Jump to content

"கிளி போனதால் கிலி கொள்வதா?


Recommended Posts

இங்குள்ள எல்லோருமே ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்துள்ளீர்கள். முக்கியமாக இந்த நண்பர்வட்டம் சார்பாக உடனடியாக செயலில் இறங்கலாமோ என்பது சரியாக எனக்குத் தென்படவில்லை.

அதாவது நண்பர்வட்டம் என்றால் என்ன? இவர்கள் யார்? நோக்கம் என்ன?போன்ற விடயங்களை வெளிப்படுத்த வேண்டியுள்ளது.

இதற்காக சில சட்ட வேலைத்திட்டங்களும் செய்யவேண்டியுள்ளது, ஆகவே உண்ணாவிரதம் இருப்பதில் எனக்கு எந்தவிதமான பிரச்சினையுமில்லை, ஆனால் நண்பர்வட்டம் என்ற பெயரை பயன்படுத்தாது முதலில் செயலில் இறங்குவோம்.

இந்தப்போராட்டத்திலை வேறு தரப்பினரையும் இணைக்கவேண்டும், அதற்காக சில ஊடகங்களின் உதவியையும் நாடவேண்டும்.

இப்படி பல விடயங்களை உள்வாங்க வேண்டியிருப்பதால் நாம் நினைப்பதுபோல் இன்றோ நாளையோ உடனடியாக செய்வது சாத்தியமானதல்ல.

நல்லாக திட்டமிட்டு எவ்வளவு விரைவில் செயல்படமுடியுமோ அவ்வளவுக்கு முயற்சி பண்ணிப்பார்ப்போம்.

முக்கியமாக ஊடகம், அனுமதி போன்ற விடயங்களில் எனது அதிகப்படியான பங்களிப்பை செய்ய ஆர்வமாகவுள்ளேன்.

ஆனால் எவ்வளவுக்கு அதிகமான உங்களது பங்களிப்பு இருக்கும் என்பதைப்பொறுத்து தான் எதையும் தீர்மானமாக கூறலாம்.

அடுத்ததாக தமிழ் புதுவருடம் நெருங்கும் வேளை தாயகத்தில் இருந்து திடீர் திருப்பங்களுக்கும் வாய்ப்புள்ளது.

ஆகவே வருடப்பிறப்பைத் தொடர்ந்து எங்களது வேலைத்திட்டங்களையும் முன்னகர்த்தலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

தொடர்வோம் எங்களது ஆக்கபூர்வமான விவாதங்களை.

வாருங்கள் இணைவோம் தமிழராய்!

வல்வை மைந்தன் மக்களுக்கானதுதான் ஊடகம்

ஊடகத்திற்கானது மக்களல்ல, மக்கள் சக்திக்கு ஒத்துழைப்புத் தராத ஊடகங்கள் புறம் தள்ளப்படும். இனிவரும் காலங்களில் ஊடகங்கள் நிறையவே படிப்பினைகளுக்கு உள்ளாகப் போகின்றன. மக்கள் சக்தியின் முன்.......

கடந்த காலங்களில் பெரும் ஊடகங்கள் என்று கருதப்படும் ஊடகங்கள் தெரிந்தோ தெரியாமலே தவறிழைத்துள்ளன. இனிவரும் நாட்கள் 'மக்களுக்கானவைதான் ஊடகங்கள்.' என்ற வாசகத்தை ஊடகத் துறை வேதமாக்க வேண்டிய காலகட்டம்.

ஒரு அறநிலைப் போராட்டம் தொடர்நிலையானதாக திட்டம் இடப்படும் போது உடனடியாக நாளையே செய்வோம் என்று எவரும் சொல்லிவிட முடியாது. பொங்கல்வரை பொறுத்திருங்கள் என்று ஆலோசனைகளைப் பிற்போடுவதன் நோக்கம் புரியவில்லை. ஏன் பொங்கலுக்குப் பின்னரான நாட்களில்த்தான் ஆலோசனைகளையையே ஆரம்பிக்க போகிறீர்களோ? வெறும் சொல்லுப் பல்லக்காக இருப்பதைக் காட்டிலும் காணாமற்போவது உத்தமம்.

Link to comment
Share on other sites

நான் யாழில் என்ன எழுதினாலும் தூக்குவதும் பிரசுரிப்பவைகளை நகர்த்துவதும் நிர்வாகத்தின் போக்காகி விட்டதால் யாழில் இருப்பதில் அர்த்தமில்லை என்று ஒதுங்கியிருந்தேன்

தனக்கு வேண்டாதவர்களை ஓரங்கட்டுவதில் இவர்கள் வல்லவர்கள் என்பதை மிண்டும் மிண்டும் நிரூபித்து வருகிறார்கள்

கடைசி முறையாக எனக்கு பட்டதை எழுதிவிட்டு செல்வோம் என்றிருக்கின்றேன்

கிளிநொச்சி வரைக்கும்... அதற்கு அப்பாலும்... என்ற கடிதத்திலிருந்து எம்மை அப்படியே படம் பிடித்தது போல் வழுதி எழுதியிருக்கிறார் அவற்றிலிருந்து எடுத்து காட்டியிருக்கின்றேன்

கிளிநொச்சி வரைக்கும்... அதற்கு அப்பாலும்...

வெளிநாட்டுத் தமிழர்களில் அடுத்த பகுதியினர் - மிகப் பெரும் பகுதியினர் - ஒரு பக்கம் - திகைப்பிலும், கவலையிலும், மறுக்கம் - புலிகள் ஏதாவது செய்தே ஆவார்கள் என்ற நம்பிக்கையிலும் இருக்கின்றோம்.

அப்படியான எமக்காகவே நான் இங்கே எழுதுகின்றேன்.

வெளிநாட்டுத் தமிழர்களாகிய நாங்கள் - ஒவ்வொரு நாளும் - 'தமிழ்நெற்"றையும், 'புதின"த்தையும் தட்டிப் பார்த்துக்கொண்டு எதிர்பார்ப்புக்களோடு காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கின்றோம்.

நாங்கள் எதிர்பார்த்திருந்தபடி இன்னும் எதுவும் நடந்து விடவில்லை என்பதற்காக, இப்போது -

புலிகள் தமது அதிசிறப்புப் படையணிகளை இன்னும் சண்டைகளில் ஈடுபடுத்தவில்லை என்றும், ஏதோ தந்திரோபாயமாகப் பின்வாங்குகின்றார்கள் என்றும், ஆயிரக்கணக்கான ஆட்கள் கொண்ட பெரும் படைகளை வைத்திருக்கின்றார்கள் என்றும், எல்லாவற்றையும் திரட்டிக் கொண்டு நல்ல சகுணம் பார்த்துப் பாயப் போகின்றார்கள் என்றும் -

போதாக் குறைக்கு - பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் எழுதும் நமது ஆய்வாளர்கள் வேறு - தம் பங்குக்கு - புலிகள் அங்கே அப்படித் தாக்கப் போகின்றார்கள், இங்கே இப்படிப் பாயப் போகின்றார்கள் என்று ஏதேதோ எழுதித் தள்ளுகி;றார்கள்.

அவர்களில் சிலர் - ஏதோ களமுனைத் தளபதிகளே இவர்களுக்கு அருகில் உட்கார்ந்து தங்களுடைய திட்டங்களை விளங்கப்படுத்தியது போல, கிளிநொச்சி விடுபட்டுப் போனதற்கு வியாக்கியானங்களும், புலிகளின் எதிர்காலத் திட்டங்கள் பற்றிய விவரணங்களும் எழுதுகின்றார்கள்.

ஒரு மிகப் பெரிய சர்வதேசச் சதி ஆட்டத்திற்குள் நாம் சிக்குண்டிருக்கின்றோம்.

சில வருடங்களுக்கு முன்னால் - மேற்குலகம் தலைமை தாங்கிய இந்த ஆட்டத்தில் இந்தியா முக்கிய பங்காளியாக இருந்தது.

இப்போது - இந்தியாவே தலைமை தாங்கும் இந்த ஆட்டத்திற்கு உலகமே ஒத்தாசைகள் செய்கின்றது.

வன்னியில் நடக்கும் போர் - இந்த ஒட்டுமொத்தமான பெரும் ஆட்டத்தின் ஒரு சிறு பகுதி மட்டுமே.

எங்களைச் சுற்றியும், எங்களுக்கு உள்ளேயும் நடக்கும் இந்தப் பெரும் ஆட்டத்தில் வெல்லுவதற்கு உருப்படியாக எதுவும் செய்யாமல் -

வன்னிப் போரில் புலிகள் மொத்தமாக வாகை சூடும் போது, எல்லாம் தாமாகவே கைகூடி வரும் என்ற கனவில், சில்லறை வேலைகள் பார்த்துக்கொண்டு நாங்கள் காவல் இருக்கின்றோம்.

மாயையிலும், அதீத நம்பிக்கையிலும் மூழ்கிப் போய் இருக்காமல், உண்மையை உணர்ந்து கொண்டு - யதார்த்தத்தை விளங்கிக்கொண்டு - தலைவர் பிரபாகரனும் அவரது போராளிகளும் இந்தப் போரிலே வெல்லுவதற்கும், இன்றைய நிலையிலிருந்து நாம் எல்லோருமே மீண்டு வெளியில் வருவதற்கும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

வன்னிப் போரின் உண்மை நிலை இதுதான்:

புலிகள் தம்மிடமுள்ள எல்லாவற்றையும் பாவித்துப் போரிடுகின்றார்கள். தமது சக்திக்கும் மீறி எல்லாவற்றையும் செய்து போரிடுகின்றார்கள். தமது எல்லாப் போராளிகளையும், எல்லாப் படையணிகளையும், எல்லா முனைகளிலும் களத்தில் இறக்குகின்றார்கள்.

ஆனால் - எல்லாவற்றையும் கடந்து சிறிலங்காவின் படைகளை முன்னேற வைக்கின்றது இந்த உலகம் என்பது தான் உண்மை.

கிளிநொச்சி வீழும் வரையிலும், முல்லைத்தீவும், ஆனையிறவும் முற்றுகைக்கு உள்ளாகும் வரையிலும், வன்னியின் வட-கிழக்கு மூலைக்குள்ளே முடக்கப்படும் வரையிலும், தனது அதிசிறப்புப் படையணிகளைப் பின்னாலே வைத்துக் கொண்டு பார்த்துக்கொண்டிருந்தார் தலைவர் பிரபாகரன் என்பதை நம்புவது எனக்குக் கடினமானது.

உலகமே பின்னாலே திரண்டு முன்னாலே தள்ள, முன்னேறி வருகின்ற சிறிலங்காவின் படைகளைத் தடுத்து நிறுத்த முடியாது போன பொறுப்பை புலிகளின் தலையில் கட்டிவிட்டு, நாம் சும்மா கவலைப்பட்டுக்கொண்டும், மீதி நேரத்திற்குத் துக்கம் விசாரித்துக்கொண்டும் இருக்க முடியாது.

அங்கே முன்னேறிச் செல்கின்ற படைகளைத் தடுக்க, இங்கே உரியதைச் செய்யாமல் விட்டுவிட்ட - அது நடப்பதற்கு இன்னொரு வகையில் அனுமதித்த - வெளிநாட்டுத் தமிழர்களாகிய நாங்களும் தான் அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும்.

அங்கே நடப்பதைத் தடுப்பதற்கு நாங்கள் செய்திருக்க வேண்டிய கூட்டுப்பொறுப்பில் கால்வாசியைத் தன்னும் நாம் செய்துவிடவில்லை.

எமது விடயத்தில் அது தான் நடந்து விட்டது. ஒரே இரவில் பெரும் இராணுவ வெற்றியைச் சாதித்து, முழு உலகத்தையும் தமிழருக்கு சார்பாக மாற்றி, தமிழீழத்தை வென்றெடுப்பார்கள் புலிகள் என்று விட்டுவிட்டு, வெறும் மனிதாபிமானப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசிக்கொண்டு நாங்கள் காலத்தை ஓட்டிவிட்டோம்.

தலைவர் பிரபாகரனும், விடுதலைப் புலிகளின் போர் வீரர்களும்

தங்களுக்கான கடமையை அவர்கள் தமது வல்லமைக்கு மேலாகவே செய்கின்றார்கள். எங்களுக்கான கடமையை நாம் எந்த அளவிற்குச் செய்கின்றோம்?

ஒரு புறத்தில் - அக்கறையும், நம்பிக்கையும் துணிவும் இருக்கும் வரை யாரும் தோற்றுப் போனவர்கள் அல்ல. பலவீனமானவர்களும் அல்ல. அவற்றை இழக்காதவரை யாரும் எதையும் இழந்தவர்களும் அல்ல.

ஏனெனில் அவை தான் - நாம் இழந்தவற்றையும், அதற்கு அதிகமாகவும் மீளப் பெறுவதற்கு எம்மிடமிருக்கும் ஆகக் கடைசி ஆயுதங்கள்.

சும்மா செய்திகளைப் படித்துவிட்டு - நடந்து முடிந்தவற்றை நினைத்து கவலைப்பட்டுக்கொண்டு இருக்கவோ, அல்லது நடக்கப்போகின்றவை பற்;றிய கற்பனைகளில் மிதக்கவோ எமக்கு இப்போது நேரமேயில்லை.

வெளிநாட்டுத் தமிழ் செயற்பாடுகளில் இதுவரை நாம் என்ன செய்தோம் என்பதை மீள நோக்கி, எங்கெல்லாம் தவறிழைத்தோம் என்பதைக் கண்டறிந்து, இனிமேல் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

இந்த உலகம் என்னவிதமான ஒரு கபட ஆட்டத்தை எம்மைச் சுற்றி ஆடுகின்றது என்பதை அவதானித்து, எவ்வகையான பசப்பு வார்த்தைகள் பேசி எம்மை மயக்குகின்றது என்பதை உணர்ந்து, எவ்வாறு இந்த ஜால வலையில் நாம் சிக்கிக்கொண்டோம் என்பதை விளங்கிக்கொண்டு - இந்தப் பெரும் சர்வதேச ஆட்டத்தை முறியடிக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

அது தான் உருப்படியான வழிமுறை.

தமிழர்களது சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை அனைத்துலக மட்டத்தில் முன்னெடுப்பதற்கான எல்லா வழிகளையும் கண்டறிவதும்,

அவற்றைக் கண்டறிந்து - அவற்றினூடாக அதனை எல்லா முறைகளிலும் முன்னெடுப்பதும்,

அதனை முன்னெடுத்து - தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு சர்வதேச அங்கீகாரத்தை எல்லா மட்டங்களிலும் பெறுவதும்,

அங்கீகாரத்தைப் பெற்று - முடிவாகத் தமிழீழத் தனியரசை வென்றெடுப்பதும் வெளிநாட்டுத் தமிழர்களாகிய எம் கைகளிலேயே உண்டு.

நாம் செயற்பட வேண்டும், உடனடியாக.

- தி.வழுதி

முதலில் தமிழ்த்தங்கைக்கு எனது பாராட்டுக்கள்

இன்னும் நமக்குள் பேதங்கள் காட்டி புலம் பெயர் நம்மவரிடையே பிரிவினைகளை உண்டாக்கும் வீண் பேச்சுக்களும் வாதங்களும் 'நமக்கு வெற்றியைப் பெற்றுத் தரப்போகின்றதா?! [/Quote ]

வெளிநாட்டுத் தமிழர்களில் ஒரு பகுதியினர் தம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பது பற்றிய எந்த அக்கறையுமற்று உள்ளனர்.

இன்னொரு பகுதியினர் - ~பிரபாகரனதும், புலிகளதும் கதை இத்தோடு முடிந்துவிட்டது. அவர்களால் இனி மீள எழுந்து வர முடியாது. புலிகளால் தமிழர்களுக்கு இனி ஆகப் போவதும் எதுவும் இல்லை| எனும் விதமாக ஏளனக் கதைகள் பேச ஆரம்பித்து விட்டனர்.

இப்படியானவர்கள் மீது எமக்கு எந்தக் கோபமும் இல்லை, அவர்களுக்காக எதையும் எழுத நான் இங்கே வரவும் இல்லை.

இந்த ஒரு சின்ன விடயத்திலையே எங்கட ஒற்றுமையைக் காட்ட முடியல்ல..... காட்ட முன்வர மனசில்ல.. இதில..??

சில மாதங்களுக்கு முன்னர் கனடாவில் போட்டிபோட்டுக்கொண்டு வன்னி மக்களுக்காக நிதி சேகரித்த சங்கங்கள் இப்போது என்ன செய்கின்றன?

கனடாவில் தமிழர்களால் நிர்வகிக்கப்படும் 256 சங்கங்கள் மற்றும் அமைப்புக்கள் இருக்கின்றன. ஏதாவது ஒரு அமைப்பு ஆரம்பித்தால், போட்டிக்காகவேனும் மற்றவர்களும் ஆரம்பிப்பார்கள்.

ஆ...... 256 சங்கங்கள், மற்றும் அமைப்புக்களா? எங்கட இனத்தின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவாக...,

அட ஒவ்வொரு சங்கமும் ஆகக் குறைந்தது ஒரு நாள் வீதம் ஒரு தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுத்தா அது எட்டரை மாதத்திற்கு மேலாக உலகிலேயே தம்நிலை வருத்தும் நீண்ட போராட்டமாக மாறுமே!!!.... unsure.gif இப்பிடிச் செய்தா உலகம் புலம் பெயர் மக்களின் தாயக உணர்வுக்குத் தலைவணங்காதா?

ஆனால் இங்கு பிரிவிணை பேசுபவர்கள் ஓட்டு மொத்த தமிழர்களையும் கேவலமாக எழுதி வருகிறார்கள்

ஆக கனடியத்தமிழர்களால் மட்டுமே தமிழீழம் பெற்றுக்கொடுக்கமுடியும் என்று இவர்கள் சொல்லவருவது போல் உள்ளது

ஆனால் அதற்கு கொடுக்கப்படுகிற விளக்கம் ஒதுங்கியிருப்பவர்களை ஒன்று சேர்க்கப்போவதாக ஏதோ இவர்கள் யாழில் உறுப்பினர்களாகவும் யாழுக்கு வந்து போவது போலவும் இவர்கள் எழுதிவருகின்றார்கள்

ஆனால் அவர்கள் இந்தப்பக்கமே தலை காட்டமாட்டார்கள் ஆகவே இவர்களின் ஆதங்கங்கள் யாரைத்தாக்குகின்றன என்று நீங்களே முடிவு செய்யுங்கள்

ஆகவே இன்னும் இன்னும் மற்றவர்களை தாக்கி எழுதுவதிலும் குற்றம் சொல்லவதிலும் எந்த பிரியோசனமும் இல்லை இவை வீண்விவாதங்களும் விதண்டா வாதங்களும் தான்

இதைத் தான் நான் ஆரம்பத்திலிருந்து எழுதி வருகின்றேன்

இப்படியானவர்கள் மீது எமக்கு எந்தக் கோபமும் இல்லை, அவர்களுக்காக எதையும் எழுத நான் இங்கே வரவும் இல்லை

ஆகவே தயவு செய்து

தூங்குபவர்களை தட்டி எழுப்பபோகிறோம் என்று உங்கள் நேரத்தை செலவிடுவதிலும் பார்க்க விழித்திருப்பவர்களைக் கொண்டு நமது தலைமையை பலப்படுத்துவதில் ஆக்கபூர்வமான கருத்தாடல்களை முன் வைப்போம்

நமக்கான தேவை முதலில் ஒற்றுமை" பேதங்களையும் வீண் வாதங்களையும் தூக்கி எறிந்து விட்டு ஈழத்தமிழனாய் எங்கள் அண்ணன் விரும்பும் தமிழனாய் ஒன்று படுவோம்

**ஆக்கபூர்வமான தெளிந்த கருத்துக்களை முன்வையுங்கள்**புரிந்துணர்வு

க்கு

நன்றி.

இது யாழில் இருப்பதாகத் தெரியவில்லை இருக்கப்போவதும் இல்லை

எந்த ஆக்கத்திற்கும் இங்கு நக்கல் நையாண்டி எழுதுபவர்கள் தான் அதிகம் ஏன் மேலே சென்று பார்த்தால் தெரியும் இதன் மூலம் ஆக்கபூர்வமான கருத்துகளும் , தலைப்பும் திசைமாறி சென்று அதன் இருப்பையே இல்லாமல் செய்கிறது

இந்த விசயத்தில் நிர்வாகம் குறைட்டை விடுகிறது

'இரு வாரங்களுக்கு முன்னரே 'புலித்தலைமையின் தரப்பில் இருந்து 'நடேசன் ஐயா அவர்கள் ''கிளி நொச்சி போனாலும் எங்கள் போராட்டம் தொடரும்"என்று குறிப்பிட்டிருந்தார் அதனையும் தொடர்ந்து புலம் பெயர் உறவுகளே நீங்கள் 'உங்கள் கடமையான பரப்புரையைச்செய்யுங்கள் இங்கிருந்து வெற்றிச்செய்திகளை நாம் தருகின்றோம்" என்று சொன்னார். இது வெறும் செய்தியா? இல்லைத் தகவலா ஏன் அப்படிச்சொன்னார் என்பதற்கான ஆராய்ச்சிகளிலேயே நேரம் கடத்திச்சென்றோமே உறவுகளே; நாம் இந்தச்செய்தியுள் இருக்கும் ஆழ்ந்த கருத்தை உள்வாங்கிக்கொண்டோமா?! உணர்ந்து செயற்பட்டோமா?!! நமக்குள் ஏன் இன்னும் பிரிவினை வாதங்கள்?!! இன்னல்கள் கடந்து எத்தனை எத்தனையோ இழந்து மிஞ்சிய உயிரைத்தானே சுமந்து வந்தோம்?!! இந்த வேதனை வாழ்க்கை மறக்குமா?!! 'வெறும் வாய்ப்பேச்சுக்களினால் எமக்கிடையே சண்டையும் சச்சரவுகளும் நமக்கான இலட்சிய வெற்றியை ஈட்டித்தந்துவிடுமா?!!

இவ்விடயத்தில் எனக்கு தெரிந்தது

1] பங்களிப்பு

இது என்ன என்று சொல்லத்தேவையில்லை உங்களுக்கே தெரியும்

2] பரப்புரை புலம் பெயர் நாடுகளில்

1) சிறிலங்காப் பொருட்களைப் புறக்கணிப்பது

2) சிறிலங்காவின் இனவாதத்திற்கு எதிராக பரப்புரை செய்வது

3) தமிழீழத்தை அங்கிகரிக்கச் சொல்லி சர்வதேசத்திடம் பரப்புரை செய்வது

இதற்கு ஆங்கிலத்தில் எழுதும் ஆற்றல் படைத்தவர்கள் அல்லது எழுத விரும்புவர்கள்

parapurai@gmail.com என்ற மின்னஞ்சல் ஊடகத் தொடர்பு கொண்டால் அவர்கள் உங்களை வழிநடத்துவார்கள்

if you able to write in english or wish to write can contact Email: parapurai@gmail.com and they will guide you

நன்றி

தமிழ்க்குரல்

Link to comment
Share on other sites

Wednesday, March 12, 2008

நான் செய்யக்கூடியது என்ன?

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் பல முனைகளுக்கூடான செயற்பாடுகளூடாகவே வெல்லப்பட முடியும் என்ற புரிதல் தற்போது ஏற்பட்டு வருகின்றது. இந்த வரிசையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகள் தமது வரலாற்றுக் கடைமைகளை உணர்ந்து தனித்தனியாகவும், கூட்டாகவும் தமது சக்திக்குட்பட்ட வகையில் பங்களிப்பை நல்கி வருகின்றனர். புலம்பெயர் வாழ்வில் ஒரு பெண் ஆற்றக்கூடிய பங்களிப்பு எத்தகையது என்பது பற்றிப் பேசுகிறார் அவுஸ்திரேலியாவில் வாழும்

ஜனனி பாரதி.

சர்வதேச மகளிர் தினச் சிறப்பிதழில் இந்த ஆக்கம் காலப் பொருத்தமானது என நாங்கள் கருதுகிறோம்.

'நிலவரம்" ஆசிரிய பீடம்

செயற்பாடு 1

வடக்கு கிழக்குப் பகுதிகளில் தொடர்பினை ஏற்படுத்தி அங்கிருக்கும் எமது உறவினர் நண்பர்களிற்கு உதவுதல்.

எனது நெருங்கிய உறவினர்கள் - கிட்டத்தட்ட எல்லோருமே - வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். இதனால், இலங்கையில் உள்ள எனது தூரத்து உறவினர்கள் பற்றிய தகவல்களைப் பெறுவதில் சில சிரமங்களை எதிர்;நோக்கினேன். எனது அம்மாவின் இரண்டாவது தலைமுறையுடன் - ஒன்றுவிட்ட சகோதர உறவு முறையானவர்களுடன் - தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டேன். நான் சிறுபிள்ளையாக இருக்கும்போது ஒரு தடவை மட்டுமே அவர்களைச் சந்தித்திருக்கின்றேன். அவர்களை ஞாபகத்தில் வைத்து தொடர்பினை ஏற்படுத்தியதில் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. இப்பொழுது அவர்களுடன் கடிதத் தொடர்பாவது உள்ளது. அத்துடன் மட்டக்களப்பில் இருக்கும் நீண்ட காலம் தொடர்பில்லாமல் இருந்த உறவினர்களுடனும் தொடர்பு கொண்டேன்.

கிட்டத்தட்ட இரு தசாப்த காலமாக கிழக்கு மக்கள் சிங்களவரின் மிக மோசமான காட்டு மிராண்டித்தனத்தை படுகொலை வடிவில் அநுபவித்து வருகிறார்கள். இதற்கு பூகோள ரீதியான காரணங்களும் வேறு காரணங்களும் உண்டு.

இந்நலையில், நான் மட்டக்களப்பில் உள்ள உறவினர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தியது அவர்களிற்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. என்னைப் பொறுத்த வரையில் பரஸ்பர தொடர்பு இரு பகுதிக்குமே உதவும். நான் அவர்களுடன் தொடர்பில் இருப்பதை விரும்புகிறேன். அவர்களுக்கு ஒரு சிறிய தொகைப் பணமும் அனுப்பப்படுகிறது. மிக மோசமான இக்காலகட்டத்தில் அவர்கள், கிடைக்கும் உதவியைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறார்கள். இவர்களுடன் இவ்வளவு காலமும் தொடர்பு கொள்ளாமல் இருந்ததையிட்டு மிகவும் வெட்கமடைந்தேன். பின்னர் தொடர்பு கொள்ளாமலேயே இருப்பதை விடவும் தாமதமாகவேனும் தொடர்பு கொள்வது சிறந்தது எனக்கருதி தொடர்பினை ஏற்படுத்தினேன்.

செயற்பாடு 2

வடக்கு கிழக்கில் பணிபுரியும் தொண்டர் நிறுவனங்களுக்கு உதவுதல்

ஐந்து வருடங்களிற்கு முன்னர் நான் ஒரு விடயத்தை உணர்ந்து கொண்டேன். மாதமொன்றுக்கு மக் டொனால்ட்ஸில் 20 டொலர்கள் செலவு செய்ய முடியுமானால், ஒரு வசதி குறைந்த பிள்ளைக்காக அந்தப் பணத்தை ஒதுக்க ஏன் முடியாது என்று சிந்தித்தேன். பிள்ளைகளைத் தத்தெடுக்கும் திட்டத்தின் கீழ் பங்களாதேஷைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு எனது உதவி போய்ச் சேர்ந்தது. அச்சிறுமியிடமிருந்து கடிதமோ, புகைப்படமோ வரும்போது நான் எடுத்த முடிவு தொடர்பில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.

தற்போது மிகவும் தாமதமாக வன்னியிலுள்ள ஆதரவற்றோர் இல்லங்களிற்கு உதவ ஆரம்பித்துள்ளேன். இவ்வில்லங்களுடன் தனிப்பட்ட ரீதியில் தொடர்புடைய ஒரு நண்பர் மூலம் இவ்வுதவிகளை வழங்கி வருகின்றேன். எனது ஊதியத்தின் ஒரு பகுதியை இத்தேவைகளிற்காக ஒதுக்கியுள்ளேன். அத்துடன் பகுத்தறிவை உபயோகித்து நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு தமிழ் ஸ்தாபனங்களூடாக தமிழர் திட்டங்களுக்கு உதவி வருகின்றேன். இவ்வாறு செய்வதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்துவந்த கவலையை துடைத்தெறிந்துள்ளேன். எனது பணம், எங்கு எவ்வாறு செல்கிறது என்பதை அறிய வேண்டிய தேவை எனக்குண்டு. எனது அபிமான எழுத்தாளர் கலீல் ஜிப்ரன் அவர்களின் கூற்றை இவ்விடத்தில் மேற்கோள் காட்ட விரும்புகின்றேன்.

'நான் கொடுப்பேன் ஆனால் தேவையானவர்களிற்கு மட்டுமே, என்று நீங்கள் அடிக்கடி சொல்வீர்கள், ஆனால் உங்கள் பழத்தோட்டத்தில் உள்ள மரங்களோ அல்லது மேய்ச்சல் நிலங்களில் நிற்கும் விலங்குகளோ அவ்வாறு சொல்வதில்லை. அவைகள் முடியாது என்று சொல்லாமல் எங்களுக்கு வழங்குகின்றன, தம் வாழ்விற்காக. அவ்வாறு வழங்க மறுத்தால் அவை அழிக்கப்பட்டுவிடும்."

நாங்கள் எமது நேரம், பணம், சக்தி என்பவற்றை எமது மண்ணிற்கும், மக்களுக்குமாகச் செலவிடத் தவறுவோமோயானால் எமது கலாச்சாரம், எமது தேசியம் என்பவை இறுதியாக இல்லாதொழிந்து விடும். இவ்வாறு எனது நேரத்தையும், பணத்தையும், சக்தியையும் இந்த நோக்கத்திற்காக செலவழிக்கத் தொடங்கிய பின்னர் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை என்னில் உண்டாவதை உணரமுடிகின்றது.

செயற்பாடு 3

சிறிலங்காவின் உற்பத்திகளைப் பகிஷ்கரித்தல்.

பொருட்கள் வாங்கும்போது அவற்றின் பெயர் அடையாளங்களைக் கவனத்தில் கொள்ளுங்கள். உதாரணமாக தற்போது (முன்னர் நான் அதிகமாக உபயோகித்து வந்த) சிறிலங்காவின் ஆனு உற்பத்திகளை வாங்குவதை நிறுத்தியுள்ளேன்.

செயற்பாடு 4

உள்ளுர் பாராளுமன்ற உறுப்பினர்கள், தொண்டர் நிறுவனங்கள், மற்றும் ஊடகங்களுக்கு எழுதுதல்

உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான விபரங்களைப் பெற்று, அவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி, அதனைத் தொடர்ந்து பேணிக் கொள்ளுங்கள். அவர்களுக்குக் கிரமமாக எழுதுங்கள், அல்லது நேரடியான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யுங்கள். அப்போது அவர்கள் உங்களை அறிந்து கொண்டு தொடர்பு வலுப்பெற சந்தர்ப்பம் உண்டாகும். நான் சில தொண்டர் நிறுவனங்களுக்கும், ஊடகங்களுக்கும் எழுத ஆரம்பித்தேன் அவர்களிடமிருந்து கிடைத்த பதில்கள் வியப்பளிப்;பவையாக இருந்தன.

சாதாரண மக்களின் கருத்துக்களை அறிவதற்கு அவர்கள் உண்மையில் விரும்புகிறார்கள்.

மக்களுக்கு அறிவு புகட்டுவதை நான் எனது பகுதிநேரச் செயற்பாடாக கொண்டுள்ளேன். ஒரு கிழமையில் ஒன்று அல்லது இரண்டு மணித்தியாலங்களே இதற்கு ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு பலர் செயற்பட்டால் அது மிகவும் சக்திவாய்ந்த ஒரு செயற்பாடாக அமையும் என்பது எனது அசையாத நம்பிக்கை.

செயற்பாடு 5

எமது பிள்ளைகளுக்கு தமிழ் மொழியையும், எமது தாயகம் பற்றிய பண்டைய மற்றும் அண்மைய வரலாற்றையும் கற்பித்தல்.

இரண்டு காரணங்களுக்காக இது மிகவும் முக்கிய விடயமாக அமைகின்றது. அடுத்த சந்ததி இது பற்றி அறிந்திருக்க வேண்டும். நாங்கள் இல்லாதவிடத்து எங்களுக்குப் பின்னர் எமது தேசத்தைக் கட்டியெழுப்பும் சிரமமான பணியை அவர்கள் தொடர வேண்டும். எமது மொழியையும், வரலாற்றையும் பிள்ளைகளுக்குக் கற்பிப்பது எமது தேசத்தின் நன்மைக்காக மட்டுமல்ல. அது எமது பிள்ளைகளின் சுய எண்ணங்களுக்கும், சுய அடையாளம் மற்றும் சுய உருவகம் என்பவற்றை அறியவும் பேணவும் உதவும்.

செயற்பாடு 6

தீயவை பற்றி கற்பனை செய்யாதீர்கள்.

சில விடயங்களை, அவை எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் என்பதற்காக முயற்சித்துப் பார்க்காதீர்கள்.

'தமிழீழம் உருவானாலும் அது மிகவும் மோசமான ஆட்சியுடையதாகவே இருக்கும். நாம் எம்மையே அழித்துக் கொள்வோம்" என்று கூறும் நண்பியொருவர் எனக்குள்ளார். ஒரு பிள்ளை எவ்வாறெனினும் பதினெட்டு வயதில் கோக் குடிப்பதற்கு பழகிக் கொள்வான் என்பதற்காக பத்து மாதத்திலேயே அக்குழந்தைக்கு கோக் புட்டியை வழங்குவோமா?

(இதனை ஒரு தந்தை செய்ததாக நானறிந்தேன். அத் தந்தைக்காகவும், குழந்தைக்காகவும் வருந்துகின்றேன்)

இவ்வகையான தர்க்கம் தவறானது. எதிர்காலம் பற்றிய தவறான கற்பனைகளால் நாம் சில விடயங்களை கைவிட்டுவிட முடியாது. நீPங்கள் ஒரு பயிருக்கு போதிய ஊட்டத்தையளித்து அதனைப் பேணி வளர்த்தால் அது சிறந்த கனிகளைத் தரும். நாங்கள் அன்பினாலும் நம்பிக்கையினாலும் ஆட்கொள்ளப்பட வேண்டும்.

செயற்பாடு 7

ஆக்கபூர்வமாகவும், யதார்த்தமாவும் சிந்தியுங்கள் வடக்கு கிழக்கை தமிழீழம் என அடையாளப் படுத்துங்கள்.

நாம் ஆக்கபூர்வமாகவும், யதார்த்தமாகவும் சிந்திக்க வேண்டும். வடக்கு, கிழக்குப் பகுதிகளை தமிழீழமாக இனங்கண்டு கொள்ள வேண்டும். இந்த அடையாளத்தின் அடிப்படையில் எமது எண்ணங்களும் செயற்பாடுகளும் அமையும்போதே அது தூரநோக்குடைய பலாபலன்களைத் தரும். சுதந்திரம் என்பது நாங்களாகப் பெற்றுக் கொள்ள வேண்டியதே அன்றி யாரிடமிருந்தும் கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டியது அல்ல. தமிழீழத்தை பெற்றுக் கொள்வது தொடர்பில் நாம் நம்பிக்கை கொள்வோமேயானால் நிச்சயமாக அது நிறைவேறும்.

அதேவேளை, இலங்கையின் வட-கிழக்கைச் சேர்ந்த இப்போது எம்மால் தழிழீழம் எனக்குறிப்பிடப்படும் பகுதியைச் சேர்ந்த தமிழிச்சி என்று என்னை இனங்காட்டுவதை சிறப்பானதாக நான் கருதுகின்றேன். உங்களது சொந்த இடம் எது என்ற மிக எளிமையான கேள்விக்கு இது மிகவும் நீளமான பதிலே. இருந்தாலும் அவ்வாறு சொல்வதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

சில குறிப்பிட்ட விடயங்களில் இரண்டகத் தன்மை காணப்பட்டமை.

உதாரணமாக மற்றவர்களால் இனங்காணக்கூடிய தேசியக்கொடி மற்றும் தேசிய கீதம் என்பவற்றை கொண்டிருக்கவில்லை. அண்மையில் எனது மகளின் பாடசாலை அதிபர் ஒரு சிறந்த எண்ணத்தை தெரிவித்திருந்தார். அதாவது பிள்ளைகளின் கலாச்சாரத்தின் பன்முகத் தன்மையை வெளிப்படுத்துவதற்காக வௌ;வேறு நாடுகளைச் சேர்தவர்கள் அவரவர் நாட்டு தேசியக் கொடியின் மூலம் தம்மை இனங்காட்ட வேண்டும் என்பதே அது. அது மிகச்சிறந்த ஒரு எண்ணக்கரு.

ஆனால் நான் சிறிலங்காவின் கொடியை பிள்ளைகளிடம் கொடுத்துவிட விரும்பவில்லை. அதேநேரம் புலிச்சின்னம் பதித்த கொடியையும் வழங்க முடியாது ஏனெனில் ஒரு தேசியக் கொடியாக அது இன்னமும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இது எனக்கு மிகவும் சிக்கலானதாக இருந்தது இறுதியில் எம்மை எந்தக் கொடி மூலமும் அடையாளப்படுத்த விரும்பவில்லை என அதிபரிடம் தெரிவிக்க நேரிட்டது. இவ்வாறான விடயங்களில் எமக்குத் தடைகள் உள்ளன இவற்றைத் தீர்ப்பதற்கான செயற்பாடுகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

ஆனால் என்னை ஒரு சிறிலங்காப் பிரஜையாக இனங்காட்டுவதை விடவும் இன்னமும் பெற்றுக் கொள்ளப்படாத எமது நாட்டின் பிரஜை என்று சொல்வதையே நான் விரும்புகின்றேன். சம்பிரதாயத்திற்கு கூட சிறிலங்காப் பிரஜை என்று கூற நான் விரும்பவில்லை. இது ஒரு முக்கியமான மனோநிலை மாற்றமாகும்.

செயற்பாடு 8

சாதகமான கற்பனை

இது வெறுமனே பகற்கனவோ அல்லது எதிர்பார்ப்போ அல்ல. ஒரு இறுதி இலக்கை எமது மனதில் கொண்டு அதனை நோக்கிச் செயற்படுவதே சாதகமான கற்பனையாகும். இதனை எனது சொந்த வாழ்வில் செயல்படுத்தி சிறந்த பலனை அடைந்திருக்கிறேன். நான் அடைய வேண்டிய இலக்கு (அந்த நேரத்தில் முடியாத காரியமாகத் தென்பட்ட) தொடர்பான படம் ஒன்றை வரைந்து எனது படிக்கும் அறையில் அதனை வைத்துக்கொண்டேன்.

ஓவ்வொரு நாளும் இரு நிமிடங்களுக்கு எனது பார்வை அப்படத்தில் பட்டுத்தெறிக்கும். அது மனதிலுள்ள விடயங்களை அலசி ஆராய்ந்து, எனது இலக்கு எது என்பதை எனக்கு தெளிவாக்கியதுடன் அதனை அடைவதற்கு எனக்கு உதவியாகவுமிருந்தது. மிகப்பெரிய இலட்சியத்தை அடைவதற்கு தினசரி எடுத்து வைக்கவேண்டிய சிறிய அடிகள் எவை என்பதை அது எனக்கு அறியத்தந்தது.

இப்பொழுதெல்லாம் எனது சொந்த ஊருக்கு (தற்போது இராணுவத்தினரின் முகாம்கள் நிறைந்து காணப்படும்) செல்வது போன்று கற்பனை பண்ணுவேன். இந்த இலக்கை அடைவதற்கான எனது பங்களிப்பு என்ன என்பது பற்றி எண்ணிப் பார்க்கிறேன். இந்த விடயம் அதாவது சாதகமான கற்பனை, மற்றைய எல்லாவற்றையும் விடவும் இலக்கை அடைவதற்கான சரியான திசையைக் காட்டுவதாக அமைகிறது.

எண்ணத்தை ஏற்படுத்தல் - செயல்வடிவம் கொடுத்தல் - செயற்படல்

யாழ்ப்பாணத்திலுள்ள எனது தாயாரின் ஒன்றுவிட்ட சகோதரர் வீட்டுக்குச் சென்று அவர்களுடன் பகலுணவு அருந்துவது போலவும், எனது பிள்ளைகள் அவர்களது பிள்ளைகளுடன் விளையாடுவது போலவும் எண்ணிப் பார்ப்பேன். இதை நிறைவேற்றுவது சிரமமாக இருக்கலாம். ஆனால் எனது எண்ணங்களுக்கும், செயற்பாடுகளுக்கும் இப்பிரபஞ்சம் ஒரு நாள் பதிலளிக்கும் என்றே நம்புகின்றேன்.

மனப்பூர்வமாக விரும்பினோமேயானால் எமது எதிர்காலத்தை நாமே அமைத்துக் கொள்ளமுடியும்; என நான் நம்புகின்றேன். இந்தச் செயற்பாட்டை நாம் சாதகமான எண்ணத்துடன் ஆரம்பித்தால் மிகுதி தானாகவே நிகழும்.

இதில் நம்பிக்கை அற்றவர்கள் என்னை ஒரு கற்பனாவாதியென அழைக்கலாம். ஆனால், அவநம்பிக்கை கொள்வதிலும் பார்க்க கனவுகாண்பது சிறந்தது என நான் கருதுகின்றேன்.

குற்றம் காண்பதை விடவும் நம்பிக்கை கொள்வது சிறந்தது எனக் கருதுகின்றேன். இந்த பிரபஞ்சத்திற்காக நான் பிரார்த்திக்கின்றேன், இறைஞ்சுகின்றேன். எல்லாமே சிறப்பாக உள்ளது என்று கூறி நடிப்பதைவிட இந்த பிரபஞ்சத்திற்காக பிரார்த்திக்கிறேன் இறைஞ்சுகின்றேன். - பொது நன்மைக்கான பிரார்த்தனை எப்பொழுதும் பலன் தரும். என்ற தமிழ் வாக்கிற்கேற்ப.

எனது மக்களிற்கு உதவுவதற்காக சிறிய, இருந்தும் சக்திவாய்ந்த விடயங்களில் செயற்பட்டு அதன்விளைவாக ஒருவகை ஆறுதலை உணர்கின்றேன். இறுதியில் இவை எல்லாமே பயனுள்ளதாகவே அமையும்.

http://tamilthesiyam.blogspot.com/2008/03/blog-post_12.html

Link to comment
Share on other sites

தமிழருக்காக ஒபாமா ' மின்னியல் கையெழுத்து ' உங்கள் குரலும் ஒலிக்க

வணக்கம் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும்

மீண்டும் உங்களை தமிழருக்காக ஒபாமா என்னும் 'மின்னியல் கையெழுத்து ' சேகரிப்பில் எம்முடன் இணைந்து செயலாற்ற வேண்டுகின்றோம்

நீங்கள் கிழ் உள்ள இணைப்புக்கு சென்று உங்கள் குரல் ஒலிக்க உதவுங்கள்

http://www.tamilsforobama.com/sign/letter.html

நன்றி

Dear Friends,

Here is a letter which we plan to send or hand (if we can) to President Obama and Secretary of State Clinton after January 20, 2009. We hope to have 100,000 (electronic) signatures world-wide to add to the letter. If you would like your signature to be appended to the letter, please go to the link below, click, and sign the petition.

The link is:

http://www.tamilsforobama.com/sign/letter.html

Also ask your Tamil and non-Tamil friends to help our effort by adding their signatures to the letter.

FYI: Here is our latest press release, “Tamils for Obama Urging Obama and Clinton to Send Strong Signal to Sri Lanka to Stop Genocidal Civil War at Once; Atrocities will be Punished.”

Thank you,

Tamils for Obama

P.S. We are trying to get translations of some of our English-language materials into other languages. Since you are living in France, perhaps you or someone else you know who is fluent in French and English could translate our three web pages. They are:

1. http://www.tamilsforobama.com/sign/letter.html

2.http://www.tamilsforobama.com/sign/usersign_confirm.asp

Please send it to us ASAP. Thank you.

http://www.tamilsforobama.com/obama.html

http://tamilthesiyam.blogspot.com/2009/01/...-post_4837.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிளி போனதால் கிலி கொள்வதா?!!

'இரு வாரங்களுக்கு முன்னரே 'புலித்தலைமையின் தரப்பில் இருந்து 'நடேசன் ஐயா அவர்கள் ''கிளி நொச்சி போனாலும் எங்கள் போராட்டம் தொடரும்"என்று குறிப்பிட்டிருந்தார் அதனையும் தொடர்ந்து புலம் பெயர் உறவுகளே நீங்கள் 'உங்கள் கடமையான பரப்புரையைச்செய்யுங்கள் இங்கிருந்து வெற்றிச்செய்திகளை நாம் தருகின்றோம்" என்று சொன்னார். இது வெறும் செய்தியா? இல்லைத் தகவலா ஏன் அப்படிச்சொன்னார் என்பதற்கான ஆராய்ச்சிகளிலேயே நேரம் கடத்திச்சென்றோமே உறவுகளே; நாம் இந்தச்செய்தியுள் இருக்கும் ஆழ்ந்த கருத்தை உள்வாங்கிக்கொண்டோமா?! உணர்ந்து செயற்பட்டோமா?!! நமக்குள் ஏன் இன்னும் பிரிவினை வாதங்கள்?!! இன்னல்கள் கடந்து எத்தனை எத்தனையோ இழந்து மிஞ்சிய உயிரைத்தானே சுமந்து வந்தோம்?!! இந்த வேதனை வாழ்க்கை மறக்குமா?!! 'வெறும் வாய்ப்பேச்சுக்களினால் எமக்கிடையே சண்டையும் சச்சரவுகளும் நமக்கான இலட்சிய வெற்றியை ஈட்டித்தந்துவிடுமா?!!

இப்போது சொல்லுங்கள் கிளி போனதால் கிலி கொள்வதா?!!!

தமிழ்தங்கை சரியாகச் சொன்னீர்கள் ,

ஆனால் மனது துடிச்சுக் கொண்டிருக்குதே ......

Link to comment
Share on other sites

வல்வை மைந்தன் மக்களுக்கானதுதான் ஊடகம்

ஊடகத்திற்கானது மக்களல்ல, மக்கள் சக்திக்கு ஒத்துழைப்புத் தராத ஊடகங்கள் புறம் தள்ளப்படும். இனிவரும் காலங்களில் ஊடகங்கள் நிறையவே படிப்பினைகளுக்கு உள்ளாகப் போகின்றன. மக்கள் சக்தியின் முன்.......

கடந்த காலங்களில் பெரும் ஊடகங்கள் என்று கருதப்படும் ஊடகங்கள் தெரிந்தோ தெரியாமலே தவறிழைத்துள்ளன. இனிவரும் நாட்கள் 'மக்களுக்கானவைதான் ஊடகங்கள்.' என்ற வாசகத்தை ஊடகத் துறை வேதமாக்க வேண்டிய காலகட்டம்.

ஒரு அறநிலைப் போராட்டம் தொடர்நிலையானதாக திட்டம் இடப்படும் போது உடனடியாக நாளையே செய்வோம் என்று எவரும் சொல்லிவிட முடியாது. பொங்கல்வரை பொறுத்திருங்கள் என்று ஆலோசனைகளைப் பிற்போடுவதன் நோக்கம் புரியவில்லை. ஏன் பொங்கலுக்குப் பின்னரான நாட்களில்த்தான் ஆலோசனைகளையையே ஆரம்பிக்க போகிறீர்களோ? வெறும் சொல்லுப் பல்லக்காக இருப்பதைக் காட்டிலும் காணாமற்போவது உத்தமம்.

ஆதிவாசி நீங்கள் எதிலும் அவசரம், வரவேற்கத்தக்கது தான் இருப்பினும் ஒருவிடயத்தை சாதிப்பதிற்கு திட்டமிடல்தான் முக்கியம் என்பதை ஏற்க மறுக்கின்றீர்களோ?

இங்கு எதை செய்வதாயினும் அனுமதியைப் பெறவேண்டும், அதற்காக சிலரை அணுகவேண்டும்.

இதெல்லாம் சற்று சிரமம் எடுத்துத்தான் சாதிக்கவேண்டும், எனது நோக்கம் நாள் கடத்துவதல்ல, இதில் பங்குபற்றுகின்றவர்களுக்கு எந்தவிதமான அசௌகரியங்களையும் கொடுக்க கூடாதல்லவா.

அடுத்தாக இப்படியான வேலைத்திட்டத்தில் அதிகளவு மக்களையும் இணைக்கவேண்டும், அதற்காகத்தான் சொன்னேன் ஊடகத்துறையினரையும் அணுகவேண்டும் என்று.

Link to comment
Share on other sites

வல்வை மைந்தன் மக்களுக்கானதுதான் ஊடகம்

ஊடகத்திற்கானது மக்களல்ல, மக்கள் சக்திக்கு ஒத்துழைப்புத் தராத ஊடகங்கள் புறம் தள்ளப்படும். இனிவரும் காலங்களில் ஊடகங்கள் நிறையவே படிப்பினைகளுக்கு உள்ளாகப் போகின்றன. மக்கள் சக்தியின் முன்.......

கடந்த காலங்களில் பெரும் ஊடகங்கள் என்று கருதப்படும் ஊடகங்கள் தெரிந்தோ தெரியாமலே தவறிழைத்துள்ளன. இனிவரும் நாட்கள் 'மக்களுக்கானவைதான் ஊடகங்கள்.' என்ற வாசகத்தை ஊடகத் துறை வேதமாக்க வேண்டிய காலகட்டம்.

ஒரு அறநிலைப் போராட்டம் தொடர்நிலையானதாக திட்டம் இடப்படும் போது உடனடியாக நாளையே செய்வோம் என்று எவரும் சொல்லிவிட முடியாது. பொங்கல்வரை பொறுத்திருங்கள் என்று ஆலோசனைகளைப் பிற்போடுவதன் நோக்கம் புரியவில்லை. ஏன் பொங்கலுக்குப் பின்னரான நாட்களில்த்தான் ஆலோசனைகளையையே ஆரம்பிக்க போகிறீர்களோ? வெறும் சொல்லுப் பல்லக்காக இருப்பதைக் காட்டிலும் காணாமற்போவது உத்தமம்.

ஆதிவாசி நீங்கள் எதிலும் அவசரம், வரவேற்கத்தக்கது தான் இருப்பினும் ஒருவிடயத்தை சாதிப்பதிற்கு திட்டமிடல்தான் முக்கியம் என்பதை ஏற்க மறுக்கின்றீர்களோ?

இங்கு எதை செய்வதாயினும் அனுமதியைப் பெறவேண்டும், அதற்காக சிலரை அணுகவேண்டும்.

இதெல்லாம் சற்று சிரமம் எடுத்துத்தான் சாதிக்கவேண்டும், எனது நோக்கம் நாள் கடத்துவதல்ல, இதில் பங்குபற்றுகின்றவர்களுக்கு எந்தவிதமான அசௌகரியங்களையும் கொடுக்க கூடாதல்லவா.

அடுத்தாக இப்படியான வேலைத்திட்டத்தில் அதிகளவு மக்களையும் இணைக்கவேண்டும், அதற்காகத்தான் சொன்னேன் ஊடகத்துறையினரையும் அணுகவேண்டும் என்று.

வல்வை மைந்தன் விளங்கித்தான் பதில் வரைந்துள்ளீர்களா?

Link to comment
Share on other sites

முதற்கண் இத்திரியைத் தொடங்கிய தமிழ்தங்கைக்கும் அதனைத் தொடர்ந்து தமது எண்ணங்களைக் கருத்துகளாக்கிய உறவுகளுக்கும் நன்றிகள். குறிப்பாக தமிழ்குரலின் விரிவான விளக்கமான பதிவு பல உண்மைகளைப் புடம் போட்டுச் சொன்னது. நன்றிகள் மீண்டும்.

என்னைப் பொறுத்தவரையில், கிளிநொச்சி நகருக்கு சிங்களப் படைகள் வந்தன என்பது ஒரு வருத்தம் தோய்ந்த செய்தி. அவ்வளவே. கிழக்கு போனபோது எத்தகைய வருத்தம் மேலிட்டதோ, மடு முதல் பூநகரி வரை அவன் வந்தபோது என்ன மனநிலை ஏற்பட்டதோ, ஆனையிறவை இழக்கும்போது தவிர்க்க முடியாமல் அங்கு ஏற்கனவே நாம் கொடுத்த விலைகள் கண்முன் தெரிந்தனவோ அதே அளவில் தான் இந்தக் கிளிநொச்சியின் இழப்பினானும் ஏற்படும் மனவருத்தம் இருக்கிறது. அதற்குமேல் எதுவும் இல்லை. வரத் தேவையும் இல்லை.

பொதுவில் எமது விடுதலைப் போருக்கு இரு வகை செயல்பாடுகள் அவசியம். ஒன்று அரசியல் ரீதியானது. மற்றையது இராணுவ ரீதியானது. நாமெல்லோரும் அறிந்தபடி புலம்பெயர்தமிழராகிய எமது கடன் அரசியல் ரீதியானது. போரை சம்பந்தப்பட்டவர்கள் கவனித்துக் கொள்வார்கள். அவர்களுக்கு உறுதுணையாக இருப்பதும் எமது பணியாகும்.

அரசியல் ரீதியானது என்று வரும்போது எமக்கென்று ஒரு பலத்தைக் கட்டியெழுப்புவது அதி முக்கியமானது. சவலைப்பிள்ளையின் ஈனக் குரல் யார் காதிலும் கேளாது. நாங்கள் கனடாவில் இலட்சக் கணக்கில் இருக்கின்றோம். எங்களுடைய குரலை யாராவாது கேட்கிறார்களா? நாங்கள் பொங்கு தமிழுக்குச் சென்றால் பயங்கரவாதத் தமிழர் ஒன்றுகூடல் என்று சில பத்திரிகைகளில் செய்தி வருகிறது. பல உள்ளூர் ஊடகங்களில் அதுகுறித்த செய்தியே இல்லை. ஆனால் யோர்க் பல்கலைக் கழகத்தில் சில மாணவர்கள் நடத்திய தர்ணாப் போராட்டம் ஊடகங்களில் முக்கியத்துவம் பெறுகிறது. இது ஏன்?

நாமெல்லாம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. இல்லையேல் எல்லோருக்கும் தாழ்வுதான். இங்கு நான் நாமென்று சொல்வது உலகெங்கிலும் வாழும் புலம்பெயர் தமிழர்களை. எமது செயல்பாடுகளை சற்று உற்றுநோக்கிப் பாருங்கள். கனடாவில பல தமிழ்ச்சங்கங்கள். பிரித்தானியாவில் பல. ஐரோப்பிய நாடுகளில் பல. ஏனிந்த நிலை? இந்த தகவல் தொழில்நுட்ப நூற்றாண்டிலும் எங்களை உலக அளவில் ஒன்றிணைக்க முடியவில்லையா? நாங்கள் யாழ் என்கிற இந்தச் சின்னஞ்சிறு ஊடகத்தின் ஊடாகவே இவ்வளவு தகவல்களைப் பரிமாறிக்கொள்கிறோமே, ஏன் உலக அளவில் தமிழரால் ஒரு அமைப்பாக செயல்பட முடியாது?

முடியாதுதான். ஏனென்றால் நாங்கள் காரணங்களைத் தயாராகவே வைத்திருக்கிறோம். பணப்பிரச்சினை, சட்டப்பிரச்சினை என்று ஆயிரம் காரணங்களை நாங்கள் அடுக்கலாம். ஆனால் நாங்கள் சொல்லும் ஒவ்வொரு காரணத்துக்குமான விலை ஆயிரக்கணக்கான தமிழ் உயிர்ப்பலிகளும் மொழி மற்றும் கலாச்சார அழிவும்.

ஏற்கனவே பல தமிழ் அமைப்புகள் உலக அளவில் தோன்றிவிட்ட நிலையில் இப்போது நாங்கள் முதலாவதாகச் செய்யக்கூடியது ஒன்றுதான். அந்தந்த நாடுகளில் ஓரளவுக்கேனும் சிறப்பாகச் செயல்படும் ஒரு தமிழ் அமைப்பில் எம்மை இணைத்துக்கொண்டு எமது அரசியல் பலத்தை அதிகரிக்க வேண்டும். அந்தந்த நாடுகளின் உள்ளூர் அரசியலில் தமது நிலைப்பாட்டைத் தெரிவிக்கக் கூடிய ஒரு அமைப்பாக அது இருக்க வேண்டும். நடுநிலை வகிப்பது என்பது போலித்தனம். யாரும் மதிக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு அரசியல் சக்தியாக நாங்கள் உருவெடுக்கும்போதுதான் அந்தந்த நாடுகள் எங்களைக் கவனத்தில் எடுக்கும்.

இது மலையைப் பெயர்ப்பது போல மலைக்க வைக்கும் பணியாகத் தோன்றலாம். தலைவர் அவர்கள் ஈழத்தை விடுவிப்பது பற்றியும் எங்களை மாதிரியே சிந்தித்திருந்தார் என்றால் நாங்கள் இன்று யாழ்ப்பாணத்தில் தமிழ் கலந்த சிங்களத்தில் உரையாடிக் கொண்டிருப்போம். கிழக்கு சிங்கள பூமியாகவே மாறிவிட்டிருக்கும். எதையுமே முளையிலேயே கிள்ளி எறிய வேண்டாமே? ஒவ்வொரு நாட்டிலும் ஒரு அமைப்பைத் தேர்ந்தெடுத்து அவரவர் இணைந்து கொள்ளலாமே.

சமீபத்தில் எனக்கு ஏற்பட்ட ஓர் அனுபவத்தின் மூலம் நான் கண்டதைச் சொல்லி நிறைவு செய்கிறேன்.

நாங்கள் எவ்வளவு பலவீனமான இனம் நாங்கள் என்பதற்கு நீங்கள் கனடாவில் ரொறோன்ரோ இந்திய தூதரகத்திற்குச் சென்று பார்க்க வேண்டும். கனேடியராகவே இருந்தாலும் நீங்கள் இலங்கையில் பிறந்திருந்தால் அதற்கு தனியாக ஒரு படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். அதை அவர்கள் கொழும்பில் உள்ள தூதரகத்துக்கு அனுப்பி உங்களைப் பற்றி அங்கு விசாரிக்கிறார்கள். அதற்கு மாதக்கணக்கும் ஆகலாம். நீங்கள் அவர்களைக் கேள்வி கேட்க முடியாது. தொலைபேசியில் விசாரித்தால் எங்கே பிறந்தாய் என்று கேட்பார்கள். இலங்கை என்று சொன்ன மறுகணமே உனக்குப் பதில் சொல்ல முடியாது என்று இணைப்பு அப்படியே துண்டிக்கப்படும். அவர்கள் வலைத்தளத்துக்குச் சென்று மின்னஞ்சல் அனுப்பினால் அது கிணத்தில் போட்ட கல்தான். நேரில் சென்று விசாரித்தால் நாயை விடக் கேவலமாக நடத்துவார்கள். மேலதிகாரியையும் பார்க்க விட மாட்டார்கள். எத்தனை நூற்றுக்கணக்கான எம்மவர்கள் வாய்மூடி மௌனிகளாக அங்கே பணியில் இருக்கும் இந்தியர்களின் பின்னால் கெஞ்சிக் கொண்டு திரிகிறார்கள்? இதுதான் எமது இன்றைய நிலை. கனேடியராகிவிட்டதால் நாமெல்லோரும் தப்பிவிட்டோம் என்று இறுமாந்து திரியும் எம்மவருக்கு அங்கே சாட்டை சுழற்றப்படுகிறது. கனவில் மிதக்கும் எம்மவர்களை நிஜ உலகுக்குக்கூட்டி வருகிறான் இந்தியன்.

எம்மவர்களுக்கான சேதி இதில் ஒன்றுதான். உதிரிப்பூக்களை விடவும் தொடுத்துவிட்ட மலர்மாலைகளுக்கே என்றும் மதிப்பு...சிறப்பு.

நன்றி.

Link to comment
Share on other sites

வணக்கம் தமிழ்க்குரல்!

பல உண்மைகளை துணிச்சலுடன் கூறியுள்ளீர்கள்.

பாராட்டுக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் த‌யார் ஆதிவாசி ஆனால் என்னோடு சேர்ந்து உண்ணா நோன்பு இருக்க‌ யார‌வ‌து வ‌ர‌ வேண்டும்.

நான் தயாராக இருக்கிறேன். ரதி நீங்கள் எங்கிருக்கிறீர்கள்? கனடாவாக இருந்தால் முதலில் உங்களுடைய தொலைபேசி இலக்கத்தை எனக்குத் தனிமடலில் தாருங்கள். மேற்கொண்டு செயற்பாட்டில் இறங்கலாம். இந்த இடத்தை தயவு செய்து விளையாட்டுக் களமாக நினைக்காதீர்கள். உங்கள் பதிலை மிகவும் எதிர்பார்க்கிறேன்.

தொடர்ந்து எங்கள் நண்பர் வட்டத்தைச் சார்ந்தவர்களும் இவ்வறப் போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை நல்குவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். தயவு செய்து நண்பர்களே! உங்கள் கருத்தைத் தனிமடலில் எழுதி மூடுமந்திரமாக இருக்காமல் இங்கு பதிவு செய்யுங்கள். நன்றி

Link to comment
Share on other sites

ஏற்கனவே பலவித அமைப்புக்கள் கனடாவில இருக்கிதுதானே சகாரா அக்கா? அவர்கள் இப்ப மெளமானாய் இருக்கிறீனம் எண்டால் அதன் பின்னால இருக்கிற மர்மம் என்ன? வருசக்கணக்கான அனுபவங்களையும், பலநூறு ஆள் பலத்தையும்கொண்டுள்ள இதர தமிழ் அமைப்புக்கள் செய்யாத வேலைகளை நேற்று ஆரம்பிக்கப்பட்ட 14பேர் கொண்ட நண்பர்வட்டம் மூலம் இப்பவே உடனடியாக செய்யுறது எண்டால் அது சாத்தியப்படக்கூடிய விசயமா? நாங்கள் நண்பர்வட்டம் மூலம் செய்யக்கூடிய வேலைத்திட்டங்கள் பெரிய அளவில ஆரம்பத்தில இருக்காமல் சின்னதாய் ஏதாவது எண்டால் பரவாயில்லை எண்டுறது எனது இப்போதைய அபிப்பிராயம். எண்ணங்களை பரிமாறலாம். ஆனால்... உடனடியாகவே தெருவில இறங்கிறநிலையில எங்கட நண்பர்வட்டம் இப்போது இருக்கிதா எண்டு எனக்கு தெரிய இல்லை.

Link to comment
Share on other sites

நானும் முரளியின் கருத்தோடு ஒத்துப் போகிறேன். தமிழ்த்தங்கை கூறியது, இதுவரை போராட்டச் செயற்பாடுகளுக்குப் பங்களிப்பு செய்யாதவர்களுக்குத்தான் பொருந்துமே தவிர, ஏற்கனவே பங்களிப்பு செய்து கொண்டிருப்பவர்களுக்கல்ல. இதுவரை, பங்களிப்பு செய்யாதவர்களோ, அல்லது மேலும் பங்களிப்பு செய்ய நேரம் இருப்பவர்கள் ஒன்று சேர்ந்து ஏதாவது செய்யட்டும்.

நாங்கள் இன்னும் குண்டுச் சட்டிக்குள்தான் இருக்கிறோம் என்பது இந்தக் கருத்தாடல் மூலம் நன்றாகவே விளங்குகிறது. ஒவ்வொருவரும் பந்தி பந்தியாக எழுதுவதிலிருந்தே எல்லோருமே நாற்காலிச் செயற்பாட்டாளர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பதை உணரமுடிகிறது.

நான் தயாராக இருக்கிறேன். ரதி நீங்கள் எங்கிருக்கிறீர்கள்? கனடாவாக இருந்தால் முதலில் உங்களுடைய தொலைபேசி இலக்கத்தை எனக்குத் தனிமடலில் தாருங்கள். மேற்கொண்டு செயற்பாட்டில் இறங்கலாம். இந்த இடத்தை தயவு செய்து விளையாட்டுக் களமாக நினைக்காதீர்கள். உங்கள் பதிலை மிகவும் எதிர்பார்க்கிறேன்.

தொடர்ந்து எங்கள் நண்பர் வட்டத்தைச் சார்ந்தவர்களும் இவ்வறப் போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை நல்குவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். தயவு செய்து நண்பர்களே! உங்கள் கருத்தைத் தனிமடலில் எழுதி மூடுமந்திரமாக இருக்காமல் இங்கு பதிவு செய்யுங்கள். நன்றி

நண்பர் வட்டம் மூலம் செய்யப்படும் செயற்பாடுகளுக்கு எனது உதவிகளும், ஆதரவும் நிச்சயம் இருக்கும். ஆனால், அது எத்தகைய பலனைத் தரும் என்பதைப் பொறுத்துத்தான் இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நண்பர் வட்டச் சந்திப்பில் நாம் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் எவ்வாறு அமைந்திருந்தன என அதில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றாகவே தெரியும். அந்தவகையில் பார்க்கும்போது, நாம் செய்யும் செயல்கள் காத்திரமானவையாகத்தான் இருக்குமென நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

ஏற்கனவே பலவித அமைப்புக்கள் கனடாவில இருக்கிதுதானே சகாரா அக்கா? அவர்கள் இப்ப மெளமானாய் இருக்கிறீனம் எண்டால் அதன் பின்னால இருக்கிற மர்மம் என்ன? வருசக்கணக்கான அனுபவங்களையும், பலநூறு ஆள் பலத்தையும்கொண்டுள்ள இதர தமிழ் அமைப்புக்கள் செய்யாத வேலைகளை நேற்று ஆரம்பிக்கப்பட்ட 14பேர் கொண்ட நண்பர்வட்டம் மூலம் இப்பவே உடனடியாக செய்யுறது எண்டால் அது சாத்தியப்படக்கூடிய விசயமா? நாங்கள் நண்பர்வட்டம் மூலம் செய்யக்கூடிய வேலைத்திட்டங்கள் பெரிய அளவில ஆரம்பத்தில இருக்காமல் சின்னதாய் ஏதாவது எண்டால் பரவாயில்லை எண்டுறது எனது இப்போதைய அபிப்பிராயம். எண்ணங்களை பரிமாறலாம். ஆனால்... உடனடியாகவே தெருவில இறங்கிறநிலையில எங்கட நண்பர்வட்டம் இப்போது இருக்கிதா எண்டு எனக்கு தெரிய இல்லை.

என்ன இது? மாப்பு இதை நீங்க சகாறா அக்காவுக்கு எழுதி இருக்கீங்க. நான் குறுக்கிட்டுக் கதைக்கிறதுக்கு மன்னிக்கோணும்.

அங்க சனம் நாளாந்தம் செத்துப் போகுதுகள், கை கால்கள் உடம்பெல்லாம் துண்டுதுண்டாய் சிதறத் துடிச்சுக்கிடக்குதுகள். பலப் பல அமைப்புகள் இருந்தும் எல்லாம் வாய்மூடி மெளனியா இருக்கெண்டா ஏதோ மர்மம் இருக்கெண்டுறதோ????? சரி, நீங்களும் ஏதாவது வானொலி, பத்திரிகை, சஞ்சிகை, இணையத்தளம் எண்டு பத்தோட பதினொண்டா..... இல்லையில்லை நூறோட நூற்றொன்டா இருங்கோ எனக்கென்ன? ("ஆதி சும்மா போடா அத்தண்டை. ஏன் பொல்லைக் குடுத்து அடியை வாங்க நினைக்கிற.... ஏற்கனவே ஒரு டீம் ரவுண்டு கட்டி அடிச்சவங்கப்பா..... இப்ப அடுத்த டீமிட்டை ஏன் வாயைக் குடுக்கிறே")

பொறுங்கோ பூனைக்கு மணிகட்டுறது ஆரெண்டு எல்லாருமாச் சேந்து முடிவெடுத்துப் போட்டுச் சொல்லி அனுப்புங்கோ. அப்ப நான் எங்கயாவது வேலை வெட்டி இல்லாமல் பராக்குப் பாத்துக் கொண்டு நிண்டா வாறன். மாப்பு இது உங்கட நண்பர் வட்டத்துக்குச் சொல்லேல்லை..... தொப்பி அளவான தமிழ்க்குலத்துக்குச் சொல்றன்.......

நெஞ்சில் உரமின்றி,

நேர்மைத் திறமின்றி,

வஞ்சனை செய்வாரடி - கிளியே

வாய்ச் சொல்லில் வீரரடி.

ஒரு டவுட் சகாறா அக்கோவ், நீங்க...... வாய்சசொல் வீரரோ? :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.