Jump to content

யேசுவே நீரும் இல்லை - அன்னை தெரசா !


Recommended Posts

29/12/2008 by வினவு

“பதில் கிடைக்காத கேள்விகள் பல எனக்குள் வாழ்கின்றன தேவதூஷணமாகிவிடும் என்பதால் அவற்றை வெளியிட அஞ்சுகிறேன் ஒருவேளை கடவுள் இருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என் சிந்னைகளை சொர்க்கத்தை நோக்கி எழுப்ப முயல்கிறேன் அங்கோ தண்டிக்கும் வெறுமை அந்தச் சிந்தனைகள் கூரிய கத்திகளாய்த் திரும்ப வந்து என் இதயத்தைக் கிழிக்கின்றன தேவன் என்னை நேசிப்பதாகச் சொல்கிறார்கள் இருப்பினும் எதார்த்தத்தில் இருளும் உணர்ச்சியின்மையும் வெறுமையும் என்னுள் நிறைந்து மேலோங்கியிருப்பதால் எதுவும் என் ஆன்மாவைத் தொடுவதில்லை பரிசுத்த ஆவியின் அழைப்பை ஏற்று குருட்டுத்தனமாக என்னை ஒப்புக்கொடுத்ததன் மூலம் தவறு செய்து விட்டேனோ?”

“என்னுள் ஓங்கி நிறைந்திருக்கும் வெறுமை காரணமாக நான் பார்க்கிறேன், ஆனால் கவனிப்பதில்லை கேட்கிறேன், ஆனால் காது கொடுப்பதில்லை என் நாக்குதான் அசைகிறது, நான் பேசுவதில்லை.”

“என்னை நானே எதற்காக வருத்திக் கொள்கிறேன்? தேவன் இல்லையெனும்போது ஆன்மாவும் இருக்க முடியாது ஆன்மா இல்லையென்றால் யேசுவே நீரும் உண்மையல்ல.”

துயரம் ததும்பும் இந்தச் சொற்கள் ‘அன்னை’ தெரசாவின் இதயத்திலிருந்து கசிந்தவை.

1949இல் கல்கத்தாவில் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி என்ற அமைப்பை அவர் தொடங்கியது முதல் 1997 இல் மரிக்கும் வரையில் இடையறாது அவரது இதயத்தை அரித்துக் கொண்டிருந்த ‘அவிசுவாசத்தை’ எழுத்து பூர்வமாகவே பதிவு செய்திருக்கிறார் தெரசா. மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டீஸின் மூத்த உறுப்பனரும், தெரசாவுக்கு ‘புனிதர்’ பட்டம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து வருபவருமான அருட்தந்தை ப்ரியன் கலோடிஜெக் வெளியிட்டுள்ள ‘அன்னை தெரசாவா என் ஒளியாய் இரு’ என்ற நூலில் தனது நம்பிக்கையின்மையை வெளியிடும் வண்ணம் தெரசா எழுதிய சுமார் 40 இரகசியக் கடிதங்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

அதிக முக்கியத்துவமின்றி சில ஆங்கில நாளேடுகளில் மட்டும் தெரசா குறித்த இச்செய்தி வெளியாகியிருக்கிறது. தமிழ் ஊடகங்களில் இது பரவலாக வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இயேசுவுக்கு அடுத்தபடியாக ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் மதிக்கத்தக்க குறியீடாகவும், மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்ட மனிதாபிமானத்தின் சின்னமாகவும், ஐஸ்வர்யா ராய் முதல் அமெரிக்க அதிபர் வரை அனைவரும் போற்றிப் பணியும் தெய்வமாகவும் வனைந்து உருவாக்கப்பட்ட தெரசா என்ற திருஉரு, திடீரென்று நொறுங்கிச் சரிவதை ஆளும் வர்க்கங்கள் விரும்பாததில் வியப்பில்லை.

இக்கடிதங்களை ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையே வெளியிட்டிருப்பதால் இதை விசுவாசிகள் யாரும் ‘நாத்திகர்களின் சதி’ என்று கூறி மறுக்க முடியாது. தனது மரணத்துக்குப் பிறகு இக்கடிதங்களை அழித்துவிட வேண்டுமென்று தெரசா கோரியிருந்ததையும் மீறி இவை வெளியிடப்படக் காரணம் என்னவென்று தெரியவில்லை. சிலுவையின் முன்புறத்தில் இயேசுவையும் பின்புறத்தில் உண்மையையும் அறைந்து வைத்திருக்கும் திருச்சபை, உண்மையின் பால் கொண்ட காதலால் இவற்றை வெளியிட்டிருக்காது என்பதை மட்டும் நாம் நிச்சயமாகக் கூறலாம்.

“இக்கடிதங்களின் காரணமாகப் ‘புனிதர்’ பட்டம் பெறும் தகுதியை தெரசா இழக்க மாட்டார்” என்று கூறுகிறது வாடிகன். “இயேசுவும் கூட சிலுவையில் மரிக்குமுன் தன்னைக் கைவிடப்பட்டவராகவே உணர்ந்தார்….. தெரசாவிடம் நாம் காணும் ‘விசுவாசம் நிரம்பிய மன உறுதி’ என்பது ஒரு காப்பியச் சிறப்பு மிக்க ஆன்மீக வீரம்” என்கிறார் இந்நூலாசிரியர் கலோடிஜெக்.

ஆன்மீகத் துயரம் என்று கத்தோலிக்க குருமார்களால் வருணிக்கப்படும் தெரசாவின் இந்த உளவியல் வேதனை குறித்து பொருள் முதல்வாதிகளாகிய நாம் மகிழவும் தேவையில்லை, வருந்தவும் தேவையில்லை. தெரசாவிற்குள் ‘தேவன்’ இறங்கியதெப்படி, வெளியேறியதெப்படி என்பதைப் புரிந்து கொள்வதுதான் நம் அக்கறை.

பின்தங்கிய நாடான அல்பேனியாவின் விவசாயக் குடும்பமொன்றில் பிறந்த தெரசா, பரிதாபத்துக்குரிய கன்னியா ஸ்திரீகளின் கூட்டத்தில் ஒருவராக இந்தியாவிற்கு வருகிறார். 1929 முதல் கல்கத்தாவில் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி வந்த தெரசா, 1946இல் ஓய்வுக்காக டார்ஜிலிங் சென்றபோதுதான் அவரில் அந்த ‘அற்புதம்’ நிகழ்ந்தது.

“இயேசு என்முன் தோன்றினார். ‘நீ திறமைகள் ஏதுமற்ற பலவீனமான பாவி என்பதை நான் அறிவேன். அதனால்தான் என்னுடைய புகழைப் பரப்ப உன்னைப் பயன்படுத்த விரும்புகிறேன். நீ மறுப்பாயா?’ என்று கேட்டார். எனவே எனக்கு இந்த ஆசிரியைப் பணி வேண்டாம். நான் நிராதரவான ஆன்மாக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்” என்று தனது திருச்சபை மேலிடத்திடம் கோரினார், தெரசா. ‘ஒரு உண்மையான விசுவாசி’ கைவசம் இருப்பதைக் கண்டுகொண்ட ஆர்ச் பிஷப், வாடிகனின் அனுமதியைத் தெரசாவுக்குப் பெற்றுத் தந்தார். 1948இல் கல்கத்தாவில் தொடங்கியது தெரசாவின் ‘மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி.’

இரண்டே மாதங்களில் தெரசாவின் வெறுமையும் விசுவாசமின்மையும் தொடங்கி விட்டன. துன்பங்களற்ற வசதியான பள்ளி ஆசிரியை வாழ்க்கையை 16 ஆண்டு காலம் வாழ்ந்து விட்டு திடீரென தொழுநோயாளிகள் மற்றும் ஆதரவற்ற ஏழைகளின் ‘பொந்துக்குள்’ வீழ்ந்ததனால் ஏற்பட்ட அதிர்ச்சியும், இந்தச் சூழலை வலியத் தருவித்துக் கொண்டதனால் தன்மீதே தோன்றியிருக்கக் கூடிய வெறுப்பும் தெரசாவிடம் ‘விசுவாசமின்மை’ துவங்குவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

“பரிசுத்த ஆவியின் அழைப்பை ஏற்று குருட்டுத்தனமாக என்னை ஒப்புக்கொடுத்ததன் மூலம் தவறு செய்து விட்டேனோ?” என்று பின்னாளில் அவர் எழுதும் கடிதம் அந்த மனக்காயத்தின் ஆழத்தைக் காட்டுகிறது.

தமது விருப்பங்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள இயலாமல் திருச்சபைச் சூழலில் நிரப்பப்பட்டிருக்கும் போலி ஒழுக்கப் புகைமூட்டம், தவறுகளை வெளிப்படையாகப் பரிசீலனைக்கு உட்படுத்துவதைத் தந்திரமாகத் தவிர்க்கும் பாவமன்னிப்பு முறை, அம்பலப்படாத தனது சுய ஆளுமையைப் பாதுகாத்துக் கொள்ளும் பதற்றம், நெஞ்சில் ஆழப்பதிய வைக்கப்பட்டிருக்கும் தேவதூஷணம் குறித்த அச்சம், ஊன்றி நிற்பதற்குத் தேவையான விசுவாசமோ, திரும்பச் செல்வதற்கான துணிவோ இல்லாததால் தோன்றக்கூடிய விரக்தி.. இத்தகைய சூழலில் சிக்கிக்கொண்ட ஒரு முதிர்கன்னி இதுதான் 1949இன் தெரசா.

தனது வெறுமை குறித்தும், நம்பிக்கையின்மை குறித்தும் தனக்கு உயர் தகுதியில் உள்ள அருட்தந்தைகளுக்கு தெரசா இடையறாமல் கடிதம் எழுதியிருக்கிறார் எனினும், பரிதாபத்துக்குரிய இந்தப் பெண்மணியை விடுவிக்க திருச்சபை முயலவில்லை. மாறாக, அவரைச் சிலுவையில் அறைவதற்கான ஆணியைத்தான் தயார் செய்தது. 1969இல் கத்தோலிக்க மத வெறியனான மால்கம் மக்கரிட்ஜ் என்ற பிரிட்டிஷ் செய்தியாளர் தெரசாவைப் பற்றிய செய்திப் படம் ஒன்றைத் தயாரித்தார். பி.பி.சி இதனை ஒளிபரப்பியது. இருட்டறையில் விளக்குகள் இல்லாமலேயே ஒரு காட்சி பதிவாகியிருப்பதாகவும், அது தெரசா நிகழ்த்திய அற்புதம் என்றும் கூவினார் மக்கரிட்ஜ். தனது விசுவாசமின்மை குறித்து கடிதங்கள் அனுப்பிக் கொண்டிருந்த தெரசாவும், ‘தானே அடிக்கடி பரிசுத்த ஆவியுடன் பேசுவதாக’ அந்தப்படத்தில் பேட்டியளித்தார்.

1960களின் பிற்பகுதியில் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் எழுந்த வியத்நாம் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஏகாதிபத்தியவாதிகளைத் தனிமைப்படுத்தியிருந்தன. மூன்றாம் உலக ஏழைகளுக்கு உதவும் ஒரு கருணை முகத்தை அவர்கள் காட்டவேண்டியிருந்தது. இப்படி உருவாக்கப்பட்டதுதான் தெரசாவின் ஒளிவட்டம். நோபெல் சமாதானப் பரிசு உள்ளிட்ட பரிசுகளை அவர் மீது பொழிந்தது ஏகாதிபத்தியம். தாட்சர், டயானா, ரீகன், பல்வேறு நாடுகளின் பிரதமர்கள், அதிபர்கள்.. என்று தரிசனத்துக்கு வரும் பிரமுகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. மெலிந்து சுருங்கிய தோற்றமும், வெள்ளைக் கைத்தறி ஆடையும், ஆதரவற்றோர் சேவையும் தெரசாவை மதச்சார்பு கடந்த ஒரு புனிதத் திரு உருவாக ஏகாதிபத்தியங்கள் முன்நிறுத்துவதற்குப் பயன்பட்டன.

ஆனால் உலகமே கொண்டாடிய அவரது சேவையோ, விருதுகளோ, பணிந்து வணங்கிய பல நாட்டு அதிபர்களோ, இவையனைத்தும் வழங்கியிருக்கக் கூடிய மனநிறைவோ தன்னிடம் இல்லை என்கின்றன தெரசாவின் கடிதங்கள். தெரசாவின் இறைநம்பிக்கை ஏன் தகரவேண்டும்? விசுவாசமில்லாத நிலையிலும் அவர் காட்டிய மன உறுதியை வியக்கிறார் கலோடிஜெக். அவருடைய விசுவாசத்தைப் பறித்தது எது? விசுவாசம் தளர்ந்த பின்னரும் அவருடைய மன உறுதியைத் தாங்கி நின்றது எது?

மாபெரும் தத்துவஞானிகளும், விஞ்ஞானிகளும்கூட ‘கடவுள்’ தோற்றுவிக்கும் இத்தகைய மனத்துயருக்கு ஆட்படுவதுண்டு. அது அறிவுத்தேடல் தோற்றுவிக்கும் மனத்துயர். அத்தகைய அறிவுத்தேடலின் சாயல் கூட தெரசாவின் கடிதங்களில் இல்லை. அவர் அறிவின் சாயல் கூட எஞ்சியிராத வண்ணம் கத்தோலிக்கத் திருச்சபையின் உலைக்களத்தில் உருக்கி அடிக்கப்பட்ட அடிமை.

நீதியற்ற உலகின் நீதியாய், இரக்கமற்ற உலகின் இதயமாய் கடவுளைச் சரணடையும் மக்களின் மத உணர்வு கூட “கடவுளே உனக்குக் கண்ணில்லையா” என்று குமுறி நம்பிக்கை இழக்கும். தெரசாவைச் சூழ்ந்திருந்த ஏழைகளும் நோயுற்றவர்களும் அநாதைகளும் வடித்த கண்ணீர் ‘தேவன் இருக்கிறானா’ என்ற கேள்வியை அவருக்குள் எழுப்பவில்லை.

“ஏழ்மையைச் சகித்துக்கொள்வதும் கிறிஸ்துவின் துயரத்தோடு அதனைப் பகிர்ந்து கொள்வதும் மிகவும் அழகானது. ஏழை மக்களின் துயரம் இந்த உலகுக்கு பெரிதும் உதவுகிறது என்று நான் கருதுகிறேன்” என்று 1981இல் ஒரு பேட்டியில் குறிப்பட்டார் தெரசா. மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி அமைப்பின் சகோதரி நிர்மலா இதை மேலும் தெளிவுபடுத்துகிறார், “ஏழ்மை என்பது இருக்கத்தான் செய்யும். தங்களுடைய ஏழ்மையை சரியான கோணத்தில் ஏழைகள் புரிந்து கொள்ளவேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்”. வலியால் துடித்துக் கொண்டிருந்த ஒரு புற்றுநோயாளியிடம் தெரசா பேசுவது படமாகப் பதிவாகியிருக்கிறது, “சிலுவையில் இயேசு துன்புற்றதைப் போல நீ துன்புறுகிறாய். இயேசு உன்னை முத்தமிடுகிறார் என்று நினைக்கிறேன்” என்கிறார் தெரசா. ஆனால், தான் நோய்வாய்ப்படும்போது இயேசுவால் முத்தமிடப்படுவதை தெரசா விரும்பவில்லை. மன உறுத்தல் ஏதுமின்றி அமெரிக்காவில் மருத்துவம் பார்த்துக் கொண்டார்.

தெரசாவின் இல்லத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக உலகெங்கும் ஒரு பொதுக்கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு வடிகட்டிய பொய். அங்கே வலியால் துடிப்பவர்களுக்கு வலி நிவாரணி மருந்து கூடத் தரப்படுவதில்லை என்ற உண்மையை பல மருத்துவர்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றன

Link to comment
Share on other sites

பகத், மேல் டிசம்பர் 29th, 2008 இல் 19:04 சொன்னார்:

தெரசா அல்ல , “அன்னை” தெரசா என சிறு வயதில் இருந்தே ஒரு புனித பிம்பத்தை தன் மனதில் ஏற்றி வைத்து இருக்கும் பலருக்கு இந்த கட்டுரை பகுத்து அறிவின் திறவு கோலாக இருக்கும்…

சுசன் என்ற கத்தோலிக்க “நன்” , கிட்ட தட்ட 10 வருடங்கள் தெரசாவுடன் பணியாற்றினார்.. பின்பு அங்கு நடக்கும் ஏமாற்று வேலைகளை கண்டு வெளியேறினார்… அவர் தான் கண்ட உண்மைகளை பற்றி எழுதிய கட்டுரைக்கான சுட்டி …

Mother Teresa's House of Illusions

How She Harmed Her Helpers As Well As Those They 'Helped'

by Susan Shields

--------------------------------------------------------------------------------

The following article is from Free Inquiry magazine, Volume 18, Number 1.

--------------------------------------------------------------------------------

Some years after I became a Catholic, I joined Mother Teresa's congregation, the Missionaries of Charity. I was one of her sisters for nine and a half years, living in the Bronx, Rome, and San Francisco, until I became disillusioned and left in May 1989. As I reentered the world, I slowly began to unravel the tangle of lies in which I had lived. I wondered how I could have believed them for so long.

Three of Mother Teresa's teachings that are fundamental to her religious congregation are all the more dangerous because they are believed so sincerely by her sisters. Most basic is the belief that as long as a sister obeys she is doing God's will. Another is the belief that the sisters have leverage over God by choosing to suffer. Their suffering makes God very happy. He then dispenses more graces to humanity. The third is the belief that any attachment to human beings, even the poor being served, supposedly interferes with love of God and must be vigilantly avoided or immediately uprooted. The efforts to prevent any attachments cause continual chaos and confusion, movement and change in the congregation. Mother Teresa did not invent these beliefs - they were prevalent in religious congregations before Vatican II - but she did everything in her power (which was great) to enforce them.

Once a sister has accepted these fallacies she will do almost anything. She can allow her health to be destroyed, neglect those she vowed to serve, and switch off her feelings and independent thought. She can turn a blind eye to suffering, inform on her fellow sisters, tell lies with ease, and ignore public laws and regulations.

Women from many nations joined Mother Teresa in the expectation that they would help the poor and come closer to God themselves. When I left, there were more than 3,000 sisters in approximately 400 houses scattered throughout the world. Many of these sisters who trusted Mother Teresa to guide them have become broken people. In the face of overwhelming evidence, some of them have finally admitted that their trust has been betrayed, that God could not possibly be giving the orders they hear. It is difficult for them to decide to leave - their self-confidence has been destroyed, and they have no education beyond what they brought with them when they joined. I was one of the lucky ones who mustered enough courage to walk away.

It is in the hope that others may see the fallacy of this purported way to holiness that I tell a little of what I know. Although there are relatively few tempted to join Mother Teresa's congregation of sisters, there are many who generously have supported her work because they do not realize how her twisted premises strangle efforts to alleviate misery. Unaware that most of the donations sit unused in her bank accounts, they too are deceived into thinking they are helping the poor.

As a Missionary of Charity, I was assigned to record donations and write the thank-you letters. The money arrived at a frantic rate. The mail carrier often delivered the letters in sacks. We wrote receipts for checks of $50,000 and more on a regular basis. Sometimes a donor would call up and ask if we had received his check, expecting us to remember it readily because it was so large. How could we say that we could not recall it because we had received so many that were even larger?

When Mother spoke publicly, she never asked for money, but she did encourage people to make sacrifices for the poor, to "give until it hurts." Many people did - and they gave it to her. We received touching letters from people, sometimes apparently poor themselves, who were making sacrifices to send us a little money for the starving people in Africa, the flood victims in Bangladesh, or the poor children in India. Most of the money sat in our bank accounts.

The flood of donations was considered to be a sign of God's approval of Mother Teresa's congregation. We were told by our superiors that we received more gifts than other religious congregations because God was pleased with Mother, and because the Missionaries of Charity were the sisters who were faithful to the true spirit of religious life.

Most of the sisters had no idea how much money the congregation was amassing. After all, we were taught not to collect anything. One summer the sisters living on the outskirts of Rome were given more crates of tomatoes than they could distribute. None of their neighbors wanted them because the crop had been so prolific that year. The sisters decided to can the tomatoes rather than let them spoil, but when Mother found out what they had done she was very displeased. Storing things showed lack of trust in Divine Providence.

The donations rolled in and were deposited in the bank, but they had no effect on our ascetic lives and very little effect on the lives of the poor we were trying to help. We lived a simple life, bare of all superfluities. We had three sets of clothes, which we mended until the material was too rotten to patch anymore. We washed our own clothes by hand. The never-ending piles of sheets and towels from our night shelter for the homeless we washed by hand, too. Our bathing was accomplished with only one bucket of water. Dental and medical checkups were seen as an unnecessary luxury.

Mother was very concerned that we preserve our spirit of poverty. Spending money would destroy that poverty. She seemed obsessed with using only the simplest of means for our work. Was this in the best interests of the people we were trying to help, or were we in fact using them as a tool to advance our own "sanctity?" In Haiti, to keep the spirit of poverty, the sisters reused needles until they became blunt. Seeing the pain caused by the blunt needles, some of the volunteers offered to procure more needles, but the sisters refused.

We begged for food and supplies from local merchants as though we had no resources. On one of the rare occasions when we ran out of donated bread, we went begging at the local store. When our request was turned down, our superior decreed that the soup kitchen could do without bread for the day.

It was not only merchants who were offered a chance to be generous. Airlines were requested to fly sisters and air cargo free of charge. Hospitals and doctors were expected to absorb the costs of medical treatment for the sisters or to draw on funds designated for the religious. Workmen were encouraged to labor without payment or at reduced rates. We relied heavily on volunteers who worked long hours in our soup kitchens, shelters, and day camps.

A hard-working farmer devoted many of his waking hours to collecting and delivering food for our soup kitchens and shelters. "If I didn't come, what would you eat?" he asked.

Our Constitution forbade us to beg for more than we needed, but, when it came to begging, the millions of dollars accumulating in the bank were treated as if they did not exist.

For years I had to write thousands of letters to donors, telling them that their entire gift would be used to bring God's loving compassion to the poorest of the poor. I was able to keep my complaining conscience in check because we had been taught that the Holy Spirit was guiding Mother. To doubt her was a sign that we were lacking in trust and, even worse, guilty of the sin of pride. I shelved my objections and hoped that one day I would understand why Mother wanted to gather so much money, when she herself had taught us that even storing tomato sauce showed lack of trust in Divine Providence.

http://www.secularhumanism.org/library/fi/shields_18_1.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை தெரேசா பற்றி வித்தியாசமான பார்வையொன்று. ஒரு கத்தோலிக்க சன்னியாசி என்ற வகையில் கட்டுப் பெட்டித் தனமாக நடந்து கொண்டிருப்பது விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. ஆனால் சர்வாதிகாரிக்கு ஆதரவு, மணமுறிவுக்கு எதிர்ப்பு என்பதெல்லாம் மானிடப் பண்பிலிருந்து விலகும் செயல்கள். சொல்லப் போனால், இப்போது பதவியில் இருக்கும் பாப்பரசர் பெனடிக்ட் கூட இத்தகைய மூடக் கொள்கைகளை ஆதரிப்பவர் தான். தென்னமெரிக்காவில் விடுதலை இறையியல் என்ற பெயரில், கத்தோலிக்க குரு மார் விடுதலை இயக்கங்களை ஆதரிக்க ஆரம்பித்த போது அதை எதிர்த்து பல பாதிரி மாரின் பதவியைப் பறித்த பெருமை எங்கள் தற்போதைய பாப்பரசரைச் சாரும்.

ஆனால் முன்னாள் கன்னியாஸ்திரி எழுதிய கட்டுரை, ஏழைகளைக் கவனிக்கவில்லை என்பதை விட தனக்குக் கீழ் பணியாற்றிய கன்னியாஸ்திரிகளைக் கவனிக்கவில்லை என்ற குற்றச் சாட்டை மட்டுமே வைக்கிறது. வாஷிங் மெஷினில் உடுப்புத் தோய்க்கலாம் அல்லது பத்துச் சோடி உடைகளும் செருப்பும் "ஐ-பொட்"டும் வைத்திருக்கலாம் என்ற சலுகைகளோடு யாரும் கன்னியாஸ்திரி வாழ்க்கைக்குள் நுழையக் கூடாது என நினைக்கிறேன்.சூசன் அப்படிப் பட்ட ஆசைகளோடு போயிருக்கிறார் போலத் தெரிகிறது.

Link to comment
Share on other sites

பதிவுக்கு நன்றி

அன்னை தெரேசா

இந்தியாவில் சேவைக்காக சென்ற காலத்தில் ஏற்பட்ட

ஒரு இந்து - முஸ்லீம் கலவரத்தோடுதான் அவரது பிரச்சனைகள் மாற்றங்கள் ஆரம்பித்தன.

அங்குதான் கத்தோலிக்க (கிறிஸ்தவர்கள்) மதத்தவருக்கு மட்டுமல்ல

அனைத்து மக்களுக்கும் உதவ வேண்டும் எனும் நிலையை மனிதாபிமான ரீதியாக எடுத்தார்.

அதை

Mother Theresa

http://www.excerptsofinri.com/mother-teresa.html

திரைப்படத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்

"கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்களாகவும்

இந்துக்கள் இந்துகளாகவும்

இஸ்லாமியர்கள் இஸ்லாமியர்களாகவும் இருக்கவேண்டும் " எனும் கருத்தை பகிரங்கமாக சொன்னார்.

அவர் மதமாற்றங்களை விரும்பியவரல்ல.

இதனாலேயே

அன்னை தெரேசா அனைத்து தரப்பினராலும் விரும்பப்பட்டார்.

இவை கத்தோலிக்க திருச்சபை விரும்பும் வாசங்களல்ல.

இப்படியான வார்த்தைகளை கடும்போக்கு கொண்ட கத்தோலிக்க மதகுருமார் ஏற்றுக் கொள்வதில்லை.

அன்னை தெரேசா

ஆசிரியராக பணியாற்றும் போது நடைபெறும்

இலக்கலவரத்தில் படுகாமடைந்த ஒருவரை

விடுதிக் கட்டுப்பாடுகளை மீறி கதவை திறந்து

பெண்கள் மட்டுமே வாழும் மாணவிகளின் விடுதிக்குள் தூக்கிக் கொண்டுவந்து

சிகிச்சை அளிப்பதிலிருந்தே அவருக்கு

அவரது பொறுப்பாளரான

பெண் கன்னியாஸ்திரியிடமிருந்து பிரச்சனை ஆரம்பிக்கிறது....

இங்கே இடம்பெறும் முரண்பாடுகள் காரணமாக

அவர் அந்த கன்னியாஸ்திரிகள் விடுதியிலிருந்து வெளியேறி

ஏழைகள் வாழும் சிலம் (குப்பம்) பகுதியில் போய் தங்குகிறார்.

அங்குதான் அவர் சேவை ஆரம்பிக்கிறது.

அன்று முதல் இன்று வரை

அவர் யாரையும் மத மாற்றம் செய்ய முயன்றதாக குற்றச் சாட்டுகள் இல்லை.

அவரவர் மதங்களிலேயே அவரவர் இருக்கட்டும்

ஏழைகளுக்கு உதவுவதே இறைவனின் பணி என்ற கருத்தை உடையவராக இருந்திருக்கிறார்.

அதை கல்கத்தாவில் வாழும் மக்கள் சாட்சி பகிர்கிறார்கள்.

இவை கத்தோலிக்க திருச்சபை அவரை

ஒரு புனிதராக்கக் கூடிய தடைகளாக யோசித்து இருக்கலாம்?

அன்னை தெரேசாவை

கத்தோலிக்க திருச்சபை அன்று ஒதுக்கிய போது

அவருக்கு உதவியாக பேசியவர் ஒரு அருட்தந்தை மட்டுமே.

அன்னை தெரேசா முதன் முறை வெளிநாடு சென்று

உதவி தேட முயன்றபோது அவரிடம்

விமான சீட்டுக்கான பணம் கூட இல்லாமல்

ஒரு இந்துவே உதவி செய்துள்ளார்.

அப்படி உதவி தேடிப்போன இடத்தில்

அதிக செலவு செய்து ஒரு விருந்து நடந்ததைப் பார்த்த அன்னை தெரேசா

"நீங்கள் இங்கே ஒரு வேளை உண்ணும் உணவுக்கு செலவு செய்யும் தொகை

அங்கு கஸ்டப்படும் மக்களுக்கு ஒரு மாதத்துக்கு போதும்." என கடும் வார்த்தைகளை

பிரயோகித்து விட்டு வெளியேறுகிறார்.

பெண்களுக்கு மணவிலக்கு உரிமை இல்லாத அயர்லாந்தில் அது தொடர்பான வாக்கெடுப்பு நடந்தபோது “மணவிலக்குக்கு ஆதரவாக வாக்களிப்பவர்களுக்கு தேவனிடம் மன்னிப்பே கிடையாது” என்று பிரச்சாரம் செய்தார்;

அடுத்த 2 மாதங்களில் டயானாவின் மணவிலக்கை ஆதரித்து கருத்து வெளியிட்டார்.

இது கூட கத்தோலிக்க திருச்சபைக்கு உடந்தையான கருத்து அல்ல.

பொதுவான கருத்தாக கத்தோலிக்க திருச்சபையின் எண்ணங்களையும்

டயானா விடயத்தில் தனிப்பட்ட ஒருவரது பிரச்சனையை வேறு விதமாகவும்

அன்னை தெரேசா அணுகியுள்ளார் என்றே என்னால் எண்ண முடிகிறது.

கொலையாளிக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தாலும்

கொலை நடந்த நிகழ்வு குறித்த பின்னணியை அறிந்த பின்

குற்றவாளிகள் கூட தண்டிக்கப்படாமல் விடுதலை செய்யப்படுவதுண்டு.

அதுபோல சார்ல்ஸ் - டயானா வாழ்வில்

ஏற்பட்டு வந்த பிரச்சனைகளை கேட்டு

அவர் டயனாவை ஆதரித்து பேசியிருக்கலாம்?

தவிரவும் டயானா ஒரு இஸ்லாமியரை காதலிப்பதை அறிந்து கூட

அன்னை தெரேசா அவரை வெறுக்கவில்லை என்பது பலரும் அறிந்தது.

அன்னை தெரேசா மதவெறியராக இருந்திருந்தால்

டயானாவின் காதல் காரணமாக அவரை வெறுத்தே இருப்பார்?

மதம் என்ற கோட்பாடுகளை புறம் தள்ளி

மனிதம் எனும் நிலையில் வாழ்ந்துள்ளார் அன்னை தெரேசா.

மதகுருமாருக்கு திருமணம் செய்ய அங்கிகாரம் அளியுங்கள் என

புனித பாப்பரசருக்கு பல கருத்துகள் யோசனைகள் முன்வைக்கப்பட்டாலும்

அவை அன்றும் இன்றும் புறந்தள்ளப்பட்டே வருகிறது.

இதனால் சில மதகுருமார் திருட்டுத்தனமான காதல்களிலும்

பாலியல் பிரச்சனைகளிலும் சிக்கி

ஒதுக்கப்பட்டுள்ளனர்.

சில.................?

துறவறம் என்பது இல்லற வாழ்வுக்கு அப்பாற்பட்டது என்கிறது கத்தோலிக்க திருச்சபை.

இதை எதிர்த்தே மார்ட்டின் லூதர் கிங் புரட்டஸ்தாந்து (கிறிஸ்தவ) மதத்தை உருவாக்கினார்.

ஏனைய மதங்கள் இல்லறத்தை வேண்டாம் என்று கூடவில்லை.

கத்தோலிக்க திருச்சபை கடும் சட்ட விதிகளை கொண்டது.

இவை சற்று தளர்த்தப்பட வேண்டும் என புதியவர்கள் நினைக்கிறார்கள்.

அவை எதிர்காலத்தில் நிச்சயம் மாறும்.

உலகம் உருண்டை என்பதை அன்று ஏற்றுக் கொள்ளாத

இதே திருச்சபை

இப்போது ஏற்றுக் கொள்ளவில்லையா?

உருவ வழிபாடு கூட

குறைவடைந்து கொண்டு செல்கிறது?

அதுபோல அன்னை தெரேசா

கத்தோலிக்க திருச்சபையை மீறியே பல விடயங்களை செய்தார்.

பல கருத்துகளை சொன்னார்.

அவரது கருத்துகள்

வத்திக்கான் (இத்தாலி) சொன்ன

அல்லது வத்திக்கான் அங்கீகரித்த கருத்துகள் அல்ல.

அவை அவரது சொந்தக் கருத்துகள்.

அவை வத்திக்கான் திருச்சபைக்கு ஒத்துவராதவையாக இருக்கலாம்.

எனவே ஆங்கிலத்திலும் , இத்தாலி அல்லது லத்தீனில் வரும் கருத்துகள்

ஆசிய மொழிகளில் வராமல் இருக்க

வத்திக்கான் கவனமாகவே இருந்திருக்கும்.

அன்னை தெரேசாவுக்கு எதிரான கருத்துகள்

கத்தோலிக்க சமயமல்லாதோருக்கு

அல்லது

அன்னை தெரேசாவை விரும்புவோர் மனதில்

கத்தோலிக்க சமயம் தொடர்பான வெறுப்புகளை ஏற்படுத்தலாம்

என எண்ணியுமிருக்கலாம்.

அவை அவர்களை பாதிக்கும்.

அன்னை தெரேசா

ஒரு கத்தோலிக்கர் என்பதை விட

அவர் ஒரு மனிதாபிமானி என்பதையே

கல்கத்தா வாழ் இந்து - முஸ்லீம் - கத்தோலிக்க மக்களிடம் பதிவாகியுள்ளது.

தான் வாழும் பகுதியில் அங்கீகரிக்கப்படாத ஒருவனை

உலகம் அங்கீகரித்து ஒரு பிரயோசனமுமில்லை.

இதையே அவரது மறைவில் நாம் கண்டது.

அன்னை தெரேசா

புனிதராகலாம் அல்லது புனிதராகாமல் இருக்கலாம்.

அவர் நம் காலத்தில் வாழ்ந்த ஒரு மனித நேய இறை பணியாளர் என்பதே உண்மை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.