Paranee

எனது கசப்பு அனுபவம்

Recommended Posts

எனது கசப்பு அனுபவம்

புலம் பெயர்ந்து வந்தும் விலங்குகளால் சிறைப்பட்டேன் சில நிமிடங்கள். இரண்டு தினங்களிற்கு முன்னம் Hasle (OSLO)என்ற இடத்தில் வேலை முடிந்து இரவு 10.00 மணியளிவில் வீடு செல்வதற்காக நடந்து வந்தகொண்டிருந்தேன். திடீரென நான்கு வாகனங்களில் வந்த (மொத்தம் 20 அல்லது 25 பேர் ) இராணுவக் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு கைவிலங்கு இடப்பட்டு அவர்களின் வாகனத்திற்குள் அத்துமீறி ஏற்றபட்டடேன். எனது தொலைபேசி ஆவணங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து 5 நிமிடங்கள் கழிந்த பின் எல்லாவற்றையும் திரும்ப ஓப்படைத்து விட்டு மன்னிப்பு கேட்டு விடுதலை செய்தார்கள். என்னை கைது செய்த காரணத்தை ஆரம்பத்தில் இருந்து சொல்லவே இல்லை. இந்த தேசத்து மொழியிலும் நான் பெரிதாக தேர்ச்சி இல்லை இருந்தும் வாக்குவாதப்பட்டேன்.

தவறாக கைதுசெய்துவிட்டோம். மன்னித்துகொள் என்று தோளில் தட்டி அனுப்பி வைத்தார்கள். நான் மௌமான வீடு வந்து விட்டேன். மறுநாள் காவல்துறை அலுவலகம் சென்று விளக்கமாக கூறி எனக்கு நியாயம் கேட்டேன். அவர்கள் உள்ளே அழைத்து காவல்துறை மேலதிகாரியுடன் சந்திக்க வைத்தாhர்கள். அவர் என்னை மன்னித்துக்கொள்ளுமாறு கூறினார். அன்றைய தினம் நான் வந்துகொண்டிருந்த இடத்தில் 5 திருடர்கள் ஆயுதங்களுடன் ஓடினார்களாம். தவறாக என்னை அவர்கள் என நினைத்து கைது செய்துவிட்டார்களாம். நான் விடவில்லை வாக்குவாதப்பட்டு அவர்கள் மூலமாகவே ஒரு மன்னிப்புக்கடிதமும் வாங்கி வந்தேன்.

இலங்கையில்தான் இந்த கொடுமை என்றால் புலம்பெயர்ந்த தேசத்திலும் எமக்கான அடிமை விலங்குகள் இன்னும் உடைக்கப்படவில்லை. அந்த இடத்தில் ஒரு நோர்வேஜியனோ அல்லது பிரிட்டிஸ்காரனோ கைது செய்யப்பட்டிருந்தால் மானநஸ்ட வழக்கு அது இது என்று நிறைய கேட்டிருப்பான். நான் ஆசியன்தானே அதனால் கதைக்க முடியவில்லை. கதைத்தால் வேறு காரணங்களினால் மாட்டுப்பட வேண்டிவரும்

இதுதான் புலம்பெயர்ந்த வாழ்க்கை

Edited by Paranee

Share this post


Link to post
Share on other sites

பரணிக்கு என் அனுதாபங்கள். தமிழனின் தலைஎழுத்து இன்னும் தான் மாறவில்லை. தமிழன் இல்லா நாடில்லை தமிழனுக்கு எனறு ஒரு நாடில்லை. கேட்க ஒரு நாதியில்லா வாழ்வு. என்று தீரும் இந்த ...........அகதி வாழ்வு.

Share this post


Link to post
Share on other sites

என்ன பரனி இதுக்கெல்லாம் போய் டென்சன் ஆகிக்கொன்டு இருக்கிறீங்கள்.அது சரி நாங்கள் எல்லாரும் மானத்தை ஊரில விட்டுப்போட்டுத்தானே இங்கை வந்திருக்கிறம்.பின்பு எப்படி மான நட்டம் கேக்கிறது :):D

Share this post


Link to post
Share on other sites

எனக்கும் ஒரு கசப்பான அனுபவம் நேரிட்டுக் கொண்டிருக்கிறது. இங்குள்ளவர்களால் அல்ல. சூனப் பானாக்களால். இப்போது எதுவும் விரிவாகக் கூற முடியாது. விடயம் முடிந்ததும் விரிவாகக் கூறுகிறேன். :)

Share this post


Link to post
Share on other sites

வேதனையாக இருக்கின்றது கேட்க. சம்பவம் நடக்கும் போதும் நடந்த பின்பும் மன உளைச்சல் வலியாக இருத்திருக்கும். சம்பவத்தினை வாசிக்கும் போது தவறுதலாகத் தான் உங்களை கைது பண்ணியிருக்கின்றார்கள் என்று தெரிகின்றது. நான் நினைக்கவில்லை தமிழர் என்ற காரணத்தினால் நடந்து இருக்கும் என்று (நிலாமதி அக்கா சொல்வது போல இருக்காது)

புலம் என்பதால் வாக்குவாதப் பட்டாயினும் மன்னிப்பு கடிதம் தந்தார்கள். இதுவே இலங்கையிலும் சரி அல்லது எந்த ஒரு ஆசிய நாட்டிலும் சரி, வாக்குவாதப் பட்டிருந்தால் காவல்துறை மோசமாகவே நடத்து இருக்கும்

Share this post


Link to post
Share on other sites

மிகவும் வேதைனையாக உள்ளது.

உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை.......

கடவுளை பிரார்த்திக்கின்றேன்...

Share this post


Link to post
Share on other sites

அந்த இடத்தில் ஒரு நோர்வேஜியனோ அல்லது பிரிட்டிஸ்காரனோ கைது செய்யப்பட்டிருந்தால் மானநஸ்ட வழக்கு அது இது என்று நிறைய கேட்டிருப்பான். நான் ஆசியன்தானே அதனால் கதைக்க முடியவில்லை. கதைத்தால் வேறு காரணங்களினால் மாட்டுப்பட வேண்டிவரும்

எம்மவர்களின் கஷ்டகாலம் இது :wub:

Share this post


Link to post
Share on other sites

இதுக்கெல்லாம் கவலைப்படலாமா?

எனக்கு இப்படி சில அனுபவங்கள் இருக்கு ஆனால் கைது செய்யவில்லை அது மட்டும் தான் மிச்சம்! ஆனால் ஒரு விடயம் மட்டும் உண்மை அவர்களில் சொல்லி தப்பில்லை. கனடாவில் தமிழர்களும் சும்மா ஆக்கள் இல்லை. அவர்களும் பெரும் புள்ளிகள் தான்!

Share this post


Link to post
Share on other sites

மனிதனிற்கும் இருக்கும் தாழ்வு மனப்பான்மை வெளித்தெரியும் நேரங்களில் சில இப்படியானவை. இவ்வாறு கூறுவதன் மூலம் பரணியின் உணர்வுகளைக் களங்கப்படுத்துவதாக நினைக்கக்கூடாது.

பரணிக்கு நேர்ந்த அனுபவம் என்பது வருத்தத்திற்கு உரியதுதான். ஆயினும் ஓர் தென்னாசியாவைச் சேர்ந்தவன் என்பதற்காகத்தான் அவ்வாறு நடைபெற்றது என்று எண்ணுவது அவ்வாறான தாழ்வு மனப்பான்மையின் இன்னொரு வடிவம். சிலவேளைகளில் அதுவே காரணமாகவும் இருக்கலாம் என்பது மறுப்பதற்கில்லை.

குற்றவாளியைப் பிடிக்கும் போது முதலில் சந்தேகத்துடன்தான் பிடிக்கிறார்கள், பின்னர் அது தொடர்பாக விசாரித்து அதன் பின்னர் அது தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்படும். மற்றும் ஓர் குறிப்பிட்ட சுற்றாடலில் செய்யப்பட்ட குற்றங்கள் யாரால் செய்யப்படுகின்றன, அதற்கான காரணங்கள் என்ன என்பனவும் ஒருவரைச் சந்தேக் கண்கொண்டு பார்ப்பதற்கு உறுதுணையாகின்றன. சிலது வேண்டுமென்றே மேற்கொள்ளப்படுகின்றன என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதே!

Share this post


Link to post
Share on other sites

உண்மையில் கசப்பான வேதனையான அனுபவம்தான். என்ன செய்வது பரணி. மனதை திடப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

மனக்கசப்பான விடயங்கள் எனக்கும் புலத்தில் நடந்திருக்கு.

Share this post


Link to post
Share on other sites

புலம்பெயர் நாடுகளில் பரணிக்கு நடந்ததுபோல் சந்தேகக் கைதுகள் இன்னும் நிறையவே இடம்பெற இருக்கின்றன போல் தெரிகின்றது.

காரணம் முஸ்லீம்களின் மேற்கத்தைநாடுகளுக்கான பயங்கரவாத அத்சுறுத்தலாகும்.

அதிலும் பாக்கிஸ்தானின் மீது இப்போது அனைவரின் சந்தேகக்கண் திரும்பியுள்ளது போல் தெரிகின்றது.

நாமும் பாக்கிஸ்தானியர் உருவமைப்பில் இருப்பதால் சிலவேளைகளில் இந்த சந்தேக கைதுகள் தொடரலாம்.

Share this post


Link to post
Share on other sites

தவறாக கைதுசெய்துவிட்டோம். மன்னித்துகொள் என்று தோளில் தட்டி அனுப்பி வைத்தார்கள். நான் மௌமான வீடு வந்து விட்டேன். மறுநாள் காவல்துறை அலுவலகம் சென்று விளக்கமாக கூறி எனக்கு நியாயம் கேட்டேன். அவர்கள் உள்ளே அழைத்து காவல்துறை மேலதிகாரியுடன் சந்திக்க வைத்தாhர்கள். அவர் என்னை மன்னித்துக்கொள்ளுமாறு கூறினார். அன்றைய தினம் நான் வந்துகொண்டிருந்த இடத்தில் 5 திருடர்கள் ஆயுதங்களுடன் ஓடினார்களாம். தவறாக என்னை அவர்கள் என நினைத்து கைது செய்துவிட்டார்களாம். நான் விடவில்லை வாக்குவாதப்பட்டு அவர்கள் மூலமாகவே ஒரு மன்னிப்புக்கடிதமும் வாங்கி வந்தேன்.

என்ன பரணி , இதுக்கெல்லாம் யோசித்துக் கொண்டு ..........

காவல்துறையினர் தங்கள் கடமையை தானே செய்தார்கள் .

இந்தச் சம்பவம் , கசப்பாக இருந்தாலும் இரண்டு , மூன்று நாட்களில் நீங்களே மறந்து விடுவீர்கள் . :icon_mrgreen:

Share this post


Link to post
Share on other sites

கருத்து பகிர்ந்த உறவுகளிற்கு நன்றிகள்

மறக்கக்கூடிய நிகழ்வல்ல. அந்த கைதானது எனக்கு பழையவற்றை நினைவில் கொண்டு வந்து கொஞ்சம் கடினப்படுத்திவிட்டது.

ஒரு தடவை உள்ளே சென்று வந்தால் அது வாழ்நாள் முழுக்க வலியாகத்தான் இருக்கும்.

Share this post


Link to post
Share on other sites

கருத்து பகிர்ந்த உறவுகளிற்கு நன்றிகள்

மறக்கக்கூடிய நிகழ்வல்ல. அந்த கைதானது எனக்கு பழையவற்றை நினைவில் கொண்டு வந்து கொஞ்சம் கடினப்படுத்திவிட்டது.

ஒரு தடவை உள்ளே சென்று வந்தால் அது வாழ்நாள் முழுக்க வலியாகத்தான் இருக்கும்.

Share this post


Link to post
Share on other sites

உண்மைதான்

உங்கள் மனவலி எனக்கு புரிகிறது

ஏனெனில் இதோபோல் ஒரு நிலை எனக்கும் ஏற்பட்டது

அது 1983இல்

அது நான் படித்துக்கொண்டிருந்தநேரம்

எமது அறையில் தற்காலிகமாக வெளிநாடு செல்வதற்காக வந்து நின்று பயணமுகவரிடம் பணம் கட்டியவரை பயணமுகவர் ஏமாற்றிவிட்டார்

நாங்கள் போய் கேட்டதற்கு அவர் காவற்துறையில் போட்டுக்கொடுத்தார் எப்படித்தெரியுமா?

இன்ன இடத்தில் 5 புலி ஏற்கனவே இருக்கிறது இன்று இரவு இன்னும் சிலபுலிகள்புகையிரதத்தில் வந்திறங்கி மிகமுக்கியமான கூட்டம் நடைபெற இருக்கிறது என்று.

கிட்டத்தட்ட 500 காவல்துறையினர்முதலில் கோட்டைப்புகையிரதநிலையத்தில

Share this post


Link to post
Share on other sites

பரணி கசப்பான விடயம் தான். ஏதோ தவறுதலாக நடைபெற்றுள்ளது போல் தெரிகிறது. மன்னிப்பு கேட்டு மன்னிப்பு கடைதம் வேறு தந்துள்ளார்கள். ஆசிய நாடொன்றில் (பெரும்பாலான) மன்னிப்பு என்பது கிள்ளு கீரைக்கும் கிடையாத நிலையில் ஏதோ கொஞ்ச மனிதாபிமானமாது ஐரோப்பிய ,அமெரிக்க நாடுகளில் உள்ளது என்பதை எண்ணி பெருமை படுங்கள். நடந்தவற்றை மறந்து முன்நோக்கி போக வேண்டியது தான்.

Share this post


Link to post
Share on other sites

பரணி

ஏதோ தவறாக நடந்துள்ளது போலும்

இருந்தாலும் மனவேதனைதான்.

இங்கென்பதால் உயிரோடு தப்பினீர்கள்.

Share this post


Link to post
Share on other sites

உண்மையில் கசப்பான வேதனையான அனுபவம்தான். என்ன செய்வது பரணி. மனதை திடப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

மனக்கசப்பான விடயங்கள் எனக்கும் புலத்தில் நடந்திருக்கு.

ரெஸ்கோவில சொக்கிலேட் திருடினீங்களோ..??! இல்ல திருட்டு முழிமுழிச்சுக் கொண்டு வீதியில போற பொலீஸ்காரனைப் பார்த்தீங்களோ..??! :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.