Jump to content

பெரியார் ஈ.வெ.ராமசாமி நினைவு நாள் - டிச. 24.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெரியார் ஈ.வெ.ராமசாமி நினைவு நாள் - டிச. 24.

aablt6.png

ஈ.வெ.ராமசாமி (1879-1973): தந்தை பெரியார் என அழைக்கப்பட்ட ஈ.வெ.ராமசாமி செப்.17ல் ஈரோட்டில் பிறந்தார்.

ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்து இவர் தாம் வகித்த ஈரோடு நகராட்சி தலைவர் பதவியைத் துறந்தார். வைக்கத்தில் தீண்டாமை போராட்டம் நடத்தினார். சமூக விடுதலை, சீர்திருத்தம் ஆகியவற்றுக்காக இவர் தீவிரமாகப் போராடினார். பகுத்தறிவுக் கொள்கை உடைய இவர் கருப்புச் சட்டை அணிவார். டிச.24ல் இவர் மறைந்தார்.

Link to comment
Share on other sites

தனது 95 வயது வரை ஒரு கருத்துருவாக்கத்தை உருவாக்க பாடு பட்டு, பல உண்மைகளை தமிழர்களுக்கு சொன்னதில் பெரியாரின் பாங்கு தனியானது...

இண்று தமிழகத்தில் இருக்கும் பல கட்சிகளின் அந்தாதியே ஈ வே ரா தான்... ஆனால் அவரினால் வளர்க்க பட்டவர்கள் நயவஞ்சகமாக அவரின் முதுகில் குத்தி வளர்ந்து பிரிந்து சென்றார்கள் என்பது உண்மையானாலும், பிறிது பல கருத்துரு வாக்கிகளை(மனித) உருவாக்கிய அடிப்படை ஊற்று ஈ வே ராவிடம் இருந்து வந்தது என்பது தான் உண்மை...

தனது வாழ்நாள் முழுமையையும் ஒரு கொள்கை வீரராக வாழ்ந்து மடிந்து போன அவரை நினைவு கொள்வதோடு, அவரிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய பல விடயங்களை நினைவு கொள்ள வேண்டியதும் கடமை ஆகும்..

அவரின் வளித்தடம் தொடர்வோர் பலர் அவரின் நினைவு தினத்தை மறந்து விட்டனர்.. ஒரு அஞ்சலியை கூட வா எழுத கூடாது..?? ( ஒருவேளை வீட்டிலை புகைப்படம் வைத்து கும்பிடுவிங்களோ என்னவோ..??))

ஈ வே ரா வின் கடைசி நடவடிக்கை குறிப்பு-

19.12.73இல் சென்னை தியாகராயநகர் சிந்தனையாளர் மன்றம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், தனத இறுதிப் பேருரையை நிகழ்த்தினார். உடல்நலம் இன்றி 20.12.73 பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை அரசினர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 21.12.73 பிற்பகல் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 23.12.73 மாலை கவலைக்கிடமான நிலையை அடைந்து இரவு 11 மணிக்குப் பிறகு நினைவு இழந்த பெரியார் 24,12.73 பிற்பகல் 3 மணி வரை ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டது. அன்று பிற்பகல் 3.10மணிக்கு அரசு மரியாதையுடன் இறுதி ஊர்வலம் புறப்பட்டு 4.45 க்கு பெரியார் திடலை அடைந்தது. மாலை 5.05 மணிக்கு தந்தை பெரியாரின் உடல் ‘நெஞ்சில் வைத்த முள் எடுக்கப்படாமலேயே’ புதை குழியில் இறக்கப்பட்டது.

அவர் எழுதி நிறுத்திய தன்மான வரலாற்றின் அடுத்த அத்தியாத்தைத் தமிழகம் இன்னும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறது.

http://www.periyarevr.org/cgi-bin/Details....u&cCount=56

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் கிருபன், தயா,

தங்களுடைய பெரியார் நினைவு தின அஞ்சலி மடல்--—நன்றியோடு வாழ்த்துக்கள்.

ஈ வே ரா பெரியார் மக்களால் வணங்கப்படவேண்டியவர். பெரியார் ஒரு மனித தெய்வம். பெரியார் மக்களின் சிந்தனையில் தெளிவை உருவாக்கி பக்க வாட்டாக சிந்திக்க வைத்தார். மூட நம்பிக்கைகளில் மூழ்கி இருக்கும் மனிதர்களுக்கு உலகில் உண்மை எது, கற்பனை எது, பொய் எது என்பவற்றை மிகவும் எளிய பாண்பில் பரப்பினார். விஞ்ஞான உலகில் பெரியார் வழி வாழ்வது பகுத்தறிவு உடையவர்கள் என்பது முற்றிலும் உண்மை.

இன்று “”திராவிட”” என்ற சொல்லைப் பாவித்து எத்தனை அரசியல் கட்சிகள்? இவை எல்லாம் பெரியார் வழி வந்தவைதான்.

நன்றி வணக்கம்

சாண்டில்யன்

Link to comment
Share on other sites

ஈ வே ரா பெரியார் மக்களால் வணங்கப்படவேண்டியவர். பெரியார் ஒரு மனித தெய்வம்.

தமிழனுக்கு புத்தி சொல்ல புறப்பட்ட பெரியாருக்கு இது தேவைதான்! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

QUOTE (Sandilyan @ Dec 26 2008, 06:02 AM)

ஈ வே ரா பெரியார் மக்களால் வணங்கப்படவேண்டியவர். பெரியார் ஒரு மனித தெய்வம்.

அவர் ஒரு அவதாரம்......புத்தரின் மறு அவதாரம் ....பெரியாருக்கு அரோகரா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:rolleyes: பெரியார் தாத்தாவையும் கடவுளாக்கிட்டீங்களா??????????????????? அதுசரி..................

நானும் அப்ப சொல்லுறன்................... பெரியாருக்கு அரோகரா...........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றி கிருபன், தயாண்ணா

^_^:o:icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவலையாக இருக்கின்றது. செத்த பாம்பைப் போய் அடிக்கின்றோம் என்று....

ஒரு தெரிந்த களவுறவு சொன்னார்.. கடவுளை நம்புகின்றவன், பார்பானியையாவது வாழ வைக்கின்றான். கடவுளை நம்பாதவன் யாரை வாழ வைக்கின்றன் என்று... எனக்கும் பதில் தெரியவில்லை...

திராவிடக் கொள்கை என்பது என்பது எனக்கு வெறுப்பு ஏற்பட்டமைக்கு காரணம், சமூகத்தினை எதிர்ப்பது மட்டுமே கொள்கையாகக் கொண்டிருந்தால் தான்.ஒரு விடயம் செய்தால் அதை அதே பாணியில் எதிர்ப்பது தான் சமூகக் கொள்கையா? பகுத்தறிவா??

இப்படங்களை சமர்ப்பிப்பதன் நோக்கம், இதை விவாதப்பொருளாக்க வேண்டும் என்ற நோக்கமல்ல. இப்படம் கிடைத்துப் பல நாட்களாகியும் இணைப்பதா, வேண்டாமா என்று குழம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் இதைச் செய்பவர்கள், பெரியார் திராவிடர் கழகத்தினர். அதனால் தேவை ஏற்படுகின்றது.

இங்கே சபேசன் கடவுள் ஆக்காதீர்கள் என்கின்றார். ஆனால் இவர்கள் ஒரு வகையில் கடவுளுக்கு நிகராக வைத்து வழிபாடு செய்கின்றனர். கடவுள் இருக்கின்றார் என்று எப்படி உணர்வுபூர்வமாக வழிபடுகின்றனரோ, அவ்வாறே கடவுள் இல்லை என்று உணர்வுபூர்வ வழிபாடே இது..

தூக்குக்காவடியைப் பார்த்தபோது சன்னதிக் கோவில் ஞாபகங்கள் மனத்தில் வருகின்றன..

பார்த்துச் சந்தோசப்படுங்கள்...

அரோகரா...

emcpocwbibx8bncc8k31.jpg

3jqvxravk2kbn58ypq.jpg

uzxzi6w5s6jdn87jrr9k.jpg

oifx06flvxb8rxtbnbb.jpg

zzsqm4grrp5f6iesxifp.jpg

Link to comment
Share on other sites

இவங்களுக்கு வேற வேலை இல்லை.. கம்பிகளைக் குத்தி காவடி எடுக்கிற நேரம்.. ஒரு வீதியைத் துப்பரவு செய்தாலாவது 'பெரியார் ஏதோ சொன்னமாதிரி இருக்கே'ன்னு சனம் திரும்பிப் பார்க்கும்.. கடவுளை மாதிரி பெரியாருக்கும் ஒரு சிலை.. ஒரு மாலை.. வேட்டி சால்வைக்குப் பதிலா ஒரு கறுப்புச் சேட்டு.. புதுசா சிந்திக்கத் தெரியாதவனுகதான் 'பகுத்தறிவு'பற்றி முழங்கிறாங்களாக்கும்.. :lol:

அது சரி.. ஒரு கோயிலள்ளயும் கேணியைக் காணேலை.. ஒன்று கட்டலாம் எண்டு நினைக்குறன்.. தோண்ட ஆர் வாறியள்?! :huh::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்,

ஆமாம், பகுத்தறிவில்லாதவர்கள்தான், புலம் பெயர்ந்த நாடுகளில், கடவுள் என்ற பெயரில் ஏகப்பட்ட ஆலயங்களைக் கட்டி, அதை ஒரு வியாபார ஸ்தலமாக்கி, மக்களை ஏமற்றிக்கொண்டிருக்கின்றார்

Link to comment
Share on other sites

படங்களை இணைத்ததற்கு நன்றிகள் தூயவன்

இந்தப் படங்களில் நீங்கள் காண்பது பெரியார் இயக்கத்தின் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களில் ஒன்று. இது மிகச் சரியானது என்பது என்னுடைய கருத்து.

அலகு குத்தவது, தீ மிதிப்பது போன்றவைகள் கடவுளின் அருளால்தான் நடைபெறுகின்றன என்பது பலருடைய நம்பிக்கை. விரதம் இருந்து, அனைத்துவிதமான அனுட்டானங்களை செய்தவர்களால்தான் இவற்றை செய்ய முடியும் என்று பலர் நம்புகின்றனர்.

எல்லோராலும் இப்படி அலகு குத்துவது போன்றவற்றை செய்ய முடியாது, பக்தியோடு கடவுளின் துணையோடுதான் செய்ய முடியும் என்று கடவுள் நம்பிக்கையாளர்கள் கருதுகின்றார்கள்.

இங்கே பாருங்கள்!

கடவுள் இல்லை என்று எழுதிக் கொண்டும், மேலாடைகளோடும், எந்த விரதங்களையும் பிடிக்காமல், அலகு குத்தியபடி நிற்கின்றார்கள்.

கடவுள் இல்லை என்ற பரப்புரையை பாமர மக்கள் புரியும்படி செய்யக் கூடிய மிகச் சிறந்த பரப்புரை வடிவம் இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓரிரு மாதங்களுக்கு முன்னர் பிரித்தானிய தொலைக்காட்சியில் இந்தியாவைப் பற்றிய நிகழ்ச்சி ஒன்றில் இத்தகைய காட்சிகள் போனது. கடவுள் இல்லை என்பதை மக்களுக்கு உணர்த்த கறுப்புச் சட்டைக்காரர்கள் இதுபோல பல விடயங்களைச் செய்து காட்டினார்கள். ஓரிடத்தில் கோயிலுக்கு முன்னர் தங்கள் பிரச்சாரங்களைச் செய்யும்போது கோயில் பரிபாலகர் கோபத்தில் திட்டுவதும் ஒளிப்பதிவாகி இருந்தது.

கண்ணால் காண்பதும், காதால் காட்பதும் மெய்யாகாது. தீர விசாரிக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

படங்களை இணைத்ததற்கு நன்றிகள் தூயவன்

இந்தப் படங்களில் நீங்கள் காண்பது பெரியார் இயக்கத்தின் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களில் ஒன்று. இது மிகச் சரியானது என்பது என்னுடைய கருத்து.

அலகு குத்தவது, தீ மிதிப்பது போன்றவைகள் கடவுளின் அருளால்தான் நடைபெறுகின்றன என்பது பலருடைய நம்பிக்கை. விரதம் இருந்து, அனைத்துவிதமான அனுட்டானங்களை செய்தவர்களால்தான் இவற்றை செய்ய முடியும் என்று பலர் நம்புகின்றனர்.

எல்லோராலும் இப்படி அலகு குத்துவது போன்றவற்றை செய்ய முடியாது, பக்தியோடு கடவுளின் துணையோடுதான் செய்ய முடியும் என்று கடவுள் நம்பிக்கையாளர்கள் கருதுகின்றார்கள்.

இங்கே பாருங்கள்!

கடவுள் இல்லை என்று எழுதிக் கொண்டும், மேலாடைகளோடும், எந்த விரதங்களையும் பிடிக்காமல், அலகு குத்தியபடி நிற்கின்றார்கள்.

கடவுள் இல்லை என்ற பரப்புரையை பாமர மக்கள் புரியும்படி செய்யக் கூடிய மிகச் சிறந்த பரப்புரை வடிவம் இது.

அப்படி கருதுபவர்கள் கடவுள் நம்பிக்கையாளர்கள் அல்ல.. மூட நம்பிக்கையாளர்.. உங்க கருத்துப்படி பார்த்தால்.. காது குத்துவது மூக்கு குத்துவது எல்லாம் கடவுள்செயல் என ஆஸ்திகர்கள் நம்புகிறார்கள் என்பதுபோலிருக்கிறதே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி கருதுபவர்கள் கடவுள் நம்பிக்கையாளர்கள் அல்ல.. மூட நம்பிக்கையாளர்.. உங்க கருத்துப்படி பார்த்தால்.. காது குத்துவது மூக்கு குத்துவது எல்லாம் கடவுள்செயல் என ஆஸ்திகர்கள் நம்புகிறார்கள் என்பதுபோலிருக்கிறதே..

:lol: இப்போது தான் உடல் முழுவதும் குத்துகின்றார்களே அவர்கள் எல்லோரும் ஆத்திகவாதிகள் போலும்.

தீ மிதிப்பதோ, காவடி ஆடுவதோ கடவுள் செயல் என்று யாரும் சொல்லிக் கொண்டு திரிவதில்லை. தங்களைத் தானே வருத்திக் கொள்வது மட்டுமே. விரதம் இருப்பதும், கூட அவ்வகையில் அமைந்த ஒன்றே தவிர, அது எல்லாம் கடவுளின் செயல் என்று இவர்கள் நம்பினால் யார் முடநம்பிக்கையாளர், தெளிவற்றோர் என்பது புரியும்..

தீ மிதிப்பதும், காவடி ஆடுவதும் கடவுளுக்குப் பயந்து கொண்டு எல்லோரும் செய்கின்றார்களா? தங்களை வருத்த நினைப்பவர்களும், வேண்டுதல்கள் செய்பவர்கள் மட்டும் தானே செய்கின்றார்கள். அது சரியா, தவறா என்பது வேறு விவாதம். ஆனால் அது கடவுளை நம்புகின்றவனால் தான் முடியும் என்று யாரும் சொல்லிக் கொள்வதில்லை. கடவுளின் பெயரைச் சொல்லித் தன்னைத் தானே வருத்துகின்றார்கள்.

விட்டால் விரதம் இருப்பவர்களும் கடவுளால் தான் முடியும் என்று சொல்வதாக நிருபிப்பார்கள் போலிருக்கே.

கடைசிப்படத்தில் அன்னதானம் கொடுப்பது தெரிகின்றது. ஆத்திகர் மட்டும் தான் அன்னதானம் கொடுப்பார்கள் என்று யாராவது சொல்லித் தொலைத்தார்களோ என்னமோ??

Link to comment
Share on other sites

பெரியாரைப் பத்தி பேசியே வயிறு வளர்க்கிற கூட்டம்.

அவர் சொன்னதில் கொஞ்சம் செஞ்சாலும் பெரியார் பெயர் வாழும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓரிரு மாதங்களுக்கு முன்னர் பிரித்தானிய தொலைக்காட்சியில் இந்தியாவைப் பற்றிய நிகழ்ச்சி ஒன்றில் இத்தகைய காட்சிகள் போனது. கடவுள் இல்லை என்பதை மக்களுக்கு உணர்த்த கறுப்புச் சட்டைக்காரர்கள் இதுபோல பல விடயங்களைச் செய்து காட்டினார்கள். ஓரிடத்தில் கோயிலுக்கு முன்னர் தங்கள் பிரச்சாரங்களைச் செய்யும்போது கோயில் பரிபாலகர் கோபத்தில் திட்டுவதும் ஒளிப்பதிவாகி இருந்தது.

கண்ணால் காண்பதும், காதால் காட்பதும் மெய்யாகாது. தீர விசாரிக்கவேண்டும்.

கடல் கடந்து தமிழன் மானத்தைப் பறக்க வழி செய்தார்களோ?

இவர்களாக மற்றவர்களைச் சீண்டுவார்கள். அவர்களின் குடும்பத்தையும், சுற்றத்தினரையும் எவ்வளவு தூரம் அசிங்கமாகப் பேச முடியுமோ அவ்வளவு பேசிக் கோபத்தை வர வைப்பார்கள். அதற்கு இப்படி ஏதும் தொ.காட்சிப் பதிவுகள் கிடைக்கவிட்டால் தமிழனுக்கு உணர்வை ஏற்படுத்தினேன் என்று மார்தட்டியும் கொள்வார்கள்.

படம், யாரால், எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற விபரம் தெரியும். வேறு ஏதாவது விசாரிக்க வேணுமா கிருபன்??

எனக்கொரு சந்தேகம். குறைந்த வயதில் இறப்பதை விரைவில் இறைமுக்தி பெற்றவர்கள் என்றே இந்து மதம் சொல்கின்றதாம். அதாவது அதிக பாவம் செய்யதாவர்களைக் கடவுள் அழைத்திடுவார் என்று தங்களைத் தாங்களே சமாதானம் செய்து கொள்வார்கள்... ஏன் இதைப் பொய் என்று யாரும் நிருபிக்கக்கூடாது....

Link to comment
Share on other sites

ஆடடா... பெரியார் என்ன எல்லாம் நிறைய நல்ல விடயங்களை சொல்லி இருந்தாலும் அவர் சொன்ன கடவுள் மறுப்பை மட்டும் எடுத்து வைத்து கொண்டு வௌவால் மாதிரி தொங்கிறது நல்லதாகவா இருக்கு...!!

பெரிசு.. சமூக புரட்சியை கொண்டு வர பாடு பட்டு மக்களை பொருளாதாரத்தால் கட்டி எழுப்பி தன்னிறைவு காண வைத்து விடலாம் எண்று கனவு கண்டார்... அதுக்கு தடையாக மக்களின் ஏற்றத்தாள்வு நிலைகள் பெரியாருக்கு தடையாக இருந்தமையால் அதையும் களைய குரல் கொடுத்தார்... ஏற்ற தாள்வுகளுக்கு மதத்தின் பெயர் அடிபட்டதால் மதத்தையும் எதிர்த்தார் பெரியார்.. இதுதான் பெரியாரின் வாழ்க்கை சுருக்கம்...!!

தனது சமூக புரட்ச்சிக்கும் , இழிநிலை மீட்ச்சிக்கும் பெரியார் இட்ட பெயர் சுயமரியாதை ( பகுத்தறிவு எண்று மாற்றி கொண்டார்கள்) அதில் கடவுள் மறுப்பு என்பது அவர் செய்த வேலைகளில் வெறும் 10% வீதம் மட்டுமாகத்தான் இருக்கும்...!!

அப்படியான பெரியாரில் வெறும் கடவுள் மறுப்பை மட்டும் எடுத்து கொண்ட சிலர் சொல்லும் பெரியாரிசம் என்பது வெரும் புரளி நிறைந்த மாயை...

சமதர்ம வாதியான பெரியாரை பலருக்கும் பிடிக்காமல் போனதுக்கும் அவரின் பெயரை சிலர் கடவுள் மறுப்புக்கு மட்டும் உபயோகிப்பதுதான்...

பெரியாரின் கொள்கை கடவுள் மறுப்பு அல்ல.. சமூக வழர்ச்சிக்கு தடையாக இருக்கும் எவை எண்றாலும் எதிர்த்தார்.. அதில் கடவுள் அடக்க......!! மக்கள் தாராளமாக கடவுளை நம்பலாம்.. சொன்னவர் பெரியார் தான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியான பெரியாரில் வெறும் கடவுள் மறுப்பை மட்டும் எடுத்து கொண்ட சிலர் சொல்லும் பெரியாரிசம் என்பது வெரும் புரளி நிறைந்த மாயை...

அவர் கொண்டிருந்த சீடர்கள் பெரும்பணியாக 100 வீதமாக இதைச் செய்கின்றபோது இது புரளி நிறைந்த மாயையாகத் தானே தோன்றுகின்றது.

கறுப்புச்சட்டையைப் போட்டு, எதிர்ப்பியலைக் காட்டுவதற்குப் பதிலாக, இது தான்டா தமிழர் ஆடை, இப்படித் தான்டா தமிழன் வாழ வேண்டும் என்று சொல்லியிருந்தால், முதலாவது ஆளாகவே நான் நின்றிருப்பேன். அதில்லாமல் எதிர்ப்பினைக் காட்டுகின்றோம் என்று, எல்லாவற்றுக்கும் முரணாக நடந்து கொண்டால், மாயையாகத் தானே தோன்றும்

Link to comment
Share on other sites

தகவலுக்கு நன்றி தயாண்ணா! :rolleyes:<_<

நான் எப்போதும் கடவுளை எதிர்க்கும் பெரியாரை ஆதரிப்பவன் இல்லை தூயவன்... ஆனால் ஒரு சமதர்ம கோட்பாட்டாளனாக பெரியாரின் தமிழ் சொற்பொழிவுகளை பிழையானவை எண்று சொல்ல முடியவில்லை..

சமதர்மவாதிகளின் கம்யூனிச கோசங்களையும், எழுச்சிகளையும் எல்லாம் எடுத்து பகுத்தறிவு எனும் பெயரில் தமிழர்களுக்கு ஒரு மொழி மாற்று வேலையை பெரியாரும் மறை முகமாக செய்தார்... அதை நாம் பாராட்டியே ஆக வேண்டும்..!!

கம்யூனீசத்தின் ஊற்று கார்ள்ஸ் மாகஸ் என்பார்கள்... ஆனால் சுடலையில் இருக்கும் ஈசனாக, அன்பே சிவனாக எவன் சிவனை படைத்தானோ அவந்தான் சமதர்மத்தை படைத்தவன் எண்று சொல்ல வேண்டும்...

சைவர்களைவிட சமதர்மத்தை போதித்ததில் வேறு சக்திகளும் இல்லை எனலாம்...!! ஆகவே நீங்கள் சைவம் எண்றால், நீங்கள் கூட கம்யூனிசவாதிதான்..... ..

Link to comment
Share on other sites

அப்படி கருதுபவர்கள் கடவுள் நம்பிக்கையாளர்கள் அல்ல.. மூட நம்பிக்கையாளர்.. உங்க கருத்துப்படி பார்த்தால்.. காது குத்துவது மூக்கு குத்துவது எல்லாம் கடவுள்செயல் என ஆஸ்திகர்கள் நம்புகிறார்கள் என்பதுபோலிருக்கிறதே..

கடவுள் நம்பிக்கை மற்றும் மூடநம்பிக்கை

இவை இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்களை கொஞ்சம் பட்டியல் இட முடியுமா?

Link to comment
Share on other sites

பட்டியல் தேவையில்லை. சுருக்கமாகவே சொல்லலாம்.

பெரியாரின் கொள்கைகளை ஏற்பது நம்பிக்கை. பெரியார் தொண்டன் என்று கறுப்புடை அணிவது மூட நம்பிக்கை. :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை   வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 
    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
    • பாகவலி நாட்டினிலே .....அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்........!   😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.