Jump to content

யாழ் இணையத்தில நான் அறிந்தவர்கள்/பழகியவர்கள் பற்றிய சிறுகுறிப்புக்கள்


Recommended Posts

சிறி:

சிறியை யாழில தெரியும். கருத்தாடல்கள் செய்து இருக்கிறன். இப்ப நினைவில ஒண்டும் இல்லை. வாழ்த்துகள்!

வளரும்..

வணக்கம்

முரளி நான் யாழ் இணையத்துடன் இன்றும் இணைந்துதான் இருக்கின்றேன் ஆனால் கருத்தாடல் செய்வதில்லை. பார்வையாளனாக இருந்து எல்லோரின் கருத்தாடல்களையும் வாசிப்பேன். என்னையும் ஞாபகம் வைத்திருந்ததற்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • Replies 183
  • Created
  • Last Reply

அது சரி அப்ப குருவிகள் பற்றி எழுததேவையில்லை எண்டு சொல்லுறீங்களோ? நீங்கள் சொன்ன ஆக்களிண்ட பட்டியலில குருவிகளை காண இல்லை. :D

குருவிகள் பற்றி இங்கு சோழியான் அண்ணன் போன்றவர்கள் நினைவுகூறுவதால் அவரைப் பற்றி அறிந்திருப்பீர்கள் என்பதால் குறிப்பிடவில்லை..! :D

அடேயப்பா...! :lol::)

Link to comment
Share on other sites

யாழ் நாற்சந்தியில இன்னமும் இருக்கு..

தேடிப்பார்த்தன். காண இல்லையே. அந்த இணைப்பை ஒருக்கால் தாங்கோ. பேட்டி விமர்சனம் இருக்கிது ஒழிய பேட்டியை காண இல்லை.

நல்லது. அது உங்கள் பதிவுக்கு மேலும் முழுமை சேர்க்க முனையும் என்று நினைக்கிறேன்.

குருவிகள் பற்றி இங்கு சோழியான் அண்ணன் போன்றவர்கள் நினைவுகூறுவதால் அவரைப் பற்றி அறிந்திருப்பீர்கள் என்பதால் குறிப்பிடவில்லை..! :)

நான் சும்மா பகிடிக்குத்தான் கேட்டன். பழைய ஆக்கள் பற்றி எழுதேக்க குருவிகள் பற்றி எழுதத்தானே வேணும். நான் குருவிகளிண்ட பதிவுகளை முந்தி வாசிச்சு இருக்கிறன்.

நான் எழுதுறதுகளை வாசிச்சுபோட்டு அதுகள் ஏதும் பிடிக்காமல் பழைய ஆக்கள் என்னை போட்டுத்தாக்க வந்தால் நீங்கள் தான் நெடுக்காலபோவான் கவசமாக இருந்து என்னை காப்பாற்றவேணும் சொல்லிப்போட்டன். :D

என்னுடைய அன்பான செல்வங்ககளுக்கு ,

முக்கியமாக முரளிக்கும் , நெடுக்ஸ்சிற்கும் யார் கண் பட்டதோ தெரியாது .

செத்தல்ம் மிளகாயை மூன்று தரம் , தலையை சுத்தி தண்ணீருக்குள் போடுங்கோ ......

நன்றி தமிழ்சிறி. நல்லகாலம் செத்தல் மிளகாயை எங்கட கண்ணுக்க போடாமல் தண்ணியுக்க போட்டீங்கள். உங்களுக்கும் அதேமாதிரி நாங்களும் செத்தல் மிளகாயை மூண்டுதரம் சுத்தி தண்ணியுக்க போடுறம். :D

நிறைய உறுப்பினர்களையும் அவர்களின் முகமூடிகளையும் தனித்தனியாக பகுத்தாய்ந்து எழுதிய முரளிக்கும் வாழ்த்துக்கள்.... :)

அதான் பெரிய பிரச்சனை தலை. அப்பிடியே உங்கட மிச்ச ஐடிகளைளையும் ஒருக்கால் சொல்லிவிடுறது.. :D

வணக்கம்

முரளி நான் யாழ் இணையத்துடன் இன்றும் இணைந்துதான் இருக்கின்றேன் ஆனால் கருத்தாடல் செய்வதில்லை. பார்வையாளனாக இருந்து எல்லோரின் கருத்தாடல்களையும் வாசிப்பேன். என்னையும் ஞாபகம் வைத்திருந்ததற்கு நன்றி.

நன்றிகள் சிறி

Link to comment
Share on other sites

கடலை எல்லாம் போடுறதில்ல. குருவி எனது பள்ளித் தோழன்.அவரோட நேரிலையே கதைக்கிறனான். குருவி சொல்லி சோழியான்.. நாச்சிமார் கோவிலடி ராஜன் போன்றவர்கள் மற்றும் இன்னும் பலரைப் பற்றியும் அறிந்திருக்கிறேன்.

குருவிபபா என்னை பற்றி சொன்னாரா?

Link to comment
Share on other sites

வணக்கம் முரளி.

முரளிதான் மாப்பிளையாக யாழில் வலம் வந்த எங்கள் உறவு என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி. என்னையும் நினைவு படுத்தி உங்கள் கருத்தைதந்தமைக்கு என் நன்றிகள். உங்கள் இந்தப்பதிவு என்னை மிகவும் கவர்ந்துள்ளது. யாழ்க்களத்து உறவுகளை பசுமையாக நினைவுபடுதிய உங்களுக்கு மீண்டும் நன்றியும் பாராட்டுக்களும்

என்றும் அன்புடன்

இலக்கியன்

Link to comment
Share on other sites

அன்பும், பாசத்திற்குரிய முரளிக்கு: வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

இந்தப்பாடல் உங்களுக்கான படையல்.

அசல்: நா.முத்துக்குமார் நகல்: வசீகரன்

பல்லவி:

நினைத்து நினைத்துப் பார்த்தேன்

விலகி நெருங்கி பார்த்தேன்.

உங்கள் எழுத்தினாலும் யாழும் மகிழுதே

உங்கள் பதிவை எண்ணி நானும் வியக்கிறேன்.

முகமூடி அணிந்து யாழில் இன்னும்

எழுதும் பதிவும் எதற்கு நண்பனே?

(இது உங்களுக்கல்ல ஏனைய உறவுகளுக்கு!)

சரணம்-1

அமர்ந்து எழுதும் அறையின் ஒளியும்

உங்களைக் கேட்கும் எப்படிச் சொல்வேன்?

யாழ் உறவுகளின் முகங்கள் தெரியுமா?

தொடர்ந்து எழுதும் விரலின் வலியை

மயிலிறகு கேட்கும் எப்படிச் சொல்வேன்?

தொலைந்துபோன உறவுகள் சேருமா?

கருத்துக்களத்தில் ஆக்கம் சேர்க்கும்

கைகள் இன்று எங்கே?

யாழில் இணைந்து அரட்டை அடிக்கும்

பழையமுகமும் இல்லை இங்கே

பத்து வருடம் முடிந்திடும் முன்னமே

மூடிட நினைத்தார் மோகனே

சரணம்-2

எழுதிப் போன பதிவுகள் எல்லாம்

காலம்தோறும் கண்ணில் தெரியும்!

நிமிடங்கள் உதிரும் பதிவுகள் உதிருமா?

வாசித்துப் போன வார்த்தைகள் எல்லாம்

காலை மாலை மனதில் பதியும்

யாழைத் தேடும் யாழே தேயுமா?

தொடர்ந்து வரும் உறவுகள் இங்கே

நட்பில் மூழ்கிப் போகும்!

வெறுத்துப் போன உறவை பார்த்தும்

அழைக்கவில்லை நானும்!

என்றேனும் ஒர்நாள் பார்ப்போம்

என்றே இணைகிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருவிபபா என்னை பற்றி சொன்னாரா?

யாழில் உள்ள தன்ர அன்புத் தங்கைகள் பற்றி எல்லாம் சொல்லுயிருக்கிறார். உங்களைப் பற்றி நிறையச் சொல்லி இருக்கிறார்..! நீங்க ஒரு அச்சாப் பிள்ளை என்றும் சொல்லி இருக்கிறார்..! :)

Link to comment
Share on other sites

வணக்கம் முரளி.

முரளிதான் மாப்பிளையாக யாழில் வலம் வந்த எங்கள் உறவு என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி. என்னையும் நினைவு படுத்தி உங்கள் கருத்தைதந்தமைக்கு என் நன்றிகள். உங்கள் இந்தப்பதிவு என்னை மிகவும் கவர்ந்துள்ளது. யாழ்க்களத்து உறவுகளை பசுமையாக நினைவுபடுதிய உங்களுக்கு மீண்டும் நன்றியும் பாராட்டுக்களும்

என்றும் அன்புடன்

இலக்கியன்

உங்களை கனகாலத்துக்கு பிறகு கண்டது சந்தோசம் இலக்கியன். உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி! அப்ப இப்ப நீங்கள் கவிதை எழுதுறத நிப்பாட்டிப் போட்டீங்களோ?

அன்பும், பாசத்திற்குரிய முரளிக்கு: வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

இந்தப்பாடல் உங்களுக்கான படையல்.

அசல்: நா.முத்துக்குமார் நகல்: வசீகரன்

பல்லவி:

நினைத்து நினைத்துப் பார்த்தேன்

விலகி நெருங்கி பார்த்தேன்.

உங்கள் எழுத்தினாலும் யாழும் மகிழுதே

உங்கள் பதிவை எண்ணி நானும் வியக்கிறேன்.

முகமூடி அணிந்து யாழில் இன்னும்

எழுதும் பதிவும் எதற்கு நண்பனே?

(இது உங்களுக்கல்ல ஏனைய உறவுகளுக்கு!)

சரணம்-1

அமர்ந்து எழுதும் அறையின் ஒளியும்

உங்களைக் கேட்கும் எப்படிச் சொல்வேன்?

யாழ் உறவுகளின் முகங்கள் தெரியுமா?

தொடர்ந்து எழுதும் விரலின் வலியை

மயிலிறகு கேட்கும் எப்படிச் சொல்வேன்?

தொலைந்துபோன உறவுகள் சேருமா?

கருத்துக்களத்தில் ஆக்கம் சேர்க்கும்

கைகள் இன்று எங்கே?

யாழில் இணைந்து அரட்டை அடிக்கும்

பழையமுகமும் இல்லை இங்கே

பத்து வருடம் முடிந்திடும் முன்னமே

மூடிட நினைத்தார் மோகனே

சரணம்-2

எழுதிப் போன பதிவுகள் எல்லாம்

காலம்தோறும் கண்ணில் தெரியும்!

நிமிடங்கள் உதிரும் பதிவுகள் உதிருமா?

வாசித்துப் போன வார்த்தைகள் எல்லாம்

காலை மாலை மனதில் பதியும்

யாழைத் தேடும் யாழே தேயுமா?

தொடர்ந்து வரும் உறவுகள் இங்கே

நட்பில் மூழ்கிப் போகும்!

வெறுத்துப் போன உறவை பார்த்தும்

அழைக்கவில்லை நானும்!

என்றேனும் ஒர்நாள் பார்ப்போம்

என்றே இணைகிறேன்!

மனமார்ந்த நன்றிகள் வசீகரன். மற்றவர்கள் தங்கட நிஜ முகங்களை காட்டாது மறைத்தாலும் நீங்கள் உங்களை யார் எண்டு சொன்னது சந்தோசம். உங்கள் ஆக்கங்கள் மூலம் - பாடல்களை கேட்டு நாங்களும் பொழுதை மகிழ்ச்சியாக போக்கக்கூடியதாக இருந்திச்சிது. நன்றி!

Link to comment
Share on other sites

ஒவ்வொருவரைப்பற்றிய குறிப்புகளுக்கும் நன்றிகள். நல்ல விதமாக செய்திருக்கின்றீர்கள். வித்தியாசமான கோணமும் சிந்தனையும் இயல்பான எழுத்துக்களுடன் நல்ல விடயமாக இந்த ஆக்கம் உள்ளது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

குருவிபபா என்னை பற்றி சொன்னாரா?

குருவிங்க.. ரம்ப பாசம்ங்க என்னைலை...என்னை பற்றி சொன்னாரா :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மாப்பு!

இதுக்குள்ளை நான் என்னத்தை பெரிசாய் சொல்லுறது.

உங்கடை தற்கால நடவடிக்கைகளை பாக்கேக்கை ஏதோ அட்டவதானி மாதிரி பல நல்ல கருத்துக்களை சொல்லிக்கொண்டு வாறியள்.நல்லவிசயம். தொடர்ந்தால் யாழுக்கும் ,ஈழத்துக்கும் நல்லது.

எழுத்தறிவும்,எழுத்தாற்றலும் எல்லாருக்கும் வாறதில்லை.அது உங்களிட்டை நிறையவே இருக்குது.தொடர்ந்தும் நல்லகெட்ட விசயங்களை எழுதுங்கோ.

வேறை என்னத்தை நான் சொல்லுறது.

உங்களை பெற்றெடுத்த பெற்றோர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

யாழில் உள்ள தன்ர அன்புத் தங்கைகள் பற்றி எல்லாம் சொல்லுயிருக்கிறார். உங்களைப் பற்றி நிறையச் சொல்லி இருக்கிறார்..! நீங்க ஒரு அச்சாப் பிள்ளை என்றும் சொல்லி இருக்கிறார்..! :wub:

:D குருவிபபாவும் அச்சா :)

குருவிங்க.. ரம்ப பாசம்ங்க என்னைலை...என்னை பற்றி சொன்னாரா :)

வவ்வவ்வே என்னில் தான் அதிகம்... :)

Link to comment
Share on other sites

மிக்க நன்றிகள் சுகன், குமாரசாமி அண்ணா.

நீங்கள் வாழ்த்து தெரிவிப்பது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிது குமாரசாமி அண்ணா. ஏன் எண்டால் என்னை எழுத ஊக்குவிச்ச ஆக்களில நீங்களும் முக்கியமான ஒருத்தர். நான் எழுதுறது உங்களுக்கு மகிழ்ச்சியை தருகிது எண்டால் அது உங்களுக்கு கிடைச்ச வெற்றி. ஏன் எண்டால் என்னை யாழில எழுத ஊக்குவிச்ச ஆக்களில நீங்கள் முக்கியமான ஒருவர். எனவே உங்களுக்கும் தனிப்பட்ட சிறப்பான நன்றிகள்!

அனைவருக்கும் மீண்டும் வணக்கம்,

நான் என்னோட பழகின கள உறவுகள் பற்றி சொல்லி இருந்தன். எனக்கு முன்னம் யாழில் இருந்த கள உறவுகள் பற்றியும் சொல்லவேணும் எண்டு நெடுக்காலபோவான் சுட்டிக்காட்டி இருக்கிறார். நான் இவர்களோட கருத்தாடல் செய்து இருக்காட்டியும் இவர்களிண்ட பதிவுகளை முந்தி வாசிச்சு இருக்கிறன். இந்தவகையில இந்தப்பதிவு யாழில இருந்த பழைய உறவுகளை நினைவு கூறுவதாய் இருக்கிது.

இந்தப்பதிவு நண்பர் நெடுக்காலபோவானுக்கு சமர்ப்பணம். இதைவாசிச்சு பாராட்டவேணும் போல தோன்றினாலோ வசைபாடவேணும் போல தோன்றினாலோ அவை எல்லாவற்றையும் என்சார்பாக நெடுக்காலபோவான் உங்களிடம் இருந்து வாங்கிக்கொள்வார். :wub:

என்னால சுமார் முப்பது பழைய உறுப்பினர்களைத்தான் நினைவுகூறக்கூடியதாக இருக்கிது. மற்ற ஆக்கள் கோவிச்சுக்காதிங்கோ. பழையவரோ புதியவரோ எல்லாருக்கும் யாழ்மூலம் பலவிதமான அனுபவங்கள் கிடைச்சு இருக்கும். நான் இந்தப்பதிவை போடுவதன் முக்கிய நோக்கங்களில ஒன்று பழையவர்கள் திரும்பவும் வந்து யாழில கருத்தாடல் செய்யவேணும் என்பதே!

பழைய கள உறவுகள் / மூத்த குடிமக்கள்:

சந்திரவதனா:

சந்திரவதனா அக்காவை எப்பிடி எனக்கு தெரிய வந்திச்சிது எண்டால் சினேகிதி, தூயா, கானாபிரபா ஆக்களிண்ட வலைப்பூவில பின்னூட்டல்கள் போடுவா எண்டு நினைக்கிறன். பிறகு நிறைய விடுதலை கானங்கள் சந்திரவதனா அக்காவிண்ட வலைப்பூவில கேட்டு இருக்கிறன். கூகிழில விடுதலை கானங்களை தேடேக்க இவவிண்ட வலைப்பூவும் வரும்.

சந்திரவதனா அக்காவிண்ட வாலைப்பூவில நிறைய விசயங்கள் வாசிச்சு இருக்கிறன். அக்கா எழுதினதுகளை இஞ்ச ஆக்கள் முந்தி யாழுக்குகொண்டுவந்து இணைச்சு பிறகு சூடான விவாதங்கள் போனது எல்லாம் நினைவில இருக்கிது. நாங்கள் எங்களுக்கு சாமத்தியவீடு செய்யுறாங்கள் இல்லை எண்டு நினைச்சு கவலைப்படுறம். நீங்கள் உங்களுக்கு செய்யுற சாமத்தியவீடுகளிண்ட மகிமை தெரியாமல் போர்க்கொடி தூக்கிறீங்கள்.

சந்திரவதனா அக்கோய், நெடுக்காலபோவான் எண்டு ஒரு அறிஞர் யாழ் எண்டு சொல்லப்படுகிற ஒரு வலைத்தளத்தில பெண்கள் பற்றி அற்புதமான பல கருத்துக்கள் சொல்லி வருகிறார். ‘நெடுக்காலபோவானும் அவரது பெண்கள் பற்றிய பார்வையும்’ எண்டுற ஒரு தலைப்பில வலைப்பூவில ஒரு கட்டுரை எழுதிபோடுங்கோ. இந்த அறிஞர்பற்றிய உங்கட கருத்து / கணிப்பு என்ன? இவரிண்ட எழுத்துக்களை வாசிக்கும்போது உங்களுக்கு எப்பிடி இருக்கும்? வயித்துக்க புளியைக்கரைச்சு ஊத்தினமாதிரி இருக்குமா? இல்லாட்டிக்கு ஜில் எண்டு ஒரு பனிக்கட்டியை தலையில வைக்கேக்க வாற உணர்வு வருமா?

மற்றது என்ன எண்டால் அக்கா, இப்ப ஆம்பளைகள்தான் வீட்டில பொம்பளைகள் மாதிரி இருக்கிறீனமாம் எண்டு நான் சொல்ல இல்லை எண்ட அம்மா சொல்லிறா. தான் ஒருநாள் எண்ட அண்ணாவை சாரி கட்டி பொம்பிளை மாதிரி வேசத்தில கனவுகண்டதாய் அம்மா சொன்னா. இப்பிடி வினோதமான கனவுகள் அண்ணையர் கலியாணம் கட்டினபிறகுதான் அம்மாவுக்கு வரத்துவங்கி இருக்கிது. அடக்குமுறை, ஒடுக்கு முறை எண்டுறது எல்லாம் சரி. ஆனால்... அதையே சாக்குப்போக்காக சொல்லிக்கொண்டு இப்ப பல பெண்கள் சொகுசாக உடம்பு நோகாமல் வாழ பழகீட்டினம். இதை நான் பகிடிக்கு சொல்ல இல்லை. உண்மையாத்தான் நேரில கண்டதுகளைத்தான் சொல்லிறன்.

சந்திரவதனா அக்காவைப்பற்றி விக்கிபீடியாவிலையும் ஒரு பதிவு இருக்கிறதை பார்த்தன். மனஓசை பற்றி சந்திரவதனா அக்காவெளிவிட்ட நூலுக்கு வைத்தியர். முருகானந்தம் விமர்சனம் எழுதி இருக்கிறார்.

சந்திரவதனா அக்கா ஏன் இப்ப யாழுக்கு வாறது இல்லை எண்டு தெரிய இல்லை. சபேசன், நெடுக்காலபோவான் யாரும் போட்டுத்தாக்குவீனம் எண்டு பயத்தில வாறது இல்லையோ தெரியாது. அக்கா பயப்படாமல் திரும்பவும் யாழுக்கு வாங்கோ. நாங்கள் எல்லாருமாய் சேர்ந்து பெண்களை கிண்டல் பண்ணுற ஆக்களை ஒரு கைபார்ப்பம். கிகி

சந்திரவதனா அக்காவிண்ட சேவைகள், படைப்புக்கள் தொடர வாழ்த்துகள்!

குருவிகள்:

நான் முந்தி குருவிகளிண்ட பழைய பதிவுகளை வாசிக்கிறனான். முக்கியமாக அவர் யாழில கடைசியாக எழுதிய பதிவுகளை வாசிச்சனான். ஏதாவது பிரச்சனைப்பட்டுக்கொண்டு யாழை விட்டுபோனவரோ எண்டு நினைச்சு.

முந்தி குருவிகளும் இளைஞனும் மல்லுக்கட்டி இருக்கிறீனம் போல இருக்கிது. எனக்கு ஆச்சரியம் என்ன எண்டால் இளைஞன் முந்தி எழுதினமாதிரி இப்ப இப்பிடி எழுதுறது இல்லை. குருவிகள் இல்லாத கவலையில இளைஞனும் யாழுக்கு வந்து எழுதுறதை குறைச்சிட்டார் போல.

நான் குருவிகளிண்ட வலைப்பூவுக்கு போய் வாசிக்கிறனான் சிலது யாராவது யாழில இருந்து இணைப்பு குடுக்கேக்க. தூயா ‘குருவி பபா’ எண்டு அவரை கூப்பிடுவா போல. நெடுக்காலபோவானையும் சிலது ‘நெடுக்கு பபா’ எண்டு கூப்பிடுறவ போல. அப்ப நானும் எண்ட பெயருக்கு கீழ கொஞ்சநாள் ‘முரளி பபா’ எண்டு எழுதி வச்சு இருந்தன். நான் ‘முரளி பபா’ எண்டு சொல்ல நெடுக்காலபோவானுக்கு கொஞ்சம் கோவம் வந்திட்டிது போல. பிறகு என்ன ஒரு பகிடி எண்டால் என்னைப்பார்த்துபோட்டு குறுக்காலபோவான் அண்ணா மோகனை ‘மோகன் பபா’ எண்டு கூப்பிட்டு ஒரு இடத்தில கருத்து எழுதி இருந்தார். அதை வாசிக்க சிரிப்பாய் இருந்திச்சிது.

குருவி தண்டை கையெழுத்தில "சுதந்திரமாகச் சிந்திக்கிறவன் சிறை இருக்கமாட்டான்" எண்டு எழுதி இருக்கிறதை பார்த்தால் இவர் யாழை ஒரு சிறையாக நினைச்சு இருக்கிறாரோ எண்டு எண்ணத்தோன்றிது. ஆனால்.. என்னவோ பெரிய பெரிய அறிஞர்கள் எல்லாம் சிறையுக்க இருந்துதான் பெரிய பெரிய விசயங்கள் பற்றி எல்லாம் எழுதி அவை உலகப்புகழ் பெற்று இருக்கிது எண்டுறது குருவி பபாவுக்கு விளங்கினால் சரி.

நானும்தான் வந்த காலத்தில இருந்து பார்க்கிறன் நெடுக்காலபோவானும் குருவிகளும் ஒருத்தர் எண்டு சொல்லி ஒவ்வொருநாளும் யாராச்சும் யாழுக்க எங்கையாவது கருத்து எழுதிப்போடுறாங்கள். இடைக்கிடை மலர் அண்ணி எண்டு இன்னொருவவிண்ட பெயரும் வந்துபோகும்.

இவரும் விட்டுக்குடுக்கிறதாய் காண இல்லை. அவையளும் விடுறபாடாய் காண இல்லை. இந்த இழுபறிகள் முடிவுக்கு வர ஒரே ஒரு வழிதான் இருக்கிது. அது என்ன எண்டால் குருவிகளையும் நெடுக்காலபோவானையும் நேரில கூப்பிட்டு ரெண்டு பேரையும் யாழ் ஆக்கள் பழைய விசயங்கள் பற்றி ஓர் பேட்டி காணவேணும்.

என்னைப் பொறுத்தவரை ஆக்கள் யாழில பல ஐடிக்கள் வச்சு இருக்கிறது பற்றி சொல்லக்கூடிய அபிப்பிராயம் என்ன எண்டால் இப்ப யாழுக்க அப்பிடி செய்தால் பரவாயில்ல. பெரிய குற்றம் இல்ல. ஆனால்.. உண்மையான பொதுவாழ்வில ஒரு கற்பனை பாத்திரத்தை உருவாக்கி விடுறது ஆபத்தானது மாத்திரம் இல்ல பல்வேறு சிக்கல்களை உருவாக்கக்கூடும்.

உதாரணமா, இப்ப நான் முரளி எண்டும் கலைஞன் எண்டும் யாழில வேறவேற பெயரில எழுதுறன் எண்டு வைப்பம். இந்த விசயம் ஒருத்தருக்கும் தெரியாது எண்டும் வைப்பம். அத்தோட நான் முரளி, கலைஞன் எண்டுற பெயர்களில வலைத்தளங்களும் வச்சு இருக்கிறன் எண்டும் வைப்பம். இந்தநேரத்தில முரளியையும் கலைஞனையும் யாழ் மூலம் அறிமுகம் ஆகிய வேறு வேறு பெண்கள் (இரண்டு நண்பிகள்) தீவிரமாக காதலிக்கத்துவங்கினால் என்ன செய்யுறது? நான் நல்லவனாய் இருந்தால் எனக்கு பிரச்சனை. நான் கூடாதவனாய் இருந்தால்..? இதைப்பற்றி மேலதிகமாக ஆராய்ஞ்சு டைகர் பமிழ் வேணுமெண்டால் ஒரு படம் எடுக்கலாம். கிகி (குருவிகள், நெ.போ இதைவாசிச்சுப்போட்டு கோவிக்கக்கூடாது. எல்லாம் சும்மா ஒரு கற்பனை தான்)

குருவிகளுக்கு பல்வேறு விடயங்களில தண்ட பார்வையை செலுத்தி இருக்கிறார் எண்டு அவரிண்ட பதிவுகளில இருந்து தெரியுது. அவர் ஆரம்பிச்ச விண்ணியல் வினோதங்கள் இப்பவும் யாழில தொடருது. எனக்கு ஒரு சின்ன சந்தேகம் என்ன எண்டால் குருவிகள் எழுதினது எண்டு சொல்லி நெடுக்காலபோவான் பலப்பல கவிதைகளை யாழில கொண்டுவந்து ஒட்டுறார். ஆனால் Forum3 இல குருவிகள் ஆரம்பிச்ச சுமார் 100 தலைப்புக்களில ஆக ஒண்டுதான் கவிதைப்பூங்காட்டில அவர் எழுதின கவிதையாக இருக்கிது.

குருவிகளின் பணிகள் வலைத்தளத்தில தொடர வாழ்த்துகள்!

தமிழினி:

தமிழினி பற்றி சொல்லிறதாய் இருந்தால் அவவைப்பற்றின நிறைய விசயங்கள் நான் காதுவழி, எம்.எஸ்.என் வழி அறிஞ்ச செய்திகள் தான். அதுகள் பற்றி இதுக்க சொன்னால் நிறையப்பேர் என்னோட கோவம் போட்டுடுவீனம்.

தாயகபறவைகள் இணைய இதழ் செய்கிறதில தமிழினிக்கும் முக்கிய பங்கு இருக்கும் எண்டு நினைக்கிறன். தமிழினி இதை வாசிச்சால் அவவிட்ட நான் கேக்க விரும்புற ஒரே ஒரு கேள்வி, இப்பவாவது உங்களுக்கு ஆக்கள் குடிக்கக்கூடியமாதிரி ருசியான தேத்தண்ணி (மல்லித்தண்ணிய சொல்ல இல்லை) போடத்தெரியுமோ?

தமிழினி ஆரம்பிச்ச கணணி தொடர்பான அவசர உதவிகள் பற்றின கருத்தாடல் இப்பவும் யாழில தொடருது. தமிழினியிண்ட வலைப்பூவுக்கும் போய்ப்பார்த்தன். அங்கபோய் எதுக்க கிளிக்கினாலும் வணக்கம் வணக்கம் வணக்கம் எண்டு தகவல் பெட்டி ஒண்டு முன்னால வந்து சிரிச்சுக்கொண்டு நிக்கிது.

தமிழினி எங்கிருந்தாலும் வளமுடன் வாழ வாழ்த்துகள்!

கவிதன்:

கவிதனை பற்றிய பல சுவாரசியமான தகவல்களை தற்செயலாக எனக்கு யாழில இருந்த பழைய உறுப்பினர் ஒருத்தர் (அவர் எனக்கு சொந்தக்காரன்) சொல்லி இருந்தார் (கவிதன் இதை வாசிச்சால் பிறகு அவரோட போய் சண்டை பிடிக்கிறது இல்லை என). பெயருக்கு ஏற்றமாதிரி நல்லாய் கவிதைகள் எழுவார் எண்டு நினைக்கிறன். இதுபற்றி அனிதாவும் எனக்கு ஒருக்கால் சொல்லி இருந்தா. தாங்கள் முந்தி கவிதன் அண்ணா எழுதுற கவிதைகளை விரும்பி வாசிகிறதாம் எண்டு. கவிதனும் யாழில முந்தி மட்டறுத்துனரா இருந்தவர் போல.

கவிதன் ‘நீங்கள் விரும்பி வாசிக்கும் கவிதை எது?’ எண்டு கேள்வி கேட்டு முந்தி ஒரு தலைப்பை கவிதைப்பூங்காட்டில அரம்பிச்சு இருந்தார். நானும் வாசிச்சு இருந்தன்.

இதப்பற்றி எனது கருத்தை சொன்னால் நான் எல்லாவிதமான கவிதைகளும் வாசிப்பன். ஆனால்.. எனக்கு கவிதை வாசிக்கிறதுக்கு நல்லதொரு மனநிலை வரவேணும். அதுதான் முக்கியமான முதலாவது விசயம். அந்த மனநிலை வந்திட்டிது எண்டால் கவிதை வாசிக்கிறதோ எழுதுறதோ எனக்கு பிரச்சனை இல்லை.

நான் முந்தி வீரகேசரி பத்திரிகைக்கு இடைக்கிடை பிரசுரம் செய்யுறதுக்காக அல்ல... எனது எதிர்ப்பை காட்டுறதுக்காக கவிதை மாதிரி ஒண்டு எழுதி அனுப்புறது. அதில இப்ப மனதில இருக்கிற ஒண்டை எடுத்து விடுறன். இது 'நானும் ஒரு பெண்’ எண்டுற பெயரில கொழும்பில நடைபெற்ற பட்டிமன்றம் ஒன்றை வானொலியில கேட்டுபோட்டு கோவத்தில எழுதினது. இதவாசிச்சுப்போட்டு ஒருவரும் சிரிக்கக்கூடாது. இந்தியாவில இருந்து வருகை தந்து இருந்த நெல்லைக்கண்ணன், குருவாயூர் யாரோ ஆகியோர் தலமையில நடைபெற்ற அந்தப்பட்டி மன்றத்தை பார்த்து இருந்தால் - அத்தோட அந்தக்காலப்பகுதியில நீங்கள் சிறீ லங்கா / தாயகத்தில வாழ்ந்து இருந்தால் இந்தக்கவிதையிண்ட பொருளை தெளிவாக விளங்கக்கூடியதாக இருக்கும்.

நானும் ஒரு பெண்!

தள்ளுங்கள் உங்ளுங்கல் உலகுக்கு மன்று!

கன்று கருகாத கனிவுக் குன்று!

மெல்லும்பல் மல்லும்பொல் அழகுக்கு ஒன்று!

தின்று திருகாத பணிவு நன்று!

பள்ளம்பொறு வெள்ளம்பெரு மைக்கு நின்று

வென்று வெருளாது ஊருக்கு சென்று

குள்ளங்குறு வள்ளங்கரு மைக்கு அன்று

இன்று இருபதாம் நூற்றாண்டு என்று!

செல்லன்பு கொல்லம்பு சொல்லால் வந்து

குந்து குருவாயூர் சாமியை முந்து

உள்ளம்பூ வில்லந்தூள் துள்ளுஞ் சிந்து

இந்து இருப்பவர் வாய்க்கு பந்து!

அறிவுகோல் சரிவுதோள் தெரிவு தேவையோ?

ஐயோ விலங்கைத் தமிழன் பாவையோ?

முறிவுபோல் பிரிவுகோள் எரிவு நோவையோ?

சேயோ சலங்கை சபிக்குந் தீவையோ?

களக்கடி வழக்கடி உளக்கடி உண்மை!

பன்மை போருக்கு வருவது தன்மை!

கிழக்கடி விளக்கடி உலக்கடி கண்மை!

பெண்மை பாருக்கு தருவது திண்மை!

முடிவுந்தான் விடிந்தான் திண்பண் டங்கள்

தங்கள் தயவான காணிக்கை எங்கள்

முடியுந்தான் பிடியுந்தான் தன்பா வங்கள்

தொங்கல் கயவனுக்கு இனிக்கும் பொங்கல்!

கவிதை எப்பிடி இருக்கிது? ஹிஹி. இது நான் நினைக்கிறன் 1998 இல்லாட்டிக்கு 1999 இல அந்த பட்டிமன்றத்தை வானொலியில கேட்டுபோட்டு கோவத்தில நான் எழுதினது. இப்பவும் மனதில வரிகள் அப்பிடியே நினைவில இருக்கிது.

கவிதனை பற்றி மிச்சம் சொல்லிறதாய் இருந்தால் நேரப்பற்றாக்குறை காரணமாக யாழுக்கு வருவது இல்லப்போல. ஆனால் வாசகராய் இருப்பார் எண்டு நினைக்கிறன். யாழ் ஆக்களோட இப்பவும் எம்.எஸ்.என் இல கடலையும் போடக்கூடும்.

கவிதன் எங்க கனடாவிலதானே இருக்கிறீங்கள்? பிறகு ஒருநாளைக்கு சந்திக்கலாம். வாழ்த்துகள்!

சேது:

நான் வரமுன்னம் சேதுவைப்போட்டு எல்லாரும் சிப்பிலி ஆட்டி இருக்கிறீனம் போல.. இவர் யாழுக்கு வேணுமா வேண்டாமா எண்டு. நான் யாழில இணைஞ்ச ஆரம்ப காலத்தில நெடுக்காலபோவானும் இந்த சத்திய சோதனையை சந்திச்சு இருந்தார். அந்த தலைப்பை நெடுக்காலபோவானுக்கு எதிராக ஆரம்பிச்சவர் சண்டியன் எண்டு நினைக்கிறன். நெ.போ வேணுமோ வேணாமோ எண்டு கேட்ட சண்டியனை இண்டைக்கு இஞ்ச காண இல்லை. ஆனால் நெ.போ இப்பவும் யாழில இருக்கிறார்.

சண்டியனின்ட அவாட்டரில கைத்துப்பாக்கியோட குறிவைக்கிற ஆள் மாதிரி படம் இருக்கும் எண்டு நினைக்கிறன். சண்டியன் செய்த இன்னொரு சண்டித்தனம் என்ன எண்டால் கொஞ்சநாள் வானவுல்லும் யமுனாவும் சேர்ந்து யாழில யாருக்கோ கலியாணம் செய்துவைக்கபோறம் எண்டு அழைப்பிதழ் எல்லாம் செய்து அட்டகாசம் போட்டுக்கொண்டு இருந்திச்சீனம். அப்ப அதுக்க திடீரெண்டு குதிச்ச சண்டியன் ரெண்டு நாய்க்குட்டிகளிண்ட படத்தை போட்டு அதுதான் யமுனாவும் வானவில்லும் எண்டு ஏதோ சொல்லி அவையுக்கு கலியாணமாம் எண்டு தோசையை திரும்ப அவையுக்கே புரட்டிபோட்டார். அது சரியான பகிடியான ஒரு கருத்தாடல். எனக்கு எல்லாம் மறந்துபோச்சிது. அந்த நேரத்தில யமுனா ஒரு பெண் எண்டுதான் நானும் நினைச்சுக்கொண்டு இருந்தன்.

சேதுவைப்பற்றி சொல்லிறதாய் இருந்தால் நெல்சன் மண்டேலாவை தனது அவாட்டரில போட்டு இருக்கிறார். யாழில 3,289 கருத்துக்கள் எழுதி இருக்கிறார். இவர் குருவிகளிண்ட நண்பரோவும் தெரியாது.

எங்கிருந்தாலும் சேது அவர்கள் நிறைவுடன் வாழ வாழ்த்துகள்!

நித்திலா:

நித்திலாவை பற்றி சொல்லிறதாய் இருந்தால் நான் இணைஞ்ச காலத்தில இருந்து யாழுக்கு வருவா. ஆனால் ஒண்டும் எழுதமாட்டா. வெளிநடப்பு செய்துகொண்டு இருப்பா. நான் நினைக்கிறன் நிறைய பழைய உறுப்பினர்கள் வெளியால முகத்தை காட்ட வெக்கப்பட்டு உள்ளுக்கால ஒளிஞ்சு Anonymous ஆக வந்து போறவேள் போல. ஆனால்.. நித்திலா ஒளிஞ்சு வாறது கிடையாது. இப்ப கொஞ்சநாளாக ஆளை காண இல்லை.

நித்திலா எழுதின ஒரே ஒரு கருத்து இப்ப நினைவில இருக்கிது. அது என்ன எண்டால் தூயவன் ஒதுங்கிக்கொள்கின்றேன் எண்டு உறவோசையில அறிக்கைவிடேக்க நித்திலா ‘தூய்ஸ் போகாதிங்க’ எண்டு ஏதோ சொல்லி இருந்தா. அட இப்ப இன்னொண்டும் நினைவுக்கு வந்திட்டிது. அது என்ன எண்டால் தான் பிரித்தானியாவில நடந்த பொங்குதமிழுக்கு இந்தவருசம் போனதுபற்றியும் நித்திலா ஒரு கருத்து எழுதி இருந்தா.

நான் நினைக்கிறன் படிப்பில மினக்கடுறதால யாழுக்கு வரநேரம் இல்லைபோல. வாழ்த்துகள்!

மழலை:

மழலை முந்தி யாழில பிரபலமா இருந்து இருக்கிறா போல. அனிதா ஒருமுறை சொல்லி இருந்தா... யாழில முந்தி ஆக்களை மன்னர், ராணி, அமைச்சர், அண்ணா, தம்பி, மச்சான், மாமா எண்டு ஆக்கள் தங்களுக்க ஒரு உறவுநிலையை ஏற்படுத்தி கூட்டுக்குடும்பமாய் வாழ்ந்தவர்களாம் எண்டு.

மழலை பற்றி காதுவழியும் செய்திகள் அறிஞ்சன். தண்ட உறைவிடம் கள்ளம்கபடம் இல்லாத புன்னகை எண்டு சொல்லி இருக்கிறா. மழலைக்கு யாழ் ஆடுகளம்தான் அதிகம் பிடிச்ச இடம்போல. வாழ்க்கையும் ஓர் ஆடுகளம்தான். போட்டியில வெற்றி பெற மழலைக்கு வாழ்த்துகள்!

கீதா:

கீதா யாழில பதிஞ்ச கவிதைகளை நான் முந்தி வாசிச்சு மகிழ்ந்து இருக்கிறன். நான் படிச்சு சுவைச்ச, அத்தோட எனக்கு பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கவிதையை இதிலை இணைக்கிறன் நீங்களும் வாசிச்சு பாருங்கோ:

என் அண்ணா

அண்ணா என் பாசத்துக்காக அடிமைப்பட்டாய்

சின்ன வயதில் என் கைபிடித்து கூட்டிக் கொண்டு

போய் கடையில் இனிப்பு வாங்கித் தருவாய் நீ

நான் அழுதால் என்னை உடனே தூக்கி தோளில்

போட்டு பல கதைகள் சொல்லி சிரிக்க வைப்பாய் நீ

எனக்கு அம்மா அடிக்க வந்தால் அந்த அடிகளை

நீ வேண்டிக் கொள்வாய் -------------------

பள்ளிக்குச் செல்லும் போதெல்லாம் என் கைகளை

பிடிக்குக் கொண்டு கவனமாக கூட்டிச் செல்வாய் நீ

படிப்புக்களை அன்பாக சொல்லித் தருவாய் நீ

அம்மா எனக்குச் செய்கின்ற கடமைகளை எல்லாம் நீயே

செய்தாய் பல வருடங்களாக செய்தாய்

நீ வளர்ந்ததும் நான் வளர்ந்ததும் என்னை விட்டுட்டு

நீ நீண்ட தூரம் போய் விட்டாய் எங்கே போனாய்-------------

அண்ணா உன் தங்கையின் கடமைகளை செய்து விட்டு

நீ இப்போ நாட்டுக்காக போராடப் போய் விட்டாயா

ஒரு கனம் உன் தங்கையை நினைத்துப் பர்த்தாயா அண்ணா

நீ இல்லாமல் நான் எப்படி இருப்பேன் அண்ணா

நான் எல்லாமே அண்ணா தான் என்று என்னி இருந்தேன்

அம்மா அப்பா வேண்டாம் எல்லாமே என் அண்ணா தான்

என்று இருந்தேன் கடசியில் என்னை தவிக்க விட்டுட்டு

நீ போய் விட்டாய்

நினைவுகள் எல்லாம் நீ கனவுகள் எல்லாம் நீ

அண்ணா அண்ணா என்று கதறி அழுகின்றேன்

அண்ணா திரும்பவும் என் அருகில் வருவாரா என்று

எண்ணி காத்திருந்தேன் அண்ணா கடயில் இனிப்பு

வேண்டினால் அதில் பாதி உனக்காக வைப்பேன்

என் அண்ணா வந்தால் கொடுப்பேன் என்று

என்ன தான் வேண்டினாலும் அதில் பாதி என் அண்ணாவுக்கு

வைப்பேன் உனக்குத் தெரியுமா அண்ணா

நீ நாட்டுக்காக போராடப் போய் பல வருடங்கள் ஆச்சு

உன்னை பார்த்ததே இல்லை தேடித்தேடி பார்க்கின்றேன்

எங்கும் என் அண்ணாவை காண வில்லை கடவுளிடம்

போய் அழுதேன் கதறினேன் என் அண்ணா எனக்கு வேண்டும்

என்று ----------------

ஒரு நாள் விடியற் காலையில் என் அண்ணா வந்து நிக்கிறார்

என்ன அண்ணா வந்து விட்டார் என்று திடுக்கிட்டு முழித்து

அண்ணாவைப் பார்க்க ஓடினே அம்மா அப்பா எங்கே அம்மா

என் அண்ணா சொல் அம்மா என் அம்மாவாள் சொல்ல முடியாது

என் அண்ணா வர வில்லை அண்ணாவின் உடல் தான் மட்டும்

வந்து கிடந்தது அண்ணா அண்ணா என்று கதறினேன்

அழுதேன் என்னால் ஒன்றுமே செய்ய முடியல

அண்ணா வழர்த்த வளர்ப்பில் வளர்ந்து நான் பாசத்துக்காக

அடிமைப்பட்ட நான் இன்றும் என் அண்ணா நினைவுகள் தான் எனக்கு

கீதாவிண்ட அண்ணா மாதிரி நாங்கள் எத்தனை அண்ணாக்களை இழந்துவிட்டம். கீதா நான் யாழில இணைஞ்ச காலத்தில இல்லை. கீதா எங்கிருந்தாலும் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகள்!

மதுரன்:

மதுரனிண்ட கருத்துக்களை வாசிச்சுபார்தன். ஊர்ப்புதினம் பகுதியிலதான் அதிகம் மினக்கட்டு இருக்கிறார். வசீகரன் (தமிழ்வானம்) அவர்களிண்ட படைப்பை – காதல் கடிதம் – காதல் மொழி - யாழில மிக விரிவாக முதன்முதலாக அறிமுகம் செய்து வைத்தவர் மதுரன் எண்டு அவரது பதிவை பார்க்க தெரியுது. மதுரன் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகள்!

சியாம்:

தூயாவும் தனது யாழ் பயணங்கள் எண்டுற ஒரு தலைப்பில யாழ் ஆக்களை பற்றி சொல்லிவந்தா. அதில இவரைப்பற்றியும் சொல்லி இருந்தா. சியாமிண்ட Profileக்கு போய் பார்த்தன். அவர் ஆரம்பிச்ச தலைப்புக்கள் ஒண்டையும் பார்க்க ஏலாமல் இருக்கிது. சியாம் எழுதின கருத்துக்களில ஒரு பகிடியான கருத்தை இதில போடுறன்:

மணமகள்தேவை:

10ம் வகுப்பு கோட்டை விட்டவர்

உயரம் ஒரு 1.55

நிறம் நனைஞ்ச பனைமாதிரி கறுப்பு

நட்சத்திரம் . வால்நட்சத்திரம்

செவ்வாய் குற்றமும்உள்ளது

சீதனம் வேண்டாம்

யாராவது பெண் தருவீர்களா எனக்குத்தான்

அப்ப உதப்பார்த்துபோட்டு சியாமுக்கு யாரோ பெண்தந்து கலியாணமும் கட்டி வாழ்க்கையில Settle ஆகீட்டீங்களோ? வாழ்த்துகள்!

மீரா:

மீராவுக்கு தமிழர் புனர்வாழ்வு, தாயக மக்களுக்கு உதவுதல், புலத்தில நடக்கிற நம்மவர் விசயங்களில அதிக ஈடுபாடு இருக்கிது எண்டு அவ பதிவுகளில இருந்து கண்டுகொண்ட. இலட்சியவாதிகள் தூங்குவதில்லை எண்டு தண்ட கையெழுத்தில சொல்லி இருக்கிறா. எண்டபடியால யாழுக்கு வராட்டியும் விழிச்சிருந்து ஏதாவது பயனுள்ளவற்றை மீரா செய்து கொண்டு இருப்ப எண்டு எதிர்பார்க்கலாம். வாழ்த்துகள்!

கணேஸ்:

கணேஸ் நெதர்லாந்தில இருக்கிறார் போல. நெதர்லாந்து பற்றின நிறையத் தகவல்களை தந்து இருக்கிறார். அத்தோட விளையாட்டுக்களில குறிப்பாக உதைபந்தாட்டத்தில அதிக ஈடுபாடு இருக்கிது எண்டு நினைக்கிறன். வாழ்த்துகள்!

Eelavan:

நான் ஏற்கனவே ஈழவன்85 பற்றி சொல்லீட்டன். இவர் இன்னொரு ஈழவன். யாழில ஈழவன் எண்டுற பெயரில எத்தினபேர் இருக்கிறீனம் தெரியுமோ? கேட்டால் ஆச்சரியப்படுவீங்கள். மொத்தம் 12பேர். ஆனாலும் இவரும் ஈழவன்85 பற்றியும் தான் பலருக்கு அறிமுகம்.

இவர் வலைத்தளத்துல நூலகம் ஒண்டு அமைக்கும் முயற்சியில ஈடுபட்டு இருக்கிறார். நான் முந்தி அந்த வலைத்தளத்துக்கு போய் பார்த்து இருக்கிறன். அருமையாக செய்யப்பட்டு இருக்கிது. ஆனால் இப்ப அங்க போக ஏலாமல் இருக்கிது. ஏதாவது தொழிநுட்ப கோளாறோ இல்லாட்டிக்கு என்ன பிரச்சனை எண்டு தெரிய இல்லை. ஆனால் மற்றைய இணைப்பு வேலை செய்யுது. மிகவும் பயனுள்ள வலைத்தளம் நேரம் கிடைக்கேக்க போய்ப்பாருங்கோ. தமிழ் சம்மந்தமாய் நம்மவர் பற்றி தமிழில அறியவிரும்புற ஆக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாய் இருக்கும். முகவரி: http://www.viruba.com/ ஈழவனின் சேவைகள் தொடர வாழ்த்துகள்!

அன்பகம்:

அன்பகம் நல்லாய் முகக்குறிகளை போட்டு கருத்து எழுதுவார். எழுத்துக்கள் இல்லாமல் வெறும் முகக்குறிகள் போட்டும் கருத்து எழுதி இருக்கிறார். இவர் ஆரம்பிச்ச தலைப்புக்களை என்னால் காணமுடிய இல்லை. Forum3 இல் இல்லை. அன்பகம் எண்டுற சொல்லை கேட்க எனக்கு செஞ்சோலைதான் நினைவுக்கு வருகிது. அன்பகத்துக்கு வாழ்த்துகள்!

ஜெயதேவன்:

நான் யாழ் வாசகனாக இருக்கேக்க... அதாவது 2000/2002 – 2006 காலத்தில இவரிண்ட கருத்துக்களை வாசிச்சு இருக்கிறன். நல்ல பகிடியாய் இருக்கும். பெரிய சிவப்பு எழுத்துக்களில எழுதுவார். பிறகு எங்க காணாமல் போனார் எண்டு தெரியாது. அது சரியுங்கோ முந்தி நிதர்சனமும்தான் இஞ்ச யாழிலையும்தான் எல்லாரும் அவர் ஜெயதேவனை போட்டுத்தாக்கிக்கொண்டு இருந்திச்சீனம். இப்ப என்னாச்சு? ஈழபதீஸ்வரர் பெருமானுக்கு பிரச்சனை ஒண்டும் இல்லைத்தானே?

ஜெயதேவனிண்ட கையெழுத்தில இப்பிடி இருக்கிது: "உயிர் உள்ளவரை உண்டியலே". ஜெயதேவனுக்கு வாழ்த்துகள்!

ஜி.மதிவதனன்:

இவர் யாழ் ஆக்களோட நிறையப் பிரச்சனைப்பட்டு இருக்கிறார் எண்டு நான் இஞ்ச ஆரம்பத்தில இணைஞ்சபோதே எழுதப்பட்ட கருத்துக்களை வாசிச்சு அறிஞ்சுகொண்டன். கொஞ்சம் சூடாக விவாதம் போகேக்க எப்பிடியும் இவர் இவர் பெயரும் சிலவேளைகளில வரப்பாக்கும். யாழ் தவிர வேற பல கருத்தாடல் தளங்களில இவர் பெயரை பார்த்து இருக்கிறன். ஒருவர் தானா இல்லாட்டிக்கு வேறு யாரோவோ எண்டு தெரியாது. மதிவதனன் செய்த ஆக்கங்களை கருத்தாடல் தளம் மூண்டில காண இல்லை. மதிவதனனுக்கு வாழ்த்துகள்!

சந்தியா:

அட சந்தியாவை நான் பழைய பதிவில தவறவிட்டிட்டன். எனக்கு சந்தியாவை தெரியும். சேர்ந்து கருத்தாடல் செய்து இருக்கிறன். இப்ப மறந்துபோச்சிது. தலையிண்ட மகனைப்பார்த்து அழகாய் இருக்கிறார் எண்டு சந்தியா தலையிண்ட Profileக்கு போய் அதில சொல்லி இருக்கிறா. வாழ்த்துகள்!

ராஜாதிராஜா:

இவர் ஓர் தமிழ்நாட்டு உறவு எண்டு நினைக்கிறன். அவாட்டர் பட்தில அப்துல்கலாமிண்ட படம் போட்டு இருக்கிறார். தனது கையெழுத்தில

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்.

இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம்.

எண்டு எழுதி இருக்கிறார். இப்ப அப்துல் கலாமை பற்றி கதைக்க எனக்கு இன்னொரு விசயமும் வந்திட்டிது. அது என்ன எண்டால் கனடாதமிழ் வன் தொலைக்காட்சியில நகைச்சுவையாளர் விவேக் ‘கலாம்’ அவர்களை காணுகின்ற பேட்டி போச்சிது. பார்க்க சூப்பராய் இருந்திச்சிது. அப்துல் கலாம் ஒரு சோடி உடுப்புத்தான் போடுறவராம். மற்றது 2020ம் ஆண்டு இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடுகளில ஒன்றாக கொண்டுவருவதற்கு தேவையான திட்டம் ஒண்டில இப்ப கலாம் அவர்கள் பங்காற்றிக்கொண்டு இருக்கிறாராம்.

ராஜாதிராஜா அவர்கள் ஈழம், தமிழ்நாடு சம்மந்தமான விசயங்களில கருத்தாடல் செய்யுறதில ஆர்வம் காட்டி இருக்கிறார். தமிழ்நாட்டு உறவுகள் யாழில இணைஞ்சு இருக்கிறது நல்ல விசயம். ஆனால் சில பிரச்சனைகளும் வந்து இருக்கிது எண்டு முந்திய சில யாழ் பதிவுகளை பார்த்து அறிஞ்சுகொண்டன். யாழில இருக்கிற எங்கட ஆக்கள் தமிழ்நாட்டு உறவுகளிண்ட மனம் நோகாதவகையில கருத்தாடல் செய்யவேணும் எண்டு நான் கனகாலமா எனது அபிப்பிராயத்தை சொல்லிவந்தன்.

ராஜாதிராஜா இப்ப யாழுக்கு வருவதில்ல. ராஜாவாக வாழ வாழ்த்துகள்!

நளாயினி தாமரைச் செல்வன்:

நளாயினி அக்காவைப்பற்றி நான் அண்மையிலதான் சோழியன் மாமா மூலம் அறிஞ்சுகொண்டன். நான் சோழியன் மாமாவை யாழில நீதியிண்ட தராசு மாதிரி எண்டு சொல்ல, அவர் இல்லை.. தானும் தவறு செய்து இருக்கிறன் நளாயினி அக்கவோட கருத்தாடல் செய்யேக்க எண்டு ஏதோ எழுதி இருந்தார்.

பொதுவாக சொல்லப்போனால் ஒரு பொது விவாத அரங்கு எண்டு சொல்லேக்க பெண்களுக்கு ஆண்களைவிட சில இயல்பான பலவீனங்கள் அல்லது பிரச்சனைகள் இருக்கிது எண்டு நினைக்கிறன். ஆண்கள் எண்டால் உதாரணமாக சபேசனை இல்லாட்டிக்கு நெடுக்காலபோவானை எடுத்தால் அவையளுக்கு சில விசயங்கள் பற்றி வெளிப்படையாக அல்லது பச்சையாக எழுதேக்க எல்லாம் பிரச்சனை இருக்காது. கண்டதையும் எழுதலாம். ஒருத்தரும் ஒண்டும் சொல்லமாட்டீனம். ஆனால் ஒரு பெண் அவர்கள் மாதிரி பச்சையாக எதையாவது எழுதினால் அதை எங்கட சமூகம் வித்தியாசமான பார்வையில பார்க்கும் எண்டுறது உண்மை.

சில விசயங்களை வெளிப்படையாக கதைச்சுத்தான் கருத்தாடல் செய்யவேணும் எண்டு இல்ல. ஆனால்... எதிர்வாதம் செய்யுறவர் பச்சையாக சில விசயங்களை கதைச்சு எடுகோல்கள், சான்றுகள் காட்டினால் அதை பெண்களால முறியடிக்க ஏலாமல் போயிடும். இது அவர்கள் வாதம் ஒன்றில தோல்வி அடையுறதுக்கும் காரணமாக அமையலாம். நான் சபேசனையோ இல்லாட்டிக்கு நெடுக்காலபோவானையோ குத்திக்காட்ட இல்லை. சும்மா ஒரு உதாரணத்துக்கு விளங்கப்படுத்தினன். இப்படியான பிரச்சனையை எப்படி கையாளலாம் எண்டு பெண்கள்தான் ஆராய்ஞ்சு தீர்மானம் செய்யவேணும்.

நான் விசுவிண்ட அரட்டை அரங்கம் பார்க்கிறது. அதில பேசுற பெண்கள் சில விசயங்கள் பற்றி வெளிப்படையாக கூட கதைக்கிறீனம். ஆனால்.. எங்கட பெண்கள் இந்தவிசயங்களை கையாளுறதில நிறையச் சிக்கலுகள் இருக்கிது. கொஞ்சம் கடுமையான போக்கில போனால் பிறகு ஆக்கள் குறிப்பிட்ட பெண்ணைப்பற்றி வேறுவிதமாக கிண்டல் செய்யத்துவங்கீடுவீனம். காலமாற்றம் ஏற்படேக்க இந்தச்சிக்கலுகள் மெல்ல மெல்ல மறையும் எண்டு நினைக்கிறன்.

நளாயினி அக்கா எழுதின கருத்துக்களில ஒரு சில மாத்திரம்தான் கருத்தாடல் தளம் 03 இல இருக்கிது. இதனால அதிகம் ஒண்டும் சொல்ல முடிய இல்லை. மோகனிடம் இடைக்கிடை கோவிச்சு இருக்கிறா போல இருக்கிது அவ கருத்துக்களை அகற்றி இருக்கிறபடியால.

மற்றது, நான் கேட்கவிரும்புற ஒரு விசயம் என்ன எண்டால் நிறைய பழைய உறுப்பினர்கள் ‘கருத்துக்கள உறவுகள்’ குழுமத்தில போடப்படாமல் ‘புதிய உறுப்பினர்கள்’ குழுமத்தில போடப்பட்டு இருக்கிறீனம். ஏன் அப்பிடி செய்து இருக்கிறீனம் எண்டு தெரிய இல்ல. இது மிகவும் நீண்ட சிரமமான செயற்பாடு எண்டுறத ஏற்றுக்கொள்ளவேணும் அதாவது யாழில அந்த குழுமங்கள் பகுக்கப்படேக்க அது ஓர் நீண்ட செயற்பாடாய் இருந்திச்சிது. சுமார் 3000 – 5000 பேரை ஒவ்வொருத்தராக குழுமங்களுக்க போடுறது. ஆனால்... நிறைய பழைய உறுப்பினர்கள் ‘கருத்துக்கள் உறவுகள்’ குழுமத்தில போடப்படாமல் இருக்கிறதால வாற ஓர் பிரச்சனை என்ன எண்டால் சிலவேளைகளில அவர்கள் பல வருசங்களுக்கு பிறகு தற்செயலாக யாழுக்கு வந்தாலும் கருத்துக்களை யாழ் அரிச்சுவடி, உறவோசை பகுதி தவிர வேற இடங்களில பதிய ஏலாது. பழைய உறுப்பினர்கள் எண்டால் அத்தோட அரிச்சுவடிக்கு வந்து மீண்டும் தங்களை அறிமுகம் செய்ய கூச்சப்படுவார்கள்.

சும்மா ஒரு கதைக்கு சொன்னால் நான்கூட இப்ப காணாமல் போயிட்டு இன்னும் நாலைஞ்சு வருசத்தால ஏதோ ஆர்வமிகுதியில திரும்பவும் யாழுக்கு வந்தால், அந்த நேரத்தில என்னை ‘கருத்துக்கள உறவுகள்’ எண்டுற குழுமத்தில இருந்து நீக்கப்பட்டு ‘புதிய உறுப்பினர்கள்’ எண்டுற குழுமத்தில போடப்பட்டு இருந்தால் எனக்கு மனதுக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும்? எவ்வளவு கோவம் வரும்?

நான் நிருவாகத்தை குறைகூறுவதாக நினைக்கக்கூடாது. ஆனால்.. நிருவாகம் கவனிக்காத சின்னச்சின்ன விசயங்கள் மற்றவர்கள் மனதில பெரிய பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தும். மோகன் பாவம் ஒவ்வொருநாளும் வாற தனிமடலை வாசிக்கவே நேரம் இருக்காது. வலைஞனுக்கும் நேரம் இல்லை. மிச்ச ஆக்களுக்கு நாங்கள் எழுதினதுகள் எல்லாத்தையும் வாசிச்சு மட்டறுத்தல் செய்யுறதுக்கே நேரம்காணாமல் இருக்கும். இப்பிடி பல பிரச்சனைகள் இருக்கிது. எண்டாலும் யாழில இருக்கிறவர்களுக்கு மன உலைச்சல் ஏற்படுத்தக்கூடிய சின்னச்சின்ன விசயங்களிலையும் நிருவாகம் கவனம் எடுக்கிறது நல்லது எண்டு நினைக்கிறன்.

நளாயினி அக்கா வளமுடன் வாழ வாழ்த்துகள்!

முல்லை:

முல்லை எண்டுற பெயரில யாழில எல்லாமா எட்டுப்பேர் பதிவுசெய்து இருக்கிறீனம். முல்லையிண்ட அவாட்டர் படம் உங்களுக்கு நினைவு இருக்கிதோ? ஒரு வயோதிப பெண் பொல் ஊன்றிக்கொண்டு நடந்துகொண்டு இருக்கிறது? அவதான் முல்லை. 2003ம் ஆண்டு யாழில இணைஞ்சு இருக்கிறா. கருத்தாடல் தளம் 03இல முல்லை அக்கா கருத்துக்கள் ஒண்டும் எழுத இல்லை. இதனால என்னால ஒண்டும் சொல்லமுடிய இல்லை. யாழுக்கு அண்மையில வருகை தந்து இருக்கிறா. ஆனால் ஒண்டும் எழுத இல்லை. யாழின் வாசகராக இருப்பா எண்டு நினைக்கிறன். வாழ்த்துகள்!

சுடர்:

சுடரும் கருத்தாடல் தளம் ஒண்டு வச்சு இருக்கிறார் போல. அட அட இப்பதான் சுடரிண்ட Profileக்கு போய்ப்பார்தன். சுடரை எனக்கு ஏற்கனவே நல்லாய் தெரியும். யாழ் உறவோசையில சுடரோட நிறையக்கருத்தாடல்கள் செய்து இருக்கிறன். தெரிஞ்சவர்கள் பட்டியலில விடுபட்டு போனீங்கள். மன்னிச்சுக்கொள்ளுங்கோ சுடர்.

சுடருக்கு யாழ் நிருவாகம் சம்மந்தமான சில விசயங்கள் பிடிக்க இல்லப்போல. அதுகள் பற்றி நிறையக்கருத்துக்கள் சொல்லி இருக்கிறார். அத்தோட சுடருக்கும் அருவி மாதிரி தமிழில நல்ல ஆர்வம் இருக்கிது. சுடரும் முந்தி யாழில ஒரு தமிழ் வாத்தியாராக இருந்து இருக்கிறார் போல இருக்கிது. இல்லாட்டிக்கு அருவிதான் சுடரோவும் தெரியாது. கிகி (அருவி, சுடர் சும்மா பகிடிக்கு கோவிக்கிறது இல்ல என)

சுடர் கனடாவில இருக்கிறார் எண்டு நினைக்கிறன். சுடர் தனது வாழ்வில சுடர்விட்டு ஒளிர வாழ்த்துகள்!

யாழினி:

இஞ்ச யாழ் எண்டுற சொல்லை தங்கட பெயரில கொண்டு இருக்கிற ஆக்களிண்ட எண்ணிக்கை எவ்வளவு தெரியுமோ? 36. இதில யாழினி எண்டுற பெயரை இரண்டுபேர் வச்சு இருக்கிறீனம். ஒரு யாழினி 2004ம் ஆண்டு இணைஞ்சு இருக்கிறா இவ மட்டறுத்துனராகவும் இருந்து இருக்கிறா. மற்றவ 2007 இல இணைஞ்சு இருக்கிறா.

நாங்கள் இஞ்ச மட்டறுத்துனர் யாழினி பற்றி மாத்திரம் பார்ப்பம். யாழினி கருத்தாடல் தளம் 03இல எழுதின 95% ‘கருத்துக்கள் - கருத்துக்களில் மாற்றம்’ பகுதியில எழுதின மட்டறுத்தல் அறிவித்தல் கருத்துக்கள் தான்.

இப்ப ஒரு விசயம் சொல்லவேணும் என்ன எண்டால் நான் யாழில இணைஞ்ச ஆரம்பத்தில இந்தச்சொல்லை கேட்க எனக்கு கொஞ்சம் சிரிப்பாய் இருந்திச்சிது. 'அது என்ன மட்டறுத்துனர், மட்டறுத்தல்' எண்டுற சொல்லுகள் எண்டு. யார் இதை கண்டுபிடிச்சீனமோ தெரியாது. நான் சிலது நிருவாகத்தோட ஏதாவது மனக்கசப்புக்கள் வந்தால் 'மட்டைஅறுத்தல்', 'மட்டைஅறுத்துனர்கள்' எண்டு சொல்லி இருக்கிறன். கோவிச்சுக்காதிங்கோ.

மட்டறுத்துனராக இருந்தால் நாங்கள் பல விசயங்களை இழக்கவேண்டிவரும் எண்டு சொல்லலாம். முக்கியமாக ஒரு படைப்பாளியாக இருக்கிறது மிகவும் கஸ்டம். அத்தோட மட்டறுத்துனராக ஒருவர் இருக்கேக்க அவரது ஆக்கம் ஒண்டை ஒருத்தர் நையாண்டி செய்தால் அதை குறிப்பிட்ட மட்டறுத்துனர் மட்டறுத்தல் செய்யவும் ஏலாது. அப்பிடி செய்தால் பிறகு அவர் விமர்சனங்களை வெறுப்பதாக – சர்வாதிகாரம் செய்வதாக அமைஞ்சுவிடும்.

யாழ்பிரியாவை முந்தி நான் காலக்கண்ணாடி செய்யச்சொல்லி கேட்ட அவ எனக்கு தண்ணிகாட்டியதற்கான காரணம் இதுவாகவும் இருக்கலாம். யாழில மட்டறுத்துனர்கள் எங்களோட கருத்துக்கள் பதியுறதுக்கு தயக்கம் காட்டுறதுக்கான காரணங்களில ஒண்டு இதுவாகவும் இருக்கலாம். ஒருமுறை இணையவன் மட்டறுத்துனராக இணைஞ்ச ஆரம்பத்தில அவர் நகைச்சுவையாக சொன்ன ஒருவிசயத்தை ஒருத்தர் தூக்கிப்பிடிச்சு விமர்சனம் செய்து பிறகு பிரச்சனையாப் போட்டிது. நாங்களும் ஒத்துழைப்பு குடுக்காமல் இருக்கிறதால மட்டறுத்தல் செய்யுற ஆக்களும் எங்களோட சேர்ந்து கருத்தாடல் செய்யுறதை தவிர்த்து வருகிறீனம் போல இருக்கிது.

யாழினி இப்ப யாழுக்கு வாறது இல்லபோல. வாசகராக இருக்கிறாவோ தெரியாது. வாழ்த்துகள்!

கண்ணன்:

யாழில முந்தி Breaking News எண்டு ஒரு கருத்தாடல் ஊர்ப்புதினத்தில மிகவும் பிரபலமாய் இருந்து இருக்கிது போல. 111 பக்கங்கள் இருக்கிது எண்டால் யோசிச்சுப்பாருங்கோவன். எல்லாமாய் 2220 சொச்சம் பதில் கருத்துக்கள் எழுதப்பட்டு யாழ் ஆடுகளத்தில இருக்கிற கறுப்பியிண்ட போட்டிகளையும் விட சாதனைகள் செய்து இருக்கிது போல. நிறைய வெட்டுக்கொத்து உதுக்க நடந்து இருக்கிது போல.

இந்த Breaking News கருத்தாடலை மதன் ஆரம்பிச்சு இருக்கிறார். சுமார் 50,000 தடவைகள் இது பார்க்கப்பட்டு இருக்கிது. கடைசியில பூட்டுப்போட்டு மூடும் அளவுக்கு போயிருக்கிது எண்டால் எந்த அளவு அகோரமாய் கருத்தாடல் நடந்து இருக்கும் எண்டு நீங்களே கற்பனை செய்து பாருங்கோ. கண்ணனும் இதுக்க நிறைய மினக்கட்டு இருக்கிறார்.

இந்த நேரத்தில மதன் பற்றியும் சில விசயங்கள் சொல்லவேணும். நான் ஆரம்பத்தில சொல்ல எனக்கு நினைவுக்கு ஒண்டும் வர இல்லை. யாழில மதன் மட்டறுத்துனர்களில மிகவும் சிறந்த ஒருவர் எண்டுற பொதுவான அபிப்பிராயம் இருக்கிது. நானும் அவதானிச்ச அளவில மதன் நல்ல சினேகபூர்வமாக கருத்தாடல் செய்வார். அதிக அளவில மட்டறுத்துனர் எண்டுற நிலையில இருந்து இறங்கி வந்து எல்லாரோடையும் சேர்ந்து ஒரு சக கருத்தாளனாக கருத்தாடல் செய்வார். நான் முந்தி ஒருக்கால் மதனுடன் கடலை போடுவதற்கு அவரை எனது எம்.எஸ்.என் இல சேர்த்து இருந்தன். பிறகு பிரித்தானியா – கனடா நேரவேறுபாடுகள் காரணமாக கடலை போட முடியவில்லை எண்டு நினைக்கிறன். மதன் நல்லாய் பீ.பீ.சி செய்திகள் பார்ப்பார் எண்டு அவரது கருத்துக்களை வாசிச்சதில இருந்து தெரியுது. மதனுடன் நான் முந்தி யாழ் சம்மந்தமாக பல்வேறு விசயங்கள் பற்றி யாழில நிறைய தனிமடல்கள் பரிமாறி இருக்கிறன். மதனுக்கு வாழ்த்துகள்!

கண்ணனிண்ட பதிவுகள் யாழ் கருத்தாடல் தளம் 03 இல ஒரு சில தான் இருக்கிது. கண்ணன் வளமுடன் வாழ வாழ்த்துகள்!

இளங்கோ:

ஏராளம் பழைய உறுப்பினர்கள் (மேலயும்) பலர் சேதுவை உள்ளுக்க விடலாமா 'சேதுவை உள்ளுக்க விடக்கூடாதா?' எண்டு கேட்டு பல ஆராய்ச்சிகள் செய்துபோட்டு கடைசியில தாங்கள் உள்ளுக்க நிக்காமல் வெளியால போட்டீனம். இளங்கோவும்கூட இந்த ஆராய்ச்சியை செய்து இருக்கிறார்.

நாங்கள் சிங்களவனை குற்றம் சொல்லிறது அவன் எங்கட குரல்வளையை நெரிக்கிறான், ஜனநாயகம் பேசவிடுறான் இல்லை எண்டு. ஆனால் நாங்கள் மட்டும் லேசுப்பட்ட ஆக்கள் இல்லை. கருத்தாடல் தளம் ஒண்டிலையே மாற்றுக்கருத்துக்கு இடம் இருக்கக்கூடாது எண்டு நினைக்கிற எங்கட கையில பிரிட்டிஷ் காரங்கள் ஆட்சியையும் ஒப்படைச்சுட்டுப்போட்டு போயிருந்தால் என்ன நடந்து இருக்கும்? சிங்களவனை அப்பிடியே தென்பகுதிக்கு கலைச்சு அடிச்சு இந்து சமுத்துரத்துக்க கொண்டுபோய் தள்ளிவிழுத்தி - சமாதிகட்டி - நாங்களும் இன அழிப்பு செய்து இருப்பம். எனக்கு சேது யார், எப்படியான கருத்துக்களை கொண்டிருந்தார், அவரது கருத்து எழுதும் பாணிகள் ஒண்டும் தெரியாது. நான் அவருக்கு இஞ்ச வக்காளத்து வாங்க இல்லை. ஆனால்... இன்னொருத்தரை யாழை விட்டு அடிச்சு ஓட்டி கலைக்கிற அளவுக்கு கருத்துக்கள உறவுகள் மோசமாக இருந்து இருக்கிறார்கள் எண்டுறதை நினைக்க கொஞ்சம் யோசிக்கவேண்டி இருக்கிது.

இளங்கோ எழுதின மற்றைய கருத்துக்கள் பற்றி சொல்லிறதாய் இருந்தால் மூளைக்கு வேலை குடுக்கிறதில ஆளுக்கு நல்ல ஆர்வம் இருக்கிது போல. யாழ் ஆடுகளம் மூளைக்கு வேலை பகுதியில நல்லாய் மினக்கட்டு இருக்கிறார்.

யாழில நிறைய இளங்கோக்கள் இருக்கிறதால ஒரே குழப்பமாய் இருக்கிது. இவர் தவிர யாழில பிரபலமான இன்னும் இரண்டு இளங்கோக்கள் இருக்கிறீனம் போல. புதுசாய் சேரேக்க புதிய ஆக்களுக்குத்தான் ஏற்கனவே குறிப்பிட்ட ஒரு பெயர் பாவிக்கப்படுகிது எண்டு தெரியாட்டிக்கும், நிருவாகம் அவர்களை அனுமதிக்கும்போதே அவர்கள் பழைய ஆக்களிண்ட பெயரை தெரிவு செய்தால் அவர்களிடம் அதைச்சொல்லி உடனடியாக பெயரை மாத்துவிக்கலாமே? இப்ப இப்பிடி சின்னச்சின்ன விசயங்களில கவனம் செலுத்த மோகனுக்கு நேரம் இருக்காது. ஆனால் ஒரு காலத்தில யாழ் இணையம் பெரிய அளவில வளர்ச்சி அடையேக்க நான் சொன்ன இந்த விசயங்களையும் கருத்தில எடுத்தால் நல்லது.

மற்றது, மன்னிச்சுக்கொள்ளுங்கோ என்ன எண்டால் நிறையப்பேர் எனக்கு முறைபாடு நான் நிறைய பெயர் மாற்றங்கள் செய்திட்டனாம். இனி இன்னும் ஒண்டும் மாத்தவேண்டாமாம் எண்டு. மாப்பிளை / மாப்பு / கலைஞன் / முரளி / மாற்றுக்கருத்து மாணிக்கம் / மீட்பர் யேசு / கலைஞ்ஞானந்தாஜி சுவாமிகள் / குருஜி / குரு. பிறகு கடைசியாக ‘கனடா சாத்திரி’ எண்டு இப்பிடி எண்ட பெயருகள் நீளமாய் போகிது. நான் என்ன செய்யுறது?

எனக்கு இளங்கோ எண்டுற பெயரில நல்லதொரு நண்பர் இருந்தவர். அவர் நல்லாய் தபேலா, மிருதங்கம் எல்லாம் அடிப்பார். இளங்கோ நீங்களும் ஏதாவது அடிப்பீங்களோ? அதுக்காக ஆக்களுக்கு அடிப்பன் எண்டு சொல்லிப்போடாதிங்கோ.

இளங்கோ வளமுடன் வாழ வாழ்த்துகள்!

கணணிப்பித்தன்:

கணணிப்பித்தன் பற்றி யாழ் உறுப்பினர்கள் பட்டியலில தேடிப்பார்த்தன். ஒரு தகவலையும் காண இல்லை. கணணியில பித்தனாய் இருந்தால் பரவாயில்லை. ஆனால் அதன்மூலம் பயனுள்ள அலுவல்களை பார்த்தால்போதும். கணணிப்பித்தன் கணணியில பல்வேறு சாதனைகள் படைக்க, மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகள்!

கபிலன்:

கபிலன் கருத்தாடல் தளம் 03இல பதிஞ்ச ஒரே ஒரு கருத்துதான் இருக்கிது. அவர் என்ன எழுதி இருக்கிறார் எண்டு பாருங்கோ (Breaking News எண்டுற கருத்தாடல் தலைப்பில):

செய்தி---தகவற்களம்.. அதனால் தகவல் தந்திருக்கிறார் சேது.

பகுத்தாய்வது அவரவர் பொறுப்பு..

வேண்டாப் பொண்டாட்டி கைபட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம் என்பது போல..சேது சொல்வதையெல்லாம் எதிர்க்கிறீர்களே?

கபிலனுக்கு வாழ்த்துகள்!

யாழ்பிரியன்:

நான் எண்ட பெயரை மாப்பிளை எண்டுறதில இருந்து கலைஞன் எண்டு முந்தி மாத்தினனான் தானே? அப்ப என்ன நடந்திச்சிது எண்டால் நான் ஆரம்பத்தில எண்ட பெயரை ‘செல்வன்’ எண்டு மாத்துமாறுதான் மோகனிட்ட கேட்டு இருந்தன். அப்பிடி ஏற்கனவே ஒரு ஆள் இருக்கிதாம் எண்டு அவர் பதில் போட்டு இருந்தார். அதுக்கு பிறகு அடுத்த தெரிவாக நான் கேட்டது ‘யாழ்பிரியன்’ எண்டு மாத்தச்சொல்லி. அதுவும் ஏற்கனவே இருக்கிது எண்டு சொல்ல பிறகு கலைஞன் எண்டு பெயர் சூட்டப்பட்டன். ‘கலைஞன்’ எண்டுற பெயரும் ஏற்கனவே இருந்தால் நான் எண்ட அடுத்த தெரிவாக கேட்டது ‘மாணவன்’ எண்டுற பெயர்.

யாழ்பிரியன் நிருவாகத்தில இருந்து இருக்கிறார் போல. அவர் தண்ட கையெழுத்தில

அன்புடன்

பிரியன்

கள நிர்வாகம்

எண்டு போட்டு இருக்கிறார். யாழ்பிரியன் கருத்தாடல் தளம் 03 இல கருத்துக்கள் ஒண்டும் பதிய இல்லை. அதான் அவர் சார்பாக நான் இத்தனை கருத்துக்களை பதிஞ்சுபோட்டனே என!

யாழ்பிரியன் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகள்!

முற்றும்! :)

பிற்குறிப்பு:

சுவாரசியமாக இருக்கிறதுக்காகவும், மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் எண்டுறதுக்காகவும் சில தனிப்பட்ட தகவல்களை நான் இதில வழங்கி இருக்கிறன். அதப்பார்த்துபோட்டு தயவுசெய்து யாராச்சும் உங்களுக்க சண்டைபிடிச்சுக் கொள்ளாதிங்கோ. ‘ஏன் முரளிக்கு நீ அப்பிடி சொன்னீ, இப்பிடி சொன்னனீ’ எண்டு. யாழ் ஆக்கள் எல்லாரும் எம்.எஸ்.என், ஸ்கைப், தொலைபேசி, நேரடியாக எல்லாம் ஒருவரை ஒருவர் காணுவீங்கள். நான் இஞ்ச எழுதினத வாசிச்சுப்போட்டு பிறகு உங்களுக்க தயவுசெய்து யாராச்சும் கோபிச்சுக் கொள்ளாதிங்கோ. ஏதாவது எண்டால் எனக்கு தனிமடல் அனுப்புங்கோ. நான் உங்களுக்கு பிடிக்காத உங்களைப்பற்றிய தனிப்பட்ட விசயங்கள் ஏதாவது இருந்தால் நீக்கிவிடுறன். தயவுசெய்து இதை யாழில இருக்கிற உறவுகள் கவனத்தில எடுங்கோ.

மூத்த உறுப்பினர்கள் / பழையவர்கள் பற்றியும் நான் ஒரு பதிவை வைக்கவேணும் எண்டு சுட்டிக்காட்டிய நெடுக்காலபோவானுக்கு மிக்க நன்றிகள்! உண்மையில நான் இவர்கள் பற்றியும் ஒரு பதிவை வைக்கவேணும் எண்டு விதி போல ஏன் எண்டால்... நான் எனது Lease செய்யப்பட்ட Notebookஐ நேற்று பாடசாலையில திருப்பிகுடுக்கிறதுக்காக போயிருந்தன். பனிப்புயல் காரணமாக பாடசாலை நேற்று நேரத்துடன் மூடப்பட்டுவிட்டிச்சிது. இதால குடுக்க முடிய இல்லை. குடுத்து இருந்து இருந்தால் நாளைஞ்சு நாளைக்கு நான் யாழுக்கு வந்து இருக்க ஏலாது. ஏன் எண்டால் உடனடியாக நான் கணணி ஒண்டை பெற்று இருக்க முடியாது. வேற எங்கையாவது போய் கணணி பாவிக்கலாம்தான். ஆனால் போற இடங்களில, மற்றது பள்ளிக்கூட கணணிகளில Suratha Keyman வசதி இல்லை. இதனால தமிழில எழுதுறது கஸ்டம். என்ன இருந்தாலும் வீட்டில இருந்து யாழுக்கு வாறமாதிரி ஒரு சுகம் வேற இடங்களில இருந்து யாழுக்கு வரேக்க வராது.

அனைவரது உற்சாகமான கருத்துக்களுக்கும், விமர்சனங்களுக்கும் நன்றிகள்! யாழ் நிருவாகத்திற்கும் குறிப்பாக மோகனிற்கும் மீண்டும் ஒரு தடவை நன்றிகள்!

காலம் இடம்தந்தால் நான் தொடர்ந்து யாழுடன் இணைஞ்சு இருப்பன். இல்லாதுவிடில் நானும் மேல சொன்னாக்களைப்போல ஒரு காலத்தில பழைய உறுப்பினர் எண்டு பேசப்படுற நிலைக்கு வந்துவிடுவன். என்ன நடந்தாலும் என்னையும் புதிய உறுப்பினர்கள் எண்டு என்னைக் கொஞ்சக்காலம் யாழில காணாட்டிக்கு குழுமத்தை மாத்தி போட்டுதாதிங்கோ மோகன். பிறகு நான் மனம் உடைஞ்சு போவன் (பகிடி எண்டாலும் உண்மையாத்தான் சொல்லிறன்).

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ், மற்றும் 2009 புதுவருட வாழ்த்துகள்! வரும் புதுவருடம் எங்கள் எல்லாருக்கும் பலவிதமான நன்மைகளை கொண்டுவரவும், தாயக மக்களுக்கு ஒரு விடிவு கிடைக்கவும் வழி செய்யும் என பிரார்த்தித்து விடைபெறுகின்றேன்.

நன்றி! வணக்கம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருவிங்க.. ரம்ப பாசம்ங்க என்னைலை...என்னை பற்றி சொன்னாரா :wub:

சொன்னாரு சொன்னாரு.. ஒரு காலத்தில்.. யாழில் கூவம் ஓடியதாகச் சொன்னாரு. இப்ப.. எப்படி நைனா... கூவம்.. வைகையாச்சுதா.. இல்ல இன்னும்...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதாரணமா, இப்ப நான் முரளி எண்டும் கலைஞன் எண்டும் யாழில வேறவேற பெயரில எழுதுறன் எண்டு வைப்பம். இந்த விசயம் ஒருத்தருக்கும் தெரியாது எண்டும் வைப்பம். அத்தோட நான் முரளி, கலைஞன் எண்டுற பெயர்களில வலைத்தளங்களும் வச்சு இருக்கிறன் எண்டும் வைப்பம். இந்தநேரத்தில முரளியையும் கலைஞனையும் யாழ் மூலம் அறிமுகம் ஆகிய வேறு வேறு பெண்கள் (இரண்டு நண்பிகள்) தீவிரமாக காதலிக்கத்துவங்கினால் என்ன செய்யுறது? நான் நல்லவனாய் இருந்தால் எனக்கு பிரச்சனை. நான் கூடாதவனாய் இருந்தால்..? இதைப்பற்றி மேலதிகமாக ஆராய்ஞ்சு டைகர் பமிழ் வேணுமெண்டால் ஒரு படம் எடுக்கலாம். கிகி (குருவிகள், நெ.போ இதைவாசிச்சுப்போட்டு கோவிக்கக்கூடாது. எல்லாம் சும்மா ஒரு கற்பனை தான்)

உங்கட கவலை நியாயமானதுதான். குருவி பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் நான் எந்தப் பெண்ணையும் காதலிக்க மாட்டேன்..!(அதற்காக பிறகு கேய் (gay) என்று சொல்லுறதில்ல.) கோடி பணம் கொட்டித்தந்தாலும் காதலிக்க மாட்டேன். ஆனால் என்னை நான் நல்லவன் என்று சொல்லமாட்டன். எனக்கு அநியாயம் என்று படுறதை இயன்ற வரை நியாயத்தால எதிர்க்க முனைவன். அது தோற்றால்.. அநியாயம் செய்து அநியாயத்தை அழிக்கவும் பின்னிற்கமாட்டன்..!

நல்லவனா இருந்திட்டா இந்த உலகம் உங்களை வாழவிடும்... என்று நினைக்கிறீங்க. நிச்சயம் இல்லை. கெட்டவனாக்கியே பார்க்கும். இல்லைக் கேணயனாக்கிப் பார்க்கும்..! நான் நல்லவனாக இருந்து பார்த்ததில கிடைச்ச அனுபவத்தில சொல்லுறன்..! :wub:

Link to comment
Share on other sites

//நல்ல நகைச்சுவையாகவும் கவிதை எழுதுவார்.//

முரளி முதல்ல உங்களுக்கு ஒரு கும்பிடு... நான் எழுதிறதை கவிதை என்று சொன்னதற்காக... (நீங்க வேற... சும்மா ஒரு சபை நாகரீகத்திற்காக சொன்னா... )

நல்ல விசயம் ஒன்றைச் செய்யிறீங்க... கவனிப்பு என்பது ரொம்ப முக்கியம்...

நீங்க ஓராளப் பற்றி எழுதிறதே அவங்களைப் பற்றிய சின்ன அங்கீகாரத்தை ஏற்படுத்தின மாதிரி...

ஆக அடியேன் சொல்ல வாறது என்ன என்றால்... (அப்பு... பேசாமாப் போறீங்களா...? ம்... சரி... சந்திப்பம்... )

Link to comment
Share on other sites

நல்லவனா இருந்திட்டா இந்த உலகம் உங்களை வாழவிடும்... என்று நினைக்கிறீங்க. நிச்சயம் இல்லை. கெட்டவனாக்கியே பார்க்கும். இல்லைக் கேணயனாக்கிப் பார்க்கும்..! நான் நல்லவனாக இருந்து பார்த்ததில கிடைச்ச அனுபவத்தில சொல்லுறன்..! :lol:

உண்மைதான் நெடுக்காலபோவன். கடவுள் இந்த உலகத்தில நல்லவங்களைத்தான் சோதிக்கிறார். கெட்டவங்களாக இருந்தால் வேதனை குறைவு போல இருக்கிது. மற்றது, நல்லவனாய் இருந்திட்டம் எண்டு ஒருத்தரும் வந்து Appreciate பண்ணப்போறதில்ல. இந்த இயந்திரமயாமான - வியாபார உலகத்தில யார் நல்லது, கெட்டது பார்க்கிறாங்கள்? காரியம் - விசயம் முடிஞ்சால் சரி. எண்டாலும் அதுக்காக நாங்கள் மிருகங்கள் மாதிரி வாழவேணும் எண்டும் இல்லத்தானே. உலகத்தில 80% மனுசர் மிருகங்கள் மாதிரி இருந்தாலும் மிகுதி 20% மனுசருக்காகவாவது நாங்கள் மனச்சாட்சிப்படி வாழலாம் தானே.

உங்களுக்கு கிடைச்ச கசப்பான அனுபவங்கள் பற்றி அவை என்ன எண்டு எனக்கு தெரியாது. ஆனால்.. நான் சொல்லவாறது என்ன எண்டால் அந்த 20% மனிதர்களுக்காக நீங்கள் மென்போக்கை கடைப்பிடிச்சால் அது தவறானது இல்லை எண்டுதான். மற்றவன் மனச்சாட்சிப்படி வாழ இல்லை எண்டுறதுக்காக நாங்கள் கடும்போக்கை கடைப்பிடிக்கவேணும் எண்டு இல்லைத்தானே. எண்டாலும் அனுபவசாலி நெடுக்காலபோவனிண்ட சிந்தனைகளை நான் எச்சரிக்கை சமிக்ஞைகளாக எடுத்துக்கொள்ளுறன். ஏன் எண்டால் சில விசயங்களில எனக்கு அனுபவம் குறைவு எண்டுறத ஏற்றுக்கொள்ளத்தான் வேணும். :D

//நல்ல நகைச்சுவையாகவும் கவிதை எழுதுவார்.//

முரளி முதல்ல உங்களுக்கு ஒரு கும்பிடு... நான் எழுதிறதை கவிதை என்று சொன்னதற்காக... (நீங்க வேற... சும்மா ஒரு சபை நாகரீகத்திற்காக சொன்னா... )

நல்ல விசயம் ஒன்றைச் செய்யிறீங்க... கவனிப்பு என்பது ரொம்ப முக்கியம்...

நீங்க ஓராளப் பற்றி எழுதிறதே அவங்களைப் பற்றிய சின்ன அங்கீகாரத்தை ஏற்படுத்தின மாதிரி...

ஆக அடியேன் சொல்ல வாறது என்ன என்றால்... (அப்பு... பேசாமாப் போறீங்களா...? ம்... சரி... சந்திப்பம்... )

வணக்கம் கவிரூபன் ஐயா. முந்தி யாழுக்கு அடிக்கடி வருவீங்கள். இப்ப வருகை குறைஞ்சிட்டிது. அது என்ன எண்டால் நான் நேற்று நித்திரைக்கு போகேக்க விடைபெற்றுக்கொள்கின்றேன் எண்டு இறுதியில எழுதினனான். அதை நீங்கள் வேறமாதிரி விளங்கீட்டீங்கள் போல. :icon_mrgreen: எதிர்காலத்தில எனது யாழ் வருகையில கொஞ்சம்குறைவு ஏற்படும். ஆனால் இன்னும் ஒண்டு ரெண்டு நாளைக்கு பழையமாதிரி அடிக்கடி வந்துபோகக்கூடியதாய் இருக்கும்.

எல்லாரும் சுப்பற்ற கொல்லையுக்க தானே இருக்கிறம். காலம் - சந்தர்ப்பம் இடம்தரேக்க சந்திப்பம். நீங்கள் உங்கட கவிப்பயணத்தை தொடருங்கோ. நன்றிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியை தொடக்கி வைத்து யாழ் கள உறுப்பினர்களுக்குள் ஓர் ஐக்கியத்தை உருவாக்க முயன்றுள்ளதாக நினைக்கிறேன். மேலும் பலரைப் பற்றிய சுவாரசியமான விடயங்களை அறியமுடிந்தது ஒரு வகையில் பயனுடையதாகவே இருக்கும்.

கிருபன்:

யாழில ஒவ்வொருத்தரும் ஒவ்வொருமாதிரி எழுதுவீனம். ஆனால் கிருபன் ஒரு கருத்தை இஞ்ச சொன்னால் அதன் உண்மையான உட்கிடக்கை என்ன எண்டு யாழில ஆக ஒருசிலருக்கு மாத்திரம்தான் விளங்கும். எனக்குக்கூட கிருபனிண்ட எழுதும்பாணியை சரியாக விளங்கிக்கொள்ள ஆறுமாதம் எடுத்திச்சிது எண்டு சொல்லலாம்.

அதிகம் சிறுகதைகளையும், சிறுபத்திரிகைகளில் வரும் கவிதைகளையும் படிப்பேன். அவற்றின் கருவையும் சொல்லவந்த செய்தியையும் அறிந்துகொள்ள மண்டையைப் போட்டு உடைக்கவேண்டும். அந்தப் பழக்கதோஷத்தில் கருத்துக்கள் எழுதுவதனால் தொக்கி நிற்கும் விடயங்களை வாசிப்பவர்களே தங்கள் சிந்தனைப் பரப்பிற்கு ஏற்றபடி அறிந்துகொள்ள வேண்டும்.

ஹி.ஹி.ஹி :icon_mrgreen:

உண்மையில் நான் சிந்திக்கும் வேகத்தில் கைவிரல்கள் தட்டச்சு செய்யாது. எனவே சொற்களிம் வசனங்களும் அரைகுறையாக நிற்கும். அத்துடன் சிலவிடயங்களை வெளிப்படையாகச் சொன்னால் வீடு தேடி வந்து வெட்டுவார்களோ (கருத்துக்களை வெட்டினால் பரவாயில்லை) என்ற பயமும் உள்ளது :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை:

யாழில அண்மையில இணைஞ்சு கலக்கி அடிச்சு வாறவர்களில சுப்பண்ணையும் ஒருவர். சுப்பண்ணை துவங்கிய தலைப்புக்களில பிரபலமானது முஸ்லீம்கள் சம்மந்தமான ஏதோ ஒரு விசயம். வாழ்த்துகள்!

நன்றி முரளி. நீங்கள் எழுதிய இந்த பதிவை புதிதாக இணைபவர்கள் ஒருமுறை வாசித்தால் எல்லோரையும் பற்றி இலகுவாக அறியக்கூடியதாக இருக்கும் .வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

என் கிறுக்கல்களை கவிதையென்று ஏற்று ரசித்த முரளிக்கு முதலில் நன்றிகள்.ஆனாலும் எனக்கு ஆச்சரியம் தான்!!!நிறைய விடையத்தை ரசனையோடு தந்த முரளிக்கு கூட என் கிறுக்கல் பிடித்தது.பல பெயர் கொண்டாலும் சிந்தனை கொண்ட ஆக்கங்கள் நிறைய வரவேண்டும் என கேட்டுக் கொண்டு. எப்போதும் யாழ் வரும் என்னை மீண்டும் எழுத வைத்த உங்களுக்கு மீண்டும் நன்றிகள்கூறி.பழய நினைவுகளை மீட்டிக் கொண்டு விடைபெறுகின்றாள் இவள்.

Link to comment
Share on other sites

உங்கள் ஞாபக சக்தி வியப்புக்குறியது வாழ்த்துக்கள் சின்னப்பு சீ.. மறந்துட்டன் முரளி

Link to comment
Share on other sites

KஊGGஓஓ:

நான் யாழில இணைஞ்ச ஆரம்பத்தில இவருடன் (பெயரை எப்படி உச்சரிக்கிறது எண்டு தெரிய இல்ல) பலப்பல கருத்துக்களை பரிமாறி இருக்கிறன். அண்மையில நான் சேர்.ஆர்தர்.சீ. கிளார்க் சம்மந்தமாக ஆரம்பிச்ச கருத்தாடலில பங்குபற்றி எனக்கு வாழ்த்து சொல்லி இருந்தார். கனகாலம் யாழுக்கு வராமல் இருந்தார். ஏன் எண்டு தெரிய இல்லை. வளமுடன் வாழ, இவரது தாயகத்திற்கான சேவைகள் தொடர வாழ்த்துகள்!

நன்றி முரளிமாப்பிளை உமது வாழ்த்துக்களுக்கு...

என்னை குக்கூ என்று அழைக்கலாம்..இப்புனை பெயர் வைத்த காரணம்..எனது பெயர் குகன் என்பதை விட எங்கள் சுவர் மணிக்கூடு குக்கூ என்று தான் குருவி வெளியில் கத்தி நேரத்தை அறிவிக்கும்,,அதாவது நேரத்தை அறிவிப்பதன் மூலம் எங்களை விழிப்பு நிலைக்கு எம்மை ஊசார்ப்படுத்துகிறது..

எனவே எமது தாயக போரட்டத்திலும் எம்மக்களை ஒருவிதமன விழிப்பு நிலைக்கு கொண்டுவர இதனை நான் தெரிவு செய்தேன்... அத்துடன் நீர் ஆங்கிலத்தில் பாடி எனக்கு அனுப்பிய பாடல் கேட்டிருந்தேன் நன்றாக இருந்தது.. ஆங்கிலத்தில் தமிழர் விடுதலை சம்பந்தமான கிட்டான பாடல்கள் உருவாக்கி உலகம் முழுவதும் கிட்டாக வேண்டும்...இதற்கும் என் மனதார வாழ்த்துகள்...மாயாவின் காகித விமானங்கள் போன்று..

Link to comment
Share on other sites

chozhan + பல்லவன்:

இவர்கள் இருவரது பெயரையும் நான் ஒண்டாக போட்ட காரணம் என்ன எண்டால் இருவரும் அண்மையில இணைஞ்சு இருந்தார்கள் அத்தோட ஏறக்குறைய ஒரேமாதிரியான பாணியில என்னுடன் கருத்தாடல் செய்து இருந்தார்கள்.

சோழன் பற்றி சொல்லுவதாய் இருந்தால் அதிகம் ஊர்ப்புதினம் பகுதியில மினக்கட்டுகொண்டு இருப்ப்பார். பல்லவன் ஊர்ப்புதினம் பகுதியில மினக்கட்டாலும் இதரபகுதிகளுக்கும் சென்று கருத்தாடல் செய்வார். மல்லிகைவாசம் ஆரம்பிச்ச நான் விரும்பிய புத்தகம் பகுதியில இவர் எழுதிய பயனுள்ள கருத்துக்கள் நினைவில இருக்கிது.

இப்ப நீங்கள் கருத்து எழுதேக்க உங்களை ஒருவர் Annoy பண்ணிக்கொண்டு இருந்தால் என்ன செய்வீங்கள்? நான் முந்தி யாராவது அப்பிடி செய்யேக்க கண்டுகொள்ளுறது இல்லை. ஆனால்.. இப்ப திருப்பி ஏதாவது எழுதி விடுறது. சிலது அநாகரிகமான வார்த்தைகளும் பாவிக்கிறது. நான் அநாகரிகமான வார்த்தைகளை பாவிச்சு கருத்து எழுதேக்க அந்த கருத்தை மட்டறுத்துனர்கள் தூக்குவார்கள் எண்டு எனக்கு தெரியும் ஆனால் தெரிஞ்சும் அப்பிடி எழுதுறது. ஏன் எண்டால் சில சூழ்நிலைகளில இப்பிடி எழுதினால்தான் யாராவது Annoy பண்ணேக்க கருத்தாடல் தலைப்பு திசைதிரும்பாமல் பார்த்துக்கொள்ள முடியும். மேலும் அவர் Annoy பண்ணுவதை நிறுத்தமுடியும்.

மற்றும்படி சோழன், பல்லவனுடன் எனக்கு எதுவித பிரச்சனைகளும் இல்லை. இருவரும் தாயகம்மீது அதிகபற்று வைத்து இருக்கின்றார்கள் எண்டு அவர்கள் எழுதுகின்ற கருத்துக்களை வாசிக்கும்போது விளங்கிது. சோழன், பல்லவன் வளமுடன், மகிழ்வுடன் வாழ வாழ்த்துகள்!

முரளி,

நன்றி, தங்களது இந்த பதிவின் மூலம் , பல கள உறவுககளை பற்றி அறிய கூடியதாக இருந்தது,

எழுத வந்த கருத்தை விரிவாக எழுத நேரமில்லாமையும் , பொறுமையின்மையும்

ஓரிரு வரியில் கருத்து எழுத வைத்து விடுகிறது, சீண்டுவதாகவும் அமைந்து விடுகிறது.

. சீண்டும் நோக்கம் இல்லை, நீங்கள் கூறியது போல் அனுபவம் இல்லாததும் ஒரு காரணம்

மேலும் வாழ்க்கையில் நல்ல நிலை அடைய வாழ்த்துகள் முரளி

Link to comment
Share on other sites

அதிகம் சிறுகதைகளையும், சிறுபத்திரிகைகளில் வரும் கவிதைகளையும் படிப்பேன். அவற்றின் கருவையும் சொல்லவந்த செய்தியையும் அறிந்துகொள்ள மண்டையைப் போட்டு உடைக்கவேண்டும். அந்தப் பழக்கதோஷத்தில் கருத்துக்கள் எழுதுவதனால் தொக்கி நிற்கும் விடயங்களை வாசிப்பவர்களே தங்கள் சிந்தனைப் பரப்பிற்கு ஏற்றபடி அறிந்துகொள்ள வேண்டும்.

நீங்கள் இலக்கியத்தில ஆழமாய்ப்போய் வாசிக்கிறனீங்கள் எண்டு நீங்கள் இணைக்கிற தகவல்களில இருந்து அறிஞ்சுகொண்டன். நான் முந்தி சஞ்சிகைகள் வாசிக்கிறது. இப்ப அப்பிடி ஒண்டும் வாசிகிறது இல்லை. நீங்கள் யாழில இணைக்கிற கவிதைகளை வாசிச்சு மகிழ்வதற்கு எனக்கு பொறுமை இருக்கிறதில்லை. ஏன் எண்டால் கொஞ்சம் கனமானவையாக இருக்கும். ஆனால் ஒருசிலவற்றை வாசிச்சு இருக்கிறன். அப்ப கிருபன் படைப்புக்கள் ஒண்டும் செய்ய முயற்சிக்கிறது இல்லையோ? உங்கட வலைப்பூவுக்கு முந்திவந்து வாசிக்கிறனான். பிறகு வலைப்பூவில எழுதுறதை நிப்பாட்டீங்கள் போல இருக்கிது.

நன்றி முரளி. நீங்கள் எழுதிய இந்த பதிவை புதிதாக இணைபவர்கள் ஒருமுறை வாசித்தால் எல்லோரையும் பற்றி இலகுவாக அறியக்கூடியதாக இருக்கும் .வாழ்த்துக்கள்

நன்றி சுப்பண்ணை. நீங்களும் யாழில தொடர்ந்து கலக்கி அடிக்க வாழ்த்துகள்!

என் கிறுக்கல்களை கவிதையென்று ஏற்று ரசித்த முரளிக்கு முதலில் நன்றிகள்.ஆனாலும் எனக்கு ஆச்சரியம் தான்!!!நிறைய விடையத்தை ரசனையோடு தந்த முரளிக்கு கூட என் கிறுக்கல் பிடித்தது.பல பெயர் கொண்டாலும் சிந்தனை கொண்ட ஆக்கங்கள் நிறைய வரவேண்டும் என கேட்டுக் கொண்டு. எப்போதும் யாழ் வரும் என்னை மீண்டும் எழுத வைத்த உங்களுக்கு மீண்டும் நன்றிகள்கூறி.பழய நினைவுகளை மீட்டிக் கொண்டு விடைபெறுகின்றாள் இவள்.

நன்றி கஜந்தி. என்ன அப்பிடி சொல்லிப்போட்டீங்கள். உங்கட கவிதைகளை நான் விரும்பி வாசிக்கிறனான். நல்லாய் இருக்கும். கவிதை அந்தாதியில நிறைய எழுதி இருக்கிறீங்கள். தொடர்ந்து நேரம் கிடைக்கேக்க எழுதுங்கோ.

உங்கள் ஞாபக சக்தி வியப்புக்குறியது வாழ்த்துக்கள் சின்னப்பு சீ.. மறந்துட்டன் முரளி

உங்களை கனகாலத்துக்கு பிறகு கண்டது சந்தோசம். நன்றி ஹரி.

நன்றி முரளிமாப்பிளை உமது வாழ்த்துக்களுக்கு...

என்னை குக்கூ என்று அழைக்கலாம்..இப்புனை பெயர் வைத்த காரணம்..எனது பெயர் குகன் என்பதை விட எங்கள் சுவர் மணிக்கூடு குக்கூ என்று தான் குருவி வெளியில் கத்தி நேரத்தை அறிவிக்கும்,,அதாவது நேரத்தை அறிவிப்பதன் மூலம் எங்களை விழிப்பு நிலைக்கு எம்மை ஊசார்ப்படுத்துகிறது..

எனவே எமது தாயக போரட்டத்திலும் எம்மக்களை ஒருவிதமன விழிப்பு நிலைக்கு கொண்டுவர இதனை நான் தெரிவு செய்தேன்... அத்துடன் நீர் ஆங்கிலத்தில் பாடி எனக்கு அனுப்பிய பாடல் கேட்டிருந்தேன் நன்றாக இருந்தது.. ஆங்கிலத்தில் தமிழர் விடுதலை சம்பந்தமான கிட்டான பாடல்கள் உருவாக்கி உலகம் முழுவதும் கிட்டாக வேண்டும்...இதற்கும் என் மனதார வாழ்த்துகள்...மாயாவின் காகித விமானங்கள் போன்று..

மிக்க நன்றி குக்கூ. ஓம்.... வசதிகள் வாய்ப்புக்கள் வரும்போது நீங்கள் சொன்னமாதிரி ஆக்கங்கள் படைக்க முயற்சிக்கிறன்.

முரளி,

நன்றி, தங்களது இந்த பதிவின் மூலம் , பல கள உறவுககளை பற்றி அறிய கூடியதாக இருந்தது,

எழுத வந்த கருத்தை விரிவாக எழுத நேரமில்லாமையும் , பொறுமையின்மையும்

ஓரிரு வரியில் கருத்து எழுத வைத்து விடுகிறது, சீண்டுவதாகவும் அமைந்து விடுகிறது.

. சீண்டும் நோக்கம் இல்லை, நீங்கள் கூறியது போல் அனுபவம் இல்லாததும் ஒரு காரணம்

மேலும் வாழ்க்கையில் நல்ல நிலை அடைய வாழ்த்துகள் முரளி

நன்றி பல்லவன். இந்தக்கருத்தாடல் மூலம் நீங்கள் பயனுள்ள தகவல்களை பெற உதவி இருந்தால் சந்தோசம். நீங்கள் பணியாற்றும், கல்விகற்கும் துறை சம்மந்தமாக ஆக்கங்கள் படைக்கப்போவதாய் முந்தி ஒரு இடத்தில சொல்ல் இருந்தீங்கள். நீங்களும் யாழில சுயமாக ஆக்கங்கள் படைக்க வாழ்த்துகள்! எனக்கும் நான் இணைஞ்ச ஆரம்பத்தில நிறையப்பேரிட்ட பேச்சு வாங்கவேண்டி இருந்திச்சிது. நான் முன்பு கருத்தாடலில சொன்னவை உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிச்சுகொள்ளுங்கோ. எல்லாம் தொடர்ச்சியான கற்கைகள். எல்லாரும் கற்றுக்கொண்டு இருக்கிறம். இதனால சில சமயங்களில முரண்பாடுகள் வரேக்க அதை எப்படி முகம் குடுக்கிறது எண்டு எங்களுக்கு தெரியாமல் போகிது. உங்களுக்கும் நீங்கள் வாழ்க்கையில முன்னேறி நல்ல நிலையை அடைய வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப கிருபன் படைப்புக்கள் ஒண்டும் செய்ய முயற்சிக்கிறது இல்லையோ? உங்கட வலைப்பூவுக்கு முந்திவந்து வாசிக்கிறனான். பிறகு வலைப்பூவில எழுதுறதை நிப்பாட்டீங்கள் போல இருக்கிது.

"அகத்தின் அதிர்வுகள்" ஐ மட்டும்தான் வலைப்பதிவில் எழுத விருப்பம். பல காலமாக அகம் அதிரவில்லை! இன்னும் நிறையக் காலம் இருக்கின்றது.. ஆறுதலாகப் பதியலாம்தானே..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.