Jump to content

தமிழீழ பாட்டு வரிகள்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...re_06_trackmp3/

தீயினில் எரியாத தீபங்களே - நம்

தேசத்தில் உருவான ராகங்களே

தாயகம் காத்திட உயிர் கொடுத்தீர்

தரணியில் காவிய வடிவெடுத்தீர்

மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே

தாய் தந்தை அன்பினைத் துறந்தீரே

தமிழ் அடிமை விலங்கினை உடைப்பதற்கே

தங்கை தம்பி பாசத்தை மறந்தீரே

புது சாதனை ஈழத்தில் படைப்பதற்கே

மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே!

பகைவரின் கோட்டையில் பாய்ந்தீரே - அந்தப்

பாதகர் உயிர்களை முடித்தீரே

இதயத்தில் குண்டேந்தி மடிந்தீரே - எங்கள்

இதயத்தில் நிலையாக அமர்ந்தீரே

மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே!

இரவு வந்தால் ஒரு பகலும் வரும் - உங்கள்

இலட்சியக் கனவுக்கும் விடிவு வரும்

விரைவினிலே நமக்கொரு வழி பிறக்கும்

ஈழ வீதியிலே புலிக்கொடி தினம் பறக்கும்

Edited by kuddipaiyan26
Link to post
Share on other sites
 • Replies 181
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

த‌மிழ‌ர‌சு  அண்ணா இணைத்த‌ இர‌ண்டு பாட்டு வ‌ரி பாட்டு , ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா /  https://voca.ro/jqv6QDW5fSY https://voca.ro/fKbes0CdvUe  இர‌ண்டு பாட‌லுக்கும் இசை அமைத்த‌து முன்னால் போராளி

பாட‌லை கேக்க‌ https://voca.ro/mNAN1gtR4tT   நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமைவிலங்கு தெறிக்கும் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமைவிலங்கு தெறிக்கும்

பாட‌லை கேக்க‌ https://vocaroo.com/i/s1IlwAelUhGP க‌ண்ம‌ணியே க‌ண்ணுற‌ங்கு காவிய‌மே நீ உற‌ங்கு க‌ண்ம‌ணியே க‌ண்ணுற‌ங்கு காவிய‌மே நீ உற‌ங்கு பொண் முடி சூடிய‌ பூச்ச‌ர‌ம்மே எந்த‌ன் பூங்கியிலே இன்று க‌ண

 • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...ngs_track_1mp3/

டப்பாங்கூத்துப் பாட்டுத்தான்

காதில கொஞ்சம் போட்டுப்பாரு -இது

டப்பாங்கூத்துப் பாட்டுத்தான்

காதில கொஞ்சம் போட்டுப்பாரு

குட்டிக்கண்ணன் றோட்டில

வந்து நிண்டு பாட்டில

நாட்டுக்காக செய்தியொன்று

சொல்லிறன் தெருக்கூத்தில

நாடும் வீடும் எங்களுக்கு ரெண்டு கண்ணுதானே -நாம்

சொந்தமென்று சொல்ல இந்த மண்ணும் ஒன்றுதானே

மானத்துக்குப் பேரெடுத்த நாங்கள் கவரிமானே

இதுபுரிஞ்சா இது தெரிஞ்சா புலிநடையப் போடு

அக்கா என்ன வெக்கத்தில தரையப் பாக்கிறீங்க

அண்ணே என்ன வளைஞ்சு குனிஞ்சு தலையச் சொறியிறீங்க

காலம் உங்களை நம்பித்தானே காத்திருக்குதிங்க

இது புரிஞ்சா இது தெரிஞ்சா புலி நடையப் போடு

நாங்கள் வாழவேண்டுமென்றால் நாடுமீள வேண்டும் -எங்கள்

நாடுமீள வேண்டுமென்றால் வேங்கையாக வேண்டும்

அண்ணன் பேரைச் சொல்லிப்பாரு உன்னில் வீரம் ஏறும்

இதுபுரிஞ்சா இது தெரிஞ்சா புலி நடையப்போடு

Edited by kuddipaiyan26
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி குட்டிப்பையா.

தொடருங்கள் :)

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/..._thoonguthamma/

ஒரு கிளி தூங்குதம்மா

மறுகிளி வேகுதம்மா

வேதனை யாரறிவார்

விடியும் ஓர் நாள்

உனக்குள்ளே இருக்கிற எரிமலையெடுத்து

பகைவனை எரி எரி

தயக்கமும் கலக்கமும் வருத்தமும் எதற்கு

புதுயுகம் இனி இனி

ஒரு கிளி தூங்குதம்மா

மறுகிளி வேகுதம்மா

வேதனை யாரறிவார்

விடியும் ஓர் நாளிலே

மன்னன் மனதின் எண்ணம் நிறைவேறவே

பெண்ணே..! பெண்ணே..! கடமை முடிப்பாயடா

ஆயிரம் ஆயிரம் தடைகளை உடைத்து

சபதம் முடி முடி

ஆயிரம் ஆயிரம் தடைகளை உடைத்து

சபதம் முடி முடி

உனக்குள்ளே இருக்கிற எரிமலையெடுத்து

பகைவனை எரி எரி

உனக்குள்ளே இருக்கிற எரிமலையெடுத்து

பகைவனை எரி எரி

ஒவ்வொரு இரவும் இங்கே விடியும்

அவன் வீரம் சொல்லி நாள்தோறுமே

ஒவ்வொரு பூவும் இங்கே மலரும்

அவன் பேரைச் சொல்லி தினந்தோறுமே

இனித் தோன்றுகின்ற மாவீரர் எல்லாம்

அவன் பாதையில் பெண்ணே..!

சுடர் தீபம் ஏற்றிடு

ஆயிரம் ஆயிரம் தடைகளை உடைத்து

சபதம் முடி முடி

ஆயிரம் ஆயிரம் தடைகளை உடைத்து

சபதம் முடி முடி

இனித் தோன்றுகின்ற மாவீரர் எல்லாம்

அவன் பாதையில் பெண்ணே..!

சுடர் தீபம் ஏற்றிடு

ஒரு கிளி தூங்குதம்மா

மறுகிளி வேகுதம்மா

வேதனை யாரறிவார்

விடியும் ஓர் நாளிலே

மன்னன் மனதின் எண்ணம் நிறைவேறவே

பெண்ணே..! பெண்ணே..! கடமை முடிப்பாயடா

உனக்குள்ளே இருக்கிற எரிமலையெடுத்து

பகைவனை எரி எரி

தயக்கமும் கலக்கமும் வருத்தமும் எதற்கு

புதுயுகம் இனி இனி

பயந்தவர் பார்வையிலே பெண்ணே

சின்னப் பனித்துளியும் கடலளவு

துணிந்தவர் மனதில் பெண்ணே

பெரும் அலைகடலும் துளியளவு

அந்த சூரியனும் வாழ்வில் தூரமில்லை

புதுதேசமது மலர்ந்தால் விழிநீரை மாற்றிடு

உனக்குள்ளே இருக்கிற எரிமலையெடுத்து

பகைவனை எரி எரி

தயக்கமும் கலக்கமும் வருத்தமும் எதற்கு

புதுயுகம் இனி இனி

அந்த சூரியனும் வாழ்வில் தூரமில்லை

புதுதேசமது மலர்ந்தால் விழிநீரை மாற்றிடு

ஒரு கிளி தூங்குதம்மா

மறுகிளி வேகுதம்மா

வேதனை யாரறிவார்

விடியும் ஓர் நாளிலே

மன்னன் மனதின் எண்ணம் நிறைவேறவே

பெண்ணே..! பெண்ணே..! கடமை முடிப்பாயடா

ஆயிரம் ஆயிரம் தடைகளை உடைத்து

சபதம் முடி முடி

தயக்கமும் கலக்கமும் வருத்தமும் எதற்கு

புதுயுகம் இனி இனி

ஒரு கிளி தூங்குதம்மா

மறுகிளி வேகுதம்மா

வேதனை யாரறிவார்

விடியும் ஓர் நாளிலே

Edited by kuddipaiyan26
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...kannan_songs_t/

இந்த பாட்டு பாடியவர் குட்டிக் கண்ணன் அவர் இப்ப உயிருடன் இல்லை :)

ஆண்டாண்டு காலமதாய் நாம்

ஆண்டு வந்த பூமி

அப்பன் ஆச்சி பாட்டன் பூட்டி

சுத்தி வந்த வீதி

எங்கள் அக்கா அண்ணையரே

எதிரி இங்கு வரலாமா

எங்கள் மண்ணை ஆள நினைச்சா

வேங்கை நாங்க விடலாமா

வீட்டுக்கொரு வீரன் போனா

விடுதலையும் நாளை வரும்

வீதியிலே சுத்தித் திரிஞ்சா

அடிமையாகச் சாக வரும்

ஆட்டம் போடும் ராணுவங்கள்

அலறி ஓடணும் . நாம்

அடிமை இல்லை என்று புதிய

பரணி பாடணும்

எங்கள் வேங்கைத் தலைவன் தானே

எங்களுக்கு வழிகாட்டி

எதிரிகளின் பாசறை யாவும்

எரித்திடுவோம் தீ மூட்டி

பொங்கி எழு புயலாக போர்க்களத்தில் விளையாடு

புனையட்டும் தமிழீழம் புதிய வீர வரலாறு

என்னினமே என் சனமே

இன்னும் என்ன மயக்கமா

எதிரிகளின் பாசறை யாவும்

எரித்திடவே தயக்கமா

பண்டாரவன்னியனின் வாரிசல்லவா - பகையை

பந்தாடி வென்றிடவே ஆசையில்லையா

Edited by kuddipaiyan26
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி குட்டித்தம்பி,

எத்தனையோ காலமாக இருந்த ஏக்கத்தை தீர்த்துவைத்தன இந்த தாயகவரிகள்.

சுட்டியையும் கொடுத்தது பாராட்டுதற்குரியது.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...aikal_kalankum/

ஊரறியாமலே உண்மைகள் கலங்கும்

ஒரு பெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும்

வேருக்கு மட்டுமே விழுதினைப் புரியும்

வெடிமருந்தேற்றிய வேங்கையைத் தெரியும்.

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய

சந்தன மேனிகளே!

உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்

ஆரை நினைத்தீரோ!

நீங்கள் யாரை நினைத்தீரோ..!

வாசலில் காற்றென வீசுங்கள்

உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய

சந்தன மேனிகளே!

உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்

ஆரை நினைத்தீரோ!

நீங்கள் யாரை நினைத்தீரோ..!

வென்றிடவே கரும் வேங்கைகளாகிய

வீரக் கொழுந்துகளே!

எம்மைக் கொன்றவர் மீதினில் குண்டெனப் பாய்கையில்

என்ன நினைத்தீரோ!

வாசலில் காற்றென வீசுங்கள்

உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய

சந்தன மேனிகளே!

உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்

ஆரை நினைத்தீரோ!

நீங்கள் யாரை நினைத்தீரோ..!

தாயகத் தாகங்கள் தாங்கிய நெஞ்சினில்

சாவைச் சுமந்தவரே!

உங்கள் தேகங்கள் தீயினில் வேகின்ற நேரத்தில்

ஆரை நினைத்தீரோ!

வாசலில் காற்றென வீசுங்கள்

உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய

சந்தன மேனிகளே!

உங்கள் ஆவி கலங்கிய

அக்கணப் போதினில்

ஆரை நினைத்தீரோ!

நீங்கள் யாரை நினைத்தீரோ..!

தாலாட்டுப் பாடியே தன் முலையூட்டிய

தாயை நினைத்தீரோ!

உங்கள் காலாற தோள் மீது தாங்கிய தந்தையின்

கையை நினைத்தீரோ!

வாசலில் காற்றென வீசுங்கள்

உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய

சந்தன மேனிகளே!

உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்

ஆரை நினைத்தீரோ!

நீங்கள் யாரை நினைத்தீரோ..!

நாளும் விடுதலைத் தீயில் குளித்திடும்

நாயகனை நினைத்தீரோ!

உங்கள் தோளைத் தடவியே சென்றிடு என்றவன்

சோகம்தனை நினைத்தீரோ!

வாசலில் காற்றென வீசுங்கள்

உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.

சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய

சந்தன மேனிகளே!

உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்

ஆரை நினைத்தீரோ!

நீங்கள் யாரை நினைத்தீரோ..!

Edited by kuddipaiyan26
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...bDG/aakayathai/

ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்

அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்

பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

தந்தானானே தாரேனானா தானா ஏய்

தந்தானானே தாரேனானா தானா....

ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்

அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்

பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

கரும்புலி இதயம் இரும்பென எழுதும்

கவிதைகள் பொய் ஆகும்

அது இரும்பினிலில்லை அரும்பிய

முல்லை என்பதே மெய் ஆகும்

ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்

அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்

பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

சாவை தன் வாசலில் சந்திக்கும் போதிலே

யாருக்குமே உடல் வேர்க்கும் அந்த தேவ பிறவிகள்

சாவை தொடுகையில் சாவுக்குத்தானெடா வேர்க்கும்

வளர்த்த கோழி உரித்திடாத வாழ்வை எடுத்தவர்

அவர் படுக்கும் பாயில் வளர்க்கும் நாயை கிடக்க விடுபவர்

ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்

அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்

பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்

காங்கை நெருப்புக்கள் தூங்குவதே இல்லை

யாருக்கு இங்கே இது தெரியும்

கரும் வேங்கைகள் தாகங்கள் ஏதென

தாங்கிடும் வேர்களுக்கே இது புரியும்

இலக்கை நோக்கி நகரும் போதும் கணக்கை பார்ப்பவர்

அவர் வெடிக்கும் போதும் அனுப்பும் தோழர் உறவை காப்பர்

ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்

அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்

பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்

கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்

Edited by kuddipaiyan26
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...l/ooradi_manna/

ஓரடி மண்ணால் உயர்ந்து நிற்குது எங்கள் தமிழ் ஈழம்

எங்கள் தமிழ் ஈழம்

அது போராடி மடிந்த மாவீரர்களின் பெரும் தியாகம்

ஓரடி மண்ணால் உயர்ந்து நிற்குது எங்கள் தமிழ் ஈழம்

எங்கள் தமிழ் ஈழம்

அது போராடி மடிந்த மாவீரர்களின் பெரும் தியாகம்

அடி கொள வேண்டிய சந்தண மாந்தர்கள் விதையாயே புதைந்தாரே

விடியலுக்காகவே உணர்வோடுயிர்களை தேசத்துக்கு ஈந்தாரே

இன்னும் இவர் நெஞ்சால் எங்களது மண்ணைத் தாங்கியே உறங்குகிறார்

தாங்கியே உறங்குகிறார்

கண்ணிரண்டும் கரைந்து மலர் தீபம் ஏற்றி ஆண்டுதோறும் வணங்குகிறார்

ஆண்டுதோறும் வணங்குகிறார்

மண்ணில் இவர் சிந்திய குருதியால் நாடே சிவந்து கிடக்கிறது

சிவந்து கிடக்கிறது

இவர் கண்ணுறங்கும் கல்லறையில் தமிழ் ஈழம் எனும் ஒலி இசைந்து கேட்கிறது

இசைந்து கேட்கிறது

ஓரடி மண்ணால் உயர்ந்து நிற்குது எங்கள் தமிழ் ஈழம்

எங்கள் தமிழ் ஈழம்

அது போராடி மடிந்த மாவீரர்களின் பெரும் தியாகம்

எங்களோடு நேற்று உண்டு பேசி மகிழ்ந்து வீதி உலா வந்தவர்கள்

வீதி உலா வந்தவர்கள்

எங்கள் சங்கத் தமிழ்ஈழ தேசியத் தலைவன் நீதி வழி நடந்தவர்கள்

நீதி வழி நடந்தவர்கள்

சங்ககாலம் படைத்த புறங்களை மீண்டும் புதுப்பித்துப் போனாரே

புதுப்பித்துப் போனாரே

மக்காள் உங்கள் கால் பாதம் உறைவிடம் தன்னில் மிதியாமல் பதிப்பீரே

மிதியாமல் பதிப்பீரே

ஓரடி மண்ணால் உயர்ந்து நிற்குது எங்கள் தமிழ் ஈழம்

எங்கள் தமிழ் ஈழம்

அது போராடி மடிந்த மாவீரர்களின் பெரும் தியாகம்

மாலை சர்ப்பம் அணிந்த விசம் உண்ட கண்டனையும் வென்றுதான் நின்றார்கள் வென்றுதான் நின்றார்கள்

பெரும் குலையாத மலை போல் அழியாத சரிதமாய் ஞாலமதில் நிலைப்பார்கள்

ஞாலமதில் நிலைப்பார்கள்

அலைகடல் வானும் நதிக்கரை காற்றும் இவர்களை பறைசாற்றும்

இவர்களை பறைசாற்றும்

பூஞ்சோலை மாடம் சாலை சந்தி எல்லாமே இவர்களின் பேர் விளங்கும்

இவர்களின் பேர் விளங்கும்

ஓரடி மண்ணால் உயர்ந்து நிற்குது எங்கள் தமிழ் ஈழம்

எங்கள் தமிழ் ஈழம்

அது போராடி மடிந்த மாவீரர்களின் பெரும் தியாகம்

ஓரடி மண்ணால் உயர்ந்து நிற்குது எங்கள் தமிழ் ஈழம்

எங்கள் தமிழ் ஈழம்

அது போராடி மடிந்த மாவீரர்களின் பெரும் தியாகம்

அடி கொள வேண்டிய சந்தண மாந்தர்கள் விதையாயே புதைந்தாரே

விடியலுக்காகவே உணர்வோடுயிர்களை தேசத்துக்கு ஈந்தாரே

Edited by kuddipaiyan26
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...antha_pinpemp3/

இங்கு வந்து பிறந்த பின்பே

இருந்த இடம் தெரியும்

நாளை சென்று வீழும்

சேதி சொல்ல

இங்கெவரால் முடியும்

வாழ்க்கை என்னும் பயணம்

இதை மாற்றிடவா முடியும்

இங்கு வந்து பிறந்த பின்பே

இருந்த இடம் தெரியும்

பூமியிலே சாகும் தேதி

யாருக்கிங்கு தெரியும்

கரும்புலிளுக்கு மட்டும் தானே

போகும் தேதி புரியும்

சாமிகளும் வாழ்த்தி வீழும்

சரித்திரங்கள் இவர்கள்

தமிழ் சந்ததியில் அழியாத

சத்தியத்தின் சுவர்கள்

சத்தியத்தின் சுவர்கள்

இங்கு வந்து பிறந்த பின்பே

இருந்த இடம் தெரியும்

வாழ்வினிலே வசந்த காலம்

துறந்தவர்கள் சிலரே

--ம் வாசலிலே இளமை ராகம்

மறந்தவர்கள் சிலரே

கரும்புலிகள் விரும்பி இங்கு

இருப்பிழந்து போவார்

எங்கள் கண்ணெதிரே நின்ற பின்னர்

உருக்குலைந்து போவார்

உருக்குலைந்து போவார்

இங்கு வந்து பிறந்த பின்பே

இருந்த இடம் தெரியும்

தோளில் ஏற்றிப் போவதற்கு

நாலு பேர்கள் வேண்டும்

இந்த தோள்கள் இன்றி கரும்புலியை

தீயின் வாய்கள் தீண்டும்

வாழும் காலம் நீள்வதிலே

வந்திடுமா பெருமை

இல்லை வாய்கள் நூறு போற்றிப் பாட

சாவதுதான் பெருமை

சாவதுதான் பெருமை

இங்கு வந்து பிறந்த பின்பே

இருந்த இடம் தெரியும்

அச்சமின்றி குண்டடைத்து

ஆடிப்பாடிப் போவார்

எங்கள் அண்ணன் பெயர்

சொல்லிச் சொல்லி

கரும்புலிகள் சாவார்

சக்கை வண்டி தன்னில் ஏறி

சரித்திரங்கள் போவார்

வரும் சந்ததியின் வாழ்வுக்காக

தங்கள் உயிர் ஈவார்

தங்கள் உயிர் ஈவார்

இங்கு வந்து பிறந்த பின்பே

இருந்த இடம் தெரியும்

நாளை சென்றுவீழும் சேதி சொல்ல

இங்கெவரால் முடியும்

வாழ்க்கை என்னும் பயணம்

இதை மாற்றிடவா முடியும்

வாழ்க்கை என்னும் பயணம்

இதை மாற்றிடவா முடியும்

Edited by kuddipaiyan26
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...dw8u/vettrimp3/

மழைமேகம் துளியாகிப் பொழிகின்ற காலம்

பகைவீடு துயில்கின்ற விடிசாம நேரம்

புயலாகி தமிழீழப் புலியாகிச் சென்றீர்

பூநகரில் நிலையான பகையாவும் வென்றீர்

வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்

விடுதலைக்கு முடிதரித்து விட்டுறங்குகின்றீர்

பெற்றளித்த ஆயுதங்கள் போல் முழங்குகின்றீர்

பூநகரி நாயகராய் நீர் விளங்குகின்றீர்

வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்

விடுதலைக்கு முடிதரித்து விட்டுறங்குகின்றீர்

வந்தபடை தளத்தினிலே தீயை மூட்டினீர் -பகை

வாசலிலே நீர் புகுந்து பேயை ஓட்டினீர்

வந்தபடை தளத்தினிலே தீயை மூட்டினீர் -பகை

வாசலிலே நீர் புகுந்து பேயை ஓட்டினீர்

விந்தையிது என்றுலகம் வியந்துரைத்தது -உங்கள்

வீரமதை கண்டுபகை பயந்தொளித்தது

வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்

விடுதலைக்கு முடிதரித்து விட்டுறங்குகின்றீர்

நாகதேவன் துறையினிலே காற்றாகினீர் -அந்த

ஞானிமடத் தளத்தினிற்கு கூற்றாகினீர்

நாகதேவன் துறையினிலே காற்றாகினீர் -அந்த

ஞானிமடத் தளத்தினிற்கு கூற்றாகினீர்

வேவுப்படை வீரரென நீங்கள் புகுந்தீர் -பெற்ற

வெற்றிகளின் வேர்களிலே நீங்கள் விழுந்தீர்

வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்

விடுதலைக்கு முடிதரித்து விட்டுறங்குகின்றீர்

நெஞ்சினிலே உங்களுக்கோர் கோயிலமைத்தோம் -கண்ணில்

நீர்வழிய நின்றுமக்கு மாலைதொடுத்தோம்

நெஞ்சினிலே உங்களுக்கோர் கோயிலமைத்தோம் -கண்ணில்

நீர்வழிய நின்றுமக்கு மாலைதொடுத்தோம்

பஞ்சு நெருப்பாகி வரும் பகையை முடிப்போம் -பிர

பாகரனின் காலத்திலே ஈழம் எடுப்போம்

வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்

விடுதலைக்கு முடிதரித்து விட்டுறங்குகின்றீர்

பெற்றளித்த ஆயுதங்கள் போல் முழங்குகின்றீர்

பூநகரி நாயகராய் நீர் விளங்குகின்றீர்

வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்

விடுதலைக்கு முடிதரித்து விட்டுறங்குகின்றீர்

Edited by kuddipaiyan26
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...vie_track_8mp3/

என் இனமே... என் சனமே...

என்னை உனக்குத் தெரிகிறதா

எனது குரல் புரிகிறதா

என் இனமே... என் சனமே...

மண்ணை இன்னும் நேசிப்பவன்

அதற்காய் மரணத்தையே வாசிப்பவன்

என் இனமே என் சனமே

என்னை உனக்குத் தெரிகின்றதா

எனது குரல் புரிகிறதா

என் இனமே... என் சனமே...

அன்னை தந்தை எனக்குமுண்டு

அன்பு செய்ய உறவும் உண்டு

என்னை நம்பி உயிர்கள் உண்டு

ஏக்கம் நெஞ்சில் நிறைய உண்டு

என் இனமே என் சனமே

என்னை உனக்குத் தெரிகின்றதா

எனது குரல் புரிகிறதா

மண்ணை இன்னும் நேசிப்பவன்

அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்

என் இனமே... என் சனமே...

பாசறை நான் புகுந்த இடம்

பதுங்கு குழி உறங்குமிடம்

தேசநலன் எனது கடன்

தேன்தமிழே எனது திடல்

மண்ணை இன்னும் நேசிப்பவன்

அதற்காய் மரணத்தையே வாசிப்பவன்

என் இனமே என் சனமே

என்னை உனக்குத் தெரிகின்றதா

எனது குரல் புரிகிறதா

அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்

அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்

என் இனமே... என் சனமே...

என் முடிவில் விடிவிருக்கும்

எதிரிகளின் அழிவிருக்கும்

சந்ததிகள் சிரித்து நிற்க

சரித்திரத்தில் நிறைந்திருப்பேன்

அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்

அதற்காய் மரணத்தையே வாசிப்பவன்

என் இனமே என் சனமே

என்னை உனக்குத் தெரிகின்றதா

எனது குரல் புரிகிறதா

அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்

அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்

என் இனமே...! என் சனமே...

Edited by kuddipaiyan26
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...emmai_ninaithu/

காற்றாகி வந்தோம் கடலாகி வந்தோம்

காதோரம் ஒரு சேதி சொல்வோம்

காதோரம் ஒரு சேதி சொல்வோம்

கரும்புலியாகி நின்றோம் புயலாகி வென்றோம்

புரியாத புதிராகச் சென்றோம்

புரியாத புதிராகச் சென்றோம்

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது - இனி

இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது

கண்ணில் வழியும் நீரைத் துடைத்தே வாருங்கள் -எங்கள்

காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது - இனி

இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது

வாழும்போது மானத்தோடு

வாழ்பவன்தானே தமிழன் -தன்

வாசலில் அடிமை சேகவம் செய்து

வாழ்பவன் என்ன மனிதன்

வாழும்போது மானத்தோடு

வாழ்பவன்தானே தமிழன் -தன்

வாசலில் அடிமை சேகவம் செய்து

வாழ்பவன் என்ன மனிதன்

வழியில் இடறும் பகைகள் எரிய

வருக வருக தமிழா

வழியில் இடறும் பகைகள் எரிய

வருக வருக தமிழா

உன் விழியில் வழியும் நீரைத் துடைத்து

வெளியில் வருக தமிழா

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது - இனி

இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது

காற்றும் நிலவும் யாருக்கெனினும்

கைகள் கட்டுவதில்லை - நாங்கள்

போகும் திசையில் சாகும்வரையில்

புலிகள் பணிவதுமில்லை

காற்றும் நிலவும் யாருக்கெனினும்

கைகள் கட்டுவதில்லை - நாங்கள்

போகும் திசையில் சாகும்வரையில்

புலிகள் பணிவதுமில்லை

மீண்டும் மீண்டும் புதிதாய் நாங்கள்

முளைப்போம் இந்த மண்ணில்

மீண்டும் மீண்டும் புதிதாய் நாங்கள்

முளைப்போம் இந்த மண்ணில்

எங்கள் மூச்சும் இந்த காற்றில் கலந்து

மூட்டும் தீயைக் கண்ணில்

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது - இனி

இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது

கண்ணில் வழியும் நீரைத் துடைத்தே வாருங்கள்

கண்ணில் வழியும் நீரைத் துடைத்தே வாருங்கள்

எங்கள்

காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்

எங்கள்

காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது - இனி

இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது

Edited by kuddipaiyan26
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...ngs_track_8mp3/

குக்கூக் குக்கூக் குயிலக்கா கொஞ்சம் நில்லக்கா - நீ

கூவுற பாட்டிலே வீரம் இருக்கணும் சொல்வேன் கேளக்கா

இது வேங்கைகள் வாழும் நாடு - அவர்

வீரத்தையே தினம் பாடு

குக்கூக் குக்கூக் குயிலக்கா கொஞ்சம் நில்லக்கா - நீ

கூவுற பாட்டிலே வீரம் இருக்கணும் சொல்வேன் கேளக்கா

அஞ்சல் அகற்றிட நஞ்சினை ஏந்தி

வெஞ்சமர் ஆடிடும் பிள்ளை - அவர்

வீரத்துக்கே இணையில்லை - இதை

நெஞ்சில் நினைந்து அஞ்சல் அகற்றி

கொஞ்சும் குரல்தனில் பாடக்கா

குக்கூக் குக்கூக் குயிலக்கா கொஞ்சம் நில்லக்கா - நீ

கூவுற பாட்டிலே வீரம் இருக்கணும் சொல்வேன் கேளக்கா

இந்தியம் வந்திங்கு வஞ்சனை செய்தது

எங்கள் புலி பயந்தாரா - கொண்ட

இலட்சியத்தை மறந்தாரா - அவர்

சத்தியம் காக்க யுத்தம் புரிந்த

சங்கதியைத் தினம் பாடக்கா

குக்கூக் குக்கூக் குயிலக்கா கொஞ்சம் நில்லக்கா - நீ

கூவுற பாட்டிலே வீரம் இருக்கணும் சொல்வேன் கேளக்கா

காலைப் பொழுதினில் சோலை நடுவினில்

கானம் இசைத்திடும் குயிலக்கா - சுப

இராகம் இனிக்கும் உன் குரலக்கா

நாளை நமக்கொரு ஈழம் மலர்ந்திடும்

நாலு திசை எட்டப் பாடக்கா

குக்கூக் குக்கூக் குயிலக்கா கொஞ்சம் நில்லக்கா - நீ

கூவுற பாட்டிலே வீரம் இருக்கணும் சொல்வேன் கேளக்கா

Edited by kuddipaiyan26
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...iru_recoding09/

தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்

என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்

கன்னி மனம் மெல்ல மெல்ல மாறும் அவள்

கையில் கூட ஆயுதங்கள் ஏறும்

தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்

என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்

நிலவு வந்து பொழியும் நேரம் நீ வரவில்லை

நான் நீண்டநேரம் காத்திருந்தேன் பதில் தரவில்லை

ஊர் முழுதும் ஓலம் நான் உறங்கி வெகு காலம்

உறங்கி வெகு காலம் நீ ஓடி வந்தால் போதும்

தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்

என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்

காவலுக்கு வந்த பேய்கள் கடிக்கும் நாளையில் ..ஒரு காதல் என்ன மாலை என்ன இந்த

வேளையில்

எங்கள் புலி வீரர் அவர் இருக்கும் இடம் போறேன்

இருக்கும் இடம் போறேன் தமிழீழம் வந்தால் வாறேன்

தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்

என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்

தென்றல் வந்து தொட்டுஎன்னைகேலி செய்த்து

நீ செனற இடம் சொன்ன பின்பு வேலி போட்டது

காலம் வந்து சேரும் புலி களத்தில் வாகை சூடும்

களத்தில் வாகை சூடும் என் கழுத்தில் மாலை ஆடும்

தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்

என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்

தங்க மேனி நொந்து ஈழத்தாய் அழுகின்றாள்

என்தலைவன் இந்த நிலையை பார்த்துத்தான் உருகின்றான்.

எங்கள் மேனி சாகும் இல்லை எதிரி ஆவி போகும்

எதிரி ஆவி போகும் தமிழ் ஈழம் வந்து சேரும்

தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்

என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்

உன்னை நெஞ்சில் தூங்க வைத்துப்பாட்டு பாடுவேன் எம் உரிமைக்காக நானும் வந்து

படையில் சேருவேன்

வேங்கை தோற்பதில்லை நம்வீரர் சாவதில்லை வீரர் சாவதில்லை எம் விடிவு தூரம்

இல்லை

தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்

என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்

Edited by kuddipaiyan26
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...liel_soriummp3/

விழியில் சொரியும் அருவிகள் -எமை

விட்டுப்பிரிந்தனர் குருவிகள்

பகைவன் கப்பலை முடித்தனர் -திரு

மலையில் வெடியாய் வெடித்தனர்.

தம்பி கதிரவன் எங்கே

தணிகை மாறனும் எங்கே

மதுசாவும் எங்கே

தங்கை சாந்தா நீ எங்கே

தாயின் மடியினில் அங்கே -கடல்

தாயின் மடியினில் அங்கே

பாயும் கடற்புலியாகி வெடியுடன்

ஏறி நடந்தவரே -உங்கள்

ஆவியுடன் உடல் யாவும் விடுதலைக்காக

கொடுத்தவரே

தமிழ் ஈழம் உமை மறக்காது

பகை கோண மலையிருக்காது

வேகமுடன் பெருங்கோபமுடன் பகை

வீழும் வெடியெனவானீர்

பிரபாகரன் எனும் தீயின் விழிகளும்

ஈரம் கசிந்திடப் போனீர்

விண்ணும் இடிந்து சொரிந்தது -வெடி

வேகத்தில் கப்பல் விரிந்தது

நீரின் அடியினில் நீந்தி பகைவரை

தீயில் எரித்துவிட்டீரே -அவன்

ஏவும் கப்பல்கள் ஏறி வெடித்துமே

ஈழம் மலர வைத்தீரே

வாயில் சோகத்தின் ராகங்கள் -எங்க

Edited by kuddipaiyan26
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

குட்டிப்பையா.. அருமையான முயற்சி.. நன்றி

தொடருங்கள்.. :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...Zzye/thaayamma/

போரம்மா

உனையன்றி யாரம்மா

போரம்மா

உனையன்றி யாரம்மா

போரம்மா

உனையன்றி யாரம்மா

செந்தணலில் வெந்திடினும் எங்கள்பகை கொல்வோம்

தேடிவரும் எங்கள்பகை ஓடிவிடச் செய்வோம்

ஓடிவிடச்செய்வோம் ஓடிவிடச்செய்வோம்

அண்ணன்பெயர் சொல்வோம் அச்சமில்லை என்போம்

அண்ணன்பெயர் சொல்வோம் அச்சமில்லை என்போம்

அண்ணன்பெயர் சொல்வோம் அச்சமில்லை என்போம்

இங்கு தமிழ்ஈழமது பொங்கிவர வெல்வோம்

அண்ணன் பிரபாகரனின் கண்ணில் எழும்பொறிகள்

ஆணையிடும் போதினிலே ஆடும் கரும்புலிகள்

ஆடும் கரும்புலிகள் ஆடும் கரும்புலிகள்

வெண்சபதம் செய்வோம் வெடிகளென ஆவோம்

வெண்சபதம் செய்வோம் வெடிகளென ஆவோம்

வெண்சபதம் செய்வோம் வெடிகளென ஆவோம்

எங்களுயிர் தந்தெமது எதிரிகளைக் கொல்வோம்

மின்னல் தன்னைக் கண்ணில் கொண்டு

வீசும் காற்றின் வேகம் கொண்டு

மண்ணில் வந்த வேங்கையம்மா போரம்மா

மண்ணில் வந்த வேங்கையம்மா -நாங்கள்

மண்ணில் வந்த வேங்கையம்மா

அண்ணன்சொன்ன வேதம் கேட்டு

விண்ணைக்கூட மண்ணில் வீழ்த்தி

ஆடும் கரும்புலிகளம்மா போரம்மா

ஆடும் கரும்புலிகளம்மா -நாங்கள்

ஆடும் கரும்புலிகளம்மா -நாங்கள்

ஆடும் கரும்புலிகளம்மா

Edited by kuddipaiyan26
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...lam_thanthamp3/

அடைக்கலம் தந்த வீடுகளே

போய் வருகின்றோம் நன்றி -நெஞ்சை

அடைக்கும் துயர் சுமந்து செல்கின்றோம் -உங்கள்

அன்புக்கு புலிகள் நன்றி

நாங்கள் தேடப்படும் காலத்தில் நீங்கள்

கதவு திறந்தீர்களே -எம்மை

தாங்கினால் வரும் ஆபத்தை எண்ணி

பார்க்க மறந்தீர்களே

பார்க்க மறந்தீர்களே...பார்க்க மறந்தீர்களே..

எங்கள் உடல்களில் ஓம் செங்குருதி

உங்கள் சோறல்லவா உங்கள் சோறல்லவா -நாங்கள்

தங்கியிருந்த நாள் சிலநாள் என்றாலும்

நினைவு நூறல்லவா

நினைவு நூறல்லவா...நினைவு நூறல்லவா...

பெற்றோரை உறவை பிரிந்திருந்தோம் -அந்த

இடைத்தை நிறைத்தீர்களே -மாற்றான்

முற்றுகை நடுவில் மூடியெமையுங்கள்

சிறகால் மறைத்தீர்களே

சிறகால் மறைத்தீர்களே...சிறகால் மறைத்தீர்களே

Edited by kuddipaiyan26
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/..._paravaikalmp3/

நல்லூரின் வீதியில் நடந்தது யாகம்

நாலுநாள் ஆனதும் சுருண்டது தேகம்

தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளை

திலீபனைப் பாடிட வார்த்தைகள் இல்லை

பாடும்பறைவகள் வாருங்கள்

புலி வீரன் திலீபனைப் பாடுங்கள்

யாகத்தில் ஆகுதி ஆனவன் நாமத்தை

ஆயிரம் ஆயிரம் ஆயிரம் ஆயிரம்

காலங்கள் பாடுங்கள்

(பாடும்பறைவகள்……………………..

இந்திய ஆதிக்க ராணுவம் வந்தது

நீதிக்கு சோதனை தந்தது

நாங்கள் சிந்திய ரத்தங்கள்

காய்ந்திடும் முன்னரே கால்களில்

வீழ் எனச் சொன்னது

வேங்கைகள் இதை தாங்குமா

குண்டை ஏந்திய நெஞ்சுகள் தூங்குமா?

வீரன் திலீபன் வாதாடினான்

பசி தீயில் குதித்து போராடினான்

வாயில் ஒருதுளி நீரதும் இன்றி வாசலில் பிள்ளை கிடந்தான்

நேரு பேரனின் தூதுவன் ஏனெனக் கேட்காது ஆணவத்தோடு நடந்தான்

சாவினில் புலி போனது தமிழீழமே சோகமாய் ஆனது

பார்த்து மகிழ்ந்தது ராணுவம் புலிச் சாவுக்கு ஆதிக்கம் காரணம்

அன்னிய நாடது ஆயினும் நீயிங்கு ஆதிக்கம் செய்திட வந்தாய் - எங்கள்

மன்னன் திலீபனின் கோரிக்கை யாவையும் ஏளனம் செய்துமே கொன்றாய்

துரோகத்தோடு புலி போனது தமிழ் சந்ததியே சூடு கண்டது

நெஞ்சினில் ரத்தம் வழிந்தது உந்தன் ஒப்பந்தம் இங்கு கிழிந்தது

..இந்த பாட்டு வரி எழுதினது..வெண்ணிலா அக்கா..

Edited by kuddipaiyan26
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

முன்பு இங்கு பதியப்பட்ட சிலபாடல்கள்

http://www.yarl.com/forum3/index.php?showt...0&start=100

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/jcbyqGdG//

சொட்டும் விரலால் சுட்டிக்காட்டு

முட்டும் பகையைத் தட்டிக்காட்டு

எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்

எங்கே தலைவா தடைகள்காட்டு

ஆணைபோட்டு வழியைக்காட்டு

எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்

சொட்டும் விரலால் சுட்டிக்காட்டு

முட்டும் பகையைத் தட்டிக்காட்டு

எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்

எங்கே தலைவா தடைகள்காட்டு

ஆணைபோட்டு வழியைக்காட்டு

எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்

அண்ணல் ஆணையே எங்களின் செயல் வீச்சு

அதை செய்வதே எங்களின் உயிர் மூச்சு

எங்கள் வாழ்விற்கு வீரமே பலமாச்சு

புயலாய்ப் படைகள் விரையட்டும்

துகளாய்த் தடைகள் சிதறட்டும்

இடரும் துயரும் முடியட்டும்

தேசம் விடியட்டும்

(சொட்டும் விரலால்.....)

ஈகத்தில் பூரித்து வாழும் தென் தமிழீழம்

உயிரெங்கள் தமிழென்று வாழ்வோம் வாழ்வே பொற்காலம்

காடென்ன கடலென்ன எங்கள் பயணம் உயிரோட்டம்

கனவுக்குள் உணர்வுக்குள் தேச உறுதிக்கொடியேற்றும்

உரிமைமைதானே உயிரிலும் மேன்மை சொல்லிச் சொல்லி வளர்த்தாயே

ஓய்வு என்பது எங்களின் வாழ்வில் இறந்த பிறகு என்றாயே

விரையும் நெஞ்சில் பயமில்லை பிரிவு என்றும் தடையில்லை

விடியும் வரையும் ஓய்வில்லை எங்கும் நாம் செல்வோம்

(சொட்டும் விரலால்.....)

தேசத்தை நேசிக்கும் காற்றை நாங்கள் சுவாசிப்போம்

வீரத்தை பூசிக்கும் உயிராய் நாங்கள் சீவிப்போம்

காலத்தின் ஆழத்தில் நின்று வாழ்வைத் தியானிப்போம்

கல்லறை வீரரை நெஞ்சில் தாங்கிப் பயணிப்போம்

உந்தன் வாழ்வின் காலத்தில் தலைவா எங்கள் விடுதலை வரவேண்டும்

உன்னைப்போல தலைமை எங்கள் வாழ்வில் வருமா நீ வேண்டும்

எத்தனை குண்டுகள் கொட்டட்டும் எத்தனை உயிர்களைக் கொல்லட்டும்

எப்படி வந்தும் முட்டட்டும் எதிலும் நாம் வெல்வோம்

சொட்டும் விரலால் சுட்டிக்காட்டு

முட்டும் பகையைத் தட்டிக்காட்டு

எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்

எங்கே தலைவா தடைகள்காட்டு

ஆணைபோட்டு வழியைக்காட்டு

எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்

அண்ணல் ஆணையே எங்களின் செயல் வீச்சு

அதை செய்வதே எங்களின் உயிர் மூச்சு

எங்கள் வாழ்விற்கு வீரமே பலமாச்சு

புயலாய்ப் படைகள் விரையட்டும்

துகளாய்த் தடைகள் சிதறட்டும்

இடரும் துயரும் முடியட்டும்

இந்த பாட்டு வரி எழுதினது..அண்ணன் அருவி

Edited by kuddipaiyan26
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...oorirandu_peer/

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது

ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள் (2)

பேரிரைச்சலோடு ஒரு வெடி வெடித்திடும் இங்கு

போக விடை கொடுத்த நெஞ்சம் துடிதுடித்திடும்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது

ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்

உங்களுக்கு மட்டும் எங்கள் உணர்வுகள் புரியும் (2)

ஊமைகளாய் நாமிருக்கும் காரணம் தெரியும்

பொங்கு மகிழ்வோடு நீங்கள் போய் விடுவீர்கள்

போன பின்னர் நாமழுவோம் யாரறிவீர்கள்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது

ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள

தாயகத்து மண்ணைத்தானே காதலித்தீர்கள் - சாவை

எதிர் பாரர்த்து பார்த்துக் காத்திருந்தீர்கள்

பாயும் கரும்புலிகளாகிப் பகை முடித்தீர்கள்

பாதகரின் நெஞ்சினிலே போய் வெடித்தீர்கள்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது

ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள

கல்லுக்குள்ளே ஈரமுண்டு கசிவதுண்டு

கரும்புலிகளின் விழிகளில் நீர் வழிவதுமுண்டு

அல்லும் பகலும் அண்ணன் பெயரை உச்சரித்தீர்கள்

அந்தப் பெயர் சொல்லி மேனி பிச்செறிந்தீர்கள்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது

ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்

பேரிரைச்சலோடு ஒரு வெடி வெடித்திடும் இங்கு

போக விடை கொடுத்த நெஞ்சம் துடிதுடித்திடும்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது

ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்

Edited by kuddipaiyan26
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • கொழும்பை நெளிய, வைத்துள்ள கடிதம். கொழும்பை மட்டுமல்ல, கொழும்புக்கு முட்டு கொடுக்கும் நம்மில் சிலரையும் நெளிய வைத்திருக்கும். 
  • இதெல்லாம் எங்க தொகுதி... பிரசாரத்தில் தன்னிச்சையாக குதித்த பாஜக.. அதிர்ச்சியில் அதிமுக.! சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தொகுதிகள் எவை எவை? என தீர்மானிக்கப்படாத நிலையில் பல இடங்களில் வேட்பாளர்களையே பாஜக களமிறக்கி இருப்பது அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதிமுக கூட்டணியில் 60 இடங்களில் தொடங்கி 40-ல் வந்து நின்றது பாஜக. ஆனால் இவ்வளவு தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்கவே முடியாது என்கிற திட்டவட்டமான நிலையை அதிமுக தெரிவித்து வந்தது. இதையடுத்து அதிமுக அணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் உறுதி செய்யப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டது. அதேநேரத்தில் எந்தெந்த தொகுதிகள் என்பது இன்னமும் உறுதியாகவில்லை. இந்த தொகுதி உடன்பாடு குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் எல். முருகன், மகிழ்ச்சியும் இல்லை.. கவலையும் இல்லை என கூறினார். தொகுதிகள் ஆக்கிரமிப்பு ஆனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு முன்னரே பாஜகவே தாமாகவே சில தொகுதிகளை கைப்பற்றிக் கொண்டது. அந்த தொகுதிகளில் வேட்பாளர்களையும் நிறுத்தி பிரசாரத்தையும் பாஜக தன்னிச்சையாக தொடங்கிவிட்டது. குமரிக்கு மல்லுக்கட்டு பாஜகவின் பிரபலங்களான நடிகைகள் குஷ்பு, கவுதமி, மாஜி எம்.பி. சசிகலா புஷ்பா, நயினார் நாகேந்திரன் என பலருக்கும் இந்த தொகுதிதான் என பாஜகவே சில இடங்களைக் கைப்பற்றிக் கொண்டுவிட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அத்தனை சட்டசபை தொகுதிகளும் தங்களுக்குதான் என அடம்பிடிக்கிறதாம் பாஜக. பாஜகவின் அடம் அத்துடன் இல்லாமல் அதிமுக வெல்லும் வாய்ப்புள்ள கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சில முக்கிய தொகுதிகளுக்கும் பாஜக மல்லுக்கட்டுகிறதாம். குறிப்பாக தென்மாவட்ட கோவில் நகரங்களை குறிவைத்து அதிமுகவிடம் பிடிவாதம் காட்டுகிறதாம் பாஜக. அதிர்ச்சியில் அதிமுக பாஜகவின் இந்த தன்னிசையான போக்கை அதிமுக தரப்பு இம்மியளவுக்கு கூட விரும்பவில்லை. இப்படி ஒரு அடாவடித்தனமான கட்சியாக, கூட்டணியாக ஒருபோதும் எந்த கட்சியும் நடந்து கொண்டதே இல்லை என்பது அதிமுக மூத்த தலைவர்களின் கருத்து. தேர்தல் களத்திலேயே இப்படி என்றால் ஜெயித்துவிட்டார்கள் எனில் என்ன என்ன செய்வார்களோ? என்கிற ஆதங்கமும் அவர்களிடம் வெளிப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/admk-upsets-over-bjp-takes-constituencies-413900.html  
  • இருவரும் இரத்தம் உறைந்து போய் , மெதுவாக பின்னேறிக்கொண்டிருக்க நாயோ இன்று ஒரு சம்பவத்தை  நடத்திக்காட்டியே தீருவது  என்ற முடிவில் இருவர்மேலும்  வெறிகொண்டு பாய  எதுவாக குனிந்து எம்ப தயாரானது, அந்தக்கணத்தில் ..திடீரென்று இவர்களிருவரும் பின்புறமிருந்து ஒரு  டோர்ச்சின்  மின்னொளியுடன்   "தம்பி நீங்க ரெண்டு பேரும் இங்க என்ன செய்றீங்க...?" என்ற வசனமும் சேர்ந்து ஒலித்தது , திடுக்கிட்டு இருவரும் திரும்பி பார்க்க அங்கே பாடசாலை இரவு காவலாளி நின்றுகொண்டிருந்தார். அவரை பார்த்துவிட்டு இருவரும் நாயை நோக்கி திரும்பிய கணம் அங்கு நாய் நின்ற அடையாளமே இல்லை,  கணப்பொழுதில் நடந்து முடிந்துவிட்ட சம்பவத்தால் இருவருக்குமே குரல் அடைந்துக்கொண்டது, இருந்தும் ஒரு மாதிரி சுதாகரித்துக்கொண்டு "அது .......ஒண்டுக்கு போக வந்தம் அண்ணன் "  என்று சுலக்சன் சொல்ல  காவலாளியோ சகட்டு மேனிக்கு கிழிக்க தொடங்கினான், "இங்கே வரக்கூடாது என்றெல்லா சொல்லியிருக்கன் ...நாளைக்கு நாய் அது இது என்று கடிச்சால் நான் தான்  பதில் சொல்லவேணும், இப்படி நீங்க கண்டபடிக்கு இருட்டிற்குள்  திரிவீர்கள் என்றால் நான் அதிபரிடம் முறையிட்டுவிடுவேன்,இது தான் கடைசி எச்சரிக்கை இனி உங்களில் யாரையும் இங்காலப்பக்கம் காணக்கூடாது " என்று முடித்தான், மன்னித்துக்கொள்ளுங்கோ அண்ணன் என்றுவிட்டு இருவரும் நடந்ததை தமக்குள்ளே மென்குரலில் பேசிக்கொண்டுசெல்வதை அவன் கண்கள் பார்த்துக்கொண்டேயிருந்தன,  அடுத்தநாள் மொத்த குழுவும் பாடசாலையில் அவர்கள் வழமையாக சந்திக்குமிடத்தில் ஆஜர், நடந்தவற்றை இவன் விபரிக்க, நாயிடம் மாட்டிய கதையை சுலக்சன் விபரிக்க மற்றைய மூவருக்கும் ஆர்வம் பற்றிக்கொண்டது, மூவரில் ஒருவன் (அவனது பட்டப்பெயர் ஐடியா மணி, முக்கியமான நேரங்களில் வித்தியாசமாக யோசித்து ஆச்சரியமூட்டும் வகையில் ஐடியா தருவதால் மொத்தக்குழுவும் அவனுக்கு வைத்த பெயர் அது ) தாடையை தடவி கொஞ்சம் யோசித்துவிட்டு சொன்னான்.  "புதரிட்க்கு அருகிலும் போகக்கூடாது, ஆனால் வளவிற்குள் என்ன நடக்குது என்றும் பார்க்கவேண்டும்  டேய் எதுக்குடா இப்படி யோசிக்கிறீங்க கோமேர்ஸ் கிளாசில் வலப்பக்க சுவரில் மேசை வைத்து ஏறியிருந்து பார்த்தால் முழுவதுமே தெரியுமே ...?  " .ஐடியா மணி ஐடியா மணிதான்  அவன் சொல்லிய வர்த்தக வகுப்பு அந்த வெறும் வளவின் இடதுபுற வேலியுடன் ஒட்டிக்கொண்டுசெல்லும் மூன்று மாடிக்கட்டடத்தில் கடைக்கோடியில் இருந்தது, அட ஆமால்ல.... மெதுவாக காவலாளிக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு கட்டிடத்திற்குள் புகுந்தால் அப்புறம் வேட்டை தான், சரி இன்றைக்கு மொத்தக்குழுவும் இரவு  11:00 மணியளவில் கட்டிடத்திற்குள் புகுந்து தொடர்ந்து நோட்டம் விடுவது என்று தீர்மானிக்கப்பட்டது    1946, கோவா பதினைந்து  நாட்களாக தொடர்ந்து பயணித்த களைப்பில் தொடர்ந்து மூன்று நாட்கள் உண்ணுவதும் உறங்குவதுமாகவே போய்விட்டது வில்லிக்கு, எழுந்து ஒரு காப்பியை தயார்செய்து மேசையிவைத்துவிட்டு பத்திரிகையை கையில் எடுக்க அவரது சபை முதல்வரிடமிருந்து  அழைத்துவந்தது, உடனடியாக  முதல்வரை சந்திக்க அவரோ "நீர் உடனடியாக இன்னும் ஐந்து தினங்களில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் எங்களதுசபையின் கீழுள்ள பாடசாலைக்கு புறப்படவேண்டும், அங்கே ஆங்கில ஆசிரியருக்கு வெற்றிடமுள்ளதுடன் அடுத்த ரெக்டராக உம்மைத்தான் சபை தெரிவுசெய்துள்ளது, எனவே இப்போதுள்ள ரெக்டரின் கீழ் நீர் பணி செய்து அனுபவத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும்" என்று முடித்தார்  புதிய இடம் புதிய அனுபவம் புதிய இனக்குழுமத்திற்கு சேவை செய்யப்போவதை நினைத்து தனக்குள்ளே மகிழ்ந்து போன வில்லி பயண ஏற்பாடுகளை செய்யத்தொடங்கினார். (தொடரும்)   பணியில் மாட்டிக்கொண்டதால் இரண்டுநாட்கள் எழுதமுடியவில்லை எதிர்பார்ப்புடன் இருந்த வாசக உள்ளங்களுக்கு எனது வருத்தத்தை பகிர்ந்துகொள்கிறேன்      
  • துரோகத்தின் நாட்காட்டி : நாள் 5, ஆவணி 2015 மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராமப்பகுதிகளில் ராணுவப் புலநாய்வுத்துறையினரால் ரோந்தில் ஈடுபடுத்தப்படும் பிள்ளையான் கொலைக்குழு  கொக்கட்டிச்சோலைப் பகுதியிலிருந்து வரும் செய்திகளின்படி, படுவான்கரையின் பல கிராமங்களிலும் ராணுவப் புலநாய்வுத்துறையினரும், பிள்ளையான் கொலைக்குழு உறுப்பினர்களும் மக்களைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகத் தெரிகிறது. திடீரென்று மக்களை அச்சுருத்தும் வகையில் ராணுவப் புலநாய்வுத்துறையினரும், பிள்ளையான் கொலைக்குழுவும் மக்கள் மத்தியில் நடமாடத் தொடங்கியிருப்பது தமக்கு அசெளகரியங்களை ஏற்படுத்துவதாக இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.  தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், பெருமளவு துணைராணுவக் கொலைக்குழு உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் ஆயுதங்களுடன் உலாவருவது மக்களை அச்ச நிலையில் வைத்திருந்து வாக்குகளைப் பிரிக்கும் தந்திரத்திற்காகத்தான் என்று அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.  பொதுச்சந்தைகள், வங்கிகள், தேனீர்க் கடைகள், முக்கியமான சந்திகள் ஆகிய இடங்களில் பிள்ளையான் கொலைக்குழு உறுப்பினர்களும் சிங்கள புலநாய்வுத்துறையினரும் கண்காணிப்பில் ஈடுபட்டுவருவதாகத் தெரிகிறது.  மூன்று நாட்களுக்கு முன்னர் தாந்தா மலை ஆலய உற்சவத்தின்போது, தொடர்ச்சியாக அவ்வாலயத்திற்கு வந்த துணை ராணுவக் கொலைக்குழு உறுப்பினர்கள் மக்களை அச்சுருத்தும் பாணியில் நடந்துகொண்டதாகவும், ஆலயத்திற்கு வருகைதந்த பல பக்தர்கள் இவர்களால் விசாரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொலைக்குழுத் தலைவன் பிள்ளையானுக்குப் பெருமை சேர்த்த இரட்டைப் படுகொலைகள். அமரர்கள் ஜோசேப் பரராஜசிஙம் மற்றும் ரவிராஜ் ராணுவப் புலநாய்வுத்துறையினரும், துணைராணுவக் கொலைக்குழுக்களும் வீதிகளில் வலம்வந்து பாடசாலை செல்லும் மாணவிகளை துன்புறுத்துவதாகவும், இதனால் பாடசாலை செல்வதற்கே அவர்கள் அஞ்சுவதாகவும் தெரிவிக்கும் பெற்றோர்கள், வீடுகளில் தனியே இருக்கும் பெண்களின் பாதுகாப்பும் இந்தச் சமூக விரோதிகளால் கேள்விக்குறியாகியிருப்பதாகத்  தெரிவிக்கின்றனர். இதேவேளை படுவான்கரை மற்றும் பட்டிப்பளை ஆகிய பகுதிகளில் பிள்ளையான் கொலைக்குழுவுக்கு ஆதரவாக மக்களை அச்சுருத்திவரும் ராணுவப் புலநாய்வுத்துறையினரும், கொலைக்குழு உறுப்பினர்களும், மக்களை பிள்ளையானின் கட்சிக்கே வக்களிக்க வேண்டுமெ என்றும் வற்புறுத்திவருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
  • மாத்தி யோசியுங்கள்.. சிறீதரன் அவர்களே.! கிழக்கு மாகாண சபையின் முதல்வர் வேட்பாளராக களமிறங்க வேண்டுமென சிவஞானம் சிறீதரன் எம் பி சாணக்கியனைக் கேட்டுக்கொண்டுள்ளார். நாடாளுமன்றத்துக்கு முதன் முதல் தெரிவாகும் தமது உறுப்பினர்களுக்கு கட்சி சார்பில் ஒதுக்கப்பட்ட நேரத்தில் குறிப்பிட்ட நேரம் வழங்குவது மரபு. ஆனால் அந்தத் தார்மீகக் கடமையைச் செய்யவில்லை. அப்படியிருந்தும் சுழித்துக்கொண்டோடிய சாணக்கியன் இந்த வலையில் வீழ்ந்து விடுவாரென நாம் நம்பவில்லை. இன்று கிழக்கில் மட்டுமல்ல நாடு முழுவதிலுமுள்ள தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஹீரோ சாணக்கியன்தான். பல அரசியல் வாதிகள், ஊடகவியலாளர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும் விடயம் இது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வாந்தியெடுக்கிறார்கள். உண்மையில் கட்சியின் நலன், எதிர்காலத்தில் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லவேண்டிய தேவை, இவையெல்லாவற்றையும் விட இனத்தின் நன்மையை கருதுபவராக இருந்தால் சிறீதரன் கட்சியின் செயலாளராக வரவேண்டும் என்றுதான் சாணக்கியனுக்கு சொல்லியிருப்பார். முதன் முதல் நாடாளுமன்ற உறுப்பினராக வந்த ஒருவரை தடுப்பிலிருந்து வந்த ஒரு முன்னாள் போராளி சந்தித்தார். அவரிடம் “சம்பந்தன் ஐயா போல ஆட்கள் இப்படியே தொடர்ந்து இழுபட்டுக்கொண்டிருக்காமல் அடுத்தவர்களுக்கு வழிவிட வேண்டும். இப்ப நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறன். இன்னும் ஒருநாடாளுமன்ற உறுப்பினரானதுக்கு பிறகு தேர்தலில் போட்டியிட மாட்டன். அடுத்தவர்கள் வர வழிவிடுவேன்” என்றார். இதனைக் கேட்ட அந்தப் போராளி புன்னகைத்துக்கொண்டார். ஒரு உரையாடலின் போது “பதவியை விடத் தயார்;தயார் என்று சொல்லிக்கொண்டே இருக்கவேண்டுமேயொழிய ஒரு நாளும் அதை விடக்கூடாது” என்று திரு.அமிர்தலிங்கம் தனக்கு அறிவுறுத்தியதாக குறிப்பிட்டார் .  ஏதோ தெரியவில்லை அந்த நேரம் பார்த்து இந்த விடயம் நினைவுக்கு வந்தது . இன்று கிழக்கில் கட்சியை யாரிடம் ஒப்படைத்திருக்கிறார் மாவை ? ஒரு கட்சியின் தலைமை வேட்பாளராகப் போட்டியிட்டு விருப்பு வாக்கில் இறுதி இடத்தைப் பெற்றுக்கொண்ட பொன். செல்வராஜாவிடம் 2013ல் தனது பாட்டனார் சி.மு இராசமாணிக்கத்தின் பெயரால் ஆரம்பிக்கப்பட விருந்த நிதியத்தின் நிகழ்வுக்கு சம்பந்தன் ஐயாவை அழைத்திருந்தார் சாணக்கியன். சம்பந்தன் ஐயாவின் வருகை செல்வராஜாவுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. தொலைபேசியில் சாணக்கியனைஅழைத்து 2020 வரை அரசியலுக்கு வரும் எண்ணம் வரக்கூடாது என எச்சரித்தார். இது சம்பந்தமாக மாவையை நேரில் சந்தித்துக் கூறினார் சாணக்கியன்.எப்போது தான் மாவை தனது ஆளுமையை நிரூபித்து காட்டியுள்ளார் ? வளவளா பதில்தான். இக் கால காலகட்டத்தில் தான் அருண் தம்பிமுத்து தன்னுடன் இணைந்து பணியாற்றுமாறு சாணக்கியனை அழைத்தார். அவரும் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்..அரசியலில் களமிறங்கினார்..அவ்வருடம் நிகழ்ந்த மாவீரர் நாள் நிகழ்வில் சாணக்கியன் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு வயது 24.இது நாள் வரை தமிழரின் விடுதலைப்போராட்டம் அரச பயங்கர வாதத்தின் விளைவுகள் பற்றியெல்லாம் எதுவுமே அவருக்குத் தெரியாது. துயிலுமில்லத்தில் கண்ட அபூர்வமான காட்சிகள் அவரை உலுப்பின. அந்த வித்தியாசமான உணர்வலைகள் பற்றி கனவிலும் அவர் அறிந்ததில்லை. தான் எங்கே நிற்கவேண்டும் என்பதைப் புரிந்துகொண்டார். அருண் தம்பிமுத்துவின்  கட்சியிலிருந்து விலகினார்.அவரைப் பொறுத்தவரை அது ஒரு அரசியல் விபத்து. இத் தவறை ஒப்புக்கொள்ளும் தைரியம் அவருக்கு இருந்தது. தந்தை செல்வாவுடன் பழகிய கிழக்கு மாகாணத் தமிழ் இளைஞர் பேரவைக் காரரும் பின்னாளில் ஆயுதப் போராட்டத்தில் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் வரை பயணித்தவருமான பாசி அல்லது யோகன் பாதர் எனப்படும் பாலிப்போடி சின்னத்துரையை தனது இல்லத்துக்கு வரவழைத்து கலந்துரையாடினார் சம்பந்தன் ஐயா. உடனே மாவையும் இன்னுமொரு முக்கிய புள்ளியும் புலிகள் அரசியலுக்குள் கொண்டு வரப்பட வேண்டியவர்கள் அல்ல ; அவர்களை வைக்கவேண்டிய இடத்தில்தான் வைக்கவேண்டும் எனத் தமது பலத்த ஆட்சேபனையை த் தெரிவித்தனர்.(ஆனால் மாவீரர் குடும்பத்தினர், முன்னாள் போராளிகளின் வாக்குகள் மட்டும் வேண்டும்) தமிழ் இளைஞர் அரசியலில் தன்னை விட யாருக்கும் வரலாறு இருக்கக் கூடாது என்பது மாவையின் நிலைப்பாடு. எப்படி அவர் பாலிப்போடி சின்னத்துரையை ஏற்றுக்கொள்வார்? புதிய சுதந்திரனும் மாவையையே சுற்றிச் சுற்றி வரலாறு எழுதியது. இந் நிலையில் யோகன் பாதரும் சாணக்கியனும் சந்தித்துக் கொண்டனர். சாணக்கியனுக்கு முழுமையான ஆதரவளிக்க முடிவெடுத்தார் யோகன் பாதர். சாணக்கியனுக்கு வேட்பாளர் நியமனம் வழங்கியமை தொடர்பாக பொன்.செல்வராஜா அதிருப்தி வெளியிட்டார். அருண் தம்பிமுத்துவுடன் சிலகாலம் இணைந்து செயற்பட்டவர்என்று குற்றஞ்சாட்டினார்.இதற்கு நீங்கள் எல்லாம் முன்பு எங்கேயிருந்தீர்கள்? என்று கேட்கப்பட்டதும் பதில் சொல்ல முடியவில்லை . பொன்.செல்வராஜாவினால் .(1977 தேர்தலில் கணேசலிங்கம் போட்டியிட்போதே செல்வராஜாவின் உடலில் தேசியக் காற்றுப்பட்டது. கணேசலிங்கம் வெற்றி பெற்ற பின் அவரது கோவை தூக்குபவராகத் திரிந்தார். அதற்கு முன் இவர் தம்பிராஜாவின் ஆதரவாளர். 1970 தேர்தலில் ஐ.தே. கட்சியில் போட்டியிட்டு பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மாறியவர் தம்பிராஜா ) இந் நிலையில் சாணக்கியன் சிங்களத்தியின் மகன் என்ற கதையை தமிழரசுக் கட்சியினரே அவிழ்த்து விட்டனர். எல்லோருடைய சதியையும் தாண்டி 33332 விருப்பு வாக்குகளை பெற்றார் சாணக்கியன். அரசுத் தரப்பில் பிள்ளையானை,வியாழேந்திரனை வெல்ல வைப்பதற்காக சாத்தியமான சகல விடயங்களும் மேற்கொள்ளப்பட்டன. தேர்தலின் பின்னர் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் உள் வீட்டுக் குழப்பங்களையடுத்து செயலர் ராஜினாமா செய்யவேண்டியேற்பட்டது. இந் நிலையில் புதிய செயலாளராக கட்சியின் நீண்ட நாள் உறுப்பினரான பாலிப்போடி சின்னத்துரையை தெரிவு செய்வதே நல்லது என மாவைக்குத் தெரியப்படுத்தப்பட்டது. பிள்ளையான்,கருணாவை எதிர்கொள்வதற்கு சின்னத்துரையே பொருத்தமானவர் எனச் சுட்டிக்காட்டப்பட்டது. அப்போது சின்னப்பிள்ளைத்தனமாக மாவை ஒரு கேள்வி கேட்டார். “அது சரி இவர்கள் போன்றோரெல்லாம் இருக்கும் போது பிள்ளையான் எப்படி இவ்வளவு வாக்குகள்( 54108) பெற்றார்” என்று. முதலில் தனது நிலையை அவர் உணரவில்லை. 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவம் உள்ள தான் இருக்க  அங்கஜன் எப்படி 36895 வாக்குகளை பெற்றார் என்று யோசித்திருந்தால் இவ்வாறான கேள்வியெழுந்திருக்காது. உண்மையில் புலிகளை மட்டுமல்ல புலிகள் சார்பானோரும் நிர்வாகப் பதவியில் அமர்வதை அவரால் சகிக்க முடியாது. மக்கள் பிரதிநிதியாக இவர் தெரிவாகும் முன்னரே 1970 களில் யாழ். மாநகர உறுப்பினராக விளங்கியவர் சொலமன் சூ சிறில். (இராஜா விஸ்வநாதன் மேயராக இருக்கும்போதே).இன்றுள்ள மாநகர சபை உறுப்பினர்களில் இவரே சீனியர். இரு முறை வரவுசெலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டு விட்டது. ஆர்னோல்ட்டை மேயர் வேட்பாளராக அறிவித்தால் எதிர்த்தே வாக்களிப்போம் என்று EPDP தெளிவாக அறிவித்து விட்டது. எண்ணத் தெரியாத ஒருவரா தமிழரசுக் கட்சித் தலைவர் ? இல்லை நன்றாகவே தெரியும். எனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை; எதிரிக்கு சகுனப் பிழை ஏற்பட வேண்டும் என்று எண்ணித்தான் சொலமன் சூ சிறிலை மேயர் வேட்பாளராக அறிவிக்காமல் விட்டார். எப்படியோ புலிகள் சர்பானோரை மேயர் பதவியில் அமர விடாமல் செய்தாயிற்று என்று பூரணமனத் திருத்தியுடன் அன்று தூக்கத்துக்குச் சென்றிருப்பார். மணிவண்ணனை மேயராக்கும் எண்ணம் அவருக்கு இருந்திருக்காது என்றும் சொல்ல முடியாது.இந் நிலையில் தந்தை செல்வா காலத்து தமிழரசுக் கட்சிக் காரரான பாலிப்போடி சின்னத்துரையை செயலாளராக்க எப்படி சம்மதிப்பார் மாவை ? இந் நிலையில் கட்சியை இளைஞர் மத்தியில் கொண்டுசெல்லவும், மாகாணசபைத் தேர்தலில் வெற்றி பாதைக்கு வழிவகுக்கவும் சுயநலமின்றிச் சிந்திப்பவராக இருந்தால் சாணக்கியனைக் கட்சி செயலாளராக்க வேண்டும் என்று அடுத்த செயற் குழுக் கூட்டத் திலோ பொதுச் சபையிலோ வலியுறுத்த முனைவாரா சிறீதரன் ? பாலிப்போடி சின்னத்துரையைத்தான் மாவையால் நிராகரிக்க முடியுமே தவிர சாணக்கியன் விடயத்தில் அவரால் எதுவும் கூறமுடியாது. தார்மீக ரீதியில் செயலர் பதவி மட்டக்களப்புக்குத்தான். இதனை கட்சித் துணைத் தலைவரான சி. வி.கே சிவஞானம் ஏற்கெனவே அறிவித்துள்ளார். கட்சிச் செயலர் பதவியில் இன்னொருவரும் கண் வைத்துள்ளார்.”பயங்கரவாதத்தை அழித்த இந்த அரசாங்கத்துக்கு விசர் நாய்களைக் கொல்வது என்பது கஸ்ரமான செயலல்ல “யூன் மாதம் 9ம் திகதி 2011 ஆண்டு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஆற்றிய உரை இது. நாடாளுமன்ற உரைகளைத் தொகுத்து வெளியிடும் அரசின் ஹன்சாட்டில் பக்கம் 1336 இல் இவ் விடயம் காணப்படுகிறது.விலங்குகள் நலச் சட்டம் மீதான விவாதத்திலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். தேசிய விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று கூறுவதை வெளிப்படையாக இல்லாவிட்டாலும் உள்ளுக்குள் ரசிக்கலாம் மாவை. இது அரியநேந்திரனுக்கான சிறப்புத் தகுதியெனவும் கருதலாம்.ஆனால் இதனை சிறீதரன் ஏற்க மாட்டார் என்றே நாம் நம்புகின்றோம். இதே வேளை கட்சிரீதியாக துணிச்சலுடன் செயலாற்றும் தகுதி சாணக்கியனுக்கு உண்டுதான். ஆனால் தமிழ் தேசிய விடுதலைப் போராட்ட வரலாறு அவருக்கு எதுவுமே தெரியாது. தலைவர் போராட்டத்தை ஆரம்பிக்கும் போது அவருடன் கூட இருந்த சிலர் இன்றும் பார்வையாளர்களாக அவதானித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் . போராட்டம் ஆரம்பித்த காலத்தில் சாணக்கியன் பிறந்திருக்க வில்லை இத்தனை வருடத்தில் சந்தித்த வேதனைகள், வலிகள் அவருக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை. இந்தியா தமிழ்ப் போராளிகளுக்கு பயிற்சியும் ,ஆயுதமும் புகலிடமும் வழங்கியது. பின்னர் ஸ்ரீலங்கா சார்பில் தமிழர் மீது போர் தொடுத்தது. இந்தியாவை இந்த மண்ணிலிருந்து விரட்ட என்னென்ன செய்யவேண்டுமோ அதனைப் புலிகள் செய்தனர். எனவே வரலாறு எந்தக் கட்டத்திலும் எப்படியும் மாறலாம்; இதற்கு ஆண்டுக்கணக்கில்லை என்ற விடயங்களை ஸ்ரீதரனும் யோகன் பாதரும் சாணக்கியனுக்கு விளக்க வேண்டும் . முற் கற்பிதங்கள் தேவையில்லை எனவே கட்சிச் செயலாளராக சாணக்கியனை நியமிக்கவேண்டும் என ஏனையவர்களை வலியுறுத்தும் பணியை அவர் விரைந்து மேற் கொள்ளவேண்டும். முதல்வர் வேட்பாளர்கள் யார் என்ற சர்சைகளை நிறுத்துமாறு சம்பந்தன் ஐயாவும் சொல்லிவிட்டார். எனவே கட்சியின் நலன் கருதி சாணக்கியனை செயலாளராக்க முனைவார் சிறீதரன் என நம்புகிறோம். அவதானி https://thamilkural.net/thesathinkural/views/127857/
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.