Jump to content

பொருள் செய்ய விரும்பு


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

யாழ் களம் தனியே பொழுது போக்குக் களமாக மட்டுமல்லாது தற்கால உலக ஒழுங்கில் கட்டமைக்கப்பட்டிருக்கும் போட்டாபோட்டிகளுடன் வாழ தமிழ் மக்களுக்கும் வழி காட்டும் களமாக இருக்க வேண்டுமென்பது என் வேணவா.

பொருளாதாரத்தில் மேம்பட்டிருக்கும் சமூகங்கள் நினைத்ததைச் சாதிக்கும் வல்லமை கொண்டவை. உதாரணம் யூத சமூகம்... ஆதி கால இஸ்ரேல் என்ற ஒரு நாட்டின் இருப்பே சர்ச்சைக்குரியதாக இருக்கவே வெறும் இதிகாசக் கதைகளின் வழிகாட்டலைப் பின் பற்றியே ஒரு நாடு உருவாக்கப்பட்டதற்கு அச்சமூகம் கொண்டிருந்த பொருளாதார மேம்பாடே காரணமாகியது.

நம் தமிழ்ச் சமூகத்திலும் காத்திரமான கட்டியெழுப்பப்பட வேண்டியபணிகள் முன்னிருக்கின்றன. ஒரு சமூகத்தின் விலாசம் என்பது அதன் பொருளாதார மேன்மையே..

பங்கு வர்த்தகம்" பற்றிப் பேசுகின்றார்கள்.நம் சமூகத்திலும் அதில் ஆர்வம் உள்ளவர்களும் சாணக்கியம் உள்ளவர்களும் இருக்கக்கூடும். அவர்களின் பங்களிப்பை உள்வாங்களாம். அதனால் பயனடையக் கூடியவர்கள் அடையலாம்.

மற்றும் முதலீட்டுத் துறைகள் பற்றி தெரிந்தவர்களுக்கும் கதவுகளைத் திறந்து விடலாம். பயனடைய விரும்புபவர்கள் தங்கள் சொந்த விருப்பத்திலும் எண்ணத்திலும் முடிவெடுக்க வழி வகைகளை மேற்கொள்ளலாம்.

முகவரிகள் தேடி உலகம் முழுவதும் அலையும் முகிலினங்களான நமக்கு பலத்தைத் தரக்கூடியது பொருளாதாரமே..

யாழ் களம் இன்னும் விரியட்டுமே ...மூப்பர்கள் மேய்ப்பர்கள் தயவு செய்து கவனத்தில் கொள்ளுங்கள்

-அன்புடன் எல்லாள மஹாராஜா

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாளன் உங்கட எழுத்து கண்ணுக்க குத்துது.ஏன் சதாரண எழுதில எழுதினாலே எல்லோருக்கும் தெரியுது தானே.

FTSE 100 index has its worst year

The FTSE 100 has had to endure a turbulent time in 2008

The financial brutality of 2008 has been confirmed after the FTSE 100 index recorded its biggest annual decline since its inception in 1984.

Britain's main share index ended 2008 trading down 31.3% compared with a year earlier.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எல்லாளன் உங்கட எழுத்து கண்ணுக்க குத்துது.ஏன் சதாரண எழுதில எழுதினாலே எல்லோருக்கும் தெரியுது தானே.

FTSE 100 index has its worst year

The FTSE 100 has had to endure a turbulent time in 2008

The financial brutality of 2008 has been confirmed after the FTSE 100 index recorded its biggest annual decline since its inception in 1984.

Britain's main share index ended 2008 trading down 31.3% compared with a year earlier.

நமோ நாராயணா... நமோ நாராயணா...

"பெண் பாக்கப் போன இடத்தில

பெண்ணின் தங்கமான மனதைப் பார்க்காம

பல்லுக்குத்துது எண்டானாம் ஒருவன் "

அப்பிடிப் பாத்திருந்தா சாத்துக்கு ஒரு பூ...மணி... அக்கா கிடைத்திருக்க முடியுமே...முருகாவுக்கு...ஒரு வள்ளி.... :rolleyes:

பெண் பார்க்கும் பெண்களும் அப்படி நினைப்பதால் தான்...

எங்களுக்குள்ளும்...

பிள்ளையார்கள்

அனுமான்கள்.....இன்னும் கலியாணமாகாமல்

திரிலோக சஞ்சாரியின் கருத்தை ஏற்றுக் கொண்டோம்..

சுபஸ்து...

-எல்லாள மஹாராஜா

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாளன் நீங்கள் சொல்ல வந்த விசயம் நல்ல விசயம் தான், ஏன் ஓடுறியள்.

பங்குச் சந்தை பெரு வீழ்ச்சி கண்டிருக்கும் இந்த நேரத்தில் மலிவாக பங்குகளை வேண்டலாம்.ஆனால் இந்த வீழ்ச்சி மேலும் அதிகரிக்குமா அல்லது சந்தை மீளுமா என்று பெரிய பெரிய நிபுணர்களுக்கே தெரியாமாக் கிடக்கு.துணிவும் இழக்க காசும் இருந்தா இப்ப முதலிடலாம்.

நீங்கள் சொல்லுவதைப் போல் வரன் பவ்வட், ஜோர்ஜ் சோரஸ் போன்ற பெரும் முதலீட்டாளர்கள் எல்லாம் யூதர்கள் என்றே நினைக்கிறேன்.

அவர்கள் தலமுறை தலமுறையாக வட்டிக்குக் காசு கொடுத்து உழைத்தவர்கள்.அதனாலையே அய்ரோப்பாவில் வெறுக்கப்பட்டவர்கள் ஆனார்கள்.

முதலீடு வீடு வாங்குவது பற்றி சில தலைப்புக்கள் முன்னர் தொடங்கப்பட்டதாக நாபகம்,விடுமுறை காலத்தில் சில பொருளாதரக் கட்டுரைகளை எழுதலாம் என்று நினை திருக்கிறேன்.காலமும் நேரமும் கை கூடட்டும்.

உங்கள் வினை யூக்கத்தை வரவேற்கிறேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எல்லாளன் நீங்கள் சொல்ல வந்த விசயம் நல்ல விசயம் தான், ஏன் ஓடுறியள்.

பங்குச் சந்தை பெரு வீழ்ச்சி கண்டிருக்கும் இந்த நேரத்தில் மலிவாக பங்குகளை வேண்டலாம்.ஆனால் இந்த வீழ்ச்சி மேலும் அதிகரிக்குமா அல்லது சந்தை மீளுமா என்று பெரிய பெரிய நிபுணர்களுக்கே தெரியாமாக் கிடக்கு.துணிவும் இழக்க காசும் இருந்தா இப்ப முதலிடலாம்.

இது பற்றிய ஆலோசனைகளைத் தான் விடயம் தெரிந்த நிபுணர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்....

நீங்கள் சொல்லுவதைப் போல் வரன் பவ்வட், ஜோர்ஜ் சோரஸ் போன்ற பெரும் முதலீட்டாளர்கள் எல்லாம் யூதர்கள் என்றே நினைக்கிறேன்.

அவர்கள் தலமுறை தலமுறையாக வட்டிக்குக் காசு கொடுத்து உழைத்தவர்கள்.அதனாலையே அய்ரோப்பாவில் வெறுக்கப்பட்டவர்கள் ஆனார்கள்.

முதலீடு வீடு வாங்குவது பற்றி சில தலைப்புக்கள் முன்னர் தொடங்கப்பட்டதாக நாபகம்,விடுமுறை காலத்தில் சில பொருளாதரக் கட்டுரைகளை எழுதலாம் என்று நினை திருக்கிறேன்.காலமும் நேரமும் கை கூடட்டும்.

இதோ விடயங்கள் வெளிப்படுகின்றதே... இப்போ ஆங்கிலத்தில் மட்டுமல்லாது தமிழிலும் இது பற்றிய...புத்தகங்கள் ..ஏன் இணையப் பக்கங்களும் வரத் தொடங்கி விட்டன....

http://pangusanthai.com/

http://panguvaniham.wordpress.com/

http://sharehunter.wordpress.com/

http://top10shares.wordpress.com/

இவை சில இணையப் பக்கங்கள் ..பயனடையுங்கள்.... :rolleyes:

உங்கள் வினை யூக்கத்தை வரவேற்கிறேன்.

Link to post
Share on other sites

எல்லாளன் பிழையான நேரத்தில் ஆரம்பிக்கப்பட்ட நல்ல தலைப்பு. அவனவன் குடும்பத்தை மாய்த்து தானும் தனது உயிரை மாய்க்கும் அளவுக்கு உலகின் பொருளாதாரம் போய்க்கொண்டிருக்கும் நிலை தற்போது. என்றாலும் பங்கு சந்தை பற்றிய அறிவை , அனுபவங்களை வளர்த்துக்கொள்ளல் என்பது எப்போதும் ஒருவரிடம் ஒருவர் கற்றுக்கொள்ளல் என்பது ஆகும் . கற்றலுக்கு ஏது காலம் நேரம்? அது தொடர்ச்சியான process.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எல்லாளன் பிழையான நேரத்தில் ஆரம்பிக்கப்பட்ட நல்ல தலைப்பு. அவனவன் குடும்பத்தை மாய்த்து தானும் தனது உயிரை மாய்க்கும் அளவுக்கு உலகின் பொருளாதாரம் போய்க்கொண்டிருக்கும் நிலை தற்போது. என்றாலும் பங்கு சந்தை பற்றிய அறிவை , அனுபவங்களை வளர்த்துக்கொள்ளல் என்பது எப்போதும் ஒருவரிடம் ஒருவர் கற்றுக்கொள்ளல் என்பது ஆகும் . கற்றலுக்கு ஏது காலம் நேரம்? அது தொடர்ச்சியான process.

நுணாவிலான் வரவிற்கு நன்றி

என்னைப் பொறுத்தளவில் இது தான் சரியான தருணம் வேண்டுமென்றால் சிறிது (அமெரிக்க புது ஜனாதிபதி பதவு ஏற்பு வரை) பொறுத்துக் கொள்ளலாம்...

பங்குச் சந்தையின் மூலம் (மட்டும்) பெரும் மில்லியனரான லாரன் பப்பெட் சொல்லுகின்றார்...

"மற்றவர்கள் ..பாயும் போது நீ பயம் கொள்

மற்றவர்கள் பயம் கொள்ளும் போது நீ பாயத் தயாராயிரு ..."

இது தான் இயற்கை... "வல்லன வாழும்" கூர்ப்புத் தத்துவம்.....

இதை ஏன் தமிழ் மக்களின் எழுச்சிக்குப் பயன் படுத்திக் கொள்ளக் கூடாது....

"நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்"

Link to post
Share on other sites

பங்குச் சந்தையின் மூலம் (மட்டும்) பெரும் மில்லியனரான லாரன் பப்பெட் சொல்லுகின்றார்...

"மற்றவர்கள் ..பாயும் போது நீ பயம் கொள்

மற்றவர்கள் பயம் கொள்ளும் போது நீ பாயத் தயாராயிரு ..."

உண்மை உண்மை உண்மை. இது தான் IBM இன் தாரக மந்திரம். 100 வருடங்களுக்கு மேல் வியாபார உலகில் நிலைத்து நிற்பவர்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாளன் நீங்கள் எழுதியுள்ளது ஆக்கபூர்வமான விடயம். அனைவரும் கவனிக்க வேண்டியது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எல்லாளன் நீங்கள் எழுதியுள்ளது ஆக்கபூர்வமான விடயம். அனைவரும் கவனிக்க வேண்டியது.

கவனிப்பதோடு மட்டுமன்றி இதைக் காத்திரமானதாக்க வேண்டும் யாழ்பாடி ... உங்கள் கைகளில்த்தான் (மேய்ப்பர்கள்) இது இருக்கின்றது... :rolleyes:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

:D பொதுவாக வணிகத்தில் தினவர்த்தகம், முதலீடு என்று இருவகைப்படும்.

முதலீடு என்பது, தமது தேவைக்கு மேல் இருக்கும் பணத்தை வைத்து சில நல்ல நிறுவனங்களின் பங்குகளை வாங்கி வைப்பதே. அதற்க்கு கால அவகாசங்கள் ஏதும் இல்லை. மாதங்களும் அல்லது வருடங்களும் கூட ஆகலாம். கண்டிப்பாக முதலீடு என்ற வகையில் சந்தையில் பணத்தை போட்டவர்களுக்கு என்றும் நஷ்டம் இல்லை. இப்பொழுது இருக்கும் நிலையில், லாப அளவு வேண்டுமென்றால் மாறுபடும். ஆனால் கண்டிப்பாக லாபம் உண்டு.

அடுத்து தினவர்த்தகம். இது தான் ஒரே நாளில் ஆண்டியை அரசனாகவும், அரசனை ஆண்டியாகவும் மற்றும். பெரும்பாலான வணிகர்கள் பணத்தை இழந்தது இதில் தான். சூதாட்டம் என்று பெயர் பெற்று விளங்குவதும் இது தான். ஆனால் ஒரு சில எளிய வழிமுறைகளை நாம் கடைபிடித்தால், தினவர்த்தகத்தில் கிடைக்கும் லாபம் வேறு எதிலும் கிடைக்காது. அதை பற்றி கீழே..

வணிகம் செய்யும் பொழுது கண்டிப்பாக நாம் கடைபிடிக்க வேண்டியவை.. :lol::(

* Stop loss கண்டிப்பா follow பண்ணனும்.

* பொறுமை.

* சுயக்கட்டுப்பாடு.

* முடிவெடுக்கும் திறன்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • 4 நாள்களில் 140 மில்லியன் வருமானம்   இலங்கையிலுள்ள அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளின்; மொத்த வருமானமானது, கடந்த 4 நாள்களில் 140 மில்லியன் ரூபாய் என வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய கடந்த 8ஆம் திகதியிலிருந்து 11ஆம் திகதி வரை, இந்த வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், 9,10ஆம் திகதிகளில் மாத்திரம் 70 மில்லியன் ரூபாயும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழ்- சிங்கள புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்லவும் சுற்றுலா செல்வோர் அதிவேக நெடுங்சாலைகiளைப் பயன்படுத்தியமையாலேயே இந்த வருமானம் கிடைக்கப்பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.  Tamilmirror Online || 4 நாள்களில் 140 மில்லியன் வருமானம்  
  • மீண்டும் பாராளுமன்றம் செல்லும் ரணில்...   ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதத்திற்குள் கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்தை ஏற்றுக்கொள்வார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் ஒருமித்த முடிவின் பேரில் ரணில் விக்ரமசிங்க எதிர்காலத்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த தயாராகி வருவதாகவும் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். காலி பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.   மீண்டும் பாராளுமன்றம் செல்லும் ரணில்... (adaderana.lk)    
  • இந்த வீடியோ பார்த்த பின்னர், தமிழகத்தின் அடுத்த முதல்வர், எடப்பாடியா? ஸ்டாலினா என்று உறுதியாக சொல்ல முடியவில்லை. வேறு கட்சிகளில் இருந்து ஓடி வந்தவர்களை நம்புவது ஆபத்தானது. செந்தில் பாலாஜியின், '11 மணிக்கு பதவி ஏற்பு, 11.05 க்கு மண் அள்ள போங்கள், அதிகாரிகள் தடுத்தால், அவர்கள் இருக்க மாட்டார்கள், நான் பார்த்துக்கொள்கிறேன்' கதை, வேண்டும் என்று அளவாக சொல்லி செய்த ஆப்பு என்று வேறு வீடியோவில் சொல்லப்படுகிறது. இவர், தங்கத்தமிழ்பாண்டியன் அனைவரும், mla ஆனபின் கட்சி பாய தயங்க மாட்டார்கள்.  அதேபோல, ராசாவின், எடப்பாடி தாயார் கதை, கூட, அவரை வழக்கில் இருந்து தப்ப வைக்கும் நோக்கத்துடன் பிஜேபி போட்ட டீல் என்கிறார்கள். ஸ்டாலின், விக்கினை, கழட்டி, தலையை சொறிந்து கொள்வார் என்று நினைக்கிறேன்.  
  • சுவி அண்ணா குருட் ல‌க் சில‌து உங்க‌ளுக்கு இர‌ண்டு புள்ளிய‌ பெற்று த‌ர‌க் கூடும் ஹா ஹா 😀😁
  • இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க டக்ளஸ் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் – செல்வம்     இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க கடற்தொழில் அமைச்சர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டு செல்கின்றது. இதனால் எமது மீனவர்கள் பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். போர்க் காலத்தின்போது எமது மீனவர்கள் குறுகிய கடல் பரப்பில் கடற் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இவ்வாறான ஒரு பிரச்சினை உள்ளபோது கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளதாக வெளிப்படையாக கூறியுள்ளார். இந்திய டேலர் படகுகள் உட்பட படகுகளுக்கு அனுமதி வழங்குவதாக தெரிவித்துள்ளார். எனினும் குறித்த விடயம் ஆராயப்பட வேண்டிய விடயம். வெளிப்படையாக இந்த விடயங்களை தெரிவிக்கின்றபோது தமிழ் நாட்டு மக்களுக்கும் எங்களுக்கும் இடையில் ஒரு முறுகல் நிலையை ஏற்படுத்தும் சூழ்நிலை காணப்படும். தமிழ் நாட்டை பொறுத்தவரையில் எமது இனத்தின் பிரச்சினை சார்பாக பலர் தீக்குழித்து உள்ளனர். பலர் தற்கொலை செய்துள்ளனர். தமிழ் நாட்டு மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அந்த வகையிலே எமது இனப்பிரச்சினைக்கு அவர்களின் குரல் இன்றியமையாதது. இந்த நிலையில் தீர்க்கப் போவதாக கூறுகின்ற இந்த சிறிய விடயங்களை கூறுகின்றபோது இரு தரப்புக்களும் கருத்துக்களையும் தெரிவிக்கின்றபோது இரு சமூகத்திற்கு இடையிலும் ஒரு பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும். எனவே இந்திய இலங்கை மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக கடற்தொழில் அமைச்சர் சிந்திக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார். இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க டக்ளஸ் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் – செல்வம் – Athavan News
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.