• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
கற்பகதரு

தமிழீழத்துக்கான அங்கிகாரத்தை யாரிடம் ஈழத்தமிழர் எதிர்பார்க்கிறார்கள்?

தமிழீழத்துக்கான அங்கிகாரத்தை யாரிடம் ஈழத்தமிழர் எதிர்பார்க்கிறார்கள்?  

22 members have voted

 1. 1. தமிழீழத்துக்கான அங்கிகாரத்தை யாரிடம் ஈழத்தமிழர் எதிர்பார்க்கிறார்கள்? (ஒன்றிற்கு மேற்பட்ட பதில்களையும் தெரிவு செய்யலாம்.)

  • ஐக்கிய நாடுகள் சபையிடம்.
   6
  • இந்தியா அங்கிகரிக்க வேண்டும்
   5
  • ஐ.நா. சபையில் உள்ள ஒரு நாடாவது அங்கிகரிக்க வேண்டும்.
   11
  • ஏதாவது ஒரு நாடு அங்கிகரிக்க வேண்டும்.
   2
  • வேறு விதமான அங்கிகாரம்.
   3


Recommended Posts

தமிழீழ நிருவாகம் இன்றும் இயங்கி வருகிறது. ஆனால் சுதந்திரபிரகடனம் செய்யப்படவில்லை. தமிழீழ அரசு அங்கிகரிக்கப்பட வேண்டும் என்பது உலகத்தமிழ் மக்களின் விருப்பமாகும்.

ஐக்கிய நாடுகள் சபையால் அங்கிகரிக்கப்படாத நிலையில் எல்லாமாக 10 நாடுகள் உலகில் செயற்பட்டு வருகின்றன. இவற்றுள் முக்கியமானது தாய்வான். தாய்வான் அமெரிக்க அரசின் நெருங்கிய இராணுவ, பொருளாதார நட்பு நாடாக இருந்தும் ஐ.நா. சபையின் அங்கிகாரத்தை பெற முடியவில்லை. ஆனாலும் உலகின் செல்வந்த நாடுகளுள் ஒன்றாக தாய்வான் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் தமிழீழம் சிறப்புற செயற்பட ஐ.நா.வின் அங்கிகாரம் உண்மையில் தேவைதானா? என்ற கேள்வி எழுகிறது.

உலகில் எந்த ஒரு நாட்டின் அங்கிகாரமும் இல்லாமலே சுதந்திரபிரகடனம் செய்து இயங்கிவரும் நாடுகளாக சோமாலிலாந்தும், நாகமோ கரபாவும் இருக்கினறன. சோமாலிலாந்து வெளிநாட்டில் உள்ள தம் மக்களின் பணவலிமையால், தான் பிரிந்து விட்ட சோமாலியாவிலும் பார்க்க செல்வந்த நாடாகவும் பாதுகாப்பான நாடாகவும் கடந்த 17 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

தமிழீழமும் இவ்வாறாக எந்த நாட்டினதும் அங்கிகாரமும் இல்லமலே சுதந்திரப்பிரகடனம் செய்து ஒரு நாடாக இயங்க முடியும் தானே? என்ற கேள்வியும் எழுகிறது. இந்த கேள்விகளை அடிப்படையாக கொண்ட சிந்தனையை காரணமாக கொண்டதே இந்த வாக்கெடுப்பு.

Edited by Jude

Share this post


Link to post
Share on other sites

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் என்பது விசேடமாக இருக்கும்... ஆனால் இந்த தமிழீழம் என்பதை தமிழ் மக்கள் (ஈழமக்கள் தவிரவும்) அனைவரும் அங்கீகரிக்க வேண்டும்... அதன் தேவைகளை தமிழர்கள் தன்னிறைவாக நிறைவு செய்யும் வளிக்களை கையாள வேண்டும்...

அப்படி நடக்கும் பட்ச்சத்தில் எல்லா நாடுகளும் தமிழீழத்தை அங்கீகரிக்க முன்வரும்...

வேறு நாடுகள் ஈழத்தை எதிரி நாடாக பார்க்காமல் இருப்பது மட்டுமே எங்களுக்கு மிகவும் அவசியமானது... அங்கீகாரமோ, உதவிகளோ அல்ல...!!

Edited by தயா

Share this post


Link to post
Share on other sites

எனது முட்டாள் தனமான கேள்வி தான் ........

ஐக்கிய நாடுகள் சபை என்று உண்டா ....... ?

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் ஜீட் உங்களின் வாக்கெடுப்பு இந்நேரத்தில் அவசியமானதாகவே படுகின்றது. ஏனெனில் பெரும்பாலனவர்கள் இந்தியாவின் அங்கீகரத்தையே அங்கீகாரமாக பார்க்கின்றனர். தாயகத்தில் நடைபெறும் கொய போருக்கு முழுமையான ஆதரவைத் தந்து எம்மை கொன்று குவிக்கும் ஒரு நாடு எம்மை ஆதரிக்கும் என்று இன்றும் பலர் பகல்க்கனவு கண்டகொண்டிருக்கின்றனர்.

அதே வேளை, தன்னிச்சையாக தமிழீழம் சுதந்திர நாடக பிரகடனம் செய்யப்பட்டால் தமிழீழத்தை ஆட்சி செய்ய அது தன்னிறைவுப் பொருளாதாரத்தை உடனடியாக பெற முடியாது. அப்படி அவாதென்றால் குறைந்தது 10-15 ஆண்டுகள் எடுக்கும். எனவே அப்படியானதொரு சூழலில், 10 தொடக்கம் 15 ஆண்டுகளுக்கு தமிழீழம் வெளிநாட்டில் வாழும் தமிழ் மக்களையே சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்ப்படும்.

அதே நேரம் தெற்காசியாவில் எமது வர்த்தக பொருளாதார முன்னெடுப்புக்களை செய்வது முடியாத காரியமாக இருக்கலாம். எனவே குறிப்பிட்ட ஒரு நாடு (எந்த நாடாக இருந்தாலும்) எம்மை அங்கீகரிக்கும் போது எமக்கான பொருளாதார, வெளியுறவுப்பாதை ஒரு பக்கமேனும் திறந்திருக்கும் என்பது எனது கருத்து.

சுதந்திர தமிழீழத்தின் நிர்வாக செலவுகளை ஏற்க புலம் பெயர்ந்த தமிழர்கள் தயாராக இருப்பார்கள் என்றாலும் நீண்டகாலத்துக்கு அவை நடைமுறைச்சாத்தியமற்றவை. இப்போது இருக்கும் சந்ததி மாற்றம் அப்படியான ஒரு சந்தர்பத்தை வழங்குமா என்பது கேள்விக்குறியே!

Share this post


Link to post
Share on other sites

எங்களுக்கு எல்லாம் தெரியும் எண்ட ஆக்கள் ஒருத்தரையும் காணல்ல. நாங்கள் முதல்ல எங்களையும் எங்கள் போராட்டத்தையும் அங்கீகரிக்க வேணும். அதை முதல்ல செய்யுங்கோ

Share this post


Link to post
Share on other sites

ஜநாசபையிலுள்ள ஏதாவது ஒரு நாடு அங்கீகரிக்க முன்வர வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

இலங்கைத்தீவு ஒரு நாடாக இருக்கும்வரை தமிழருக்கு விமோசனம் இல்லை என்பதைத்தான் முன்னைய சாத்வீகப் போராட்டமும் தற்போதைய வன்முறைப் போராட்டமும் இலங்கைத் தமிழருக்கு அளித்த பாடம். இதைத் தெளியாமல் இருப்போர் சிலராகத்தான் இருப்பார். இராணுவ நெருக்குவாரத்துக்குள் அகப்பட்டுள்ள தாயக மக்கள் தற்போது உயிராபத்தின்றி நிம்மதியாக இருக்கவிட்டாலே போதும் என்று கூறினாலும், எதிர்காலத்தில் மீண்டும் தனிநாடு தேவையென்று ஏதோ ஒரு வழியில் போராடத்தான் செய்வார்கள்.

தமிழர்கள் (தாயகத்திலும், புலம் பெயர் நாடுகளிலும் இருப்பவர்கள்) உலகத் தமிழினத்தை ஒன்றுபடுத்தி ஐக்கிய நாடுகள் சபைமூலம் தனிநாட்டை உருவாக்கப் போராடவேண்டிய தருணம் இது. அதைவிடுத்து இடங்கள் போய்விட்டதால், தமிழீழப் போராட்டம் அழிந்துவிட்டது என்று சும்மா இருப்பதல்ல.

Share this post


Link to post
Share on other sites

நோர்வே போன்ற சிறுபான்மை மக்கள் மேல் கரிசனை காட்டுகின்ற நாடுகள் எங்களது சுயநிர்ணய உரிமையை அங்கிகரிக்கிற நிலயை ஏற்படுத்த வேண்டும்...

தமிழரின் பலம் இருந்த போது அதனை பயன் படுத்தி தமிழரது பிரச்சனையை உலகுக்கு கொண்டு வந்த முதல் நாடு என்றவகையில் தொடர்ந்து நோர்வேயின் பங்களிப்பு தேவை.

Share this post


Link to post
Share on other sites

நோர்வே போன்ற சிறுபான்மை மக்கள் மேல் கரிசனை காட்டுகின்ற நாடுகள் எங்களது சுயநிர்ணய உரிமையை அங்கிகரிக்கிற நிலயை ஏற்படுத்த வேண்டும்...

தமிழரின் பலம் இருந்த போது அதனை பயன் படுத்தி தமிழரது பிரச்சனையை உலகுக்கு கொண்டு வந்த முதல் நாடு என்றவகையில் தொடர்ந்து நோர்வேயின் பங்களிப்பு தேவை.

நோர்வே தமது காலத்தை நாசமாக்கி வெறுத்து ஒதுங்கிவிட்டது போலவே இருக்கிறது. அவர்களது மூச்சைக் கூட காணல்ல.

முன்ன ஏதாவது அறிக்கையாவது வரும். இப்ப அதுவும் இல்ல

Share this post


Link to post
Share on other sites

theoritical ஆக பார்த்தால் ஐநா உறுப்புரிமை உடைய ஏலவே அங்கீகாரம் உள்ள எந்த ஒரு நாடு அங்கீகரித்தாலும் போதும்.

ஆனால் யதார்த்தத்தில் எமக்கு

-1- இந்தியாவின் எதிர்ப்பு இருக்கக் கூடாது. நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுக ஆதரவு தேவை.

-2- அமெரிக்கா ஐரோப்பா உட்பட்ட மேற்குலகின் எதிர்ப்பு இருக்கக் கூடாது. நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுக ஆதரவு தேவை.

இந்த 2 புறச்சூழ்நிலையும் உருவான பின் theoritical தேவையை பூர்த்தி செய்ய எந்த ஒரு சின்ன நாடு அங்கீகரித்தாலும் போதும். ஏன் என்றால் யதார்த்தத்தில் இந்தியாவோ ஏனைய முன்னணி மேற்குலக சக்த்திகளோ சிறீலங்காவை பகைத்த படி தமிழீழத்தை கொசவே பாணியில் அங்கீகரிக்கப் போவதில்லை. அப்படிப்பட்ட ஒரு இராசதந்திர தவறை அல்லது வெற்றிடத்தை சிங்களம் உருவாக்கவில்லை இனியும் உருவாக்குமா என்பது சந்தேகமே.

மேற்கூறியது UDI scenario விற்கு உரியது. அது எந்தளவிற்கு எமக்கு பொருத்தம் என்று யோசிக்க வேண்டும்.

மேற்பார்வை செய்யப்பட்ட சுதந்திரம் என்ற பாதையில் போனால் நிலமை வேறு.

இவை எல்லாத்துக்கும் முதல் உலகத்தமிழ் இனம் தமிழீழத்தை அங்கீகரித்து அதற்காக பங்களிக்க வேண்டும் உழைக்க வேண்டும். பெரும்பான்மைத் தமிழ் இனத்தின் ஒட்டுமொத்த தமிழ் தேசிய மனித பொருளாதரா வளம் தேசிய தலமையின் பின்னால் குவிய வேண்டும். அதன் பின்னர் தான் மிகுதி எல்லாம்.

Edited by kurukaalapoovan

Share this post


Link to post
Share on other sites

ஜ நா சபையிலுள்ள ஏதாவது ஒரு நாடு அங்கீகரிக்க முன்வர வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

ஏதாவது ஒரு நாடு அங்கிகரித்து எந்தவிதமான பலனும் இல்லை. வல்லரசுகளில் ஏதாவது ஒரு நாடு அங்கிகரிக்க வேண்டும். ஆனால் அனைத்து வல்லரசுகளும் தங்களுடைய நலனையே பார்க்கின்றன. ஈழத்தை ஆதரிப்பதால் அவர்களிற்கு எந்தவிதமான நன்மைகளும் வரப்போவதில்லை.

தன்னை வல்லரசு என்று சொல்லிக்கொள்ளும் இந்தியா அங்கிகரித்தால் ஏனைய நாடுகள் அங்கிகரிக்கும். யக்கிய நாடுகள் சபை என்பது ஒரு பேச்சுக்கு தான். அங்கு அமெரிக்க வைத்தது தான் சட்டம். ஒரு உதாரணம் சொல்லப்போனால் அமெரிக்கா ஈராக் மீது படையெடுக்க வேண்டாம் என்று தெரிவித்தும் அமெரிக்கா அதை பொருட்படுத்தாமல் போரை தொடங்கியது. இதை பற்றிவேறு எந்த நாடும் வாய் திறக்கவில்லை. ஏன் யக்கிய நாடுகள்சபையும் இதை கணக்கிலெடுக்கவில்லை.

இந்தியா ஈழத்தை ஆதரிக்க முடியாதவாறு இலங்கை அரசாங்கம் திறமையாகவே காய்களை நகர்த்துகிறது. இது நாம் கேட்கவிப்பமில்லாவிட்டாலும் ஒரு கசப்பான உண்மை. அதாவது இந்தியாவை சுற்றி முற்றிலும் அதற்கு எதிரி நாடுகளே உள்ளன. இந்தியா ஈழத்திற்கு சார்பாக ஏதாவது செய்யவெளிக்கிட்டால் இலங்கை அரசாங்கம் உடனே பாகிதான்,சீனா என அதன் எதிரி நாடுகளிடம் ஓடுகிறது. இது இந்தியாவில் "வல்லரசு" ஆசைக்கு ஆபத்து. இதை வைத்து இலங்கை அரசாங்கமும் இந்தியாவை ஆட்டிப்படைக்கிறது. வளர்ந்து வரும் இந்தியா எக்காரணம் கொண்டும் ஒரு போரில் குதிப்பதை விரும்பாது. போர் ஏற்படும் பட்சத்தில் அவர்களின் பொளாதாரம் மீண்டும் பின் தங்கி சென்றுவிடும் (தற்பொழுது அமெரிக்காவிற்கு ஈராக் போரின் பின் நடந்தது போல்).

சீனா ஒரு பொழுதும் ஈழத்தை ஆதரிக்க போவதில்லை. புத்தபிக்குகள் மதத்தை வைத்தே சீனாவை தம் பக்கம் இழுத்துவிடுவார்கள்.

தற்பொழுதுஉள்ள நிலமையில் இந்தியா அல்லது ரசியா அங்கிகரிக்கலாம். அனைத்துவல்லரசுகளுடனும் பகமை கொண்டுள்ள ரசியா தனக்கு சாதகமாக ஒரு நாடு வளர்வதை விரும்பலாம்.

இந்தியாவின் அங்கிகாரம் கிடைப்பதானால் இந்தியாவின் கடினமே. ஆனால் இந்தியாவை எதிர்த்து எந்த நாடும் அந்த பிராந்தியத்தில் தற்பொழுது வாய் திறக்கப்போவதில்லை.

Share this post


Link to post
Share on other sites

அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையில் இணைத்துக்கொள்ளப்பட்ட

கிழக்கு திமோர் நாட்டுடன் இராஜதந்திர உறவுகளை மேற்கொண்டு

இராஜதந்திரி ஒருவரையும் நியமிக்க இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளதாக

சில நாட்களுக்குமுன் செய்தி ஒன்று வாசித்தேன்

கிழக்கு திமோர் ஈழத்தை ஆதரித்துவிடுமோ என்ற காரணத்தால்

அதனை முறியடிக்கும் நோக்கத்துடன் திமோருடன் உறவை ஏற்படுத்த

இலங்கை எண்ணியுள்ளதோ என நினைக்கத் தோன்றுகிறது

நான்நினைப்பது சரியானால் ஏதாவது ஒரு நாடு ஈழத்தை அங்கீகரித்தால் போதுமானது என நினைக்கின்றேன்

Share this post


Link to post
Share on other sites

அண்மையில் சுதந்திரம் அடைந்த நாடுகள் கூட எம்மை அங்கீகரிக்கலாம். இது தான் இலகுவான வழி அல்லது ஒரே வழி போல் தென்படுகிறது . இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசுகள் எங்களை அங்கீகரிக்க கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை. இவர்கள் சுயநலம் கொண்டவர்கள். இவர்களுக்கு தேவையானவை எம்மிடம் இல்லை. ஆகவே எம்மை அங்கீகரிக்கும் சாத்தியக்கூறுகளும் குறைவு.

Share this post


Link to post
Share on other sites

இந்தியாவோ அமெரிக்காவோ ஆதரிக்கும் என்பது பகல்கனவு ஆனால் முதலில் சிறிய அல்லது ஏதாது ஒரு நாட்டின் அங்கீகாரத்தை பெறுமுயற்ச்சிப்பதே நல்லது. ஓரேயடியாக மலையை பிளக்க முடியாது.

Share this post


Link to post
Share on other sites

ஏதாவது ஒரு நாடு என்பதைக் காட்டிலும், ஐ.நா சபையில் உள்ள ஏதாவது ஒரு நாடு அங்கீகரிக்கவேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

ஐ.நாஉறுப்பினரான ஒரு நாடு அங்கீகரிப்பது நல்லது.

இந்தியாவில் மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு , அவர்களும்மனம் வைத்தால் நடக்கும்.

ஆனால் எங்கும் முட்டுக்கட்டைகளாகவும், விலைபோகக் கூடியவர்களாகவும்

ஈழத்தமிழருக்கு ஒரு கருணா

இந்தியத் தமிழருக்கு நிதியும் குறையாய் இருப்பார்கள்.

Share this post


Link to post
Share on other sites

முதலில் இலங்கையிலும் புலம் பெயர் நாட்டிலும் உள்ள தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

இவை எல்லாத்துக்கும் முதல் உலகத்தமிழ் இனம் தமிழீழத்தை அங்கீகரித்து அதற்காக பங்களிக்க வேண்டும் உழைக்க வேண்டும். பெரும்பான்மைத் தமிழ் இனத்தின் ஒட்டுமொத்த தமிழ் தேசிய மனித பொருளாதரா வளம் தேசிய தலமையின் பின்னால் குவிய வேண்டும். அதன் பின்னர் தான் மிகுதி எல்லாம்.

இன்றை கள யதார்த்தத்தோடு ஒன்றி நிற்கும் கருத்தாகும். இதனையே தாயகம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது, என்பதை விட அவர்கள் தமது சக்திக்கு அப்பாற்பட்டுச் சாதித்துக்கொண்டிருக்கிறார்

Edited by nochchi

Share this post


Link to post
Share on other sites

முதலில் மற்றவர்கள் எம்மை யார் அங்கீகரிப்பார்கள் என்பதை பார்க்க இடத்தை விட்டு எம்மால் எந்த நாட்டுடன் அது பெரிய நாடாக இரந்தாலும் சரி சிறிய தற்காலப் பொழுதில் வவிடுதலையடைந்த நாடுகளாயினும் சரி எந்த நாட:டன் தமிழர் தரப்பு - விஜடுதலைப்பலிகள் அல்லது தமிழர் கூட்டமைப்பு தொடர்புகளை அல்லது உறவுகளை ஏற்படுத்திக் கொண்டது என்று சிந்தித்து பார்ப்பமானால் நன்றாக இருக்கும்.

அத்தடன் தென்னாபிர்க்கா மொறிசியல் சிங்கப்புர் போன்ற நாடகளுடன் தமிமர் தரப்பு கொண்டள்ள உறவுகள் என்ன என்பது கேள்விக்குறியே ? நாம் திரும்பவும் ஐNihப்பா நாடுகள் அமதரிக்கா வந்து எம்மை தூக்கிவிடும் என்றோ அல்லது இந்தியா எம்மை தூக்கிபிடிக்கும் என்றோ எதிர்பாhப்பது எவ்வளவு துரத்திற்கு என்று தெரியவில்லை நம்பிக்கைகள் இருக்காலம் தான் அதற்காக செய்படாமல் இருந்து விடமுடியாது.

வெறுமனமே ஐரோப்பிய நாடுகளை மட்டும் நம்பி நாம் பயணிப்பதை விடுத்து ஏனைய நாடகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்தி உறவுகளை ஏற்படுத்தி ஏனைய நாடுகளில் எம்மை பற்றி நல்லெண்ணத்தi விதைத்து அவர்கiயாயவது எமது பக்கம் மாற்றுவது சிறந்தது.

Share this post


Link to post
Share on other sites

அடுத்த மாவீரர் தின உரையில் தமிழீழம் பிரகடனப்படுத்தப்படும் பொழுது அங்கீகரிக்க ஜேர்மனி தயாராகி வருவதாகத்தான் விடையமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விடியல் வெகு தூரத்தில் இல்லை.

Share this post


Link to post
Share on other sites

அடுத்த மாவீரர் தின உரையில் தமிழீழம் பிரகடனப்படுத்தப்படும் பொழுது அங்கீகரிக்க ஜேர்மனி தயாராகி வருவதாகத்தான் விடையமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விடியல் வெகு தூரத்தில் இல்லை.

திரைமறைவில் நடக்கும் விடயத்தை இப்படி பகிரங்கப்படுத்துவது அவ்வளவு நல்லதல்ல குறுக்கர்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this