• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

நிழலி

பனிப்புயல் படங்கள்

Recommended Posts

குளிர்காட்டில் வெள்ளையாக வருவினம் எண்டிச்சினம். ஆனால் என் கலரில் எந்த மாற்றமும் வரவில்லையே!

வெள்ளை ஆக்களில மாற்றம் பெரிசா தெரியாது. அதேபோல காப்பிலிகள் கறுப்பாத்தான் இருக்குங்கள். இந்த இரண்டுக்கும் நடுவில.. இருக்கினம்.. அவைதான் கொஞ்சம் குளிருக்கு மூடிக்கட்டிறதால அவிஞ்சு சுவப்பாவினம்.. பிறகு சமருக்கு பழைய படி மாறிடுவினம்..!

அதெல்லாம் ஜீனில வரனும். அப்பதான் நிரந்தர வெள்ளை ஆகலாம்.

நானும் கறுப்புத்தான். வெள்ளையில்ல..! :icon_mrgreen:

பானையில் இருந்தால்த்தான் அகப்பையில் வரும் எண்டு ஊரிலை சொல்லுறவை

ஏன் கு.சா சலிச்சுக்கிறீங்க. இப்ப நான் சொல்லித்தாரனில்ல. அதுபோல நடந்துக்கோங்க.. குளிரை மகிழ்ச்சியோட கழிக்கலாம்..! :lol:

58mu7.jpg

Share this post


Link to post
Share on other sites

உங்களைப் போல 4 எழுத்துப் படிச்சா ஆட்களிடம் அறிவுரை கேட்காமல் இவ்வளவு நாளும் நம்பிக் கொண்டிருந்தது தப்புத் தான்!

Share this post


Link to post
Share on other sites

உங்களைப் போல 4 எழுத்துப் படிச்சா ஆட்களிடம் அறிவுரை கேட்காமல் இவ்வளவு நாளும் நம்பிக் கொண்டிருந்தது தப்புத் தான்!

எதுக்கும் பியுட்டி பாலருக்கு போய் பிளீச் பண்ணிக்குங்க. பெட்டையள் செய்யுறதாப் போல..! அப்பப்ப கிறீமுகளையும் வாங்கி அப்பிக்குங்க. கான்ட்சம்மா வருவீங்க. காண்ட் சம்மா வராமா.. கனடா பிகர் மாட்டாது..! குறிப்பு.. இப்ப கிறிஸ்மஸுக்கு எல்லாம் நல்ல மலிவா போகுது. உங்க இடுப்பு சைச விட இரண்டு மூண்டு கூடின.. ஜீன்ஸ் வாங்கி வையுங்க. கழர கழர போட்டிட்டு.. தெத்தி தெத்தி நடந்தால் தான் காண்ட் சம்..! மிச்சம் நான் சொல்லித் தரத் தேவையில்ல ரொண்டோ தெருக்களிலேயே பார்க்கலாம் தானே பசன் சோ..! :icon_mrgreen:

Share this post


Link to post
Share on other sites

அப்படி ஜீன்சைப் போட்டு விட்டுத் தான் கழருவதை மறைக்க பாவடை மாதிரி சேட் போடுகின்றோம் அல்லவா! அப்படி உடுப்புப் போட்டால் மட்டும் போதாது, ஏதாவது றாப் பாட்டுக் கேட்டபடி, அல்லது கேட்காவிட்டாலும், அதுக்கேற்ற மாதிரி கையை, காலைப் போட்டு ஆட்டி ஆட்டி நடக்கணும்... இதெல்லாம் பழக எவ்வளவு காலம் பிடிக்குமொ தெரியல்ல...

Share this post


Link to post
Share on other sites

எதுக்கும் பியுட்டி பாலருக்கு போய் பிளீச் பண்ணிக்குங்க. பெட்டையள் செய்யுறதாப் போல..! அப்பப்ப கிறீமுகளையும் வாங்கி அப்பிக்குங்க. கான்ட்சம்மா வருவீங்க. காண்ட் சம்மா வரமா.. கனடா பிகர் மாட்டாது..! குறிப்பு.. இப்ப கிறிஸ்மஸுக்கு எல்லாம் நல்ல மலிவா போகுது. உங்க இடுப்பு சைச விட இரண்டு மூண்டு கூடின.. ஜீன்ஸ் வாங்கி வையுங்க. கழர கழர போட்டிட்டு.. தெத்தி தெத்தி நடந்தால் தான் காண்ட் சம்..! மிச்சம் நான் சொல்லித் தரத் தேவையில்ல ரொண்டோ தெருக்களிலேயே பார்க்கலாம் தானே பசன் சோ..! :D

இப்பிடியெல்லாம் செய்தால் இப்பிடியான பெண்கள்தானே மாட்டுப்படுவினம். பிறகு, பெண்கள் அப்பிடி, உப்பிடி என்று கூப்பாடு வேறு. :lol::lol::lol: இப்பதானே தெரியுது. நீங்கள் ஏன் பெண்கள் என்றாலே ஏன் துள்ளிக் குதிக்கிறனீர்கள் என்று. :icon_mrgreen::lol:

குளிர்காட்டில் வெள்ளையாக வருவினம் எண்டிச்சினம். ஆனால் என் கலரில் எந்த மாற்றமும் வரவில்லையே!

அது உண்மைதான். நீங்கள் நாட்டிலை இப்ப இருந்தால், நீங்கள் இப்ப இங்கேயிருக்கிற கலரை விடக் குறைவாகத்தான் இருப்பீர்கள். அதுக்காக, கறுப்பாக இருக்கிறவை வெள்ளையாக மாறிவிடுவினம் என்பதெல்லாம் ரொம்பவே ஓவர்.

Share this post


Link to post
Share on other sites

மற்றும் படி பனிப் பொழிவும்... அதைக் கிள்ளி எறிஞ்சு விளையாடுறதும்.. விழுந்து உருண்டு எழும்பிறதும்... ஆகா என்ன சுகம்..! நீங்கள்.. இதையெல்லாம் இழக்கிறீங்க. கவலையா இருக்கு..! :lol::D

நெடுக்ஸ் அண்ணைக்கு,

கனடாக்குளிரைப்பற்றித் தெரியுமோ?!!! நீங்கள் சொல்லுறமாதிரி உடுப்பு,தொப்பி,சப்பாத்து எல்லாம் போட்டு விண்வெளியில் இறங்கிறவையை விட சுத்துசுத்தெண்டு உடுப்புகளைச்சுத்தி அதுக்குமேல் ஜக்கெற் அணிந்துதான் போறனாங்கள், கண் மட்டும் தான் தெரியும் அதுவும் காற்றடிக்கும் போது கண் எரிஞ்சு தண்ணி/கண்ணீர் வரும்.

இப்பிடியெல்லாம் செய்தால் இப்பிடியான பெண்கள்தானே மாட்டுப்படுவினம். பிறகு, பெண்கள் அப்பிடி, உப்பிடி என்று கூப்பாடு வேறு. :lol::lol::lol: இப்பதானே தெரியுது. நீங்கள் ஏன் பெண்கள் என்றாலே ஏன் துள்ளிக் குதிக்கிறனீர்கள் என்று. :icon_mrgreen::lol:

ஆஹா,,,தமிழச்சி...." நல்லா உறைக்கிற மாதிரிச்சொல்லுங்கோ. பெண்களைப்பற்றிய மட்டமான இவர்களின் அபிப்பிராயம் இவர்களாவே ஏற்படுத்திக்கொண்டதுதான்...என

Share this post


Link to post
Share on other sites

அது உண்மைதான். நீங்கள் நாட்டிலை இப்ப இருந்தால், நீங்கள் இப்ப இங்கேயிருக்கிற கலரை விடக் குறைவாகத்தான் இருப்பீர்கள். அதுக்காக, கறுப்பாக இருக்கிறவை வெள்ளையாக மாறிவிடுவினம் என்பதெல்லாம் ரொம்பவே ஓவர்.

முடிவாக என்ன சொல்லுறியள்... கலரை மாத்த ஏலாதோ???

Share this post


Link to post
Share on other sites

கனடாவில் முதல் வருட அநுபவம்.

பனி வீழ்ந்த அந்த முதல் நாள் காலையில் வேலை;ககுப் போவதற்காக வெளியே வந்த எனக்கு வெண்துகள்களால் முடப்பட்டிருந்த முற்றத்தையும் வீதிகளையும் பார்த்து ஒரே ஆனந்தம்.

அந்தப் பஞ்சு போன்ற பனிப்படலத்திற்குள் என் கால்களை வைப்பதற்கே கவலையாக இருந்தது. ஆனால் இப்போது பனிப் பொழிவு என்றதுமே எரிச்சலாய் இருக்கிறது.

சில விடயங்கள் ஓய்வாக இருந்து ரசிப்பதற்கு ஆனந்தம் தான். ஆனால் அவை தரும் சிரமங்கள் அவற்றை வெறுக்க வைக்கின்றன.

Share this post


Link to post
Share on other sites

முடிவாக என்ன சொல்லுறியள்... கலரை மாத்த ஏலாதோ???

நிச்சயமாக மாற்றலாம். பிளாஸ்ரிக் சேர்ஜரி செய்து. :icon_mrgreen::lol::D

Share this post


Link to post
Share on other sites

பனிப்புயலின் படங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி .

பனி பெய்யும் போது குளிர்வதை விட , அது கரையும் நாட்களில் ( மாசி ,பங்குனி ) ஒரு குளிர் காற்று மிகவும் வாட்டி எடுக்கும் .

காது இருக்கிறதா ? கைவிரல் இருக்கின்றதா என்று சந்தேகம் வந்து தொட்டுப்பார்த்து உறுதி செய்ய வேண்டி இருக்கும் .

பனியில் வழுக்கி விழுந்து , உடலில் எங்கு நோ ஏற்படுகின்றதோ ..... அந்த இடத்தில் அடுத்த வருடமும் அதே நேரம் , நோகும் என்று நகைச்சுவையாக இங்கு சொல்வார்கள் . :icon_mrgreen:

தமிழ்சிறி, உடனே அதனைக் கவனத்தில் கொள்ளாதவர்களுக்குத்தான் இப்படி ஏற்படும். அவர்கள் சாதாரணமாக விழுந்ததுதானே என நினைத்து அதற்கு மாசாஜ் ஒன்றும் செய்யாமல் விடுவார்கள். பனியில் விழுவதென்பது மிகவும் ஆபத்தானது. உடனே மசாஜ் செய்து அவ்வலியை முழுவதுமாகப் போக்கிவிட்டால் இத்தகைய வலிகள் இருக்காது. ஒருசிலர், வலி கொஞ்சம் குறைந்ததுமே மசாஜை நிறுத்திவிடுவார்கள். இப்படியானவர்களுக்குத்தான் குளிரின்போது, மீண்டும் வலி எடுக்கும். புதிதாக வருபவர்கள்தான் அதிகம் இப்படிப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள

Share this post


Link to post
Share on other sites

இப்பிடியெல்லாம் செய்தால் இப்பிடியான பெண்கள்தானே மாட்டுப்படுவினம். பிறகு, பெண்கள் அப்பிடி, உப்பிடி என்று கூப்பாடு வேறு. :D:lol::lol: இப்பதானே தெரியுது. நீங்கள் ஏன் பெண்கள் என்றாலே ஏன் துள்ளிக் குதிக்கிறனீர்கள் என்று. :icon_mrgreen::lol:

புகலிடத்தில் வாழும் பெண்களில் குறிப்பிடத் தக்க தொகையினர் இவ்வகையினரே. மேலும் இன்னும் சிலர் மனசுக்குள் எதிர்பார்ப்பதும் அதுவே. ஆனால் பெற்றோர் கட்டுப்பாட்டால் வெளியில் காட்டிக் கொள்வதில்லை..! அல்ல ஏன்.. பொடியள் இப்படி திரிய முற்படுறாங்கள். வேற ஸ்ரைலுக்கு மாறிவிடுவாங்களே..! என்ன செய்யுறது பெண்களின் ரசனை மட்டம் ஒரு மட்டமானது என்பதை ஒத்துக் கொள்வது கொஞ்சம் சிரமம் தான்..! :lol: :lol:

நெடுக்ஸ் அண்ணைக்கு,

கனடாக்குளிரைப்பற்றித் தெரியுமோ?!!! நீங்கள் சொல்லுறமாதிரி உடுப்பு,தொப்பி,சப்பாத்து எல்லாம் போட்டு விண்வெளியில் இறங்கிறவையை விட சுத்துசுத்தெண்டு உடுப்புகளைச்சுத்தி அதுக்குமேல் ஜக்கெற் அணிந்துதான் போறனாங்கள், கண் மட்டும் தான் தெரியும் அதுவும் காற்றடிக்கும் போது கண் எரிஞ்சு தண்ணி/கண்ணீர் வரும்.

நான் பூமியின் வடமுனைக்கு கிட்ட போய் கூட போய் பனியில உருண்டு விளையாடினனான். அப்புறம்.. என்ன..!

நாங்கள் எல்லாம் துருவக் கரடிகள் போல.. சூழலுக்கு இசைவாக்கப்பட்டவர்கள்..! என்ன செய்யுறது இதைக் கேட்க பொறாமையாத்தான் இருக்கும்..! :D

Share this post


Link to post
Share on other sites

புகலிடத்தில் வாழும் பெண்களில் குறிப்பிடத் தக்க தொகையினர் இவ்வகையினரே. மேலும் இன்னும் சிலர் மனசுக்குள் எதிர்பார்ப்பதும் அதுவே. ஆனால் பெற்றோர் கட்டுப்பாட்டால் வெளியில் காட்டிக் கொள்வதில்லை..! அல்ல ஏன்.. பொடியள் இப்படி திரிய முற்படுறாங்கள். வேற ஸ்ரைலுக்கு மாறிவிடுவாங்களே..! என்ன செய்யுறது பெண்களின் ரசனை மட்டம் ஒரு மட்டமானது என்பதை ஒத்துக் கொள்வது கொஞ்சம் சிரமம் தான்..! :icon_mrgreen::lol:

ஒருவன் எதை நாடுகிறானோ அதுதான் அவன் கண்களுக்குத் தெரியும். :D:lol::lol:

Share this post


Link to post
Share on other sites

ஒருவன் எதை நாடுகிறானோ அதுதான் அவன் கண்களுக்குத் தெரியும். :icon_mrgreen::lol::D

இப்படிச் சொல்லிச் சொல்லியே உலகை ஏமாற்ற வேண்டியதுதான்..! ஆனால் செய்வதெல்லாம்...?! :lol:

Share this post


Link to post
Share on other sites
தமிழ்சிறி, உடனே அதனைக் கவனத்தில் கொள்ளாதவர்களுக்குத்தான் இப்படி ஏற்படும். அவர்கள் சாதாரணமாக விழுந்ததுதானே என நினைத்து அதற்கு மாசாஜ் ஒன்றும் செய்யாமல் விடுவார்கள். பனியில் விழுவதென்பது மிகவும் ஆபத்தானது. உடனே மசாஜ் செய்து அவ்வலியை முழுவதுமாகப் போக்கிவிட்டால் இத்தகைய வலிகள் இருக்காது. ஒருசிலர், வலி கொஞ்சம் குறைந்ததுமே மசாஜை நிறுத்திவிடுவார்கள். இப்படியானவர்களுக்குத்தான் குளிரின்போது, மீண்டும் வலி எடுக்கும். புதிதாக வருபவர்கள்தான் அதிகம் இப்படிப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள

Share this post


Link to post
Share on other sites

கேள்வி:

அழகு நிலையத்திற்கு போய் தன்னை அழகுபடுத்துவது ஒரு பெண் செய்யக்கூடாத ஒரு செயலா? அப்படி செய்யும் பெண்களுக்கும் செய்யாத பெண்களுக்கும் என்ன வேறுபாடு?

இந்த கேள்வியை பிரதானமாக வைத்து ஒரு திரியை ஆரம்பித்தால் என்னவென்று தோன்றுகின்றது !!

Share this post


Link to post
Share on other sites

கேள்வி:

அழகு நிலையத்திற்கு போய் தன்னை அழகுபடுத்துவது ஒரு பெண் செய்யக்கூடாத ஒரு செயலா? அப்படி செய்யும் பெண்களுக்கும் செய்யாத பெண்களுக்கும் என்ன வேறுபாடு?

இந்த கேள்வியை பிரதானமாக வைத்து ஒரு திரியை ஆரம்பித்தால் என்னவென்று தோன்றுகின்றது !!

இப்படி ஒரு கேள்வியைகே கேட்கப்படாது. ஏனெனில் அழகு நிலையம் போகாத ஆண்கள் அருகிவருகிறார்கள். அந்தளவுக்கு அழகில் அக்கறை.. எல்லாருக்கும்..! யாருக்குத்தான் அழகா இருக்க விருப்பமில்லாமல் இருக்கும்..!

நான் மேலே ஒரு உதாரணத்துக்காகக் கையாண்டனே தவிர பெண்கள் அழகு நிலையம் போகக் கூடாது என்பதல்ல அதன் பொருள். இக்கேள்வி எனது கருத்தைத் திரிக்காது இருக்க இதை இப்பவே சொல்லிடுறன்..! :lol::icon_mrgreen:

Share this post


Link to post
Share on other sites

கு.சா...அகதியாகவோ அல்லது அகதியாக வந்தவர்களை அண்டி குடிபெயர்ந்தவராகவோ அல்லது வேலைக்கு வந்தவராகவோ இருப்பின் இந்த நிலை இருக்கும்.

ஆனால் எனக்கு வரும் போதே எப்படி குளிரை தாக்குப் பிடிக்கிறது அதற்கான உடைகள் என்ன என்று சொல்லித் தந்திருக்கிறார்கள். அதுமட்டும் அன்றி குளிர்காலத்துக்கு ஏற்ப உணவு வகைகளும் உட்கொள்ள வேண்டும்.

எம்மவர்கள் ஏதோ ஊரில் திரிவது போல காலுக்கு அளவில்லாத பெரிய சப்பாத்துக்களையும் வாங்கிப் போட்டுக் கொண்டு.. தொல தொல ஒற்றை உடுப்போட ஒரு ஜக்கட்டை மாட்டிக் கொண்டு திரிந்தால் குளிராமல் சுடுமா..??!

குளிர்காலத்தில் வெண்ணிற வெப்ப உள்ளாடைகள் அணியுங்கள்.(உடல் வெப்ப இழப்பை குறைக்க..!) பருத்தியை விட்டு கம்பளி உடைகளை அணியுங்கள்.அதைத்தவிர இன்னும் குளிரைத் தாங்க உடுப்புகள் இருக்கின்றன.

காலுறைகளை கம்பளியால் ஆகி இருப்பின் நன்று. இறுக்கமான குளிர்கால பாதணி அணியுங்கள்.

வீட்டு வெப்பநிலையை 21 பாகை செல்சியஸ் இல் வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் வைத்திருப்போர் 21 பாகைக்கு மேலே கொண்டு போவது குழந்தைகளின் மூளைக்கு ஆபத்தானது. அதேபோல் 18க்கு குறைவதும் கூடாது.

மின்சாரத்தை மிச்சம் பிடிக்க என்று கீற்றரைப் போடாமல் இருந்தா குளிராம.. சுடுமாக்கும்..!

வெள்ளையள் சமருக்கு எவ்வளவுக்கு எவ்வளவு திறக்குதுகளோ.. வின்ரருக்கு அவ்வளவுக்கு அவ்வளவு மூடுங்கள். அவர்களுக்கு பனி என்றாலும் மகிழ்ச்சி. காரணம்.. அவர்களுக்கு பாதுகாப்பைப் பெறத் தெரியும்.

தலைக்கு நிச்சயம் கம்பளியாலான அல்லது வெப்ப இழப்பைத் தடுக்கும் தொப்பி அல்லது குல்லா அணியுங்கள். அது இறுக்கமாக தலையோடு ஒட்டி இருத்தல் நன்று. காரணம் உடல் வெப்பத்தில் 25% தலை வழியாகவே இழக்கப்படுகிறது. குளிர்காலத்தில்..!

நான் இதையெல்லாம் யுனில சொல்லித் தரேக்க கேட்டு அதன்படி நடக்கிறன். அதால.. குளிரை என்ஜோய் பண்ணுறன்.

ஆனால் களவா இந்த குளிர்நாடுகளுக்க புகுறவை.. அல்லது களவா வந்தவையை அண்டி குடிபெயருறவைக்கு இந்த ஆலோசனைகள் கிடைப்பதில்லை. அவர்களுக்கு இந்த நாட்டுச் சூழ்நிலைகளை எதிர்கொள்ளத் தெரிந்திருப்பதும் இல்லை. மற்றவர்களை பார்த்துச் செய்கிறார்களே தவிர விசயம் அறிந்து செய்வதில்லை. அது தவறு. அதுதான் குளிரை சரியான முறையில் கழிக்க முடிவதில்லை..!

மற்றும் படி பனிப் பொழிவும்... அதைக் கிள்ளி எறிஞ்சு விளையாடுறதும்.. விழுந்து உருண்டு எழும்பிறதும்... ஆகா என்ன சுகம்..! நீங்கள்.. இதையெல்லாம் இழக்கிறீங்க. கவலையா இருக்கு..! :wub::wub:

உங்கடை கதையை பாத்தால் ஏதோ நாங்கள் இஞ்சை கோமணத்தோடை திரியிறவடியாலைதான் குளிராலை கஸ்ரப்படுறமாதிரியெல்லே கிடக்கு.

நாங்கள் குளிர் மழை வெய்யில் எண்டு பாராமல் மாடுமாதிரி உழைக்கிறம்.என்னோடை வேலை செய்யுற ஐரோப்பியக்காரனே குளிர்தாங்கேலாமல் அப்பப்ப டாக்குத்தரும் வீடுமாய்த்திரியுறான்.அப்ப அவனுக்கும் களிசான் சப்பாத்து போடத்தெரியேல்லையோ?

இவரொருத்தர் என்னடாவெண்டால் எங்களுக்கு நல்ல சப்பாத்து போடத்தெரியாதாம் . நல்லசட்டையள் போடத்தெரியாதாம் . ஐயா நெடுக்கு அவர்களே?உங்கடை புலம்பெயர் சனம் சம்பந்தமான ஒருசில ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பாக்கேக்கை நீங்கள் எப்புடியான பஞ்சப்பரதேசியளோடை பழக்கவழக்கங்கள் வைச்சிருக்கிறியள் எண்டு அப்பட்டமாய் தெரியுது.

நாங்கள் மின்சாரம்,எரிவாயுவிலை மிச்சம் புடிச்ச காசிலையும் நல்ல சாப்பாடு சாப்பிடாமல் சேகரிச்ச காசிலையும்தான் எங்களோடை கூடப்பிறந்ததுகுகளையும்

சுற்றத்தாரையும் வாழவைச்சுக்கொண்டிருக்கிறம்.

பொழுதுபோக்கிறதுக்காக குளிருக்கை விளையாடுறவனுக்கும் வேலைக்காக குளிருக்கை நிக்கிறவனுக்கும் அனுபவங்கள் வித்தியாசந்தான்.இருந்தாலும் பாகை செல்சியஸ் பற்றி பொழுது போக்குபவர்கள் கதைக்கிறது கொஞ்சம் சங்கடமாய் கிடக்கு.

ஆனால் களவா இந்த குளிர்நாடுகளுக்க புகுறவை.. அல்லது களவா வந்தவையை அண்டி குடிபெயருறவைக்கு இந்த ஆலோசனைகள் கிடைப்பதில்லை. அவர்களுக்கு இந்த நாட்டுச் சூழ்நிலைகளை எதிர்கொள்ளத் தெரிந்திருப்பதும் இல்லை. மற்றவர்களை பார்த்துச் செய்கிறார்களே தவிர விசயம் அறிந்து செய்வதில்லை. அது தவறு. அதுதான் குளிரை சரியான முறையில் கழிக்க முடிவதில்லை..!

இருந்தாலும் நெடுக்குசாமி நீங்கள் மேலை எழுதினதை திருப்பி ஒருக்கால் வாசிச்சு பாருங்கோ.

இது எத்தினை பேரின்ரை மனதை பாதிக்கும் தெரியுமோ?அதுதான் களவாய் கடந்து வந்தவையள் குளிருக்கை அவதிப்பட்டு கைகால்களை இழந்து கற்பிழந்து பல துன்பங்களை அனுபவிச்சு கொண்டிருக்கிற ஆக்களை நீங்கள் இன்னும் சந்திக்கேல்லையோ?

Share this post


Link to post
Share on other sites

கு.சா...அகதியாகவோ அல்லது அகதியாக வந்தவர்களை அண்டி குடிபெயர்ந்தவராகவோ அல்லது வேலைக்கு வந்தவராகவோ இருப்பின் இந்த நிலை இருக்கும்.

ஆனால் எனக்கு வரும் போதே எப்படி குளிரை தாக்குப் பிடிக்கிறது அதற்கான உடைகள் என்ன என்று சொல்லித் தந்திருக்கிறார்கள். அதுமட்டும் அன்றி குளிர்காலத்துக்கு ஏற்ப உணவு வகைகளும் உட்கொள்ள வேண்டும்.

எம்மவர்கள் ஏதோ ஊரில் திரிவது போல காலுக்கு அளவில்லாத பெரிய சப்பாத்துக்களையும் வாங்கிப் போட்டுக் கொண்டு.. தொல தொல ஒற்றை உடுப்போட ஒரு ஜக்கட்டை மாட்டிக் கொண்டு திரிந்தால் குளிராமல் சுடுமா..??!

குளிர்காலத்தில் வெண்ணிற வெப்ப உள்ளாடைகள் அணியுங்கள்.(உடல் வெப்ப இழப்பை குறைக்க..!) பருத்தியை விட்டு கம்பளி உடைகளை அணியுங்கள்.அதைத்தவிர இன்னும் குளிரைத் தாங்க உடுப்புகள் இருக்கின்றன.

காலுறைகளை கம்பளியால் ஆகி இருப்பின் நன்று. இறுக்கமான குளிர்கால பாதணி அணியுங்கள்.

வீட்டு வெப்பநிலையை 21 பாகை செல்சியஸ் இல் வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் வைத்திருப்போர் 21 பாகைக்கு மேலே கொண்டு போவது குழந்தைகளின் மூளைக்கு ஆபத்தானது. அதேபோல் 18க்கு குறைவதும் கூடாது.

மின்சாரத்தை மிச்சம் பிடிக்க என்று கீற்றரைப் போடாமல் இருந்தா குளிராம.. சுடுமாக்கும்..!

வெள்ளையள் சமருக்கு எவ்வளவுக்கு எவ்வளவு திறக்குதுகளோ.. வின்ரருக்கு அவ்வளவுக்கு அவ்வளவு மூடுங்கள். அவர்களுக்கு பனி என்றாலும் மகிழ்ச்சி. காரணம்.. அவர்களுக்கு பாதுகாப்பைப் பெறத் தெரியும்.

தலைக்கு நிச்சயம் கம்பளியாலான அல்லது வெப்ப இழப்பைத் தடுக்கும் தொப்பி அல்லது குல்லா அணியுங்கள். அது இறுக்கமாக தலையோடு ஒட்டி இருத்தல் நன்று. காரணம் உடல் வெப்பத்தில் 25% தலை வழியாகவே இழக்கப்படுகிறது. குளிர்காலத்தில்..!

நான் இதையெல்லாம் யுனில சொல்லித் தரேக்க கேட்டு அதன்படி நடக்கிறன். அதால.. குளிரை என்ஜோய் பண்ணுறன்.

ஆனால் களவா இந்த குளிர்நாடுகளுக்க புகுறவை.. அல்லது களவா வந்தவையை அண்டி குடிபெயருறவைக்கு இந்த ஆலோசனைகள் கிடைப்பதில்லை. அவர்களுக்கு இந்த நாட்டுச் சூழ்நிலைகளை எதிர்கொள்ளத் தெரிந்திருப்பதும் இல்லை. மற்றவர்களை பார்த்துச் செய்கிறார்களே தவிர விசயம் அறிந்து செய்வதில்லை. அது தவறு. அதுதான் குளிரை சரியான முறையில் கழிக்க முடிவதில்லை..!

மற்றும் படி பனிப் பொழிவும்... அதைக் கிள்ளி எறிஞ்சு விளையாடுறதும்.. விழுந்து உருண்டு எழும்பிறதும்... ஆகா என்ன சுகம்..! நீங்கள்.. இதையெல்லாம் இழக்கிறீங்க. கவலையா இருக்கு..! :wub::wub:

ஓமோம்.. கேள்விப்பட்டிருக்கிறன்.. இலண்டன் படிச்ச ரமிள்ஸ் அகதித் தமிழரோட முகங்கொடுத்து கதைக்கிறேல்லை எண்டு. நெடுக்சுக்கும் அந்த வியாதி தொத்துது போல.. :wub:

நாங்க வரும்போது களவா வரலை சார்.. கிழக்கு புர்லின்ல வந்து ஒரு டொலர் கட்டி ஒரு நாள் விசா எடுத்தம்.. எல்லையில வந்து மேற்கு பேர்லினுக்கு போகணும் என்ற உடன 'எக்சிற்' அடிச்சுவிட்டான்.. இங்கால மேற்கு பேர்லினில் 'அப்பு ராசா.. எங்கை வந்தாய்' என்றான்.. 'அரசியல் தங்சம் கோரி வந்திருக்கன்' என்றன்.. கூட்டிக்கொண்டபூய் ஒரு ஹோட்டலில் விட்டுட்டு, வெளிநாட்டவர் அலுவலகத்துக்கு மறுநாள் போ என்றான்.. அங்க போக சில நாட்களுக்கு பேப்பர்ல விசா தந்து உன்னுடைய பிரச்சினைகளை எழுதிக் கொண்டு வா என்றான்.. நாங்க வரும்போது 2 வருடம் வேலை செய்யாதை என்று சமருக்கும் வின்ரருக்கும் அவனே சகல உடுப்பு, சப்பாத்து வாங்க காசு தந்தான்.. சில இடங்களில் காசுக்கு பதிலாக வவுச்சர் கொடுத்தான்.. பிறகேன் ஒத்துக் கொள்ளாத உடுப்புகளையும் பெரிய பெரிய சப்பாத்துகளையும் அணிய வேண்டும்?

ஆகவே, வந்ததிலும் களவில்லை.. அணிவதிலும் தப்பில்லை.. எண்ணங்களில்தான் கோளாறு. :lol::wub:

Share this post


Link to post
Share on other sites

நீங்கள் குளிர்பற்றி கதைக்கேக்க, குமாரசாமி அண்ணா சொல்லிறதையும் வாசிச்சபிறகு எனக்கு ஓர் சம்பவம் நினைவுக்கு வருகிது.

இஞ்ச ஒருத்தர் இப்பிடித்தான் இரவு பகலாய் மாடு மாதிரி வேலை செய்யுறது. பிறகு வெளியால நள்ள குளிருக்கபோயிட்டு உடம்பு விறைச்சபடி வேலையால வீட்டவந்துபோட்டு... கை சரியா விறைச்சுப்போனதால குளிரால தீவிரமா பாதிக்கப்பட்ட நிலையில, ஓடிப்போய் பைப்பை திறந்து நல்லாய் சுடுதண்ணிய திறந்து ஓடவிட்டு அதுக்க கையை வைச்சு குளிரை போக்கி இருக்கிறார். பிறகு நடந்தது என்ன தெரியுமோ? கொஞ்ச நேரத்தால 911ஐ அழைச்சு.. பிறகு வைத்தியசாலைக்கு போய் கடைசியில அவரிண்ட ஒரு கையை வெட்டி அகற்றியது. கொதிநீரால அது அவிஞ்சு செயல் இழந்துபோட்டிது. இந்தக்கதை எனக்கு சொன்னது ஓர் வழக்கறிஞர். தன்னடட்ட ஏதோ அலுவலாய் வாரவறாம். தனக்கு சோகக்கதையை சொல்லி இருந்தார் எண்டு ஏதோ கதைக்கேக்க சொன்னா.

எண்டபடியால... உந்த குளிரை சும்மா எடுக்கப்படாது. கொஞ்சம் கவலையீனமாக இருந்தால் உயிரையே பறிச்சுவிடும்.

Share this post


Link to post
Share on other sites

அதற்கு வேறும் காரணங்கள் இருக்கலாம் முரளி. யேர்மனிக்கு வரும் பலர் ஆரம்பத்திலே செய்யும் வேலை உணவகங்களில் கோப்பை கழுவுதல்.. சிலருக்கு கழுவுதலுக்கு பாவிக்கும் மருந்தின் ஒவ்வாமையால் கை விரல்களின் தோல் வெடிக்கும்.. எனினும் தாயகத்திலே அவர்களின் குடும்பத்தின் தேவைகளையோ அல்லது அவர் யேர்மனி வந்ததற்கான கடனுக்காகவோ, அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அது வேலையைச் செய்வார்கள்.. குறிப்பிட்ட காலத்தில் வெடித்த தோல் பகுதிகளினூடாக உட்செல்லும் நீர் எலும்புகளைத் தாக்கும்வேளையில்.. சிலர் கைவிரல்களை இழக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளார்கள்.

பல நாடுகளிலே எம்மவர்களில் கண்ட முக்கியமான நோய் முதுகு வலி. எனது அறிவுக்கு எட்டியவரையில் அளவுக்கு மிஞ்சிய உடலுழைப்பால் இது உருவாகிறதோ என நினைக்கிறேன். எதுக்கும் நெடுக்ஸ் இந்தக் கருத்தை கவனித்தால் விளக்கம் அளியுங்கள்!! :wub:

Share this post


Link to post
Share on other sites

ஓமோம்.. கேள்விப்பட்டிருக்கிறன்.. இலண்டன் படிச்ச ரமிள்ஸ் அகதித் தமிழரோட முகங்கொடுத்து கதைக்கிறேல்லை எண்டு. நெடுக்சுக்கும் அந்த வியாதி தொத்துது போல.. :wub:

நாங்க வரும்போது களவா வரலை சார்.. கிழக்கு புர்லின்ல வந்து ஒரு டொலர் கட்டி ஒரு நாள் விசா எடுத்தம்.. எல்லையில வந்து மேற்கு பேர்லினுக்கு போகணும் என்ற உடன 'எக்சிற்' அடிச்சுவிட்டான்.. இங்கால மேற்கு பேர்லினில் 'அப்பு ராசா.. எங்கை வந்தாய்' என்றான்.. 'அரசியல் தங்சம் கோரி வந்திருக்கன்' என்றன்.. கூட்டிக்கொண்டபூய் ஒரு ஹோட்டலில் விட்டுட்டு, வெளிநாட்டவர் அலுவலகத்துக்கு மறுநாள் போ என்றான்.. அங்க போக சில நாட்களுக்கு பேப்பர்ல விசா தந்து உன்னுடைய பிரச்சினைகளை எழுதிக் கொண்டு வா என்றான்.. நாங்க வரும்போது 2 வருடம் வேலை செய்யாதை என்று சமருக்கும் வின்ரருக்கும் அவனே சகல உடுப்பு, சப்பாத்து வாங்க காசு தந்தான்.. சில இடங்களில் காசுக்கு பதிலாக வவுச்சர் கொடுத்தான்.. பிறகேன் ஒத்துக் கொள்ளாத உடுப்புகளையும் பெரிய பெரிய சப்பாத்துகளையும் அணிய வேண்டும்?

ஆகவே, வந்ததிலும் களவில்லை.. அணிவதிலும் தப்பில்லை.. எண்ணங்களில்தான் கோளாறு. :wub: :wub:

அப்புடி சொல்லுங்கோ சோழியண்ணை :lol: ஏதோ கொஞ்சப்பேர் இப்ப தங்களுக்குத்தான் எல்லாம் தெரியுமெண்டு குலுக்கீனம் அதுவும் ஒருசில லண்டன் டமிழ்ஸ்??????

யாழில் உலாவரும் லண்டன் உறவுகள் மன்னிக்கவும்.

எனது முக்கிய உறவினர்கள் முப்பது வருடங்களுக்கு மேலாக இங்கிலாந்தில் வசிக்கின்றார்கள்.அவர்களின் வாழ்க்கையும் ஒருசில பழக்கவழக்கங்களும் பாசைகளும் பரிபாசைகளும் காறித்துப்புமளவுக்கே இருக்கின்றது.தமிழ் கதைத்தால் கேவலம் வெட்கம் என நினக்கின்றார்கள் எம்மவர்கள்.அதுவும் நெடுக்கர் இருக்கும் நாட்டில். :wub:

Share this post


Link to post
Share on other sites

முடிவாக என்ன சொல்லுறியள்... கலரை மாத்த ஏலாதோ???

ஒரு முடிவோட தான் இருக்கிங்களா தூய்ஸ்?

Share this post


Link to post
Share on other sites

உங்கடை கதையை பாத்தால் ஏதோ நாங்கள் இஞ்சை கோமணத்தோடை திரியிறவடியாலைதான் குளிராலை கஸ்ரப்படுறமாதிரியெல்லே கிடக்கு.

நாங்கள் குளிர் மழை வெய்யில் எண்டு பாராமல் மாடுமாதிரி உழைக்கிறம்.என்னோடை வேலை செய்யுற ஐரோப்பியக்காரனே குளிர்தாங்கேலாமல் அப்பப்ப டாக்குத்தரும் வீடுமாய்த்திரியுறான்.அப்ப அவனுக்கும் களிசான் சப்பாத்து போடத்தெரியேல்லையோ?

இவரொருத்தர் என்னடாவெண்டால் எங்களுக்கு நல்ல சப்பாத்து போடத்தெரியாதாம் . நல்லசட்டையள் போடத்தெரியாதாம் . ஐயா நெடுக்கு அவர்களே?உங்கடை புலம்பெயர் சனம் சம்பந்தமான ஒருசில ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பாக்கேக்கை நீங்கள் எப்புடியான பஞ்சப்பரதேசியளோடை பழக்கவழக்கங்கள் வைச்சிருக்கிறியள் எண்டு அப்பட்டமாய் தெரியுது.

நாங்கள் மின்சாரம்,எரிவாயுவிலை மிச்சம் புடிச்ச காசிலையும் நல்ல சாப்பாடு சாப்பிடாமல் சேகரிச்ச காசிலையும்தான் எங்களோடை கூடப்பிறந்ததுகுகளையும்

சுற்றத்தாரையும் வாழவைச்சுக்கொண்டிருக்கிறம்.

பொழுதுபோக்கிறதுக்காக குளிருக்கை விளையாடுறவனுக்கும் வேலைக்காக குளிருக்கை நிக்கிறவனுக்கும் அனுபவங்கள் வித்தியாசந்தான்.இருந்தாலும் பாகை செல்சியஸ் பற்றி பொழுது போக்குபவர்கள் கதைக்கிறது கொஞ்சம் சங்கடமாய் கிடக்கு.

இருந்தாலும் நெடுக்குசாமி நீங்கள் மேலை எழுதினதை திருப்பி ஒருக்கால் வாசிச்சு பாருங்கோ.

இது எத்தினை பேரின்ரை மனதை பாதிக்கும் தெரியுமோ?அதுதான் களவாய் கடந்து வந்தவையள் குளிருக்கை அவதிப்பட்டு கைகால்களை இழந்து கற்பிழந்து பல துன்பங்களை அனுபவிச்சு கொண்டிருக்கிற ஆக்களை நீங்கள் இன்னும் சந்திக்கேல்லையோ?

கு.சா அண்ணா.. இதில வருத்தப்பட என்ன இருக்குது. நாங்கள் காலம் காலமா சிங்களவனை.. கள்ளத்தோணி என்றல்லையா. மோட்டுச் சிங்களவன் என்றல்லையா... மலையக தமிழ் மக்களை.. தோட்டக்காட்டான்.. கள்ளத்தோணி... வடக்கத்தையான்.. என்றல்லையா. அப்ப எல்லாம்.. அவைட மன வருத்தம் புரியல்ல.. யாழ்ப்பாணத்தாருக்கு.

இப்ப உண்மையாவே.. அவை களவா வந்து அசைலம் அடிச்ச உண்மையைச் சொன்னா மனம் நோகுதாம். நொந்தா நோகட்டும். இவை நோகடிச்ச மனங்கள் எத்தனை எத்தனை அத்தனைக்கும் யார் ஆறுதல் சொல்வது..!

வெள்ளையள் கூட அசைலம் சீக்கர் என்ற உடன இரண்டாம் பட்சமாத்தான் நடத்தினம். அப்படி இருக்கேக்க..!

அதுகிடக்கட்டும்..

என்னோட நண்பர் வட்டம்.. படிக்கிற இடம்சார்ந்ததால.. அதிகம்.. கருத்துக்களை உள்வாங்கக் கூடியதா இருக்குது. எம்மவர்கள் மீசை வைச்சுத் திரிவதை.. சிரிப்புக்குரிய விடயமாக்கி.. நக்கல் அடிச்சு மகிழ்ந்ததை நானே கண்டு.. பொங்கி எழுந்திருக்கிறன். இருந்தாலும் அவர்களின் எண்ணத்தில் நம்மவர்கள் ஜோக்கர்களாகவே காட்சி அளிக்கின்றனர். அதை மாற்ற முடியவில்லை..!

அப்படி ஏன் நாம் நடந்து கொள்ள வேண்டும்..?! ஏன் இங்கு பிறந்த நம்மவர் பிள்ளைகளுக்கே பெற்றோரின் செயற்பாடுகளில் திருப்தியில்லை. அதை பல பெற்றோர் அறிவதில்லை. தாம் செய்வது சரி என்றே நினைக்கின்றனர். காரணம்.. அவர்களுக்கு சுட்டிக்காட்டி மாற்றங்களை பரிந்துரைக்க யாரும் இல்லை என்பதுதான் முக்கிய காரணம். இப்படி வெட்கம் பார்த்தால் ஏதும் பெரிசா மாற்றங்கள் வரும் என்று நான் நினைக்கல்ல. இது வெட்கப்படுவதற்குரிய தேசங்கள் அல்ல. நாம் எம்மை தயார் செய்ய வேண்டிய தேசங்கள்..!

நாங்கள் 7/24 மணி நேரமும் குளிருக்க விளையாடச் சொல்லேல்ல. நானும் கடினமான வேலைகளுக்குப் போய் இருக்கிறேன். குளிருக்குள் நின்று வேலை செய்திருக்கிறேன். இருந்தாலும்.. இயற்கையை என்ஜோய் பண்ண வேண்டிய நேரங்களில் பண்ணி இருக்கிறோம்.

எம்மவர்கள் நிகழ்வுகளில் வெள்ளைகள் கலந்து கொள்வது மிகக் குறைவு. காரணம் எம்மவர்கள் அவர்களுடன் சேர்வதில்லை. ஆனால் படிக்கும் இடங்களில் அப்படியல்ல. நாங்கள் எல்லாம் நண்பர்களாக பகிடியாகக் கூட பல உண்மைகளை சொல்வோம். அது எமக்கு அவர்கள் எப்படி எங்களை நோக்குகின்றனர்.. அவர்களின் எண்ணத்தில் என்ன எதிர்பார்ப்பு இருக்கிறது என்பதையெல்லாம் அறிய முடியும். அந்த வகையில் அறிந்ததைக் கொண்டுதான் நான் கருத்தெழுதுகிறேன்.

சோழியண்ணன் குறிப்பிடுவது போல.. நான் எம்மவர்களை இங்கு எழுதுவதுபோல வெளியில் அகதி என்றெல்லாம் அழைப்பதில்லை. இங்கு எழுதுவது ரோசம் வரட்டும் என்றுதானே தவிர.. புண்படுத்தனும் என்பதற்காக அல்ல.

எம்மவர்களுக்கு நிறைய உதவிகளை.. எனக்கு தெரிந்த வழிகாட்டுதல்களை செய்திருக்கிறேன். அதுமட்டுமன்றி எம்மவர் பிள்ளைகளின் கல்விக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி இருக்கிறேன். இங்கு பல பெற்றோர் அனுப்பப்படும் கடிதங்களை சரிவர வாசிச்சு விளங்க முடியாத நிலையில் பிள்ளைகளின் ஆரம்பக் கல்விக்குரிய பாடசாலை அனுமதிகளைக் கூட இழந்து நிற்கின்றனர். பல ஆண்டுகளாக வாழ்கின்றனர். ஆனால் தொடர்பாடல் மொழியை விருத்தி செய்ய முயல்வதில்லை. பலருக்கு அதற்காக உள்ள வசதிகள் பற்றியே தெரியாது.

பல நோயாளிகள்.. சரியான குளிர் உடுப்பின்றி வந்துபோவதை அவதானித்திருக்கிறேன். அதனால் ஏற்படும் விளைவுகளை அவர்கள் உபாதைகளாகக் கருதுவதாக மருத்துவ ஆலோசகர்களே என்னிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளனர். ஆனால் அவற்றை இங்கு சொன்னால் அது எம்மவருக்கு.. வெட்கமாக.. பஞ்சப்பட்டினிகளாக... தெரிகிறது.

யதார்த்தம் என்பது நாம் விரும்பும் வடிவில் எப்போதும் இருப்பதில்லை. அதை அப்படியே எதிர்கொண்டால் தான் தேவையான மாற்றங்களை பரிந்துரைக்க முடியும். அதைவிடுத்து கற்பனையில் யதார்த்ததை தீர்மானித்துக் கொண்டு வாழ்வதால் தான் எம்மவர்களில் பலர் படும் துன்பங்களை நாமே அறியாது.. செய்திகளாக்கி வாழ்ந்து வருகிறோம். அவர்களுக்கான உதவும் கரங்களாக இருக்க முயலாமல். அந்த நிலை மாறி எமது மக்களும் இதர சமூகத்தினரால்..எல்லா வகையிலும் மதிப்போடு நோக்கப்படும் நிலை உருவாகனும் என்பதே எனது விருப்பம். அவா..! :wub: :wub:

Share this post


Link to post
Share on other sites

ஓமோம்.. கேள்விப்பட்டிருக்கிறன்.. இலண்டன் படிச்ச ரமிள்ஸ் அகதித் தமிழரோட முகங்கொடுத்து கதைக்கிறேல்லை எண்டு. நெடுக்சுக்கும் அந்த வியாதி தொத்துது போல.. :wub:

நாங்க வரும்போது களவா வரலை சார்.. கிழக்கு புர்லின்ல வந்து ஒரு டொலர் கட்டி ஒரு நாள் விசா எடுத்தம்.. எல்லையில வந்து மேற்கு பேர்லினுக்கு போகணும் என்ற உடன 'எக்சிற்' அடிச்சுவிட்டான்.. இங்கால மேற்கு பேர்லினில் 'அப்பு ராசா.. எங்கை வந்தாய்' என்றான்.. 'அரசியல் தங்சம் கோரி வந்திருக்கன்' என்றன்.. கூட்டிக்கொண்டபூய் ஒரு ஹோட்டலில் விட்டுட்டு, வெளிநாட்டவர் அலுவலகத்துக்கு மறுநாள் போ என்றான்.. அங்க போக சில நாட்களுக்கு பேப்பர்ல விசா தந்து உன்னுடைய பிரச்சினைகளை எழுதிக் கொண்டு வா என்றான்.. நாங்க வரும்போது 2 வருடம் வேலை செய்யாதை என்று சமருக்கும் வின்ரருக்கும் அவனே சகல உடுப்பு, சப்பாத்து வாங்க காசு தந்தான்.. சில இடங்களில் காசுக்கு பதிலாக வவுச்சர் கொடுத்தான்.. பிறகேன் ஒத்துக் கொள்ளாத உடுப்புகளையும் பெரிய பெரிய சப்பாத்துகளையும் அணிய வேண்டும்?

ஆகவே, வந்ததிலும் களவில்லை.. அணிவதிலும் தப்பில்லை.. எண்ணங்களில்தான் கோளாறு. :wub: :wub:

நாங்கள் எங்களை குறைவாக எண்ணிக் கொண்டு.. இருப்பதால் தான் அடுத்தவர் சொல்லும் நியாயம் கூட எமக்கு குறையாகப்படுகிறது. அதை தமக்கு தாமே சமாதானம் சொல்லி எம்மவர்கள் சரிக்கட்ட முயல்கின்றனரே தவிர.. தேவையான மாற்றங்கள் என்ன என்பதைக் கண்டறிந்து அதன் படி போக நினைப்பதில்லை..! இது புலம்பெயர்ந்த எம்மவரில் இருக்கும் ஒரு குறைபாடு..!

நான் நிஜத்தில் தமிழர்களையோ.. இல்ல பிற மக்களையோ வேறு பிரித்துப் பார்த்துப் பழகுவதில்லை. யார் எம்மோடு பழக ஆர்வம் காட்டுகிறார்களோ அவர்களோடு பழகுவேன். ஆர்வம் காட்டாதவர்களிடத்தில் வலிந்து போய் பழகமாட்டேன். தேவைகளுக்காக பேசிக் கொள்வேன்..! :wub::lol:

Share this post


Link to post
Share on other sites

படங்கள் இணைப்பிற்கு நன்றி நிழலி......!

வந்த புதிதில் தெரியத்தனமாக வேகமாக நடந்து, தண்ணி தான் கிடக்கு என்று நினைத்து நடந்தெல்லாம் சறுக்கி விழுந்திருக்கேன். சிலநாள் வீட்டிலேயே வலியால் இருந்துமிருக்கின்றேன். வலி எல்லாம் வலிக்கவில்லை..... ஆனால் பல தடவை பள்ளி போகும் குழந்தைகள் முன்னால் விழுந்தது தான் ஏதோ கொஞ்சம் மானக்கேடாக இருந்தது...

ஹிஹி வாசிக்க சிரிப்பாவும் இருக்கு, கவலையாவும் இருக்கு.கவனமா நடந்து திரியுங்கோ , அண்ணா ,எதுக்கும் உதவிக்கு அருவியைக் கூட்டிக் கொண்டு போங்க :wub: :wub:

குளிர்காட்டில் வெள்ளையாக வருவினம் எண்டிச்சினம். ஆனால் என் கலரில் எந்த மாற்றமும் வரவில்லையே!

அது சரி நீங்கள் ஏன் வெள்ளையாகனும் எண்டு ஆசைப்படுறீங்கள்.. :wub:

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • 'இந்து கோயில்கள் கட்ட பௌத்த விகாரைகள் இடிப்பு' - இலங்கையில் மத சர்ச்சை Getty Images சித்தரிப்புப் படம் இலங்கையிலுள்ள பழைமை வாய்ந்த பல பௌத்த விகாரைகள் இல்லாது செய்யப்பட்டு, இந்து கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண தொல்பொருள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி செலயணியின் உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவிக்கின்றார்.  மேதானந்த தேரர் வெறுப்பு, வேற்றுமை மற்றும் பழிவாங்கல்களை முன்னெடுத்து வருவதாக அவருக்கு இந்து தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருகோணமலையில் கோகண்ண விகாரை அமைந்துள்ள இடத்திலேயே தற்போது திருகோணேஸ்வரம் கோயில் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார். பொலன்னறுவை யுகத்திற்கு சொந்தமான கல்வெட்டுக்களில் இந்த விகாரை இருந்தமைக்கான சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.  அந்த இடத்தில் அமைந்திருந்த பௌத்த விகாரை உடைக்கப்பட்டு, திருகோணேச்சரம் கோயில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.  இலங்கையில் இரண்டாவது இராசதானி இருந்த காலப் பகுதியிலேயே இந்த விகாரை அமைந்திருந்ததாகவும் அவர் கூறுகின்றார்.  இந்த காலப் பகுதியில் போர்த்துகேயர் திருகோணமலையில் கோகண்ண விகாரையை உடைத்திருந்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.  இவ்வாறு உடைக்கப்பட்ட கோயிலின் சிதைவுகளை எடுத்து, அந்த இடத்தில் திருகோணேஸ்வரம் கோயில் நிர்மாணிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.    திருகோணேஸ்வரம் கோயில், பாடல்பெற்ற திருத்தலம் என இந்துக்களின் பழைமை வாய்ந்த புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் எல்லாவல மேதானந்த தேரரிடம் பிபிசி தமிழ் வினவியது. பிற்காலத்தில் ஒவ்வொருவரும் தமக்கு ஏற்ற வகையில் அதனை மாற்றி அமைத்துகொண்டதாக அவர் பதிலளித்தார்.  இந்த இடத்தில் பௌத்த விகாரை இருந்தமைக்கான ஆதாரங்கள் என்னவெனவும் பிபிசி தமிழ் வினவியது. குறித்த பகுதியிலுள்ள கல்வெட்டுக்கள், விகாரை உடைக்கப்பட்டமைக்கான சிதைவுகள், சந்திரவட்டகல் உள்ளிட்ட பல ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.  இவ்வாறான சில சிதைவுகள் கடலுக்குள் வீசப்பட்டுள்ளதாகவும், சில சிதைவுகள் மலைக்கு மேல் உள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.  பொலன்னறுவை யுகத்திலிருந்த மன்னன் ஒருவரின் கல்வெட்டொன்றில், கோகண்ண விகாரை என வெட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.  தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் கிழக்கு மாகாண தொல்பொருள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி செயலணியொன்று ஜனாதிபதியினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் இல்லாமையினாலேயே இவ்வாறான கருத்து வெளியிடப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி குறித்தும் பிபிசி தமிழ், எல்லாவல மேதானந்த தேரரிடம் வினவியது. நாட்டிலுள்ள அனைத்து விடயங்களுக்கும் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களை நியமித்து பணியாற்ற முடியாது என அவர் குறிப்பிட்டார்.  இலங்கையின் பல்வேறு விடயங்களுக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் இனவாத விடயங்களை வெளியிட்டு அரசியல் லாபம் தேடி வருவதாகவும் அவர் கூறினார்.  தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் இந்தச் செயலணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என ஜனாதிபதி அலுவலகம் சமீபத்தில் தெரிவித்துள்ளது. சிங்கள மக்களிடமோ அல்லது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடமும் இனவாத கருத்துகள் கிடையாது என மேதானந்த தேரர் தெரிவிக்கின்றார்.  இலங்கையிலுள்ள தொல்பொருட்களை பாதுகாக்கும் நோக்குடனேயே ஜனாதிபதியினால் இந்த ஜனாதிபதி செயலணியொன்று உருவாக்கப்பட்டதாக கூறிய அவர், அதில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் இடம்பிடிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது எனவும் கூறினார்.  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள தொல்பொருட்களை அடையாளம் கண்டு அவற்றை பாதுகாப்பதற்காகவே இந்த ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், அதைவிடுத்து, கோயில்கள் மற்றும் பள்ளிவாசல்களை உடைப்பதற்காக இந்த செயலணி உருவாக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார். பௌத்த விகாரைகளை உடைத்து, கோயில்கள் கட்டப்பட்டுள்ளதை தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.  விகாரைகளை உடைத்து கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படும் ஆலயங்களின் பெயர்களை அவர் பட்டியலிட்டார்.  01. திருகோணமலை திருகோணேஸ்வரம் கோயில் 02. ஒட்டுச்சுட்டான் தான்தோன்றிஸ்வரம் கோயில்  03. கனகராயன்குளம் கோயில் 04. வவுனிகுளம் கோயில் 05. திருகேதீஸ்வரம் கோயில் 06. தொப்பிகல கோயில் 07. வவுனியா - மருதநாயகன் குளம் கோயில்  இலங்கையிலுள்ள அனைத்து பகுதிகளிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆலயங்களில் பெரும்பாலானவை விகாரைகளை உடைத்தே நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.  இந்து அமைப்புகள் எதிர்ப்பு  புத்த பெருமானின் போதனைகளுக்கு எதிராகவே எல்லாவல மேதானந்த தேரர் செயற்பட்டு வருவதாக சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன் புலவு க. சச்சிதானந்தன் தெரிவிக்கின்றார்.  அறிக்கையொன்றின் ஊடாக அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.  வெறுப்பையும், வேற்றுமையையும், பழிவாங்கல்களையும் புத்த பெருமான் போதிக்கவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.  ஆனால் எல்லாவல மேதானந்த தேரர் வெறுப்பு, வேற்றுமை மற்றும் பழிவாங்கல்களை முன்னெடுத்து வருவதாக அவர் கூறுகின்றார்.  இலங்கை தீவில் அமைதியும், சமாதானமும் நிலவ வேண்டும் என்றால், எல்லாவல மேதானந்த தேரரின் கருத்து புறக்கணிக்கப்பட வேண்டும் என மறவன் புலவு க சச்சிதானந்தன் தெரிவிக்கின்றார்.  'திருகோணேஸ்வரம் ஆலயத்தில் பௌத்த விகாரை இருக்கவில்லை' பௌத்த விகாரை உடைக்கப்பட்டு, திருகோணேஸ்வரம் கோயில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் கருத்தை ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது என தொல்லியல் பேராசிரியரும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியருமான பீ.புஸ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.  UMA CHANDRA PRAGASH பிபிசி தமிழுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.  இலங்கையில் பௌத்தம் வருவதற்கு முன்னர் தென்னிந்தியாவை ஒத்ததான ஒரு கலாசாரம் இங்கு நிலவியதாக அவர் கூறுகின்றார்.  இந்த கலாசார பண்பாட்டின் ஊடாக இலங்கையில் இந்து மதத்திற்கான ஆரம்பம் தென்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.  இலங்கையில் இந்துக்கள் பல வருடங்களுக்கு முன்னர் இருந்தே இருப்பதற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களில் கிழக்கு இலங்கையும் ஒன்று என அவர் கூறுகின்றார்.  நாயன்மார் பாடல்களில் திருகோணேஸ்வரம் தொடர்பில் பாடப்பட்டுள்ளதையும் அவர் இதன்போது நினைவூட்டினார்.  இந்தியாவிற்கு அடுத்தப்படியாக சிவ வழிபாடு இலங்கையின் திருகோணேஸ்வரம் மற்றும் திருகோதீஸ்வரம் ஆகிய ஆலயங்களில் இடம்பெற்றதாக வரலாற்று சான்றுகள் கூறுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.  திருகோணேஸ்வரம் ஆலயத்தை சூழ தமிழர்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகளும் உள்ளதாக அவர் கூறுகின்றார்.  7ஆம் நூற்றாண்டிலேயே திருகோணேஸ்வரம் கோயில் தொடர்பில் பாடல்கள் பாடப்பட்டால், அதற்கு முன்னதாகவே அந்த கோயில்கள் பிரசித்தி பெற்றவையாக இருந்துள்ளது என அவர் தெரிவிக்கின்றார்.  இதனால் குறித்த கோயில் தொடர்பில் பௌத்த தேரர் வெளியிடும் கருத்து முற்றியும் தவறானது எனவும், ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தொல்லியல் பேராசிரியரும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியருமான பீ.புஸ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.   https://www.bbc.com/tamil/sri-lanka-53368642
  • இது முற்றிலும் உண்மை , சும்மா வாய் சொல் அள‌வில் தான் பெரியார் பெண்ணிய‌ விடுத‌லைக்கு போராடினார் , சாதிய‌ ‌ இல்லாம‌ செய்தார் என்று பொய் வின்ப‌த்த‌ இப்ப‌வும் திராவிட‌ க‌ட்சிக‌ள் சொல்லிட்டுத் தான் இருக்கின‌ம் ,  தேர்த‌ல் நேர‌ம் பெரியாரை ம‌ற‌ந்து எந்த‌ தொகுதிக்கு எந்த‌ சாதி வேட்பாள‌ர‌ நிறுத்தினால் கூடுத‌ல் வெற்றியை ஈட்ட‌லாம் என்று திராவிட‌ க‌ட்சிக‌ளுக்கு ந‌ல்லாவே தெரியும் / எங்க‌ட‌ போராட்ட‌மும் த‌லைவ‌ரும் இருந்து இருக்க‌னும் சாதி என்ற‌ க‌தைக்கே இட‌ம் இருந்து இருக்காது ஈழ‌ ம‌ண்ணில் 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு த‌மிழீழ‌ ம‌ண்ணில் மெது மெதுவாய் சாதி த‌லை தூக்குது , என்ர‌ ஈழ‌ அனுப‌வ‌த்தில் என‌க்கு நினைவு தெரிந்த‌ நாள் முத‌ல் ஈழ‌த்தில் சாதி இருந்த‌து இல்ல 💪🤞‌ ,  எங்க‌ட‌ கோயில் திருவிழாவுக்கு யாரும் வ‌ர‌லாம் 1994 அந்த‌க் கால‌ப் ப‌குதியில்  , இப்ப‌ ஒரு சில‌ கோயிலுக்கு ஒரு சில‌ சாதிக் கார‌ர் போக‌ முடியாது 😓,  என்ன‌ செய்வ‌து பிர‌பாக‌ன் என்ற‌ ஒப்ப‌ற்ற‌ த‌லைவ‌ர் பின்னால் ஒரு இன‌மே சாதி ம‌த‌ங்க‌ளை க‌ட‌ந்து ஒற்றுமையா நின்றார்க‌ள் 🙏 ,  த‌லைவ‌ரின் ம‌றைவோடு எல்லாம் த‌லை கீழா போச்சு 😓 , 
  • யாழ்ப்பாணத்தில் மீண்டும் கொரோனா அச்சம்! 3 குடும்பங்கள் தனிமைப்படுத்தல் யாழ்ப்பாணத்தில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துக்கு சென்று வந்த மூவரின் குடும்பங்களே இவ்வாறு சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இரண்டு குடும்பங்களும் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரு குடும்பமும் இவ்வாறு சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இன்றுவரை 252 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உப்புக்குளம் பகுதியை சேர்ந்த மூன்று குடும்பங்களும் இன்றைய தினம் முதல் எதிர் வரும் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/146677?ref=home-imp-parsely
  • இன்றும் தமிழ்நாட்டுடன் இணைந்திருக்கும் மதுரையோடு சிங்கள மக்களுக்கும் தொப்புள் கொடி உறவு உண்டு. சுருக்கமாக கூறினால் ஒருவர் தமிழரோ அல்லது சிங்களவரோ எல்லோருக்கும் தமிழ் பெண்ணே தாயாக இருந்திருக்கின்றாள் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார். நாம் மகாவம்சத்தை நம்பினால் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இந்த உண்மை வரலாற்றை பௌத்த குருமார் உட்பட எவராவது மறுப்பார்களா? என கேள்வியும் எழுப்பியுள்ளார். தற்போது ஆலயங்கள் பௌத்த விகாரை என பௌத்த தோர்கள் தெரிவித்து வருவதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி கண்டனம் தெரிவித்து இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக இலங்கையின் எந்த பகுதி யாருக்கு சொந்தம்? யார் பூர்வீக குடிகள்? என்று சரித்திரம் தெரியாதவர்கள் மாறி மாறி அறிக்கைவிடுகின்றார்கள். ஆனால் 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம் திகதியிடப்பட்ட மேன்மை தங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ (அப்போதைய ஜனாதிபதி) அவர்களுக்கு என்னால் அனுப்பி வைக்கப்பட்ட “நிரந்தர தீர்வு கோரும் ஒரு தேசாபிமானியின் துணிச்சல் மிக்க கோரிக்கை” என்ற தலைப்பைக் கொண்ட கடிதத்தின் ஒரு பகுதியினை கீழே குறிப்பிடுகின்றேன். சிங்கள மக்களின் பூர்வீக தொடர்பு ஜனாதிபதியே நாம் காலவரையறை இன்றி இவ்வாறு செல்லமுடியாது. மேலும் தாமதியாது இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும். இலங்கையில் வாழும் பல்வேறு சமூகத்தினரும் தம் மத்தியிலுள்ள சந்தேகங்களை களைந்து ஒன்று பட்டு ஒரே தளத்தில் நிரந்தரமான ஒரு தீர்வுக்கு ஒத்துக் கொள்ள வேண்டும். இலங்கையில் வாழும் இரு பெரும்பான்மை சமூகத்தினர் நீண்ட காலமாக ஒருவர் மீது ஒருவர் கொண்ட அவநம்பிக்கை வளர்ந்தமைக்கு முக்கிய காரணம் எமது நாட்டின் வரலாற்றில் நடந்தேறிய சில முக்கிய சம்பவங்கள் பற்றி அறிந்திருக்காமையே. தன்னுடைய விளைவு ஒரு குழுவினர் மற்றய குழுவினரை சந்தேக கண்கொண்டு பார்ப்பதே நீண்டகாலமாக நடந்து வருகின்றது. இந்த நாட்டில் சனத்தொகையில் எத்தனை வீதத்தினர் தமிழ், சிங்கள மக்களின் பூர்விக உறவு பற்றி தெரிந்து வைத்திருக்கின்றனர்? எம்மில் அனேகருக்கு தெரிந்தவகையில் விஜயன் என்ற இளவரசன் பாண்டிய நாட்டு இளவரசியை மணமுடித்ததும், அதே போன்று அவனது தோழர்கள் 700 பேருக்கு அவரவர் தகுதிக்கு பொருத்தமான பெண்களை பாண்டிய நாட்டு மன்னன் திருமணம் முடித்து அனுப்பிவைத்ததும் மட்டுமே. ஆனால் சிங்கள மக்களின் பூர்வீக வரலாற்றை எடுத்துக் கூறம் 'மகாவம்சம்' என்ற புத்தகத்தில் 7ம் அத்தியாயத்தின் ஒரு பகுதியை கீழே தருகின்றேன். 'பாண்டிய மன்னன் தனது மகளாகிய அரசகுமாரியையும், அவளுக்கு உரித்தான ஆபரணங்கள், அவர்களுக்கு தேவையான பல்வேறுபட்ட பொருட்கள், விஜயனின் தோழர்களின் தகுதிக்கேற்ப தெரிவு செய்யப்பட்டு அவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நட்ட ஈட்டை கொடுத்து அழைக்கப்பட்ட பெண்கள், யானைகள், வாகனங்கள், அரசருக்குரிய தரமான பொருட்கள், பல்வேறு கைவினை கலைஞர்கள், 18 வகையான தொழில் புரியும் ,னக் குழுக்களைச் சேர்ந்த 1000 குடும்பத்துடன் ஒரு கடிதத்தையும் மன்னருக்கு அனுப்பியிருந்தார். இலங்கைத் தமிழர்கள் தமிழ் நாட்டை சேர்ந்தவர்களோடு தமக்குள்ள தொப்புள்கொடி உறவுபற்றி பிரமாதமாக பேசுவதனைப் போன்று, இன்றும் தமிழ்நாட்டுடன் இணைந்திருக்கும் மதுரையோடு சிங்கள மக்களுக்கும் தொப்புள் கொடி உறவு உண்டு. சுருக்கமாக கூறினால் ஒருவர் தமிழரோ அல்லது சிங்களவரோ எல்லோருக்கும் தமிழ் பெண்ணே தாயாக இருந்திருக்கின்றாள். நாம் மகாவம்சத்தை நம்பினால் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது https://www.ibctamil.com/srilanka/80/146662
  • இலங்கை ஒற்றையாட்சி அரசின் கீழான இலங்கைத் தேசியம் என்பதற்குள், ஈழத்தமிழர்களையும் இணைத்துவிட வேண்டுமென்ற நோக்கம் 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில், சிங்கள அரசியல் கட்சிகளிடையே மேலோங்கி வருகின்றது. இதன் உச்சத்தை 2015ஆம் ஆண்டு மைத்தரி- ரணில் அரசாங்கத்தில் காணமுடிந்தது. இலங்கைத் தேசியத்தை மையமாகக் கொண்டு தமிழ்த்தேசிய அரசியல் நீக்கத்துக்கான முதற்கட்ட ஏற்பாடாகவே ஜெனீவா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரனை வழங்கியிருந்தது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அதற்கு ஒத்துழைப்பும் கொடுத்திருந்தது. 2015ஆம் ஆண்டுக்கு முன்னரான மகிந்த ராஜபக்சவின் ஆட்சியிலும் அதற்கு முந்திய சந்திரிகா மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலும் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் காணி அபகரிப்புகள், சிங்களக் குடியேற்றங்கள் போன்றவற்றுக்கு இலங்கை இராணுவமே காரணமாக இருந்தது.   -கொழும்பு ஆலோசனை கொழும்பின் ஆலோசனையோடு இலங்கை இராணுவமே இவற்றைச் செய்துமிருந்தது. ஆனால் மைத்திரி- ரணில் அரசாங்கமே இந்த விகாரங்களை கொழும்பை மையப்படுத்திய இலங்கை அரச திணைக்களங்கள் மூலமாகப் பிரயோகிக்கும் முறைமையை அறிமுகப்படுத்தியிருந்தது. குறிப்பாகக் காணி அபகரிப்பு என்றால். கொழும்பை மையமாகக் கொண்ட காணிப் பதிவு ஆணையாளர் அலுவலகம், சிங்களக் குடியேற்றம் மற்றும் மண் அகழ்வென்றால் வீடமைப்பு அதிகார சபை, அல்லது நகர அபிவிருத்தி அதிகார சபை, புத்தர் சிலை வைத்தல், தாதுகோபுரம் கட்டுதல் என்றால் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களம் ஆகிய அரச திணைக்களங்கள் மூலம் பொலிஸாரின் உதவிகளைப் பெற்று தாயகப் பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றன. 2019ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரான நிலையிலும்கூட இவ்வாறு அரச திணைக்களங்களைப் பயன்படுத்தியே வடக்குக் கிழக்கில் தமிழர் மரபுரிமைகள் அழிக்கப்பட்டுச் சிங்கள மரபுரிமைகள் செயற்கையான முறையில் சேர்க்கப்படுகின்றன. சிங்கள அரசியல் தலைவர்கள் வெவ்வேறுபட்ட கட்சிகளாக இருந்தாலும், ஈழத்தமிழர் விவகாங்களில் அவர்களுடைய செயற்பாடுகள் நன்கு திட்டமிடப்பட்ட பொறிமுறை ஒன்றின் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை வரலாறு. ஜே.ஆர்.ஜவர்த்தானவின் ஆட்சியில் 1983ஆம் ஆண்டு திருகோணமலை அரச அதிபராகச் சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டது முதல், மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் வவுனியா, மன்னர் மாவட்டங்களில் சிங்களவர்கள் அரச அதிபார்களாக நியமிக்கப்பட்டமை உள்ளிட்ட பல உதாரணங்கள் உண்டு. அதேவேளை, கல்விச் செயற்பாடுகள் மூலமாகவும் இனவாதக் கருத்துகள், சிங்கள வரலாறுகள் தமிழ் மாணவர்கள் மத்தியில் திணிக்கப்பட்டுள்ளன. ஆண்டு ஆறில் இருந்து கல்விப் பொதுத்தராதரச் சாதாரண தரம் வரையான வரலாறுப் பாடநூல்களில் பௌத்த சமயத்துக்கான முக்கியத்துவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வரலாற்றுப் பாடநூலில் பௌத்த சமயநாகரீக வரலாறு எதற்கு என்ற கேள்விகள் தமிழ்க் கல்வியாளர்களினால் அவ்வப்போது எழுப்பப்பட்டுமிருக்கின்றன. -பௌத்த சமயக் கலைகள் ஆனாலும் சைவ சமயக் கலைகள் நாகரீகங்கள் அதுபற்றிய வரலாறுகள் மறைக்கப்பட்டு அல்லது பௌத்த சமயத்துக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டுப் பாடநூல்களில் சேர்க்கப்பட்டுள்ளன. ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் ஆட்சியில் இவ்வாறான இனவாதக் கல்வி முறை ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை தொடருகின்றது. இதற்கும் பல உதாரணங்கள் உண்டு. பொலன்னறுவை அனுராதபுரக்காலங்களில் நிர்மாணிக்கப்பட்ட திராவிடக் கட்டடக்கலை மரபுகளைச் சார்ந்த சைவ சமயம் கட்டடங்கள், (ஆலயங்கள்) வரலாற்றுப் பாடநூல்களில் பௌத்த சமயக் கட்டடங்களாகக் காண்பிக்கப்பட்டுள்ளன. உதாரணமாகத் தரம் எட்டு பாடநூலில் கண்டகச் சைத்தியம் எனக் காண்பிக்கப்பட்டிருக்கும் கட்டடம், திரவிடக் கட்டடக்லையைச் சார்ந்த கட்டடமாகும். வரலாற்றுப் பேராசிரியர் பத்மநாதன், இலங்கையின் இந்து சமயம் என்ற நூலில் இக் கட்டடம் திராவிடக் கட்டடக்கலையைச் சேர்ந்ததெனக் கூறியுள்ளார். ஆகவே சர்வதேச பாடநூல் நியமங்களின்படி, குறித்தவொரு மொழியில் எழுதப்படும் வரலாற்றுப் பாடநூல்கள் பிறிதொரு மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுக் கற்பிக்கப்படுதல் சர்வதேச நியமச் சட்டங்களுக்குப் பொருந்தாதது ஒன்று. இதற்கு எதிராக வழக்கும் தொடர முடியும். அவ்வாறு வழக்குத் தொடரப்பட்டால் ஈழத்தமிழ் மாணவர்கள் இந்த வரலாற்றுப் பாடநூல்களைப் படிக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் தமிழ்க் கல்வியார்கள் எவருமே சர்வதேச நியமங்களின் பிரகாரம் வழக்குத் தொடருவது பற்றிக் கவனம் செலுத்தவில்லை. அரசியல் விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காரணங்களில் தமிழ் மாணவர்கள் மீதான கல்வித்தரப்படுத்தலும் ஒன்று என்பது வெளிப்படை. ஆனால் இன்று வரலாற்றுப் பாடநூல் திரிபுபடுத்தல்களோடு, குறிப்பிட்ட சில தமிழ்க் கல்வியிலாளர்களும் ஓரம்கட்டப்படுகின்றனர். இராணுவத்துக்கு மரியாதை கொடுப்பதற்குரிய முறையிலும் இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்புச் சட்டங்கள் தேவைக்கு ஏற்றவாறு சட்டவியாக்கியாணம் செய்யப்படுகின்றன. அதற்குக் கல்வித்துறைச் சட்டங்கள் நிமயங்களும் விதிவிலக்கல்ல. யாழ் பல்கலைக்கழகச் சட்டத்துறை மூத்த விரிவுரையாளர் கலாநிதி குருபரன் குமாரவேல், நீதிமனற்ங்களில் வழக்கு விசாரணைகளுக்காக முன்னிலையாகக் கூடாதெனக் கொழும்பில் உள்ள பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை யாழ் பல்கலைக்கழகமும் ஏற்றுள்ளது. 1996ஆம் ஆண்டு யாழ் நாவற்குழியில் காணாமல்போன 24 இளைஞர்களில் மூன்று இளைஞர்களின் ஆட்கொணர்வு மனுத் தொடர்பான விசாரணையில் பாதிக்கப்பட்ட உறவினர்களின் சார்பில் கலாநிதி குருபரன் முன்னிலையாகின்றார். அதனைத் தடுக்கும் நோக்கிலேயே இவ்வாறன உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறதென்ற குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லாமலில்லை. இந்த வழக்கில் பிரதான எதிரியாக இலங்கைக் இராணுவத்தின் உயர் அதிகாரியான துமிந்த கெப்பிடிவலான என்பவர் மீதே சந்தேகம் தெரிவிக்கப்பட்டுக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், 2015ஆம் ஆண்டு நல்லாட்சியெனக் கூறிக் கொண்டு பதவிக்கு வந்த மைத்திரி- ரணில் அரசாங்கமே துமிந்த கெப்பிடிவலானவுக்கு இலங்கை இராணுவத்தின் காலால்படையின் பணிப்பாளர் பதவி உயர்வை வழங்கியிருந்தது. இனரீதியான கொலை வழக்கு ஒன்றில் குற்றம் சுமத்தப்பட்டதாகத் தெரிந்தும் இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டிருந்தது. பதவியுயர்வு வழங்கப்பட்டதொரு நிலையிலும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, கலாநிதி குருபரன் முன்னிலையாகியிருந்தார். இதனால் யாழ் பல்கலைக்கழகச் சட்டத்துறை விரிவுரையாளர் ஒருவர், எந்த அடிப்படையில் வழக்கு ஒன்றில் முன்னிலையாக முடியுமென இலங்கை இராணுவத் தரைப்படையின் சட்டப் பணிப்பாளர் ஈஎஸ்.ஜயசிங்கே கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி கொழும்பில் உள்ள பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு அனுப்பியிருந்த கடிதம் ஒன்றில் கேள்வி எழுப்பியிருந்தார்.   -மானிய ஆணை்க்குழுவின் கடிதம் அந்தக் கடிதத்தின் அடிப்படையிலேயே யாழ் பல்கலைக்கழக உப வேந்தரிடமும் விளக்கம் கோரப்பட்டுப் பின்னர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொகான் டி சில்வா கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். இந்தக் கடிதம் பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்கள், பல்கலைக்கழகப் பதிவாளர்கள், பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் உயர் கல்வி அமைச்சு உள்ளிட்ட தறைசார்ந்த 17அரச திணைக்கள், நிறுவனங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சட்டத்துறை விரிவுரையாளர்கள் நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் ஈடுபட அனுமதியில்லை என்பதே கடிதத்தின் உள்ளடக்கமாகும். நாவற்குழி வழக்கு விசாரணையின் பின்னணியிலேயே இவ்வாறான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டுமென்ற சந்தேகத்தை கலாநிதி குருபரன் ஏற்கனவே எழுப்பியிருந்தார். யுரொப்பியன் ஜேர்னல் ஒப் இன்ரர்நஷனல் லோ ( EuropeanJournal of International Law) என்ற கட்டுரை ஒன்றைத் தனது முகநூல் பதிவில் மேற்கோள்காட்டியுள்ள கலாநிதி குருபரன், சர்வதேச நீதிமன்றங்களில் முன்லையாகும் சட்டத்தரணிகளில் 60 வீதமானோர் சட்டத்துறைப் பேராசிரியர்கள் என்று அந்தக் கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்-ஆனால் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவும் யாழ் பல்கலைக்கழகமும் மாத்திரமே அவ்வாறு முன்னிலையாக முடியாதெனக் கூறுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். துறைசார்ந்தவர்கள் தமது தொழில்சார்ந்து வெளியில் பணியாற்ற முடியுமெனப் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு கூறுகின்றது. ஆனால் சட்டத்துறையில் இருப்போருக்கு மாத்திரம் நீதிமன்றங்களில் முன்னிலையாக முடியாதெனக் கூறுவது நியாயமற்றது என்ற கருத்துக்கள் தற்போது எழுந்துள்ளன. பல்கலைக்கழக மருத்துவப் பேராசிரியர்கள் பலர் அரச வைத்தியசலைகளிலும் தனியார் வைத்தியசாலைகளிலும் பணயாற்றுகின்றனர். அதற்கு எந்தவிதமான தடையும் இல்லை. 1997ஆம் ஆண்டு சந்திரிகாவின் ஆட்சியில் சுகாதார அமைச்சராக இருந்த ஏ.எச்.எம்.பௌசி. அரச மருத்துவர்கள், மருத்துவபீடப் பேராசிரியர்கள் கடமை நேரங்களில் தனியார் வைத்தியசாலையில் கடமைபுரிய முடியாதென்ற உத்தரவொன்றைப் பிறப்பித்திருந்தார். ஆனால் இலங்கை மருத்துவர் சங்கம் அதற்குக் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தது. வேலை நிறுத்தப் போராட்டங்களும் நடத்தப்பட்டிருந்தன. சுமார் ஒரு மாதமாக நீடித்த இந்தப் பிரச்சினையில் அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா தலையிட்டார். மருத்துவர்கள், மருத்துவப் பேராசிரியர்கள் கடமை நேரங்களிலும் தனியார் வைத்தியசாலைகளுக்கும் கடமைக்குச் செல்ல முடியுமென உத்தரவிட்டிருந்தார். இதனால் அமைச்சர் பௌசியின் உத்தரவும் வாபஸ் பெறப்பட்டது. ஆகவே சட்டத்துறை விரிவுரையாளர்கள், பேராசிரியர்களுக்கு மாத்திரம் ஏன் இப்படியொரு தடையுத்தரவு என்றவொரு கேள்வி எழாமலில்லை. கலாநிதி குருபரனின் விவகாரத்தில் இலங்கைச் சட்டத்திரணிகள் சங்கம் மௌனம் காக்கிறது. தனிப்பட்ட மருத்துவப் பேராசிரியர் ஒருவருக்கான அரசியல் பழிவாங்கல் நோக்குடனேயே அன்று அமைச்சர் பௌசி மருத்துவர்களுக்கான மேற்படி உத்தரவைப் பிறப்பித்திருந்தாக அன்றைய ஊடகங்கள் விமர்சித்திருந்தன. ஆனால் இலங்கை மருத்துவர் சங்கம் அரசியல் வேறுபாடுகள் இன்றி மருத்துவர்கள் என்ற அடிப்படையில் ஒற்றுமையாக வேலை நிறுத்தம் செய்ததால், அந்த உத்தரவை ஜனாதிபதியே வாபஸ் பெறும் நிலை ஏற்பட்டிருந்தது. ஆனால் இங்கே கலாநிதி குருபரன் தமிழர் என்பதாலும் தமிழ்த்தேசிய அரசியல்நோக்கு நிலையில் அவர் கருத்துக்களை வெளியிட்டுவதாலும் பழிவாங்கப்படுகிறார் என்பது கண்கூடு.   -இராணுவ அதிகாரியின் கடிதம் ஏனெனில், இலங்கை இராணுவத் தரைப்படையின் சட்டப் பணிப்பாளரின் கேள்விக்குக் கொழும்பில் உள்ள பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு செவிசாய்த்திருக்கிறது. அதற்கு யாழ் பல்கலைக்கழக உப வேந்தரும் கட்டுப்பட்டேயாக வேண்டும் என்ற நிலையும் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் அந்தத் தீர்மானத்தை எதிர்த்து இதுவரை எந்தவொரு நடவடிக்கைகளையுமே எடுக்கவில்லை என்பதும் விமர்சனத்துக்குரியதே. 20 ஆண்டுகளுக்கு முன்னர் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த இராணுவ அதிகாரிக்கு 2015ஆம் ஆண்டு பதவியுயர்வு வழங்கப்பட்டிருக்கிறதென்றால், அந்த இராணுவ அதிகாரிக்கு எதிரான கொலை வழக்கில் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரைரையாளர் ஒருவர் எவ்வாறு முன்னிலையாக முடியுமென்ற கேள்வியும் சந்தேகமும், யாழ் பல்கலைக்கழகச் சட்டத்துறைக் கல்வியின் நன்மைக்கானதல்ல. மாறாக அந்தக் கேள்வியும் சந்தேகமும். பௌத்ததேசியச் சிந்தனையில் இருந்து உதித்ததே. இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கொதிராகத் தமிழ்ச் சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகக் கூடாதென்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறதெனலாம். ஆகவே இலங்கை நீதித்துறை பௌத்ததேசிவாதச் சிந்தனையின் நோக்கில் செயற்படுகிறது. கல்வி உயர்கல்வி அமைச்சும் அவ்வாறுதான் செயற்படுகின்றதென ஏலவே நான் முன்னைய அரசியல் பத்தி எழுத்துக்களில் சுட்டிக்காட்டியிருக்கிறேன். இராணுவத்தின் தேவைக்கேற்ப பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவும் பல்வேறு சந்தர்ப்பங்களில் செயற்படுகின்றது. ஆனால் விரிவுரையாளர் ஒருவரைக் குறிப்பிட்ட பணியொன்றில் இருந்து நிறுத்த வேண்டுமென்ற தடையுத்தரவு, இது முதற்தடவையே. ஆனால் இது கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியில் தீர்மானிக்கப்பட்டதல்ல. மைத்திரி- ரணில் அரசாங்கம் பதிவியில் இருந்தபோதே எடுக்கப்பட்ட முடிவு. -பேராசிரியர் விக்னேஸ்வரன் அதேபோன்று யாழ் பல்கலைக்கழக உபவேந்தராகப் பதவி வகித்திருந்த பேராசிரியர் ரட்னம் விக்னேஸ்வரன். கடந்த ஆண்டு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தபோது திடீரென விலக்கப்பட்டிருந்தார். செயல்திறன் போதியதாக இல்லையென்ற குற்றச்சாட்டிலேயே அவரை விலக்குவதாக ஜனாதிபதி செயலகம் அப்போது கூறியிருந்தது. ஆனால் உபவேந்தர் ஒருவரை ஜனாதிபதி பதவி நீக்குவதாக இருந்தால். பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களுக்கு அறிவித்திருக்க வேண்டும். அல்லது அவர்களின் ஆலோசனை பெறப்பட்டிருக்க வேண்டும். ஆகவே உரிய விதிமுறைகள் பின்பற்றப்படாமலேயே சிலருடைய அழுத்தங்களினால் மைத்திரிபால சிறிசேன, பேராசிரியர் விக்னேஸ்வரனை விலக்கியிருக்கிறார். அன்று அவருக்கு இழைக்கப்பட்டது பெரும் அநீதியே. ஆகவே கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில், இலங்கை அரச கட்டமைப்பு என்பது ஈழத்தமிழர்களுக்கெதிராக இப்படித்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறதென்பதை வரலாற்று ரீதியாகக் காணமுடியும்.   -அமெரிக்கச் சட்டக் கல்லுாரி சட்டத்துறைப் பேராசிரியர்கள் சட்டக் கல்வியையும் கற்பித்துக் கொண்டு நீதிமன்றங்களிலும் முன்னிலையாக முடியுமென அமெரிக்கச் சட்டத்துறைப் பேராசிரியர் அலிஸ் பேக்கர் (AliceBaker) கூறுகிறார். அமெரிக்கச் சட்டத்துறைக் கல்லூரிகளில் இந்த நடைமுறை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார். சட்டத்துறைப் பேராசிரியர்கள் தமது கடமை நேரங்களில் சட்டத்தொழிலிலும் ஈடுபட முடியுமா என்ற என்ற தலைப்பில் அவர் தனது கட்டுரையில் விளக்கமளிக்கின்றார். 2001ஆம் ஆண்டில் இருந்து 2008ஆம் ஆண்டு வரை சட்டத்துறைப் பேராசிரியராகக் கடமையாற்றிய அலிஸ் பேக்கர், கற்பித்தலோடு சட்டத்தொழில்சார் நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டுமென வலியுறுத்துகின்றார். அப்போதுதான் தரமான நடைமுறைப் பயிற்சியுள்ள சட்டக் கல்வியை மாணவர்களுக்கு வழங்க முடியும் என்றும் அலிஸ் பேக்கர் தனது கட்டுரையில் கூறுகின்றார். வராமொன்றில் 168 மணித்தயாளங்கள் என்றும் அவற்றில் எவ்வாறு நேரத்தைப் பங்கிட்டுச் சட்ட விரிவுரைகளிலும் சட்டத் தொழிலிலும் ஈடுபட முடியும் என்ற தனது விளக்கத்தை அவர் பகுப்பாய்வு செய்கிறார். ஆகவே உலகத்தில் அதற்கு உதாரணங்கள் உண்டு. ஈழத்தமிழர்களுக்கு எதிரான கல்வித் தரப்படுத்தல் 1972இல் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியில் கொண்டுவரப்பட்டு இன்று வரை அந்தத் தரப்படுத்தல் பல்வேறு வடிவங்களில் தொடருகின்றன. உயர்கல்விக்கான பங்கடு இன விகிதாசாரத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதில்லை. மாறாக மாணவர்கள் பெறும் பெறுபேறுகளின் அடிப்படையிலேயே உயர்கல்விப் பங்கீட்டை இலங்கை அரசாங்கம் செய்கின்றது. ஆகவே குருபரன் விடயத்தில், ஏனைய சட்டத்துறைப் பேராசியர்கள், விரிவுரையாளர்கள்கூட அமைதிகாப்பது அல்லது அந்த விவகாரத்தை வெறுமனே கடந்து செல்வது என்பது இனரீதியான பார்வையே. இதுவே ஒரு சிங்களச் சட்டத்துறை விரிவுரையாளருக்கு நடந்திருந்தால், இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் வாய் திறந்திருக்கும். வேலைநிறுத்தப் போராட்டமே நடந்தருக்கும். நீதித்துறைச் செயற்பாடுகள் நின்றிருக்கும். அதேவேளை, இலங்கை இராணுவம் ஈழத்தமிழர்கள் தொடர்பான விடங்களில், இலங்கை அரச திணைக்களங்களில் எந்தவேளையிலும் தலையிடும் அல்லது இலங்கை இராணுவம் சொல்வதையே பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு உள்ளிட்ட அரச திணைக்களங்கள் கேட்க வேண்டும் என்ற செய்தியும் கலாநிதி குருபரன் விடயத்தின் மூலமாகக் உறுதிப்படுத்தப்படுகின்றது.   -இராணுவத்து்கு மரியாதை அதுவும் 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான ஒரு தசாப்பத காலம் சென்றுவிட்ட நிலையிலும், போர்க்குற்றம் மனித உரிமை மீறல் தொடர்பாகச் சர்வதேச நீதி விசாரணையே அவசியம் என்று கூறப்பட்டுவரும் சூழலிலும், இலங்கை இராணுவத்தின் முக்கியத்துவத்தையும் மரியாதையையும் இலங்கை அரசாங்கம் உயர் கல்வித்துறை ஊடாகப் பறைசாற்றியுள்ளதெனலாம். ஜெனீவா மனித உரிமைச் சபை ஆணையாளரின் தீர்மானத்தில் சர்வதேச நீதியரசர்களையும் உள்ளடக்கிய கலப்புமுறை விசாரணைக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை இராணுவத்துக்கு இவ்வாறு வழங்கப்பட்டுள்ள மரியாதை, ஜெனீவாத் தீர்மானத்துக்கும் சவாலாகவே அமைந்துள்ளதெனலாம். அல்லது அந்தத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டு விட்டதென்ற முடிவுக்கும் வரலாம். தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று கூறிப் பெருமைப்படுகின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இந்த விடயம் தொடர்பாக மெளனமாக இருப்பது தொடர்பாகவும் கேள்விகள் எழாமலில்லை. இதனைத் தனியொரு குருபரனுக்கு எதிரான தீர்மானமாகவோ அல்லது பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் கல்வித்துறை மீதான அக்கறையில் எடுக்கப்பட்ட முடிவாகவுமோ கருதிவிடலாகாது.   -தவறவிட்ட விடயங்கள் ஆகவே பல்கலைக்கழகச் சமூகம் கருத்திலெடுக்க வேண்டிய பிரதான விடயங்களில் கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. குறிப்பாக வரலாற்றுப் பாடநூல்களில் உள்ள பிழையான தகவல்கள் சுட்டிக்காட்டப்பட்டுச் சா்வதேச நியமங்களுக்கு ஏற்ப அமைய வேண்டுமென்ற கோரிக்கைகள் துறைசார்ந்த பேராசிரியர்களினால் உரிய முறையில் முன்வைக்கப்படவில்லை. மொழியாக்கம் செய்யப்பட்ட பின்னர் தமிழ் மொழிமூலப் பேராசிரியர்களும் அதில் கையொப்பமிடுகின்றனர். ஆனால் வரலாற்று்க்கு மாறான திணிப்புகள் பற்றிச் சுட்டிக்காட்டினார்களா என்பது கேள்வியே. குருபரன் விடயத்திலும் உரியமுறையில் நியாயங்கள், சா்வதேச விதிமுறைகள் தொடர்பாகச் சுட்டிக்காட்டப்பட்டு அழுத்தங்கள் கொடுக்கப்படவில்லை. பேராசிரியர் விக்னேஸ்வரன் விலக்கப்பட்டபோது. பல்கலைக்கழகப் பீடாதிபதிகள். பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் எவருமே அதற்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை. பல்கலைக்கழகத் தொழிற்சங்கம் கூட போராட்டம் நடத்தவில்லை. அவ்வாறு போராட்டம் நடத்தப்பட்டு எதிர் நடவடிக்கைகள் அன்று எடுக்கப்பட்டிருந்தால் இன்று குருபரன் மீது இவ்வாறான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் பல்கலைக்கழச் சமூகம் அந்தப் பாரிய பொறுப்பில் இருந்து தவறிவிட்டதெனக் கூறினால், அங்கு மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை. அதேவேளை, போரின் பின்னரான சூழலில், தமிழ்ச் சமூகத்தின் அரசியல், பொருளாதார மற்றும் கல்விச் செயற்பாடுகளில் யாழ் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகச் சமூகத்துக்குப் பாரிய பொறுப்பு இருந்தது. ஆனால் அது பற்றிய ஆய்வுகள் எதனையுமே பல்கலைக்கழகத் தமிழ்ச் சமூகம் மேற்கொள்ளவில்லை. அப்படி ஆயு்வுகளை மேற்கொள்ள முடியாதென்று எந்தவொரு தடையுமில்லை. ஆனால் பல்கலைக்கழகத் தமிழ்ச் சமூகம் வெறுமனே கலைத்திட்டத்திற்கு உள் நின்றவாறு கற்பித்தல் செயற்பாடுகளில் மாத்திரமே ஈடுபடுகின்றது. துனிஷியாவில் 2010ஆம் ஆண்டு புரட்சி ஏற்பட்டு ஆட்சிமாறியவுடன், அங்குள்ள பல்கலைக்கழகச் சமூகம் கடந்த 30 ஆண்டுகள் பின்னோக்கியிருந்த அரசியல், பொருளாதார மற்றும் கல்வித்துறைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு எதிர்காலத்துக்கான சீர்திருத்தங்களில் ஈடுபட்டிருந்தன. அவ்வாறே இந்தோனிஷியாவின் அச்சே மாநிலத்திலும் கல்விச் சமூகத்தினால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதனடிப்படையில், முன்னேற்றங்களுக்கான பொறிமுறைகள் வகுப்பட்டன. ஆனால் பல்கலைக்கழகத் தமிழ்ச் சமூகம் அந்தப் பொறுப்புகளை ஏற்கத் தயங்குகின்றது. அல்லது அரசியல் காரணங்களைக் கூறித் தப்பித்துக்கொள்கிறது என்றும் கூறலாம்.   -அ.நிக்ஸன் https://www.ibctamil.com/articles/80/145940