Jump to content

பொருள் செய்ய விரும்பு


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

யாழ் களம் தனியே பொழுது போக்குக் களமாக மட்டுமல்லாது தற்கால உலக ஒழுங்கில் கட்டமைக்கப்பட்டிருக்கும் போட்டாபோட்டிகளுடன் வாழ தமிழ் மக்களுக்கும் வழி காட்டும் களமாக இருக்க வேண்டுமென்பது என் வேணவா.

பொருளாதாரத்தில் மேம்பட்டிருக்கும் சமூகங்கள் நினைத்ததைச் சாதிக்கும் வல்லமை கொண்டவை. உதாரணம் யூத சமூகம்... ஆதி கால இஸ்ரேல் என்ற ஒரு நாட்டின் இருப்பே சர்ச்சைக்குரியதாக இருக்கவே வெறும் இதிகாசக் கதைகளின் வழிகாட்டலைப் பின் பற்றியே ஒரு நாடு உருவாக்கப்பட்டதற்கு அச்சமூகம் கொண்டிருந்த பொருளாதார மேம்பாடே காரணமாகியது.

நம் தமிழ்ச் சமூகத்திலும் காத்திரமான கட்டியெழுப்பப்பட வேண்டியபணிகள் முன்னிருக்கின்றன. ஒரு சமூகத்தின் விலாசம் என்பது அதன் பொருளாதார மேன்மையே..

பங்கு வர்த்தகம்" பற்றிப் பேசுகின்றார்கள்.நம் சமூகத்திலும் அதில் ஆர்வம் உள்ளவர்களும் சாணக்கியம் உள்ளவர்களும் இருக்கக்கூடும். அவர்களின் பங்களிப்பை உள்வாங்களாம். அதனால் பயனடையக் கூடியவர்கள் அடையலாம்.

மற்றும் முதலீட்டுத் துறைகள் பற்றி தெரிந்தவர்களுக்கும் கதவுகளைத் திறந்து விடலாம். பயனடைய விரும்புபவர்கள் தங்கள் சொந்த விருப்பத்திலும் எண்ணத்திலும் முடிவெடுக்க வழி வகைகளை மேற்கொள்ளலாம்.

முகவரிகள் தேடி உலகம் முழுவதும் அலையும் முகிலினங்களான நமக்கு பலத்தைத் தரக்கூடியது பொருளாதாரமே..

யாழ் களம் இன்னும் விரியட்டுமே ...மூப்பர்கள் மேய்ப்பர்கள் தயவு செய்து கவனத்தில் கொள்ளுங்கள்

-அன்புடன் எல்லாள மஹாராஜா

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாளன் உங்கட எழுத்து கண்ணுக்க குத்துது.ஏன் சதாரண எழுதில எழுதினாலே எல்லோருக்கும் தெரியுது தானே.

FTSE 100 index has its worst year

The FTSE 100 has had to endure a turbulent time in 2008

The financial brutality of 2008 has been confirmed after the FTSE 100 index recorded its biggest annual decline since its inception in 1984.

Britain's main share index ended 2008 trading down 31.3% compared with a year earlier.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எல்லாளன் உங்கட எழுத்து கண்ணுக்க குத்துது.ஏன் சதாரண எழுதில எழுதினாலே எல்லோருக்கும் தெரியுது தானே.

FTSE 100 index has its worst year

The FTSE 100 has had to endure a turbulent time in 2008

The financial brutality of 2008 has been confirmed after the FTSE 100 index recorded its biggest annual decline since its inception in 1984.

Britain's main share index ended 2008 trading down 31.3% compared with a year earlier.

நமோ நாராயணா... நமோ நாராயணா...

"பெண் பாக்கப் போன இடத்தில

பெண்ணின் தங்கமான மனதைப் பார்க்காம

பல்லுக்குத்துது எண்டானாம் ஒருவன் "

அப்பிடிப் பாத்திருந்தா சாத்துக்கு ஒரு பூ...மணி... அக்கா கிடைத்திருக்க முடியுமே...முருகாவுக்கு...ஒரு வள்ளி.... :rolleyes:

பெண் பார்க்கும் பெண்களும் அப்படி நினைப்பதால் தான்...

எங்களுக்குள்ளும்...

பிள்ளையார்கள்

அனுமான்கள்.....இன்னும் கலியாணமாகாமல்

திரிலோக சஞ்சாரியின் கருத்தை ஏற்றுக் கொண்டோம்..

சுபஸ்து...

-எல்லாள மஹாராஜா

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாளன் நீங்கள் சொல்ல வந்த விசயம் நல்ல விசயம் தான், ஏன் ஓடுறியள்.

பங்குச் சந்தை பெரு வீழ்ச்சி கண்டிருக்கும் இந்த நேரத்தில் மலிவாக பங்குகளை வேண்டலாம்.ஆனால் இந்த வீழ்ச்சி மேலும் அதிகரிக்குமா அல்லது சந்தை மீளுமா என்று பெரிய பெரிய நிபுணர்களுக்கே தெரியாமாக் கிடக்கு.துணிவும் இழக்க காசும் இருந்தா இப்ப முதலிடலாம்.

நீங்கள் சொல்லுவதைப் போல் வரன் பவ்வட், ஜோர்ஜ் சோரஸ் போன்ற பெரும் முதலீட்டாளர்கள் எல்லாம் யூதர்கள் என்றே நினைக்கிறேன்.

அவர்கள் தலமுறை தலமுறையாக வட்டிக்குக் காசு கொடுத்து உழைத்தவர்கள்.அதனாலையே அய்ரோப்பாவில் வெறுக்கப்பட்டவர்கள் ஆனார்கள்.

முதலீடு வீடு வாங்குவது பற்றி சில தலைப்புக்கள் முன்னர் தொடங்கப்பட்டதாக நாபகம்,விடுமுறை காலத்தில் சில பொருளாதரக் கட்டுரைகளை எழுதலாம் என்று நினை திருக்கிறேன்.காலமும் நேரமும் கை கூடட்டும்.

உங்கள் வினை யூக்கத்தை வரவேற்கிறேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எல்லாளன் நீங்கள் சொல்ல வந்த விசயம் நல்ல விசயம் தான், ஏன் ஓடுறியள்.

பங்குச் சந்தை பெரு வீழ்ச்சி கண்டிருக்கும் இந்த நேரத்தில் மலிவாக பங்குகளை வேண்டலாம்.ஆனால் இந்த வீழ்ச்சி மேலும் அதிகரிக்குமா அல்லது சந்தை மீளுமா என்று பெரிய பெரிய நிபுணர்களுக்கே தெரியாமாக் கிடக்கு.துணிவும் இழக்க காசும் இருந்தா இப்ப முதலிடலாம்.

இது பற்றிய ஆலோசனைகளைத் தான் விடயம் தெரிந்த நிபுணர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்....

நீங்கள் சொல்லுவதைப் போல் வரன் பவ்வட், ஜோர்ஜ் சோரஸ் போன்ற பெரும் முதலீட்டாளர்கள் எல்லாம் யூதர்கள் என்றே நினைக்கிறேன்.

அவர்கள் தலமுறை தலமுறையாக வட்டிக்குக் காசு கொடுத்து உழைத்தவர்கள்.அதனாலையே அய்ரோப்பாவில் வெறுக்கப்பட்டவர்கள் ஆனார்கள்.

முதலீடு வீடு வாங்குவது பற்றி சில தலைப்புக்கள் முன்னர் தொடங்கப்பட்டதாக நாபகம்,விடுமுறை காலத்தில் சில பொருளாதரக் கட்டுரைகளை எழுதலாம் என்று நினை திருக்கிறேன்.காலமும் நேரமும் கை கூடட்டும்.

இதோ விடயங்கள் வெளிப்படுகின்றதே... இப்போ ஆங்கிலத்தில் மட்டுமல்லாது தமிழிலும் இது பற்றிய...புத்தகங்கள் ..ஏன் இணையப் பக்கங்களும் வரத் தொடங்கி விட்டன....

http://pangusanthai.com/

http://panguvaniham.wordpress.com/

http://sharehunter.wordpress.com/

http://top10shares.wordpress.com/

இவை சில இணையப் பக்கங்கள் ..பயனடையுங்கள்.... :rolleyes:

உங்கள் வினை யூக்கத்தை வரவேற்கிறேன்.

Link to post
Share on other sites

எல்லாளன் பிழையான நேரத்தில் ஆரம்பிக்கப்பட்ட நல்ல தலைப்பு. அவனவன் குடும்பத்தை மாய்த்து தானும் தனது உயிரை மாய்க்கும் அளவுக்கு உலகின் பொருளாதாரம் போய்க்கொண்டிருக்கும் நிலை தற்போது. என்றாலும் பங்கு சந்தை பற்றிய அறிவை , அனுபவங்களை வளர்த்துக்கொள்ளல் என்பது எப்போதும் ஒருவரிடம் ஒருவர் கற்றுக்கொள்ளல் என்பது ஆகும் . கற்றலுக்கு ஏது காலம் நேரம்? அது தொடர்ச்சியான process.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எல்லாளன் பிழையான நேரத்தில் ஆரம்பிக்கப்பட்ட நல்ல தலைப்பு. அவனவன் குடும்பத்தை மாய்த்து தானும் தனது உயிரை மாய்க்கும் அளவுக்கு உலகின் பொருளாதாரம் போய்க்கொண்டிருக்கும் நிலை தற்போது. என்றாலும் பங்கு சந்தை பற்றிய அறிவை , அனுபவங்களை வளர்த்துக்கொள்ளல் என்பது எப்போதும் ஒருவரிடம் ஒருவர் கற்றுக்கொள்ளல் என்பது ஆகும் . கற்றலுக்கு ஏது காலம் நேரம்? அது தொடர்ச்சியான process.

நுணாவிலான் வரவிற்கு நன்றி

என்னைப் பொறுத்தளவில் இது தான் சரியான தருணம் வேண்டுமென்றால் சிறிது (அமெரிக்க புது ஜனாதிபதி பதவு ஏற்பு வரை) பொறுத்துக் கொள்ளலாம்...

பங்குச் சந்தையின் மூலம் (மட்டும்) பெரும் மில்லியனரான லாரன் பப்பெட் சொல்லுகின்றார்...

"மற்றவர்கள் ..பாயும் போது நீ பயம் கொள்

மற்றவர்கள் பயம் கொள்ளும் போது நீ பாயத் தயாராயிரு ..."

இது தான் இயற்கை... "வல்லன வாழும்" கூர்ப்புத் தத்துவம்.....

இதை ஏன் தமிழ் மக்களின் எழுச்சிக்குப் பயன் படுத்திக் கொள்ளக் கூடாது....

"நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்"

Link to post
Share on other sites

பங்குச் சந்தையின் மூலம் (மட்டும்) பெரும் மில்லியனரான லாரன் பப்பெட் சொல்லுகின்றார்...

"மற்றவர்கள் ..பாயும் போது நீ பயம் கொள்

மற்றவர்கள் பயம் கொள்ளும் போது நீ பாயத் தயாராயிரு ..."

உண்மை உண்மை உண்மை. இது தான் IBM இன் தாரக மந்திரம். 100 வருடங்களுக்கு மேல் வியாபார உலகில் நிலைத்து நிற்பவர்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாளன் நீங்கள் எழுதியுள்ளது ஆக்கபூர்வமான விடயம். அனைவரும் கவனிக்க வேண்டியது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எல்லாளன் நீங்கள் எழுதியுள்ளது ஆக்கபூர்வமான விடயம். அனைவரும் கவனிக்க வேண்டியது.

கவனிப்பதோடு மட்டுமன்றி இதைக் காத்திரமானதாக்க வேண்டும் யாழ்பாடி ... உங்கள் கைகளில்த்தான் (மேய்ப்பர்கள்) இது இருக்கின்றது... :rolleyes:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

:D பொதுவாக வணிகத்தில் தினவர்த்தகம், முதலீடு என்று இருவகைப்படும்.

முதலீடு என்பது, தமது தேவைக்கு மேல் இருக்கும் பணத்தை வைத்து சில நல்ல நிறுவனங்களின் பங்குகளை வாங்கி வைப்பதே. அதற்க்கு கால அவகாசங்கள் ஏதும் இல்லை. மாதங்களும் அல்லது வருடங்களும் கூட ஆகலாம். கண்டிப்பாக முதலீடு என்ற வகையில் சந்தையில் பணத்தை போட்டவர்களுக்கு என்றும் நஷ்டம் இல்லை. இப்பொழுது இருக்கும் நிலையில், லாப அளவு வேண்டுமென்றால் மாறுபடும். ஆனால் கண்டிப்பாக லாபம் உண்டு.

அடுத்து தினவர்த்தகம். இது தான் ஒரே நாளில் ஆண்டியை அரசனாகவும், அரசனை ஆண்டியாகவும் மற்றும். பெரும்பாலான வணிகர்கள் பணத்தை இழந்தது இதில் தான். சூதாட்டம் என்று பெயர் பெற்று விளங்குவதும் இது தான். ஆனால் ஒரு சில எளிய வழிமுறைகளை நாம் கடைபிடித்தால், தினவர்த்தகத்தில் கிடைக்கும் லாபம் வேறு எதிலும் கிடைக்காது. அதை பற்றி கீழே..

வணிகம் செய்யும் பொழுது கண்டிப்பாக நாம் கடைபிடிக்க வேண்டியவை.. :lol::(

* Stop loss கண்டிப்பா follow பண்ணனும்.

* பொறுமை.

* சுயக்கட்டுப்பாடு.

* முடிவெடுக்கும் திறன்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • லங்கா இ நியூஸ் எனும் இணையவழி ஆங்கில ஊடகத்திற்கு கருணா 2009, சித்திரை 18 இல் வழங்கிய செவ்வி பாகம் - 01   கேள்வி : ஒருமுறை நீங்கள் ஆயுதங்களை வைத்திருப்பதாகக் கூறினீர்கள், இப்போது இல்லையென்கிறீர்கள், நாம் எதனை நம்புவது? கருணா : இது தவறான செய்தியாகும். நாம் புலிகளிடமிருந்து பிரிந்துசென்றபோது எமது பாதுகாப்பிற்காக ஆயுதங்களை வைத்திருந்தோம். ஆனால், நான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்றபின்னர் எனது தோழர்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டார்கள். இன்று ஆயுதங்களைக் கொண்டிருப்பது பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்புத்தான். கேள்வி : எதற்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்தீர்கள்?  கருணா: அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் புலிகளுக்கு எதிரானவர்களே. ஆனால் என்ன செய்யவேண்டும் என்பதுபற்றி அவர்களுக்கு தெளிவான நோக்கம் கிடையாது. தமிழ்க் கட்சிகள் எல்லாம் சிறு சிறு கழகங்கள் போல செயற்படுகிறார்கள். ஆகவே தான் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பெரிய கட்சியான சுதந்திரக் கட்சியில் இணைந்தேன். நான் சுதந்திரக் கட்சியில் இணைந்தபின்னர் எனது அமைப்பிலிருந்த 1000 உறுப்பினர்களை இலங்கை ராணுவத்தில் சேர்த்துவிட்டேன். அவர்களில் 300 பேர்வரையில் தற்போது தொப்பிகல காட்டுப்பகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் 1500 பேர் ராணுவத்துடன் இணைவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். இவர்களுள் 1200 பேரை சேர்க்கும் முயற்சிகள் பூர்த்தியடைந்துவிட்டன. இதேபோல இன்னொரு பிரிவினர் இலங்கைப் பொலீஸ் சேவையில் இணைய ஆயத்தமாகி வருகின்றனர். கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டிருந்த எனது அலுவலகங்கள் அனைத்துமே அப்பகுதிகளுக்கான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. அவ்வாறான 80 அலுவலகங்கள் உள்ளன, இவற்றுக்கான பாதுகாப்பினை பொலீஸார் வழங்கிவருகின்றனர். சுமார் 25 வருடங்களுக்குப் பின்னர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தினை மட்டக்களப்பு நகரில் திறந்துவைத்தார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு சில போராளிகளை மட்டுமே இன்று கொண்டிருக்கிறது. கேள்வி : உங்களின் அமைச்சரவை அந்தஸ்த்தினைக் கொண்டு மக்களுக்கு எவ்வகையான சேவைகளை வழங்கியுள்ளீர்கள்? கருணா : எனக்கு வழங்கப்பட்டிருக்கும் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் மீள் கட்டுமான அமைச்சினை நான் பெரிதும் மதிக்கிறேன். கடந்த 25 ஆண்டுகளாக பிளவுபட்டிருக்கும் சிங்கள, தமிழ், முஸ்லீம் சமூகங்களை இணைக்க இந்த அமைச்சினைப் பாவிப்பேன். தேசிய ஒருமைப்பாட்டிற்கான முக்கிய தடைக்கல் மொழியாகும். தமிழர்கள் சிங்கள மொழியையும், சிங்களவர்கள் தமிழ் மொழியையும் கற்பது அவசியம். வெளிநாட்டு உதவிகள் மூலம் எனது அமைச்சு இதுதொடர்பான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஜனாதிபதிக்கு இதுதொடர்பாக நான் தெரிவித்திருப்பதோடு, அமைச்சரவை அங்கீகாரத்துடன் கல்வியமைச்சிற்கு எனது ஆலோசனைகளை வழங்கவிருக்கிறேன். ராணுவத்தினரை தமிழ் மக்கள் நேசிக்கிறார்கள். ஆனால் மொழிப்பிரச்சினையால் அவர்களுக்கிடையேயான உறவு தடைப்படுகிறது. ஆகவே ராணுவ வீரர்களுக்குத் தமிழ் மொழியினைக் கற்பிப்பதை நான் வழிமொழிகிறேன். புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிய முன்னாள் போராளிகளுக்கான புணர்வாழ்வினை எனது அமைச்சினூடாக நான் செய்யவிருக்கிறேன். இவ்வாறான 6000 முன்னாள்ப் போராளிகள் கிழக்கு மாகாணத்தில் இருக்கிறார்கள். இதேபோல பலர் வடமாகாணத்திலும் இருக்கிறார்கள், அவர்களின் விபரங்களையும் சேகரித்து வருகிறோம். கேள்வி : நான்காவது ஈழப்போரில் புலிகளின் திருப்புமுனையான தோல்வியென்று எதனைக் கருதுகிறீர்கள்? கருணா : முதலாவது திருப்புமுனையான தோல்வி நான் புலிகளிடமிருந்து பிரிந்துசென்றபோது ஏற்பட்டது. பிரபாகரனுக்கு ஏற்பட்ட மிகப்பெரும் இழப்பாக இதனை நான் கருதுகிறேன். இரண்டாவது திருப்புமுனை, சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வினை பிரபாகரன் ஏற்க மறுத்தது. ஒஸ்லோவில் சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வொன்றிற்கு சம்மதிப்பதுபற்றி பாலசிங்கம் தயங்கியபோது, நான் அவரை தைரியப்படுத்தி அதனைச் சம்மதிக்க வைத்தேன். முதலில் கையெழுத்து இடுங்கள், பின்னர் பிரபாகரனுக்குத் தெரிவிக்கலாம் என்று நான் அவரிடம் கூறினேன். இதுபற்றிக் கேள்விப்பட்ட பிரபாகரன் அந்த ஒப்பந்தத்தினைக் கசக்கி எறிந்ததுடன், எங்களையும் துரோகிகள் என்று கடிந்துகொண்டார். மக்கள் போரற்ற சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வொன்றினையே விரும்பினார்கள். நான்காம் ஈழப்போரின் ஆரம்பித்திலேயே போரிடும் விருப்பினை புலிகள் இழந்துவிட்டிருந்தார்கள். அது ஒரு தேவையற்ற போராக அவர்கள் கருதினார்கள்.  மூன்றாவது முக்கிய திருப்புமுனை ராணுவம் கைக்கொண்ட புதிய போர் உத்திகளால் ஏற்பட்டது. அவர்கள் தமது ராணுவ நடவடிக்கைக்கு "ஜயசிக்குரு" என்று பெயர்கள் இட்டு அழைக்கவில்லை. சிறிது சிறிதாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களைக் கைப்பற்றிக்கொண்டு முன்னேறிச் சென்றார்கள்.  கேள்வி : தமிழ் மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் அவர்களின் போராட்டம் எவ்வகையான வடிவத்தினை எதிர்காலத்தில் எடுக்கும் என்று நினைக்கிறீர்கள்? கருணா : போருக்குப் பின்னரான காலத்தில், மாகாணசபை அடிப்படையிலான தீர்வே சாத்தியமானது. ஆனால், பொலீஸ் அதிகாரம் போன்ற தேவையற்ற கோரிக்கைகளை முன்வைப்பதை தமிழர்கள் மறந்துவிடவேண்டும். அப்படி தமிழர்கள் கோருமிடத்து இரு சமூகங்களுக்கிடையே மீண்டும் சந்தேகங்களும், சிக்கல்களும் உருவாகும். இப்போது தமிழர்களுக்குத் தேவையானது சுதந்திரமான நடமாட்டமும், அபிவிருத்தியும் மட்டும் தான். அபிவிருத்தியை நாம் ஆரம்பித்துவிட்டோம். பிணக்குகளையும், சிக்கல்களையும் தீர்க்க காலம் எடுக்கும்.  உதாரணத்திற்கு, புலிகள் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பகாலங்களில் காலூன்றியபோது தமிழர்களுக்கு அங்கு ஒரு பிரச்சினையும் இருக்கவில்லை. அரசியல் காரணங்களுக்காக ஒரு தமிழரும் துன்புறுத்தப்படவில்லை. 1983 ஆம் ஆண்டு ராணுவம் மீதான தாக்குதலின் பின்னர் இடம்பெற்ற வன்முறைகளையடுத்தே கொழும்பிலிருந்து தமிழர்கள் மட்டக்களப்பிற்கு வந்திறங்கினார்கள். இவ்வாறு வந்திறங்கிய தமிழர்களைப் பாவித்து புலிகள் இனவாதத்தினைப் பரப்பினார்கள். அதன் பின்னர் நான் உட்பட 15 பேர் புலிகளுடன் இணைந்தோம். இவ்வாறே யாழ்ப்பாணத்திலும் சிங்களவகர்ளுக்கெதிரான இனவாதத்தினை புலிகள் பரப்பினார்கள். இதனாலேயே இரு சமூகங்களுக்கிடையிலான விரிசல் ஏற்பட்டது. ஆனால், இதனைச் சரிசெய்யும் முயற்சியில் நாம் இறங்கியிருக்கிறோம்.
  • குருட் லக் கிடையாது .....குட் லக் என்று சொல்லவேண்டும் பையா......!   😁
  • நன்றாக இருக்கின்றது.பகிர்வுக்கு நன்றி சகோதரி.......! இதில் வெட்கப்பட ஒன்றுமே கிடையாது தனி......நான்கூட தவளை,நத்தை, பாம்பு சாப்பிட்டததில்லை. அதுக்காக நான் வெட்கப்பட்டதில்லை. ஒடியல் கூல் செய்வது மிக சுலபம்.உங்கள் ஊரிலேயே அத்தனை சாமான்களும் கிடைக்கும்.அதிலும் தரமான கடலுணவு நிறைய கிடைக்கும்.ஒடியல் மா, பெரிய மீன்தலை,நண்டு,பிலாக்கொட்டை போன்றவை மிக முக்கியம். குடிக்கிறதுக்கு அக்கம்பக்கத்தில் ஐஞ்சாறு பேர், குஞ்சு குருமான்களையும் (பொடிப்பிள்ளைகள்)கூட்டு சேர்த்து கொள்ளவும்.பெரிய பிலாவிலைகள் பொறுக்கி கோலி ஓரத்தை ஈர்க்குகளால் குத்தி வைக்கவும்.அல்லது வடலி ஓலையில் சிறிய பிளா கோலி வைக்கவும். மூக்கால் ஒழுகுவதை துடைக்க பழைய சரத்தை கிழித்து தயாராய் வைக்கவும். முற்றத்தில் வட்டமாக இருந்து நிலவைப் பார்த்துக்கொண்டு பகிடிகதைகள் கதைத்துக்கொண்டு  குடிக்க அந்தமாதிரி இருக்கும். கூழ்குடிக்க இன்றே தயாராகவும். இன்னும் ஆறேழுநாளில் பௌர்ணமி வந்திடும். மறக்காமல் பிள்ளையை அப்பம்மாவிடம் குடுத்து விடவும்......!   👍  
  • நான் சிறுவர்களைக் கடத்துவதாகக் கூறுவது புலிகளாலும், புலம்பெயர் தமிழராலும் செய்யப்படும் விஷமப் பிரச்சாரம் : கருணா  கருணாவின் கூற்றுப்படி அவரது கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குழு இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் 16 அலுவலகங்களை நடத்தி வருகிறது. உங்களின் அரசியல் அலுவலகங்களில் கடத்தப்பட்ட சிறுவர்களை அவர்களின் பெற்றோர்கள் கண்டிருக்கிறார்களே என்று கேட்டதற்கு, "எமது அரசியல் அலுவலகங்களுக்குள் எவரும் வரலாம், நாம் எதனையும் மறைக்கவில்லை, ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திற்கு நிகரான வெளிப்படைத் தன்மையினை நாம் எமது அரசியல் அலுவலகங்களில் பேணிவருகிறோம். எனது அலுவலகங்களில் 20 வயதிற்குக் குறைந்த எவரையும் நாம் கொண்டிருக்கவில்லையென்பதை என்னால் உறுதிபடக் கூறமுடியும். எவரும் எமது அலுவலகத்தினை வந்து பார்வையிட முடியும்" என்று அவர் பதிலளித்தார். ஆனால், உங்களின் அமைப்பு பலநூற்றுக்கணக்கான சிறுவர்களைக் கடத்திச்சென்று கட்டாய ராணுவப் பயிற்சியில் ஈடுபடுத்திவருவதாக கூறப்படுகிறதே என்று கேட்டபோது, "இது புலிகளாலும், அவர்களுக்குச் சார்பான புலம்பெயர் தமிழர்களாலும் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் விஷமப் பிரச்சாரமாகும், இதில் உண்மையெதுவுமில்லை" என்று அவர் சிரித்துக்கொண்டே கூறினார். ஐ நா வின் சிறுவர் நலன்களுக்கான விசேட தூதர் அலன் ரொக் கருணா குழுமீது முன்வைத்திருக்கும் ஆணித்தரமான குற்றச்சாட்டுக்கள் பற்றிக் கேட்டபோது கோபமடைந்த கருணா, "நிச்சயமாக அலன் ரொக் புலிகளின் பின்புலத்துடன் தான் அரசுக்கும் தனக்கும் களங்கத்தினை ஏற்படுத்துகிறார்" என்று கூறினார். "புலிகள் போலியான குடும்பங்களைத் தயார் செய்து அலன் ரொக்கின் முன்னால் கடத்தப்பட்ட சிறுவர்களின் தாய்மார்கள் என்று நாடகமாட வைத்திருக்கின்றனர். அலன் ரொக் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் எவையுமே அவரிடம் இல்லை. அவர் எமது அலுவலகத்திற்கு வருகை தந்தபோது இதுபற்றி தெளிவாக அவருக்கு விளக்கியிருக்கிறேன்" என்று அவர் மேலும் கூறினார். மனிதவுரிமைக் கண்காணிப்பகத்துடனான தனது உரையாடல் நடைபெற்று 5 நாட்களின் பின்னர் யுத்தங்களில் இன்னல்களை அனுபவிக்கும் சிறுவர்கள் நலன் தொடர்பான ஐ நா வின் விசேட பிரதிநிதி ராதிகா குமாரசாமியுடன் கருணா பேசியிருந்தார். இந்த பிரதிநிதியால் ஐ நா வின் பாதுகாப்புக் கவுன்சிலில் முன்வைக்கப்பட்ட உள்நாட்டு யுத்தங்களில் சிறுவர்களைப் பாவிக்கும் அமைப்புக்களின் பட்டியலில் கருணாவின் பெயரும் உள்ளடக்கப்பட்டதுபற்றிப் பேசவே கருணா ராதிகாவுடன் தொடர்புகொண்டிருந்தார். ஐ நா வின் அறிக்கைப்படி கருணா தான் சிறுவர்களை இணைப்பதைக் கைவிடுவதாகவும், யுனிசெப் அமைப்பின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, சிறுவர் நலன் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்போவதாகவும்  ஒத்துக்கொண்டிருந்தார். சிறுவர் நலன் பேணுதல் தொடர்பாக யுனிசெப் அமைப்பிற்கும் தனது குழுவிற்கும் இடையிலான இணக்கப்பாட்டின்படி பின்வரும் விடயங்களைத் தான் செய்யவிருப்பதாக கருணா ஒத்துக்கொண்டிருந்தார். 1. கருணா குழுவின் அனைத்துத் தளபதிகளுக்கும், பொறுப்பாளர்களுக்கும் சிறுவர்களை இணைப்பதோ, யுத்தத்தில் ஈடுபடுத்துவதோ அனுமதிக்கப்பட முடியாது என்று புதிய கட்டுப்பாடுகளை அறிவிப்பது. 2. சிறுவர் நலன் தொடர்பான பயிற்சிகளை சர்வதேச அமைப்புக்களின் உதவியோடு கருணா குழுவின் பொறுப்பாளர்களுக்கு அளிப்பது. 3. யுனிசெப் மற்றும் ஏனைய மனிதவுரிமை அமைப்புக்களின் உதவியோடு கருணா குழுவில் உறுப்பினர்களாக இருக்கும் சிறுவர்களை மீண்டும் அவர்களது குடும்பங்களிடமே கையளிப்பது. 4. தனது முகாம்களை பார்வையிடுவதற்கான அனுமதியினை யுனிசெப் அமைப்பிற்கு வழங்கி எத்தருணத்திலும் தனது அமைப்பில் சிறுவர்கள் அமர்த்தப்படவில்லையென்பதனை உறுதிசெய்தல். கருணாவின் இந்த அறிக்கையினை வரவேற்ற ராதிகா குமாரசாமி, சிறுவர்கள் இலங்கையில் ஆயுதக் குழுக்களால் போரில் ஈடுபடுத்தப்படுவதை தடுக்கும் ஒரு முயற்சியாக இது காணப்படுவதாகக் கூறியிருந்தார். "களத்தில் இந்த முயற்சிகள் நண்மைகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்" என்று அவர் மேலும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ராதிகா, புலிகளிடமிருந்து இம்மாதிரியான ஒத்துழைப்பினை தான் எதிர்பார்ப்பதாகக் கூறினார். 2007 ஆம் ஆண்டு தை மாதம் 2 ஆம் திகதி தனது ராணுவ அமைப்பிற்கான கட்டுப்பாடுகளை கருணா யுனிசெப் அமைப்பிடம் கையளித்தார். அந்த ஆவணத்தின்படி 18 வயதிற்குக் குறைந்தவர்கள் தனது அமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள் என்றும், இணையவரும் ஒவ்வொருவரிடமிருந்தும் பிறப்பு அத்தாட்சிச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளப்பட்டு, சுய விருப்பத்துடனேயே இணைகிறோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் வழங்கப்பட்ட பின்னரே இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று கூறப்பட்டிருந்தது.  இந்தச் சட்டங்களை மீறும் தளபதிகளுக்கு முகாமில் சமையலில் ஈடுபடுதல், தோட்ட வேலைகளில் ஈடுபடுதல் ஆகிய தண்டனைகள் வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இதே ஆவணத்தில் படுகொலைகள், பாலியல் வன்புணர்வுகள், கொள்ளைகள் ஆகியவற்றில் ஈடுபடும் அமைப்பின் உறுப்பினர்களை  பொலீஸாரிடம் ஒப்படைத்துவிடுவதாகக் கூறப்பட்டிருந்தது. அத்துடன் புகை பிடித்தல், மது அருந்துதல், பெண்களை இழிவுபடுத்தல் ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபடும் உறுப்பினர்கள் அமைப்பிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், யுனிசெப் அமைப்புடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வரும் காலத்திலேயே கருணா குழு புதிதாக குறைந்தது 21 சிறுவர்களைக் கடத்திச்சென்று கட்டாய ராணுவப் பயிற்சியில் ஈடுபடுத்தியிருப்பது எம்மால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என்று மனிதவுரிமைக் கண்காணிப்பகம் கூறுகிறது. 
  • இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 140 இலட் சத்தை தாண்டியது  இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 140 இலட் சத்தை தாண்டியது  என அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளி யிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,00,739 பேர் கொரோனா தொற் றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் நேற்றைய தினம் 1038 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மொத்தமாக 140 இலட்சத்து 74 ஆயிரத்து 564 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 124  இலட்சத்து 29 ஆயிரத்து 564 பேர் குணமடைந் துள்ளனர், 14 இலட்சத்து 71 ஆயிரத்து 877 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் மொத்த எண் ணிக்கை 1,73,123 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.     Thinakkural.lk <p>இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 140 இலட் சத்தை தாண்டியது  என அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளி யிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,00,739 […]</p>
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.