Jump to content

எள்ளு + உருண்டை= எள்ளுருண்டை

Recommended Posts

El%20Urundai.JPG

தேவையான பொருட்கள்

எள் 1/4 கிலோகிராம்

சீனி 1/4 கிலோகிராம்

மாஜரின் 2 தே.க

அப்ப சோடா 2 சிட்டிகை

செய்முறை:

1. எள்ளை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.

2. எள் ஆறி கொண்டிருக்கும் வேளையில் ஒரு தட்டிற்கு மாஜரின் பூசி வைத்து கொள்ள வேண்டும். [தட்டில் கொட்டி வெட்டுவதாக இருந்தால்.]

3. அடுத்து ஒரு சட்டியில் சீனியை போட்டு இடைவிடாது வறுக்க ஆரம்பியுங்கள்.

4. சிறிது நேரத்தில் சீனி முழுவதும் இளகி பாகாக வரும். அப்போது அதனுள் 1 தே.க மாஜரீன், அப்பச்சோடா ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

5. பின்பு சீனி பாகில் எள்ளை சிறிது சிறிதாக தூவி நன்றாக கிளறியெடுக்கவும். சீனி பாகு சமனாக போட்ட எள்ளில் இருக்க வேண்டும்.

6. உடனடியாக அடுப்பில் இருந்து இறக்கி, சின்ன உருண்டைகளாக பிடித்து கொள்ளுங்கள். உருண்டைக்கு பதிலாக, மாஜரின் பூசிய தட்டில் கொட்டி அமத்தி, துண்டுகளாக வெட்டயெடுக்கலாம்.

சீனி = Sugar

பி.கு:

1. உருண்டை பிடிக்கும் போது கொஞ்சம் மாஜரினை தொட்டு பிடித்தல் கையில் ஒட்டாமல் இருக்கும்.

2. உருண்டையை உங்களுக்கு வேண்டிய அளவில் பிடிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எள்ளு உருண்மை நல்லாவே பிடிக்கும். குறிப்புக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உசார் உசார் [எனக்கு இந்த உருண்டைகளை கண்டால் பயம்] :(

நன்றி உங்கள் குறிப்புக்கு அது சரி நீங்கள் சாப்பிட்ட நீங்கள் தானே :unsure::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி.ஆனால் எனக்கு சரிவராது.ஏன்என்றால் இது இனிக்கும்.

Link to comment
Share on other sites

எனக்கும் எள்ளுருண்டை நல்ல விருப்பம். முந்தி சின்னனில பள்ளிகூடம் போகேக்க வாங்கிச்சாப்பிடிறது. ஒரு ரூவாவுக்கு நாலு எள்ளு உருண்டைகள் தருவாங்கள். இப்பவும் இஞ்ச தமிழ்கடைகளுக்கு போகேக்க எள்ளுருண்டையை கண்டால் வாங்கிச்சாப்பிடுறது. ஒரு பக்கற்றாக விப்பீனம். ஆனால் கனக்க சாப்பிட்டால் வயிறு கட்டிப்போடும் எண்டு அம்மா அடிக்கடி சொல்லுவா. மற்றது சித்தமருத்துவத்தில இதற்கு அதிக முக்கியத்துவம் இருக்கிது. எள்ளு உருண்டைகளை சித்தர்கள் விந்தை (Sperm) வெளியில வெளியேறாதவாறு (தங்கட உடம்பில இருந்து) கட்ட வைத்து (அடக்கி வச்சு) அதை தங்கட குண்டலினி (அது என்ன எண்டு கேட்ககூடாது) சக்தியில ஏற்றுவதற்கு பாவிப்பார்கள் எண்டு அறிஞ்சு இருக்கிறன்.

உண்மையில எள்ளுருண்டையை விட எனக்கு எள்ளுப்பாகுதான் (அந்த பெரிய உருண்டை) கூட விருப்பம். இதற்கு வடமராட்சி புகழ்பெற்றது. இதற்கு வேற ஒரு பெயர் இருக்கிது. இப்ப நினைவில வருகிது இல்லை. வடமராட்சி போற நேரம் நாங்கள் கட்டாயம் அந்த எள்ளுப்பாகை வாங்கிக்கொண்டு வாறது. மிகவும் ருசியாக இருக்கும். இப்பவும் தமிழ்கடைகளுக்கு போனால் அதை நான் வாங்கிறது. பொதுவாக எல்லா தமிழ் உணவகங்களிலையும் இருக்கும். இஞ்ச ஒரு டொலருக்கு ஒரு பாகு வாங்கலாம். யாருக்காவது இதிண்ட ஊர்ப்பெயர் தெரியுமோ? நல்லதொரு பெயர். இப்ப நினைவில வருகிது இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயா எள்ளுருண்டைக்கு நன்றி.மிகவும் சத்தானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில எள்ளுருண்டையை விட எனக்கு எள்ளுப்பாகுதான் (அந்த பெரிய உருண்டை) கூட விருப்பம். இதற்கு வடமராட்சி புகழ்பெற்றது. இதற்கு வேற ஒரு பெயர் இருக்கிது. இப்ப நினைவில வருகிது இல்லை. வடமராட்சி போற நேரம் நாங்கள் கட்டாயம் அந்த எள்ளுப்பாகை வாங்கிக்கொண்டு வாறது. மிகவும் ருசியாக இருக்கும். இப்பவும் தமிழ்கடைகளுக்கு போனால் அதை நான் வாங்கிறது. பொதுவாக எல்லா தமிழ் உணவகங்களிலையும் இருக்கும். இஞ்ச ஒரு டொலருக்கு ஒரு பாகு வாங்கலாம். யாருக்காவது இதிண்ட ஊர்ப்பெயர் தெரியுமோ? நல்லதொரு பெயர். இப்ப நினைவில வருகிது இல்லை.

அடடா!!! உங்களுக்குப்பிடிக்கும் என்று தெரிஞ்சிருந்தால் அண்டைக்கு கொண்டு வந்திருப்பனே! "எள்ளுப்புண்ணாக்கு" என்று சொல்லுவினம். நாங்கள் எள்ளுருண்டை எண்டுதான் சொல்லுறது. உடலுக்கு ஆரோக்கியம் ஆனது. அதில் இரும்புச்சத்து உண்டு. பெண்களுக்கு மிகவும் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிய வயதில் வயலில் விளைந்த எள்ளை கொண்டுவந்து உரலில் போட்டு இடி இடி என்று இடித்து எள்ளு பாவு என்று சாப்பிடுவோம்.

அதன் சுவை சொல்லி வேலையில்லை.

எள்ளு அறுவடை செய்த காலம் என்றால் எமது உடம்பை பார்க்க தெரியும்.

எந்த நேரமும் தேகம் எண்ணைத் தன்மையால் மினுமினுத்துக் கொண்டிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா! நல்லெண்ணைக்கு செக்கில ஆட்டும்போது அந்த எள்ளுப் பிண்ணாக்கை நுரையுடன் அப்படியே எடுத்து தேங்காய்ப் பூ, சர்க்கரை எல்லாம் கலந்து சாப்பிட அந்த மாதிரி இருக்கும்!!!

Link to comment
Share on other sites

அடடா!!! உங்களுக்குப்பிடிக்கும் என்று தெரிஞ்சிருந்தால் அண்டைக்கு கொண்டு வந்திருப்பனே! "எள்ளுப்புண்ணாக்கு" என்று சொல்லுவினம். நாங்கள் எள்ளுருண்டை எண்டுதான் சொல்லுறது. உடலுக்கு ஆரோக்கியம் ஆனது. அதில் இரும்புச்சத்து உண்டு. பெண்களுக்கு மிகவும் நல்லது.

ஓம் புண்ணாக்கு எண்டுறது சரியான பெயர். எப்பிடி கண்டுபிடிச்சனீங்கள்? என்னை மனதுக்க மாடு எண்டு நினைச்சதாலோ? சரி அடுத்தமுறை என்னை சந்திக்கேக்க மாட்டுக்கு தவிடு, புண்ணாக்கு எல்லாம் கொண்டு வாருங்கோ. :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.