன் இவர்களை இனம் கண்டுள்ளது பாராட்டப் பட வேண்டியது.

மொத்தத்தில் முரளி உங்கள் திறைமைகளை வைத்து ஆக்கபூர்வமான சிந்தனைகளைத் தொடர்ந்தும் தாருங்கள். நீங்கள் உங்கள் உடல்நலத்தைப் பேணி நீண்டகாலம் வாழ்ந்து மேன்மேலும் படைப்புக்கள் தர நானும் மனனமார வாழ்த்துகின்றேன்.

மிக்க நன்றி வசம்பு. நீங்களும் இப்படி உங்கள் யாழ் அனுபவங்களை பற்றி ஓர் பதிவு இட்டால் நன்றாக இருக்கும் அத்துடன் பலருக்கு - முக்கியமாக புதியவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கின்றேன். என்னைப்போல சுருக்கமாக அல்லாது தூயா ஒவ்வொருவரையும் பற்றி மிக விரிவான நீண்ட பதிவை இடத்தொடங்கியதால் அந்தப்பதிவு மந்தநிலையை அடைஞ்சுவிட்டிது. தூயாவும் தனது யாழ் அனுபவம் பற்றிய பழைய பதிவை தொடர்ந்து செய்வது பலருக்கு பயன் தரும்.

நன்றியண்ணாாாாாாாாாாாாாாாாா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்தில நான் அறிந்தவர்கள்/பழகியவர்கள் பற்றிய சிறுகுறிப்புக்கள்

கருத்துக்களத்தில் கலந்து கொள்பவர்களை அழகாக விமர்சனம் செய்து எழுதிய விதமே அழகு. மிகப்பெரிய பணி. யாருக்கு வரும் இந்தத் திறமை. அசத்திட்டிங்கள் முரளி. அதிலும் ஒவ்வொருவரையும் அணுகியவிதம், மறக்காமல் பாராட்டியவிதம் சிறப்பு. யாழ்களத்தின் ஈடுபாட்டுடன் இருப்பவராலேயே........... இப்படியான ஒரு ஆக்கத்தினை முன் வைக்க முடியும்.

சிறப்பான வாழ்த்துகள்..............

அதிகம் வாக்கெடுப்பு வைக்கும் முரளியைத்தான் பார்த்திருக்கிறேன். இதென்ன நெடுகிலும் வாக்கெடுப்பு என்று நினைப்பேன். ஆனாலும் சும்மா மேலார்ந்தவாரியாக பார்த்துவிட்டு வந்துவிடுவேன்.

போட்டி என்றாலே எனக்கு போதும். ரயிலில், பஸ்ஸில் போகும்போதும்கூட கையில் போட்டிகள் அடங்கிய புத்தகத்தை நிரப்பிக் கொண்டு இருப்பேன். இந்த நேரத்தில் நீங்கள் வைத்த ஒருமணி நேர போட்டி நிகழ்வுகள் எனக்கு நிறையவே பிடித்திருந்தது. அது சரி அடுத்தபோட்டி எப்போ? காதலர் தினமும் வரப்போகுதே?

ஓமுங்கோ காலையில எழும்பினவுடனே பல்லை மினுக்கி முகம் கழுவுறதுக்கு முதல்ல செய்திகளை வாசிச்சு, யாழ்களத்துல்ல இணைச்சுட்டு த்தான் மற்றது எல்லாம். இப்போ விடுமுறை என்பதால் கொஞ்சம் அதிக நேரம் இருக்கிறன்.

யாழ் இணையத்தில நான் அறிந்தவர்கள்/பழகியவர்கள் பற்றிய சிறுகுறிப்புக்கள் இந்தத் தலைப்பு எப்படி கதை கதையாம் பகுதிக்குள் வந்தது. அடிக்கடி யோசிப்பேன்.

ஆஆஆஆஆஆ.............நம்ம முரளி இணைத்ததே ஏதோ காரணம் இருக்கும் ( எல்லோரும் வாசிக்கக் கூடியதாக இருக்கும்)

இந்தத் தலைப்பை முன்பு யாழ்களத்தில் இருந்தவர்கள், மற்றவார்களும் வாசித்திருக்கிறார்கள் என்பதில் சந்தோசம்.

இறுதியாக ஒன்று கறுப்பி ஆணா பெண்ணா என்ற சந்தேகம் பலருக்கு. நிவர்த்தி செய்யத்தான் நினைக்கிறேன். ஆனால்..............வேண்டாமே.

அவர்களையும் குழப்ப எனக்கே எனக்கே தெரியல நான் யாருணு? நான் ஆணா பொண்ணா ?

யாழ்களத்துடன் இணைந்து மேலும் மேலும்........பல பதிவுகளைத்தர கேட்டுக்கொள்வதொடு, பிறக்கும் புத்தாண்டில் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றுதான் பார்த்தேன் நன்றாக இருகிறது பழைய நண்பர்களை நினை கூற தக்கதாய் இருந்தது. உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.