• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

நிழலி

பனிப்புயல் படங்கள்

Recommended Posts

பனிப்புயல் படங்கள்: டொரன்ரோ / மார்க்கம்.

இன்று என்னால் எடுக்கப்பட்ட சில புகை படங்கள்.... இதன் தரம் மிக குறைவு. இன்றுதான் வாழ்க்கையில் முதல் தடவையாக பனி புயல் மத்தியில் வாகனம் செழுத்தி இருக்கின்றேன். மிக சாதாரண அரசாங்க வேலை பார்த்தவரின் மகன் என்பதால் கார் வாங்குவது ஒரு கனவாக இருந்தது. கனடா வந்தே அது சாத்தியமானது. அப்படி வாங்குகையில் (ஒரு பழைய கார்) அப்பா அதனை பார்க்க இவ் உலகிலேயே இல்லை என்பதுதான் யதார்த்தம்

காலம் எவரதும் வாழ்க்கைகாக காத்திருப்பதில்லை.....

2921221000104558986S600x600Q85.jpg

2125094800104558986S600x600Q85.jpg

2258583720104558986S600x600Q85.jpg

2623601790104558986S600x600Q85.jpg

Share this post


Link to post
Share on other sites

எனக்கு பனிமழை என்றால் நல்ல விருப்பம். அழகான காட்சிகள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்.

நாங்கள் சூழலை நேசிப்பவர்கள். காரை வெறுப்பவர்கள். அதனால் பனிப் புயலை சைக்கிளில் சென்று சந்தித்து மகிழ்ந்திருக்கிறோம். ஓடும் சைக்கிள்.. பாதையில்..சரிவில் சறுக்கி.. விழ அதனோடு கூடி விழுந்து பனிப்பொழிவுக்குள் புதையுண்ட நினைவுகள்.. மாறாத சுகங்கள்..! :)

Share this post


Link to post
Share on other sites

படங்களுக்கு நன்றி நிழலி. நாளையும் பனிப்புயலாம். மேலும் தெளிவான படங்களை எடுத்து இணையுங்கள்.

Share this post


Link to post
Share on other sites

இஞ்ச பனிப்புயலோ என்ன கருமமோ... குளிர் சரியாய் கூடியிட்டுது. என்னதான் வீட்டுக்க சூடு வந்தாலும் குளிர் குளிர்தான். நேற்று பல்கலைக்கழகம் கூட நடக்கவில்ல. மூடீட்டாங்கள் 11.00 மணியோட. சினோவுக்க நீண்டதூரம் நடக்கிறது அதுவும் காத்து அடிக்கேக்க நடக்கிறது கொடுமையான அனுபவம்.

நானும் உங்களை மாதிரி சாதாரண அரசாங்க வேலை பார்த்தவரின் மகன் நான். நானும் கனடாவுக்கு வந்த ஒரு வருசத்தில கார் ஆசை வந்து $28,000 க்கு finance பண்ணி ஒண்டு வாங்கினது. பிறகு ஓடோ ஓடு எண்டு ஓடி கனடா, அமெரிக்கா பெருந்தெருக்கள் எல்லாம் அளந்து பார்த்து கடைசியில விபத்து ஒண்டுலையும் சிக்கினபிறகு (அது எண்ட பிழையில அடிபட இல்லை) காரை வித்துபோட்டு பொடிநடை பழகீட்டன். நகரத்துக்க இருகிறதால எனக்கு கார் இப்ப தேவைப்பட இல்லை. ஆனால்.. தள்ளி இருக்கிற ஆக்கள் கார் இல்லாட்டி குளிருக்க விறைச்சு சாக வேண்டியதுதான். ஒழுங்கான நேரங்களுக்கு பேருந்தும் வராது. குளிருக்க நிண்டு வழிமேல் விழி வைச்சு காத்து இருக்கவேணும்.

பழைய கார் எண்டு சொல்லி இருக்கிறீங்கள். பரவாயில்லை. அதுதான் நல்லது. புதுக்காரை வாங்கினால் ஆக்களுக்கு படம் காட்டலாம். அது தவிர வேறு பெரிசாய் உபயோகம் ஒண்டும் இல்ல. இப்ப நல்ல பழைய கார்கள் மிகவும் நல்லாய் ஓடுது. பெரிய பெரிய தலைகள் பழைய கார்தான் பாவிக்கிறது. அது பாதுகாப்பானதும் கூட. :)

Share this post


Link to post
Share on other sites

குளிர் என்றவுடன் இங்கை குளிருது ( இங்கையும் பனிகொட்டி கரைந்துவிட்டது) கொட்டுறதிலை பிரச்சினை இல்லை நடக்கேக்க வழுக்கும் பாருங்க கடவுளே நிறைய தடவை விழுந்து எழுந்திருக்கின்றேன் வழுக்கி . . .

Share this post


Link to post
Share on other sites

குளிர் என்றவுடன் இங்கை குளிருது ( இங்கையும் பனிகொட்டி கரைந்துவிட்டது) கொட்டுறதிலை பிரச்சினை இல்லை நடக்கேக்க வழுக்கும் பாருங்க கடவுளே நிறைய தடவை விழுந்து எழுந்திருக்கின்றேன் வழுக்கி . . .

வந்த புதிதில் தெரியத்தனமாக வேகமாக நடந்து, தண்ணி தான் கிடக்கு என்று நினைத்து நடந்தெல்லாம் சறுக்கி விழுந்திருக்கேன். சிலநாள் வீட்டிலேயே வலியால் இருந்துமிருக்கின்றேன். வலி எல்லாம் வலிக்கவில்லை..... ஆனால் பல தடவை பள்ளி போகும் குழந்தைகள் முன்னால் விழுந்தது தான் ஏதோ கொஞ்சம் மானக்கேடாக இருந்தது...

Share this post


Link to post
Share on other sites

இது பரவாயில்லை. நான் வந்து சேர்ந்த அடுத்த வாரம் மனைவியின் நண்பிவீட்டிற்கு சென்றிருந்தோம். அவர்கள் வீடு சற்று ஏற்றத்தில் இருந்தது. போகும்போது தெரியவில்லை. இறங்கும்போது நிறைய அனுபவப்பட்டேன். கால் வைத்ததுதான் தெரியும் கண் திறந்து பார்த்தேன். எங்கேயோ விழுந்து கிடக்கின்றேன். அவ்வளவு சறுக்கல் வாழ்க்கையில் முதல் வழுக்கலே அதுதான் ( வேறை நிறைய இருக்குங்கோ ) . அன்றிலிருந்து பனி விழுகின்றது என்றாலே கால் பயப்படத்தொடங்கிவிடும்.

Share this post


Link to post
Share on other sites

நான் ஓரிருமுறைதான் வழுக்கி விழுந்திருக்கிறேன். அதுவும் வந்த புதிதில்தான். நான் பனியின்போது, அன்னநடையிலும் மெதுவாகத்தான் நடப்பேன். அதுவும் ஹீல்ஸ் வைச்ச பாதணியோடுகூட நடந்திருக்கிறேன் என்றால் பாருங்களேன்.

:wub::)

இதுவரைகாலமும் ஸ்காபரோவில் இருந்தபடியால், பனிப்புயல்களின்போது, பேருந்தில்தான் பயணம் செய்தேன். ஆனால், இப்ப மார்க்கம் வந்தபின்பு, காரில் போகவேண்டிய கட்டாயம். அதனால் வேலைக்கு லீவு போடுவதும் அதிகரித்து விட்டது. எங்கள் வீதி வேறு மிகவும் சிறியது. ஆகவே நேரம் சென்றுதான் வழிப்பார்கள். இன்றுகூட பனியில் என் கார் புதைந்ததால், வேலைக்கு 1 மணிநேரம் பிந்தித்தான் போனேன். என்னைப் பொறுத்தவரை, வாழ்வதற்கு ஸ்காபரோ போன்ற இடம்தான் சிறந்தது. எல்லாமே அருகில் இருக்கும். ஆனால் இங்கு, பால் வாங்குவதற்குக்கூடக் காரில் செல்ல வேண்டிய கட்டாயம். :):D

Share this post


Link to post
Share on other sites

கடந்த வருடம் தான் பனியையும், பனிப்புயலையும் வாழ்வில் முதல் முறையாக நான் பார்த்தது, மிக. மிக ரசித்து பார்த்தேன். ஏற்கனவே பலர் பனியில் சறுக்கி விழுவது பற்றி நன்கு பயப்படுத்தியிருந்ததால், பெரிய சப்பாத்து வாங்கி போட்டு விழாமல் தப்பிவிட்டேன். வீட்டிற்கு முன்பாகவே பேருந்து தரிப்பிடமும் இருந்ததால் போக வர இலகுவாக இருந்தது. இன்னமும் எனக்கு பனி பற்றிய ஆச்சரியமும் விருப்பமும் குறையவில்லை. கடும் பனிபுயல் வீசும் போது நேற்றும் வெளியே கொஞ்ச நேரம் நின்று அனுபவித்து பார்த்தேன்.

கார் ஓட்டுவதுதான் செரியான கஷ்டமாக இருக்குது. இங்கு வந்து தான் முதன் முறையாக கார் ஓட்ட பழகினதால முதல் அனுபவமே பனிக்காலத்தில் ஓட்டும் அனுபவமாக ஆகிப்போட்டுது. நான் பார்த்து வலது பக்கம் திருப்பினால் அது சறுக்கி கொண்டு இடது பக்கமாக திரும்புது. எனக்கு முன்பாக ஒரு கார் பனியில் சறுக்கு குந்து ஒன்றில் ஏறி விட எனக்கு வயிற்றை கலக்க தொடங்கிட்டு.

Share this post


Link to post
Share on other sites

படங்களுக்கு நன்றி நிழலி. நாளையும் பனிப்புயலாம். மேலும் தெளிவான படங்களை எடுத்து இணையுங்கள்.

இந்த படங்கள் பனிபுயலின் போது எடுத்தவை. எவ்வளவோ முயன்றும் வெளிச்சத்தினை கூட்ட முடியவில்லை. பனிப்புயலின் போது இருந்த அதே இருட்டு தான் படத்திலையும் வந்து இருக்குது. நான் வேறு சில நல்லா படம் எடுக்க தெரிந்த ஆட்கள் எடுத்த பனி புயல் படங்களை பார்த்து இருக்கன். நல்லா வெளிச்சமாக இருக்கும். எப்படி எடுத்தார்கள் என்று தெரியவில்லை. எனது கமறா ஓரளவுக்கு நல்ல கமரா. Olympus DSLR (Digital SLR) 10.1 MP கமரா. ஆனால் எனக்குத்தான் சரியாக எடுக்க வருகுது இல்லை. பனியில் நல்ல துலக்கமாக வெளிச்சமாக எடுக்கும் முறை தெரிந்தால் சொல்லவும்

Share this post


Link to post
Share on other sites

பனிப்புயலின் வேகத்துக்கு எங்களால் நடக்க முடியுமா? அதுவும் காற்றுக்கு எதிர்த்திசையென்றால் காலையும் எடுத்து வைக்க முடியேல்லை. மூக்கு, காது இருக்கா என்று தொட்டுப்பார்க்க கையுக்கு உணர்ச்சியில்லை அது இரத்தம் ஏறி விறைச்சுப்போட்டுது. 'கடவுளே....தாயக நினைவுகள் தான் அப்ப வந்து சூடேற்றும்"...

ஒட்டாவாவில் அதிக குளிர், இம்முறை பனிப்பொழிவு ரொரண்டோவில் தான் அதிகம் என நினைக்கின்றேன். நாளைய வானிலை எச்சரிக்கை அறிக்கை சொல்லி இருக்கிறாங்கள்.

மகிழூந்தில் போறவை கவனமா ஓட்டுங்கோ தற்போதைக்கு தூரப்பயணங்களைத் தூரத்திலேயே வையுங்கோ 300ற்கும் மேற்பட்ட விமானப்பயணங்கள் ரத்துப்பண்ணி இருக்கினம்.

நாளைக்குத்தான் உண்மையான பனிக்காலம் தொடக்கம் அதுக்கு முதலே வாட்டு வாட்டு என்று வாட்டிப்போடுது. ஒட்டாவாவில் பேருந்துகள் வேலை நிறுத்தம் வேறு கொடுமையாக்கிடக்கு. நிலமை.

Share this post


Link to post
Share on other sites

இப்ப மார்க்கம் வந்தபின்பு, காரில் போகவேண்டிய கட்டாயம்.

அட... நானும் மார்க்கம் தான்.

Share this post


Link to post
Share on other sites

என்னவோ மார்க்கம் மார்க்கம் எண்டுறாங்க.. என்ன மார்க்கமப்பா? :wub:

Share this post


Link to post
Share on other sites

என்னவோ மார்க்கம் மார்க்கம் எண்டுறாங்க.. என்ன மார்க்கமப்பா? :wub:

இலகுவில் நரகத்திற்கு (அய்யோ இலங்கையை சொல்லவில்லை) போகும் வழியைதான் மார்க்கம் என்று சொல்லுறம்

Share this post


Link to post
Share on other sites

உலகின் மிக நீளமான சாலையான யங் வீதியின் ஒரு பகுதி பனிப்புயலின் பின்னர் இரவு 11 மணியளவில்....

img1459qe7.jpg

Share this post


Link to post
Share on other sites

எங்கனைக்க அருவி சொல்லாமல் கொல்லாமல் எங்கட ஏரியாவுக்க திரியுறீங்கள்? கொலீஜ் சப்வேயுக்கு கிட்ட Yonge-Carlton Intersection க்கு கிட்டப்போல இருக்கிது. இரவுல நீங்கள் எதுக்கு உதுக்க எல்லாம் திரியுறீங்கள். உது கூடாத பழக்கம் சரியோ :wub:

Share this post


Link to post
Share on other sites

அருவி சாம பிசாசு தானே அதனால் அவர் இரவில் தான் வெளியில் வருவார் ஆனால் உந்த படத்தை அருவி தான் எடுத்தவர் என்பதை நான் நம்ப மாட்டன் 3 மணிக்கே வேலையில இருந்து வீடு போய் நித்திரை கொண்டவராம் நேற்று பிறகு எழும்பி 11 மணிக்கு படம் எடுத்தவர் என்பதை நம்ப முடியுமோ?

Share this post


Link to post
Share on other sites

எங்கனைக்க அருவி சொல்லாமல் கொல்லாமல் எங்கட ஏரியாவுக்க திரியுறீங்கள்? கொலீஜ் சப்வேயுக்கு கிட்ட Yonge-Carlton Intersection க்கு கிட்டப்போல இருக்கிது. இரவுல நீங்கள் எதுக்கு உதுக்க எல்லாம் திரியுறீங்கள். உது கூடாத பழக்கம் சரியோ :wub:

அடடா டவுண்ரவுண் பகுதிக்கு இரவில போகக்கூடாதெண்டதெல்லாம் இருக்கிறதா? இரவு வேளையில் டவுண்ரவுண் வீதிகளில் காலற நடைபோவது மிகவும் இனிமையானது... :P

Yonge-Carlton/college Intersection... சரியான இடம்.

அருவி சாம பிசாசு தானே அதனால் அவர் இரவில் தான் வெளியில் வருவார் ஆனால் உந்த படத்தை அருவி தான் எடுத்தவர் என்பதை நான் நம்ப மாட்டன் 3 மணிக்கே வேலையில இருந்து வீடு போய் நித்திரை கொண்டவராம் நேற்று பிறகு எழும்பி 11 மணிக்கு படம் எடுத்தவர் என்பதை நம்ப முடியுமோ?

வேலையில இருந்து 13:30 மணியளவில் வீடு திரும்பியது உண்மை, ஆயினும் வீடு வந்து சேர 15:30 மணியாகிவிட்டது:) . அதன் பிறகெல்லாம் நித்திரைகொள்ளவில்லை (வரும்போதே நித்திரை கொண்டாச்சு >_> )

Share this post


Link to post
Share on other sites

பனிபுயலால் பாதிக்கப்பட்டோர் அதிகம் போல??

Share this post


Link to post
Share on other sites

பனிப்புயலின் படங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி .

பனி பெய்யும் போது குளிர்வதை விட , அது கரையும் நாட்களில் ( மாசி ,பங்குனி ) ஒரு குளிர் காற்று மிகவும் வாட்டி எடுக்கும் .

காது இருக்கிறதா ? கைவிரல் இருக்கின்றதா என்று சந்தேகம் வந்து தொட்டுப்பார்த்து உறுதி செய்ய வேண்டி இருக்கும் .

பனியில் வழுக்கி விழுந்து , உடலில் எங்கு நோ ஏற்படுகின்றதோ ..... அந்த இடத்தில் அடுத்த வருடமும் அதே நேரம் , நோகும் என்று நகைச்சுவையாக இங்கு சொல்வார்கள் . :icon_mrgreen:

Share this post


Link to post
Share on other sites

எனக்கு பனிமழை என்றால் நல்ல விருப்பம். அழகான காட்சிகள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்.

நாங்கள் சூழலை நேசிப்பவர்கள். காரை வெறுப்பவர்கள். அதனால் பனிப் புயலை சைக்கிளில் சென்று சந்தித்து மகிழ்ந்திருக்கிறோம். ஓடும் சைக்கிள்.. பாதையில்..சரிவில் சறுக்கி.. விழ அதனோடு கூடி விழுந்து பனிப்பொழிவுக்குள் புதையுண்ட நினைவுகள்.. மாறாத சுகங்கள்..! :icon_mrgreen:

அவனவன் குளிருக்கு நடுங்கிச்சாகிறான்.

இஞ்சை ஒராள் சயிக்கிள் பாதையிலை சறுக்கி சுகம் கண்டதாய் புலம்புறார். :lol:

Share this post


Link to post
Share on other sites

அவனவன் குளிருக்கு நடுங்கிச்சாகிறான்.

இஞ்சை ஒராள் சயிக்கிள் பாதையிலை சறுக்கி சுகம் கண்டதாய் புலம்புறார். :lol:

கு.சா...அகதியாகவோ அல்லது அகதியாக வந்தவர்களை அண்டி குடிபெயர்ந்தவராகவோ அல்லது வேலைக்கு வந்தவராகவோ இருப்பின் இந்த நிலை இருக்கும்.

ஆனால் எனக்கு வரும் போதே எப்படி குளிரை தாக்குப் பிடிக்கிறது அதற்கான உடைகள் என்ன என்று சொல்லித் தந்திருக்கிறார்கள். அதுமட்டும் அன்றி குளிர்காலத்துக்கு ஏற்ப உணவு வகைகளும் உட்கொள்ள வேண்டும்.

எம்மவர்கள் ஏதோ ஊரில் திரிவது போல காலுக்கு அளவில்லாத பெரிய சப்பாத்துக்களையும் வாங்கிப் போட்டுக் கொண்டு.. தொல தொல ஒற்றை உடுப்போட ஒரு ஜக்கட்டை மாட்டிக் கொண்டு திரிந்தால் குளிராமல் சுடுமா..??!

குளிர்காலத்தில் வெண்ணிற வெப்ப உள்ளாடைகள் அணியுங்கள்.(உடல் வெப்ப இழப்பை குறைக்க..!) பருத்தியை விட்டு கம்பளி உடைகளை அணியுங்கள்.அதைத்தவிர இன்னும் குளிரைத் தாங்க உடுப்புகள் இருக்கின்றன.

காலுறைகளை கம்பளியால் ஆகி இருப்பின் நன்று. இறுக்கமான குளிர்கால பாதணி அணியுங்கள்.

வீட்டு வெப்பநிலையை 21 பாகை செல்சியஸ் இல் வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் வைத்திருப்போர் 21 பாகைக்கு மேலே கொண்டு போவது குழந்தைகளின் மூளைக்கு ஆபத்தானது. அதேபோல் 18க்கு குறைவதும் கூடாது.

மின்சாரத்தை மிச்சம் பிடிக்க என்று கீற்றரைப் போடாமல் இருந்தா குளிராம.. சுடுமாக்கும்..!

வெள்ளையள் சமருக்கு எவ்வளவுக்கு எவ்வளவு திறக்குதுகளோ.. வின்ரருக்கு அவ்வளவுக்கு அவ்வளவு மூடுங்கள். அவர்களுக்கு பனி என்றாலும் மகிழ்ச்சி. காரணம்.. அவர்களுக்கு பாதுகாப்பைப் பெறத் தெரியும்.

தலைக்கு நிச்சயம் கம்பளியாலான அல்லது வெப்ப இழப்பைத் தடுக்கும் தொப்பி அல்லது குல்லா அணியுங்கள். அது இறுக்கமாக தலையோடு ஒட்டி இருத்தல் நன்று. காரணம் உடல் வெப்பத்தில் 25% தலை வழியாகவே இழக்கப்படுகிறது. குளிர்காலத்தில்..!

நான் இதையெல்லாம் யுனில சொல்லித் தரேக்க கேட்டு அதன்படி நடக்கிறன். அதால.. குளிரை என்ஜோய் பண்ணுறன்.

ஆனால் களவா இந்த குளிர்நாடுகளுக்க புகுறவை.. அல்லது களவா வந்தவையை அண்டி குடிபெயருறவைக்கு இந்த ஆலோசனைகள் கிடைப்பதில்லை. அவர்களுக்கு இந்த நாட்டுச் சூழ்நிலைகளை எதிர்கொள்ளத் தெரிந்திருப்பதும் இல்லை. மற்றவர்களை பார்த்துச் செய்கிறார்களே தவிர விசயம் அறிந்து செய்வதில்லை. அது தவறு. அதுதான் குளிரை சரியான முறையில் கழிக்க முடிவதில்லை..!

மற்றும் படி பனிப் பொழிவும்... அதைக் கிள்ளி எறிஞ்சு விளையாடுறதும்.. விழுந்து உருண்டு எழும்பிறதும்... ஆகா என்ன சுகம்..! நீங்கள்.. இதையெல்லாம் இழக்கிறீங்க. கவலையா இருக்கு..! :D:icon_mrgreen:

Share this post


Link to post
Share on other sites

குளிர்காட்டில் வெள்ளையாக வருவினம் எண்டிச்சினம். ஆனால் என் கலரில் எந்த மாற்றமும் வரவில்லையே!

Share this post


Link to post
Share on other sites

பானையில் இருந்தால்த்தான் அகப்பையில் வரும் எண்டு ஊரிலை சொல்லுறவை

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • அது ஒரு church ஆகவே முதலில் தாபிக்கப்பட்டது என்ற வரலாறும் உள்ளது. அதன் அமைப்பும் அவரே தெரிகிறது.  
  • சுடச் சுடச் செய்து போட்டாச்சு என் சமையல் பதிவில்   😎  
  • இந்த பாப்பரசர்கள் தொல்லை தாங்க ஏலாமல் கிடக்குது. துருக்கியர் (முகம்மதியர்) கையிலிருக்கும், புனிததலம் ஜெரூசலத்தினை பிடியுங்கள் ஜரோப்பிய கிறிஸ்தவர்களே என்றார்... பதினொன்றாம் நூறாண்டில் ஒரு பாப்பரசர். பல நூறாண்டுகள் நீடித்த சிலுவை யுத்தம் ஆரம்பித்தது. ஜெரூசலம் யூதர்கள் கையில் சிக்கும் வரை தொடர்ந்தது. இப்ப, அவர்கள் நாட்டில் இகுக்கும் மியூசியம், மசூதி ஆவது குறித்து கவலைப்படுவதேன்?
  • தமிழரும் தேர்தலும் தீர்வும்-பா.உதயன்  இலங்கையின் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற இருக்கும் இந்த வேளையிலே தமிழர் தரப்பு பல கட்சிகளாக பிரிந்து நின்று போட்டி போடுகின்றனர் .தமிழ் மக்களின் பெரும் ஆதரவோடு கடந்த தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழர்களின் இனப்படுகொலை ரீதியாகவோ தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு ரீதியாகவோ தமிழர் தலைமை சர்வதேச ஆதரவை பெற முயற்சிக்காது சிங்கள பேரினவாதக் கட்சிகளுக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்காமல் இணக்க அரசியலையும் சமரச அரசியலையும் சரியான ராஜதந்திர அணுகுமுறை இன்றி விட்டுக்கொடுப்புகளுடன்  ஆதரவு வழங்கியதன் மூலம் இம் முறை தேர்தலில் இவர்களின் வாக்குப் பலம் குறைய வாய்ப்பு இருப்பதுபோல் தெரிகிறது. சில பிரதிநிதிகளை இம் முறை இவர்கள் இழப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பது போல் தெரிகின்றது.இவர்களின் வாக்கு வங்கியின் சரிவோடு ஏனைய பல கட்சிகளில் இருந்து இம் முறை சில பிரதிநிதிகள் தெரிவாவதற்கான வாய்ப்புகளும் இருப்பது போல் தெரிகின்றது.ஆயுதப் போராட்டத்தை விமர்சித்தபடி ஜனநாயகப் பாதையை தெரிவு செய்த இவர்கள் சரியான பாதையில் பயணித்தார்களா என்பது கேள்விக்குறி தான்.பேரம் பேசும் பலத்தை நாம் இழந்திருந்தாலும் ஏதோ ஒரு வழியில் தமிழருக்கான நிரந்தர தீர்வுக்கான பாதையை தமிழர் தலைமை தேடவில்லை. சிங்கள அரசு தாமாகவே முன் வந்து தமிழர் பிரச்சினைக்கு தீர்வு தராது என்பது வரலாறு கற்றுத் தந்த பாடம்.இருந்த போதும் தேர்தலை பகிஸ்கரிப்பதனாலேயோ ஒதுங்கி இருப்பதனாலேயோ எந்தப் பயனும் இல்லை.மாறாக தமிழர் தரப்பு பல தோல்விகளை சந்தித்ததும் வரலாறு கற்றுத்தந்த பாடமாக நினைத்து பிழைகளில் இருந்து சிலவற்றை கற்றுக் கொண்டு நமது வழியை மீண்டும் தேட வேண்டும்.எது எப்படி இருப்பினும் அந்த மக்களே தான் சரியான தீர்ப்பை வழங்க முடியும். எந்தத் தேர்தலையும் விட இம் முறைத் தேர்தலில் தான் தமிழர் தரப்பு பல கட்சிகளாக பிரிந்து ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டு போட்டி போடுகின்றனர்.இலக்கு ஒன்றாக இருந்த போதிலும் ஏன் இப்படி பிரிவினை என்று தெரியவில்லை.தேசியம் என்பது சரியோ பிழையோ என்பதற்கு அப்பால் தமிழர் இலக்கு வெல்லும் வரை முற்போக்கு தேசியமாக இது சிதைந்து போகாது சிங்கள மக்களுக்குள் இருக்கும் ஐக்கியம் போல் தமிழர் தரப்பும் ஒற்றுமைப்பட்டிருக்கவேண்டும்.மாறாக இப்போ சிதைந்துபேய் இருக்கிறது.எல்லா இன மக்களிடமும் இல்லாத பெரும் குறை தமிழனிடம் மட்டும் தான் உண்டு. தமிழன் ஒருத்தனால் தான் தன் இனத்தையே தான் இழிவாகப் பேச முடியும்.இது தமிழரின் பெரும் பலவீனம் தான். எதையுமே தானாக எந்த உரிமையும் சிங்கள ஆதிக்கம் எமக்குத் தராது .இணக்க அரசியல் செய்தால் என்ன சமரச அரசியல் செய்தால் என்ன ஒன்றுக்குமே இறங்கி வர மாட்டார்கள்.அதற்காகா நாம் போராடாமல் இருக்க முடியாது.பல ஆண்டுகளாக போராடுகிறான் பாலைதீனியன் ஏதோ ஒரு நம்பிக்கையுடன்.சுய உரிமையை வென்று எடுத்த நாடுகளும் உண்டு.சுய உரிமைக்காய் தொடர்ந்து போராடும் மக்களும் உண்டு. சிங்கள மக்களோடு சேர்ந்து எமது உரிமையையோடு வாழ விருப்பம் தான் ஆனால் அவர்கள் தான் எம்மை மரத்தில் படரும் கொடி என்கிறார்களே.எமக்கு எந்த பாரம்பரிய நிலமும்  சொந்தம் இல்லை என்கிறார்களே.இந்த நாடு சிங்களவருக்கு மட்டுமே சொந்தம் என்கிறார்களே.வரலாறுகளை எல்லாம் மாறுபட்டு திரித்து சொல்கிறார்களே.தமிழர் தலைவர் ஐயா சம்மந்தன் சிங்கக் கொடியை உயர்த்திப் பிடித்தாரே இணக்க அரசியலும் செய்தாரே பிரிக்கப் படாத இறைமை மிக்க இலங்கைக்குள் சுயாட்சி அடிப்படையிலான தீர்வொவோடு சேர்ந்து வாழ்கிறோம் என்றாரே. தமிழர் தீர்வுக்கு அபிவிருத்தி மட்டும் போதும் என்கிறார்களே பழையவற்றையும் இனப்பிரசினையையும் மறந்து விடும்படி சொல்கிறார்களே 13+ க்கு மேல் தீர்வு வழங்குவோம் என்று எமக்கும் இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் உறுதிமொழி தந்தார்களே தந்தார்களா .உறவுகளை எல்லாம் தொலைத்து விட்டு கண்ணீரோடு அலைகிறார்களே தமிழ் தாய்மார்.இதற்கு எல்லாம் நீதியை யார் பெற்றுத் தருவார். தொடர்ந்தும் நாம் எமது அருகில் இருக்கும் இந்தியாவையே நம்பி வந்தோம் ஆனால் இந்தியாவோ தமது நலன் சார்ந்த வெளி விவகாரக் கொள்கையுடன் இன்று வரை ஈழத்தமிழருக்கான அவர்களின் விருப்பு அடிப்படையில் ஒரு நிரந்தரமான எந்தத் தீர்வையும் பெற்றுத்தரவில்லை.பயங்கரவாததுக்கு எதிரான போர் என்ற இலங்கை அரசின் கவடத்தனமான ராஜதந்திரத்தில் சிக்கி அழிவை சந்தித்த ஈழத்து தமிழருக்கு இந்து சமுத்திரத்தில் பலம் மிக்க நாடக இருக்கும் இந்தியா எதோ ஒரு வழியில் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுத் தந்திருக்க இவர்களால் நிச்சியமாக முடிந்திருக்கும். 13ம் திருத்தத் சட்டம் கூடி இப்போ நீர்த்து போகும் அளவுக்கும் இதை அரசியல் அமைப்பில் இருந்து நீக்குவதற்கும் மக்கள் ஆணையை பெற அரசு முயற்சிக்கிறது.தமிழர்களின் அரசியல் தீர்வைப் பொறுத்தவரையில் எதற்குமே அசையாது இருக்கிறதே சிங்கள ஆதிக்கம்.அப்போ தமிழர் எப்படி இணக்க அரசியல் செய்வது. சில தேசம் இந்தியாவால் உருவாகியது .அன்று தந்தை செல்வா கேட்ட சமஸ்டீ தீர்வை இந்தியா எமக்கு பெற்றுத்தர இலங்கை அரசுக்குக்கு அன்று அழுத்தம் கொடுத்து உதவியிருந்தால் இப்படி எல்லாம் சிதறி அழிந்து ஈழத்து தமிழன் போய் இருக்க மாட்டான். எம் வேதனைக்கு எம் அருகில் இருக்கும் இந்தியாவும் ஒரு காரணமே.அவர்கள் தந்த ஆயுதத்தையும் நாம் தூக்கி இருக்க வேண்டிய அவசியமும் இருந்திருக்காது அதேபோல் எம் சில தோல்விகளுக்கும் பிழைகளுக்கும் நாமம் காரணமாக இருந்திருக்கமாட்டோம்.விட்டு பிழைகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு சமாதானத்துக்கான பாதையை நேக்கி நாம் மீண்டும் நடக்க வேண்டும்.மீண்டும் இந்திய,சர்வதேசம்,புலம் பெயர் தமிழர் இந்த முக்கோண அரசியல் அழுத்தம் இல்லாமல் தமிழருக்கான ஓர் அரசியல் தீர்வைப் பெறுவது கடினமே.இந்தப் பாதையை இனி வரும் காலங்களில் தமிழர் தலைமை சரியாகக் கையாளவேண்டும். தேர்தல் முடிந்தவுடன் இதிலே எத்தனை பேர் அபிவிருத்தி என்று அரசாங்கத்துடன் சேர்வீர்களோ அமைச்சுப் பதவி எடுப்பீர்களோ அவர்கள் இப்பவே சேரலாம். பாவம்  மக்களின் வாக்கை வேண்டிவிட்டு வாக்குத் தவறாதீர்கள்.உங்களில் சிலர் உங்களை வளர்ப்பவர் எங்களை அல்ல.அதிகாரப் பகிர்வுக்காய் முதலில் உழையுங்கள் அபிவிருத்தியை தொடருங்கள்.அதிகாரம் இல்லாத அபிவிருத்தி எப்பவுமே நிலையாகாது.இது நீதியானதாகவோ மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தி ஆக அமையாது அரசியல்வாதிகளும் தனி மனிதர்களும் மக்கள் பணத்தை சுரண்டுவதாகவே அமையும்.அதிகாரப்பகிர்வை மறைப்பதற்காய் அபிவிருத்தியை கையில் எடுக்கும் அரசின் சூழ்ச்சிக்குள் பதவியும் பணமும் வேண்டி உங்களை விற்று விடாதீர்.மக்களே நீங்கள் எந்தச் சமூகத்தினராகிலும் நீதியானவர்களையும் நேர்மையானவர்களையும் மக்கள் சேவை கருதி உழைப்பவர்களை தெரிவி செய்து அனுப்புங்கள். செர்பியா இராணுவத்தால் போஸ்னியா சிறு பான்மை இனத்திற்கு எதிரான இனப்படுகொலையை செய்த "போஸ்னியாவின் கசாப்புக்காரன்","Butcher of Bosnia",என்று அழைக்கப்பட்ட Gen. Ratko Mladic என்ற சேர்பியா இராணுவத் தளபதியை யுத்தக் குற்றவியல் நீதி மன்றம் விசாரித்தபோதே போஸ்னியா மக்கள் சார்பில் வாதாடிய சட்வாளர் கூறினார் நீதி வழங்காத எந்த நல்லிணக்கமும் நடை முறைக்கு சாத்தியம் இல்லை என்றார் .(You Can't Have Reconciliation Without Justice)அதேபோல் எந்த நல்லிணக்கமும் எந்த அபிவிருத்தியும் தமிழ் மக்களுக்கான நீதியை வழங்காமல் சாத்தியமாகாது. சிந்தித்து வாக்களியுங்கள்.அரசியல் என்பது திருடர்களின் கோட்டையாக இருந்தாலும் உங்களால் அதை மாற்ற முடியும்.உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உங்களுக்கு உதவுபதுபோல் வியாபாரிகள் காத்திருக்கிறார்கள்.ஏதோ மனிதாபிமார் போல் கன கதை சொல்லி அபிவிருத்தி என்றும் அரசோடு பேசுவோம் என்றும் வருவார்கள் .இருந்தபோதும் மனிதாபிமானத்தோடு உண்மையாக உதவக் கூடியவர்களும் இருக்கிறார்கள்.எது எப்படி இருப்பினும் சரியானவர்களை இனம் கண்டு சரியான பாதையில் போக முயற்சிப்போம்.நிரந்தர அரசியல் தீர்வுக்காய் எல்லா வளிகளிலும் முயற்சிக்கும் நல்லதொரு தலைமையை தெரிவு செய்வோம். தமிழ்த் தேசியம்  தனக்குள் மோதி  உடைந்ததைப்போல  சிங்களத் தேசியம்  ஒரு போதும்  தமக்குள் மோதாது. பா.உதயன் ✍️