• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
இளங்கவி

தமிழீழம் தான் நம் கனவு.......

Recommended Posts

தமிழீழம் தான் நம் கனவு...

சிறு கதை....

சாந்தி சரியாக் கேளுங்கோ...இதில எல்லாம் ஆயத்தம் உங்கட உடுப்பு எல்லாம் சரிதானே.. விடிய முதல் இதால வருவினம். அண்ணை சொல்லிவிட்டது ஞாபகமிருக்குத்தானே....? வந்தினமெண்டா விடாம கவனிப்பம்..சரியோ..! குழப்பமில்லை தானே

''ஒன்றும் குழப்பமில்லை பயப்படாதேங்கோ... நான் அவர் வளர்த்த ஆளல்ல...எனக்கு பத்து போனாலும் மற்றவருக்கு ஒன்று என்றாலும் போகவேணும் என்ற பொலிசியெல்லாம் எனக்கில்லை...! என்னக்கு ஒன்று போனாலும் மற்றவருக்கு பத்துப் போகவைப்பன் என்ர வளர்ப்பு அப்படி ...தெரியுமல்ல....'' சொல்லி முடித்தாள் சாந்தி.

''அண்ணையும் பாவம் தானே எங்கள் எல்லாருக்காகவும் இத்தனை வருடமா கஸ்ரப்பட்டுக் கொண்டிருக்கிறார்தானே.. அவரோட பாக்கேகை இதெல்லாம்...! நேற்று அவரோட சாப்பிடேக்க அவர் கண்கலங்கியதை பார்த்தனீங்களே..?

''ஓமோம் பாவம் அண்ணை.. எனக்கு என்ன சொல்லுறதென்று தெரியல்ல.... ! அண்ணை சொல்லிவிட்டது தவறாம செய்து காட்டவேணும்'' என சாந்தி கேட்க..

'' நல்லா ஞாபகமிருக்கு.... சரி வாகனத்தை ஸ்ராட் பண்னுங்கோ...தூரத்திலே வெளிச்சம் தெரியுது பாருங்கோ...'' என்றான் வசந்தன்.

அவர்களின் வாகனம் வேகம் பிடித்து அதிவேகமாகப் புறப்படத்தொடங்கியது. சரி கிட்ட வந்திட்டம் அவங்களும் கவனிக்கேல்லை.. அப்படியே பின் பக்கமாய் போங்கோ..என்று சாந்தி சொல்லவும்... சரி இப்படியே போவம் எனச்சொல்லிவிட்டு வசந்தன் சாந்தி சொன்ன வழியே போகவும்...

'' அது சரி இவைக்கு எங்கட இடத்தில என்ன வேலை...இண்டைக்கு குடுக்கிற குளிசேல இந்தப் பக்கம் இனிமேல் வர மாட்டாங்கள்...என்ன வசந்தன் ..'' என சாந்தி கேட்கவும்...

''இரண்டிலையும் ஒரு இருபத்தைஞ்சு முப்பது வரும் போல.. நல்ல அடியாத்தான் இருக்கப் போது.. அதுசரி வரேக்க வீட்ட சொன்னனீங்களே...?..'' என வசந்தன் கேட்கவும்..

''இல்ல நேர சொல்லேல்ல கடிதம் கொடுத்தனான் எங்கட அலுவல் முடிந்ததும் கிருபாண்ண கொண்டே குடுப்பார்.....'' என்று சாந்தி சொல்லிவிட்டு சரி வந்திட்டம்... இந்தக் கோணத்தில போய் அடிப்பம்.அப்பத்தான் இதுவும் முழுசாப் போய் மற்றதும் அடிபடும்...'' என்றாள் சாந்தி.

'' சரி பெரிய விஞ்ஞானிதான் ஆனா ஒரு கண்டுபிடிப்போட முடியப் போகுது....'' என்று வசந்தன் பகிடியாய் சொல்லிவிட்டு சிரிக்கவும் முகத்திலே வெக்கம் வந்தவளாக...'' சரி அடிவாங்கப் போறியள் ..'' என்று சாந்தி சொல்லிவிட்டு.. சரி வசந்தன் ஒண்டாவே வந்தோம் ஆனா போகேக்க மாத்திரம் தனியப் போகவேண்டியிருக்கு எங்கட கயில் ஒண்டுமில்ல தானே அது இயற்கையின் நியதி எனவும்....

'' சரி.... சரி....என்ன ஒரே தத்துவமாய் இருக்கு.... சாந்தி நீ புத்தகம் எழுதலாம்...அனா படிக்கத்தான் ஆக்கள் இருக்க மாட்டினம்'' என்று அவளை இறுதியாய் சீண்டிவிடட்டான் வசந்தன்.

கண்ணிலிருந்து ஒரு துளி நீரை அரைப் பூன்முறுவலுடன் பதிலாக்கிய சாந்தி.....

''சரி அவங்கள் பாத்திட்டாங்கள் போல கிடக்கு அவங்கள் ஆயத்தம் பண்ணமுதல் கெதியண்டு போ...''என்று சாந்தி சொல்லவும்.....

கடற்படை எதிர்பாராத நேரத்தில் ''தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்...'' என்று இருவரும் சொல்லிய வண்ணம் அவர்கள் வந்த வாகனம்...ஆம் அந்தக் கரும்புலிப் படகு டோறாவை மோதவும் கடலே அதிர்ந்த வெடிச்சத்தத்துடன் அவர்கள் படகு வெடித்து வசந்தனின் அந்த இறுதிச் சிரிப்பும், சாந்தியின் இறுதி கண்ணீருடன் கூடிய புன்னகையுமாய் கடலிலே எரிந்து கருகிப் போயின அந்த இரு கறுப்பு ரோஜாக்களும்.

ஒரு டொறா உடனேயே தாழ அதற்குப் பக்கத்தில் வந்த டோறாவும் பலத்த சேதமுற்று மெல்ல மெல்ல தாழத்தொடங்கியது....

ஈழத்தின் விடியலுக்காய் சரித்திரத்தில் இரத்தத்தால் எழுத்தப்பட்ட இன்னொரு பக்கம் புரட்டப்பட்டதற்கு அஞ்சலி செலுத்துவதைப் போலவும் அவர்களுக்காக அழுது கண்ணெல்லாம் சிவந்ததைப் போல சூரியனும் கண்கள் சிவந்தபடி அடிவானத்தை எட்டிப் பார்த்தான்.

பல கடற்படையினரைக் கொன்ற அந்த இரு கரும்புலிகளும் தாங்களாகவே எரிந்து தாங்களாகவே கடலில் கரைந்த வீர காவியமொன்று மீண்டும் இந்த தாய் மண்ணிற்காக நம் கடற்பரப்பில் நிகழ்ந்தேறியதை கேள்விப்பட்ட அனைத்துத் தமிழ் மனங்களும் அவர்களின் வீரச் சாவுக்காக தங்கள் கண்ணீர்ப் பூக்களை அஞ்சலியாய் செலுத்திக் கொண்டனர்.

ஈழத்தின் கடற்பரப்புக்கு எதிரி இனிமேல் வர யோசிக்க வைக்கும் அந்தத் தாக்குதல் அமைந்து விட்டது. இங்கே வீர காவியமான அந்த கருப்பு ரோஜாக்களுக்கு தலைவரும் தன் அஞ்சலியை செலுத்துவதை பார்த்த தமிழீழ மக்கள்...

தலைவரே ... எந்த லட்சியத்துக்காக தங்கள் உயிரை இவர்கள் தந்தார்களோ அதே லட்சியத்தை நாம் அடையும் வரை உங்களுக்கு உறுதுணையாக நாங்கள் இருப்போம் என்று உறுதி மொழியெடுத்துக் கொண்டனர்....

இளங்கவி

குறிப்பு: எங்கள் நாட்டுக்காக உயிர் தியாகங்கள் பண்ணிக்கொண்டிருக்கும் கரும்புலிகளையும், எங்கள் தமிழீழ கடற்பரப்பில் நடந்து முடிந்துவிட்ட கரும்புலித் தாக்குதல்களையும் நினைவில் கொண்டு எனது கற்பனையை கதையாக்கியிருக்கிறேன். பெயர்கள் யாவும் கற்பனையே..

Edited by ilankavi

Share this post


Link to post
Share on other sites

தமிழீழம் தான் நம் கனவு...

அருமை...!

Share this post


Link to post
Share on other sites

நிருஜாவுக்கு

கதையைப் படித்ததற்கு மிக்க நன்றி....

இளங்கவி

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் இளங்கவி

அருமை.. இப்படியான கவிதைகள் இன்னும் எழுதுங்கள் வாசிக்க ஆர்வமா இருக்கு...

Share this post


Link to post
Share on other sites

கதை சிறிது என்றாலும் காரம் .........இல்லை சாரம் மிக நன்று. மேலும் தொடர வாழ்த்துக்கள் . அக்கா நிலாமதி .

Share this post


Link to post
Share on other sites

kuddipaiyan26

மிக்க நன்றி கதையை வாசித்து கருத்துச் சொன்னதற்கு....

நேரம் கிடைக்கும் சந்தர்ப்பங்களெல்லாம் தாய் நாடு சம்மந்தமான கதைகளையோ இல்லை கவிதைகளையோ நிச்சயம் தருவேன்....

இளங்கவி

Edited by ilankavi

Share this post


Link to post
Share on other sites

நிலாமதி அக்காவுக்கு

கதையைப் படித்து வாழ்த்துச் சொன்னதற்கு மிக்க நன்றிகள்....

கிடைத்த கொஞ்ச நேரத்துக்குள் என்னால் எழுத முடிந்த கதை.....

மீண்டும் நன்றிகள் அக்காவுக்கு....

இளங்கவி

Share this post


Link to post
Share on other sites

இளங்கவி அவர்களே,

இது 'கதை அல்ல காவியம், தினம் தினம் விடுதலைக்காற்றுக்காக தம் மூச்சையே ஆகுதியாக்கும் அற்புதப்பிறவிகளை பெற்ற தேசத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் வரலாறு.

தேசத்தின் உணர்வுமிக்க படைப்புக்காக 'நன்றியொடு வாழ்த்துகளும்

Edited by Thamilthangai

Share this post


Link to post
Share on other sites

thamilthangai

நாட்டுக்காக தினம் தினம் தங்களின் உயிர்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் தியாகச் சுடர்களின் தியாகங்களுக்கு எதுவுமே ஈடுணையாக முடியாது. அந்தத் தியாகமென்னும் பெருங்கடலில் ஒரு துளியை கருவாக்கி யாழ் வாசகர்களுக்காக தந்துள்ளேன்.

மேலும் உங்களின் நன்றிக்கும் வாழ்த்துக்கும் எனது நன்றிகள்....

இளங்கவி

Share this post


Link to post
Share on other sites

இளங்கவி உங்கள் கற்பனை கடலிலே நடந்ததை நிஜமாக காட்டியது.

இது கற்பனையல்ல, காவியங்களின் கதை.

கடலிலும் தரையிலும் ஏன் வானிலும் காவியங்கள் படைக்கும் இவர்களுக்கு நாம் செய்யப்போவதுதான் என்னவோ....

நன்றி இளங்கவி தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

தாயகனுக்கு

எங்கள் மண்ணில் தினம் தோறும் நிகழ்ந்து கொண்டிருக்கும் தியாகங்களுக்கு எதுவுமே ஈடில்லைத்தான் இருந்தாலும் அவர்களின் கனவுகளை நனவாக்க நாங்கள் எல்லோரும் எங்கள் விடுதலையை வென்றெடுக்கும் போரில் ஒன்றுபட்டு செயற்படுவதே இன்றைய எமது கடமையாகும்....

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி...

இளங்கவி

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் இளங்கவி. தொடருங்கள் :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

millikai vaasam

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.....

இளங்கவி

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.