Jump to content

இவர்கள் ராஜீவுக்காக அழ மாட்டார்கள் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் ராஜீவுக்காக அழ மாட்டார்கள் !

1991 ஆம் ஆண்டு ராஜீவின் கொலையின் பின்னான நாட்களில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி நடத்திய கொலை வெறியாட்டத்தையும், காலம் காலமாக அக்கட்சி நடத்திவரும் கொடுன்கோல் அரசியலையும் கண்டித்து எழுதப்பட்ட கவிதை இது. அண்மையில்த்தான் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இவர்கள் ராஜீவுக்காக

அழமாட்டார்கள்!

பரோவா. எகிப்திய மன்னன்.

தான் இறந்தவுடன் தனது பட்டத்தரசியையும்,

ஆசை நாயகிகளையும், மந்திரிப் பிரதானிகளையும்,

தனது ஆடை ஆபரணங்களையும்,

பொக்கிஷங்களையும், அடிமைகளையும்

தன்னுடன் சேர்த்துப் புதைக்கச் சொன்னான் அந்த மன்னன்.

பூவுலக வாழ்வைச்

சுவர்க்கத்திலும் தொடரவேண்டுமென்பது அவன் ஆசை.

ஆசை நிறைவேற்றப்பட்டது.

பிறகு அவனுடைய வாரிசுகளும்

அவனைப் போலவே ஆசைப்பட ஆரம்பித்தார்கள்.

அவர்களுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன.

இது பொய்யல்ல, புனை கதையல்ல – வரலாறு;

சாட்சி – எகிப்திய பிரமிடுகள்.

ராஜீவின் இறுதி ஆசையைப் பற்றி நமக்குத் தெரியாது.

ஒருவேளை

பரோவாவைப் போல ராஜீவும் ஆசைப்பட்டிருந்தால்,

நாமே அதை முன்னின்று நிறைவேற்றியிருக்கலாம்.

சிதைந்து, அழுகி நாட்டின் அரசியல் பண்பாட்டு அரங்கில்

நாற்றத்தையும், நோயையும் பரப்பியபடி

இறக்கவிருக்கும் காங்கிரசு என்னும்

அருவெறுக்கத்தக்க மிருகத்தை

அவ்வாறு அடக்கம் செய்ய வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

ஒரு வகையில் பரோவா நல்லவன்.

தனது அதிகாரக் குடையின் நிழலில் ஆட்டம் போட்டவர்கள்

தன்னுடன் சேர்ந்து அடங்குவதே நியாயம்

என்று கருதியிருக்கிறான் போலும்!

தன்னுடன் குடிமக்களையும் சேர்த்துப் புதைக்குமாறு

அவன் உயில் எழுதவில்லை;

ஊரைக் கொளுத்திவிடுமாறு

உத்தரவிட்டதாகத் தகவல் இல்லை.

ராஜீவின் இறுதி ஆசையைப் பற்றி நமக்குத் தெரியாது.

ஆனால், பீரங்கி வண்டியில் ராஜீவின் உடல் ஏறுமுன்னே

நாடெங்கும் பல அப்பாவிகளின் பிணங்கள்

பச்சை மட்டையில் ஏறியது தெரியும்.

ராஜீவின் சிதைக்கு ராகுல் தீ மூட்டும் முன்னே

‘தொண்டர்கள்’ ஊருக்குத் தீ மூட்டியது தெரியும்.

மறைந்த தலைவனுக்கு மரியாதை செய்யுமுகந்தான்

ஊரைச் சூறையாடியது தெரியும்.

இருப்பினும் பேசக்கூடாது.

மரித்தவர்களைக் குறை கூறுதல் மனிதப் பண்பல்ல;

கருணாநிதியைக் கேளுங்கள் விளக்கம் சொல்வார்.

இருபத்தொன்றாம் தேதி இரவு 10.19 வரை

“ஆட்சியைக் கவிழ்த்த சூழ்ச்சிக்காரன்,

கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிய கொள்ளைக்காரன்,

அக்கிரகாரத்தின் ஆட்சிக்கு அடிகோலும்

அவாளின் ஆள்”

ஆனால் 10.20-க்குப் பின் அமரர்,

அமரரைப் பழித்தல் தமிழ்ப் பண்பல்ல.

பாவத்தின் சம்பளம் மரணம்.

பாவமேதும் செய்யாதிருந்தும்

‘சம்பளம்’ பெற்றவர்கள் பற்றி….?

பேசக்கூடாது. இது கண்ணீர் சிந்தும் நேரம்.

உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.

ஆனால், கண்ணீர் சிந்தும் விஷயத்தில்

கருத்து வேறுபாடுகளை அனுமதிக்க இயலாது.

கண்ணீர் சிந்துங்கள். இல்லையேல்

கண்ணீர் சிந்த நேரிடும்.

சிரிக்காவிட்டால், சிறைச்சாலை;

கைதட்டாவிட்டால் கசையடி - இட்லரின்

ஆட்சியில் இப்படி நடந்ததாகக்

கேள்விப்பட்டிருக்கிறோம்.

அது பாசிசம்.

பேசாதே என்றால் பொறுத்துக் கொள்ளலாம்!

சிரிக்காதே என்றால் சகித்துக் கொள்ளலாம்,

அழாதே என்றால் அடக்கிக் கொள்ளலாம்.

ஆனால்

‘அழு‘ என்று ஆணை பிறப்பித்தால் அழ முடியுமா?

அச்சத்தில் பிரிவது சிறுநீர். கண்ணீரல்ல.

அடிமைச் சாம்ராச்சியத்தின் அதிபதி

பரோவா கூடத் தன் அடிமைகளுக்கு

இப்படியொரு ஆணை பிறப்பித்ததில்லையே!

ஆத்திரத்தையும் அழுகையையும் மட்டுமே

தன் மக்களுக்குப் பரிசாகத் தந்த

ஆட்சியாளனின் மறைவுக்கு

ஏன் கண்ணீர் சிந்த வேண்டும்?

அரசியல் சட்டக் காகிதங்களில் மட்டுமே இருந்த

உயிர் வாழும் உரிமையும்

தன் குடிகளுக்குத் தேவையில்லை என்று

கிழித்தெறிந்த கொடுங்கோலனின்

உயிர் பிரிந்ததற்காக

எதற்குக் கண்ணீர் சிந்த வேண்டும்?

இப்படியெல்லாம் கேட்கத்

தெரியாமலிருக்கலாம் மக்களுக்கு.

இருப்பினும் அவர்கள் கண்ணீர் சிந்தவில்லை.

புகழ் பெற்ற நான்கு உபாயங்களைத்

தலைகீழாகவே பயன்படுத்திப் பழகிய

எதிரிகள் – காங்கிரசுக்காரர்கள்

நான்காவது ஆயுதம் – தண்டம் -

தோற்றவுடனே மூன்றாவது ஆயுதத்தை

பேதம் – ஏவினார்கள். வீதிகள் தோறும்

சுடுகாடுகள். பயனில்லை. இரண்டாவது

ஆயுதம் – தானம் – பிரயோகிக்கப்பட்டது.

கூலிக்கு மாரடிக்கும் கூட்டம்

ஒலிபெருக்கிகளில் ஒப்பாரி வைத்தது.

மக்கள் கண்ணீர் சிந்தக் காணோம்.

முதல் ஆயுதம்

வன்மத்துடன் களத்தில் இறங்கியது.

ஒவ்வொரு வீட்டுக்குள்ளும்

வண்ணச் சுடுகாடு,

கறுப்பு வெள்ளைச் சுடுகாடு;

வானொலியில் முகாரி;

பத்திரிக்கைகளில் இரங்கற்பா…

“பார்… பார்… சிரித்த முகத்துடன்

எங்கள் தலைவனைப் பார்!

சூது வாது தெரியாமல்

மாலைக்குத் தலை நீட்டிய மன்னவனைப் பார்!

மக்களைத் தழுவ விரும்பியவன்

மரணத்தைத் தழுவிய கொடுமையைப் பார்!

அன்பு மனைவியும் அருமைச் செல்வங்களும்

அநாதையாக நிற்பதைப் பார்!

அமெரிக்க அதிபர் அழுகிறார்; ரசிய அதிபர் அழுகிறார்;

உலகமே அழுகிறது.

நீ மட்டும் ஏன் அழ மறுக்கிறாய்?

அழு… அழு…!”

அழுதார்கள்; அழுதீர்கள். அழுது

முடித்துவிட்டு அடுத்த வேலையைப்

பார்க்கலாம் என்று நகர்வதற்கு

இது ‘பாசமலர்’ அல்ல;

நீங்கள் அழுத பின்னால் அடுத்த வேலையை

அவர்கள் தொடங்குவார்கள்.

அவர்கள் கண்ணீரைக் கனியவைத்து

வாக்குகளாக்கும் ரசவாதிகள்.

உங்கள் கண்ணீர்த் துளிகளை மூட்டம்

போட்டிருக்கிறார்கள்.

காலம் கடந்துவிடவில்லை. கொஞ்சம்

சிந்தித்துப் பாருங்கள்.

இறந்தவரெல்லாம் நல்லவரென்றால்

இட்லரும் நல்லவனே.

கொலையுண்டவர்கள் எல்லாம் கோமான்களென்றால்

கொடுங்கோலன் என்ற சொல்லுக்கு

அகராதியில் இடமில்லை.

<!--[if !supportLineBreakNewLine]-->

<!--[endif]-->

நினைவிருக்கிறதா? இப்படித்தான்,

இப்படியேதான் நடந்தது

ஏழு ஆண்டுகளுக்கு முன்பும்.

கையில் கொள்ளியுடன்

தாயின் பிணத்தருகே தலைமகன்

உங்கள் வாக்குகளைக் கொள்ளையிட்டான்.

அந்த ஐந்தாண்டு அரசாட்சியைக் கொஞ்சம்

அசை போட்டுப் பாருங்கள்!

இந்த நேரு குலக்கொழுந்து, அபூர்வ சிந்தாமணி

அரியணை ஏறும்போதே

ஐயாயிரம் தலைகளைக் காவு வாங்கியதே

மறந்து விட்டீர்களா?

குப்பை கூளங்களைப் போல

அப்பாவிச் சீக்கியர்களின் உடல்கள்

குவித்து வைத்துக் கொளுத்தப்பட்டனவே!

அவர்களது சாம்பலுக்கு

அஸ்திக்கலசமும் திரிவேணி சங்கமமும் வேண்டாம்;

ஆறுதலாக ஒரு வார்த்தை…

சொன்னதா அந்த அரசு?

ஐயாயிரம் கொலைகள் – ஐம்பதாயிரம் அகதிகள்.

அகதிகள் பெரும்பான்மையோர்

கைம்பெண்கள், குழந்தைகள்.

பிழைப்பதற்காகச் சொந்த மண்ணை விட்டு வந்து

வியர்வையும், ரத்தமும் சிந்தி

ஆசையாகக் கட்டி வளர்த்த வாழ்க்கையை

ஒரே நாளில்

குதறி எறிந்தன காங்கிரசு மிருகங்கள்.

நீதி கிடைக்கும் நிவாரணம் கிடைக்கும் என

ஏழு ஆண்டுகள் காத்திருந்து

குழந்தைகளையும், துயரத்தையும் மட்டுமே சுமந்து

சொந்த மண்ணுக்குத் திரும்பினார்கள்

அந்த இளம் விதவைகள்.

இன்று சோனியாவுக்காகக் கண்ணீர் சிந்துபவர்கள்

இவர்களுக்கு என்ன பதில் சொல்கிறார்கள்?

கேளுங்கள்.

இந்திராவின் கொலையாளியைக் கண்டுபிடித்துத்

தூக்கிலேற்றியாகி விட்டது.

ஐயாயிரம் கொலைகளுக்கு

எத்தனை பேர் தண்டிக்கப்பட்டனர்?

தண்டிப்பது கிடக்கட்டும்; கொலையாளிகளைக்

கண்டுபிடிக்க கூட முடியாது என்று

கைவிரித்தார் ராஜீவ்.

நாடே காறி உமிழ்ந்த பின்

ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது.

“கண்டு பிடிக்க முடியவில்லை” –

கமிஷனும் அதையே சொல்லியது.

தூக்கிலேற்றப்பட வேண்டிய பிரதான குற்றவாளிகள்

ராஜீவின் தளகர்த்தர்கள் –

எச். கே. எல். பகத், ஜகதீஷ் டைட்லர்.

இன்று சோனியாவைப் பிரதமராக்க விழையும்

ராஜீவின் நண்பர்கள்.

அடுக்கடுக்காய் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன;

விளைவு, குற்றம் சாட்டியவர்களுக்குக்

கொலை மிரட்டல் வந்தது.

கமிஷன் கண்டுபிடித்த ஒன்றிரண்டு

கொலைகாரர்களின் பெயர்களையும்

அரசாங்க ரகசியமாக்கி

ஆணை பிறப்பித்தார் ராஜீவ்.

“இந்திரா நினைவு நாளோ,

குடியரசு தினமோ, சுதந்திர தினமோ எது வந்தாலும்

எங்களுக்கு நடுக்கமாக இருக்கிறது.

மீண்டும் தாக்கப்படுவோமோ என்று அச்சமாக இருக்கிறது.

அவர்கள் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டாம்;

“வருந்துகிறோம் என்று ஒரு வார்த்தைகூட

இன்று வரை அவர்கள்

வாயிலிருந்து வரவில்லையே”

அங்கலாய்த்தாள் ஒரு இளம்விதவை.

குடிமக்கள் நலம் பேணும் கொற்றவன் –

ராஜீவ் சொன்னார்.

“மரம் விழுந்தால் மண் அதிரத்தான் செய்யும்”.

சொன்ன மரமும் இப்போது விழுந்துவிட்டது.

டில்லி மாநகரமே கண்ணீர் விட்டுக்

கதறியது என்கிறார்களே,

அந்தச் சீக்கியப் பெண்களின்

கண்கள் கலங்கினவா என்று

விசாரித்துப் பாருங்களேன்.

போபால். இந்திய வரலாற்றின் மறைக்க முடியாத

தேசிய அவமானம்.

ராஜீவ் பதவிக்கு வந்தவுடனே

நடைபெற்ற பயங்கரப் படுகொலை.

ஒரே இரவில் பத்தாயிரம் பேரைப் பிணங்களாகவும்,

ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட உழைப்பாளி மக்களை

நடைப்பிணங்களாகவும் ஆக்கிய குண்டு வெடிப்பு;

அமெரிக்க இராணுவத்தின் விஷவாயுக் குண்டுக்கு

இந்தியாவில் நடத்திப் பார்த்த சோதனை.

இல்லை. உங்கள் நாட்டுத்

தொழிலாளிகளின் அலட்சியத்தால்

நேர்ந்த விபத்து இது என்றது

யூனியன் கார்பைடு.

ஆமோதித்தது ராஜீவ் அரசு.

“விஷ வாயுவைத் தயாரிக்க

உனக்கு உரிமம் கொடுத்தது யார்?” என்று

சீறினார்கள் இந்திய விஞ்ஞானிகள்.

காங்கிரசை ஓரக்கண்ணால் பார்த்துச்

சிரித்தது கார்பைடு.

ஆத்திரம் கொண்டு அமெரிக்க முதலாளிகளைத்

தாக்கத் துணிந்தது மக்கள் கூட்டம்.

முதலாளிகளுக்கு அரணாய் நின்றது

ராஜீவ் அரசு.

நீதி எங்கே, நிவாரணம் எங்கே என

அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்கு

தொடர்ந்தனர் மக்கள். நீதி கேட்பதும்,

நிவாரணம் பெறுவதும் “நீங்கள் தேர்ந்தெடுத்த”

எங்கள் அரசின் உரிமை என்று

அதையும் பிடுங்கிக் கொண்டது ராஜீவ் அரசு.

அந்தச் சுடுகாட்டின் நடுவில்

ஒரு சொர்க்கபுரியை நிறுவி

அதில் கவியரங்கம் நடத்தியது;

களியாட்டம் போட்டது.

ஆறு ஆண்டுகள் கடந்து விட்டன.

இறந்தவர்கள் மறக்கப்பட்டார்கள்.

இருப்பவர்களோ குருடரானார்கள், முடமானார்கள்.

பிறப்பவையும் சப்பாணிகள், சதைப் பிண்டங்கள்.

போபால் அழுது கொண்டிருக்கிறது.

அதன் கண்ணீருக்கு ராஜீவின்

மரணம்தான் காரணமோ?

கேட்டுத்தான் பாருங்கள்.

பதில் சாட்டையாய் உரிக்கும் – அது ராஜீவின்

மரணம் தோற்றுவித்த கண்ணீரல்ல,

துரோகம் தோற்றுவித்த கண்ணீர்.

ஆனால், ஸ்ரீபெரும்புதூரில் குண்டு வெடித்தவுடனே

வெடிக்கிறார்கள் காங்கிரசுக்காரர்கள்.

“நன்றி கொன்றவர்கள், எங்கள் தலைவனைக்

கொன்று விட்டார்கள்! நயவஞ்சகர்கள்,

முதுகில் குத்திவிட்டார்கள்!

ஒவ்வொருவரையும் சோதனை போடுங்கள்!

எல்லோரையும் விரட்டுங்கள்!

ஈழத்தமிழன் எவனையும் நம்ப முடியாது!”

ஈழத் தமிழினத்திற்குத் துரோகத் தமிழினம்

என்று பெயர் சூட்டுகிறார்கள்.

யார் துரோகி? எவன் நயவஞ்சகன்?

விடுதலைப் போராளிகளைக்

கூலிப் பட்டாளமாக உருமாற்றியது யார்?

ஆதரவுக் கரம் என்று நம்பியவர்கள்

மத்தியிலே ஐந்தாம் படையை

உருவாக்கியது எந்தக் கை?

முகத்தில் சிரிப்பும், கைகளில் இனிப்புமாக

வரவேற்ற ஈழத்தைப் பெண்டாள முனைந்தது

யாருடைய ஆட்சி?

புறாக்களைக் காட்டி ஏமாற்றிக்

கழுகுகளைப் பறக்கவிட்டு அமைதியை

நிலைநாட்டியது யாருடைய படை?

“ஆத்தாள் சிக்கிம் வென்றாள், மகன்

ஈழம் கொண்டான்” என்று

கல்வெட்டில் பொறித்துக் கொள்வதற்காக

பாக். ஜலசந்தியில் குறுக்கு மறுக்காக

அடித்து விளையாட

ஈழத்தமிழன் என்ன பூப்பந்தா?

எது துரோகம்? யார் துரோகிகள்? ஆனந்த

பவனத்திலும், சத்தியமூர்த்தி பவனத்திலும்

பொருள் கேட்காதீர்கள்.

யாழ்ப்பாண மக்களிடம் கேளுங்கள்.

துரோகம் என்ற

சொல்லின் பொருள் ராஜீவ் என்பார்கள்;

வங்காள தேசத்தில் கேளுங்கள் – இந்திரா

என்று விளக்குவார்கள்;

பஞ்சாபில் விசாரித்துப் பாருங்கள் – மோகன்தாஸ்

கரம்சந்த் என்று வரலாறு சொல்வார்கள்

பகத்சிங்கின் வாரிசுகள்.

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, கரம்சந்த் காந்தி –

ஒரே சொல்லுக்கு

ஒவ்வொரு இடத்திலும் ஒரு பொருள்!

ஆனால், வேற்றுமையிலும் ஒரு ஒற்றுமை -

துரோகம் என்றால் காந்தி!

சோரத்தில் பிறந்து

துரோகத்தில் வளர்ந்த தங்கள் கட்சித்

தலைவனுக்காக உங்களைக்

கண்ணீர் சிந்தக் கோருகிறது.

சிந்தியுங்கள்!

தள்ளாத வயதில் ‘தலாக்’ என்று

கணவனால் தள்ளிவைக்கப்பட்ட ஷாபானு

என்ற முசுலீம் பெண்ணைக் கேளுங்கள்.

தான் போராடிப் பெற்ற நீதியை ஒரே நொடியில்

ராஜீவ் கொன்று புதைத்த கதையைச் சொல்வாள்.

திமிர் பிடித்த கணவனுடனும்,

வெறி பிடித்த முல்லாக்களுடனும்

சேர்ந்து கொண்டு ராஜீவ் தனக்கிழைத்த

கொடுமையைச் சொல்லி அழுவாள்.

ஊன்றிக் கவனியுங்கள்.

அவள் மட்டுமல்ல; பர்தாவுக்குள்ளே

முகம் புதைத்த இசுலாமியப் பெண்கள் பலர் விசும்புவதும்

கேட்கும்.

அயோத்தி நகர மக்களைக் கேளுங்கள்.

அவர்கள் சீந்தாமல் ஒதுக்கி வைத்த

பாபர் மசூதிப் பிரச்சினையை

ராஜீவ் தூண்டிவிட்ட கொடுமையைச்

சொல்லி அழுவார்கள்.

அருண் நேருவிடம் தனியே

விசாரித்துப் பாருங்கள். கோர்ட்டில்

உறங்கிக் கிடந்த வழக்கைத் தூசு தட்டி எடுத்து

மசூதியின் பூட்டைத் திறந்துவிட்டு

‘இந்து’ ஓட்டைப் பிடிக்கத்

தானும் ராஜீவும் போட்ட திட்டத்தைக்

குதூகலமாய் வர்ணிப்பார்.

ராஜீவின் உடலடக்கத்திற்கு வந்திருந்த

அமிதாப்பையும் வராத இந்துஜாவையும்

கேட்டுப் பாருங்கள்.

பீரங்கிப் பேரக் கமிஷனை ஒளிக்க

‘உடுக்கை இழந்தவன் கை போல’ வந்து உதவிய

திருவாளர் பரிசுத்தத்தை நாவாரப் புகழ்வார்கள்.

கவச குண்டலம் போல ராஜீவை

விட்டுப் பிரியாதிருந்த அவரது

மெய்க்காவலர்களைக் கேளுங்கள்;

தண்டி யாத்திரை என்ற பெயரில்

ராஜீவ் நடத்திய கோமாளிக் கூத்தைச்

சொல்லிச் சிரிப்பார்கள்;

துப்பாக்கியைச் சட்டைக்குள் ஒளித்து

கதர்க்குல்லாய் மாட்டிக் கொண்டு

காங்கிரசுத் தியாகிகளாகத் தாங்கள் அவதாரம்

எடுத்ததைச் சொல்வார்கள்; ஒருமைப்பாட்டு ஓட்டத்தில்

தாங்களும் விளையாட்டு வீரர்களாக உருமாறி

ஓடிய கதையைச் சொல்வார்கள்.

ராஜீவின் பாதம் பட்ட இந்திய நகரங்களின்

மக்களைக் கேளுங்கள்.

அவரது பாதுகாப்பை உத்தேசித்துச்

சிறையிலடைக்கப்பட்ட தொழிலாளிகளை,

நடைபாதை வியாபாரிகளை, இளைஞர்களை

ஆயிரக்கணக்கில் அடையாளம் காட்டுவார்கள். அவர்களில்

எத்தனைப் பேர் ராஜீவின் மரணத்திற்காகக்

கண் கலங்கினார்கள் என்று கேட்டுத்

தெரிந்து கொள்ளுங்கள்.

மணி சங்கர் ஐயர், சுமன் துபே, ராஜீவ் சேத்தி,

சாம் பித்ரோடா, சதீஷ் சர்மா, எம். ஜே. அக்பர்… ராஜீவின்

நண்பர்களாகவும், ஆலோசகர்களாகவும்

இருந்த இந்த மேட்டுக்குடிக்

குலக் கொழுந்துகளைக் கேளுங்கள்.

கலாச்சாரத் திருவிழா, கம்ப்யூட்டர் மயமாக்கல்,

இருபத்தொன்றாம் நூற்றாண்டை விரட்டிப் பிடித்தல் -

எத்தனை கனவுகள்!

இதமான மாலை நேரங்களிலும், கிளர்ச்சியூட்டும்

பின்னிரவுகளிலும் நட்சத்திர விடுதிகளில் அமர்ந்து

இந்தியாவின் எதிர்காலத்தைத் திட்டமிட்டதை

அவர்கள் நினைவு கூறுவார்கள்.

அவர்களது கண்கள் பனித்திருக்கும் –

பிரிவாற்றாமையினால் அல்ல;

தங்களின் எதிர்காலம் இருண்டு விடுமோ

என்ற அச்சத்தினால்.

எதை நினைவுபடுத்துவது? எதை விடுவது?

ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில்

இத்தனை அநீதிகளை

இழைக்க முடியுமா?

அதிர்ச்சியாயிருக்கிறது.

கொடுங்கோன்மைக்கு இரையானவர்கள்

கோடிக்கணக்கானோர்,

வகைக்கு ரெண்டு எழுதினால் கூட

வளர்ந்து கொண்டே போகிறது.

இன்னும் சொற்களில் அடக்க முடியாத

சோகங்களைக் காண வேண்டுமெனில்

காஷ்மீருக்கும் பஞ்சாபுக்கும்

அஸ்ஸாமிற்கும் சென்று பாருங்கள்.

இறந்தவர்கள் கதையை நான் கூறலாம் –

இன்னும் உயிரோடிருப்பவர்களை

நீங்களே விசாரித்தறியலாம்.

கருப்பு வெள்ளையில்

அச்சாகிக் கிடக்கும் வரலாற்றைப்

புரட்டிப் பார்க்கலாம்.

எதுவும் இயலாவிட்டால் உங்கள்

வாழ்க்கையையே உரைத்துப் பார்க்கலாம்.

அதன் பிறகு முடிவு செய்யலாம் – ராஜீவின் மரணத்திற்குக்

கண்கலங்குவது சரியா என்று!

நன்றி புதிய கலாச்சாரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆச்சரியமான தகவல்கள் ரகு. இணைப்பிற்கு நன்றி. நான்கு ஆண்டுகள் முன்பு, சீக்கியரான என் அறைத்தோழன் இதையே தான் சொன்னான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லூரின் வீதியிலே டாங்கி

ஏற்றி கொண்டவனே நீயும் எல்லாம் மனிசனாடா..

மனித நேயம் பேசினாயோடா..

உன்னை கொண்டததுசரியடா.... :(:(

கவிதை அருமை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ் எனும் முதலாளிப் பெருச்சாளிகளின் கட்சி சிறுபான்மையினத்தவர்களுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லூரின் வீதியிலே டாங்கி

ஏற்றி கொண்டவனே நீயும் எல்லாம் மனிசனாடா..

மனித நேயம் பேசினாயோடா..

கவிதை அருமை...

நன்றி ரகுநாதன் அவர்களே,

முன்பொருமுறையும் வாசித்திருக்கின்றேன். ஏன் இதெல்லாம் இந்தியமக்களுக்குத்தெரியாதா? தமிழக மக்கள் அறியமாட்டார்களா? "எப்படியெல்லாம் இவர்கள் ஆட்சி இருந்திருக்கிறது என்று பின்பும் ஏன் 'காங்கிரஸ்" இன் பிடியிலேயே இருக்கிறது நாடு?!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:( தமிழ்த்தங்கை,

ஏனென்றால், இந்தியா என்கிற போலித் தேசியவாத ஒருமைப்பாட்டுக்குள் அள்ளுப்பட்டுப் போயிருக்கும் தமிழக மக்கள் இதையெல்லாம் இவ்வளவுகாலமும் உணரவில்லை. இப்போதுதான் சிலர் தெளிவுடன் பேசுகிறார்கள், அல்லது தெளிவோடு பேச அனுமதிக்கப்பட்டிருக்கிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ரகுநாதன் அவர்களே,

முன்பொருமுறையும் வாசித்திருக்கின்றேன். ஏன் இதெல்லாம் இந்தியமக்களுக்குத்தெரியாதா? தமிழக மக்கள் அறியமாட்டார்களா? "எப்படியெல்லாம் இவர்கள் ஆட்சி இருந்திருக்கிறது என்று பின்பும் ஏன் 'காங்கிரஸ்" இன் பிடியிலேயே இருக்கிறது நாடு?!!!

காங்கிரஸ் தன்னை இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கித் தந்த கட்சியாக இன்னும் அடையாளப் படுத்தி அதில் வெற்றியும் பெற்று வருவது தான் இதற்குக் காரணம். இடையிடையே அனுதாப அரசியலையும் தன் வெற்றிக்குப் பாவிப்பதுண்டு. ஆனால் (ஆதிகால) காங்கிரஸின் நிலைப்பாடுகள் எப்படி இந்தியாவை இந்த நிலைக்குக் கொண்டு வந்தன, ஏன் பாகிஸ்தான் தனியாகப் பிரியக் காரணமாயின என்று அறிய விரும்புவோர் வாசிக்க வேண்டிய நூல்: "Freedom at Midnight"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காங்கிரஸ் தன்னை இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கித் தந்த கட்சியாக இன்னும் அடையாளப் படுத்தி அதில் வெற்றியும் பெற்று வருவது தான் இதற்குக் காரணம். இடையிடையே அனுதாப அரசியலையும் தன் வெற்றிக்குப் பாவிப்பதுண்டு. ஆனால் (ஆதிகால) காங்கிரஸின் நிலைப்பாடுகள் எப்படி இந்தியாவை இந்த நிலைக்குக் கொண்டு வந்தன, ஏன் பாகிஸ்தான் தனியாகப் பிரியக் காரணமாயின என்று அறிய விரும்புவோர் வாசிக்க வேண்டிய நூல்: "Freedom at Midnight"

அந்த நூல் எங்கு கிடைக்கும் ஜஸ்டின் அவர்களே,

மூடப்பழக்க வழக்கங்களுக்கும் வெறும் போலிப்பேச்சுக்களுக்குள்ளும

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.